அத்தியாயம் – 3
சிவபெருமானுக்கும் சதீக்கும் இடையே நடந்த உரையாடல்
பதம் 4.3.1
மைத்ரேய உவாச
ஸதா வித்விஷதோர் ஏவம் காலோ வை த்ரியமாணயோ:
ஜாமாது: ஸ்வஸுரஸ்யாபி ஸுமஹான் அதிசக்ரமே

மைத்ரேய:-உவாச—மைத்ரேயர் கூறினார்; ஸதா—தொடர்ந்து; வித்விஷதோ:—பதற்றம்; ஏவம்—இவ்வாறாக; கால:—காலம்; வை—உறுதியாக; த்ரியமானயோ:—தொடர்ந்து தாங்குவதற்கு; ஜாமாது:—மருமகனுக்கும்; ஸ்வஸு-ரஸ்ய—மாமனாருக்கும்; அபி—கூட; ஸு-மஹான்—மிகச் சிறந்த; அதிசக்ரமே—நடந்தது.

மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வாறாக மாமனாரான தட்சனுக்கும், மருமகனான சிவபெருமானுக்கும் இடையில் நிலவிய பதற்றநிலை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தது.

பதம் 4.3.2
யதா பிஷிக்தோ தக்ஷஸ் து ப்ரஹ்மணா பரமேஷ்டினா
ப்ரஜாபதீனாம் ஸர்வேஷாம் ஆதிபத்யே ஸ்மயோ ‘பவத்

யதா—எப்பொழுது; அபிஷிக்த:—நியமித்தல்; தக்ஷ—தட்சன்; து—ஆனால்; ப்ரஹ்மணா—அந்தணரால்; பரமேஷ்டினா—பரமாச்சாரியார்; ப்ரஜாபதீனாம்—பிரஜாபதிகளின்; ஸர்வேஷாம்—அனைவரின்; ஆதிபத்யே—அதிபதியாக; ஸ்மய:—கர்வம் கொண்டவராக; அபவத்—ஆனார்.

அனைத்து முன்னோர்களின் அதிபதியாக தட்சனைப் பிரம்ம தேவன் நியமித்ததினால் தட்சன் கர்வமிக்கவரானார்.

பதம் 4.3.3
இஷ்ட்வா ஸ வாஜபேயேன ப்ரஹ்மிஷ்டான் அபிபூய ச
ப்ரஹஸ்பதி-ஸவம் நாம ஸமாரேபே க்ரதூத்தமம்

இஷ்ட்வா—அதனைச் செய்தபிறகு; ஸ:—அவர் (தக்ஷன்); வாஜபேயேன—வாஜபேய வேள்வியுடன்; ப்ரஹ்மிஷ்டான்—சிவபெருமானும் அவரது அடியவர்களும்; அபிபூய—புறக்கணித்தல்; ச—மேலும்; ப்ருஹஸ்பதி-ஸவம்—பிரஹஸ்பதி ஸவம்; நாம—என்றழைக்கப்படும்; ஸமாரேபே—தொடங்கினார்; க்ரது-உத்தமம்—சிறந்த வேள்வியினை.

வாஜபேயம் என்னும் வேள்வியினைத் தொடங்கிய தட்சன் பிரம்ம தேவனின் ஆதரவின் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் பிரகஸ்பதி ஸவம் என்னும் பெரிய வேள்வியினைச் செய்தார்.

பதம் 4.3.4
தஸ்மின் ப்ரஹ்மர்ஷய: ஸர்வே தேவர்ஷி பித்ரு-தேவதா:
ஆஸன் க்ருத-ஸ்வஸ்த்யயனாஸ் தத்-பத்னியஸ் ச ஸ-பர்த்ருகா

தஸ்மின்—அதில் (வேள்வியில்); ப்ரஹ்ம-ருஷய:—பிரம்ம ரிஷிகள்; ஸர்வே—அனைவரும்; தேவர்ஷி—தேவரிஷிகள்; பித்ரு—பித்ருக்கள்; தேவதா—தேவர்கள்; ஆஸன்—இருந்தனர்; க்ருத-ஸ்வஸ்தி-அயனா:—அணிமணிகளினால் நன்கு அலங்கரித்து; தத்-பத்னிய:—அவர்களது மனைவியர்; ச—மேலும்; ஸ-பர்த்ருகா:—அவர்களது கணவர்களுடன்.

வேள்வி நடைபெற்றபொழுது, ஏராளமான பிரம்ம ரிஷிகள், மகாமுனிவர்கள், பித்ருதேவதைகள், மற்றும் தேவர்கள் அனைவரும் அணிமணிகளினால் நன்கு அலங்கரிக்கப்பட்ட தங்கள் மனைவிகளுடன் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர்.

