அத்தியாயம் – 5
தட்சனின் வேள்வி தடைப்படுதல்
பதம் 4.5.1
மைத்ரேய உவாச
பவோ பவான்யா நிதனம் ப்ரஜாபதேர்
அஸத்-க்ருதாய அவகம்ய நாரதாத்
ஸ்வ-பார்ஷத-ஸைன்யம் ச தத்-அத்வரர்புபிர்
வித்ராவிதம் க்ரோதம் அபாரம் ஆததே
மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; பவ:—சிவபெருமான்; பாவன்யா:—சதீயின்; நிதனம்—மரணம்; ப்ரஜாபதே:—தட்சனின்; அஸத்-க்ரதாயா:—அவமதிக்கப்பட்டதினால்; அவகம்ய—கேள்விப்பட்டு; நாரதாத்—நாரதரிடமிருந்து; ஸ்வ-பார்ஷத-ஸைன்யம்—தனது காவலர்கள்; ச—மேலும்; தத்-அத்வர—(தட்சனின்) அவரது வேள்வியில் (இருந்து தோன்றினார்); ரிபுபி—ரிபுக்களினால்; வித்ரா விதம்—துரத்தப்பட்டு; க்ரோதம்—ஆத்திரம்; அபாரம்—அளவுகடந்த; ஆததே—தோன்றியது.
மைத்ரேயர் கூறினார்: சிவபெருமான் தன் மனைவி சதீ அவளது தந்தை தட்சன் செய்த அவமதிப்பினால் மாண்டதையும், அவளது காவலர்கள் அனைவரும் ரிபுக்கள் என்னும் தேவர்களினால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர் என்பதையும் நாரதர் வழிக் கேள்வியுற்று மிகுந்த ஆத்திரத்திற்குள்ளானார்.
பதம் 4.5.2
க்ருத்த: ஸுதஷ்டௌஷ்ட:புட: ஸதூர்-ஜடிர்
ஜடாம் தடித்-வஹ்னி-ஸடோக்ர-ரோசிஷம்
உத்க்ருத்ய ருத்ர: ஸஹஸோத்திதோ ஹஸன்
கம்பீர-நாதோ விஸஸர்ஜ தாம் புவி
க்ருத்த:—மிகுந்த ஆத்திரம்; ஸு-தஷ்ட-ஒஷ்ட-புட:—தனது உதட்டினைப் பற்களால் கடித்து; ஸ:—அவர் (சிவபெருமான்); தூ:-ஜடி:—தனது தலையிலுள்ள ஒருகொத்து முடியினை; ஜடாம்—ஒரு முடி; தடித்—மின்சாரத்தின்; வஹ்னி—நெருப்பின்; ஸடா—தீப்பிழம்பு; உக்ர—பயங்கரமான; ரோசிஷம்—ஒளியுடைய; உத்க்ருத்ய—பிடுங்கி; ருத்ர:—சிவபெருமான்; ஸஹஸா—உடனே; உத்தித:—எழுந்து; ஹஸன்—சிரித்தார்; கம்பீர—கம்பீரமாக; நாட:—ஒலி; விஸஸர்ஜ—எறிந்தார்; தாம்—அது (தலைமுடி); புவி—நிலத்தில்.
சிவபெருமான் தனது ஆத்திரத்தின் விளைவாகத் தனது உதடுகளைப் பற்களினால் கடித்தபடி தனது தலையிலுள்ள முடிகளில் இருந்து ஒரு முடியினைப் பிடுங்கி எடுத்தார். அது மின் சக்தி அல்லது நெருப்பினைப் போல் ஒளிர்ந்தது. அவர் எழுந்து நின்று ஒரு பித்தனைப் போல் சிரித்தபடியே அம்முடியினை நிலத்தில் வீசி எறிந்தார்.
பதம் 4.5.3
ததோ திகாயஸ் தனுவா ஸ்ப்ருஷன் திவம்
ஸஹஸ்ர-பாஹுர் கன-ருக் த்ரி ஸுர்ய த்ருக்
கரால-தம்ஸ்ட்ரோ ஜ்வலத்-அக்னி-மூர்தஜ:
கபால-மாலீ விவிதோத்யதாயுத:
தத்:—அந்த நேரத்தில்; அதிகாய:—மிகவுயர்ந்தவர் (வீரபத்திரன்); தனுவா—தனது உடலுடன்; ஸ்ப்ருஷன்—தொடுதல்; திவம்—வானை; ஸஹஸ்ர—ஓராயிரம்; பாஹு:—கரங்கள்; கன-ருக்—கருமை நிறத்தில்; த்ரி-ஸுர்ய-த்ருக்—மூன்று சூரியனின் ஒளியுடன்; கரால தம்ஷ்ட்ர:—மிகப் பயங்கரமானப் பற்களுடன்; ஜ்வலத்-அக்னி—எரிகின்ற தீப்பிழம்பாக; மூர்தஜ:—தலையிலுள்ள முடிகள் யாவும்; கபால-மாலீ—மனிதர்களின் மண்டைஓட்டு மாலை அணிந்து; விவித—பல்வேறு வகையான; உத்யத—ஏந்திய; ஆயுத:—ஆயுதங்களுடன்.
