அத்தியாயம் – 11
ரகூகண மன்னனுக்கு மானுட பரதரின் உபதேசம்
பதம் 5.11.1
ப்ராஹ்மண உவாச
அகோவித: கோவித-வாத-வாதான்
வதஸி அதா நாதி-விதாம் வரிஷ்ட:
ந ஸுரயோ ஹி வ்யவஹாரம் ஏனம்
தத்த்வாவமர்ஸேன ஸஹாமனந்தி
ப்ராஹ்மண உவாச—அந்தணர் கூறினார்; அகோவித—அனுபவமின்றி; கோவித-வாத-வாதான்—அனுபவசாலிகளைப் போல் பேசுவது; வதஸி—நீ பேசுகின்றாய்; அதோ—ஆகையினால்; ந—இல்லை; அதி-விதாம்—நன்கு அனுபவப்பட்டவர்களின்; வரிஷ்ட—மிக முக்கியமான; ந—இல்லை; ஸுரய—இப்புத்திசாலி மனிதர்களின்; ஹி—உண்மையில்; வ்யவஹாரம்—இம்மைக்குரியது மற்றும் சமூக நடத்தை; ஏனம்—இந்த; தத்த்வ—உண்மையின்; அவமர்ஸேன—புத்தியினால் பெறும் நியாயத் தீர்ப்பு; ஸஹ—உடன்; ஆமனந்தி—உரையாடல்.
அந்தணராகிய பரதர் கூறினார்; அன்பிற்குரிய அரசனே! உன்னிடம் அனுபவமில்லை என்றபோதிலும் நீ, ஒர் அனுபவசாலியைப் போன்று பேச முயற்சிக்கின்றாய். இதனால் உன்னை அனுபவசாலியாகக் கருத முடியாது. ஒர் அனுபவசாலி உன்னைப் போல் எஜமானுக்கும் சேவகனுக்கும் உள்ள உறவு பற்றியோ அல்லது இன்ப துன்பங்களைப் பற்றியோ பேசமாட்டான். இவையெல்லாம் புறச் செயல்களாகும். முழுமெய்ப்பொருளாகக் கருதப்படும் வளர்ச்சியும் அனுபவமும் பெற்ற ஒருவன் இவ்வாறு ஒருக்காலும் பேச மாட்டான்.
பதம் 5.11.2
ததைவ ராஜ னன் உரு-கார்ஹமேத
விதான-வித்யோரு-விஜ்ரும்பிதேஷு
ந வேத-வாதேஷு ஹி தத்த்வ-வாத:
ப்ராயேண ஸுத்தோ நு சகாஸ்தி ஸாது:
ததா—ஆகையினால்; ஏவ—உண்மையில்; ராஜன்—ஓ, மன்னனே; உரு-கார்ஹ-மேத—பௌதீக இல்வாழ்க்கைக்குத் தொடர்புடைய சடங்குகள்; விதான-வித்யா—ஞானத்தில் அது விரிவடைகிறது; உரு—மிகச் சிறப்பாக; விஜ்ரும்பிதேஷு—விருப்பமுடையோர் மத்தியில்; ந—இல்லை; வேத-வாதேஷு—வேத சுலோகங்களைப் பேசுபவன்; ஹி—உண்மையில்; தத்த்வ-வாத—ஆன்மீக விஞ்ஞானம்; ப்ராயேண—பெரும்பாலும் எப்போதும்; ஸுத்த—அனைத்து மாசுடையச் செயல்களிலிருந்தும் விடுதலை; நு—உண்மையில்; சகாஸ்தி—தோன்றுகிறது; ஸாது—பக்தித் தொண்டில் முன்னேறிய ஒருவன்.
அன்பார்ந்த மன்னனே, தலைவனுக்கும். தொண்டனுக்கும் அரசனுக்கும், குடிமகனுக்கும் இடையே இருக்கும் உறவினைப் பற்றிப் பேசுவது உலகியல் சார்ந்தது ஆகும். வேதங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் உலகச் செயல்களில் விருப்பமுடையோர் வேள்விகளைச் செய்வதில் எண்ணமுடையோராகவும், நடப்பு நிலையில் நம்பிக்கையுடையோர்களாகவும் இருக்கின்றனர். இவர் போன்ற மனிதர்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் நிச்சயம் வெளிப்படுத்தப்படுவதில்லை.