பதங்கள் 4.3.5 – 4.3.7
தத் உபஸ்ருதிய நபஸி கே-சராணாம் ப்ரஜல்பதாம்
ஸதீ தாக்ஷாயணீ தேவீ பித்ரு-யஜ்ஞா-மஹோத்ஸவம்

விரஜந்தீ: ஸர்வதோ திக்ப்ய உபதேவ-வர-ஸ்த்ரிய:
விமான-யானா: ஸ-ப்ரேஷ்டா நிஷ்க-கண்டீ: ஸுவாஸஸ:

திருஷ்ட்வா ஸ்வ-நிலயாப்யாஸே லோலாக்ஷ மிருஷ்ட-குண்டலா
பதிம் பூதபதிம் தேவம் ஔத்ஸுக்யாத் அப்யயாஷத

தத்—பிறகு; உபஸ்ருத்ய—கேட்டு; நபஸி—வானத்தில்; கே-சராணாம்— வானில் பறந்து வந்தவர்களின் (கந்தர்வர்கள்); ப்ரஜல் பதாம்—உரையாடல்கள்; ஸதீ—சதீ; தாக்ஷாயணீ—தட்சனின் மகள்; தேவீ—சிவபெருமானின் மனைவி; பித்ரு-யஜ்ஞ-மஹா-உத்ஸவம்—தனது தந்தையினால் செய்யப்படும் பெரிய வேள்வி; வ்ரஜந்தீ:—சென்று கொண்டிருந்தார்; ஸர்வத:—எல்லா: திக்ப்ய:—திக்குகளில் இருந்தும்; உபதேவ-வர-ஸ்த்ரிய:— தேவர்களின் அழகிய மனைவியர்; விமான-யானா:— புஷ்பக விமானங்களில் பறந்துகொண்டு; ஸ-ப்ரேஷ்டா:—தங்கள் கணவன்மார்களுடன்; நிஷ்க-காண்டீ:—அழகிய பதக்கங்களுடன் கூடிய கழுத்தணிகள்; ஸு-வாஸஸ:—வண்ணமயமான ஆடைகளினால்; த்ருஷ்ட்வா—காண்பதற்கு; ஸ்வ-நிலய-அப்யாஸே—தனது இல்லத்திற்கு அருகில்; லோல-க்ஷீ:—மின்னுகின்ற அழகிய விழிகளுடன்; ம்ருஷ்ட-குண்டலா:—அழகிய காதணிகளுடன்; பதிம்—அவள் கணவர்; பூத-பதிம்—பூதகணங்களின் தலைவர்; தேவம்—தேவர்கள்; ஓளதுஸுக் யாத்—மிக்க ஆர்வமுடன்; அப்யபாஷத—அவள் கூறினாள்.

வானில் பறந்து வந்துகொண்டிருந்த தேவமகளிர் தட்சன் நடத்தும் மிகப்பெரிய வேள்வியினைப் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டது அவரது புதல்வியான கற்புக்கரசி சதீயின் செவிகளில் விழுந்தது. ஒளிமிகுந்த கண்களுடனும், கண்ணைப்பறிக்கும் ஆடைகளுடனும் முத்து, பவளம், வைரம் போன்றவை பதித்தக் காதணிகளும், பதக்கங்களுடன் கூடிய கழுத்தணிகளும் அணிந்து கொண்டு அழகுமிகு தேவமகளிர் தட்சனின் வேள்வியில் கலந்து கொள்வதற்காக தனது இல்லத்தின் மேலாக வானில் பறந்து செல்வதைக் கண்ட சதீ உணர்ச்சிவயப்பட்டவளாக, பூதகணங்களின் தலைவரான தனது கணவனை அணுகி கீழ்க்கண்டவாறு பேசலானாள்.

பதம் 4.3.8
ஸதீ உவாச
ப்ரஜாபதேஸ் தே ஸ்வஸுரஸ்ய ஸாம்ப்ரதம்
நிர்யாபிதோ யஜ்ஞா-மஹோத்ஸவ: கில
வயம் ச தத்ராபிஸராம வாம் தே
யதி அர்திதாமீ விபுதா வ்ரஜந்தி ஹி

ஸதீ உவாச—சதீ கூறினாள்; ப்ரஜாபதே:—தக்ஷனின்; தே—உங்கள்; ஸ்வஸுரஸ்ய—மாமனார்; ஸாம்ப்ரதம்—இன்று; நிர்யாபித:—தொடங்கியிருக்கிறார்; யஜ்ஞ-மஹா-உத்ஸவ:—மிகப்பெரிய வேள்வி; கில—உறுதியாக; வயம்—நாம்; ச—மேலும்; தத்ர—அங்கே; அபிஸராம—போகலாம்; வாம—ஓ! எனது அன்பிற்குரிய சிவபெருமானே; தே—உங்கள்; யதி—இருந்தால்; அர்திதா—விருப்பம்; அமீ—இவர்கள்; விபுதா:—தேவர்கள்; வ்ருஜந்தி—செல்கின்றனர்; ஹி—ஏனெனில்.

சதீ கூறினாள்: அன்பிற்குரிய சிவபெருமானே! தங்கள் மாமனார் இப்போது பெரும் வேள்வியினைச் செய்து கொண்டிருக்கின்றார். அதில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட அனைத்துத் தேவர்களும் அங்கே போய்க் கொண்டிருக்கின்றனர். தாங்கள் விரும்பினால் நாமும் அங்கே செல்லலாம்.

