அத்தியாயம் – 12
ரகூகண மன்னருக்கும் மானுட பரதருக்கும்
இடையே நடந்த உரையாடல்
பதம் 5.12.1
ரஹுகண உவாச
நமோ நம: காரண-விக்ரஹாய
ஸ்வரூப-துச்சீக்குத-விக்ரஹாய
நமோ ‘வதூத த்விஜ-பந்து-லிங்க–
நிகூட-நித்யானுபவாய துப்யம்
ரஹுகண உவாச—மன்னர் ரஹுகணன் கூறினார்; நம—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; நம—வந்தனங்கள்; காரண-விக்ரஹாய——காரணங்களுக்கெல்லாம் மூலகாரணரான பரமபுருஷரிடமிருந்து உடல் பெற்றிருக்கும் ஒருவருக்கு; ஸ்வரூப-துச்சீக்ருத-விக்ரஹாய—தனது உண்மை வடிவத்தினை வெளிப்படுத்தியதின் மூலம் சாத்திரங்களிலுள்ள முரண்பாடுகள் அனைத்தையும் முற்றிலும் நீக்கியவர்; நம—மரியாதைக்குரிய வந்தனங்கள்; அவதூத—ஒ யோகசக்திகளின் தலைவரே; த்விஜ-பந்து-லிங்க—அந்தண குலத்தில் பிறந்தும் அந்தண தர்மங்களை நிறைவேற்றாத ஒருவரின் குணங்களினால்; நிகூட—மறைத்து; நித்ய அனுபவாய—நித்தியத்தன்னுணர்வு பெற்ற அவருக்கு; துப்யம்—உமக்கு.
மன்னர் ரகூகணன் கூறினார்: ஒ, மேன்மைமிக்கவரே, முழுமுதற் கடவுளிடமிருந்து நீர் வேறானவர் அல்லர். உமது உண்மையான ஆத்மாவின் செல்வாக்கினால் சாத்திரங்களிலுள்ள அனைத்து முரண்பாடுகளும் நீக்கப்பட்டன. ஓர் அந்தணரின் நண்பன் என்னும் ஆடையினுள் நீர் உமது உன்னத ஆனந்த நிலையினை மறைத்துக் கொண்டிருக்கின்றீர். எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் செலுத்துகின்றேன்.
பதம் 5.12.2
ஜ்வராமயார்தஸ்ய யதா கதம் ஸத்
நிதாக-தக்தஸ்ய யதா ஹிமாம்ப:
குதேஹ -மானாஹி:-விதஷ்ட-த்ருஷ்டே:
ப்ரஹ்மன் வசஸ் தே ‘ ம்ருதம் ஔஷதம் மே
ஜ்வர—ஜுரத்தின்; ஆமய—பிணியினால்; ஆர்தஸ்ய—துன்புற்ற மனிதனின்; யதா—போன்று; அகதம்—மருந்து; ஸத்—சரியான; நிதாக-தக்தஸ்ய—சூரியனின் வெம்மையினால் உஷ்ணமடைந்த ஒருவனின்; யதா—போன்று; ஹிம-அம்ப—நன்கு குளிர்ந்த நீரினால்; கு-தேஹ—ஜடம் மற்றும் மலஜலம் போன்ற அழுக்குகளினால் நிரம்பப்பெற்ற இந்த உடல்; மான—கர்வத்தின்; அஹி—பாம்பினால்; விதஷ்ட—கடிக்கப்பெற்று; த்ருஷ்டே—ஒருவனது பார்வை; ப்ரஹ்மன்—ஒ, அந்தணர்களிற் சிறந்தோரே; வச—வார்த்தைகள்; தே—உமது; அம்ருதம்—அமிர்தம்; ஒளஷதம்—மருந்து; மே—எனக்கு.
ஒ, அந்தணரில் சிறந்தோனே, எனது உடல் அழுக்குகளினால் நிரப்பப்பட்டிருக்கிறது. எனது பார்வையோ கர்வம் என்னும் பாம்பினால் கடிக்கப்பட்டிருக்கிறது. எனது உலகியற் கருத்துக்களினால் நான் பிணியுற்றிருக்கிறேன். இது போன்ற காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்பவனுக்கு உமது அமிர்த உபதேசங்களே நன்மருந்தாகும். வெம்மை அடைந்துள்ள ஒருவருக்கு அவைதான் குளிர்ந்த நீராகும்.
