அத்தியாயம் – 1
மகாராஜா பிரியவிரதனின் செயல்கள்
பதம் 5.1.1 : சுகதேவ கோஸ்வாமியிடம் மன்னர் பரீட்சித்து வினவினார். “ஓ, மாமுனிவரே! சிறந்த தன்னுணர்வு பெற்ற பக்தரான மன்னர் பிரியவிரதன், வினை எனும் கட்டுப்பாட்டுக்கு (பலன்தரும் செயல்கள்) மூலகாரணமாக விளங்குவதும் மனித வாழ்வின் குறிக்கோளைத் தோற்கடிப்பதுமான இல்லறவாழ்வில் ஏன் இருந்தார்?”
பதம் 5.1.2 : பக்தர்கள் நிச்சயம் விடுதலை பெற்றவர்களேயாவர். ஆகையினால் அந்தணர்களில் சிறந்தோரே அவர்கள் இல்லறச் செயல்களில் ஈடுபடுதல் சாத்தியமன்று.
பதம் 5.1.3 : முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த உயர்ந்த மகாத்மாக்கள், அத்திருவடித் தாமரைகளின் நிழலினால் மனநிறைவு அடைகின்றனர். அவர்களது உணர்வு குடும்பத்தினர் மீது பற்றுடையதாக ஒரு நாளும் ஆகாது.
பதம் 5.1.4 : மன்னர் தொடர்ந்து கூறினார். “ஓ சிறந்த அந்தணரே! என் ஆழ்ந்த ஐயம் இதுதான் மனைவி மக்கள் இல்லம் என்று பற்று வைத்திருந்த மன்னர் பிரியவிரதன் கிருஷ்ண உணர்வில் குற்றமற்ற நிறைவெய்தியது எவ்வாறு சாத்தியமானது?”
பதம் 5.1.5 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நீ கூறியது உண்மைதான். பிரம்மதேவன் போன்ற உயர்ந்தவர்களினால் இயற்றப்பட்ட தெய்விகப் பண்களில் போற்றப்படும் முழுமுதற் கடவுளின் பெருமைகள் சிறந்த பக்தர்களுக்கும் விடுதலை பெற்றவர்களுக்கும் மிகுந்த இனிமையளிக்கின்றன. பகவானின் திருவடித்தாமரைகளின் தேனாம்ருதத்தில் பற்றும் அவனது பெருமைகளில் எப்போதும் தோய்ந்திருக்கும் மனமுடைய ஒருவன் சில தடைகளினால் தடுக்கப்படலாம். ஆயினும் அவன் தான் எய்திருக்கும் உயர் நிலையினை ஒருக்காலும் விட்டுக்கொடுக்க மாட்டான்.
பதம் 5.1.6 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் அன்பிற்குரிய மன்னனே. இளவரசர் பிரியதேவன் மிகச் சிறந்த பக்தர். அவர் தனது ஆன்மீக குருவான நாரதரின் தாமரைத் திருவடிகளைச் சரணடைந்தமையால், ஆன்மீக ஞானத்தில் உயர்நிறைவினை எய்தினார். முன்னேறிய ஞானத்துடன் அவர் எப்போதும் ஆன்மீகத்தைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டு வேறெதிலும் தனது கவனத்தைத் திருப்பவில்லை. இளவரசரின் தந்தை பின்னர் அவரை இவ்வுலகினை ஆளும் பொறுப்பினை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுவே வேதங்களில் உபதேசிக்கப்பட்டிருக்கும் கடமை என்று அவர் பிரியவிரதனைச் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் இளவரசர் பிரியவிரதனோ முழுமுதற் கடவுளை விடாது சிந்திக்கும் பக்தி யோகத்தில் தொடர்ந்து ஈடுபட்டுத் தனது புலன்கள் அனைத்தையும் இறைவனது பக்தித் தொண்டில் ஈடுபடுத்தினார். ஆகையினால் இளவரசர் தனது தந்தையின் வேண்டுகோளை வரவேற்காதபோதும் உலகை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதினால் தான் பக்தித் தொண்டிலிருந்து மாற வேண்டியதாகி விடுமோ என்றும் கேள்வியினை மனச்சான்றுக்கு உட்பட்டு எழுப்பினார்.
பதம் 5.1.7 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் இப்பிரபஞ்சத்தில் முதலில் பிறந்தவரும், ஆற்றல்மிக்கத் தேவராக விளங்குபவரும் பிரம்ம தேவனேயாவார். இகபரச் செயல்களின் வளர்ச்சிக்கு அவரே எப்போதும் பொறுப்பாவார். முழுமுதற் கடவுளிடமிருந்து நேரடியாகப் பிறந்தவர் ஆதலினால், பிரபஞ்சப்படைப்பின் நோக்கத்தை அவர் நன்றாக அறிவார். அதனால் அவர் தனது செயல்கள் அனைத்தையும் பிரபஞ்சம் முழுவதின் நன்மைக்கே அர்ப்பணிக்கிறார். இச்சக்தி மிக்கப் பிரம்மதேவன் அவரது துணைவர்களும் வேத உருவங்களும் சூழ்ந்துவர மேலுலகத்திலுள்ள தனது இருப்பிடத்திலிருந்து இறங்கி இளவரசர் பிரியவிரதன் தியானம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்தார்.
பதம் 5.1.8 : பிரம்மதேவன் தனது மிகப்பெரிய அன்னப் பறவை வானத்திலிருந்து இறங்கியவுடன் சித்தலோகம், கந்தர்வலோகம், சாத்யலோகம், சாரணலோகம் முதலியவற்றைச் சேர்ந்தவர்களும், மாமுனிவர்களும், தேவர்களும் தனித்தனி விமானங்களில் பறந்து வந்து பிரம்மதேவனை வணங்கி வரவேற்பதற்காக வான் முகட்டினுள் நின்றனர். பல்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள் பிரம்ம தேவனை வணங்கி வழிபட்டபோது பிரம்ம தேவன் ஒளிரும் நட்சத்திரக் கூட்டங்களினால் சூழப்பட்ட முழுமதி போல் திகழ்ந்தார். பிரம்மதேவனின் அன்னவாகனம் இறுதியில் இளவரசர் பிரியவிரதன் தவம் செய்து கொண்டிருந்த கந்தமாதன மலையின் எல்லையினை அடைந்தது.
பதம் 5.1.9 : நாரத முனிவரின் தந்தையான பிரம்மதேவன் இப்பிரபஞ்சத்தினுள் இருக்கும் பரமபுருஷர் ஆவார். பெரிய அன்னவாகனத்தினைக் கண்ணுற்றதும் பிரம்மதேவன் வந்துவிட்டார் என்பதை நாரத முனிவர் புரிந்துகொண்டார். ஆகையினால் அவரும் சுயாம்புவ மனுவும் அவரது மைந்தனும் நாரத முனிவரிடம் உபதேசம் கேட்டுக் கொண்டிருந்தவருமான பிரியவிரதனும் உடனே எழுந்து நின்றனர். பிறகு அவர்கள் தங்கள் கரங்களைக் கூப்பிப் பிரம்மதேவனை மிகுந்த மரியாதையுடன் வணங்கினர்.
பதம் 5.1.10 : அன்பிற்குரிய பரீட்சித்து மன்னனே, இறுதியில் பிரம்மதேவன் மேல் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு இறங்கி வந்தவுடன் நாரத முனிவர், சுயாம்புவ மனு, பிரியவிரதன் மூவரும் எழுந்து முன்னே வந்து பூஜைப் பொருட்களை முன்வைத்து தேவ மரபிற்கேற்ப உயர்ந்த மொழிகளினால் அவரைப் போற்றினார். அச்சமயம் இப்பிரபஞ்சத்தின் ஆதிபுருஷரான பிரம்மதேவன் பிரியவிரதன் மீது கருணை கொண்டு கனிவுடன் அவரை நோக்கிப் புன்னகை புரிந்தவாறு பின் வரும் வார்த்தைகளைக் கூறலுற்றார்.
பதம் 5.1.11 : இப்பிரபஞ்சத்தின் பரமபுருஷரான பிரம்மதேவன் கூறினார் அன்பார்ந்த பிரியவிரதனே! நான் சொல்லப்போவதை அருள் கூர்ந்து கேட்பாயாக. நமது அனுபவ அறிவின் எல்லைக்கும் எட்டாதவரான பரமபுருஷ பகவானின் மீது ஒரு நாளும் பொறாமை கொள்ளாதே. நான், நீ, சிவபெருமான், உனது தந்தை, மாமுனிவர் நாரதர் போன்ற அனைவரும் பரம்பொருளின் கட்டளையினை நிறைவேற்ற வேண்டியவர்களாவோம். அவரது கட்டளையினை எந்நாளும் நம்மால் மீற முடியாது.
பதம் 5.1.12 : முழுமுதற் கடவுளின் கட்டளையினை தவத்தின் வலிமையினாலேயோ உயர்ந்த வேதக் கல்வியினாலோ அல்லது யோக சித்தியின் ஆற்றலினாலோ அல்லது வீரத்தினாலோ, அன்றி புத்திசாலித்தனமான செயல்களினாலோ ஒருவன் விலக்க முடியாது. ஒருவன் தனது அறத்தின் வலிமையைப் பயன்படுத்தியோ, பௌதிக வளத்தினாலோ அல்லது வேறெந்த வழியிலோ தனித்தோ அல்லது பிறர் துணையுடனோ முழுமுதற் கடவுளின் கட்டளைகளை மீற முடியாது. சிறப்புமிக்க பிரம்மதேவன் தொடங்கி ஒரு சிற்றெறும்பு வரை எந்தவொரு உயிரும் இறைவன் கட்டளையை மீற முடியாது.
பதம் 5.1.13 : அன்பிற்குரிய பிரியவிரதனே! முழுமுதற் கடவுளின் கட்டளையினால் உயிர்கள் அனைத்தும் பிறப்பு, இறப்பு, செயல், சோகம், மோகம், அச்சம், எதிர்கால ஆபத்துக்கள், மகிழ்ச்சி, துக்கம் போன்றவற்றிற்காகப் பல்வேறு உடல்களை ஏற்றுக்கொள்கின்றன.
பதம் 5.1.14 : அன்பிற்குரிய மைந்தனே! நாம் அனைவரும் நமது குணம் மற்றும் செயலுக்கேற்ப, வேதக் கட்டளைகளின்படி வர்ணாசிரமப் பிரிவுகளினால் கட்டுப்படுத்துகிறோம். இப்பிரிவுகளைத் தவிர்க்க இயலாது. ஏனெனில் இவை விஞ்ஞான ரீதியாக ஏற்படுத்தப்பட்டவையாகும். ஆகையினால் மூக்கணாங்கயிறுகள் பூட்டி காளைமாடுகள் எவ்வாறு அவற்றை ஓட்டுபவனின் விருப்பத்திற்கேற்பச் செல்கின்றனவோ அதுபோல் நாம் இவ்வர்ணாசிரம தர்மங்களிலுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
பதம் 5.1.15 : அன்பார்ந்த பிரியவிரதனே, இயற்கையின் பல்வேறு குணங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பிற்கேற்ப நமக்கு குறிப்பிட்ட உடலையும் நாம் அடைவதற்கான இன்ப துன்பங்களையும் அளிக்கிறார். ஆகையினால் ஒருவன் தான் இருக்கும் நிலையில் அப்படியே இருந்து விழிகளுடைய ஒருவன் குருடனை வழி நடத்திச் செல்வதைப் போல் முழுமுதற் கடவுளால் வழி நடத்திச் செல்லப்பட வேண்டும்.
பதம் 5.1.16 : ஒருவன் விடுதலை பெற்றவனாக இருந்தாலும் அவன் தனது முன்வினைப் பயனுக்கேற்ப ஒரு உடலை ஏற்றுக்கொள்ள வேண்டியவனாகிறான். ஆயினும் பிழைபட்ட கருத்துக்கள் ஏதுமின்றி நித்திரை நீங்கி விழித்தெழுந்தவன், நித்திரையில் தான் கண்ட கனவினை எண்ணிப் பார்ப்பது போல் தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் தனது முந்தைய கர்மத்தினால் ஏற்பட்டது என்று அவன் எண்ணுகிறான். இப்படி அவன் உறுதியாக இருந்து இயற்கையின் முக்குணங்களின் பாதிப்பின் கீழ் மற்றொரு பரு உடலைப் பெறுவதற்காக ஒருபோதும் உழைக்கமாட்டான்.
பதம் 5.1.17 : சுயக்கட்டுப்பாடில்லாத ஒருவன் தவமேற்கொண்டு காடுவிட்டுக் காடு சென்றாலும் உலகத் தொடர்பினை எண்ணி எப்போதும் அச்சங்கொள்கிறான். ஏனென்றால் அவன் தன்னுள்ளே இருக்கும் அறிவுப் புலன்கள் என்னும் ஆறு மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஆயினும் தன்னடக்கத்தோடு புலன்களை வென்றுள்ள ஒரு கற்றறிந்த மனிதனை இல்லறவாழ்க்கை கூடத் துன்புறத்த முடியாது.
பதம் 5.1.18 : இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு திட்டமிட்டுத் தனது மனம் மற்றும் ஐந்து புலனுறுப்புக்களை வெல்பவன் தனது பலமிக்க எதிரிகளை வீழ்த்திக் கோட்டையினுள் பாதுகாப்பாக இருக்கும் அரசினைப் போன்றவன். இல்லற வாழ்கையில் பயிற்சி பெற்று அவனது காம இச்சைகள் குறைந்த பிறகு அவன் எங்கும் அச்சமின்றிச் செல்லலாம்.
பதம் 5.1.19 : பிரம்ம தேவன் கூறினார்: ‘அன்பிற்குரிய பிரியவிரதனே! தாமரைமலர் போல் உந்திச் சுழியினையுடைய பகவானின் திருவடித்தாமரையில் தஞ்சமடைக. ஆறு புலனுறுப்புக்களை (மனம் மற்றும் அறிவுப் புலன்கள்) வெல்க! பௌதிக இன்பத்தினை ஏற்றுக் கொள்! ஏனெனில் நீ இதனைச் செய்ய வேண்டுமென்று பகவான் சிறப்புக் கட்டளையிட்டிருக்கிறார். இதன்மூலம் நீ உலகத் தொடர்பிலிருந்து எப்போதும் விடுதலை பெற்றவனாகவும் உனது சட்டப்பூர்வமான நிலையிலிருந்து பகவானின் கட்டளைகளை நிறைவேற்றும் திறனுடையவனாகவும் இருப்பாய்.’
பதம் 5.1.20 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: திரி புவனங்களுக்கும் ஆன்மீக குருவாக விளங்கும் ஆற்றல் மிக்க பிரம்மதேவனால் இவ்வாறு உபதேசிக்கப்பட்ட பிரியவிரதன் தனது நிலை தாழ்ந்திருந்தபடியினால் தனது வணக்கத்தைச் செலுத்தி அக்கட்டளையினை ஏற்றுக்கொண்டு மிக்க மரியாதையுடன் அதனை நிறைவேற்றினார்.
பதம் 5.1.21 : மனு தன்னால் இயன்ற அளவு மரியாதை செய்து பிரம்ம தேவனை வழிபட்டார். பிரியவிரதனும், நாரதரும் கூட எவ்வித கசப்புணர்ச்சியுமின்றி பிரம்ம தேவனைக் கண்டுகொண்டிருந்தனர். பிரியவிரதனை அவரது தந்தையின் விருப்பினை ஏற்றுக் கொள்ளும்படிச் செய்த பின்னர் பிரம்ம தேவன், மனம் வாக்குகளால் வர்ணிக்க முடியாத சிறப்புடைய அவரது இருப்பிடமான சத்தியலோகத்திற்குத் திரும்பிச் சென்றார்.
பதம் 5.1.22 : பிரம்ம தேவனின் துணையினால் சுயாம்புவ மனு தனது விருப்பத்தினை இவ்வாறு நிறைவேற்றிக் கொண்டார். நாரத முனிவரின் அனுமதியுடன் அவர் தனது மைந்தன் பிரியவிரதனை பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களையும் காப்பதற்காக ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். சுயாம்புவ மனு இவ்வாறு மிகவும் ஆபத்தான, ஆசைகள் என்னும் நச்சுக் கடலிலிருந்து விடுதலை பெற்றார்.
பதம் 5.1.23 : முழுமுதற் கடவுளின் ஆணையினை ஏற்று மகாராஜா பிரியவிரதன் உலகச் செயல்களில் முற்றிலும் ஈடுபட்டிருந்தார் என்ற போதிலும் உலகப் பற்றுக்கள் அனைத்திலுமிருந்து விடுதலை பெறுவதற்குக் காரணமாக இருக்கும் பகவானின் தாமரைத் திருவடிகளை அவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருந்தார். பிரியவிரத மகாராஜா பௌதிக மாசுக்கள் அனைத்திலுமிருந்து விடுதலை பெற்றவராக விளங்கிய போதிலும் தனது முன்னோர்களின் கட்டளைகளை மதிப்பதற்காக அவர் இந்த உலகினை ஆட்சி செய்தார்.
பதம் 5.1.24 : ஆகையினால் மகாராஜா பிரியவிரதன் பிரஜாபதி விஷ்வகர்மாவின் புதல்வியான பர்ஹிஷ்மதியை மணம் செய்து கொண்டார். அவளிடம் அவர் தனக்கு இணையான அழகு, நடத்தை, பெருந்தன்மை, மற்றும் பிற நற்குணங்களுடைய பத்துப் புதல்வர்களைப் பெற்றெடுத்தார். அவர் கடைசியில் ஊர்சஸ்வதி எனும் ஒரு பெண்மகளையும் பெற்றெடுத்தார்
பதம் 5.1.25 : பிரியவிரதனின் பத்துப் புதல்வர்களுக்கும் ஆக்னீதரன், இத்மஜி ஹிவன், யக்ஞபாஹு, மகாவீரன், இரண்யரேதான், கிருதபுருஷ்டன்; சவனன், மோதிதி, விதி ஹோத்திரன் மற்றும் கவி என்று பெயரிடப்பட்டன. இப்பெயர்கள் அனைத்தும் அக்னிதெய்வத்தின் பெயர்களுமாகும்.
பதம் 5.1.26 : இப்பதின்மரில் மூவரான கவி, மகாவீரன், சவனன் என்போர் முற்றிலும் பிரம்மச்சாரியத்தினை மேற்கொண்டனர். இவ்வாறு பிரம்மச்சரியத்தினை குழந்தைப் பருவத்திலிருந்தே பயின்றதினால் “பரமஹம்ஸ ஆஷ்ரமம்” என்றும் உயர்நிறைவில் அவர்கள் ஆழ்ந்த ஞானமுடையவர்களாக விளங்கினர்.
பதம் 5.1.27 : இவ்வாறு அவர்கள் மூவரும் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே துறவு நிலையில் இருந்து தங்கள் புலன்களின் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தி மாமுனிவர்களாயினார். தத்தம் உள்ளங்களை எப்போதும் முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகளின் மீதே வைத்திருந்தனர். அவர் ஒருவரே அனைத்து உயிர்களுக்கும் புகலிடமாக இருக்கின்றார். அதனால் அவர் வாசுதேவர் என்று போற்றப்படுகின்றார். உலகியல் வாழ்வினைக் கண்டு உண்மையில் அஞ்சுபவர்கள் அவர் ஒருவரே அடைக்கலாமாவார். அவரது தாமரைத் திருவடிகளைத் தொடர்ந்து சிந்தித்ததினால் பிரியவிரத மன்னரின் மூன்று புதல்வர்களும் தூய பக்தித் தொண்டில் முன்னேறியவர்களாயினர். அவர்கள் தனது பக்திதொண்டின் வலிமையினால் அனைவரின் இதயங்களிலும் பரமாத்மாவாக வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நேரடியாக உணரும் திறன் பெற்றனர். அவருக்கும் தங்களுக்கும் குணத்தில் எந்த வேறுபாடும் இல்லை என்றும் உணர்ந்தனர்.
பதம் 5.1.28 : பிரியவிரத மன்னன் மற்றொரு மனைவியினிடத்தில் உத்தமன், தாமஸன், ரைவதன் என்னும் மூன்று புதல்வர்களைப் பெற்றெடுத்தார். இவர்கள் அனைவரும் பின்னர் மன்வந்திர யுகங்களின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர்.
பதம் 5.1.29 : கவி, மகாவீரன், சவனன் எனும் மூவரும் “பரஹம்ஸ” நிலையில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்னர், மகாராஜா பிரியவிரத மன்னர் இப்பிரபஞ்சத்தினை பதினோரு அற்புத வருடங்கள் ஆட்சி செய்தார். எப்போதெல்லாம் அவர் தனது வலிமை மிக்கக் கரங்களினால் தன்னுடைய வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து நாண் ஏற்றுகிறாரோ அப்போதெல்லாம் சமய தர்மங்களுக்கு எதிராக இருக்கும் அனைவரும் அவர் கண்ணில் படாமல் ஓடிவிடுவர். காரணம் பிரபஞ்சத்தை ஆள்வதில் அவர் தன்னேரில்லாத வீரமுடையவராக விளங்கினார். அவர் தன் மனைவி பர்ஹிஷ்மதியை மிகவும் நேசித்தார். காலம் செல்லச்செல்ல அவர்கள் காதலும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. அரசி பர்ஹிஷமதி, ஆடை அணிமணிகளினால் அலங்கரித்தல், நடத்தல், பார்த்தல், புன்னகைத்தல் போன்ற தனது நளினமிக்கப் பெண்மையினால் அவரது ஆற்றலை அதிகரிக்கச் செய்தார். அவர் ஒரு மகாத்மாவாக இருந்தபோதிலும் தன் மனைவியின் பெண்மையிடத்துத் தன்னை இழந்தவராகவே காணப்பட்டார். அவர் ஒரு சாதாரண மனிதனைப் போலவே தன் மனைவியிடம் நடந்து கொண்டார். ஆயினும் உண்மையில் அவர் ஒரு மகாத்மாவே ஆவார்.
பதம் 5.1.30 : பிரியவிரத மன்னன் இப்பிரபஞ்சத்தினை நன்கு ஆட்சி செய்து கொண்டிருந்த பொழுது, மிகவும் சக்திமிக்க சூரியதேவனின் சுற்றில் ஒரு முறை மிகுந்த அதிருப்தியடைந்தார். தனது ரதத்தில் அவர் சுமேடு மலையினைச் சுற்றி வந்த பொழுது சூரியதேவன் தன்னைச் சுற்றியுள்ள கிரஹங்களையெல்லாம் ஒளிமயமாக்கிக் கொண்டிருந்தான். ஆயினும் சூரியன் மலையின் வடக்குப் பகுதியில் இருந்த பொழுது அதன் தென்பகுதி ஒளிமங்கி இருந்தது. வடபகுதி ஒளி குறைந்திருந்தது. பிரியவிரத மன்னனுக்கு இது பிடிக்கவில்லை. அதனால் பிரபஞ்சத்தில் இரவில் கூட பகல் ஒளி இருக்க வேண்டுமென்று அவர் தீர்மானித்தார். அவர் சூரியதேவனின் கோளப் பாதையில் ஓர் ஒளிமிக்க ரதத்தில் சுற்றி வந்து தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார். அவரால் இத்தகு வியத்தகு சாதனைகளைச் செய்ய முடிந்தது. ஏனென்றால் அவர் முழுமுதற் கடவுளை வழிபட்டதினால் மிகுந்த ஆற்றலுடன் விளங்கினார்.
பதம் 5.1.31 : பிரியவிரதன் தன்னுடைய இரதத்தினை சூரியனுக்குப் பின்னால் ஒட்டிச் சென்றபொழுது, இரதத்தின் சக்கரங்கள் பதித்த தடங்களிலிருந்து ஏழு சமுத்திரங்கள் தோன்றின. அவை பூமண்டலத்தினை ஏழு தீவுகளாகப் பிரித்தன.
பதம் 5.1.32 : இத்தீவுகளின் பெயர்கள் ஜம்பூ, பிலக்ஷம், சால்மலி, குஷம், கிரௌஞ்சம், சாகம், புஷ்கரம் என்பவையாகும். அதற்கு முன்பிருந்ததைவிட ஒவ்வொன்றும் இருமடங்கு பெரியதாகும். ஒவ்வொரு தீவும் திரவப் பொருளினால் சூழப்பட்டிருந்தது. அதற்கும் அப்பால் அடுத்த தீவு இருந்தது.
பதம் 5.1.33 : ஏழு கடல்களும், உப்பு, கரும்புச்சாறு, மது, வெண்ணெய், பால், தயிர் மற்றும் இனிய குடிநீர் சம அளவில் கலந்தவையாக இருந்தன. இத்தீவுகள் அனைத்தும் இக்கடல்களினால் சூழப்பட்டிருந்தன. ஒவ்வொரு கடலும் தான் சூழ்ந்துள்ள தீவின் அகலத்தினை உடையதாக இருந்தது. மகாராணி பர்ஹிஷ்மதியின் கணவரான பிரியவிரத மன்னர் இத்தீவுகளை ஆளும் உரிமையினைத் தன் புதல்வர்களான அக்னீதரன், இத்மஜிஹ்வன், யக்ஞபாஹு, இரண்யரேதன், கிருதப்புருஷ்டன், மேதாதிதி மற்றும் விதிஹோத்திரன் என்பவர்களுக்கு அளித்தார். இவ்வாறு இவர்கள் அனைவரும் தங்கள் தந்தையினால் மன்னர்களாக்கப்பட்டனர்.
பதம் 5.1.34 : மன்னர் பிரியவிரதன் தன் புதல்வி ஊர்ஜஸ்வதியை சுக்கிராச்சாரியாருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவளிடம் சுக்கிராச்சாரியார் தேவயானீ என்னும் புதல்வியைப் பெற்றெடுத்தார்.
பதம் 5.1.35 : அன்பிற்குரிய மன்னனே, இறைவனது தாமரைத் திருவடிகளின் தூசியினைச் சரணடைந்தவன் ஆறுவகைப் பௌதீகக் குணங்களான பசி, தாகம், சோகம், மோகம், மூப்பு, மரணம் போன்றவற்றைக் கடந்த மனம் மற்றும் ஐம்புலன்களையும் வெல்லக் கூடியவனாகிறான். ஆயினும் பகவானின் தூய பக்தனுக்கு இது ஒன்றும் வியப்பானது அன்று. ஏனெனில் நான்கு வர்ணங்களின் எல்லைக்குள் வராத பஞ்சமன் அதாவது தீண்டத்தகாதவன் கூட பகவானின் புனித நாமத்தினை ஒரே ஒரு முறை உச்சரித்தான் என்றால் உடனடியாக அவன் உலக வாழ்க்கை என்னும் பிணிப்பிலிருந்து விடுதலை பெறுகிறான்.
பதம் 5.1.36 : அவர் தனது உலகச் செல்வங்களை முழுக்கத் துய்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் பிரியவிரத மன்னன் மாமுனிவர் நாரதரைத் தான் முற்றிலும் சரணடைந்து, கிருஷ்ண உணர்வுப் பாதையில் உண்மையில் இருந்த போதும், எவ்வாறோ மீண்டும் உலகியல் சிக்கல்களில் சிக்கிக் கொண்டேனே என்று சிந்திக்கத் தொடங்கினார். இதனால் அவர் மனம் நிம்மதி இழந்து அவர் முற்றும் துறந்த உணர்ச்சியில் பேசத் தொடங்கினார்.
பதம் 5.1.37 : மன்னர் இவ்வாறு தன்னையே தனக்குள் குறை கூறிக் கொண்டார். அந்தோ, என்னுடைய புலனுகர்ச்சியின் காரணமாக நான் எத்துணைக் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறேன். நான் இப்போது உலக இன்பம் என்னும் பாழுங்கிணற்றினுள் வீழ்ந்திருக்கின்றேன். நான் பட்டதெல்லாம் போதும்; இனியும் நான் இதனை அனுபவிக்கப் போவதில்லை. என் மனைவியின் கையில் ஆடும் குரங்கினைப் போல் நான் எப்படி ஆகிவிட்டேன் என்று பார். இதுபற்றியே நான் கண்டிக்கப்படுகிறேன்.
பதம் 5.1.38 : முழுமுதற்கடவுளின் அருளினால் பிரியவிரத மன்னன் தன்னுடைய சுய உணர்விற்கு மீண்டும் வந்தார். அவர் தனது செல்வங்கள் அனைத்தையும் தன் மைந்தர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அவர் யாரிடம் புலனுகர்ச்சியை அதிகமாகத் துய்த்து மகிழ்ந்தாரோ அந்த மனைவி மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆட்சி போன்ற அனைத்தையும் துறந்தார். எல்லாப் பற்றுக்களையும் நீங்கி முற்றிலும் துறவியானார். அவரது இதயம் தூய்மையடைந்தவுடன், முழுமுதற் கடவுளின் திருவிளையாடலுக்கான இடமாக அது மாறியது. இவ்வாறு அவரால் ஆன்மீக வாழ்க்கையென்னும் கிருஷ்ண உணர்வுப் பாதைக்குத் திரும்பி வர முடிந்தது. மேலும் நாரத முனிவரின் கருணையினால் தான் ஏற்கனவே எய்தியிருந்த நிலையினையும் அவரால் மீண்டும் அடைய முடிந்தது.
பதம் 5.1.39 : பிரியவிரதனின் மன்னன் செயல்களைப் பற்றிய சுலோகங்கள் ஏராளமாக இருக்கின்றன:
“பிரியவிரத மன்னன் செய்ததை முழுமுதற் கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. மகாராஜா பிரியவிரதன் இரவின் இருளை நீக்கினார். அவர் தனது இரதத்தின் சக்கரங்களினால் ஏழு கடல்களை உண்டாக்கினார்”.
பதம் 5.1.40 : “பல்வேறு மக்களிடையே நிலவிய சண்டை சச்சரவுகளை நிறுத்துவதற்காக பிரியவிரத மன்னன் நதிகள், மலைகள், வனங்களுக்கிடையே எல்லைகளை உண்டாக்கினார். அதன்பின்னர் ஒருவர் சொத்தின்மீது மற்றொருவர் சொந்தங் கொண்டாட முடியாது போயிற்று”.
பதம் 5.1.41 : “மாமுனிவர் நாரதரின் சிறந்த அடியவரும் சிறந்த பக்தருமான பிரியவிரத மன்னன் மேல் உலகிலோ கீழ் உலகிலோ அல்லது மனிதர்கள் வாழும் பூமியிலோ பலன் தரும் செயல்களின் மூலம் தான் எய்திய வளங்கள் அனைத்தையும் நரகத்திற்குச் சமமாகவே கருதினார்.