பதம் 4.3.9
தஸ்மின் பகின்யோ மம் பர்த்ருபி: ஸ்வகைர்
த்ருவம் கமிஷ்யந்தி ஸுஹ்ருத்-தித்ருக்ஷவ:
அஹம் சதஸ்மின் பவதாபிகாமயே
ஸஹோபனீதம் பரிபர்ஹம் அர்ஹிதும்

தஸ்மின்—அவ்வேள்வியில்; பகின்ய:—சகோதரிகள்; மம—எனது; பர்த்ருபி:—தங்கள் கணவர்களுடன்; ஸ்வகை:—தங்களுக்குரிய; த்ருவம்—கண்டிப்பாக; கமிஷ்யந்தி—செல்வர்; ஸுஹ்ருத்—திக்ருக்ஷவ:—தங்கள் உறவினர்களைச் சந்திக்கும் ஆசை; அஹம்—நான்; ச—மேலும்; தஸ்மின்—அக்கூட்டத்தில்; பவதா—தங்களுடன் (சிவபெருமான்); அபிகாமயே—நான் விரும்புகிறேன்; ஸஹ—உடன்; உபனீதம்—கொடுக்கப்பட்ட; பரிபர்ஹம்—அணிகலன்களினால் அலங்கரித்து; அர்ஹிதும்—ஏற்றுக் கொள்வதற்கு.

எனது சகோதரிகள் அனைவரும் தங்கள் கணவன்மார்களுடன் தங்கள் உறவினர்களைக் காண்பதற்காக நிச்சயம் இவ்வேள்வியில் கலந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். நானும் எனது தந்தை எனக்குச் சீதனமாகத் தந்த ஆபரணங்களினால் என்னை அலங்கரித்துக் கொண்டு தங்களுடன் சேர்ந்து அங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

பதம் 4.3.10
தத்ர ஸ்வஸ்ரீ மே நனு பர்த்ரு-ஸம்மிதா
மாத்ரு ஸ்வஸ்ரீ: க்லின்ன-தியம்ச மாதரம்
த்ரக்ஷ்யே சிரோத்கண்ட-மனா மஹர்ஷிபிர்
உன்னீயமானம் ச ம்ருடாத்வர-த்வஜம்

தத்ர—அங்கே: ஸ்வஸ்ரீ:—உடன்பிறந்த சகோதரிகள்; மே—எனது; நனு—கண்டிப்பாக; பர்த்ரு-ஸம்மிதா:—தங்கள் கணவர்களுடன்; மாத்ரு-ஸ்வஸ்ரீ:—எனது தாயின் சகோதரிகள்; கிலின்ன-தியம்—பாசமுள்ள; ச—மேலும்; மாதரம்—அன்னை; த்ரக்ஷ்யே—நான் பார்ப்பேன்; சிர-உத்கண்ட-மனா:—நீண்ட நாட்களாக மிகவும் ஆர்வமோடிருந்தேன்; மஹா-ரிஷிபி:—மகாரிஷிகள்; உன்னீயமானம்—எழுகிறது; ச—மேலும்; ம்ருட—ஓ, சிவபெருமானே; அதிவர—வேள்வி; த்வஜம்—கொடிகள்.

அங்கே தனது சகோதரிகள், எனது அன்னையின் சகோதரிகள் மற்றும் அவர்களது கணவர்கள், என் மீது பாசமுள்ள உறவினர்கள் அனைவரும் இருப்பர். அங்கே சென்றால் அவர்களை ஒரு சேரக் காண இயலும், மேலும் அங்கே பறந்து கொண்டிருக்கும் வண்ணக் கொடிகளையும், முனிவர்கள் செய்யும் வேள்விச் சடங்குகளையும் கூடக் காண இயலும். எனவே இங்கே செல்வதற்கு நான் அதிகம் விரும்புகிறேன்.

பதம் 4.3.11
த்வய்ய ஏதத் ஆஸ்சர்யம் அஜாத்ம-மாயயா
விநிர்மிதம் பாதி குண-த்ரயாத் மகம்
ததாபி அஹம் யோஷித் அதத்த்வ-விச் சதே
தீனா தித்ருக்ஷே பவ மே பவ-க்ஷிரும்

த்வயீ—உங்களிடத்தில்; ஏதத்—இந்த; ஆஸ்சர்யம்—ஆச்சரியம்; அஜ—ஓ சிவபெருமானே; ஆத்ம-மாயயா—பரமபுருஷ பகவானின் புறச்சக்தியினால்; விநிர்மிதம்—படைத்தது; பாதி—தோன்றுதல்; குண-த்ரய-ஆத்மகம்—ஜட இயற்கையின் முக்குணங்களின் எதிரெதிர் செயல்களினால்; ததா அபி—இருந்தும் கூட; அஹம்—நான்; யோஷித்—பெண்; அதத்த்வ-வித்—மெய்யறிவில் தேர்ந்தவளில்லை; ச—மேலும்; தே—உங்கள்; தீனா—இயலாதவள்; திம்ருக்ஷே—காண விரும்புகிறேன்; பவ—ஓ, சிவபெருமானே; மே—எனது; பவ-க்ஷிதிம்—பிறந்த இடத்திற்கு.