பதம் 5.11.3
ந தஸ்ய தத்த்வ-க்ரஹணாய ஸாக்ஷாத்
வஸீர் அபி வாச: ஸமாஸன்
ஸ்வப்னே நிருக்த்யா க்ருஹேமேதி-ஸௌக்யம்
ந யஸ்ய ஹேயானுமிதம் ஸ்வயம் ஸ்யாத்
ந—இல்லை; தஸ்ய—அவனது; (வேதங்களைக் கற்கும் மாணவன்); தத்த்வ-க்ரணாய—வேத ஞானத்தின் உண்மை நோக்கத்தினை அறிந்து கொள்வதற்காக; ஸாக்ஷாத்—நேரடியாக; வரீயஸீ—மிகவுயர்ந்த; அபி—இருந்தபோதிலும்; வாச—வேதங்களின் வார்த்தைகள்; ஸமாஸன்—போதுமானதாக ஆதல்; ஸ்வப்னே—ஒரு கனவில்; நிருக்த்யா—உதாரணத்தினால்; க்ருஹ-மேதி-ஸௌக்யம்—பௌதீக உலகில் மகிழ்ச்சி; ந— இல்லை; யஸ்ய—அவனது; ஹேய அனுமிதம்—தாழ்ந்ததென முடிவு செய்யப்படும்; ஸ்வயம்—தானாக; ஸ்யாத்—ஆதல்.
கனவு என்பது பொய்யானது முக்கியத்துவமில்லாதது என்று ஒருவனுக்குத் தெரியவருகிறது. அதுபோல் இப்பிறப்பிலோ, இவ்வுலகிலோ அல்லது மேல் உலகிலோ உள்ள உலகியல் இன்பமானது முக்கியத்துவமற்றது என்று இறுதியில் உணர்கிறான். இதனை அவன் உணரும்பொழுது வேதங்கள் கூறுகின்ற நெறிமுறைகள் கூட அத்துணை உறுதியாக அவன் மனத்தில் இடம் பெறுவதாகக் கூற முடியாது.
பதம் 5.11.4
யவான் மனோ ரஜஸா பூருஷஸ்ய
ஸத்த்வேன வா தமஸா வானுருத்தம்
சேதோபிர் ஆகூதிபிர் ஆதனோதி
நிரங்குஸம் குஸலம் சேதரம் வா
யாவத்—எதுவரை; மன—மனம்; ரஜஸா—இரஜோ குணத்தினால்; பூருஷஸ்ய—உயிர்வாழிகள்; ஸத்த்வேன—சத்துவ குணத்தினால்; வா—அல்லது; தமஸா—தமோகுணத்தினால்; வா—அல்லது; அனுருத்தம்—கட்டுப்படுத்தி; சேதோபி—அறிவுப் புலன்களினால்; ஆகூதிபி—செயற்புலன்களினால்; ஆதனோதி—வரிதல்; நிரங்குஸம்—அங்குசத்தினால் கட்டுப்படுத்தப்படாத யானையினைப் போன்ற சுதந்திரம்; குஸலம்—புண்ணியமான; ச—மேலும்; இதரம்—புண்ணியமற்ற பிற பாவச்செயல்கள்; வா—அல்லது.
எதுவரை, உயிர்ப் பொருளின் மனம், ஜட இயற்கையின் முக்குணங்களினால் (சத்துவ, இரஜோ, தமோ குணங்கள்) மாசுடையதாக இருக்கின்றதோ அது வரை அவனது மனம் சுதந்திரமான கட்டுப்படுத்த முடியாத யானையைப் போன்றே இருக்கின்றது. அது புலன்களை பயன்படுத்துவதின் மூலம் அது தனது புண்ணிய மற்றும் பாவச் செயல்களின் எல்லைகளை விரித்துக் கொள்கிறது. இதன் வினைவு உயிர்கள் தத்தமது செயலுக்கேற்ப இன்ப, துன்பங்களை அனுபவிப்பதற்கும் உலகிலேயே இருக்க வேண்டியதாகிறது.
பதம் 5.11.5
ஸ வாஸனாத்மா விஷயோ பரக்தோ
குண – ப்ரவாஹோ விக்ருத: ஷோடஸாத்மா
பிப்ரத் ப்ருதன்-நாமபி ரூப-பேதம்
அந்தர்-பஹிஷ்த்வம் ச புரைஸ் தனோதி
ஸ—அது; வாஸனா—பல்வேறு ஆசைகளை உடையதாகும்; ஆத்மா—மனம்; விஷய-உபரக்த—பௌதீக இன்பத்தில், புலனுகர்ச்சியில் பற்றுடையதாகும்; குண-ப்ரவாஹ—சத்துவ, இரஜோ, தமோ குணங்களினால் இயக்கப்படுவது; விக்ருத:—காமம் மற்றும் பலவற்றால் மாற்றப்பட்டது; ஷோடஸ-ஆத்மா—பதினாறு பொருட்களில் தலையாயது (ஐந்து பூதப் பொருட்கள், பத்துப் புலன்கள் மற்றும் மனம் ஒன்று); பிப்ரத்—அலைந்து; ப்ருதக் நாமபி—தனிப் பெயர்களுடன்; ரூப-பேதம்—பல்வேறு வடிவங்களைப் பெற்று; அந்த பஹிஷ்ட்லம்—முதல் பிரிவு அல்லது கடைசிப் பிரிவின் குணத்தில்; ச—மேலும்; புரை—பல்வேறு உடல் வடிவங்களுடன்; தனோதி—வெளிப்படுகிறது.
