அத்தியாயம் – 4
சதீ தன் உடலைத் துறத்தல்
பதம் 4.4.1
மைத்ரேய உவாச
ஏதாவத் உக்த்வா விராராம ஸங்கர:
பத்னி – அங்க-நாஸம் ஹி உபயத்ர சிந்தயன்
ஸுஹ்ருத்-தித்ருக்ஷு: பரிஸங்கிதா பவான்
நிஷ்க்ராமதீ நிர்விஸதீ த்விதாஸ ஸா
மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; ஏதாவித்—அளவுக்கதிகமான; உக்த்வா—கேட்டபிறகு; விரராம—அமைதியாக இருந்தார்; ஸங்கர:—சிவபெருமான்; பத்னீ-அங்க-நாஸம்—தனது மனைவியின் உடலின் அழிவு; ஹி—இருந்து; உபயத்ர—இரண்டு விஷயங்களிலும்; ஸுஹ்ருத்-தித்ருசு:—தன் உறவினரைக் காண்பதற்கு மிக்க ஆர்வம்; பரிஸங்கிதா—அஞ்சி; பவாத்—சிவபெருமானின்; நிஷ்க்ராமதீ—வெளியிலும்; நிர்விஸதீ—உள்ளும்: த்விதா—பிரிந்து; ஸா—அவள் (சதீ).
மைத்ரேய முனிவர் கூறினார்: சதீயிடம் பேசிய பிறகு சிவபெருமான் அவள் எம்முடிவும் எடுக்க வொண்ணாது திண்டாடுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்: தனது உறவினர்களைக் காணவேண்டும் என்னும் அளவுகடந்த ஆவல் ஒருபுறமும், சிவபெருமானின் எச்சரிக்கை மறுபுறமும் நெருக்க இவற்றிற்கிடையில் அமைதியற்ற மனத்தினளாய் ஒரு ஊஞ்சலைப் போல் அவ்வறையின் உள்ளும் வெளியும் அலைந்து கொண்டிருந்தாள்.
பதம் 4.4.2
ஸுஹ்ருத்-தித்ருக்ஷா-ப்ரதிகாத-துர்மனா:
ஸ்நேஹாத் ருததி அஸ்ரு-கலாதிவிஹ்வலா
பவம் பவானி அப்ரறி பூருஷம் ருஷா
ப்ரதக்ஷியதீவை க்ஷதா ஜாத-வேபது:
ஸுஹ்ருத்-தித்ரிக்ஷா—தனது உறவினர்களைக் காணும் விருப்பத்தில்; ப்ரதிகாத—தடை; துர்மனா:—வருந்தினாள்; ஸ்நேஹாத்—பாசத்திலிருந்து; ருததீ—அழுதாள்; அஸ்ரு-கலா—கண்ணீர்த்துளிகளால்; அதிவிஹ்வலா—மிகத்துன்புறுதல்; பவம்—சிவபெருமான்; பவானீ—சதீ; அப்ரதி-பூருஷம்—இணையானவரோ அல்லது எதிரானவரோ இல்லாதிருத்தல்; ருஷா—ஆத்திரத்துடன்; ப்ரதக்ஷதீ—வெடிப்பதற்கு; இவ—இருப்பதைப் போல; அய்க்ஷ்த—பார்த்தாள்; ஜாத-வேபது:—விம்மினாள்.
பாசத்தோடு தனது உறவினர்களைக் காணத் தனது தந்தையின் இல்லத்திற்குச் செல்லுவதற்குரிய விருப்பத்துக்கு எதிரான தடையினால் சதீயின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அழுகையும் விம்மலும் கொண்டு அவள் தன் கீர்த்தி பெற்றக் கணவனை நோக்கினாள். அப்பார்வை சிவபெருமானைத் தூள் தூளாக்கப்பட்ட தன்மை உடையதாயிருந்தது.
பதம் 4.4.3
ததோ விநி: ஸ்வஸ்ய ஸதீ விஹாய தம்
ஸோகேன ரோஷேண ச தூயதா ஹ்ருதா
பித்ரோர் அகாத் ஸ்த்ரைண-விமூட-தீர் க்ருஹான்
ப்ரேம்ணாத்மனோ யோ ‘ர்தம் அதாத்ஸதாம் ப்ரிய:
தத:—அதன்பின்னர்; விநி:-ஸ்வஸ்ய—நீண்ட பெருமூச்சுவிட்டு; ஸதீ—சதீ; விஹாய—அகன்றாள்; தம்—அவரை (சிவபெருமானை); ஸோகேன—சோகத்துடன்; ரோஷேண—உணர்ச்சியுடன்; ச—மேலும்; தூயதா—வருந்திய; ஹ்ருதா—மனத்தினளாய்; பித்ரோ:—தனது தந்தையின்; அகாத்—சென்றாள்; ஸ்த்ரைண—பெண்மைத் தன்மையினால்; விமூட—ஏமாற்றம்; தீ:—புத்தி; க்ருஹான்—இல்லத்திற்கு; ப்ரேம்ணா—பாசத்தின் காரணமாக; ஆத்மன:—தனது உடலில்; ய:—யார்; அந்தம்—பாதியினை; அதாத்—கொடுத்தவர்; ஸதாம்—தெய்வீகத்திற்கு; ப்ரிய:—அன்புடையவர்.
அதன்பின்னர் தனது உடலில் பாதியினைப் பாசமுடன் தனக்களித்தத் தன் கணவரான சிவபெருமானை விட்டு சதீ பிரிந்தாள். சினத்தினாலும் இழப்பினாலும் அவளுக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. இவ்வாறு அவள் தன் தந்தையின் இல்லத்திற்குச் சென்றாள். அவளது புத்தியற்ற இச்செயல் பெண்களுக்கேயுரிய மென்மையினால் விளைந்ததாகும்.
பதம் 4.4.4
தாம் அன்வகச்ன் த்ருத-விக்ரமாம் ஸதீம்
ஏகாம் த்ரி-நேத்ரானுசரா: ஸஹஸ்ரஸ:
ஸ-பார்ஷத-யக்ஷா மணிமன்-மதாதய:
புரோ-வ்ருஷேந்த்ராஸ் தரஸா கத-வ்யதா:
தாம்—அவளை (சதீ); அன்வகச்சன்—பின்தொடர்ந்து; த்ருத—விக்ரமாம்—வேகமாகச் செல்லுதல்; ஸதீம்—சதீ; ஏகாம்—தனியாக; த்ரி-நேத்ர—முக்கண்ணர் (சிவபெருமான்); அனுசரா:—அடியவர்கள்; ஸஹஸ்ரஸ:—ஆயிரக்கணக்கில்; ஸ—பார்ஷத-யக்ஷா:—அவரது தனிப்பட்டத் துணைவர்களும் யக்ஷர்களும்; மணிமத்-மத-ஆதய:—மணிமான், மதன் போன்றோர்; புர:-வ்ருஷ-இந்த்ரா:—அவரது நந்தி வாகனத்துடன்; தரஸா—வேகமாக; கத-வ்யதா:—அஞ்சுதலின்றி.
சதீ தனியாகவும் மிகவும் வேகமாகவும் அங்கிருந்து வெளியே செல்வதைக் கண்ட மணிமான், மதன் மற்றும் அவர்களின் கீழுள்ள ஆயிரக்கணக்கான அவரது பக்தர்கள், யட்சர்கள் துணைவர அவரது வாகனமான நந்தியுடன் அவளைப் பின் தொடர்ந்தனர்.
