அத்தியாயம் – 27
புரஞ்ஜனனின் நகரம் சண்டவேகனால் தாக்கப்படுதல்
பதம் 4.27.1
நாரத உவாச
இத்தம் புரஞ்ஜனம் ஸத்ரயக் வசமானீய விப்ரமை:
புரஞ்ஜனீ மஹாராஜ ரேமே ரமயதீ பதிம்
நாரத: உவாச—நாரதர் கூறினார்; இத்தம்—இவ்வாறு; புரஞ்ஜனம்—மன்னர் புரஞ்ஜனன்; ஸத்ரயக்—முற்றிலும்; வஸமானீய—அவளது கட்டுப்பாட்டின் கீழ்; விப்ரமை:—அவளுடைய அழகினால்; புரஞ்ஜனீ—மன்னர் புரஞ்சனனின் மனைவி; மஹாராஜ—ஓ, அரசனே; ரேமே—மகிழ்ந்து; ரமயதீ—அனைத்து திருப்திகளும் அளித்து, பதிம்—அவள் கணவனுக்கு;
மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னனே, மன்னர் புரஞ்ஜனனின் மனைவி பல்வேறு வழிகளில் அவரை மயக்கி அவரைத்தன் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்தாள். அம்மன்னரோடு பாலுறவு வாழ்க்கையினை அனுபவித்து மகிழ்ந்து அவருக்கு வேண்டிய மட்டும் திருப்தியளித்தாள்.
பதம் 4.27.2
ஸ ராஜா மஹிஷீம் ராஜன் ஸுஸ்நாதாம் ருசிரானனாம்
க்ருத-ஸ்வஸ்த்யயனாம் த்ருப்தாம் அப்யநந்தத் உபாகதாம்
ஸ:—அவர்; ராஜா—அரசர்; மஹிஷீம்—பட்டமகிஷி; ராஜன்—ஒ, மன்னனே; ஸு-ஸ்நாதாம்—நன்கு நீராடி; ருசிர-ஆனனாம்—கவர்ச்சி மிக்க முகம்; க்ருத-ஸ்வஸ்தி-அயனாம்—எழில்மிக்க ஆடை, ஆபரணங்களினால் அலங்கரித்து; த்ருப்தாம்—திருப்தியடைதல்; அப்யநந்தத்—அவர் வரவேற்றார்; உபாகதாம்—அணுகினார்.
அரசி நன்கு நீராடி, ஆடை, ஆபரணங்களினால் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டாள். சுவைமிக்க உணவுகளை உண்டு முழுத் திருப்தியடைந்தவுடன் அவள் மன்னரிடம் வந்தாள். நன்கு அலங்கரிக்கப்பட்ட அவள் எழில்முகத்தைக் கண்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளை வரவேற்றார்.
பதம் 4.27.3
தயோபகூட: பரிரப்த-கந்தரோ
ரஹோ ‘நுமந்த்ரைர் அபக்ருஷ்ட-சேதன:
ந கால-ரம்ஹோ புபுதே துரத்யயம்
திவா நிஸேதி ப்ரமதா-பரிக்ரஹ:
தயா—அரசியினால்; உபகூட:—தழுவப்பட்டு: பதிரப்த:—தழுவினார்; கந்தர:—தோள்களை; ரஹ:—ஒரு தனிமையான இடத்தில்; அநுமந்த்ரை:—கேலியான பேச்சுக்களினால்; அபக்ருஷ்ட-சேதன:—உணர்வு அழிதல்; ந—இல்லை; கால-ரம்ஹ:—காலம் கழிந்தது; புபுதே—உணர்ந்துகொள்ள; துரத்யயம்—வெல்வதற்குரியது: திவா—பகல்; நிஸா—இரவு; இதி—இவ்வாறு; ப்ரமதா—பெண்ணால்; பரிக்ரஹ:—மயக்கப்பட்டு.
அரசி புரஞ்ஜனி மன்னரை மார்புறத்தழுவிக் கொண்டாள். அரசரும், அவள் தோள்களைப் பற்றி அணைத்துக் கொண்டார். இவ்வாறு அவர்கள் ஒரு தனிமையான இடத்தில் சிரித்துப் பேசி மகிழ்ந்திருந்தனர். இவ்வழியில் மன்னர் புரஞ்ஜனன் அவரது அழகிய மனைவியால் மயக்கப்பட்டு தமது நல்லுணர்வினை இழந்தார். இரவும் பகலும் ஓடி மறைவதை தன் வாழ்நாள் எந்தவிதமான பயனுமின்றிக் குறைந்து கொண்டே வருகிறது என்று பொருளாகும் என்பதை அவர் மறந்து போனார்.
