அத்தியாயம் – 14
பௌதிக உலகம் இன்பத்தின் மிகப் பெருங்காடு
பதம் 5.14.1
ஸ ஹோவாச
ஸ ஏஷ தேஹாத்ம-மானினாம் ஸத்த்வாதி-குண-விஸேஷ விகல்பதி
குஸலாகுஸல-ஸமவஹார-விநிர்மித-விவித-தேஹாவ விபிர் வியோக
ஸம்யோகாதி அநாதி-ஸம்ஸாரானு பவஸ்ய த்வார-பூதேன ஸட்-
இந்த்ரிய-வர்கேண தஸ்மின் துர்காத்வவத் அஸுகமே ‘த்வனி ஆபதித
ஈஸ்வரஸ்ய பகவதோ விஷ்ணோர்வஸ-வர்தின்யா மாயயா ஜீவ-லோகோ ‘யம்
யதா வாணிக் ஸார்தோ ‘ர்த-பர: ஸ்வ-தேஹ-நிஷ்பாதித-கர்மானுபவ:
ஸ்மஸாநவத் அஸிவதமாயாம் ஸம்ஸாராடவ்யாம் கதோ நாத்யாபி
விபல-பஹு-ப்ரந்தியோகேஹஸ் தத்-தாபோபஸமனீம் ஹரி-குரு-
சரணாரவிந்த-மதுகரானுபதவீம் அவருந்தே
ஸ:—தன்னுணர்வு பெற்ற பக்தன் (ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி); ஹ—உண்மையில்; உவாச—கூறினார்; ஸ—அவன் (பந்தப்பட்ட ஆத்மா); ஏஷ:—இவன் ஒருவன்; தேஹ-ஆத்ம-மானினாம்—ஆத்மாவாகக் கருதி உடலை மூடத்தனமாக ஏற்றுக் கொண்டிருப்பான்; ஸத்த்வ ஆதி—சத்துவ, இரஜோ, தமோ; குணா—குணங்களினால்; விஸேஷ—குறிப்பாக; விகல்பித—தவறாகக் கட்டப்பட்ட; குஸல—சிலசமயம் சாதகமானச் செயல்களினால்; அகுஸல—சிலசமயம் சாதகமற்றச் செயல்களினால்; ஸமவஹார—இரண்டின் கலப்பினால்; விநிர்மித—எய்துதல்; விவித—பல்வேறு; தேஹ-ஆவலிபி:—உடல்களின் வரிசைகளினால்; வியோக ஸம்யோக ஆதி—ஒருவகையான உடலைத் துறப்பதினாலும் (வியோகம்) மற்றொருவகையான உடலை ஏற்றுக் கொள்ளுதல் (ஸம்யோகம்); அநாதி ஸம்ஸார அனுபவஸ்ய—ஆரம்பமற்ற இடம் பெயரும் முறையின், உணர்வின்; த்வார பூதேன—வாயில்களாகத் தோன்றி; ஷட் இந்த்ரிய வர்கேன— இந்த ஆறு புலன்களினால் (மனம் மற்றும் கண், காது, நாக்கு, மூக்கு, மற்றும் தோல் என்னும் ஐந்து அறிவுப் புலன்கள்); தஸ்மின்—அவற்றில்; துர்க அத்வ வத்—கடப்பதற்கரிய மிகக் கடினமானப் பாதை போன்று; அஸுகமே—கடந்து செல்ல கடினமான; அத்வனி—காட்டுப்பாதையில்; ஆபதித:—நிகழ்தல்; ஈஸ்வரஸ்ய—நெறியாளரின்; பகவத:—முழுமுதற் கடவுளின்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; வஸ-வர்தின்யா—கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுதல்; மாயயா—பௌதீகச் சக்தியினால்; ஜீவ-லோக:—பந்தப்பட்ட உயிர்வாழி; அயம்—இந்த; யதா—அதே போன்று; வணிக்—ஒர் வணிகன்; ஸ-அர்த:—ஒரு பொருளைப் பெற்று; அர்த-பர:—பணத்தின் மீது அதீதப்பற்றுடைய; ஸ்வ-தேஹ-நிஷ்பாதித—அவன் சுய உடலினால் செய்யப்பட்ட; கர்ம—செயல்களின் பலன்களில்; அனுபவ:—அவன் உணர்கிறான்; ஸம்ஸாந-வத் அஸிவதமாயாம்—அமங்கலமானக் கல்லறை போன்று; ஸம்ஸார-அடல்யாம்—பௌதீக வாழ்க்கைக் காட்டில்; கத:—நுழைந்து; ந—இல்லை; அத்ய-அபி—இப்பொழுதுவரை; விபல—வெற்றி பெறாது; பஹு-ப்ரதியோக—முழுவதும் மிகுந்த இன்னல்கள் மற்றும் பல்வேறு துன்பநிலைகளின்; ஈஹ:—இப்பௌதீக உலகில் அவனது செயல்கள்; தத்-தாப-உபஸமனீம்—பௌதீகக் காட்டின் துன்பங்களை அது சாந்தப்படுத்துகின்றது; ஹரி-குரு-சரண-அரவிந்த—பகவான் மற்றும் அவர் பக்தரின் தாமரைத் திருவடிகளுக்கு; மதுகர-அனுபதவீம்—தும்பிகளைப் போன்று பற்றுடைய பக்தர்களின் பாதையினைப் பின்பற்றி; அவருந்தே—நன்மை.
மன்னர் பரீக்ஷித்து சுகதேவ கோஸ்வாமியிடம் பௌதீகக்காட்டின் நேரடியான பொருள் என்னவென்று கேட்டதற்கு, சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதில் கூறினார்; அன்பிற்குரிய மன்னனே வணிக சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் எப்போதும் பொருளீட்டுவதிலேயே ஆர்வமுடையவனாக இருப்பான். சிலசமயம் அவன் காட்டிற்குச் சென்று மிகவும் மலிவானப் பொருட்களான விறகு, மண் போன்றவற்றைச் சேகரித்து அவற்றை நகரத்தில் நல்ல விலைக்கு விற்பான். அதுபோல் பேராசையுடைய பந்தப்பட்ட ஆத்மா பௌதீக நன்மைக்காகப் பௌதீக உலகினுள் நுழைகிறான். படிப்படியாக அவன் காட்டின் அடர்ந்த பகுதிக்குள் போய் பிறகு அங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என்று தெரியாமல் திணறுவான். பெளதீக உலகினுள் நுழையும் தூய ஆத்மா பௌதீகச் சூழ்நிலைகளினால் கட்டப்படுகிறான். இது பகவான் விஷ்ணுவின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள புறச்சக்தியினால் உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறு உயிர்வாழி தைவமீயா என்னும் புறச்சக்தியின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறான். சுதந்திரமாக வாழ்தல் மற்றும் காட்டில் குழப்பமடைந்திருப்பதினாலும் எப்போதும் பகவானின் தொண்டிலேயே ஈடுபட்டிருக்கும் பக்தர்களின் தொடர்பினை அவனால் அடைய முடிவதில்லை. உடற்கருத்தில் ஒருமுறை இருப்பதினால் அவன் பல்வேறு உடல்களை ஒன்றையடுத்து மற்றொன்று என்று பௌதீகச் சக்தியின் பாதிப்பின் கீழ் ஜட இயற்கையின் முக்குணங்களின் (சத்துவ, இரஜோ, தமோ குணங்கள்) தூண்டுதலினால் பெறுகிறான். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் மேலுலகிற்கும், சிலசமயம் பூவுலகிற்கும், சிலசமயம் கீழுலகங்களில் இழிந்த ஐந்துக்களிடையே பிறப்பதுவுமாக அலைந்து கொண்டிருக்கிறான். இவ்வாறு அவன் பல்வேறு வகை உடல்களின் காரணமாகத் தொடர்ந்து துன்பம் அனுபவிக்கிறான். இந்த இன்பமும் துன்பமும் சில சமயம் கலந்தும் வரும். சிலசமயம் அவை கடுமையாக இருக்கும், சிலசமயம் அவ்வாறு இருப்பதில்லை. இவ்வுடல் பந்தப்பட்ட ஆத்மாவின் மனயூகத்தினால் விளைவதாகும். அவன் தனது மனம் மற்றும் அறிவுப் புலன்கள் ஐந்தினைப் பயன்படுத்துகிறான். இவையே பல்வேறு உடல்களையும் பல்வேறு பந்தங்களையும் கொண்டு வருகின்றன. மாயை என்னும் புறச்சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் இப்புலன்களைப் பயன்படுத்துவதினால் பௌதீகத் தோற்றத்தின் துன்ப நிலைகளை உயிர்வாழி அனுபவிக்கிறான். அவன் உண்மையில் இதிலிருந்து விடுதலையினையே தேடுகின்றான், அவ்வாறு அவன் மிகுந்த சிரமத்தின் பேரில் விடுதலை பெற்றப்பிறகும் பொதுவாக அவன் குழப்பமே அடைகிறான். வாழ்க்கைக்கு இவ்வாறு போராடியும் கூட பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளின் அன்புத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் பக்தர்களின் அடைக்கலத்தினை அவனால் பெற முடிவதில்லை.
பதம் 5.14.2
யஸ்யாம் உ ஹ வா ஏதே ஷட்-இந்த்ரிய-நாமான கர்மணா தஸ்யவ
ஏவ தே ததத்யதா புருஷஸ்ய தனம் யத்கிஞ்சித் தர்மௌபயிகம்
பஹுக்ருச்ச்ராதிகதம் ஸாக்ஷாத் பரம- புருஷாராதன-லக்ஷணோ யோ
‘ஸெள தர்மஸ் தம் து ஸாம்ப்ராய உதாஹரந்தி, தத்-தர்ம்யம் தனம்
தர்ஷன ஸ்பர்ஸன-ஸ்ரவணாஸ்வாதனாவக்ராண-ஸங்கல்ப-வ்யவ-
ஸாயக்ஹே-க்ராம்யோபபோகேன குணாதஸ் யாஜிதாத்மனோ யதா
ஸார்தஸ்ய விலும்பந்தி
யஸ்யாம்—இதனில்; உ ஹ—நிச்சயமாக; வா—அல்லது; ஏதே—இவையெல்லாம்; ஷட்-இந்த்ரிய-நாமான:—ஆறு புலன்கள் என்னும் பெயருடையவர்கள் (மனம், அறிவுப்புலன்கள் ஐந்து); கர்மணா—அவர்களின் செயலினால்; தஸ்யவ:—கொள்ளைக்காரர்கள்; ஏவ—உறுதியாக; தே—அவர்கள்; தத்—அது; யதா—போன்று; புருஷஸ்ய—ஒரு மனிதனின்; தனம்—தனம்; யத்—எதுவாயினும்; கிஞ்சித்—சிலவற்றை; தர்ம ஒளபயிகம்—சமய அறநெறிகளுக்கு அது ஒரு பாதையாக இருக்கிறது; பஹு-க்ருச்ச்ர-அதிகதம்—மிகுந்த கடின உழைப்பிற்குப்பின் சம்பாதித்து; ஸாக்ஷாத்—நேரடியாக; பரம புருஷ-ஆராதன-லக்ஷண:—வேள்வி போன்றவற்றினால் முழுமுதற்கடவுளை வணங்குகின்ற அடையாளமுடையவர்கள்; ய—எது; அஸெள—அது; தர்ம:—மதக் கொள்கைகள்; தம்—அந்த; து—ஆனால்; ஸாம்பராயே—அறிவுடையோர் அறிவிக்கின்றனர்; உதாஹரந்தி—ஞானிகள் அறிவிக்கிறார்கள்; தத்-தர்ம்யம்—தர்மம் (வர்ணாஸ்ரம தர்மத்தை மேலும் பயில்வதற்கானத் தொடர்புடைய); தனம்—தனம்; தர்ஷன—காண்பதினால்; ஸ்பர்ஷன—தொடுவதினால்; ஸ்ரவண—கேட்பதினால்; ஆஸ்வாதன—சுவைப்பதினால்; அவக்ராண—முகர்வதினால்; ஸங்கல்ப—சங்கல்பத்தினால்; வ்யவஸாய—ஒரு முடிவினால்; க்ருஹ—பௌதீக இல்லத்தில்; க்ராம்ய-உபபோகேன—பௌதீகப் புலன் நுகர்ச்சியினால்; குணாதஸ்ய—தவறான வழியில் செலுத்தப்பட்டப் பந்தப்பட்ட ஆத்மா; அஜித-அத்மன:—தன்னைக் கட்டுப்படுத்தாதவன்; யதா—போன்று; ஸார்தஸ்ய—புலனுகர்ச்சியில் விருப்பமுள்ள உயிர்வாழியின்; விலும்பந்தி—அவர்கள் கொள்ளையடிக்கின்றனர்.
பௌதீக வாழ்க்கைக் காட்டில் அடக்கமுடியாதப் புலன்கள் கொள்ளைக்காரர்களைப் போன்றவையாகும். கிருஷ்ண உணர்வில் வளர்ச்சி பெறுவதற்காக பந்தப்பட்ட ஆத்மா சிறிது பணம் சம்பாதிக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கட்டுப்படுத்தமுடியாத புலன்கள், புலனுகர்ச்சியின் மூலம் அவனது பணத்தைக் கொள்ளையடிக்கின்றன. புலன்கள் கொள்ளைக்காரர்கள் ஆவர். ஏனெனில் அவை காண்பது, முகர்வது, சுவைப்பது, தொடுவது, கேட்பது, விரும்புவது, எண்ணுவது போன்றவற்றிற்காகத் தேவையின்றி ஒருவனை அப்பணத்தைச் செலவிடச் செய்யும். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா அவன் புலன்களின் நுகர்ச்சிக்குக் கட்டுப்படுகிறான். இதன்மூலம் அவனது பணம் செலவிடப்படுகிறது. இப்பணம் உண்மையில் சமய தர்மங்களை நிறை வேற்றுவதற்காகச் சேமிக்கப்பட்டதாகும். ஆனால் அது கொள்ளையிடும் புலன்களினால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பதம் 5.14.3
அத ச யத்ர கெளடும்பிகா தாராபத்யாதயோ நாம்னா கர்மணா வ்ருக-
ஸ்ருகாலா ஏவானிச்சதோ ‘பி கதர்யஸ்ய குடும்பின உரணகவத் ஸம்பரக்ஷ்
யமாணம் மிஷதோ ‘பி ஹரந்தி
அத—இவ்வாறு; ச—மேலும்; யத்ர—இதனில்; கௌடும்பிகா:—குடும்ப உறுப்பினர்கள்; தார-அபத்ய-ஆதய:—மனைவி மக்களுடன் தொடங்கும்; நாம்னா—பெயரினால் மட்டும்; கர்மணா—அவர்கள் நடத்தையினால்; வ்ருகஸ்ருகாலா:—புலிகள் மற்றும் நரிகள்; ஏவ—உறுதியாக; அனிச்சத:—தனது வளங்களைச் செலவிட விரும்பாதவன்; அபி—நிச்சயமாக; கதர்யஸ்ய—மிகுந்த கஞ்சத்தனத்துடன்; குடும்பின:—குடும்ப உறுப்பினர்களினால் சூழப்பட்டிருப்பவன்; உரணக-வத்—ஒர் ஆட்டினைப் போல்; ஸம்ரக்ஷ்யமானம்—பாதுகாக்கப்பட்டப் போதிலும்; மிஷத:—ஒருவன் கவனித்துக் கொண்டாலும்; அபி—கூட; ஹரந்தி—அவை பலாத்காரத்தினால் எடுத்துக் கொள்கின்றன.
அன்பார்ந்த மன்னனே, பௌதீக உலகிலுள்ள குடும்ப உறுப்பினர்கள், மனைவி மக்கள் என்பது பெயருக்குத்தானே தவிர அவர்கள் உண்மையில் புலிகளையும், நரிகளையும் போன்று நடந்து கொள்கின்றனர். மேய்ப்பவன் தனது ஆடுகளைத் தன்னால் முடிந்த அளவிற்குப் பாதுகாக்கிறான், ஆனால் புலிகளும், நரிகளும் அவற்றைப் பலாத்காரமாக எடுத்துக்கொண்டு ஒடிவிடுகின்றன. அதுபோல் ஒரு கஞ்சன் தன் பொருளையெல்லாம் மிகவும் கவனமாகப் பாதுகாக்க விரும்பினாலும் அவனது குடும்ப உறுப்பினர்கள், அவன் என்னதான் கண்காணித்தப் போதிலும் அவனது செல்வங்கள் அனைத்தையும் பலவந்தமாகப் பறித்துக் கொள்கின்றனர்.
பதம் 5.14.4
யதா ஹி அனுவத்ஸரம் க்ருஷ்யமாணம் அபி அதக்த-பீஜம் க்ஷேத்ரம்
புனர் ஏவாபன-காலே குல்ம-த்ருண-வீருத்பிர் கஹ்வரம் இவ பவதி
ஏவம் ஏவ க்ருஹாஸ்ரம: கர்ம-க்ஷேத்ரம் யஸ்மின் ந ஹி கர்மாணி
உத்ஸீதந்தி யத் அயம் காம-கரண்தா ஏஷ-ஆவஸத:
யதா—போன்று; ஹி—உறுதியாக; அனுவத்ஸரம்—ஒவ்வொரு வருடமும்; க்ருஷ்யமாணம்—உழப்பட்ட; அபி—போதிலும்; அத்கத-பீஜம்—அதிலுள்ள அழியாத விதைகள்; க்ஷேத்ரம்—களம்; புன—மீண்டும்; ஏவ—உறுதியாக; ஆவபன-காலே—விதை விதைக்கும் பொழுது; குல்ம—புதர்களினால்; த்ருண—புற்களினால்; வீருத்பி:—கொடிகளினால்; கஹ்வரம்இவ—கொடிபந்தரைப்போல்; பவதி—ஆவது; ஏவம்—இவ்வாறு; ஏவ—உறுதியாக; க்ருஹ-ஆஸ்ரம:— இல்லறவாழ்க்கை; கர்ம-க்ஷேத்ரம்—செயற்களம்; யஸ்மின்—இதில்; ந—இல்லை; ஹி—உறுதியாக; கர்மாணி-உத்ஸீதந்தி—பலன்தரும் செயல்கள் மறைகின்றன; யத்—எனவே; அயம்—இது; காம-கரண்தாஹ்—பலன் ஆசையின் களஞ்சியம்; ஏஷ:—இது; ஆவஸ்த:—உறைவிடம்.
நிலத்தை ஒவ்வொரு வருடமும் உழவன் உழுகிறான், அதிலுள்ள வேர்களையும், களைகளையும் முற்றிலும் ஒழிக்கிறான். இருந்த போதிலும் அதிலுள்ள முளைக்காத விதைகள், மீண்டும் விதை விதைக்கும்போது அவற்றுடன் சேர்ந்து முளைத்து விடுகின்றன. என்ன தான் ஆழமாக உழுதபோதிலும் களைகளும் அடர்த்தியாக முளைக்கின்றன. அதுபோல் க்ரஹஸ்த ஆஸ்ரமும் (இல்லற வாழ்க்கை) பலன்தரும் செயலின் களமாக இருக்கிறது. இல்லறவாழ்க்கையினை மகிழ்ந்தனுபவிக்கும் ஆசை முற்றிலும் வேரறுக்கப்படவில்லையெனில் அது மீண்டும் மீண்டும் முளைக்கிறது. பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த கற்பூரம் முழுவதையும் எடுத்துவிட்டப்பிறகும் பாத்திரத்தில் கற்பூர வாசனை இருந்து கொண்டே இருக்கிறது. ஆசை என்னும் விதைகள் அழிக்கப்படாதவரை பலன்தரும் செயல்களும் அழிக்கப்படுவதில்லை.
பதம் 5.14.5
தத்ர கதோ தம்ஸ-மஸக-ஸமாபஸௗதர் மனுஜை ஸலப-ஸகுந்தஸ்கர
மூஷகாதிபிர் உபருத்யமான-பஹி: ப்ராண: க்வசித் பரிவர்தமானோ
‘ஸ்மின்ன அத்வனி அவித்யா காம-கர்மபில் உபரக்த மனஸாநுபன்னார்
தம் நர-லோகம் கந்தர்வ-நகரம் உபபன்னம் இதி மித்யா-த்ருஷ்டிர்
அனுபஸ்யதி
தத்ர—அந்த இல்வாழ்க்கைக்கு; கத:—சென்றது; தம்ஸ—உண்ணிகள்; மஸக—கொசுக்கள்; ஸம—சமமாக; அபஸதை:—அவர்கள் தாழ்ந்தபிரிவினர்; மனு-ஜை:—மனிதர்களால்; ஸலப—வெட்டுக்கிளிகள்; ஸகுந்த—பிற உயிர்களைத் தின்னும் பெரிய பறவை; தஸ்கர—திருடர்கள்; மூஷக-ஆதிபி:—எலிகள் போன்றவற்றினால்; உபருத்யமான—இன்னலுக்காளாகி; பஹி: ப்ராண:—செல்வம் போன்றவற்றின் வடிவிலுள்ள புறமூச்சுக்காற்று; க்வசித்—சிலசமயங்களில்; பரிவர்தமான:—அளந்து கொண்டு; அஸ்மின்—இதனில்; அத்வனி—பௌதீக வாழ்க்கைப்பாதை; அவித்யா-காம—அறியாமை மற்றும் காமத்தினால்; கர்மபி:—பலன் தரும் செயல்களினால்; உபரக்த-மனஸா—மனது பாதிக்கப்பட்டிருப்பதின் காரணமாக; அனுபபன்ன-அர்தம்—இதில் விரும்பிய பலன்கள் கிடைக்கப்பெறுவதில்லை; நர-லோகம்—இப்பௌதீக உலகம்; கந்தர்வ-நகரம்—கந்தர்வ நகரம்; உபபன்னம்—வாழ்தல்; இதி—அப்படியே எடுத்துக் கொண்டு; மித்யா-திருஷ்டி—அவனது பார்வை தவறாக இருக்கிறது; அனுபஸ்யதி—கவனிக்கிறான்.
பௌதீக வளங்கள் மற்றும் உடைமைகள் மீது பற்றுடையவனாக இருக்கும் பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் உண்ணிகள், கொசுக்கள், வெட்டுக்கிளிகள், பிறஉயிர்களைத் தின்னும் பெரிய பறவைகள் மற்றும் எலிகளினால் துன்பத்திற்காளாகிறான். இருந்தும் அவன் பௌதீக வாழ்க்கைப் பாதையிலேயே இன்னும் நடைபோட்டுக் கொண்டிருக்கிறான். அறியாமையின் காரணமாக அவன் காமவசப்பட்டு பலன்தரும் செயலில் ஈடுபடுகிறான். அவன் மனம் இச்செயல்களில் ஆழ்ந்திருக்கும் காரணத்தினால், அவன் வானத்திலுள்ள மாளிகையைப்போல் பொய்ம்மைத் தோற்றமுடைய பௌதீக வாழ்வினை நிரந்தரமானதாகப் பார்க்கிறான்.
பதம் 5.14.6
தத்ர ச க்வசித் ஆதபோதக-நிபான் விஷயான் உபதாவதி பான-
போஜனவ்யவாயாதி-வ்யஸன-லோலுப:
தத்ர—இங்கே (இப்பொய்மை இடத்தில்); ச—மேலும்; க்வசித்—சிலசமயம்; ஆதப-உதக-நிபான்—பாலைவனத்திலுள்ள கானல் நீரைப்போன்று; விஷயான்—புலன் நுகர்ச்சிப் பொருட்களின்; உபதாவதி—பின்னால் ஒடி; பான—குடிப்பதற்கு; போஜன—உண்பதற்கு; வ்யவாய—பாலியல் வாழ்விற்கு; ஆதி—போன்றவற்றிற்கு; வ்யஸன—அடிமையாகி; லோலுப:—ஓர் பரத்தன்.
சிலசமயம் வானத்திலுள்ள மாளிகையில் (கந்தர்வ—புரம்) பந்தப்பட்ட ஆத்மா உண்ணவும், பருகவும் பாலுறவு கொள்பவனாகவும் இருக்கிறான். இவற்றின் மீது அதீதப் பற்றுடையவனானாதினால் அவன் பாலைவனத்தில் கானல் நீரைத்தேடி மான் ஒடுவதைப் போல் புலனுகர்ச்சிப் பொருட்களின் பின்னே ஒடிக்கொண்டிருக்கிறான்.
பதம் 5.14.7
க்வசித் சாஸேஷ-தோஷ-நிஷதனம் புரீஷ-விஸேஷம் தத்-வர்ண-
குண-நிர்மிதமதி: ஸுவர்ணம் உபாதித்ஸதி அக்னி-காம-காதர கிவோல்
முக-பிஸாசம்
க்வசித்—சிலசமயம்; ச—மேலும்; அஸேஷ—அளவற்ற; தோஷ—தவறுகளின்; நிஷதனம்—மூலமாக; புரீஷ—மலம்; விஸேஷம்—ஒரு குறிப்பிட்ட வகையான; தத்-வர்ண-குண—அதன் நிறமானது இரஜோ குணத்தின் நிறம் (சிவந்த) போன்றதாகும்; நிர்மித-மதி:—அதில் மனக்கருத்துடையோர்; ஸுவர்ணம்—தங்கம்; உபாதித்ஸதி—பெறவிரும்பி; அக்னி-காம—நெருப்பின் மீதான ஆசையினால்; காதுர—அவன் துன்பமடைகிறான்; இவ—போன்று; உல்முக-பிஸாசம்—சதுப்பு நிலத்தில் பாஸ்பரஸ் கொழுந்துவிட்டு எரிவது சில சமயம் கொள்ளிவாய்ப்பிசாசு போல் தோன்றும்.
சிலசமயம் உயிர்வாழி தங்கம் என்னும் மஞ்சள்நிற மலத்தின் மீது ஆசை கொண்டு அதன் பின்னே ஒடுகிறான். இத்தங்கம் பௌதீகவளம் மற்றும் காழ்ப்புணர்ச்சிக்கு மூலாதாரமாக இருப்பதோடு, இது ஒருவனை தவறானப் பாலுறவு, சூது, மாமிசம் உண்பது, மதுவருந்துவது போன்றவற்றிலும் ஈடுபடுத்தும் திறனுடையதாகும். காட்டிலுள்ள சதுப்புநிலத்தில் எரியும் பாஸ்பரஸ் ஒளியினை நெருப்பென்று எண்ணி குளிரால் வாடுபவன், அதில் குளிர்காய ஒடுவதைப் போன்று இரஜோ குணத்தினால் வெல்லப்பட்ட மனமுடையவர்கள் தங்கத்தின் மஞ்சள் வண்ணத்தினால் கவரப்படுகின்றனர்.
பதம் 5.14.8
அத கதாசின் நிவாஸ-பானீய-த்ரவிணாதி-அனேகாத்மோ பஜீவனா
பினிவேஸ ஏதஸ்யாம் ஸம்ஸாராடவ்யாம் இதஸ் பரிதாவதி
அத—இவ்வாறு; கதாசித்—சிலசமயம்; நிவாஸ—இல்லம்; பானீய—தண்ணீர்; த்ரவிண—செல்வம்; ஆதி—போன்றவை; அனேக—பல்வேறு உருப்படிகள்; ஆத்ம-உப-ஜுவன—உடல் மற்றும் ஆத்மா இரண்டையும் பாதுகாப்பதற்கு இவை அத்தியாவசியமாகக் கருதப்படுகின்றன; அபினிவேஸ—முற்றிலும் ஆழ்ந்திருக்கும் ஒருவன்; ஏதஸ்யாம்—இதில்; ஸம்ஸார-அடவ்யாம்—மிகப் பெரிய காடு போன்ற பௌதீக வாழ்க்கை; இத: தத:—இங்கும் அங்கும்; பரிதாவதி—சுற்றி ஒடுகிறான்.
சிலநேரம் பந்தப்பட்ட ஆத்மா தன் உடலைப் பேணுவதற்காக தான் வசிப்பதற்குரிய ஒரு வீடு, குடிநீர் வசதி மற்றும் செல்வம் போன்றவற்றைக் கண்டுபிடிப்பதில் ஆழ்ந்திருக்கிறான். இவ்வாறு பல்வேறு அத்தியாவசியத் தேவைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் ஆழ்ந்திருப்பதினால் அவன் எல்லாவற்றையும் மறந்து பௌதீக வாழ்க்கை என்னும் காட்டைச் சுற்றி நித்தியமாக ஒடிக் கொண்டிருக்கிறான்.
பதம் 5.14.9
க்வாசித் ச வாத்யௌபம்யயா ப்ரமதயாரோஹம் ஆரோபிதஸ் தத்கால
ராஜஸா ரஜனீ-பூத இவாஸாது-மர்யாதோ ரஜஸ் வலாஷோ ‘பி திக்-
தேவதா அதிரஜஸ்வல-மதிர் ந விஜாநாதி
க்வசித்—சிலசமயம்; ச—மேலும்; வாத்யா ஒளட்ம்யயா—சூறாவளிக் காற்றுடன் ஒப்பிடப்பட்ட; ப்ரமதயா—ஒர் அழகிய மங்கையினால்; ஆரோஹம் ஆரோபித:—பாலியல் இன்பத்திற்காக மடியின் மீது ஏற்றப்படுகிறான்; தத்-கால-ரஜஸ—அக்கணத்திலுள்ள காம இச்சையின் இரஜோ குணத்தினால்; ரஜனீ-பூத:—இரவின் இருளில்; இவ—போன்று; அஸாது மர்யாத:—உயர்ந்த சாட்சிகளிடத்து உரிய மரியாதை இல்லாதிருப்பவன்; ரஜ:-வல-அக்ஷ:—வலிமையுடைய காம இச்சையினால் கண்கள் குருடாகி; அபி—உறுதியாக; திக்-தேவதா:—சூரியன், சந்திரனைப் போன்று பல்வேறு திசைகளுக்கும் பொறுப்பேற்றிருக்கும் தேவர்கள்; அதிரஜ:-வல-மதி:—அவன் மனம் காமத்தினால் வெல்லப்பட்டு; ந விஜாநாதி—அவன் அறியான் (வெட்கங்கெட்ட அவனது பாலியல் செயலை சாட்சிகள் அனைவரும் கவனித்துக் கொண்டிருப்பதை).
சிலசமயம் சூறாவளிக் காற்றின் புழுதியினால் கண்கள் குருடாவதைப் போன்று ‘ப்ரமதா’ என்றழைக்கப்படும் எதிர் பாலியலின் அழகினை பந்தப்பட்ட ஆத்மா பார்க்கிறான். இவ்வாறு குழப்பமடைவதினால் அவன் ஒரு பெண்ணின் மடிமீது உயர்த்தப்படுகிறான். அப்போது அவனது நல்லுணர்வுகள் இரஜோ குணத்தின் வலிமையால் வெல்லப்படுகின்றன. இவ்வாறு அவன் காம இச்சையினால் பெரும்பாலும் குருடனாகிறான். மேலும் பாலியல் வாழ்க்கைக்கான ஒழுங்குமுறை விதிகளையும் புறக்கணிக்கிறான். தான் இவ்வாறு புறக்கணிப்பதை பல்வேறு தேவர்கள் சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறியான். எதிர்காலத்தில் தனக்குக் கிடைக்கக் கூடியத் தண்டனையினை மறந்து அவன் இரவின் நடுச்சாமத்தில் தவறான பாலுறவினை அனுபவித்து மகிழ்கிறான்.
பதம் 5.14.10
க்வசித் ஸக்ருத் அவகத-விஷய-வைதத்ய ஸ்வயம் பராபித்யானேன
விப்ரம்ஹித -ஸம்ருதிஸ் தயைவ மரீசி-தோய ப்ராயாம்ஸ் தான்
ஏவாபிதாவதி
க்வசித்—சிலசமயம்; ஸக்ருத்—ஒரு தடவை; அவகத-விஷய வைதத்ய:—பௌதீகப் புலனுகர்ச்சியினை அனுபவிப்பதின் பயனின்மையினை உணர்ந்தவனாகி; ஸ்வயம்—சுயமாக; பர-அபித்யானேன—தனது உடற்கருத்தினால்; விப்ரம்ஸித—அழிக்கப்படுகிறது; ஸ்ம்ருதி—அவளது நினைவு; தயா—அதன்மூலம்; ஏவ—உறுதியாக; மரீசி-தோய—கானல் நீர்; ப்ராயான்—அது போன்று; தான்—அப்புலனுகர்ச்சிப் பொருட்கள்; ஏவ—உறுதியாக; அபிதாவதி—பின்னால் ஒடுகிறான்.
பந்தப்பட்ட ஆத்மா சில சமயம் பௌதீக உலகிலுள்ள புலனின்பத்தின் பயனற்றத் தன்மையினைச் சுயமாகப் பாராட்டுகிறான். சில சமயம் பௌதீக இன்பம் துன்பம் நிறைந்ததாகும் என்றும் கருதுகிறான். ஆயினும் அவனது உறுதியான உடற்கருத்தின் காரணமாக அவனது நினைவு அழிக்கப்படுகிறது. அதனால் அவன், பாலைவனத்தில் உள்ள கானல் நீரின் பின்னே விலங்கு ஒன்று ஒடுவதுபோல் பௌதீக இன்பத்தின் பின்னே ஒடுகிறான்.
பதம் 5.14.11
க்வசித் உலூக-ஜில்வீ-ஸ்வநவத் அதி-பருஷ-ரபஸாடோபம் ப்ரத்
யக்ஷம் பரோக்ஷம் வா ரிபு-ராஜ-குல-நிர்பர்-ஸிதேனாதி-வ்யதித-கர்ண-
மூலஹ்ருதய:
க்வசித்—சிலசமயம்; உலூக—ஆந்தையின்; ஜில்வீ—சில்வண்டு; ஸ்வநவத்—தாங்க முடியாத இரைச்சல்கள்; அதி-பருஷ—ஆழத்துளைத்து; ரபஸ—விடாமுயற்சியினால்; ஆடோபம்—கிளர்ச்சி; ப்ரத்யக்ஷம்—நேரடியாக; பரோக்ஷம்—மறைமுகமாக; வா—அல்லது; ரிபு—பகைவர்களின்; ராஜ-குல—அரசு அதிகாரிகளின்; நிர்பர்-த்ஸிதேன—கண்டனத்தினால்; அதி-வ்யதித—மிகுந்த துக்கமடைகிறான்; கர்ண-மூல-ஹ்ருதய:—அவனது காதும் இதயமும்.
சில சமயம் பந்தப்பட்ட ஆத்மா தன்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் கடிந்துரைகளினால் தனது பகைவர்களும் அரசு அதிகாரிகளும் கண்டிப்பது கண்டு மிகுந்த துக்கமுறுகிறான். அச்சமயம் அவனது காதுகளும், இதயமும் மிகவும் வருந்துகின்றன. இக்கண்டனமானது ஆந்தைகள் மற்றும் சில்வண்டுகளின் இரைச்சலுடன் ஒப்பிடக்கூடியதாகும்.
பதம் 5.14.12
ஸ்யதா துக்த-பூர்வ-ஸுக்ருதஸ் ததா காரஸ்கர-காக-துண்டாடி
அபுண்யத்ரும-லதா-விஷோத-பானவத் உபயார்த-ஸுன்ய-த்ரவிணான்
ஜீவன்-ம்ருதான் ஸ்வயம் ஜீவன்-ம்ரியமான உபதாவதி
ஸ:—இப்பந்தப்பட்ட ஆத்மா; யதா—எப்பொழுது; துக்த—சோர்வுற்று; பூர்வ—முந்தைய; ஸுக்ருத:—புண்ணியச் செயல்கள்; ததா—அச்சமயம்; காரஸ்கர-காகதுண்ட-ஆதி— காரஸ்கர, காகதுண்டம் போன்ற பெயர்களில்; அபுண்ய-த்ருமலதா—பாவம் நிறைந்த மரம், கொடிகள்; விஷ-பான-வத்—நச்சுநீர் நிறைந்த கிணறு; உபய-அர்த-ஸுன்ய—இந்த ஜென்மத்திலோ, மறுஜென்மத்திலோ அது இன்பமளிக்காது; த்ரவிணான்—செல்வமுடையவர்கள்; ஜீவீத்-ம்ருதான்—உயிரோடு இருந்த போதிலும் அவர்கள் இறந்தவர்களே; ஸ்வயம்—அவன் சுயமாக; ஜீவத்—உயிர்வாழி; ம்ரியமாண:—மரணமடைதல்; உபதாவதி—பெளதீக உடைமைகளுக்காக அணுகுதல்.
முந்தைய பிறப்புக்களில் செய்த புண்ணியச் செயல்களினால் பந்தப்பட்ட ஆத்மா இப்பிறப்பில் பௌதீக வசதிகளைப் பெறுகிறான். இவ்வசதிகள் தீர்ந்து விடும்பொழுது அவன் தனது இப்பிறப்பிற்கோ, மறுபிறப்பிற்கோ ஒருநாளும் உதவாத செல்வங்களையும், வளங்களையும் தஞ்சமடைகிறான். இதன் காரணமாக அவன் இவ்வளங்களையுடைய செத்தாரைப் போன்றிருக்கும் மனிதர்களை அணுகுகிறான். இம் மனிதர்கள் தூய்மையற்ற மரங்கள் கொடிகள் மற்றும் நச்சு நீர்க் கிணற்றுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றனர்.
பதம் 5.14.13
ஏகதாஸத்-ப்ரஸங்கான் நிக்ருத-மதிர் வ்யுதக-ஸ்ரோத:-ஸ்கலநவத்
உபயதோ ‘பிது:கதம் பாகண்டம் அபியாதி
ஏகதா—சிலசமயம்; அஸத்-ப்ரஸங்காத்—வேதநெறிகளுக்கு எதிராக பல்வேறு சமயதர்மங்களை உருவாக்கும் பக்தரல்லாதார் தொடர்பினால்; நிக்ருத-மதி:—முழுமுதற் கடவுளின் அதிகாரத்தினை மறுதலிக்கும் நிலைக்கு அவர்களது புத்தி கொண்டு வரப்படுகிறது; வ்யுதக-ஸ்ரோத:—போதுமான நீரில்லாத ஆறுகள்; ஸ்கலன-வத்—குதித்தல் போன்று; உபயத:—இருபக்கங்களிலிருந்தும்; அபி—இருந்தாலும்; து:க-தம்—துக்கம் அளிக்கிறது; பாகண்டம்—நாத்திகப்பாதை; அபியாதி—அவன் அணுகுகிறான்.
சிலசமயம் பௌதீக உலகம் என்னும் காட்டிலுள்ளத் துன்பங்களை நீக்குவதற்காகப் பந்தப்பட்ட ஆத்மா நாத்திகர்களிடமிருந்து மலிவான ஆசிகளைப் பெறுகிறான். பின்னர் அவன் தனது புத்தியனைத்தையும் அவர்களின் தொடர்பினால் இழக்கிறான். இது தண்ணீரில்லாத ஆற்றில் குதிப்பது போன்றதாகும். இதன் விளைவாக அவன் தன் தலையை உடைத்துக் கொள்கிறான். அவன் வெம்மையினைக் குறைத்துக் கொள்வதற்கும் இயலாதவனாகி இரு வழிகளிலும் துன்புறுகிறான். தவறான வழிக்கு ஆளானப் பந்தப்பட்ட ஆத்மா, வேதத்திற்குப் புறம்பாகப் பிரச்சாரம் செய்யும், சாதுக்கள் மற்றும் சுவாமிகள் என்போரை அணுகுகிறான். அவர்களிடமிருந்து அவன் இப்போதும் சரி, எதிர் காலத்திலும் சரி எந்தவிதமான நன்மையும் அடையமுடியாது.
பதம் 5.14.14
யதா து பர-பாதயாந்த ஆத்மனே நோபனமதி ததா ஹிபித்ரு-
புத்ரபர்ஹிஷ்மத: பித்ரு-புத்ரான் வா ஸ கலு பக்ஷயதி
யதா—எப்பொழுது; து—ஆனால் (துரதிர்ஷ்டம் காரணமாக); பர-பாதயா—அனைவரையும் சுரண்டிய பின்னரும்; அந்த:—குருடன்; ஆத்மனே—தனக்காக; ந உபனமதி—ஒருவனுடைய பங்கில் வீழ்வதில்லை; ததா—அச்சமயம்; ஹி—உறுதியாக; பித்ரு-புத்ர—தந்தை அல்லது தனயனின்; பர்ஹிஷ்மத:—ஒரு துரும்பைப் போல் முக்கியமற்ற தாயினும்; பித்ரு-புத்ரான்—தந்தை அல்லது தனயன்கள்; வா—அல்லது; ஸ:—அவன் (பந்தப்பட்ட ஆத்மா); கலு—உண்மையில்; பக்ஷயதி—துன்பம் கொடுப்பதற்கு.
இப்பௌதீக உலகில் பந்தப்பட்ட ஆத்மா பிறரைச் சுரண்டிய பின்னரும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கின்றான். முக்கியமற்ற ஒரு சிறு துரும்பாக இருப்பினும் தனது உறவினர்களின் உடைமைகளை எடுத்துக் கொள்கிறான். தனது தந்தை, தனயன், உறவினர்களிடமிருந்து அவனால் பொருள்களைப் பெறமுடியவில்லையென்றால் அவன் அவர்களுக்கு எல்லாவிதமானத் தொல்லைகளையும் தரத்தயாராகிறான்.
பதம் 5.14.15
க்வசித் ஆஸாத்ய க்ருஹம் தாவவத் ப்ரியார்த-விதுரம் அஸு-
கோதர்கம் ஸோக்னினா தஹ்யமானோ ப்ருஸம் நிர்வேதம் உபச்சக்தி
க்வசித்—சிலநேரம்; ஆஸாத்ய—அனுபவிக்கின்றான்; க்ருஹம்—இல்வாழ்க்கை; தாவவத்—காட்டில் கொழுந்துவிட்டெரியும் தீயைப்போன்று; ப்ரிய-அர்த-விதுரம்—நன்மைக்கானப் பொருள் எதுவுமின்றி; அஸுக-உதர்கம்—மகிழ்ச்சியற்ற நிலைமையே மேலும் மேலும் உருவாக்கும்; ஸோக-அக்னினா—சோகத்தீயினால்; தஹ்யமான:—எரிக்கப்பட்டு; ப்ருஸம்—மிகச்சிறந்த; நிர்வேதம்—ஏமாற்றம்; உபகச்சதி—அவன் அடைகிறான்.
இவ்வுலகில் இல்லற வாழ்க்கையானது உண்மையில் காட்டில் கொழுந்து விட்டெரியும் நெருப்புப் போன்றதாகும். இங்கு சிறிது மகிழ்ச்சியும் இல்லை. மகிழ்ச்சியற்ற நிலையில், படிப்படியாக ஒருவன் மேலும் மேலும் சிக்கிக் கொள்கிறான். இல்லறவாழ்க்கையில் நித்திய மகிழ்ச்சிக்கு சாதகமாக எதுவும் இல்லை. இல்வாழ்வில் சிக்கிக் கொண்டதினால் பந்தப்பட்ட ஆத்மா சோகத்தீயினால் எரிக்கப்படுகிறான். சிலசமயம் தான் துரதிர்ஷ்டசாலியென்று அவன் தன்னையே நொந்து கொள்கிறான். சிலசமயம் தான் தனது முற்பிறப்பில் புண்ணியச் செயல்கள் எதுவும் செய்யாததினால் தான் இவ்வாறு துன்புறுவதாகக் கூறுகிறான்.
பதம் 5.14.16
க்வசித் கலா-விச-ராஜ-குல-ராட்சஸபஹருதா-பரியாத்ம-தனாசு ப்ர
ம்ருதக இவா விகட-ஜீவ-லக்ஷண ஆஸ்தே
க்வசித்—சிலசமயம்; கால-விஷமித—காலத்தினால் கபடமாக்கப்பட்ட; ராஜ-குல—அரசாங்கத்தினர்; ரக்ஷஸா—இரத்தம் குடிக்கும் கொடிய மனிதர்களைப் போன்ற; அபஹ்ருத—கொள்ளையடிக்கப்பட்டு; ப்ரிய-தம—மிகவும் பிரியமான; தன—தனம்; அஸு:—அவனது மூச்சுக்காற்று; ப்ரம்ருதக—இறத்தல்; இவ—போன்று; விகத-ஜீவ-லக்ஷண:—உயிர் இருக்கும் அடையாளமெல்லாம் இழந்து; ஆஸ்தே—அவன் வாழ்கிறான்.
அரசாங்கத்தினர் எப்போதும் இரத்தம் குடிக்கும் ராட்சதர்கள் என்று (நர மாமிசம் தின்போர்) அழைக்கப்படுகின்றனர். சிலசமயம் இந்த அரசாங்கத்தினார் பந்தப்பட்ட ஆத்மாவிற்கு எதிராக மாறி அவன் சேர்த்துவைத்திருந்த செல்வம் அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். தான் உயிராகப் போற்றிய செல்வத்தை இழந்துவிட்டதினால் பந்தப்பட்ட ஆத்மா ஆர்வம் அனைத்தையும் இழந்து விடுகிறான். உண்மையில் இது அவன் உயிர் இழந்தது போன்றதாகும்.
பதம் 5.14.17
கதாசின் மனோரதபகத-பித்ரு-பிதாமஹாதி அஸத் ஸத் இதி
ஸ்வப்ன-நிர்வ்ருதிலக்ஷணம் அனுபவதி
கதாசித்—சிலசமயம்; மனோரத-உபகத—மனதின் கற்பனையினால் கிடைக்கப்பெற்ற; பித்ரு—தந்தை; பிதா-மஹ-ஆதி—அல்லது தாத்தா போன்றவர்கள்; அஸத்—முன்பே இறந்திருந்த போதிலும் (மேலும் ஆத்மா போய்விட்டது என்பதை யாரும் அறிவதில்லை); ஸத்—மீண்டும் தந்தையோ அல்லது தாத்தாவோ வந்திருக்கிறார்; இதி—இவ்வாறு நினைத்து; ஸ்வப்ன-நிர்வருதி-லக்ஷணம்—கனவில் காணப்படும் ஒருவகையான இன்பம்; அனுபவதி—பந்தப்பட்ட ஆத்மா அனுபவிக்கிறான்.
சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா தன் தந்தையோ அல்லது தாத்தாவோ தன் மைந்தன் வடிவத்தில் மீண்டும் வந்திருப்பதாகக் கருதுகிறான். இவ்வாறு அவன் சிலசமயம் கனவில் அனுபவித்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். பந்தப்பட்ட ஆத்மா இதுபோன்ற மனக்கற்பனைகளில் இன்பமடைகிறான்.
பதம் 5.14.18
க்வசித் க்ருஹாஸ்ரம-கர்ம-சோதனாதி-பர-கிரிம் ஆருருக்ஷமாணோ
லோகவ்யஸன-கர்ஷித-மனா கண்டக-ஸர்கரா-க்ஷேத்ரம் ப்ரவிஸன்ன
இவ ஸீததி
க்வசித்—சிலசமயம்; க்ருஹ-ஆஸ்ரம—இல்லற வாழ்க்கையில்; கர்ம-சோதன—பலன்தரும் செயல்களின் விதிகளின்; அதி-பர-கிரிம்—பெரியமலை; ஆருருக்ஷமாண:—ஏறுவதற்கு விரும்பி; லோக—பௌதீகம்; வ்யஸன—பின்தொடர்வதற்கு; கர்ஷித-மனா:—அவன் மனம் கவரப்பட்டு; கண்டக-ஸர்கரா-க்ஷேத்ரம்—கூர்மையான கூழாங்கற்கள், மற்றும் முட்களினால் மூடப்பட்டக்களம்; ப்ரவிஸன்—நுழைந்து; இவ—போன்று; ஸீததி—அவன் துன்பமடைகிறான்.
இல்லற வாழ்க்கையில் ஒருவன் பல்வேறு யக்ஞங்கள் மற்றும் பலன் தரும் செயல்கள் அதிலும் சிறப்பாக விவாஹ யக்ஞம் (திருமணச்சடங்கு) மற்றும் முப்புரிநூல் அணியும் சடங்கு செய்வதற்கு ஆணையிடப்படுகிறான். இவையெல்லாம் விரிவானது என்பதோடு நிறைவேற்றுவதற்குச் சிரமமானதும் கூட. இவையெல்லாம் ஒருவன் பௌதீகச் செயல்களிடத்துப் பற்றுடையவனாக இருக்கும்பொழுது தாண்டியே தீர வேண்டிய பெரிய மலையுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றன. இச்சடங்குகள் அனைத்தையும் கடக்க வேண்டுமென்று விரும்புபவன், மலை ஏறும்பொழுது அதிலுள்ள முட்கள் மற்றும் கற்கள் போன்றவைக் குத்திக் கிழிப்பதினால் ஒருவன் என்ன வேதனை அடைவானோ அந்த வேதனையினை அனுபவிக்கிறான். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா அளவின்றி துன்பமுறுகிறான்.
பதம் 5.14.19
க்வசித் சது:ஸஹேன காயாப்யந்தர-வஹ்னினா க்ருஹீத-ஸார
ஸ்வகுடும்பாய க்ருத்யதி.
க்வசித் ச—மேலும் சில சமயம்; து: ஸஹேன—தாங்கவொண்ணா; காய-அப்யந்தர-வஹ்னினா—உடலினுள் இருக்கும் பசி மற்றும் தாகத்தினால்; க்ருஹீத-ஸார—அவனது பொறுமை தீர்ந்து விடுகிறது; ஸ்வ-குடும்பாய—அவனது குடும்பத்தினரிடம்; க்ருத்யதி—அவன் ஆத்திரமுடையவனாகிறான்.
சிலசமயம் உடல் சார்ந்த பசி மற்றும் தாகத்தினால் பந்தப்பட்ட ஆத்மா மிகுந்த இடருற்று பொறுமை இழந்து தனது பாசத்திற்குரிய மனைவி, மகன், மகள் போன்றோரிடம் கூட சினம் கொள்கிறான். இவ்வாறு அவர்களிடம் அன்பில்லாதவனாகி மேலும் அதிகமாகத் துன்புறுகிறான்.
பதம் 5.14.20
ஸ ஏவ புனர் நித்ராஜகர-க்ருஹீதோ ‘ந்தே தமஸி மக்ன: ஸுன்யாரண்ய
இவ ஸேதே நான்யத்-கிஞ்சன வேத ஸவ இவாபவித்த:
ஸ:—பந்தப்பட்ட ஆத்மா; ஏவ—நிச்சயமாக; புன:—மீண்டும்; நித்ரா-அஜகர—நீண்ட உறக்கம் என்னும் மலைப்பாம்பினால்; க்ருஹீத:— விழுங்கப்பட்டு; அந்தே—அடர்த்தியான இருட்டில்; தமஸி—அறியாமையின்; மக்ன—ஆழ்ந்து; ஸுன்ய-அரண்யே—தனிமையான காட்டில்; இவ—போன்று; ஸேதே—அவன் படுத்திருக்கிறான்; ந—இல்லை; அன்யத்—பிற; கிஞ்சன—எதுவும்; வேத—அறிகிறான்; ஸவ:—ஓர் இறந்த உடல்; இவ—போன்று; அவபித்த:—தூக்கி எறியப்படுதல்.
சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித்து மகாராஜாவிடம் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய அரசனே, உறக்கம் என்பது ஒரு மலைப்பாம்பு போன்றதாகும். பௌதீக வாழ்க்கை என்னும் காட்டில் அலைந்து கொண்டிருப்பவன் உறக்கம் என்னும் மலைப்பாம்பினால் எப்போதும் விழுங்கப்படுகிறான். இப்பாம்பினால் கடிக்கப்படுவதினால் அவன் எப்போதும் அறியாமையின் அடர்ந்த இருட்டினுள் எப்போதும் இருக்கிறான். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மாக்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.
பதம் 5.14.21
கதாசித் பக்ன-மான-தம்ஷ்ட்ரோ துர்ஜன-தந்த-ஸுகைர் அலப்த
நித்ரா-க்ஷணோ வ்யதித ஹ்ருதயேனானுக்ஷீயமான-விஜ்ஞானோ ’ந்த
கூபே ‘ந்தவத் பததி
கதாசித்—சிலசமயம்; பக்ன-மான-தம்ஷ்ட்ர:—அவற்றின் கர்வப்பற்கள் உடைப்பட்டிருக்கின்றன; துர்ஜன-தந்த-ஸுகை:—பாம்புடன் ஒப்பிடப்பட்டிருக்கும் துஷ்டமனிதர்களின் காழ்ப்புடையச் செயல்களினால்; அலப்த-நித்ரா-க்ஷண:—உறங்குவதற்கான வாய்ப்பினை அவர்கள் பெறுவதில்லை; வ்யதித-ஹ்ருதயேன—இடருற்ற மனதினால்; அனுக்ஷீயமாண—படிப்படியாகக் குறைந்து; விஜ்ஞான—அவனது உண்மையான உணர்வு; அந்த-கூபே—பாழுங்கிணற்றில்; அந்த-வத்—மாயை போன்று; பததி—அவன் தவறி வீழ்கிறான்.
பௌதீக வாழ்க்கைக் காட்டில் பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் காழ்ப்புணர்ச்சியுடைய எதிரிகளினால் கடிக்கப்படுகிறான். இவர்கள் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றனர். பகைவனின் சூழ்ச்சிகளினால் பந்தப்பட்ட ஆத்மா தனது கெளரவமான நிலையிலிருந்து வீழ்கிறான். ஆர்வத்தின் காரணமாக அவனால் சரியாக உறங்கக் கூட முடிவதில்லை. இவ்வாறு அவன் மேலும் மேலும் மகிழ்ச்சியற்ற நிலைக்கு ஆளாகி படிப்படியாகத் தனது புத்தி மற்றும் உணர்வினை இழக்கிறான். இந்நிலையில் அவன் பெரும்பாலும் நித்தியமாக அறியாமை என்னும் பாழுங்கிணற்றினுள் வீழ்ந்திருக்கும் குருடனைப் போல் இருக்கிறான்.
பதம் 5.14.22
கர்ஹி ஸ்ம சித்-காம-மது-லவான் விசின்வன் யதா பர-தார-பர
த்ரவ்யாணி அவருந்தானோ ராஜ்ஞாஸ்வாமிபிர் வா நிஹத: பததி அபாரே
நிரயே
கர்ஹி ஸ்ம சித்—சில சமயம்; காம-மது-லவான்—ஒருசில தேன்துளிகள் போன்ற புலனுகர்ச்சி; விசின்வன்—தேடிக்கொண்டு; யதா—எப்பொழுது; பர-தார—பிறன் மனைவி அல்லது அவன் மனைவியைத் தவிர மற்றவள்; பர-த்ரவ்யாணி—பிறருடைய செல்வம் மற்றும் உடைமைகள்; அவருந்தானோ—தன் சொந்தச் சொத்தாக எடுத்துக்கொள்வது; ராஜ்ஞா—அரசாங்கத்தினால்; ஸ்வாமிபி: வா—கணவனால் அல்லது அப்பெண்ணின் உறவினர்களினால்; நிஹத:—கடுமையாக உதைக்கப்பட்டு; பததி—அவன் கீழே விழுகிறான்; அபாரே—அளவற்ற; நிரயே—நரகவாழ்க்கையில் (கற்பழித்தல், கடத்திச் செல்லுதல் அல்லது பிறர்பொருளைத் திருடுதல் போன்ற குற்றங்களுக்கான அரசாங்கச் சிறைச்சாலையில்).
பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் புலனுகர்ச்சியின் மூலம் கிடைக்கும் சிறிதளவு இன்பத்தில் கவர்ச்சியடைகிறான். இவ்வாறு அவன் தவறான பாலுறவு கொள்வதோ அல்லது பிறர் பொருளைத் திருடவோ செய்கிறான். இதுபோன்ற நேரத்தில் அவன் அரசாங்கத்தினால் கைது செய்யப்படவோ அல்லது அப்பெண்ணின் கணவன் அல்லது பாதுகாவலரால் கண்டிக்கப்படுகிறான். இவ்வாறு ஒரு சிறிய பௌதீகத் திருப்திக்காக அவன் நரகநிலையினுள் வீழ்கிறான் என்பதோடு கற்பழிப்பு, கடத்திச்செல்லுதல், திருட்டு போன்றவற்றிற்காகச் சிறையிலிடப்படுகிறான்.
பதம் 5.14.23
அத ச தஸ்மாத் உபயதாபி ஹி கர்மாஸ்மின்ன ஆத்மன:
ஸம்ஸாராவபனம் உதாஹரந்தி.
அத—இப்பொழுது; ச—மேலும்; தஸ்மாத்—இதன் காரணமாக; உபயதா-அபி—இப்பிறப்பு மற்றும் மறுபிறப்பில்; ஹி—சந்தேகமின்றி கர்ம—பலன்தரும் செயல்கள்; அஸ்மின்—புலனின்பப் பாதையில்; ஆத்மன:—உயிர்வாழியின்; ஸம்ஸார—பௌதீக வாழ்வின்; ஆவபனம்—பயிர்செய்யும் நிலம் அல்லது ஆதாரம்; உதாஹரந்தி—வேதங்களின் அதிகாரங்கள் கூறுகின்றன.
அதனால்தான் கற்றறிந்த அறிஞர்களும் உன்னதமானவர்களும் பலன் தரும் செயலின் பௌதீகப் பாதையினை நிந்திக்கின்றனர். ஏனென்றால் அது பௌதீகத் துன்பங்களுக்கு மூலதாரமாகவும், விளைநிலமாகவும் இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் இருக்கின்றது.
பதம் 5.14.24
முக்தஸ் ததோ யதி பந்தாத் தேவதத்த உபாச்சின்னதி தஸ்மாத் அபி
விஷ்ணுமித்ர இதி அனவஸ்திதி:
முக்த:—முக்தியடைதல்; தத:—அதிலிருந்து; யதி—என்றால்; பந்தாத்—அரசாங்கச் சிறையிலிருந்து அல்லது பெண்ணின் பாதுகாவலரால் உதைக்கப்பட்டு; தேவதத்த—தேவதத்தன் என்ற பெயரில்; உபாச்சின்னதி—அவனிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறான்; தஸ்மாத்—தேவதத்தன் என்ற நபரிடமிருந்து; அபி—மீண்டும்; விஷ்ணு-மித்ர—விஷ்ணு மித்திரன் என்னும் பெயரில்; இதி—இவ்வாறு; அனவஸ்திதி:—செல்வம் ஒரிடத்தில் நிலையாக இருப்பதில்லை மாறாக அது ஒருவர் கையிலிருந்து, மற்றொருவர் கைக்கு மாறிக்கொண்டே இருக்கிறது.
பணத்திற்காகப் பந்தப்பட்ட ஆத்மா அடுத்தவனை ஏமாற்றவோ அல்லது அவனிடமிருந்து திருடவோ செய்கிறான். இப்பணத்தை அவன் தன்னிடம் பத்திரமாக வைத்துக் கொண்டு தண்டனையிலிருந்து எப்படியோ தப்பித்து விடுகிறான். பிறகு தேவதத்தன் என்பவன் அவனை ஏமாற்றி அவனிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறான். அதுபோல் விஷ்ணுமித்திரன் என்பவன் தேவதத்தனிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறான். எது எப்படியாயினும் பணம் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதில்லை. அது ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறிக் கொண்டே இருக்கிறது. இறுதியில் பணத்தை யாரும் அனுபவிக்க முடியாது போகவே அது முழுமுதற் கடவுளின் சொத்தாகவே இருக்கிறது.
பதம் 5.14.25
க்வசித் ச ஸீத-வாதாதி-அனேகாதிதைவிக-பௌதிகாத் மீயானாம்
தஸானாம் ப்ரதிநிவாரணனே ‘கல்போ துரந்த-சிந்தயா விஷண்ண
ஆஸ்தே
க்வசித்—சிலசமயம்; ச—மேலும்; ஸீத-வாத-ஆதி—குளிர் மற்றும் பலத்தக் காற்று போன்ற; அனேக—பல்வேறு; அதிதைவிக—தேவர்களால் உருவாக்கப்பட்ட; பௌதிக—அதிபௌதிகம் பிறஉயிர்களால் உருவாக்கப்பட்ட; ஆத்மீயானாம்—அத்யாத்மிகம், உடல் மற்றும் மனதினால் உண்டாவது; தஸானாம்—துன்ப நிலைகளின்; ப்ரதி நிவாரணே—நிவாரணத்திற்கு; அகல்ப:—இயலாது; துரந்த—மிகக்கடுமையான; சிந்தயா—கவலைகளினால்; விஷண்ண:—துக்கம்; ஆஸ்தே—அவன் இருக்கிறான்.
மும்முனைத் துன்பங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இயலாத பந்தப்பட்ட ஆத்மா மிகுந்த துக்கமுற்று சோகத்தில் வாழ்கிறான். இம்மும்முனைத் துன்பங்கள், தேவர்களின் காரணமாக (குளிர்ந்த காற்று கொதிக்கும் வெய்யில்) மனத்துன்பத்தினால் அனுபவிக்கப்படும் துன்பங்கள், பிற உயிர்வாழிகளால் உண்டாகும் துன்பங்கள், மேலும் மனம் மற்றும் உடலிலிருந்து உண்டாகும் துன்பங்கள் ஆகும்.
பதம் 5.14.26
க்வசின் மிதோ வ்யவஹரன் யத் கிஞ்சித் தனம் அன்யேப்யோ வா
காகிணிகாமாத்ரம் அபி அபஹரன் யத் கிஞ்சித் வா வித்வேஷம் ஏதி வித்த-
ஸாட்யாத்
க்வசித்—சிலசமயம்; மித:—ஒருவர் மற்றொருவருடன்; வ்யவஹரன்—தொழில்; யத் கிஞ்சித்—சிறிதளவே ஆயினும்; தனம்—செல்வம்; அன்யேப்ய:—பிறரிடமிருந்து; வா—அல்லது; காகிணிகா-மாத்ரம்—மிகச் சிறிய அறை (இருபது பண்டமாற்று நாணயம்); அபி—சிறிய அளவு எதுவாயினும்; அபஹரன்—ஏமாற்றி எடுத்துச் செல்வது; யத் கிஞ்சித்—சிறிய தொகை எதுவாக இருந்தாலும்; வா—அல்லது; வித்வேஷம் ஏதி—பகைமையினை உருவாக்கும்; வித்த-ஸாட்-யாத்—ஏமாற்றுவதின் காரணமாக.
பணம் வரவு செலவு முறையினைப் பொருத்தமட்டில் ஒருவன் மற்றொருவனை ஒரு சிறிய செப்புக்காசு அல்லது அதற்குக் குறைந்த அளவு ஏமாற்றினால் கூட இருவரும் பெரிய பகைவர்களாகிவிடுவர்.
பதம் 5.14.27
அத்வனி அமுஷ்மின்ன இம உபஸர்காஸ் ததா ஸுக-து: க ராக
த்வேஷபயாபிமான-ப்ரமாதோன்தாத-ஸோக-மோஹ-லோப-
மாத்ஸர்யேர்ஷ்யாவமான-க்ஷுத்-பிபாஸாதி-வ்யாதி-ஜன்ம-ஜரா-
மரணாதய:
அத்வனி—பௌதீக வாழக்கைப் பாதையில்; அமுஷ்மின்—அதில்; இமே—இவையெல்லாம்; உபஸர்கா:—நித்தியத்துன்பங்கள்; ததா—அவ்வளவும் கூட; ஸுக—சுகம் எனப்படுவது; து: க—துக்கம்; ராக—பற்று; த்வேஷ—துவேஷம்; பய—பயம்; அபிமான—போலிக் கெளரவம்; ப்ரமாத—மயக்கம்; உன்மாத—புத்திசுவாதீனம் இன்மை; ஸோக—சோகம்; மோஹ—மோகம்; லோப—பேராசை; மாத்ஸர்ய—காழ்ப்புணர்ச்சி; வீர்ய—பகைமை; அவமான—அவமானம்; க்ஷுத்—பசி; பிபாஸா—தாகம்; ஆதி—துன்பங்கள்; வ்யாதி—வியாதி; ஜன்ம—பிறப்பு; ஜரா—முதுமை; மரண—மரணம்; அதய:—போன்றவை.
இப்பௌதீக வாழ்வில் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஏராளமானத் தொல்லைகள் இருக்கின்றன. இவையனைத்தும் கடப்பதற்கரியதாகும். இதற்கும் மேல் இன்னல்கள், சுகம், துக்கம், பற்று, துவேசம், பயம், போலிக் கெளரவம், காழ்ப்புணர்ச்சி, அவமானம், பசி, தாகம், துன்பம், நோய், பிறப்பு, முதுமை, இறப்பு போன்றவற்றிலிருந்தும் வருகின்றன. இவையனைத்தும் ஒன்று சேர்ந்து பௌதீகப் பந்தப்பட்ட ஆத்மாவிற்கு துன்பத்தைத் தவிர வேறெதையும் அளிப்பதில்லை.
பதம் 5.14.28
க்வாபி தேவ-மாயயா ஸ்த்ரியா புஜ-லதோபகூட: ப்ரஸ்-கன்ன-
விவேக-விஜ்ஞானோ யத்-விஹார-க்ருஹாரம்பா-குல-ஹ்ருதயஸ் தத்
–ஆஸ்ரயாவஸக்த-ஸுத-துஹித்ரு-கலாத்ர-பாஷிதாவலோக-விசேஷ்
டிதாபருஹ்தே-ஹ்ருதேய ஆத்மானம் அஜிதாத்மாபாரே ‘ந்தே தமஸி
ப்ரஹிணோதி
க்வாபி—எங்கோ; தேவ-மாயயா—மாயாசக்தியின் பாதிப்பினால்; ஸ்த்ரியா—மனைவி அல்லது காதலி வடிவில்; புஜ-லதா—காட்டிலுள்ள கொடிகளோடு ஒப்பிடப்பட்டிருக்கும் மென்மையான அழகிய கரங்களினால்; உபகூட:—இறுக்கமாக அணைக்கப்பட்டு; ப்ரஸ்கன்ன—இழத்தல்; விவேக—விவேகத்தினை; விஜ்ஞான:—விஞ்ஞானம்; யத்-விஹார—மனைவியின் இன்பத்திற்காக; க்ருஹ-ஆரம்ப—ஒரு வீட்டைத் தேடுவதற்கு; ஆகுல-ஹ்ருதய:—அவனது இதயம் சிறைப்படுகிறது; தத்—அந்த வீட்டினன்; ஆஸ்ரய-அவஸக்த—அவர்கள் அடைக்கலத்தின் கீழ்; ஸுத—மைந்தர்களின்; துஹித்ரு—புதல்விகளின்; களத்ர—மனைவியின்; பாஷித-அவலோக—அவர்களின் அழகிய பார்வை மற்றும் வார்த்தைகளினால்; விசோஷ்டித—செயல்களினால்; அபஹ்ருதேஹ்ருதேய:—அவனது உணர்வு எடுத்துக் கொள்ளப்படுகிறது; ஆத்மானம்—அவனது; அஜித—கட்டுப்படுத்தப்படாத; ஆத்மா—அவன் தனது; அபாரே—அளவற்ற; அந்தே—அடர்ந்த இருளில்; தமஸி—நரகவாழ்க்கையில்; ப்ரஹிணோதி—அவன் உழல்கிறான்.
சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா மாயையின் உருவங்களினால் (மனைவி, மக்கள், நண்பர்) கவரப்பட்டு, ஒரு பெண்ணால் மார்புறத் தழுவி அணைக்கப்படுவதில் ஆர்வமுடையவனாகிறான். இவ்வாறு அவன் தனது புத்தி மற்றும் வாழ்க்கை இலட்சியத்திற்கான அறிவு போன்றவற்றை இழக்கிறான். அச்சமயம் ஆன்மீக வளர்ச்சிக்கான முயற்சி ஏதும் செய்யாது அவன் தனது மனைவி அல்லது காதலியிடம் அதிகப் பற்றுடையவனாகி அவள் வசிப்பதற்கு அழகிய இல்லம் ஒன்றை அமைத்துக் கொடுக்க முயற்சிக்கிறான். மீண்டும் அவன் அந்த வீட்டின் அடைக்கலத்தின் கீழ் மிக்க ஈடுபாடு கொண்டு தன் மனைவி மக்களின், பார்வை, பேச்சு போன்றவற்றினால் வசப்படுத்தப்படுகிறான். இதனால் அவன் தனது கிருஷ்ண உணர்வை இழந்து பௌதீக வாழ்வின் அடர்ந்த இருளினுள் தன்னைத் தானேத் தூக்கிக் கொள்கிறான்.
பதம் 5.14.29
கதாசித் ஈஸ்வரஸ்ய பகவதோ விஷ்ணோஸ் சக்ராத் பரமாண்வ ஆதி-
த்விபரார்தாபவர்க-காலோபலக்ஷணாத் பவிர்திதேன வயஸா ரம்ஹஸா
ஹரதா ஆப்ரஹ்ம-த்ருண-ஸ்தம்பாதீனாம் பூதானாம் அநிமிஷதோ
மிஷதாம்வித்-ரஸதஹ்ருதயஸ் தம் ஏவேஸ்வரம் கால-சக்ர-நிஜாயுதம்
ஸாக்ஷாத் பகவந்தம் யஜ்ஞ-புருஷம் அனாத்ருத்ய பாகண்ட-தேவதா:
கங்க-க்ருத்ர-பக-வடப்ராயா ஆர்ய-ஸமய-பரிஹ்தோ: ஸாங்கேத்யேனா
பிதத்தே
கதாசித்—சிலசமயம்; ஈஸ்வரஸ்ய—பரமபுருஷ பகவானின்; பகவத:—முழுமுதற் கடவுளின்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; சக்ராத்—சக்கரத்திலிருந்து; பரமாணு-ஆதி—அணுவின் ஒரு கூறுவின் காலம் துவங்கி; த்வி-பரார்த—பிரம்மதேவனின் ஆயுட்காலம்; அபவர்க—முடிதல்; கால—காலத்தின்; உபலக்ஷணாத்—அடையாளங்கள் கொண்டு; பரிவர்திதேன—சுழல்கின்ற; வயஸா—யுகங்களின் கால வரிசைப்படி; ரம்ஹஸா—வேகமாக; ஹரத:—எடுத்துக் கொண்டு; ஆ-ப்ரஹ்ம—பிரம்மதேவன் தொடங்கி; த்ருண-ஸ்தம்ப-ஆதீனாம்—சிறு புல்வரை; பூதானாம்—அனைத்து உயிர்வாழிகளும்; அநிமிஷத:—கண்இமை மூடாது (தோல்வியின்றி); மிஷதாம்—உயிர்வாழிகளின் கண்களின் முன்பு (தடுத்து நிறுத்துவதற்கு அவர்களிடம் திறன் இன்றி); வித்ரஸ்த-ஹ்ருதய:—நெஞ்சில் அச்சங்கொண்டு; தம்—அவரை; ஏவ—உறுதியாக; ஈஸ்வரம்—பரமபுருஷ பகவான்; கால-சக்ர-நிஜ-ஆயுதம்—அவர் வைத்திருக்கும் ஆயுதம் காலச்சக்கரமாகும்; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவந்தம்—முழுமுதற் கடவுள்; யஜ்ஞ-புருஷம்—எல்லாவிதமான வேள்விகளையும் அவர் ஏற்றுக்கொள்கிறார்; அனாத்ருத்ய—கவலையின்றி; பாகண்ட-தேவதா:—கடவுளின் கற்பனை அவதாரங்கள் (மனிதனால் உருவாக்கப்பட்டக் கடவுள் அல்லது தேவர்கள்): கங்க—பருந்து; க்ருத்ர—கழுகுகள்; பக—நாரைகள்; வட-ப்ராயா:—காக்கைகள் போன்று; ஆர்ய-ஸமய-பரித்தோ:—ஆரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேதங்களினால் புறக்கணிக்கப்பட்டவர்கள்; ஸாங்கேத்யேன—கஷாயத்தால் அல்லது வேதத்தால் குறிப்பிடப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையின்றி; அபிதத்தே—வணங்குவதற்குரியவராக அவன் ஏற்றுக் கொள்கிறான்.
பகவான் கிருஷ்ணர் பயன்படுத்தும் அவரது ஆயுதமான சக்கரம் ஹரி சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இச்சக்கரம் காலத்தின் சக்கரமாகும். இது அணுவின் காலம் தொடங்கி பிரம்மதேவனின் மரண காலம் வரை விரிகிறது. இது அனைத்துச் செயல்களையும் கட்டுப்படுத்துகிறது. இது எப்போதும் சுழன்று கொண்டு பிரம்மதேவனிலிருந்து கடைப்பட்ட ஒரு புல்வரை உயிர்வாழிகளின் உயிர்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு இளமை பருவத்திலிருந்த ஒருவன் முதியவனாகவும் மாறி வாழ்வின் இறுதியினை அடைகிறான். இக்காலச் சக்கரத்தின் சுழற்சியைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றதாகும். இச்சக்கரம் குறி தவறாததாகும். ஏனென்றால் இது முழுமுதற் கடவுளின் சொந்த ஆயுதம் ஆகும். சில சமயம் மரணத்திற்கு அஞ்சும் பந்தப்பட்ட ஆத்மா தன்னை மரணத்திலிருந்து காக்கக் கூடிய ஒருவரை வணங்க வேண்டுமென்று விரும்புகிறான். அதனால் இடையறாது சுழலும் காலத்தை தன் வசம் வைத்திருக்கும் முழுமுதற் கடவுளைப்பற்றி அவன் கவலைப்படுவதில்லை. பந்தப்பட்ட ஆத்மா அதற்குப் பதிலாக அதிகாரப்பூர்வமற்ற சாத்திரங்கள் குறிப்பிடும் மனிதனால் உருவாக்கப்பட்டக் கடவுளைத் தஞ்சமடைகிறான். இக்கடவுள் பருந்துகள், கழுகுகள், நாரைகள், காக்கைகள் போன்றோர் ஆவர். வேத இலக்கியங்கள் இவர்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. தவிர்க்க முடியாத மரணம் என்பது ஒரு சிங்கத்தின் தாக்குதலைப் போன்றதாகும். அத்தாக்குதலிலிருந்து கழுகுகளும், பருந்துகளும், காக்கைகளும், நாரைகளும் ஒருவனைக் காக்க முடியாது. மனிதனால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்றக் கடவுள்களைத் தஞ்சமடைந்தவனை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாது.
பதம் 5.14.30
யதா பாகண்டிபிர் ஆத்ம-வாஞ்சிதைஸ் தைர் உரு வஞ்சிதோ
ப்ரஹ்மகுலம் ஸமாவஸம்ஸ் தேஷாம் ஸீலம் உபநயனாதி-ஸ்ரௌத-
ஸ்மார்தகர்மானுஷ்டானேன பகவதோ யஜ்ஞ-புருஷஸ்யாராதனம் ஏவ
தத் அரோசயன் ஸுத்ரகுலம் பஜதே நிகமாசாரே ‘ ஸுத்திதோ யஸ்ய
மிதுனீபாவ குடும்பபரணம் யதா வானர-ஜாதே
யதா—எப்பொழுது; பாகண்டிபி:—பாஷண்டீக்களினால் (கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்கள்); ஆத்ம-வாஞ்சிதை:—அவர்கள் தங்களுக்குள் ஏமாற்றப்படுகின்றனர்; தை:—அவர்களினால்; உரு—மேலும், மேலும்; வாஞ்சித:—ஏமாற்றப்பட்டு; ப்ரஹ்ம-குலம்—வேதக்கலாச்சாரத்தைக் கடுமையாகப் பின்பற்றும் உண்மையான அந்தணர்கள்; ஸமாவஸன்—ஆன்மீக வளர்ச்சிக்காகத் தங்களுக்குள் நிலையாக இருந்துகொண்டு; தேஷாம்—அவர்களின் (வேத நெறிகளைக் கடுமையாகப் பின்பற்றும் அந்தணர்களின்) ஸீலம்—நன்னடைத்தை; உபநயன-ஆதி—முப்புரிநூல் அணிவிப்பதில் தொடங்கி அல்லது உண்மையான அந்தணனாக்குவதற்கு பந்தப்பட்ட ஆத்மாவிற்குப் பயிற்சியளித்தல்; ஸ்ரௌத—வேதக் கொள்கைகளின்படி; ஸ்மார்த—வேதங்களிலிருந்து தொகுக்கப் பெற்ற கடவுளின், அதிகாரப்பூர்வமான சாத்திரங்களுக்கேற்ப; கர்ம-அனுஷ்டானேன—அனுஷ்டானங்களைச் செய்வது; பகவத—முழுமுதற்கடவுளின்; யஜ்ஞ-புருஷஸ்ய—வேத சமயச் சடங்குகளினால் வழிபடப்படுபவர்; ஆராதனம்—அவரை வழிபடும் முறை; ஏவ—உறுதியாக; தத்-அரோசயன்—கொள்கையற்றவர்களுக்கு இதனைச் செய்வது கடினமாக இருப்பதினால் இதில் இன்பம் காண்பது இல்லை; ஸுத்ர-குலம்—சூத்திரர்களின் குலம்; பஜதே—அவன் திரும்பிச் செல்கிறான்; நிகம-ஆசாரே—வேத நெறிகளுக்கேற்ப நடந்துகொள்ளுதல்; அஸுத்தித:—தூய்மையடைவதில்லை; யஸ்ய—அவர்களின்; மிதுனீபாவ:—பாலியல் இன்பம் அல்லது பௌதீக வாழ்க்கை முறை; குடும்ப-பரணம்—குடும்பத்தைக் காப்பதற்கு; யதா—போன்று; வானர-ஜாதே:—குரங்குகளின் இனம் அல்லது குரங்கின் சந்ததியினர்.
முழுமுதற் கடவுள் மீது நம்பிக்கையற்ற போலி சுவாமிகளும், யோகிகளும், அவதாரங்களும் பாஷண்டீக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்குள் அடைப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு ஆன்மீக வளர்ச்சியின் உண்மையான பாதை எதுவென்று தெரியாது. மேலும் யார் அவர்களிடம் சென்றாலும் அவன் முறை வரும்பொழுது அவன் ஏமாற்றப்படுகிறான். இவ்வாறு ஒருவன் ஏமாற்றப்படும் பொழுது அவன் சிலசமயம் வேதநெறிகளை உண்மையில் பின்பற்றுபவர்களைச் சரணடைகிறான். (அந்தணர்கள் அல்லது கிருஷ்ண உணர்வுடையோர்). இவர்கள் வேத நெறிகளுக்கேற்ப எவ்வாறு முழுமுதற் கடவுளை வழிபடுவது என்று அனைவர்க்கும் கற்றுக் கொடுக்கின்றனர். ஆயினும் இந்நெறிகளில் உறுதியாக நிற்கும் திறனில்லாத இந்த துஷ்டர்கள் மீண்டும் கீழே வீழ்ந்து, பாலியல் தூண்டுதலுக்கு ஏற்பாடுகள் செய்வதில் மிகவும் தேர்ந்தவர்களான சூத்திரர்களைச் சரணடைகின்றனர். பாலியலானது குரங்குகளுக்கு மத்தியில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாகும். பாலியல் மூலம் புத்துணர்ச்சி பெறுவோர் குரங்குகளின் சந்ததியினர் என்று அழைக்கப்படலாம்.
பதம் 5.14.31
தத்ராபி நிர்வரோத:ஸ்வைரேண விஹரன்ன அதி-க்ருபண-புத்திர்
அன்யோன்யமுக-நிரீக்ஷணாதினா க்ராம்ய-கர்மனணவ விஸ்ம்ருத
காலாவதி:
தத்ர அபி—இந்த நிலையில் (குரங்கிலிருந்து பிறந்த மனித சமுதாயத்தில்); நிரவரோத—தயக்கமின்றி; ஸ்வைரேண—சுதந்திரமாக, வாழ்க்கை இலட்சியம் பற்றிய குறிப்பு இன்றி; விஹரன்—குரங்குகளைப் போன்று மகிழ்ந்து அனுபவித்து; அதி-க்ருபண—புத்தி:—அவனது புத்தி மந்தமாகிறது ஏனென்றால் அவன் தனது வளங்களை முறையாகப் பயன்படுத்துவது இல்லை; அன்யோன்ய—அன்யோனியமாக; முக-நிரீக்ஷண-ஆதினா—முகங்களைப் பார்ப்பதினால் (ஓர் ஆண் ஒரு அழகிய பெண்ணின் முகத்தைப் பார்க்கும் பொழுதும் அதுபோல் ஒரு பெண் ஒர் ஆணின் வலிமைமிக்க உடலைப் பார்க்கும்பொழுதும் அவர்கள் எப்போதும் ஒருவரை மற்றொருவர் விரும்புகின்றனர்); க்ராம்ய-கர்மணா—புலனுகர்ச்சிக்கானப் பௌதீகச் செயல்களினால்; ஏவ—மட்டும்; விஸ்ம்ருத—மறந்து; கால அவதி:—குறைவான வாழ்நாள்; (இதன்பிறகு ஒருவனது பரிணாம வளர்ச்சி தாழ்வு பெறுகிறது அல்லது உயர்வு பெறுகிறது).
இவ்வாறு குரங்குகளின் சந்ததியினர் ஒருவரோடொருவர் இணைகின்றனர். இவர்களே பொதுவாக சூத்திரர்கள் என்று அறியப்படுகின்றனர். வாழ்க்கை இலட்சியம் என்னவென்று அறியாது எந்த விதத்தயக்கமுமின்றி அவர்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். அவர்கள் ஒருவர் மற்றவரின் முகத்தைக் காண்பதினால் கவர்ச்சியடைகின்றனர். முகங்களே அவர்களின் புலனுகர்ச்சியை நினைவுறுத்துகின்றன. “க்ராம்ய காம” எனப்படும் பௌதீகச் செயல்களிலேயே அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். இவ்வாறு அவர்கள் ஒருநாள் தமது குறைந்த ஆயுள் முடிவுறும் என்பதை முற்றிலும் மறந்தவர்களாகி அவர்கள் பரிணாம வளர்ச்சியின் சுழற்சியில் இழிவடைகின்றனர்.
பதம் 5.14.32
க்வசித் த்ரும்வத் ஐஹிகார்தேஷு க்ருஹேஷுரம்ஸ்யன் யதா வானர:
ஸுத-தாரவத்ஸலோ வ்யவாய-க்ஷண:
க்வசித்—சிலசமயம்; த்ரும-வத்—மரங்களைப்போன்று; (குரங்குகள் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிச் செல்லுவதைப்போல், பந்தப்பட்ட ஆத்மா ஒர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்குத் தாவுகிறான்); ஐஹித-அர்தேஷு—உலகின் சிறந்த சுகங்களைக் கொண்டு வருவதின் பொருட்டு; க்ருஹேஷு—இல்லங்களில் (அல்லது உடல்கள்); ரம்ஸ்யன்—பெருமகிழ்ச்சி கொண்டு (மனிதனோ, தேவனோ, மிருகமோ, ஒருடலிலிருந்து மற்றோர் உடல்); யதா—போன்று; வானர:—குரங்கு; ஸுத-தார-வத்ஸல:—மனைவி, மக்கள் மீது மிகுந்த பாசம் கொண்டு; வ்யவாய-க்ஷண:—அவனது ஒய்வு நேரம் பாலியல் இன்பத்தில் கழிகிறது.
குரங்கு எவ்வாறு ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவுகிறதோ, அது போல் பந்தப்பட்ட ஆத்மா ஒருடலிலிருந்து மற்றோர் உடலிற்குத் தாவுகிறான். இறுதியில் குரங்கு வேடனால் பிடிக்கப்பட்டு வெளியேற முடியாமல் போகிறது. பந்தப்பட்ட ஆத்மாவும் கணநேரப் பாலியல் இன்பத்தினால் பிடிக்கப்பட்டு பல்வேறு உடல்களின் மீது பற்றுடையவனாகி இல்வாழ்க்கையில் சிறைப்படுகிறான். இல்லற வாழ்க்கை, பந்தப்பட்ட ஆத்மாவிற்கு கணநேர பாலியல் இன்ப விழாவினை அளிக்கிறது. இதனால் அவன் பௌதீகப் பிடியிலிருந்து வெளிவருவதற்கு முற்றிலும் இயலாதவனாகிறான்.
பதம் 5.14.33
ஏவம் அத்வனி அவருந்தானோ ம்ருத்ய-கஜ-பயாத் தமஸி கிரி-கந்தரப்ரயே
ஏவம்—இவ்வாறு; அத்வனி—புலனுகர்ச்சிப் பாதையில்; அவருந்தான:—கட்டுப்பாட்டிற்குள் வந்து, அவன் வாழ்வின் முக்கிய நோக்கத்தினை மறந்து விடுகிறான்; ம்ருத்ய-கஜ-பயாத்—மரணமென்னும் யானைக்கு அஞ்சி; தமஸி—இருளில்; கிரி-கந்தர-ப்ராயே—மலையிலுள்ள இருண்ட குகைகளைப் போன்று.
இப்பௌதீக உலகில் பந்தப்பட்ட ஆத்மா முழுமுதற் கடவுளுடன் தனக்குள்ள உறவினை மறந்தவனாகி கிருஷ்ண உணர்வில் அக்கறையின்றி இருக்கும் பொழுது அவன் பல்வேறு வகையான தீச்செயல்களிலும் பாவச்செயல்களிலும் ஈடுபடுகிறான். பிறகு அவன் மும்முனைத் துன்பங்களுக்கு ஆளாகிறான். பின்னர் மரணம் என்னும் யானைக்கு அஞ்சி மலைக்குகையின் இருளில் வீழ்கிறான்.
பதம் 5.14.34
க்வசித் தே-வாதாதி-அனேக-தைவிக-பௌதிகாத்மீ-யானாம் து
கானாம் ப்ரதிநிவாரணே ‘கல்போ துரந்த-விஷய-விஷண்ண ஆஸ்தே
க்வசித்—சிலசமயம்; ஸீத-வாத-ஆதி—கடுமையான குளிர் அல்லது காற்று; அனேக—பல; தைவிக—தேவர்களால் வழங்கப்படுவது; அல்லது நமது சக்திக்கு மீறியது; பௌதிக—பிற உயிர்வாழிகளால் வழங்கப்படுவது; ஆத்மீயானாம்—பௌதீக உடல் மற்றும் மனதினால் வழங்கப்படுவது; து: கானாம்—பல துன்பங்கள்; ப்ரதிநிவாரணே—எதிர்செயலில்; அகல்ப:—இயலாதவனாகி; துரந்த—கடக்க முடியாத; விஷய—புலனுகர்ச்சியுடன் தொடர்புடையவற்றிலிருந்து; விஷண்ண:—விசனப்படுதல்; ஆஸ்தே—அவன் இருக்கிறான்.
பந்தப்பட்ட ஆத்மா கடுமையான குளிர் மற்றும் சூறாவளிக் காற்று போன்றவற்றினால் பாதிக்கப்படும் பல்வேறு உடல் துன்பங்களை அனுபவிக்கிறான். அவன் பிற உயிர்களின் செயல்களினாலும் இயற்கை உத்பாவங்களினாலும் துன்பமுறுகிறான். இவற்றிற்கு எதிராக அவனால் செயல்பட முடியாத பொழுது அவன் இயற்கையிலேயே மிக்க விசனப்படுகிறான். ஏனென்றால் அவன் பௌதீக வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறான்.
பதம் 5.14.35
க்வசின் மிதோ வ்யவஹரன் யத் கிஞ்சித் தனம் உபயாதி வித்த-
ஸாத்யேன
க்வசித்—சிலசமயம் அல்லது எங்கோ ஒரிடத்தில்; மித: வ்ய-வஹரன்—ஒருவரோடொருவர் வரவு செலவு செய்யும் பொழுது; யத்—எதுவாயினும்; கிஞ்சித்—சிறிதளவு; தனம்—பௌதீக நன்மை அல்லது செல்வம்; உபயாதி—அவன் அடைகிறான்; வித்த-ஸாத்யேன—ஒருவனுடைய செல்வத்தைப் பெறுவதற்காக ஏமாற்றும் வழியினால்.
சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா பணம் வரவு செலவு செய்கிறான். ஆனால் உரிய காலத்தில் ஏமாற்றுவதின் காரணமாகப் பகைமை உண்டாகிறது. சிறிது இலாபம் கிடைத்த போதிலும் பந்தப்பட்ட ஆத்மாக்கள் தமது நட்பை முறித்துக் கொண்டு பகைவர்களாகின்றனர்.
பதம் 5.14.36
க்வசித் க்ஷீண-தன: ஸய்யாஸனாஸனாதி-உபபோக-விஹீனோ
யாவத் அப்ரதிலப்த-மனோரதோபகதாதானே ‘வஸித-மதிஸ் ததஸ்
ததோ ‘வமானாதீனி ஜனாத் அபிலபதே
க்வசித்—சில சமயம்; க்ஷீண-தன:—போதுமான பணம் இன்றி; ஸய்யா-ஆஸன்-ஆதி—உண்பதற்கும், இருப்பதற்கும், உறங்குவதற்கும் போதிய இடம்; உபயோக—பௌதீக இன்பத்தின்; விஹீன:—இழந்து; யாவத்—அதுவரை; அப்ரதிலப்த—எய்தப்பெறாமல்; மனோரத—அவனது ஆசையினால்; உபகத—எய்துதல்; ஆதானே—மோசமான வழியில் கவர்ந்து கொள்ளுதல்; அவஸித-மதி:—அவனது மனம் தீர்மானிக்கிறது; தத:—அதன் காரணமாக; தத:—அதிலிருந்து; அவமான-ஆதீனி—அவமானம் மற்றும் தண்டனை; ஜனாத்—பொதுமக்கள்; அபிலபதே—அவன் பெறுகிறான்.
சிலசமயம் பணம் இல்லாததினால் பந்தப்பட்ட ஆத்மா வசதியான இருப்பிடத்தைப் பெறமுடியாமல் போகிறான். சிலநேரம் தான் உட்காருவதற்கும், பிற தேவைகளுக்காகவும் கூட இடமின்றி தவிக்கிறான். அதாவது அவன் வறுமையில் வீழ்கிறான் அப்போது நேரான வழியில் தனது தேவைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாமற்போகும் பொழுது அவன் அநியாயமான வழியில் பிறர் சொத்தை அபகரிக்க முடிவு செய்கிறான். அவனால் அவன் விரும்பும் பொருள்களை அடைய முடியாமற் போகும்பொழுது அவன் பிறரிடம் அவமானப்பட்டு அதனால் மிகுந்த துக்கத்திற்கு ஆளாகிறான்.
பதம் 5.14.37
ஏவம் வித்த-வ்யதிஸங்க-விவ்ருத்த-வைரானுந்தோ ‘பி பூர்வ-
வாஸனயா மித உத்வஹதி அதாபவஹதி
ஏவம்—இவ்வழியே; வித்த-வ்யதிஷங்க—பணம் வரவு செலவு தொடர்பின் காரணமாக; விவ்ருத்த—அதிகரித்தல்; வைர-அனுபந்த—பகையின் உறவுகளைப் பெற்று; அபி—இருந்தபோதிலும்; பூர்வ-வாஸனயா—முந்தைய தீச்செயல்களின் பலன்களினால்; மித:—ஒவ்வொருவரேனும்; உத்வஹதி—புதல்வன், புதல்வியின் வழிமுறைகளினால் ஒருங்கிணைதல்; அத—அதன்பிறகு; அபவஹதி—அவர்கள் திருமண உறவினைத் துறக்கின்றனர் அல்லது விவாகரத்துப் பெறுகின்றனர்.
மக்கள் பகைவர்களாக இருந்தபோதிலும் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் சிலசமயம் திருமணம் செய்து கொள்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக இத்திருமணங்கள் நீண்டநாள் நிலைத்திருப்பதில்லை. இதில் ஈடுபட்டவர்கள் விவாகரத்து அல்லது வேறு வழிமுறைகளினால் பிரிகின்றனர்.
பதம் 5.14.38
ஏதஸ்மின் ஸம்ஸாராத்வனி நானா-க்லேஸோபஸர்க-பாதித ஆபன்ன
விபன்னோ யத்ர யஸ் தம் உ ஹ வாவேதரஸ் தத்ர விஸ்ருஜ்ய ஜாதம்
உபாதயா ஸோசன் முஹ்யன் பிப்யத்-விவதன் கிரந்தன் ஸம்ஹ்ருஷ்யன்
காயன் நஹ்யமான ஸாது-வர்ஜிதோ நைவாவர்ததே ‘த்யாபி யத ஆரப்த
ஏஷ நர-லோக-ஸார்தோ யம் அத்வன பாரம் உபதிஸந்தி
ஏதஸ்மின்—இதன்மேல்; ஸம்ஸார—துன்பநிலைகளின்; அத்வனி—பாதை; நானா—பல்வேறு; க்லேஸ—துன்பங்களினால்; உபஸர்க—பௌதீக வாழ்வின் துன்பங்களினால்; பாதித:—துன்புற்று; ஆபன்ன—சிலசமயம் இலாபம் அடைகிறான்; விபன்ன:—சிலசமயம் நஷ்டம் அடைகிறான்; யத்ர—இதனில்; ய:—யார்; தம்—அவரை; உ ஹ வாவ—அல்லது; இதர:—எவரேனும்; தத்ர—அதன் பின்னர்; விஸ்ருஜ்ய—விட்டுவிட்டு; ஜாதம் ஜாதம்—புதிதாய்ப் பிறந்த; உபாதாய—ஏற்றுக் கொண்டு; ஸோசன்—சோகமுறல்; முஹ்யன்—மோகவசப்பட்டு; பிப்யத்—அச்சங்கொண்டு; விவதன்—சில சமயங்களில் உரத்த குரலில்; க்ரந்தன்—சிலசமயம் அழுகின்றான்; ஸம்ஹ்ருஷ்யன்—சிலசமயம் மகிழ்ச்சியடைகிறான்; காயன்—பாடுகின்றான்; நஹ்யமான:—கட்டப்பட்டு; ஸாதுவர்ஜித:—சாதுக்களிடமிருந்து விலகி இருத்தல்; ந—இல்லை; ஏவ—உறுதியாக; ஆவர்ததே—எய்தப்பெறுகிறான்; அத்ய-அபி—ஏன், இன்றுவரை; யத:—எவரிடமிருந்து; ஆரப்த:—ஆரம்பிக்கப்பட்டது; ஏஷ:—இது; நர-லோக—பௌதீக உலகின்; ஸ-அர்த:—சுயநலமிக்க உயிர்வாழிகள்; யம்—அவர்(முழுமுதற்கடவுள்); அத்வன:—பௌதீக வாழ்க்கைப் பாதையின்; பாரம்—மறுபக்கம்; உபதிஸந்தி—தெய்வீக முனிவர்கள் குறிப்பிடும்.
பௌதீக உலகின் பாதையானது பௌதீகத்துன்பங்கள் நிறைந்ததாகும். மேலும் பல்வேறு துன்பங்கள் பந்தப்பட்ட ஆத்மாவை இடையூறு செய்கின்றன. சிலசமயம் அவன் நஷ்டமடைகிறான். சிலசமயம் இலாபமடைகிறான். இரண்டிலும், பாதை முழுவதும் ஆபத்தே நிறைந்திருக்கிறது. சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா மரணம் அல்லது வேறு வழியில் தன் தந்தையிடமிருந்து பிரிக்கப்படுக்கிறான். அவரை விட்டு வந்தவுடன் அவன் படிப்படியாக தன் குழந்தைகள் போன்ற பிறரிடம் பற்றுடையவானகிறான். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் மோகத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகிறான். சிலசமயம் அவன் அச்சங்கொண்டு கூக்குரலிட்டு அழுகிறான். சிலசமயம் தன் குடும்பத்தைக் காப்பதினால் மகிழ்ச்சியடைகிறான். இம்மகிழ்ச்சி அதிகரிக்கும் பொழுது சிலசமயம் இனிமையாகப் பாடுகிறான். இவ்வாறு காலாகாலமாக முழுமுதற் கடவுளுடன் தனக்கிருந்த உறவினை மறந்து சிக்கிக் கொள்கிறான். இவ்வாறு அவன் ஆபத்து நிறைந்த பௌதீக வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்கிறான். இப்பாதையிலும் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை. ஆபத்து நிறைந்த பௌதீக வாழ்க்கைப் பாதையிலிருந்து வெளிவர உணர்வு பெற்றோர் முழுமுதற் கடவுளைச் சரணடைய வேண்டும். பக்தித் தொண்டுப் பிடியிலிருந்து மீளமுடியாது. இதன் முடிவு பௌதீக வாழ்க்கையில் ஒருவன் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பதேயாகும். ஒருவன் கிருஷ்ண உணர்விற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
பதம் 5.14.39
யத் இதம் யோகானுஸாஸனட்ம ந வா ஏதத் அவருந்ததே
யன் ந்யஸ்த-தண்டா முயை உபஸம ஸீல உபரதாத்மான ஸமவகச்சந்தி
யத்—இதில்; இதம்—முழுமுதற் கடவுளின் உயர்ந்த உறைவிடம்; யோக-அனுஸாஸனம்—பக்தித்தொண்டு புரிவதினால் மட்டுமே எய்தப்படும்; ந—இல்லை; வா—அல்லது; ஏதத்—விடுதலைக்கான இந்தப் பாதை; அவருந்ததே—பெறுதல்; யத்—ஆகையினால்; ந்யஸ-தண்டா:—பிறர்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியை விட்டொழித்தோர்; முயை:—முனிவர்கள்; உபஸம-ஸீல:—அவர்கள் இப்போது உயர்ந்த அமைதியான வாழ்க்கையில் இருக்கின்றனர்; உபரத-ஆத்மான:—அவர்கள் மனம் மற்றும் புலன்களை அடக்கியவர்கள்; ஸமவகச்சந்தி—மிக எளிதில் அடைகின்றனர்.
உயிர்வாழிகள் அனைவரிடமும் நண்பர்களாக இருக்கும் முனிசிரேஷ்டர்களிடம் அமைதியான உணர்வு இருக்கும். இவர்கள் தங்கள் மனத்தையும் புலன்களையும் அடக்கியவர்கள் என்பதோடு கடவுளிடம் திருப்பிச் செல்லும், விடுதலைப் பாதையினை இவர்கள் மிக எளிதில் எய்தப் பெறுகின்றனர். துரதிர்ஷ்டத்தினாலும், துன்பமிக்கப் பௌதீக நிலைகளில் பற்றுடைமையினாலும் ஒரு லோகாயத மனிதனால் இவர்களுடன் தொடர்பு கொள்ள முடிவதில்லை.
பதம் 5.14.40
யத் அபி திக்-இப-ஜயினோ யஜ்வினோ யே வை ராஜர்ஷ்ய: கிம்
து பரம் ம்ருதே ஸயீரன்ன அஸ்யாம் ஏவ மமேயம் இதி க்ருத-வைரா-
னுபந்தாயாம் விஸ்ருஜ்ய ஸ்வயம் உபஸம்ஹ்ருதா:
யத் அபி—இருந்த போதிலும்; திக்-இப-ஜயின்:—அவர்கள் எல்லா திக்குகளிலும் வெற்றி பெறுகின்றனர்; யஜ்வின:—பெரிய வேள்விகளைச் செய்வதில் தேர்ந்தவர்கள்; யே—அவர்கள் அனைவரும்; வை—உண்மையில்; ராஜ-ருஷய:—மிகச்சிறந்த ராஜரிஷிகள் ஆவர்; கிம் து—ஆயினும்; பரம்—இப்பூமி மட்டும்; ம்ருதே—யுத்தத்தில்; ஸயீரன்—படுத்திருத்தல்; அஸ்யாம்—இதில் (பூமியில்); ஏவ—உண்மையில்; மம—எனது; இயம்—இந்த; இதி—இவ்வாறு கருதி; க்ருத—உருவாக்கப்பட்ட அதில்; வைர-அனுபந்தாயாம்—பிறருடன் பகைமை கொள்ளுதல்; விஸ்ருஜ்ய—துறந்து; ஸ்வயம்—அவர் சுய வாழ்க்கை; உபஸம்ஹ்ருதா:—கொல்லப்படுகின்றனர்.
ஏராளமான ராஜரிஷிகள் மிகப்பெரிய வேள்விகள் செய்வதில் தேர்ந்தவர்களாகவும் பிற தேசங்களை வெல்லும் திறனுடையவராகவும் இருந்தனர், அச்சக்திகள் பெற்றிருந்தும் அவர்கள் முழுமுதற் கடவுளின் அன்புத் தொண்டினைப் பெற முடியாதவர்களாயிருந்தனர். அது எதனாலென்றால் அந்த மாமன்னர்கள் “நான் இந்த உடல், இது என் சொத்து” என்கின்ற தவறான உணர்வினை வெல்ல முடியாதவர்களாக இருந்தனர் என்பதினாலேயாம். இதனால் அவர்கள் பிற மன்னர்களுடன் பகைமை கொண்டு, யுத்தம் செய்து வாழ்க்கையின் உண்மை இலட்சியத்தினை நிறைவேற்றாது மாண்டுபோயினர்.
பதம் 5.14.41
கர்ம-வல்லீம் அவலம்ப்ய தத ஆபத கதஞ்சின் நரகாத் விழுக்த: புனர்
அபி ஏவம் ஸம்ஸாராத்வனி வர்தமானோ நர-லோக-ஸார்தம் உபயாதி
ஏவம் உபரிகதோ ‘பி.
கர்ம-வல்லீம்—பலன் தரும் செயல்களின் கொடி; அவலம்ப்ய—அடைக்கலம் புகுந்து; தத:—அதிலிருந்து; ஆபத:—ஆபத்தான அல்லது துன்பநிலை; கதஞ்சித்—எவ்வாறேனும் அல்லது பிற; நரகாத்—நரக வாழ்க்கை நிலையிலிருந்து; விழுக்த—விடுதலை பெற்று; புன: அபி—மீண்டும்; ஏவம்—இவ்வழியே; ஸம்ஸார-அத்வனி—பௌதீக வாழ்க்கைப் பாதையில்; வர்தமான:—வாழ்ந்து; நர-லோக-ஸ-அர்தம்—சுய நலத்திற்கானப் பௌதீகச் செயல்களின் களம்; உபயாதி—அவன் புகுகின்றார்; ஏவம்—இவ்வாறு; உபரி—மேலே (மேலுலகங்கள்); கத:—அபி உயர்த்தப்பட்டாலும்.
பந்தப்பட்ட ஆத்மா பலன்தரும் செயலின் கொடியினை அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளும்பொழுது அவன் தனது புண்ணியச் செயல்களினால் மேலுலகத்திற்கு உயர்த்தப்பட்டு நரக நிலையிலிருந்து விடுதலை பெறலாம். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக அவன் அங்கே நிலைத்து இருக்க முடியாது. அவன் தனது புண்ணியச் செயல்களின் பலனை அனுபவித்துப் பிறகு அவன் கீழுலகத்திற்கு வரவேண்டியதிருக்கிறது. இவ்வாறு அவன் தொடர்ந்து மேலும் கீழும். அலைந்து கொண்டிருக்கின்றான்
பதம் 5.14.42
தஸ்யேதம் உபகாயந்தி
ஆர்ஷபஸ்யேஹ ராஜர்ஷேர் மனஸாபி மஹாத்மன:
நானுவர்த்மார்ஹதி ந்ருபோ மக்ஷிகேவ கருத்மத:
தஸ்ய—ஜடபரதரின்; இதம்—இப்பெருமையை; உபகாயந்தி—அவர்கள் பாடினர்; ஆர்ஷபஸ்ய—ரிஷபதேவரின் புதல்வன்; இஹ—இங்கே; ராஜ-ரூஷே:—ராஜரிஷியின்; மனஸா-அபி—மனதினால் கூட; மஹா-ஆத்மன:—ஜடபாரதர் என்னும் சிறந்த மகானின்; ந—இல்லை; அனுவர்த்ம-அர்ஹதி—பாதையினைப் பின்பற்றும் திறன்; ந்ருப:—எந்த அரசரும்; மக்ஷிகா—ஒரு ஈ; இவ—போன்று; கருத்மத—முழுமுதற் கடவுளின் வாகனமான கருடன்.
ஜடபரதரின் உபதேசங்களைச் சுருக்கி சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பிற்குரிய மன்னனே, ஜடபரதரால் குறிப்பிடப்பட்டிருக்கும் பாதையானது பகவானின் வாகனமான கருடன் பின்பற்றியப் பாதையைப் போன்றதாகும். மேலும் சாதாரண அரசர்கள் ஈக்களைப் போன்றோராவர். கருடனின் பாதையினை ஈக்களால் பின்பற்ற முடியாது. இன்றுவரை சிறந்த அரசர்களும், வெற்றி பெற்றத் தலைவர்களும் மனதினால் கூடப் பக்தித் தொண்டுப் பாதையைப் பின்பற்ற முடியாதவர்களாவர்.
பதம் 5.14.43
யோ துஸ்த்யஜான் தார-ஸுதான்
ஸுஹ்ருத் ராஜ்யம் ஹ்ருதி-ஸ்ப்ருஸ:
ஜஹௌ யுவைவ மலவத்
உத்தமஸ்லோக-வாலஸ:
ய—மகாராஜா ரிஷபதேவரின் புதல்வனும், மன்னர் மகாராஜா பரதராகவும் இருந்த அதே ஜட பரதர்; துஸ்த்யஜான்—துறப்பதற்கு மிகவும் கடினமான; தார-ஸுதான்—மனைவி மக்கள் அல்லது வளமிக்க இல்லற வாழ்க்கை; ஸுஹ்ருத்—நண்பர்களும் நலன் விரும்பிகளும்; ராஜ்யம்—இராஜ்ஜியம், அது உலகம் முழுவதும் விரிந்திருந்தது; ஹ்ருதி-ஸ்ப்ருஸ:—ஒருவனது இதயத்தின் மத்தியில் அது அமைந்திருந்தது; ஜஹௌ—அவர் துறந்து: யுவாஏவ—இளைஞனாக இருந்தும் கூட; மல-வத்—மலத்தைப் போன்று; உத்தம-ஸ்லோக-வாலஸ:—உத்தமஸ்லோகம் என்றறியப்படும் முழுமுதற் கடவுளுக்கு தொண்டு செய்வதில் மிக்க ஆர்வமுடையவர்.
வாழ்வின் உச்ச நிலையில் இருந்தபொழுது பரத மகாராஜா எல்லாவற்றையும் துறந்தார். ஏனென்றால் அவர் முழுமுதற் கடவுளான உத்தம சுலோகருக்குத் தொண்டு புரிவதில் பெருவிருப்பமுடையவராக இருந்தார். அவர் தனது அழகிய மனைவி, ஆருயிர் குழந்தைகள் உயிர் நண்பர்கள் மற்றும் வளம்மிக்க பெரிய இராஜ்ஜியத்தைத் துறந்தார். இவையனைத்தும் துறப்பதற்கு மிகவும் அரிதானவை என்ற போதிலும் கூட பரத மகாராஜா மிகவும் உயர்ந்தவர் ஆதலினால் இவற்றையெல்லாம் இழிந்த மலத்தைப் போல் எண்ணித் துறந்தார். இதுவே அவரது மேன்மையின் சிறப்பாகும்.
பதம் 5.14.44
யோ துஸ்த்யஜான் க்ஷிதி-ஸுத-ஸ்வஜனார்த-தாரான்
ப்ரார்த்யாம் ஸ்ரீயம் ஸுர-வரை ஸ்தயாவலோகாம்
நைச்சன் ந்ருபஸ் தத்-உசிதம் மஹதாம் மதுத்விட்
ஸேவானுரகத்-மனஸாம் அபவோ ‘பி பல்கு:
ய—எவர்; துஸ்த்யஜான்—துறப்பதற்கு மிகவும் கடினமானதாகும்; க்ஷிதி—பூமி; ஸுத—குழந்தைகள்; ஸ்வ-ஜன-அர்த தாரான்—உறவினர், செல்வம், அழகிய மனைவி; ப்ரார்த்யாம்—விரும்பத்தக்க; ஸ்ரீயும்—அதர்ஷ்ட தேவதை; ஸுர-வரை:—தேவர்களிற் சிறந்தவர்களினால்; ஸ-தய-அவலோகம்—அவரது கருணைமிக்கப் பார்வை; ந—இல்லை; ஐச்சத்—விரும்பிய; ந்ருப:—மன்னர்; தத்-உசிதம்—இது அவருக்கு உசிதமானதாகும்; மஹதாம்—சிறந்த மகான்களின்; (மகாத்மாக்கள்); மது-த்விட்—மது என்னும் அசுரனைக் கொன்ற பகவான் கிருஷ்ணரின்; ஸேவானுரகத்—அன்பான சேவையால் ஈர்க்கப்பட்ட; மனஸாம்—மனதைக் கொண்டவர்களின்; அபவ: அபி—முக்தி நிலைகூட; பல்கு:—முக்கியமற்றதாகும்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே பரத மகாராஜாவின் செயல்கள் அனைத்தும் வியப்பிற்குரியவையாகும். பிறர் துறப்பதற்கு அரியதாகக் கருதும் அனைத்தையும் அவர் தனது நாடு, மனைவி, மக்கள், குடும்பம் போன்ற எல்லாவற்றையும் துறந்தார். அவரிடமிருந்த வளங்கள் கண்டு தேவர்கள் கூடப் பொறாமை கொண்டனர், இருந்தும் அவர் அவற்றைத் துறந்தார். சிறந்த பக்தராவதற்கு அவரைப் போன்ற மகானுக்கு இது பொருத்தமானதேயாகும். அவரால் எல்லாவற்றையும் துறக்க முடிந்தது. ஏனென்றால் கிருஷ்ணரின் அழகு, வளம், புகழ், ஞானம், வலிமை மற்றும், முழுமுதற் கடவுளின் துறவு போன்றவற்றினால் அவர் மிகவும் கவரப்பட்டிருந்தார். அவருக்காக தான் விரும்பிய அனைத்தையும் துறக்கும் ஒருவன் மீது கிருஷ்ணரும் அதிகக் கவர்ச்சியுடையவராகிறார். உண்மையில் பகவானின் அன்புத் தொண்டின் மீது கவர்ச்சியுடையோர்க்கு விடுதலை என்பது கூட முக்கியத்துவமற்றதாகவேபடுகிறது.
பதம் 5.14.45
யஜ்ஞாய தர்ம-பதயே விதி-நைபுணாய
யோகாய ஸாங்க்ய-ஸிரஸே ப்ரக்ருதீஸ்வராய
நாராயணாய ஹரயே நம இதி உதாரம்
ஹாஸ்யன் ம்ருகத்வம் அபி ய: ஸமுதாஜஹார
யஜ்ஞாய—மிகப்பெரிய வேள்விகள் அனைத்தின் பலன்களையும் அனுபவிக்கும் முழுமுதற் கடவுளுக்கு; தர்ம-பதயே—தலைவருக்கு அல்லது சமய அறநெறிகளை முன் எடுத்து உரைத்தவருக்கு; விதி-நைபுணாய—ஒழுங்குமுறை விதிகளை தேர்ந்த முறையில் பின்பற்றுவதற்கான புத்தியைப் பக்தனுக்கு அளிப்பவர்; யோகாய—யோக ஸித்தியனி வடிவமாகத் திகழ்பவர்; ஸாங்க்ய-ஸிரஸே—சாங்கிய தத்துவத்தை உபதேசித்தவர் அல்லது சாங்கிய அறிவினை உலகிலுள்ள மக்களுக்கு உண்மையில் அளித்தவர்; ப்ரக்ருதி-ஈஸ்வராய—பிரபஞ்சத்தோற்றத்தின் பிரம நெறியாளர்; நாராயணாய—எண்ணற்ற உயிர்வாழிகளின் உறைவிடம்: (“நர” என்றால் உயிர்வாழி என்றும் “அயன” என்றால் அடைக்கலம் என்றும் பொருளாகும்); ஹரயே—ஹரி என்றறியப்படும் முழுமுதற் கடவுளுக்கு; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; இதி—இவ்வாறு; உதாரம்—மிகுந்த ஓசையுடன்; ஹாஸ்யன்—சிரித்து; ம்ருகத்வம் அபி—ஒரு மானின் உடலில் இருந்த போதிலும்; ய:—எவர்; ஸமுதாஜஹார—ஒதினார்.
மானின் உடலில் இருந்தபோதிலும் மகாராஜா பரதர் முழுமுதற் கடவுளை ஒரு போதும் மறந்தாரில்லை ஆகையினால் அவர் மானின் உடலைத் துறந்தபொழுது பின்வரும் பிரார்த்தனையை உரத்த குரலில் கூறினார்: “முழுமுதற் கடவுள் வேள்வியின் வடிவமாவார் சமயச் சடங்குகளின் பலன்களை அவரே அளிக்கிறார். சமய முறைகளைப் பாதுகாப்பவரும், யோகஸித்தியின் வடிவமும், அனைத்து ஞானங்களுக்கும் ஆதாரமாக இருப்பவரும், முழுப்படைப்பின் நெறியாளராகவும், ஒவ்வொரு உயிர்வாழியின் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும் அவரேயாவார். அவர் கவர்ச்சியும் அழகும் உடையவர். எனது உடலை இப்போது துறக்கிறேன், அவருக்கு எனது வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றேன். நான் எப்போதும் அவரது உன்னத அன்புத் தொண்டில் நித்தியமாக ஈடுபடுவேன் என்று நம்பிக்கை கொள்கின்றேன். இவ்வாறு கூறிய பின்னர் பரதமகாராஜா தன் உடலைவிட்டுப் பிரிந்தார்.
பதம் 5.14.46
ய இதம் பாகவத-ஸபாஜிதாவதாத-குண-கர்மணோ ராஜர்ஷேர்
பரதஸ்யானுவரிதம் ஸ்வஸ்தி-அயனம் ஆயஷ்யம் தன்யம் யஸஸ்யம்
ஸ்வர்க்கயாவர்க்யம் வானுஸ்ருணோதி ஆக்யாஸ்யதி அபினந்ததி ச
ஸர்வா ஏவாஸிஷ ஆத்மன ஆஸாஸ்தே ந காஞ்சன பரத இதி
ய:—எவரேனும் ஒருவர்; இதம்—இந்த; பாகவத—உயர்ந்த பக்தர்களினால்; ஸபாஜித—நன்கு வழிபட்டு; அவதாத—தூய; குண—அவரது குணங்கள்; கர்மண:—செயல்கள்; ராஜருஷே:—ராஜரிஷி; பரதஸ்ய—பரத மகாராஜவின்; அணுசரிதம்—சரிதத்தினை; ஸ்வஸ்தி-அயனம்—புண்ணியத்தின் இருப்பிடம்; ஆயுஷ்யம்—அது ஒருவனது ஆயுளை அதிகரிக்கச் செய்கின்றது; தன்யம்—ஒருவனது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்; யஸஸ்யம்—புகழினை அளிக்கும்; ஸ்வர்க்ய—சுவர்க்கம் பெறச்செய்யும் (கர்மீக்களின் இலட்சியம்); அபவர்க்யம்—பௌதீக உலகிலிருந்து விடுதலை அளித்து; பரம்பொருளுடன் ஒருவனை இணையச் செய்யும் (ஞானிகளின் இலட்சியம்); அனுஸ்ருணோதி—பக்தித்தொண்டுப் பாதையைப் பின்பற்றி எப்போதும் கேட்டல்; ஆக்யாஸ்யதி—பிறரின் நன்மைக்காக விளக்கப்படுதல்; அபினந்ததி—பக்தர்கள் மற்றும் பரமபுருஷ பகவானின் குணங்களைப் புகழ்தல்; ச—மேலும்; ஸர்வா:—எல்லாம்; ஏவ—உறுதியாக; ஆஸிஸ:—ஆசிகள்; ஆத்மன:—அவனுக்காக; ஆஸஸ்தே—அவன் எய்துகிறான்; ந—இல்லை; காஞ்சன—எதுவும்; பரத:—எவரிடமிருந்தும்; இதி—இவ்வாறு.
கேட்டல், ஒதுதல் (ஸ்வரணம் கீர்த்தனம்) போன்றவற்றில் ஆர்வமுடைய பக்தர்கள் தொடர்ந்து பரத மகாராஜவின் தூய குணங்களைப் பற்றிப் பேசவும் அவரது செயல்களைப் புகழ்ந்து போற்றவும் செய்கின்றனர். ஒருவன் மிகவும் பணிவுடன் புண்ணியங்கள் அனைத்தும் நிறைந்த பரத மகாராஜாவைப் பற்றி கேட்கவும், ஒதவும் செய்தால் அவனது ஆயுட்காலமும், பௌதீக வளமும் அதிகரிக்கின்றன. ஒருவன் மிக்கப் புகழ் பெற்று சொர்க்கலோகத்தை எளிதில் அடைகிறான் அல்லது பகவானின் தோற்றத்துடன் இணைவதன் மூலம் விடுதலை பெறுகிறான். பரத மகாராஜாவின் செயல்களை கேட்பது, ஒதுவது, புகழ்வதின் மூலம் ஒருவன் விரும்பிய அனைத்தையும் அடையலாம். இவ்வழியே ஒருவன் தனது பௌதீக மற்றும் ஆன்மீக ஆசைகளை நிறைவு செய்து கொள்ளலாம். இவைகளை ஒருவன் பிறரிடமிருந்து கேட்டுப் பெறவேண்டியதில்லை, பரத மகாராஜாவின் செயல்களை ஒருவன் படித்தால் போதும் ஒருவன் தான் விரும்பிய அனைத்தையும் எய்தப் பெறுவான்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “பௌதீக உலகம் இன்பத்தின் மிகப் பெருங்காடு” எனும் தலைப்பை கொண்ட பதினான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.