அத்தியாயம் – 18
ஜம்புத்வீபவாசிகள் பகவானுக்குத் தங்கள்
பிரார்த்தனைகளை அர்ப்பணித்தல்
பதம் 5.18.1
ஸ்ரீ-சுக உவாச
ததா ச பத்ரஸ்ரவா நாமதர்ம-ஸுதஸ் தத்-குல-பதய: புருஷா
பத்ராஸ்வ-வர்ஷே ஸாக்ஷாத்பகவதோ வஸுதேவஸ்ய ப்ரியாம் தனும்
தர்மமயீம் ஹயஸீர்ஷாபி-தானாம் பரமேண ஸமாதினா ஸன்னி
தாப்யேதம் அபிக்ருணந்த உபதாவந்தி
ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ததா ச—அதுபோல் (சிவபெருமான் இலாவ்ருத வர்ஷத்தில் சங்கர்ஷணரை வழிபடுவது போல்); பத்ர-ஸ்ரவா—பத்ரஸ்ரவான்; நாம—என்றறியப்படுவர்; தர்ம-ஸுத:—தர்மராஜாவின் புதல்வன்; தத்—அவரது; குல-பதய:—குலத்தைச் சேர்ந்த மூத்தோர்களும்; புருஷா:—வசிக்கும் அனைவரும்; பத்ராஸ்வ-வர்ஷே—பத்ராஸ்வ வர்ஷம் என்னும் நிலப்பகுதியில்; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவத:—முழுமுதற் கடவுளின்; வாஸுதேவஸ்ய—பகவான் வாசுதேவரின்; ப்ரியாம்-தனும்—மிகப்பிரியமான வடிவம்; தர்ம-மயீம்—சமய அறநெறிகள் அனைத்தின் காவலர்; ஹயஸீர்ஷ-அபி-தானாம்—பகவானின் ஹயஸீர்ஷர் அவதாரம் (ஹயக்ரீவர் என்றும் அழைக்கப்படுகிறார்); பரமேண-ஸமாதினா—மிகவுயர்ந்த சமாதி வடிவத்துடன்; ஸன்னிதாப்ய—அருகில் வந்து; இதம்—இந்த; அபிக்ருணந்த:—ஒதி; உபதாவந்தி—அவர்கள் வழிபடுகின்றனர்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தர்மராஜாவின் புதல்வரான பத்ரஸ்ரவான் பத்ராஸ்வ வர்ஷம் என்னும் நிலப்பகுதியினை ஆள்கிறார். இலாவ்ருத வர்ஷத்தில் சிவபெருமான் சங்கர்ஷணரை வழிபடுவது போல் பத்ரஸ்ரவானும் அவரது மெய்க்காப்பாளர்களும், அங்கு வசிப்போர்களும் ஹயஸீர்ஷர் என்னும் வாசுதேவரின் அம்ச விரிவினை வணங்குகின்றனர். பகவான் ஹயஸீர்ஷர் தன் பக்தர்கள் மீது மிகுந்த அன்புடையவராவார், இவரே சமய அறநெறிகள் அனைத்திற்கும் காவலரும் ஆவார். உயர்ந்த சமாதியில் நிலை நின்று பத்ரஸ்ரவானும் அவரது துணைவர்களும் பின்வரும் பிரார்த்தனைகளை மிகவும் கவனமான உச்சரிப்புடன் ஒதுகின்றனர்.
பதம் 5.18.2
பத்ரஸ்ரவஸ ஊசு:
ஒம் நமோ பகவதே தர்மாயாத்ம-விஸோதனாய நம இதி
பத்ரஸ்ரவஸ: ஊசு:—மன்னர் பத்ரஸ்ரவானும் அவரது நெருங்கிய துணைவர்களும் கூறினர்; ஒம்—ஒ பகவானே; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; தர்மாய—சமய அறநெறிகள் அனைத்திற்கும் ஆதாரமானவர்; ஆத்ம-விஸோதனாய—பௌதீக மாசுக்களை அவர் நீக்குகிறார்; நம:—எங்கள் வந்தனங்கள்; இதி—இவ்வாறு.
மன்னர் பத்ரஸ்ரவானும் அவரது நெருங்கிய துணைவர்களும் பின்வருமாறு பிரார்த்தித்தனர்: எங்களது மரியாதைக்குரிய வந்தனங்களை, சமய அறநெறிகள் அனைத்திற்கும் உறைவிடமானவரும், இப்பௌதீக உலகில் உள்ள பந்தப்பட்ட ஆத்மாக்களின் இதயங்களைத் தூய்மை செய்பவருமான முழுமுதற் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றோம். மீண்டும் மீண்டும் எங்கள் மரியாதைக்குரிய வந்தனங்களை அவருக்கு நாங்கள் சமர்ப்பிக்கின்றோம்.
பதம் 5.18.3
அஹோ விசித்ரம் பகவத்-விசேஷ்டிதம்
க்னந்தம் ஜனோ ‘யம் ஹி மிஷன் நபஸ்யதி
த்யாயன்ன அஸத் யர்ஹி விக்ரம ஸேவிதும்
நிர்ஹ்ருத்ய புத்ரம் பிதாம் ஜிஜீவிஷதி
அஹோ—அந்தோ; விசித்ரம்—விந்தை; பகவத்-விசேஷ்டிதம்—பகவானின் லீலைகள்; க்னந்தம்—மரணம்; ஜன—ஒருவன்; அயம்—இந்த; ஹி—உறுதியாக; மிஷன்—பார்த்தபோதிலும்; ந பஸ்யதி—காண்பதில்லை; த்யாயன்—நினைப்பது; அஸத்—பௌதீக இன்பம்; யர்ஹி—ஏனென்றால்; விக்ரம—தடைசெய்யப்பட்டச் செயல்கள்; ஸேவிதும்—அனுபவிப்பதற்கு; நிர்ஹ்ருத்ய—எரிகின்ற; புத்ரம்—புதல்வரகள்; பிதரம்—தந்தை; ஜிஜீவிஷதி—நீண்ட வாழ்நாளை விரும்புகிறான்.
அந்தோ என்ன விந்தை இது. மூட லோகாயதன் வெல்லமுடியாத மரணத்தின் பெரிய ஆபத்தினைப் பற்றிக் கவனத்திற்கொள்ளாதிருக்கின்றானே மரணம் நிச்சயம் வரும் என்பதை அவன் அறிவான். இருந்தும் அவன் சொரணையற்று அதனைப் புறக்கணிப்பவனாக இருக்கின்றான் அவன் தந்தை மரணமடைந்தால், தனது தந்தையின் சொத்துக்களை அனுபவிக்க விரும்புகிறான், அவனது மைந்தன் இறந்தால், அவனது உடைமைகளையும் அனுபவிக்க விரும்புகிறான். இந்த நிலைகளிலுமே அவன் தன்னிடமிருக்கும் பணத்தினால் பௌதீக இன்பத்தையே அனுபவிக்க விரும்புகிறான்.
பதம் 5.18.4
வதந்தி விஸ்வம் கவய ஸ்ம நஸ்வரம்
பஸ்யந்தி சாத்யாத்மவிதோ விபஸ்சித:
ததாபி முஹ்யந்தி தவாஜ மாயயா
ஸுவிஸ்மிதம் க்ருத்யம் அஜம் நதோ ‘ஸ்மிதம்
வதந்தி—அவர்கள் அதிகாரப்பூர்வமாகக் கூறுகின்றனர்; விஸ்வம்—முழுபௌதீகப் படைப்பும்; கலய:—கற்றறிந்த மாமுனிவர்கள்; ஸ்ம—உறுதியாக; நஸ்வரம்—அழியக்கூடியது; பஸ்யந்தி—அவர்கள் சமாதி நிலையில் காண்கின்றனர்; ச—மேலும்; அத்யாத்ம-வித:—ஆன்மீக ஞானத்தை உணர்ந்தவர்கள்; விபஸ்சித:—கற்றறிந்த அறிஞர்கள்; ததா அபி—இன்றும்; முஹ்யந்தி—மாயைக்கு ஆளாகின்றனர்; தவ—உமது; அஜ—ஒ, பிறப்பற்றவரே; மாயயா—மாயா சக்தியினால்; ஸு-விஸ்மிதம்—அதிவினோதமானது; க்ருத்யம்—செயல்; அஜம்—பிறப்பற்றப் பரம்பொருளுக்கு; நத: அஸ்மி—நான் எனது வந்தனங்களை சமர்ப்பிக்கின்றேன்; தம்—அவருக்கு.
ஒ, பிறப்பிலியே, ஆன்மீக ஞானத்தில் வளர்ச்சி பெற்ற கற்றறிந்த வேதவித்தகர்கள், பிற தத்துவவாதிகள், தர்க்கவாதிகளைப் போல் பௌதிக உலகம் அழியக் கூடியது என்பதை நிச்சயம் நன்கறிவர். சமாதிநிலையில் அவர்கள் இவ்வுலகின் உண்மை நிலையினை உணர்ந்து அதனை உபதேசிக்கவும் செய்கின்றனர். இருந்தும் அவர்கள் கூட சில சமயம் உமது மாயாசக்தியினால் குழப்பமடைகின்றனர். இது உமக்கே உரிய லீலா வினோதமாகும். ஆகையினால் உமது மாயாசக்தி மிகவும் விந்தையானது என்பதை நான் புரிந்து கொண்டு உமக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
பதம் 5.18.5
விஸ்வோத்பவ-ஸ்தான-நிரோத -கர்மதே
ஹி அகர்துர் அங்கீக்ருதம் அபி அபாவ்ருத:
யுக்தம் ந சித்ரம் த்வயி கார்ய-காரணே
ஸர்வாத்மனி வ்யதிரிக்தே ச வஸ்துத:
விஸ்வ—இம்முழுப் பிரபஞ்சத்தின்; உத்பவ—படைப்பின்; ஸ்தான—பாதுகாத்தலின்; நிரோத—அழித்தலின்; கர்ம—இச்செயல்கள்; தே—உமது (ஒ, போற்றுதற்குரிய பகவானே); ஹி—உண்மையில்; அகர்து:—தனியே; அங்கீக்ருதம்—இப்போதும் வேத இலக்கியங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன; அபி—இருந்தபோதிலும்; அபாவ்ருத:—இச்செயல்களினால் தொடப்படாது; யுக்தம்—பொருத்தமான; ந—இல்லை; சித்ரம்—விந்தையானது; த்வயி—உம்மிடத்தில்; கார்ய-காரணே—எல்லாக் காரியங்களுக்கும் மூலகாரணர்; ஸர்வ-ஆத்மனி—எல்லா வழிகளிலும்; வ்யதிரிக்தே—தனித்து மேலாக; ச—மேலும்; வஸ்துத:—மூலப்பொருள்.
ஒ, பகவானே, நீர் இப்பௌதீக உலகின் படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவற்றிலிருந்து முற்றிலும் பிரிந்து தனித்திருந்து இச்செயல்களினால் நேரடியாகப் பாதிக்கப்படாதிருந்தும் இவையனைத்தும் உமக்கே இயல்புடையனவாகும். இதில் நாங்கள் வியப்படையவில்லை. ஏனெனில் உமது கற்பனைக்கெட்டாத சக்திகள் நீரே காரணங்கள் அனைத்திற்கும் மூலகாரணர் என்னும் நிறைவானத் தகுதியினை உமக்களிக்கின்றன. எல்லாவற்றிலுமிருந்து நீர் பிரிந்து தனியே இருந்த போதிலும் எல்லாவற்றிலும் செயல்படும் விதியாக நீரே விளங்குகின்றீர். இதனால் உமது கற்பனைக் கெட்டாத சக்தியின் மூலமே எல்லாம் நிகழ்கின்றது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம்.