பதம் 4.4.5
தாம் ஸாரிகா- கந்துக-தர்பணாம் புஜ –
ஸ்வேதாதபத்ர-வ்யஜன-ஸ்ரக்-ஆதிபி:
கீதயனைர் துந்துபி-ஸங்க-வேணுபிர்
வ்ருஷேந்த்ரம் ஆரோப்ய விடங்கிதா யயு:
தாம்—அவளை (சதீ); ஸாரிகா—வளர்ப்புக்கிளி; கந்துக—பந்து; தர்பண—கண்ணாடி; அம்புஜ—தாமரை மலர்; ஸ்வேத-ஆதபத்ர—பிறபொருளும்; கீத-அயனை:—இசை முழங்க; துந்துபி—துந்துபி; ஸங்க—சங்கு; வேணுபி—புல்லாங்குழல்களுடன்; வ்ருஷ-இந்த்ரம்—நத்தியின்மேல்; ஆரோப்ய—ஆரோகணித்து; விடங்கிதா:—அலங்கரிக்கப்பட்டு; யயு:—சென்றனர்.
சிவபெருமானின் பக்தர்கள் சதீயிடம் அவளது செல்லக் கிளியினை அவள் கரங்களில் கொடுத்து அவளை ஒரு காளை மாட்டின் மீது அமரச் செய்தனர். அவர்கள் தாமரை மலர், கண்ணாடி மற்றும் இதுபோன்ற அழகு சாதனங்களை எடுத்துக்கொண்டு மிகப் பெரிய வெண்கொற்றக்குடையினை அவள் தலைக்கு மேல் பிடித்து கொண்டனர். சங்கு, துந்துபி, எக்காளம் போன்ற இசைக் கருவிகளுடன் கூடிய இசைக்குழுவினர் பின் தொடர அவர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் அரச ஊர்வலம் போல் சென்றனர்.
பதம் 4.4.6
ஆப்ரஹ்ம-கோஷோர்ஜித-யஜ்ஞ-வைஸஸம்
விப்ரர்ஷி-ஜுஷ்டம் விபுதைஸ்ச ஸர்வஸ:
ம்ருத்-தார்வ-அய:-காஞ்சன-தர்ப-சர்மபிர்
நிஷ்ருஷ்ட-பாண்டம் யஜனம் ஸமாவிஸத்
ஆ-எல்லாத்திசைகளில் இருந்தும்; ப்ரஹ்ம்-கோஷ—வேத மந்திரங்களின் ஒலியுடன்; ஊர்ஜித—அலங்கரிக்கப்பட்டு; யஜ்ஞா-வேள்வி: வைஸஸம்—விலங்குகளைப் பலியிடுதல்; விப்ரஷி-ஜுஷ்டம்—மகா முனிவர்களினால் நடத்தப்பெற்று; விபுதை:—தேவர்களுடன்; ச—மேலும்; ஸர்வஸ:—எல்லாப் பக்கங்களிலும்; ம்ருத்—களிமண்; சர்மபி:—தோல்; நிஸ்ருஷ்ட—செய்யப்பட்ட; பாண்டம்—பலியிடப்படும் விலங்குகளும், கலசங்களும்; யஜனம்—வேள்வி; ஸமாலிஸத்— நுழைந்தனர்.
அவள் வேள்வி நடைபெறும் தனது தந்தையின் இல்லத்தை அடைந்து, எல்லோரும் வேத மந்திரங்கள் முழங்கிக் கொண்டிருந்த வேள்விச் சாலைக்குச் சென்றாள். அங்கே மகா முனிவர்கள், அந்தணர்கள் மற்றும் தேவர்கள் வீற்றிருந்தனர். மேலும் அங்கே பலியிடப்படும் விலங்குகளும் அதுபோல் களிமண்ணால் செய்யப்பட்டக் கலசங்களும், கற்களும், தங்கமும், புல்லும், தோலும் வேள்விக்குரிய பிற பொருட்களும் நிரம்பியிருந்தன.
பதம் 4.4.7
தாம் ஆகதாம் தத்ர ந கஸ்சனாத்ரியத்
விமானிதாம் யஜ்ஞ-க்ருதோ பயாஜ் ஜன:
ருதே ஸ்வஸ்ரீர் வை ஜனனீம் ச ஸாதரா:
ப்ரேமாஸ்ரு – கண்ட்ய: பரிஷஸ்வஜுர் முதா
தாம்—அவள்(சதீ); ஆகதாம்—வந்து சேர்ந்தவுடன்; தத்ர—அங்கே; ந—இல்லை; கஸ்சன—யாரும்; ஆத்ரியத்—வரவேற்க; விமானிதாம்—மரியாதையுடன் வரவேற்கப்படவில்லை; யஜ்ஞா-க்ருத:—வேள்வியினை நடத்துபவர் (தக்ஷன்); பயாஜ்—அச்சத்திலிருந்து; ஜன:—நபர்; ருதே—தவிர; ஸ்வஸ்ரீ—அவள் சொந்த சகோதரிகள்; வை—உண்மையாக; ஜனனீம்—அன்னை; ச—மேலும்; ஸ-ஆதரா:—மரியாதையுடன்; ப்ரேம-அஸ்ரு-கண்ட்ய:—பாசத்தின் காரணமாகக் கண்ணீரினால் அவர்கள் குரல் கம்மியது; பரிஷஸ்வஜு:—கட்டித்தழுவி; முதா—மகிழ்ந்த முகத்தினராய்.
சதீ தன் அடியவர்களுடன் வேள்விச் சாலையினுள் நுழைந்த பொழுது தட்சன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக அங்கிருந்த யாரும் அவளை வரவேற்கவில்லை. ஆனால் அவளது தாயும், சகோதரிகளும் கண்ணீர் நிறைந்த விழிகளுடனும், மகிழ்ச்சியுடனும் அவளை வரவேற்று இனிமையாக உரையாடினர்.
பதம் 4.4.8
ஸௌதர்ய-ஸம்ப்ரஸ்ன-ஸமர்த-வார்தயா
மாத்ரா ச மாத்ரு-ஷ்வஸ்ருபிஸ்ச ஸாதரம்
தத்தாம் ஸயர்யாம் வரம் ஆஸனம் ச ஸா
நாதத்த பித்ராப்ரதிநந்திதா ஸதீ
ஸெளதர்ய—அவள் சகோதரிகளின்; ஸம்ப்ரஸ்ன—வாழ்த்துக்களுடன்; ஸமர்த—முறையான; வார்தயா—செய்திகள்; மாத்ரா—அவளது தாயினால்; ச—மேலும்; மாத்ரு-ஷ்வஸ்ருபி—தாயின் சகோதரிகளினாலும்; ச—மேலும்; ஸ-ஆதரம்—உரிய மரியாதையுடன்; தத்தாம்—அது வழங்கப்பட்டும்; ஸபர்யாம்—துதித்தல், வந்தனம்; வரம்—பரிசுகள்; ஆஸனம்—இருக்கை; ச—மேலும்; ஸா—அவள் (சதீ); நாதத்—ஏற்றுக் கொள்ளவில்லை; பித்ரா—அவள் தந்தையினால்; அப்ரதிநந்திதா—வரவேற்கப்படாததினால்; ஸதீ—சதீ.
தனது தாயினாலும், சகோதரிகளினாலும் அவள் வரவேற்கப்பட்டும் அவள் அவர்களிடம் ஒன்றும் பேசவில்லை, அழகானப் பரிசுப் பொருட்களும், அமர்வதற்கு இருக்கையும் அளிக்கப்பட்டும் அவள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. அவளது தந்தை அவளை வரவேற்கவோ உபசார மொழிகள் கூறவோ இல்லை என்பதுவே அதற்குக் காரணமாகும்.
