அத்தியாயம் – 7
தட்சன் நடத்திய வேள்வி
பதம் 4.7.1 : மைத்ரேய முனிவர் கூறினார்: ஒ, வலிமையான கரங்களையுடைய விதுரனே, பிரம்மதேவனின் இவ்விளக்கங்களினால் சமாதானமடைந்த சிவபெருமான் அவரது வேண்டுகோளை ஏற்று பின்வருமாறு பதில் கூறினார்.
பதம் 4.7.2 : சிவபெருமான் கூறினார்: எனதன்பான தந்தை பிரம்ம தேவனே! தேவர்கள் இழைத்த குற்றத்தினை நான் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் தேவர்கள் குழந்தைத்தனமாகவும் புத்தியின்றியும் நடந்து கொண்டனர். அவர்களது செயலை தான் கடுமையாகக் கருதவில்லை. இருந்தாலும் அவர்களைத் திருத்துவதற்காகவே நான் தண்டித்தேன்.
பதம் 4.7.3 : சிவபெருமான் தொடர்ந்து கூறினார்: தக்கனின் தலை எரிந்து சாம்பலாகிப் போய்விட்டதினால், அவர் ஒரு ஆட்டின் தலையைப் பெறுவாராக. பகன் என்றும் தேவன் மித்திரனின் கண்களைப் பெற்று அதன் மூலம் அவனுக்குரிய அவிர்பாகத்தினைக் காண்பானாக.
பதம் 4.7.4 : பூஷன் என்னும் தேவன் தன் சீடர்களின் பற்களின் மூலமே மென்று அவன் தனியே இருந்தானென்றால் தட்டைப் பயறு மாவினை மட்டுமே உண்பான். அவ்வேள்வியில் எனக்குரிய பொருளைத்தர ஒத்துக் கொண்ட அனைத்துத் தேவர்களும் தங்கள் காயம் குணமாகி நலம் அடைவார்களாக.
பதம் 4.7.5 : இருபுஜங்களும் வெட்டுண்டு போனவர்கள் அசுவினி குமாரர்களின் புஜங்களினால் செயல்படுவாராக. இரு கரங்களும் வெட்டுண்டு போனவர்கள் பூஷனின் கரங்களினால் செயல்படுவாராக. புரோகிதர்களும் அவ்வாறே செயல்படட்டும். பிருகுவைப் பொறுத்தமட்டில் அவர் ஆட்டின் தாடியைப் பெறுவாராக!
பதம் 4.7.6 : மைத்ரேய முனிவர் கூறினார்: எனதன்பான விதுரனே,
நலமருள்வதில் மிகச் சிறந்தவரான சிவபெருமானின் வார்த்தைகளைக் கேட்டு அங்கு குழுமி இருந்த அனைவரும் மனப்பூர்வமாகவும், ஆன்ம நேயத்தோடும் மகிழ்ச்சியடைந்தனர்.
பதம் 4.7.7 : அதன்பின்னர் முனிவர்களின் தலைவரான பிருகு முனிவர் வேள்வியில் கலந்து கொள்ளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டார். அதன்பேரில் சிவபெருமானும், பிரம்மதேவனும், தேவர்களும், முனிவர்களும், புடைசூழ அப்பெரிய வேள்வி நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
பதம் 4.7.8 : சிவபெருமானின் கட்டளையின்படி எல்லாம் நிறைவேற்றப்பட்டவுடன் வேள்வியில் பலியிடுவதற்காக வைத்திருந்த ஆட்டின் தலையினை தக்கனது உடலில் பொருத்தினர்.
பதம் 4.7.9 : ஆட்டின் தலை தக்கனின் உடலுடன் பொருத்தப்பட்டவுடன், தக்கன் உணர்வுபெற்று உறக்கத்தினின்று விழிப்பதுபோல் எழுந்து தன் முன்னே சிவபெருமான் நிற்பதைக் கண்டான்.
பதம் 4.7.10 : காளை வாகனத்தின் மீது அமர்ந்து காட்சி தந்த சிவபெருமானைக் கண்டவுடன் தக்கனது காழ்ப்புற்ற அழுக்கு மனம் சரத் காலத்து மழையினால் குளத்து நீர் தூய்மையடைவது போல் உடனே தூய்மையடைந்தது.
பதம் 4.7.11 : தக்கன் சிவபெருமானைத் துதிக்க விரும்பினார். ஆனால் அவர் தன் அருமை மகள் சதீயின் அநியாய மரணத்தை எண்ணி கண்களில் நீர் பெருக, சோகத்தினால் குரல் கம்ம ஒன்றும் கூறாது இருந்தார்.
பதம் 4.7.12 : இவ்வாறு அன்பினாலும், பாசத்தினாலும் தன்னிலை மறந்திருந்த தக்கன் சுய உணர்வு பெற்றவராக மாறினார். கடுமையாக முயற்சித்து தன் மனதினைச் சாந்தப்படுத்தி, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அவர் தூய உணர்வுடன் சிவபெருமானை வணங்கத் தொடங்கினார்.
பதம் 4.7.13 : மன்னர் தக்கன் கூறினார்: போற்றுதற்குரிய சிவபெருமானே உம்மிடத்தில் நான் மிகப்பெரிய குற்றம் புரிந்துவிட்டேன். ஆனாலும் நீர் மிக்க அன்புடையவராதலால் உமது கருணையினை திரும்பப் பெற்று கொண்டபோதிலும் என்னைத் தண்டித்ததின் மூலம் எனக்கு மிகப் பெரிய நன்மை புரிந்துள்ளீர். நீவிரும், பகவான் விஷ்ணுவும் பயனும், தகுதியுமற்ற அந்தணர்களைக் கூடப் புறக்கணித்ததில்லை. ஆகையினால் வேள்விச் செயல்களில் ஈடுபடுகின்ற என்னை நீர் ஏன் புறக்கணக்கப் போகிறீர்?
பதம் 4.7.14 : எனதன்பிற்குரிய சிறப்பும், வலிமையும் உடைய சிவபெருமானே, அந்தணர்கள் கல்வியும், தவமும், விரதமும், ஆத்ம உணர்வும் தொடர்ந்து பெறுவதைப் பாதுகாப்பதற்காக நீர் பிரம்மதேவனின் வாயிலிருந்து முதன் முதலாகப் படைக்கப்பட்டீர். மாடு மேய்ப்போன் தன் கையில் ஒரு குச்சியினை வைத்துக் கொண்டு எவ்வாறு மாடுகளைப் பாதுகாக்கின்றானோ அதுபோல் நீர் அந்தணர்களையும், அவர்கள் பின்பற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் பாதுகாக்கின்றீர்.
பதம் 4.7.15 : சிவபிரானே! உமது முழுப் புகழையும் நான் அறிந்தேனில்லை. இக்காரணத்தினாலேயே அம்பினும் கொடிய வார்த்தைகளை நான் ஒரு சபையில் உம்மீது பிரயோகித்தேன். ஆனாலும் அவற்றை நீர் பொருட்படுத்தவில்லை. உம்போன்ற மரியாதைக்குரியவரைப் பணியாததினால் நான் கீழான நரகத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன். ஆனால் என் மீது கருணை கொண்டு என்னைத் தண்டித்ததின் மூலம் நீர் காத்தருளினீர், எனது வார்த்தைகளினால் உம்மைத் திருப்திப்படுத்த இயலாது. ஆதலினால் உமது சுய கருணையினாலேயே நீர் திருப்தியடைய வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்கிறேன்.
பதம் 4.7.16 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: சிவபெருமானால் மன்னித்தருளப்பட்ட தட்சன் பிரம்ம தேவனின் அனுமதியுடன், கற்றறிந்த முனிவர்களுடனும், புரோகிதர்களுடனும், மற்றவர்களுடனும் சேர்ந்து மீண்டும் வேள்வியினைச் செய்யத் துவங்கினார்.
பதம் 4.7.17 : அதன்பிறகு வேள்வியைத் தொடங்குவதற்கு முன்னதாக அந்தணர்கள் முதலில் வீரபத்திரனாலும், சிவபெருமானது பூத கணங்களினாலும் வேள்விச் சாலையில் ஏற்பட்ட பழுதினைச் சுத்தம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர். பிறகு அவர்கள் வேள்வித் தீயில் ‘புரோதாஷம்’ என்னும் நைவேத்தியத்தினை ஆகுதி செய்வதற்குரிய ஏற்பாட்டினைச் செய்தனர்.
பதம் 4.7.18 : மாமுனி மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்: எனதன்பிற்குரிய விதுரனே, தட்சன் தூய்மையான தியானத்தில் சுத்தம் செய்யப்பட்ட வெண்ணையை, யஜுர் வேத மந்திரங்களை ஓதி அர்ப்பணித்தவுடன் பகவான் விஷ்ணு தனது மூல வடிவமான நாராயணராக அங்கே தோன்றினார்.
பதம் 4.7.19 : பகவான் நாராயணர் பெரிய இறக்கைகளையுடைய ஸ்தோத்திரம் எனப் பெயரிய கருடனின் தோள்களின் மீது அமர்ந்திருந்தார். பகவான் அங்கே தோன்றியபோது எல்லாத் திசைகளும் ஒளிர்ந்தன. அத்தகைய பேரொளி அங்கிருந்த பிரம்மதேவன் உள்ளிட்ட அனைவரது ஒளியினையும் மங்கச் செய்தது.
பதம் 4.7.20 : அவரது நிஜம் கருமையானது, அவரது ஆடைகள் பொன்னிறமான மஞ்சள் வண்ணத்தால் ஆகியது. அவர் தலையில் சூடியிருந்த முடி சூரியனைப் போல் தகதகத்தது. அவரது சுருண்ட தலைமுடி கரிய வண்டுகளைப் போல் கருநீலமாயிருந்தது. அவரது காதுக் குண்டலங்கள் முகத்திற்கு எழில் செய்தன. பொன்னாலான காப்புகளும், வளைகளும் அணிந்திருந்த தன் எட்டுக் கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரைமலர், அம்பு, வில், கேடயம் மற்றும் வாள் போன்றவற்றை வைத்திருந்தார். பல்வேறு அழகிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிய ஒரு மரம் போன்று அவரது தோற்றம் கண்களைப் பறித்தது.
பதம் 4.7.21 : பகவான் விஷ்ணு பார்ப்பதற்கு மிகவும் எழில் வாய்ந்தவராக இருந்தார். ஏனென்றால் அதிர்ஷ்ட தேவதையான செல்வத்துக்குரிய இலக்குமியும் மலர் மாலையோடு அவர் மார்பில் இடம் பெற்று அணி செய்தாள். உலகம் முழுவதையும் குறிப்பாகப் பக்தர்களை ஈர்க்கும் புன்னகையினால் அவரது முகம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரு அன்னப் பறவைகள் போல் வெண்மையான இரு சாமரங்கள் அவருக்கு இருபுறமும் இருந்தன. அவரது தலைக்கு மேலுள்ள வெண்கொற்றக் குடையானது முழு வெண்ணிலவு போல் தோற்றம் அளித்தது.
பதம் 4.7.22 : பகவான் விஷ்ணு தோன்றியவுடன் அங்கிருந்த பிரம்ம தேவன், சிவபெருமான், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரது திருவடிகளில் விழுந்து தங்கள் மரியாதைக்குரிய வணக்கங்களைத் தெரிவித்தனர்.
பதம் 4.7.23 : பகவான் நாராயணரின் உடலிலிருந்து வீசிய பரந்த ஒளி வெள்ளத்தில் அங்கிருந்த அனைவரும் தத்தமது ஒளி இழந்தனர். அவரவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு அமைதி ஆயினர். தங்கள் கரங்களைத் தலையின் மேல் குவித்த வண்ணம் முழுமுதற் கடவுளாகிய அதோட்சருக்குத் தங்கள் வணக்கங்களைத் தெரிவிப்பதற்குத் தயாராகினர்.
பதம் 4.7.24 : முழுமுதற் கடவுளின் பெருமையானது பிரம்ம தேவன் போன்ற தேவர்களினால் கூட மனத்தினால் உணர முடியாததாகும். அதனால் முழுமுதற் கடவுளின் அருளினாலேயே அவரது உன்னத வடிவினை மனத்துள் வாங்க முயன்றனர். அவர் அருளினாலேயே, அவரவர் தகுதிக்கேற்ப அவர்கள் தங்கள் வழிபாட்டினைச் செய்தனர்.
பதம் 4.7.25 : பகவான் விஷ்ணு வேள்வியில் படைக்கப்பட்ட வழிபடு பொருட்களை ஏற்றுக் கொண்டவுடன் பிரஜாபதி தட்சன் மிக்க மகிழ்ச்சியுடன் அவருக்குத் தனது மரியாதை மிகுந்த பிரார்த்தனைகளைத் தொடங்கினார். முழுமுதற் கடவுளே உண்மையில் வேள்விகளின் நாயகனும், பிரஜாபதிகளின் குருவும் ஆவார். மேலும் அவர் சுநந்தன் மற்றும் நந்தன் போன்றவர்களினால் கூட வணங்கித் தொண்டு செய்யப்படுகிறார்.
பதம் 4.7.26 : முழுமுதற் கடவுளைத் தக்கன் பிரார்த்தித்தார்: எனது வணக்கத்திற்குரிய பகவானே! அனைத்து யூக நிலைகளுக்கும் மேலானவராக விளங்குகிறீர். நீவிர் முற்றிலும் ஆன்மீகமானவர். அச்சம் என்பது அறவே இல்லாதவர், பெளதீகச் சக்தியினை எப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர். பெளதீகச் சக்தியில் நீவிர் தோன்றிய போதிலும் உன்னதமான நிலையில் இருப்பவர். எப்போதும் உலகியல் குற்றங்களினின்றும் விடுதலை பெற்றவராக நீங்கள் விளங்குகின்றீர், ஏனென்றால் நீவிர் முற்றிலும் தன்னிறைவு பெற்றவர் ஆவீர்.
பதம் 4.7.27 : புரோகிதர்கள் தங்கள் பிரார்த்தனையில் கூறினர்: ஓ, பௌதீக மாசுக்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பகவானே, சிவபெருமானது வீரர்களின் சாபத்தினால், நாங்கள் பலன் தரும் செயல்களில் பற்றுடையவர்களானோம். இவ்விழிவுள்ள நிலையினால் உம்மைப் பற்றி எதுவும் அறிந்திலம். அதற்கு மாறாக, வேள்விச் சடங்குகளைச் செயல்களில் செய்ய வேண்டும் என்ற வேண்டுதலினால் நாங்கள் இப்பொழுது வேத அறிவின் மூன்று நெறிமுறைகளுடன் ஒன்றிப் போயிருக்கிறோம். நீரே தேவர்களுக்குரிய அவிர் பாகத்தினை விநியோகிக்கும் ஏற்பாட்டினைச் செய்திருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம்.
பதம் 4.7.28 : அவ்வேள்விச் சாலையில் கூடியிருந்த அனைவரும் பகவானிடம் கூறினர்: அச்சந்தரும் அரணுக்குள் காலம் என்னும் நாகம் தீண்டுவதற்குக் காத்திருக்க, அதனுள் துன்ப வாழ்க்கை வாழும் அனைவருக்கும் நீரே இறுதிப் புகலிடமாக விளங்குகிறீர். இவ்வுலகம் முழுவதும் இன்ப துன்பமெனும் பள்ளங்கள் நிறைந்தது. மேலும் கொடிய விலங்குகளும் எப்போதும் தாக்குவதற்குத் தயாராக இருக்கின்றன. அச்சத்தீ தீ அருகில் எரிந்து கொண்டிருந்தும் கானல் நீர்க் கவர்ச்சியில் ஆட்பட்டோருக்கு அவற்றினின்று அடைக்கலம் இல்லை. இவ்வாறு மூட மனிதர்கள் பிறப்பு இறப்பெனும் சுழற்சியில் வாழ்ந்து கொண்டு அவர்கள் கடமையினை நிறைவேற்றுவதற்கு அதிகத் துன்பமுறுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் உமது திருவடித் தாமரைகளைச் சரணடைவது எப்போது என்பதை யாங்கள் அறியோம்.
பதம் 4.7.29 : சிவபெருமான் கூறினார்: எனதன்பிற்குரிய பகவானே! எனது மனமும், உணர்வும் எப்போதும் உமது திருவடித் தாமரைகளின் மீதே நிலைபெற்றிருக்கின்றன. அவைகளே அனைத்து வரங்களின் ஆதாரமாகவும், அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவனவாகவும் விளங்குகின்றன. மேலும் அவை வீடுபேறு அடைந்த சிறந்த முனிவர்களாலும் வணங்கப்படுகின்றன. ஏனெனில் அவையே வணங்குவதற்குரியனவாக விளங்குகின்றன. எனது மனம் உமது தாமரைத் திருவடிகளின் மீது நிலைபெற்றதினால் எனது செயல்கள் தூய்மையற்றன என்று என்னை நிந்திப்பவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் அக்குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் கொள்ளாது, நீர் எவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் உமது கருணையினை அருள்கின்றீரோ, அதுபோல் அவர்கள் மீது கொண்ட கருணையினால் நானும் அவர்களை மன்னித்தருள்கிறேன்.
பதம் 4.7.30 : ஸ்ரீ பிருகு முனிவர் கூறினார்: எனதன்பான பகவானே! மிகவுயர்ந்த பிரம்மதேவன் தொடங்கி சாதாரண சிற்றெரும்பு வரை கடக்க முடியாத மாயா சக்தியின் பாதிப்பின் கீழ் இருப்பதினால் அவர்கள் தமது உண்மையான நிலையினை அறியாதிருக்கின்றனர். எல்லோரும் உடலியற் கருத்தொன்றினையே நம்புகின்றனர். ஆகையினால் அவர்கள் மாயையின் இருளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் ஒவ்வொரு உயிரிடத்தும் எவ்வாறு நீர் பரமாத்மாவாக விளங்குகின்றீர் என்பதனையோ அல்லது உமது உண்மை நிலையினையோ அறிய முடியாதிருக்கின்றனர். ஆனால் நீர் ஒருவரே சரணடைந்த அனைத்து ஆத்மாக்களுக்கும் நண்பராகவும், பாதுகாவலராகவும் இருக்கின்றீர். ஆகையினால் எங்கள் மீது அன்பு கூர்ந்து நாங்கள் செய்த குற்றங்களை மன்னித்தருள்வீராக.
பதம் 4.7.31 : பிரம்மதேவன் கூறினார்: எனதன்பிற்குரிய பகவானே, பல்வேறு வழிகளில் அடையப் பெற்ற ஞானம் பெற்றவர்களுக்குக்கூட உமது நிலையான வடிவமும், தன்மையும் அறிவதற்குரியதாகும். பௌதீகப் படைப்புகளுக்கெல்லாம் மேலானதாக நீவிர் விளங்குகின்றீர். ஆனால், அனுபவ அறிவினால் உம்மை அறிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் முயற்சியோ, அதன் நோக்கமும், கருவிகளும் போலப் பௌதீகமானதேயாகும்.
பதம் 4.7.32 : தேவேந்திரன் கூறினான்: எனதன்பான இறைவனே, இப்பிரபஞ்சம் அனைத்தையும் காப்பதற்காக எட்டுக் கரங்களிலும் ஆயுதம் ஏந்தியிருக்கின்ற உமது உன்னதமான வடிவம் மனதிற்கும், கண்களினால் பார்ப்பதற்கும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது. இது போன்ற ஓர் வடிவத்திலேயே தாங்கள் எப்போதும் உமது பக்தர்களின் மீது பகைமை பாராட்டும் அசுரர்களை அழிப்பதற்குத் தயாராக உள்ளீர்கள்.
பதம் 4.7.33 : வேள்வி செய்வோரின் மனைவியர் கூறினர்: “எமது போற்றுதலுக்குரிய இறைவனே, இவ்வேள்வியானது பிரம்ம தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டு, தக்கன் மீது கொண்ட ஆத்திரத்தினால் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அவரது கோபத்தின் விளைவாக வேள்விக்குரிய விலங்குகள் மாண்டு கிடக்கின்றன. ஆகையினால் வேள்வி செய்வதற்குரியனவெல்லாம் அழிந்து விட்டன. இப்பொழுது உமது சொந்தாமரை விழியின் பார்வை பட்டு இவ்வேள்விச் சாலையானது புனிதமடைவதாக”.
பதம் 4.7.34 : போற்றுதலுக்குரிய பகவானே, உமது செயல்கள் மிகவும் வியப்பிற்குரியவனவாகும். உமது பல்வேறு சக்திகளினால் நீர் எல்லாவற்றையும் செய்யினும் அச்செயல்களினிடத்து நீர் பற்று வைப்பதில்லை. பிரம்மதேவனும் அவனது கருணை வேண்டி வழிபடும் அதிர்ஷ்ட தேவதை லக்ஷ்மியிடம் கூட நீர் பற்று வைப்பதில்லை என்று முனிவர்கள் கூறினர்.
பதம் 4.7.35 : சித்தர்கள் பிரார்த்தித்தனர்: காட்டுத் தீயில் சிக்கிக் கொண்ட யானை அதிலிருந்து தப்பி ஆற்று நீரில் இறங்கியவுடன் எவ்வாறு தனது துன்பத்தை மறக்கின்றதோ, அது போன்று ஓ, பகவானே, எமது மனங்களும் எப்போதும் உமது உன்னதமான லீலைகள் என்னும் அமிர்த ஆற்றில் இணைந்திருப்பதினால், பூரணமான பிரம்மத்துடன் இணைவதினால் கிடைக்கும் இன்பத்திற்கு ஒப்பான அந்த மிகதுயர்ந்த இன்பத்தினை விட்டுப் பிரிய அவையும் நினைப்பதில்லை.
பதம் 4.7.36 : தட்சனின் மனைவி பின்வருமாறு வழிபட்டாள்: எனது அன்பிற்குரிய இறைவனே, இவ்வேள்விச் சாலையில் நீர் தோன்றியது மிகுந்த நல்வினையாகும். எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் செலுத்துவதோடு நீர் இவ்விழாவினால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன். தலையில்லாத உடல் எவ்வாறு அழகாயிருப்பதில்லையோ அது போல் நீர் இல்லாத வேள்விச் சாலையும் மங்கலகரமாக இருக்காது.
பதம் 4.7.37 : பல்வேறு உலகின் ஆளுனர்கள் பின்வருமாறு கூறினர்: போற்றுதலுக்கும், வணங்குவதற்குமுரிய பகவானே, எங்கள் கண்ணால் காண்பவற்றை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். ஆனால் சூழ்நிலைகளின் கீழ் எமது ஜடப்புலன்களோடு உம்மை உண்மையில் பார்த்திருக்கிறோமா என்பதை நாங்கள் அறியாதிருக்கிறோம். எங்களது ஜடப் புலன்களினால் இவ்வுலகை மட்டுமே எங்களால் உணர முடிகிறது. நீரோ பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்டவராக விளங்குகின்றீர். நீரே ஆறாவதாக இருக்கின்றீர். ஆகையினால் பரு உலகின் ஒரு படைப்பாகவே உம்மை நாங்கள் பார்க்கிறோம்.
பதம் 4.7.38 : சிறந்த யோகிகள் கூறினர்: போற்றுதலுக்குரிய இறைவனே, தம்மிடமிருந்து உம்மைப் பிரித்துப் பார்க்காதவர்கள் நீரே அனைத்துயிர்களிலும் உள்ள பரமாத்மா என்று அறிந்திருப்பதினால் அவர்களிடம் நீர் மிக, மிக அன்பாக இருக்கின்றீர். உம்மைத் தலைவராகவும், தம்மைப் பணியாளர்களாகவும் ஏற்றுக் கொண்டு பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர்களிடம் நீர் மிக்க கருணை உடையவராக விளங்குகின்றீர். உமது கருணையினால் நீர் எப்போதும் அவர்களின் நலத்தின்பால் நாட்டமுடையவராக இருக்கின்றீர்.
பதம் 4.7.39 : எமது மரியாதைக்குரிய வந்தனங்களை, பல்வேறு வகைத் தோற்றங்களைப் படைத்து அவற்றைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் நியமித்திற்காக உலகின் முக்குணங்களின் கீழ் வைத்திருக்கும் பரமபுருஷனுக்குச் செலுத்துகிறோம். அவர் தன்னைப் புறச் சக்தியின் கீழ் வைத்திருக்கவில்லை, அவரது தனிப்பட்ட வடிவத்தில் அவர் பல்வேறுபட்ட உலகியல் தோற்றங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவராக விளங்குகிறார். மேலும் அவரைத் தவறாகப் புரிந்து கொள்ளவும் இயலாது.
பதம் 4.7.40 : வேதங்களின் உருவமானவர்கள் கூறினர்: பகவானே, உமக்கு எமது மரியாதைக்குரிய வந்தனங்கள், நற்குணங்களின் உறைவிடமாக நீர் இருப்பதினால் நீரே அனைத்துத் தர்மங்களுக்கும், தவத்திற்கும், துறவு நெறிக்கும் மூலாதாரமாக விளங்குகின்றீர். நீர் அனைத்து உலகியற் குணங்களையும் கடந்த உன்னதமானவராக விளங்குவதினால் உம்மையும், உமது உண்மை நிலையினையும் யாரும் அறிந்திலர்.
பதம் 4.7.41 : அக்கினிதேவன் கூறினார்: எனது போற்றுதலுக்கும், அன்பிற்கும் உரிய பகவானே, எனது மரியாதைக்குரிய வணக்கங்களை உமக்குச் செலுத்துகிறேன். உமது கருணையினாலேயே நான் பற்றி எரியும் நெருப்பாக ஒளி பெற்று விளங்குகிறேன். மேலும் நான் வெண்ணெயுடன் சேர்ந்து வேள்வியில் அர்ப்பணிக்கப்படும் பொருட்களையும் ஏற்றுக் கொள்கிறேன். யசுர் வேதம் கூறுகின்ற ஐந்து வகையான அர்ப்பணிப்புகளும் உமது ஐந்து வேறுபட்ட சக்திகளாகும். நீரே ஐந்து விதமான வேதப் பண்களினாலும் துதிக்கப்படுகிறவர் ஆவீர். வேள்வியின் பொருள் முழுமுதற் கடவுளான உம்மையே குறிக்கும்.
பதம் 4.7.42 : தேவர்கள் கூறினர்: அன்பான பகவானே, முன்னர் உலகத்திற்கு அழிவு ஏற்பட்டபொழுது பௌதீக தோற்றத்தின் பல்வேறு சக்திகளையும் நீர் உமது வயிற்றுனுள் வைத்துக் காத்தருளினீர். அச்சமயம் சனகர் போன்ற முக்தி பெற்ற ஆத்மாக்களை உடைய தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் தத்துவார்த்தச் சிந்தனைகளால் உம்மைத் தியானித்துக் கொண்டிருந்தனர். ஆகையினால் நீரே மூல புருஷர் ஆவீர். மேலும் அந்த ஊழிக்கால வெள்ளத்தில் சேஷன் எனப்படும் பாம்புப் படுக்கையில் நீர் அரிதுயில் கொண்டிருந்தீர். இப்போது உமது தொண்டர்களை எங்களுக்கு காட்சி தந்து அருளியிருக்கிறீர், அருள் கூர்ந்து எம்மைக் காப்பீராக.
பதம் 4.7.43 : கந்தர்வர்கள் கூறினர்: அன்பிற்குரிய பகவானே, சிவபெருமான், பிரம்ம தேவன், இந்திரன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்களும், மரீசி போன்ற முனிவர்களும் உமது அங்கத்தின் பல்வேறுபட்ட முக்கியமான பாகங்களாவர். நீரே மிகச்சிறந்த பரம்பொருளாக விளங்குகிறீர். இப்பிரபஞ்சப் படைப்பு முழுதுமே உமக்கு ஓர் விளையாட்டுப் பொம்மை போன்றது. முழுமுதற் கடவுளாக உம்மையே நாங்கள் எப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எமது மரியாதைக்குரிய வணக்கத்தை உமக்குச் செலுத்துகிறோம்.
பதம் 4.7.44 : வித்யாதரர்கள் கூறினர்: போற்றுதலுக்குரிய பகவானே! மானுட உடல் பெற்றதின் பொருள் உயர்ந்த, நிறைவான இலட்சியத்தினை அடைவதற்காகவே. ஆனால் உமதுப் புறச் சக்தியின் தூண்டுதலினால் உலகில் வாழ்வோன் தன்னை உடலும், பௌதீகச் சக்தியும் என்று அடையாளம் காண்கிறான். ஆகையினால் மாயையின் பாதிப்பினால் அவன் பௌதீக இன்பங்களில் மகிழ்ச்சி காண்பவனாக மாறுகிறான். இவ்வாறு அவன் திசை திருப்பப்பட்டு நிலையற்ற மாயா இன்பங்களினால் கவரப்படுகிறான். ஆனால் உமது உன்னதமானச் செயல்களோ மிகுந்த சக்தியுடையன. ஆகையினால் அவற்றைப் பற்றி ஒருவன் கேட்பது, ஓதுவது என்பவற்றில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டால் அவன் மாயையிலிருந்து நிச்சயம் மீட்கப்படுவான்.
பதம் 4.7.45 : அந்தணர்கள் கூறினர்: அன்பிற் சிறந்த பகவானே! நீரே வேள்வியின் உருவம், நீரே வேள்வியில் அர்ப்பணிக்கப்படும் சுத்தம் செய்யப்பட்ட வெண்ணெய், நீரே நெருப்பு, நீரே வேத மந்திரங்கள், நீரே சமித்து, நீரே ஜுவாலை, நீரே தர்பைப்புல், மேலும் நீரே வேள்விக் கலசங்களாகவும் விளங்குகிறீர். வேள்வியை நடத்தும் புரோகிதர்களும் நீரே, நீரே இந்திரனால் தலைமை தாங்கப்பட்டத் தேவர்களும் ஆவீர். மேலும் நீரே வேள்விக்குரிய விலங்காகவும் இருக்கின்றீர். வேள்வியில் சமர்ப்பிக்கப்படும் அனைத்தும் நீவிராக அல்லது உமது சக்தியாக இருக்கின்றது.
பதம் 4.7.46 : அன்பிற்குரிய பகவானே, வேதங்களில் ஞான உருவமோ, நீண்ட நெடு நாட்களுக்கு முன்னர் கடந்த யுகத்தில் நீர் வராகமாகப் பிறந்து தண்ணீரினுள் மூழ்கியிருந்த பூமியினை ஓர் யானை குளத்திலிருந்து தாமரை மலரினை எடுப்பது போல் மிகவும் எளிதாக வெளியே எடுத்தீர். அவ்வாராக இருக்கும்பொழுது நீர் எழுப்பிய உன்னத ஒலியே வேத மந்திரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சனகர் போன்ற மகாமுனிவர்கள் அதனையே சித்தித்து உம்மைப் போற்றிப் பிரார்த்தித்தனர்.
பதம் 4.7.47 : அன்பார்ந்த பகவானே, நாங்கள் உமது பார்வைக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். ஏனென்றால் வேத நெறிமுறைகளுக்கு ஏற்றாற்போல் வேள்வி செய்வதற்கு நாங்கள் இயலாதவர்களாக இருந்தோம். உம்மைப் பிரார்த்திக்கின்றோம். எம்மைப் பற்றி மகிழ்வீராக உமது புனிதத் திருப்பெயரை வழிபடுவதன் மூலமே எளிதாக ஒருவன் அனைத்துத் தடைகளையும் கடந்து விடுகிறான். ஆகையினால் உமக்கு உம் முன்னிலையில் எமது மரியாதைக்குரிய வணக்கங்களைச் செலுத்துகிறோம்.
பதம் 4.7.48 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: பகவான் விஷ்ணு இவ்வாறு எல்லோராலும் புகழப்பட்ட பின்னர், உணர்வுத் தூய்மைபெற்ற தட்சன் சிவபெருமானின் அடியவர்களால் அழிக்கப்பட்ட வேள்வியினை மீண்டும் தொடங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
பதம் 4.7.49 : மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: எனதன்பிற்குரிய பாவமற்ற விதுரனே, பகவான் விஷ்ணுவே அனைத்து வேள்வியின் பலன்களையும் அனுபவிப்பவர் ஆவார். மேலும் அவர் அனைத்து உயிர்களின் பரமாத்மாவாக விளங்குவதினால் வேள்வியில் அர்ப்பணிக்கப்படும் அவருக்குரிய அவிர்பாகத்தின் மூலமே அவர் எளிதில் திருப்தியடைந்துவிடுவார். ஆகையால் அவர் தட்சனிடம் மகிழ்ச்சியுடன் உரையாடலானார்.
பதம் 4.7.50 : பகவான் விஷ்ணு பதில் கூறினார்: நானும், சிவபெருமானும், பிரம்ம தேவனும் உலகத் தோற்றங்களுக்கான மூல காரணர்கள் ஆவோம். நானே தன்னிறைவு பெற்ற சாட்சியான பரமாத்மாவாக விளங்குகிறேன். ஆனால் பிரம்ம நிலையில் எனக்கோ, சிவபெருமானுக்கோ, பிரம்ம தேவனுக்கோ எந்தவித வேறுபாடும் கிடையாது.
பதம் 4.7.51 : பகவான் தொடர்ந்து கூறினார்: எனதன்பிற்குரிய தட்ச த்விஜனே, நானே முழுமுதற் கடவுள், ஆயினும் இப்பிரபஞ்சத் தோற்றத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவற்றை எனது பெளதீக சக்தியின் மூலம் செயற்படுத்துகிறேன். அச்செயலின் பல்வேறு தன்மைகளைப் பொறுத்து எனது குண அவதாரங்களுக்குப் பல்வேறு பெயர்கள் இடப்படுகின்றன.