பதம் 5.18.6
வேதான் யுகாந்தே தமஸா திரஸ்க்ருதான்
ரஸாதலாத் யோ ந்ரு-துரங்க-விக்ரஹ
ப்ரத்யாததே வை கவயே ‘பியாசதே
தஸ்மை நமஸ் தே ‘விததேஹிதாய இதி
வேதான்—நான்கு வேதங்கள்; யுக-அந்தே—யுக முடிவில்; தமஸா—அறியாமை வடிவம் கொண்ட அசுரனால்; திரஸ்க்ருதான்—திருடப்பட்டு; ரஸாதலாத்—கீழ்உலகத்திலிருந்து (ரஸாதலம்); ய:—இவர் (முழுமுதற் கடவுள்); ந்ரு-துரங்க-விக்ரஹ:—குதிரையும் மனிதனும் கலந்த வடிவம் கொண்டு; ப்ரத்யாததே—திரும்பினார்; வை—உண்மையில்; கவயே—பரமகவிஞருக்கு (பிரம்மதேவன்); அபியாசதே—அவர் அவற்றைக் கேட்ட பொழுது; தஸ்மை—அவருக்கு (ஹயக்ரீவ வடிவத்திற்கு); நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; தே—உமக்கு; அவிதத-இஹிதாய—அவரது தீர்மானம் தோற்பதில்லை; இதி—இவ்வாறு.
யுக முடிவில் அறியாமையே வடிவமாக வந்த அசுரன் ஒருவன் வேதங்கள் அனைத்தையும் திருடிக் கொண்டு ரஸாதல லோகத்திற்குச் சென்று விட்டான். ஆயினும் பரமபுருஷ பகவான் தனது ஹயக்ரீவர் வடிவத்தில் வேதங்களைக் கைப்பற்றி பிரம்மதேவன் வேண்டிக் கொண்டதினால் அவரிடம் திருப்பி அளித்தார். தனது உறுதியில் தோல்வியடையாத பரமபுருஷ பகவானுக்கு நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன்.
பதம் 5.18.7
ஹரி-வர்ஷே சாபி பகவான் நர-ஹரி-ரூபேணாஸ்தே தத்-ரூப-
க்ரஹணநிமித்தம் உத்தரத்ராபிதாஸ்யே: தத்தயிதம் ரூபம் மஹா-புருஷ-
குண பாஜனோ மஹா-பகவதோ தைத்ய-தானவ-குல-தீர்திகாரண-
ஸீலா-சரித ப்ரஹ்லாதோ ‘வ்யதானானன்ய-பக்தி-யோகேன ஸஹ
தத்-வர்ஷ-புருஷைர் உபாஸ்தே இதம் சோதாஹரதி
ஹரி-வர்ஷே—ஹரிவர்ஷம் என்னும் நிலப்பகுதி; ச—மேலும்; அபி—உண்மையில்; பகவான்—முழுமுதற் கடவுள்; நர-ஹரி-ரூபேண—அவரது நரசிம்மதேவர் வடிவம்; ஆஸ்தே—அமைக்கப்படுகிறது; தத்-ரூப-க்ரஹண-நிமித்தம்—பகவான் கிருஷ்ணர் (கேசவன்) ஏன் நரசிம்மர் வடிவம் கொண்டார் என்பதற்கானக் காரணம்; உத்தரத்ர—பிற அத்தியாயங்களில்; அபிதாஸ்யே—நான் விளக்குவேன்; தத்—அது; தயிதம்—மிகவும் இனிமையான; ரூபம்—பகவானின் வடிவமாகும்; மஹா-புருஷ-குண-பாஜன:—தெய்வீக மகான்களின் நற்குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமானவர் பிரஹலாத மகாராஜா ஆவார்; மஹா-பாகவத:—மிகப்பெரிய பக்தர்; தைத்ய-தானவ-குல-தீர்தீ-கரண-ஸீலா-சரித:—தனது குலத்தில் பிறந்த தைத்யர்கள் (அசுரர்கள்) அனைவரையும் மீட்கும் அளவிற்கு அவருடைய செயல்களும், தன்மைகளும் உயர்ந்தவையாகும்; ப்ரஹ்லாத:—மகாராஜா பிரஹலாதன்; அவ்யவதான-அனன்ய-பக்தி-யோகேன—தடைபடாத, மாறாத பக்தித் தொண்டு; ஸஹ—உடன்; தத்-வர்ஷ-புருஷை:—ஹரி வர்ஷத்தைச் சேர்ந்தவர்கள்; உபாஸ்தே—வந்தனங்களை அர்ப்பணித்து வணங்குகின்றனர்; இதம்—இந்த; ச—மேலும்; உதாஹரதி—ஒதுகின்றனர்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே, ஹரி வர்ஷம் என்னும் நிலப்பகுதியில் பகவான் நரசிம்மர் இருக்கின்றார். ஸ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டத்தில் பகவான் நரசிம்மதேவர் வடிவம் கொள்வதற்கு பிரஹலாத மகாராஜா எவ்வாறு காரணமானவர் என்பதை உனக்கு நான் விளக்குவேன். பகவானின் மிகவுயர்ந்த பக்தரான பிரஹலாத மகாராஜா தெய்வீக மகான்களின் உயர்குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமாவார். அவரது செயல்களும், தன்மைகளும் அவரது அசுர குலத்தில் பிறந்த அனைத்து உறுப்பினர்களையும் அதிலிருந்து மீட்டன. இவ்வுயர்ந்த மகானுக்கு பகவான் நரசிம்மதேவரே மிகவும் பிரியமானவர் ஆவார். அதனால் பிரஹலாத மகாராஜாவும் ஹரிவர்ஷத்தைச் சேர்ந்த அனைவரும், அவரது பணியாளர்களும் பின்வரும் மந்திரத்தை ஒதி பகவான் நரசிம்ம தேவரை வழிபடுகின்றனர்.
பதம் 5.18.8
ஓம் நமோ பகவதே நரஸிம்ஹாய நமஸ்தேஜஸ்-தேஜஸே ஆவிர்- ஆவிர்பவ
வஜ்ர-நக வஜ்ர தம்ஷ்ட்ர கர்மா-ஸயான் ரந்தய ரந்தய தமோ
க்ரஸ க்ரஸ ஓம் ஸ்வாஹா, அபயம் அபயம் ஆத்மனி பூயிஷ்டா
ஓம் க்ஷ்ரௌம்
ஓம்—ஓ, பகவானே; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; நர-ஸிம்ஹாய—பகவான் நரசிம்மர் என்றறியப்படுபவர்; நம:—வந்தனங்கள்; தேஜ:-தேஜஸே—அனைத்துச் சக்திகளின் சக்தி; ஆவி:-ஆவிர்பவ—அருள் கூர்ந்து முற்றிலும் வெளிப்படுவீராக; வஜ்ர-நக—ஒ, வஜ்ராயுதம் போன்ற நகங்களை உடையவர், நீர்; வஜ்ர-தம்ஷ்ட்ர—ஒ, வஜ்ராயுதம் போன்ற பற்களை உடையவர் நீர்; கர்ம-ஆஸயான்—பௌதீகச் செயல்களினால் மகிழ்ச்சியடையும் அசுர ஆசைகள்; ரந்தய ரந்தய—அருள் கூர்ந்து வெற்றி கொள்வீர்; தம:—பௌதீக உலகில் உள்ள தமோ குணம்; க்ரஸ—அன்புடன் விரட்டுவீராக; க்ரஸ—அன்புடன் விரட்டுவீராக; ஓம்—ஒ, எந்தன் பகவானே; ஸ்வாஹா—மரியாதைக்குரிய அர்ப்பணிப்பு; அபயம்—அச்சமின்றி; அபயம்—அச்சமின்றி; ஆத்மனி—என் மனதில்; பூயிஷ்டா:—நீர் தோன்றுவீராக; ஒம்—ஒ, பகவானே; க்ஷ்ரௌம்—பகவான் நரசிம்மதேவருக்கு அர்ப்பணிக்கும் மந்திரங்களின் “பீஜம்” அல்லது விதை;
அனைத்துச் சக்திக்கும் ஆதாரமாக விளங்கும் பகவான் நரசிம்ம தேவருக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன். வஜ்ராயுதங்களைப் போன்று நகங்களும் பற்களுமுடைய எனது பகவானே, இப்பௌதீக உலகின் பலன்தரும் செயலுக்கான எமது அசுர ஆசைகளை அழிப்பீராக அருள் கூர்ந்து எமது இதயங்களில் எழுந்தருளி எமது அறியாமையினை நீக்குவீராக அப்போதுதான் உமது கருணையினால் இப்பௌதீக உலகின் வாழ்க்கைப் போராட்டத்தில் அச்சமற்றவர்களாக ஆவோம்.
பதம் 5.18.9
ஸ்வஸ்தி அஸ்து விஸ்வஸ்ய கல ப்ரஸீததாம்
த்யாயந்து பூதானி ஸிவம் மிதோ தியா
மனஸ் ச பத்ரம் பஜதாத் அருதாக்ஷஜே
ஆவேஸ்யதாம் நோ மதிர் அபி அஹைதுகீ
ஸ்வஸ்தி—மங்களம்; அஸ்து—உண்டாகட்டும்; விஸ்வஸ்ய—இப்பிரபஞ்சம் முழுவதிலும்; கல:—காழ்ப்புணர்ச்சி (பெரும்பாலும் ஒவ்வொருவரும்); ப்ரஸீததாம்—அவர்கள் அமைதியடையட்டும்; த்யாயந்து—அவர்கள் சிந்திப்பார்கள்; பூதானி—அனைத்து உயிர்களும்; ஸிவம்—மங்களம்; மித—ஒருவருக்கொருவர்; தியா—அவர்கள் புத்தியினால்; மன:—மனம்; ச—மேலும்; பத்ரம்—அமைதி; பஜதாத்—நிலவட்டும்; அருதாக்ஷஜே—மனம், புத்தி, புலன்களுக்கு அப்பாற்பட்ட முழுமுதற் கடவுளின்; ஆவேஸ்யதாம்—மூழ்கியிருக்கட்டும்; ந:—எமது; மதி—மதி; அபி—உண்மையில்; அஹைதுகீ—எந்தவித நோக்கமும் இன்றி.
பிரபஞ்சம் முழுவதும் மங்களம் உண்டாகட்டும். காழ்ப்புணர்ச்சியுடைய மனிதர்கள் அனைவரும் அமைதி பெறட்டும். பக்தி யோகத்தின் பயிற்சியினால் உயிர்வாழிகள் அனைவரும் சாந்தி பெறட்டும். பக்தித் தொண்டினை மேற்கொள்வதினால் அவர்கள் பிறர் நலனைப் பற்றிச் சிந்திப்பாராக. அதனால் நாம் எப்போதும் உன்னத பரம் பொருளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபட்டு எப்போதும் அவரது சிந்தனையில் ஆழ்ந்திருப்போமாக.
பதம் 5.18.10
மாகார-தாராத்மஜ-வித்த-பந்துஷு
ஸங்கோ யதி ஸ்யாத் பகவத்-ப்ரியேஷு ந:
ய: ப்ராண-வ்ருத்த்யா பரிதுஷ்ட ஆத்மவான்
ஸித்த்யதி அதூரான் ந ததேந்த்ரிய-ப்ரிய:
மா—இல்லை; அகார—இல்லம்; தார—மனைவி; ஆத்ம-ஜ—குழந்தைகள்; வித்த—வங்கியிலுள்ள பணம்; பந்துஸு—உற்றார், உறவினர்கள்; ஸங்க:—தொடர்பு அல்லது பற்று; யதி—இருந்ததென்றால்; ஸ்யாத்—இருத்தல் வேண்டும்; பகவத்-ப்ரியேஷு—முழுமுதற் கடவுளுக்கு மிகவும் பிரியமானவர்கள்; ந:—எமது; ய:—எவரேனும் ஒருவர்; பிராண்-வ்ருத்தியா—வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்; பரிதுஷ்ட—திருப்தியடைதல்; ஆத்ம-வான்—மனதினை அடக்கித் தன்னை உணர்ந்தவன்; ஸித்யதி—வெற்றி பெறுகிறான்; அதூராத்—மிகவிரைவில்; ந—இல்லை; ததா—அவ்வளவு; இந்த்ரிய-ப்ரிய:—புலனுகர்ச்சியில் பற்றுடைய ஒருவன்.
