அத்தியாயம் – 6
பிரம்மதேவன் சிவபெருமானை அமைதிப்படுத்துதல்
பதங்கள் 4.6.1 – 4.6.2
மைத்ரேய உவாச
அத தேவ-கனா: ஸர்வே ருத்ராணீகை: பராஜிதா:
ஸுல-பட்டிஸ-நிஸ்த்ரிம்ஸ கோதா-பரிசு-முத்கரை:

ஸஞ்சின்ன-பின்ன-ஸர்வாங்கா: ஸர்த்விக்-ஸப்யா பயாகுவா:
ஸ்வயம்புவ நமஸ்க்ருத்ய கார்த்ஸ்ன்யேனைதன் ந்யவேதயன்

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; அத—அதன்பின்; தேவ-கணா:—தேவர்கள்; ஸர்வே—எல்லோரும்; ருத்ர-அனீகை:—சிவபெருமானின் வீரர்களால்; பராஜிதா:—தோற்கடிக்கப்பட்டு; ஸுல—திரிசூலம்; பட்டிஸ—கூர்மையான ஈட்டியினால்; நிஸ்த்ரிம்ஸ—ஒரு வாள்; கதா—கதாயுதம்; பரிசு—தண்டாயுதம்; முத்கரை:—சம்மட்டி; ஸஞ்சின்ன-பின்ன-ஸர்வ-அங்கா:—உடலின் எல்லா பாகங்களிலும் காயமுற்று; ஸ-ருத்விக்-ஸப்யா:—வேள்விச் சாலையில் இருந்த புரோகிதர்களும், பங்கேற்றோரும்; பய-ஆகுவா:—மிகுந்த பயத்துடன்; ஸ்வயம்புவ—பிரம்ம தேவனுக்கு; நமஸ்க்ருத்ய—வந்தனங்களைத் தெரிவித்து; கார்த்ஸ்ன்யேன— விளக்கமாக; ஏதத்—தக்ஷனின் வேள்வியில் நடைபெற்ற சம்பவங்களை; நியவேதயன்—அறிவித்தனர்.

சிவபெருமானின் வீரர்கள் வைத்திருந்த திரிசூலம், வாள் போன்ற ஆயுதங்களினால் காயமுற்றுத் தோல்வியடைந்த வேள்விச் சாலையின் உறுப்பினர்களும் அனைத்துத் தேவர்களும் மிகுந்த அச்சத்துடன் பிரம்ம தேவனை அணுகினார்கள். அவருக்குத் தங்கள் வந்தனங்களைத் தெரிவித்து வேள்விச் சாலையில் நிகழ்ந்த அனைத்துச் சம்பவங்களையும் விளக்கமாகக் கூறத் தொடங்கினர்.

பதம் 4.6.3
உபலப்ய புரைவைதத் பகவான் அப்ஜ-ஸம்பவ:
நாராயணஸ் ச விஸ்வாத்மா ந கஸ்யாத்வரம் ஈயது:

உபலப்ய—அறிந்து கொண்டு; புரா—முன்னதாகவே; ஏவ—நிச்சயம்; ஏதத்—தக்ஷனின் வேள்வியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை; பகவான்—வளம்பல உடையவர்; அப்ஜ-ஸம்பவ:—தாமரை மலரிலிருந்து பிறந்த (பிரம்ம தேவன்); நாராயண:—நாராயணர்; ச—மேலும்; விஸ்வ-ஆத்மா—உலகம் முழுமைக்குமான பரமாத்மா; ந—இல்லை; கஸ்ய—தக்கனின்; அத்வரம்—வேள்விக்கு; ஈயது:—போனது.

பிரம்ம தேவனும், விஷ்ணுவும் தக்கனின் வேள்விச் சாலையில் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளை முன்னரே அறிந்து கொண்டதினால் அவர்கள் அவ்வேள்வியில் கலந்து கொள்ளவில்லை.

பதம் 4.6.4
தத் அகர்ண்ய விஷ: ப்ராஹ தேஜீயஸி க்ருதாகஸி
க்ஷேமாயதத்ர ஸா பூயான் ந ப்ராயேன புபூஷதாம்

தத்—தேவர்களும் மற்றவர்களும் கூறிய நிகழ்ச்சிகளை; ஆகர்ண்ய—கேட்டபிறகு; விபு:—பிரம்ம தேவன்; ப்ராஹ—பதில் கூறினார்; தேஜீயஸி—வணங்கத்தக்க சிறப்புடையவரை; க்ருத-ஆகஸி—குற்றமிழைத்ததினால்; க்ஷேமாய—உங்களின் மகிழ்ச்சிக்காக; தத்ர—அவ்வழியில்; ஸா—அந்த; பூயாத் ந—உதவிபயப்பதென்று; ப்ராயேன—பொதுவாக; புபூஷதாம்—வாழ்வதற்குரிய விருப்பம்.

வேள்வியில் கலந்து கொண்ட உறுப்பினர்களும், தேவர்களும் நடைபெற்ற அனைத்தையும் பிரம்ம தேவனிடம் கூறிய பின்னர் பிரம்ம தேவன் பதில் கூறினார். வணங்கத் தக்க சிறந்தவரை நிந்தித்து அவரது திருவடித் தாமரைகளிடத்துக் குற்றமிழைத்த பின்னர் ஒரு வேள்வியினைச் செய்வதின் மூலம் நீங்கள் மகிழ்ச்சியுற முடியவே முடியாது.

பதம் 4.6.5
அதாபி யூயம் க்ருத-கில்பிஷா பவம்
யே பர்ஹிஷோ பாக-பாஜம் பராது:
ப்ரஸாதயத்வம் பரிஸுத்த-சேதஸா
க்ஷிப்ர-ப்ரஸாதம் ப்ரக்ருஹீதாங்க்ரி–பத்மம்

அதா அபி—இதுவரை; யூயம்—நீங்கள் எல்லோரும்; க்ருத-கில்பிஹா:—குற்றம் புரிந்திருக்கின்றீர்கள்; பவம்—சிவபெருமான்; யே—நீங்கள் எல்லோரும்; பர்ஹிஷ:—வேள்வியின்; பாக-பாஜம்—பங்கு பெற்றுள்ளீர்; பராது:—தவிர்த்தது; ப்ரஸாதத்வம்—நீங்கள் எல்லோரும் திருப்திப்படுத்த; பரிஸுத்த-சேதஸா—எந்தவித மனக்குழப்பமின்றி; க்ஷிப்ர-ப்ரஸாதம்—விரைவான கருணை; ப்ரக்குஹீ தாங்க்ரி-பத்மம்—அவரது தாமரைத் திருவடிகளைச் சரண்புக வேண்டும்.

சிவபெருமானை வேள்வியில் கலந்துகொள்ள விடாது புறக்கணித்ததின் மூலம் அவரது திருவடித் தாமரைகளினிடத்து மிகப் பெரியக் குற்றத்தினைப் புரிந்திருக்கின்றீர்கள். அதனால் நீங்கள் அனைவரும் எவ்வித மனக் கிலேசமுமின்றி அவரைச் சரணடைந்து, அவரது தாமரைத் திருவடிகளில் விழுந்து வருந்தினால் நிச்சயம் அவர் மகிழ்ச்சியடைவார்.

பதம் 4.6.6
ஆஸாஸானா ஜீவிதம் அத்வரஸ்ய
லோக: ஸ-பால: குபிதே ந யஸ்மின்
தம் ஆஸு தேவம் ப்ரியயா விஹீனம்
க்ஷ மாப்யதவம் ஹ்ருதி வித்தம் துருக்தை:

ஆஸாஸானா:—கேட்பதற்கு விரும்புதல்; ஜீவிதம்—காலவரையறைக்காக; அதவர்ஸ்ய—வேள்வியின்; லோக:—எல்லா உலகங்களும்; ஸ-பால:—அவற்றை நடத்துபவர்களும்; குபிதே—ஆத்திரமுற்றாரென்றால்; ந—இல்லை; யஸ்மின்—எவரது; தம்—அந்த; ஆஸு—உடனடியாக; தேவம்—சிவபெருமான்; ப்ரியயா—அவரது அன்பு மனைவியை; விஹீனம்—இழந்திருக்கிறார்; க்ஷமாபயத்வம்—அவரது மன்னிப்பை வேண்டி; ஹ்ருதி—அவரது இதயத்தில்; வித்தம்—மிகவும் பாதிக்கப்பட்டிருத்தல்; துருக்தை:—கொடிய வார்த்தைகளினால்.

பிரம்மதேவன் அவர்களிடம், சிவபெருமான் எல்லா உலகங்களையும் அவற்றை நிர்வகிப்பவர்களையும் நொடிப்பொழுதில் அழித்துவிடக் கூடிய ஆற்றல் மிக்கவராவார் என்றும், அவர் சமீபத்தில் இறந்த அவரது மனைவியின் துக்கத்தினாலும், தக்கனின் கொடிய வார்த்தைகளினாலும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆகையினால் அவரைச் சரணடைந்து அவரின் மன்னிப்பை வேண்டுவதே தேவர்களுக்கு நன்மையளிக்கும் என்றும் அறிவுறுத்துகிறார்.