இந்த உலகமானது ஜட இயற்கையின் முக்குணங்களின் எதிரெதிர் செயல் விளைவினால் அல்லது பரமபுருஷ பகவானின் புறச் சக்தியினால் வந்த வியத்தகு படைப்பாகும். இவ்வுண்மை நீங்கள் அறியாததல்ல. ஆனால் நானோ இதையெல்லாம் அறிய முடியாத ஏழைப் பெண். மெய்யறிவில் நான் தேர்ச்சி பெற்றவள் அல்ல. ஆகையினால் எனது பிறந்த இடத்தினை மீண்டும் ஒருமுறை காண்பதற்கு விழைகிறேன்.

பதம் 4.3.12
பஸ்ய ப்ரயாந்தீர் அபவான்ய-யோஷிதோ
‘பி அலங்க்ருதா: காந்த-ஸகா வரூதஸ:
யாஸாம் வ்ரஜத்பி: ஸிதி-கண்ட மண்டிதம்
நபோ விமானை: கல-ஹம்ஸ-பாண்டுபி:

பஸ்ய—சற்றுக் காண்பதற்கு; ப்ரயாந்தீ:—செல்வது; அபவ—ஓ பிறப்பற்றவரே; அன்ய-யோஷித:—பிற பெண்கள்; அபி—நிச்சயம்; அவங்க்ருதா:—அலங்கரித்துக்கொண்டு; காந்த-ஸகா:—தங்கள் கணவர் மற்றும் நண்பர்களுடன்; வாரூதஸ:—பெரும்பான்மையினர்; யாஸாம்—அவர்கள்; வ்ரஜத்பி:—பறந்துகொண்டு; ஸிதி-கண்ட—நீலகண்டரே; மண்டிதம்—அலங்கரித்தல்; நப:—வானம்; விமானை—விமானங்களுடன்; கவ-ஹம்ஸ—அன்னங்கள்; பாண்டுபி:—வெண்மை.

ஓ, பிறப்பிலியே, ஓ, நீலகண்டரே, எனது உறவினர்கள் மட்டுமல்ல, மற்றப் பெண்களும் ஆடை, அணிமணிகளினால் தங்களை அலங்கரித்துக் கொண்டு தங்கள் கணவர்களுடனும், நண்பர்களுடனும் அங்கே சென்று கொண்டிருக்கின்றனர். வெண்மை நிற அன்னப்பறவைகளைப் போல் வானில் பறக்கும் அவர்களது விமானக்கூட்டங்கள் பார்ப்பதற்கு எத்துணை ரம்மியமாக இருக்கிறது!

பதம் 4.3.13
கதம் ஸுதாயா: பித்ரு-கேஹ கௌதுகம்
நிஸம்ய தேஹ: ஸுர-வர்ய நேங்கதே
அநாஹுதா அபி அபியந்தி ஸௌஹ்ருதம்
பர்துர் குரோர் தேஹ-க்ருதஸ்ச கேதனம்

கதம்—எவ்வாறு; ஸுதாயா:—மகளின்; பித்ரு-கேஹ-கௌதுகம்—தனது தந்தையின் வீட்டில் நடக்கும் விழா; நிஸம்ய—கேள்விப்பட்டு; தேஹ:—உடல்; ஸுர-வர்ய—தேவர்களில் சிறந்தவரே; ந—இல்லை; இங்கதே—துன்பப்படுதல்; அநாஹுதா:—அழைக்காவிட்டாலும்; அபி—கூட; அபியந்தி—போவது; ஸௌஹ்ருதம்—நண்பன்; பர்து:—கணவனின்; குரோ:—குருவின்; தேஹ-க்ருத:—தந்தையின்; ச—மேலும்; கேதனம்—இல்லம்.

தேவர்களில் சிறந்தவரே! தனது தந்தையின் இல்லத்தில் ஒரு விழா நடக்கப்போவதைக் கேள்விப்பட்டப் பிறகும் கூட ஒரு மகளின் உடல் எவ்வாறு துடிக்காதிருக்கும்? நம்மை அழைக்கவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம், அழைப்பில்லாவிட்டால் கூட ஒருத்தி தனது கணவன், நண்பன், குரு மற்றும் தந்தையின் இல்லத்திற்குச் செல்வதில் எந்தவிதத் தவறும் இல்லை.

பதம் 4.3.14
தன் மே ப்ரஸீதேதம் அமர்த்ய வாஞ்சிதம்
கர்தும் பவான் காருணிகோ பதார்ஹதி
த்வயாத்மனோ ‘ர்தே ‘ஹம் அதப்ர-சக்ஷீ ஷா
நிரூபிதா மானுக்ருஹாண யாசித:

தத்—ஆகையினால்; மே—எனக்கு; ப்ரஸுத—அன்பு கூர்ந்து; இதம்—இந்த; அமர்த்ய—ஓ, இறப்பில்லாத் தேவரே; வாஞ்சிதம்—வாஞ்சை; கர்தும்—செய்வதற்கு; பவான்—தங்கள் மேலான; காருணிக:—அன்பு; பத—ஓ, பகவானே; அர்ஹதி—திறமுடைய: த்வயா—தங்களால்; ஆத்மன:—தங்களின் சொந்த உடல்; அர்தே—பாதியில்; அஹம்—நான்; அபத்ர-சக்ஷுஷா—எல்லா ஞானங்களும் உடைய; நிரூபிதா—நான் இடம்பெற்றிருக்கிறேன்; மா—எனக்கு; அனுக்ருஹண—கருணைக் காட்டுங்கள்; யாசித:—யாசிக்கிறேன்.