போற்றுதற்குரிய பகவானே, இல்லம், மனைவி, மக்கள், நண்பர்கள், வங்கியிலுள்ள பணம், உறவினர்களைக் கொண்டுள்ள இல்வாழ்க்கையின் மீது நாங்கள் கவர்ச்சியடையாதிருப்பதற்கு உம்மைப் பிராத்திக்கின்றோம். அப்படியே நாங்கள் பற்றுவைத்தாலும் அது பகவான் கிருஷ்ணரைத் தமது உயிர் நண்பனாகக் கொண்ட பக்தர்கள் மீதே இருக்கட்டும். உண்மையிலேயே ஒருவன் தன்னுணர்வு பெற்று மனதினை அடக்கியவனென்றால் அவன் தனது வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்திலும் முற்றிலும் திருப்தியடைந்தவனாகிறான். அவன் தனது புலன்களைத் திருப்திப்படுத்த முயல்வதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் கிருஷ்ண உணர்வில் விரைவில் வளர்ச்சி பெறுகின்றனர். மாறாகப் பௌதீகப் பொருட்களில் மிகுந்த பற்றுடையோர் இவ்வாறு வளர்ச்சி பெறுவது மிக மிகக் கடினமாகும்.
பதம் 5.18.11
யத்-ஸங்க-லப்தம் நிஜ-வீர்ய-வைபவம்
தீர்தம் முஹு: ஸம்ஸ்ப்ருஸதாம் ஹி மானஸம்
ஹரதி அஜோ ‘ந்த: ஸ்ருதிபிர் கதோ அங்கஜம்
கோ வை ந ஸேவதே முகுந்த-விக்ரமம்
யத்—அவர்களின் (பக்தர்கள்); ஸங்க-லப்தம்—தொடர்பினால் எய்தப்படும்; நிஜ-வீர்ய-வைபவம்—அவர்களின் பாதிப்பு சிறப்பானதாகும்; தீர்த்தம்—கங்கை நதியைப் போன்ற புனித இடங்கள்; முஹு:—மீண்டும் மீண்டும்; ஸம்ஸ்ப்ருஸதாம்—அவற்றின் ஸ்பரிசத்தினால்; ஹி—உறுதியாக; மானஸம்—மனதின் அழுக்குகள்; ஹரதி—நீங்குகின்றன; அஜ:—பிறப்பற்ற பரம்பொருள்; அந்த:—இதயத்தினுள்ளே; ஸ்ருதிபி:—செவிகளினால்; கத:—புகுந்து; அங்க-ஜம்—அழுக்குகள் அல்லது உடலின் நோய்க்கிருமிகள்; க:—யார்; வை—உண்மையில்; ந—இல்லை; ஸேவேதே—சேவை செய்வது; முகுந்த-விக்ரமம்—முழுமுதற் கடவுளான முகுந்தனின் புகழ்மிக்கச் செயல்கள்.
முழுமுதற் கடவுளான முகுந்தனே எல்லாம் என்று இருக்கும் மனிதர்களிடம் தொடர்பு கொள்வதால் ஒருவன் அவரது ஆற்றல்கள் மிக்கச் செயல்களைக் காதால் கேட்டு அவற்றை மிக விரைவில் புரிந்து கொள்பவனாகிறான். முகுந்தனின் செயல்கள் மிகுந்த சக்தியுடையனவாகும், அவற்றைக் கேட்பதின் மூலம் ஒருவன் பகவானுடன் கூட விரைவில் தொடர்பு கொள்கிறான். தொடர்ந்தும், ஆர்வமுடனும் பகவானின் ஆற்றல் மிக்கச் செயல்களைக் கேட்கும் ஒருவனின் இதயத்தினுள் முழுமுதற் கடவுளின் நாமவடிவமாயிருக்கும் முழுமெய்ப்பொருள் புகுந்து அதிலுள்ள மாசுக்கள் அனைத்தையும் நீக்கித் தூய்மை செய்கிறது. மாறாகக் கங்கையில் குளித்து உடல் அழுக்கும் நோய்க்கிருமிகளும் நீங்கப்பெற்றாலும் புண்ணியச் சேத்திரங்களுக்கு யாத்திரை செல்வதினாலும் மன அழுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகே நீங்கும். அதனால் தனது வாழ்வை உடனே நிறைவு செய்து கொள்வதற்குப் புத்தியுடைய மனிதன் எவன்தான் பக்தர்களுடன் தொடர்பு கொள்ளாதிருப்பான்?
பதம் 5.18.12
யஸ்யாஸ்தி பக்திர் பகவதி அகிஞ்சன
ஸர்வைர் குனணஸ் தத்ர ஸமாஸதே ஸூரா:
ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குணா
மனோரதேனாஸதி தாவதோ பஹி:
யஸ்ய—அவர்களின்; அஸ்தி—இருக்கிறது; பக்திர்—பக்தித் தொண்டு; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; அகிஞ்சனா—எந்தவிதமான நோக்கமும் இன்றி; ஸர்வை:—எல்லா; குனண:—நற்குணங்கள்; தத்ர—அங்கே (அவனிடத்தில்); ஸமாஸதே—வசிக்கும்; ஸுரா:—தேவர்கள் அனைவரும்; ஹரௌ—முழுமுதற் கடவுளுக்கு; அபக்தஸ்ய—பக்தனல்லாதானின்; குதோ—எங்கே; மஹத்-குணா—நல்ல குணங்கள்; மனோரதேன—மனயூகத்தினால்; அஸதி—நிலையற்றப் பெளதீக உலகில்; தாவத:—ஓடிக் கொண்டிருக்கும்; பஹி:—வெளியே.
முழுமுதற் கடவுளான வாசுதேவர் மீது மாசற்ற பக்தியில் வளர்ச்சியடைந்திருக்கும் மேன்மைக்குணங்களான சமயதர்மம், ஞானம், துறவு போன்றவையும் வெளிப்படுகின்றன. மாறாக பக்தித் தொண்டு செய்யாது பௌதீகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் ஒருவனிடம் நற்குணங்கள் ஏதும் இருப்பதில்லை. இவன் யோக ஸித்திப் பயிற்சியில் சேர்ந்தவனாகவோ அல்லது தனது குடும்பத்தையும், உறவினர்களையும் காப்பதற்கு நேர்மையான முயற்சி உடையவனாக இருந்தாலும் அவன், அவனது சுயமனயூகத்தினால் விரட்டப்படுவதோடு, பகவானின் புறச்சக்தியின் தொண்டில் கண்டிப்பாக ஈடுபட வேண்டியவனாகிறான். இம்மனிதனிடம் என்ன நற்குணம் இருக்க முடியும்?
பதம் 5.18.13
ஹரிர் ஹி ஸாக்ஷாத் பகவான் ஸரீரிணாம்
ஆத்மா ஜஷாணாம் இவ தோயம் ஈப்ஸிதம்
ஹித்வா மஹாம்ஸ் தம் யதி ஸஜ்ஜதே க்ருஹே
ததா மஹத்த்வம் வயஸா தம்பதீனாம்
ஹரி:—பகவான்; ஹி—உறுதியாக; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவான்—முழுமுதற் கடவுள்; ஸரீரிணாம்—பௌதீக உடல்களைப் பெற்றிருக்கும் அனைத்து உயிர்வாழிகளின்; ஆத்மா—வாழ்வும் ஆத்மாவும்; ஜஷாணாம்—நீர்வாழ் உயிர்கள்; இவ—போன்று; தோயம்—மிகுந்த நீரில்; ஈப்ஸிதம்—விரும்பப்படுதல்; ஹித்வா—துறத்தல்; மஹான்—மகான்; தம்—அவரது; யதி—என்றால்; ஸஜ்ஐதே—பற்றுடையவனாகி; க்ருஹே—இல்லறவாழ்வில்; ததா—அச்சமயம்; மஹத்த்வம்—மகத்துவம்; வயஸா—வயதினால்; தம்-பதீனாம்—தம்பதி.
நீர்வாழ் உயிர்கள் எப்போதும் மிகுந்த நீரிடை வாழ விரும்புவது போல் பந்தப்பட்ட ஆத்மாக்கள் இயற்கையிலேயே பரமபுருஷ பகவான் எங்கும் நிறைந்திருக்கும் தோற்றத்திலேயே வாழ விரும்புகின்றனர். ஆகையினால் பௌதீகக் கணக்குகளினால் தேர்ச்சி பெற்ற ஒருவன் பரமாத்மாவைச் சரண்புகாது பௌதீக இல்லற வாழ்க்கையில் பற்றுடையவனாக இருந்தானென்றால் அவனது சிறப்பு இளமை மிக்கப் புலைத்தம்பதியினரைப் போன்றதாகும். பௌதீக வாழ்வில் அதீதப் பற்றுடையவன் ஆன்மீக நற்குணங்கள் அனைத்தையும் இழந்து விடுகிறான்.
பதம் 5.18.14
தஸ்மாத் ரஜோ-ராக-விஸாத-மன்யு–
மான-ஸ்ப்ருஹா-பயதைன்யாதிமூலம்
ஹித்வா க்ருஹம் ஸம்ஸ்ருதி-சக்ரவாலம்
ந்ருஸிம்ஹ-பாதம் பஜதாகுதோபயம் இதி
தஸ்மாத்—ஆகையினால்; ரஜ—இரஜோகுணம் அல்லது பௌதீக ஆசைகள்; ராக—பௌதீகப் பொருட்களிடத்தில் பற்று; விஷாத—பின்னர் ஏமாற்றம்; மன்யு—சினம்; மான-ஸ்ப்ருஹா—சமுதாயத்தில் மதிக்கப்படவேண்டும் என்னும் ஆசை; பய—பயம்; தைன்ய—வறுமையின்; அதிமூலம்—மூலகாரணம்; ஹித்வா—விட்டுவிட்டு; க்ருஹம்—இல்லற வாழ்க்கை; ஸம்ஸ்ருதி-சக்கரவாலம்—மீண்டும் மீண்டும் ஏற்படும் ஜனன மரணம்; ந்ருஸிம்ஹ-பாதம்—பகவான் நரசிம்மதேவரின் தாமரைத் திருவடிகள்; பஜத—வழிபட்டு; அகுத:-பயம்—அச்சமின்மையின் அடைக்கலம்; இதி—இவ்வாறு.
ஆகையினால் ஒ, அசுரர்களே இல்வாழ்க்கையின் இன்பம் என்பதைக் கைவிட்டு பயமின்மையின் உண்மையான அடைக்கலமாக விளங்கும் பகவான் நரசிம்மதேவரின் தாமரைத் திருவடிகளைச் சரணடைவீராக. பௌதீக இல்வாழ்வின் சிக்கலே, பௌதீகப் பற்று, இடையறாத ஆசைகள், துக்கம், சினம், ஏமாற்றம், வீண்கர்வம், என்று மீண்டும் மீண்டும் ஏற்படும் ஜனன மரணத்திற்கு உதவும் இவையனைத்திற்கும் மூலகாரணமாகும்.