பதம் 4.27.4
ஸயான உன்னத்த-மதோ மஹா-மனா
மஹார்ஹ-தல்பே மஹிஷீ-புஜோபதி:
தாம் ஏவ வீரோ மனுதே பரம் யதஸ்
தமோ- ‘பிபூதோ ந நிஜம் பரம் ச யத்
ஸயான:—படுத்திருத்தல்; உன்னத்த-மத:—மாயைக்கு அதிகமாக ஆட்பட்டு; மஹா-மனா:—உணர்வில் வளர்ச்சி பெறுவது; மஹா-அர்ஹ-தல்பே—சப்ரமஞ்சக் கட்டிலில்; மஹிஷி—பட்டமகிஷியுடன்; புஜ—புஜங்கள்; உபதி:—தலையணையில்; தாம்—அவளுடைய; ஏவ—உறுதியாக; வீர:—வீரர்; மனுதே—அவர் கருதினார்; பரம்—வாழ்க்கை இலட்சியம்; யத:—இதிலிருந்து; தம:—அறியாமையினால்; அபிபூத:—கடைத்தேறுதல்; ந—இல்லை: நிஜம்—அவரது உண்மையான தன்னிலை; பரம்—முழுமுதற் கடவுள்; ச—மேலும்; யத்—என்ன.
இவ்வாறு மாயையினால் அதிகமான அளவு ஆட்கொள்ளப்பட்டு, உணர்வு முன்னேற்றம் உடையவராக இருந்தபோதிலும் புரஞ்ஜன மன்னர் எப்போதும் தலையணையின் மீது இருக்கும் தன் மனைவியின் கரங்களின் மீதே முகம் புதைத்துப் படுத்திருந்தார். பெண்ணே தனது இறுதி இலட்சியமும், ஆத்மாவும் ஆகும் என்று கருதி அறியாமை என்னும் தமோ குணத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார். தன்னுணர்வு பெறுவது பற்றியோ, தனது ஆன்மாவைப் பற்றியோ அல்லது முழுமுதற் கடவுள் பற்றியோ என்னவென்று அறிந்து கொள்ள முடியாதவராக இருந்தார்.
பதம் 4.27.5
தனயவம் தமமாணஸ்ய காம-கஸ்மல-சேதஸ:
க்ஷணார்தம் இவ ராஜேந்த்ர வ்யதிக்ராந்தம் நவம் வய:
தயா—அவளுடன்; ரமமாணஸ்ய—அனுபவித்து மகிழ்தல்; காம—காமம்; கஸ்மல—பாவம்; சேதஸ:—அவர் மனம்; சஹண-அர்தம்—அரைக் கணம்; இவ—போன்று; ராஜ இந்த்ர—ஓ, மன்னனே; வ்யதிக்ராந்தம்—கழிந்தது; நவம்—புதிய; வய:—வாழ்க்கை.
அன்பிற்குரிய மன்னன் பிராசீனபர்ஹிஷத்தே, இவ்வாறு தனது உள்ளம் முழுதும் காமமும், பாவமும் நிரம்பப்பெற்றிருந்த மன்னன் புரஞ்சனன் தனது மனைவியுடன் பாலுறவு கொள்வதில் சுகித்திருக்கத் தொடங்கினார். அதனால் அவரது புதிய வாழ்க்கையும், இளமையும் அரைக் கணத்தில் தீர்ந்து போயின.
பதம் 4.27.6
தஸ்யாம் அஜநயத் புத்ரான் புரஞ்ஜன்யாம் புரஞ்ஜன:
ஸதானி ஏகாதஸ விராட் ஆயுஷோ ‘ர்தம் அதாத்யகாத்
தஸ்யாம்—அவளிடம்; அஜனயத்—அவர் பெற்றெடுத்தார்; புத்ரான்—புத்திரர்கள்: புரஞ்ஜன்யாம்—புரஞ்ஜனீயிடம்; புரஞ்ஜன:—மன்னர் புரஞ்ஜனன்; ஸதானி—நூறுகள்; ஏகாதஸ—பதினொன்று; விராட்—ஓ அரசன்; ஆயுஷ:—ஆயுளில்; அர்தம்—அரைப்பகுதி; அத—இவ்வழியில்; அத்யகாத்—அவர் கழித்தார்.
மாமுனிவர் நாரதர் பின்னர் மன்னர் பிராசீனபர்ஹிஷத்திடம் கூறினார். ஓ ஒருவனது ஆயுட்காலமானது நெடியதாகும் (விராட்), அதனால் மன்னர் புரஞ்சனன் தம் மனைவி புரஞ்சனீயிடம் 1,100 புத்திரர்களை ஈன்றெடுத்தார். இதிலேயே அவர் தமது ஆயுளில் பாதிக் காலத்தைக் கழித்தார்.
பதம் 4.27.7
துஹித்ருர் தஸோத்தர-ஸதம் பித்ரு-மாத்ரு-யஸஸ்கரீ:
ஸீலௌதார்ய-குணோபேதா: பௌரஞ்ஜன்ய: ப்ரஜா பதே
துஹித்ரு:—புதல்விகள்; தஸ-உத்தர—மேல் ஒரு பத்து; ஸதம்—நூறு; பித்ரு—தந்தையைப் போல்; மாத்ரு—மற்றும் அன்னையைப் போல்; யஸஸ்கரீ:—புகழுடன்; ஸீல—நன்னடத்தை; ஔதார்ய—பெரியமனது; குண—நற்குணங்கள்; உபேதா:—நிறைந்தவர்களாக; பௌரஞ்ஜன்ய—புரஞ்ஜனனின் புதல்வியர்; ப்ரஜா-பதே—ஓ பிரஜாபதியே.
