அத்தியாயம் – 9
துருவ மகாராஜன் இல்லம் திரும்புதல்
பதம் 4.9.1 : மாமுனிவர் மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்: முழுமுதற் கடவுளின் உறுதிமொழியினைக் கேட்டுத் தேவர்கள் அனைவரும் தங்கள் அச்சம் நீங்கி அவரைத் தொழுது தங்களுக்குரிய தேவலோகங்களுக்குத் திரும்பிச் சென்றனர். சகஸ்ரஸீர்ஷா அவதாரத்திற்கும் தனக்கும் வேறுபாடில்லாத பகவான் தனது கருட வாகனத்தின் மீது அமர்ந்து தனது தொண்டனான துருவனைக் காண்பதற்கு மதுவனம் காட்டிற்குச் சென்றார்.
பதம் 4.9.2 : துருவ மகாராஜா தனது மனதில் ஆழ்ந்து தியானித்த பகவானின் உருவமானது மின்னலைப் போன்று ஒளிமயமானது. கண நேரத்தில் அவர் மனதினின்று அது மறைந்தது. அதனால் அவர் தியானம் தடைப்பட்டது. துருவன் குழப்பமடைந்தார். ஆனால் அவர் விழிதிறந்து பார்த்தபொழுது அவர் மனதிலிருந்த அதே முழுமுதற் கடவுள் அவர் கண்ணெதிரே நின்று கொண்டிருந்தார்.
பதம் 4.9.3 : தன் கண்ணெதிரே பகவானைக் கண்டவுடன் துருவ மன்னன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி அவருக்கு மரியாதைகளையும், வணக்கங்களையும் செலுத்தி நெடுஞ்சாண்கிடையாக அவர் கால்களில் வீழ்ந்து அவர் மீது கொண்ட அன்பினால் அப்படியே கரைந்து போனார். துருவ மன்னன் மெய்மறந்த நிலையில் பகவானை நோக்கித் தன் கண்களினாலேயே அவர் எழிலினைப் பருகினார். பகவானது திருவடித் தாமரைகளைத் தன் இதழ்களினால் முத்தமிட்டு அவரைத் தன் இரு கரங்களினாலும் கட்டித் தழுவிக் கொண்டார்.
பதம் 4.9.4 : துருவ மன்னர் சிறுவனாக இருந்தபோதிலும் முழுமுதற் கடவுளைச் சிறந்த வார்த்தைகளினால் வழிபட வேண்டுமென்று விரும்பினார். அவர் அனுபவமில்லாதவர். எனவே அவரால் உடனே தன்னிலைக்கு வர முடியவில்லை. அனைவரது உள்ளங்களிலும் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுள், துருவ மன்னனின் இக்கையறு நிலையினைப் புரிந்து கொண்டார். அவர் தமது காரணமற்றக் கருணையினால் தன்முன்னே குவித்த கைகளுடன் நின்று கொண்டிருந்த துருவ மன்னனின் முன் தலையினைத் தன் கையிலிருந்த சங்கினால் தொட்டார்.
பதம் 4.9.5 : அச்சமயத்தில் துருவ மன்னர் வேதங்களின் முடிவினையும் முழு மெய்ப்பொருளின் உணர்வினையும், அதற்கு உயிர்களுடன் உள்ள உறவினையும் நன்கு அறிந்து கொண்டார். மிகவும் பந்துப்பட்ட புகழினை உடைய பரமபுருஷ பகவானுக்குரிய பக்தித் தொண்டிற்கேற்ப யுக அழிவுக் காலத்தில் கூட அழியாத உலகத்தை எதிர்காலத்தில் பெறப்போகும் துருவ மன்னர் தமது ஆழ்ந்த முடிவான வழிபாடுகளைச் செலுத்தினார்.
பதம் 4.9.6 : துருவ மன்னர் கூறினார்: போற்றுதலுக்குரிய பகவானே! நீர் அனைத்து சக்திகளும் வாய்க்கப் பெற்றவர். நீர் என்னுள்ளே புகுந்து உமது கரங்களையும், கால்களையும், செவிகளையும், தொடும் உணர்வினையும், உயிர்ச்சக்தியினையும் குறிப்பாக எனது பேசும் சக்தியினையும் உயிர்ப்பித்தீர். எனது மரியாதைக்குரிய வழிபாடுகளை உமக்குச் செலுத்துதற்கு அருள்புரிவீராக.
பதம் 4.9.7 : போற்றுதலுக்குரிய பகவானே! நீரே பரம்பொருள், ஆனால் உமது பல்வேறு வகைச் சக்திகளினால் நீர் ஆன்மீக மற்றும் இப்பௌதீக உலகங்களில் வேறு வேறாகத் தோன்றுகின்றீர். நீர் உமது புறச் சக்தியினால் இப்பௌதீக உலகின் முழுச்சக்தியை படைக்கிறீர். அதன்பிறகு உலகினுள் நீர் பரமாத்மாவாக நுழைகின்றீர். நீரே பரமபுருஷர்; மேலும் நீர் இயற்கையின் தற்காலிக குணங்களினால், நெருப்பு பல்வேறு வடிவுடைய விறகுகளில் எரியும்பொழுது பல்வேறு வகையாகத் தோன்றுகிறதோ அதுபோல் நீவிரும் பல்வேறு வகையாகத் தோற்றங்களைப் படைக்கின்றீர்.
பதம் 4.9.8 : ஓ நாதரே, பிரம்ம தேவன் முற்றிலும் உம்மையே சரணடைந்திருக்கின்றார். ஆரம்பத்தில் நீர் அவருக்கு அருளிய ஞானத்தினாலேயே ஒருவன் எவ்வாறு உறக்கத்தினின்று எழுந்தவுடன் தனது காலைக் கடமைகளைப் பற்றி நினைப்பானோ அது போன்று அவரால் இப்பிரபஞ்சத்தினைப் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது, விடுதலையினை விரும்பும் மனிதர்களுக்கு நீரே அடைக்கலமாகவும், வருந்துவோர்களுக்கு நீரே நண்பராகவும் விளங்குகின்றீர். அவ்வாறிருக்க நிறைந்த மதியுடைய அறிஞனால் எவ்வாறு உம்மை மறக்க இயலும்?
பதம் 4.9.9 : இத்தோல் பொதியின் புலனுகர்ச்சிகளுக்காக உம்மை வழிபடுபவர்கள், நிச்சயம் உமது மாயா சக்தியினால் பாதிக்கப்பட்டவர்களே ஆவர். விரும்பியதைத் தரும் கற்பக விரும்சம் போன்றவரும், பிறப்பு இறப்பிலிருந்து விடுவிப்பவருமாகிய உம்மை அடைவதற்குப் பதிலாக, மூடர்கள், நரகத்தில் உழலும் வாழ்க்கை நிலை பெற்றவர்களுக்கும் கிடைப்பதான புலனுகர்ச்சிகளுக்குரிய வரங்களை உம்மிடம் இருந்து பெற விரும்புகின்றனர்.
பதம் 4.9.10 : வழிபாட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய பகவானே, உமது திருவடித் தாமரைகளை தியானிப்பதினாலும் தூய பக்தர்களிடமிருந்து உமது புகழினைக் கேட்பதினாலும் பெறும் அளவற்ற மகிழ்ச்சியானது பரம்பொருளான அருவமான பிரம்மத்துடன் ஒருவன் இணைவதினால் பெறும் தேவசுகத்தினை விட மிகவுயர்ந்ததாகும். அப்பிரம்மானந்தமும் பக்தித் தொண்டிலிருந்து பெறும் உன்னத ஆனந்தத்திற்கு ஈடாகாதென்றால், காலமென்னும் கூர்வாளினால் வெட்டிச் சாய்க்கப்படும் நிலையில்லாத தேவலோகங்களுக்குச் செல்வதினால் ஒருவன் என்னதான் தேவலோகத்திற்கு உயர்த்தப்பட்டாலும் உரிய காலத்தில் அவன் மீண்டும் கீழே வீழ்வான்.
பதம் 4.9.11 : துருவ மகாராஜா தொடர்ந்து கூறினார்: ஓ, அளவிறந்த பகவானே, ஆற்றின் அலைகள் தொடர்ந்து வீசுவதுபோல் உமது உன்னதமான அன்புத் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் சிறந்த பக்தர்களுடன் நான் தொடர்பு கொள்ளுமாறு எனக்கு நீர் அருள்புரிதல் வேண்டும். இதுபோன்ற உன்னதமான பக்தர்கள் முற்றிலும் மாசற்ற வாழ்க்கை நிலை உடையோராக இருக்கின்றனர். பக்தித் தொண்டு புரிவதின் பலனாக தீயின் நாக்குகளைப் போன்று அபாய அலைகளினால் நிரப்பப்பட்டிருக்கும் உலக வாழ்க்கை என்னும் அறியாமைக் கடலினை என்னால் நிச்சயமாக நீந்திக் கடக்க முடியும். இது என்னால் ஆகக்கூடியதே ஏனெனில் என்றும் நித்தியமாக இருக்கும் உமது கல்யாணக்குணங்கள் மற்றும் திருவிளையாடல்களைக் கேட்பதற்கு நான் பித்தனாகியுள்ளேன்.
பதம் 4.9.12 : ஓ, தாமரையினை உந்திச் சுழியாக உடைய பகவானே, ஒருவன், எப்போதும் உமது தாமரைத் திருவடிகளையும் அதிலிருந்து வரும் நறுமணத்தையும் நாடும் பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பினால் உடலின் மீதும், அவ்வுடலுடன் கூடிய உறவினால் வரும் சந்ததியினர், நண்பர்கள், குடும்பம், செல்வம் மற்றும் மனைவி போன்ற லோகாயத மனிதர்களுக்கு மிகமிக விருப்பமானவைகளான இவற்றின் மீதும் பற்று வைப்பதில்லை. ஏன் உண்மையில் அவன் அவற்றை லட்சியப்படுத்துவதுகூட இல்லை.
பதம் 4.9.13 : போற்றுதலுக்குரிய பகவானே, ஓ, பிறவாத பரம்பொருளே! பல்வேறு வகை உயிர்களான, விலங்குகள், மரங்கள், பறவைகள், ஊர்வன, தேவர்கள் மற்றும் மனிதர்கள் யாவும் உமது பௌதீக சக்தியின் காரணமாகத் தோன்றிய இப்பிரபஞ்சமும் யாங்கணும் பரந்து பட்டிருக்கின்றன என்பதை நான் நன்கறிவேன். மேலும் இவை சில நேரங்களில் வெளிப்படுகின்றன, சில நேரங்களில் வெளிப்படாதிருக்கின்றன என்பதையும் நான் அறிவேன்; ஆயினும் எனது முன்னால் நிற்கின்ற உமது பரம வடிவத்தினைப் பார்க்கின்ற அனுபவம் எனக்கு முன்பு வாய்த்ததே இல்லை. இப்போது அனைத்துவிதக் கற்பனைக் கோட்பாடுகளும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டன.
பதம் 4.9.14 : வணங்குதற்குரிய பகவானே, ஒவ்வொரு கல்பத்தின் இறுதியிலும் முழுமுதற் கடவுளான கர்போதகஸாயீ விஷ்ணு இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கலைத்துத் தன் வயிற்றினுள் அடக்கிக் கொள்கிறார். அவர் தனது நாகத்தின் மேல் பள்ளிகொண்டிருப்பார். அவரது உந்திச்சுழியில் இருந்து தண்டுடன் கூடியத் தங்கத்தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதில்தான் பிரம்மதேவன் படைக்கப்பட்டார். அம்முழுமுதற் கடவுள் நீரே என்பதை நான் அறிந்து கொண்டேன், ஆகையினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.
பதம் 4.9.15 : போற்றுதற்குரிய பகவானே, உமது தடையில்லாத உன்னதமான பார்வையினால் நீர் அனைத்து மதியுடைச் செயல்களையும் பார்க்கின்ற பரம சாட்சியாக விளங்குகின்றீர். நீர் நித்திய முக்தர், நீர் சுத்த சத்துவ குணத்தில் நிலை பெற்றிருக்கின்றீர். நீரே எந்தவித மாற்றமுமில்லாதப் பரமாத்மாவும் ஆவீர். நீரே ஆறு வளங்களையும் உடைய ஆதி முழுமுதற் கடவுள். மேலும் ஜட இயற்கையின் முக்குணங்களின் நித்திய நாயகரும் நீரே ஆவிர். இவ்வாறு நீர் எப்போதும் பிற உயிர்களிடமிருந்து வேறுபட்டிருக்கின்றீர். பகவான் விஷ்ணுவாக நீர் பிரபஞ்சத்தின் அனைத்தையும் காக்கின்றீர். ஆயினும் நீர் தனித்தே இருக்கின்றீர். மேலும் அனைத்து வேள்விகளின் பலன்களை அனுபவிப்பவரும் நீரே ஆவிர்.
பதம் 4.9.16 : போற்றுதற்குரிய பகவானே, உமது அருவ வெளிப்பாட்டில் இரண்டு எதிரெதிர் கூறுகள் உள்ளன ஞானம் மற்றும் அஞ்ஞானம். உமது பல்வேறு சக்திகளும் தொடர்ந்து வெளிப்படுகின்றன. ஆனால் அருவமான பிரம்மமோ பிரிக்கவொண்ணாதது, உண்மையானது, மாற்றமில்லாதது, அளவிறந்தது, ஆனந்தமானது. அதுவே பௌதீகத் தோற்றத்திற்குக் காரணமானதுமாகும். நீரே அவ்வுருவ பிரம்மம் ஆதலினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் செலுத்துகிறேன்.
பதம் 4.9.17 : எந்தன் தேவனே, ஓ, பரமபுருஷ பகவானே, நீரே அனைத்து நல்லாசிகளின் பரம வடிவமாகத் திகழ்கின்றீர். ஆகையினால் மன்னராகி மாநிலத்தை ஆளுவதைக் காட்டிலும் எவ்வித இச்சையுமின்றி உமது பக்தித் தொண்டிற்கு அடிமையாகி உமது தாமரைத் திருவடிகளைத் தொழுவது சாலச்சிறந்ததாகும். உமது தாமரைத் திருவடிகளை வழிபடுவதன் பயனே அது. என் போன்ற அறியாப் பக்தர்களுக்கு நீரே, ஒரு பசு தனக்குப் பிறந்த புதிய கன்றுக்குட்டிக்குப் பால் கொடுத்து அதனை எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் காக்கிறதோ அதுபோல் காக்கின்ற கருணைக்கடலாக விளங்குகின்றீர்.
பதம் 4.9.18 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, உள்ளத்தில் நல்லெண்ணமுடைய துருவ மன்னர் தன் வழிபாட்டினை முடிந்தவுடன், தன் பக்தர்களிடமும் ஊழியர்களிடமும் மிகுந்த அன்புடைய பரமபுருஷ பகவானான முழுமுதற் கடவுள் அவரைப் பாராட்டிப் பின்வருவனவற்றைக் கூறினார்.
பதம் 4.9.19 : முழுமுதற் கடவுள் கூறினார்: அன்பார்ந்த அரசகுமார, துருவனே, புனிதமான விரதங்களை நீ நிறைவேற்றியிருக்கிறாய், உனது உள்ளத்திலுள்ள ஆசையாதென எனக்குத் தெரியும். உன் ஆசை பேராசையாகவும், நிறைவேறுவதற்கு அரியதாயினும் கூட, அது நிறைவேறுவதற்கு நான் துணை புரிவேன். உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகட்டும்.
பதங்கள் 4.9.20 – 4.9.21 : முழுமுதற் கடவுள் தொடர்ந்து கூறினார்: எனதன்பு துருவனே, உனக்கு நான் வடமீன் என்றறியப்படும் ஒளிமிகுந்த கிரஹத்தினைப் பரிசாக அளிக்கப் போகிறேன். அது கல்ப இறுதியின் அழிவுக் காலத்திலும் கூட தொடர்ந்து அழியாதிருக்கும். இந்த உலகினை இது வரை யாரும் ஆண்டதில்லை. அது அனைத்துச் சூரியக்குடும்பங்களினாலும், கிரஹங்களினாலும், விண்மீன்களாலும் சூழப்பட்டிருக்கும். செக்கினை காளைமாடுகள் எங்ஙனம் சுற்றிவருகின்றனவோ, அது போல் வானிலுள்ள அனைத்து ஒளிக் கோளங்களும் இக்கிரஹத்தைச் சுற்றிவரும். இவ்வடமீனைத் தம் வலப்புறமாகக் கொண்டு தர்மன், அக்கினி, காச்யபர் மற்றும் சுக்கிராச்சாரியார் போன்ற மகாமுனிவர்கள் வாழும் கிரஹங்கள் இக்கிரஹத்தைச் சுற்றிவரும். அனைத்துக் கிரஹங்களும் அழிக்கப்பட்டப் பிறகும் கூட இக்கிரஹம் நிலையாக இருக்கும்.
பதம் 4.9.22 : உன் தந்தை தன் ஆட்சியினை உனக்களித்து வனம் சென்றபிறகு நீ தொடர்ந்து முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் இந்நிலவுலகம் முழுவதையும் ஆள்வாய். உனது புலன்கள் அனைத்தும் இப்போதிருக்கின்ற வலிமையுடனேயே தொடர்ந்து இருக்கலாம். உனக்கு முதுமை என்பதே கிடையாது.
பதம் 4.9.23 : பகவான் தொடர்ந்து கூறினார்: எதிர்காலத்தில் உன் சகோதரன் உத்தமன் காட்டிற்கு வேட்டையாடச் செல்வான், வேட்டையில் அவன் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் பொழுது கொல்லப்படுவான். உனது மாற்றாந்தாயான சுருசி தன் புதல்வன் இறந்த துக்கத்தினால் பைத்தியம் பிடித்து அவனைத் தேடிக் காட்டிற்குச் செல்வாள். ஆனால் அவள் காட்டுத்தீயினுக்கு இரையாவாள்.
பதம் 4.9.24 : பகவான் தொடர்ந்து கூறினார்: நானே அனைத்து வேள்விகளின் இதயமாக விளங்குகிறேன். நீ மிகப் பெரிய வேள்விகளையும் மிகச் சிறந்த தானதருமங்களையும் செய்பவனாக விளங்குவாய். இவ்வாறு உன் வாழ்வில் நீ உலக மகிழ்ச்சியின் ஆசிகளை அனுபவிக்கக் கூடியவனாக இருப்பாய். மேலும் உனது மரணத்தின் போது கூட நீ என்னை நினைப்பவனாக விளங்குவாய்.
பதம் 4.9.25 : முழுமுதற் கடவுள் தொடர்ந்து கூறினார்: அன்புத் துருவனே, இவ்வுடல் கொண்ட ஜட வாழ்வை நீ நீத்தபிறகு சர்வலோக வாசிகளாலும் துதிக்கப்படும் எனது உலகத்தை அடைவாய். அது சப்த ரிஷி மண்டலத்திற்கும் மேலாக இருக்கிறது. அதனை நீ அடைந்த பிறகு இந்த உலகிற்கு மீண்டும் திரும்பி வரமாட்டாய்.
பதம் 4.9.26 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: துருவ மன்னரால் துதிக்கவும் மரியாதையும் செய்யப்பட்டு தமக்குரிய மண்டலத்தை அவருக்கு அளித்த பிறகு, பகவான் விஷ்ணு கருட வாகனத்தின் மீது ஏறி துருவ மன்னர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தமது இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
பதம் 4.9.27 : தனது தீர்மானத்திற்கேற்ப பகவானின் தாமரைத் திருவடிகளைத் தொழுது விரும்பிய பலனை பெற்றப்பிறகும் கூட, துருவ மன்னர் அதிக மகிழ்ச்சியடைந்துவிடவில்லை. இவ்வாறு அவர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார்.
பதம் 4.9.28 : ஸ்ரீ விதுரர் கேட்டார்: மரியாதைக்குரிய அந்தணரே, பகவானின் இருப்பிடம் அடைவதற்கரியது. அது தூய பக்தித் தொண்டினால் மட்டுமே அடையக் கூடியது; காரணம் அது ஒன்றே கருணைமிக்க பகவானுக்கு மிகவும் விருப்பமானதாகும். தனது ஒரு பிறவியிலேயே துருவ மன்னர் அந்நிலையினை எய்தி விட்டார். மேலும் அவர் மிகுந்த ஞானமும் மனச்சான்றும் மிக்கவர். பிறகு ஏன் அவர் மகிழ்ச்சியடையவில்லை?
பதம் 4.9.29 : மைத்ரேயர் பதில் கூறினார்: தனது மாற்றாந்தாயின் கொடுஞ்சொற்கள் என்னும் அம்புகளினால் துளைக்கப்பட்டிருந்த துருவ மன்னனது இதயம் மிகவும் துயரமடைந்திருந்தது. அவர் தனது வாழ்க்கை லட்சியத்தில் உறுதியாக நிலைபெற்றிருந்த போதிலும் அவளது தவறான நடத்தையினை அவரால் மறக்க முடியவில்லை. அவர் இந்த உலகிலிருந்து உண்மையான விடுதலையினைக் கேட்கவில்லை. மாறாகத் தனது பக்தித் தொண்டின் முடிவில் முழுமுதற் கடவுள் தன் முன் காட்சியளித்தபொழுது தன் மனதில் உலகியல் தேவைகள் இருந்தமைக்காக மிகவும் நாணினார்.
பதம் 4.9.30 : துருவ மன்னர் தனக்குள் எண்ணினார்: பகவானின் தாமரைத் திருவடிகளின் நிழலில் இருப்பதற்காகச் செய்யப்படும் முயற்சியானது அத்துணை எளிதானதன்று. ஏனெனில் சமாதி நிலையில் அட்டாங்க யோகத்தினால் பயிற்சி செய்த சனந்தனரின் தலைமையின் கீழுள்ள நான்கு பிரம்மச்சாரிகளும் பகவானின் திருவடித் தாமரைகளின் அடைக்கலம் பெற்றது பற்பலப் பிறவிகளுக்கு அப்பால்தான். ஆறு மாதங்களில் அவர்கள் அடைந்ததை நான் அடைந்திருக்கிறேன். ஆயினும் பகவானுக்கு மாறாக எனது சிந்தனையிருந்ததினால் நான் என் நிலையினின்றும் தாழ்ந்து போய்விட்டேன்.
பதம் 4.9.31 : அந்தோ, என்னைப் பாருங்கள்! நான் எத்தனை நல்வாய்ப்பு அற்றவன்! பிறப்பு இறப்புத் தளையினைத் துண்டிக்க கூடிய பகவானின் தாமரைத் திருவடிகளை அணுகியும் எனது புத்தியின்மையினால் நான் அழியக்கூடியப் பொருட்களை வேண்டி வணங்கிவிட்டேனே.
பதம் 4.9.32 : தேவலோகங்களில் வாழும் அனைத்துத் தேவர்களும் ஒரு நாள் கீழுலகிற்குத் திரும்பவும் வரக்கூடியவர்களே, பக்தித் தொண்டினால் நான் வைகுண்ட லோகத்திற்கு உயர்த்தப்படுவதற்கு அவர்கள் அனைவரும் பொறாமை கொண்டுள்ளனர். அதனால் சகிப்புத் தன்மையில்லாத தேவர்கள் எனது மதியினைக் கெடுத்துவிட்டனர். இதன் காரணமாகவே நாரத முனிவர் அருளிய அறிவுரை என்னும் வரத்தினை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது போய்விட்டது போலும்.
பதம் 4.9.33 : துருவ மன்னர் இவ்வாறு வருந்தினார்: நான் மாயையின் கோரப் பிடியில் சிக்கிவிட்டேன்; உண்மை என்னவென்று அறியாததினால் நான் அதன் மடியில் தூங்கிவிட்டேன். இருவேறு பார்வை பெற்றதினால் என் மனதிலும் இவ்வாறு “அவர்கள் எனது எதிரிகள்” என்றெண்ணி வருந்தினேன்.
பதம் 4.9.34 : முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியமாகும், இப்பிரபஞ்சத்தின் பரமாத்மாவினையே நான் திருப்திப்படுத்தியிருந்தும் பயனற்றவைகளை வேண்டி நான் வணங்கிவிட்டேன். எனது செயல் இறந்துவிட்ட ஒருவனுக்கு மருத்துவம் பார்த்தது போலாகி விட்டது. எனது துரதிர்ஷ்டத்தினைப் பாருங்கள் பிறப்பு, இறப்புச் சுழற்சியிலிருந்து வெளியேற்றுபவரான பரமபுருஷ பகவானைச் சந்தித்தும் அதே சுழற்சியில் மீண்டும் சிக்கிக் கொள்வதற்கான வரத்தைக் கேட்டுவிட்டேன்.
பதம் 4.9.35 : எனது மூடத்தனத்தினாலும் புண்ணியக்குறைவினாலும் பகவான் அவருக்குத் தொண்டு செய்யும் அரிய வாய்ப்பினை எனக்களித்தும் நான் உலகத்தின் புகழ், செல்வம் போன்றவற்றை விரும்பி விட்டேன். எனது செயல், ஏழை ஒருவன் ஒரு பேரரசரைத் திருப்திப்படுத்தினால் பதிலுக்கு என்ன வேண்டுமென்று அரசர் கேட்க அவன் அறியாமையினால் உமி நீக்கப்பட்ட நொய்யரிசித் துணுக்குகளைக் கேட்டக் கதை போலாகி விட்டது.
பதம் 4.9.36 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: எனதன்புக்குரிய விதுரனே, உன் போன்று முகுந்தனது தாமரைத் திருவடிகளின் தூய பக்தர்கள் (முக்தியளிக்கக் கூடிய முழுமுதற் கடவுள்) அவரது தாமரைத் திருவடிகளிலுள்ள அருளின்மீது பற்றுடையவர்கள். மேலும் பகவானின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வதின் மூலமே எப்போதும் திருப்தியடைகின்றார். இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையிலும் திருப்தியடைபவர்களே. ஆதலினால் அவர்கள் பகவானிடம் இருந்து பொருள் வளங்களைக் கேட்பதே இல்லை.
பதம் 4.9.37 : மன்னன் உத்தானபாதன் தன் மைந்தன் துருவன் மீண்டும் அரண்மனைக்குத் திரும்பி வரும் செய்தி கேள்விப்பட்டான். இறந்தவன் உயிர்த்தெழுதல் போன்றதா ஆதலினால் அச்செய்தியினை மன்னனால் நம்பமுடியவில்லை. அவர் தன்னை ஓர் இழிந்தவராகவேக் கருதினார். ஆதலினால் இது போன்ற நல்யோகத்தினைத் தானடைவது கடினம் என்றும் நினைத்தார்.
பதம் 4.9.38 : தூதரின் வார்த்தைகளை நம்ப முடியாவிட்டாலும் நாரத முனிவரின் வார்த்தைகளில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. அதனால் அச்செய்தியினால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். மேலும் அவர் முழுத்திருப்தியுடன் அச்செய்தி கொண்டு வந்த தூதருக்குத் தன் கழுத்திலிருந்த விலையுயர்ந்த முத்து மாலையினைப் பரிசாக அளித்தார்.
பதங்கள் 4.9.39 – 4.9.40 : தனது மைந்தனைக் காணும் பேராவலுடன் மன்னர் உத்தானபாதன் தங்கச்சரிகைகளினால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உயர்ந்த சாதிப் புரவிகளைப் பூட்டி அதில் ஏறினார். கற்றறிந்த அந்தணர்கள், குடும்பத்துப் பெரியவர்கள், நண்பர்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு நகரை விட்டு நீங்கினார். தன் ஊர்வலத்தினை இவ்வாறு தொடங்கிய பொழுது சங்குகளும், துந்துபிகளும், குழல்களும் ஒலித்தது. அவற்றோடு வேத மந்திரங்களின் ஒலியும் முழங்கி நன்நிமித்தங்களைக் காட்டின.
பதம் 4.9.41 : மன்னர் உத்தானபாதனின் பட்டத்து ராணிகளான சுனீதி, மற்றும் சுருசியும். அவரது மற்றொரு மைந்தனான உத்தமனும் அவ்வூர்வலத்தில் வந்தனர். அரசியர் இருவரும் ஓர் அழகான பல்லக்கில் வந்தனர்.
பதங்கள் 4.9.42 – 4.9.43 : துருவமன்னன் அருகிலுள்ள உபவனத்தில் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்த மன்னர் உத்தானபாதன் விரைந்து தன் இரதத்தினின்று கீழே இறங்கினார். நீண்ட காலமாகத் தன் மைந்தன் துருவனைக் காண வேண்டுமென்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே மிகுந்த பாசத்துடனும் நேசத்துடனும் நீண்டநாள் காணாத தன் மைந்தனை நீண்டதொரு பெருமூச்சுடன் மார்புறத் தழுவிக் கொண்டார். ஆனால் துருவ மகாராஜா முன்பு போல் இல்லை; அவர் முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகள் தன் மீது பட்டதினால் பெற்ற ஆன்மீக வளர்ச்சியினால் முற்றிலும் புனிதமடைந்திருந்தார்.
பதம் 4.9.44 : மைந்தன் துருவனுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற மன்னர் உத்தானபாதனின் நெடுநாளைய விருப்பம் நிறைவேறியதினால் அவர் துருவனை மீண்டும் மீண்டும் உச்சி முகர்ந்து பெருகி வந்த ஆனந்தக் கண்ணீரினால் நீராட்டினார்.
பதம் 4.9.45 : பின்னர் சான்றோர் அனைவரினும் மிகச்சிறந்த துருவ மன்னர் தன் தந்தையின் காலடியில் வீழ்ந்து வணங்கித் தன் தந்தையுடன் உரையாடி அவரால் பெருமதிப்புப் பெற்றார். பிறகு தன் இரு அன்னையரின் பாதங்களிலும் வீழ்ந்து வணங்கினார்.
பதம் 4.9.46 : துருவ மன்னரின் சிற்றன்னையான சுருசி அவ்வறியாச் சிறுவன் தன் பாதங்களில் விழுந்து பணிந்ததை கண்டவுடன் இருகைகளாலும் அவரை அள்ளி எடுத்துத் தழுவிக் கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் பெருக உணர்ச்சி மேலீட்டினால் கம்மிய குரலில் “அன்பு மகனே நீ நீண்ட நாள் வாழ்வாயாக” என்று வாழ்த்தினாள்.
பதம் 4.9.47 : முழுமுதற் கடவுளுடன் கொண்ட நட்பினால் உன்னத குணங்கள் வாய்க்கப் பெற்ற ஒருவருக்கு, பள்ளத்தை நோக்கி ஆற்று நீர் இயற்கையாகவேப் பாய்ந்து செல்வதைப் போல், உயிர்கள் அனைத்தும் அவருக்கு மரியாதை அளிப்பர்.
பதம் 4.9.48 : இரு சகோதரர்களாக உத்தமனும் துருவ மன்னனும் தங்கள் கண்ணீரைப் பரிமாறிக் கொண்டனர். அன்பினாலும் பாசத்தினாலும் அவர்கள் இருவரும் மெய்மறந்து ஒருவரையொருவர் மயிர்க்கூச்செறியக் கட்டுத்தழுவிக் கொண்டனர்.
பதம் 4.9.49 : துருவ மன்னனைப் பெற்றெடுத்த அன்னையான சுனீதி தன் உயிரைக் காட்டிலும் அவர் மீது அதிகப் பிரியமுடையவள் ஆவாள். அவள் அவரை ஆவிசேர அணைத்துக் கொண்டாள். அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்ததினால் தனது உலகத் துன்பங்கள் அனைத்தையும் மறந்து போனாள்.
பதம் 4.9.50 : எனதன்பு விதுரனே, சுனீதி மிகச் சிறந்த வீரனைப் பெற்றெடுத்த தாயாவாள். அவன் கண்களிலிருந்து பெருகியக் கண்ணீருடன், மார்பகங்களில் இருந்து சுரந்த பாலும் கலந்து துருவ மகாராஜாவை நனைத்தது. இது மிகச் சிறந்த மங்கல அறிகுறியாகும்.
பதம் 4.9.51 : குடிமக்கள் அனைவரும் அரசியிடம் புகழ்ந்து கூறினர்: மதிப்பிற்குரிய மகாராணியே! நீண்ட நாட்களுக்கு முன்னர் தொலைந்துபோன உங்கள் பாசத்திற்குரிய செல்வ மகன் நீங்கள் செய்த புண்ணியத்தினால் இப்பொழுது திரும்பி வந்திருக்கிறார். இதிலிருந்து உங்கள் மைந்தன் அதிககாலம் உங்களைக் காப்பாற்றுவார் என்றும், உங்கள் உலகத் துன்பங்கள் அனைத்தையும் போக்குவார் என்றும் தெரிகிறது.
பதம் 4.9.52 : அன்பிற்குரிய மகாராணி அவர்களே, நீங்கள், மிகப் பயங்கர அழிவினின்றுத் தன் பக்தர்களைக் காப்பாற்றும் முழுமுதற் கடவுளை வணங்கியிருக்க வேண்டும். அவரைத் தொடர்ந்து வணங்குவோர் பிறப்பு, இறப்பு தொடர்ச்சியினைக் கடப்பர். இந்நிறைவினை எய்துதல் மிகவும் கடினமானதாகும்.
பதம் 4.9.53 : மைத்ரேய முனிவர் தொடர்ந்து கூறினார்: என் அன்பிற்குரிய விதுரனே, துருவ மன்னரை அனைவரும் இவ்வாறு புகழ்ந்ததினால் மன்னர் மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவர் துருவனையும் அவர் சகோதரனையும் ஒரு பெண்யானையின் மீது அமரச் செய்தார். பின்னர் தன் தலைநகர் திரும்பினார். அங்கும் பல்வேறு மக்களால் அவர் பாராட்டப்பட்டார்.
பதம் 4.9.54 : நகர் முழுவதும் அங்குமிங்கும் பெருங்குலைகளும், பூக்களுமுடைய வாழைமரங்களினாலும்; பாக்கு மரங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மீன்போன்ற வடிவினையுடைய மகர தோரண வாயில்கள் பலவிடங்களில் காணப்பட்டன.
பதம் 4.9.55 : ஒவ்வொரு வாயிலிலும் குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பூரண கும்பங்கள் மலர்களாலும், முத்துக்களாலும், வண்ணத் துணிகளாலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
பதம் 4.9.56 : தலைநகரிலுள்ள வாயில்கள் மற்றும் சுற்றுசுவர்கள் போன்ற எல்லா இடங்களும் ஏற்கனவே எழிலுடையவை. ஆயினும் இவ்விழாவிற்காக அவை பொன்னாபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மாளிகைகளின் கோபுரக்கவசங்கள் மின்னின. அதுபோல் வானில் சுற்றிப் பறந்து கொண்டிருந்த ஆகாய விமானங்களும் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் எழில் மிக்கவையாக இருந்தன.
பதம் 4.9.57 : நகரின் அனைத்து நான்கு முனை சந்திப்புகள், வீதிகள் மற்றும் உயர்ந்த மேடைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு சந்தனநீர் தெளிக்கப்பெற்றிருந்தன. அட்சதைக்குரியத் தானியங்களான அரிசி, வாற்கோதுமை போன்றவையும் பழங்களும், மலர்களும், மங்கலப் பரிசுப் பொருட்களும் நகரெங்கணும் பரவலாக வைக்கப்பட்டிருந்தன.
பதங்கள் 4.9.58 – 4.9.59 : துருவ மகாராஜா ஊர்வலம் சென்றபொழுது, அவரைக் காண வேண்டுமென்று அங்கே குழுமியிருந்த குலப் பெண்கள் அவர் மீது கொண்ட பாசத்தினால் வெண்கடுகு, வாற்கோதுமை, தயிர், தண்ணீர், அருகம்புல், பழங்கள், பூக்கள் போன்றவற்றை அவர்மீது பொழிந்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பெண்கள் மங்கல குலவையிட்டு வரவேற்கும்போது, தன் தந்தையின் அரண்மனையினுள் துருவ மன்னர் நுழைந்தார்.
பதம் 4.9.60 : அதன்பிறகு துருவ மன்னர் மதிப்புமிக்க பொன்னாபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் தந்தையின் மாளிகையில் தங்கினார். அவரது பாசத்திற்குரிய தந்தையின் பாதுகாப்பில் அவர் தேவலோகத்திலுள்ள தேவர்களைப் போன்று வாழ்ந்து வரலானார்.
பதம் 4.9.61 : அம்மாளிகையிலுள்ள கட்டில் தந்தத்தினால் செய்யப்பட்டு பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது போடப்பட்டிருந்த மெத்தை பால்நுரை போல் காட்சியளித்தது. மேஜைகளும் நாற்காலிகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.
பதம் 4.9.62 : அரசரின் மாளிகைச் சுவர்கள் பளிங்கினால் கட்டப்பட்டு அதில் நீலமும் வைர வைடூரியங்களும் பதிக்கப்பட்டிருந்தன. மேலும் அதில் அழகிய இளமங்கையர் தங்கள் கரங்களில் இரத்தினத் தீபங்களை ஏந்தியது போன்ற சித்திரங்களும் தீட்டப்பட்டிருந்தன.
பதம் 4.9.63 : அரசரின் மாளிகையைச் சுற்றித் தோட்டங்கள் இருந்தன. அவற்றில் தேவலோகத்திலிருந்து கொண்டுவரப்பட்டப் பல்வகை மரங்கள் இருந்தன. இம்மரங்களின் கிளைகளில் குயில்கள் தங்கள் இணைகளுடன் சேர்ந்து இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கும். வண்டுகளின் இனிமையான ரீங்கார ஒலி எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.
பதம் 4.9.64 : குளக்கரைகளின் படித்துறைகள் மரகதப் பச்சைப் கற்களினால் அமைந்திருந்தன. குளங்களில் பல்வண்ணத் தாமரைகளும், அல்லிகளும், நீலோத்பல மலர்களும் பூத்துச்சிரித்தன. அன்னம், வாத்து, சக்கரவாஹம், செங்கால் நாரை போன்ற பறவைகள் கூட்டங் கூட்டமாக அங்கு காணப்பட்டன.
பதம் 4.9.65 : ராஜரிஷியான உத்தானபாதர் தன் அரச மைந்தன் துருவனின் புகழ்மிக்கச் செயல்களைக் கேட்டும், அவனது செல்வாக்கினை நேரில் அறிந்தும், துருவனின் செயல்கள், அதிசயத்தின் உச்சநிலைக்கு உரியவை என்று உணர்ந்து துருவனின் சிறப்பையும் எண்ணி மிகவும் திருப்தியடைந்தார்.
பதம் 4.9.66 : துருவ மன்னருக்கு அரசினை ஆளும் வயது வந்தவுடன், அமைச்சர்கள், அவரை ஏற்றுக் கொண்டதையும், மக்கள் அவர் மீது மிக்க பாசம் வைத்திருப்பதையும் கண்ட மன்னர் உத்தானபாதன், ஆழ்ந்து சிந்தித்து, துருவ மன்னரை இப்பூமண்டலத்தின் மாமன்னராக முடிசூட்டினார்.
பதம் 4.9.67 : தனது வயது முதிர்ச்சியினையும், ஆத்மாவின் நலனையும் கருத்தில் கொண்டு ஆழ்ந்து சிந்தித்த பிறகு உலகப் பற்றுக்களைத் துறந்து காட்டிற்குச் சென்றார்.