பதம் 5.12.3
தஸ்மமாத் பவந்தம் மம ஸம்ஸயார்தம்
ப்ரக்ஷ்யாமி பஸ்சாத் அதுனா ஸுபோதம்
அத்யாத்ம-யோக -க்ரதிதம் தவோக்தம்
ஆக்யா ஹி கௌதூஹல-சேதஸோ மே
தஸ்மாத்—ஆகையினால்; பவந்தம்—உமக்கு; மம—எனது; ஸம்ஸய-அர்தம்—எனக்கு இன்னும் தெளிவாகாத பொருள்; ப்ரக்ஷ்யாமி—நான் முன்வைப்பேன்; பஸ்சாத்—அதன்பிறகு; அதுனா—இப்பொழுது; ஸு-போதம்—அதனால் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்; அத்யாத்ம-யோக—தன்னுணர்வு பெறுவதற்கான உயர்ந்த யோக உபதேசம்; க்ரதிதம்—தொகுக்கப்பட்ட; தவ—உமது; உக்தம்—பேச்சு; ஆக்யாஹி—மீண்டும் விளக்கியருள்வீராக; கௌதூஹல-சேதஸ—இக்கூற்றுக்களின் உட்பொருளை அறிந்து கொள்ளும் ஆர்வமுடைய மனமுடையோர்; மே—எனக்கு.
ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி எனக்கு எப்படிப்பட்ட ஐயங்கள் இருந்தபோதிலும் அவற்றைப் பின்னர் உம்மிடம் தெளிவாக்கிக் கொள்கிறேன். அதற்கிடையே தன்னுணர்வு பெறுவதற்காக நீர் எனக்கு உபதேசித்த யோக உபதேசங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. அருள்கூர்ந்து அவற்றை மீண்டும் எளிமையாக விளக்குவீராக. அப்போது தான் என்னால் புரிந்தகொள்ள முடியும். எனது மனம் அறியும் தாகமுடையதாக இருக்கிறது. இதனை நான் தெளிவாகப் புரிந்து கொள்ள விரும்புகிறேன்.
பதம் 5.12.4
யத் ஆஹ யோகேஸ்வர த்ருஷ்யமானம்
க்ரியா பலம் ஸத்-வ்யவஹார-மூலம்
ந ஹி அஞ்ஜஸா தத்த்வ-விமர்ஸனாய
பவான் அமுஷ்மின் ப்ரமதே மனோ மே
யத்—அது; ஆஹ—கூறப்பட்டது; யோக ஈஸ்வர—ஒ, யோக ஈஸ்வரனே; த்ருஷ்யமானம்—மிகத் தெளிவாகத் தெரிகிறது; க்ரியா பலம்—உடல் அங்குமிங்கும் அலைவதினால் உண்டாகும் விளைவு; சிரம உணர்வு; ஸத்—வெளிப்படுதல்; வ்யவஹார-மூலம்—அவரது அடிப்படை மரபு மட்டுமே; ந—இல்லை; ஹி—உறுதியாக; அஞ்ஜஸா—மொத்தமாக அல்லது உண்மையாக; தத்த்வ-விமர்ஸனாய—கலந்துரையாடுவதினால்; உண்மையைப் புரிந்துகொள்வதற்கு; பவான்—உங்கள் சுயம்; அமுஷ்மின்—அந்த விளக்கத்தில்; ப்ரமதே—குழப்பமடைகிறது; மன—மனம்; மே—எனது.
ஒ, யோகேஸ்வரனே, உடல் அங்கும் இங்கும் அலைவதினால் உண்டாகும் சிரமமானது நேரடி உணர்வினால் போற்றப்படுகிறது என்று கூறியிருக்கின்றீர். ஆனால் உண்மையில் சிரமம் என்பது கிடையாது. அது மேலோட்டமாக வெளிப்படுவதாகும். இது போன்ற கேள்வி பதில்களினால் முழுமெய்ப்பொருளைப் பற்றிய முடிவிற்கு ஒருவரும் வர முடியாது. உமது இக்கூற்றினால் எனது மனம் சிறிது குழப்பமடைந்திருக்கிறது.