பதம் 4.7.52 : பகவான் தொடர்ந்து கூறினார்: முறையான அறிவில்லாத ஒருவன் சிவபெருமான், பிரம்மதேவன் போன்ற தேவர்கள் சுதந்திரமானவர்கள் என்றும் ஏன், உயிர்கள் கூட சுதந்திரமானவர்கள் என்றும் நினைக்கிறான்.
பதம் 4.7.53 : சாதாரண அறிவுடைய ஒருவன் உடலிலிருந்து தலை மற்றும் பிற பாகங்கள் எல்லாம் தனியானவை என்று கருதமாட்டான். அது போன்று எனது பக்தன் எங்கும் பரந்திருக்கும் முழுமுதற் கடவுளான விஷ்ணுவை எவற்றிடமிருந்தும் அல்லது எந்த உயிரிடமிருந்தும் வேறுபடுத்திக் காணமாட்டான்.
பதம் 4.7.54 : பகவான் தொடர்ந்தார்: பிரம்ம தேவன், சிவபெருமான் மற்றும் அனைத்து உயிர்களையும் பரம்பொருளிடம் இருந்து பிரித்துப் பார்க்காது பிரம்மத்தை அறிந்தவன் எவனோ அவன் அமைதியை உணர்கிறான். மற்றவர்கள் அதனை உணரார்.
பதம் 4.7.55 : மைத்ரேய முனிவர் கூறினார்: தக்கன் முழுமுதற் கடவுளினால் இவ்வாறு நன்கு உபதேசிக்கப்பட்டவுடன், பகவான் விஷ்ணுவை வணங்கினார். அவரை குறிப்பிட்ட வேள்விச் சடங்குகளின் மூலம் வழிபட்ட தக்கன், பிரம்ம தேவனையும், சிவபெருமானையும் தனித்தனியே வழிபட்டார்.
பதம் 4.7.56 : சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தினை அவருக்குப் படைத்து முழுமரியாதையுடன் தக்கன் அவரை வழிபட்டார். வேள்விச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகு அவர் அனைத்துத் தேவர்களையும், அங்கு குழுமி இருந்த பிறரையும் நிறைவு பெறச் செய்தார். புரோகிதர்களுடன் சேர்ந்து இக்கடமைகளை நிறைவேற்றிய பின்னர், அவர் நீராடி மனநிறைவு அடைந்தார்.
பதம் 4.7.57 : வேள்விச் சடங்குகளினால் முழுமுதற் கடவுளாகிய விஷ்ணுவை இவ்வாறு வழிபட்ட பிறகு தக்கன் தர்மத்தின் பாதையில் நிலைபெற்றார். மேலும் அங்கு குழுமியிருந்த தேவர்கள் அனைவரும், அவர் மேலும் மேலும் அவரது புண்ணியச் செயல்களில் வளர்ச்சிபெற வேண்டும் என்று வாழ்த்தி அங்கிருந்து சென்றனர்.
பதம் 4.7.58 : மைத்ரேயர் கூறினார்: தட்சனிடமிருந்தே பெற்ற உடலை அவனது மகளாகிய தாட்சாயணி துறந்த பிறகு இமாலயத்தில் பிறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவள் மேனா என்பவளுக்குப் புதல்வியாகப் பிறந்தாள். இதனை நான் ஆதாரப்பூர்வமான இடங்களில் இருந்தே கேள்விப்பட்டேன்.
பதம் 4.7.59 : அம்பிகை (துர்கை) எனப்படும் தாட்சாயணி (சதீ) மீண்டும் சிவபெருமானையே தன் கணவனாக அடைந்தாள். இது முழுமுதற் கடவுளின் பல்வேறு சக்திகள் புதுப் படைப்புக் காலத்தில் செயல்படுவது போன்றதாகும்.
பதம் 4.7.60 : மைத்ரேயர் கூறினார்: எனதன்பான விதுரனே, சிவபெருமானால் அழிக்கப்பட்ட தட்ச யக்ஞத்தைப் பற்றி நான், மிகச் சிறந்த பக்தரும் பிருகஸ்பதியின் சீடருமான உத்தவரிடமிருந்தே அறிந்தேன்.
பதம் 4.7.61 : மாமுனிவர் மைத்ரேயர் இறுதியாகக் கூறினார்: ஓ, குருகுலத் தோன்றலே, முழுமுதற் கடவுளான விஷ்ணுவினால் நடத்தி வைக்கப்பட்ட இந்தத் தட்சயக்ஞம் பற்றிய வரலாற்றினை ஒருவன் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் கேட்கவும், கேட்டதை மீண்டும் மீண்டும் பிறருக்கு எடுத்துரைக்கவும் செய்தால் உலக வாழ்வின் அனைத்து மாசுக்களும் நீங்கி அவன் தூய்மையடைவான்.