அத்தியாயம் – 11
ரகூகண மன்னனுக்கு மானுட பரதரின் உபதேசம்
பதம் 5.11.1 : அந்தணராகிய பரதர் கூறினார்; அன்பிற்குரிய அரசனே! உன்னிடம் அனுபவமில்லை என்றபோதிலும் நீ, ஒர் அனுபவசாலியைப் போன்று பேச முயற்சிக்கின்றாய். இதனால் உன்னை அனுபவசாலியாகக் கருத முடியாது. ஒர் அனுபவசாலி உன்னைப் போல் எஜமானுக்கும் சேவகனுக்கும் உள்ள உறவு பற்றியோ அல்லது இன்ப துன்பங்களைப் பற்றியோ பேசமாட்டான். இவையெல்லாம் புறச் செயல்களாகும். முழுமெய்ப்பொருளாகக் கருதப்படும் வளர்ச்சியும் அனுபவமும் பெற்ற ஒருவன் இவ்வாறு ஒருக்காலும் பேச மாட்டான்.
பதம் 5.11.2 : அன்பார்ந்த மன்னனே, தலைவனுக்கும். தொண்டனுக்கும் அரசனுக்கும், குடிமகனுக்கும் இடையே இருக்கும் உறவினைப் பற்றிப் பேசுவது உலகியல் சார்ந்தது ஆகும். வேதங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் உலகச் செயல்களில் விருப்பமுடையோர் வேள்விகளைச் செய்வதில் எண்ணமுடையோராகவும், நடப்பு நிலையில் நம்பிக்கையுடையோர்களாகவும் இருக்கின்றனர். இவர் போன்ற மனிதர்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் நிச்சயம் வெளிப்படுத்தப்படுவதில்லை.
பதம் 5.11.3 : கனவு என்பது பொய்யானது முக்கியத்துவமில்லாதது என்று ஒருவனுக்குத் தெரியவருகிறது. அதுபோல் இப்பிறப்பிலோ, இவ்வுலகிலோ அல்லது மேல் உலகிலோ உள்ள உலகியல் இன்பமானது முக்கியத்துவமற்றது என்று இறுதியில் உணர்கிறான். இதனை அவன் உணரும்பொழுது வேதங்கள் கூறுகின்ற நெறிமுறைகள் கூட அத்துணை உறுதியாக அவன் மனத்தில் இடம் பெறுவதாகக் கூற முடியாது.
பதம் 5.11.4 : எதுவரை, உயிர்ப் பொருளின் மனம், ஜட இயற்கையின் முக்குணங்களினால் (சத்துவ, இரஜோ, தமோ குணங்கள்) மாசுடையதாக இருக்கின்றதோ அது வரை அவனது மனம் சுதந்திரமான கட்டுப்படுத்த முடியாத யானையைப் போன்றே இருக்கின்றது. அது புலன்களை பயன்படுத்துவதின் மூலம் அது தனது புண்ணிய மற்றும் பாவச் செயல்களின் எல்லைகளை விரித்துக் கொள்கிறது. இதன் வினைவு உயிர்கள் தத்தமது செயலுக்கேற்ப இன்ப, துன்பங்களை அனுபவிப்பதற்கும் உலகிலேயே இருக்க வேண்டியதாகிறது.
பதம் 5.11.5 : மனமானது பாவபுண்ணியச் செயல்களின் ஆசைகளில் ஆழ்ந்திருப்பதினால் அது இயற்கையாகவே காம, குரோத செயல்களின் மாற்றங்களுக்கும் ஆளாகின்றது. அதாவது மனம் சத்துவ, இரஜோ, தமோ குணங்களினால் இயக்கப்படுகிறது எனலாம். பதினோரு புலன்கள் மற்றும் ஐந்து பௌதீகப் பொருட்கள் சேர்ந்து மொத்தம் பதினாறு உருப்படிகளாகும். இவற்றுள் மனமே தலையானது. தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று பல்வேறு வகையான பிறப்புகளுக்கும் மனமே காரணமாகும். மனம் உயர் நிலையிலோ அல்லது தாழ் நிலையிலோ இருக்கும்பொழுது உயர்ந்த அல்லது தாழ்ந்த உடலை ஏற்றுக் கொள்கிறது.
பதம் 5.11.6 : உயிரின் ஆத்மாவை மூடியிருக்கும் மானுட மனம் அதனைப் பல்வேறு உயிரினங்களில் சுமந்து செல்கிறது. மனதின் உயிர்கள் பௌதீக இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கும் மனமே காரணம் ஆகும். இவ்வாறு மாயை வசப்படுவதினால் மனம் பாவ புண்ணியச் செயல்களையும் அவர்களின் கர்மங்களையும் மேலும் உருவாக்குகிறது. அதனால் கட்டுண்டு விடுகிறது.
பதம் 5.11.7 : மனமே உயிர்களை இவ்வுலகில் பல்வேறு வகையான உயிரினங்களில் அலையவைக்கின்றது. இதன் மூலம் உயிர், மனிதன், தேவன், பருத்தவன், மெலிந்தவன் போன்ற பல்வேறு வடிவங்களில் இவ்வுலகம் செயல்களை உணர்த்துகிறது. கற்றறிந்த அறிஞர்கள் உடல் ரீதியானத் தோற்றம், அடிமைத்தனம், விடுதலை போன்றவற்றிற்கு மனமே காரணமென்று கூறுகின்றனர்.
பதம் 5.11.8 : உலகின் புலனுகர்ச்சியில் உயிர்களின் மனம் ஆழ்ந்திருக்கும் பொழுது அது அவனது பந்தப்பட்ட வாழ்க்கை மற்றும் உலகச் சூழ்நிலையின் துன்பம் போன்றவற்றைக் கொண்டுவருகிறது. ஆயினும் மனம் உலகியல் இன்பத்தின் மீது பற்றற்று இருக்கும்பொழுது அது விடுதலைக்குக் காரணமாகிறது. விளக்குத்திரி முறையாக எரியவில்லையென்றால் விளக்குப் புகை படிந்து கறுப்பாகிறது. மாறாக விளக்கில் நிறைய நெய்விட்டு திரி ஒழுங்காக எரிந்தால் எங்கும் தெளிவான ஒளி கிடைக்கின்றது. அதுபோல் மனம் பௌதீகப் புலனுகர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் பொழுது அது துன்பத்திற்குக் காரணமாகிறது. அது பௌதீகப் புலனுகர்ச்சியில் பற்றறுக்கும் பொழுது கிருஷ்ண உணர்வின் உண்மை ஒளியை அது வெளிப்படுத்துகிறது.
பதம் 5.11.9 : செயற்புலன்கள் ஐந்தும், அறிவுப் புலன்கள் ஐந்தும் இருக்கின்றன. வீணாக ஆணவமும் இருக்கிறது. இவ்வாறு மனதின் செயல்களுக்குப் பதினோரு உருப்படிகள் இருக்கின்றன. ஒ, விதுரனே, புலனுகர்ச்சிப் பொருட்கள் (ஒலி, ஊறு போன்றவை) உறுப்புக்களின் செயல்கள் (கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது) பல்வேறு வகையான உடல்கள், சமுதாயம், நண்பர், நபர்கள் போன்றவை கற்றறிந்த அறிஞர்களால் மனதின் செயல்களுக்கானச் செயற்களங்களாகக் கருதப்படுகின்றன.
பதம் 5.11.10 : ஓசை, ஊறு, வடிவம், சுவை, நாற்றம் என்பவை அறிவுப்புலன்கள் ஐந்தின் பொருட்களாகும். பேசுதல், தொடுதல், அசைதல், வெளியேற்றுதல், பாலியல் உறவு கொள்ளுதல் போன்றவை செயற்புலன்களின் பொருட்களாகும். இதைத்தவிர மற்றொரு கருத்து இருக்கிறது. அதன் மூலம் ஒருவன் “இது எனது உடல், இது எனது சமுதாயம், இது எனது குடும்பம், இது எனது நாடு” என்று சிந்திக்கிறான். இதுவே பதினோராவது செயலாகும். அதாவது மனதினுடையதாகும். வீண் ஆணவம் என்று அழைக்கப்படுகிறது. சில தத்துவ அறிஞர்களின் கருத்தின்படி இது பன்னிரண்டாவது செயலாகும். இதன் செயற்களம் உடலாகும்.
பதம் 5.11.11 : பௌதீகப் பொருட்கள், இயற்கை, மூலகாரணம், பண்பாடு, விதி, காலம் போன்றவை எல்லாம் உலகியற் காரணங்களாகும். இக்காரணங்களினால் கிளர்ச்சியடையும் பொழுது, இப்பதினோரு செயல்களும் நூற்றுக்கணக்கான செயல்களாகும், அடுத்து ஆயிரக்கணக்கான செயல்களாகவும் பின்னர் கோடிக்கணக்கான செயல்களாகவும் மாறுகின்றன. ஆனால் இம்மாற்றங்கள் எல்லாம் ஒன்றோடொன்று கலப்பதினால் தாமே நடைபெறுவதில்லை. மாறாக அவை முழுமுதற் கடவுளின் கட்டளையின் கீழ் இருக்கின்றன.
பதம் 5.11.12 : கிருஷ்ண உணர்வினை இழந்த தனிப்பட்ட ஆத்மா புறச்சக்தியினால் தன்னுடைய மனதில் ஏராளமான யோசனைகளையும், செயல்களையும் உருவாக்குகின்றது. இத்தகைய செயல்கள் காலமாக தொடர்ந்து நித்தியமாக இருக்கின்றன. சில நேரங்களில் இவை விழிப்பு நிலையிலும், கனவு நிலையிலும் வெளிப்படுகின்றன. ஆனால் ஆழ்ந்த நித்திரையில் (உணர்வின்றி) அல்லது சமாதி நிலையில் இவை மறைகின்றன. இப்பிறவியிலேயே விடுதலை பெற்றவன் (ஜீவன் முக்தன்) இவற்றையெல்லாம் தெளிவாக தனது சிந்தனையில் காண்கிறான்.
பதங்கள் 5.11.13 – 5.11.14 : இருவகையான “க்ஷேத்ரஜ்ஞன்” உள்ளன. மேலே விளக்கப்பட்டிருந்த உயிர் ஒன்று. மற்றது முழுமுதற் கடவுள் அவர் பின் வருமாறு விளக்கப்படுகிறார். எங்கும் பரவியிருக்கும் அவரே படைப்பிற்குக் காரணமாவார். அவர் தன்னுள் நிறைவு பெற்றவர். மற்றவர்களை அவர் சார்ந்திருப்பதில்லை. அவரைக் கேட்பதினாலும் உணரலாம். நேரடியாகவும் உணரலாம். அவர் சுயஒளியுடையவர். பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, போன்றவற்றினால் பாதிக்கப்படாதவரும் ஆவார். பிரம்மதேவன் தொடங்கி அனைத்துத் தேவர்களையும் கட்டுப்படுத்துபவர் அவரே ஆவார். அவரே நாராயணர் ஆவார். இந்தப் பரு உலகம் அழிந்த பிறகு அனைத்து உயிர்களுக்கும் அவரே அடைக்கலமாவார். அவர் அனைத்து வளங்களும் முற்றிலும் நிரம்பியவர் ஆவார். உலகியல் ரீதியான அனைத்திற்கும் அவரே உறைவிடம் ஆவார். அதனால் அவரே வாசுதேவர் எனப்படும் முழுமுதற் கடவுளாவார். அசையும் உயிர், அசையா உயிர் அனைத்தின் உடலினுள்ளும் இயங்கும் சுவாசக்காற்று அல்லது மூலாதாரச் சக்தியைப் போல் அவர் அனைத்து உயிர்வாழிகளின் இதயங்களிலும் வீற்றிருக்கின்றார். இவ்வாறு அவர் உடலைக் கட்டுப்படுத்துகின்றார். அவரது இயல்பின் ஒரு பகுதியாக முழுமுதற் கடவுள் எல்லா உடல்களிலும் புகுந்து அவைகளைக் கட்டுப்படுத்துகின்றார்.
பதம் 5.11.15 : அன்பார்ந்த மன்னன் ரகூகணனே, கட்டுண்ட ஆத்மா இப்பரு உடலை ஏற்றுக் கொண்டிருக்கும் வரையிலும், பௌதீக உலக இன்பத்தின் மாசிலிருந்து விடுதலை பெறாத வரையிலும், தனது ஆறு பகைவர்களையும் வென்று அவன் தனது ஆன்மீக ஞான விழிப்பினால் தன்னுணர்வு நிலைக்கு வராத வரையிலும் அவன் இந்த உலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு உயிரினங்களுக்கிடையே அலைந்து கொண்டிருக்க வேண்டியது வரும்.
பதம் 5.11.16 : ஆத்மாவின் நியமனமான மனமே உலகில் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணமாகும். ஆத்மாவின் இந்த உண்மை தெரியாத வரையில் அவன் பரு உடலின் துன்ப நிலையினை ஏற்றுக் கொண்டு இப்பிரபஞ்சத்தினுள் பல்வேறு நிலைகளில் அலைகிறான். மனமானது பிணி, சோகம், மோகம், பற்று, துக்கம், பகைமை போன்றவற்றினால் பாதிக்கப்படுவதினால் அது அடிமைத்தனத்தையும் உலகில் ஒரு பொய்யான நெருக்கத்தையும் உருவாக்குகிறது.
பதம் 5.11.17 : அடக்க முடியாத இந்த மனமே உயிர்வாழியின் ஆற்றல் மிகுந்த பகைவனாவான். ஒருவன் இதனைப் புறக்கணித்தாலோ அல்லது இதற்குச் சந்தர்ப்பம் அளித்தாலோ, இது மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெறும் நிலையினை எய்துகிறது. உண்மையன்று என்ற போதிலும் இது மிகவும் வலிவுடையதாகும். இது ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினை மறைத்திருக்கிறது. ஒ, மன்னனே! ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வது என்னும் ஆயுதத்தினால் இம்மனத்தை மிகுந்த கவனமுடன் வெற்றி கொள்ள முயல்வாயாக. இதனைச் செய்வாயாக.