பதங்கள் 5.12.5 – 5.12.6
ப்ராஹ்மண உவாச
அயம் ஜனோ நாம சலன் ப்ருதிவ்யாம்
ய: பார்திவ: பார்திவ கஸ்யே ஹோதா:
தஸ்யாபி சாங்க்ருயோர் அதி குல்ப—ஜங்கா—
ஜானூரு—மத்யோர—ஸிரோதராம்ஸ:
அம்ஸே ‘தி தார்வீ ஸிபிகா ச யஸ்யாம்
ஸௌவீர—ராஜேதி அபதேஸ ஆஸ்தே
யஸ்மின் பவான் ரூட—நிஜாபிமானோ
ராஜாஸ்மி ஸிந்துஷ்வ இதி துர்மதாந்த:
ப்ராஹ்மண உவாச—அந்தணர் கூறினார்; அயம்—இந்த; ஜன—மனிதன்; நாம—இதுபோன்று போற்றப்படுதல்; சலன்—அசைதல்; ப்ருதிவ்யாம்—மண்ணின் மேல்; ய—அவர்; பார்திவ—நிலத்தின் ஒரு மாற்றமாகும்; பார்திவ—இது போன்று நிலத்தின் உடலினைக் கொண்ட ஒ, மன்னனே; கஸ்ய—தெற்காக; ஹேதோ—காரணம்; தஸ்ய அபி—அவரும் கூட; ச—மேலும்; அங்க்ருயோ—பாதங்கள்; அதி—மேலே; குல்ப—கணுக்கால்; ஜங்கா—கெண்டைக்கால்; ஜானு—மூட்டுகள்; உரு—தொடைகள்; மத்யோர—இடுப்பு; ஸிர-தர—கழுத்து; அம்ஸா—தோள்கள்; அம்ஸே—தோள்; அதி—மீது; தார்வீ—மரத்தினால் செய்யப்பட்ட; ஸிபிகா—பல்லக்கு; ச—மற்றும்; யஸ்யாம்—அதன் மீது; ஸௌவீர-ராஜே—சௌவீர ராஜா; இதி—இவ்வாறு; அபதேஸ—அறியப்படுவது; ஆஸ்தே—இருக்கிறது; யஸ்மின்—அதில்; பவான்—உமது மேலாண்மை மிக்க; ரூட—மேலாக பொறிக்கப்படுகிறது; நிஜ-அபிமான—வீண் பெருமை என்னும் தவறானக் கருத்து கொண்டு; ராஜா-அஸ்மி—நானே அரசன்; ஸிந்துஸீ—சிந்து மாநிலத்தின்; இதி—இவ்வாறு; த்ருமத-அந்த—வீண் பெருமைக்கு மயங்குதல்.
தன்னுணர்வு பெற்ற அந்தண பரதர் கூறினார்; பல்வேறு பௌதீகக் கலப்புக்கள் மற்றும் வரிசை முறை மாற்றங்களுக்கு மத்தியில் பல்வேறு வடிவங்களும் நிலத்தின் மாறுபாடுகளும் இருக்கின்றன. சில காரணங்களுக்காக, இவை பூமியின் மீது நகர்ந்து பல்லக்குத் தூக்கிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு நகராத மாறுபாடுகள் கல் போன்ற ஸ்தூல பௌதீகப் பொருட்களாகும். எது எப்படியிருந்தாலும், பௌதீக உடலானது கல், மண், போன்றவற்றிலிருந்து பாதங்கள், கணுக்கால், கெண்டைக்கால், மூட்டுகள், தொடைகள், இடுப்பு, கழுத்து, தலை என்ற வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. தோள்களின் மீது மரப்பல்லக்கு இருக்கிறது. பல்லக்கினுள் சௌவீர நாட்டின் மன்னர் இருக்கிறார். மன்னரின் உடல் மண்ணின் மற்றொரு மாற்றமாகும். அந்த உடலினுள் மேலாண்மை மிக்க நீர் இருக்கின்றீர். உம்மை சௌவீர நாட்டின் மன்னன் என்று தவறாகக் கருதுகின்றீர்.
பதம் 5.12.7
ஸோச்யான் இமாம்ஸ் த்வம் அதிகஷ்ட-தீனான்
விஷ்ட்யா நிக்ருஹ்ணன் நிரனுக்ரஹோ’ஸி
ஜனஸ்ய கோப்தாஸ்மி விகத்தமானோ
ந ஸோபஸே வ்ருத்த-ஸபாஸு த்ருஷ்ட:
ஸோச்யான்—சோகம்; இமான்—இவர்கள் எல்லோரும்; த்வம்—நீ; அதிகஷ்ட-தீனான்—தங்களது வறுமை நிலையினால்; ஏழைகள் துன்பங்களை அதிகமாக அனுபவிக்கின்றனர்; விஷ்ட்யா—பலாத்காரத்தினால்; நிக்ருஹ்ணன்—பிடித்துக்கொண்டு; நிரனுக்ர-ஹ: அஸி—உனது இதயத்தில் கருணை என்பது இல்லை; ஜனஸ்ய—பொது மக்கள்; கோப்தா-அஸ்மி—நான் பாதுகாப்பவன் (அரசன்); விகத்தமான—தற்பெருமை கொண்டு; ந ஸோபஸே—நீ நல்லவனாகத் தெரியவில்லை; வ்ருத்த-ஸவாஸு—கற்றறிந்த மேன் மக்களின் சமுதாயத்தில்; த்ருஷ்ட—வெட்கமற்ற கொடியவன்.
கூலி ஏதும் பெற்றுக் கொள்ளாமல் உமது பல்லக்கைத் தூக்கும் இந்த அறியாத மனிதர்கள் உனது அநீதியின் காரணமாகத் துன்புறுகின்றனர் என்பது எவ்வாறேனும் உண்மையே ஆகும். அதிகாரத்தினால் அவர்களைப் பல்லக்கு சுமக்கச் செய்துள்ளீர். அவர்களது நிலை உண்மையில் துக்கத்திற்குரியதாகும். இது உனது அன்பில்லாத கொடிய தன்மையை நிரூபிக்கின்றது. இருந்தும் உனது பொய்யான கர்வத்தினால் பொதுமக்களை நாம்தான் பாதுகாக்கின்றோம் என்று நீ நினைக்கின்றாய். இது நகைப்புக்கிடமானதாகும். ஞானத்தில் மிகச் சிறந்த அறிஞர்கள் சபையில் வைத்துப் போற்ற முடியாத முட்டாள் நீ.
பதம் 5.12.8
யதா க்ஷிதௌ ஏவ சராசரஸ்ய
விதாம நிஷ்டாம் ப்ரபவம் ச நித்யம்
தன் நாமதோ ‘ன்யத் வ்யவஹார மூலம்
நிரூப்யதாம் ஸத்-க்ரியயானுமேயம்
யதா—ஆகையினால்; க்ஷிதௌ—மண்ணில்; ஏவ—உறுதியாக; சர அசரஸ்ய—அசையும், அசையா உடல்கள்; விதாம—நாம் அறிகிறோம்; நிஷ்டாம்—அழித்தல்; ப்ரபவம்—தோற்றம்; ச—மேலும்; நித்யம்—இயற்கை விதிகளினால்; தத்—அது; நாமத—நாமத்தினால்; அன்யத்—பிற; வ்யவஹார-மூலம்— பௌதீகச் செயல்களின் காரணம்; நிரூப்யதாம்—உறுதிப்படுத்த விடு; ஸத்-க்ரியயா—உண்மை வேலையினால்; அனுமேயம்—உய்த்துணர்தல்.
பூமியின் மேற்பரப்பில் வாழும் நாம் அனைவரும் பல்வேறு வடிவங்களில் உள்ள உயிர்கள் ஆவோம். நம்மில் சிலர் அசைகின்றவர்களாகவும், சிலர் அசைவற்றவர்களாகவும் இருக்கிறோம். நாம் அனைவரும் வாழ்க்கைக்கு வருகிறோம். சில காலம் வாழ்கிறோம். உடல் மீண்டும் மண்ணில் கலக்கும் போது அழிந்து போகிறோம். நாம் அனைவரும் மண்ணின் பல்வேறு மாற்றங்களேயாவோம். பல்வேறு உடல்களும் செயல்திறன்களும் மண்ணின் மாற்றங்களேயாகும். அவை பெயரளவிலேயே வெளிப்படுகின்றன. எல்லாம் மண்ணிலிருந்து தோன்றி, அழியும் போது மீண்டும் மண்ணிலேயே மறைகின்றன. அதாவது நாம் மண்ணாக இருக்கின்றோம். மண்ணாகவே மறைகின்றோம் என்றும் கூறலாம்.
பதம் 5.12.9
ஏவம் நிருக்தம் க்ஷிதி-ஸப்த- வ்ருத்தம்
அஸன் நிதானாத் பரமாணவோ யே
அவித்யயா மனஸா கல்பிதாஸ் தே
யேஷாம் ஸமூஹேன க்ருதோ விஸேஷ:
ஏவம்—இவ்வாறு; நிருக்தம்—தவறாக விளக்கப்படுகிறது; க்ஷிதி-ஸப்த—”நிலம்” என்னும் வார்த்தை; வ்ருத்தம்—தோற்றம்; அஸத்—உண்மையானதன்று; நிதானாத்—அழிவிலிருந்து; பரம-அணவ—அணுக்கூறுகள்; யே—அனைத்தும்; அவித்யயா—மதிகுறைவுடைய காரணத்தினால்; மனஸா—மனதினில்; கல்பிதா—கற்பிக்கப்பட்ட; தே—அவை; யேஷாம்—அதன்; ஸமூஹேன—மொத்தத்தினால்; க்ருத—செய்யப்பட்டது; விஸேஷ—விசேஷமானவை.
