அத்தியாயம் – 31
பிரசேதார்களுக்கு நாரதர் உபதேசித்தல்
பதம் 4.31.1 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார். இதன் பிறகு பிரசேதார்க்கு ஆயிரம் வருடங்கள் இல்லற வாழ்க்கை வாழ்ந்து, ஆன்மீக உணர்வில் நிறைவான ஞானம் எய்தப்பெற்றனர். இறுதியில் அவர்கள் முழுமுதற் கடவுள் தங்களுக்கு அளித்த அருளுரையினை நினைவு கூர்ந்து தங்கள் மனைவியைக் காக்கும் பொறுப்பினைத் தங்கள் குற்றமற்ற மைந்தனிடம் ஒப்படைத்து விட்டு இல்லம் துறந்து சென்றனர்.
பதம் 4.31.2 : பிரசேதார்கள், ஜாஜலி முனிவர் வாழ்ந்து கொண்டிருந்த மேற்குக் கடற்கரைக்குச் சென்றனர். அனைத்து உயிர்களுக்கு சமமானவனாகச் செய்யும் ஆன்மீக ஞானத்தில் நிறைவு பெற்றுப் பின்னர் பிரசேதார்கள் கிருஷ்ண உணர்வில் நிறைவுடையோராயினர்.
பதம் 4.31.3 : யோக சித்திக்கான யோகாசனப் பயிற்சியினால் பிரசேதார்கள் தங்களது உயிர்க்காற்று, மனம், வாக்கு, புறப்பார்வை போன்றவற்றைக் கட்டுப்படுத்தினர். இதன் வழி அவர்கள் உலகப் பற்றிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றனர். நேராக உடலை வைத்திருந்ததின் மூலம் அவர்களால் தங்கள் மனதினை மிகவுயர்ந்த பிரம்மத்தின் மீது ஒருமுகப்படுத்த முடிந்தது. இவ்வாறு அவர்கள் பிராணாயாம பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது தேவர்கள் மற்றும் அசுரர்கள் என்று இருசாராராலும் வணங்கப்படும் நாரத முனிவர் அங்கே வந்தார்.
பதம் 4.31.4 : நாரத முனிவர் அங்கே வருவதைக் கண்ட பிரசேதார்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்தனர். அவருக்குரிய வந்தனங்களை அர்ப்பணித்து, அவரை அனைவரும் வழிபட்டனர். நாரத முனிவர் அமர்ந்த பிறகு அவரிடம் அவர்கள் உரையாடத் தொடங்கினர்.
பதம் 4.31.5 : பிரசேதார்கள் அனைவரும் நாரதரிடம் உரையாடலைத் தொடங்கினர்: ஒ, மாமுனிவரே, ஓ அந்தணரே, நீர் இங்கு வரும்பொழுது உமக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டிருக்காது என்று நாங்கள் நம்புகிறோம் உம்மை நாங்கள் தரிசித்தது எமது பெரும்பேறாகும். சூரியன் உலா வருவதினால் திருடர்கள் மற்றும் தீயோரினால் ஏற்படும் இரவின் பயத்திலிருந்து மக்கள் விடுதலை பெறுகின்றனர். அதுபோல் நீரும் சூரியனைப் போல் வலம் வந்து அனைத்து வகையான அச்சங்களையும் விரட்டியடிக்கின்றீர்.
பதம் 4.31.6 : ஓ, பிரபுவே, இல்லற வாழ்வில் நாங்கள் மிகவும் பற்று வைத்திருந்த காரணத்தினால் சிவபெருமானும், பகவான் விஷ்ணுவும் எங்களுக்கு அருளிய உபதேசங்களை நாங்கள் பெரும்பாலும் மறந்துவிட்டோம் என்பதை உமக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பதம் 4.31.7 : போற்றுதற்குரிய குருவே, எங்களது உன்னத ஞானத்தில் ஒளி பெறச் செய்வீராக, அது ஒரு கைவிளக்கினைப் போல், உலக வாழ்க்கையென்னும் அறியாமை இருட்கடலைக் கடப்பதற்கு எங்களுக்குப் பயன்படும்.
பதம் 4.31.8 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே; பிரசேதார்கள் இவ்வாறு விண்ணப்பித்துக் கொண்டவுடன் முழுமுதற் கடவுளின் சிந்தனையிலேயே எப்போதும் ஆழ்ந்திருக்கும் பரமபக்தரான நாரதர் பதில் கூறத் தொடங்கினார்.
பதம் 4.31.9 : மாமுனிவர் நாரதர் கூறினார்: பரம நெறியாளரான முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்காக ஓர் உயிர் பிறக்கும் பொழுது, அவனது பிறப்பு, அவனது அனைத்துப் பலன் தரும் செயல்கள், அவனுடைய ஆயுட்காலம், அவனது மனம், அவனுடைய வார்த்தைகள் போன்றவையெல்லாம் உண்மையில் நிறைவடைகின்றன.
பதம் 4.31.10 : நாகரீக மனிதன் மூன்று வகையான பிறப்புக்களை எடுக்கிறான். தாய் தந்தையின் வழி வருகின்ற முதல் பிறப்பு சுக்கிலத்தினால் உண்டானது. இரண்டாவது பிறப்பு ஆன்மீக குருவினால் தீட்சையளிக்கப்படும் பொழுது வருகின்ற இரண்டாம் பிறப்பு “ஸாவித்ர எனப்படும். “யாஜ்ஞிசு” எனப்படும் மூன்றாம் பிறப்பு பகவான் விஷ்ணுவை வழிபடுவதற்கு ஒருவனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் பொழுது வருவதாகும். இப்பிறப்புக்களை அடைந்தாலும், தேவர்களின் ஆயுட்காலத்தைப் பெற்றாலும் பகவானின் தொண்டில் உண்மையில் ஒருவன் ஈடுபடாதபொழுது இவையனைத்தும் பயனற்றவையே ஆகும். அதுபோல் ஒருவனது செயல்கள் லோகாயதமாயினும் அல்லது ஆன்மீகமாயினும் பகவானைத் திருப்திப்படுத்துவதற்குரியவையாக இல்லையென்றால் அவையும் பயனற்றவையே ஆகும்.
பதம் 4.31.11 : பக்தித் தொண்டின்றி, கடுமையானத் தவங்கள், கேட்டல், பேசும் சக்தி, மனயூகச் சக்தி, உயர்ந்த புத்தி மேன்மை, வலிமை மற்றும் புலன்களின் சக்தி போன்றவற்றினால் பயன் என்ன?
பதம் 4.31.12 : முழுமுதற் கடவுளை உணர்வதற்கு இறுதியில் உதவாத மெய்யுணர்வுப் பயிற்சிகள் எதுவாயினும் அது யோக ஹித்தியாயினும், விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சியாயினும், கடுத்தவமாயினும், துறவினை மேற்கொள்வதாயினும், வேதங்களைக் கற்பதாயினும் இவையனைத்தும் பயனற்றவையே ஆகும். இவையனைத்தும் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை என்ற போதிலும் முழுமுதற் கடவுளான ஹரியினை ஒருவன் உணர்ந்து கொள்ளாத வரையில் இவையனைத்தும் பயனற்றவையே ஆகும்.
பதம் 4.31.13 : தன்னுணர்வு பெறுவதற்கு உண்மையான ஆதாரமாகத் திகழ்பவர் முழுமுதற் கடவுளேயாவார். இதனைத் தொடர்ந்து கர்மம், ஞானம், யோகம், பக்தி என்னும் அனைத்துப் புண்ணியச் செயல்களுக்கும் முழுமுதற் கடவுளே குறிக்கோளாக விளங்குகின்றார்.
பதம் 4.31.14 : மரத்தின் வேரில் நீர் வார்க்கும்பொழுது அது அடிமரம், கிளைகள், மிலாறுகள் போன்றவற்றிற்கு சக்தியளிக்கின்றது. அதுபோல் வயிற்றுக்கு இடப்படும் உணவு புலன்களுக்கும் உடலில் பிற பாகங்களுக்கும் புத்துணர்ச்சியளிக்கிறது. இதுபோன்றே பக்தித் தொண்டின் மூலம் முழுமுதற் கடவுளை வணங்குவது அவரின் பாகங்களாக விளங்கும் தேவர்களைத் திருப்திப்படுத்துகிறது.
பதம் 4.31.15 : மழைக் காலத்தில் நீர் சூரியனிலிருந்தே உண்டாகிறது. உரிய காலத்தில், கோடைக் காலத்தின் போது அதே நீர் சூரியனால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதுபோல் அசைகின்ற அசையாத உயிர்கள் அனைத்தும் உண்டாகின்றன. மீண்டும் சில காலத்திற்குப் பிறகு இவையனைத்தும் பூமியிலேயே மக்கி மடிகின்றன. அதுபோல் அனைத்தும் முழுமுதற் கடவுளிடமிருந்தே தோன்றி குறிப்பிட்ட காலத்தில் அவரிடமே திரும்பிச் செல்கின்றன.
பதம் 4.31.16 : சூரிய ஒளியிலிருந்து சூரியக் கதிர்கள் வேறுபடாதிருப்பது போல் இப்பிரபஞ்சத் தோற்றமும் முழுமுதற் கடவுளிடமிருந்து வேறுபடாதிருக்கின்றது. ஆகையினால் முழுமுதற் கடவுள் உலகப் படைப்பில் எங்கும் வியாபித்திருக்கின்றார். புலன்கள் செயல்படும் பொழுது அவை உடலின் பாகங்களாகத் தோன்றுகின்றன. ஆனால் உடல் நித்திரையில் இருக்கும்பொழுது அவற்றின் செயல்கள் வெளிப்படுவதில்லை. இதுபோல் பரமபுருஷரிடமிருந்து இப்பிரபஞ்சப் படைப்பு முழுதும் ஒன்றாகவும் வேறாகவும் தோன்றுகின்றது.
பதம் 4.31.17 : அன்பிற்குரிய அரசர்களே, சில நேரம் வானில் மேகங்கள் காணப்படுகின்றன. சில நேரம் இருளும், சில நேரம் ஒளியும் காணப்படுகின்றது. இவையனைத்தின் தோற்றங்களும் இடைவிடாது அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதுபோல் பரம மெய்ப்பொருளில் தமோகுணம், ரஜோகுணம், சத்துவகுணம் போன்றவை அடுத்தடுத்து தொடர் சக்திகளாகத் தோன்றுகின்றன. சில நேரங்களில் அவை தோன்றுகின்றன. அதுபோல் சில நேரங்களில் அவை மறைகின்றன.
பதம் 4.31.18 : பரமபுருஷ பகவானே அனைத்துக் காரணங்களுக்கும் மூல காரணராக இருக்கின்றனர். ஆதலினால் அவரே அனைத்துத் தனிப்பட்ட உயிர்களிடத்தும் பரமாத்மாவாக இருக்கின்றார். மேலும் அவரே ஆதி காரணராகவும் நிமித்த காரணராகவும் விளங்குகின்றார். பெளதீக படைப்புகளிலிருந்து அவர் தனித்தே இருக்கின்ற காரணத்தினால் அவர் அவற்றின் தொடர்புகளில் இருந்து விடுதலை பெற்றவராகவும், பரு இயற்கையின் தலைவராகவும் இருக்கின்றார். ஆகையினால் தன்மையினால் உங்களை அவரோடு ஒன்று எனக் கருதி அவரது பக்தித் தொண்டில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
பதம் 4.31.19 : ஏதோ ஒரு வழியில் திருப்தியடைந்து எல்லா உயிர்களுக்கும் கருணை காட்டுவதினாலும் புலனின்பத்திலிருந்து புலன்களைக் கட்டுப்படுத்துவதினாலும் ஒருவன் முழுமுதற் கடவுளான ஜனார்தனனை மிக விரைவில் திருப்திப்படுத்த முடியும்.
பதம் 4.31.20 : உலக ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் துடைத்தப் பிறகு பக்தர்கள் அனைத்து மன அழுக்குகளிலிருந்தும் விடுதலை பெறுகின்றனர். இவ்வாறு அவர்கள் பகவானை எப்போதும் தொடர்ந்து நினைந்து அவருடன் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாடுகின்றனர். தனது பக்தர்களின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும் முழுமுதற் கடவுள், நமது தலைக்கு மேல் உள்ள வானம் எவ்வாறு மறைந்து சுடுவதில்லையோ அதுபோல் அவர்களை விட்டு அவர் ஒரு கணம் கூடப் பிரிவது இல்லை.
பதம் 4.31.21 : உலக உடைமைகள் ஏதுமின்றி பகவானின் பக்தித் தொண்டில் முழு மகிழ்ச்சியடையும் பக்தர்கள் மீது முழுமுதற் கடவுள் மிகுந்த பிரியமுடையவராகிறார். உண்மையில் இப்பக்தர்களின் பக்திச் செயல்களைப் பகவான் விரும்பிச் சுவைக்கிறார். கல்வி, செல்வம், குலப்பெருமை, பலன் தரும் செயல் போன்றவற்றினால் ஆணவமுற்றோர் உலகியற் பொருட்களை அடைந்திருப்பதினால் தற்பெருமை கொள்கின்றனர். அதனால் அவர்கள் பக்தர்களை அடிக்கடி இழிவு செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் பகவானை வழிப்பட்டால் கூடப் பகவான் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை.
பதம் 4.31.22 : முழுமுதற் கடவுள் சுய நிறைவுடையவராக விளங்கிய போதிலும் அவர் தமது பக்தர்களைச் சார்ந்தவராகவே இருக்கின்றார். அவர் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமிதேவியைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அதுபோல் இலட்சுமிதேவியின் கருணைக்காக அலையும் மன்னர்கள் மற்றும் தேவர்களைப் பற்றியும் அவர் கவலைப்படுவது இல்லை. உண்மையில், முழுமுதற் கடவுளை வழிபடாத நன்றிமிக்க மனிதன் எங்கே இருக்கிறான்?
பதம் 4.31.23 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பு மன்னன் விதுரனே, பிரம்ம தேவனின் புதல்வரான ஸ்ரீநாரத முனிவர், இவ்வாறு முழுமுதற் கடவுளின் அனைத்து உறவுகளைப் பற்றியும் பிரசேதார்களுக்கு விளக்கிக் கூறினார். அதன் பின்னர் அவர் பிரம்ம லோகத்திற்குத் திரும்பிச் சென்றார்.
பதம் 4.31.24 : உலகின் துரதிர்ஷ்டங்கள் அனைத்தையும் சொல்லும் பகவானின் பெருமைகளை நாரத முனிவரின் வாயினின்று கேட்டறிந்த பிரசேதார்கள் முழுமுதற் கடவுள் மீது மிகுந்த பற்றுடையோராகினர். அவரது தாமரைத் திருவடிகளைத் தியானித்து அவர்கள் பரகதிக்கு முன்னேறினர்.
பதம் 4.31.25 : அன்பார்ந்த விதுரனே, நீ அறிய விரும்பிய, நாரதருக்கும் பிரசேதார்களுக்கும் இடையே நடைபெற்ற பகவானின் பெருமைகள் பற்றிய உரையாடல்கள் அனைத்தையும் உனக்கு நான் கூறிவிட்டேன். அவற்றைப் பற்றி என்னால் முடிந்த அளவிற்கு நான் விளக்கியிருக்கிறேன்.
பதம் 4.31.26 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ஒ, அரசர்களிற் சிறந்தோனே (பரீக்ஷித்து மன்னன்). நான் இப்போது சுயாம்புவ மனுவின் முதல் மைந்தனான உத்தான பாதனின் வம்சத்தைப் பற்றிக் கூறி முடித்திருக்கிறேன். அடுத்து சுவாயம்புவ மனுவின் இரண்டாவது மைந்தனான பிரியவிரதனின் வம்சத்தைப் பற்றிக் கூறப் போகிறேன். இவற்றை நீ மிகவும் கவனமுடன் கேட்பாயாக.
பதம் 4.31.27 : மகாராஜா பிரியவிரதன் மாமுனிவர் நாரதரிடமிருந்து உபதேசங்கள் பெற்றிருந்த போதிலும் அவர் இப்பூமியில் ஆள்வதிலேயே ஈடுபட்டிருந்தார். உலகச் செல்வங்கள் அனைத்தையும் அவர் முற்றிலும் அனுபவித்து மகிழ்ந்த பின்னர் அவர் தனது ஆஸ்திகளைத் தனது மைந்தர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். பின்னர் அவர் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைவதற்கான நிலை எய்தப் பெற்றார்.
பதம் 4.31.28 : இவ்வாறு முழுமுதற் கடவுள் மற்றும் அவர் பக்தர்களின் உன்னதச் செய்திகளை மாமுனிவர் மைத்ரேயரிடமிருந்து கேட்ட விதுரர் தன்னை இழந்த மெய்மறந்த நிலைமைக்கு ஆளானார். கண்களில் கண்ணீர் பெருகிவர அவர் உடனே தன் ஆன்மீக குருவின் தாமரைத்திருவடிகளில் வீழ்ந்தார். பின்னர் தனது இதயத்தின் நடுவே முழுமுதற் கடவுளை நிலை நிறுத்தினார்.
பதம் 4.31.29 : ஸ்ரீவிதுரர் கூறினார்: ஒ, மகா யோகியே ஓ, பக்தர்கள் அனைவரிலும் சிறந்தவரே, உமது அளவற்றக் கருணையினாலேயே இவ்விருண்ட உலகத்திலிருந்து விடுதலைக்கானப் பாதையை அறிந்தோர் இதில் பயணம் செய்தால், உலகிலிருந்து ஒருவன் விடுதலை பெறுவதோடு வீடுபேறும் பெற்று முழுமுதற் கடவுளையும் அவன் அடையக்கூடும்.
பதம் 4.31.30 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: விதுரர் இவ்வாறு மாமுனிவர் மைத்ரேயருக்குத் தனது வந்தனங்களைச் செலுத்தி அவரின் அனுமதி பெற்று உலக ஆசைகள் அற்றவராக இருந்த போதிலும் தன்னுடைய உறவினர்களைக் காண ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
பதம் 4.31.31 : ஒ, மன்னனே, முழுமுதற் கடவுளை முற்றிலும் சரணடைந்த அரசர்களின் இச்சரிதங்களைக் கேட்பவர்கள் எந்தவித இடையூறுமின்றி நீண்ட ஆயுள், செல்வம், நற்புகழ், நல்யோகம் மற்றும் இறுதியில் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைவதற்கான வாய்ப்பு போன்றவற்றை எய்துவர்.