ஒ பிரஜாபதியான மன்னன் பிராசீனபர்ஹிஷத்தே, இவ்வாறு மன்னர் புரஞ்ஜனன் 110 புதல்விகளைப் பெற்றெடுத்தார். அப்புதல்விகள் அனைவரும் தமது தாய் தந்தையரைப் போன்றே புகழுடையவர்களாக விளங்கினர். அவர்கள் நேர்மையுடையவர்களாகவும், பெருந்தன்மை மிக்கவர்களாக நற்குணமுடையவர்களாகவும் திகழ்ந்தனர்.
பதம் 4.27.8
ஸ பஞ்சால-பதி: புத்ரான் பித்ரு-வம்ஸ-விவர்தனான் தாரை:ஸம்யோஜயாம் ஆஸ துஹி த்ரு: ஸத்ருஸைர் வரை:
ஸ:—அவர்; பஞ்சால-பதி:—பஞ்சாலத்தின் மன்னர்; புத்ரான்—புத்திரர்கள்; பித்ருவம்ஸ—தந்தை வம்சத்தினர்; விவர்தனான்—அதிகரித்தல்; தாரை:—மனைவியருடன்; ஸம்யோஜயாம்-ஆஸ—மணமுடித்து; துஹித்ரூ—புதல்விகள்; ஸத்ருஸை:—தகுதியுள்ள; வரை:—கணவர்களுடன்.
இதன்பிறகு பஞ்சால நாட்டின் அரசரான மன்னர் புரஞ்ஜனன் தமது குடும்ப வம்சத்தைப் பெருக்குவதற்காகத் தமது புதல்வர்களுக்குத் தகுதி வாய்ந்த பெண்களையும், தமது புதல்விகளுக்குத் தகுதிவாய்ந்த ஆண்களையும் மணமுடித்து வைத்தார்.
பதம் 4.27.9
புத்ராணாம் சாபவன் புத்ரா ஏகைகஸ்ய ஸதம் ஸதம்
யைர் வை பௌரஞ்ஜனோ வம்ஸ: பஞ்சாலேஷு ஸமேதித:
புத்ராணாம்—புதல்வர்களின்; ச—மேலும்; அபவன்—பிறந்தனர்; புத்ரா:—புத்திரர்கள்; ஏக-ஏகஸ்ய—ஒவ்வொருவரும்; ஸதம்—நூறு; யை:—அவர்களால்; வை—உறுதியாக; புரஞ்ஜன:—மன்னர் புரஞ்ஜனனின்; வம்ஸ:—வம்சம்; பஞ்சாலேஷு—பஞ்சால தேசத்தில்; ஸமேதித:—பெருமளவில் அதிகரித்தது.
இப்புதல்வர்களுள் பலர் நூற்றுக்கணக்கான புதல்வர்களை ஈன்றெடுத்தனர். இதனால் பஞ்சால நாடு மன்னர் புரஞ்ஜனனின் பிள்ளைகளினாலும் பேரப்பிள்ளைகளினாலும் நிரம்பி வழிந்தது.
பதம் 4.27.10
தேஷு தத்-ரிக்த-ஹாரேஷு க்ருஹ-கோஷானுஜீவிஷு
நிரூடேன மமத்வேன விஷயேஷு அன்வபத்யத
தேஷு—அவர்களுக்கு; தத்-ரிக்த-ஹாரேஷு—அவர் செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்கள்; க்ருஹ—இல்லம்; கோஷ—கஜானா; அனுஜீவிஷு—பின்பற்றுபவர்களுக்கு; நிரூடேன—ஆழமாக வேரூன்றியிருத்தல்; மமத்வேன—பற்றுதலினால்; விஷயேஷு—புலனுகர்ச்சிப் பொருட்களுக்கு; அன்வபத்யத—கட்டுப்பட்டவரானார்.
இக்குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் மன்னர் புரஞ்ஜனனின் செல்வங்களான அரண்மனை, கஜானா, வேலைக்காரர்கள், செயலர்கள் போன்றவற்றைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களாக விளங்கினார். இப்பொருள்களிடத்துப் புரஞ்ஜனனின் பற்று மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்தது.
பதம் 4.27.11
ஈஜே ச க்ரதுபிர் கோரைர் தீக்ஷித: பஸு-மாரகை:
தேவான் பித்ரூன் பூத-பதீன் நானா காமோ யதா பவான்
ஈஜே—அவர் வழிபட்டால்; ச—மேலும்; க்ரதுபி:—வேள்விகளினால்; கோரை:—கோரமாக; தீக்ஷித:—கவரப்பட்டு; பஸு-மாரகை:—அவற்றில் பரிதாபத்திற்குரிய விலங்குகள் கொள்ளப்படுகின்றன; தேவான்—தேவர்கள்; பித்ரூன்—பித்துருக்கள்; பூத-பதீன்—மனித சமுதாயத்தின் உயர்ந்த தலைவர்கள்; நானா—பல்வேறு; காம:—ஆசைகளுடன்; யதா—போன்று; பவான்—உன்னை.
மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னன் பிராசினபர்ஹிசத்துவே, உன்னைப்போல் மன்னர் புரஞ்ஜனனும் ஏராளமான ஆசைகள் உடையவராக இருந்தார். இதனால் அவர் தேவர்களையும், பித்ருக்களையும் (முன்னோர்களையும்), சமுதாயத் தலைவர்களையும் பல்வேறு வேள்விகளினால் வழிபட்டார். அவ்வேள்விகள் அனைத்தும் கோரமானவையாக இருந்தன. ஏனென்றால் அவை விலங்குகளைக் கொல்லும் ஆசையைத் தூண்டுவனவாக இருந்தன.
பதம் 4.27.12
யுக்தேஷ்வ ஏவம் ப்ரமத்தஸ்ய குடும்பாஸக்த-சேதஸ:
ஆஸஸாத ஸ வை காலோ யோ ‘ப்ரிய: ப்ரிய-யோஷிதாம்
யுக்தேஷு—பயன்தரும் செயல்களிடத்து; ஏவம்—இவ்வாறு; பரமத்தஸ்ய—கவனமற்றவராக; குடும்ப—குடும்ப சந்ததியினர்க்கு; ஆஸக்த—பற்றுவைத்தல்; சேதஸ—உணர்வு; ஆஸஸாத—அடைதல்; ஸ:—அந்த; வை—உறுதியாக; கால:—காலம்; ய:—எது; அப்ரிய:—பிரியமானதன்று; ப்ரிய-யோஷிதாம்—பெண்களிடம் பிரியமுடைவர்களுக்கு.
பலன்தரும் செயல்களிடத்தும் (கர்ம காண்டீயம்) சந்ததியினரிடத்தும் மிகுந்த பற்றுடையவராகவும் மாசுற்ற உணர்வு உடையவராகவும் விளங்கிய மன்னர் புரஞ்ஜனன் இறுதியில் உலக விஷயங்களில் அளவுகடந்த பற்றுடையவர்களும் கூட விரும்பாத ஓர் நிலையினை அடைந்தார்.
பதம் 4.27.13
சண்டவேக இதி க்யாதோ கந்தர்வாதிபதிர் ந்ருப
கந்தர்வாஸ் தஸ்ய பலின: ஷஷ்டி-உத்தர-ஸத-த்ரயம்
சண்டவேக—சண்டவேகன்; இதி—இவ்வாறு; க்யாத:—புகழ்மிக்க; கந்தர்வ—கந்தர்வ லோகத்தைச் சேர்ந்தவன்; அதிபதி:—அதிபதியாக; ந்ருப—ஓ, மன்னனே; கந்தர்வா:—கந்தவர்கள்; தஸ்ய—அவனது; பலின:—ஆற்றல்மிக்க வீரர்கள்; ஷஷ்டி—அறுபது; உத்தர—கடந்த; ஸத—நூறு; த்ரயம்—மூன்று.
ஓ, மன்னனே! கந்தர்வ லோகத்தை சண்டவேகன் என்னும் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாக 360 கந்தர்வ வீரர்கள் இருந்தனர்.
பதம் 4.27.14
கந்தர்வ்யஸ் தாத்ருஸீர் அஸ்ய மைதுன்யஸ்ச ஸிதாஸிதா:
பரிவ்ருத்த்யா விலும்பந்தி ஸர்வ-காம-விநிர்மிதாம்
கந்தர்வ்ய:—கந்தர்வீக்கள்; தாத்ருஸீ:—இதுபோன்று; அஸ்ய—சண்டவேகனின்; மைதுன்ய:—பாலுறவு கொள்வதற்கானத் துணைவிகள்; ச—மேலும்; ஸித—வெண்மை; அஸிதா:—கருமை; பரிவ்ருத்த்யா—சூழப்படுவதினால்; விலும்பந்தி—அவர்கள் கொள்ளையிடுகின்றனர்; ஸர்வ-காம—இச்சைக்குரிய அனைத்துப் பொருட்களையும்; விநிர்மி-தாம்—உண்டாக்கப்பட்ட.
சண்டவேகனுடன் கந்தர்வ வீரர்களைப் போல் ஏராளமான பெண் கந்தர்வீக்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் புலனின்பத்திற்காகப் பொருட்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கொள்ளையடித்தனர்.
பதம் 4.27.15
தே சண்ட வேகானுசரா: புரஞ்ஜன-புரம் யதா
ஹர்தும் ஆரேபிரே தத்ர ப்ரத்யஷேதத் ப்ரஜாகர:
தே—அவர்கள் அனைவரும்; சண்டவேக—சண்டவேகனின்; அனுசரா:—தொண்டர்கள்; புரஞ்ஜன—மன்னர் புரஞ்சனின்; புரம்—நகரம்; யதா—எப்பொழுது; ஹர்தும்—கொள்ளையடிப்பதற்கு; ஆரேபிரே—தொடங்கினர்; தத்ர—அங்கே; பரத்யஷேதத்—பாதுகாத்தல்; ப்ரஜாகர:—ஒரு பெரிய பாம்பு.
சுந்தவர்வ ராஜாவும் (சண்டவேகன்) அவரது வீரர்களும் புரஞ்ஜனனின் நகரத்தைக் கொள்ளையடிக்க வரும் பொழுது அந்நகரத்தை ஓர் ஐந்து தலை நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது.
பதம் 4.27.16
ஸ ஸப்தபி: ஸதைர் ஏகோ விம்ஸத்யா ச ஸதம் ஸமா:
புரஞ்ஜன-புராத்யகே ‘ஷா கந்தர்வைர் யுயுதே பலீ
ஸ:—அவர்; ஸப்தவி:—ஏழு; ஸதை:—நூறு; ஏக:—தனியே; விம்ஸத்ய—இருபது; ச—மேலும்; ஸதம்—நூறு; ஸமா:—வருடங்கள்; புரஞ்ஜன—புரஞ்ஜன மன்னரின்; புர-அத்யக்ஷ—நகரத்தின் கண்காணிப்பாளர்; கந்தர்வை:—கந்தர்வர்களுடன்; யுயுதே—போர் புரிந்தார்; பலீ—கடுமையான.
மன்னர் புரஞ்ஜனனின் நகரத்தைக் கண்காணித்து வந்த ஐந்து தலை நாகம் கந்தர்வர்களுடன் கடுமையாக நூறு வருடங்கள் போரிட்டது. எண்ணிக்கையில் அவர்கள் 720 பேர்கள் இருந்தபோதிலும் அது தனியாகவே அவர்களுடன் போரிட்டது.
பதம் 4.27.17
க்ஷீயமாணே ஸ்வ-ஸம்பந்தே ஏகஸ்மின் பஹுபிர் யுதா
சிந்தாம் பராம் ஜகாமார்த: ஸ-ராஷ்ட்ர புர-பாந்தவ:
க்ஷீயமாணே—அப்பாம்பு வலிமையிழந்தவுடன்; ஸ்வ-ஸம்பந்தே—அவரது நெருங்கிய நண்பன்; ஏகஸ்மின்—தனியே; பஹுபி:—பல வீரர்களுடன்; யுதா—யுத்தத்தில்; சிந்தாம்—கவலை; பராம்—மிகவும்; ஜகாம—அடைந்தனர்; ஆர்த:—கவலையடைந்தார்; ஸ—உடன்; ராஷ்ட்ர—ராஜ்ஜியத்தின்; புர—நகரத்தின்; பாந்தவ—நண்பர்களும், உறவினர்களும்.
அவர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீரர்கள் ஆனதினாலும் தான் தனியே போரிட்டதினாலும் ஐந்து தலை நாகம் வலிமை குன்றியது. தனக்கு மிகவும் நெருக்கமான நண்பனான நாகம் வலிமையிழந்ததைக் கண்டு மன்னர் புரஞ்ஜனனும் நகரிலுள்ள குடிமக்களும் பெரிதும் மனக்கலக்கமுற்றனர்.
பதம் 4.27.18
ஸ ஏவ புர்யாம் மது-புக் பஞ்சாலேஷு ஸ்வ-பார்ஷதை:
உபநீதம் பலிம் க்ருஹ்ணன் ஸ்த்ரீ-ஜிதோ நாவிதத் பயம்
ஸ:—அவர்; ஏவ—உறுதியாக; புர்யாம்—நகரத்தினுள்; மது-புக்—பாலுறவு வாழ்க்கையில் இன்புறுதல்; பஞ்சாலேஷு—பஞ்சால ராஜ்யத்தின் (ஐம்புலன்களுக்கான பொருள்கள்); ஸ்வ-பார்ஷதை:—அவரைப் பின்பற்றுபவர்களுடன் சேர்ந்து; உபநீதம்—கொணர்தல்; பலிம்—வரிகள்; க்ருஹ்ணன்—ஏற்றுக் கொண்டு; ஸ்த்ரீ-ஜித—பெண்களினால் வெல்லப்பட்டால்; ந—இல்லை; அவிதத்—புரிந்து கொள்ளுதல்; பயம்—மரணபயம்.
மன்னர் புரஞ்ஜனன் பஞ்சால நகரில் மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார். பாலுறவு இன்பத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். முற்றிலும் பெண்களின் கட்டுப்பாட்டின் கீழ் அவர் இருந்ததினால் தனது வாழ்நாட்கள் கழிவதையும் தாம் மரணத்தின் எல்லைக்கு வந்துவிட்டதையும் அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
பதம் 4.27.19
காலஸ்ய துஹிதா காசித் த்ரி-லோகீம் வரம் இச்சதீ
பர்யடந்தீ ந பர்ஹிஷ்மன் ப்ரஹதயனந்தத கஸ்சன
காலஸ்ய—தடுக்கவொண்ணா காலத்தின்; துஹிதா—புதல்வி; காசித்—ஒருத்தி; த்ரி-லோகீம்—மூன்று உலகங்களிலும்; வரம்—கணவன்; இச்சதீ—விரும்பி; பர்யடந்தீ—பிரபஞ்சம் முழுதும் சுற்றி வந்தாள்; ந—இல்லை; பர்ஹிஷ்மன்—ஒ, மன்னன் பிராசீனபர்ஹிஷத்தே; ப்ரத்யனந்தத—அவனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள; கஸ்சன—எவரும்.
அன்பார்ந்த மன்னன் பிராசீன பர்ஹிஷத்தே! தடுக்கவொண்ணாத காலத்தின் புதல்வி தனக்குத் தகுந்த கணவனைத் தேடி மூன்று உலகங்களிலும் பயணம் செய்து கொண்டிருந்தாள். அப்படி அவள் வந்தபோதும் அவளை ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பதம் 4.27.20
தௌர்பாக்யேனாத்மனோ லோகே விஸ்ருதா துர்பகோதி ஸா
யா துஷ்டா ராஜர்ஷயே து வ்ருதாதாத் பூரவே வரம்
தௌர்பாக்யேன—துரதிர்ஷ்டத்தின் காரணமாக; ஆத்மன:—அவள் தனது; லோகே—உலகில்; விஸ்ருதா—போற்றப்படுதல்; துர்பகா—மிகவும் துரதிர்ஷ்டம் வாய்ந்த; இதி—இவ்வாறு; ஸா—அவள்; யா—யார்; துஷ்டா—திருப்தியடைதல்; ராஜ-ருஷ்யே—ராஜ ரிஷிக்கு; அதாத்—அளித்தாள்; பூரவே—மன்னர் பூருவிற்கு; வரம்—வரம்.
காலத்தின் புதல்வி (ஜரா) மிகவும் துரதிர்ஷ்டம் வாய்ந்தவள் ஆனாள். இதனைத் தொடர்ந்து அவள் துர்பகா (துர்பாக்கியசாலி) என்று கூறப்பட்டாள். ஒருவாறாக இவள் ஒரு முறை ஒரு சிறந்த மன்னரால் மகிழ்ச்சியடைந்தாள், மேலும் அம்மன்னர் அவளை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் அவள் அவருக்கு ஒரு சிறந்த வரம் அருளினாள்.
பதம் 4.27.21
கதாசித் அடமானா ஸா ப்ரஹ்ம-லோகான் மஹீம் கதம்
வவ்ரே ப்ருஹத்-வ்ரதம் மாம்து ஜானதீ காம-மோஹித
கதாசித்—முன்னொரு காலத்தில்; அடமானா—பயணித்தல்; ஸா—அவள்; ப்ரஹ்ம-லோகாத்—மேலுலகமான பிரம்ம லோகத்திலிருந்து; மஹீம்—பூமிக்கு; கதம்—வந்தேன்; வவ்ரே—அவள் கோரினாள்; ப்ருஹத்-வ்ரதம்—பிரம்மச்சாரி விரதம்; மாம்—எனக்கு; து—பிறகு; ஜானதீ—அறிந்து கொண்டு; காம-மோஹிதா—காம மோகமுற்று.
முன்பு ஒரு நாள் நான் மேலுலகமான பிரம்ம லோகத்திலிருந்து பூமிக்கு வந்தேன். பிரபஞ்சம் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த காலத்தின் புதல்வி என்னை சந்தித்தாள். நான் பிரம்மச்சரியன் என்பதை அறிந்து கொண்ட அவள், என் மீது மோகமுற்று, நான் அவளை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினாள்.
பதம் 4.27.22
மயி ஸ்ம்ரப்ய விபுல-மதாச் சாபம் ஸுது: ஸஹம்
ஸ்தாதும் அர்ஹஸி நைகத்ர மத்-யாச்ஞா-விமுகோ முனே
மயி—என்னிடம்; ஸம்ரப்ய—ஆத்திரம் கொண்டு; விபுவ—அளவற்ற; மதார்—மாயையினால்; ஸாபம்—சாபம்; ஸு-து: ஸஹம்—தாங்க முடியாத; ஸ்தாதும் அர்ஹஸி—நீர் இருப்பது; ந—இல்லை; ஏகத்ர—ஓரிடத்தில்; மத்—எனது; யாச்ஞா—வேண்டுகோளை; விமுக:—மறுதலித்ததினால்; முனே—ஓ, மாமுனிவரே;
மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அவளது வேண்டுகோளை நான் மறுதலித்ததினால் அவள் என் மீது ஆத்திரங்கொண்டாள். என்னை மிகவும் கடுமையாகச் சபித்தாள். நான் நீண்ட நாட்கள் ஓரிடத்திலும் தங்க முடியாது என்றும் கூறினாள்.
பதம் 4.27.23
ததோ விஹத-ஸங்கல்பா கன்யகா யவனேஸ்வரம்
மயோபதிஷ்டம் ஆஸாத்ய வவ்ரே நாம்நா பயம் பதிம்
தத:—அதன்பிறகு; விஹத-ஸங்கல்பா—தனது சங்கல்பத்தில் ஏமாற்றமடைந்து; கன்யகா—காலமகள்; யவன-ஈஸ்வரம்—தீண்டத்தகாதவர்களின் மன்னர்; மயா-உபதிஷ்டம்—என்னால் குறிப்பிடப்பட்டு; ஆஸாத்ய—அணுகினாள்; வவ்ரே—ஏற்றுக் கொண்டு; நாம்னா—நாமத்தில்; பயம்—பயம்; பதிம்—அவள் கணவனாக.
என்னிடம் ஏமாற்றமடைந்த காலமகள் எனது அனுமதியோடு பயம் என்னும் பெயருடைய, யவனர்களின் மன்னனை அடைந்து அவனைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டாள்.
பதம் 4.27.24
ருஷபம் யவனானாம் த்வாம் வ்ருணே வீரேப்ஸிதம் பதிம்
ஸங்கல்பஸ் த்வயி பூதானாம் க்ருத: கிலந ரிஷ்யதி
ருஷபம்—மிகச்சிறந்த; யவனானாம்—தீண்டத்தகாதவர்களின்; த்வாம்—நீர்; வ்ருணே—நான் ஏற்றுக் கொள்கிறேன்; வீர—ஓ, வீரரே; ஈப்ஸிதம்—விரும்பினேன்; பதிம்—கணவனாக; ஸங்கல்ப—சங்கல்பம்; த்வயி—உமக்கு; பூதானாம்—அனைத்து உயிர்வாழிகளின்; க்ருத:—செய்யப்பட்டால்; கில—உறுதியாக; ந—இல்லை; ரிஷ்யதி—குழப்பமடைந்து.
யவனர்களின் மன்னனை அணுகிய காலகன்யா அவனிடம் கூறினாள் மிகச் சிறந்த வீரரே, எனது போற்றுதலுக்குரியவரே, தீண்டத்தகாதவர்களிடையே நீரே மிகச் சிறந்தவர். உம்மை நான் காதலிக்கிறேன். கணவனாக அடையவும் விரும்புகிறேன். உம்மை நண்பனாக அடையும். ஒருவன் குழப்பமடைவதில்லை என்பதை நான் நன்கறிவேன்.
பதம் 4.27.25
த்வாவ் இமாவ் அநுஸோசந்தி பாலாவ் அஸத்-அவக்ரஹௌ
யல் லோக-ஸாஸ்த் ரோபனதம் ந ராதி ந தத் இச்சதி
த்வௌ—இருவகைகள்; இமௌ—இவைகள்; அநுஸோசந்தி—துக்கம்; பாலௌ—அறியாமை; அஸத்—மூடர்; அவக்ரஹௌ—பாதையில் நடந்து; யத்—அது; லோக—மரபினால்; ஸாஸ்த்ர—சாத்திரங்களினால்; உபனதம்—உள்ளவை; ந—இல்லை; ராதி—பின்பற்றுதல்; ந—இல்லை; தத்—அந்த; இச்சதி—இச்சைகள்.
மரபுகளின் அல்லது சாத்திர நெறிகளின்படி தானம் வழங்காதவனும், தானம் பெறாதவனும் அறியாமை என்னும் தமோ குண முடையவர்களாகவே கருதப்படுகின்றனர். இவர்கள் மூடர்களின் காலடியைப் பின்பற்றுகின்றனர். நிச்சயம் இவர்கள் இறுதியில் துக்கத்தைத் தவிர வேறெதுவும் அடைவதில்லை.
பதம் 4.27.26
அதோ பஜஸ்வ மாம் பத்ர பஜந்தீம் மே தயாம் குரு
ஏதாவான் பௌருஷோ தர்மோ யத் ஆர்தான் அனுகம்பதே
அதோ—ஆகையினால்; பஜஸ்வ—ஏற்றுக் கொள்ள; மாம்—என்னை; பத்ர—ஓ, மேன்மைமிக்கவரே; பஜந்தீம்—பணி செய்யும் விருப்பம்; மே—எனக்கு; தயாம்—கருணை; குரு—காட்டவும்; ஏதாவான்—இச்செயல்; பெளருஷ:—எந்தவொரு நேர்மையான மனிதருக்கும்; தர்ம:—தர்மமாகும்; யத்—அந்த; ஆர்தான்—துன்புற்றோர்க்கு; அனுகம்பதே—இரக்கப்படுவது.
காலகன்யா தொடர்ந்து கூறினாள்: ஒ, மேன்மைமிக்கவரே, உமக்கு சேவை செய்ய வேண்டுமென்பதற்காகவே உமது முன் இப்போது நான் நின்று கொண்டிருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வதின் மூலம் எனக்குக் கருணை காட்டுவீராக, நேர்மைமிக்க ஒருவருக்கு சிறந்த கடமை துன்பத்தில் வருந்துவோர்க்கு இரக்கப்படுதலேயாகும்.
பதம் 4.27.27
கால-கன்யோதித-வசோ நிஸம்ய யவனேஸ்வர:
சிகீர்ஷுர் தேவ-குஹ்யம் ஸ ஸஸ்மிதம் தாம் அபாஷத
கால-கன்யா:—காலமகள், காலகன்யா; உதித—சொன்ன; வாச:—வார்த்தைகள்; நிஸம்ய—கேட்டு; யவன-ஈஸ்வர:—யவன ராஜா; சிகீர்ஷு:—நிறைவேற்றுவதற்கு விரும்பி; தேவ—தேவ விதியின்; குஹ்யம்—இரகசியப் பணி; ஸ:—அவர்; ஸ-ஸ்மிதம்—புன்னகையுடன்; தாம்—அவளிடம்; அபாஷத—கூறினார்.
காலத்தின் புதல்வியான காலகன்யாவின் உரையைக் கேட்ட யவன ராஜா புன்னகை பூத்தார். தெய்வ விதியின் பேரில் தான் செய்ய வேண்டிய தனது இரகசியப் பணியினை நிறைவேற்றுவதற்காக, அவர் காலகன்யாவிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 4.27.28
மயா நிரூபிதஸ் துப்யம் பதிர் ஆத்ம-ஸமாதினா
நாபினந்ததி லோகோ ‘யம் த்வாம் அபத்ராம் அஸம்மதாம்
மயா—என்னால்; நிரூபித:—நிச்சயிக்கப்பட்டுள்ளது; துப்யம்—உனக்காக; பதி:—கணவன்; ஆத்ம—மனதின்; ஸமாதினா—தியானத்தினால்; ந—இல்லை; அபினந்ததி—வரவேற்பது; லோக:—மக்கள்; அயம்—இவைகள்; த்வாம்—நீ; அபத்ராம்—அமங்கலமான; அஸம்மதாம்—ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
யவன ராஜா பதில் கூறினார்: ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு நான் உனக்கு ஒரு கணவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உண்மையில் ஒவ்வொருவனும் உன்னை அமங்கலமானவள், தொல்லை தருபவள் என்றே கருதுகிறான். இவ்வாறு ஒருவருமே உன்னை விரும்பாத போது எவன் உன்னைத் தன் மனைவியாக ஏற்றுக் கொள்வான்?
பதம் 4.27.29
த்வம் அவ்யக்த-கதிர் புங்க்ஷ்வ லோகம் கர்ம-விநிர்மிதம்
யா ஹி மே ப்ருதனா-யுக்தா ப்ரஜா-நாஸம் ப்ரணேஷ் யஸி
த்வம்—நீ; அவ்யக்த-கதி:—அவளது நடமாட்டம் கண்ணுக்குப் புலப்படாதது; புங்க்ஷ்வ—மகிழ்தல்; லோகம்—இவ்வுலகம்; கர்ம-விநிர்மிதம்—பலன் தரும் செயல்களினால் உருவாக்கப்பட்டது; யா—யார்; ஹி—உறுதியாக; மே—எனது; ப்ருதனா—வீரர்கள்; யுக்தா—உதவியினால்; ப்ரஜா-நாஸம்—உயிர்வாழிகளை அழிப்பதற்கு; ப்ரணேஷ்யஸி—எந்தவிதத் தடையுமின்றி நீ செய்யலாம்.
இவ்வுலகம் பலன் தரும் செயல்களின் விளைவாகும். ஆகையினால் நீ கண்ணுக்குப் புலப்படாமல் பொது மக்களைத் தாக்கலாம். எனது வீரர்களின் உதவியினால் எந்தவிதமான எதிர்ப்புமின்றி நீ அவர்களைக் கொல்லலாம்.
பதம் 4.27.30
ப்ரஜ்வாரோ ‘யம் மம ப்ராதா த்வம் ச மே பகினீ பவ
சராமி உபாப்யாம் லோகே ‘ஸ்மின்ன அவ்யக்தோ பீம-ஸைனிக:
ப்ரஜ்வார:—பிரஜ்வாரன் என்ற பெயரில்; அயம்—இந்த; மம—எனது; ப்ராதா—சகோதரன்; த்வம்—நீ; ச—மேலும்; மே—என்னுடைய; பகினீ—சகோதரி; பவ—ஆவாயாக; சராமி—நான் செல்வேன்; உபாப்யாம்—உங்கள் இருவரால்; லோகே—உலகத்தில்; அஸ்மின்—இந்த; அவ்யக்த:—பார்வைக்குத் தோன்றாமல்; பீம—அபாயகரமான; ஸைனிக:—வீரர்களுடன்;
யவன ராஜா தொடர்ந்து கூறினார்: இதோ இவன் என் சகோதரன் பிரஜ்வாரன்; உன்னை எனது சகோதரியாக நான் இப்போது ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் கண்ணுக்குப் புலனாகாமல் செயல்படுவதற்காக உங்கள் இருவரையும் அதுபோல் எனது அபாயகரமான வீரர்களையும் நான் பணியில் அமர்த்துகின்றேன்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “புரஞ்ஜன மன்னரின் நகரம் சண்டவேகனால் தாக்கப்படுதலும் காலகன்யாவின் குண நலன்களும்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.