பல்வகை வேறுபாடுகள் பூமியிலிருந்து தோன்றுகின்றன என்று கூறலாம். ஆனால் பிரபஞ்சம் தற்காலிக உண்மையாகத் தோன்றிய போதிலும் அது இறுதியில் உண்மையானது அன்று. நிலமானது உண்மையில் அணுக்கூறுகளின் கலப்பினால் அமைக்கப்பட்டதாகும். ஆனால் இக்கூறுகள் நிலையற்றவை. சில தத்துவவாதிகள் அவ்வாறு கூறியபோதிலும் பிரபஞ்சத் தோற்றத்திற்கு அணு காரணமல்ல, அணுக்களின் அடுக்கு வரிசை அல்லது கலப்பின் விளைவாக உலகில் பல்வகை வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது உண்மையல்ல.
பதம் 5.12.10
ஏவம் க்ருஸம் ஸ்தூலம் அணுர்ப்ரஹத் யத்
அஸச் ச ஸஜ் ஜீவம் அஜீவம் அன்யத்
த்ரவ்ய-ஸ்வபாவாஸ்ய-கால-கர்ம
நாம்னாஜயாவேஹி க்ருதம் த்விதீயம்
ஏவம்—இவ்வாறு; க்ருஸம்—மெலிந்து அல்லது குள்ளமான; ஸ்தூலம்—பருமனான; அணு—சிறிய; ப்ருஹத்—பெரிய; யத்—அது; அஸத்—நிலையற்றது; ச—மேலும்; ஸத்—வெளிப்படுதல்; ஜீவம்—உயிர்கள்; அஜீவம்—உயிரற்ற; ஜடம்; அன்யத்—பிற காரணங்கள்; த்ரவ்ய—இயல்தன்மை; ஸ்வ-பாவ—இயற்கை; ஆஸய—ஒழுங்கமைத்தல்; கால—காலம்; கர்ம—செயல்கள்; நாம்னா—இதுபோன்ற பெயர்களினால்; அஜயா—ஜட இயற்கையினால்; அவேஹி—நீ புரிந்து கொள்ள வேண்டும்; க்ருதம்—செய்யப்பட்டது; த்விதீயம்—இருமை.
இப்பிரபஞ்சத்திற்கு உண்மையான இறுதித் தோற்றம் இல்லாததினால், இதனுள்ளிருக்கும் குள்ளம், வேறுபாடுகள், பருமன், மெலிவு, சிறிது, பெரிது, விளைவு, காரணம், உயிர், அடையாளங்கள் மற்றும் பொருள்கள் அனைத்தும் கற்பனையானவை எனலாம். இவையனைத்தும் மண் என்னும் பொருளிலிருந்து உருவான பாத்திரங்களேயாகும். ஆயினும் அவற்றுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. பொருள், இயற்கை, முற்சார்பு, காலம், செயல் போன்றவற்றினால் இவ்வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. இவையனைத்தும் இயற்கையினால் உருவாக்கப்பட்ட இயந்திரத்தனமான வெளித்தோற்றங்களாகும்.
பதம் 5.12.11
ஜ் ஞானம் விஸுத்தம் ப்ரமார்தம் ஏகம்
அனந்தரம் த்வ அபஹிர் ப்ரஹ்ம ஸத்யம்
ப்ரத்யக் ப்ரஸாந்தம் பகவச்-சப்த-ஸம்ஜ்ஞம்
யத் வாஸுதேவம் கவயோ வதந்தி
ஜ்ஞானம்—பரமஞானம்; விஸுத்தம்—மாசில்லாதது; பரம-அர்தம்—வாழ்வின் இறுதி லட்சியத்தை அளிக்கிறது; ஏகம்—ஒன்றுபட்ட; அனந்தரம்—உள்ளீடின்றி உடைவின்றி; து—மேலும்; அபஹி—வெளிப்பகுதியின்றி; ப்ரஹ்ம—பிரம்மம்; ஸத்யம்—முழு பொய்; ப்ரத்யக்—அகம்; ப்ரஸாந்தம்—யோகிகளால் வணங்கப்படும், அமைதியும், சாந்தமும் நிறைந்த பரம புருஷ பகவான்; பகவத்-ஸப்த-ஸம்ஜ்ஞம்—உயர் உணர்வில் பகவான் என்றும் அறியப்படுவர்; யத்—அது; வாஸுதேவம்—பகவான் கிருஷ்ணர்; வசுதேவரின் மைந்தர்; கவய—கற்றறிந்த அறிஞர்கள்; வதந்தி—கூறுகின்றனர்.
பிறகு, இறுதி, உண்மை என்பது என்ன? இருமையற்ற ஞானமே இறுதி உண்மையாகும். அதனுள் உலகியற் குணங்கள் எனும் மாசு இல்லை. அது நமக்கு விடுதலையளிக்கிறது. அது இரண்டில்லாத ஒன்றேயாகும். எங்கும் பரந்திருப்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஞானத்தின் முதல் உணர்வு பிரம்மமேயாகும். அடுத்து யோகிகள் குறைவின்றி காண்பதற்கு முயலும் பரமாத்மாவினை உணர்வதாகும். இறுதியாக, பரம புருஷரை உணர்கின்ற பரமஞானத்தின் முழுவுணர்வாகும். கற்றறிந்த அறிஞர்கள் அனைவரும் வாசுதேவரை பிரம்மத்திற்கும், பரமாத்மாவிற்கும் மற்றும் பிறர்க்கும் ஆதாரமானவர் என்று விளக்குகின்றார்.
பதம் 5.12.12
ரஹுகணைதத் தபஸா ந யாதி
ந சேஜ்யயா நிர்வபணாத் க்ருஹாத் வா
ந ச்சந்தஸா நைவ ஜலாக்னி-ஸுர்யைர்
விநா மஹத்-பாத-ரஜோ-‘பிஷேகம்
ரகூகண—ஒ, மன்னன் ரகூகணனே; ஏதத்—இந்த ஞானம்; தபஸா—கடுமையான தவம் மற்றும் விரதங்களினால்; ந யாதி—வெளிப்படுத்தப்படுவதில்லை; ந—இல்லை; ச—மேலும்; இஜ்யயா—திருமூர்த்தத்தினை மிக விமரிசையாக வணங்குவதினால்; நிர்வபணாத்—அல்லது உலகக் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றி; சந்தியாசத்தினை மேற்கொள்ளல்; க்ருஹாத்—இல்லற வாழ்க்கையின் ஒழுங்குமுறை; வா—அல்லது; ந—இல்லை; சந்தஸா—பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தல் அல்லது வேத இலக்கியங்களைக் கற்றல்; ந ஏவ—இல்லை; ஜல-அக்னி-ஸுர்யை—தண்ணீர், நெருப்பு, சுட்டெரிக்கும் சூரிய வெயில் போன்றவற்றில் தன்னை வைத்துக் கொள்வதின் மூலம் மேற்கொள்ளப்படும் கடுமையான தவங்களினால்; விநா—இன்றி; மஹத்—சிறந்த பக்தர்களின்; பாத-ரஜ—தாமரைத் திருவடிகளின் தூசு; அபிஷேகம்—உடல் முழுதும் பூசிக் கொள்ளுதல்.
அன்பார்ந்த மன்னர் ரகூகணனே, ஒருவன் தனது உடல் முழுதும் ஒரு சிறந்த பக்தனின் தாமரைத் திருவடிகளிலுள்ள தூசியினைப் பூசிக்கொள்ளும் சந்தர்ப்பம் பெறாது முழு மெய்ப்பொருளை அறிந்து கொள்ள முடியாது. பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதினாலோ, இல்லற வாழ்க்கையின் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றுவதினாலோ, வானப்பிரஸ்த வாழ்க்கைக்காக வீட்டைத் துறந்து செல்வதினாலோ, துறவறம் மேற்கொள்வதினாலோ, கடுமையான குளிரில் நீரில் மூழ்கி இருத்தல், கோடை வெம்மையில் நெருப்பின் மத்தியில் இருத்தல் போன்ற கடுமையானத் தவங்களை மேற்கொள்வதினாலோ ஒருவனால் முழு மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள முடியாது. முழு மெய்ப்பொருளை அறிந்து கொள்வதற்கு பிற செயல்முறைகளும் உள்ளன. ஆயினும் ஒரு சிறந்த பக்தனின் கருணையைப் பெற்றவனுக்கே முழு மெய்ப்பொருள் வெளிப்படுகிறது.
பதம் 5.12.13
யத்ரோத்மஸ்லோக-குணானுவாத:
ப்ரஸ்தூயதே க்ராம்ய-கதா-விகாத:
நிஷேவ்யமாணோ ‘னுதினம் முழுகே ‘ஷார்
மதிம் ஸதீம் யச்சதி வாஸுதேவ
யத்ர—அந்த இடத்தில் (மேன்மையான பக்தர்கள் இருக்குமிடம்); உத்தம-ஸ்லோக-குண-அனுவாத—முழுமுதற் கடவுளின் லீலைகளையும், பெருமைகளையும் பற்றிய கலந்துரையாடல்; ப்ரஸ்தூயதே—வைக்கப்படுகின்றது; க்ராம்ய-கதா-விகா-த—உலக விஷயங்களைப் பற்றி அங்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் இல்லாத காரணத்தினால்; நிஷேவ்யமாண—மிகவும் கவனமாகக் கேட்கப்பட்டு; அனுதினம்—அனுதினமும்; முழுகே’ஷா—பௌதீகச் சிக்கலிலிருந்து வெளிவர தீவிரமாக இருப்பவர்களின்; மதிம்—தியானம்; ஸதிம்—தூய்மையும் எளிமையும்; யச்சதி—மாறுகிறது; வாஸுதேவே—பகவான் வாசுதேவரின் தாமரைத் திருவடிகளுக்கு.
இங்கே குறிப்பிடப்படும் தூய பக்தன் யாவர்? தூய பக்தர்களின் கூட்டத்தில் உலக விஷயங்களான அரசியல், சமூகவியல் பற்றிய கலந்துரையாடல் பற்றிய கேள்விக்கே இடமில்லை. தூய பக்தர்களின் கூட்டத்தில் முழுமுதற் கடவுளின் குணங்கள், வடிவங்கள், லீலைகள் பற்றிய கலந்துரையாடல் மட்டுமே இடம் பெறும். அவரே முழு கவனத்துடன் போற்றி வளர்க்கப்படுகிறார். தூய பக்தர்களின் கூட்டத்தில் இவற்றை மரியாதையுடன் தொடர்ந்து கேட்பதினால் முழு மெய்ப்பொருளுடன் இணைய வேண்டும் என்று விரும்புபவன் கூட அந்த எண்ணத்தைக் கைவிட்டு படிப்படியாக வாசுதேவரின் தொண்டில் பற்றுடையவனாகிறான்.
பதம் 5.12.14
அஹம் புரா பரதோ நாம ராஜா
விமுக்த த்ருஷ்ட-ஸ்ருத-ஸங்க-பந்த:
ஆராதனம் பகவத தமானோ
ம்ருகோ ‘பவம் ம்ருக-ஸங்காத் ததார்த:
அஹம்—நான்; புரா—முன்னர் (எனது முந்தைய பிறவியில்); பரத நாம ராஜா—மகாராஜா பரதன் என்னும் பெயருடைய மன்னர்; விமுக்த—இருந்து விடுதலை பெற்று; த்ருஷ்ட-ஸ்ருத—நேரடித் தொடர்பின் மூலம் தனிப்பட்ட அனுபவத்தினால் அல்லது வேதங்களில் இருந்து பெற்ற ஞானத்தினால்; ஸங்க-பந்த—தொடர்பினால் அடிமையாகி; ஆராதனம்—வழிபடுதல்; பகவத—முழுமுதற் கடவுளான வாசுதேவரை; தமான—எப்போதும் செய்து; ம்ருக-அபவம்—நான் ஒருவன் ஆனேன்; ம்ருக-ஸங்காத்—ஒரு மானுடன் தான் கொண்ட நெருங்கிய தொடர்பினால்; ஹத-அர்த—பக்தித் தொண்டு செய்வதற்கான ஒழுங்குமுறை விதிகளைப் புறக்கணித்தல்.
எனது முற்பிறப்பில் நான் பரத மன்னர் என்று அறியப்பட்டிருந்தேன். உலகப் பற்றிலிருந்து அனுபவரீதியாக முற்றிலும் விடுபட்டு மனநிறைவோடு இருந்தேன். வேதங்களைப் பற்றிய எனது அறிவும் இதற்குத் துணை நின்றது. மன நிறைவினை வேதங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட நேர்முக மறைமுக அனுபவங்களினால் பௌதீகச் செயல்களில் இருந்து முற்றிலும் பற்றறுத்த நிலையினை எய்தியிருந்தேன். நான் பகவானின் தொண்டில் முழுவதும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் எனது துரதிர்ஷ்டம் காரணமாக நான் ஒரு சிறிய மான் குட்டியிடம் மிகுந்த பாசமுடையவனாகிவிட்டேன். ஆனால் எனது ஆன்மீகக் கடமைகளை நான் புறக்கணித்தேன். மான் மீது நான் வைத்திருந்த மிகுந்த பாசத்தின் காரணமாக எனது அடுத்த பிறவியில் ஒரு மானின் உடலை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
பதம் 5.12.15
ஸா மாம் ஸ்ம்ருதிர் ம்ருக-தேஹே ‘பி வீர
க்ருஷ்ணார்சன-ப்ரபாவ நோ ஜஹாதி
அதோ அஹம் ஜன-ஸங்காத் அஸங்கோ
விஸங்கமானோ ‘ விவ்ருதஸ் சராமி
ஸா—அது; மாம்—எனது; ஸ்ம்ருதி—எனது முற்பிறப்பு நிகழ்ச்சிகளின் நினைவு; ம்ருக-தேஹே—ஒரு மானின் உடலில்; அபி—இருந்தபோதிலும்; வீர—ஒ, சிறந்த வீரனே; க்ருஷ்ண-அர்சன-ப்ரபாவ—கிருஷ்ணருக்குச் செய்த நேர்மையான தொண்டினால் தோன்றுகிறது; நோ ஜஹாதி—துறக்கவில்லை; அதோ—ஆகையினால்; அஹம்—நான்; ஜன-ஸங்காத்—சாதாரண மனிதர்களின் தொடர்பிலிருந்து; அஸங்க—முற்றிலும்; விஸங்கமான—அஞ்சி; அவிவ்ருத—பிறரால் கவனிக்கப்படாது; சராமி—நான் இங்குமங்கும் அலைகிறேன்.
எனது அன்பிற்குரிய வீர மன்னனே, பகவானுக்கு நான் முன்பு செய்த சீரிய தொண்டினால் ஒரு மானின் உடலில் இருந்தபோதிலும் எனது கடந்தகால வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் என்னால் நினைவு கூற முடிந்தது. கடந்து போன வீழ்ச்சியினைப் பற்றி நான் நன்கறிந்த காரணத்தினால் நான் எப்போதும் என்னை சாதாரண மனிதர்களின் தொடர்பிலிருந்து தனித்தே வைத்திருந்தேன். அவர்களது சீர்குலைந்த உலகத் தொடர்பிற்கு அஞ்சி நான் பிறர் கவனிக்காத வண்ணம் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கின்றேன்.
பதம் 5.12.16
தஸ்மான் நரோ ‘ஸங்க-ஸுஸங்க-ஜாத –
ஜ்ஞானா ஸினேனஹைவ விவ்ருக்ண-மோஹ:
ஹரிம் தத்-ஈஹா-கதன-ஸ்ருதாப்யம்
வப்த-ஸ்ம்ருதிர்யாதி அதிபாரம் அத்வன:
தஸ்மாத்—இக்காரணத்திற்காக; நர—ஒவ்வொரு மனிதனும்; அஸங்க—உலகியல் மக்களிடமுள்ள தொடர்பினை அறுத்து; ஸு-ஸங்க—பக்தர்களின் தொடர்பினால்; ஜாத—உருவான; ஜ்ஞான அஸினா—ஞான வாளினால்; இஹ—இப்பௌதீக உலகில்; ஏவ—கூட; விவ்ருக்ன-மோஹ—அவனது மோகம் முற்றிலும் துண்டு துண்டாக்கப்படும்; ஹரிம்—முழுமுதற் கடவுள்; தத்-ஈஹா—அவரது செயல்களின்; கதன-ஸ்தாப்யாம்—கேட்டல் நினைத்தல் என்னும் இரு முறைகளினால்; வப்த-ஸ்ம்ருதி—இழந்த உணர்வு மீண்டும் பெறப்படுகிறது; யாதி—எய்துகிறான்; அதிபாரம்—இறுதி இலட்சியத்தை; அத்வன—வீடுபேறு பெற்று, முழுமுதற் கடவுளை அடையும் பாதையின்.
மேன்மை மிக்க சிறந்த பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பின் மூலம் அனைவரும் ஞானத்தின் நிறைவினை எய்தலாம். அந்த ஞான வாளினால் உலகத் தொடர்பின் மீதான மோகத்தினை துண்டு துண்டாக வெட்டிச் சாய்க்கலாம். பக்தர்களின் தொடர்பின் மூலம் கேட்டல் நினைத்தல் (ஸ்ரவணம் கீர்தனம்) என்பவற்றினால் பகவானின் தொண்டில் ஒருவன் ஈடுபடலாம். இவ்வாறு ஒருவன் செயலற்றிருக்கும் தனது கிருஷ்ண உணர்வினை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் கிருஷ்ண உணர்வினை வளர்ப்பதில் ஈடுபாடு கொள்வதின் மூலம் இல்வாழ்க்கையிலேயே வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளையும் அடையலாம்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “ரகூகண மன்னருக்கும் மானுட பரதருக்கும் இடையே நடந்த உரையாடல்” எனும் தலைப்பை கொண்ட பன்னிரெண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.