பதம் 4.4.9
அருத்ர-பாகம் தம் அவேக்ஷ்ய சாத்வரம்
பித்ரா ச தேவே க்ருத-ஹேலனம் விபௌ
அநாத்ருதா யஜ்ஞா-ஸதஸி அதீஸ்வரீ
சுகோப லோகான் இவ தக்ஷயதீ ருஷா
அருத்ர-பாகம்—சிவபெருமானுக்குரிய அவிர்பாகம்; தம்—அது; அவேக்ஷ்ய—கண்டு; ச—மேலும்; அதவரம்—வேள்விச்சாலை; பித்ரா—அவள் தந்தையினால்; ச—மேலும்; தேவே—சிவபெருமானுக்கு; க்ருத-ஹேலனம்—அவமரியாதை செய்யப்பட்டு; விபௌ—பகவானுக்கு; அநாத்ருதா—வரவேற்கப்படாதது; யஜ்ஞா-ஸதஸி—வேள்விச் சாலையின் கூடத்தில்; அதீஸ்வரீ—சதீ; சுகோப—மிகுந்த ஆத்திரமடைந்தவளாய்; லோகான்—பதினான்கு லோகங்களும்; இவ—போல; தக்ஷயதீ—எரிகின்ற; ருஷா—ஆத்திரத்துடன்.
வேள்விச் சாலையினைப் பார்த்த சதீ அங்கே தன் கணவரான சிவபெருமானுக்குரிய அவிர்பாகம் இல்லாதிருப்பதனைக் கண்டாள். சிவபெருமானை அவ்வேள்விக்குத் தன் தந்தையான தட்சன் அழைக்காததோடு அவரது மேன்மைமிக்க மனைவியானத் தன்னை அவர் வரவேற்காததினையும் அடுத்து அவள் உணர்ந்து கொண்டாள். இதனால் எழுந்த ஆத்திரத்தின் விளைவாக அவள் தனது தந்தையை எரித்து விடுவதைப்போல் பார்த்தாள்.
பதம் 4.4.10
ஜகர்ஹ ஸாமர்ஷ-விபன்னயா கிரா
ஸிவ-த்விஷம் தூம-பத-ஸ்ரம-ஸ்மயம்
ஸ்வ-தேஜஸா பூத-கணான் ஸமுத்திதான்
நிக்ருஹ்ய தேவீ ஜகதோ ‘ பிஷ்ருண்வத:
ஜகர்ஹ—கண்டிப்பதற்குத் தொடங்குதல்; ஸா—அவள்; அமர்ஷ-விபன்னயா—ஆத்திரத்தினால் தெளிவுற்ற; கிரா—வார்த்தைகளுடன்; ஸிவ-த்விஷம்—சிவபெருமானின் பகைவர்; தூம-பத—வேள்வியில்; ஸ்ரம—துன்பங்களினால்; ஸ்மயம்—மிகுந்த ஆணவத்துடன்; ஸ்வ-தேஜஸா—அவளது கட்டளையினால், பூத-கணான்—பூத கணங்கள்; ஸமுத்திதான்—தயாராக (தக்ஷனைத் தாக்குவதற்கு); நிக்ருஹ்ய—நிறுத்தப்பட்டனர்; தேவீ—சதீ; ஜகத:—எல்லோர் முன்னிலையில்; அபிஷ்ருண்வத:—கேட்டாள்.
சிவபெருமானின் அடியவர்களும், பூத கணங்களும் தட்சனைத் தாக்கி அழிப்பதற்குத் தயாரானபொழுது சதீயின் கட்டளையினால் அவர்கள் தடுக்கப்பட்டனர். அவள் மிகுந்த ஆத்திரத்துடனும், வருத்தத்துடனும் வேள்வியின் பலன்தரும் செயல்களையும், இத்தேவையற்ற துன்பமிக்க வேள்விகளால் அதீத ஆணவமுற்ற மனிதர்களையும் கண்டிக்கத் தொடங்கினாள். குறிப்பாகத் தன் தந்தையினையே அவள் அனைவரின் முன்னிலையிலும் கண்டித்துப் பேசினாள்.
பதம் 4.4.11
தேவி உவாச
ந யஸ்ய லோக ‘ஸ்தி அமுஸாயன: ப்ரியஸ்
ததாப்ரியோ தேஹ-ப்ருதாம் ப்ரியாத்மன:
தஸ்மின் ஸமஸ்தாத்மணி முக்த-வைரகே
ருதே பவந்தம் கதம: ப்ரதீபயேத்
தேவீ உவாச—தேவி கூறினாள்; ந—இல்லை; யஸ்ய—எவருடைய; லோகே—பௌதீக உலகில்; அஸ்தி—இருக்கிறது; அமுஸாயன:—பகைவரே கிடையாது; ப்ரிய—அன்பானவர்; ததா—ஆகையினால்; அப்ரிய:—பகைவர்; தேஹ-ப்ருதாம்—ஜட உடல் பெற்றவர்கள்; ப்ரிய-ஆத்மன—அவரே சிறந்தவர்; தஸ்மின்—சிவபெருமானுக்கு; ஸமஸ்த-ஆத்மனி—உலகளாவியவர்; முக்த-வைரகே—பகைமையினின்று விடுதலை பெற்றவர்; ருதே—தவிர; பவந்தம்—உமக்கு; கதம—அவர்; ப்ரதிபயேத்—வெறுப்பிற்குரியவர்.
தேவி கூறினாள்: உயிர்கள் அனைத்தினும் போற்றுதலுக்குரியவர் சிவபெருமான். அவருக்குப் பகையே கிடையாது. நெருங்கிய அன்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை. எல்லாப் பகைகளில் இருந்தும் விடுதலை பெற்ற அவ்வுலகளாவிய ஒருவரிடம் உம்மைத் தவிர வேறு யார் காழ்ப்புணர்ச்சி கொள்வர்?
பதம் 4.4.12
தோஷான் பரேஷாம் ஹி குணேஷு ஸாதவோ
க்ருஹணந்தி கேசின் ந பவாத்ருஷோ த்விஜ
குணாம்ஸ் ச பல்கூன் பஹுலி-கரிஷ்ணவோ
மஹத்தமாஸ் தேஷ்வ அவிதத் பவான் அகம்
தோஷான்—குற்றங்கள்; பரேஷாம்—மற்றவர்களின்; ஹி—அக; குணேஷு—குணங்களில்; ஸாதவ:—சாதுக்கள்; க்ருஹ்ணந்தி—காண்பர்; கேசித்—சிலர்; ந—இல்லை; பவாத்ருஷ—உம்மைப் போல்; த்விஜ—ஓ, இருபிறப்பாளரே; குணான்—குணங்கள்; ச—மேலும்; பல்கூன்—சிறிய; பஹுலி-கரீஷ்ணவ:—மிகப் பெரிதுபடுத்துதல்; மஹத்தமரி:—சிறந்தவர்கள்; தேஷு—அவர்கள் நடுவில்; அவிதத்—கண்டு; பவான்—நீர்; அகம்—குற்றம்.
இரு பிறப்பாளனாகிய தட்சனே உம்மைப் போன்ற மனிதரே அடுத்தவர்களிடம் மிக எளிதில் குறை காண்பர். சிவபெருமானோ மற்றவர்களிடம் குறை காணாததோடு, அவர்களிடம் ஏதேனும் சிறிய நல்ல குணம் இருந்ததென்றால் அதனை மிகவும் பெரிதுபடுத்திப் போற்றுவார். தீவினை வயத்தால் அம்மகாத்மாவிடம் குற்றம் காண்கிறீர்.
பதம் 4.4.13
நாஸ்சர்யம் ஏதத் யத் அஸத்ஸு ஸர்வதா
மஹத்-விநிந்தா குணபாத்ம-வாதிஷு
ஸேர்ஸ்யம் மஹாபூருஷ-பாத-பாம்ஸுபிர்
நிரஸ்த- தேஜ: ஸு தத் ஏவ ஸோபனம்
ந—இல்லை; ஆஸ்சர்யம்—ஆச்சரியம்; ஏதத்—இது; யத்—எது; அஸத்ஸு—தீமை; ஸர்வதா—எப்பொழுதும்; மஹத்-விநிந்தா—மகாத்மாக்களைத் தூற்றுவது; குணப-ஆத்ம-வாதிஷ—பிணத்தினை ஆத்மாவாகக் கருதுபவர்களுக்கிடையில்; ஸ-ஈர்ஸ்யம்—காழ்ப்பு; மஹாபூருஷ—மகாபூருஷர்கள்; பாத-பாம்ஸுபி—பாத தூசியினால்; நிரஸ்த-தேஜ: ஸு—அவரது பெருமை மறைக்கப்படுகிறது; தத்—அந்த; ஏவ—உறுதியாக; ஸோபனம்—மிக நன்று.
அழியக்கூடிய உடலினையே ஆத்மாவாக ஏற்றுக் கொண்ட மனிதர்கள் மகாத்மாக்களைத் தூற்றுவதையே எப்பொழுதும் தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர் என்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. லோகாயதவாதியிடம் இருக்கும் இக்காழ்ப்புணர்ச்சி மிகவும் நல்லதுதான். அதனால்தானே அவர்கள் கீழே விழுகின்றனர். மகாத்மாக்களின் பாததூசியே அவர்களை அழித்துவிடும்.
பதம் 4.4.14
யத் த்வி-அக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம்.
ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆஸு ஹந்தி தத்
பவித்ர-கீர்திம் தம் அலங்க்ய-ஸாஸனம்
பவான் அஹோ த்வேஷ்டி ஸிவம் ஸிவதேர:
யத்—எது: த்வி-அக்ஷரம்—ஈரெழுத்துக்களுடைய; நாம—நாமம்; கிரா-ஈரிதம்—நாவினால் உச்சரிக்கப்பட்டால் கூட; ந்ருணாம்—மனிதர்கள்; ஸக்ருத்—ஒருதடவை; ப்ரஸங்காத்—இதயத்திலிருந்து; அகம்—பாபச் செயல்கள்; ஆஸு—உடனடி; ஹந்தி—அழியும்; தத்—அந்த; பவித்ர-கீர்திம்—அவரது புகழ் தூய்மையானது; தம்—அவரது; அலங்க்ய-ஸாஸனம்—அவரது கட்டளைகள் புறக்கணிக்க முடியாதது; பவான்—நீர்; அஹோ—ஓ; த்வேஷ்டி—துவேஷம்; ஸிவம்—சிவபெருமான்; ஸிவ-இதர:—அமங்கலமானவர்கள்.
சதீ தொடர்ந்து கூறினாள்: எனது அன்பான தந்தையே, நீர் சிவபெருமான் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டதின் மூலம் மிகப்பெரியத் தவறைச் செய்திருக்கிறீர். ‘சி’ மற்றும் ‘வ’ என்னும் இரண்டெழுத்துக்களுடைய சிவ என்னும் நாமம் ஒருவரது எல்லாப் பாவங்களையும் நீக்குகிறது. அவரது ஆணைகள் புறக்கணிக்கப்பட முடியாதவை. சிவபெருமான் எப்போதும் தூய்மையானவர். அவர் மீது உம்மைத் தவிர வேறு யாராலும் காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியாது.
பதம் 4.4.15
யத்-பாத பத்மம் மஹதாம் மனோ-‘லிபிர்
நிஷேவிதம் ப்ரஹ்ம-ரஸாஸவார்திபி:
லோகஸ்ய யத் வர்ஷதி சாஸிஷோ ‘ர்தினஸ்
தஸ்மை பவான் த்ருஹ்யதி விஸ்வ-பந்தவே
யத்-பாத-பத்மம்—எவரது பத்மபாதங்கள்; மஹதாம்—உயர்ந்த சான்றோர்களின்; மன-அலிபி:—மனத் தேனீக்களினால்; நிஷேவிதம்—அதில் ஈடுபட்டு; ப்ரஹ்ம-ரஸ—பரமானந்தத்தினை (ப்ரஹ்மானந்த); ஆஸவ-அர்திபி:—அமிர்தத்தைத் தேடி; லோகஸ்ய—சாதாரண மனிதன்; யத்—எது; வர்ஸதி—அவர் நிறைவேற்றிக் கொள்கிறார்; ச—மேலும்; ஆஸிஷ—ஆசைகள்; அர்தின—நாடி; தஸ்மை—அவரிடம் (சிவபெருமானிடம்); பவான்—நீர்; த்ருஹ்யதி—காழ்ப்புடையீர்; விஸ்வ-வந்தவே—மூவுலகிலும் உள்ள உயிர்களின் நண்பருக்கு.
மூவுலகிலும் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் நண்பரான சிவபெருமானிடம் நீர் காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கிறீர். சாதாரண மனிதனின் எல்லா விருப்பங்களையும் அவர் நிறைவேற்றுகிறார். அவரது திருவடித் தாமரைகளையே நினைத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் அவர் பேரானந்தத்தை நாடும் உயர்ந்த சான்றோர்களுக்கும் கூட அருள் வழங்குகிறார்.
பதம் 4.4.16
கிம் வா ஸிவாக்யம் அஸிவம் ந விதுஸ் த்வத் அன்யே ப்ரஹ்மாதயஸ்தம் அவகீர்ய ஜடா: ஸ்மஸானே
தன் -மால்ய-பஸ்ம-ந்ருகபாலி அவஸத் பிஸாசைர்
யே மூர்தபிர் தததி தச்-சரணாவஸ்ருஷ்டம்
கிம்வா—உண்டா இல்லையா; ஸிவ-ஆக்யம்—சிவன் என்னும் பெயர்; அஸிவம்—அமங்கலம்; நவிது:—அறியவில்லை; த்வத்-அன்யே—உம்மைத்தவிர பிறர்; ப்ரஹ்ம-ஆதய—பிரம்மதேவனும் பிறரும்; தம்—அவரது (சிவபெருமான்); அவகீர்ய—அங்கும் இங்கும்; ஜடா:—ஜடாமுடியுடையவர்; ஸ்மஸானே—மயானத்தில்; தத்-மால்ய பஸ்ம-ந்ரு-கபாலீ—மண்டை ஓடுகளை மாலையாகவும், சாம்பலையும் அணிந்தவர்; அவஸத்—தொடர்புடைய; பிஸாசை—பிசாசுகளுடன்; யே—எவர்; மூர்தபி:—தலைமீது; தததி—இடுதல்; தத்-சரண-அவருஷ்டம்—அவர் திருவடித் தாமரையிலிருந்து விழுந்தவை.
சிவபெருமான் என்னும் பெயருடையவர் மிகவும் அமங்கலமானவர் என்று உம்மைக் காட்டிலும் உயர்ந்தவரான பிரம்மதேவன் போன்றவர்களுக்குத் தெரியாது என்று நீர் நினைக்கின்றீரா? அவர் சுடுகாட்டுப் பேய்களுடன் தொடர்புடையவர்; அவரது தலையிலுள்ள ஜடா முடிகள் அவர் உடல் எங்கும் பரந்திருக்கும்; சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுவதும் பூசி, மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவர். இது போன்ற அமங்கலச் சின்னங்கள் அனைத்தும் அவரிடம் இருந்தாலும் பிரம்மதேவன் போன்ற மிக உயர்ந்தவர்கள் கூட சிவபெருமானது திருவடித் தாமரைகளில் இருந்து விழும் மலர்களைத் தம் தலைமீது வைத்து அவரைப் பெருமைப்படுத்துகின்ற உண்மை நீர் அறியாததா?
பதம் 4.4.17
கர்ணௌ பிதாய நிரயாத் யத் அகல்ப ஈஸே
தர்மாவிதரி அஸ்ருணிபிர் ந்ருபிர் அஸ்யமானே
சிந்த்யாத் ப்ரஸஹ்ய ருஸதீம் அஸதீம் ப்ரபுஸ் சேஜ்
ஜிஹ்வாம் அஸுன் அபிததோ விஸ்ருஜேத் ஸ தர்ம:
கர்ணெள—இரு செவிகள்; பிதாய—பொத்திக் கொள்ளுதல்; நிரயாத்—ஒருவன் வெளியேற வேண்டும்; யத்—இருந்தால்; அகல்ப:—இயலாத; ஈஸே—ஈசன்; தர்ம-அவிதரி—சமயநெறியாளர்; அஸ்ருணிபி:—பொறுப்பின்மையினால்; ந்ருபி:—மனிதர்கள்; அஸ்யமானே—நிந்தித்தல்; சிந்த்யாத்—துண்டிக்க; ப்ரஸஹ்ய—வேகமாக; ருஸதீம்—பழித்தால்; அஸதீம்— பழிப்பவனின்; ப்ரபு:—ஒருவனால் முடிந்தால்; சேத்—இருந்தால்; ஜிஹ்வாம்—நாக்கு; அஸுன்—(தனது) உயிர்; அபி—நிச்சயம்; தத:—பின்னர்; விஸ்ருஜேத்—விட வேண்டும்; ஸ:—அது; தர்ம:—தர்மமாகும்.
சதீ தொடர்ந்து கூறினாள்: சமய நெறியாளரையும், ஈசனையும் பொறுப்பற்ற தன்மையில் ஒருவன் நிந்திக்கும்போது அவனைத் தண்டிக்க இயலாதவன் தன் கைகளினால் இரு செவிகளையும் மூடிக் கொண்டு அவ்விடத்தை விட்டு விலக வேண்டும். ஆனால் அவனைக் கொல்லும் வலிமை ஒருவனுக்கு உண்டென்றால், தூற்றியவனின் நாவினைத் துண்டித்து அவனைக் கொல்வதோடு தானும் தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்.
பதம் 4.4.18
அதஸ் தவோத் பன்னம் இதம் கலேவரம்
ந தாரயிஷ்யே ஸிதி-கண்ட-கர்ஹிண:
ஜக்தஸ்ய மோஹாத் தி விஸுத்திம் அந்தஸோ ஜுகுப்ஸிதஸ்யோதரணம் ப்ரசக்ஷதே
அத—ஆகையினால்; தவ—உடம்பிலிருந்து; உத்பன்னம்—பெற்ற; இதம்—இந்த; கலேவரம்—உடலினை; ந தாயிஷ்யே—தாங்கமாட்டேன்; ஸிதி-கண்ட-கர்ஹிண:—சிவபெருமானை நிந்தித்தவர்; ஜக்தஸ்ய—உண்ணப்பட்டது; மோஹாத்—தவறுதலாக; ஹி—ஏனென்றால்; விஸ்த்திம்—தூய்மை செய்ய; அந்தஸ:—உணவின்; ஜுகுப்ஸிதஸ்ய—விஷமானால்; உத்தரணம்—வாந்தியெடுத்தல்; ப்ரசக்ஷதே—உத்தமம்.
ஆகையினால் சிவபெருமானை நிந்தித்த உம்மால் தரப்பட்ட பயனற்ற எனதுடலை இனிமேலும் நான் சுமந்து கொண்டிருக்கமாட்டேன். நஞ்சு கலந்த உணவை உண்டவனுக்குச் சிறந்த சிகிச்சை வாந்தியெடுத்தலேயாகும்.
பதம் 4.4.19
ந வேத-வாதான் அனுவர்ததே மதி:
ஸ்வ ஏவ லோகே ரமதோ மஹா முனே:
யதா கதிர் தேவ-மனுஷ்யயோ: ப்ருதக்
ஸ்வ ஏவ தர்மே ந பரம் க்ஷிபேத் ஸ்தித:
ந—இல்லை; வேத-வாரான்—வேதங்களின் ஒழுங்குமுறை விதிகள்; அனுவர்ததே—பின்பற்றுவது; மதி—மனம்; ஸ்வே—அவருக்குரிய; ஏவ—உறுதியாக; லோகே—ஆத்மாவில்; ரமத:—மகிழ்ந்து; மஹா-முனே:—உயர்ந்த உன்னதமானவர்களின்; யதா—இருக்கின்ற; கதி:—வழியே; தேவ-மனுஷ்யயோ:—மனிதர்கள் மற்றும் தேவர்கள்; ப்ருதக்—தனியே; ஸ்வே—உமக்குரிய; ஏ—தனியே; தர்மே—சுதர்மத்தில்; ந—இல்லை; பரம்—மற்றொரு; க்ஷிபேத்—குறைகூறுதல்; ஸ்தித—இருத்தல்.
பிறரைக் குறை கூறுவதைக் காட்டிலும் தனது பணி முறைகளின் வழியே நடத்தல் நன்றாம். தாங்கள் பின்பற்றுவதற்குத் தேவையில்லை என்பதால் மகாமுனிவர்கள் சிலசமயம் வேதங்கள் கூறும் ஒழுங்கு முறை விதிகளைப் புறக்கணிக்கின்றனர். இது சாதாரண மனிதர்கள் பூமியின் மேற்பரப்பில் நடந்து செல்ல தேவர்கள் வானத்தில் சஞ்சரிப்பது போன்றதாகும்.
பதம் 4.4.20
கர்ம ப்ரவ்ருத்தம் ச நிவ்ருத்தம் அபி ருதம்
வேதே விவிச்யோபய-லிங்கம் ஆஸ்ரிதம்
விரோதி தத் யௌகபதைக-கர்தரி
த்வயம் ததா ப்ரஹ்மணி கர்ம நர்ச்சதி
கர்ம—செயல்கள்; ப்ரவ்ருத்தம்—ஜட இன்பத்தில் பற்றுடைய; ச—மேலும்; நிவ்ருத்தம்—ஜடத்தில் பற்றுடைய; அபி—உறுதியாக; ருதம்—உண்மை; வேதே—வேதங்களில்; விவிச்ய—வேறுபடுத்திப் பார்த்தல்; உபய-லிங்கம்—இவை இரண்டின் அடையாளங்களும்; ஆஸ்ரிதம்—இயங்குதல்; விரோதி—விரோதமானது; தத்—அது; யௌகபத-ஏக-கர்தரி—இரண்டு செயல்களும் ஒருவரிடமிருந்தால்; த்வயம்—இரண்டு; ததா—ஆகையினால்; ப்ரஹ்மணி—உன்னத நிலையெய்திய ஒருவர்; கர்ம—செயல்கள்; நருச்சதி—புறக்கணிக்கப்படுதல்.
வேதங்களில் இரண்டுவிதமான செயல்களுக்கு வழி முறைகள் உள்ளன. உலக இன்பத்தில் பற்றுடையோரின் செயல்கள் மற்றும் உலக இயல்பினைத் துறந்தவர்களின் செயல்கள் என்று. இவ்விரண்டு விதமான செயல்களையும் கவனிக்கும்பொழுது வெவ்வேறு விதமான அடையாளங்களுடன் கூடிய இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றனர் என்று தெரிகிறது. இரண்டு விதமான செயல்களையும் ஒரே மனிதரிடம் காண விரும்பினால் அது முரண்பாடாகும். ஆனால் உன்னத நிலையில் இருக்கும் ஒருவனால் இவ்விரண்டு விதமான செயல்களும் புறக்கணிக்கப்படலாம்.
பதம் 4.4.21
மா வ: பதவ்ய: பிதர் அஸ்மத்-ஆஸ்திதா
யா யஜ்ஞ-ஸாலாஸு ந தூம-வர்த்மபி:
தத் -அன்ன-த்ருப்தைர் அஸு-ப்ருத்பிர் ஈடிதா
அவ்யக்த லிங்கா அவதூத ஸேவிதா:
மா—இருக்கின்றதில்லை; பதவ்ய—வளம்; பித—ஓ, தந்தையே; அஸ்மத்-ஆஸ்திதா—எங்களிடம் இருப்பது; யா—எவை (வளம்); யஜ்ஞ-ஸாலாஸு—வேள்வித் தீயில்; ந—இல்லை; தூம-வர்த்மபி:—வேள்விகளின் பாதையில்; தத்-அன்ன-த்ருப்தை:—வேள்வியில் வரும் உணவின் மூலம் திருப்தியடைதல்; அஸு-ப்ருத்பி:—உடல் தேவைகளைத் திருப்திப்படுத்த; ஈடிதா:—புகழ்ந்து; அவ்யக்த-லிங்கா:—அதன் காரணம் வெளிப்படாதிருத்தல்; அவதூத-ஸேவிதா:—தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் மட்டுமே அடையக் கூடியது.
எனதருமைத் தந்தையே, எங்களிடம் இருக்கும் செல்வவளம் உங்களாலும் உங்களைப் புகழ்வோராலும் கற்பனையில் கூடக் காண முடியாததாகும். நீங்கள் எல்லாம் வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் உணவினை உண்டு உங்கள் உடல் தேவைகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற பெரிய வேள்விகளைச் செய்யும் பலன்தரும் செயல்களில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். நாங்கள் நினைத்தால் எங்கள் செல்வ வளத்தினை வெளிப்படுத்த முடியும். அது துறவிகள் மற்றும் தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் போன்ற சான்றோர்களினால் மட்டுமே அடையக் கூடியதாகும்.
பதம் 4.4.22
நைதேன் தேஹேன ஹரே க்ருதாகஸோ
தேஹோத்பவேனாவம் அலம் குஜன்மனா
வ்ரீடா மமாபூத் குஜன-ப்ரஸங்கதஸ்
தஜ் ஜன்ம திக் யோ மஹதாம் அவத்ய க்கு
ந—இல்லை; ஏதேன—இதனால்; தேஹேன—உடலினால்; ஹரே—சிவபெருமானுக்கு; க்ருத-ஆகஸ:—குற்றங்கள் புரிந்திருந்தும்; தேஹ-உத்பவேன—உங்கள் உடலிலிருந்து பிறந்ததினால்; அவம் அவம்—போதும் போதும்; கு-ஜன்மனா—வெறுக்கத்தக்கப் பிறப்பு; வ்ரீடா—வெட்கம்; மம—எனது; அபூத்—இருந்தது; கு-ஜன-ப்ரஸங்கத:—மோசமான மனிதருடன் இருந்த உறவு முறை; தத்-ஜன்ம-அந்தப் பிறப்பு; திக்—வெட்கக் கேடானது; ய:—யார்; மஹதாம்—உயர்ந்த சான்றோர்களின்; அவத்ய-க்ருத்—ஒரு குற்றவாளி.
நீர் சிவபெருமானின் திருவடித் தாமரைகளிடத்து குற்றம் புரிந்தவர் ஆவீர். தீவினைப் பயனால் உமக்கு நான் பிறந்திருக்கிறேன். உடலினால் நமக்குள் ஏற்பட்ட சொந்தத்தினை நான் அவமானமாகக் கருதுகிறேன். மேலும் மிகவுயர்ந்த சான்றோரின் திருவடித் தாமரையினிடத்துக் குற்றம் புரிந்த ஒருவரிடமிருந்து பிறந்த எனது உடலை மாசுடையது என்று கருதி என்னை நானே நிந்தித்துக் கொள்ளுகிறேன்.
பதம் 4.4.23
கோத்ரம் த்வதீயம் பகவான் வ்ருஷத்வஜோ
தாக்ஷாயணீதி ஆஹ யதா ஸுதுர்மனா:
வ்யபேத- நர்ம-ஸ்மிதம் ஆஸுததா ‘ஹம்
வ்யுத்ஸ்ரக்ஷ்ய ஏதத் குணபம் த்வத்-அங்கஜம்
கோத்ரம்—குடும்ப உறவு முறை; த்வதீயம்—உமது; பகவான் எல்லா வளங்களையும் உடையவர்; வ்ருஷத்வஜ:—சிவபெருமான்; தாக்ஷாயணீ—தாட்சாயணீ (தக்ஷனின் மகள்); இதி—இவ்வாறு; ஆஹ—அழைக்கப்படுவது; யதா—எப்பொழுது; ஸுதுர்மனா:—மிகவும் துக்ககரமானது; ஆஷு—உடனடியாக; வ்யபேத—மறைதல்; நர்ம-ஸ்மிதம்—எனது மகிழ்ச்சியும் புன்னகையும்; ஆஸு—உடனடியாக; ததா—பிறகு; அஹம்—நான்; வ்யுத்ஸ்ரக்ஷ்யே—நான் துறப்பேன்; ஏதத்—இந்த (உடல்); குணபம்—இறந்த உடல்; த்வத்-அங்க-ஜம்—உங்கள் உடலில் இருந்து பிறந்தது.
நமது குடும்ப உறவின் காரணமாக சிவபெருமான் என்னைத் தாட்சாயணீ என்று அழைக்கும் பொழுது நான் துக்கமுறுவேன். உடனே எனது மகிழ்ச்சியும், புன்னகையும் என்னிடமிருந்து மறைந்து விடும். ஒரு பையினைப் போலிருக்கும் எனது உடல் உங்களுக்குப் பிறந்ததை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். ஆகையினால் இவ்வுடலை நான் துறப்பேன்.
பதம் 4.4.24
மைத்ரேய உவாச
இதி அத்வரே தக்ஷம் அனூத்ய ஸத்ரு-ஹன்
க்ஷிதாவ் உதீசீம் நிஷஸாத ஸாந்த-வாக்
ஸ்ப்ருஷ்ட்வா ஜலம் பீத-துகூல-ஸம்வ்ருதா
நிமீல்ய த்ருக் யோக-பதம் ஸமாவிஸத்
மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; இதி—இவ்வாறு; அத்வரே—வேள்விச் சாலையில்; தக்ஷம்—தட்சனுக்கு; அனூத்ய—பேசிக்கொண்டு; ஸத்ரு-ஹன்—ஓ பகைவரை மாய்ப்போனே; க்ஷிதௌ—நிலத்தின் மீது; உதீசீம்—வடக்கு பார்த்து; நிஷஸாத—அமர்ந்தாள்; ஸாந்த-வாக்—அமைதியாக; ருஷ்ட்வா—தொட்ட பிறகு; ஜலம்—தண்ணீரை; பீத-துகூல-ஸம்வ்ருதா—காவியுடை அணிந்து; நிமீல்ய—மூடி; த்ருக்—கண்களை; யோக-பதம்—தெய்வீக யோக நிலையில்; ஸமாவிஷத்—ஒன்றினாள்.
மைத்ரேய முனிவர் விதுரரிடம் கூறினார்: ஓ பகைவரை அழிக்கும் விதுரரே! தட்சனுடன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சதீ அவ்வேள்விச்சாலையின் தரையில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்தாள். காவி நிற உடை அணிந்து, தண்ணீரில் தன்னைத் தூய்மை செய்து, கண்களை மூடித் தெய்வீக யோக நிலையோடு தன்னை இணைத்துக் கொண்டாள்.
பதம் 4.4.25
க்ருத்வா ஸமானாவ் அனிலௌ ஜிதாஸனா
ஸோதானம் உத்தாப்ய ச நாபி-சக்ரத:
ஸனைர் ஹ்ருதி ஸ்தாப்ய தியோரஸி ஸ்திதம்
கண்டாத் ப்ருவோர் மத்யம் அநிந்திதானயத்
க்ருத்வா—இட்ட பிறகு; ஸமானாவ்—நடுநிலை அமைதியில்; அனிலௌ—பிராணவாயு மற்றும் அபான வாயு; ஜித-ஆஸனா—அமர்ந்த நிலையில் கட்டுப்படுத்தி; ஸா—சதீ; உதானம்—உதானவாயு (உயிர் மூச்சு); உத்தாப்ய—உயர்த்தி; ச—மேலும்; நாபி-சக்ரத:—நாபிச் சுழியில்; ஸனை:—படிப்படியாக; ஹ்ருதி—இதயத்தில்; ஸ்தாப்ய—இட்டு; தியா—புத்தியுடன்; உரஸி—நுரையீரல் பாதையில்; ஸ்திதம்—நிறுத்தப்பட்டு; கண்டாத்—கண்டத்தின் வழியாக; ப்ருவோ—புருவங்களின்; மத்யம்—மத்தியில்; அநிந்திதா—பழியில்லாத (சதீ); ஆனயத்—உயர்தல்.
முதற்கண் அவள் தேவையான நிலையில் அமர்ந்தாள். பின்னர் உயிர்க்காற்றை (உதான வாயுவை) உந்திச் சுழியின் அருகில் சமமான நிலையில் வைத்தாள். இவ்வாறு உயிர்க்காற்றைப் புத்தியுடன் கலந்து இதயத்திற்குக் கொண்டு வந்து பின்னர் படிப்படியாக நுரையீரல் பாதையில் நிறுத்தி அங்கிருந்து புருவங்களின் மத்திக்குக் கொண்டு வந்தாள்.
பதம் 4.4.26
ஏவம் ஸ்வ-தேஹம் மஹதாம் மஹீயஸா
முஹு: ஸமாரோபிதம் அங்கம் ஆதராத்
ஜிஹாஸதீ தக்ஷ-ருஷா மனஸ்வினீ
ததார காத்ரேஷ்வ அனிலாக்கி-தாரணாம்
ஏவம்—இவ்வாறு; ஸ்வ-தேஹம்—தனது உடலை; மஹதாம்—மகா முனிவர்களினால்; மஹீயஸா—வணங்க; முஹு:—மீண்டும் மீண்டும்; ஸமாரோபிதம்—இடம் கொண்ட; அங்கம்—அங்கத்தில்; ஆதராத்—மரியாதையுடன்; ஜிஹாஸதீ—துறப்பதற்கு எண்ணி; தக்ஷ-ருஷா—தட்சன் மீது கொண்ட ஆத்திரத்தினால்; மனஸ்வினீ—தானாகவே; ததார—இட்டாள்; காத்ரேஷு—உடலின் பாகங்களின் மீது; அனில-அக்னி-தாரணாம்—நெருப்பு மற்றும் காற்றின் மீதான தியானம்.
மகா முனிவர்களினாலும், தேவர்களினாலும் வணங்கப்படும் சிவபெருமான் சதீயின் மீது கொண்ட அன்பின் விளைவாக அவளது உடலுக்குத் தன் இடப்பாகத்தை இருப்பிடமாகத் தந்து மரியாதை செய்தார். அப்படிப்பட்ட உடலை தனது தந்தையின் மீது கொண்ட ஆத்திரத்தினால் அழிக்க எண்ணி அதனுள் இருக்கும் நெருப்புக் காற்றை தியானித்தாள் சதீ.
பதம் 4.4.27
தத: ஸ்வ-பர்துஸ் சரணாம் புஜாஸவம்
ஜகத்-குரோஸ் சிந்தயதீ ந சாபரம்
ததர்ஷ தேஹோ ஹத-கவ்மஷ: ஸதீ
ஸத்ய: ப்ரஜஜ்வால ஸமாதிஜாக்னினா
தத:—அங்கே; ஸ்வ-பர்து:—அவள் கணவன்; சரண-அம்புஜ-ஆஸவம்—திருவடித்தாமரைகளின் தேனின்மேல்; ஜகத்-குரோ:—ஜகத் குரு; சிந்தயதீ—சிந்தித்து; ந—இல்லை; ச—மேலும்; அபரம்—பிறவற்றை நினையாது (அவள் கணவனைத் தவிர); ததர்ஷ—பார்த்தல்; தேஹ—அவளது உடலினை; ஹத-கல்மஷ:—பாவக் கறைகள் அழிதல்; ஸதீ— சதீ; ஸத்ய:— விரைவில்; ப்ரஜஜ்வால—எரித்தல்; ஸமாதி-ஜ-அக்னினா—தியானத்தினால் எழுந்த அக்கினி.
உலகனைத்திற்கும் ஞான குருவாக விளங்கும் தனது கணவரான சிவபெருமானின் திருவடித் தாமரைகளின் மீது தன் சிந்தையனைத்தையும் செலுத்தி சதீ தியானித்தாள். அதனால் அவள் தனது பாவங்கள் எல்லாம் நீங்கி முற்றிலும் தூய்மை பெற்றாள். மேலும் அவள் அக்கினியைத் தியானித்து அதன் மூலம் எழுந்த தீப்பிழம்பில் தனது உடலைத் துறந்தாள்.
பதம் 4.4.28
தத் பஸ்யதாம் கே புவி சாத்புதம் மஹத்
ஹா ஹேதி வாத: ஸுமஹான் அஜாயத
ஹந்த ப்ரியா தைவதமஸ்ய தேவீ
ஜஹாவ் அஸுன் கேன ஸதீ ப்ரகோபிதா
தத்—அந்த; பஸ்யதாம்—அதனைப் பார்த்தவர்கள்; கே—வானத்தில்; புவி—பூமியில்; ச—மேலும்; அத்புதம்—அற்புதம்; மஹத்—சிறந்த; ஹாஹா—ஓ, ஓ; இதி—இவ்வாறு; வாத:—சப்தம்; ஸு-மஹான்—ஆரவாரம்; அஜாயத—ஏற்பட்டது; ஹந்த—அந்தோ; ப்ரியா—பிரியமான; தைவ-தமஸ்-ய—மிகவுயர்ந்த தேவர் (சிவபெருமான்); தேவீ—சதீ; ஜஹொவ்—துறத்தல்; அஸுன்—அவள் உயிரை; கேன—தக்ஷனால்; ஸதீ—சதீ; ப்ரகோபிதா—ஆத்திரமுற்று.
சதீ ஆத்திரத்தினால் தனது உடலை அழித்தபோது இப்பிரபஞ்சம் முழுவதும் ஓர் ஆரவார ஒலி ஏற்பட்டது. மிகவுயர்ந்த தேவரான சிவபெருமானின் துணைவியான சதீ இம்முறையில் ஏன் தன் உடலைத் துறக்க வேண்டும்?
பதம் 4.4.29
அஹ அநாத்ம்யம் மஹத் அஸய பஸ்யதே
ப்ரஜாபதேர் யஸ்ய சராசரம் ப்ரஜா:
ஜஹாவ் அஸுன் யத்-விமதாத்மஜா ஸதீ
மனஸ்வினீ மானம் அபீக்ஷ்ணம் அர்ஹதி
அஹோ—அந்தோ; அநாத்ம்யம்—புறக்கணித்தல்; மஹத்—சிறந்த; அஸ்ய—தக்ஷனின்; பஸ்யத—கண்டு; ப்ரஜாபதே:—பிரஜாபதியின்; யஸ்ய—எவருடையது; சர-அசரம்—எல்லா உயிர்வாழிகளும்; ப்ரஜா:—சந்ததியினர்; ஜஹௌ—துறத்தல்; அஸுன்—அவள் உடலை; யத்—எவரால்; விமதா—அவமரியாதை; ஆத்ம-ஜா—அவரது சொந்த மகளை; ஸதீ—சதீ; மனஸ்வினீ—தானாகவே; மானம்—மரியாதை; அபீக்ஷ்ணம்—திரும்பத் திரும்ப; அர்ஹதி—ஏற்புடையது.