என்றும் அழியாத சிவபெருமானே, என்மீது கருணை கொண்டு எனது விருப்பத்தினை நிறைவேற்றுங்கள். தங்கள் உடலில் பாதியினை எனக்களித்துள்ளீர்கள். என்னிடத்தில் கருணை கொண்டு எனது வேண்டுகோளினை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

பதம் 4.3.15
ருஷிர் உவாச
ஏவம் கிரித்ர: ப்ரியயாபி பாஷித:
ப்ரத்யப்ய தத்த பிரஹஸன் ஸுஹ்ருத்-ப்ரிய:
ஸம்ஸ்மாரிதோ மர்ம-பித: குவாக் இஷுன்
யான் ஆஹ கோ விஸ்வ-ஸ்ருஜாம் ஸமக்ஷத:

ருஷி: உவாச—மைத்ரேய மாமுனிவர் கூறினார்; ஏவம்—இவ்வாறு; கிரித்ர:—சிவபெருமான்; ப்ரியயா—தனது அன்பு மனைவியினால்; அபிபாஷித:—பேசப்பட்டபொழுது; ப்ரத்யப்யதத்த—பதிலிறுத்தார்; ப்ரஹஸன்—புன்னகைத்து; ஸுஹ்ருத்-ப்ரிய:—உறவினர்களிடம் அன்பானவர்; ஸம்ஸ்மாரித:—நினைவுகூர்ந்து; மர்ம-பித:—இதயம் நொறுங்க; குவாக்-இஷுன்—சுடுசொற்கள்; யான்—எவை (வார்த்தைகள்); ஆஹ—கூறினார்; க:—யார் (தஷன்); விஷ்வ-ஸ்ருஜாம்—உலக வெளிப்பாடுகளைத் தோற்றுவித்தவர்கள்; ஸமக்ஷத:—முன்னிலையில்.

மைத்ரேய மாமுனிவர் கூறினார்: கைலாய மலையின் அதிபதியான சிவபெருமான் தனது மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு புன்னகையுடன் பதில் கூறினார். ஆனாலும் அவர் தட்சன் உலகப்பிரஜாபதிகளின் முன்னர் தன்னைப் பற்றிக் கூறிய இதயத்தைக் கிழிக்கும், வஞ்சின மொழிகளையும் நினைத்துக் கொண்டார்.

பதம் 4.3.16
ஸ்ரீ பகவான் உவாச
த்வயோதிதம் ஸோபனம் ஏவ ஸோபனே
அநாஹுதா அபி அபியந்தி பந்துஷு
தே யதி அனுத்பாதித-தோஷ-த்ருஷ்டயோ
பலீயஸானாத்ம்ய-மதேன-மன்யுனா

ஸ்ரீ பகவான் உவாச—உயர்ந்த பகவான் பதில் கூறினார்; த்வயா—உன்னால்; உதிதம்—சொல்லப்பட்டவை; ஸோபனம்—உண்மை தான்; ஏவ—நிச்சயமாக; ஸோபனே—எனது அன்பிற்குரிய அழகான மனைவியே; அநாஹுதா:—அழைப்பில்லாமலேயே; அபி—கூட; அபியந்தி—போவது; பந்துஷு—நண்பர்கள் மத்தியில்; தே—அவர்கள் (நண்பர்கள்); யதி—இருந்தால்; அனுத்பாதித-தோஷ-த்ருஷ்டய:—குற்றங் காணமாட்டார்கள்: பலீயஸா—மிக முக்கியமானது; அனாத்ம்ய-மதேன—உடலின் அடையாளம் காரணமாக ஏற்படும் ஆணவம்; மன்யுனா—ஆத்திரத்தினால்.

மேன்மைமிகு பகவான் பதில் கூறினார்: எனது அன்பிற்குரிய அழகான மனைவியே, அழைப்பில்லாமலேயே ஒருவன் தன்னுடைய நண்பனின் இல்லத்திற்குப் போகலாம் என்று நீ கூறியது முற்றிலும் உண்மையே. அதுவும் அவன் உடலின் அடையாளம் காரணமாக தனது விருந்தினனிடம் குற்றம் கண்டு, அதன் மூலம் அவனிடம் சினம் கொள்ளாதவனாக இருக்கும்பொழுது மட்டுமே.