பதம் 4.6.7
நாஹாம் ந யஜ்ஞோ ந ச யூயம் அன்யே
யே தேஹ-பாஜோ முனயஸ் ச தத்த்வம்
விது: ப்ரமாணம் பல-வீர்யயோர் வா
யஸ்மாத்ம-தந்த்ரஸ்ய க உபாயம் விதித்ஸேத்

ந—இல்லை; அஹம்—நான்; ந—இல்லை; யஜ்ஞ:—இந்திரன்; ச—மேலும்; யூயம்—நீங்கள் அனைவரும்; அன்யே—பிறரும்; யே—எவர்; தேஹ-பாஜ:—ஜட உடல் பெற்றவர்கள்; முனய:— முனிவர்கள்; ச—மேலும்; தத்த்வம்—உண்மை; விது:—அறிதல்; ப்ரமாணம்—அளவு; பல—வீர்யயோ:—வலிமை மற்றும் சக்தியின்; வா அல்லயஸ்ய—சிவபெருமானின்; ஆத்ம-தந்த்ரஸ்ய—அவர் தன்னைச் சார்ந்திருப்பவர்; க:—என்னை; உபாயம்—வழி வகை; விதித்ஸேத்—விரும்பப்படும் திட்டம்.

தானே, இந்திரனோ அல்லது வேள்விச் சாலையில் கூடியிருந்தவர்களோ, அனைத்து முனிவர்களோ, யாருமே சிவபெருமானின் சக்தி என்னவென்பதனை அறியாதவர்களே! அப்படியிருக்க அவரது திருவடித் தாமரைகளிடத்துக் குற்றம் செய்யும் துணிவு யாருக்கு வரும்? பிரம்மதேவன் கூறினார்.

பதம் 4.6.8
ஸ நித்தம் ஆதிஸ்ய ஸுரான் அஜஸ் தை:
ஸமன்வித: பித்ருபி: ஸ-ப்ரஜேஸை:
யயௌ ஸ்வ-திஷ்ணுயான் நிலயம் புர-த்விஷ:
கைலாஸம் அத்ரி-ப்ரவரம் ப்ரியம் ப்ரபோ:

ஸ:—அவர் (பிரம்மா); இத்தம்—இவ்வாறு; ஆதிஸ்ய—எல்லோரையும் அறிவுறுத்திய பின்னர்; ஸுரான்—தேவர்கள்; அஜ:—பிரம்மதேவன்; து—பிறகு; தை:—அவர்கள்; ஸமன்வித:—பின் தொடர்ந்து வர; பித்ருபி:—பிதாக்களினால்; ஸ-ப்ரஜாஸை:—உயிர்களின் தலைவர்களுடன்; யயௌ—சென்றனர்; ஸ்வ-திஷ்ணுயாத்—அவரது சொந்த இடத்திலிருந்து; நிலயம்—இருப்பிடம்; புர-த்விஷ:—சிவபெருமானின்; கைலாஸம்—கயிலாயம்; அத்ரி-ப்ரவரம்—மலைகளில் சிறந்தது; ப்ரியம்—பிரியமானது; ப்ரபோ:—சிவபெருமானுக்கு.

இவ்வாறு தேவர்கள், பிதாக்கள், உயிர்களின் தலைவர்கள் அனைவருக்கும் அறிவுரை வழங்கிய பிரம்மதேவன் பிறகு அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமான் வசிக்கின்ற கயிலாய மலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பதம் 4.6.9
ஜன்மௌஷதி–தபோ–மந்த்ர–யோக–ஸித்தைர் நரேதரை:
ஜுஷ்டம் கின்னர–கந்தர்வைர் அப்ஸரோபிர் வ்ருதம் ஸதா

ஜன்ம—பிறப்பு; ஓளஷதி—மூலிகைகள்; தப:—தவம்; மந்த்ர—வேத மந்திரங்கள்; யோக—தெய்வீக யோகப் பயிற்சிகள்; ஸித்தை:—சித்தர்கள்; நர-இதரை:—தேவர்கள்; ஜுஷ்டம்—மகிழ்ச்சியுடன்; கின்னர-கந்தர்வை:—கின்னரர்கள் மற்றும் கந்தர்வர்கள்; அப்ஸரோபி:—அப்சரஸுகள்; வ்ருதம்—நிறைந்து; ஸதா—எப்போதும்.

சிவபெருமானின் இருப்பிடமாகிய கயிலாய மலைகளுடன் பல்வேறு வகையான மூலிகைகளும், தாவரங்களும் நிறைந்து, வேத மந்திரங்களும், தெய்வீக யோகப் பயிற்சிகளும் உடைய புனிதமான இடமாகும். பிறப்பினால் தேவர்களாகி அனைத்து தெய்வீக சக்திகளையும் உடையர்களுக்கெல்லாம் அதுவே தலைமையகமாக விளங்குகிறது. இவர்களைத் தவிர பிற உயிர்களான கின்னரர்கள், கந்தர்வர்கள் தங்கள் அழகிய மனைவியரான அப்சரஸுகள் அல்லது தேவதைகளுடன் இணைந்து அங்கே வாழ்கின்றனர்.

பதம் 4.6.10
நானா-மணிமயை: ஸ்ருங்கைர் நானா-தாது-விசித்ரிதை:
நானா-த்ரும-லதா-குல்மைர் நானா-ம்ருககணாவ்ருதை:

நானா—பல்வேறு வகையான; மணி—மணிகளினால்; மயை:—செய்யப்பட்ட; ஸ்ருங்கை:—சிகரங்களுடன்; நானா-தாது-விசித்ரை:—பல்வேறு விதமான கனிமப் பொருட்களினால் அலங்கரிக்கப்பட்டு; நானா—பல்வேறு; த்ரும—மரங்கள்; லதா—கொடிகள்; குல்மை:—செடிகள்; நானா—பல்வேறு; ம்ருக கணா—மானின் கூட்டங்கள்; ஆவ்ருதை:—உறைவிடமாக உடையது.

கயிலாய மலையானது பல்வேறு வகையான உயர்ந்த வைர, வைடூரியங்களினாலும், கனிமப் பொருட்களினாலும் நிறைந்து பல்வேறு வகையான மரம், செடி, கொடிகளையுடையதாகும். அம்மலை முகடுகளில் பல்வேறு வகையான மானின் கூட்டங்கள் நிறைந்து அழகு செய்யும்.

பதம் 4.6.11
நானாமல-ப்ரஸ்ரவனணர் நானா-கந்தர-ஸானுபி:
ரமணம் விஹரந்தீனாம் ரமணை: ஸித்த–யோஷிதம்

நானா—பல்வேறு; அமல—தெள்ளத்தெளிந்த; ப்ரஸ்ர-வணை:—அருவிகளுடன்; நானா—பல்வேறு; கந்தர—குகைகள்; ஸானுபி:—சிகரங்களுடன்; ரமணம்—மகிழ்ச்சியூட்டும்; விஹந்தீனாம்—விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்; ரமணை:—தங்கள் காதலிகளுடன்; ஸித்த—யோஷிதாம்—சித்தர்களின் காதலிகள்.

அங்கே ஏராளமான அருவிகள் உண்டு. அழகிய குகைகள் பல உண்டு. அவற்றினுள் சித்தர்களின் எழிலார்ந்த மனைவியர்கள் காணப்படுவர்.

பதம் 4.6.12
மயூர-கேகாபிருதம் மதாந்தாலி விமூர்ச்சிதம்
ப்லாவிதை ரக்த-கண்டானாம் கூஜிதைஸ் ச பதத்ரிணாம்

மயூர—மயில்கள்; கேகா—அகவும்; அபிருதம்—எதிரொலி; மத—மதுவினால்; அந்த—குருடாக்கும்; அவி—தேனீக்களினால்; விமூர்ச்சிதம்—எதிரொலி; ப்லாவிதை:—பாடிக்கொண்டும்; ரக்த-கண்டானாம்—குயில்களின்; கூஜிதை:—முணுமுணுத்தவுடன்; ச—மேலும்; பதத்ரிணாம்—மற்றப் பறவைகளின்.

கயிலாய மலையில் எப்போதும் இசைநயத்துடன் கூடிய மயிலின் அகவலும் தேனீக்களின் ரீங்காரமும் கேட்டுக்கொண்டேயிருக்கும். குயில்கள் எப்போதும் பாடிக்கொண்டேயிருக்கும். மற்றப் பறவைகள் தங்களுக்குள் கலகல என்று ஓசையெழுப்பும்.

பதம் 4.6.13
ஆஹ்வயந்தம் இவோத்தஸ்தைர் த்விஜான் காம-துகைர் த்ருமை:
வ்ரஜந்தம் இவ மாதங்கைர் க்ருணந்தம் இவ நிர்ஜரை:

ஆஹ்வயந்தம்—அழைத்தல்; இவ—இருப்பது போன்று; உ-ஹஸ்தை:—கரங்களை நீட்டி (கிளைகள்); த்விஜான்—பறவைகள்; காம—துகை:—விருப்பங்கொண்டு; த்ருமை:—மரங்களுடன்; வ்ரஜந்தம்—அசைவது; இவ—இருப்பது போல்; மாதங்கை:—யானைகளினால்; க்ருணந்தம்—எதிரொலி; இவ—இருப்பது போல்; நிர்ஜரை:—அருவிகளினால்.

அங்குள்ள மரங்கள் தங்கள் உயர்ந்த நிலைகள் என்னும் கரங்களினால் இனிய பறவைகளை அழைப்பது போல் தோன்றும். அங்கு யானைகள் கூட்டங்கூட்டமாக அசைந்து செல்வது, கயிலாய மலையும் அவற்றுடன் சேர்ந்து அசைந்து செல்வது போல் காட்சிதரும். அருவிகளின் இனிய ஒலியினைக் கயிலாய மலையே எழுப்புகிறதோ என்று கூடத் தோன்றும்.