பிரஜாபதியாகவும் அனைத்து உயிர்களின் பாதுகாவலனாகவும் இருந்த தட்சன் கற்புக்கரசியும் உயர்ந்த ஆன்மாவாகவும் விளங்கிய தன் மகளான சதீயிடம் அவமரியாதையாக நடந்து கொண்டது வியத்தற்குரியதே. தனது தந்தை தன்னைப் புறக்கணித்ததின் காரணமாகவே அவள் தனது உடலைத் துறந்தாள்.
பதம் 4.4.30
ஸோ’யம் துர்மர்ஷ-ஹ்ருதயோ ப்ரஹ்ம த்ருக் ச
லோகே’ பகீர்திம் மஹதீம் அவாப்ஸ்யதி
யத்-அங்கஜாம் ஸ்வாம் புருஷ-த்விட் உத்யதாம்
ந ப்ரத்யஷேதன் ம்ருதயே’ பராதத:
ஸ:—அவர்; அயம்—அந்த; துர்மர்ஷ-ஹ்ருதய:—கல்நெஞ்சம்; ப்ரஹ்ம-த்ருக்—அந்தணனாயிருக்கத் தகுதியற்றவர்; ச—மேலும்; லோகே—உலகத்தில்; அபகீர்திம்—அபகீர்த்தி; மஹதீம்—பரந்த; அவாப்ஸ்யதி—அடைந்தார்; யத்-அங்க-ஜாம்—அவரது மகள்; ஸ்வாம்—சுயமாக; புருஷ-த்விட்—சிவபெருமானின் பகைவர்; உத்யதாம்—தயாராயிருந்தால்; ந ப்ரத்யஷேத்—தடுக்கவில்லை; ம்ருதயே—மரணமடையாது; அபராதத:—அவரது குற்றங்களினால்.
தட்சன் இவ்வாறு கல்நெஞ்சுக்காரராக விளங்கியமையால் அவர் ஓர் அந்தணராக இருக்கவே தகுதியற்றவரானார். மேலும் தனது மகளிடம் குற்றமிழைத்ததினாலும், அவளை மரணத்தினின்று காப்பாற்றாமையினாலும், முழுமுதற் கடவுளிடம் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தமையாலும் தட்சன் உலகம் முழுவதும் பெரும் பழியினைத் தேடிக் கொண்டார்.
பதம் 4.4.31
வததி ஏவம் ஜனே ஸத்யா த்ருஷ்ட்வாஸு-த்யாம் அத்புதம்
தக்ஷம் தத்-பார்ஷ்தா ஹந்தும் உததிஷ்டன் உதாயுதா:
வததி—பேசிக்கொண்டு; ஏவம்—இவ்வாறு; ஜனே—மக்கள் இருந்தபொழுது; ஸத்யா:—சதீயின்; த்ருஷ்ட்வா—பார்த்தபிறகு; அஸு-த்யாகம்—மரணம்; அத்புதம்—அற்புதம்; தக்ஷம்—தக்ஷன்; தத்-பார்ஷதா:—சிவபெருமானின் சேகர்கள்; ஹந்தும்—கொல்வதற்கு; உததிஷ்டன்—எழுந்து நின்றனர்; உதாயுதா:—ஏந்திய ஆயுதங்களுடன்.
சதீ தானாகவே தனது உயிரை மாய்த்துக் கொண்ட அற்புதத்தினை எண்ணி மக்களெல்லாம் வியந்து பேசிக் கொண்டிருந்த பொழுது, அவளோடு வந்த சிவபெருமானின் சேவகர்கள் தட்சனைக் கொல்வதற்காகத் தங்கள் ஆயுதங்களை ஏந்தினர்.
பதம் 4.4.32
தேஷாம் ஆபததாம் வேகம் நிஸாம்ய பகவான் ப்ருகு:
யஜ்ஞா-க்ன-க்னேன யஜுஷா தக்ஷினாக்னௌ ஜுஹர்வ ஹ
தேஷாம்—அவர்கள்; ஆபததாம்—நெருங்குவதைக் கண்டு; வேகம்—வேகத்தோடு; நிஸாம்ய—பார்த்தவுடன்; பகவான்—செல்வ வளம் உடையவர்; ப்ருகு—பிருகு முனிவர்; யஜ்ஞ-க்ன-க்னேன—வேள்வியினைத் தடை செய்வோரைக் கொல்வதற்காக; யஜுஷா—யசுர் வேத மந்திரங்களை; தக்ஷிண-அக்னென—வேள்வித் தீயின் தென்திசையில்; ஜுஹாவ—வேள்விப் பொருட்களை அர்ப்பணித்து; ஹ—உறுதியாக.
அவர்கள் தாக்குவதற்கு வேகமாக வருவதைக் கண்டு அதன் அபாயத்தினை உணர்ந்த பிருகு முனிவர் வேள்வித் தீயின் தென்திசையில் வேள்விப் பொருட்களை அர்ப்பணித்து வேள்வியினைச் சீர்குலைக்க எண்ணுவோரை அழிக்கும் யசுர் வேத மந்திரங்களை உச்சாடனம் செய்யலானார்.
பதம் 4.4.33
அத்வர்யுணா ஹுயமானே தேவா உத்பேதுர் ஒஜஸா
ரிபவோ நாம தபஸா ஸோமம் ப்ராப்தா: ஸஹஸ்ரஸ:
அத்வர்யுனா—குருக்களினால் (பிருகு முனிவர்); ஹுயமானே—வேள்விப் பொருட்கள் அர்ப்பணிக்கப்பட்டு; தேவா—தேவர்கள்; உத்பேது:—வெளிப்பட்டனர்; ஒஜஸா—பலமிக்கவர்கள்; ரிபவ:—ரிபுக்கள்; நாம—என்ற பெயருடையவர்கள்; தபஸா—தவத்தினால்; ஸோமம்—சோமன்; ப்ராப்தா:—எய்தப்பெற்று; ஸஹஸ்ரஸ:—ஆயிரக் கணக்கில்.
பிருகு முனிவர் வேள்வித் தீயில் அர்க்கியப் பொருட்களை அர்ப்பணித்தவுடன் அதிலிருந்து ரிபுக்கள் என்றழைக்கப்படும் ஆயிரக்கணக்கான தேவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவருமே பலமிக்கவர்கள். இச்சக்தியினை அவர்கள் திங்கட் கடவுளான சோமனிடம் இருந்து பெற்றவர்களாவர்.
பதம் 4.4.34
தைர் அலாதாயுதை: ஸர்வே ப்ரமதா: ஸஹ-குஹ்யகா:
ஹன்யமானா திஸோ பேஜுர் உஸத்பிர் ப்ரஹ்ம-தேஜஸாஹ
தை:—அவர்களால்; அலாத-ஆயுதை:—எரிகொள்ளிகளாலான ஆயுதங்கள்; ஸர்வே—எல்லோரும்; ப்ரமதா:—பேய்கள்; ஸஹ-குஹ்யகா:—குஹ்யகர்களுடன்; ஹன்யமானா:—தாக்கினார்; திஸ:—பல்வேறு திசைகளில்; பேஜு:—சிதறி ஓடினர்; உஸத்பி:—தழலொளி; ப்ரஹ்ம-தேஜஸா—அந்தண ஆற்றல்.
ரிபுத் தேவர்கள் வேள்வித்தீயில் எரிகொள்ளிகளினால் பேய்களையும், குஹ்யகர்களையும் தாக்கத் தொடங்கியவுடன் சதீயின் காவலர்கள் அனைவரும் பல்வேறு திசைகளில் சிதறி ஓடி மறைந்தனர். இவையெல்லாம் பிரம்ம தேஜஸ் என்னும் அந்தண ஆற்றலினாலேயே நிகழ்ந்தது.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “சதீ தன் உடலைத் துறத்தல்” எனும் தலைப்பைக் கொண்ட நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.