அத்தியாயம் – 2
சிவபெருமானை தட்சன் சபித்தல்
பதம் 4.2.1
விதுர உவாச
பவே ஸீலவதாம் ஸ்ரேஷ்டே தக்ஷோ துஹித்ரு-வத்ஸல:
வித்வேஷம் அகரோத் கஸ்மாத் அனாத்ருத்யாத்மஜாம் ஸ்தீம்
விதுர உவாச—விதுரர் கூறினார்; பவே—சிவபெருமானிடம்; ஸீலவதாம்—மேன்மையாளர்களுக்கிடையில்; ஸ்ரேஷ்டே—மிகச் சிறந்தவர்; தக்ஷ:—தட்சன்; துஹித்ரு-வத்ஸல—தன் மகளிடம் மிகவும் பாசமுடையவர்; வித்வேஷம்—வெறுப்பு; அகரோத்—ஏற்பட்டது; கஸ்மாத்—ஏன்; அனாத்ருத்ய—புறக்கணித்தல்; ஆத்மஜாம்—தனது சொந்த மகளை; ஸதீம்—சதீ.
விதுரர் கேட்டார்: தட்சன் தன் புதல்வி மீது மிகவும் பாசம் வைத்திருந்தும் மேன்மையானவர்களில் மிகச் சிறந்த சிவபெருமான் மீது ஏன் வெறுப்பினைக் கொண்டிருந்தார்? தனது அருமை மகளை தட்சன் ஏன் புறக்கணித்தார்?
பதம் 4.2.2
கஸ் தம் சராசர-குரும் நிர்வைரம் ஸாந்த-விக்ரஹம்
ஆத்மாராமம் கதம் த்வேஷ்டி ஜகதோ தைவதம் மஹத்
க:—யார் (தட்சன்); தம்—அவர் (சிவபெருமான்); சராசர—உலகம் முழுவதிற்கும் (அசைகின்ற மற்றும் அசையாத அனைத்திற்கும்); குரும்—குருவானவர்; நிர்வைரம்—பகை ஏதுமின்றி; ஸாந்த-விக்ரஹம்—அமைதி நிறைந்தவர்; ஆத்ம-ஆராமம்—தன்னுள் திருப்தியுற்றவர்; கதம்—எவ்வாறு; த்வேஷ்டி—துவேஷம்; ஜகத:—உலகின்; தைவதம்—தேவர்; மஹத்—மிகச் சிறந்தவர்.
இவ்வுலகிற்கெல்லாம் ஆன்மீக குருவாக விளங்கும் சிவபெருமான் பகையுணர்ச்சி ஏதுமில்லாதவர், அமைதி நிறைந்தவர் என்பதோடு தன்னுள் திருப்தியுற்றவரும் ஆவார். அனைத்துத் தேவர்களிலும் மிகச் சிறந்தவர். உண்மை இவ்வாறிருக்க தட்சன் ஏன் அவரிடம் பகைமை பாராட்டினார்?
பதம் 4.2.3
ஏதத் ஆக்யாஹி மே ப்ரஹ்மன் ஜாமாது: ஸ்வஸுரஸ்ய ச
வித்வேஷஸ் து யத: ப்ராணாம்ஸ் தத்யஜே துஸ்த்யஜான் ஸதீ
ஏதத்—இவ்வாறு; ஆக்யாஹி—அருள் கூர்ந்து சொல்வீராக; மே—எனக்கு; ப்ரஹ்மன்—ஓ, அந்தணரே; ஜாமாது:—மருமகனின் (சிவபெருமான்); ஸ்வஸுரஸ்ய—மாமனாரின் (தக்ஷன்); ச—மேலும்; வித்வேஷ:—பகைமை; து—அவ்வாறிருக்க; யத:—எக்காரணத்தினால்; ப்ராணான்—அவளது வாழ்க்கை; தத்யஜே—முடித்துக் கொண்டாள்; துஸ்த்யஜான்—அவ்வாறு முடிப்பதற்கு அது அத்துணை எளியதன்று; ஸதீ—சதீ.
எனது அன்பிற்குரிய மைத்ரேயரே, ஒருவர் தனது உயிரை விட்டுவிடுவது என்பது எத்துணைக் கடினமானது! இப்பேர்ப்பட்ட மருமகனும், மாமனாரும் ஏன் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர் என்பதையும், சிறந்த பெண் தெய்வமான சதீ தனது உயிரை ஏன் மாய்த்துக் கொண்டாள் என்பது பற்றியும் என்மீது அன்பு கொண்டு விளக்குவீரா?
பதம் 4.2.4
மைத்ரேய உவாச
புரா விஸ்வ-ஸ்ருஜாம் ஸத்ரே ஸமேதா: பரமர்ஷய:
ததாமர-கணா: ஸர்வே ஸானுகா முனயோ ‘க்னய:
மைத்ரேய: உவாச—மைத்ரேய முனிவர் கூறினார்; புரா—முன்னொரு சமயம் (ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில்); விஸ்வ-ஸ்ருஜாம்—உலகைப் படைத்தவர்களின்; ஸத்ரே—ஒரு வேள்வியில்; ஸமேதா:—கூடினர்; பரமர்ஷய:—மாமுனிவர்கள்; ததா—மேலும் கூட; அமர-கணா:—தேவர்கள்; ஸர்வே—எல்லோரும்; ஸ-அனுகா:—தங்கள் துணைவர்களுடன்; முனய:—தத்துவவாதிகள்; அக்னய:—அக்கினித் தேவர்கள்.
மைத்ரேய முனிவர் கூறினார்: உலகைப் படைத்த முக்கியத் தலைவர்கள் எல்லோரும் முன்னொரு காலத்தில் சேர்ந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றினைச் செய்தனர். அதில் மாமுனிவர்கள், தத்துவவாதிகள், தேவர்கள் மற்றும் அக்கினிக் கடவுள்கள் அனைவரும் தங்கள் அடியவர்களுடன் கலந்து கொண்டனர்.