பதங்கள் 4.6.14 – 4.6.15
மந்தாரை: பாரிஜாதைஸ் ச சரவைஸ் சோப ஸோபிதம்
தமாலை: ஸால தாலைஸ் ச கோவி தாராஸனார்ஜுனை:

சூதை: கதம்பைர் நீபைஸ் ச நாக-புன்னாக-சம்பகை:
பாடலாஸோக-பகுலை: குந்தை: குரபகைர் அபி

மந்தாரை:—மந்தாரம்; பாரிஜாதை:—பாரிஜாதம்; ச—மேலும்; ஸரவை:—சரலம்; ச—மேலும்; உபஸோபிதம்—அலங்கரிக்கப்பட்டு; தமாலை:—தமால மரங்கள்; ஸால-தாலை:—ஸாவம் மற்றும் தாலம்; ச—மேலும்; கோவிதார-ஆஸன-அர்ஜுனை:—கோவிதாரம், ஆஸனம் (விஜய— ஸாரஸ்) மற்றும் அர்ஜுனம் (காஞ்சனாரகஸ்) போன்ற மரங்களும்; சூதை:—சூதம் (மாமரத்தின் ஓரினம்); கதம்பை:—கதம்ப மரம்; நீபை:—நீபம் (தூவி—கதம்பஸ்); ச—மேலும்; நாக-புன்னாக-சம்பகை:—நாகம், புன்னாகம், மற்றும் சண்பகம்; பாதல-அஸோக-பகுலை:—பாதவம், அசோகம், மற்றும் பகுலம்; குந்தை:—குந்தம்; குரோபகை:—குரோபகம்; அபி—கூட.

அக்கயிலாய மலை முழுவதும் பல்வேறு வகையான மரங்கள் நிறைந்திருக்கும். அவற்றில் சிலவற்றின் பெயர்களை இங்கு பார்ப்போம் மந்தாரம், பாரிஜாதம், சரலம், தமாலம், தாலம், கோவிதாரம், ஆச்சனம், அர்சுனம், அம்ர ஜாதி (மாமரம்), கதம்பம், தூவி கதம்பம், நாகம், புன்னாகம், சண்பகம், பாடலம், அசோகம், பகுலம், குந்தம், மற்றும் குறபகம் என்பவையாகும். அம்மலை முழுதுமே நறுமணமுடைய மகரந்தத்தினை உடைய மலர்கள் பூத்திருக்கும்.

பதம் 4.6.16
ஸ்வர்ணார்ன ஸத-பத்ரைஸ்ச வர-ரேணுக-ஜாதிபி:
குப்ஜகைர் மல்லிகாபிஸ் ச மாதவீபிஸ் ச மண்டிதம்

ஸ்வர்ணார்ண—தங்க நிறமுடைய; ஸத-பத்ரை:—தாமரைகளுடன்; ச—மேலும்; வர-ரேணுக-ஜாதிபி:—வரம், ரேணுகம், மற்றும் மாலதீம்; குப்ஜகை:—குப்ஜகம்; மல்லிகாபி:—மல்லிகையுடன்; ச—மேலும்; மாதவீபி:—மாதவீ; ச—மேலும்; மண்டிதம்— அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

மேலும் அம்மலையில் பொன்னிறத் தாமரைமலர், இலவங்கம், மாலதீ, குப்ஜம் மல்லிகை மற்றும் மாதவி ஆகிய அழகான மரங்கள் வளர்ந்திருக்கும்.

பதம் 4.6.17
பனஸோதும் பராஸ்வந்த ப்லக்ஷ-ந்யக்ரோத-ஹிங்குபி:
பூர்ஜைர் ஓஷதிபி: பூகை ராஜபூகைஸ் ச ஜம்புபி:

பனஸ-உதும்பர-அஸ்வத்த-ப்லக்ஷ-ந்யக்ரோத- ஹிங்குபி:—பலாமரம், உதும்பரம், அஸ்வத்தம், பிலக்ஷம், நியக்ரோதம் மற்றும் பெருங்காய மரங்களும்; பூர்ஜை:—பூர்ஜம்; அஷதிபி:—பாக்கு மரங்களும்; பூகை:—பூகம்; ராஜபூகை:—ராஜபூகம்; ச—மேலும்; ஜம்புபி:—ஜம்புமரங்கள்.

கயிலாய மலை மேலும், கதம், பலா, சூவரம், ஆலமரம், பிலக்ஷம், நியக்ரேஷம், மற்றும் பெருங்காயம் தயாரிப்பதற்கு உதவும் மரம் போன்றவைகளினால் அணி செய்யப்பட்டிருந்தது. அங்கு கமுகு, பூர்ஜபத்திரம் ராஜபூகம், பேரிக்காய் போன்ற பல மரங்களும் இருந்தன.

பதம் 4.6.18
கர்ஜுராம்ராதகாம்ராத்யை: ப்ரியால-மது கேங்குதை:
த்ரும-ஜாதிபிர் அன்யைஸ் ச ராஜிதம் வேணு-கீசகை:

கர்ஜுர-ஆம்ராதக-ஆம்ர-ஆத்யை:—கர்ஜுரம், ஆம்ரதகம், ஆம்ரம் மற்றும் பல; ப்ரியால-மதுக-இங்குதை:—பிரியாலம்; மதுகலம், மற்றும் இங்குதம்; த்ரும-ஜாதிபி:—பல்வகை மரங்கள்; அன்யை:—மற்றும் பல; ச—மேலும்; ராஜிதம்—அலங்கரிக்கப்பட்டு; வேணு-கீசகை:—மூங்கில் மற்றும் கல்மூங்கில்.

அங்கே மா, பிரியாலம், மதுகம் மற்றும் இங்குதம் போன்ற பல மரங்கள் இருந்தன. இவை தவிர மூங்கில், மற்றும் கல் மூங்கில் போன்ற மரங்களினாலும் அம்மலை அழகு செய்யப்பட்டிருந்தது.

பதங்கள் 4.6.19 – 4.9.20
குமுதோத்பல-கஹ்லார-ஸதபத்ர-வனர்த்திபி:
நலினீஷு கவம் கூஜத்-கக-வ்ருந்தோபஸோபிதம்

ம்ருகை: ஸாகாம்ருகை: க்ரோதைர் ம்ருகேந்த்ரைர் ருக்ஷ-ஸல்யகை:
கவயை: ஸரபைர் வ்யாக்ரை ருருபிர் மஹிஷாதிபி:

குமுத—குமுதம்; உத்பல—உத்பவம்; கஹ்லார—கவாரம்; ஸதபத்ர—தாமரைகள்; வன—வனத்தில்; ருத்திபி:—மூடப்பட்ட; நலினீஷூ—ஏரியில்; கலம்—மிகவும் இனிமையாக; கூஜத்—முணு முணுத்தல்; கக—பறவைகளின்; விருந்த—கூட்டம்; உபஸோபிதம்—அணிசெய்யப்பட்டு; ம்ருகை:—மான்கள்; ஸாகா-ம்ருகை:—மந்திகள்; க்ரோதை:—பன்றிகளும்; மிருக-இந்த்ரை:—சிங்கம்; ருக்ஷ—ஸல்யகை:—ருக்ஷம் மற்றும் சல்யகம்; கவயை:—காட்டுப்பசுக்களும்; ஸரபை:—காட்டுக் கழுதைகளும்; வ்யாக்ரை:—புலிகளும்; ருருபி:—கலைமான்களும்; மஹிஷ-ஆதிபி:—காட்டெருமைகள் போன்றவை.

அங்கு குமுதம், உத்பவம் மற்றும் சதபத்திரம் போன்ற பல்வகை தாமரை மலர்கள் பூத்திருந்தன. அவ்வனம் ஓர் அழகிய சோலையாகக் காட்சியளித்தது. ஏரிகளின் கரைகளின்மேல் பல்வேறு வகையான பறவைகள் இனிய ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. மேலும் அங்கே மான், மந்தி, பன்றி, சிங்கம், ருக்ஷம் சல்யகம், காட்டுப்பசு, காட்டுக்கழுதை, புலி, கலைமான், காட்டெருமை போன்ற பல்வேறு வகையான விலங்குகள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தன.

பதம் 4.6.21
கர்ணாந்த்ரை கபதஸ்வாஸ்யைர் நிர்ஜுஷ்டம் வ்ருக-நாபிபி:
கதலீ-கண்ட-ஸம்ருத்த-நலினீ-புலின-ஸ்ரியம்

கர்ணாந்த்ர—கர்ணாந்திரம்; ஏகபத—ஏகபதம்; அஸ்வாஸ்யை:—அஸ்வாஸ்யம்; நிர்ஜுஷ்டம்—முழு மகிழ்ச்சியுடன்; வ்ருக-நாபிபி:—விருகம் மற்றும் நாபி மற்றும் கஸ்தூரிமான்; கதலீ—வாழை மரங்களும்; கண்ட—கூட்டம்; ஸம்ருத்த—மூடி; நலினீ—தாமரை மலர்களால் நிறைந்த சிறிய ஏரிகள்; புலின—மணல் மேடுகள்; ஸ்ரியம்—மிகவும் அழகானவை.

அங்கு கர்ணாந்திரம், ஏகபதம், அஸ்வாஸ்யம், விருகம் மற்றும் கஸ்தூரி என்னும் நறுமணப் பொருளைத் தன்னுடலில் வைத்திருக்கும் கஸ்தூரி மான்கள் போன்ற பல்வேறு வகையான மான் கூட்டங்கள் இருந்தன. இவை தவிர அம்மலையிலிருந்த சிறு ஏரிகளின் கரைகளில் வாழைமரங்கள் பல நிறைந்தது அலங்கரித்தன.

பதம் 4.6.22
பர்யஸ்தம் நந்தயா ஸத்யா: ஸ்நான-புண்ய தரோதயா
விலோக்ய பூதேஸ-கிரிம் விபுதா விஸ்மயம் யயு:

பர்யஸ்தம்—சூழ்ந்திருத்தல்; நந்தயா—நந்தாலினால்; ஸத்யா:—சதீயின்; ஸ்நான—நீராடுவதினால்; புண்ய-தர—சிறந்த நறுமணம்; உதயா—நீருடன்; விலோக்ய—கண்டபிறகு; பூத-ஈஸ-பூதேஸர்—(பூதகணங்களின் தலைவரான) சிவபெருமான்; கிரிம்—மலை; விபுதா:—தேவர்கள்; விஸ்மயம்—ஆச்சரியம்; யயு:—அடைவர்.

அம்மலையில் அலகநந்தம் என்னும் ஓர் ஏரி இருக்கிறது. அந்த ஏரியில்தான் சதீ நீராடுவது வழக்கம். அந்த ஏரி புண்ணியம் வாய்ந்ததாகும். கயிலாய மலையின் எழிற்கோலத்தினைக் கண்ட அனைத்துத் தேவர்களும் அதன் சிறந்த வனத்தினைக் கண்டு மிகுந்த வியப்படைந்தனர்.

பதம் 4.6.23
தத்ருஸுஸ் தத்ர தே ரம்யாம் அவகாம் நாம வை புரீம்
வனம் ஸெகந்திகம் சாபி யத்ர தன்-நாம பங்கஜம்

தத்ருஸு:—பார்த்து; தத்ர—அங்கே (கயிலாயத்தில்); தே—அவர்கள் (தேவர்கள்); ரம்யாம்—மிகவும் ரம்மியமானதாக; அலகாம்—அலகா; நாம—என்றறியப்படும்; வை—உண்மையில்; புரீம்—இருப்பிடம்; வனம்—காடு; ஸௌகந்திகம்—சௌகந்திகம்; ச—மேலும்; அபி—கூட; யத்ர—எவ்விடத்தில்; தத்-நாம—அறியப்படும் பெயர்; பங்கஜம்—தாமரை மலரின் இனம்.

இவ்வாறு தேவர்கள் “நறுமணம் நிறைந்த” என்று பொருள் தரும் சௌகந்திகம் என்னும் வனத்தில் அற்புத எழில் வாய்ந்த அலகா என்னும் பகுதியைக் கண்டனர். இவ்வனம் சௌகந்திகம் என்றழைக்கப்படுவதற்குக் காரணம் அங்கு தாமரை மலர்கள் மிக அதிகமாகப் பூத்திருந்ததேயாகும்.

பதம் 4.6.24
நந்தா சாலகநந்தா ச ஸரிதௌ பாஹ்யத: புர:
தீர்த்தபாத-பதாம்போஜ-ரஜஸாதிவ பாவனே

நந்தா—நந்தா; ச—மேலும்; அலகநந்தா—அலகநந்தா; ச—மேலும்; ஸரிதௌ—இரு நதிகள்; பாஹ்யத:—வெளிப்புறம்; புர:—நகரில் இருந்து; தீர்த்த-பாத—முழுமுதற் கடவுளின்; பத-கம்போஜ—திருவடித் தாமரைகளின்; ரஜஸா—தூசியினால்; அதீவ—அளவு கடந்த; பவனே—புனிதமானது.

அவர்கள் நந்தா மற்றும் அலகநந்தா என்னும் பெயருடைய இரண்டு நதிகளையும் கண்டனர். இவ்விரு நதிகளும் முழுமுதற் கடவுளான கோவிந்தனின் திருவடித் தாமரைகளின் தூசியினால் புனிதமடைந்தவைகளாகும்.

பதம் 4.6.25
யயோ: ஸுர-ஸ்த்ரிய: க்ஷத்தர் அவருஹ்ய ஸ்வ-திஷ்ணுயத:
க்ரீடந்தி பும்ஸ: ஸிஞ்சந்த்யோ விகாஹ்ய ரதி-கர்ஸிதா:

யயோ:—அவையிரண்டிலும் (நதிகள்); ஸுர-ஸ்த்ரிய:—தேவ மகளிர் தங்கள் கணவர்களுடன்; க்ஷத்த—ஓ, விதுரனே; அவருஹ்ய—இறங்கி வந்து; ஸ்வ-திஷ்ணுயத:—தங்கள் புஷ்பக விமானங்களில் இருந்து; க்ரீடந்தி—அவர்கள் விளையாடுவர்; பும்ஸ:—தங்கள் கணவர்களுடன்; ஸிஞ்சந்த்ய:—தண்ணீரை வாரியிறைத்து; விகாஹ்ய—இறங்கிய பிறகு (நதியினுள்); ரதி-கர்ஸிதா:—அவர்கள் மகிழ்ச்சி குறைந்த பிறகு.

எனதன்பான க்ஷத்தா என்னும் விதுரனே, வானத்துத் தேவமகளிர் புஷ்பக விமானங்களில் தங்கள் கணவர்களுடன் அந்த நதிகள் இருக்கும் இடத்திற்கு வந்து கலந்து மகிழ்ந்த பிறகு நீரினுள் இறங்கி தங்கள் கணவர்களின் மீது நீரினை வாரியிறைத்து விளையாடி மகிழ்வார்.

பதம் 4.6.26
யயோஸ் தத்-ஸ்நான-விபரஷ்ட-நவ-குங்கும-பிஞ்ஜரம்
வித்ருஷோ ‘பி பிபந்தி அம்ப: பாயயந்தோ கஜா கஜீ:

யயோ:—வளமிக்க இவ்விரு நதிகளிலும்; தத்-ஸ்நான—அவைகளில் நீராடுவதினால் (தேவலோகத்து தெய்வமகளிர்); விப்ரஷ்ட—வீழ்வதினால்; நவ—புதிய; குங்கும—குங்குமம்; பிஞ்ஜரம்—மஞ்சள்; உத்ருஷ:—தாகம் இல்லாதிருந்தும்; அபி—கூட; பிபந்தி—பருகுதல்; அம்ப:—தண்ணீர்; பாயயந்த:—நீர்பருகுவதற்குரிய; கஜா:—யானைகள்; கஜீ:—பெண் யானைகள்.

தேவமகளிர் நீராடும்பொழுது அவர்கள் உடலில் இருந்த குங்குமமும் மஞ்சளும் நீரில் கலந்து அந்நீர் மஞ்சள் வண்ணமும், நறுமணமும் பெறும். அங்கு நீராடுவதற்குத் தங்கள் துணையானப் பெண் யானைகளுடன் ஆண் யானைகளும் வரும். அவை தாகம் கொள்ளாதிருந்தும் அந்நீரைப் பருகும்.

பதம் 4.6.27
தார-ஹேம-மஹாரத்ன விமான-ஸத-ஸங்குலாம்
ஜுஷ்டாம் புண்யஜன-ஸ்த்ரீபிர் யதா கம் ஸதடித்-கனம்

தார-ஹேம—முத்தும், பொன்னும்; மஹா-ரத்ன—மதிப்புமிக்க ஆபரணங்கள்; விமான—புஷ்பவிமானம்; ஸத—நூற்றுக்கணக்கில்; ஸங்குலாம்—கூட்டம்; ஜுஷ்டாம்—இடம்பெற்று மகிழ்வர்; புண்யஜன-ஸ்த்ரீபி:—யட்சர்களின் மனைவியரினால்; யதா—இருக்கின்ற; கம்—வானம்; ஸ-தடித்-கனம்—மின்னலும், மேகமும்.

தேவலோகத்தைச் சேர்ந்தவர்களின் புஷ்பக விமானங்கள், பொன், மணி, முத்து போன்ற மதிப்புமிக்க ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். தேவலோக வாசிகள் மின்னலினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மேகங்களைப் போல் தோன்றுவர்.

பதம் 4.6.28
ஹித்வா யக்ஷேஸ்வர-புரீம் வனம் ஸெகந்திகம் ச தத்
த்ருமை: காம-துகைர் ஹ்ருத்யம் சித்ர-மால்ய-பவ-ச் சதை:

ஹித்வா—கடந்து செல்லும் பொழுது; யக்ஷ-ஈஸ்வர—யட்சர்களின் தலைவன் (குபேரன்); புரீம்—இருப்பிடம்; வனம்—வனம்; ஸெளகந்திகம்—சௌகந்திகம் என்றழைக்கப்படும்; ச—மேலும்; தத்—அந்த; த்ருமை:—மரங்களுடன்; காம-துகை:—விருப்பினை நிறைவேற்றும்; க்ஷ்மத்யம்—கவர்ச்சி; சித்ர—பல்வண்ண; மால்ய—மலர்கள்; பல—கனிகள்; சதை:—தளிர்கள்.

இவ்வாறு தேவர்கள் பறந்து வரும்பொழுது பல்வண்ண மலர்களும், கனிதரும் மரங்களும், கற்பகவிருட்சங்களும் நிறைந்திருக்கும் சௌகந்திக வனத்தினைக் கடந்து சென்றனர். அவ்வாறு அவ்வனத்தினைக் கடந்து செல்கையில் அவர்கள் யக்ஷேஸ்வரத்தின் பகுதிகளையும் கண்டனர்.

பதம் 4.6.29
ரக்த-கண்ட-ககானீக-ஸ்வர-மண்டித-ஷட்பதம்
கலஹம்ஸ-குல-ப்ரேஷ்டம் கரதண்ட-ஜலாஸயம்

ரக்த—சிவந்த; கண்ட—கண்டம்; கக-சுனீக—பல பறவைகள்; ஸ்வர—இன்னிசையுடன்; மண்டித—அணி செய்யும்; ஷட்-பதம்—தேனீக்கள்; கலஹம்ஸ-குல—அன்னப்பறவைகளின் கூட்டம்; ப்ரேஷ்டம்—மிகுந்த அன்புடன்: கரதண்ட—தாமரை மலர்கள்; ஜல-ஆஸயம்—நீர் நிரம்பிய ஏரிகள்.

அத்தெய்வீக வனத்தில் கழுத்தில் சிவப்பு வண்ணம் கொண்ட பறவைகள் தேனீக்களின் ரீங்காரத்தோடு போட்டி போட்டிக் கொண்டு இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தன. அந்த ஏரிகள் உறுதியான தண்டினை உடைய தாமரை மலர்களினாலும், ஒலியெழுப்பிக் கொண்டு அங்குமிங்கும் ஓடும் அன்னக் கூட்டங்களினாலும் மிக்க எழில் வாய்ந்ததாக இருந்தன.

பதம் 4.6.30
வன-குஞ்ஜர-ஸங்க்ருஷ்ட-ஹரிசந்தன-வாயுனா
அதி புண்ய ஜன-ஸ்த்ரீணாம் முஹூர் உன்மதயன் மன:

வன-குஞ்ஜர—காட்டுயானைகளினால்; ஸங்க்ருஷ்ட—உரசும்; ஹரிசந்தன—சந்தன மரங்கள்; வாயுனா—தென்றல் காற்று; புண்ய ஜன-ஸ்த்ரீணாம்—யட்சர்களின் மனைவியர்; முஹு:—மீண்டும் மீண்டும்; உன்மதயத்—உன்மத்தம்; மன:—மனங்கள்.

இவ்வழகிய இயற்கைச் சூழ்நிலைகளினால் நிலையின்றி காட்டு யானைகள் கூட்டங் கூட்டமாக சந்தன மரங்களுக்கிடையில் திரிந்து கொண்டிருக்கும். அங்கு வீசும் சுகமான தென்றல் காற்றில் மனதைப் பறிகொடுக்கும் தேவமகளிர் மீண்டும் கலவியின்பத்தை நாடுவர்.

பதம் 4.6.31
வைடூ ர்ய-க்ருத-ஸோபானா வாப்ய உத்பவ-மாலினீ:
ப்ராப்தம் கிம்புருஷைர் த்ருஷ்ட்வா த ஆராத் தத்ருஸுர் வடம்

வைடூர்ய-க்ருத—வைடூரியங்களினாலான; ஸோபானா:—படிக்கட்டுகள்; வாப்ய:—ஏரிகள்; உத்பல—தாமரை மலர்கள்; மாலினீ:—உடைய வரிசைகளும் ; ப்ராப்தம்—உறைவிடமாக; கிம்புருஷை:—கிம் புருடர்கள்; த்ருஷ்ட்வா—பார்த்தபிறகு; தே—அத்தேவர்கள்; ஆராத்—வெகுதூரம் இல்லை; தத்ருஸு:—கண்டு; வடம்—ஓர் ஆலமரம்.

குளிக்கும் இடமான படித்துறையும் அதன் படிக்கட்டுக்களும் வைடூரியங்களினால் கட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர். நீர் முழுவதும் தாமரை மலர்களினால் நிறைந்திருந்தது. இதுபோன்ற ஏரிகளைக் கடந்து செல்லும்பொழுது தேவர்கள் ஓரிடத்தினை அடைந்தனர். அங்கு ஒரு பெரிய ஆலமரம் இருந்தது.

பதம் 4.6.32
ஸ யோஜன-ஸதோத்ஸேத: பாதோன-லிடபாயத:
பர்யக்-க்ருதாசல-ச் சாயோ நிர்னீடஸ் தாப வர்ஜித:

ஸ:—அந்த ஆலமரம்; யோஜன-ஸத—ஒரு நூறு யோசனை (எண்ணூறு மைல்); உத்ஸேத:—உயரம்; பாத-ஊன—கால்பங்கு குறைந்து (அறுநூறு மைல்); விடப—கிளைகளினால்; ஆயத:—பரந்து விரிந்து; பர்யக்—நாற்புறமும்; க்ருத—செய்த; அசல—அசைவின்றி; சாய:—நிழல்: நிர்னீட:—பறவைகளின் கூடுகள் ஏதுமின்றி; தாப-வர்ஜித:—வெம்மை ஏதுமின்றி.

அந்த ஆலமரம் எண்ணூறு மைல்கள் உயரமும் அதன் கிளைகள் அறுநூறு மைல்கள் சுற்றளவிற்குப் பரந்தும் விரிந்தும் இருந்தன. அம்மரத்தின் இனிய நிழல் சீதோஷ்ண நிலையினை நிரந்தரமாகக் குளிர்ச்சியடையச் செய்தது. இவ்வாறிருந்தும் அங்கு பறவைகளின் ஒலி என்பதே இல்லை.

பதம் 4.6.33
தஸ்மின் மஹா-யோகமயே முமுக்ஷு-ஸரனே ஸுரா:
தத்ருஸு ஸிவம் ஆஸீனம் த்யக்தாமர்ஷம் இவாந்தகம்

தஸ்மின்—அம்மரத்தின் கீழ்; மஹா-யோக-மயே—பரம் பொருளை நினைத்துப் பல்வேறு முனிவர்கள் தியானித்துக் கொண்டிருந்தனர்; முழுக்ஷு:—முக்தியடைய விரும்புவோர்; ஸரணே—சரண்; ஸுரா:—தேவர்கள்; தத்ருஸு:—கண்டனர்; ஸிவம்—சிவபெருமான்; ஆஸுனம்—அமர்ந்து; த்யக்த-அமர்ஷம்—ஆத்திரத்தினைத் துறந்து; இவ—இருக்கின்ற; அந்தகம்—நித்தியக் காலம்.

அம்மரத்தின் கீழ் சிவபெருமான் அமர்ந்திருப்பதைத் தேவர்கள் கண்டனர். அவரது கோலம் தெய்வீக யோகிகளுக்கு நிறைவினையும், அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பு அளிக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்தது. காலத்தின் நித்திய அமைதியினைப் போன்று விளங்கிய அவரது தோற்றம் அவர் தனது ஆத்திரத்தினை விட்டொழித்தவராகக் காட்சி தந்தது.

பதம் 4.6.34
ஸனந்தனாத்யைர் மஹா-ஸித்தை: ஸாந்தை: ஸம்ஸாந்த-விக்ரஹம்
உபாஸ்யமானம் ஸக்யா ச பர்த்ரா குஹ்யக-ரக்ஷஸாம்

ஸனந்தன-ஆத்யை:—நான்கு குமாரர்கள், அவர்களின் தலைவர் ஸனந்தனர், மஹா-ஸித்தை:—முக்தி பெற்ற ஆத்மாக்கள்; ஸாந்தை:—தெய்வீக; ஸம்ஸாந்த-விக்ரஹம்—அமைதியும், தெய்வீகமும் நிறைந்த சிவபெருமான்; உபாஸ்யமானம்—புகழப்பட்டு; ஸக்யா—குபரேனால்; ச—மேலும்; பர்த்ரா—குருவினால்; குஹ்யக-ரக்ஷ்ஸாம்—குஹ்யகர்கள் மற்றும் இராட்சதர்கள்.

சிவபெருமானைச் சுற்றி குஹ்யகர்களின் தலைவராகிய தெய்வீக அருள் பெற்ற குபேரனும் முன்னரே முக்தி அடைந்த அவரது நான்கு குமாரர்களும் அமர்ந்திருந்தனர். சிவபெருமான் தெய்வீக அமைதியுடையவராக விளங்கினார்.

பதம் 4.6.35
வித்யா-தபோ-யோக-பதம் ஆஸ்திதம் தம் அதீஸ்வரம்
சரந்தம் விஸ்வ-ஸுஹ்ருதம் வாத்ஸல்யால் லோக–மங்கலம்

வித்யா—ஞானம்; தப:—தவம்; யோக-பதம்—பக்தித் தொண்டிற்குரிய பாதை; ஆஸ்திதம்—இருத்தல்; தம்—அவரது (சிவபெருமான்); அதீஸ்வரம்—புலன்களின் நாயகர்; சரந்தம—நிறைவேற்றுதல் (தவம் போன்றவை); விஸ்வ-சூ ஹ்ருதம்—உலகம் முழுமைக்கும் நண்பர்; வாத்ஸல்யாத்—மிகுந்த அன்பினால்; லோக-மங்கலம்—எல்லோர்க்கும் மங்கலமானவர்.

சிவபெருமான் புலன்கள், ஞானம், பலன்தரும் செயல்கள், மனநிறைவினை அடைவதற்குரிய பாதை போன்றவற்றின் தலைவரைப் போல வீற்றிருப்பதைத் தேவர்கள் பார்த்தனர். இப்பிரபஞ்சம் முழுவதற்குமே அவர் நண்பராக விளங்கினார். அனைவரிடத்தும் அவர் கொண்ட அன்பின் விளைவாக மிகுந்த மங்கலமுடையவராகவும் விளங்கினார்.

பதம் 4.6.36
லிங்கம் ச தாபஸாபீஷ்டம் பஸ்ம-தண்ட-ஜடாஜினம்
அங்கேன ஸந்த்யாப்ர-ருசா சந்த்ர-லேகாம் ச பிப்ரதம்

லிங்கம்—அடையாளம்; ச—மேலும்; தாபஸ-அபீஷ்டம்—சைவத் துறவிகளால் நாடப்படுவர்; பஸ்ம—திருநீறு; தண்ட—கைத் தண்டம்; ஜடா—ஜடாமுடி; அஜினம்—மான்தோல்; அங்கேன—தனது உடலில்; ஸந்த்யா-ஆப்ர—சிவந்த; ருசா—வண்ணம்; சந்த்ர-லேகாம்—இளம் பிறையினை; ச—மேலும்; பிப்ரதம்—அணிந்திருப்பவர்.

அவர் ஒரு மான் தோலின் மீதமர்ந்து எல்லாவிதமானத் தவங்களையும் மேற்கொண்டிருந்தார். உடல் முழுதும் திருநீறு அணிந்திருந்ததினால் அவர் மாலை நேர மேகத்தினைப் போன்று காட்சியளித்தார். தலைமுடியில் சந்திரனது இளம்பிறையினை அடையாளமாக அணிந்திருந்தார்.

பதம் 4.6.37
உபவிஷ்டம் தர்பமய்யாம் ப்ருஸ்யாம் ப்ரஹ்ம ஸநாதனம்
நாரதாய ப்ரவோ சந்தம் ப்ருச்சதே ஸ்ருண்வதாம் ஸதாம்

உபவிஷ்டம்—அமர்ந்து; தர்ப-மய்யாம்—தர்பப் புல்லினாலான; ப்ருஸ்யாம்—பாயின் மீது; ப்ரஹ்ம—முழுமெய்ப்பொருள்; ஸ்நாதனம்—நித்தியமான; நாரதாய—நாரதரிடம்; ப்ரவோசந்தம்—உரையாடிக் கொண்டு; ப்ருச்சதே—கேட்டுக்கொண்டு; ஸ்ருண்வதாம்—கவனித்துக் கொண்டு; ஸதாம்—மகாமுனிவர்களின்.

தர்ப்பைப்புல்லினால் செய்யப்பட்ட பாயின் மீது அமர்ந்து கொண்டு, நாரதர் உள்ளிட்ட அங்கு குழுமியிருந்தவர்களிடம் அவர் உரையாடிக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக அவர் நாரத முனிவரிடம் முழுமெய்ப்பொருளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்.

பதம் 4.6.38
க்ருத்வோரௌ தக்ஷிணே ஸவ்யம் பாத-பத்மம் ச ஜானுனி
பாஹும் ப்ர கோஷ்டே ‘க்ஷ மாலாம் ஆஸீனம் தர்க–முத்ரயா

க்ருத்வா—இடப்பட்டு; ஊரென—தொடை; த க்ஷிணே—வலப்புறம்; ஸவ்யம்—இடப்புறம், பாத-பத்மம்—தாமரைத்திருவடி; ச—மேலும்; ஜானுனி—முழங்காலின் மீது; பாஹும்—கரம்; ப்ர கோஷ்டே—வலதுகையின் நுனியினை; அக்ஷ-மாலாம்—உருத்திராட்ச மாலை; ஆஸீனம்—ஆசனம்; தர்க்க-முத்ரயா—தர்க்க முத்திரையுடன்.

அவர் தனது இடது காலை வலது தொடையின் மீது இட்டும், இடது கரத்தினை இடது தொடையின் மீது வைத்தும் காட்சி தந்தார். தனது வலது கையில் உருத்திராட்ச மாலையினை வைத்திருந்தார். இவ்வாறு அமர்ந்திருக்கும் நிலை வீராசனம் எனப்படும். அவர் வீராசன நிலையில் அமர்ந்து தனது விரலினை தர்க்க முத்திரையில் வைத்திருந்தார்.

பதம் 4.6.39
தம் ப்ரஹ்ம-நிர்வாண-ஸமாதிம் ஆஸ்ரிதம்
வ்யூபாஸ்ரிதம் கிரிஸம் யோக-கக்ஷாம்
ஸ-லோக-பாலா முனயோ மனூனாம்
ஆத்யம் மறும் ப்ராஞ்ஜலய: ப்ரணேமு:

தம்—அவரது (சிவபெருமான்); ப்ரஹ்ம-நிர்வாண—பிரம்மானந்தத்தில்; ஸமாதீம்—சமாதி நிலையில்; ஆஸ்ரிதம்—ஒன்றி; வ்யுபாஸ்ரிதம்—சாய்ந்து கொண்டு; கிரிஸம் சிவபெருமான்; யோக-கக்ஷாம்—அவரது இடது முழங்கால் ஒரு துண்டுத் துணியினால் உறுதியாகக் கட்டப்பட்டிருக்கும்; ஸ-லோக-பாலா:—தேவர்களுடன் (இந்திரன் தலைமையில்); முனய:—முனிவர்கள்; மனூனாம்—சிந்திப்பவர்கள் அனைவரும்; ஆத்யம்—முதல்வர்; மனும்—சிந்தனையாளர்; ப்ராஞ்ஜலய:—கூப்பிய கரங்களுடன்; ப்ரணேமு:—மரியாதைக்குரிய வந்தனங்களைச் சமர்ப்பித்தனர்.

அனைத்து முனிவர்களும், இந்திரன் தலைமையின் கீழுள்ள அனைத்துத் தேவர்களும் கூப்பிய கரங்களுடன் சிவபெருமானுக்குத் தங்கள் வந்தனங்களை அர்ப்பணித்தனர். சிவபெருமான் இடையில் காவியுடை தரித்து யோக சமாதியில் ஆழ்ந்திருந்தார். அவரது தோற்றம் அனைத்து முனிவர்களைக் காட்டிலும் மிகவும் உயர்வானதாகக் காட்சியளித்தது.

பதம் 4.6.40
ஸ தூபலப்யாகதம் ஆத்ம-யோனிம்
ஸுராஸுரேஸைர் அபிவந்திதாங்க்ரி:
உத்தாய சக்ரே ஸிரஸாபிவந்தனம்
அர்ஹத்தம: கஸ்ய யதைவ விஷ்ணு:

ஸ:—சிவபெருமான்; து—ஆனால்; உபலப்ய—கண்டு; ஆகதம்—வந்தடைந்தவுடன்; ஆத்ம-யோனியம்—பிரம்மதேவன்; ஸுர-அஸுர-ஈஸை:—சிறந்த தேவர்களினாலும் அசுரர்களினாலும் அபிவந்தித-அங்க்ரி:—அவரது பாதங்கள் துதிக்கப்படுகின்றன; உத்தாய—எழுந்து நின்று; சக்ரே—செய்து; ஸிரஸா—அவரது தலையினால்; அபிவந்தனம்—மரியாதையுடன்; அர்ஹத்தம—வாமன தேவர்; கஸ்ய—காச்யபரின்; யதாஏவ—அதுபோல்; விஷ்ணு:—விஷ்ணு.

சிவபெருமானின் திருவடித் தாமரைகளோ தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்படுகின்றன. அத்தனை மேன்மை மிக்கவராக அவர் இருந்தும் தேவர்களுடன் சேர்ந்து பிரம்மதேவனும் வருகைபுரிந்ததைக் கண்டவுடன் விரைந்து எழுந்து, பிரம்மதேவனின் திருவடித் தாமரைகளை, எவ்வாறு வாமனதேவர் காச்யப முனிவருக்குத் தனது மரியாதைமிக்க வந்தனங்களைத் தெரிவித்தாரோ அதுபோன்று, சிவபெருமானும் தனது தலை தாழ்ந்து அவரது திருவடித் தாமரைகளைத் தொட்டு வணங்கித் தனது மரியாதையினைத் தெரிவித்தார்.

பதம் 4.6.41
ததாபரே ஸித்த-கணா மஹர்ஷிபிர்
யே வை ஸமந்தாத் அனு நீல லோஹிதம்
நமஸ்க்ருத: ப்ராஹ ஸஸாங்க-ஸேகரம்
க்ருத-ப்ரணாமம் ப்ரஹஸன்ன் இவாத்மபூ:

ததா—ஆகையினால்; அபரே—மற்றவர்களும்; ஸித்த-கணா:—சித்தர்கள்; மஹார்ஷிபி:—மகா முனிவர்களுடன்; யே—எவர்கள்; வை—உண்மையில்; ஸமந்தாத்—எல்லாம் பக்கங்களிலும்; அனு—பிறகு; நீலலோஹிதம்—சிவபெருமான்; நமஸ்க்ருத:—வணக்கம் செய்து; ப்ராஹ—கூறினார்; ஸஸாங்க-ஸேகரம்—சிவபெருமானுக்கு; க்ருத-ப்ரணாமம்—வந்தனங்கள் செய்யப்பட்டு; ப்ரஹஸன்—புன்னகை புரிந்து; இவ—இருக்கின்ற; ஆத்மபூ:—பிரம்மதேவன்.

சிவபெருமானுடன் அமர்ந்திருந்த நாரதர் உள்ளிட்ட அனைத்து முனிவர்களும் தமது மரியாதைக்குரிய வந்தனங்களைப் பிரம்ம தேவனுக்குச் சமர்ப்பித்தனர். இவ்வாறு அனைவராலும் வணங்கப்பட்டப் பிறகு புன்னகையுடன் பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறத் தொடங்கினர்.

பதம் 4.6.42
ப்ரஹ்மோ வாச
ஜானே த்வாம் ஈஸம் விஸ்வஸ்ய ஜகதோ யோனி-பீஜயோ:
ஸக்தே: ஸிவஸ்ய ச பரம் யத் தத் ப்ரஹ்ம நிரந்தரம்

ப்ரஹ்மா உவாச—பிரம்மதேவன் கூறினார்; ஜானே—நானறிவேன்; த்வாம்—நீர் (சிவபெருமான்); ஈஸம்—நெறியாளர்; விஸ்வஸ்ய—பௌதீகத் தோற்றம் முழுமைக்கும்; ஜகத:—உலகத்தோற்றத்தின்; யோனி-பீஜயோ:—தாயும் தந்தையும் ஆனவர்; ஸக்தே:—சக்தியின்; ஸிவஸ்ய—சிவபெருமானின்; ச—மேலும்; பரம்—பரம; யத்—எது; தத்—அது; ப்ரஹ்ம—மாற்றமில்லாதவர்; நிரந்தரம்—ஜடத்தன்மைகள் இல்லாத.

பிரம்மதேவன் கூறினார்: எனதன்பிற்குரிய சிவபெருமானே, நீரே பௌதீகத் தோற்றம் அனைத்தையும் நெறிப்படுத்துபவர் என்பதும், பிரபஞ்சத்தை ஈன்றெடுத்த அம்மையப்பன் என்பதும், அப்பிரபஞ்சத் தோற்றத்தினையும் கடந்த பரப்பிரம்மம் என்பதையும் நான் நன்கறிவேன். நான் உம்மை இவ்வாறே அறிகிறேன்.

பதம் 4.6.43
த்வம் ஏவ பகவன்ன் ஏதச் சிவ-ஸக்த்யோ: ஸ்வரூபேயோ:
விஸ்வம் ஸ்ருஜஸி பாஸி அத்ஸி க்ரீடன்ன் ஊர்ண-படோ யதா

த்வம்—நீர்; ஏவ—நிச்சயமாக; பகவன்—ஓ, பகவானே; ஏதத்—இந்த; ஸிவ-ஸக்த்யோ:—உமது மங்கலமான சக்தியில் நிலைபெற்று; ஸ்வரூபயோ:—உமது சுய விரிவினால்; விஸ்வம்—இப்பிரபஞ்சம்; ஸ்ருஜஸி—படைத்து; பாஸி—காத்து; அத்ஸி—அழித்து; க்ரீடன்—உழைக்கின்ற; ஊர்ண-பட:—சிலந்தியின் வலை; யதா—போன்றதாகும்.

எனதன்பான பகவானே! உமது சுயவிரிவினால் நீரே இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கவும் செய்கின்றீர், எதுபோலென்றால் சிலந்தி எவ்வாறு தனது மெல்லிய வலையினைப் படைத்துக் காத்து அழிக்கின்றதோ அது போன்று.

பதம் 4.6.44
த்வம் ஏவ தர்மார்த்த-துகாபிபத்தயே
தக்ஷேயண ஸுத்ரேண ஸஸர் ஜிதாத்வரம்
த்வயைவ லோகே ‘வஸிதாஸ் ச ஸேதவோ
யான் ப்ராஹ்மனா: ஸ்ரத்தததே த்ருத-வ்ரதா:

த்வம்—தங்கள் மேலான; ஏவ—உறுதியாக; தர்ம-அர்த-துக—சமயம் மற்றும் பொருளாதார வளர்ச்சியினின்று பெறப்படும் நன்மை; அபிபத்தயே—அவற்றின் பாதுகாப்பு; தக்ஷேண—தக்ஷனால்; ஸுத்ரேண—அவரை காரணமாக்கி; ஸஸர்ஜித—படைத்தது; அத்வரம்—வேள்விகள்; த்வயா—உம்மால்; ஏவ—உறுதியாக; லோகே—இவ்வுலகில்; அவஸிதா:—ஒழுங்குப்படுத்தப்பட்டது; ச—மேலும்; ஸேதவ:—வர்ணாஸ்ரம தர்மத்திற்குரிய மரியாதை; யான்—எந்த; ப்ராஹ்மணா:—அந்தணர்கள்; ஸ்ரத்ததே—அதிக மரியாதை; த்ருட-வ்ரத:—சபதமாக எடுத்து.

எனதன்பிற்குரிய பகவானே! தாங்கள் அறிமுகப்படுத்திய வேள்விகளுக்கு தக்கனைச் செயல் முதல்வராக்கினீர். இதன்மூலம் ஒருவன் தர்மச் செயல்களின் நன்மைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயன்களைப் பெறலாம். தங்கள் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் நான்கு வகையான வர்ணாஸ்ரம தர்மங்கள் மதிக்கப்படுகின்றன. ஆகையினால் அந்தணர்கள் இம்முறையினைக் கடுமையாகப் பின்பற்ற உறுதி மேற்கொண்டுள்ளனர்.

பதம் 4.6.45
த்வம் கர்மணாம் மங்கல மங்கலாணாம்
கர்து: ஸ்வ-லோகம் தனுஷேஸ்வ: பரம் வா
அமங்கலானாம் ச தமிஸ்ரம் உல்பணம்
விபர்யய: கேன தத் ஏவ கஸ்யசித்

த்வம்—தங்கள் சான்றாண்மை; கர்மணாம்—நிர்ணயிக்கப்பட்டத் தொழில்கள்; மங்கல—ஓ மிகவும் மங்கலமானவை; மங்கலாணாம்—மங்கலமானது; கர்து:—நிறைவேற்றுபவரின்; ஸ்வ-லோகம்—உரிய தேவலோகங்கள்; தனுஷே—விரிவு; ஸ்வ:—தேவலோகங்கள்; பரம்—உன்னதமான உலகம்; வா—அல்லது; அமங்கலானாம்—அமங்கலமானவை; ச—மேலும்; தமிஸ்ரம்—ஒரு குறிப்பிட்ட நரகத்தின் பெயர்; உல்பணம்—கோரமான; விபரய:—நேர்மாறான; கேன—ஏன்; தத் ஏவ—நிச்சயமான அது; கஸ்யசித்—சிலருக்கு.

அவரவர் செய்யும் புண்ணியச் செயலுக்குத் தகுந்தாற்போல் அவர்களுக்கு தேவலோகமோ ஆன்மீக வைகுந்த லோகமோ அல்லது அருவ பிரம்ம ஜோதியில் கலத்தலையோ நீர் விதிக்கின்றீர். இதுபோன்று பாவிகளுக்கு அதிபயங்கரமும், கொடூரமும் நிறைந்த பல்வேறு நரகங்கள் கிடைக்குமாறு செய்கின்றீர். இதற்கு முற்றிலும் நேர்மாறாகவும் சிலர் சொர்க்கமோ நரகமோ அடையுமாறும் செய்கின்றீர். இதன் காரணம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கின்றது.

பதம் 4.6.46
ந வை ஸதாம் த்வச்-சரணார்பிதாத்மனாம்
பூதேஷு ஸர்வேஷ்வ அபிபஸ்தாம்தவ
பூதானி சாத்மனி அப்ருதக்-தித்ருக்ஷதாம்
ப்ராயேன ரோஷோ ‘பிபவேத்யதா பஸும்

ந—இல்லை; வை—ஆனால்; ஸதாம்—பக்தர்களின்; த்வத்-சரண-அர்ப்பித ஆத்மனாம்—உமது திருவடித் தாமரைகளை முழுதும் சரணடைந்தவர்கள்; பூதேஷு—உயிர்களுக்கிடையில்; ஸர்வேஹு—எல்லா வேறுபாடுகளும்; அபிபஸ்யதாம்—நிறைவாகக் காண்பர்; தவ—உமது; பூதானி—உயிர்கள்; ச—மேலும்; ஆத்மனி—பரமாத்மாவின்; அப்ருதக்—வேறுபாடின்மை; தித்ருக்ஷதாம்—இதுபோல் பார்ப்பவர்கள்; ப்ராயேண—எல்லோரும் எப்பொழுதும்; ரோஷ:—சினம்; அபிபவேத்—இடம் பெறுவர்; யதா—அதுபோன்று; பஸும்—விலங்குகள்.

எனது அன்பிற்குரிய பகவானே, தமது வாழ்வினையே உமது திருவடித் தாமரைகளில் அர்ப்பணித்து, நீரே பரமாத்வாக எல்லா உயிர்களிடத்தும் விளங்குகிறீர் என்று கருதி பக்தர்கள் யாரிடத்தும் வேறுபாடு காணாதிருப்பார். இது போன்றவர்கள் எல்லோரையும் சரி சமமாக நடத்துபவர். அவர்கள் சினத்தினால், எல்லாவற்றையும் வேறுபாடாகப் பார்க்கும் விலங்குகளாக மாறமாட்டார்கள்.

பதம் 4.6.47
ப்ருதக்-திய: கர்ம-த்ருஷோ துராஸயா:
பரோதயேனார்பித-ஹ்ருத்-ருஜோ ‘நிஸம்
பரான் துர்க்தைர் விதுதந்தி அருந்துதாஸ்
தான் மாவதீத் தைவ-வதான் பவத்-வித:

ப்ருதக்—வித்தியாசமாக; திய:—சந்தித்துக் கொண்டிருப்போர்; கர்ம—பலன்தரும் செயல்கள்; த்ருஷ:—கவனிப்பவர்; துராஸயா:—சிறுமதியினர்; பர உதயேன—பிறர் செல்வநிலை கண்டு; அர்பித—துறப்பர்; ஹ்ருத்—இதயம்; ருஜ:—சினம்; அனிஸம்—எப்போதும்; பரான்—பிறர்; துருக்தை:—கடுஞ்சொற்கள்; விதுதந்தி—துன்பமளிப்பர்; அருந்துதா:—காயப்படுத்தும் சொற்கள்; தான்—அவர்களுக்கு; மா—இல்லை; அவதீத்—கொல்ல; தைவ—தெய்வத்தினால்; வதான்—ஏற்கெனவே கொல்லப்பட்டோர்; பவத்—நீர்; வித:—போல.

எல்லாவற்றிலும் வேற்றுமை காண்பவர்கள் பலன்தரும் செயல்களின் மீது பற்றுடையோராகவும், சிறு மதியினராகவும், பிறர் உயர்வு கண்டு அழுக்காறுடைய மனத்தினராகி அவர்களைக் கடுஞ்சொற்களால் காயப்படுத்துப்பவராகவும் உள்ளனர். அவர்கள் ஏற்கெனவே தெய்வவிதியால் கொல்லப்பட்டோராவர். ஆகையினால் அவர்கள் மீண்டும் உம் போன்ற தன்னேரில்லாதவர்களினால் கொல்லப்பட வேண்டிய தேவையில்லாதவர்கள்.

பதம் 4.6.48
யஸ்மின் யதா புஷ்கர-நாப-மாயயா
துரந்தயா ஸ்ப்ருஷ்ட-திய ப்ருதக்-த்ருஸ:
குர்வந்தி தத்ர ஹி அனுகம்பயா க்ருபாம்
ந ஸாதவோ தைவ-பலாத் க்ருதே க்ரமம்

யஸ்மின்—சில இடங்களில்; யதா—எப்பொழுது; புஷ்கர-நாப-மாயயா—புஷ்கர நாபரின் மாயா சக்தியினால் அதாவது முழுமுதற் கடவுளின்; துரந்தயா—கடப்பதற்கரிய; ஸ்ப்ருஷ்ட-தியா—குழப்பமுற்று; ப்ருதக்-த்ருஸ:—வித்தியாசமாகப் பார்க்கும் அதே நபர்கள்; குர்வந்தி—செய்; தத்ர—அங்கே; ஹி—உறுதியாக; அனுகம்பாய—கருணையினால்; க்ருபாம்—கருணை; ந—இல்லை; ஸாதவ:—அருளுடையோர்கள்; தைவ-பலாத்—தெய்வசக்தியினால்; க்ருதே—செய்யப்படுகிறது; க்ரமம்—வீரம்.

எனது அன்பான பகவானே, சில இடங்களில் லோகாயதவாதிகள் முழுமுதற் கடவுளின் கடப்பதற்கரிய மாயா சக்தியினால் மிக்க குழப்பமுற்று சிலநேரங்களில் தவறு செய்கின்றனர். ஆனால் இதனைத் தெய்வீக அருளாளர்கள் தங்கள் கருணையினால் கடுமையாகக் கருதுவதில்லை. அவர்கள் மாயையினால் பாதிக்கப்பட்டு இதனைச் செய்கின்றனர் என்று அறிந்து கொண்டிருப்பதினால் அதற்கெதிராக இவர்கள் தங்கள் சக்தியினைக் காட்டுவதில்லை.

பதம் 4.6.49
பவாம்ஸ் து பும்ஸ்: பரமஸ்ய மாயயா
துரந்தயாஸ்ப்ருஷ்ட-மதி: ஸமஸ்த-த்ருக்
தயா ஹதாத்மஸ்வ அனுகர்ம-சேத: ஸ்வ
அனுக்ரஹம் கர்தும் இஹார்ஹஸி ப்ரபோ

பவான்—தங்கள் சான்றாண்மையின்கீழ்; து—ஆனால்; பும்ஸ்:—நபரின்; பரமஸ்ய—பரம்பொருள்; மாயயா—பௌதீக சக்தியினால்; துரந்தயா—சிறந்த சக்தியின்; அப்ருஷ்ட—பாதிக்கப்படாது; மதி:—மதி (புத்தி); ஸமஸ்த-த்ருக்—மெய்யுணர்வாளர் அல்லது அறிஞர்; தயா—அதே ஜட சக்தியினால்; ஹத-ஆத்மஸு—மனக் குழப்பமுற்று; அனுகர்ம-சேத: ஸு—அவர்களின் மனம் பலன்தரும் செயல்களினால் கவரப்படும்; அனுக்ரஹம்—கருணை; கர்தும்—செய்வதற்கு; இஹ—இவ்விஷயத்தில்; அர்ஹஸிணை:—ஆசை: ப்ரபோ—ஓ, பகவானே.

எனதன்பான பகவானே, முழுமுதற் கடவுளின் வெல்வதற்கரிய மாயா சக்தியின் பாதிப்பினால் நீர் குழப்பமடைவதே கிடையாது. ஆகையினால் எல்லாம் அறிந்த நீர் அதே மாயா சக்தியினால் குழப்பமுற்றவர்களிடமும், பலன் தரும் செயல்களின் மீது மிகவும் பற்றுடையோர்களிடமும் கருணையுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

பதம் 4.6.50
குர்வ அத்வரஸ்யோதரணம் ஹதஸ்ய போ:
த்வயாஸமாப்தஸ்ய மனோ ப்ரஜாபதே:
ந யத்ர பாகம் தவ பாகினா தது:
குயாஜினோ யேன மகோ நினீயதே

குரு—செயல்படுத்துவது; அத்வரஸ்ய—வேள்வியின்; உத்தரணம்—தொடர்ந்து முடிப்பது; ஹதஸ்ய—கொல்லப்படுதல்; போ:—ஓ; த்வயா—உம்மால்; அஸமாப்தஸ்ய—நிறைவேறாத வேள்வியினை; மனோ—ஓ, சிவபெருமானே; ப்ரஜாபதே:—மகாராஜா தக்ஷனின்; ந—இல்லை; யத்ர—எங்கே; பாகம்—அவிர் பாகம்; தவ—உமது; பாகின:—அவிர்பாகத்தினைப் பெறுவதற்குரியவர்; தது:— கொடுக்கவில்லை; கு-யாஜின:—தீய புரோகிதர்கள்; யேன—அருள்பவரினால்; மக:—வேள்வி; நினீயதே—பயனைப் பெறுகிறவர்.

எனது அன்பிற்குரிய பகவானே, வேள்வியின் அவிர்பாகத்தினைப் பெறும் பங்குதாரர் நீர்; வேள்வியின் பயனைக் கொடுப்பவரும் நீரே. அங்கிருந்த தீய புரோகிதர்கள் உமக்குரிய அவிர்பாகத்தினை அளிக்கவில்லை. ஆதலினால் எல்லாவற்றையும் நீங்கள் அழித்தீர்கள். இப்போது அவ்வேள்வி நிறைவேறாமல் இருக்கிறது. எனவே நீர் தேவையானதைச் செய்து உமக்குரிய அவிர்ப்பாகத்தினைப் பெறுவீராக.

பதம் 4.6.51
ஜீவதாத் யஜமானோ ‘யம் ப்ரபத்யேதாக்ஷிணீ பக:
ப்ருகோ: ஸ்மஸ்ரூணி ரோஹந்து பூஷ்ணோ தந்தாஸ் ச பூர்வவத்

ஜீவதாத்—அவரை வாழவிடும்; யஜமான:—வேள்வியின் தலைவர் (தக்ஷன்); அயம்—இந்த; ப்ரபத்யதே—அவரை மீண்டும் திரும்பச் செய்யும்; அக்ஷிணீ—கண்களினால்; பக:—பகதேவன்; ப்ருகோ:—பிருகு முனிவர்; ஸ்மஸ்ரூணி—மீசை; ரோஹந்து—மீண்டும் வளர வரம்; பூஷ்ண:—பூஷதேவன்; தந்தா:—பற்கள்; ச—மேலும்; பூர்வ-வத்—முன்பு போல.

எனதன்பான பகவானே, உமது அளவற்ற கருணையினால் வேள்வியின் தலைவரான தக்கன் மீண்டும் உயிர் பெறவும் பகன் இழந்த தன் கண்களை மீண்டும் பெறவும், பிருகு முனிவர் தன் மீசையினையும் பூஷன் தன் பற்களையும் மீண்டும் பெறவேண்டும்.

பதம் 4.6.52
தேவானாம் பக்ன-காத்ராணாம் ருத்விஜாம் சாயுதாஸ்மபி:
பவதானுக்ரு ஹீதானாம் ஆஸு மன்யோ ‘ஸ்த்வ அனாதுரம்

தேவானாம்—தேவர்களின்; பக்ன-காத்ராணாம்—அவர்கள் உடலின் பாகங்கள் நொறுங்கியிருக்கின்றன; ருத்விஜாம்—புரோகிதர்களின்; ச—மேலும்; ஆயுத-அஸ்மபி:—ஆயுதங்களினாலும், கற்களினாலும்; பவதா—உம்மால்; அனுக்கு ஹீதானாம்—கருணை கொண்டு; ஆஸு—உடனடியாக; மன்யோ—ஓ சிவபெருமான்; (சினமிக்க மனநிலையில்); அஸ்து—முன்பிருந்ததுபோல்; அனாதுரம்—காயங்களில் இருந்து குணம்பெறுதல்.

ஓ, சிவபெருமானே உமது கருணையினால், உமது வீரர்களினால் உடற்குறைவுபட்ட தேவர்களும், புரோகிதர்களும் தங்கள் காயங்களில் இருந்து குணமடைதல் வேண்டும்.

பதம் 4.6.53
ஏஷ தே ருத்ர பாகோ ‘ஸ்து யத்-உச்சிஷ்டோ ‘த்வரஸ்யவை
யஜ்ஞாஸ் தே ருத்ர பாகேன கல்பதாம் அத்ய யஜ்ஞா–ஹன்

ஏஷ:—இந்த; தே—உமது; ருத்ர—ஓ, சிவபெருமானே; பாக:—அவிர்பாகம்; அஸ்து—இருப்பது அப்படியே; யத்—எதுவாயினும்; உச்சிஷ்ட:—எஞ்சியிருக்கின்ற; அத்வரஸ்ய—வேள்வியில்; வை—உண்மையில்; யஜ்ஞா:—வேள்வி; தே—உமது; ருத்ர—உருத்திரரே, பாகேன—அவிர்பாகத்தினால்; கல்பதாம்—பூர்த்தியடையலாம்; அத்ய—இன்று; யஜ்ஞா-ஹன்—ஓ, வேள்வியினை அழிப்போனே.

ஓ, வேள்வியினை அழித்தவரே, வேள்வியில் உமக்குரிய அவிர்பாகத்தினைப் பெற்று உமது கருணையினால் அவ்வேள்வியினை நிறைவேற்றி வைப்பீராக.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “பிரம்மதேவர் சிவபெருமானை அமைதிப்படுத்துதல்” எனும் தலைப்பைக் கொண்ட ஆறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare