அத்தியாயம் – 28
அடுத்த பிறப்பில் புரஞ்ஜனன் பெண்ணாகப் பிறத்தல்
பதம் 4.28.1 : மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னன் பிராசீனபர்ஹிஷத்தே, பயம் என்னும் பெயருடைய யவன மன்னர், பிரஜ்வாரன் என்பார் காலகன்யா உடன்வர அவனது வீரர்களுடன் இவ்வுலகம் முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார்.
பதம் 4.28.2 : இந்த ஆபத்தான வீரர்கள் முன்னொரு காலத்தில் புரஞ்ஜனனின் நகரத்தை மிகுந்த பலத்துடன் தாக்கினர். இந்நகரம் புலனுகர்ச்சிப் பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தாலும் இதனை ஒரு வயதான பாம்பு காவல் புரிந்து கொண்டிருந்தது.
பதம் 4.28.3 : காலகன்யா, அபாயகரமான வீரர்களின் உதவியுடன் புரஞ்சனனின் நகரவாசிகள் அனைவரையும் படிப்படியாகத் தாக்கி அவர்கள் அனைவரையும் ஒன்றுக்கும் பயனற்றவர்களாக ஆக்கினாள்.
பதம் 4.28.4 : காலமகளான, காலகன்யா உடலைத் தாக்கிய பொழுது யவன மன்னனின் ஆபத்தான வீரர்கள் பல்வேறு வாயில்களின் வழியாக உடலாகிய அந்நகரினுள் நுழைந்தனர். பின் குடிமக்கள் அனைவருக்கும் பெருந்துன்பம் இழைத்தனர்.
பதம் 4.28.5 : இவ்வாறு அந்நகரம், காலகன்யா மற்றும் அவளது வீரர்களினால் ஆபத்திற்குள்ளானபோது, தன்குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்திருந்த மன்னர் புரஞ்ஜனன், யவனராஜன் மற்றும் காலகன்யாவினால் பெருந்துன்பத்திற்கு ஆளானார்.
பதம் 4.28.6 : காலகன்யாவினால் தழுவப்பட்டதினால் மன்னர் புரஞ்ஜனன் படிப்படியாக அழகிழந்தவரானார். பாலுறவில் அளவுக்கு மீறியதால் தமது சிந்திக்கும் திறமையையும், செல்வமனைத்தையும் இழந்தார். இவ்வாறு உடைமைகளைத் தொலைத்துவிட்டதினால் அவர் கந்தர்வர்கள் மற்றும் யவனர்களால் பலாத்காரமாக வெல்லப்பட்டார்.
பதம் 4.28.7 : மன்னர் புரஞ்ஜனன் தம் நகரத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் சிதறடிக்கப்படுவதையும், தம் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், பணியாளர்களும், அமைச்சர்களும் படிப்படியாகத் தன்னை எதிர்ப்பதையும் கண்டார். மேலும் அவரது மனைவி கூட அவரிடம் கண்டிப்புடனும், மோசமாகவும் நடந்து கொள்வதை அவர் கண்டார்.
பதம் 4.28.8 : புரஞ்ஜனமன்னன், தமது குடும்பத்தினர், உறவினர்கள், கீழுள்ளவர்கள், பணியாளர்கள், செயலர்கள் போன்ற அனைவரும் தமக்கு எதிராக மாறியதைக் கண்டு மிகுந்த மனவருத்தமுற்றார். ஆயினும் அவரால் அச்சூழ்நிலையினை எதிர்த்துப் போரிடமுடியவில்லை. ஏனெனில் அவர் முற்றிலும் காலகன்யாவினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.
பதம் 4.28.9 : காலகன்யாவினால் இன்ப நுகர்ச்சிக்களாகப் பொருட்கள் அனைத்தும் சீர்கெட்டன. காம இச்சைகள் தொடர்ந்து அவரிடம் இருந்த காரணத்தினால் மன்னர் புரஞ்ஜனன் எல்லாவற்றிலும் ஏழையானார் இவ்வாறு அவர் வாழ்க்கையின் இலட்சியம் என்னவென்று அறியாதவரானார். இந்த நிலையிலும் அவர் தம் மனைவி மற்றும் மக்களிடத்து மிகுந்த பாசமுடையவராகவும் அவர்களைக் காக்கின்றன கவலையுடையவராகவும் விளங்கினார்.
பதம் 4.28.10 : கந்தர்வ மற்றும் யவன வீரர்களினால் மன்னர் புரஞ்ஜனனின் நகரம் வீழ்த்தப்பட்டது. மன்னருக்கு நகரத்தை விட்டு நீங்க மனமில்லை. எனினும் கட்டாயத்தின் சூழ்நிலையினால் அவர் அவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று ஏனெனில் காலகன்யாவினால் அது அழிக்கப்பட்டிருந்தது.
பதம் 4.28.11 : இச்சூழ்நிலைகளின் கீழ் பயம் என்ற மற்றொரு பெயருடைய யவனராஜனின் மூத்த சகோதரன் பிரஜ்வாரன் என்பவன் தன் தம்பியின் மகிழ்ச்சிக்காக அந்நகரத்தைத் தீக்கிரையாக்கினான்.
பதம் 4.28.12 : இவ்வாறு அந்த நகரம் தீக்கிரையான பொழுது அங்குள்ள அனைத்துக் குடிமக்கள், மன்னரின் பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், புத்திரர்கள், பேரப்பிள்ளைகள், மனைவி மற்றும் உறவினர்கள் அனைவரும் நெருப்பிற்கிடையில் சிக்கிக் கொண்டதைக் கண்டு மன்னர் புரஞ்ஜனன் மகிழ்ச்சி இழந்தவரானார்.
பதம் 4.28.13 : அந்நகரத்தின் பாதுகாவலைக் கண்காணிக்கும் பாம்பு காலகன்யாவினால் தனது குடிமக்கள் தாக்கப்படுவதைக் கண்டது. யவனர்களால் தாக்கப்பட்டுத் தனது இருப்பிடம் தீக்கிரையாக்கப்பட்டது கண்டு அப்பாம்பு மிகவும் மனம் வருந்தியது.
பதம் 4.28.14 : காடு தீப்பற்றி எரியும்பொழுது ஒரு மரப்பொந்தினுள் இருக்கும் பாம்பு அம்மரத்தை விட்டுச் செல்லவே விரும்பும். அதுபோல் நகரத்தைக் காத்து வந்த பாம்பு தீயின் வெம்மை தாங்காமல் அந்நகரத்தை விட்டுப் பிரிந்து செல்ல விரும்பியது.
பதம் 4.28.15 : கந்தர்வர்களாலும், யவனர்களாலும் பாம்பின் உடல் சிதிலமாக்கப்பட்டது, அவர்கள் பாம்பின் உடல் வலிமையினை முற்றிலும் தோற்கடித்திருந்தனர். அப்பாம்பு நகரத்தை விட்டு நீங்க நினைத்த பொழுது, அதன் எதிரிகளினால் தடுக்கப்பட்டது. இவ்வாறு தன் முயற்சியில் தோற்றவுடன் அது வாய்விட்டு அழுதது.
பதம் 4.28.16 : மன்னர் புரஞ்ஜனன் பின்னர், தமது புதல்விகளையும், புதல்வர்களையும், பேரக் குழந்தைகளையும், மருமகள்களையும், மருமகன்களையும், வேலைக்காரர்களையும், துணைவர்களையும் அது போல் வீட்டையும், வீட்டிலுள்ள பொருள்களையும், தாம் சேர்த்து வைத்திருக்கும் சிறிது செல்வத்தையும் நினைக்கத் தொடங்கினார்.
பதம் 4.28.17 : மன்னர் புரஞ்ஜனன் தமது குடும்பத்தின் மீதும், ‘நான்’ ‘எனது’ என்றும் கருத்தின் மீதும் ஆழமான பற்றுடையவராக இருந்தார். அவர் தமது மனைவியின் மீது அதிகப் பற்றுவைத்திருந்ததினால் முன்னமேயே ஏழையாகியிருந்தார். அவளை விட்டுப் பிரியும் போது அவர் மிகவும் மனம் வருந்தினார்.
பதம் 4.28.18 : மன்னர் புரஞ்ஜனன் மிக்கக் கவலையுடன், “அந்தோ! என் மனைவி ஏராளமானக் குழந்தைகளுடன் இருக்கிறாள். நான் இவ்வுடலை விட்டுச் செல்லும் பொழுது இவர்களையெல்லாம் அவளால் எவ்வாறு காப்பாற்ற முடியும்? ஐயோ குடும்பத்தைக் காப்பாற்றும் கவலையினால் அவள் அதிக இன்னலுக்கு ஆளாவாள்” என்று நினைந்தார்.
பதம் 4.28.19 : மன்னர் புரஞ்ஜனன் பின்னர், தம் மனைவியிடம் தாம் முன்பு நடந்து கொண்டவிதம் பற்றி நினைக்கத் தொடங்கினார். அவர் உணவு உண்ணும் வரை அவள் உண்ணமாட்டாள், அவர் நீராடும் வரை அவள் நீராடமாட்டாள். அவள் அவர் மீது அதிக அன்புடையவள். ஆதலினால் அவர் அவள் மீது ஆத்திரங் கொண்டு, கண்டித்தாரென்றால், அவள் அவரது தவறான நடத்தையினைப் பொறுத்துக் கொண்டு மிக்க அமைதியுடன் இருப்பாள்.
பதம் 4.28.20 : மன்னர் புரஞ்ஜனன் மேலும் சிந்தித்தார், தான் குழப்ப நிலையில் தவிக்கும் பொழுது அவளே நல்ல அறிவுரைகளைக் கூறித்தன்னை ஆற்றுப்படுத்துவாள், தான் வெளியே சென்றால் தன் பிரிவை நினைந்து கவலைப்படுவாள். என்னதான் அவள் சிறந்த வீரர்களுக்கு அன்னையாக இருந்த போதிலும், குடும்பப் பொறுப்புக்களை அவளால் எப்படி சமாளிக்க முடியும் என்று மன்னர் மிகவும் அஞ்சினார்.
பதம் 4.28.21 : மன்னர் புரஞ்சனன் தொடர்ந்து இவ்வாறு கலைப்பட்டார்: நான் இவ்வுலகைவிட்டுச் சென்ற பிறகு இப்போது என்னையே நம்பியிருக்கும் என் புதல்வர்களும், புதல்விகளும் எவ்வாறு இங்கே தொடர்ந்து வாழ்வர்? நடுக்கடலில் படகு உடைந்தால் பயணம் செய்பவர்களின் நிலைமை என்னவாகுமோ அது போன்றல்லவா இவர்களின் நிலையும் ஆகும்!
பதம் 4.28.22 : மன்னர் புரஞ்ஜனன் தம் மனைவி மக்களின் விதியைப் பற்றி துக்கமடையக்கூடாது. எனினும் அவரது புத்திக்குறைவினால் அவர் அவ்வாறே கவலைப்பட்டார். இதற்கிடையே பயம் என்னும் பெயருடைய யவனராஜன் அவரைக் கைது செய்வதற்காக அவர் அருகே விரைந்து வந்தான்.
பதம் 4.28.23 : யவனர்கள் மன்னர் புரஞ்ஜனனை ஒரு விலங்கைப்போல் கட்டி தங்கள் இருப்பிடத்திற்கு இழுத்துச் சென்றனர், மக்களின் பணியாளர்கள் அதனால் மிகுந்த துயரத்திற்காளாகினர். அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருந்த பொழுது அவர்களும் அவருடன் செல்வதற்குப் பலவந்தப்படுத்தப்பட்டனர்.
பதம் 4.28.24 : ஏற்கெனவே யவன வீரர்களால் கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியேயிருந்த பாம்பும் பிறரோடு சேர்ந்து தன் எஜமானனைத் தொடர்ந்து சென்றது. இவர்கள் அனைவரும் நகரிலிருந்து வெளியேறியவுடன் அந்த நகரம் உடனே துண்டு துண்டாக உடைந்து பொடியாகிப் போனது.
பதம் 4.28.25 : ஆற்றல்மிக்க யவனனால் மன்னர் புரஞ்ஜனன் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட பொழுதும் கூட அவரது ஒட்டு மொத்த அறியாமையினால் அவரது நண்பரும், நலன் விரும்பியான பரமாத்மாவைப் பற்றி அவரால் அப்போதும் நினைக்க முடியவில்லை.
பதம் 4.28.26 : அன்பு என்பது சிறிதுமில்லாத மன்னர் புரஞ்ஜனன் பல்வேறு வேள்விகளில் ஏராளமான விலங்குகளைக் கொன்றிருக்கிறார். இப்போது இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவ்விலங்குகள் தமது கூர்மையான கொம்புகளினால் அவரைக் குத்திக் கிழிக்கத் தொடங்கின. இச்செயல் அவரைக் கோடரிகளினால் துண்டுதுண்டாக வெட்டுவது போலிருந்தது.
பதம் 4.28.27 : பெண்களுடன் கொண்ட மாசுடைய தொடர்பினால், மன்னர் புரஞ்ஜனனைப் போன்ற ஓர் உயிர் பௌதீக உலக வாழ்வின் எல்லா வேதனைகளையும் நித்தியமாக, அனுபவித்து, கோடான கோடி வருடங்கள் எல்லா நிறைவுகளையும் இழந்து வாழ்வின் இருண்ட பகுதியில் இருக்கிறான்.
பதம் 4.28.28 : மன்னர் புரஞ்சனன் தன் மனைவியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே உடலை நீத்த காரணத்தினால் அவரது மறுபிறவியில் அவர் அழகிய உயர்ந்த இடத்துப் பெண்ணாகப் பிறந்தார். அடுத்த பிறவியில் அவர் விதர்ப மன்னனுக்கு மகளாக அவர் அரண்மனையிலேயே பிறந்தார்.
பதம் 4.28.29 : பாண்டு நாட்டைச் சேர்ந்த மலயத்துவஜன் என்னும் ஆற்றல்மிக்க மன்னருக்கு மன்னர் விதர்பனின் மகளான விதர்பீயை மணமுடித்துக் கொடுப்பதற்கு உறுதி செய்யப்பட்டது. மலத்துவஜன் பல்வேறு அரசர்களை யுத்தத்தில் வென்ற பிறகு மன்னர் விதர்பனின் புதல்வியை மணந்தார்.
பதம் 4.28.30 : மன்னர் மலயத்துவஜன், கருமைநிறக் கண்களையுடைய ஒரு மகளுக்குத் தந்தையானார். அவருக்கு ஏழு ஆண்குழந்தைகளும் பிறந்தனர் பின்னர் அவர்கள் திராவிட நாட்டின் மன்னர்கள் ஆயினர் இவ்வாறு அப்பகுதியில் ஏழு மன்னர்கள் இருந்தனர்.
பதம் 4.28.31 : அன்பிற்குரிய மன்னன் பிராசீனபர்ஹிஷதே, மலயத்துவஜனின் மைந்தர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான மைந்தர்களைப் பெற்றெடுத்தனர். இவர்கள் அனைவரும் இவ்வுலகம் முழுதையும் ஒரு மனுவின் ஆயுட்காலம் வரையும் அதன்பின்னரும் கூடப் பாதுகாத்தனர்.
பதம் 4.28.32 : மாமுனிவர் அகஸ்தியர், பகவான் கிருஷ்ணரின் உறுதிமிக்க பக்தரான மலயதுவஜனின் மூத்தமகளை மணந்தார். அவளுக்கு திருடச்யுதன் என்றொரு மைந்தன் பிறந்தான். இத்திருடச்யுதனுக்கு இத்மவாஹன் என்றொரு புதல்வன் பிறந்தான்.
பதம் 4.28.33 : இதன் பின்னர் மலயத்துவஜன் தம் நாட்டைத் தமது மைந்தர்களுக்குப் பகிர்ந்தளித்தார். பகவான் கிருஷ்ணரை முழுமனதுடன் வழிபடுவதற்காக அவர் குலாசலம் என்னும் தனிமையான இடத்திற்குச் சென்றார்.
பதம் 4.28.34 : நிலவின் ஒளி எவ்வாறு நிலவைப் பின் தொடர்கிறதோ அதுபோல் மலயத்துவ மன்னன் குலஜாலத்திற்குப் புறப்பட்டுச் சென்றவுடன், அவர்மீது பக்தியுடைய, மயக்கும் விழிகளையுடைய அவர் மனைவியும் அவரைப் பின்பற்றி, குழந்தைகள், குடும்பம் போன்ற அனைத்து இல்லற இன்பங்களையும் துறந்தாள்.
பதங்கள் 4.28.35 – 4.28.36 : குலாசலப் பகுதியில் சந்திரவாஸா, தாம்பிரபரணி, வடோதகா என்று மூன்று நதிகள் ஓடின. மன்னர் மலயத்துவஜன் இப்புண்ணிய நதிகளில் தினமும் நீராடுவார். இதனால் அவர் தமது உடலையும், உள்ளத்தையும் தூய்மை செய்து கொண்டார். நீராடி முடிந்தபின்னர் அவர் கிழங்குகள், கொட்டைகள், இலைகள், மலர்கள், வேர்கள், பழங்கள், புற்கள் போன்றவற்றை உண்டு, வாழ்ந்து வந்தார். இவ்வாறு கடுமையாகத் தவங்களை மேற்கொண்டதனால் அவர் மிகவும் உடல் மெலிந்தவராக ஆனார்.
பதம் 4.28.37 : தவத்தின் மூலம் மலயத்துவஜனின் உடலும் மனமும், குளிர்ச்சி, வெப்பம், சுகம், துக்கம், காற்று, மழை, பசி, தாகம், இன்பம், துன்பம் என்னும் இருமை நிலைகளை சமநோக்கில் காணும் திறன் பெற்றன. இவ்வாறு அவர் எல்லா இருமைநிலைகளையும் வெற்றிகொண்டார்.
பதம் 4.28.38 : வழிபாட்டினாலும், தவங்களைச் செய்வதினாலும், ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றியதினாலும் மன்னர் மலயத்துவஜன் தனது புலன்களையும், உயிரையையும், உணர்வையும் வெற்றி கொண்டார். இவ்வாறு அவர் எல்லாவற்றையும் பரம்பிரம்மத்தின் (கிருஷ்ணர்) மையப்புள்ளியில் நிலைநிறுத்தினார்.
பதம் 4.28.39 : இவ்வாறு அவர் தேவர்களின் கணக்கின்படி நூறு வருடங்கள் ஒரே இடத்தில் அசையாது இருந்தார். இதன்பின்னர் அவர் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் தூய பக்தித் தொண்டில் வளர்ச்சியடைந்து அந்த நிலையிலேயே ஸ்திரமாக இருந்தார்.
பதம் 4.28.40 : மன்னர் மலயத்துவஜன் தனிப்பட்ட ஆத்மாவிலிருந்து பரமாத்மாவை வேறுபடுத்திக் காணும் திறன்மூலம் நிறையறிவு எய்தப் பெற்றார். தனிப்பட்ட ஆத்மா அகத்தில் மட்டும் இருக்கிறது மாறாக பரமாத்மாவோ எங்கும் வியாபித்திருக்கின்றது. அவர் பரு உடல் ஆத்மா அல்லவென்றும், ஆத்மாவே அந்த உடலின் சாட்சியாக இருக்கிறது என்றும் உணரும் நிறையறிவு உடையவரானார்.
பதம் 4.28.41 : இவ்வழியில் மன்னர் மலயத்துவஜன் நிறைவான ஞானம் எய்தினார். ஏனென்றால் அவரது தூய நிலையில் அவர் முழுமுதற் கடவுளால் நேரடியாக அறிவுறுத்தப்பட்டார். இவ்வொளிமிக்க உன்னத ஞானத்தினால் அவர் எல்லாவற்றையும் பார்வையின் பல்வேறு கோணங்களிலிருந்தும் அறியக் கூடியவரானார்.
பதம் 4.28.42 : மன்னர் மலயத்துவஜன் பரமாத்மா தம் அருகில் வீற்றிருக்கின்றார் என்பதை இவ்வாறு கண்டு கொண்டார். அதுபோல் தனிப்பட்ட ஆத்மாவாகிய தாமும் பரமாத்மாவின் அருகில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் கண்டு கொண்டார். இவ்வாறு இருவரும் ஒருங்கே இருக்கும் போது அங்கே தனிப்பட்ட விருப்பங்களுக்கு எந்தவிதத் தேவையும் இல்லையென்றானது; அதனால் அவர் தமது செயல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.
பதம் 4.28.43 : மன்னர் விதர்பனின் மகள் தன் கணவனே பரம்பொருள் என்று முழுவதுமாக ஏற்றுக் கொண்டவள். தனது கணவனின் சிறந்த கொள்கைகளைப் பின்பற்றித் துறவு நெறியை மேற்கொண்டு புலனின்பம் அனைத்தையும் அவள் துறந்தாள். பின் அவரது தொண்டில் ஈடுபட்டாள்.
பதம் 4.28.44 : மன்னர் விதர்பனின் மகள் பழைய ஆடைகளையே அணிந்திருந்தாள். அவள் தவவிரதம் மேற்கொண்டிருந்ததினால் உடல் இளைத்தும் மெலிந்தும் காணப்பட்டாள். அவள் தலைமுடியை நன்கு பராமரிக்காததினால் அது சிக்கலாகி ஜடை விழுந்தது. அவள் எப்போதும் தன் கணவனின் அருகிலேயே இருந்த போதிலும் அவள் காற்றினால் அலைக்கழிக்கப்படாத நெருப்புச் சுடர் போல் அசையாது அமைதியாக இருந்தாள்.
பதம் 4.28.45 : மன்னர் விதர்பனின் மகள் தன் கணவன் உடலிலிருந்து உயிர் பிரிந்ததை அறிந்து கொள்ளும் வரை, ஆசனத்தில் உறுதியாக இருந்த அவருக்குத் தொடர்ந்து தன்னுடைய வழக்கமான பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
பதம் 4.28.46 : அவள் தன் கணவனின் கால்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்த பொழுது அவர் கால்களில் உணர்ச்சியோ, சூடோ இல்லை என்பதை உணர்ந்து உயிர் பிரிந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டாள். கணவனைப் பிரிந்து தனிமையில் இருப்பதை எண்ணி அவள் மிகவும் வருந்தினால். கணவன் துணையை இழந்துவிட்ட அவள் நிலை ஆண்மானைவிட்டுப் பிரிந்த பெண்மானின் நிலையைப் போல் பரிதாபமாக இருந்தது.
பதம் 4.28.47 : இப்போது காட்டில் கணவனை இழந்த கைம்பெண்ணாகவும், தனித்தும் விடப்பட்ட விதர்பனின் மகள் துக்கமிகுதியால் தொடர்ந்து கண்ணீர்விட்டாள். அது அவள் மார்பகங்களை நனைத்தது. அவள் வாய்விட்டு ஓவென்று கதறியழுதாள்.
பதம் 4.28.48 : ஓ, அரசர்களிற் சிறந்தவரே, அருள்கூர்ந்து எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! இவ்வுலகம் கடலாலும், தீயோராலும், ஒழுக்கமில்லாத அரசர்களாலும் சூழப்பட்டிருப்பதைப் பாருங்கள். அச்சத்தால் நடுங்குகிற இந்த உலகைக் காக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.
பதம் 4.28.49 : கணவனின் சொல்லை ஒருநாளும் எதிர்க்காத அந்தப் பெண் தனிமையான காட்டில் இறந்துபோன தன் கணவனின் பாதங்களில் வீழ்ந்து கதறியழுதாள். கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
பதம் 4.28.50 : பிறகு அவள் தன் கணவனுக்காக விறகுகளை அடுக்கி அந்தச் சிதையில் இறந்த தன் கணவன் உடலை எடுத்து வைத்து தீ மூட்டினாள். துக்கம் தாங்க முடியாமல் தானும் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறி உயிரை விடுவதெனத் தீர்மானித்தாள்.
பதம் 4.28.51 : அன்பிற்குரிய மன்னனே, புரஞ்ஜன மன்னரின் நெடு நாளைய நண்பரான அந்தணர் ஒருவர் அங்கு வந்து இனிமையான வார்த்தைகளின் மூலம் அரசியை அமைதிப்படுத்தத் தொடங்கினார்.
பதம் 4.28.52 : அந்த அந்தணர் பின்வருமாறு கேட்டார்; நீ யார்? யாருடைய மகள் அல்லது மனைவி? இங்கே படுத்திருக்கும் மனிதன் யார்? நீ இறந்துகிடக்கும் இம்மனிதனுக்காக அழுகிறாய் என்று தோன்றுகிறது. என்னைத் தெரியவில்லையா? நான் உனது நிரந்தர நண்பன். கடந்த காலத்தில் பலமுறை நீ என்னைக் கலந்தாலோசித்திருக்கிறாய் என்பதை நினைவுபடுத்திப்பார்.
பதம் 4.28.53 : அந்த அந்தணர் தொடர்ந்து கூறினார்: அன்பு நண்பனே, உடனே என்னை அடையாளம் கண்டு கொள்ள உன்னால் முடியவில்லையென்றபோதிலும் முன்பு உன்னுடைய உயிர் நண்பனாக நான் இருந்தது உனக்கு நினைவில்லையா? தீவினைவயத்தால் நீ எனது துணையைப் பிரிந்து உலகில் இன்பங்களை அனுபவிக்கும் நிலையினை ஏற்றுக் கொண்டாய்.
பதம் 4.28.54 : அன்பு நண்பனே! நாமிருவரும் உண்மையில் இணைபிரியாத இரண்டு அன்னப்பறவைகளைப் போலிருந்தோம். மானஸ ஏரியைப் போன்ற ஒரே இதயத்தில் குடியிருந்தோம். இவ்வாறு இணைந்து பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தபோதிலும் நாம் இன்னும் நமது உண்மையான உறைவிடத்திலிருந்து நெடுந்தூரம் தள்ளியே இருக்கிறோம்.
பதம் 4.28.55 : அன்பு நண்பனே, இப்போதும் நீ எனது பழைய நண்பனேயாவாய். நீ என்னைப் பிரிந்த பிறகு நீ மேலும் மேலும் உலகியல் பிணிப்புக்கு உட்படுவாய். மேலும் என்னைக் காணாததினால் நீ, யாரோ ஒரு பெண்ணால் படைக்கப்பட்ட இந்த உலகம் முழுவதும் பல்வேறு உடல்களில் பயணம் செய்து கொண்டே இருக்கின்றாய்.
பதம் 4.28.56 : அந்த நகரத்தில் (பருஉடல்). ஐந்து தோட்டங்கள், ஒன்பது வாயில்கள், ஒரு காவல்காரர், மூன்று அறைத் தொகுதிகள், ஆறு குடும்பங்கள், ஐந்து பொருட்கிடங்குகள், ஐந்து பொருட்கள், போன்றவை இருந்தன. அவ்வீட்டின் தலைவியாக ஒரு பெண் இருந்தாள்.
பதம் 4.28.57 : அன்பார்ந்த நண்பனே, ஐந்து தோட்டங்கள் என்பவை புலனின்பத்திற்கான ஐந்து பொருட்களாகும் என்பது ஒன்பது வாயில்களின் வழியே செல்லும் உயிர்க்காற்று காவலர் ஆகும். மூன்று அறைத் தொகுதிகள் என்பன நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்னும் மூலப் பொருட்களாகும். ஆறு குடும்பங்கள் என்பவை மனம் மற்றும் ஐம்புலன்களின் கூட்டுத் தொகையாகும்.
பதம் 4.28.58 : ஐந்து பொருட்கிடங்குகள் என்பன ஐந்து செயற்புலன் உறுப்புகளாகும். அவை தங்கள் நடவடிக்கைகளை, என்றும் நித்தியமாக இருக்கும் பஞ்சபூதங்களின் மூலம் நடத்துகின்றன. இச்செயல்கள் அத்தனைக்கும் பின்னால் ஆத்மா இருக்கிறது. ஆத்மாவே மனிதனாகவும், உண்மையில் அனுபவித்து மகிழ்பவனாகவும் இருக்கிறான். உடல் என்னும் நகரத்தில் அவன் இப்பொழுது ஒளிந்திருப்பதினால் அவன் அறிவிழந்தவனாக இருக்கிறான்.
பதம் 4.28.59 : அன்பு நண்பனே, உலகத்தின் ஆசைகளுடைய பெண்ணுடன் சேர்ந்து நீ இவ்வுடலினுள் நுழைந்தவுடன், புலனின்பத்தில் முற்றிலும் ஆழ்ந்துவிட்டாய். எனவே, நீ உனது ஆன்மீக வாழ்க்கையினை மறந்திருக்கிறாய். உனது உலகியற் கருத்துக்களினால் நீ பல்வேறு துன்ப நிலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றாய்.
பதம் 4.28.60 : உண்மையில் நீ விதர்பனின் மகளுமல்லள் உனது நலன் விரும்பும் கணவனாகிய இதோ இறந்து கிடக்கும் மலயத்துவஜனின் மனைவியுமல்லள். நீ புரஞ்ஜனீயின் உண்மையான கணவனுமல்லன். நீ ஒன்பது வாயில்களுடைய இவ்வுடலினுள் சிறைப் படுத்தப்பட்டிருக்கின்றாய் அவ்வளவுதான்.
பதம் 4.28.61 : சில நேரங்களில் நீ உன்னை ஆணாகவும், சில நேரங்களில் கற்புடைய பெண்ணாகவும், சில நேரங்களில் அலியாகவும் நினைக்கின்றாய். இவையனைத்தும் மாயாசக்தியினால் படைக்கப்பட்ட உடலின் விளைவுகளேயாகும். இம்மாயா சக்தியும் என்னுடைய சக்தியேயாகும். உண்மையில் நானும் நீயும் நாமிருவரும் தூய ஆன்மீக அடையாளங்களேயாவோம். இதனை நீ புரிந்து கொள்ள முயற்சிப்பாயாக. நான் நமது உண்மை நிலையை உனக்கெடுத்து விளக்கிக் கொண்டிருக்கின்றேன்.
பதம் 4.28.62 : அன்பு நண்பனே, நானும் நீயும் ஆன்மீகமயமானவர்கள் ஆதலினால் பரமாத்மாவான எனக்கும் தனிப்பட்ட ஆத்மாவான உனக்கும் தன்மையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. உனது உண்மை நிலையில் அன்பு நண்பனே, நீ தன்மையினால் என்னிடமிருந்து வேறுபடுவதில்லை. இதனைப் புரிந்து கொள்ள முயல்வாயாக. அறிவில் மேன்மையுடைய கற்றிறிந்த அறிஞர்கள் நம்மிருவருக்குமிடையே எந்தவிதமானத் தன்மை வேறுபாடுகளும் காண்பதில்லை.
பதம் 4.28.63 : நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைக் காணும் ஒருவன் தான் அதனுள் தன்னை மட்டுமே காண்கிறான் ஆனால் மற்றவர் கண்களுக்கு அவன் இருமையாகத் தென்படுகிறான். ஆகவே பாதிக்கப்பட்டும் பாதிக்கப்படாமலும் இருக்கும் நமது உலகப் பணியில் கடவுளுக்கும் உயிர்க்குமிடையே ஒரு வேறுபாடு இருக்கின்றது.
பதம் 4.28.64 : இந்த வழியில் இரண்டு அன்னப்பறவைகளும் இதயத்தில் இணைந்து வாழ்கின்றன. ஓர் அன்னம் மற்றொன்றினால் அறிவுரை கொடுக்கப்பெறும் பொழுது, அது தனது உண்மை நிலை எய்துகிறது. அதாவது உலகியல் கவர்ச்சியினால் ஒருவன் தொலைத்துவிட்ட அவனுடைய உண்மையானக் கிருஷ்ண உணர்வினை மீண்டும் பெறுகிறான் என்பதாம்.
பதம் 4.28.65 : அன்புடைய மன்னன் பிராசீனபர்ஹியே காரணங்கள் எல்லாவற்றுக்கும் மூலகாரணராக விளங்கும் முழுமுதற் கடவுள் மறைமுகமாக அறியப்படுவர் என்று போற்றப்படுகிறார். ஆகையினால் நான் உனக்கு புரஞ்ஜனனின் கதையைக் கூறினேன். உண்மையில் இது தன்னுணர்வு பெறுவதற்கான உபதேசமாகும்.