பதம் 4.3.17
வித்யா-தபோ-வித்த-வபுர்-வய:-குலை:
ஸதாம் குணை: ஷட்பிர் அஸத்தமேதரை:
ஸ்ம்ருதௌ ஹதாயாம் ப்ருத-மான-துர்த்ருஸ:
ஸ்தப்தா ந பஸ்யந்தி ஹி தாம பூயஸாம்

வித்யா—கல்வி; தப:—தவம்; வித்த—செல்வம்; வபு:—உடலின் அழகு போன்றவை; வய:—இளமை; குலை:—குடிப்பிறப்பு; ஸதாம்—மங்கலமான; குணை:—இதுபோன்ற தன்மைகளினால்; ஷட்பி:—ஆறு; அஸத்தம-இதரை:—மகாத்மா அல்லாதவர்களுக்கு எதிரான பலனைக் கொடுக்கும்; ஸ்ம்ருதௌ—நற்புத்தி; ஹதாயாம்—தொலைந்துவிடும்; ப்ருத-மான-துர்த்ருஸ:—கர்வத்தினால் குருடாவர்; ஸதப்தா:—கர்வம் கொண்டு; ந—இல்லை; பஸ்யந்தி—பார்க்க; ஹி—ஆக; தாம—பெருமைகள்; பூயஸாம்—மகாத்மாக்களின்.

கல்வி, தவம், செல்வம், அழகு, இளமை மற்றும் குடிப்பிறப்பு என்னும் ஆறு குணங்களும் உயர்ந்தோர்க்குரியனவாக இருந்த போதிலும் அவற்றைப் பெற்றுவிட்டோம் என்னும் கர்வத்தினால் ஒருவர் கருத்துக்குருடர் ஆகிறார். அதனால் அவர் தனது நற்குணங்களை இழக்கிறார். மேலும் மிகச் சிறந்த மகாத்மாக்களின் பெருமைகளைக் கூட அவர்களால் பாராட்ட முடிவதில்லை.

பதம் 4.3.18
நைதாத்ருஸானாம் ஸ்வ-ஜன-வ்யபேக்ஷயா
க்ருஹான் ப்ரதீயாத் அனவஸ்திதாத்மனாம்
யே ‘ப்யாகதான் வக்ர-தியாபிச க்ஷதே
ஆரோபித-ப்ரூபிர் அமர்ஷணா க்ஷிபி:

ந—இல்லை; ஏதாத்ருஸானாம்—இதுபோன்று; ஸ்வ-ஜன—சுற்றத்தினர்; வ்யபேக்ஷயா—சார்ந்திருத்தல்; க்ருஹான்—இல்லத்திற்கு; ப்ரதீயாத்—ஒருவர் போகவேண்டும்; அவைஸ்தித—அமைதியில்லாதிருத்தல்; ஆத்மனாம்—மனம்; யே—எவர்கள்; அப்யாகதான்—உறவினர்கள்; வக்ர-தியா—கடுமையான வரவேற்பு; அபிசக்ஷதே—பார்த்தல்; ஆரோபித-ப்ரூபி:—தூக்கிய புருவங்கள்; அமர்ஷண—ஆத்திரம்; அக்ஷிபி:—கண்களுடன்.

அவர் உறவினராயிருந்தாலும் அல்லது நண்பராயிருந்தாலும் அவர் மனநிலை குலைந்து, வரும் விருந்தினரை முகம் திரிந்து ஆத்திரத்துடன் நோக்கக் கூடியவராயின் அவரது இல்லத்திற்கு ஒருவரும் செல்லக்கூடாது.

பதம் 4.3.19
ததாரிபிர் ந வ்யததே ஸிலீமுகை:
ஸேதே ‘ர்திதாங்கோ ஹ்ருதயேன தூயதா
ஸ்வானாம் யதா வக்ர-தியாம் துருக்திபிர்
திவா-நிஸம் தப்யதி மர்ம-தாடித:

ததா—ஆகையினால்; அரிபி:—எதிரி: ந—இல்லை; வ்யததே—காயப்படும்; ஸிலீமுகை:—அம்பினால்; ஸேதே—தங்கும்; அர்தித—துன்புறுத்தும்; அங்க:—ஒரு பாகத்தில்; ஹ்ருதயேன—இதயத்தில்; தூயதா—ஆழ்ந்த வருத்தத்தினை; ஸ்வானாம்—உறவினர்களுடைய; யதா—இருக்கின்ற; வக்ர-தியாம்—வஞ்சகமான; துருக்திபி:—கடுமையான சுடுமொழிகள்; திவா-நிஸம்—அல்லும் பகலும்; தப்யதி—வருத்தும்; மர்ம-தாடித:—ஒருவரை உணர்ச்சி காயப்படும் பொழுது.

சிவபெருமான் தொடர்ந்து கூறினார்: பகைவனது வில்லில் இருந்து வந்து தாக்கிய அம்பு ஒருவனுக்கு ஏற்படுத்தும் துன்பத்தினைக் காட்டிலும், அன்பில்லாத உறவினரின் சுடு சொற்கள் ஏற்படுத்தும் துன்பம், இரவும் பகலும் ஒருவனை வருத்திக் கொண்டே இருக்கும்.

பதம் 4.3.20
வ்யக்தம் த்வம் உத்க்ருஷ்ட-கதே: ப்ரஜாபதே:
ப்ரியாத்மஜானாம் அஸி ஸுப்ரு மே மதா
ததாபி மானம் ந பிது: ப்ரபத்யஸே யத:
மத்-ஆஸ்ரயாத் க: பரிதப்யதஸ யத:

வ்யக்தம்—தெளிவாகிறது; த்வம்—நீ; உத்கிருஷ்ட-கதே—நன்னடத்தை உடையவள்; ப்ரஜாபதே:—பிரஜாபதி தக்ஷன்: ப்ரியா—அன்பிற்குரியவள்; ஆத்மஜானாம்—புதல்விகளில்; அஸி—நீ இருக்கிறாய்; ஸுப்ரு—விற்போன்ற அழகிய புருவங்களை உடையவளே; மே—எனது; மதா—கருதி; ததா அபி—இதுவரை; மானம்— மாண்பு; ந—இல்லை; பிது:—உன் தந்தையிடமிருந்து; ப்ரபத்யஸே—நீ சந்திக்க வேண்டியது; மத்-ஆஸ்ரயாத்—என்னுடைய தொடர்பினால்; க:—தக்ஷன்; பரிதப்யதே— வருந்துவாய்; யத:—அவரிடமிருந்து.

பால் போன்று வெண்மை நிறமுடைய மனைவியே! தட்சன் தனது புதல்விகளிலேயே உன்னிடந்தான் அதிக அன்பு வைத்திருக்கிறார் என்பதை நான் நன்கறிவேன். ஆனாலும் எனது மனைவியாக நீ இருப்பதினால் அங்கு உனக்கு உரிய மரியாதை கிடைக்காது. என்னோடு கொண்டிருக்கும் தொடர்பினால் நீ வருந்த வேண்டி இருக்கும்.

பதம் 4.3.21
பாபச்யமானேன ஹ்ருதாதுரேந்த்ரிய:
ஸம்ருத்திபி: பூருஷ-புத்தி-ஸாக்ஷிணாம்
அகல்ப ஏழாம் அதிரோடும் அஞ்ஜஸா
பரம்பதம் த்வேஷ்டி யாதாஸுரா ஹரிம்

பாபச்யமானேன—எரிகின்ற; ஹ்ருதா—இதயத்தில்; ஆதுர-இந்த்ரிய:—அமைதியற்றோர்; ஸம்ருத்திபி:—மங்கலமான பெருமையினால்; பூருஷ-புத்தி-ஸாக்ஷிணாம்—எப்போதும் பரமபுருஷ பகவானின் நினைவிலேயே ஆழ்ந்திருப்பவர்கள்; அகல்ப:—இயலாது; ஏஷாம்—இதுபோன்ற மனிதர்கள்; அதிரோடும்—உயர்வது; அஞ்ஜஸா—விரைவாக; பரம்—மட்டும்; பதம்—அந்நிலைக்கு; த்வேஷ்டி—காழ்ப்புணர்ச்சி; யதா—எவ்வாறு; அஸுரா:—அசுரர்கள்; ஹரிம்—முழுமுதற் கடவுள்.

வீண் ஆணவம் கொண்டு மனத்திலும், புத்தியிலும் அமைதியற்றிருப்போர் தன்னை உணர்ந்தோரின் பெருமையினைப் பெறார். தன்னை உணரும் நிலைக்கு உயர முடியாத அசுரர்கள் முழுமுதற் கடவுளிடம் காழ்ப்புணர்ச்சி கொள்வது போன்று தன்னை உணர்ந்த ஞானிகளிடத்தும் காழ்ப்புணர்ச்சி கொள்வர்.

பதம் 4.3.22
ப்ரத்யுத்கம-ப்ரஸ்ரயணாபி வாதனம்
விதீயதே ஸாது மித: ஸுமத்யமே
ப்ராஜ்ஞை: பரஸ்மை புருஷாய சேதஸா
குஹா-ஸயாயைவ ந தேஹ-மானினே

ப்ரத்யுத்கம—தனது இருக்கையிலிருந்து எழுந்து; ப்ரஸ்ரயண—வரவேற்று; அபிவாதனம்—வந்தனங்கள்; விதீயதே— கருதப்படுகின்றது; ஸாது—முறையான; மித:—ஒருவருக்கொருவர்; ஸு-மத்யமே—எனது அன்பான இளம் மனைவியே: ப்ராஜ்ஞை:—அறிவுள்ளவர்களால்; பரஸ்மை—பரம்பொருளுக்கு; புருஷாய—பரமாத்மாவிற்கு; சேதஸா—புத்தியுடன்; குஹா-ஸயாய—உடலினுள் இருக்கும்; ஏவ—உறுதியாக; ந—இல்லை; தேஹ-மானினே—உடலை மட்டும் அறிந்த ஒருவனுக்கு.

எனது அன்பிற்குரிய இளம் மனைவியே, நண்பர்களும், உறவினர்களும் ஒருவருக்கொருவர் எழுந்து நின்று வரவேற்கவும், வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும், வந்தனங்களைத் தெரிவிக்கவும் செய்கின்றனர். ஆனால் மிகவும் உன்னத நிலையினை அடைந்தவர்களும், புத்திமான்களும், அவ்வுடலினுள் இருக்கும் பரமாத்மாவிற்குத் தங்கள் மரியாதைகளைத் தெரிவிப்பார்களேயன்றி தனது உடலை மட்டுமே அறிந்த ஒருவருக்கல்ல.

பதம் 4.3.23
ஸத்த்வம் விஸுத்தம் வஸுதேவ-ஸப்திதம்
யத் ஈயதே தத்ர புமான் அபாவ்ருத:
ஸத்த்வே ச தஸ்மின் பகவான் வாஸுதேவோ
ஹி அதோக்ஷஜோ மே நமஸா விதீயதே

ஸத்த்வம்—உணர்வு; விஷுத்தம்—தூய; வஸுதேவ—வசுதேவர்; ஸப்திதம்—அறிவது; யத்—ஏனெனில்; ஈயதே—வெளிப்படுதல்; தத்ர—அங்கே; புமான்—பரம்பொருள்; அபாவ்ருத:—எந்தவித மறைப்புமின்றி; ஸத்த்வே—உணர்வினில்; ச—மேலும்; தஸ்மின்—அதனில்; பகவான்—முழுமுதற் கடவுள்; வாஸுதேவ:—வாசுதேவர்; ஹி—ஏனென்றால்; அதோக்ஷஜ:—உன்னதமான; மே—என்னால்; நமஸா—வந்தனங்களுடன்; விதீயதே—வணங்கப்படுதல்.

எப்போதும் நான் கிருஷ்ண உணர்வினில் பகவான் வாசுதேவருக்கு எனது வணக்கங்களைப் படைக்கிறேன். கிருஷ்ண உணர்வு என்பது தூய்மையானது. அதில்தான் வாசுதேவர் என்றறியப்படும் முழுமுதற் கடவுள் எந்தவித மறைப்புமின்றி வெளிப்படுகிறார்.

பதம் 4.3.24
தத் தே நிரீக்ஷயோ ந பிதாபி தேஹ-க்ருத்
தக்ஷோ மம த்வித் தத்-அனுவிரதாஸ் ச யே
யோ விஸ்வஸ்ருக்-யஜ்ஞா-கதம் வரோரு மாம்
அநாகஸம் துர்வ சஸாகரோத் திர:

தத்—ஆகையினால்; தே—உனது; நிரீக்ஷய:—பார்ப்பதற்காக; ந—இல்லை; பிதா—உனது தந்தை; அபி—இருந்தாலும்; தேஹ-க்ருத்—உனது உடலைத்தந்தவராயினும்; தக்ஷ:—தக்ஷன்; மம—எனது; த்வித்—காழ்ப்பு; தத்-அனுவ்ரத:—அவரது (தக்ஷனின்) அடியவர்கள்: ச—மேலும்; யே—எவர்; ய:—யார் (தக்ஷன்;) விஸ்வ-ஸ்ருக்—விஸ்வஸ்ருக்கர்களின்; யஜ்ஞ-கதம்—வேள்விச் சாலையில் இருப்பவர்களின்; வர-ஊரு—ஓ, சதீயே; மா—எனது; அநாகஸம்—அறியாமை; துர்வசஸா—கொடிய வார்த்தைகளினால்; அகரோத்-திர:—அவமதிக்கப்படுதல்.

ஆகையினால் உன்னைப் பெற்றெடுத்ததின் மூலம் உன் உடலை வளர்த்தவராக இருந்தாலும் நீ அவரைப் பார்ப்பதற்காகச் செல்லக்கூடாது. ஏனெனில் அவரும் அவரது அடியவர்களும் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளனர். வணங்கத்தக்கவளே, நான் ஏதும் அறியாதவனாக இருந்தும் அவரது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மிகக் கொடிய வார்த்தைகளினால் என்னை அவமதித்தார் என்பது நீ அறிந்ததுதானே!

பதம் 4.3.25
யதி வ்ரஜிஷ்யஸி அதிஹாய மத்-வசோ
பத்ரம் பவத்யா ந ததோ பவிஷ்யதி
ஸம்பாவிதஸ்ய ஸ்வ-ஜனாத் பராபவோ
யதா ஸ ஸத்யோ மரணாய கல்பதே

யதி—இருந்தால்; வ்ரஜிஷ்யஸி—நீ செல்வது; அதிஹாய—புறக்கணித்து; மத்-வச:—எனது வார்த்தைகளை; பத்ரம்—நல்ல; பவத்யா—உனது: ந—இல்லை; தத—பிறகு; பவிஷ்யதி—ஆவாய்; ஸம்பாவிதஸ்ய—மிகவும் மரியாதைக்குரிய; ஸ்வ-ஜனாத்—உனது சொந்த உறவினர்களினால்; பராபவ:—அவமதிக்கப்பட்டு; ஸத்ய:—உடன்; மரணாய—மரணத்திற்கு; கல்பதே—இணையாகும்.

இவ்வறிவுரைகள் அனைத்தையும் புறக்கணித்து நீ அங்கே போக முடிவு செய்தால், உனது எதிர்காலம் நன்றாயிராது. நீ மிகவும் மரியாதைக்குரியவள், அப்படியிருக்க உனது உறவினர்கள் உன்னை அவமதித்தார்கள் என்றால், அவ்வவமதிப்பானது மரணத்திற்கு இணையானது ஆகும்.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “சிவபெருமானுக்கும் சதீக்கும் இடையே நடந்த உரையாடல்” எனும் தலைப்பைக் கொண்ட மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare