அத்தியாயம் – 8
துருவ மகாராஜா வனம் செல்லுதல்
பதம் 4.8.1
மைத்ரேய உவாச
ஸனகாத்யா நாரதஸ் ச ருபுர் ஹம்ஸோ ‘மணிர் யதி:
நைதே க்ருஹான் ப்ரஹ்ம-ஸுதா ஹி ஆவஸன்ன் ஊர்த்வ–ரேதஸ
மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; ஸனக-ஆத்யா:—சனகரால் தலைமை தாங்கப்பட்டவர்கள்; நாரத:—நாரதர்; ச—மேலும்; ருபு:—ரிபு; ஹம்ஸ:—ஹம்ஸர்; ந—இல்லை; ஏதே—இவர்கள் எல்லாம்; க்ருஹான்—இல்லத்தில்; ப்ரஹ்ம-ஸுதா:—பிரம்மாவின் புதல்வர்கள்; ஹி—உறுதியாக; ஆவஸன்—வாழ்ந்தனர்; ஊர்த்வ-ரேதஸ:—தவறிழைக்காதப் பிரம்மச்சாரிகள்.
மைத்ரேய மாமுனிவர் கூறினார்: சனக மகாராசாவின் மிகச் சிறந்த நான்கு குமாரர்களும், மற்றும் நராதர், ரிபு, ஹம்ஸர், அருணி, யதி போன்ற பிரம்ம தேவனின் புதல்வர்களும் இல்லற வாழ்க்கை நீங்கி “ஊர்த்வ ரேதா” அல்லது தவறிழைக்காத பிரம்மச்சாரியம் எனப்படும் நைஷ்டிக பிரம்மச்சாரிகளாக வாழ்ந்தனர்.
பதம் 4.8.2
ம்ருஷாதர்மஸ்ய பார்யாஸீத் தம்பம் மாயாம் ச ஸத்ரு-ஹன்
அஸுத மிதுனம் தத் து நிர்ருதிர் ஜக்ருஹே ‘ப்ரஜ:
ம்ருஷா—மிருஷா; அதர்மஸ்ய—அதர்மம்; பார்யா—மனைவி; ஆஸீத்—இருந்து; தம்பம்—மோசடி; மாயாம்—ஏமாற்று; ச—மேலும்; ஸத்ரு-ஹன்—ஓ, எதிரிகளை மாய்ப்போனே; அஸுத—பிறந்தனர்; மிதுனம்—இணைந்து; தத்—அந்த; து—ஆனால்; நிர்ருதி:—நிர்ருதி; ஜக்ருஹே—எடுத்தல்; அப்ரஜ:—வாரிசு இல்லாதிருத்தல்.
பிரம்ம தேவனின் மற்றொரு புதல்வன் அதர்மம் ஆவான். அவன் மனைவியின் பெயர் மிருஷா. அவர்கள் இருவருக்கும் இரு அசுரர்கள் பிறந்தனர். ஒருவன் பெயர் தம்பம் அல்லது மோசடியாகும். மற்றொருவன் பெயர் மாயா அல்லது ஏமாற்று ஆகும். இவ்விரு அசுரர்களும் வாரிசுகள் ஏதும் இல்லாத நிர்ருதி என்னும் அசுரனால் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
பதம் 4.8.3
தயோ: ஸமபவல் லோபோ நிக்ருதிஸ் ச மஹா-மதே
தாப்யாம் க்ரோதஸ் ச ஹிம்ஸாச யத் துருக்தி: ஸ்வஸா கலி:
தயோ:—அவர்கள் இருவர்; ஸமபவத்—பிறந்தனர்; லோப:—பேராசை; நிக்ருதி:—சூழ்ச்சி; ச—மேலும்; மஹா-மதே—ஓ, மஹாத்மாவே; தாப்யாம்—அவர்கள் இருவரிடமிருந்தும்; க்ரோத:—குரோதம்; ச—மேலும்; ஹிம்ஸா—இம்சையும்; ச—மேலும்; யத்—அவர்கள் இருவரிடமிருந்தும்; துருக்தி:—கடுஞ்சொல்லும்; ஸ்வஸா—சகோதரி; கலி:—கலி.
மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்: ஓ மகாத்மா விதுரனே, தம்பவிற்கும் மாயாவிற்கும் பேராசையும், சூழ்ச்சியும் பிறந்தனர். அவர்கள் இணைப்பில் குரோதமும் (ஆத்திரம்) இம்சையும் (காழ்ப்பு) பிறந்தனர். இவர்கள் இருவர் இணைந்ததில் கலியும் அவன் சகோதரி துருக்தியும் (கடுஞ்சொல்) பிறந்தனர்.
பதம் 4.8.4
துருக்தௌ கலிர் ஆதத்த பயம் ம்ருத்யும் ச ஸத்தம
தயோஸ் ச மிதுனம் ஜஜ்ஞே யாதனா நிரயஸ் ததா
துருக்தௌ—துருக்கி; கலி:—கலி; ஆதத்த—பெற்றனர்; பயம்—அச்சம்; ம்ருத்யும்—மரணம்; ச—மேலும்; ஸத்-தம—ஓ, நல்லோர் யாவரினும் சிறந்தவனே; தயோ:—அவர்கள் இருவரது; மிதுனம்—இணைப்பிலும்; ஜஜ்யே—பெற்றெடுத்தனர்; யாதனா—தாங்கொணா வேதனை; நிரய:—நாகம்; ததா—போன்றோர்.
ஓ, நல்லோரிற் சிறந்தோனே, கலியும் கடுஞ்சொல்லும் இணைந்து மிருத்யுவையும் (மரணம்) பீதியையும் (அச்சம்) பெற்றெடுத்தன. மிருத்யுவும், பீதியும் இணைந்து யாதனாவையும் (மிகுந்தவலி) நிரயத்தையும் (நரகம்) பெற்றெடுத்தனர்.
பதம் 4.8.5
ஸங்க்ரஹேண மயாக்யாத: ப்ரதிஸர்கஸ் தவானக
த்ரி: ஸ்ருத்வைதத் புமான் புண்யம் விதுநோதி ஆத்மனோ மலம்
ஸங்க்ரஹேண—சுருக்கமாக; மாயா—என்னால்; ஆக்யாத:—விளக்கப்பட்டிருக்கிறது; ப்ரதிஸர்க:—அழிவதற்கான காரணம்; தவ—உனது; அனக:—ஓ, தூயவனே; த்ரி:—மூன்று முறை; ஸ்ருத்வா—கேட்கப் பெற்றால்; ஏத—இந்த வரலாறு; புமான்—அவன்; புண்யம்—புண்ணியம்; விதுநோதி—நீங்கப் பெறும்; ஆத்மன:—ஆத்மாவின்; மலம்—மாசு.
எனதன்பிற்குரிய விதுரனே: இங்கு அழிவிற்கானக் காரணங்களை நான் சுருக்கமாக விளக்கியிருக்கிறேன். இதனை ஒருவன் மூன்று முறை கேட்டான் என்றால் அவன் புண்ணியம் அடைவதோடு அவனது ஆத்மாவின் மலநீக்கமும் பெறுவான்.
பதம் 4.8.6
அதாத: கீர்தயே வம்ஸம் புண்ய-கீர்தே: குரூத்வஹ
ஸ்வாயம்பு வஸ்யாபி மனோர் ஹரேர் அம்ஸாம்ஸ-ஜன்மன:
அத—இப்பொழுது; அத:—இதன்பிறகு; கீர்தயே—நான் விளக்குவேன்; வம்ஸம்—வம்சத்தினர் பற்றி; புண்ய-கீர்தே:—புண்ணியச் செயல்களினால் கொண்டாடப்படுதல்; குரு-உத்வஹ—ஓ, குருகுலத்திற் சிறந்தோனே; ஸ்வாயம் புவஸ்ய—சுவாயம்புவ; அபி—கூட; மனோ:—மனுவின்; ஹரே:—முழுமுதற் கடவுளின்; அம்ஸம்—அம்சம்; அம்ஸ—ஒரு பகுதி; ஜன்மன:—பிறந்தார்.
மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: ஒ, குருகுலத்தில் சிறந்தோனே. இப்பொழுது நான் முழுமுதற் கடவுளினுடைய இயல்பின் ஓர் பகுதியாக அவதரித்த சுவாயம்புவ மனுவின் சந்ததியினரைப் பற்றி உனக்கு விளக்கப் போகிறேன்.
பதம் 4.8.7
ப்ரியவ்ரதோத்தான பாதௌ ஸதரூபா – பதே: ஸுதௌ
வாஸுதேவஸ்ய கலயா ரக்ஷாயாம் ஜகத: ஸ்திதௌ
ப்ரியவ்ரத—பிரியவரதன்; உத்தானபாதௌ—உத்தானபாதன்; ஸதரூபா-பதே:—அரசி சதரூபா மற்றும் அவள் கணவன் மனு; ஸுதௌ—இரு மைந்தர்கள்; வாஸுதேவஸ்ய—முழுமுதற் கடவுளின்; கலயா—முக்கிய அம்சமாக; ரக்ஷாயாம்—காப்பதற்காக; ஜகத:—உலகின்; ஸ்திதௌ—காத்தலுக்காக.
சுவாயம்புவ மனு தன் மனைவி சதரூபாவினிடத்தில் இரு மைந்தர்களைப் பெற்றெடுத்தான். அவர்களின் பெயர் உத்தானபாதன் மற்றும் பிரியவரதன் என்பதாகும். அவர்கள் இருவரும் முழுமுதற் கடவுளான வாசுதேவரின் முக்கிய அம்சத்தின் சந்ததியினர்; ஆதலினால், குடிமக்களைக் காப்பதற்கும் இவ்வுலகை ஆள்வதற்கும் அவர்கள் மிகவும் தகுதியுடையோராக விளங்கினர்.
பதம் 4.8.8
ஜாயே உத்தானபாதஸ்ய ஸுனிதி: ஸுருசிஸ் தயோ:
ஸுருசி: ப்ரேயஸீ பத்யுர் நேதரா யத்-ஸுதோ த்ருவ:
ஜாயே—இரு மனைவியரின்; உத்தானபாதஸ்ய—மன்னர் உத்தானபாதனின்; ஸுனிதி:—சுனீதி; ஸுருசி:—சுருசி; தயோ—அவர்களிருவரும்; ஸுருசி—சுருசி; ப்ரேயஸீ—மிகுந்த அன்பு; பத்யு:—கணவனின்; ந இதரா—அடுத்தவள் இல்லை; யத்—அவளது; ஸுத:—புதல்வன்; த்ருவ:—துருவன்.
அரசன் உத்தானபாதனுக்கு சுனீதி மற்றும் சுருசி என்று இரு மனைவியர். சுருசி என்பாளிடம் மன்னன் மிகுந்த அன்பு பாராட்டினான். ஆனால் துருவன் என்னும் மைந்தனை ஈன்ற சுனீதியிடமோ அவன் அவ்வாறிருக்கவில்லை.
பதம் 4.8.9
ஏகதா ஸுருசே: புத்ரம் அங்கம் ஆரோப்ய லாலயன்
உத்தமம் நாருருஷந்தம் த்ருவம் ராஜாப்யனந்தத
ஏகதா—முன்னொரு காலத்தில்; ஸுருசே:—அரசி சுருசி; புத்ரம்—புத்திரன்; அங்கம்—மடியில்; ஆரோப்ய—வைத்து; லாலயம்—கொஞ்சிக் கொண்டிருந்தார்; உத்தமம்—உத்தமன்; ந—இல்லை; ஆருருக்ஷந்தம்—ஏறுவதற்கு முயன்றவர்; த்ருவம்—துருவ மகாராஜா; ராஜா—மன்னர்; அப்யனந்தத—வரவேற்க.
முன்னொரு காலத்தில் மன்னர் உத்தானபாதன் சுருசிக்குப் பிறந்த தன் மைந்தன் உத்தமனைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு துருவ மகாராஜாவும் மன்னரின் மடி மீது ஏற முயற்சித்தார். ஆனால் மன்னர் அதனை விரும்பவில்லை. அவனது அனைத்துப் பாவச் செயல்களின் பலன்களையும் அவன் அனுபவிக்க நேரிடும். ஆனால் ஒருவன் பகவானைச் சரணடைந்து அவனது வாழ்வினைப் பகவானது பக்தித் தொண்டிற்கு அர்ப்பணித்தான் என்றால் அவன் பகவானின் நேரடிப் பாதுகாப்பினைப் பெறுவான். அப்படிப்பட்டவன் தனது பாவச் செயல்களினால் துன்புறுவதோ அல்லது அறிந்தோ அறியாமலோ பாவத்திற்குரியச் செயல்களின் மீது ஆசை வைப்பதோ இல்லை.
பதம் 4.8.10
ததா சிகீர்ஷமாணம் தம் ஸபத்ன்யாஸ் தனயம் த்ருவம்
ஸூருசி: ஸ்ருண்வதோ ராஜ்ஞ: ஸேர்ஷ்யம் ஆஹாதிகர்விதா
ததா—இவ்வாறு; சிகீர்ஷமாணம்—குழந்தை துருவன், மடிமீது ஏற முயற்சித்தவர்; தம்—அவருக்கு; ஸ-பத்ன்யா:—அவளது சககிழத்தி (சுனீதி); தனயம்—மைந்தன்; த்ருவம்—துருவன்; ஸுருசி:—அரசி சுருசி; ஸ்ருண்வத:—கேட்கின்றபொழுது; ராஜ்ஞ:—மன்னரின்; ஸ-ஈர்ஷ்யம்—துவேஷத்துடன்; ஆஹ—கூறினாள்; அதிகர்விதா—அதிகக் கர்வங் கொண்டு.
குழந்தையாக இருந்த துருவ மகாராஜா தன் தந்தையின் மடிமீது ஏற முயன்றதைக் கண்டு அவர் தந்தையின் மற்றொரு மனைவியும், அவரது சிற்றன்னையுமான சுருசி அவர்மீது மிக்க வெறுப்பு அடைந்தாள். மேலும் அவள் மன்னருக்குக் காதில் விழுமாறு மிகுந்த கர்வத்துடன் பேச ஆரம்பித்தாள்.
பதம் 4.8.11
ந வத்ஸ ந்ருபதேர் திஷ்ணுயம் பவான் ஆரோடும் அர்ஹதி
ந க்ருஹீதோ மயா யத் த்வம் குக்ஷாவ் அபி ந்ருபாத்மஜ:
ந—இல்லை; வத்ஸ—எனதன்பிற்குரிய மைந்தனே; ந்ருபதே:—மன்னரின்; திஷ்ணுயம்—இருக்கை; பவான்—உனக்கு; ஆரோடும்—ஏறுவதற்கு; அர்ஹதி—உரியது; ந—இல்லை; க்ருஹீத:—பெறுதல்; மயா—என்னால்; யத்—ஏனென்றால்; த்வம்—நீ; குக்ஷௌ—கருப்பையில்; அபி—இருந்தாலும்; ந்ருப-ஆத்மஜ:—மன்னரின் மைந்தன்.
அரசி சுருசி துருவ மகாராஜாவின் முன்னிலையில் கூறினாள்: எனதன்புக் குழந்தையே, மன்னரின் மடியின் மீதோ அல்லது அரியணையிலோ அமர்வதற்குரிய தகுதி உனக்கில்லை. உண்மையில் நீ கூட மன்னரின் மைந்தன்தான் என்றாலும் நீ என் வயிற்றில் பிறக்காததினால் மன்னரின் மடிமீது அமரும் தகுதி உனக்கில்லை.
பதம் 4.8.12
பாலோ ‘ஸி பத நாத்மானம் அன்ய-ஸ்த்ரீ-கர்ப-ஸம்ப்ருதம்
நூனம் வேத பவான் யஸ்ய துர்லபே ‘ர்தே மனோரத:
பால:—பாலனே; அஸி—நீ; பத—எவ்வாறு; ந—இல்லை; ஆத்மானாம்—எனக்குரிய; அன்ய—அடுத்த; ஸ்த்ரீ—பெண்; கர்ப—கர்ப்பத்தில்; ஸம்ப்ருதம்—பிறந்தவர்; நூனம்—எவ்வாறேனும்; வேத—புரிந்துகொள்ள முயற்சிப்பாய்; பவான்—உனது; யஸ்ய—எதனுடைய; துர்லபே—அணுகமுடியாதது; அர்தே—விஷயம்; மன:-ரத:—விருப்பம்.
எனதன்புப் பாலகனே, நீ என் வயிற்றிலல்லாது அடுத்தவளுக்குப் பிறந்தவன் என்பதை இன்னும் உணரவில்லை. ஆகையினால் உனது முயற்சியானது தோல்விக்குரிய ஒன்றாகும் என்பதை நீ புரிந்துகொள். நீ ஒரு விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்காக முயற்சிக்கின்றாய், அதனை நிறைவேற்றுவது மிகவும் கடினமாகும்.
பதம் 4.8.13
தபஸாராத்ய புருஷம் தஸ்யை வானுக்ரஹேண மே
கர்பே த்வம் ஸாதயாத்மானம் யதீச்சஸி ந்ருபாஸனம்
தபஸா—தவத்தினால்; ஆராத்ய—திருப்தியுற்று; புருஷம்—முழுமுதற் கடவுள்; தஸ்ய—அவரது; ஏவ—மட்டும்; அனுக்ரஹேண—கருணையினால்; மே—எனது; கர்பே—கர்ப்பத்தில்; த்வம்—நீ; ஸாதய—இடம்; ஆத்மானம்—உனது; யதி—ஒருவேளை; இச்சஸி—நீ விரும்பும்; ந்ருப-ஆஸனம்—மன்னரின் அரியணை.
மன்னரின் அரியணையை அடையவேண்டும் என்று நீ விரும்பினால், நீ கடுமையான தவங்களை மேற்கொள்ள வேண்டும். முதலில் நீ முழுமுதற் கடவுளான நாராயணரைத் திருப்திப்படுத்த வேண்டும். அதன்பின் உனது பக்தியினால் உன்மீது அவர் கருணை புரிந்தார் என்றால் நீ அடுத்த பிறவியில் என் வயிற்றில் பிறப்பாய்.
பதம் 4.8.14
மைத்ரேய உவாச
மாது: ஸபத்னியா: ஸ துருக்தி-வித்த:
ஸ்வஸன் ருஷா தண்ட-ஹதோ யதாஹி:
ஹித்வா மிஷந்தம் பிதாம் ஸன்ன-வாசம்
ஜகாம மாது: ப்ரருதன் ஸகாஸம்
மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; மாது:—அவர் தாயின்; ஸ-பத்னியா:—சகக் கிழத்தியின்; ஸ:—அவர்; துருக்தி—கடுஞ்சொற்கள்; வித்த:—துளைக்கின்ற; ஸ்வஸ—பெருமூச்சுவிடுதல்; ருஷா—ஆத்திரத்தின் விளைவாக; தண்ட-ஹத:—கம்பினால் தாக்கப்பட்டு; யதா—அவ்வளவு; அஹி:—ஒரு பாம்பு; ஹித்வா—விட்டுவிடுதல்; மிஷந்தம்—பார்த்துவிட்டு; பிதரம்—அவர் தந்தை; ஸன்ன-வாசம்—அமைதியாக; ஜகாம—சென்றார்; மாது:—அவர் அன்னையிடம்; ப்ரருதன்—அழுதுகொண்டு; ஸகாஸம்—அருகில்.
மைத்ரேய முனிவர் தொடர்ந்து கூறினார்: எனதன்பிற் சிறந்த விதுரனே, கம்பினால் தாக்குண்ட பாம்பு எத்தனை வேகமாகச் சீறுமோ அதுபோல் தன் சிற்றன்னையின் கடுஞ்சொற்களினால் தாக்கப்பட்ட துருவ மகாராஜா மிகுந்து வந்த சினத்தினால் பெருமூச்சுவிட்டார். இத்தனை நடந்தும் தன் தந்தை ஒன்றுமே செய்யாது அமைதியாக இருத்தலைக் கண்டு அவர் அவ்விடம் விட்டகன்று தன் அன்னையிடம் சென்றார்.
பதம் 4.8.15
தநம் நி:ஸ்வஸந்தம் ஸ்புரிதாதரோஷ்டம்
ஸூனீதிர் உத்ஸங்க உதூஹ்ய பாலம்
நிஸம்ய தத்-பௌர-முகான் நிதாந்தம்
ஸா விவ்யதே யத் கதிதம் ஸபத்னியா
தம்—அவர்; நி:-ஸ்வஸந்தம்—பெருமூச்சு விட்டுக்கொண்டு; ஸ்புரித—உடல் நடுங்க; அதா-ஒஷ்டம்—மேல் கீழ் உதடுகள்; ஸூனிதி:—அரசி சுனீதி; உத்ஸங்கே—அவள் மடியில்; உதூஹ்ய—ஏறிக்கொண்டு; பாலம்—அவள் மைந்தன்; நிஸம்ய—கேட்டபிறகு; தத்-பௌர-முகான்—அங்குள்ள பிறரிடமிருந்தும்; நிதாந்தம்—நடந்தத்தனையும்; ஸ— அவள்; விவ்யதே—வருந்தினாள்; யத்—எது; கதிதம்—பேசப்பட்ட; ஸ-பத்னியா—தனது சக கிழத்தி.
இளைய பாலகனாகிய துருவ மகாராஜா தன் உதடுகள் நடுங்க கேவிக்கேவி அழுதுக்கொண்டே தன் அன்னையிடம் சென்றார். அரசி சுனீதி தன் குழந்தையை அள்ளி எடுத்து என்ன நடந்தது என்று கேட்க மாளிகையில் உள்ள அனைவரும் நடந்ததை அவளுக்கு எடுத்துக் கூறி சுருசியின் கடுஞ்சொற்களையும் கூறினர். இதைக் கேள்வியுற்ற சுனீதி மிகவும் வருத்தமுற்றாள்.
பதம் 4.8.16
ஸோத்ஸ்ருஜ்ய தைர்யம் விலலாப ஸோக-
தாவாக்னினா தாவ-லதேவ பாலா
வாக்யம் ஸபத்னியா: ஸ்மரதீ ஸரோஜ-
ஸ்ரியா த்ருஸா பாஷ்ப-கலாம் உவாஹ
ஸா—அவள்; உத்ஸ்ருஜ்ய—இழந்து; தைர்யம்—தைரியத்தினை; விலலாப—துயருற்றாள்; ஸோக-தாவ-அக்னினா—சோகம் என்னும் நெருப்பு; தாவ-லதா-இவ—காய்ந்த இலைச் சருகுகள் எரிவதைப் போல்; பாலா—அப்பெண்; வாக்யம்—வார்த்தைகள்; ஸ-பத்னியா:—அவள் சககிழத்தியினால் கூறப்பட்ட; ஸ்மரதீ—நினைந்து; ஸரோஜ-ஸ்ரியா—செந்தாமரை மலர் போன்ற சிவந்த முகம்; த்ருஸா—பார்ப்பதற்கு; பாஷ்ப-கலாம்—அழுதுகொண்டு; உவாஹ—கூறினாள்.
நடந்த நிகழ்ச்சியினை சுனீதியினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. காட்டுத்தீயில் எரிந்து போகும் காய்ந்த சருகுகளைப் போல் சோகத் தீயினால் சுனீதியும் சுடப்பட்டாள். தன் சக கிழத்தியின் வார்த்தைகளை நினைத்து சொந்தாமரை மலரில் இருக்கும் பனித்துளிகளைப் போல் அவள் முகம் எனும் அழகான தாமரையில் கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின. அவள் கூறினாள்.
பதம் 4.8.17
தீர்கம் ஸ்வஸந்தீ வ்ருஜினஸ்ய பாரம்
அபஸ்யதீ பாலகம் ஆஹ பாலா
மாமங்கலம் தாத பரேஷூ மம்ஸ்தா
புங்க்தே ஜனோ யத் பர-து: கதஸ் தத்
தீர்கம்—கனத்த; ஸ்வஸந்தீ—பெருமூச்சுடன்; வ்ருஜினஸ்ய—அபாயத்தின்; பாரம்—அளவு; அபஸ் யதீ—காணமுடியாது; பாலகம்—தன் மைந்தனிடம்; ஆஹ—கூறினாள்; பாலா—அப்பெண்மணி; மா—இல்லாதிருக்கட்டும்; அமங்கலம்—அமங்கலம்; தாத—எனதன்பு மகனே; பரேஷு—பிறருக்கு; மம்ஸ்தா:—விருப்பம்; புங்க்தே—துன்புறுவர்; ஜன:—மனிதன்; யத்—எது; பர-து:க்கத:—பிறருக்கு துன்பம் விளைவிப்போன்; தத்—அது.
அத்துயர் மிகுந்த சூழ்நிலைக்கு மாற்றுக் காண்பதறியாது அவளும் நெடுமூச்செறிந்தாள். வேறு வழி இல்லாத நிலையில் அவள் தன் மைந்தனிடம் கூறினாள்: “எனதன்பு மகனே பிறருக்குக் கேடு வர வேண்டுமென்று ஒருபோதும் நினையாதே. கெடுவான் கேடு நினைப்பான் என்பது முன்னோர் கூற்று.”
பதம் 4.8.18
ஸத்யம் ஸூருச்யாபிஹிதம் பவான்மே
யத் துர்பகாயா உதரே க்ருஹீத:
ஸ்தன்யேன வ்ருத்தஸ் ச விலஜ்ஜதே யாம்
பார்யேதி வா வோடும் இடஸ்பதிர் மாம்
ஸத்யம்—உண்மை; ஸுருச்யா—அரசி சுருசி; அபிஹிதம்—சொன்னது; பவான்—உன்னிடம்; மே—எனது; யத்—ஏனென்றால்; துர்பாக்யா:—துர்பாக்கியசாலியின்; உதரே—வயிற்றிலிருந்து; க்ருஹீத:—பிறந்தனை; ஸ்தன்யேன—முலைப்பால் அருந்தி; வ்ருத்த:-ச—வளர்ந்தவன்; விலஜ்ஜதே—வெட்கமடைதல்; யாம்—ஒருவருக்கு; பார்யா—மனைவி; இதி—இவ்வாறு; வா—அல்லது; வோடும்—ஏற்றுகொள்ள; இட:-பதி:—அரசர்; மாம்—என்னை.
சுனீதி கூறினாள்: என்னுயிரே, சுருசி இவ்வாறு பேசியதற்கெல்லாம் காரணம் உன் தந்தையாகிய மன்னர் என்னைத் தன் மனைவியாக, ஏன் ஒரு வேலைக்காரியாகக் கூடக் கருதுவதில்லை என்பதேயாகும். அவர் என்னை ஏற்றுக்கொள்ளவே கூசினார். ஆகையினால் ஒரு நல்வினையற்றவள் வயிற்றில் மகனாகப் பிறந்து அவள் மார்பில் பால் குடித்து வளர்ந்திருக்கின்றாய், என்பது உண்மைதான் கண்ணே!
பதம் 4.8.19
ஆதிஷ்ட தத் தாத விமத்ஸரஸ் த்வம்
உக்தம் ஸமாத்ராபி யத் அவ்யலீகம்
ஆராதயாதோக்ஷஜ-பாத-பத்மம்
யதீச்சஸே ‘த்யாஸணம் உத்தமோ யதா
ஆதிஷ்ட—செய்வாயாக; தத்—அந்த; தாதா—எனதன்பு மகனே; விமத்ஸர:—காழ்ப்புணர்ச்சி ஏதுமின்றி; த்வம்—உன்னிடம்; உக்தம்—கூறியது; ஸமாத்ரா-அபி—உனது மாற்றான்தாய்; யத்—எதுவாயினும்; அவ்யலீகம்—அவையனைத்தும் உண்மையே; ஆராதய—வழிபடத் துவங்கு; அதோக்ஷஜ—உன்னதமான; பாத-பத்மம்—தாமரைத் திருவடி; யதி—எவ்வாறு; இச்சஸே—விருப்பம்; அத்யாசனம்—அவருடன் அமர்வதற்கு; உத்தம:—உன் தந்தையின் மைந்தன் உத்தமன்; யதா—போன்று.
எனதன்புக் குழந்தாய், உனது தந்தையின் மற்றொரு மனைவியான சுருதி என்னதான் கடுமையாகப் பேசியிருந்த போதிலும் அத்தனையும் உண்மைதான் மகனே. ஆகையினால் நீயும் உத்தமனைப்போல் அவர் மடியில் அமரவேண்டும் என்று விரும்பினால் உன் சிற்றன்னை சுருசி கூறிய அறிவுரைகளை உடனே செயற்படுத்துவாயாக. எவ்விதத் தாமதமுமின்றி முழுமுதற் கடவுளின் பத்மபாதங்களை வணங்குவதில் முழு மூச்சுடன் ஈடுபடுவாயாக.
பதம் 4.8.20
யஸ்யாங்க்ரி பத்மம் பரிசர்ய விஸ்வ-
விபாவனாயாத்த-குணாபிபத்தே:
அஜோ ‘த்யதிஷ்டத் கலு பாரமேஷ்ட்யம்
பதம் ஜிதாத்ம–ஸ்வஸனாபிவந்த்யம்
யஸ்ய—எவரது; அங்க்ரி—கால்; பத்மம்—தாமரைத் திருவடி; பரிசர்ய—வழிபடுதல்; விஸ்வ—பிரபஞ்சம்; விபாவனாய—படைப்பதற்கு; ஆத்த—பெற்றார்; குண-அபிபத்தே:—தேவையான தகுதியினைப் பெறுவதற்காக; அஜ:—பிறப்பற்ற (பிரம்மதேவன்); அத்யதிஸ்டத்—இருப்பினை எய்தினார்; கலு—சந்தேகமின்றி; பாரமேஷ்ட்-யம்—பிரபஞ்சத்தினுள் பரம இடம்; பதம்—நிலை; ஜித-ஆத்ம—தன் மனதை வென்றவன்; ஸ்வஸன—உயிர்க்காற்றைக் கட்டுப்படுத்துவதினால்; அபிவந்த்யம்—வழிபாட்டிற்குரிய.
சுனீதி தொடர்ந்து கூறினாள்: முழுமுதற் கடவுள் எண்ணுவதற்கரிய உயர்ந்தவராவார். அவரது திருவடித் தாமரைகளை வழிபட்டதனாலேயே உனது கொள்ளுத் தாத்தாவான பிரம்மதேவன் இப்பிரபஞ்சத்தினைப் படைப்பதற்குரிய தகுதியினைப் பெற்றார். அவர் பிறப்பற்றவராகவும் உயிர்க்குலம் அனைத்திற்கும் தலைவராக விளங்குவது போன்ற மேன்மை நிலை எய்தியதற்கும் காரணம் முழுமுதற் கடவுளின் கருணையேயாகும். முழுமுதற் கடவுள் மனதினை அடக்கி, உயிர்க்காற்றை ஒழுங்குபடுத்தும் முறையினால் சிறந்த யோகிகளாலும் வணங்கப்படுகின்றார்.
பதம் 4.8.21
ததா மனுர் வோ பகவான் பிதாமஹோ
யம் ஏக-மத்யா புரு-தக்ஷிணைர் மகை:
இஷ்ட்வாபிபேதே துரலாபம் அன்யதோ
பௌமம் ஸூகம் திவ்யம் அதாபவர்க்யம்
ததா—அது போன்று; மனு:—சுவாயம்புவ மனு; வ:—உமது; பகவான்—வழிபடுவதற்குரிய; பிதாமஹ:—தாத்தா; யம்—எவருக்கு; ஏக-மத்யா—இடையறாத பக்தி; புரு—சிறந்த; தக்ஷிணை:—தானம்; மகை:—வேள்விகளைச் செய்வது; இஷ்ட்வா—வழிபடுகின்ற; அபிபேதே—எய்தினார்; துரலாபம்—எய்துவதற்கரியது; அன்யத:—வேறு எவ்வழியிலும்; பௌமம்—பௌதீகம்; ஸுகம்—மகிழ்ச்சி அல்லது இன்பம்; திவ்யம்—தெய்வீகம்; அத—அதன்பிறகு; ஆபவர்க்யம்—விடுதலை.
சுனீதி தன் மகனிடம் அறிவிக்கிறாள்: உனது தாத்தாவான சுவாயம்புவ மனு மிகப்பெரிய வேள்விகளுடன் தானதர்மங்கள் செய்து இடையறாத பக்தியுடன் முழுமுதற் கடவுளைத் துதித்துத் திருப்திப்படுத்தினார். இவ்வழியில் செயல்பட்டே அவர் பௌதீக இன்பங்களில் மிகப் பெரிய வெற்றியும் பிறகு முக்தியும் பெற்றார். இவையெல்லாம் தேவர்களை வணங்குவதினால் பெறக்கூடியவை அன்று.
பதம் 4.8.22
தம் ஏவ வத்ஸாஸ்ரய ப்ருத்ய-வத்ஸலம்
முமக்ஷீபிர் ம்ருக்ய-பதாப்க-பத்ததிம்
அனன்ய-பாவே நிஜ-தர்ம-பாவிதே
மனஸி அவஸ்தாப்ய பஜஸ்வ பூருஷம்
தம்—அவரை; ஏவ—கூட; வத்ஸ—எனதன்பு மகனே; ஆஸ்ரய—சரண்புகுதல்; ப்ருத்ய-வத்ஸலம்—தன் பக்தர்களிடம் மிகுந்த அன்பு பாராட்டும் முழுமுதற் கடவுள்; முழுக்ஷுபி:—விடுதலையை விரும்பும் மனிதர்களினாலும்; ம்ருக்ய—நாடுவதற்கு; பத-அப்ஜ—திருவடித் தாமரை; பத்ததிம்—முறை; அனன்ய-பாவே—தொய்வில்லாத நிலையில்; நிஜ-தர்ம-பாலிதே—தனது உண்மை நிலையில் இருக்கின்ற தன்மை; மனஸி—மனதிற்கு; அவஸ்தாப்ய—இட்டு; பஜஸ்வ—பக்தித்தொண்டு புரிவதற்குப் போவது; பூருஷம்—பரமபுருஷர்.
ஆரூயிர் செல்வ, தனது பக்தர்களிடம் மிகுந்த அன்புடைய முழுமுதற் கடவுளை நீயும் சரணடைதல் வேண்டும். பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து விடுதலை பெற விரும்புபவர்களும் பக்தித்தொண்டின் மூலம் பகவானின் திருவடித் தாமரைகளை எப்போதும் சரண் அடைகின்றனர். உனக்குரிய அதர்மத்தினை நிறைவேற்றுவதின் மூலம் தூய்மை பெற்று முழுமுதற் கடவுளை உனது உள்ளத்தில் நிலைபெறச் செய்து ஒரு கணமும் தொய்வின்றி எப்போதும் அவரது தொண்டில் ஈடுபடுவாயாக.
பதம் 4.8.23
நான்யம் தத: பத்ம-பலாஸ-லோசனாத்
து:க்க-ச்சிதம் தே ம்ருகயாமி காஞ்சன
யோ ம்ருக்யதே ஹஸ்த-க்ருஹீத-பத்மயா
ஸ்ரியே தரைர் அங்க விம்ருக்யமாணயா
ந அன்யம்—பிறர் இல்லை; தத:—ஆகையினால்; பத்ம-பலாஸ-லோசனாத்—முழுமுதற் கடவுளின் தாமரைச் செங்கண்ணிலிருந்து; து:க்க-சிதம்—பிறர் துன்பத்தை நீக்கக் கூடியவர்; தே—உனது; ம்ருகயாமி—நான் தேடிக் கொண்டிருக்கிறேன்; காஞ்சன—யாரேனும் ஒருவர்; ய:—யார்; ம்ருக்யதே—தேடுகிறாள்; ஹஸ்த-க்ருஹீத-பத்மயா:—கையில் தாமரை மலரினை வைத்துக் கொண்டு; ஸ்ரியா—அதிர்ஷ்ட தேவதை; இதரை:—அடுத்தவர்களால்; அங்க—எனதன்பு மகனே; விம்ருக்யமாணயா—தொழப்படும் ஒருவர்.
என்னுயிர் துருவனே, என்னைப் பொறுத்தமட்டில் செந்தாமரை மலர் போல் சிவந்திருக்கும் விழிகளுடைய முழுமுதற் கடவுள் ஒருவரைத் தவிர உனது துன்பத்தினை துடைப்பவர்கள் வேறு யாரையும் நான் காண்கிறேன். பிரம்ம தேவன் போன்ற சிறந்த தேவர்கள் கூட அதிர்ஷ்ட தேவதையின் கருணையினை நாடுகின்றனர். ஆனால் அத்தேவதையோ கையில் தாமரை மலருடன் முழுமுதற் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக எப்போதும் ஆயத்தமாக இருக்கிறாள்.
பதம் 4.8.24
மைத்ரேய உவாச
ஏவம் ஸஞ்ஜல்பிதம் மாதுர் ஆகர்ணுயார்தாகமம் வச:
ஸன்னியம்யாத்மனாத்மானம் நிஸ் சக்ராம பிது: புராத்
மைத்ரேய: உவாச:—மைத்ரேய மாமுனிவர் கூறினார்; ஏவம்—இவ்வாறு; ஸஞ்ஜல்பிதம்—சேர்ந்து பேசப்பட்டது; மாது:—அன்னையிடமிருந்து; ஆகர்ணுய—கேட்டு; அந்த-ஆகமம்—லட்சியம்; வச:—வார்த்தைகள்; ஸன்னியம்ய—கட்டுப்படுத்துகின்ற; ஆத்மனா—மனதினால்; ஆத்மானம்—தனது சுயம்; நிஸ்சக்ராம—வெளியேறினார்; பிது:—தந்தையின்; புராத்—இல்லத்தில் இருந்து.
மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: துருவ மகாராஜாவின் அன்னையான சுனீதி கூறிய அறிவுரைகள் அவர் விரும்பிய குறிக்கோளினை நிறைவேற்றுவதற்கானதாகும். ஆகையினால் அவர் ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு, புத்திசாலித்தனத்துடனும், மாறாத உறுதியுடனும் தனது தந்தையின் அரண்மனையை விட்டு வெளியேறினார்.
பதம் 4.8.25
நாரதஸ் தத் உபாகர்ண்ய ஞாத்வா தஸ்ய சிகீர்ஷிதம்
ஸ்ப்ருஷ்ட்வா மூர்தனி ஆக-க்னேன பாணினா ப்ராஹ விஸ்மித:
நாரத:—மாமுனிவர் நாரதர்; தத்—அது; உபாகர்ண்ய—கேள்விப்பட்டு; ஞாத்வா—அறிந்து கொண்டு; தஸ்ய—அவரது (துருவ மகாராஜாவினுடைய); சிகீர்ஷிதம்—செயல்கள்; ஸ்ப்ருஷ்ட்வா—தொடுதலினால்; மூர்தனி—தலைமீது; அக-க்னேன—அனைத்துப் பாவங்களையும் நீக்க வல்லது; பாணினா—கரத்தினால்; ப்ராஹ—கூறினார்; விஸ்மித:—ஆச்சர்யமுற்று.
மாமுனிவர் நாரதர் இச் செய்தியினைக் கேள்வியுற்றார். மேலும் துருவ மகாராஜாவின் அனைத்துச் செயல்களையும் புரிந்து கொண்டு அவர் வியப்பில் ஆழ்ந்துவிட்டார். அவர் துருவ மகாராஜாவை அடைந்து அவர் தலைமீது தன் புனிதக் கைகளை வைத்துப் பின்வருவனவற்றைக் கூறலானார்.
பதம் 4.8.26
அஹோ தேஜ: க்ஷத்ரியாணாம் மான-பங்கம் அம்ருஷ்யதாம்
பாலோ ‘பி அயம் ஹ்ருதா தத்தே யத் ஸமாதுர் அஸத்-வச:
அஹோ—என்ன ஆச்சரியம்; தேஜ:—சக்தி; க்ஷத்ரியாணாம்—சத்திரியர்களின்; மான-பங்கம்—மானபங்கம்; அம்ருஷ்யதாம்—தாங்கவொண்ணாதது; பால:—ஒரு குழந்தையாக; அபி—இருந்தாலும்; அயம்—இந்த; ஹ்ருதா—உள்ளத்தில்; தத்தே—எடுத்துக் கொள்கிறார்; யத்—எது; ஸ-மாது:—மாற்றாந்தாயின்; அஸத்—விரும்பத்தகாத; வச:—வார்த்தைகள்.
எத்தனை அதிசயமானவர்கள் இந்தச் சக்திமிக்கச் சத்திரியர்கள்! தங்கள் மானத்திற்கு ஒரு சிறு ஊறு நேர்ந்தாலும் கூட அவர்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் இச்சிறுவனோ ஒரு சிறு குழந்தை ஆயினும் தன் மாற்றாந்தாயின் கடுஞ்சொற்களை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பதம் 4.8.27
நாரத உவாச
நாதுனாபி அவமானம் தே ஸம்மானம் வாபி புத்ரக
லக்ஷயாம: குமாரஸ்ய ஸக்தஸ்ய க்ரீடனாதிஷீ
நாரத: உவாச—நாரத முனிவர் கூறினார்; ந—இல்லை; அதுனா—இப்பொழுது; அபி—இருந்தாலும்; அவமானம்—அவமானம்; தே—உனக்கு; ஸம்மானம்—மரியாதை அளிப்பது; வா—அல்லது; அபி—உறுதியாக; புத்ரக—எனதன்பு புத்திரனே; லக்ஷயாம:—நான் பார்க்கிறேன்; குமாரஸ்ய—உன்போன்ற சிறுவர்கள்; ஸக்தஸ்ய—பற்றுக் கொள்வது; க்ரீடன-ஆதீஷு—விளையாட்டிலும் வேடிக்கைகளிலும்.
நாரத முனிவர் துருவனிடம் கூறினார்: அன்பிற்குரிய புத்திரனே, நீயோ வேடிக்கையிலும் விளையாட்டிலும் ஆர்வமுள்ள ஒரு சிறுவன். உன்னை அவமானப்படுத்திய வார்த்தைகளினால் நீ ஏன் இத்தனை பாதிக்கப்பட்டாய்?
பதம் 4.8.28
விகல்பே வித்யமானே ‘பி நாஹி அஸந்தோஷ-ஹேதவ:
பும்ஸோ மோஹம் ருதே பின்னா யல் லோகே நிஜ-கர்மபி:
விகல்பே—சரி செய்வது; வித்யமானே அபி—அங்கே இருந்தாலும்; ந—இல்லை; ஹி—உறுதியாக; அஸந்தோ-ஷ—அதிருப்தி; ஹேதவ:—காரணங்கள்; பும்ஸ:—மனிதர்களின்; மோஹம் ருதே—மாயைக்கு ஆளாகாது; பின்னா:—பிரித்தல்; யத் லோகே—இவ்வுலகில்; நிஜ-கர்மபி:—அவன் சொந்த செயலினால்.
அன்பார்ந்த துருவனே, உனது மான உணர்ச்சியானது சீர்குலைக்கப்பட்டது என்று நீ நினைத்தால், அதற்காக நீ அதிருப்தி அடைவதற்கான காரணங்கள் ஏதுமில்லை. இதுபோன்ற மனக் குறையானது மாயையின் மற்றொரு குணமாகும். ஒவ்வொரு உயிரும் தனது முன்வினைச் செயலினால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகையினால் தான் மகிழ்வதற்கோ அல்லது துன்புறுவதற்கோ பல்வகை வேறுபாடுகளுடைய வாழ்க்கை அமைந்துள்ளது.
பதம் 4.8.29
பரித்யுஷ்யேத் ததஸ் தாத தாவம் மாத்ரேண பூருஷ:
தைவோபஸாதிதம் யாவத் வீக்ஷ்யேஸ்வர-கதிம் புத:
பரித்யுஷ்யேத்—ஒருவன் திருப்தியடைதல் வேண்டும்; தத:—ஆகையினால்; தாத—அன்புப் புதல்வனே; தாவத்—அதுவரை; மாத்ரேண—தன்மை; பூருஷ:—ஒரு மனிதன்; தைவ—தெய்வீக; உபஸாநிதம்—அளிக்கப்படுவதினால்; யாவத்—எதுவரை; வீக்ஷ்ய—காண்கின்ற; ஈஸ்வர-கதிம்—பரமபுருஷரின் செயல் முறை; புத:—புத்திசாலி.
முழுமுதற் கடவுளின் செயற்பாடுகள் மிகவும் வியக்கத்தக்கவையாகும். அவரது விருப்பத்தின் பேரில் நன்மையோ தீமையோ எதுவரினும் புத்தியுடையோன் அவரது செயற்பாட்டினை ஏற்றுக் கொண்டு நிறைவடைதல் வேண்டும்.
பதம் 4.8.30
அத மாத்ரோபதிஷ்டேன யோகேனாவருருத்ஸஸி
யத்-ப்ரஸாதம் ஸ வை பும்ஸாம் துராராத்யோ மதோ மம
அத—ஆகையினால்; மாத்ரா—உனது அன்னையினால்; உபதிஷ்டேன—அறிவுறுத்தப்பட்டு; யோகேன—யோக தியானத்தில்; அவருருத்ஸ்ஸி—முக்தி பெற விரும்புவது; யத்-ப்ரஸாதம்—எவரது கருணை; ஸ:—அந்த; வை—உறுதியாக; பும்ஸாம்—உயிர்களின்; துராராத்ய:—நிறைவேற்றுவதற்கு மிகவும் கடினமாகும்; மத:—எண்ணம்; மம—எனது.
இப்பொழுது நீ முழுமுதற்கடவுளின் கருணையினைப் பெறவேண்டும் என்பதற்காக உன் அன்னையின் ஆலோசனையின் பேரில் யோகமுறை தியானத்தை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளாய். ஆனால் எனது கருத்தின்படி சாமான்ய மனிதனால் இது போன்ற கடுமையான தவங்களைச் செய்ய முடியாது. முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவது மிகவும் கடினமானதாகும்.
பதம் 4.8.31
முனய: பதவீம் யஸ்ய நி: ஸ்ங்ருகனோரு-ஜன்மபி:
ந விதுர் ம்ருகயந்தோ ‘பி தீவ்ர-யோக–ஸமாதினா
முனய:—மகாமுனிவர்கள்; பதவீம்—பாதை; யஸ்ய—எவருடையது; நி: ஸ்ங்கேன—பற்றின்மையினால்; உரு-ஜன்மபி:—பல பிறவிகளுக்குப் பிறகும்; ந—இல்லை; விது:—புரிந்து கொண்டது; ம்ருகயந்த:—தேடிக் கொண்டு; அபி—உறுதியாக; தீவ்ர-யோக—கடினமான யோகங்கள்; ஸமாதினா—சமாதியில்.
நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: இம்முறையினைப் பற்பலப் பிறப்புகளில் முயன்றும், உலக மாசுக்களில் பற்றில்லாதிருந்தும், தம்மை யோக சமாதியில் வைத்திருந்தும் இது போன்ற பல்வேற துறவு நெறிகளைக் கடைப்பிடித்தும் கூட தெய்வீக யோக சித்தர்களினால் கடவுள் உணர்வுப் பாதையின் முடிவினைக் காண இயலாது போயிற்று.
பதம் 4.8.32
அதோ நிவர்ததாம் ஏஷ நிர்பந்தஸ் தவ நிஷ்பல:
யதிஷ்யதி பவான் காலே ஸ்ரேயஸாம் ஸமுபஸ்திதே
அத:—இதன்பிறகு; நிவர்ததாம்—நீ கைவிடுவாயாக; ஏஷ:—இந்த; நிர்பந்த:—தீர்மானம்; தவ—உனது; நிஷ்பல:—எவ்விளைவுமின்றி; யதிஷ்யதி—எதிர்காலத்தில் நீ முயற்சிக்கலாம்; பவான்—உனது; காலே—அதற்குரிய காலத்தில்; ஸ்ரேயஸாம்—சந்தர்ப்பங்கள்; ஸமுபஸ்திதே—கிடைக்கும்.
இக்காரணத்தினால் எனதன்புக் குழந்தாய்! நீ இம்முயற்சியில் இறங்க வேண்டாம் அது வெற்றியடையாது. நீ உனது இருப்பிடத்திற்குத் திருப்பிச் செல்லுதல் நலம். நீ வளர்ந்து பெரியவனானதும் பகவானது அருளினால் இதுபோன்ற யோக முறைகளைச் செய்வதற்கு உனக்கு வாய்ப்புக் கிட்டலாம். அப்போது நீ இதனைச் செய்வாயாக.
பதம் 4.8.33
யஸ்ஸ யத் தைவ-விஹிதம் ஸ தேன ஸீக-து:கயோ:
ஆத்மானம் தோஷயன் தேஹீ தமன: பாரம் ருச்சதி
யஸ்ய—ஒருவன்; யத்—எது; தைவ—தெய்வீக; விஹிதம்—விதிக்கு; ஸ:—அம்மனிதன்; தேன—அதனால்; ஸீக-து:கயோ:—மகிழ்ச்சி அல்லது துன்பம்; ஆத்மானம்—தனது; தோஷயன்—திருப்தியடைதல்; தேஹீ—தேகம்பெற்ற ஆத்மா; தமஸ:—இருளின்; பாரம்—மறுகரைக்கு; ருச்சதி—கடக்கிறான்.
இன்பமோ, துன்பமோ எப்படிப்பட்ட வாழ்க்கையாயினும் ஒருவன் திருப்தியடையப் பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே பகவானின் விருப்பத்திற்கேற்றவாறே அருளப்படுகிறது. இவ்வழியில் ஒருவன் தொடர்ந்து முன்னேறினால் அவன் அறியாமை இருட் கடலினை மிக எளிதாகக் கடந்து விடலாம்.
பதம் 4.8.34
குணாதிகான் முதம் லிப்ஸேத் அனுக்ரோஷம் குணாதமாத்
மைத்ரீம் ஸமானாத் அன்விச்சேன் ந தாபைர் அபிபூயதே
குண-அதிகான்—தேர்ச்சி பெற்ற ஒருவன்; முதம்—மகிழ்ச்சி; லிப்ஸேத்—நினைக்க வேண்டும்; அனுக்-ரோஷம்—கருணை; குண-அதமாத்—தகுதி குறைந்தவனிடம்; மைத்ரீம்—நட்பு; ஸமானாத்—சமமாக; அன்விச்சேத்—விரும்ப வேண்டும்; ந—இல்லை; தாபை:—மும்முனைகளினால்; அபிபூயதே—பாதிப்படைதல்.
உலக வாழ்வில் ஒவ்வொருவரும் பின்வருமாறு நடத்தல் வேண்டும். தன்னைவிடத் தகுதியில் உயர்ந்த ஒருவனைச் சந்திக்கும் பொழுது மகிழ்ச்சியடைய வேண்டும் தன்னை விடத் தகுதி குறைந்தவனைச் சந்திக்கும் பொழுது அவனிடம் கருணை காட்ட வேண்டும். தனக்கு இணையான ஒருவனைச் சந்திக்கும்பொழுது அவனிடம் நட்புக் கொள்ள வேண்டும். இவ்வழியில் நடந்தால் ஒருவன் உலகின் கொடிய துன்பங்களினால் பாதிக்கப்பட மாட்டான்.
பதம் 4.8.35
த்ருவ உவாச
ஸோ (சு)யம் ஸமோ பகவதா ஸுக-து:க-ஹதாத்மனாம்
தர்ஸித: க்ருபயா பும்ஸாம் துர்தர்ஸோ ‘ஸ்மத்-விதைஸ்துய:
த்ருவ: உவாச—துருவ மகாராஜா கூறினார்; ஸ:—அந்த; அயம்—இந்த; ஸம:—மனதின் சமநிலை; பகவதா—தங்களால்; ஸுக-து:க—இன்ப, துன்பங்கள்; ஹத-ஆத்மனாம்—பாதிக்கப்பட்டோர்கள்; தர்ஸித:—காட்டப்படும்; க்ருபயா—கிருபை; பும்ஸாம்—மக்களின்; துர்தர்ஸ:—நினைப்பதற்கரிது; அஸ்மத்-விதை:—எம்போன்றவர்கள்; து—ஆனால்; ய:—நீங்கள் கூறியவை எதுவாயினும்.
துருவ மகாராஜா கூறினார்: எனது பெருமதிப்பிற்குரிய நாரத முனிவரே, இன்ப துன்பம் என்னும் பௌதீக நிலையினால் உள்ளம் பாதிக்கப்பட்ட மனிதன் மன அமைதி பெறுவதற்கு நீர் கூறிய அறிவுரைகள் மிகவும் சிறந்தவையாகும். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் அறியாமையினால் மூடப்பட்டிருக்கிறேன். ஆகையினால் உமது இத்தத்துவம் என் மனதைத் தொடவில்லை.
பதம் 4.8.36
அதாபி மே ‘நீதஸ்ய க்ஷாத்த்ரம் கோரம் உபேயுஷ:
ஸுருச்யா துர்வசோ-பாணைர் ந பின்னே ஸ்ரயதே ஹ்ருதி
அத அபி—ஆகையினால்; மே—எனது; அவிநீதஸ்ய—வளைந்து கொடுப்பவனல்ல; க்ஷாத்த்ரம்—சத்திரிய உணர்வு; கோரம்—சகிப்பின்மை; உபேயுஷ:—எய்தியது; ஸுருச்யா:—அரசி சுருசி; துர்வச:—கடுஞ்சொற்கள்; பாணை:—அம்புகளினால்; ந—இல்லை; பின்னே—கிழிக்கப்பட்டு; ஸ்ரயதே—தங்கியுள்ளது; ஹ்ருதி—இதயம்.
அன்பிற்குரிய சான்றோரே, உமது அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு அத்துணைப் பணிவுடையவன் அல்லன் நான். ஆனால் இது எனது குற்றமன்று. இது நான் சத்திரிய குலத்தில் பிறந்ததின் விளைவு. தனது அம்பினுங் கொடிய வார்த்தைகளினால் எனது மாற்றாந்தாய் என் உள்ளத்தைக் கிழித்துவிட்டாள். ஆகையினால் உமது மதிப்பு மிக்க அறிவுரைகள் எனது உள்ளத்தில் நிற்கவில்லை.
பதம் 4.8.37
பதம் த்ரி-புவனோத் க்ருஷ்டம் ஜிகீஷோ: ஸாது வர்த்ம மே
ப்ரூஹி அஸ்மத்-பித்ருபிர் ப்ரஹ்மன்ன் அன்யைர் அபி அனதிஷ்டிதம்
பதம்—நிலை; த்ரி-புவன—மூன்று உலகங்கள்; உத்க்ருஷ்டம்—மிகச் சிறந்த; ஜிகீஷோ:—இச்சை; ஸாது—நேர்மை; வர்த்ம—வழி; மே—எனக்கு; ப்ரூஹி—அருள்கூர்ந்து சொல்வீராக; அஸ்மத்—எங்கள்; பித்ருபி:—முன்னோர்களினால்; (தந்தை, தாத்தா முதலியோர்) ப்ரஹ்மன்—ஓ, சிறந்த அந்தணரே; அன்யை:—பிறரால்; அபி—கூட; அனதிஷ்டிதம்—யாரும் பெற முடியாத.
ஓ, கற்றறிந்த அந்தணரே, எனது தந்தையரும் அவர் முந்தையரும், மூன்று உலகங்களில் உள்ள யாராலுமே அடைய முடியாத மேன்மையான உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கு நீர் சம்மதித்தீரென்றால் எனது வாழ்க்கை லட்சியத்தினை நான் அடைவதற்கு, நான் பின்பற்றக் கூடிய நேரிய வழியினை எனக்கு உரைத்தருள்வீராக.
பதம் 4.8.38
நூனம் பவான் பகவதோ யோ ‘ங்கஜ: பரமேஷ்டின:
விதுதன்ன் அடதே வீணாம் ஹிதாய ஜகதோ ‘ர்கவத்
நூனம்—உறுதியாக; பவான்—மாண்புமிகு; பகவத:—பகவானின்; ய:—எது; அங்க-ஜ:—உடலிலிருந்து பிறந்தவர்; பரமேஷ்டின:—பிரம்மதேவன்; விதுதன்—இசைப்பதினால்; அடதே—எங்கும் பயணிப்பவர்; வீணாம்—வீணை; ஹிதாய—நன்மைக்காக; ஜகத:—உலகின்; அர்க-வத்—சூரியனைப் போன்று.
மரியாதைக்குரிய நாரத முனிவரே, நீர் பிரம்மதேவனின் மதிப்பு மிக்க மைந்தன் ஆவிர். இப்பிரபஞ்சம் முழுவதின் நன்மைக்காக உமது இனிய வீணையினை இசைத்துக் கொண்டே நீர் பயணம் செய்கின்றீர். இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிர்களின் நன்மைக்காகச் சுழலும் சூரியனைப் போன்றவர் நீங்கள்.
பதம் 4.8.39
மைத்ரேய உவாச
இதி உதாஹ்ருதம் ஆகர்ண்ய பகவான் நாரதஸ் ததா
ப்ரீத: ப்ரத்யாஹ தம் பாலம் ஸத்-வாக்யம் அனுகம்பயா
மைத்ரேய: உவாச—மைத்ரேய முனிவர் கூறினார்; இதி—இவ்வாறு; உதாக்ருதம்—கூறியவற்றை; ஆகர்ண்ய—கேட்டு; பகவான் நாரத:—நாரத மாமுனிவர்; ததா—அதன்பிறகு; ப்ரீத:—மகிழ்ச்சியுற்று; ப்ரத்யாஹ—பதில் கூறினார்; தம்—அவர்; பாவம்—சிறுவன்; ஸத்-வாக்யம்—நல்லுபதேசம்; அனுகம் பயா—கருணையுடன்.
மிகச் சிறந்த சான்றோரான நாரத முனிவர், துருவ மகாராஜாவின் வார்த்தைகளைக் கேட்டு அவர் மீது மிகவும் கருணையுடையவராக ஆனார். தனது அளவற்ற கருணையினை அவருக்கு அருள வேண்டும் என்பதற்காக கீழ்வரும் தேர்ந்த உபதேசத்தினை அவர் அருளினார்.
பதம் 4.8.40
நாரத உவாச
ஜனனியாபிஹித: பந்தா: ஸ வை நி: ஸ்ரேயஸஸ்யதே
பகவான் வாஸுதேவன் தம் பஜ தம் ப்ரவணாத்மனா
நாரத: உவாச—நாரத மாமுனிவர் கூறினார்; ஜனன்யா—உனது அன்னையினால்; அபிஹித:—கூறப்பட்ட; பந்தா:—பாதை; ஸ:—அந்த; வை—உறுதியாக; நி: ஸ்ரேயஸஸ்ய—வாழ்க்கையின் இறுதி லட்சியம்; தே—உனக்கு; பகவான்—முழுமுதற் கடவுள்; வாசுதேவ:—கிருஷ்ணர்; தம்—அவருக்கு; பஜ—உனது பணியினை ஆற்றுவாயாக; தம்—அவரால்; ப்ரவண-ஆத்மனா—உனது மனதை முழுக் கவனத்துடன்.
மகாமுனிவர் நாரதர் துருவமகாராஜாவிடம் கூறினார்: முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டுப் பாதையில் தொடர்வாயாக என்று உன் அன்னை சுனீதியினால் உனக்கருளப்பட்ட உபதேசம் உனக்கு மிகவும் பொருத்தமானதாகும். ஆகையினால் முழுமூச்சுடன் நீ பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுவாயாக.
பதம் 4.8.41
தர்மார்த-காம-மோக்ஷாக்யம் ய இச்சேச் ச்ரேய ஆத்மன:
ஏகம் ஹி ஏவ ஹரேஸ் தத்ர காரணம் பாத–ஸேவனம்
தர்ம-அர்த-காம-மோக்ஷ—தர்மநெறி, பொருள்வளம், புலனுகர்ச்சி, முக்தி என்னும் நான்கு கொள்கைகள்; ஆக்யம்—பெயரினால்; ய:—யார்; இச்சேத்—விரும்பலாம்; ஸ்ரேய:—வாழ்க்கை லட்சியம்; ஆத்மன:—ஆத்மாவின்; ஏகம் ஹி ஏவ—ஒன்றே ஒன்று; ஹரே:—முழுமுதற் கடவுள்; தத்ர—அதில்; காரணம்—காரணம்; பாத-ஸேவனம்—தாமரைத் திருவடியினை வழிபடுவது.
தர்மநெறி, பொருள்வளம், புலனுகர்ச்சி மற்றும் முக்தி என்னும் நான்கு கொள்கைகளின் பலன்களை விரும்பும் ஒருவன் முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அவரது தாமரைத் திருவடிகளை வணங்குவதினால் இவற்றின் மீதுள்ள விருப்பம் நிறைவேறும்.
பதம் 4.8.42
தத் தாத கச்ச பத்ரம் தே யமுனாயாஸ் தடம் ஸூசி
புண்யம் மதுவனம் யத்ர ஸாந்நித்யம் நித்யதா ஹரே:
தத்—அந்த; தாத—அன்புப் புதல்வனே; கச்ச—செல்; பத்ரம்—மங்கலம்; தே—உனக்காவதாக; யமுனாயா:—யமுனை நதியின்; தடம்—கரையில்; ஸுசி—தூய்மையடைதல்; புண்யம்—புண்ணியம்; மது-வனம்—மதுவனம் என்ற பெயரில்; யத்ர—எங்கே; ஸாந்நித்யம்—அருகில்; நித்யதா—எப்போதும்; ஹரே:—முழுமுதற் கடவுள்.
ஆகையினால் அன்புப் புதல்வனே, உனக்கு அனைத்து மங்கலங்களும் உண்டாவதாக. யமுனை நதியின் கரைக்கருகில் மதுவனம் என்றொரு சோலை இருக்கிறது. அங்கு சென்று உன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வாயாக. அங்கு ஒருவன் செல்கிறான் என்றால் அவன் முழுமுதற் கடவுளின் அருகில் செல்கிறான் என்று பொருள். ஏனென்றால் இறைவன் எப்போதும் அங்கேதான் இருப்பார்.
பதம் 4.8.43
ஸ்நாத்வானுஸவனம் தஸ்மின் காளிந்த்யா: ஸலிலே ஸிவே
க்ருத்வோசிதானி நிவஸன்ன் ஆத்மன: கல்பிதாஸன:
ஸ்ராத்வா—நீராடிய பிறகு; அனுஸவனம்—மூன்று முறை; தஸ்மின்—அதில்; காளிந்த்யா:—காளிந்தீ நதி (யமுனை); ஸலிலே—தண்ணீரில்; ஸிவே—அது மிகவும் புனிதமானது; க்ருத்வா—செய்வது; உசிதானி—பொருத்தமான; நிவஸன்—அமர்ந்து; ஆத்மன—தனக்கு; கல்பித-ஆஸன:—அமர்வதற்குரிய இடத்தினைத் தயார் செய்தல்.
நாரத முனிவர் கூறினார்: காளிந்தீ எனப்படும் யமுனை நதியின் நீரில் ஒரு நாளைக்கு மூன்று முறை நீ நீராட வேண்டும். ஏனென்றால் அது மங்கலமும் புனிதமும் தெளிவும் உடையது ஆகும். நீராடிய பிறகு நீ அட்டாங்க யோகத்திற்குரிய ஒழுங்குமுறை விதிகளைச் செய்தல் வேண்டும். பிறகு உனது ஆசனத்தில் சரியான நிலையில் அமைதியுடன் அமர்ந்து கொள்ள வேண்டும்.
பதம் 4.8.44
ப்ராணாயாமேன த்ரி-வ்ருதா ப்ராணேந்த்ரிய-மனோ-மலம்
ஸனைர் வ்யுதஸ்யாபித்யாயேன் மனஸா குருணா குரும்
ப்ராணாயாமேன—சுவாசப் பயிற்சிகளினால்; த்ரி-வ்ருதா—பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்று வழிகளில்; ப்ராண-இந்த்ரிய—உயிர்க்காற்றும், புலன்களும்; மன:—மனம்; மலம்—மாசு; ஸனை:—படிப்படியாக; வ்யுதஸ்ய—நீங்கி; அபித்யாயேத்—தியானித்து; மனஸா—மனதினால்; குருணா—இடையூறின்றி; குரும்—கிருஷ்ணர் என்னும் பரமகுரு.
உனது ஆசனத்தில் அமர்ந்த பிறகு மூன்று வகையான சுவாசப் பயிற்சிகளைச் செய்தல் வேண்டும். இவ்வாறு படிப்படியாக உயிர்க்காற்று, மனம், மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து ஜட மாசுக்களில் இருந்தும் முற்றிலும் உன்னை விடுவித்துக் கொண்டு மிகுந்த பொறுமையுடன் முழுமுதற் கடவுளைத் தியானிக்கத் தொடங்க வேண்டும்.
பதம் 4.8.45
ப்ரஸாதாபிமுகம் ஸஸ்வத் ப்ரஸன்ன் – வதனேக்ஷணம்
ஸூனாஸம் ஸூப்ருவம் சாரு-கபோலம் ஸூர ஸூந்தரம்
ப்ரஸாத-அபிமுகம்—எல்லையற்றக் கருணையினை எப்போதும் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்; ஸஸ்வத்—எப்போதும்; ப்ரஸன்ன—இனிமையான; வதன—வாய்; ஈக்ஷணம்—பார்வை; ஸு-நாஸம்—கூரான நாசி; ஸு-ப்ருவம்——வில்போல் வளைந்த புருவங்கள்; சாரு—எழில்; கபாலம்—நெற்றி; ஸுர—சுரர்கள், தேவர்கள்; ஸூந்தரம்—கம்பீரத் தோற்றம்.
பகவானின் வடிவழகு இங்கே விவரிக்கப் பெற்றுள்ளது. பகவானின் முகம் அழகும், இனிமையும், அமைதியும் வாய்ந்தது. அவரைக் காணும் பக்தர்களுக்கு அவரது தோற்றம் ஒருபோதும் மகிழ்ச்சியளிக்காமல் இருந்ததில்லை, மேலும் அவர்கள் வேண்டும் வரங்களை அள்ளி வழங்குவதற்கு அவர் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறார். அவரது இரு விழிகளும் ஒளி பொருந்தியவை. புருவங்களோ வில் போன்றன. அவரது கூரிய நேரான நாசியும் அகன்ற நெற்றியும் மிகவும் அழகுடையன. தேவர்கள் அனைவரினும் அவர் அழகில் மிகச் சிறந்தவராவார்.
பதம் 4.8.46
த்ருணம் ரமணீயாங்கம் அருணோஷ்டேக்ஷணாதரம்
ப்ரணதாஸ்ரயணம் ந்ரும்ணம் ஸரண்யம் கருணார்ணவம்
தருணம்—இளமை; ரமணீய—கவர்ச்சியானது; அங்கம்—அவரது அங்கம் எல்லாம்; அருண-ஒஷ்ட—காலை இளஞ்சூரியன் போல் சிவந்த இதழ்கள்; ஈக்ஷண-அதரம்—விழிகளும் அத்தன்மையன; ப்ரணத—அடைக்கலம் பெற்றவன்; ஆஸ்ரயணம்—சரணம் அடைபவனின் சரணாலயம்; ந்ரும்ணம்—அனைத்து வழிகளிலும் உன்னதமான இனிமையானவர்; ஸரண்யம்—ஒருவன் சரணடைவதற்குத் தகுதி வாய்ந்தவர்; கருணா—கருணையில்; அர்ணவம்—கடல் போன்றவர்.
நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: பகவானின் வடிவம் எப்போதும் இளமையானது. அவரது அனைத்து அங்கங்களும் சிறு தவறுமின்றி மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அவரது விழிகளும், இதழ்களும் காலை இளம்பரிதியினைப் போல் தோன்றும். சரணடையும் ஆத்மாவிற்கு அவர் அடைக்கலம் தர எப்போதும் தயாராகவே இருக்கின்றார். அவரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற ஒருவன் அனைத்து மங்கலங்களையும் அடைகிறான். சரணடையும் ஆத்மாவைத் தாங்கிக் கொள்பவராக பகவானே விளங்குகிறார். ஏனெனில் அவர் கருணையின் கடலன்றோ!
பதம் 4.8.47
ஸ்ரீ வத்ஸாங்கம் கன-ஸ்யாமம் புருஷம் வன-மாலினம்
ஸங்க-சக்ர-கதா-பத்மைர் அபிவ்யக்த–சதுர்புஜம்
ஸ்ரீ வத்ஸ-அங்கம்—பகவானின் மார்பில் இருக்கும் ஸ்ரீ வத்ஸ அடையாளம்; கன-ஸ்யாமம்—கருநீலவண்ணம்; புருஷம்—பரமபுருஷர்; வன-மாலினம்—மலர்களினால் ஆன மாலை; ஸங்க—சங்கு; சக்ர—சக்கரம்; கதா—கதாயுதம்; பத்மை:—தாமரை மலர்; அபிவ்யக்த—தோற்றமுடன்; சது புஸம்—நாற்கரங்கள்.
பகவானைப் பற்றி மேலும் விளக்குகையில் அவர் தன் மார்பில் ஸ்ரீ வத்ஸ அடையாளம் என்னும் அதிர்ஷ்ட தேவதை உறையும் இடத்தினை உடையவர். அவரது உடல் வண்ணமோ கருநீலம் ஆகும். பகவான் ஒரு புருஷர் ஆவார். அவர் மலர்களை மாலையாகத் தொகுத்து அணிந்திருப்பார். மேலும் அவர் நித்தியமாக நான்கு கரங்களை உடையவர். அவற்றில் அவர் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரினைத் தாங்கியிருப்பார்.
பதம் 4.8.48
கிரீடினம் குண்டலினம் கேயூர-வலயான்விதம்
கௌஸ்துபாபரண-க்ரீவம் பீத-கௌஸேய–வாஸஸம்
கிரீடினம்—அலங்கரிக்கப்பட்டத் தலை கிரீடம்; குண்டலினம்—முத்தினாலான செவிக் குண்டலங்கள்; கேயூர—கழுத்து அட்டிகை; வலய-அன்விதம்—கை வளையல்கள்; கௌஸ்துப-ஆபரண-க்ரீவம்—கௌத்துப மாலையினால் அவர் கழுத்து அலங்கரிக்கப்பட்டிருக்கும்; பீத-கௌஸேய-வாஸஸம்—மஞ்சள் வண்ண பட்டுப் பீதாம்பரத்தினை ஆடையாக அணிந்திருப்பார்.
முழுமுதற் கடவுளான வாசுதேவரின் முழு உடலுமே அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. அவர் பொன்னாலான தலைக் கிரீடமும், கழுத்தில் அட்டிகையும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பார். அவரது கழுத்தில் கௌத்துப மாலை அணி செய்யும். மஞ்சள் வண்ண பட்டுப் பீதாம்பரத்தினை அவர் ஆடையாக அணிந்திருப்பார்.
பதம் 4.8.49
காஞ்சீ கலாப பர்யஸ்தம் லஸத் காஞ்சன நூபுரம்
தர்ஸனீயதமம் ஸாந்தம் மனோ நயன வர்தனம்
காஞ்சீ-கலாப—சிறு மணிகள்; பர்யஸதம்—இடுப்பில்; லஸத்-காஞ்சன-நூபுரம்—அவர் கால்களில் தங்கச் சலங்கை அணிந்திருப்பார்; தர்ஸனீய-தமம்—காண்பதற்கரிய வடிவம்; ஸாந்தம்—அமைதி, சாந்தம்; மன:-நயன-வர்தனம்—கண்களுக்கும் மனதிற்கும் இனிமையானது.
பகவான் தன் இடுப்பில் சிறு சிறு தங்கமணிகளினாலான ஒட்டியாணம் அணிந்திருப்பார். அவர் கால்களை பொற்சலங்கைகள் அணி செய்யும். அவரது உடல் வண்ணம் அனைத்தும் கண்களைக் கவர்ந்து இனிமை செய்யும். அவர் எப்போதும் சாந்தியும், அமைதியும் தவழ்கின்ற உருவுடையவர். ஆதலினால் அவரைக் காண்பது கண்ணிற்கும் மனதிற்கும் இனிமை செய்யும்.
பதம் 4.8.50
பத்ப்யாம் நக-மணி-ஸ்ரேண்யா விலஸத்ப்யாம் ஸமர்சதாம்
ஹ்ருத்-பத்ம-கர்ணிகா-திஷ்ண்யம் ஆக்ரம்யாத்மனி அவஸ்திதம்
பத்ப்யாம்—அவரது தாமரைத் திருவடியில்; நக-மணி-ஸ்ரேண்யா—விரல்களின் நகங்கள் பொன்போல் ஒளிரும்; விலஸத்ப்யாம்—ஒளிரும் தாமரைத் திருவடிகள்; ஸமர்சதாம்—அவரைத் துதிப்பதில் ஈடுபடுவோர்; ஹ்ருத்-பத்ம-கர்ணிகா—இதயத் தாமரை இதழ்களின் அடுக்கில்; திஷ்ண்யம்—இருந்து; ஆக்ரம்ய—கவரும்; ஆத்மனி—இதயத்தில்; அவஸ்திதம்—அமர்ந்து.
உண்மையான யோகியர் தமது இதயத் தாமரை இதழ்களின் அடுக்கின் மீது நிற்கும் பகவானின் உன்னதத் தோற்றத்தினைத் தியானம் செய்வர். அவரது தாமரைத் திருவடிகளின் விரல் நகங்கள் பொன்னைப் போல் மின்னும் தன்மையன.
பதம் 4.8.51
ஸ்மயமானம் அபித்யாயேத் ஸானுராகாவலோகனம்
நியதேனைக-பூதேன மனஸா வரதர்ஷபம்
ஸ்மயமானம்—பகவானின் புன்னகை; அபித்யாயேத்—ஒருவன் அவரைத் தியானிக்க வேண்டும்; ஸ-அனுராக-அவ-லோகனம்—மிகுந்த பாசத்துடன் தனது பக்தர்களைப் பார்ப்பவர்; நியதேன—இவ்வழியில் தொடர்ந்து; ஏக-பூதேன—சீரிய கவனத்துடன்; மனஸா—மனதில்; தர-தர்ஷபம்—ஒருவன் மிகச்சிறந்த வரங்களை அருள்பவரை தியானித்தல் வேண்டும்.
பகவான் எப்போதும் புன்னகை புரிந்து கொண்டேயிருப்பார், அவர் தனது பக்தனைக் கருணையுடன் பார்க்கும் வடிவத்தினையே ஒரு பக்தன் சிந்தனையில் காணவேண்டும். இவ்வழியிலேயே தியானிப்பவன் அனைத்து வரங்களும் அருளும் முழுமுதற் கடவுளைக் காண வேண்டும்.
பதம் 4.8.52
ஏவம் பகவதோ ரூபம் ஸூபத்ரம் த்யாயதோ மன:
நிர்வ்ருத்யா பரயா தூர்ணம் ஸம்பன்னம் ந நிவர்ததே
ஏவம்—இவ்வாறு; பகவத:—முழுமுதற் கடவுளின்; ரூபம்—வடிவம்; ஸு-பத்ரம்—மிகவும் மங்கலமானது; த்யாயத:—தியானிக்கின்ற; மன:—மனம்; நிர்வ்ருத்யா—அனைத்து பௌதீக மாசுக்களில் இருந்தும் விடுதலை பெறுகிறது; பரயா—உன்னதமான; தூர்ணம்—வெகுவிரைவில்; ஸம்பன்னம்—வளமடைகிறான்; ந—இல்லை; நிவர்ததே—கீழே விழுதல்.
சர்வ மங்கலம் பொருந்திய பகவானது வடிவத்தில் மீது மனதைச் செலுத்தி இவ்வழியில் தியானம் செய்பவன் வெகு விரைவில் ஜட மாசுக்கள் அனைத்தினின்றும் விடுதலை பெறுகிறான். மேலும் பகவானைத் தியானிப்பவன் அந்நிலையிலிருந்து ஒருக்காலும் கீழே இறங்குவதில்லை.
பதம் 4.8.53
ஜபஸ் ச பரம குஹ்ய: ஸ்ரூயதாம் மே ந்ருபாத்மஜ
யம் ஸப்த-ராத்ரம் ப்ரபடன் புமான் பஸ்யதி கேசரான்
ஜப: ச—இது தொடர்பான மந்திரத்தை ஓதினால்; பரம:—மிக மிக; குஹ்ய:—ரகசியமானது; ஸ்ரூயதாம்—கேட்பாயாக; மே—என்னிடமிருந்து; ந்ருப-அத்மஜ—ஓ, அரச புத்திரனே; யம்—எது; ஸப்த-ராத்ரம்—ஏழு இரவுகள்; ப்ரபடன்—ஓதினால்; புமான்—ஒருவன்; பஸ்யதி—பார்க்கக் கூடும்; கே-சரான்—வானில் பயணிக்கும் மனிதர்கள்.
ஓ, அரச புத்திரனே! இத்தியான முறைக்குரிய மந்திரத்தைப் பற்றி இப்பொழுது உனக்கு நான் சொல்லப் போகிறேன். இம்மந்திரத்தினை மிக மிக எச்சரிக்கையுடன் ஏழு இரவுகள் தொடர்ந்து ஒருவன் உச்சாடனம் செய்வான் என்றால் வானில் பறந்து செல்லும் சித்தி பெற்ற மானிடர்களை அவன் காண்பான்.
பதம் 4.8.54
ஓம் நமோ பகவதே வாஸூ
தேவாய மந்த்ரேணானேன தேவஸ்ய குர்யாத் த்ரவ்யமயீம் புத:
ஸபர்யாம் விவிதைர் த்ரவ்யைர் தேஸ-கால–விபாகவத்
ஓம்—ஓ, போற்றுதற்குரிய பகவானே; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்துகிறேன்; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; வாஸூதேவாய—பரமபுருஷ பகவானான வாசுதேவருக்கு; மந்த்ரேண— இம்மந்திரத்தினால்; அனேன—இந்த; தேவஸ்ய—பகவானின்; குர்யாத்—ஒருவன் செய்ய வேண்டும்; த்ரவ்ய-மயீம்—ஸ்தூலம்; புத:—கற்கப்பட்டிருப்பவன்; ஸபர்யாம்—குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி வழிபட்டால்; விவிதை:—பல்வகை வேறுபாடுகளுடன்; த்ரவ்யை:—அணிகலன்கள்; தேஸ—தேசத்தைப் பொருத்து; கால—நேரம்; விபாக-வித்—பிரிவுகளை அறிந்த ஒருவன்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்பது பகவான் கிருஷ்ணரை வழிபடுவதற்குரிய பன்னிரெண்டெழுத்து மந்திரம் ஆகும். ஒருவன் பகவானின் வடிவத்தினை (மூர்த்தத்தினை) பிரதிஷ்டை செய்து ஆதாரப்பூர்வ விதிமுறைகளின்படி மலர்களையும், கனிகளையும் உணவுப் பொருட்களையும் நிவேதனம் செய்து இம்மந்திரத்தை ஜெபித்தல் வேண்டும். ஆனால் இது காலதேச வர்த்தமானங்களுக்கேற்றாற் போல் செய்யப்படுதல் வேண்டும்.
பதம் 4.8.55
ஸலிலை: ஸூசிபிர் மால்யைர் வன்யைர் மூல-பலாதிபி:
ஸஸ்தாங்குராம்ஸூகைஸ் சார்சேத் துலஸ்யா ப்ரியயா ப்ரபும்
ஸலிலை:—நீரை உபயோகிப்பதினால்; ஸூசிபி:—தூய்மையடைகிறது; மால்யை:—மாலைகளினால்; வன்யை:—காட்டிலுள்ள மலர்கள்; மூல—வேர்கள்; பல-ஆதபி:—பலவகையான காய்கள், கனிகள்; ஸஸ்த—அருகம்புல்; அங்குர—மொட்டுக்கள்; அம்ஸூகை:—மரப்பட்டைகள்; பூர்ஜமரம் போன்றவை; ச—மேலும்; அர்சேத்—வழிபட வேண்டும்; துலஸ்யா—துளசி இலைகளினால்; ப்ரியயா—பகவானுக்கு மிகவும் பிரியமானவை; ப்ரபும்—பகவான்.
பகவானை வழிபடுவதற்கு ஒருவன், சுத்தமான நீர், தூய மலர் மாலைகள், கனிகள், மலர்கள் மற்றும் காய்கள் போன்று காடுகளில் கிடைப்பதைப் பயன்படுத்தலாம். அல்லது அருகம்புல்லையும், அரும்புகளையும் மொட்டுக்களையும் அல்லது மரப்பட்டைகளையும் முடிந்தால் முழுமுதற் கடவுளுக்கு மிகவும் விருப்பமான துளசி இலைகளையும் கூடப் பயன்படுத்தலாம்.
பதம் 4.8.56
லப்த்வா த்ரவ்யமயீம் அர்சாம் க்ஷிதி-அம்ப்வ-ஆதிஷூ வார்சயேத்
ஆப்ஹ்ருதாத்மா முனி: ஸாந்தோ யத-வான் மித-வன்ய–புக்
லப்த்வா—கிடைக்கின்ற; த்ரவ்ய-மயீம்—பௌதீகப் பொருட்களினால் செய்யப்பட்ட; அர்சாம்—வணங்கும் மூர்த்தம்; க்ஷிதி—நிலம்; அம்பு—நீர்; ஆதிஷூ—உடன் துவங்கும்; வா—அல்லது; அர்சயேத்—வழிபாடு; ஆப்ருத-ஆத்மா—தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட ஒருவன்; முனி:—சிறந்த சான்றோர்; ஸாந்த:—அமைதியாக; யத-வாக்—பேசும் வேகத்தினைக் கட்டுப்படுத்தி; மித—மிதமான; வன்ய-புக்—வனத்தில் கிடைப்பவற்றை உண்டு.
மண், நீர், மரம், உலோகம் போன்றவற்றினால் செய்யப்பட்ட பகவானின் மூர்த்தம் கூட வழிபடுவதற்குரியதே. கானகத்தில் ஒருவன் மண்ணும், நீரும் கொண்டு செய்யப்பட்ட பகவான் மூர்த்தத்தினை மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கேற்ப வழிபடுதல் வேண்டும். முற்றிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட பக்தன் தெளிவுடனும், அமைதியுடனும் இருந்து காடுகளில் கிடைக்கும் கனிகளையும், காய்களையும், கந்த மூலங்களையும் உண்டு திருப்தியடைதல் வேண்டும்.
பதம் 4.8.57
ஸ்வேச்சாவதார-சரிதைர் அசிந்த்ய நிஜ-மாயயா
கரிஷ்யதி உத்தம ஸ்லோகஸ் தத் த்யாயேத் த்ருதயன்–கமம்
ஸ்வ-இச்சா—அவரது சுய இச்சையினால்; அவதார—அவதாரம்; சரிதை:—செயல்கள்; அசிந்த்ய—கற்பனைக்கெட்டாத; நிஜ-மாயயா—அவரது சுய சக்தியினால்; கரிஷ்யதி—நிறைவேற்றுதல்; உத்தம-ஸ்லோக:—முழுமுதற் கடவுள்; தத்—அது; த்யாயேத்—ஒருவன் தியானித்தல் வேண்டும்; த்ருதயம்-கமம்—மிகுந்த கவர்ச்சியுடைய.
அன்புத் துருவனே, மூர்த்தத்தினை வழிபட்டு மந்திரங்களை ஒரு நாளைக்கு மூன்று முறை ஓதுவதோடு, முழுமுதற் கடவுளின் பரம விருப்பத்தினால் அவரது சுயச் சக்திகளின் மூலம் வெளிப்படும் பல்வேறு அவதாரங்களின் உன்னதமான செயல்களையும் நீ தியானித்தல் வேண்டும்.
பதம் 4.8.58
பரிசர்யா பகவதோ யாவத்ய: பூர்வ-ஸேவிதா
தா மந்த்ர-ஹ்ருதயேனைவ ப்ரயுஞ்ஜ்யான் மந்த்ர–முர்தயே
பரிசர்யா:—தொண்டு; பகவத:—முழுமுதற் கடவுள்; யாவத்ய:—அவை குறிப்பிட்டிருக்கின்றபடி (மேலே குறிப்பிடப்பட்டிருப்பது போல்); பூர்வ-ஸேவிதா:—முந்தைய ஆச்சார்யர்களினால் பரிந்துரைக்கப்பட்டதும் மற்றும் செய்யப்பட்டதும்; தா:—அந்த; மந்த்ர—மந்திரங்கள்; ஹ்ருதயேன—இதயத்தினுள்; ஏவ—உறுதியாக; ப்ரயுஞ்ஜ்யாத்—ஒருவன் வழிபட வேண்டும்; மந்த்ர-மூர்தயே—மந்திரங்களுக்கு அவர் வேறானவர் அல்லர்.
ஒருவன் முந்தைய ஆச்சாரியர்களின் காலடிகளைப் பின்பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சாதனங்களுடன் முழுமுதற் கடவுளை வழிபட வேண்டும். அல்லது மந்திரங்களுக்கும் தனக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாத முழுமுதற் கடவுளை மந்திரங்களை உச்சரித்துத் தன் இதயத்தினுள் வழிபட வேண்டும்.
பதங்கள் 4.8.59 – 4.8.60
ஏவம் காயேன மனஸா வசஸா ச மனோ-கதம்
பரிசர்யமாணோ பகவான் பக்திமத்-பரிசர்யயா
பும்ஸாம் அமாயினாம் ஸம்யக் பஜதாம் பாவ-வர்தன:
ஸ்ரேயோ திஸதி அபிமதம் யத் தர்மாதிஷூ தேஹினாம்
ஏவம்—இவ்வாறு; காயேன—உடலினால்; மனஸா—மனதினால்; வசஸா—வார்த்தையினால்; ச—மேலும்; மன:-கதம்—பகவானை நினைப்பதினால்; பரிசர்யமான:—பக்தித் தொண்டில் ஈடுபடுவது; பகவான்—முழுமுதற் கடவுள்; பக்தி-மத்—பக்தித் தொண்டிற்குரிய ஒழுங்குமுறை விதிகளின்படி; பரிசர்யயா—பகவானை வழிபடுவதினால்; பும்ஸாம்—பக்தனின்; அமாயினாம்—உளப்பூர்வமாகவும், உண்மையுடனும்; ஸம்யக்—நிறைவாக; பஜதாம்—பக்தித்தொண்டில் ஈடுபடுதல்; பாவ-வர்தன:—பக்தனின் மெய்ம்மறத்தலை அதிகரிக்கச் செய்யும் பகவான்; ஸ்ரேய:—இறுதி லட்சியம்; திஸதி—அருளுதல்; அபிமதம்—விருப்பம்; யத்—அவை போன்று; தர்ம-ஆதிஷூ—ஆன்மீக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளம் சம்பந்தப்பட்ட; தேஹினாம்—பந்தப்பட்ட ஆத்மாக்களின்.
இவ்வாறு ஒருவன் பகவானுக்குரிய பக்தித் தொண்டினை உளப்பூர்வமாகவும், உண்மையாகவும் தனது மனம், வார்த்தை, உடலினால், பக்தி முறைகளுக்குரிய செயல்களில் தன்னை இணைத்துக் கொண்டு பக்தித் தொண்டு புரிவதில் ஈடுபடுவான் என்றால் அவன் விருப்பத்திற்கேற்ப பகவான் அவனை ஆசீர்வதிப்பார். ஒரு பக்தன் பௌதீகத் தர்மநெறி, பொருளாதார வளர்ச்சி, புலன் நுகர்ச்சி அல்லது பௌதீக உலகிலிருந்து விடுதலை போன்றவற்றை விரும்பினாலும் அவனுக்கு அவை அருளப்படும்.
பதம் 4.8.61
விரக்தஸ் சேந்த்ரிய-ரதௌ பக்தி-யோகேன பூயஸா
தம் நிரந்தர-பாவேன பஜேதாத்தா விமுக்தயே
விரக்த:-ச— முற்றிலும் துறவு நெறி வாழக்கை; இந்த்ரிய-ரதௌ—புலன் நுகர்ச்சி விஷயத்தில்; பக்தி-யோகேன—பக்தித் தொண்டு முறைகளினால்; பூயஸா—ஆழ்ந்த கவனத்துடன்; தம்—அவருக்கு (பரம் பொருளுக்கு); நிரந்தர—தொடர்ந்து, ஓர் நாளின் இருபத்து நான்கு மணி நேரமும்; பாவேன—தன்னிலை மறத்தலின் மிகவுயர்ந்த நிலையில்; பஜேத—வழிபட வேண்டும்; அக்தா—நேரடியாக; விமுக்தயே—முக்தியடைவதற்காக.
முக்தியடைய வேண்டும் என்று ஒருவன் உளப்பூர்வமாக நினைத்தான் என்றால் அவன் ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரமும் தன்னை மறந்த ஆனந்தத்தின் உயர்நிலையில் ஆழ்ந்து, உன்னத அன்புத் தொண்டில் உறுதியுடன் இருத்தல் வேண்டும். மேலும் புலனுகர்ச்சிக்கான அனைத்துச் செயல்களிலிருந்தும் விலகி அவன் தனியே இருத்தல் வேண்டும்.
பதம் 4.8.62
இதி யுக்தஸ் தம் பரிக்ரம்ய ப்ரணம்ய ச ந்ருபார்பக:
யயௌ மதுவனம் புண்யம் ஹரேஸ் சரண–சர்சிதம்
இதி—இவ்வாறு; யுக்த:—சொல்லப்பட்டு; தம்—அவரை (நாரத முனிவரை); பரிக்ரம்ய—சுற்றி வலம் வந்து; ப்ரணம்ய—வந்தனங்களைச் சமர்ப்பித்து; ச—மேலும்; ந்ருப-அர்பக:—அரச மைந்தன்; யயௌ—சென்றார்; மதுவனம்—பிருந்தாவனத்தில் உள்ள வனமாகிய மதுவனம்; புண்யம்—புனிதமும் மங்கலமும் வாய்ந்தது; ஹரே:—பகவானின்; சரண-சர்சிதம்—பகவான் கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளின் தடங்கள் பதிந்தது.
மன்னர் மைந்தனான துருவ மகாராஜா நாரத முனிவரால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டபின் அவர் தனது ஆன்மீக குருவான நாரதரை மூன்று முறை சுற்றி வலம் வந்து தன் மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்தினார். பிறகு அவர் பகவான் கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளின் தடங்களை எப்போதும் பெற்று மிகவும் மங்கலம் கொண்டதாயிருக்கும் மதுவனத்தை நோக்கிச் சென்றார்.
பதம் 4.8.63
தபோ-வனம் கதே தஸ்மின் ப்ரவிஷ்டோ ‘ந்த:-புரம் முனி:
அர்ஹிதார் ஹணகோ ராஜ்ஞா ஸூகாஸீன உவாச தம்
தப:-வனம்—துருவ மகாராஜா தவம் செய்வதற்குச் செல்லும் வனத்தின் பாதை; கதே—இவ்வாறு அணுகப்பட்டு; தஸ்மின்—அங்கே; ப்ரவிஷ்ட:—நுழைந்தார்; அந்த:-புரம்—அந்தப்புரத்தினுள்; முனி:—நாரத மகாமுனிவர்; அர்ஹித—வணங்கப்பட்டு; அர்ஹணக:—மரியாதைக்குரிய நடத்தையினால்; ராஜ்ஞா—அரசரால்; ஸூக-ஆஸீன:—அவர் தன் இருக்கையில் வசதியாக அமர்ந்து; உவாச—கூறினார்; தம்—அவருக்கு (அரசர்).
துருவ மகாராஜா பக்தித்தொண்டு இயற்றுவதற்காக மதுவனக் காட்டிற்குச் சென்றபிறகு நாரத முனிவர் அரண்மனையில் மன்னர் எந்நிலையில் இருக்கிறார் என்பதைக் காண விரும்பினார். நாரத முனிவர் அரண்மனைக்கு வந்தவுடன் மன்னர் அவருக்குத் தன் மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்தி அவரை நன்கு வரவேற்றார். தனக்குரிய இருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டவுடன் நாரத முனிவர் பேசத் தொடங்கினார்.
பதம் 4.8.64
நாரத உவாச
ராஜன் கிம் த்யாயஸே தீர்கம் முகேன பரிஸூஷ்யதா
கிம் வா ந ரிஷ்யதே காமோ தர்மோ வார்தேன ஸம்யுத:
நாரத: உவாச—மாமுனிவர் நாரதர் கூறினார்; ராஜன்—அன்பான மன்னனே; கிம்—என்ன; த்யாயஸே—சிந்தனை; தீர்கம்—மிகவும் ஆழமாக; முகேன—உனது முகத்தில்; பரிஸூஷ்யதா—வாடிக் காணப்படுகிறது; கிம்-வா—ஏதாவது; ந—இல்லை; ரிஷ்யதே—தொலைந்து விட்டதா; காம:—புலனுகர்ச்சி; தர்ம:—மதச் சடங்குகள்; வா—அல்லது; அர்தேன—பொருளாதார வளர்ச்சி; ஸம்யுத:—அதனுடன்.
மாமுனிவர் நாரதர் கேட்டார்: எனதன்பான மன்னனே, உனது முகமோ களையிழந்து மிகவும் வாடிக் காணப்படுகிறது. நீண்ட நேரமாக நீ எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது என்ன காரணம்? உனது தர்மநெறி, பொருளாதார வளர்ச்சி மற்றும் புலனுகர்ச்சிக்கான பாதையினைப் பின்பற்றுவதில் ஏதேனும் இடையூறு நேர்ந்ததா?
பதம் 4.8.65
ராஜோவாச
ஸூதோ மே பாலகோ ப்ரஹ்மன் ஸ்த்ரைணேனாகருணாத்மனா
நிர்வாஸித: பாஞ்ச-வர்ஷ: ஸஹ மாத்ரா மஹான் கவி:
ராஜா உவாச—மன்னர் கூறினார்; ஸூத:—மைந்தன்; மே—எனது; பாலக:—சிறிய பாலன்; ப்ரஹ்மன்—எனதன்பு அந்தணரே; ஸ்த்ரைணேன—மனைவிக்கு அடிமையானவன்; அகருணா-ஆத்மனா—கருணையற்றக் கல் நெஞ்சன்; நிர்வாஸித:—துரத்தப்பட்டான்; பாஞ்ச-வர்ஷ:—ஐந்து வயதே நிரம்பிய சிறுவன்; ஸஹ—உடன்; மாத்ரா—அன்னை; மஹான்—உயர்ந்த மகான்; கவி:—பக்தன்.
மன்னர் பதில் கூறினார்: ஓ, அந்தணரிற் சிறந்தோரே, நான் எனது மனைவியின் மீது அளவு கடந்த மோகம் அடைந்து அடிமையானதினால் இழிந்த கீழ்நிலை பெற்று ஐந்து வயதே நிரம்பிய எனது மகனிடம் கூடக் கருணையின்றி நடந்து கொண்டேன். அவன் ஓர் மகாத்மாகவும், சிறந்த பக்தனாகவும் விளங்கிய போதிலும் அவனையும் அவன் அன்னையையும் இங்கிருந்து துரத்திவிட்டேன்.
பதம் 4.8.66
அபி அநாதம் வனே ப்ரஹ்மன் மா ஸ்மாதந்தி அர்பகம் வ்ருகா:
ஸ்ராந்தம் ஸயானம் க்ஷுகிதம் பரிம்லான–முகாம்புஜம்
அபி—உறுதியாக; அநாதம்—யாராலும் பாதுகாக்கப்படாத; வனே—வனத்தில்; ப்ரஹ்மன்—எனதன்பிற்குரிய அந்தணரே; மா—உண்டோ அல்லது இல்லையோ; ஸம—இல்லை; அதந்தி—விழுங்கப்படுதல்; அர்பகம்—துணையற்ற சிறுவன்; வ்ருகா:—ஓநாய்கள்; ஸ்ராந்தம்—களைப்புற்று; ஸயானம்—மயங்கி விழுந்து; க்ஷுகிதம்—பசியினால்; பரிம்லான—மெலிந்து; முக-அம்புஜம்—தாமரை மலர் போன்ற அவன் முகம்.
எனதன்பிற்குரிய அந்தணரே! எனதருமை மைந்தனின் முகம் செந்தாமரை மலர் போல் எழில் வாய்ந்ததாகும். அவனது துன்பமயமான நிலையினை நான் நினைத்துப் பார்க்கின்றேன். அவன் இப்பொழுது பாதுகாப்பின்றி பசியினால் வருந்திக் கொண்டிருப்பான். மேலும் அவன் காட்டில் எங்கேயாவது மயங்கி வீழ்ந்திருக்கலாம் அல்லது அவனது உடலைத் தின்பதற்காக ஓநாய்களினால் தாக்கப்பட்டிருக்கலாம்.
பதம் 4.8.67
அஹோ மே பத தெளராத்ம்யம் ஸ்த்ரீ-ஜிதஸ்யோபதாரய
யோ ‘ங்கம் ப்ரேம்ணாருருக்ஷந்தம் நாப்யனந்தம் அஸத்தம்:
அஹோ—அந்தோ; மே—எனது; பத—உறுதியாக; தெளராத்ம்யம்—கொடுமை; ஸ்த்ரீஜிதஸ்ய—ஒரு பெண்ணால் வெற்றி கொள்ளப்பட்டு; உபதாரய—இது தொடர்பாக என்னைச் சற்று நினைத்து; ய:—யார்; அங்கம்—மடியில்; ப்ரேம்ணா—அன்பினால்; ஆருருக்ஷந்தம்—ஏற முயற்சித்தல்; ந—இல்லை; அப்யனந்தம்—அன்புடன் வரவேற்கவில்லை; அஸத்-தம:—மிகக் கொடியவன்.
அந்தோ எனது மனைவியினால் நான் எவ்வாறு அடக்கியாளப்பட்டேன்! எனது கொடுமையினைச் சற்றுக் கற்பனை செய்யுங்கள்! அன்பினாலும் பாசத்தினாலும் குழந்தை என் மடியின் மீது அமர்வதற்கு முயன்றான். அவனை நான் தூக்கவோ அல்லது கொஞ்சவோயில்லை. எத்துணைக் கல் நெஞ்சன் நான் என்பதைச் சற்று நினைத்துப் பாருங்கள்.
பதம் 4.8.68
நாரத உவாச
மாமா ஸுச: ஸ்வ-தனயம் தேவ-குப்தம் விஸாம்பதே
தத்-ப்ரபாவம் அவிஜ்நாய ப்ராவ்ருங்க்தே யத்-யஸோ ஜகத்
நாரத: உவாச—மாமுனிவர் நாரதர் கூறினார்; மா—இல்லை; மா—இல்லை; ஸுச:—வருந்துவதற்கு; ஸ்வ-தனயம்—உனது சொந்த மைந்தன்; தேவ-குப்தம்—அவன் பகவானால் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறான்; விஸாம்-பதே—மனித குலத்தலைவனே; தத்—அவனது; ப்ரபாவம்—செல்வாக்கு; அவிஜ்ஞாய—அறியாது; ப்ராவ்ருங்க்தே—எங்கும் பரவியுள்ளது; யத்—அவனது; யஸ—புகழ்; ஜகத்—உலகெங்கணும்.
மாமுனிவர் நாரதர் பதில் கூறினார்: எனதன்பார்ந்த அரசனே, உனது மைந்தனைப் பற்றித் துயருறுதல் வேண்டா. அவன் முழுமுதற் கடவுளால் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறான். அவனது செல்வாக்கை நீ அறிவாய்! அவனது புகழ் முன்னமேயே இவ்வுலகமெங்கணும் விரிந்து பரந்திருக்கிறது.
பதம் 4.8.69
ஸுதுஷ்கரம் கர்ம க்ருத்வா லோக-பாலைர் அபி ப்ரபு:
ஜஷ்யதி அசிரதோ ராஜன் யாஸோ விபுலயம்ஸ் தவ
ஸு-துஷ்கரம்—செய்வதற்கரியது; கர்ம—செயல்; க்ருத்வா—செய்த பிறகு; லோக-பாலை:—சிறந்த மகான்களினால்; அபி—கூட; ப்ரபு:—தகுதியானவர்; ஜஷ்யதி—மீண்டும் வருவான்; அசிரத:—தாமதமின்றி; ராஜன்—அன்பிற்குரிய ராஜனே; யஸ:—புகழ்; விபுலயன்—சிறப்படைவதற்கு; தவ—உனது.
அன்பிற்குரிய அரசனே, உனது மைந்தன் மிகவும் தேர்ந்தவன். அவனது செயல்கள் மாமன்னர்களாலும், முனிவர்களாலும் கூடச் செய்வதற்கரியவை. கூடிய விரைவில் அவன் தன் இலட்சியத்தை நிறைவேற்றி மீண்டும் இல்லம் திரும்புவான். உனது புகழை அவன் இவ்வுலகமெங்கணும் பரப்புவான் என்பதையும் நீ புரிந்து கொள்ள வேண்டும்.
பதம் 4.8.70
மைத்ரேய உவாச
இதி தேவர்ஷிணா ப்ரோக்தம் விஸ்ருத்ய ஜகதீ-பதி:
ராஜ-லக்ஷ்மீம் அநாத்ருத்ய புத்ரம் ஏவான்வசிந்தயத்
இதி—இவ்வாறு; தேவர்ஷிணா—நாரத மாமுனிவரால்; ப்ரோக்தம்—பேசப்பட்டு; விஸ்ருத்ய—கேட்டு; ஜகதீ-பதி:—அரசன்; ராஜ-லக்ஷ்மீம்—தனது பெரிய பேரரசின் வளத்தினை; அநாத்ருத்ய—கவனியாது; புத்ரம்—தனது புதல்வனை; ஏவ—உறுதியாக; அன்வசிந்தயத்—நினைக்கத் தொடங்கினார்.
மைத்ரேய மகான் கூறினார்: நாரத முனிவரால் அறிவுறுத்தப்பட்ட மன்னர் உத்தானபாதன் பரந்து விரிந்திருக்கும் தனது பேரரசினையும், தேவதையினைப் போன்ற அதன் வளங்களையும் கவனிப்பதை விடுத்து தனது மைந்தன் துருவனைப் பற்றி மட்டுமே நினைக்கத் தொடங்கினான்.
பதம் 4.8.71
தத்ராபிஷிக்த: ப்ரயதஸ் தாம் உபோஷ்ய விபாவரீம்
ஸமாஹித: பர்யசரத் ரிஷி-ஆதேஸேன பூருஷம்
தத்ர—அங்கே; அபிஷிக்த:—நீராடிய பின்னர்; ப்ரயத:—ஆழ்ந்த கவனத்துடன்; தாம்—அந்த; உபோஷ்ய—உபவாசம்; விபாவரீம்—இரவு; ஸமாஹித:—சீரிய நிலையில்; பர்யசரத்—வழிபட்டார்; ரிஷி—நாரத மாமுனிவர்; ஆதேஸேன—கூறியபடி; பூருஷம்—முழுமுதற் கடவுள்.
துருவ மகாராஜா மதுவனத்தை அடைந்தவுடன் யமுனை நதியில் நீராடி அன்றிரவு மிகுந்த கவனத்துடனும், ஒழுங்குடனும் விரதம் இருந்தார். அதன் பிறகு நாரத முனிவர் கூறியபடி முழுமுதற் கடவுளை வழிபடுவதில் ஈடுபட்டார்.
பதம் 4.8.72
த்ரி-ராத்நாந்தே த்ரி-ராத்ராந்தே கபித்த-பதராஸன:
ஆத்ம-வ்ருத்தி-அனுசாரேண மாஸம் நின்யே ‘ர்சயன் ஹரிம்
த்ரி—மூன்று; ராத்ர-அர்தே—இரவின் முடிவில்; த்ரி—மூன்று; ராத்ர-அந்தே—இரவின் முடிவில்; கபித்த-பதர—கனிகளும் கொட்டைகளும்; அஸன:—உண்டு; ஆத்ம-வ்ருத்தி—உடலைக் காப்பதற்கு; அனுஸாரேண—தேவையானது குறைந்த; மாஸம்—நடு மாதம்; நின்யே—கழிந்தது; அளை:—வழிபட்டு; ஹரிம்—முழுமுதற் கடவுள்.
துருவ மகாராஜா முதல் ஒரு மாதம் தனது உயிரைக் காத்துக் கொள்வதற்காக மூன்று நாட்களுக்கொரு முறை கனிகளையும், கொட்டைகளையும் உண்டார். இவ்வாறு அவர் முழுமுதற் கடவுளை வழிபடுவதில் முன்னேறினார்.
பதம் 4.8.73
த்விதீயம் ச தா மாஸம் ஷஷ்டே ஷஷ்டே ‘ர்பகோ தினே
த்ருண-பர்ணாதிபி: ஸீர்ணை: க்ருதான்னோ ‘ப்யர்சயன் விபும்
த்விதீயம்—அடுத்தமாதம்; ச—மேலும்; ததா—மேலே குறிப்பிட்டுள்ளபடி; மாஸம்—மாதம்; ஷஷ்டே ஷஷ்டே—ஆறு நாட்களுக்கொருமுறை; அர்பக:—அவ்வறியாச் சிறியன்; தினே—நாட்களில்; த்ரின்-பர்ண-ஆதிபி:—புற்களையும், இலைகளையும்; ஸீர்ணை:—அவை காய்ந்தவையாகும்; க்ருத-அன்ன:—தனது உணவாக; அப்யர்சயன்—தனது வழிபாட்டு முறையினைத் தொடர்ந்தார்; விபும்—முழுமுதற் கடவுளுக்காக.
துருவ மகாராஜா, இரண்டாவது மாதத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு முறை காய்ந்த புற்களையும், இலைகளையும் உண்டு தனது வழிபாட்டினைத் தொடர்ந்தார்.
பதம் 4.8.74
த்ருதீயம் சானயன் மாஸம் நவமே நவமே ‘ஹனி
அப்-பக்க்ஷ உத்தமஸ்லோகம் உபாதாவத் ஸமாதினா
த்ருதீயம்—மூன்றாவது மாதம்; ச—மேலும்; ஆனயன்—கழிப்பது; மாஸம்—ஒரு மாதம்; நவமே நவமே—ஒவ்வொரு ஒன்பதாம் நாளும்; அஹனி—ஓர்நாள்; அப்-பக்க்ஷ:—தண்ணீரை மட்டுமே அருந்தினார்; உத்தம-ஸ்லோகம்—உத்தம சுலோகங்களினால் துதிக்கப்படும் முழுமுதற் கடவுள்; உபாதாவத்—வழிபட்டார்; ஸமாதினா—சமாதி நிலையில்.
மூன்றாவது மாதம் ஒன்பது நாட்களுக்கொருமுறை தண்ணீரை மட்டுமே அருந்தினார். இவ்வாறு அவர் தெய்வீகப் பண்களினால் வணங்கப்படும் முழுமுதற் கடவுளை முற்றிலும் சமாதி நிலையில் இருந்து வழிபட்டார்.
பதம் 4.8.75
சதுர்தம் அபி வை மாஸம் த்வாதஸே த்வாதஸே ‘ஹனி
வாயு-பக்ஷோ ஜித-ஸ்வாஸோ த்யாயன் தேவம் அதாராயத்
சதுர்தம்—நான்காவது; அபி—மேலும்; வை—இவ்வழியில்; மாஸம்—மாதம்; த்வாதஸே த்வாதஸே—பன்னிரெண்டாவது; அஹனி—நாளில்; வாயு—காற்று; பக்க்ஷ:—உண்டு; ஜித-ஸ்வாஸ:—சுவாச முறையில் கட்டுப்படுத்தி; த்யாயன்—தியானித்து; தேவம்—முழுமுதற் கடவுள்; அதாரயத்—வழிபட்டார்.
நான்காவது மாதத்தில் துருவ மகாராஜா தனது மூச்சினைக் கட்டுப்படுத்துவதில் வல்லமை பெற்றார். அதனால், அவர் பன்னிரெண்டு நாட்களுக்குகொருமுறை காற்றை மற்றுமே சுவாசித்து வாழ்ந்தார். இவ்வழியில் அவர் தனது நிலையில் உறுதியாக இருந்து முழுமுதற் கடவுளை வழிபட்டார்.
பதம் 4.8.76
பஞ்சமே மாஸி அனுப்ராப்தே ஜித-ஸ்வாஸோ ந்ரு பாத்மஜ:
த்யாயன் ப்ராஹ்ம பதைகேன தஸ்தெள ஸ்தாணுர் இவாசல:
பஞ்சமே—ஐந்தாவது; மாஸி—மாதத்தில்; அனுப்-ரபதே—இருந்து; ஜித-ஸ்வாஸ:—சுவாசத்தினைக் கட்டுப்படுத்தியவாறே; ந்ருப-ஆத்மஜ:—அரசகுமாரன் த்யாயன்—தியானித்தார்; ப்ரஹ்ம—முழுமுதற் கடவுளை; பத ஏகேன—ஒற்றைக்காலில்; தஸ்தௌ—நின்று; ஸ்தாணு:—ஒரு தூணைப் போன்று; இவ—போன்று; அசல:—அசைவின்றி.
ஐந்தாவது மாதத்தில் அரசகுமாரன் துருவ மகாராஜா தனது மூச்சினைக் கட்டுப்படுத்தி எந்த வித அசைவுமின்றி ஒரு தூணைப் போன்று ஒற்றைக் காலில் நின்று தனது மனத்தினை முற்றிலும் பரம் பிரம்மத்தின் மீது ஊன்றி வழிபட்டார்.
பதம் 4.8.77
ஸர்வதோ மன ஆக்ருஷ்ய ஹ்ருதி பூதேந்த்ரியாஸயம்
த்யாயன் பகவதோ ரூபம் நாத்ராக்ஷ த் கிஞ்சனாபரம்
ஸர்வத:—எல்லா வழிகளிலும்; மன:—மனதினை; ஆக்ருஷ்ய—கவனம் வைத்து; ஹ்ருதி—இதயத்தில்; பூத-இந்த்ரிய-ஆஸயம்-புலன்களுக்குரிய இடங்களையும் அதன் நுகர்ச்சிக்குரிய பொருள்களையும்; த்யாயம்—தியானித்து; பகவத:—முழுமுதற் கடவுளின்; ரூபம்—வடிவத்தினை; ந ஆத்ராக்ஷீத்—பார்க்கவில்லை; கிஞ்சன—எதையும்; அபரம்—வேறு.
அவர் புலன்களையும் அதற்குரிய நுகர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி வேறெதிலும் தன் கவனம் சிதறாது தன் மனதினை முழுமுதற் கடவுளின் மேல் நிலைநிறுத்தி வழிபாடு செய்தார்.
பதம் 4.8.78
ஆதாரம் மஹத்-ஆதீனாம் ப்ரதான-புருஷேஸ்வரம்
ப்ரஹ்ம தாரய மாணஸ்ய த்ரயோ லோகாஸ் சகம்பிரே
ஆதாரம்—ஓய்வு; மஹத்-ஆதினாம்—மஹத்-தத்துவத்தின் மூல ஆதாரமாக அறியப்படுபவர்; ப்ரதான—முக்கியமானவர்; புருஷ-ஈஸ்வரம்—உயிர்களின் நாயகர்; ப்ரஹ்ம—பரப்பிரம்மம், முழுமுதற் கடவுள்; தாரயமாணஸ்ய—மனதில் நிறுத்தி; த்ரய:—மூன்று லோகங்களும்; வோகா:—அனைத்து உலகங்களும்; சகம்பிரே—நடுங்கத் தொடங்கியது.
துருவ மகாராஜா இவ்வாறு அனைத்து உயிர்களின் நாயகராகவும், பௌதீகப் படைப்புகளின் மூலாதாரமாகவும் விளங்குகின்ற முழுமுதற் கடவுளைப் பற்றிக் கொண்டவுடன் மூன்று லோகங்களும் நடுங்கத் தொடங்கின.
பதம் 4.8.79
யதைக-பாதேன ஸ பார்திவார்பக ஸ்
தஸ்தௌ தத்-அங்குஷ்ட நிபீடிதா மஹீ
நனாம தத்ரார்தம் இபேந்த்ர-திஷ்டிதா
தரீவ ஸவ்யேதரத: பதே பதே
யதா—எப்பொழுது; ஏக—ஒன்று; பாதேன—கால்; ஸ:—துருவ மகாராஜா; பார்திவ—அரசரின்; அர்பக:—குமாரன்; தஸ்தௌ—நிலைத்து நின்று கொண்டிருத்தல்; தத்-அங்குஷ்ட—அவரது பெருவிரல்; நிபீடிதா—அழுந்தியதினால்; மஹீ—நிலம் நனாம—கீழாக வளைந்து; தத்ர—பிறகு; அர்தம்—அரை; இப-இந்த்ர—யானைகளின் அரசன்; திஷ்டிதா—இருந்தது; தரீ இவ—படகினைப் போல்; ஸவ்ய-இதர:—இடமும், வலமும்; பதே பதே—ஒவ்வொரு அடியிலும்.
அரசகுமாரரான துருவ மகாராஜா ஒற்றைக் காலில் நேராக நிலைத்து நின்றதினால் அவரது கால் பெருவிரலின் அழுத்தத்தினால் பூமியின் ஒரு பகுதி கீழ் நோக்கி இறங்கியது. இது யானையினைச் சுமந்து செல்லும் படகு யானையின் ஒவ்வொரு காலடி அழுத்தத்தினால் படகு இடமும், வலமும் அலைப்புண்டது போல் இருந்தது.
பதம் 4.8.80
தஸ்மின்ன அபித்யாயதி விஸ்வம் ஆத்மனோ
த்வாரம் நிருத்யாஸும் அனன்யயா தியா
லோக நிருச்ச்வாஸ-நிபீடிதா ப்ருஸம்
ஸ-லோக-பாலா: ஸரணம் யயுர் ஹரிம்
தஸ்மின்—துருவ மகாராஜா; அபித்யாயதி—ஆழ்ந்த கவனத்துடன் தியானித்து; விஸ்வம் ஆத்மன:—உலகின் முழு வடிவத்தினையும்; த்வாரம்—துவாரங்கள்; நிருத்ய—அடைத்து; அஸும்—உயிர்க்காற்று (பிராணவாயு); அனன்யயா—எவ்விதக் கவனச்சிதறுலுமின்றி; தியா—தியானம்; லோகா:—அனைத்துலகங்களும்; நிருச்சவாஸ—சுவாசிப்பது நின்றது; நிபீடிதா:—இவ்வாறு மூச்சு முட்டி; ப்ருஸம்—மிகவிரைவில்; ஸ-லோக-பாலா:—வெவ்வேறு உலகங்களிலுள்ள சிறந்த தேவர்கள் அனைவரும்; ஸரணம்—அடைக்கலம்; யயு:—புகுந்தனர்; ஹரிம்—முழுமுதற் கடவுளை.
துருவ மகாராஜா நடைமுறையில் விஸ்வாத்மாவான விஷ்ணுவைப் போன்று கனமானவராக மாறினார். அவரது ஆழ்ந்த தியானத்தினாலும் அவர் தனது உடலிலுள்ள துவாரங்கள் அனைத்தையும் மூடியதினாலும் முழு பிரபஞ்சமும் சுவாசிக்க முடியவில்லை. அதனால் எல்லா உலகங்களிலும் உள்ள அனைத்து சிறந்த தேவர்களும் மூச்சுதிணறுலுக்குள்ளாகி முழுமுதற் கடவுளிடம் சரண் புகுந்தனர்.
பதம் 4.8.81
தேவா ஊசு:
நைவம் விதாமோ பகவன் ப்ராண-ரோதம்
சராசரஸ்யாகில-ஸத்த்வ-தாம்ன:
விதேஹி தன்னோ வ்ருஜினாத் விமோக்ஷம்
ப்ராப்தா வயம் த்வாம் ஸரணம் ஸரண்யம்
தேவா: ஊசு:—அனைத்துத் தேவர்களும் கூறினர்; ந—இல்லை; ஏவம்—இவ்வாறு; விதாம:—நாங்கள் புரிந்து கொண்டோம்; பகவன்—ஓ முழுமுதற் கடவுளே; ப்ராண-ரோதம்—எவ்வாறு எங்கள் சுவாசம் திணறியது என்று உணர்ந்தோம்; சர—அசைகின்ற; அசரன்ய—அசையாதது; அகில—அகிலம்; ஸத்த்வ—வாழ்க்கை; தாம்ன:—இருப்பிடமாக விளங்குபவர்; விதேஹி—தேவையானதை அன்புடன் செய்வீராக; தத்—ஆகையினால்; ந:—எங்கள்; வ்ருஜினாத்—அபாயத்திலிருந்து; விமோக்ஷம்—விடுதலை; ப்ராப்தா:—அணுகினோம்; வயம்—நாங்கள் எல்லோரும்; த்வாம்—உமக்கு; ஸரணம்—அடைக்கலம்; ஸரண்யம்—அடைக்கலம் கொடுப்பதற்குரியவர்.
தேவர்கள் கூறினார்: போற்றுதலுக்குரிய பகவானே, அசைகின்ற, அசையாத அனைத்து உயிர்ப்பொருட்களுக்கும் நீரே புகலிடமாக விளங்குகின்றீர். அனைத்து உயிர்களின் மூச்சும் நின்று திணறலுக்காளாகியுள்ளனர் என்பது நாங்கள் உணர்கிறோம். இதுபோன்று நிகழ்வினை நாங்கள் அனுபவித்ததே இல்லை. சரணடையும் ஆத்மாக்கள் அனைத்திற்கும் நீரே இறுதிப் புகலிடமாக விளங்குவதினால் நாங்கள் உம்மைச் சரணடைந்தோம், இவ்வபாயத்திலிருந்து காத்தருள்வீராக.
பதம் 4.8.82
ஸ்ரீ பகவான் உவாச
மா பைஷ்ட பாலம் தபஸோ துரத்யயான்
நிவர்தயிஷ்யே ப்ரதியாத ஸ்வ-தாம
யதோ ஹி வ: ப்ரானோ-நிரோத அஸீத்
ஓளத்தானபாதிர் மயி ஸங்கதாத்மா
ஸ்ரீ பகவான் உவாச—முழுமுதற் கடவுள் கூறினார்; மாபைஷ்ட—அஞ்ச வேண்டாம்; பாவம்—குழந்தை துருவன்; தபஸ:—கடுமையான தன் தவத்தினால்; துரத்யயாத்—உறுதியான தீர்மானத்துடன்; நிவர்தயிஷ்யே—நான் அவனை நிறுத்தும்படி சொல்கிறேன்; ப்ரதியாத—நீங்கள் செல்வீர்; ஸ்வ-தாம—உமது இருப்பிடங்களுக்கு; யத:—எவரிடமிருந்து; ஹி—உறுதியாக; வ:—உமது; ப்ராண-நிரோத:—உயிர்க்காற்றுத் திணறல்; அஸீத்—நேர்ந்தது; ஓளத்தானபாதி:—அரசன் உத்தானபாதனின் மைந்தன் செயலினால்; மயி—எனக்கு; ஸங்கத ஆத்மா—என்னைப் பற்றிய முழுச்சிந்தனையில் ஆழ்தல்.
முழுமுதற் கடவுள் பதில் கூறினார்: அன்பான தேவர்களே, இதனால் நீங்கள் மனக்குழப்பம் அடையத் தேவையில்லை. இப்போது எனது நினைவில் முற்றிலும் ஆழ்ந்திருக்கும் துருவன் என்னும் மன்னன் உத்தானபாதனது மைந்தன் கொண்ட திட சங்கல்பம் மற்றும் கடுமையான தவத்தின் விளைவினாலேயே இது நேர்ந்தது. பிரபஞ்சத்தின் சுவாசத்தினையே அவன் தடுத்து நிறுத்தியிருக்கிறான். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக உங்கள் இருப்பிடங்களை அடைவீராக. நான் இச்சிறுவனின் கடுமையான தவங்களை நிறுத்துவேன். அதன் மூலம் நீங்கள் அனைவரும் இச்சூழலிலிருந்து காப்பாற்றப்படுவீர்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “துருவ மகாராஜா வனம் செல்வதற்காகத் தன் இல்லம் நீங்குதல்” எனும் தலைப்பைக் கொண்ட எட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.