மனமானது பாவபுண்ணியச் செயல்களின் ஆசைகளில் ஆழ்ந்திருப்பதினால் அது இயற்கையாகவே காம, குரோத செயல்களின் மாற்றங்களுக்கும் ஆளாகின்றது. அதாவது மனம் சத்துவ, இரஜோ, தமோ குணங்களினால் இயக்கப்படுகிறது எனலாம். பதினோரு புலன்கள் மற்றும் ஐந்து பௌதீகப் பொருட்கள் சேர்ந்து மொத்தம் பதினாறு உருப்படிகளாகும். இவற்றுள் மனமே தலையானது. தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று பல்வேறு வகையான பிறப்புகளுக்கும் மனமே காரணமாகும். மனம் உயர் நிலையிலோ அல்லது தாழ் நிலையிலோ இருக்கும்பொழுது உயர்ந்த அல்லது தாழ்ந்த உடலை ஏற்றுக் கொள்கிறது.
பதம் 5.11.6
து:கம் ஸுகம் வ்யதிரிக்தம் ச தீவ்ரம்
காலோபபன்னம் பலம் ஆவ்யனக்தி
ஆலிங்க்ய மாயா-ரசிதாந்தராத்மா
ஸ்வ -தேஹினம் ஸம்ஸ்ருதி சக்ர கூட:
து:கம்—பாவச் செயல் காரணமாக வரும் துக்கம்; ஸுகம்—புண்ணியச் செயல் காரணமாக வரும் சுகம்; வ்யதிரிக்தம்—மாயை; ச—மேலும்; தீவ்ரம்—மிகக் கடுமையான; கால-உப்பன்னம்—உரிய காலத்தில் கிடைக்கப் பெறும்; பலம்—பலன்; ஆவ்யனக்தி—உண்டாக்குகிறது; ஆலிங்க்ய—தழுவுதல்; மாயா-ரசித—பரு இயற்கையினால் உருவாக்கப்பட்ட; அந்த-ஆத்மா—மனம்; ஸ்வ-தேஹினம்—உயிர்கள் தமக்குள்; ஸம்ஸ்ருதி—பௌதீக வாழ்வின் செயல், எதிர்ச் செயல்கள்; சக்ர-கூட—சக்கரத்தினுள் உயிர் புகுதற்கு அது காரணமாகிறது.
உயிரின் ஆத்மாவை மூடியிருக்கும் மானுட மனம் அதனைப் பல்வேறு உயிரினங்களில் சுமந்து செல்கிறது. மனதின் உயிர்கள் பௌதீக இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கும் மனமே காரணம் ஆகும். இவ்வாறு மாயை வசப்படுவதினால் மனம் பாவ புண்ணியச் செயல்களையும் அவர்களின் கர்மங்களையும் மேலும் உருவாக்குகிறது. அதனால் கட்டுண்டு விடுகிறது.
பதம் 5.11.7
தாவான் அயம் வ்யவஹார: ஸதாவி:
க்ஷேத்ரஜ்ஞ-ஸாக்ஷ்யோ பவதி ஸ்தூல—ஸுக்ஷ்ம:
தஸ்மான் மனோ லிங்கம் அதோ வதந்தி
குணா குணத்வஸ் ய பராவரஸ்ய
தவான்—அக்காலம் வரை; அயம்—இந்த; வ்யவஹார—செயற்கைப் பதவிகள் (பருத்திருத்தல் அல்லது மெலிந்திருத்தல், அல்லது தேவர்கள் அல்லது மனிதர்களாக இருத்தல்); ஸதா—எப்போதும்; ஆவி—வெளிப்படுகின்ற; க்ஷேத்ர-ஜ்ஞ—உயிர் வாழியின்; ஸாக்ஷ்ய—சான்று; பவதி—இருக்கிறது; ஸ்தூல-ஸுக்ஷ்ம—பருத்தும், மெலிந்தும்; தஸ்மாத்—ஆகையினால்; மன—மனம்; லிங்கம்—காரணம்; அத—இந்த; வதந்தி—அவர்கள் கூறுகின்றனர்; குண அகுணத்வஸ்ய—உலகியல் குணங்களில் ஆழ்ந்திருத்தல் அல்லது அக்குணங்கள் இல்லாதிருத்தல்; பர-அவரஸ்ய—தாழ்ந்த மற்றும் உயர்ந்த பந்தப்பட்ட வாழ்க்கை.