பதம் 5.18.15
கேதுமாலே ‘பி பகவான் காமதேவ-ஸ்வரரூபேண லக்ஷ்ம்யா: ப்ரியசி
கீர்ஷயா ப்ரஜாபதேர் துஹித்ரீணாம் புத்ராணாம் தத்-வர்ஷ-பதீனாம்
புருஷாயுஷாஹோ-ராத்ர-பரிஸங்க்யானானாம் யாஸாம் கர்பா மஹா-
புருஷ-மஹாஸ்த்ர-தேஜஸோத்வேஜித-மனஸாம் வித்வஸ்தா வ்யஸவ
ஸம்வத்ஸரந்தே விநிபதந்தி
கேதுமாலே—கேதுமால வர்ஷம் என்னும் நிலப்பகுதியில்; அபி—கூட; பகவான்—முழுமுதற் கடவுள் பகவான் விஷ்ணு; காமதேவ-ஸ்வரூபேண—ராமதேவன் வடிவத்தில் (மன்மதன் அல்லது பிரத்யும்நன்); லக்ஷ்ம்யா:—இலட்சுமிதேவி; ப்ரிய-சிகீர்ஷயா—திருப்தியைக் கொணர்வதற்கான ஆசை; ப்ரஜாபதே—பிரஜாபதியின்; துஹித்ரீணாம்—புதல்வியரின்; புத்ரானாம்—புத்திரர்களின்; தத்-வர்ஷ-பதீனாம்—அந்நிலப்பகுதியின் அரசன்; புருஷ-ஆயுஷர—மனித ஆயுளில் (நூறு வருடங்கள்); அஹ:-ராத்ர—பகல் மற்றும் இரவு; பரிஸங்க்யானானாம்—எண்ணிக்கையில் அவை சமம்; யாஸாம்—அவர்களின் (புதல்விகளின்); கர்பா:—கர்ப்பங்கள்; மஹா-புருஷ—முழுமுதற் கடவுளின்; மஹா-அஸ்த்ர—வன்மைமிக்க ஆயுதமான (சக்கரம்); தேஜஸா—ஒளியினால்; உத்வேஜித-மனஸாம்—அவர்கள் மனம் கிளர்ச்சியுற்று; வித்வஸ்தா—அழிகின்றன; வ்யஸவ:—மரித்தல்; ஸத்வத்ஸரே-அந்தே—வருட முடிவில் விநிபதந்தி—கீழே வீழ்ந்து.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: கேதுமால வர்ஷம் என்னும் நிலப்பகுதியில் பகவான் விஷ்ணு தனது பக்தர்களின் திருப்திக்காகக் காமதேவனாக வாழ்கிறார். இப்பக்தர்கள் இலட்சுமி தேவி (அதிர்ஷ்ட தேவதை), பிரஜாபதி ஸம்வத்ஸரன், மற்றும் ஸம்வத்ஸரனின் அனைத்துப் புதல்வர்கள், புதல்விகள் உள்ளிட்டப் பலராவர். பிரஜாபதியின் புதல்விகள் இரவுகளின் கட்டுப்படுத்தும் தேவதைகளாகவும் புதல்வர்கள் பகற்பொழுதுகளின் கட்டுப்படுத்தும் தேவர்களாகவும் கருதப்படுகின்றனர். பிரஜாபதியின் குழந்தைகள் 36000 பேர்களாவர், இவர்கள் ஒவ்வொருவரும் மனித ஆயுளில் ஒரு பகலும் ஒர் இரவும் ஆவர். ஆண்டின் இறுதியில் பிரஜாபதியின் புதல்விகள் முழுமுதற்கடவுளின் ஒளிமிக்கச் சக்கரத்தைக் கண்டு கிளர்ச்சியடைந்து அதனால் கருச்சிதைவிற்கு ஆளாகின்றனர்.
பதம் 5.18.16
அதீவ-ஸுலவித-கதி-விலாஸ-விலஸித-ருசிர-ஹாஸ-லேஸா
வலோக-லீலயா கிஞ்சித் உத்தம்பித-ஸுந்தர-ப்ரூ-மண்டல-ஸுபக-
வதனாரவிந்த-ஸ்ரீயா ரமாம் ரமயன்ன இந்த்ரியாணி ரமயதே
அதீவ—மிகுந்த; ஸு-லலித—அழகான; கதி—அசைவுகளுடன்; விலாஸ—லீலைகளினால்; விலஸித—வெளிப்படுத்தப்பட்ட; ருசிர—இனிமையான; ஹாஸ லேஸ—மெல்லியப் புன்னகை; அவலோக-லீலயா—குறும்புத்தனமானப் பார்வையினால்; கிஞ்சித்-உத்தம்பித—மெதுவாக உயர்ந்த; ஸுந்தர—அழகிய; ப்ரூ-மண்டல—புருவங்களினால்; ஸுபக—மங்களமான; வதன-அரவிந்த-ஸ்ரீயா—அவரது அழகிய தாமரை மலர் போன்ற திருமுகம்; ரமாம்—அதிர்ஷ்டதேவதை; ரமயன்—இனிமையாக; இந்த்ரியாணி—அனைத்துப் புலன்கள்; ரமயதே—அவர் இனிமை செய்கிறார்.
கேதுமால வர்ஷத்தில் பகவான் காமதேவர் (பிரத்யும்நன்) மிகவும் கனிவுடன் நடந்து கொள்கிறார். அவரது மெல்லியப் புன்னகை மிகவும் அழகியதாகும். புருவங்களை மெல்ல உயர்த்துவதினாலும், குறும்புத்தனமாகப் பார்ப்பதினாலும் அவர் தனது முகத்தின் அழகினை மேலும் அதிகரித்துக் கொள்கிறார். அவர் அதிர்ஷ்ட தேவதையினை இனிமை செய்கிறார். இவ்வாறு அவர் தனது உன்னதப் புலன்களில் மகிழ்கிறார்.
பதம் 5.18.17
தத் பகவதோ மாயாமயம் ரூபம் பரம-ஸமாதி-யோகேன ரமா தேவீ
ஸம்வத்ஸரஸ்ய ராத்ரிஷு ப்ரஜாபதேர் துஹித்ருபிர் உபேதாஹ்ஷு ச தத்
பர்த்ருபிர் உபாஸ்தே இதம் சோதாஹரதி
தத்—அது; பகவத:—முழுமுதற்கடவுள்; மாயா-மயம்—பக்தர்கள் மீது கொண்ட நிறைந்த அன்பு; ரூபம்—வடிவம்; பரம—உயர்ந்த; ஸமாதி-யோகேன—பகவானின் தொண்டில் மனதினை அமிழ்ந்துவதினால், ரமா—அதிர்ஷ்டதேவதை; தேவீ—தெய்வமங்கை; ஸம்வத்ஸரஸ்ய—சம்வத்ஸரம் எனப்படும்; ராத்ரிஷு—இரவுப் பொழுதுகளில்; ப்ரஜாபதே:— பிரஜாபதியின்; துஹித்ருபி:—புதல்விகளுடன்; உபேத—இணைந்து; அஹ: ஸு—பகற் பொழுதுகளில்; ச—மேலும்; தத்-பர்த்ருபி:—கணவர்களுடன்; உபாஸ்தே—வழிபடுதல்; இதம்—இந்த; ச—மேலும்; உதாஹரதி—ஒதுதல்.
பகற்பொழுதுகளில் பிரஜாபதியின் மைந்தர்கள் துணையுடனும் (பகற்பொழுதின் தேவர்கள்) இரவு நேரங்களில் அவரது புதல்விகள் துணையுடன் (இரவின் தேவதைகள்) லட்சுமி தேவி சம்வத்ஸரம் எனப்படும் காலத்தில் பகவானின் கருணைமிக்க காமதேவர் வடிவத்தை வழிபடுகிறார். பக்தித் தொண்டில் முற்றிலும் ஆழ்ந்து அவன் பின்வரும் மந்திரங்களை ஓதினான்.
பதம் 5.18.18
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஓம் நமோ பகவதே ஹ்ருஷீகேஸாய
ஸர்வ குண-விஸேஷைர் விலக்ஷிதாத்மனே
ஆக்ஷதீனாம் சித்தினாம் சேதஸாம் விஸேஷாணாம்
சாதிபதயே ஷோடஸகலாய ச்சந்தோ-மயாயான்ன-மயாயாம்ருத-
மயாய ஸர்வமயயாய ஸஹஸே ஒஜஸே பலாய காந்தாய
காமாய நமஸ் தே உபயத்ர பூயாத்
ஓம்—ஒ, பகவானே; ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்—நற்பலனைத் தருவதற்காக ஒதப்படும் மந்திர விதைகள்; ஒம்—ஒ, பகவானே; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; பகவதே—முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்கு; ஹ்ருஷீகேஸாய—புலன்களின் தெய்வமான ரிஷிகேஸருக்கு; ஸர்வ-குண—உன்னதக்குணங்கள் அனைத்துடன்; விலக்ஷித—குறிப்பாகக் கவனித்து; ஆத்மனே—உயிர்வாழிகளின் ஆத்மாவிற்கு; ஆக்ஷதீனாம்—எல்லாவிதமானச் செயல்களின்; சித்தீனாம்—எல்லாவிதமான ஞானமும்; சேதஸாம்—உறுதி, முயற்சி போன்ற மனதின் செயல்கள்; விஸேஷாணாம்—அவர்களின் குறிப்பிட்டப் புலன்கள்; ச—மேலும்; அதிபதயே—தலைவருக்கு; ஷோடஸ-கலாய—அவர்களின் பாகங்களே படைப்பின் பதினாறு மூலப்பொருட்கள், (புலன்களின் ஐந்து பொருட்கள் மற்றும் மனம் உள்ளிட்டப் பதினோரு புலன்கள்); சந்த:-மயாய—சமயச் சடங்குகள் அனைத்தின் பலன்களையும் அனுபவிப்பவருக்கு; அன்ன-மயாய—உயிர்வாழத் தேவையான அனைத்தையும் வழங்குவதின் மூலம் உயிர்வாழிகள் அனைவரையும் காக்கின்றார்; அம்ருத-மயாய—நித்திய வாழ்க்கை அருள்பவர்; ஸர்வ-மயாய—எங்கும் நிறைந்திருப்பவர்; ஸஹஸே—சக்திமிக்க; ஒஜஸே—புலன்களுக்கு வலிமை அளிக்கிறார்; பலாய—உடலிற்கு பலம் அளிக்கிறார்; காந்தாய—எல்லா உயிர்வாழிகளுக்கும் கணவர்; காமாய—பக்தர்கள் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் வழங்குகிறார்; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; தே—உமக்கு; உபயத்ர—எப்போதும் (இரவிலும் பகலிலும் அல்லது இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும்); பூயாத்—எல்லா நன்மைகளும் உண்டாகட்டும்.
புலன்களை நெறிப்படுத்துபவரும், எல்லாவற்றிற்கும் மூலகாரணருமான முழுமுதற் கடவுள் ரிஷிகேஸருக்கு நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன். உடல், மனம், புத்தி போன்றவற்றின் செயல்கள் அனைத்திற்கும் தலைவர் ஆதலினால் அவரே பலன்கள் அனைத்தையும் அனுபவிப்பவர் ஆவார். மனம் உள்ளிட்டப் பதினோரு புலன்களும், ஐம்புலன்களின் பொருள்களும் அவரது பகுதித் தோற்றங்களாகும். அவரது சக்தியாக விளங்கும் அனைத்துத் தேவைகளையும் அவரே வழங்குகிறார். இவ்வாறு அச்சக்தியிடம் இருந்து அவர் வேறானர் அல்லர். அனைவரின் உடல், மன வலிமைக்கு அவரே காரணர் ஆவார். இவ்வலிமையும் அவரிலிருந்து வேறுபாடுடையதல்ல. அவரே எல்லா உயிர்வாழிகளுக்கும் கணவர் என்பதோடு அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அளிப்பவருமாவார். அவரை வழிபடுவது ஒன்றே வேதங்கள் அனைத்தின் நோக்கமாகும். அதனால் நாம் அனைவரும் நமது மரியாதைக்குரிய வந்தனங்களை அவருக்கு அர்ப்பணிப்போம். அவர் நம்மிடம் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் எப்போதும் கருணை உடையவராக இருப்பாராக.
பதம் 5.18.19
ஸ்த்ரியோ வ்ரதைஸ் த்வா ஹ்ருஷீகேஸ்வரம் ஸ்வதோ
ஹி ஆராத்ய லோகே பதிம் ஆஸாஸதே ‘ன்யம்
தாஸாம் ந தே வை பரிபாந்தி அபத்யம்
ப்ரியம் தனாயூம்ஷி யதோ ‘ஸ்வ-தந்த்ரா:
ஸ்த்ரியா:—எல்லாப் பெண்டிரும்; வ்ரதை:—விரதம் மற்றும் நோன்புகள் நோற்பதில்லை; த்வா—நிர்; ஹ்ருஷீ-கேஸ்வரம்—புலன்களின் தலைவரான முழுமுதற் கடவுள்; ஸ்வத:—உமது இயல்பின்படி; ஹி—உறுதியாக; ஆராத்ய—வழிபட்டு; லோகே—உலகில்; பதிம்—ஒரு கணவன்; ஆஸாஸதே—கேட்டல்; அன்யம்—அடுத்தவர்; தாஸாம்—அப்பெண்கள் அனைவரின்; ந—இல்லை; தே—கணவன்மார்; வை—உண்மையில்; பரிபாந்தி—காப்பதற்குரியத்திறன்; அபத்யம்—குழந்தைகள்; ப்ரியம்—மிகவும் பிரியமான; தன—தனம்; ஆயும்ஷி—அல்லது ஆயுட்காலம்; யத:—ஏனென்றால்; அஸ்வ-தந்த்ரா:—சார்ந்திருத்தல்.
போற்றுதற்குரியப் பகவானே, நீர் உண்மையில் அனைத்துப் புலன்களிலிருந்தும் முற்றிலும் விடுதலை பெற்றவர் ஆவீர். ஆகையினால் விரதங்கள் மூலம் உம்மைக் கடுமையாகப் பெண்கள் அனைவரும் வழிபடுகின்றனர். அவர்கள் தங்கள் புலன்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு கணவனை வேண்டி வழிபடும் காரணத்தினால் அவர்கள் அனைவரும் நிச்சயம் மாயையின் கீழேயே இருக்கின்றனர். அவர்கள் தமக்கோ, தமது குழந்தைகளுக்கோத் தமது கணவனால் பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்பதை அறிந்திலர். மேலும் அவனால் அவர்கள் செல்வத்தையோ, ஆயுட் காலத்தையோ பாதுகாக்க முடியாது. அவனே உமது ஆளுமையின் கீழுள்ள காலம், பலன் தரும் செயல்களின் விளைவுகள், மற்றும் ஜடஇயற்கையின் குணங்கள் முதலியவற்றைச் சார்ந்திருக்கின்றான்.
பதம் 5.18.20
ஸ வை பதி: ஸ்யாத் அகுதோபய: ஸ்வயம்
ஸமந்தத: பாதி பயாதுரம் ஜனம்
ஸ ஏக ஏவேதரதா மிதோ பயம்
நைவாத்மலாபாத் ஆதி மன்யதே பரம்
ஸ:—அவர்; வை—உண்மையில்; பதி:—ஒரு கணவர்; ஸ்யாத்—ஆவார்; அகுத:-பய:—எவரைக் கண்டும் அவர் அஞ்சுவதில்லை; ஸ்வயம்—சுயபூர்த்தியுடையவர்; ஸமன்தத:—முற்றிலும்; பாதி—பாதுகாக்கிறார்; பய-ஆதுரம்—மிகவும் அஞ்சுபவன்; ஜனம்—ஒருவர்; ஸ:—ஆகையினால் அவர்; ஏக:—ஒருவரே; ஏவ—மட்டும்; இதரதா—இல்லையேல்; மித:—ஒருவர் மற்றொருவரிடமிருந்து; பயம்—அச்சம்; ந—இல்லை; ஏவ—உண்மையில்; ஆத்ம-லாபாத்—உம்மைப் பெறுவதைவிட; அதி—சிறந்த; மன்யதே—ஏற்றுக் கொள்ளப்படுதல்; பரம்—பிறபொருள்.
அவர் ஒருவரே அச்சமற்றவராகவும், அதேசமயம் அச்சமுடைய அனைவர்க்கும் முழு அடைக்கலம் கொடுப்பவராகவும் இருப்பதினால் அவரே ஒரு கணவரும் பாதுகாவலரும் ஆவார். ஆகையினால் எந்தன் பகவானே நீர் ஒருவரே கணவர் ஆவீர், இந்நிலையினை வேறு எவராலும் உரிமை கொண்டாட முடியாது. நீர் உண்மையானக் கணவர் இல்லையென்றால் நீர் பிறரிடம் அஞ்சுபவர் ஆவீர். அதனால் வேத இலக்கியங்களைக் கற்றுணர்ந்தவர்கள் மேலாண்மைக்குரிய உம்மை மட்டுமே அனைவரின் நாயகராக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். மேலும் அவர்கள் உம்மை விடச் சிறந்த கணவர் மற்றும் பாதுகாவலர் வேறு எவரும் இலர் என்றும் கருதுகின்றனர்.
பதம் 5.18.21
யா தஸ்ய தே பாத-ஸரோருஹார்ஹணம்
நிகாமயேத் ஸாகில-காம-லம்படா
தத் ஏவ ராஸீப்ஸிதம் ஈப்ஸிதோ ‘ர்சிதோ
யத்-பக்ன-யாச்ஞா பகவன் ப்ரதப்யதே
யா—ஒரு பெண்; தஸ்ய—அவரது; தே—உமது; பாத-ஸரோருஹ—தாமரைத்திருவடிகளின்; அர்ஹணம்—வழிபடுதல்; நிகாமயேத்—முற்றிலும் விரும்பி; ஸா—அப்பெண்; அகில-காம-லம்படா—அனைத்து வகையானப் பௌதீக ஆசைகளையும் காக்க விரும்பிய போதிலும்; தத்—அது; ஏவ—மட்டும்; ராஸி—நீர் அருள்கிறீர்; ஈப்ஸிதம்—விரும்பிய சில வரங்கள்; ஈப்ஸித:—எதிர்பார்த்து; அர்சித:—வழிபடுதல்; யத்—அதிலிருந்து; பக்ன-யாச்ஞா—உமது தாமரைத்திருவடிகளைத் தவிர மற்றதை விரும்பி அதனால் இதயம் உடைகின்றனர்; பகவான்—ஒ, எந்தன் பகவானே; ப்ரதப்யதே—துன்புறுகின்றனர்.
போற்றுதற்குரிய பகவானே தூய அன்புடன் உமது தாமரைத் திருவடிகளை வணங்கும் ஒரு பெண்ணின் அனைத்து ஆசைகளையும் நீர் நிறைவேற்றுகின்றீர். அதுபோல் வேறு சில காரணங்களுக்காக உமது தாமரைத் திருவடிகளை வணங்கும் ஒரு பெண்ணின் ஆசைகளையும் நீர் உடனே நிறைவேற்றுகின்றீர். ஆயினும் இறுதியில் அவள் இதயம் உடைந்து துக்கமடைகிறாள். ஆகையினால் சில பெளதீக நன்மைகளுக்காக உமது தாமரைத் திருவடிகளை ஒருவன் வணங்கத் தேவையில்லை.
பதம் 5.18.22
மத்-ப்ராப்தயே ‘ஜேஸ-ஸுராஸுராதயஸ்
தப்யந்த உக்ரம் தப ஜந்த்ரியே திய:
ருதே பவத்-பாத-பாராயணான் ந மாம்
விந்தந்தி அஹம் த்வத்-த்ருடயா யதோ ‘ஜித
மத்-ப்ராப்தயே—எனது கருணையைப் பெறுவதற்காக; அஜ—பிரம்மதேவன்; ஈஸ—சிவபெருமான்; ஸுர—பிறதேவர்கள்; இந்திரன், சந்திரன், வருணன் போன்றோர், அஸுர-ஆதய:—அதுபோல் அசுரர்கள்; தப்யந்தே—மேற்கொண்டு; உக்ரம்—கடுமையான; தப;—தவம் செய்தல்; அனிந்த்ரியே-திய:—அவர்களது மனம் உயர்ந்த புலனுகர்ச்சிக்கான சிந்தனைகளில் ஆழ்ந்திருக்கின்றது; ருதே—அதுவரை; பவத்-பத-பாராயணாத்—பரமபுருஷ பகவானின் தாமரைத் திருவடிகளில் ஒருவன் முற்றிலும் தன்னை ஈடுபடுத்தி இருத்தல்; ந—இல்லை; மாம்—எனது; விந்தந்தி:—எய்துதல்; அஹம்—நான்; த்வாத்—உன்னிடத்தில்; ஹ்ருதயா:—அவர்களது மனங்கள்; யத:—ஆகையினால்; அஜித—ஒ, வெற்றி கொள்ள முடியாதவர்.
ஒ, வெல்வதற்கரியப் பரமபகவானே, சிவபெருமான், பிரம்மதேவன் பிற தேவர்கள், அசுரர்கள் போன்றோர் பௌதீக இன்பத்திற்கான நினைவுகளில் மூழ்கும்பொழுது அவர்கள் எனது வரங்களைப் பெறுவதற்காக கடுமையானத் தவங்களையும் துறவுகளையும் மேற்கொள்கின்றனர். ஆனால் நானோ, உமது திருவடித் தாமரைகளின் தொண்டில் ஒருவன் ஈடுபடாதவரை அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தபோதிலும் அவனுக்கு நான் கருணை செய்யமாட்டேன். உம்மை எப்போதும் எனது இதயத்தில் வைத்திருக்கின்ற காரணத்தினால் ஒரு பக்தனைத் தவிர வேறு எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன்.
பதம் 5.18.23
ஸ த்வம் மமாபி அச்யுத ஸீர்ஷ்ணி வந்திதம்
கராம்புஜம் யத் த்வத்-அதாயி ஸாத்வதாம்
பிபர்ஷி மாம் லக்ஷ்ம வரேண்ய மாயயா
க ஈஸ்வரஸ்யேஹிதம் ஊஹிதும் விபுர்இதி
ஸ:—அது; த்வம்—நீர்; மம—எனது; அபி—கூட; அச்யுத—ஒ, குற்றமற்றவரே; ஸீர்ஷ்ணி—தலைமீது; வந்திதம்—வழிபட்டு; கர-அம்புஜம்—தாமரைக்கரம்; யத்—இது; த்வத்—உம்மால்; அதாயி—வைக்கப்பட்டு; ஸாத்வதாம்—பக்தர்களின் தலைமீது; பிபர்ஷி—நீர் காக்கின்றீர்; மாம்—எனது; லக்ஷ்ம—உமது மார்பின் மீதுள்ள அடையாளச் சின்னம்; வரேண்ய—ஒ, வணங்கத்தக்கவரே; மாயயா—மாயையினால்; க—யார்; ஈஸ்வரஸ்ய—உயர்ந்த ஆற்றல்மிக்க நெறியாளர்; ஈஹிதம்—ஆசைகள்; ஊஹிதும்—காரணம் மற்றும் தர்க்கத்தினால் அறிந்து கொள்வதற்கு; விபு:—இயல்வது; இதி—இவ்வாறு.
ஒ குற்றமற்றவரே, உமது தாமரைக் கரமே அனைத்து வரங்களுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்றது. அதனால் உமது தூய பக்தர்கள் அதனை வணங்குகின்றனர். மேலும் நீரும் அவர்களது தலைமேல் உமது கரத்தைக் கருணையுடன் வைக்கின்றீர். எனது அடையாளப் பொன்வரிகளை ஏற்கனவே நீர் உமது மார்பில் தாங்கியிருந்த போதிலும் எனது தலையின் மீதும் உமது கரத்தை வைப்பீராக. இக்கௌரவத்தினை ஒரு வீண் பெருமையாகவே நான் கருதுகிறேன். நீர் உமது உண்மையானக் கருணையினை உமது பக்தர்களையன்றி என்னிடம் காட்டுவதில்லை. உண்மையில் நீரே பரிபூரண நெறியாளர் ஆவார். உமது நோக்கங்களை வேறு எவராலும் அறிய முடியாது.
பதம் 5.18.24
ரம்யகே ச பகவத: ப்ரியதமம் மாத்ஸ்யம் அவதார-ரூபம் தத்வர்ஷ-
புருஷஸ்ய மனோ: ப்ராக்-ப்ரதர்ஸிதம் ஸ இதானீம் அபி மஹதா பக்தி
யோகேனாராதயதீதம் சோதாஹரதி
ரமயகே ச—மேலும் ரம்யக வர்ஷத்தில்; பகவத:—முழுமுதற் கடவுள்; ப்ரிய-தமம்—மிகவுயர்ந்த; மாத்ஸ்யம்—மீன்; அவதார-ரூபம்—அவதார வடிவம்; தத்-வர்ஷ-புருஷஸ்ய—அந்நிலத்தின் அரசர்; மனோ:—மனு; ப்ராக்—முன்னர் (சக்ஷுஸ மன்வந்தரத்தின் இறுதியில்); ப்ரதர்ஸிதம்—காட்சிப்படுத்தப்பட்டது; ஸ:—அம்மனு; இதானீம்-அபி—இன்றுவரை கூட; மஹதா-பக்தி-யோகேன—வளர்ச்சி பெற்றப் பக்திச் சாயலினால்; ஆராதயதி—முழுமுதற் கடவுளை வழிபடுகின்றனர்; இதம்—இந்த; ச—மேலும்; உதாஹரதி—ஒதுதல்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ரம்யக—வர்ஷத்தில் வைவஸ்வத மனு ஆண்டபொழுது முழுமுதற் கடவுள் அப்பெருங்காலத்தின் இறுதியில் (சக்ஷுஷ—மன்வந்தரத்தின் இறுதியில்) பகவான் மத்ஸ்யராக அவதரித்தார். வைவஸ்வத மனு இப்போது பகவான் மத்ஸயரை வழிபட்டுப் பின்வரும் மந்திரத்தை ஒதுகிறார்.
பதம் 5.18.25
ஓம் நமோ பகவதே முக்யதமாய நம: ஸத்த்வாய ப்ராணா யௌஜஸே
ஸஹஸே பலாய மஹா-மத்ஸ்யாய நம இதி
ஒம்—ஒ, எந்தன் பகவானே; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; முக்ய-தமாய—தோன்றிய முதல் அவதாரம்; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; ஸத்த்வாய—தூய உன்னதமானவருக்கு; ப்ராணாய—வாழ்வின் ஆதாரம்; ஒஜஸே—புலன்களின் சக்திகளின் ஆதாரம்; ஸஹஸே—மனோசக்தி அனைத்திற்கும் ஆதாரம்; பலாய—உடல்பலத்திற்கு ஆதாரம்; மஹா-மத்ஸ்யாய—மிகப்பெரிய மீன் அவதாரம்; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; இதி—இவ்வாறு.
தூய உன்னதமானவரான முழுமுதற் கடவுளுக்கு நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன். அனைவரின் வாழ்க்கைக்கும், உடல் பலத்திற்கும், மனோபலத்திற்கும், புலன்களின் திறனுக்கும் அவரே ஆதாரமானவர். மிகப் பெரிய மீன் வடிவமான மத்ஸய அவதாரமே அவர் மேற்கொண்ட அனைத்து அவதாரங்களுக்கும் முதலாவதாகும். மீண்டும் நான் எனது வந்தனங்களை அவருக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
பதம் 5.18.26
அந்தர் பஹிஸ் சாகில-லோக-பாலகைர்
அத்ருஷ்ட-ரூபோ விசரஸ உரு-ஸ்வன:
ஸ ஈஸ்வரஸ் ய இதம் த்வம் வஸே ‘னயன்
நாம்னா யதா தாருமயீம் நர ஸ்த்ரியம்
அந்த:—உள்ளே; பஹி:—இன்றி; ச—மேலும்; அகில-லோக-பாலகை:—பல்வேறு உலகங்களின் தலைவர்கள், சமுதாயங்கள், அரசுகள், போன்றவை; அத்ருஷ்ட-ரூப:—காணப்படவில்லை; விசரஸி—நீர் அலைகின்றீர்; உரு—மிகச்சிறந்த; ஸ்வன:—அவற்றின் ஒலியதிர்வுகள் (வேத மந்திரங்கள்); ஸ:—அவர்; ஈஸ்வர:—பரம நெறியாளர்; த்வம்—நீர்; ய:—யார்; இதம்—இந்த; வஸே—கட்டுப்பாட்டின் கீழ்; அனயத்—கொண்டு வந்திருக்கின்றீர்; நாம்னா—அந்தண, சத்திரிய, வைசிய, சூத்திர என்னும் பல்வேறு பெயர்களினால்; யதா—அதே போன்று; தாருமயீம்—மரத்தினால் செய்யப்பட்ட; நர:—ஒரு மனிதன்; ஸ்த்ரியம்—பொம்மை.
போற்றுதற்குரியப் பகவானே கூத்தாட்டுவான் ஆடும் பொம்மைகளைக் கட்டுப்படுத்துவது போன்றும், ஒரு கணவன் மனைவியைக் கட்டுப்படுத்துவது போன்றும், மேலாண்மைமிக்க நீர், இப்பிரபஞ்சத்தில் உள்ள அந்தண, சத்திரிய, வைசிய, சூத்திர என்பது போன்ற உயிர்வாழிகள் அனைவரையும் கட்டுப்படுத்துகின்றீர். நீரே பரம காட்சியாகவும், தளபதியாகவும் எல்லோரின் இதயங்களின் உள்ளும் இருக்கின்றீர் அதுபோல் வெளியிலும் இருக்கின்றீர் இருந்தும் சமுதாயம், இனம், நாட்டின் தலைவர்களினால் உம்மை உணர முடியவில்லை. வேத மந்திரங்களின் ஒலியதிர்வுகளைக் கேட்பவர்களால் மட்டுமே உம்மைப் போற்றிப் பாராட்ட முடியும்.
பதம் 5.18.27
யம் லோக-பாலா: கில மத்ஸர-ஜ்வரா
ஹித்வா யதந்தோ ‘பி ப்ருதக் ஸமேத்ய ச
பாதும் ந ஸேகுர் த்வி-பதஸ் சதுஸ்-பத:
ஸரீஸ்ருபம் ஸ்தாணு யத் அத்ர த்ருஸ்யதே
யம்—அவரது (நீர்); லோக-பாலா:—பிரம்மதேவன் தொடங்கி பிரபஞ்சத்திலுள்ள பெரிய தலைவர்கள்; கில—பிறரைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது; மத்ஸர-ஜ்வரா:—துவேஷம் என்னும் ஜூரத்தினால் பாதிக்கப்படுபவர்கள்; ஹித்வா—புறத்தேத்தள்ளி; யுதந்த:—முயற்சிக்கின்றனர்; அபி—இருந்த போதிலும்; ப்ருதக்—தனியே; ஸமேத்ய—இணைந்து; ச—மேலும்; பாதும்—காப்பதற்கு; ந—இல்லை; ஸேகு:—இயல்வது; த்வி-பத:—இரு காலுடைய; சது:-பத:—நாற்கால் உடைய; ஸரீஸ்ரூபம்—ஊர்வன; ஸ்தானு—அசையாதன; யத்—எதுவாயினும்; அத்ர—இப்பௌதீக உலகில்; த்ருஸ்யதே—காணப்படுபவை.
போற்றுதற்குரிய பகவானே பிரம்மதேவன் பிற தேவர்கள் தொடங்கி இவ்வுலகில் உள்ள அரசியல் தலைவர்கள் வரை இப்பிரபஞ்சத்தில் உள்ள பெரிய தலைவர்கள் அனைவரும் உமது அதிகாரத்தின் மீது காழ்ப்புணர்ச்சியுடையவர்களாகவே இருக்கின்றனர், உமது உதவியின்றி, அவர்களால் தனித்தோ, பலர் சேர்ந்தோ இப்பிரபஞ்சத்திலுள்ள எண்ணிலடங்கா உயிர்வாழிகளைக் காக்க முடியாது. நீரே உண்மையில் உள்ள அனைத்து மனிதர்கள், பசுக்கள், கழுதைகள், செடிகள், ஊர்வன, பறப்பன, மலைகள் போன்ற அனைத்தையும் பாதுகாப்பவர் ஆவீர்.
பதம் 5.18.28
பவான்-யுகாந்ததார்ணவ ஊர்மி-மாலினி
கேஷோணீம் இமாம் ஓஷதி-வீருதாம் நிதிம்
மயா ஸஹோரு க்ரமதே ‘ஜ ஒஜஸா
தஸ்மை ஜகத்-ப்ராண-கணாத்மனே நம இதி
பவான்—உமது மேலாண்மை; யுக-அந்த-அர்ணவே—யுக இறுதியில் அழிவு வெள்ளத்தில்; ஊர்மி-மாலினி—ஆழிப் பேரலைகளுடைய; கேஷோணீம்—பூமி; இமாம்—இந்த; ஒஷதி-வீருதாம்—எல்லாவகையான மூலிகைகளும், மருந்துகளும்; நிதிம்—சேமிப்பிடம்; மயா—எனது; ஸஹ—உடன்; உரு—பெரிய; க்ரமதே—சுற்றிக் கொண்டிருந்தீர்; அஜ—ஒ, பிறப்பிலியே; ஒஜஸா—வேகத்துடன்; தஸ்மை—அவருக்கு; ஜகத்—பிரபஞ்சம் முழுவதின்; ப்ராண-கண-ஆத்மனே—உயிரின் இறுதி ஆதாரம்; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; இதி—இவ்வாறு.
ஓ, எல்லாம்வல்ல பகவானே, யுக இறுதியில், எல்லாவிதமான மூலிகைகள், மருந்துகள், மரங்கள் போன்றவற்றிற்கு ஆதாரமாக இருக்கும் இப்பூமியானது அழிக்கும் ஆழிப்பேரலைகளின் கீழ் பிரளய வெள்ளத்தில் மூழ்குகிறது. அச்சமயம் நீர் பூமியுடன் சேர்த்து என்னையும் காத்து அதீத வேகத்துடன் கடலில் சுற்றிக் கொண்டிருந்தீர். ஒ, பிறப்பிலியே, நீரே பிரபஞ்சப் படைப்பில் உண்மையானப் பாதுகாவலர் ஆவீர் அதனால் அனைத்து உயிர்வாழிகளுக்கும் நீரே காரணர் ஆவீர். நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.
பதம் 5.18.29
ஹிரண்மயே ‘பி பகவான் நிவஸதி கூர்ம- தனும் பிப்ராணாஸ் தஸ்ய தத் ப்ரியதமாம்
தனும் அர்யமா ஸஹ வர்ஷ- புருஷை: பித்ரு கணாதிபதிர் உபதாவதி மந்த்ரம்
இமம் சானுஜபதி
ஹிரண்மயே—இரண்மய வர்ஷத்தில்; அபி—உண்மையில்; பகவான்—முழுமுதற் கடவுள்; நிவஸதி—வாழ்கிறார்; கூர்ம-தனும்—கூர்ம மூர்த்தியாக (ஆமை வடிவில்); பிப்ராண:—வெளிப்படுத்துகின்ற; தஸ்ய—முழுமுதற் கடவுளின்; தத்—அது; ப்ரிய-தமாம்—மிகவும் பிரியமான; தனும்—உடல்; அர்யமா—அர்யமான், இரண்மய-வர்ஷத்தின் தலைவர்; ஸஹ—உடன்; வர்ஷ-புருஷை:—அந்நிலப் பகுதியின் மக்கள்: பித்ரு-கண-அதிபதி:—பித்ருக்களின் தலைவர்; உபதாவதி—பக்தித்தொண்டில் வழிபடுகிறார்; மந்த்ரம்—மந்திரம்; இமம்—இந்த; ச—மேலும்; அனுஜபதி—ஒதுதல்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் இரண்மய வர்ஷத்தில் பரமபுருஷ பகவானான விஷ்ணு கூர்ம மூர்த்தியின் (ஆமை) வடிவத்தில் இருக்கின்றார். மிகவும் பிரியத்திற்குரிய இவ்வழகிய வடிவம் இரண்மய வர்ஷத்தின் தலைவரான அர்யமான் மற்றும் அந்த நிலத்தின் மற்ற குடிமக்களுடன் எப்போதும் பக்தி சேவையில் வணங்கப்படுகிறது. அவர்கள் பின்வரும் மந்திரத்தை ஒதுகின்றனர்.
பதம் 5.18.30
ஓம் நமோ பகவதே அக்ஷபாராய ஸர்வ ஸத்த்வ- குண- விஸேஷ
ணாயானு- பலக்ஷித- ஸ்தானாய நமோ வர்ஷ்மணே நமோ பூம்னே நமோ
நமோ ‘வஸ்தானாய நமஸ்தே
ஓம்—ஓ, எந்தன் பகவானே; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; பகவதே—முழுமுதற் கடவுளாகிய உமக்கு; அக்ஷபாராய—ஓர் ஆமையின் வடிவில்; ஸர்வ-ஸத்த்வ- குண-விஸேஷணாய—அவரது வடிவம் “ஸுத்த ஸத்த்வம்” என்னும் உன்னத நற்குணம் நிரம்பியதாகும்; அனுபலக்ஷித-ஸ்தானாய—அவரது நிலையினை நுணுகி அறியமுடியாது; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; வர்ஷ்மணே—மூத்தவராக இருந்தபோதிலும் காலத்தினால் பாதிக்கப்படாத உமக்கு; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; பூம்னே—எங்கும் செல்லக்கூடிய மிகச்சிறந்தவருக்கு; நம: நம:—மீண்டும் மீண்டும் வந்தனங்கள்; அவஸ்தானாய—எல்லாவற்றிற்கும் அடைக்கலமானவர்; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; தே—உமக்கு.
ஒ, எந்தன் பகவானே, கூர்ம மூர்த்தியாக வடிவம் கொண்டிருக்கும் உமக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்கள். நீரே உன்னத குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமானவர். விஷயத்தினால் முற்றிலும் பாதிக்கப்படாதவரும் ஆவீர். நிர் மிகவும் நிறைவாக தூய நற்குணத்தில் இருக்கின்றீர். நீர் நீரில் இங்கும் அங்கும் சென்றாலும், உமது நிலையினை நுணுகி அறிய ஒருவராலும் முடியாது. அதனால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன். உமது உன்னத நிலையின் காரணமாக நீர் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்ற வரையளவுக்கு உட்படாதவர் ஆவீர். நீர் எல்லாவற்றிக்கும் அடைக்கலமாக எங்கும் இருக்கின்றீர். ஆகையினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை நான் மீண்டும் மீண்டும் உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.
பதம் 5.18.31
யத்-ரூபம் ஏதன் நிஜ- மாயயார்பிதம்
அர்த- ஸ்வரூபம் பஹு-ரூப- ரூபிதம்
ஸங்க்யா ந யஸ்யாஸ்தி அயதோபலம்பனாத்
தஸ்மை நமஸ் தே ‘வ்யபதேஸ- ரூபிணே
யத்—அவரது; ரூபம்—வடிவம்; ஏதத்—இந்த; நிஜ-மாயயா-அர்பிதம்—உமது தனிச் சக்தியினால் வெளிப்படுத்தப்பட்ட; அர்த-ஸ்வரூபம்—கண்ணுக்குப் புலனாகும் இப்பிரபஞ்சத் தோற்றம் முழுவதும்; பஹு-ரூப-ரூபிதம்—பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்ட; ஸங்க்யா—அளவு; ந—இல்லை; யஸ்ய—இவற்றின்; அஸ்தி—இருக்கிறது; அயதா—தவறாக; உபலம்பனாத்—உணர்வது; தஸ்மை—அவருக்கு (பரமபுருஷ பகவான்); நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; தே—உமக்கு; அவ்யபதேஸ—மனயூகத்தினால் அறிய முடியாது; ரூபிணே—அவரது உண்மை வடிவத்தினை.
போற்றுதற்குரிய பகவானே கண்ணுக்குப் புலனாகும் இப்பிரபஞ்சத் தோற்றம் உமது படைப்புச் சக்தியின் வெளிப்பாடாகும். இப்பிரபஞ்சத் தோற்றத்தில் உள்ள எண்ணற்ற வடிவங்கள் எல்லாம் உமது புறச்சக்தியின் வெளிப்பாடாகும். இவ்விராட ரூபம் (பிரபஞ்ச உடல்) உமது உண்மையான வடிவம் அன்று. உன்னத வடிவத்தை ஒருவராலும் உணர முடியாது. அதனால் நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.
பதம் 5.18.32
ஜராயுஜம் ஸ்வேதஜம் அண்டஜோத்பிதம்
சராசரம் தேவர்ஷி- பித்ரு- பூதம் ஐந்த்ரியம்
த்யௌ கம் க்ஷிதி: ஸைல- ஸரித்- ஸமுத்ர-
த்வீப- க்ரஹர்க்ஷேதி அபிதேய ஏக:
ஐராயு-ஐம்—கருப்பையிலிருந்து பிறப்பது; ஸ்வேத-ஜம்—வியர்வையிலிருந்து பிறப்பது; அண்ட-ஐ—முட்டையிலிருந்து பிறப்பது; உத்பிதம்—நிலத்தில் பிறப்பது; சர-அசரம்—அசைவன, அசையாதன; தே—தேவர்கள்; ருஷி—ரிஷிகள்; பித்ரு—பித்ருலோகத்தைச் சேர்ந்தவர்கள்; பூதம்—நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்ற பஞ்சபூதங்கள்; ஐந்தரியம்—அனைத்துப் புலன்கள்; த்யௌ—மேலுலகங்கள்; கம்—வானம்; க்ஷிதி:—பூவுலகம்; ஸைல—மலைகள்; ஸரித்—நதிகள்; ஸமுத்ர—சமுத்திரங்கள்; த்வீப—தீவுகள்; கர்ஹ-ருக்ஷ—விண்மீன்கள்; கிரஹங்கள்; இதி—இவ்வாறு; அபித்யே:—பல்வேறு பெயர்களில் இருப்பவை; ஏக:—ஒன்றே.
போற்றுதற்குரிய பகவானே நீர் உமது பல்வேறு சக்திகளைப் பல்வேறு வடிவங்களாக வெளிப்படுத்தி இருக்கின்றீர் அவை: கருப்பையிலிருந்து, முட்டையிலிருந்து, வியர்வையிலிருந்து பிறப்பன, நிலத்திலிருந்து பிறக்கும் மரம், செடி, கொடிகள், போன்ற உயிர்வாழிகள், அசையும். அசையாத உயிர்வாழிகளான தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் என்று மேலுலகங்களில் வாழ்பவர்கள், மேலும் பூமியிலுள்ள மலைகள், நதிகள், கடல்கள், தீவுகள், போன்றவையாகும். உண்மையில் விண்மீன்களும், கிரஹங்களும் கூட உமது பல்வேறு சக்திகளின் வெளிப்பாடுகளேயாகும். ஆனால் உண்மையில் இரண்டற்ற ஒருவரே ஆவீர். அதனால் உமக்கு மேலாக ஒன்றும் இல்லை. இப்பிரபஞ்சத் தோற்றம் முழுவதும் பொய்மையன்று. இது உமது உய்த்துணரமுடியாத சக்தியின் தற்காலிக வெளிப்பாடாகும்.
பதம் 5.18.33
யஸ்மின் அஸங்க்யேய-விஸேஷ-நாம –
ரூபாக்ருதெள கவிபி: கல்பிதேயம்
ஸங்க்யா யயா தத்த்வ-த்ருஸாபனீயதே
தஸ்மை நம: ஸாங்க்ய-நிதர்ஸணய தே இதி
யஸ்மின்—உம்மிடத்தில் (முழுமுதற் கடவுள்); அஸங்க்யய—எண்ணிலடங்கா; விஸேஷ—விசேஷமான; நாம—பெயர்கள்; ரூப—வடிவங்கள்; அக்ருதெள—உடற்தன்மைகள் உடைய; கவிபி:—கற்றறிந்த அறிஞர்களால்; கல்பிதா—கற்பனை செய்யப்பட்ட; இயம்—இந்த; ஸங்க்யா—எண்ணிக்கை; யயா—யாரால்; தத்த்வ—உண்மையின்; த்ருஷா—அறிவினால்; அபனீயதே—பிரித்தெடுக்கப்படுகிறது: தஸ்மை—அவருக்கு; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; ஸாங்க்ய-நிதர்ஸனாய—இந்த எண்ணிக்கை ஞானத்தினை எடுத்துரைத்தவர் அவரே; தே—உமக்கு; இதி—இவ்வாறு.
ஒ, போற்றுதற்குரிய பகவானே, உமது வடிவமும், உடல் தன்மைகளும் எண்ணிலடங்கா வடிவங்களாக விரிந்திருக்கின்றன. எத்தனை வடிவங்கள் உண்மையில் தோன்றின என்பதை யாராலும் ஆய்ந்தறிய முடியாது, இருந்தும் நீரே உமது கற்றறிந்த கபிலதேவர் வடிவத்தில் இப்பிரபஞ்சம் இருபத்தி நான்கு பொருள்களையுடையது என்று ஆய்ந்திருக்கின்றீர். ஆகையினால் பல்வேறு உண்மைகளை எண்ணிக்கையினால் அறியும் சாங்கிய கொள்கையில் விருப்பமுடைய ஒருவன் அதனை உம்மிடம் இருந்தே கேட்டறிய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பக்தரல்லாதார் பல்வேறு பொருட்களை மட்டும் கணக்கிட்டு, உமது உண்மை வடிவினை அறியாதிருக்கின்றனர். நான் எனது மதிப்பிற்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.
பதம் 5.18.34
உத்தரேஸு ச குருஷு பகவான் யஜ்ஞ-புருஷ: க்ருத-வராஹ-ரூப
ஆஸ்தே தம் து தேவீ ஹைஷா பூ: ஸஹ குருபிர் அஸ்கலித-பக்தி-
யோகேனோபதாவதி இமாம் ச பரமாம் உபநிஷதம் ஆவர்தயதி
உத்தமேஷு—வடபகுதியில்; ச—மேலும்; குருஷு—குரு என்னும் நிலப்பகுதியில்; பகவான்—முழுமுதற் கடவுளின்; யஜ்ஞ-புருஷ:—அனைத்து யக்ஞங்களின் பலன்களையும் ஏற்றுக் கொள்பவர்; க்ருத-வராஹ-ரூப:—ஒரு பன்றியின் வடிவத்தை மேற்கொண்டிருக்கின்றார்; ஆஸ்தே—நித்தியமாகத் தோன்றுகிறார்; தம்—அவரை; து—நிச்சயமாக; தேவீ—தெய்வம்; ஹ—நிச்சயமாக; ஏஷா—இது; பூ:—பூவுலகம்; ஸஹ—உடன்; குருபி:—குரு நிலத்தில் வசிப்போர்; அஸ்கலித—தோல்வியின்றி; பக்தி-யோகேன—பக்தித் தொண்டினால்; உபதாவதி—வழிபட்டு; இமம்—இந்த; ச—மேலும்; பரமாம் உபநிஷதாம்—பரம உபநிஷத்து (இம்முறையின் மூலமே பகவானை ஒருவன் அணுக முடியும்); ஆவர்தயதி—பயிற்சியின் நோக்கில் மீண்டும் மீண்டும் ஒதுதல்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த மன்னனே, அனைத்து வேள்விகளின் பலன்களையும் ஏற்றுக் கொள்ளும் பரமபுருஷ பகவானாக மூர்த்தியாக (பன்றி வடிவம்) ஜம்புத்வீத்தின் வடபகுதியில் வாழ்கிறார். அங்கே, உத்தரகுரு வர்ஷம் என்னும் நிலப்பகுதியில் அன்னை பூமியும், அங்கு வசிப்பவர்களும் உபநிஷத்து மந்திரங்களை மீண்டும் மீண்டும் ஒதி அவரை தோல்வியுறாத பக்தித் தொண்டுடன் வழிபடுகின்றனர்.