மிகப் பயங்கரமானத் தோற்றமுடைய ஓர் அசுரன் வானைத் தொடும் உயரத்தில், மூன்று சூரியன்களின் ஒளி நிறைந்தவனாகத் தோன்றினான். அவனது பற்கள் வாளைப் போல் அச்சந்தரும் வகையில் கூர்மையாகவும், அவன் தலையில் இருந்த முடிகள் எரிகின்ற நெருப்பாகவும் ஒளிவீசின. அவன் ஆயிரம் கரங்களில் ஆயுதம் ஏந்தியவனாக நின்றான். மனிதர்களின் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருந்தான்.
பதம் 4.5.4
தம் கிம் கரோமீதி க்ருணந்தம் ஆஹ
பத்தாஞ்ஜலிம் பகவான் பூத-நாத:
தக்ஷம் ஸ-யஜ்ஞம் ஜஹி மத்-படானாம்
த்வம் அக்ரணீருத்ர படாம்ஸகோ மே
தம்—அவருக்கு; (வீரபத்ரனுக்கு); கிம்—என்ன; கரோமி—செய்ய வேண்டும்; இதி—இவ்வாறு; க்ருணந்தம்—கேட்டு; ஆஹ—கட்டளை; பத்த-அஞ்ஜலின்—கூப்பிய கரங்களுடன்; பகவான்—எல்லா வளங்களும் நிரம்பப் பெற்றவர் (சிவபெருமான்); பூத-நாத:—பூத நாதர் பூத கணங்களின் தலைவர்; தக்ஷம்—தக்ஷன்; ஸ-யஞ்சம்—அவரது வேள்வியினுடன்; ஜஹி—கொல்; மத்-படானாம்—எனது எல்லாத் துணைவர்களின்; த்வம்—நீயே; அக்ரணீ:—தளபதியாவாய்; ருத்ர—ஓ, ருத்திரனே; பட—யுத்தத்தில் சிறந்தவரே; அம்ஸக:—எனது உடலில் இருந்து பிறந்தவன்; மே—என்னுடைய.
அப்பயங்கரமான அசுரன் கூப்பிய கரங்களுடன் கேட்டான், “நான் என்ன செய்ய வேண்டும் பகவானே” என்று. பூத நாதர் என்றறியப்படும் சிவபெருமான் நேரடியாகக் கட்டளையிட்டார், “எனது உடலில் இருந்து தோன்றியதினால் நீயே எனது துணைவர்கள் அனைவருக்கும் தலைவனாகிறாய். ஆகையினால் தட்சனையும் வேள்விச் சாலையில் உள்ள அவரது படைவீரர்களையும் கொல்வாயாக”.
பதம் 4.5.5
அஜ்ஞாப்த ஏவம் குப்தேன மன்யுனா
ஸ தேவ – தேவம் பரிசக்ரமே விபும்
மேனே ததாத்மானம் அஸங்க-ரம்ஹஸா
மஹீயஸாம் தாத ஸஹ: ஸஹிஷ்ணும்
அஜ்ஞாப்த:—கட்டளையிடப்பட்டு; ஏவம்—இந்நிலையில்; குபிதேன—கோபம்; மன்யுனா—சிவபெருமானால் (அவர் கோபத்தின் உருவமானவர்); ஸ:—அவன் (வீரபத்திரன்); தேவ-தேவம்—தேவர்களினால் வணங்கப்படுபவர்; பரிசக்ரமே—சுற்றி வந்து; விபும்—சிவபெருமான்; மேனே—கருதப்பட்டு; ததா—அந்த நேரம்; ஆத்மானம்—அவரது; அஸங்க-ரம்ஹஸா—யாராலும் எதிர்க்க முடியாத சிவபெருமானின் சக்தியுடன்; மஹீயஸாம்—மிகச் சக்தி வாய்ந்த; தாத—எனதன்பான விதுரனே; ஸஹ:—வலிமை; ஸஹிஷ்ணும்—எதிர்க்கின்ற திறனுடன்.
மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: எனதன்பிற்குரிய விதுரனே, அக்கருமை நிற அசுரன் உண்மையில் முழுமுதற் கடவுளின் ஆத்திரமே உருவாக இருந்தான். சிவபெருமானின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அக்கணமே தயாராக நின்றான். எந்த எதிர் சக்திகளையும் சமாளிக்கும் திறம் பெற்றவனான அவன் சிவபெருமானைச் சுற்றி வந்தான்.
பதம் 4.5.6
அன்வீயமான: ஸ து ருத்ர-பார்ஷதைர்
ப்ருஸம் நதத்பிர் வ்யனதத் ஸுபைரவம்
உத்யம்ய ஸுலம் ஜகத்-அந்தகாந்தகம்
ஸம்ப்ராத்ரவத் கோஷண-பூஷணாங்க்ரி:
அன்வீயமான:—பின்தொடரப்பட்டு; ஸ:—அவன் (வீரபத்திரன்); து—ஆனால்; ருத்ர-பார்ஷதை:—சிவபெருமானின் படைவீரர்களினால்; ப்ருஸம்—ஆரவாரத்துடன்; நதத்பி:—ஒலித்துக் கொண்டு; வ்ய்னதத்—சத்தமிட்டுக் கொண்டு; ஸு-பைரவம்—மிகவும் பயங்கரமாக; உத்யம்ய—சுமந்து கொண்டு; ஸுலம்—திரிசூலம்; ஜகத்-அந்தக—மரணம்; அந்தகம்—கொல்வதற்கு; ஸம்ப்ராத்ரவத்—மிகவும் வேகமாக (தட்சனின் வேள்விச் சாலைக்கு); கோஷண—கோஷமிட்டபடி; பூஷண-அங்க்ரி:—காலில் அணிந்த தண்டைகளுடன்.
சிவபெருமானின் ஏனைய படைவீரர்களும் ஆரவாரமாகக் கூச்சலிட்டுக்கொண்டே இப்பயங்கரமான உருவத்தினைத் தொடர்ந்தனர். மரணத்திற்கும் சாவு அளிக்கத்தகும் பயங்கரமான திரிசூலத்தினை அவ்வசுரன் ஏந்தியிருந்தான். அவன் காலில் அணிந்திருந்த தண்டைகளோ இடிபோல் ஒலித்தன.
பதம் 4.5.7
அதர்த்விஜோ யஜமான: ஸதஸ்யா:
ககுபி உதீச்யாம் ப்ரஸமீஷ்ய ரேணும்
தம: கிம் ஏதத் குத ஏதத் ரஜோ ‘பூத்
இதி த்விஜா த்விஜ-பத்னியஸ் ச தத்யு:
அதா—அந்த நேரம்; ருத்விஜ:—புரோகிதர்கள்; யஜமான:—வேள்வித் தலைவன் (தக்ஷன்); ஸதன்ய:—வேள்விச் சாலையில் உள்ள அனைவரும்; ககுபி உதீச்யாம்—வடக்குத் திசையில்; ப்ரஸமீக்ஷ்ய—பார்த்து; ரேணும்—புழுதிப்புயல்; தம:—இருண்டு; கிம்—என்ன; ஏதத்—இந்த; குத:—எங்கிருந்து; ரஜ:—புழுதி; அபூத்—வருகிறது; கிரி—இவ்வாறு; த்விஜா:—அந்தணர்கள்; த்விஜ-பத்னிய:—அந்தணர்களின் மனைவியர்; ச—மேலும் தத்யு:—யோசிக்க ஆரம்பித்தனர்.
அப்போது அவ்வேள்விச் சாலையில் இருந்தப் புரோகிதர்கள், வேள்வித் தலைவன், அந்தணர்கள் மற்றும் அவர்களது மனைவியர் திடீரென்று இந்த இருள் எங்கிருந்து சூழ்ந்தது என்று ஆச்சரியமுற்றனர். பிறகு அது புழுதிப்புயல் என அறித்து எல்லோரும் கவலையில் ஆழ்ந்தனர்.
பதம் 4.5.8
வாதா ந வாந்தி ந ஹி ஸந்தி தஸ்யவ:
ப்ராசீன-பர்ஹிர் ஜீவதி ஹோக்ர-தண்ட:
காவோ ந கால்யந்த இதம் குதோ ரஜோ
லோகோ ‘துனா கிம் ப்ரளயாய கல்பதே
வாதா:—காற்று; நவாந்தி—வீசவில்லை; ந—இல்லை; ஹி—ஏனென்றால்; ஸந்தி—நடக்கக் கூடியது; தஸ்யவ:—கொள்ளையர்; ப்ராசீன-பர்ஹி—முதிர்ந்த மன்னர் பர்ஹி; ஜீவதி—உயிரோடிருக்கையில்; ஹ—இருந்தும்; உக்ர-தண்ட:—அவர் கடுமையாகத் தண்டிப்பவர்; காவ:—பசுக்கள்; ந கால்யந்தே—கவரப்படவில்லை; இதம்—இது: குத:—எங்கிருந்து; ரஜ:—புழுதி; லோக:—உலகில்; அதுனா—இப்பொழுது; கிம்—என்ன இது; ப்ரளயாய—பிரளயத்திற்கான; கல்பதே—ஏற்பாடாகக் கருதப்படும்.
அப்புயலின் காரணத்தை யூகித்தவராகச் சிலர் கூறினர். “காற்றும் அடிக்கவில்லை, பசுக்களும் கூட்டங்கூட்டமாக ஓடவில்லை. கொள்ளையர்களாலும் இப்புழுதி கிளம்ப முடியாது. ஏனெனில் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் பர்ஹி மன்னர் இன்னும் உயிரோடிருக்கிறார். அப்படியிருக்க எங்கிருந்து இப்புழுதிப்புயல் வருகிறது? உலக அழிவு என்பது இப்போது ஏற்படப் போகிறதா?”.
பதம் 4.5.9
ப்ரஸுதி-மிஸ்ரா: ஸ்த்ரிய உத்விக்ன-சித்தா
ஊசுத விபாகோ வ்ருஜினஸ்யைவ தஸ்ய
யத் பஸ்யந்தீனாம் துஹித்ரீணம் ப்ரஜேஸ:
ஸுதாம் ஸதீம் அவதத்யாவ் அநாகாம்.
ப்ரஸுதி—மிஸ்ரா:—பிரசூதியின் தலைமையில்; ஸத்ரிய:—பெண்கள்; உத்விக்ன-சித்தா:—பேரார்வம் கொண்டு; ஊசு:—கூறினர்; விபாக:—விளைந்த ஆபத்து; விஜினஸ்ய—பாவச்செயலின்; ஏவ—உண்மையில்; தஸ்ய—அவரது (தக்ஷன்); யத்—ஏனென்றால்; பஷ்யந்தீனாம்—அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது; துஹித்ரீணாம்—அவளது சகோதரிகள்; ப்ரஜேஷ:—உயிர்களின் தலைவன் (தட்சன்); ஸுதாம்—அவரது மகள்; ஸதீம்—சதீ; அவதத்யென—அவமரியாதை; அநாகாம்—ஒன்றும் அறியாதவள்.
பிரசூதி என்பவள் தட்சனின் மனைவியாவாள். அவள் தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்த பெண்களிடம் கூறினாள் “இந்தப் பேரழிவு தட்சனாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் ஒன்றும் அறியாத அப்பாவியான சதீ தன் சகோதரிகள் முன்னிலையில் உயிர்துறப்பதற்கு அவர்தான் காரணம்”.
பதம் 4.5.10
யஸ் த்வ அந்த-காலே வ்யுப்த-ஜடா-கலாப:
ஸ்வ்-ஸுல-ஸுசி-அர்பித-திக்-கஜேந்த்ர:
விதத்ய ந்ருத்யதி உதிதாஸ்த்ர-தோர்-த்வஜான்
உச்சாட்ட-ஹாஸ-ஸ்தனயித்னு-பின்ன-திக்
ய:—யார் (சிவபெருமான்); து—ஆனால்; அந்த-காலே—ஊழிக்காலத்தில்; வ்யுப்த—சிதறடித்தல்; ஜடா-கலாப:—அவரது ஜடாமுடி; ஸ்வ-ஸுல—அவரது திரிசூலம்; ஸுசி—முனையினால்; அர்பித—கிழித்தல்; திக்-கஜேந்த்ர:— திக்கெட்டும் நிறைந்தள்ள பல்வேறு மன்னர்கள்; விதத்ய—சிதறடிக்கப்படுவர்; ந்ருத்யதி—ஊழிக்கூத்து; உதித—ஆடுவார்; அஸ்த்ர—ஆயுதங்கள்; தோ:—கரங்கள்; த்வஜான்—கொடிகள்; உச்ச—ஓசை; அட்ட-ஹாஸ—சிரிப்பு; ஸ்தன-யித்னு—இடி ஒலியினால்; பின்ன—பிளவுறும்; திக்—திசைகள்.
யுக அழிவுக் காலத்தில் சிவபெருமானின் சடை முடி அவிழ்ந்து பரந்திருக்கும். அவர் தனது கூர்மையான திரிசூலத்தினால் எண்திசைகளையும் ஆண்டு கொண்டிருக்கும் மன்னர்கள் அனைவரையும் குத்திக் கொல்வார். இடி எவ்வாறு மேகங்களை உலகமெங்கும் சிதறடிக்கிறதோ அது போல் அவர்கள் கைகளை கொடிகளைப் போல் தமது கைகளால் சிதறடித்துப் பயங்கரமான சிரிப்புடன் ஊழித் தாண்டவம் ஆடுவார்.
பதம் 4.5.11
அமர்ஷயித்வா தம் அஸஹ்ய-தேஜஸம்
மன்யு-ப்லுதம் துர்நிரீக்ஷ்யம் ப்ரு-குத்யா
கரால-தம்ஷ்ட்ராபிர் உதஸ்த-பாகணம்
ஸ்யாத் ஸ்வஸ்தி கிம் கோபயதோ விதாது:
அமர்ஷயித்வா—ஆத்திரமுண்டாகுமாறு செய்தபிறகு; தம்—அவரது (சிவபெருமான்); அஸஹ்ய-தேஜஸம்—கண்ணைப் பறிக்கும் ஒளி; மன்யு-ப்லுதம்—ஆத்திரத்தினால் நிரப்பப்பட்டு; துர்நிரீக்ஷ்யம்—பார்க்க முடியாதவாறு; ப்ரு-குத்யா—அவனது புருவ அசைவினால்; கரால-தம்ஷ்ட்ராபி:—அவனது கோரமானப் பற்களினால்; உதஸ்த-பாகணம்—விண்மீன்களை சிதறடிப்பதாயிருந்தன; ஸ்யாத்—அங்கிருத்தல் வேண்டும்; ஸ்வஸ்தி—நல்லதிர்ஷ்டம்; கிம்—எவ்வாறு; கோபயத:—ஆத்திரமுண்டாகுமாறு (சிவபெருமானுக்கு); விதாது:—பிரம்மதேவன்.
அக்கருமையான அசுரனின் கோரமானப் பற்கள் வெளியே நீண்டு கொண்டிருந்தன. இரு புருவங்களின் அசைவினாலேயே அவன் விண்ணில் சுழலும் உடுக் கூட்டங்களைச் சிதறடித்ததோடு தனது ஒளியினால் அவற்றை மறைத்தான். தக்கனின் தவறான நடத்தையின் காரணமாக அவனது தந்தையான பிரம்மதேவனால் கூட அச்சினத்தின் அதீத வெளிப்பாடுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
பதம் 4.5.12
பஹ்வ ஏவம் உத்விக்ன-த்ருஸோச்யமானே
ஜனேன தக்ஷஸ்ய முஹுர் மஹாத்மன:
உத்பேதுர் உத்பாததமா: ஸஹஸ்ரஸோ
பயாவஹா திவி பூமௌ ச பர்யக்
பஹு—மிகுந்த; ஏவம்—இந்த நிலையில்; உத்விக்ன-த்ரஷா—படபடப்பான பார்வைகளுடன்; உச்யமானே—இவ்வாறு கூறப்படும் பொழுது; ஜனேன—குழுமியிருந்த மக்கள் (வேள்விச் சாலையில்); தக்ஷஸ்ய—தக்ஷனின்; முஹு:—மீண்டும் மீண்டும்; மஹா-ஆத்மன:—உறுதியான உள்ளம்; உத்பேது:—தோன்றியது; உத்பாத-தமா:—சக்திமிக்க அறிகுறிகள்; ஸஹஸ்ரஷ:—ஆயிரக்கணக்கில்; பய-ஆவஹா:—அச்சத்தை ஏற்படுத்தியது; திவி—வானத்தில்; பூமெள—பூமியில்; ச—மேலும்; பர்யக்—எல்லாத் திசைகளிலும்.
வேள்விச் சாலையில் குழுமியிருந்தோர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, வானம், பூமி மற்றும் அனைத்துத் திசைகளிலும் தீக்குறிகள் தோன்றுவதை தட்சன் கண்டார்.
பதம் 4.5.13
தாவத் ஸ ருத்ரானுசரைர் மஹா-மகோ
நானாயுதைர் வாமனகைர் உதாயுதை:
பிங்கை: பிஸங்கைர் மகரோதரானனை:
பர்யாத் ரவத்பிர் விதுரான் வருத்யத
தாவத்—மிகுந்த வேகத்தில்; ஸ:—அந்த; ருத்ர-அனுசரை:—சிவபெருமானின் வீரர்கள்; மஹ-மக:—அப்பெரிய வேள்விச் சாலையில்; நானா—பல்வேறு வகையான; ஆயுதை:—ஆயுதங்களுடன்; வாமனகை:—குள்ள உருவினர்; உதாயுதை:—ஏந்திக் கொண்டு; பிங்கை:—கருமை நிறத்தில்; பிஸங்கை:—மஞ்சள் வண்ண; மகர-உதர-ஆனனை:—சுறா மீன்களைப் போன்ற வயிறும், முகமும் கொண்டு; பர்யாத்ரவத்பி—நாற்புறமும் ஓடிவந்து; விதுர—ஓ, விதுரனே; அன்வருத்யத—சூழப்பட்டனர்.
எனதன்பிற்குரிய விதுரனே, சிவபெருமானின் அனைத்து வீரர்களும் வேள்விச் சாலையினைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் குள்ளமானவர்களாகவும், கைகளில் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் இருந்தனர். கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ணம் கொண்ட சுறா மீன்களைப் போன்று அவர்கள் உடல்கள் காட்சியளித்தன. அவர்கள் வேள்விச் சாலையில் அங்கும் இங்கும் ஓடி இடைஞ்சல் செய்தனர்.
பதம் 4.5.14
கேசித் பபாஞ்ஜு: ப்ராக்-வம்ஸம் பத்னீ-ஸாலாம் ததாபரே
ஸத ஆக்னீத்ர-ஸாலாம் ச தத்-விஹாரம் மஸாநஸம்
கேசித்—சிலர்; பபாஞ்ஜு:—கீழே சாய்த்தனர்; ப்ராக்-வம்ஸம்—வேள்விச் சாலையின் பந்தல் கால்களை; பத்னீ-ஸாவாம்—பெண்கள் பகுதியில்; ததா—கூட; அபரே—மற்றவர்கள்; ஸத:—வேள்விச் சாலை; ஆக்னீத்ர-ஸாலாம்—புரோகிதர்களின் இருப்பிடம்; ச—மேலும்; தத்-விஹாரம்—வேள்வித் தலைவனின் இல்லம்; மஹா-அநஸம்—சமையல் செய்யும் இடம்.
சில வீரர்கள் வேள்விச் சாலையில் போடப்பட்டிருந்த பந்தலின் கால்களை வெட்டிச் சாய்த்தனர். பெண்களின் பகுதியில் நுழைந்து சிலர் கலகம் செய்தனர். சிலர் வேள்விக் குண்டத்தினை அழித்தனர். சிலர் சமையல் செய்யும் இடங்களையும், சிலர் அவர்களின் இல்லங்களையும் தாக்கினர்.
பதம் 4.5.15
ருஜுர் யஜ்ஞா-பாத்ராணி ததைகே ‘க்னிம் அநாஸயன்
குண்டேஷ்வ அமூத்ரயன் கேசித் பிபிதுர் வேதி-மேகலா:
குருஜு:—உடைத்தனர்; யஜ்ஞா-பர்ரானி—வேள்விகளுக்குப் பயன்படும் கலசங்கள்; ததா—ஆகையினால்; ஏகே—சிலர்; அக்னீன்—வேள்வித்தீ; அநாஸயஸ்—அணைத்தனர்; குணைடேஷு—யாககுண்டம்; அமூத்ரயன்—சிறுநீர் கழித்தனர்; கேசித்—சிலர்; பிபிது:—கிழித்தனர்; வேதி-மேகலா:—வேள்விச் சாலையினைச் சுற்றியுள்ள கோடு.
அவர்கள் வேள்விக்குப் பயன்படுத்தப்படும் கலசங்களை உடைத்தனர், சிலர் யாக குண்டத்தினை அழித்தனர். வேள்விச் சாலையினைச் சுற்றியிருந்த எல்லைக் கோட்டினைச் சிலர் அழித்தனர். மேலுஞ் சிலர் யாககுண்டத்தினுள் சிறுநீர் கழித்தனர்.
பதம் 4.5.16
அபாதந்த முனீன் அன்யே ஏகே பத்னீர் அதர்ஜயன்
அபரே ஜக்ருஹுர் தேவான் ப்ரத்யாஸன்னான் பலாயிதான்
அபாதந்த—வழியை மறித்தனர்; முனீன்—முனிவர்கள்; அன்யே—அடுத்தவர்கள்; ஏகே—சிலர்; பத்னீ:—பெண்கள்; அதர்ஜயன்—அச்சுறுத்தினர்; அபரே—பிறர்; ஜக்ரு:—கைது செய்தனர்; தேவான்—தேவர்கள்; ப்ரத்யாஸன்னான்—தப்பி ஓடியவர்கள்.
தப்பி ஓட முயன்ற முனிவர்களின் வழியினைச் சிலர் மறித்தனர். சிலர் அங்கே குழுமியிருந்த பெண்களைப் பயமுறுத்தினர், சிலர் பந்தலை விட்டு வெளியே ஓடிய தேவர்களைக் கைது செய்தனர்.
பதம் 4.5.17
ப்ருகும் பபந்த மணிமான் வீரபத்ர: ப்ரஜாபதிம்
சண்டேஸ: பூஷணம் தேவம் பகம் நந்தீஸ்வரோ ‘க்ரஹீத்
ப்ருகும்—பிருகு முனிவர்; பபந்த—கைது செய்தனர்; மணிமான்—மணிமான்; வீரபத்ர:—வீரபத்திரன்; ப்ரஜாபதிம்—பிரஜாபதி தக்ஷன்: சண்டேஸ—சண்டேசர்; பூஷணம்—பூஷான்; தேவம்—தேவர்கள்; பகம்—பகன்; நந்தீஸ்வர:—நந்தீஸ்வரர்; அக்ரஹீத்—கைது செய்தனர்.
சிவபெருமானின் படைவீரர்களில் ஒருவரான மணிமான் என்பவர் பிருகு முனிவரைக் கைது செய்தார். கறுப்பு அசுரனான வீரபத்திரன் பிரஜாபதி தட்சனைக் கைது செய்தான்; பூஷனை மற்றொரு வீரரான சண்டேசர் கைது செய்தார், நந்தியம் பெருமான் பகன் என்னும் தேவனைக் கைது செய்தார்.
பதம் 4.5.18
ஸர்வ ஏவர்த்திவிஜோ த்ருஷ்ட்வா ஸதஸ்யா: ஸ விதிவௌகஸ:
தைர் அர்த்யமானா: ஸுப்ருஸம் க்ராவபிர் நைகதா ‘த்ரவன்
ஸர்வே—எல்லோரும்; ஏவ—உறுதியாக; த்ருவிஜ:—புரோகிதர்கள்; த்ருஷ்ட்வா—பார்த்தபின்னர்; ஸதஸ்யா:—வேள்விச் சாலையில் இருந்தவர்கள்; ஸ-திவௌகஸ:—தேவர்களுடன் சேர்ந்து; தை:—அவைகளினால் (கற்கள்); அர்த்யமானா:—துன்புறுத்தப்பட்டு; ஸு-ப்ருஸம்—மிகச்சிறந்த; க்ராவபி—கற்களினால்; ந ஏகதா—பல்வேறு திக்குகளில்; அத்ரவன்—தப்பியோடத் தலைப்பட்டனர்.
வேள்விச் சாலையினுள் கல்மழை தொடர்ந்து பெய்தது. அதனால் அங்கு குழுமி இருந்தவர்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளானார்கள். உயிருக்குப் பயந்து அவர்கள் பல்வேறு திக்குகளில் சிதறி ஓடினார்கள்.
பதம் 4.5.19
ஜுஹ்வத: ஸ்ருவ-ஹஸ்தஸ்ய ஸ்மஸ்ரூணி பகவான் பவ:
ப்ருகோர் லுலுஞ்சே ஸதஸியோ ‘ ஹஸச் ச்மஸ்ரு தர்ஸயன்
ஜுஹ்வத:—வேள்வியில் அர்ப்பணிக்கப்படும் பொருள்கள்; ஸ்ருவ-ஹஸ்தஸ்ய—கையில் வைத்திருக்கும் வேள்விக்குரிய கரண்டி; ஸ்மஸ்ரூணி—மீசை; பகவான்—வளம் மிக்கவர்; பவ:—வீரபத்திரன்; ப்ருகோ:—பிருகு முனிவர்; லுலுஞ்சே—பிய்த்தெடுத்து; ஸதஸி—சபையின் நடுவில்; ய:—யார் (பிருகு முனிவர்); அஹஸத்—சிரித்துக் கொண்டே; ஸ்மஸ்—அவரது மீசையினை; தர்ஸயன்—காட்டியது.
வேள்வித்தீயில் வேள்விப் பொருட்களைத் தன்னுடைய கைகளினால் அர்ப்பணித்துக் கொண்டிருந்த பிருகு முனிவரின் மீசையினைப் பிய்த்தெடுத்தான் வீரபத்திரன்.
பதம் 4.5.20
பகஸ்ய நேத்ரே பகவான் பாதிதஸ்ய ருஷா புவி
உஜ்ஜஹார ஸத- ஸ்தோ ‘க்ஷிணா ய: ஸபந்தம் அஸுஸுசத்
பகஸ்ய—பகனின்; நேத்ரே—இரு விழிகளையும்; பகவான்—வீரபத்திரன்; பாதிதஸ்ய—பிடித்துத் தள்ளுதல்; ருஷா—மிகுந்த ஆத்திரத்துடன்; புவி—நிலத்தின் மீது; உஜ்ஜஹாரா—பிடுங்கி எடுத்தல்; ஸத-ஸ்த:—விஸ்வருக்களின் கூட்டத்தில் இருந்த; அக்ஷ்ணா—அவனது புருவங்களின் அசைவினால்; ய:—யார்; (பகன்); ஸபந்தம்—(சிவபெருமானை) சபித்த (தக்ஷன்); அஸுசத்—ஊக்கப்படுத்தல்.
பிருகு முனிவர் இதனால் சிவபெருமானை சபித்துக் கொண்டிருந்தபொழுது தனது இரு புருவங்களையும் ஆத்திரத்தினால் நெறித்துப் பார்த்தப் பகனை வீரபத்திரன் எட்டிப் பிடித்து நிலத்தில் தள்ளி மிகுந்த ஆவேசத்துடன் அவனது இரு கண்களையும் பிடுங்கி வெளியே எடுத்தான்.
பதம் 4.5.21
பூஷ்ணோ ஹி அபாதயத் தந்தான் காலிங்கஸ்ய யதா பல: ஸப்யமானே கரிமணி யோ ஹஸத் தர்ஸயன் தத:
பூஷண:—பூஷானின்; ஹி—இருந்து; அபாதயத்—பிடுங்குதல்; தந்தான்—பற்களை; காலிங்கஸ்ய—கலிங்க மன்னரின்; யதா—இருந்தபடி; பல:—பல தேவர்; ஸப்யமானே—சபித்தபொழுது; கரிமணி—சிவபெருமான்; ய:—யார் (பூஷான்); அஹஸத்—புன்னகைத்தான்; தர்ஸயன்—காட்டினான்; தத:—அவனது பற்களை.
எவ்வாறு அநிருத்தனின் திருமண வைபவத்தின்போது நடைபெற்ற சூதுப் போட்டியின் பொழுது கலிங்க மன்னன் தந்தவக்கிரனின் பற்களை பலதேவர் பிடுங்கினாரோ அதுபோன்று சிவபெருமானைச் சபித்த பொழுது தட்சன் காட்டிய பற்களையும், அதைப் பார்த்து புன்னகைத்தபொழுது பூஷான் காட்டிய பற்களையும் வீரபத்திரன் பிடுங்கி எறிந்தான்.
பதம் 4.5.22
ஆக்ரம்யோரஸி தக்ஷஸ்ய ஸித-தாரேண ஹேதினா
சிந்தன்ன அபி தத் உத்தர்தும் நாஸக்னோத் த்ரயம்பகஸ் ததா
ஆக்ரம்ய—நிலத்தில் அமர்ந்து; உரஸி—மார்பினில்; தக்ஷஸ்ய—தக்ஷனின்; ஸித-தாரேண—கொடுவாளினை எடுத்து; ஹேதினா—ஆயுதத்துடன்; சிந்தன்—துண்டித்தான்; அபி—இருந்தாலும்; தத்—அந்த (தனவ); உத்தர்தும்—தனியே பிரிப்பதற்கு; ந அஸக்னோத்—இயலவில்லை; த்ரி-அம்பக:—வீரபத்திரன் (மூன்று கண்களை உடையவன்); ததா—இதன் பின்னர்.
இதன் பின்னர் வீரபத்திரன் தட்சனின் மார்பின் மீது அமர்ந்து கொண்டு கொடுவாளினால் அவரது தலையினைத் துண்டிக்க முயன்றான். ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.
பதம் 4.5.23
ஸஸ்த்ரைர் அஸ்த்ரான்விதைர் ஏவம் அநிர்பின்ன-த்வசம் ஹர:
விஸ்மயம் பரம் ஆபன்னோ தத்யௌ பஸுபதிஸ் சிரம்
ஸஸ்த்ரைர்:—ஆயுதங்களுடன்; அஸ்த்ரா-அன்விதை—மந்திரங்களுடன்; ஏவம்—இவ்வாறு; அநிர்பின்ன—துண்டிக்க முடியாது; த்வசம்—தோல்; ஹர:—வீரபத்திரன்; விஸ்மயம்—குழப்பமுற்று; பரம்—சிறந்த; ஆபன்ன:—அதிர்ச்சியடைந்து; தத்யௌ—நினைவில்; பஸுபதி:—வீரபத்திரன்; சிரம்—வெகுநேரம்.
அவன் மந்திரங்களை ஜெபித்து கொடிய ஆயுதங்களினால் தட்சனின் தலையினைத் துண்டிக்க முயன்றும், அவைகளால் தோலின் மேற்பகுதியினைக் கூட வெட்டமுடியவில்லை. இதைக் கண்டு வீரபத்திரன் மிகுந்த குழப்பமடைந்தான்.
பதம் 4.5.24
த்ருஷ்ட்வா ஸம்ஜ்ஞாப்பனம் யோகம் பஸுனாம் ஸ பதிர் மகே
யஜமான-பஸோ: கஸ்ய காயத் தேனாஹரச் சிர:
த்ருஷ்ட்வா—கண்ணில் தென்பட்ட; ஸம்ஜ்ஞாபனம்—வேள்வியில் விலங்குகளைப் பலியிடுவதற்காக வைத்திருக்கும்; யோகம்—ஆயுதம்; பஸுனாம்—விலங்குகளின்; ஸ:—அவன் (வீரபத்திரன்); பதி:—தலைவன்; மகே—வேள்வியில்; யஜமான-பஸோ:—விலங்கின் வடிவில் இருந்த வேள்வியின் தலைவன்; கஸ்ய—தக்ஷனின்; காயாத்—உடலிலிருந்து; தேன—அதனால் (ஆயுதம்); அஹரத்—துண்டித்தல்; ஸிர:—தலையினை.
அதன் பிறகு வீரபத்திரன் அங்கே வேள்வியில் விலங்குகளைப் பலியிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த மரத்தினாலான ஆயுதத்தினைக் கண்டான். அதன் மூலம் அவன் தட்சனின் தலையினைத் துண்டிக்கும் வாய்ப்பினைப் பெற்றான்.
பதம் 4.5.25
ஸாது-வாதஸ் ததா தேஷாம் கர்ம தத் தஸ்ய பஸ்யதாம்
பூத-ப்ரேத-பிஸாசானாம் அன்யேஷாம் தத்-விபர்யய:
ஸாது-வாத—ஆச்சரிய சந்தோஷம்; ததா—அந்நேரம்; தேஷாம்—அவர்களிடையே (சிவபெருமானின் வீரர்கள்); கர்ம—செயல்; தத்—அந்த; தஸ்ய—அவனது (வீரபத்திரன்); பஸ்யதாம்—கண்டு; பூத-ப்ரேத-பிஸாசானாம்—பூதங்களும், பேய்களும், பிசாசுகளும்; அன்யேஷாம்—மற்றவர்கள் (தக்ஷனைச் சேர்ந்தோர்); தத்-விபர்யய:—அதற்கு எதிர்மாறாக (துயருற்று அரற்றினவை).
வீரபத்திரனின் செயலைக் கண்டு சிவபெருமானின் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர். பூதங்களும், பேய்களும், பிசாசுகளும் ஆரவாரக் கூச்சலிட்டன. இதற்கு மாறாக தட்சனின் வேள்விக்குப் பொறுப்பேற்றிருந்த அந்தணர்கள் அனைவரும், அவர் மறைவு கண்டு துயர் கொண்டு கதறி அழுதனர்.
பதம் 4.5.26
ஜுஹாவைதச் சிரஸ் தஸ்மின் தக்ஷினாக்னௌ அமர்ஷித:
தத்-தேவ-யஜனம் தக்த்வா ப்ராதிஷ்டத் குஹ்யகாலயம்
ஜுஹாவ—வேள்விப் பொருளாக அர்ப்பணித்தல்; ஏதத்—அந்த; ஸிர:—தலை; தஸ்மின்—அதில்; தக்ஷிண-அக்ளென—வேள்வித் தீயின் தென் பகுதியில்; அமர்ஷித:—மிகுந்த ஆத்திரமுற்றிருந்த வீரபத்திரன்; தத்—தக்ஷனின்; தேவ-யஜனம்—தேவர்களுக்காகச் செய்யப்படும் வேள்வியின் ஏற்பாடுகள்; தக்த்வா—தீயிட்டுக் கொளுத்தினர்; ப்ரதிஷ்டத்—கிளம்பினர்; குஹ்யக-ஆலயம்—குஹ்யகர்களின் இருப்பிடம் (கைலாசம்).
மிகுந்த ஆத்திரத்துடன் வீரபத்திரன் தட்சனின் தலையினை எடுத்து வேள்வித் தீயின் தென்பகுதியில் எறிந்து அதனை ஒரு வேள்விப் பொருளாக அர்ப்பணித்தான். இவ்வாறு சிவபெருமானின் வீரர்கள் வேள்விக் களத்தினை அழித்தனர். வேள்விச்சாலை முழுவதும் தீப்பற்றி எரிவதைக் கண்டு திருப்தியுற்று அவர்கள் தங்கள் தலைவரின் இருப்பிடமான கயிலாயத்திற்குப் புறப்பட்டனர்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “தட்சனின் வேள்வி தடைப்படுதல்” எனும் தலைப்பைக் கொண்ட ஐந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.