மனமே உயிர்களை இவ்வுலகில் பல்வேறு வகையான உயிரினங்களில் அலையவைக்கின்றது. இதன் மூலம் உயிர், மனிதன், தேவன், பருத்தவன், மெலிந்தவன் போன்ற பல்வேறு வடிவங்களில் இவ்வுலகம் செயல்களை உணர்த்துகிறது. கற்றறிந்த அறிஞர்கள் உடல் ரீதியானத் தோற்றம், அடிமைத்தனம், விடுதலை போன்றவற்றிற்கு மனமே காரணமென்று கூறுகின்றனர்.
பதம் 5.11.8
குணானுரக்தம் வ்யஸனாய ஐந்தோ:
க்ஷேமாய நைர்குண்யம் அதோ மன: ஸ்யாத்
யயதா ப்ரதீபோ க்ருத-வர்திம் அஸ்னன்
ஸிகா: ஸதூமா பஜதி ஹி அன்யதா ஸ்வம்
பதம் ததா குண-கர்மானுபத்தம்
வ்ருத்தீர் மன: ஸ்ரயதே ‘ன்யத்ர தத்த்வம்
குண அனுரக்தம்—இயற்கைக் குணங்களின் மீது பற்று வைத்து; வ்யஸனாய—பௌதீக வாழ்வின் பந்தத்திற்காக; ஐந்தோ—உயிர்வாழிகள்; க்ஷேமாய—இறுதி நலனுக்காக; நைர்குண்யம்—ஜட இயற்கைக் குணங்களினால் பாதிக்கப்படாது; அதோ—இவ்வாறு; மன—மனம்; ஸ்யாத்—ஆகிறது; யதா—அதுபோன்று; ப்ரதீப—ஒரு விளக்கு; க்ருதவர்திம்—சுத்தம் செய்த வெண்ணெயில் இருக்கும் திரி; அஸ்னன்—எரிந்து கொண்டு; ஸிகா—சுடர்; ஸாதுமா—புகையுடன்; பஜதி—அனுபவிக்கிறது; ஹி—உறுதியாக; அன்யதா—மாறாக; ஸ்வம்—அதன் உண்மையான; பதம்—நிலை; ததா—ஆகையினால்; குண கர்ம அனுபத்தம்—ஜட இயற்கையினாலும் பௌதீகச் செயல்களின் விளைவுகளினாலும் கட்டுப்படல்; வ்ருத்தீ—பல்வேறு ஈடுபாடுகள்; மன—மனம்; ஸ்ரயதே—அடைக்கலம் புகுதல்; அன்யத்ர—மாறாக; தத்த்வம்—அதன் உண்மை நிலை.
உலகின் புலனுகர்ச்சியில் உயிர்களின் மனம் ஆழ்ந்திருக்கும் பொழுது அது அவனது பந்தப்பட்ட வாழ்க்கை மற்றும் உலகச் சூழ்நிலையின் துன்பம் போன்றவற்றைக் கொண்டுவருகிறது. ஆயினும் மனம் உலகியல் இன்பத்தின் மீது பற்றற்று இருக்கும்பொழுது அது விடுதலைக்குக் காரணமாகிறது. விளக்குத்திரி முறையாக எரியவில்லையென்றால் விளக்குப் புகை படிந்து கறுப்பாகிறது. மாறாக விளக்கில் நிறைய நெய்விட்டு திரி ஒழுங்காக எரிந்தால் எங்கும் தெளிவான ஒளி கிடைக்கின்றது. அதுபோல் மனம் பௌதீகப் புலனுகர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் பொழுது அது துன்பத்திற்குக் காரணமாகிறது. அது பௌதீகப் புலனுகர்ச்சியில் பற்றறுக்கும் பொழுது கிருஷ்ண உணர்வின் உண்மை ஒளியை அது வெளிப்படுத்துகிறது.
பதம் 5.11.9
ஏகாதஸாஸன் மனஸோ ஹி வ்ருத்தய
ஆகூதய: பஞ்சதியோ ‘பிமான:
மாத்ராணி கர்மாணி புரம் ச தாஸாம்
வதந்தி ஹைகாதஸ விர பூமீ:
ஏகதாஸ—பதினோரு; ஆஸன்—இங்கிருக்கின்றன; மனஸ—மனதின்; ஹி—உறுதியாக; வ்ருத்தய—செயல்கள்; ஆகூதய—செயற்புலன்கள்; பஞ்ச—ஐந்து; திய—அறிவுப்புலன்கள்; அபிமான—வீண் ஆணவம்; மாத்ராணி—பல்வேறு புலனுகர்சிப் பொருட்கள்; கர்மாணி—பல்வேறு பௌதீகச் செயல்கள்; புரம் ச—உடல் சமுதாயம், தேசம், குடும்பம் அல்லது பிறந்த இடம்; தாஸாம்—அச்செயல்களின்; வதந்தி—அவர்கள் கூறுகின்றனர்; ஹ—ஒ; ஏகதாஸ—பதினோரு; வீர—ஒ, வீரனே; பூமீ—செயற்களங்கள்.
செயற்புலன்கள் ஐந்தும், அறிவுப் புலன்கள் ஐந்தும் இருக்கின்றன. வீணாக ஆணவமும் இருக்கிறது. இவ்வாறு மனதின் செயல்களுக்குப் பதினோரு உருப்படிகள் இருக்கின்றன. ஒ, விதுரனே, புலனுகர்ச்சிப் பொருட்கள் (ஒலி, ஊறு போன்றவை) உறுப்புக்களின் செயல்கள் (கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது) பல்வேறு வகையான உடல்கள், சமுதாயம், நண்பர், நபர்கள் போன்றவை கற்றறிந்த அறிஞர்களால் மனதின் செயல்களுக்கானச் செயற்களங்களாகக் கருதப்படுகின்றன.
பதம் 5.11.10
கந்தாக்ருதி-ஸ்பர்ஷ-ரஸ-ஸ்ரவான்ஸி
விஸாக்-ரதி-அர்தி-அபிஜல்ப-ஸில்பா:
ஏகாதஸம் ஸ்கரணம் மமேதி
ஸய்யாம் அஹம் த்வாதஸம் ஏக ஆஹு:
கந்த—நாற்றம்; ஆக்ருதி—வடிவம்; ஸ்பர்ஷ—தொடுதல் (ஊறு); ரஸ—சுவை; ஸ்ரவம்ஸி—மற்றும் ஓசை; விஸர்க—வெளியேற்றுவது; ரதி—பாலியல் உறவு; அர்தி—செல்லுதல்; அபிஜல்ப—பேசுதல்; ஸில்பா—பற்றிக் கொள்ளுதல் அல்லது விட்டுக் கொடுத்தல்; ஏகதாஸம்—பதினோரு; ஸ்வீகரணம்—ஏற்றுக் கொள்ளுதல்; மம—எனது; இதி—இவ்வாறு; ஸய்யாம்—இந்த உடல்; அஹம்—நான்; த்வாதஸம்—பன்னிரண்டாவது; ஏகே—சிலர்; ஆஹு—கூறியிருக்கின்றனர்.
ஓசை, ஊறு, வடிவம், சுவை, நாற்றம் என்பவை அறிவுப்புலன்கள் ஐந்தின் பொருட்களாகும். பேசுதல், தொடுதல், அசைதல், வெளியேற்றுதல், பாலியல் உறவு கொள்ளுதல் போன்றவை செயற்புலன்களின் பொருட்களாகும். இதைத்தவிர மற்றொரு கருத்து இருக்கிறது. அதன் மூலம் ஒருவன் “இது எனது உடல், இது எனது சமுதாயம், இது எனது குடும்பம், இது எனது நாடு” என்று சிந்திக்கிறான். இதுவே பதினோராவது செயலாகும். அதாவது மனதினுடையதாகும். வீண் ஆணவம் என்று அழைக்கப்படுகிறது. சில தத்துவ அறிஞர்களின் கருத்தின்படி இது பன்னிரண்டாவது செயலாகும். இதன் செயற்களம் உடலாகும்.
பதம் 5.11.11
தரவ்ய- ஸ்வபாவாஸய-கர்ம-கானவர்
ஏகாதஸாமீ மனஸோ விகாரா:
ஸஹஸ்ரஸ:ஸதஸ: கோடிஸஸ் ச
க்ஷேத்ரஜ்ஞதோ ந மிதோ ந ஸ்வத: ஸ்யு
த்ரவ்ய—பௌதீகப் பொருட்கள்; ஸ்வ-பாவ—வளர்ச்சிக்கான காரணமாக இருக்கும் இயற்கையினால்; ஆஸய—பண்பாட்டினால்; கர்ம—கர்மத்தினால்; காலை—காலத்தினால்; ஏகாதஸ—பதினோரு; அமீ—இவையெல்லாம்; மனஸ—மனதின்; விகார—விகாரங்களாகும்; ஸஹஸ்ரஸ—ஆயிரக்கணக்கில்; ஸதஸ:—நூற்றுக்கணக்கில்; கோடிஸஸ் ச—மற்றும் கோடிக்கணக்கில்; க்ஷேத்ர-ஜ்ஞத—ஆதி முழுமுதற் கடவுளிடமிருந்து; ந—இல்லை; மித—ஒன்று மற்றொன்று; ந—இல்லை; ஸ்வத—அவற்றிலிருந்து; ஸ்யு—இருக்கின்றன.
பௌதீகப் பொருட்கள், இயற்கை, மூலகாரணம், பண்பாடு, விதி, காலம் போன்றவை எல்லாம் உலகியற் காரணங்களாகும். இக்காரணங்களினால் கிளர்ச்சியடையும் பொழுது, இப்பதினோரு செயல்களும் நூற்றுக்கணக்கான செயல்களாகும், அடுத்து ஆயிரக்கணக்கான செயல்களாகவும் பின்னர் கோடிக்கணக்கான செயல்களாகவும் மாறுகின்றன. ஆனால் இம்மாற்றங்கள் எல்லாம் ஒன்றோடொன்று கலப்பதினால் தாமே நடைபெறுவதில்லை. மாறாக அவை முழுமுதற் கடவுளின் கட்டளையின் கீழ் இருக்கின்றன.
பதம் 5.11.12
க்ஷேத்ரஜ்ஞ ஏத மனஸோ விபூதிர்
ஜீவஸ்ய மாயா-ரசிதஸ்ய நித்யா:
ஆவிர்ஹிதா: க்வாபி திரோஹிதாஸ் ச
ஸுத்தோ விசஷ்டே ஹி அவிஸுத்த கர்து:
க்ஷேத்ர-ஜ்ஞ—தனிப்பட்ட ஆத்மா; ஏதா—இவையெல்லாம்; மனஸ—மனதின்; விபூதி—பல்வேறு செயல்களாகும்; ஜீவஸ்ய—உயிர்வாழியின்; மாயா-ரசிதஸ்ய—பௌதீகச் சக்தியின் புறச்சக்தியினால் உருவாக்கப்பட்டது; நித்யா—நித்தியமானது; அவிர்ஹிதா—சிலநேரம் வெளிப்படுத்தப்பட்டது; க்வாபி—வேறெங்கோ; திரோஹிதா ச—வெளிப்படுத்தப்பட்டதில்லை; சுத்த—தூய்மையான; விசஷ்டே—இதனைக் காண்கிறான்; ஹி—நிச்சயமாக; அவிசுத்த—தூய்மையற்ற; கர்து—செய்பவனின்.
கிருஷ்ண உணர்வினை இழந்த தனிப்பட்ட ஆத்மா புறச்சக்தியினால் தன்னுடைய மனதில் ஏராளமான யோசனைகளையும், செயல்களையும் உருவாக்குகின்றது. இத்தகைய செயல்கள் காலமாக தொடர்ந்து நித்தியமாக இருக்கின்றன. சில நேரங்களில் இவை விழிப்பு நிலையிலும், கனவு நிலையிலும் வெளிப்படுகின்றன. ஆனால் ஆழ்ந்த நித்திரையில் (உணர்வின்றி) அல்லது சமாதி நிலையில் இவை மறைகின்றன. இப்பிறவியிலேயே விடுதலை பெற்றவன் (ஜீவன் முக்தன்) இவற்றையெல்லாம் தெளிவாக தனது சிந்தனையில் காண்கிறான்.
பதங்கள் 5.11.13 – 5.11.14
க்ஷேத்ரஜ்ஞ ஆத்மா புருஷ புராண:
ஸாக்ஷாத் ஸ்வயம் ஜயோதிர் அஜ: பரேஸ:
நாராயணோ பகவான் வாஸுதேவ:
ஸ்வ-மாயயாத்மனி அவதீயமான:
யதானில: ஸ்தாவர ஜங்கமானாம்
ஆத்ம-ஸ்வரூபேண நிவிஷ்ட ஈஸேத்
ஏவம் பரோ பகவான் வாஸுதேவ:
க்ஷேத்ரஜ்ஞ ஆத்மேதம் அனுப்ரவிஷ்ட:
க்ஷேத்ர-ஜ்ஞ—முழுமுதற் கடவுள் பதம் 12ல் உள்ள க்ஷேத்ரஜ்ஞ என்னும் வார்த்தை உயிர்வாழியைக் குறிப்பிடுகிறது இச்சுலோகத்திலுள்ள க்ஷேத்ரஜ்ஞ பரமபுருஷரைக் குறிப்பிடுகிறது; ஆத்மா-சர்வவியாபி—எங்கும் இருப்பவர்; புருஷ—கட்டுப்பாடற்ற நெறியாளர், அளவற்ற சக்தி உடையவர்; புராண—ஆதியானவர்; ஸாக்ஷாத்—அதிகாரம் பெற்றவர்களிடமிருந்து கேட்பதின் மூலமும் நேரடியாகவும் உணரலாம்; ஸ்வயம்—சுயமாக; ஜ்யோதி—அவர் உடலின் ஒளிக் கதிர்களை வெளிப்படுத்தி (பிரம்ம ஜோதி); அஜ—பிரப்பற்றவர்; பரேஸ—முழுமுதற் கடவுள்; நாராயண—உயிர்களின் உறைவிடம்; பகவான்—ஆறு வளங்களும் நிறைந்த முழுமுதற் கடவுள்; வாசுதேவ—வெளிப்பட்ட வெளிப்படாத அனைத்திற்கும் அவரே அடைக்கலமாவார்; ஸ்வ-மாயா—அவரது சுய சக்தியினால்; ஆத்மனி—அவரது சுயத்தில் அல்லது சாதாரண உயிர்களிடத்தில்; அவதீயமான—நெறியாளராக இருக்கின்றார்; யதா—அது போன்று; அனில—காற்று; ஸ்தாவர—அசையாத உயிர்களின்; ஜங்கமானாம்—மற்றும் அசையும் உயிர்களின்; ஆத்ம-ஸ்வரூபேண—அவரது விரிவான பரமாத்மாவினால்; நிவிஷ்ட—புகுந்து; ஈஸேத்—கட்டுப்படுத்துகிறார்; ஏவம்—இவ்வாறு; பர—உன்னதமான; பகவான்—முழுமுதற் கடவுள்; வாஸுதேவர்—அனைவரின் அடைக்கலம்; க்ஷேத்ரஜ்ஞ—க்ஷேத்ரக்ஞன் என்று அறியப்படுபவர்; ஆத்மா—மூலசக்தி; இதம்—இப்பௌதீக உலகம்; அனுப்ரவிஷ்ட—உள் நுழைகிறார்.
இருவகையான “க்ஷேத்ரஜ்ஞன்” உள்ளன. மேலே விளக்கப்பட்டிருந்த உயிர் ஒன்று. மற்றது முழுமுதற் கடவுள் அவர் பின் வருமாறு விளக்கப்படுகிறார். எங்கும் பரவியிருக்கும் அவரே படைப்பிற்குக் காரணமாவார். அவர் தன்னுள் நிறைவு பெற்றவர். மற்றவர்களை அவர் சார்ந்திருப்பதில்லை. அவரைக் கேட்பதினாலும் உணரலாம். நேரடியாகவும் உணரலாம். அவர் சுயஒளியுடையவர். பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, போன்றவற்றினால் பாதிக்கப்படாதவரும் ஆவார். பிரம்மதேவன் தொடங்கி அனைத்துத் தேவர்களையும் கட்டுப்படுத்துபவர் அவரே ஆவார். அவரே நாராயணர் ஆவார். இந்தப் பரு உலகம் அழிந்த பிறகு அனைத்து உயிர்களுக்கும் அவரே அடைக்கலமாவார். அவர் அனைத்து வளங்களும் முற்றிலும் நிரம்பியவர் ஆவார். உலகியல் ரீதியான அனைத்திற்கும் அவரே உறைவிடம் ஆவார். அதனால் அவரே வாசுதேவர் எனப்படும் முழுமுதற் கடவுளாவார். அசையும் உயிர், அசையா உயிர் அனைத்தின் உடலினுள்ளும் இயங்கும் சுவாசக்காற்று அல்லது மூலாதாரச் சக்தியைப் போல் அவர் அனைத்து உயிர்வாழிகளின் இதயங்களிலும் வீற்றிருக்கின்றார். இவ்வாறு அவர் உடலைக் கட்டுப்படுத்துகின்றார். அவரது இயல்பின் ஒரு பகுதியாக முழுமுதற் கடவுள் எல்லா உடல்களிலும் புகுந்து அவைகளைக் கட்டுப்படுத்துகின்றார்.
பதம் 5.11.15
ந யாவத் ஏதாம் தனு-ப்ருண் நரேந்த்ர
வி தூய மாயாம் வயுனோதயேன
விமுக்த-ஸங்கோ ஜித-ஷட்-ஸபத்தேனோ
வேதாத்ம-தத்த்வம் ப்ரமதீஹ தாவத்
ந—இல்லை; யாவத்—அதுவரை; ஏதம்—இந்த; தனு-ப்ருத்—பரு உடலை ஏற்றுக்கொண்ட ஒருவன்; நரேந்த்ர—ஒ, மன்னரே; விதூய மாயாம்—உலகத்து மாசுக்களினால் வந்த தொற்று நோய்க் கிருமிகளைக் கழுவி நீக்குதல்; வயுனா-உதயேன—நல்தொடர்பினாலும் வேதங்களைக் கற்பதினாலும் உன்னத ஞானத்தினை விழிக்கச் செய்வதினால்; விமுக்த-ஸங்க—உலகத் தொடர்பு அனைத்திலுமிருந்து விடுதலை பெறுதல்; ஜித-ஷட்-ஸபத்ன—ஆறு பகைவர்களை வெல்வதற்கு (அறிவுப் புலன்கள் ஐந்து, மனம் ஒன்று); வேத—அறிகிறான்; ஆத்ம-தத்துவம்—ஆன்மீக; உண்மை; ப்ரமதி—அவன் கலைகிறான்; இஹ—இப்பௌதீக உலகில்; தாவத்—அக்காலம் வரை.
அன்பார்ந்த மன்னன் ரகூகணனே, கட்டுண்ட ஆத்மா இப்பரு உடலை ஏற்றுக் கொண்டிருக்கும் வரையிலும், பௌதீக உலக இன்பத்தின் மாசிலிருந்து விடுதலை பெறாத வரையிலும், தனது ஆறு பகைவர்களையும் வென்று அவன் தனது ஆன்மீக ஞான விழிப்பினால் தன்னுணர்வு நிலைக்கு வராத வரையிலும் அவன் இந்த உலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு உயிரினங்களுக்கிடையே அலைந்து கொண்டிருக்க வேண்டியது வரும்.
பதம் 5.11.16
ந யாவத் ஏதன் மன ஆத்ம-லிங்கம்
ஸம்ஸார-தாபாவபனம் ஜனஸ்ய
யச் சோக-மோஹாமய-ராக-லோப-
வைரானுபந்தம் மமதாம் விதத்தே
ந—இல்லை; யாவத்—அதுவரை; ஏதத்—இந்த; மன—மனம்; ஆத்மலிங்கம்—ஆத்மாவின் பொய்யான நியமனத் தோற்றத்தினால்; ஸம்ஸார-தாப—உலகின் துன்பங்களின்; ஆவபனம்—வளரும் நிலத்தளம்; ஜனஸ்ய—உயிர்களின்; யத்—அது; ஸோக—சோகம்; மோஹ—மோகம்; ஆமய—பிணியின்; ராக—பற்றின்; லோப—துக்கத்தின்; வைர—பகைமையின்; அனுபந்தம்—விளைவு; மமதாம்—உடைமை உணர்வு; விதத்தே—அளிக்கிறது.
ஆத்மாவின் நியமனமான மனமே உலகில் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணமாகும். ஆத்மாவின் இந்த உண்மை தெரியாத வரையில் அவன் பரு உடலின் துன்ப நிலையினை ஏற்றுக் கொண்டு இப்பிரபஞ்சத்தினுள் பல்வேறு நிலைகளில் அலைகிறான். மனமானது பிணி, சோகம், மோகம், பற்று, துக்கம், பகைமை போன்றவற்றினால் பாதிக்கப்படுவதினால் அது அடிமைத்தனத்தையும் உலகில் ஒரு பொய்யான நெருக்கத்தையும் உருவாக்குகிறது.
பதம் 5.11.17
ப்ராருத்வ்யம் ஏனம் தத் அதப்ர-வீர்யம்
உபேக்ஷயாத்யேதிதம் அப்ரமத்த
குரோர் ஹரேஸ் சரணோபா ஸனாஸ்த்ரோ
ஜஹி வ்யலீகம் ஸ்வயம் ஆத்ம-மோஷம்
ப்ராருத்வ்யம்—தடுத்து நிறுத்த முடியாத பகைவன்; ஏனம்—இந்த மனம்; தத்—அது; அதப்ர-வீர்யம்—மிக மிக ஆற்றல் வாய்ந்தது; உபேக்ஷயா—புறக்கணிப்பதால்; அத்யேதிதம்—தேவையின்றி ஆற்றல் அதிகரிக்கின்றது; அப்ரமத்த—மோகமின்றி இருப்பவன்; குரோ—ஆன்மீக குருவின்; ஹரே—முழுமுதற் கடவுளின்; சரண—திருவடித் தாமரைகளை; உபாஸனா-அஸ்த்ர—வழிபடுதல் என்னும் ஆயுதத்தினைப் பிரயோகித்து; ஜஹி—வெற்றி; வ்யலீகம்—பொய்; ஸ்வயம்—சுயமாக; ஆத்ம-மோஷம்—உயிர்களின் சட்டப்பூர்வமான நிலையினை மறைக்கிறது.
அடக்க முடியாத இந்த மனமே உயிர்வாழியின் ஆற்றல் மிகுந்த பகைவனாவான். ஒருவன் இதனைப் புறக்கணித்தாலோ அல்லது இதற்குச் சந்தர்ப்பம் அளித்தாலோ, இது மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெறும் நிலையினை எய்துகிறது. உண்மையன்று என்ற போதிலும் இது மிகவும் வலிவுடையதாகும். இது ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினை மறைத்திருக்கிறது. ஒ, மன்னனே! ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வது என்னும் ஆயுதத்தினால் இம்மனத்தை மிகுந்த கவனமுடன் வெற்றி கொள்ள முயல்வாயாக. இதனைச் செய்வாயாக.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “ரகூகண மன்னனுக்கு மானுட பரதரின் உபதேசம்” எனும் தலைப்பை கொண்ட பதினொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.