அத்தியாயம் – 17
கங்கை நதி கீழே இறங்கி விடுதல்
பதம் 5.17.1
ஸ்ரீ-ஸுக உவாச
தத்ர பகவத: ஸாக்ஷாத் யஜ்ஞ-லிங்கஸ்ய விஷ்ணோர் விக்ரமதோ வாம
பாதங்குஷ்ட-நக-நிர்பின்னோர்த்-வாண்ட-கடாஹ-விவ ரேணாந்த:-
ப்ரவிஷ்டா யா பாஹ்ய-ஜல-தாரா தச்-சரண-பங்கஜாவனேஜ-னாருண
கிஞ்ஜல்கோபரஞ் ஜிதாகில-ஜகத்-அக-மலா-பஹோபஸ்பர்ஸனாமலா
ஸாக்ஷாத் பகவத்-பதீதி அனுபவ-க்ஷித-வசோ ‘ பிதீயமானாதி-மஹதா
காலேன யுக-ஸஹஸ்ரோபலக்ஷணேன திவோ மூர்தனி அவததார யத்த
தத் விஷ்ணு-பதம் ஆஹு:
ஸ்ரீ-ஸுக உவாச—ஸ்ரீ சுக தேவ கோஸ்வாமி கூறினார்; தத்ர—அச்சமயம்; பகவத:—முழுமுதற் கடவுளின் அவதாரமான; ஸாக்ஷாத்—நேரடியாக; யக்ஞ-லிங்கஸ்ய—அனைத்து வேள்விகளின் பலன்களையும் அனுபவிப்பவர்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணு; விக்ரமத:—தனது இரண்டாவது அடியினை வைக்கும் பொழுது; வாம-பாத—அவரது இடதுகாலின்; அங்குஷ்ட—பெரிய முன் பாதம்; நக—நகத்தினால்; நிர்பின்ன—துளைத்தார்; ஊர்த்வ—மேலே; அண்ட-கடாஹ—பிரபஞ்சத்தின் மேலுறையை (நிலம், நீர், நெருப்பு, போன்ற ஏழு மேலுறைகள்); விவரேண—துளையின் மூலம்; அந்த: ப்ரவிஷ்டா—பிரபஞ்சத்தினுள் புகுந்து; யா—இது; பாஹ்ய-ஜல-தாரா—பிரபஞ்சத்திற்கு வெளியே பெருக்கெடுத்து ஓடும் காரணக்கடல்; தத்—அவரது; சரண-பங்கஜ—தாமரைத் திருவடிகளின்; அவனேஜன—கழுவுவதினால்; அருண-கிஞ்ஜல்க—சிகப்பு நிறத்தூள்களினால்; உபரஞ்ஜிதா—வண்ணம் கொண்டு; அகில-ஜகத்—ஜகம் முழுவதும்; அக-மலா—பாவச் செயல்கள்; அபஹா—அழிக்கிறது; உபஸ்பர்ஸன—அதன் தொடுதலினால்; அமலா—முற்றிலும் தூய்மையான; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவத்-பதீ—முழுமுதற் கடவுளிடமிருந்து வெளிப்படுகின்றது; இதி—இவ்வாறு; அனுபலக்ஷித—விளக்கப்படுகிறது; வச:—பெயரினால்; அபிதீயமானா—அழைக்கப்படுகிறது; ஆதி-மஹதா-காலேன—நீண்டகாலத்திற்குப் பிறகு; யுக-ஸஹஸ்ர-உபலக்ஷணேன—ஓராயிரம் யுகங்கள் உடையது; திவ:—வானத்தின்; மூர்தனி—உச்சியில் (துருவலோகம்); அவததார—இறங்கி; யத்—இது; தத்—அந்த; விஷ்ணு-பதம்—பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகள்; ஆஹு:—அவர்கள் அழைக்கின்றனர்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பிற்குரிய மன்னனே வேள்விகள் அனைத்தையும் அனுபவிப்பவரான பகவான் விஷ்ணு பலி மகாராஜாவின் வேள்விச் சாலையில் வாமனதேவராகத் தோன்றினார். பின்னர் அவர் தனது இடது கால் முன் பாதத்தினை பிரபஞ்சத்தின் இறுதியில் எடுத்து வைத்து நகத்தினால் பிரபஞ்சத்தின் மேலுறையைத் துளைத்தார். அத்துளையின் வழியாக காரணக்கடலின் தூய நீர் இப்பிரபஞ்சத்தினுள் கங்கை நதியாகப் புகுந்து பகவானின் சிவந்த தாமரைத் திருவடிகளைக் கழுவி வருவதினால் கங்கை நதியின் நீரும் அழகிய சிவந்த நிறம் பெற்றது. ஒவ்வொரு உயிர்வாழியும் கங்கை என்றும் புனித நதியின் உன்னத நீரைத் தொடுவதின் மூலம் பௌதீக அழுக்கினாலான மனதினை உடனடியாகத் தூய்மை செய்து கொள்ள முடியும் இருந்தும் அதன் நீர் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றது. இப்பிரபஞ்சத்தினுள் இறங்கிவிடுவதற்கு முன்பு கங்கை பகவானின் தாமரைத் திருவடிகளை நேரடியாகத் தொடுவதின் காரணமாக அவள் விஷ்ணுபதி என்றழைக்கப்படுகிறாள். பிறகு அவள் ஜாநவி, பாகிரதி என்றும் பெயர்களைப் பெற்றாள். ஒராயிரம் வருடங்களுக்குப் பிறகு கங்கை நீர் இப்பிரபஞ்சத்திலேயே மிக உயரத்தில் இருக்கும் துருவலோகத்தில் இறங்கியது. ஆகையினால் அனைத்துக் கற்றறிந்த அறிஞர்களும் முனிவர்களும் துருவலோகத்தை விஷ்ணுபதம் என்று அறிவித்தனர் (“பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளில் அமைந்திருக்கின்றது”).
பதம் 5.17.2
யத்ர ஹ வாவ வீர-வ்ரத ஔத்தான பாதி: பரம-பகவதோ ‘ஸ்மத்-
குல தேவதா-சரணாரவிந்தோதகம் இதி யாம் அனுஸவனம் உத்க்ருஷ்ய
மாண பகவத்-பக்தி-யோகேன த்ருடம் கவித்யமானாந்நதர்-ஹ்ருதய
ஒளத்கண்ட்ய-விவஸாமீலித-லோசன-யுகல-குட்மல-விகலிதாமல-
பாஷ்ப கலயாபிவ்யஜ்யமான-ரோம-புளக-குலகோ ‘துனாபி பரமாத
ரேண ஸிரஸாபிப்ரதி
யத்ர ஹ வாவ—துருவ லோகத்தில்; வீர-வ்ரத:—உறுதியாக தீர்மானித்தல்; ஒளத்தானபாதி:—மகாராஜா உத்தானபாதனின் புகழ்மிக்க மைந்தன்; பரமபாகவத:—மிகச் சிறந்த பக்தன்; அஸ்மத்—எங்கள்; குல-தேவதா—குலதெய்வம்; சரண-அரவிந்த—தாமரைத் திருவடிகளின்; உதகம்—தண்ணீரில்; இதி—இவ்வாறு; யாம்—இவை; அனுஸவனம்—தொடர்ந்து; உத்க்ருஷ்யமாண—அதிகரித்து; பகவத்-பக்தி-யோகேன—பகவானுக்குரிய பக்தித் தொண்டினால்; த்ருடம்—உயர்ந்த; க்வித்யமான-அந்த:-ஹ்ருதய:—அவர் இதயத்தின் உள்ளே அமைதியுற்று; ஒளத்கண்ட்ய—மிகுந்த ஆர்வமுடன்; விவஸ—தன்னிச்சையாக; அமீலித—மெதுவாகத் திறந்து; லோசன—விழிகள்; யுகல—இணை; குட்மல—மலரைப் போன்றதிலிருந்து; விகலித—தோன்றி; அமல—தூய்மையான; பாஷ்ப-கலயா—கண்ணீருடன்; அபிவ்யஜ்யமான—வெளிப்பட்டு; ரோம-புளக-குலக:—உடலின் தன்னை மறந்த அவரது அடையாளங்கள்; அதுனா அபி—இப்பொழுது கூட; பரம ஆதரேண—மிகுந்த பயபக்தியுடன்; ஸிரஸா—தலையினால்; பிரபர்தி—அவர் தாங்கினார்.
மகாராஜா உத்தானபாதனின் புகழ்மிக்கப் புதல்வரான துருவ மகாராஜா முழுமுதற் கடவுளின் மிகச் சிறந்த பக்தராவார். ஏனென்றால் பக்தித் தொண்டு செய்வதில் அவருக்கிருந்த அடக்க முடியாத உறுதியே அதற்குக் காரணமாகும். பகவான் விஷ்ணுவின் திருவடித் தாமரைகளைப் புனித கங்கை நீர் நீராட்டுகிறது என்பதை நன்கு அறிந்தமையினால் அவர் தனது உலகில் இருந்து கொண்டு, அதே நாளில் கங்கை நீரினை மிகுந்த பயபக்தியுடன் தனது தலையினால் தாங்கிக் கொண்டார். தனது இதயத்தில் உள்ள பகவான் கிருஷ்ணரைப் பக்தியுடன் அவர் தொடர்ந்து தியானிக்கும் காரணத்தினால் அவர் உணர்ச்சிப் பெருக்கினால் தன்னை மறந்த நிலை எய்துவார். அவரது பாதி திறந்த விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடும். அவரது உடல் முழுவதும் உணர்ச்சிப் பெருக்கின் அடையாளம் தோன்றும்.
பதம் 5.17.3
தத: ஸப்த ருஷயஸ் தத் ப்ராபாவாபிஜ்ஞா யாம் நனு தபஸ
ஆதுத்யந்திதீ ஸித்திர் ஏதாவதீ பகவதி ஸர்வாத்மனி வாஸுதேவே
‘னுபரத-பக்தி-யோகவாபேனனவோபே க்ஷிதான்யார்தாத்ம-கதயோ
முக்திம் இவாகதாம் முழுக்ஷவ இவ ஸபஹு-மானம் அத்யாபி ஜடா-
ஜுடைர் உத்வஹந்தி
தத:—அதன்பின்னர்; ஸப்த-ருஷய:—சப்த ரிஷிகள் (மரீசியில் தொடங்கும் ஏழு மாமுனிவர்கள்); தத்ப்ரபாவ-அபிஜ்ஞர்:—கங்கை நதியின் செல்வாக்கினை அவர்கள் நன்கறிவர்; யாம்—இக்கங்கை நீர்; நனு—உண்மையில்; தபஸ:—நமது தவங்களின்; ஆத்யந்திகீ—இறுதியானது; ஸித்தி—நிறைவு; ஏதாவதீ—இவ்வளவு; பகவதி—முழுமுதற் கடவுள்; ஸர்வ-ஆத்மனி—எங்கும் நிறைந்திருப்பவர்; வாஸுதேவ—கிருஷ்ணர்; அனுபரத—தொடர்ந்து; பக்தி-யோக—பக்தித் தொண்டின் யோகமுறை; வாபேன—இத்தளமேடையினை எய்துவதால்; ஏவ—உறுதியாக; உபேக்ஷித—புறக்கணித்தல்; அன்ய—பிற; அர்த-ஆத்ம-கத்ய:—நிறைவின் பிற வழிகள் (சமயம், பொருளாதார வளர்ச்சி, புலனுகர்ச்சி, விடுதலை); முக்திம்—பௌதீகப் பந்தத்திலிருந்து விடுதலை; இவ—போன்று; ஆகதாம்—எய்தியது; முழுக்ஷவ:—விடுதலை விரும்புவோர்; இவ—போன்று; ஸ-பஹு—மானம் மிக்க மரியாமையுடன்; அத்ய அபி—இப்பொழுது வட; ஜடா-ஜூடை:—ஜடை முடியில்; உத்வஹந்தி—அவர்கள் தாங்குகின்றனர்.
சப்தரிஷிகள் (மரீசி, வஸிஷ்டர், அத்ரி போன்றோர்) துருவலோகத்தின் அருகில் உள்ள உலகில் வசிக்கின்றனர். கங்கை நதியின் செல்வாக்கினைப் பற்றி நன்கு அறிந்த காரணத்தினால் அவர்கள் இந்த நாளில் தங்களது ஜடா முடியில் கங்கை நீரைத் தாங்கிக் கொண்டனர். இதுவே இறுதியானச் செல்வம், தவங்களின் நிறைவு, உன்னத வாழ்க்கைக்கானச் சிறந்த வழி என்று முடிவு செய்தனர். முழுமுதற் கடவுளுக்கான பக்தித் தொண்டினை எந்தவிதமான இடையூறும் இன்றி எய்தியதினால் அவர்கள் சமயதர்மம், பொருளாதார வளர்ச்சி, புலனுகர்ச்சி, பரம் பொருளுடன் இணைவது போன்ற நன்மைக்குரிய பிற முறைகளை புறக்கணிக்கின்றனர். ஞானிகள் பகவானுடன் இணைவதே உயர்ந்த உண்மை என்று கருதுவதுபோல் இந்த ஏழு முனிவர்களும் நிறைவுடை வாழ்க்கை என்று பக்தித் தொண்டினை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
பதம் 5.17.4
ததோ ‘னேக-ஸஹஸ்ர-கோடி விமானானிக-ஸங்குல-தேவ-யானே
னாவதரந்தீந்து மண்டலம் ஆவார்ய ப்ரஹ்ம ஸதனே நிபததி
தத:—சப்தரிஷி மண்டலத்தைத் தூய்மை செய்த பிறகு; அனேக—பல; ஸஹஸ்ர—ஆயிரங்கள்; கோடி—கோடிகள்; விமான-அனீக—விமானத் தொகுதிகளுடன்; ஸங்குல—கூட்டமாக; தேவ-யானேன—தேவர்களின் விண்வெளிப் பாதையில்; அவதரந்தீ—இறங்கி; இந்து-மண்டலம்—சந்திர மண்டலம்; ஆவார்ய—பாய்ந்தோடி; ப்ரஹ்ம-ஸதனே—சுமேடு மலையின் உச்சியிலுள்ள பிரம்ம தேவனின் நகரத்தில்; நிபததி—வீழ்கிறது.
துருவலோகத்தின் (வடமீன்) அருகிலுள்ள சப்தரிஷி மண்டலத்தைத் தூய்மை செய்தபிறகு, கங்கை நீரானது தேவர்களால் கோடிக்கணக்கான தெய்வீக விமானங்களில் விண்வெளிப் பாதையில் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அது சந்திர மண்டலத்தில் பாய்ந்தோடி இறுதியில் மேரு மலையின் உச்சியிலுள்ள பிரம்ம தேவனின் நகரத்தை அடைகிறது.
பதம் 5.17.5
தத்ர சதுர்தா பித்யமானா சதுர்பிர் நாமபிஸ் சதுர் திஸம் அபிஸ்பந்தந்தீ
நத-நதீ-பதிம் ஏவாபிநிவஸதி ஸீதல-கனந்தா சக்ஷுர் பத்ரேதி
தத்ர—அங்கே (மேருமலையின் உச்சியில்); சதுர்தா—நான்கு கிளைகளாக; பித்யமானா—பிரிந்து; சதுர்பி:—நான்குடன்; நாமபி:—பெயர்கள்; சது:-திஸம்—நான்கு திசைகளில் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு); அபிஸ்பந்தந்தீ—தொடர்ந்து பெருகி ஒடி; நத-நதீ-பதிம்—பெரிய நதிகள் அனைத்திற்கும் உறைவிடமான (கடல்); ஏவ:—உறுதியாக; அபிநிவிஸதி—புகுகின்றது; ஸீதா-அலகனந்தா—சீதா மற்றும் அலகனந்தா; சக்ஷு:—சக்ஷு; பத்ரா—பத்ரா; இதி—இப்பெயர்களினால் அறியப்படுகின்றது.
மேரு மலையின் உச்சியில் கங்கை நான்கு கிளைகளாகப் பிரிகின்றது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு திசைகளில் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு) பெருக்கெடுத்து ஒடுகின்றன. இக்கிளை நதிகளான சீதா, அலகனந்தா, சக்ஷு, பத்ரா என்பவை கடலை நோக்கிப் பாய்ந்தோடுகின்றன.
பதம் 5.17.6
ஸீதாது ப்ரஹ்ம ஸதநாத் கேஸராசலாதி-கிரி-ஸிக-ரேப்யோ ‘தோ’த:
ப்ரஸ்ரவந்தீ கந்தமாதன-மூர்தஸு பதித்வாந்தரேண பத்ராஸ்வவர்ஷம்
ப்ராச்யாம் திஸி க்ஷார-ஸமுத்ரம் அபிப்ரவிஸதி
ஸீதா—சீதா என்னும் கிளை நதி; து—நிச்சயமாக; ப்ரஹ்ம-ஸதநாத்—பிரம்மாபுரியிலிருந்து; கேஸராசல-ஆதி—கேசராசலம் மற்றும் பிற பெரிய மலைகள்; கிரி—மலைகள்; ஸிகரேப்ய:—சிகரங்களிலிருந்து; அத: அத:—கீழ்நோக்கி; ப்ரஸ்ரவந்தீ—பாய்ந்தோடி; கந்தமாதன—கந்தமாதனம் என்னும் மலையின்; மூர்தஸு—உச்சியில்; பதித்வா—வீழ்ந்து; அந்தரேண—உள்ளே; பத்ராஸ்வ-வர்ஷம்—பத்ராஸ்வர்ஷம் என்றும் நிலப்பகுதி; ப்ராச்யாம்—மேற்குப் பக்கத்தில்; திஸி—திசை; க்ஷார-ஸமுத்ரம்—உப்புநீர்க் கடலின்; அபிப்ரவிஸதி—புகுகின்றது.
கங்கையின் கிளைநதியான சீதாநதி மேருமலையின் உச்சியிலுள்ள பிரம்மாபுரியில் பெருகி ஓடி அங்கிருந்து மலையைப் போன்றே உயரமுடைய அருகிலுள்ள கேசராசவ மலைகளில் சிகரங்களில் ஒடுகின்றது. இம்மலைகள் எல்லாம் மேரு மலையைச் சுற்றியுள்ள நூலிழைக் கொத்துப் போன்றவையாகும். கேசராசல மலையிலிருந்து கங்கைநதி கந்தமான மலையின் உச்சியில் வீழ்ந்து பின்னர் பத்ராஸ்வ வர்ஷத்தின் நிலப்பகுதியில் பாய்ந்தோடுகிறது. இறுதியில் அது மேற்கிலுள்ள உப்பு நீர்க்கடலை அடைகின்றது.
பதம் 5.17.7
ஏவம் மால்யவச்-சிகரான் நிஷ்பதந்தீ ததோ ‘னுபரத-வேகா கேது
மாலம் அபி சக்ஷு ப்ரதீச்யாம் திஸி ஸரித்-பதிம் ப்ரவிஸதி
ஏவம்—இவ்வாறு; மால்யவத்-ஸிகராத்—மால்யவான் மலையின் உச்சியில்; நிஷ்பதந்தீ—கீழே வீழ்ந்து; தத:—அதன்பிறகு; அனுபரத-வேகா—அதன் வேகமானது எந்தவிதத் தடையுமின்றி; கேதுமாலம்-அபி—கேதுமால வர்ஷம் நிலப் பகுதியில்; சக்ஷு:—சக்ஷு என்னும் கிளை நதி; ப்ரதீச்யாம்—மேற்குத்திசையில்; திஸி—திசை; ஸரிப்பதிம்—கடல்; ப்ரவிஸதி—புகுகின்றது.
கங்கையின் கிளை நதியான சக்ஷுநதி மால்யவான் மலையின் உச்சி மீது விழுகின்றது. அங்கிருந்து நீர்வீழ்ச்சியாக கேதுமால வர்ஷத்தின் நிலப்பகுதியில் வீழ்ந்து ஒடுகின்றது. கங்கை கேது மால-வர்ஷத்தில் தொடர்ந்து ஓடி மேற்குத் திசையில் உள்ள உப்புநீர்க் கடலை அடைகின்றது.
பதம் 5.17.8
பத்ரா சோத்தரதோ மேரு-ஸிரஸா நிபதிதா கிரி-ஸிகராத் அதிஹாய
ஸ்ருங்கவத அவஸ்யந்தமானா உத்தராம்ஸ் து குரூன் அபித உதீச்யாம்
திஸி ஜலதிம் அபிப்ரவிஸதி
பத்ரா—பத்ரா என்னும் கிளைநதி; ச—மேலும்; உத்தரத:—வடதிசைப் பகுதியில்; மேரு-ஸிரஸ:—மேருமலையின் உச்சியிலிருந்து; நிபதிதா—வீழ்ந்து; கிரி-ஸிகராத்—குமுத மலையின் சிகரத்திலிருந்து; அதிஹாய—தொடாதது போல் கடந்து செல்கிறது; ஸ்ருங்கவத—சிருங்கவான் என்னும் மலையில்; ஸ்ருங்காத்—சிகரத்திலிருந்து; அவஸ்யந்தமானால—பெருகி ஒடி; உத்தரான்—வடதிசை; து—ஆனால்; குரூன்—குரு என்னும் நிலப்பகுதி; அபித:—எல்லாத் திசைகளிலும்; உதீச்யாம்—வடக்கு; திஸி—திசை; ஜலதிம்—உப்புநீர்க் கடல்; அபிப்ரவிஸதி—புகுகின்றது.
கங்கையின் கிளை நதியான பத்ராநதி மேருமலையின் வடக்குப் பகுதியிலிருந்து பெருக்கெடுத்து ஒடுகின்றது. இதன் நீர் குமுத மலை, நீலமலை, சுவேதமலை, சிருங்கவான் மலைச் சிகரங்களின் மீது அடுத்தடுத்து வீழ்கிறது. பின்னர் அது குரு நிலப்பகுதியில் ஒடி அதனைக் கடந்து வடக்கிலுள்ள உப்பு நீர்க்கடலில் கலக்கின்றது.
பதம் 5.17.9
ததைவாலகனந்தா தக்ஷிணேன ப்ரஹ்ம-ஸதனாத் பஹுனி கிரி-
கூடானி அதிக்ரம்ய ஹேமகூடாத் ஹைமகூடானி அதி-ரபஸதர-ரம்ஹஸா
லுடயந்தி பாரதம் அபிவர்ஷம் தக்ஷிணஸ்யாம் திஸி ஜலதிம் அபிப்ர-
விஸதி யஸ்யாம் ஸ்நானார்தம் சாகச்சத பும்ஸ பதேபதே ‘ஸ்வகேத-
ராஜஸுயதீனாம் பலம் ந துர்பலம் இதி
ததாஏவ—அதுபோல்; அலகனந்தா—அலகனந்தா என்னும் கிளை நதி; தக்ஷிணேன—தென்திசையினால்; ப்ரஹ்ம-ஸதனாத்—பிரம்மபுரி என்னும் நகரத்திலிருந்து; பஹுனி—பல; கிரி-கூடானி—மலைகளின் உச்சியில்; ஹேமகூடத்—ஏமகூடமலை; ஹைம கூட்டானி—இமகூடம்; அதி-ரபஸத—மிகுந்த வேகத்துடன்; ரம்ஹஸா—மிகுந்த வேகத்துடன்; லுடயந்தீ—பொருட்களைக் கவர்ந்து கொண்டு; பாரதம் அபிவர்ஷம்—பாரத வர்ஷத்தின் எல்லாத் திசைகளிலும்; தக்ஷிணஸ்யாம்—தெற்கில்; திஸி—திசை; ஜலதிம்—உப்புநீர்க்கடல்; அபிப்ரவிஸதி—புகுகின்றது; யஸ்யாம்—இதனில்; ஸ்நான-அர்தம்—குளிப்பதற்காக; ச—மேலும்; ஆகச்சத:—வருகின்ற ஒருவன்; பும்ஸ:—ஒருவன்; பதே பதே—ஒவ்வோர் அடியிலும்; அஸ்வமேத-ராஜஸூய- ஆதீனாம்—அசுவமேதம், இராஜசூயம் போன்ற பெரிய வேள்விகள்; பலன்—பலன்; ந—இல்லை; துர்பலம்—கிடைப்பதற்கு அரியது; இதி—இவ்வாறு.
அதுபோல் கங்கையின் கிளைநதியான அலகானந்தம் என்னும் நதி பிரம்மாபுரியின் (ப்ரஹ்ம—ஸதன) தென்பகுதியிலிருந்து பெருகி ஒடுகிறது. பல்வேறு நிலங்களிலுள்ள மலைகளைக் கடந்து இது மிகுந்த வேகத்துடன் ஏமகூடம், இமகூடம் என்னும் மலைச் சிகரங்களில் வீழ்கின்றது. இம்மலை உச்சிகளில் பெருகி ஒடி கங்கை பாரத வர்ஷம் என்னும் நிலப்பகுதியில் பெருக்கெடுத்து ஒடுகின்றது. பின்னர் கங்கை தெற்கிலுள்ள உப்புநீர்க் கடலில் கலக்கின்றது. இந்நதியில் நீராடுபவர்கள் பாக்கியசாலிகள். இவர்கள் தமது ஒவ்வோர் அடியிலும் இராஜசூய யாகம், அசுவமேத யாகம் போன்ற யாகங்களைச் செய்வதினால் வரும் பலன்களை எளிதில் அடைவர்.
பதம் 5.17.10
அன்யே ச நதா நத்யஸ் ச வர்ஷே வர்ஷே ஸந்திபஹு-ஸோ மேர்வ-
ஆதி-கிரி துஹிதர: ஸதஸ:
அன்யே—பிறபல; ச—மேலும்; நதா:—நதிகள்; நத்ய:—சிறுநதிகள்; ச—மேலும்; வர்ஷே வர்ஷே—ஒவ்வொரு நிலப்பகுதியிலும்; ஸந்தி—இருக்கின்றன; பஹுஸ:—பல்வேறு வகைகளில்; மேரு-ஆதி-கிரி-துஹிதர:—மேரு மலை தொடங்கி பல மலைகளின் புத்திரிகள்; ஸதஸ:—நூற்றுக்கணக்கில்.
மேரு மலையின் உச்சியிலிருந்து சிறிதும் பெரிதுமாக ஏராளமான நதிகள் பிரவகித்து ஒடுகின்றன. இந்நதிகள் எல்லாம் மலையின் புதல்விகள் போன்றவையாகும். மேலும் அவைப் பல்வேறு நிலப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானக் கிளை நதிகளாக ஒடுகின்றன.
பதம் 5.17.11
தத்ராபி பாரதம் ஏவ வர்ஷம் கர்ம-க்ஷேத்ரம் அன்யானி அஷ்டவர்ஷாணி
ஸ்வர்கிணாம் புண்ய-ஹேஷோபபோக-ஸ்தானானி பௌமானி ஸ்வர்க –
பதானி வ்யபதிஸந்தீ
தத்ர அபி—இவையெல்லாவற்றிலும்; பாரதம்—பாரத வர்ஷம் எனப்படுவது; ஏவ—உறுதியாக; வர்ஷம்—நிலப்பகுதி; கர்ம-க்ஷேத்ரம்—செயற்களம்; அன்யாந்தி—பிற; அஷ்ட-வர்ஷாணி—எட்டு நிலப்பகுதிகள்; ஸ்வர்கிணாம்—செயற்கரியப் புண்ணியச் செயல்களினால் மேலுலகங்களுக்கு உயர்வு பெறும் உயிர்வாழிகளின்; புண்ய—புண்ணியச் செயல்களின் பலன்கள்; ஸேஷ—மீதமிருப்பவை; உபபோக-ஸ்தானானி—பௌதீக இன்பத்திற்கான இடங்கள்; பௌதானிஸ்வர்க-பதானி—பூமண்டலத்தின் சொர்க்கங்கள்; வ்யபதிஸந்தி—அவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வொன்பது வர்ஷங்களில் பாரத—வர்ஷம் என்னும் நிலப்பகுதியே செயல்களின் களமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. பிற எட்டு வர்ஷங்களும் மிகவும் உயர்ந்த புண்ணியம் செய்தவர்களுக்கு உரியதென்று கற்றறிந்த அறிஞர்களும், மாமுனிவர்களும் அறிவிக்கின்றனர். சொர்க்க லோகங்களிலிருந்து அவர்கள் திரும்பி வந்த உடன் மீதமிருக்கும் தங்கள் புண்ணியச் செயல்களின் பலன்களை இந்த எட்டு வர்ஷங்களிலும் அவர்கள் அனுபவிக்கின்றனர்.
பதம் 5.17.12
ஏஷு புருஷாணாம் அயுத-புருஷாயுர்-வர்ஷாணாம் தேவ கல்பானாம்
நாகாயுதப்ராணானாம் வஜ்ர-ஸம்ஹனை-பல-வயோ-மோத ப்ரமுதித-
மஹாஸௌரத-மிதுன-வ்யவாயாபவர்க-வர்ஷ-த்ருளதக-கர்ப-
களத்ராணாம் தத்ர து த்ரேதா-யுக-ஸம: காலோ வர்ததே
ஏஷு—இந்த (எட்டு) வர்ஷங்களை அல்லது நிலப்பகுதிகளில்; புருஷாணாம்—மனிதர்கள் அனைவரும்; அயுத—பத்தாயிரம்; புருஷ—மனிதர்களின் அளவினால்; ஆயு:-வர்ஷாணாம்—அவர்களது ஆயுள் வருடங்கள்; தேவ-கல்பானாம்—தேவர்களைப் போன்றவர்கள் அவர்கள்; நாக-அயுத-ப்ராணானாம்—பத்தாயிரம் யானைகள் பலமுடையோர்; வஜ்ர-ஸம்ஹனை—வஜ்ராயுதம் போன்ற உறுதிமிக்க உடல்களினால்; பல—உடற்பலத்தினால்; வய:—இளமையினால்; மோத—அளவற்றப் புலன் இன்பத்தினால்; ப்ரமுதித—கிளர்ச்சியுற்று; மஹா-ஸௌரத—மிகச் சிறந்த பாலியல் தொடர்பு; மிதுன—ஆணும் பெண்ணும் இணைந்து; வயவாய-அபவர்க—அவர்களின் பாலியல் இன்பத்தின் இறுதிகாலத்தில்; வர்ஷ—கடைசி வருடத்தில்; த்ருத-ஏக-கர்ப—குழந்தையினைக் கருக்கொள்கின்றனர்; களத்ராணாம்—மனைவிகளை உடையோர்; தத்ர—அங்கே; து—ஆனால்; த்ரேதா-யுக-ஸம:—திரேதா யுகத்தைப் போன்ற (அங்கே துன்பம் கிடையாது); கால:—காலம்; வர்ததே—இருக்கின்றது.
இந்த எட்டு வர்ஷங்கள் அல்லது நிலப்பகுதிகளில் வாழ்பவர்கள் பூமியிலுள்ள மனித வருடத்தின்படி பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்கின்றனர். அங்கே பத்தாயிரம் யானைகளின் உடல் பலத்தை உடையவர்களாவர். உண்மையில் அவர்கள் உடல் வஜ்ராயுதம் போன்று உறுதிமிக்கவையாகும். அவர்கள் வாழ்வின் இளமைக்காலம் மிக்க இனிமையுடையதாகும். ஆணும் பெண்ணும் பாலியல் உறவில் இணைந்து நீண்டகாலம் மிகச்சிறந்த இன்பம் அனுபவிப்பர். ஏராளமான வருடங்கள் புலனின்பத்திற்குப் பிறகு—ஆயுளின் ஒராண்டுக்காலம் மீதம் இருக்கும் பொழுது மனைவி கருவுகிறாள். இவ்வாறு இம்மேலுலகவாசிகளின் இன்பத்தின் தரமானது திரேதா யுகத்தைச் சேர்ந்த மனிதர்களைப் போன்றதேயாகும்.
பதம் 5.17.13
யத்ர ஹ தேவ-பதய: ஸ்வை: ஸ்வைர் கண-நாயனகர் விஹித-
மஹார்ஹணா: ஸர்வர்து-குஸும-ஸ்தபக-பல-கிஸலய-ஸ்ரீ யானம்
யமான-விடபலதா -விடபிபிர் உபஸும்பமான-ருசிர-கானனாஸ் ரமா
யதன-வர்ஷகிரி-த்ரோணீஷு ததா சாமல-ஜலாஸயேஸு விகேச-விவித
நவ வனருஹாமோத-முதித-ராஜ-ஹம்ஸ-ஜல-குகுட-காரண்டவ-
ஸாரஸ-சக்ரவாகாதிர் மதுகர-நிகராக்ருதிபிர் உபக்ஷஜிதேஷு ஜல-
க்ரீடாதிபிர் விசித்ர-விநோனத: ஸுலவித-ஸுர-ஸுந்தரீணாம் காம
கவில-விலாஸ-ஹாஸலீலாவலோகா-க்ருஷ்ட-மனோ-த்ருஷ்டய:
ஸ்வைரம் விஹரந்தி
யத்ர ஹ—அந்த எட்டு நிலப்பகுதிகளிலும்; தேவ-பத-ய:—தேவேந்திரன் போன்ற தேவர்களின் தலைவர்கள்; ஸ்வை: ஸ்வை:—அவரவர்க்குரிய; கண-நாயகை:—பணியாளர்களின் தலைவர்கள்; விஹித—அமைத்துக் கொடுத்தல்; மஹா-அர்ஹணா:—சந்தனம், பூமாலை போன்ற மதிப்புமிக்க நன்கொடைகள்; ஸர்வ-ருது—எல்லாப் பருவங்காலங்களிலும்; குஸும-ஸ்தபக—மலர்க் கொத்துக்களின்; பல—பழங்களின்; கிஸலய-ஸ்ரீயா—மரம் செடி கொடிகளின் வளங்களினால்; ஆனம்யமான—கீழ்நோக்கி வளைந்து; விடப—அவற்றின் கிளைகள்; லதா—கொடிகள்; விடபிபி:—பல மரங்களினால்; உபஸும்பமா—முழுதும் அலங்கரிக்கப்பட்டு; ருசிர—அழகிய; கானன—நந்தவனங்கள்; ஆஸ்ரம-ஆயதன—பல ஆஸ்ரமங்கள்; வர்ஷ-கிரி- த்ரோணீஷு:—அந்நிலப்பகுதியின் எல்லைகளான மலைகளுக்கிடையிலுள்ள பள்ளத்தாக்குகள்; ததா—அதனைப்போல்; ச—மேலும்; அமல-ஜல-ஆஸயேஷு—தெளிந்த நீருள்ள குணங்கள்; விகச—பலனளித்தல்; விவித—பல்வகை; நவ-வனருஹ-ஆமோத—தாமரை மலர்களின் நறுமணம்; முதித—ஆர்வத்தைத் தூண்டும்; ராஜ-ஹம்ஸ—பெரிய அன்னங்கள்; ஜல-குக்குட—நீர்க்கோழிகள்; காரண்டவ—காரண்டவம் என்னும் நீர்ப் பறவைகள்; ஸாரஸ—நாரைகள்; சக்ரவாக-ஆதிபி:—சக்கரவாகம் போன்ற பறவைகள்; மதுகர-நிகர-ஆக்ரிபி:—வண்டுகளினால்; உபஜிதேஷு—எதிரொலி செய்தன; ஜல-க்ரீடா-ஆதிபி:—நீர் விளையாட்டுக்கள் போன்ற; விசித்ர—பல்வகை; விநோதை:—லீலைகளினால்; ஸு-லலித—கவர்ச்சியான; ஸுர-ஸந்தரீணாம்—தேவர்களின் மனைவியர்; காம—காமத்திலிருந்து; கவில—பிறந்த; விலாஸ—லீலைகள்; ஹாஸ—புன்னகை; லீலா-அவலோக—குறும்புப் பார்வைகளினால்; அக்ருஷ்ட-மன:—அவர்களின் மனம் கவரப்பட்டு; த்ருஷ்டய:—அவர்களின் பார்வையும் கவரப்பட்டு; ஸ்வைரம்—மிகவும் சுதந்திரமாக; விஹரந்தி—விளையாட்டு இன்பத்தில் ஈடுபடுதல்.
அந்நிலப்பகுதி ஒவ்வொன்றிலும், ஏராளமான நந்தவனங்கள் உண்டு அவற்றில் பருவகாலத்திற்கேற்ப மலர்களும், கனிகளும் நிறைந்ததிருக்கும். அங்கே அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆஸ்ரமங்களும் உண்டு. அந்நிலங்களின் எல்லைகளைக் குறிக்கும் பெரிய மலைகளுக்கு இடையில் தெளிந்த நீருடையப் பெரிய பெரிய குளங்கள் உண்டு அவற்றில் புத்தம் புது தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும். அன்னம், வாத்து, நீர்க்கோழி, நாரை போன்ற நீர்நிலைப் பறவைகள் தாமரை மலர்களின் நறுமணத்தில் ஆர்வம் தூண்டப்பெறும். வண்டுகளின் மயக்கும் இனிய ஓசை எங்கும் நிறைந்திருக்கும். அந்நிலப் பகுதிகளில் வசிப்போர் தேவர்களின் முக்கியத்தலைவர்கள் ஆவர். அவர்கள் எப்போதும் தமது பணியாட்களினால் பணிவிடை செய்யப்பட்டு குளத்தின் அருகில் உள்ள நந்தவனங்களின் தங்கள் வாழ்க்கையினை அனுபவிப்பர். இந்த இனிமையானச் சூழ்நிலையில் தேவர்களின் மனைவியர் தங்கள் கணவன்மாரை நோக்கிக் குறும்புப் புன்னகை பூத்துக் காமப் பார்வைகளை வீசுவர். தேவர்கள் மற்றும் அவர்தம் மனைவியர் தங்கள் பணியாளர்களால் தொடர்ந்து சந்தனமும், மலர் மாலைகளும் வழங்கப்பட்டுக் கொண்டே இருப்பர். இவ்வாறு எட்டு சொர்க்க வர்ஷங்களிலும் உள்ளவர்கள் எதிர்பாலினரின் செயல்களினால் கவரப்பட்டு மகிழ்ந்திருப்பர்.
பதம் 5.17.14
நவஸ்வ அபி வர்ஷேஷு பகவான் நாராயணோ மஹாபுருஷ:
புருஷாணாம் தத்-அனுக்ரஹாயாத்ம-தத்த்வ-வ்யூஹேனாம் மனாத்யாபி
ஸன்னீதீயதே
நவஸு—ஒன்பதின்; அபி—உறுதியாக; வர்ஷேஷு—வர்ஷங்கள் என்னும் நிலப்பகுதிகள்; பகவான்—முழுமுதற் கடவுள்; மஹா-புருஷ:—மகாபுருஷர்; புருஷாணாம்—அவரது பல்வேறு பக்தர்களுக்கு; தத்-அனுக்ரஹாய—தன் கருணையைக் காண்பிக்க; ஆத்ம-தத்த்வ-வ்யூஹேன—அவர் தனது நான்கு விரிவுகளான வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்நர் அநிருத்தர் போன்றவர்களால்; ஆத்மனா—தனிப்பட்ட முறையில்; ஸன்னிதீயதே—பக்தர்களின் தொண்டினை ஏற்றுக் கொள்வதற்காக அருகில் இருக்கிறார்.
இவ்வொன்பது நிலப்பகுதிகளிலுமுள்ள தனது பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக முழுமுதற் கடவுள் நாராயணர் தன்னை வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்நர், அநிருத்தர் என்று நான்கு தத்துவங்களாக விரித்துக் கொண்டார். இவ்வாறு அவர் தனது பக்தர்களின் தொண்டினை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் அருகிலேயே இருக்கின்றார்.
பதம் 5.17.15
இலாவ்ருத து பகவான் பவ ஏக ஏவ புமான் ந ஹி அன்யஸ் தத்ராபரோ
நிர்விஸதி பவான்யா: ஸாப-நிமித்த-ஜஞோ யத்-ப்ரவேக்ஷ்யத: ஸ்த்ர-
பாவஸ தத் பஸ்சாத் வக்ஷ்யாமி
இலாவ்ருதே—இலாவ்ருத வர்ஷம் என்னும் நிலப்பகுதியில்; து—ஆனால்; பகவான்—மிகவும் சக்தியுடைய; பவ:—சிவபெருமான்; ஏக—மட்டும்; ஏவ—நிச்சயமாக; புமான்—ஆண்; ந—இல்லை; ஹி—உறுதியாக; அன்ய:—பிறர்; தத்ர—அங்கே; அபர:—தவிர; நிர்விஸதி—நுழைந்தால்; பவான்யா:-ஸாப-நிமித்த- ஜ்ஞ:—சிவபெருமானின் மனைவியான பவானியின் சாபத்தை அறிபவன்; யத்-ப்ரவேஷ்யத:—அப்பகுதியில் அத்துமீறி நுழைபவன்; ஸ்த்ர-பாவ:—பெண்ணாக மாறுவான்; தத்—அது; பஸ்சாத்—பின்னர்; வக்ஷ்யாமி—நான் விளக்குவேன்.
இலாவ்ருத—வர்ஷம் என்னும் நிலப்பகுதியில் இருக்கும் ஒரே ஆண்மகன் மிகவும் சக்தி பெற்றத் தேவரான சிவபெருமான் ஆவார். சிவபெருமானின் மனைவியான துர்க்கை அந்நிலத்தில் எந்த ஆணும் நுழைவதை விரும்புவதில்லை. யாரேனும் ஒரு மூடன் அத்து மீறி நுழைந்தானென்றால் அவன் உடனே பெண்ணாக மாறுவான். இதனை நான் பின்னர் விளக்குவேன். (இதன் விளக்கம் ஸ்ரீமத்—பாகவதம் ஒன்பதாம் காண்டத்தில் உள்ளது).
பதம் 5.17.16
பவானீ-நாதை: ஸ்த்ரீ-கணார்புத-ஸஹஸ்ரைர் அவருத்யமானோ
பகவதஸ் சதுர்-மூர்தேர் மஹா-புருஷஸ்ய துரீயாம் தாமஸீம் மூர்திம்
ப்ரக்ருதிம் ஆத்மன: ஸங்கர்ஷண-ஸம்ஜ்ஞாம் ஆத்ம-ஸமாதி-ரூபேண
ஸன்னிதாப்யைதத் அபிக்ருணன் பல உபதாவதி
பவானீ-நாதை:—பவானியின் துணையினால்; ஸ்த்ரீ-கண—பெண்களின்; அர்புத-ஸஹஸ்ரை:—பத்துக்கோடி; அவருத்யமான—எப்போதும் தொண்டு செய்யப்பட்டு; பகவத:-சது:-மூர்தே:—நான்காக விரிந்திருக்கும் முழுமுதற் கடவுள்; மஹா-புருஷஸ்ய—பரமபுருஷர்; துரீயாம்—நான்காவது விரிவு; தாமஸீம்—தாமஸக் குணம் (தமோகுணம்) தொடர்புடைய; மூர்திம்—வடிவம்; ப்ரக்ருதிம்—மூலமாக இருப்பவர்; ஆத்மன:—அவரது (சிவபெருமான்); ஸங்கர்ஷண-ஸம்ஜ்ஞாம்—சங்கர்ஷணர் என்றறியப்படுபவர்; ஆத்ம-ஸமாதி-ரூபேண—அவரை சமாதி நிலையில் தியானிப்பதினால்; ஸன்னிதாப்ய—அவரை அருகில் கொண்டுவரும்; ஏதத்—இது; அபிக்ருணன்—தெளிவாக ஒதுதல்; பவ:—சிவபெருமான்; உபதாவதி—வழிபடுகிறார்.
இலாவ்ருத—வர்ஷத்தில் சிவபெருமான் அவர் மனைவி துர்க்கை உடனிருக்கப்பத்துக்கோடி பணிப்பெண்களினால் எப்போதும் பணிவிடை செய்யப்படுகிறார். பரமபுருஷ பகவானின் நான்கு விரிவுகள் வாசுதேவர், பிரத்யும்நர், அநிருத்தர் மற்றும் சங்கர்ஷணர் ஆவார். சங்கர்ஷணர் என்னும் நான்காவது விரிவு நிச்சயம் உன்னதமானவரே ஆவார். ஆயினும் பௌதீக உலகில் அழிவிற்குக் காரணமான அவரது செயல்கள் தமோ குணத்தைச் சேர்ந்தவையாதலினால் அவர் தமஸீ அதாவது தமோகுண வடிவம் என்றறியப்படுகிறார். சங்கர்ஷணரே தனது மூலகாரணர் என்பதை சிவபெருமான் அறிவார். ஆதலினால் அவர் எப்போதும் அவரை சமாதி நிலையில் பின்வரும் மந்திரத்தை ஒதி தியானித்துக் கொண்டிருக்கின்றார்.
பதம் 5.17.17
ஸ்ரீ பகவான் உவாச
ஓம் நமோ பகவதே மஹா-புருஷாய ஸர்வ-குண-ஸங்க்யானா
யானாந்தாயாவ்யக்தாய நம இதி
ஸ்ரீ-பகவான் உவாச—சக்திமிக்க சிவபெருமான் கூறுகிறார்; ஓம் நமோ பகவதே—ஒ, முழுமுதற் கடவுளே நான் எனது மதிப்பிற்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன்; மஹா-புருஷாய—அவரே பரமபுருஷர்; ஸர்வ-குண-ஸங்க்யானாய—உன்னத குணங்கள் அனைத்தின் உறைவிடம்; அனந்தாய—அளவில்லாதவர்; அவ்யக்தாயட—பௌதீக உலகில் தோன்றாதவர்; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; இதி—இவ்வாறு.
சக்திமிக்க சிவபெருமான் கூறினார்: ஒ, முழுமுதற் கடவுளே, நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை பகவான் சங்கர்ஷணரின் வடிவத்தில் இருக்கும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். நீர் அளவில்லாதவர் என்ற போதிலும் பக்தரல்லாதாரிடத்து நீர் தோன்றுவதில்லை.
பதம் 5.17.18
பஜே பஜன்யாரண-பாத-பங்கஜம்
பகஸ்ய க்ருத்ஸ்னஸ்ய பரம் பராயணம்
பக்தேஸ்வ அலம் பாவித-பூத-பாவனம்
பவாபஹம் த்வா பவ-பாவம் ஈஸ்வரம்
பஜே—நான் வணங்குகிறேன்; பஜன்ய—ஒ, வழிபடுதற்குரிய பகவானே; அரண-பாத-பங்கஜம்—அவரது திருவடித்தாமரைகள் அவரது பக்தர்களை அச்சமிகுச் சூழல்களில் காக்கும்; பகஸ்ய—ஐஸ்வர்யங்களின்; க்ருதணஸ்ய—பல்வகை வேறுபாடுகளின்; (செல்வம், புகழ், பலம், ஞானம், அழகு, தவம்); பரம்—உயர்ந்த; பாராயணம்—இறுதி அடைக்கலம்; பக்தேஷு—பக்தர்களுக்கு; அலம்—மதிப்பிற்கும் மேலான; பாவித-பூத-பாவனம்—அவர் தனது பல்வேறு பக்தர்களின் திருப்திக்காக தன்னைப் பல்வேறு வடிவங்களாக விரித்துக் கொள்கிறார்; பவ-அபஹம்—பக்தர்களின் பிறப்பு இறப்பு சுழற்சிகளைத் தடுத்து நிறுத்துகிறார்; த்வா—உமக்கு; பவ பாவம்—பெளதீகப்படைப்பதற்கு அவரே மூலகாரணர்; ஈஸ்வரம்—முழுமுதற் கடவுள்.
ஒ, போற்றுதற்குரிய பகவானே, நீர் முழுமுதற் கடவுளானதினால் நீரே, வணங்குதற்குரியவர் என்பதோடு அனைத்து வளங்களின் உறைவிடமும் ஆவீர். உமது பாதுகாப்பானத் தாமரைத்திருவடிகளே உமது பக்தர்களின் ஒரே பாதுகாவலாகும். அவர்களைத் திருப்திப்படுத்த நீர் உம்மை பல்வேறு வடிவங்களாக விரித்துக் கொள்கின்றீர். ஒ, எந்தன் பகவானே நீர் உமது பக்தர்களை பௌதீக வாழ்க்கைப் பிடியிலிருந்து மீட்கின்றீர். ஆயினும் பக்தரல்லாதார் உமது விருப்பத்தின்பேரில் பௌதீக வாழ்க்கையில் நித்தியமாக சிக்கிக் கொண்டிருக்கின்றனர். உமது நித்தியத் தொண்டனாக என்னை அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்வீராக.
பதம் 5.17.19
ந யஸ்ய மாயா-குண சித்த-வ்ருத்திபிர்
நிரீக்ஷதோ ஹி அன்வ அபி த்ருஷ்டிர் அஜ்யதே
ஈஸே யதா நோ ‘ஜித-மன்ய-ரம்ஹஸாம்
கஸ் தம் ந மன்யதே ஜிகீஸுர் ஆத்மன:
ந—இல்லை; யஸ்ய—அவரது; மாயா—மாயா சக்தியின்; குண—குணங்களில்; சித்த—இதயத்தின்; வ்ருத்திபி:—செயல்களினால் (நினைத்தல், உணர்தல், விரும்புதல்); நீரீக்ஷத:—பார்த்துக் கொண்டிருக்கும் அவரின்; ஹி—உறுதியாக; அனு—சிறிதும்; அபி—கூட; த்ருஷ்டி—பார்வை; அஜ்யதே—பாதிக்கப்படுதல்; ஈஸே—ஒழுங்குபடுத்துவதற்கான நோக்கத்திற்காக; யதா—போன்று; ந—எமது; அஜித—அவர் வெல்லப்படவில்லை; மன்ய—சினம்; ரம்ஹஸாம்—பலம்; க:—யார்; தம்—அவருக்கு (பரமபுருஷ பகவான்); ந—இல்லை; மன்யதே—வழிபடுவது; ஜிகீஷு:—வெல்வதற்கு விரும்புவது; ஆத்மன:—புலன்கள்.
நமது சினத்தின் வேகத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆகையினால் நாம் பௌதீகப் பொருட்களைப் பார்க்கும்போது நமது விருப்பு, வெறுப்பு உணர்வுகளை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் பரமபுருஷ பகவான் இவ்வாறு பாதிக்கப்படுவதில்லை. படைத்தல், காத்தல், அழித்தலுக்காக அவர் பௌதீக உலகினைப் பார்க்கின்றனர், அவர் துளியளவு கூடப் பாதிக்கப்படுவதில்லை. ஆகையினால் புலன்களின் சக்தியை வெல்ல விரும்பும் ஒருவன் பகவானின் தாமரைத் திருவடிகளைக் கண்டிப்பாகச் சரணடைய வேண்டும் பிறகு அவன் வெற்றி பெறுவான்.
பதம் 5.17.20
அஸத்-த்ருஸோ ய ப்ரதிபாதி மாயயா
க்ஷுபேவ மத்வ-ஆஸவ-தாம்ர-லோசன:
ந நாக-வத்வோ ‘ர்ஹன ஈஸிரே ஹ்ரியா
யத்-பாதயோ: ஸ்பர்ஸன-தர்ஷிதேந்த்ரியா:
அஸத்-த்ருஸ:—மாசுடைய பார்வையுடைய ஒருவனுக்காக; ய:—யார்; ப்ரதிபாதி—தோன்றுகிறார்; மாயயா—மாயையின் பாதிப்பு; க்ஷுப:—குடிமயக்கமுடையவன் அல்லது ஆத்திரக்காரன்; இவ—போன்று; மது—தேன்; ஆஸவ—மது; தாம்ர-லோசன:—சிவந்த தாமிரத்தைப் போன்ற விழிகளையுடையவர்; ந—இல்லை; நாகவத்வ:—நாகாசுரனின் மனைவியர்; அர்ஹணே—வழிப்படுதலில்; ஈஸிரே—செல்லுதற்கு இயலாதவர்கள்; ஹ்ரியா—குழப்பத்தின் காரணமாக; யத்பாதயோ—அவரது தாமரைத்திருவடிகளின்; ஸ்பர்ஸன—ஸ்பரிஸத்தினால்; தர்ஷித—கிளர்ச்சியுற்று; இந்தரியா:—அவரது புலன்கள்.
தூய்மையற்றப் பார்வை உடையவர்க்கு பரமபுருஷ பகவானின் கண்கள் அளவின்றி மது குடித்தவனின் கண்களைப் போல் தோன்றும். இவ்வாறு குழப்பமுறும் மூடர்கள் பரமபுருஷ பகவான் மீது சினம் கொள்கின்றனர். அவர்களது சினத்தின் காரணமாக பகவானும் அவர்களுக்கு சினம் மிக்கவராகவும், அச்சம் தருபவராகவும் தோன்றுகிறார். ஆயினும் இது மாயையேயாகும். நாகாசுரனின் மனைவியர் பகவானின் தாமரைத் திருவடிகளின் ஸ்பரிஸத்தினால் கிளர்ச்சியடைந்து அவரைத் தொடர்ந்து வழிபடமுடியாத நிலைக்கு ஆளாகினார். ஆனால் அவர்களின் ஸ்பரிஸத்தினால் பகவான் எந்தவிதமானக் கிளர்ச்சியும் அடையவில்லை காரணம் பகவான் எல்லாச் சூழ்நிலைகளிலும் சமத்துவம் உடையவர். ஆவார். அதனால் முழுமுதற் கடவுளை வழிபடாமல் எவர் இருப்பர்?
பதம் 5.17.21
யம் ஆஹுர் அஸ்ய ஸ்திதி-ஜன்ம-ஸம்யமம்
த்ரிபிர் விஹீனம் யம் அனந்தம் ருஷய:
ந வேத ஸித்தார்தம் இவ க்வசித் ஸ்திதம்
பூ-மண்டலம் மூர்த-ஸஹஸ்ர-தாமஸு
யம்—அவரை; ஆஹு:—அவர்கள் கூறினர்; அஸ்ய—பெளதீக உலகம்; ஸ்திதி—காத்தல்; ஜன்ம—படைத்தல்; ஸம்யமம்—அழித்தல்; த்ரிபி:—இம்மூன்றும்; விஹீனம்—இன்றி; யம்—இவை; அனந்தம்—அளவற்ற; ருஷய:—எல்லா மாமுனிவர்களும்; ந—இல்லை; வேத—உணர்தல்; ஸித்த-அர்தம்—ஒரு சிறுகடுகு; இவ—போன்று; க்வசித்—எங்கே; ஸ்திதம்—இருத்தல்; பூ-மண்டலம்—பிரபஞ்சம்; மூர்த-ஸஹஸ்ர-தாமஸு—பகவானின் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கானப் பாம்புப் படங்கள்.
சிவபெருமான் தொடர்ந்து கூறினார்: படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலுக்கும் பகவானுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாதபோதிலும் மாமுனிவர்கள் அனைவரும் பகவானே இவற்றிற்கு மூலகாரணர் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆகையினால் பகவான் அளவில்லாதவர் என்றழைக்கப்படுகிறார். அவரது அவதாரமான சேஷன் தனது பாம்புப்படங்களின் மீது எல்லாப் பிரபஞ்சங்களையும் சுமந்து கொண்டிருக்கின்றார், ஆயினும் ஒரு பிரபஞ்சம் அவருக்கு ஒரு சிறு கடுகு போன்றதேயாகும். ஆகையினால் நிறைவினை விரும்பும் எந்தவொரு மனிதன் அவரை வணங்காதிருப்பான்?
பதங்கள் 5.17.22 – 5.17.23
யஸ்யாத்ய ஆஸீத் குண-விக்ரஹோ மஹான்
விஜ்ஞான-திஷ்ணுயோ பகவான் அஜ: கில
யத்-ஸம்பவோ ‘ஹம் த்ரி-வ்ருதா ஸ்வ-தேஜஸா
வைகாரிகம் தாமஸம் ஐந்த்ரியம் ஸ்ருஜே
ஏதே வயம் யஸ்ய வஸே மஹாத்மன:
ஸ்திதா: ஸகுந்தா இவ ஸுத்ர-யந்த்ரிதா:
மஹான் அஹம் வைக்ருத-தாமஸேந்த்ரியா:
ஸ்ருஜாம ஸர்வே யத்-அனுக்ரஹாம் இதம்
யஸ்ய—அவரிடமிருந்து; ஆத்ய:—தொடங்கி; ஆஸீத்—இருந்தது; குண-விக்ரஹ:—பௌதீகக் குணங்களின் அவதாரம்; மஹான்—மொத்தப் பௌதீக சக்தியும்; விஜ்ஞான—முழு அறிவின்; திஷ்ணுய:—உறைவிடம்; பகவான்—மிகச்சக்திவாய்ந்த; அஜ:—பிரம்மதேவன்; கில—உறுதியாக; யத்—அவரிடமிருந்து; ஸம்பவ:—பிறந்தார்; அஹம்—நான்; த்ரி-வ்ருதா—ஜட இயற்கையின் முக்குணங்களின் வகைகளுக்கேற்ப; ஸ்வ-தேஜஸா—எனது பௌதீகச் சக்தியினால்; வைகாரிகம்—தேவர்கள் அனைவரும்; தாமஸம்—பௌதீகப் பொருட்கள்; ஐந்த்ரியம்—புலன்கள்; ஸ்ருஜே—நான் படைக்கிறேன்; ஏதே—இவையனைத்தும்; வயம்—நாங்கள்; யஸ்ய—அவரது; வஸே—கட்டுப்பாட்டின் கீழ்; மஹா-ஆத்மன:—மகாத்மாக்கள்; ஸ்திதா:—இருத்தல்; ஸகுந்தா:—கழுகுகள்; இவ—போன்று; ஸுத்ர-யந்த்ரிதா:—கயிற்றினால் கட்டப்பட்டு; மஹாண்—மகாதத்துவம்; அஹம்—நான்; வைக்ருத—தேவர்கள்; தாமஸ—பஞ்சபூதங்கள்; இந்த்ரியா:—புலன்கள்; ஸ்ருஜாம:—நாங்கள் படைக்கின்றோம்; ஸர்வே—நாங்கள் அனைவரும்; யத்—அவரது; அனுக்ரஹாத்—கருணையினால்; இதம்—இப்பௌதீக உலகம்.
முழுமுதற் கடவுளிடமிருந்து பிரம்மதேவன் தோன்றினார். அவரது உடலோ மொத்தப் பௌதீகச் சக்தியினால் ஆகி ஜட இயற்கையின் இரஜோ குணம் நிரப்பப்பட்டு ஞானத்தின் உறைவிடமாக விளங்குகிறது. பிரம்ம தேவனிடமிருந்து, தவறான கர்வத்தின் பிரதிநிதியான ருத்திரன் என்னும் நான் பிறந்தேன். நானே பிற தேவர்களையும், பஞ்ச பூதங்களையும், புலன்களையும் படைக்கின்றேன். ஆகையினால் எங்கள் எல்லோரையும் விட சிறப்புமிக்கவரும், பறவைகள் கயிற்றினால் கட்டப்பட்டிருப்பதைப்போல், அனைத்துத் தேவர்கள், பஞ்சபூதங்கள், புலன்கள், ஏன், பிரம்மதேவன், நான் உள்ளிட்ட அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகிறேன். பகவானின் கருணையினாலேயே எங்களால் பௌதீக உலகைப் படைக்கவும், காக்கவும் அழிக்கவும் முடியும். ஆகையினால் நான் முழுமுதற் கடவுளுக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களை சமர்ப்பிக்கின்றேன்.
பதம் 5.17.24
யன்-நிர்மிதாம் கர்ஹி அபி கர்ம-பர்வணீம்
மாயாம் ஜனோ ‘ யம் குண-ஸர்க-மோஹித:
ந வேத நிஸ்தாரண-யோகம் அஞ்ஜஸா
தஸ்மை நமஸ் தேவிலயோதயாத்மனே
யத்—அவரால்; நிர்மிதாம்—படைக்கப்பட்ட; கர்ஹி அபி—எந்த நேரத்திலும்; கர்மபர்வணீம்—பலன்தரும் செயலின் முடிச்சை அது போடுகிறது; மாயாம்—மாயா சக்தி; ஜன:—ஒரு மனிதன்; அயம்—இந்த; குண-ஸர்க-மோஹித:—ஜடஇயற்கையின் முக்குணங்களால் சூழப்பட்டு; ந—இல்லை; வேத—அறிபவர்; நிஸ்தாரண-யோகம்—பௌதீகச் சிக்கலிருந்து வெளிவரும்முறை; அஞ்ஜஸா—விரைவில்; தஸ்மை—அவருக்கு (பரம்பொருளுக்கு); நம:—மரியாதையான வந்தனம்; தே—உமக்கு; விலய-உதய-ஆத்மனே—யாரிடம் எல்லாம் அழிந்து மீண்டும் யாரிடமிருந்து எல்லாம் பிறக்கின்றனவோ.
முழுமுதற் கடவுளின் மாயாசக்தி பந்தப்பட்ட ஆத்மாக்களான நம் அனைவரையும் பௌதீக உலகில் கட்டிப்போடுகின்றது. ஆகையினால் அவரது கருணையின்றி நம்மைப் போன்றவர்கள் மாயாசக்தியிடமிருந்து எவ்வாறு வெளிவருவது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் படைத்தலுக்கும், அழித்தலுக்கும் காரணமாக இருக்கும் பகவானுக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “கங்கை நதி கீழே இறங்கி விடுதல்” எனும் தலைப்பை கொண்ட பதினேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.