பதம் 5.18.35
ஓம் நமோ பகவதே மந்த்ர-தத்த்வ-லிங்காய யஜ்ஞ-க்ரதவே மஹாத்
வராவயவாய மஹா-புருஷாய நம: கர்ம-ஸுக்லாய த்ரி-யுகாய நமஸ் தே
ஒம்—ஒ, பகவானே; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; மந்த்ர-தத்த்வ-லிங்காய—பல்வேறு மந்திரங்களினால் அவர் அறிந்து கொள்ளப்படுகிறார்; யஜ்ஞ—மிருகங்களைப் பலியிடும் வடிவில்; க்ரதவே—மிருக வேள்வியில்; மஹா-த்வர—பெரிய வேள்விகள்; அவயவாய—அவரது அங்கங்கள் மற்றும் உடல் தன்மைகள்; மஹாபுருஷாய—மகாபுருஷருக்கு; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; கர்ம-ஸுக்லாய—உயிர்வாழிகளின் பலன்தரும் செயல்களை அவர் தூய்மை செய்கிறார்; த்ரி-யுகாய—மூன்று யுகங்களிலும் தோன்றும் ஆறு வளங்களையுடைய முழுமுதற் கடவுளுக்கு; (மற்றொன்று நான்காவது யுகத்திற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது); நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; தே—உமக்கு.
போற்றுதற்குரிய பகவானே, மகாபுருஷரான உமக்கு எமது மரியாதைக்குரிய வந்தனங்கள் உரித்தாகுக. மந்திரங்களை ஒதுவதின் மூலமே உம்மை முற்றிலும் அறிந்து கொள்ளக் கூடியவர்களாவோம். நீரே யக்கும் ஆவீர், நீரே க்ரதும் (சடங்கு) ஆவீர். அதனால் அனைத்து வேள்விகளின் சடங்குகளும் உமது உன்னத உடலின் பாகங்களாகும். அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவரும் நீர் ஒருவரே ஆவீர், உமது வடிவம் உன்னத நற்குணத்தினாலானது. நீர் “த்ரி யுக” என்றழைக்கப்படுகின்றீர் ஏனென்றால் கலியுகத்தில் நீர் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றுவதினாலும், ஆறுவகை வளங்களை உடையவராகவும் இருப்பதினாலே தான்.
பதம் 5.18.36
யஸ்ய ஸ்வரூபம் கவயோ விபஸ்சிதோ
குணேஷு தாருஷு இவ ஜாத-வேதஸம்
மத்நந்தி மத்னா மனஸா தித்ருக்ஷவோ
கூடம் க்ரியார்தைர் நம த்ரிதாத்மனே
யஸ்ய—அவரது; ஸ்வ-ரூபம்—வடிவம்; கவய:—கற்றறிந்த மாமுனிவர்கள்; விபஸ்சித:—முழுமெய்ப்பொருளை அறிந்து கொள்வதில் தேர்ந்தவர்கள்; குணேஷு—ஜட இயற்கையின் முக்குணங்களினாலான பௌதீகத் தோற்றத்தில்; தாருஷு—விறகில்; இவ—போன்று; ஜாத—வெளிப்படுதல்; வேதஸம்—நெருப்பு; மத்நந்தி—அசைத்தல்; மத்னா—நெருப்பு உண்டாக்கப் பயன்படும் அரணிக்கட்டை; மனஸா—மனதினால்; தித்ருக்ஷவ:—வினவுகின்றவர்கள்; கூடம்—மறைதல்; க்ரியா-அர்தை:—பலன்தரும் செயல்களினாலும் அவற்றின் விளைவுகளினாலும்; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; ஈரித-ஆத்மனே—தோன்றிய பகவானுக்கு.
அரணிக்கட்டையை உராய்வதினால் மாமுனிவர்களும், ரிஷிகளும் அவ்விறகில் உறங்கிக் கொண்டிருந்த நெருப்பை வெளிக்கொணர்கின்றனர். அதே வழியில் ஒ, பகவானே முழு மெய்ப்பொருளை புரிந்து கொள்வதில் தேர்ந்தவர்கள் தங்கள் உடல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் உம்மையேக் காண முயற்சிக்கின்றனர். இருந்தும் நீர் மறைந்தே இருக்கின்றீர். மறைமுக முறைகளை மனம் அல்லது உடலின் செயல்களினால் நீர் அறிந்து கொள்ளப்படுவதில்லை. காரணம் நீர் சுயமாகத் தோன்றியவர். ஒருவன் இதயப்பூர்வமாக உம்மைத் தேடுகிறான் என்பதை நீர் காணும்பொழுது அவனுக்கு உம்மை வெளிப்படுத்துகின்றீர். ஆகையினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.
பதம் 5.18.37
த்ரவ்ய-க்ரியா-ஹேத்வ-அயனேஸ-கர்த்ருபிர்
மாயா-குனணர் வஸ்து-நிரீக்ஷிதாத்மனே
அன்வீக்ஷயாங்காதிஸயாத்ம-புத்திபிர்
நிரஸ்த-மாயாக்ருதயே நமே நம:
த்ரவ்ய—புலனின்பப்பொருட்களினால்; க்ரியா—புலன்களின் செயல்கள்; ஹேது—புலனுணர்வுச் செயல்களின்; அயன—உடல்; ஈஸு—ஆதிபத்தியக்காலம்; கர்த்ருபி:—தவறான ஆணவம்; மாயா-குணை:—ஜட இயற்கைக்குணங்களினால்; வஸ்து—ஓர் உண்மையாக; நிரீக்ஷித—கவனிக்கப்பட்டு; ஆத்மனே—பரமாத்மாவிற்கு; அன்வீக்ஷயா—எச்சரிக்கை மிக்க ஆய்வினால்; அங்க—யோகப் பயிற்சியின் அங்கங்களினால்; அதிஸய-ஆத்ம-புத்திபி:—நிலைபெற்ற புத்தியுடைவர்களால்; நிரஸ்த—முற்றிலும் விடுதலைபெற்று; மாயா—மாயாசக்தி; அக்ருதயே—அவர் வடிவம்; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்.
புலனின்பப் பொருட்கள் (ஒலி, வடிவம், சுவை, ஊறு, நாற்றம்) புலன்களின் செயல்கள், புலன் உணர்வுச் செயல்களைக் கட்டுப்படுத்துபவர்கள் (தேவர்கள்) உடல் நித்தியக்காலம் மற்றும் ஆணவம் போன்றவை எல்லாம் உமது பௌதீகச் சக்தியின் படைப்புக்களேயாகும். யோகஸித்திப் பயிற்சியினால் நிலைநிறுத்தப்பட்டப் புத்தியுடையோர்களால் மட்டுமே இப்பொருட்கள் அனைத்தும் உமது புறச்சக்தியின் செயல்விளைவே என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றிற்கும் பின்புலமாக உமது உன்னத வடிவமான பரமாத்மாவே இருக்கிறது என்பதையும் கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆகையினால் நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு மீண்டும் மீண்டும் அர்ப்பணிக்கின்றேன்.
பதம் 5.18.38
கரோதி விஸ்வ-ஸ்திதி-ஸம்யமோதயம்
யஸ்யேப்ஸிதம் நேப்ஸிதம் ஈக்ஷிதுர் குணை:
மாயா யதாயோ ப்ரமதே தத்-ஆஸ்ரயம்
கிராவ்ணோ நமஸ்தேகுண-கர்ம-ஸாக்ஷிணே
கரோதி—செய்கின்ற; விஸ்வ—பிரபஞ்சத்தின்; ஸ்திதி—காத்தல்; ஸம்யம—அழித்தல்; உதயம்—படைத்தல்; யஸ்ய—அவரின்; ஈப்ஸிதம்—விருப்பம்; ந—இல்லை; ஈப்ஸிதம்—விருப்பம்; ஈக்ஷிது:—ஒருவரின் பார்வையினால்; குணை:—ஜட இயற்கைக் குணங்களுடன்; மாயா—பௌதீகச் சக்தி; யதா—அவ்வளவு; அய:—இரும்பு; ப்ரமதே—அசைகின்றது; தத்-ஆஸ்ரயம்—அதன் அருகில் வைக்கப்பட்டது; க்ராவ்ண:—காந்தக்கல்; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; தே—உமக்கு; குண-கர்ம-ஸாக்ஷிணே—ஜட இயற்கையின் செயல்கள் மற்றும் எதிர்செயல்களின் சாட்சி.
ஒ, பகவானே, இப்பௌதீக உலகினைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் நீர் விரும்புவதில்லை. ஆயினும் பந்தப்பட்ட ஆத்மாக்களுக்காக நீர் இச்செயல்களை உமது படைப்புச் சக்தியினால் செய்கின்றீர். காந்தக் கல்லின் அசைவிற்கேற்ப இரும்புத்துண்டு அசைவது போல் மொத்தப் பௌதீகச் சக்தியையும் நீர் பார்க்கும் பொழுது செயலற்ற ஜடம் அசைகின்றது.
பதம் 5.18.39
ப்ரமதய தைத்யம் ப்ரதிவாரணம் ம்ருதே
யோ மாம் ரஸாயா ஜகத்-ஆதி-ஸுகர:
க்ருத்வாக்ர-தம்ஷ்ட்ரே நிரகத் உதன்வத:
க்ரீடன்ன இவேப: ப்ரணதாஸ்மிதம் விபும் இதி
ப்ரமத்ய—கொன்றபிறகு; தைத்யம்—அசுரன்; ப்ரதி-வாரணம்—வெல்வதற்குரிய எதிரி; ம்ருதே—போரில்; ய:—அவர்; மாம்—என்னை (பூமி); ரஸாயா:—பிரபஞ்சத்தின் அடியில் வீழ்ந்திருந்த; ஜகத்—இப்பௌதீக உலகில்; ஆதி-ஸுகர:—ஆதிவராக வடிவத்தில் (பன்றி); க்ருத்வா—எடுத்துவைத்தல்; அக்ர-தம்ஷ்ட்ரே—தந்தத்தின் நுனியில்; நிரகாத்—நீரிலிருந்து வெளியே வந்து; உதன்வத:—கர்போதகக்கடலில் இருந்து; க்ரீடன்ன—விளையாடுவது; இவ—போன்று; இப—யானை; ப்ரணதா-அஸ்மி—நான் அடிபணிகிறேன்; தம்—அவருக்கு; விபும்—பரமபுருஷ பகவான்; இதி—இவ்வாறு.
போற்றுதற்குரிய பகவானே, இப்பிரபஞ்சத்தில் ஆதிவராக மூர்த்தியாக நீர் இரண்யாட்சன் என்னும் கொடிய அரக்கனுடன் போர் புரிந்து அவனை அழித்தீர். பிறகு ஒரு யானை விளையாட்டாகத் தண்ணீரிலிருந்து தாமரை மலரைப் பிடுங்கி எடுப்பது போல், கர்போதகக்கடலின் அடியில் கிடந்த என்னை (பூமியை) உமது தந்தத்தின் நுனியினால் வெளியே எடுத்தீர். நான் உம்மை அடிபணிகின்றேன்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “ஜம்புத்வீபவாசிகள் பகவானுக்குத் தங்கள் பிரார்த்தனைகளை அர்ப்பணித்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினெட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.