பதம் 4.2.5
தத்ர ப்ரவிஷ்டம் ருஷயோ த்ருஷ்ட்வார்கம் இவ ரோசிஷா
ப்ராஜமானம் விதிமிரம் குர்வந்தம் தன் மஹத் ஸத:
தத்ர—அங்கு; ப்ரவிஷ்டம்—நுழைந்த பொழுது; ருஷய:—முனிவர்கள்; த்ரஷ்ட்வா—பார்ப்பதற்கு; அர்கம்—சூரியன்; இவ—போல; ரோசிஷா—தேஜஸுடன்; ப்ராஜமானம்—ஒளிர்ந்தது; விசிமிரம்—இருளை அகற்றியது; குர்வந்தம்—செய்தது; தத்—அந்த; மஹத்—சிறந்த; ஸத—அவையில்.
பிரஜாபதிகளின் தலைவரான தட்சன் அந்த வேள்விச் சாலையினுள் நுழைந்த பொழுது அவனது உடலிலிருந்து வீசிய ஒளியானது சூரியனது பொற்கதிர்களைப் போல் ஒளிர்ந்தது அவ்வேள்விச் சாலையினையே ஒளிமிக்கதாய்ச் செய்தது. அங்கு கூடியிருந்த அனைவருமே அவர்முன் சிறப்பிழந்து போனார்கள்.
பதம் 4.2.6
உததிஷ்டன் ஸதஸ்யாஸ் தே ஸ்வ-திஷ்ணுயேப்ய: ஸஹாக்னய:
ருதே விரிஞ்சாம் ஸர்வம் ச தத்-பாஸாக்ஷிப்த-சேதஸ:
உததிஷ்டன்—எழுந்து நின்றனர்; ஸதஸ்யா:—அங்கு கூடியிருந்த அனைவரும்; தே—அவர்கள்; ஸ்வ-திஷ்ணுயேப்ய:—தங்கள் இருக்கைகளில் இருந்து; ஸஹ அக்னய:—அக்கினி தேவர்களுடன்; ருதே—தவிர; விரிஞ்சாம்—பிரம்மதேவன்; ஸர்வம்—சிவபெருமான்; ச—மேலும்; தத்—அவரது (தக்ஷனது); பாஸ—ஒளியினால்; ஆக்ஷிப்த—தாக்கத்தினால்; சேதஸ:—அங்கிருந்தவர்களின் மனங்கள்.
அவரது உடலிலிருந்து வீசிய ஒளியின் தாக்கத்தினால் சிவபெருமானையும், பிரம்ம தேவனையும் தவிர அங்கிருந்த அக்கினிதேவர்கள் உட்பட அனைவரும் தட்சனுக்குரிய மரியாதை நிமித்தம் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றனர்.
பதம் 4.2.7
ஸதஸஸ் – பதிபிர் தக்ஷோ பகவான் ஸாது ஸத்-க்ருத:
அஜம் லோக-குரும் நத்வா நிஷஸாத தத்-ஆஜ்ஞயா
ஸதஸ:—அந்த அவையின்; பதிபி—தலைவர்களினால்; தக்ஷ:—தட்சன்; பகவான்—எல்லாச் செல்வங்களும் நிரம்பியவர்; ஸாது—முறைப்படி; ஸத்-க்ருத:—வரவேற்கப்பட்டார்; அஜம்—பிறப்பற்றவருக்கு (பிரம்மதேவன்); லோ-குரும்—உலக குருவிற்கு; நத்வா—மரியாதை தெரிவித்து; நிஷஸாத—அமர்ந்தார்; தத்-ஆஜ்ஞயா—அவரது (பிரம்மாவின் ஆணையினால்.
அப்பெரிய வேள்விக் கூடத்தின் தலைவராக விளங்கிய பிரம்ம தேவனால், தட்சன் முறைப்படி வரவேற்கப்பட்டார். பிரம்ம தேவனுக்கு மரியாதை செலுத்திய பிறகு, அவரது ஆணையின் பேரில் தட்சன் தனது இருக்கையில் முறைப்படி அமர்ந்தார்.
பதம் 4.2.8
ப்ரான்-நிஷண்ணம் ம்ருடம் த்ருஷ்ட்வா
நாம் ருஷ்யத் தத்-அனாத்ருத:
உவாச வாமம் சக்ஷுர்ப்யாம்
அபிவீக்ஷ்ய தஹன்னி இவ
ப்ராக்—முன்னர்; நிஷண்ணம்—அமர்வதற்கு; ம்ருடம்—சிவபெருமான்; த்ருஷ்ட்வா—பார்த்து; ந அம்ருஷ்யத்—பொறுக்க இயலாது; தத்—அவரால் (சிவபெருமான்); அனாத்ருத:—மரியாதை தராததினால்; உவாச—கூறினார்; வாமம்—நேர்மையின்மை; சக்ஷுர்ப்யாம்—இரு விழிகளும்; அபி வீக்ஷ்ய—பார்ப்பதற்கு; தஹன்—செந்தழல்போல்; இவ—இருந்தன.
இருப்பினும் தனது இருக்கையில் அமர்வதற்கு முன்னர் சிவபெருமானைப் பார்த்த தட்சன், அவர் தனக்கு எந்தவித மரியாதையும் செலுத்தாது அமர்ந்திருந்ததைக் கண்டு மிகவும் ஆவேசமுற்றார். ஆத்திரத்தினால் அவனது இரு விழிகளும் சிவந்தன. எனவே அவர் சிவபெருமானுக்கு எதிராக மிகவும் கடுமையான வார்த்தைகளைக் கூறத் தொடங்கினார்.
பதம் 4.2.9
ஸ்ரூயதாம் ப்ரஹ்மர்ஷயோ மே ஸஹ-தேவா ஸஹாக்னய:
ஸாதூனாம் ப்ருவதோ வ்ருத்தம் நாஜ்ஞானான் ந ச மத்ஸராத்
ஸ்ரூயதாம்—கேளுங்கள்; ப்ரஹ்ம-ருஷ்ய:—ஓ, அந்தண முனிவர்களே; மே—எனக்கு; ஸஹ-தேவா:—ஓ, தேவர்களே; ஸஹ-அக்னய—ஓ, அக்கினி தேவர்களே; ஸாதூனாம்—மேன்மையின்; ப்ருவத:—பேசுவது; வ்ருத்தம்—நாகரீகம்; ந—இல்லை; அஜ்ஞானாத்—அறியாமையிலிருந்து; ந ச—மேலும்; இல்லை; மத்ஸராத்—பொறாமையிலிருந்து.
இங்கு குழுமியிருக்கும் முனிவர்களே. அந்தணர்களே, அக்கினித் தேவர்களே! மேன்மையானவர்களின் நடைமுறைகளைப் நான் கூறப் போவதைக் கவனமுடன் கேட்பீராக, நான் இதனை அறியாமையினாலோ அல்லது பொறாமையினாலோ பேசவில்லை.
பதம் 4.2.10
அயம் து லோக பாலானாம் யஸோ-க்னோ நிரபத்ரப:
ஸத்பிர் ஆசரித: பந்தா யேன ஸ்தப்தேன தூஷித:
அயம்—அவர் (சிவபெருமான்); து—ஆனால்; லோக-பாவானாம்—உலகின் ஆளுநர்களுடைய; யஸ:-க்ன:—புகழைக் கெடுப்தற்காக; நிரபத்ரப:—வெட்கமின்றி; ஸத்பி:—மேன்மையான நடத்தைகளினால்; ஆசரித:—பின்பற்றி; பந்தா:—பாதை; யேன—எவரால் (சிவபெருமான்); ஸ்தப்தேன—உரியசெயல்கள் ஏதுமின்றி; தூஷித—மாசுபடுதல்.
சிவபெருமான், உலக ஆளுநர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கிறார். நாகரீக நடைமுறைகளின் பாதையினை மாசுபடுத்துகிறார். காரணம் அவர் வெட்கங்கெட்டவர் என்பதோடு எவ்வாறு நடந்து கொள்வது என்பதையும் அறியாதவர் ஆவார்.
பதம் 4.2.11
ஏஷ மே ஸிஸ்யதாம் ப்ராப்தோ யன் மே துஹிதுர் அக்ரஹீத்
பாணிம் விப்ராக்னி-முகத: ஸாவித்ரியா இவ ஸாதுவத்
ஏஷ:—அவர் (சிவபெருமான்); மே—எனது; ஸிஸ்யதாம்—எனக்கு அடுத்த இடத்தினை; ப்ராப்த:—ஒத்துக் கொண்டவர்; யன்—ஏனென்றால்; மே துஹிது:—எனது புதல்வியை; அக்ரஹீத்—அவர் ஏற்று; பாணிம்—கரம்; விப்ர—அக்னி நெருப்பு மற்றும் அந்தணர்களின்; முகத:—எல்லோர் முன்னிலையிலும்; ஸாவித்ரியா:—காயத்ரீ; இவ—போல; ஸாதுவத்—நேர்மையான மனிதனைப் போல்.
அக்கினி சான்றாக அந்தணர்களின் முன்னே எனது புதல்வியை எப்பொழுது கரம் பற்றினாரோ அப்பொழுதே அவர் எனக்கு அடுத்த கீழ் நிலையில் உள்ளவர் என்பதை ஏற்றுக் கொண்டார். காயத்ரீக்கு இணையான எனது புதல்வியை மணந்து கொண்டதோடு ஒரு நேர்மையான மனிதரைப் போல் அவர் நாடகமாடுகிறார்.
பதம் 4.2.12
க்ருஹீத்வா ம்ருக-ஸாவாக்ஷ்யா: பாணிம் மர்கட-லோசன: ப்ரத்யுத்தானாபிவாதார்ஹே வாசாபி அக்ருத நோசிதம்
க்ருஹீத்வா—எடுத்துக் கொண்டால்; ம்ருக-ஷாவ—மானின் விழிகளைப் போன்று; அக்ஷய:—அவளது இருவிழிகளால்; பாணிம்—கரம்; மர்கட—குரங்கினுடைய; லோசன:—அவரது விழிகள்; பரத்யுத்தான—தனது இருக்கையினின்று எழுந்து; அபிவாத—மரியாதை; அர்ஹே—தகுதியுடைய எனக்கு; வாசா—இனிமையான வார்த்தைகளினால்; அபி—கூட; அக்ருத ந—அவர் செய்யவில்லை; உசிதம்—மரியாதை.
இளம் மானைப் போன்ற அழகிய விழிகளையுடைய எனது புதல்வியை, மந்தியினைப் போல் விழிகளுடைய இவர் மணந்து கொண்டார். ஆனாலும் என்னைக் கண்டு எழுந்து நிற்கவோ, இனிமையான வார்த்தை கூறி இவர் வரவேற்கவோ இல்லை.
பதம் 4.2.13
லுப்த- க்ரியாயாஸுசயே மானினே பின்ன-ஸேதவே
அனிச்சன்ன அபி அதாம் பாலாம் ஸுத்ராய வோஸதீம் கிரம்
லுப்த-க்ரியாய—ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றாது; அஸுசயே—மாசுடைய; மானினே—பெருமை; பின்ன-ஸேதவே—நாகரீக விதிகள் அனைத்தையும் சீர்குலைத்து; அனிச்சன்—விருப்பமின்றி; அபி—இருந்தாலும்; அதாம்—கொடுத்தேன்; பாலாம்—எனது புதல்வியை; ஸுத்ராய — ஒரு சூத்திரனுக்கு; இவ—போன்ற; உஸதீம்-கிரம்—வேதங்களின் செய்திகளை.
நாகரீக விதிகள் அனைத்தையும் சீர்குலைத்த இவருக்கு எனது புதல்வியைக் கொடுக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால் ஒழுங்குமுறை விதிகள் எதனையும் கடைப்பிடிக்காத மாசுற்றவர் இவர். இருந்தாலும் சூத்திரனுக்கு வேதத்தினை உணர்த்துவது போல் நான் இவருக்கு எனது மகளைக் கொடுக்கச் சம்மதித்தேன்.
பதங்கள் 4.2.14 – 4.2.15
ப்ரேதாவாஸேஷு கோரேஷு ப்ரேதைர் பூத-கணைர் வ்ருத:
அடதி உன்மத்தவன் நக்னோ வ்யுப்த-கேஸோ ஹஸன் ருதன்
சிதா-ப்ஸ்ம-க்ருத-ஸ்நான: ப்ரேத-ஸ்ரங்-ந்ரஸ்தி-பூஷண:
ஸிவாபதேஸோ ஹி அஸிவோ மத்தோ-மத்த-ஜன-ப்ரிய:
பதி ப்ரமத-நாதானாம் தமோ-மாத்ராத்மகாகத்மனாம்
ப்ரேத-ஆவாஸேஷு—பிணங்களை எரிக்கும் சுடுகாட்டில்; கோரேஷு—பயங்கரமான; ப்ரேதை:—பிரேதங்களினால்; பூத-கணை:—பூதங்களினால்; வ்ருத—சூழ்ந்துவர; அடதி—அவர் அலைகிறார்; உன்மத்த-வத்—உன்மத்தம் பிடித்தவரைப் போல்; நக்ன:—ஆடையின்றி; வ்யுப்த-கேஸ:—ஜடாமுடியுடன்; ஹஸன்—சிரித்துக் கொண்டு; ருதன்—அழுதுக்கொண்டு; சிதா—சிதை நெருப்பின்; பஸ்ம—சாம்பலுடன்; க்ருத-ஸ்நான:—குளிப்பது; ப்ரேத—மண்டை ஓடுகளின்; ஸ்ரக்—மாலையாக அணிந்து; ந்ரு-அஸ்தி-பூஷண:—எலும்புகளை ஆபரணமாக அணிந்து; ஸிவ-சுபதேஸ:—சிவம் அல்லது மங்கலம் என்பது பெயரில் மட்டுந்தான்; ஹி—ஆக; அஸிவ:—அமங்கலம்; மத்த:—பித்தன்; மத்த-ஜன ப்ரிய:—பித்தர்களின் நண்பன்; பதி:—தலைவன்; ப்ரமத-நாதானாம்—பிரதமர்களின் கடவுள்; தம:-மாத்ர-ஆத்மக-ஆத்மனாம்—தமோ குணம் நிரம்பியவர்களின்.
அழுக்கு நிரம்பிய சுடுகாட்டில் அவர் வசிக்கிறார். அவரது நண்பர்களோ பேய்களும், பூதங்களுமாகும். உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு பித்தனைப் போல் ஒரு நேரம் சிரித்துக் கொண்டும், மறு நேரம் அழுது கொண்டும் இருப்பார். ஒழுங்காக முழுவதும் நீராடுவதே இல்லை. ஆபரணங்களாக அணிந்து கொள்வதோ மண்டை ஓடுகளையும், எலும்புகளையும், மங்கலம் எனும் பொருள் தரும் சிவன் எனும் சொல் அவரது பெயரில் மட்டுமே உள்ளது. உண்மையில் அவர் பித்தனும், அமங்கலமானவனும் ஆவார். தமோ குணம் நிரம்பிய பித்தர்களின் நெருங்கிய நண்பரும், அவர்களின் தலைவரும் இவரேயாவார்.
பதம் 4.2.16
தஸ்மா உன்மாத-நாதாய நஷ்ட-ஸெளசாய துர்ஹ்ருதே
தத்தா பத மயா ஸாத்வீ சோதிதே பரமேஷ்டினா
தஸ்மை—அவருக்கு; உன்மாத-நாதாய—பேய்களின் தெய்வம்; நஷ்ட-ஸௌசாய—எந்தவிதத் தூய்மையும் இல்லாதவர்; துர்ஹ்ருதே—மாசுடை மனத்தவர்; தத்தா—கொடுக்கப்பட்டது; பத—அந்தோ; மயா—என்னால்; ஸாத்வீ—சதீ; சோதிதே—வேண்டிக் கொள்ளப்பட்டு; பரமேஷ்டினா—பரமாச்சாரியரால் (பிரம்ம தேவன்).
தூய்மை என்பது ஒரு சிறிதுமின்றி மனத்துக்கண் மாசுடையவராக இவர் விளங்கிய போதிலும், பிரம்மதேவன் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே கற்பிற்சிறந்த எனது அருமை மகளை இவருக்கு அளித்தேன்.
பதம் 4.2.17
மைத்ரேய உவாச
விநிந்த்யைவம் ஸ கிரிஸம் அப்ரதீபம் அவஸ்திதம்
தக்ஷோ ‘தாப உபஸ்ப்ருஸ்ய க்ருத்தா: ஸப்தும் ப்ரசக்ரமே
மைத்ரேய-உவாச—மைத்ரேயர் கூறினார்; விநிந்த்ய—பழித்தல்; ஏவம்—இவ்வாறு; ஸ:—அவர் (தக்ஷன்); கிரிஸம்—சிவபெருமான்; அப்ரதீபம்—எவ்விதப் பகையுணர்ச்சியுமின்றி; அவஸ்திதம்—இருத்தல்; தக்ஷ:—தட்சன்; அத—இப்பொழுது; அப:—நீர்; உபஸ்ப்ஸ்ய—கைகளையும் வாயையும் கழுவிக் கொண்டு; க்ருத்த:—ஆத்திரம்; ஸப்தும்—சபிக்கத்; ப்ரசக்ரமே—தொடங்கினார்.
மைத்ரேய முனிவர் தொடர்ந்து கூறினார்: இதன் பின் தட்சன் தனக்கெதிராக சிவபெருமான் அமர்ந்திருப்பதைக் கண்டு தனது கரங்களையும், வாயினையும் நீரால் கழுவிவிட்டு பின்வரும் வார்த்தைகளினால் மீண்டும் அவரைச் சபித்தார்.
பதம் 4.2.18
அயம் து தேவ-யஜன இந்த்ரோபேந்த்ராதிபிர் பவ:
ஸஹ பாகம் ந லபதாம் தேவைர் தேவ-கணாதம:
அயம்—அந்த; து—ஆனால்; தேவ-யஜனே—தேவர்களுக்கான வேள்வியில்; பவ:—சிவபெருமான்; ஸஹ—அத்துடன்; பாகம்—அவிர்பாகம்; ந—இல்லை; லபதாம்—பெறுவது; தேவை:—தேவர்களுடன்; தேவ-கண-அதம:—அனைத்து தேவர்களுக்கும் கீழானவர்.
வேள்விகளில் கிடைக்கும் அவிர்பாகங்களைப் பெறுவதற்கு தேவர்கள் உரியவராவர் என்றாலும் அனைத்துத் தேவர்களிலும் கீழானவராக சிவபெருமானுக்கு எந்தவித அவிர்பாகமும் இனி கிடையாது.
பதம் 4.2.19
நிஷித்யமான: ஸ ஸதஸ்ய முக்யைர்
தக்ஷே கிரித்ராய விஸ்ருஜ்ய ஸாபம்
தஸ்மாத் விநிஷ்க்ரம்ய விவ்ருத்த-மன்யுர்
ஜகாம கௌரவ்ய நிஜம் நிகேதனம்
நிஷித்யாமன:—சபிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டும்; ஸ:—அவர் (தக்ஷன்); ஸதஸ்யமுக்யை:—வேள்விச் சாலையில் இருந்தவர்கள்; தக்ஷ:—தட்சன்; கிரித்ராய—சிவபெருமானுக்கு; விஸ்ருஜ்ய—கொடுத்தல்; ஸாபம்—சாபம்; தஸ்மாத்—அங்கிருந்து; விநிஷ்க்ரம்ய—வெளியேறினார்; விவ்ருத்த-மன்யு:—அதிக ஆத்திரம் கொண்டு; ஜகாம—சென்றார்; கௌரவ்ய—ஓ, விதுரனே; நிஜம்—தனது; நிகேதனம்—இல்லம்.
மைத்ரேயர் கூறினார்: வேள்விச் சாலையில் இருந்த அனைவரும் தட்சனை வேண்டிக்கொண்டும், சினம் தணியாத தட்சன் சிவபெருமானைச் சபித்து விட்டு அங்கிருந்து வெளியேறி தன் இல்லம் சேர்ந்தார்.
பதம் 4.2.20
விஜ்ஞாய ஸாபம் கிரிஷானுகாக்ரணீர்
நந்தீஸ்வரோ ரோஷ-கஷாய-தூஷித:
தக்ஷாய ஸாபம் விஸஸர்ஜ தாருணம்
யே சான்வமோதம்ஸ் தத்-அவாச்யதாம் த்விஜா:
விஜ்ஞாய—புரிந்து கொண்டு; ஸாபம்—சாபம்; கிரிஷ—சிவபெருமானின்; அனுகாக்ரணீர்:—தலையாய துணைவர்களுள் ஒருவர்; நந்தீஸ்வர:—நந்தீஸ்வரர்; ரோஷ—கோபம்; கஷாய—சிவந்து: தூஷித:—குருடாகி; தக்ஷாய—தட்சனுக்கு; ஸாபம்—ஒரு சாபம்; விஸஸர்ஜ—கொடுத்தார்; தாருணம்—கொடிய; யே—யார்; ச—மேலும்; அன்வமோதன்—பொறுத்துக்கொண்டு; தத்-அவாச்யதாம்—சிவபெருமானைச் சபித்ததை; த்விஜா:—அந்தணர்கள்.
தட்சன் சிவபெருமானைச் சபித்ததைக் கண்டு அவரது முக்கியத் துணைவரான நந்திபகவான் மிகவும் ஆத்திரமுற்றார். கோபத்தினால் அவரது கண்கள் சிவந்தன. தட்சனையும், கொடிய வார்த்தைகளினால் அவன் சிவபெருமானைச் சபித்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்தணர்களையும் சபிப்பதற்கு அவர் தயாரானார்.
பதம் 4.2.21
ய ஏதன் மர்த்யம் உத்திஸ்ய பகவதி அப்ரதிக்ருஹி
த்ருஹ்யதி அஜ்ஞா: ப்ருதக்-த்ருஷ்டிஸ்தத்த்வதோ விமுகோ பவேத்
ய:—யார் (தக்ஷன்); ஏதத் மர்த்யம்—இந்த உடல்; உத்திஸ்ய—குறிப்பீடு; பகவதி—சிவபெருமானுக்கு; அப்ரதித்ருஹி—அழுக்காறு இல்லாதவர்; த்ருஹ்யதி—பொறாமையினைப் பொறுத்துக் கொள்பவர்; அஜ்ஞா:—அஞ்ஞானிகள்; ப்ருதக்-த்ருஷ்டி:—இருமை நோக்கு; தத்த்வத:—உன்னத அறிவிலிருந்து; விமுக:—இழப்போர்; பவேத்—ஆவார்.
வெறுப்பின் காரணமாக தட்சனை உயர்வாகவும், சிவபெருமானைத் தாழ்வாகவும் நினைப்பவர் அறிவிற்குறைந்தோர் ஆவர். காரணம் அவரது பார்வையில் இருமை உள்ளது. அப்படிப்பட்டவர் தனது உன்னதமான ஆன்மீக அறிவினை விரைவில் இழந்து விடுவர்.
பதம் 4.2.22
க்ருஹேஷு கூட-தர்மேஷு ஸக்தோ கிராம்ய-ஸுகேச்சயா
கர்ம-தந்த்ரம் விதனுதே வேத வாத விபன்ன-தீ
க்ருஹேஷு—இல்லற வாழ்க்கை; கூட-தர்மேஷு—போலியான சமயத்தன்மை; ஸக்த:—கவரப்பட்டு; க்ராம்ய-சுக இச்சயா—பொருள் இன்பங்களில் ஆர்வம் கொண்டு; கர்ம-தந்த்ரம்—பலன்தரும் செயல்கள்; விதனுதே—அவன் செய்கிறான்; வேத-வாத—வேதங்களின் விளக்கங்களினால்; விபன்னதீ:—ஞானத்தை இழக்கிறான்.
போலியான சமயத்தன்மை கொண்ட இல்லறத்தான் பொருள் இன்பங்களினாலும், வேதங்களின் மேம்போக்கான விளக்கங்களினாலும் கவரப்படுவதோடு தனது அனைத்து ஞானங்களையும் இழந்து பலன் தரும் செயல்களே எல்லாம் என்று கருதி அவற்றின் மீதே பற்று வைக்கிறான்.
பதம் 4.2.23
புத்த்யா பராபித்யாயின்யா
விஸ்ம்ருதாத்ம கதி:-பஸு:
ஸ்த்ரீ-காம: ஸோ ‘ஸ்த்வ அதிதராம்
தக்ஷே பஸ்த-முகோ ‘ சிராத்
புத்த்யா—புத்தியினால்; பர-அபித்யாயின்யா—உடலையே ஆத்மாவாக ஏற்றுக்கொண்டு; விஸ்ம்ருத-ஆத்ம-கதி:—விஷ்ணுவைப் பற்றிய அறிவினை மறந்து; பஷு:—ஓர் விலங்கு; ஸ்த்ரீ-காம:—பாலுற்ற வாழ்வில் பற்று கொண்டு; ஸ:—அவர் (தக்ஷன்); அஸ்து—விடு; அதிதராம்—அதீத; தக்ஷ:—தட்சன்; பஸ்த-முக:—ஒரு ஆட்டினுடைய முகம்; அசிராத்—மிகக் குறுகிய காலத்தில்.
தட்சன் இவ்வுடலே எல்லாம் என்று ஏற்றுக்கொண்டவர். அவர் விஷ்ணுபாதத்தினையோ அல்லது விஷ்ணு கதியினையோ மறந்ததின் விளைவாக பாலுறவு வாழ்வில் பற்று மிகுந்து அலைகிறார். அதற்கு தண்டனையாக மிகவிரைவில் அவர் ஒரு ஆட்டின் முகத்தினைப் பெறப்போகிறார்.
பதம் 4.2.24
வித்யா-புத்திர் அவித்யாயாம் கர்மமய்யாம் அஸௌ ஜட:
ஸம்ஸரந்த்வ இஹ யே சாமும் அனு ஸர்வாவமானினம்
வித்யா-புத்தி:—பொருள் அடிப்படையிலான கல்வி மற்றும் அறிவு; அவித்யாயாம்—அறியாமையின்; கர்ம-மய்யாம்—பலன்தரும் செயல்களினால் ஆனது; அஸென—அவர் (தக்ஷன்); ஜட:—மந்தமான; ஸம்ஸரந்து—மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்; இஹ—இவ்வுலகில்; யே—யாவர்; ச—மேலும்; அமும்—தட்சன்; அனு—தொடர்ந்து; ஸர்வ—சிவன்; அவமானினம்—அவமானப்படுத்தப்பட்டது.
பொருள் அடிப்படையிலான கல்வி மற்றும் அறிவை முனைந்து வளர்ப்போர் செய்தி ஞானத்தில் மந்தமானவர்கள் ஆவதோடு தங்கள் அறியாமையினால் பலன் தரும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் வேண்டுமென்றே சிவபெருமானை அவமதிக்கின்றனர். இவர்கள் தொடர்ந்து பிறப்பு, இறப்பின் சுழற்சியில் இருப்பாராக.
பதம் 4.2.25
கிர: ஸ்ருதாயா: புஷ்பிண்யா மது-கந்தேன பூரிணா
மத்னா சொன்மதிதாத்மான: ஸம்முஹ்யந்த ஹர-த்விஹ:
கிர:—வார்த்தைகள்; ஸ்ருதாயா:—வேதங்களின்; புஷ்பிண்யா:—மலர் போன்றவை; மது-கந்தேன—செந்தேன் மணமுடன்; பூரிணா—தாராளமாக; மத்னா—மயங்கச் செய்யும்; ச—மேலும்; உன்மதித-ஆத்மான—மந்தமதியுடையோராக மாறுவர்; ஸம்முஹ்யந்து—தொடர்ந்து பற்றுடையேராய் இருப்பராக: ஹர-த்விஷ:—சிவபெருமான் மீது காழ்ப்புடையோர்.
வேத மந்திரங்களின் மலர் போன்ற மென்மையான மொழியில் மயங்கி சிவபெருமான் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட மந்த மதியாளர்கள் எப்போதும் பலன் தரும் செயல்களிலேயே பற்றுடையோராக இருப்பாராக.
பதம் 4.2.26
ஸர்வ-பக்ஷா த்விஜா வ்ருத்த்யை த்ருத வித்யா-தபோ-வ்ரதா:
வித்த -தேஹேந்த்ரியாராமா யாசகா விசரந்த்வ இஹ
ஸர்வ-பக்ஷா:—எல்லாவற்றையும் உண்பது; த்விஜா:—அந்தணர்கள்; வ்ருத்த்யை—உடலைப் பேணுவதற்காக; த்ருத-வித்யா—கல்வி கற்பது; தப:—தவம்; வ்ரதா:—விரதங்களும்; வித்த—பணம்; தேஹ—உடல்; இந்திரிய—புலன்கள்; ஆராமா:—திருப்தியுற; யாசகா:—யாசகர்களாக; விசரந்து—அலைவாராக; இஹ—இவ்வுலகில்.
இந்த அந்தணர்கள் கற்பது தவம் செய்வது, நோன்பு நோற்பது போன்றவையெல்லாம் தங்கள் உடலைப் பேணுவதற்காகவே ஆகட்டும். அவர்கள் எதனை உண்பது எதனை உண்ணக் கூடாது என்று பிரித்தறியத் தெரியாதவர்களாக மாறட்டும். உடலைப் பேணுவதற்காகப் பொருள் தேடி வீடுகள் தோறும் சென்று அவர்கள் இறந்து பிழைக்கட்டும்.
பதம் 4.2.27
தஸ்யைவம் வதத: ஸாபம் ஸ்ருத்வா த்விஜ-குலாய வை
ப்ருகு: ப்ரத்யஸ்ருஜச் சாபம் ப்ரஹ்ம-தண்டம் துரத்யயம்
தஸ்ய—அவரது (நந்தியம் பெருமான்); ஏவம்—இவ்வாறு; வதத:—வார்த்தைகள்; ஸாபம்—சாபம்; ஸ்ருத்வா—கேட்டு; த்விஜ—குலாய—அந்தணர்களுக்கு; வை—உண்மையில்; ப்ருகு:—பிருகு; ப்ரத்யஸ்ருஜத்—செய்தது; ஸாபம்—ஒரு சாபம்; ப்ரஹ்ம-தண்டம்—அந்தணர்க்குரிய தண்டனை; துரத்யயம்—கடக்க முடியாதது.
பரம்பரை அந்தணர்கள் அனைவரும் நந்தியம் பெருமானால் இவ்வாறு சபிக்கப்பட்டதைக் கண்ட பிருகு முனிவர் சிவபெருமானின் அடியவர்களைக் கடுமையான அந்தண சாபத்தினால் கண்டித்தார்.
பதம் 4.2.28
பவ-வ்ரத-தாரா யே சயே ச தான் மைனுவ்ரதா:
பாஷண்டினஸ் தே பவந்து ஸச்- சாஸ்த்ர பரிபந்தின:
பவ-வ்ரத-தாரா:—சிவபெருமானை திருப்திபடுத்துவதற்கான விரதம்; யே—யார்; ச—மேலும்; தான்—அக்கொள்கைகள்; ஸமனுவ்ரதா:—பின்பற்றுதல்; பாஷண்டின:—நாத்திகர்கள்; தே—அவர்கள்; பவந்து—ஆவாராக; ஸத்-ஸாஸ்த்ர-பரிபந்தன:—உன்னதமான சாத்திரக் கட்டளைகளில் இருந்து மாறியவர்கள்.
சிவபெருமானை நயமுறச் செய்வதற்கென்று நோன்பு நோற்பவர்களோ அல்லது அக்கொள்கைகளைப் பின்பற்றுபவர்களோ நிச்சயமாக நாத்திகர்களாக மாறி உன்னதமான சாத்திரக் கட்டளைகளை மீறி நடப்பவர்களாகுக.
பதம் 4.2.29
நஷ்ட-ஸௌசா மூட-தியோ ஜடா-பஸ்மாஸ்தி-தாரிண:
விஸந்து ஸிவ-தீக்ஷாயாம் யத்ர தைவம் ஸுராஸவம்
நஷ்ட-ஸௌசா:—சுத்தம் என்பதே கிடையாது; மூட-திய:—மூடத்தன்மை; ஜடா-பஸ்ம-அஸ்தி-தாரிண:—ஜடா முடியுடன், சாம்பலையும், எலும்புகளையும் அணிந்து கொண்டு; விஸந்து—தொடங்கும்பொழுதே; ஸிவ-திக்ஷாயாம்—சிவபெருமானை வழிபடுவதற்குரிய தீட்சை; யத்ர—எங்கே; தைவம்—ஆன்மீகமானவை; சுர-ஆஸவம்—மதுவும் கள்ளும்
சிவபெருமானை வழிபடும் உறுதி பூண்டோர் அவரைப் போலியாகப் பின்பற்றித் தாங்களும் மூடத்தனமாக சடை முடி வைத்துக் கொள்கின்றனர். சிவபெருமானை வழிபடுவதற்குத் தீட்சை பெறும் பொழுதே அவர்கள் மது, மாமிசம் போன்றவற்றைத் தங்கள் வாழ்வில் விரும்பி ஏற்றுக் கொள்கின்றனர்.
பதம் 4.2.30
ப்ரஹ்ம ச பிராஹ்மணாம்ஸ் சைவ யத் யூயம் பரிநிந்தத
ஸேதும் விதாரணம் பும்ஸாம் அத: பாஷண்டம் ஆஸ்ரிதா:
ப்ரஹ்ம—வேதங்கள்; ச—மேலும்; ப்ராஹ்மணான்—அந்தணர்கள்; ச—மேலும்; ஏவ—உறுதியாக; யத்—ஏனென்றால்; யூயம்—நீங்கள்; பரிநிந்தத—நிந்தனை; ஸேதும்—வேதக் கொள்கைகள்; விதாரணம்—வைத்திருப்பவர்; பும்ஸாம்—மனித இனத்தின்; அத:—அதனால்; பாஷண்டம்—நாத்திகம்; ஆஸ்ரிதா:—சரண் அடைதல்.
பிருகு முனிவர் தொடர்ந்து கூறினார்: வேதங்களையும், வேதக்கொள்கைகளைப் பின்பற்றும் அந்தணர்களையும் நீங்கள் தூற்றியதால், கடவுள் மறுப்புக் கொள்கைகளிடம் நீங்கள் முன்னமேயே தஞ்சம் அடைந்திருக்கின்றீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.
பதம் 4.2.31
ஏஷ ஏவ ஹி லோகானாம் ஸிவ: பந்தா: ஸநாதன:
யம் பூர்வே சானுஸந்தஸ்துர் யத்-ப்ரமாணம் ஜனார்தன:
ஏஷ:—வேதங்கள்; ஏவ—உறுதியாக; ஹி—ஆக; லோகானாம்—எல்லா மக்களும்; ஸிவ:—மங்கலமானது பந்தா:—பாதை; ஸநாதன:—நித்தியமானது; யம்—எது (வேதத்தின் பாதை); பூர்வே—முன்னர்; ச—மேலும்; அனுஸந்தஸ்து:—கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டன; யத்—எதினில்; ப்ரமாணம்—ஆதாரம்; ஜனார்தன:—ஜனார்தனன்.
வேதங்களின் நிலையான நெறி முறைகள் மனித சமுதாயத்தின் மங்களகரமான முன்னேற்றத்திற்கு உரியவைகளாகும். அக்கொள்கைகள் முற்காலத்தில் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. இக்கொள்கைகளுக்கு உறுதியான ஆதாரமாக விளங்குபவர், அனைத்து உயிர்களின் நலன் விரும்பியாக உள்ளவர், ஜனார்த்தனன் என்றழைக்கப்படும் முழுமுதற் கடவுளே ஆவார்.
பதம் 4.2.32
தத் ப்ராஹ்ம பரமம் ஸுத்தம் ஸதாம் வர்த்ம ஸநாதனம்
விகர்ஹ்ய யாத பாஷண்டம் தைவம் வோ யத்ர பூத-ராட்
தத்—அந்த; ப்ரஹ்ம—வேதம்; பரமம்—பரமம்; ஸுத்தம்—சுத்தம்; ஸதாம்—தெய்வீகமானவர்களுக்கு; வர்த்ம—பாதை; ஸநாதனம்—நித்தியம்; விகர்ஹ்ய—பழித்துத் தூற்றுவர்; யாத—நீங்கவேண்டும்; பாஷண்டம்—நாத்திகத்திற்கு; தைவம்—தெய்வம்; வ:—உங்களுடைய; யத்ர—எங்கே; பூத-ராட்—பூதகணங்களின் தலைவர்.
தூய்மை மிக்கதும், தெய்வீக அருளாளர்களுக்கு உயர்ந்த வழிகாட்டுவதாகவும் விளங்கும் வேதநெறிகளைப் பழிப்பதால், பூதபதியான சிவபெருமானின் அடியவர்களே, நீங்கள் நாத்திகர்களாகத் தாழ்ந்து விடுவீர்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
பதம் 4.2.33
மைத்ரேய உவாச
தஸ்யைவம் வதத: ஸாபம் ப்ருகோ: ஸ பகவான் பவ:
நிஸ்சக்ராம தத: கிஞ்சித் விமனா இவ ஸானுக:
மைத்ரேய:-உவாச—மைத்ரேயர் கூறினார்; தஸ்ய—அவரது; ஏவம்—இவ்வாறு; வதத:—பேசப்பட்டு; ஸாபம்—சாபம்; ப்ருகோ:—பிருகுவின்; ஸ:—அவர்: பகவான்—எல்லாச் செல்வங்களும் உடையவர்; பவ:—சிவபெருமான்; நிஸ்சக்ராம—சென்றார்; தத:—அங்கிருந்து; கிஞ்சித்—சிறிது; விமனா:—வாட்டமுடன்; இவ—இருத்தல்; ஸ-அனுக:—தனது அடியவர்கள் பின் தொடர.
மைத்ரேய மாமுனிவர் கூறினார்: இவ்வாறு சிவபெருமானின் அடியவர்களும், தட்சன் மற்றும் பிருகு முனிவரின் ஆதரவாளர்களும் ஒருவர் மீது மற்றொருவர் சாபத்தினை அள்ளி இறைத்துக் கொண்டிருந்த பொழுது சிவபெருமான் மிகவும் வாட்டமுடன் இருந்தார். அவர் ஒன்றுமே கூறாது தனது அடியவர்களுடன் அவ்வேள்விச் சாலையினை விட்டு வெளியேறினார்.
பதம் 4.2.34
தே ‘பி விஸ்வ-ஸ்ருஜ: ஸத்ரம் ஸஹஸ்ர-பரிவத்ஸரான்
ஸம்விதாய மஹேஷ்வாஸ யத்ரேஜ்ய ருஷபோ ஹரி:
தே—அவர்கள்; அபி—கூட; விஸ்வ-ஸ்ரஜ:—உலகின் மூதாதையர்கள்; ஸத்ரம்—வேள்வி; ஸஹஸ்ர—ஆயிரம்; பரிவத்ஸரான்—வருடங்கள்; ஸம்விதாய—செய்து; மஹேஷ்வாஸ—ஓ விதுரனே; யத்ர—எதில்; இஜ்ய:—வழிபடுவதற்கு; ருஷப:—தேவர்களின் அதிபதித் தெய்வம்; ஹரி:—ஹரி.
மைத்ரேய முனிவர் தொடர்ந்தார்: ஓ விதுரனே, முழுமுதற் கடவுளும், பரமபுருஷ பகவானுமான ஹரியினை வழிபடுவதற்கு வேள்விகளே சிறந்த வழி. ஆதலினால் இவ்வுலக மக்களின் முன்னோர்கள் ஆயிரம் வருடங்கள் அவ்வேள்வியினைச் செய்தனர்.
பதம் 4.2.35
ஆப்லுத்யாவப்ருதம் யத்ர கங்கா யமுனயான்விதா
விரஜேனாத்மனா ஸர்வே ஸ்வம் ஸ்வம் தாம யயுஸ் தத:
அப்லுத்ய—நீராடி; அவப்ருதம்—வேள்விகளைச் செய்த பிறகு நீராடுவது; யத்ர—எங்கே; கங்கா—கங்கை நதி; யமுனயா—யமுனை நதி; அன்விதா—கலந்து; விரஜேன—மாசு இன்றி; ஆத்மனா—மனதினால்; ஸர்வே—எல்லோரும்; ஸ்வம்-ஸ்வம்—தத்தமக்குரிய; தாம—வசிப்பிடம்; யயு:—சென்றனர்; தத:—அங்கிருந்து.
அன்பிற்குரிய விதுரனே, வில்லும் அம்பும் ஏந்திய தேவர்கள் அனைவரும் வேள்வியினை முடித்துவிட்டு கங்கையும், யமுனையும் கலக்குமிடத்தில் நீராடினர். இந்நீராட்டத்திற்கு அவப்ருத ஸ்நானம் என்று பெயர். இவ்வாறு அவர்கள் தமது மனங்களைத் தூய்மை செய்துகொண்டு தத்தமக்குரிய இடங்களை அடைந்தனர்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “சிவபெருமானை தட்சன் சபித்தல்” எனும் தலைப்பைக் கொண்ட இரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.