அத்தியாயம் – 26
மன்னர் புரஞ்ஜனன் காட்டிற்கு
வேட்டையாடச் செல்லுதல்
பதங்கள் 4.26.1 – 4.26.3 :
நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே, முன்னொரு காலத்தில் மன்னர் புரஞ்ஜனன் தமது சிறந்த வில்லை எடுத்துக்கொண்டு, பொன்னாலான கவச உடையணிந்து, அம்பறாத் தூணியில் ஏராளமான அம்புகளையும் எடுத்துக் கொண்டு பதினோரு காவலர்கள் துணைவர, ஐந்து குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி மிகவும் வேகமாகப் பஞ்ச பிரஸ்தம் என்று காட்டுக்குச் சென்றார். அவர் அத்தேரில் வெடிக்கக்கூடிய இரண்டு அம்புகளையும் எடுத்துச்சென்றார். அந்தத் தேர் சுழலும் ஓர் இருசுடன் கூடிய இரு சக்கரங்களின் மேல் பொருத்தப்பட்டிருந்தது. அந்தத்தேரின் மீது மூன்று கொடிகள், குதிரையின் கடிவாளக்கயிறுகள், தேரோட்டிக்குரிய இடம் ஒன்று, கடிவாளக் கயிறுகளை இணைத்துக்கட்டும் இரு கம்பங்கள்; ஐந்து ஆயுதங்கள் மற்றும் ஏழு மறைப்புக்கள் இருந்தன. அத்தேர் ஐந்து வெவ்வேறு விதமான பாணிகளில் சென்றது. அதன்முன்பு ஐந்து தடைகள் இருந்தன. அத்தேரின் அனைத்துப் பகுதிகளும் பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பதம் 4.26.4 : தன் மனைவியான அரசியை விட்டு ஒரு க்ஷணம் கூடப்பிரிந்திருப்பது என்பது மன்னர் புரஞ்ஜனருக்கு இயலாத ஒன்றாகும். இருந்த போதிலும் அன்றைய தினம் வேட்டையாட வேண்டும் என்னும் ஆவலினால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் அவர் தன் மனைவியைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது மிக்க கர்வத்துடன் தனது வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார்.
பதம் 4.26.5 : அச்சமயம் மன்னர் புரஞ்ஜனன் பயங்கரமான அசுர மனப்பான்மை உடையவராக விளங்கினார். இதனால் அவர் மனம் கல்லாக மாறியதோடு கருணையற்றவராகவும் ஆனார். அதனால் அவர் கூர்மையான அம்புகளினால் மனம் போன போக்கில் காட்டிலுள்ள வாயில்லா விலங்குகளைக் கொன்று குவித்தார்.
பதம் 4.26.6 : இறைச்சி உண்ணவேண்டுமென்று ஓர் அரசன் மிகுந்த ஆவல் கொண்டானென்றால், வேள்விகளைச் செய்வதற்கு வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் நெறிமுறைகளுக்கேற்ப அவன் காட்டிற்குச் சென்று கொல்வதற்குரிய விலங்குகளை மட்டுமே கொல்லலாம். வரைமுறையின்றியும் தேவையின்றியும் விலங்குகளைக் கொல்ல ஒருவனுக்கு அனுமதி இல்லை. வேதங்கள், தமோகுணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மூடர்கள் அநாவசியமாக மிருகங்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே, விலங்குகளைக் கொல்வதை முறைப்படுத்தியிருக்கின்றன.
பதம் 4.26.7 : மன்னர் பிராசீன பர்ஹிஷத்திடம் நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்; அன்பார்ந்த மன்னனே, வேத சாத்திரங்களின் நெறி முறைகளுக்கேற்பச் செயல்படும் ஒருவன் பயனை எதிர்பார்த்து நற்செயல்களில் ஒருக்காலும் ஈடுபடுவதில்லை.
பதம் 4.26.8 : இதற்குமாறாக வீண் ஆணவத்தின் காரணமாக மனம்போன போக்கில் செயல்படுபவன் கீழே விழுந்து விடுகிறான். இதனால் அவன் முக்குணங்களுடைய (சத்துவம், ரஜோ, தமோ) ஜட இயற்கையின் விதிமுறைகளில் ஈடுபாடுடையவனாகிறான். இவ்வழியில் ஓர் உயிர் தனது உண்மையான ஞானத்தை இழப்பதோடு பிறப்பு, இறப்பு சுழற்சியில் நித்தியமாகச் சிக்கிக் கொள்கிறான். இவ்வாறு அவன் மலத்திலுள்ள புழுவாதல் மற்றும் பிரம்ம லோகத்தில் உயர்நிலை பெறுதல் என்று மேலும், கீழும் போய் வந்து கொண்டிருக்கிறான்.
பதம் 4.26.9 : மன்னர் புரஞ்ஜனன் இவ்வாறு வேட்டையாடிய பொழுது அவரது கூர்மையான அம்புகளினால் துளைக்கப்பட்டு அக்காட்டிலுள்ள விலங்குகள் மாண்டன. மன்னர் தம் மனம்போன போக்கில் விலங்குகளை கொன்று குவிப்பதைக் கண்ட கருணையுடைய பலர் துக்கத்தில் ஆழ்ந்தனர். இதுபோன்ற அன்புடையோர் விலங்குகள் கொல்லப்படுவதைத் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்.
பதம் 4.26.10 : இவ்வாறு மன்னர் புரஞ்ஜனன், முயல்கள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள், காட்டெருதுகள், கருநிறமான்கள், முள்ளம் பன்றிகள், மற்றும் பிற வேட்டை மிருகங்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகளைக் கொன்று குவித்தனர். மேலும் மேலும் இவற்றைக் கொன்று கொண்டேவந்ததினால், மிகுந்த களைப்புற்றார்.
பதம் 4.26.11 : இதன் பின்னர் பசியினாலும், தாகத்தினாலும் மிகுந்த களைப்புற்ற மன்னர் தமது அரண்மனைக்கு திரும்பினார். அங்கு நீராடி சிறந்த உணவு வகைகளை உண்டார். பின்னர் அவர் ஓய்வெடுத்துக் கொண்டு சோர்வு நீங்கப் பெற்றவரானார்.
பதம் 4.26.12 : இதன்பிறகு மன்னர் புரஞ்ஜனன் பொருத்தமான ஆபரணங்களினால் தமது உடலை அலங்கரித்துக் கொண்டார். நறுமண சந்தனத்தைத் தம் உடல் முழுதும் பூசிக்கொண்டு, சுகந்தமலர் மாலைகளைத் தம் மார்பில் அணிந்து கொண்டார். இவ்வாறு அவர் முற்றிலும் புத்துணர்ச்சியுடையவராக மாறினார். பின்னர் தமது அரசியைத் தேடத் தொடங்கினார்.
பதம் 4.26.13 : உணவு உண்டு தனது தாகம் தணிந்த பின் மன்னர் புரஞ்சனன் தம் மனமெங்கும் மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தார். உயர் உணர்விற்கு உயர்த்தப்படுவதற்குப் பதிலாக அவர் மன்மதனால் கவரப்பட்டார். தன்னை இல்லற வாழ்வில் மிகவும் திருப்தியுடன் வைத்திருக்கும் தன் மனைவியைத் தேடும் ஆசையினால் அவர் உந்தப்பட்டார்.
பதம் 4.26.14 : அச்சமயம் மன்னர் புரஞ்சனன் சிறிது உணர்ச்சிவயப்பட்டவராகக் காணப்பட்டார். அவர் அந்தப்புரத்திலுள்ள பெண்களிடம் கேட்டார்: அன்பிற்குரிய அழகிய பெண்களே, நீங்களும், உங்கள் தலைவியும் முன்பு போல் மிக்க மகிழ்ச்சியுடனிருக்கின்றீர்களா அல்லது இல்லையா?
பதம் 4.26.15 : மன்னர் புரஞ்ஜனன் கூறினார்: என் அரண்மனையில் உள்ள பொருட்கள் முன்புபோல் என்னைக் கவரவில்லையே, இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அன்பான அன்னையும், அரவணைக்கும் மனைவியும் இல்லாத வீடு சக்கரங்கள் இல்லாத இரதத்திற்குச் சமமாகும். ஓடாத இரதத்தின் மேல் எந்த மூடன் அமர்ந்திருப்பான்?
பதம் 4.26.16 : நான் அபாயக் கடலினுள் மூழ்கும் போதெல்லாம் என்னைக் காக்கின்ற அந்த எழில் மங்கையின் இருப்பிடம் எதுவென்று எனக்கு அருள்கூர்ந்து உரைப்பீராக. எனது ஒவ்வொரு அடியிலும் எனக்கு நற்புத்தியை அளித்து அவள் எப்போதும் என்னைக் காப்பவள் ஆவாள்.
பதம் 4.26.17 : பெண்கள் அனைவரும் மன்னரிடம் கூறினர்: ஓ, மக்களின் தலைவரே, உமது அன்பு மனைவி இப்படிப்பட்ட ஓர் வாழ்க்கையினை ஏன் மேற்கொண்டாள் என்று நாங்கள் அறியோம். ஓ, பகைவரைக் கொல்வோயே, அருள்கூர்ந்து பாருங்கள், அவள் பஞ்சனையை மறந்து வெறுந்தரையின் மீது படுத்திருக்கின்றாள். அவள் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறாள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பதம் 4.26.18 : மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னர் பிராசீனபர்ஹியே, ஒரு பிச்சைக்காரியைப்போல் தன் மனைவி நிலத்தின் மீது படுத்திருப்பதைக் கண்ட மன்னர் புரஞ்ஜனன் மிகுந்த குழப்பத்திற்காளானார்.
பதம் 4.26.19 : வருந்திய மனதுடன் மன்னர் மிகவும் இனிமையான வார்த்தைகளினால் தம் மனைவியிடம் உரையாடத் தொடங்கினார். அவர் வருத்தத்தினால் நிரப்பப்பட்டுத் தம் மனைவியை அமைதிப்படுத்த முயன்ற போதிலும், அன்பு மனைவியின் இதயத்தில் காதலினால் எழுந்த சினத்திற்கான அடையாளம் எதனையும் அவரால் அவளிடம் காண முடியவில்லை.
பதம் 4.26.20 : புகழ்ந்து பேசுவதில் மன்னர் மிகவும் தேர்ச்சி பெற்றவர் ஆதலினால் அவர் தம் அரசியைச் சமதானப்படுத்துவதற்காக மிகவும் அமைதியாகப் பேசத் தொடங்கினார். முதலில் அவர் அவளது இரு பாதங்களையும் தொட்டார். பிறகு மெதுவாக அவளை அணைத்து எடுத்து தன் மடியின் மீது வைத்துக் கொண்டு பின் வருவனவற்றைக் கூறத் தொடங்கினார்.
பதம் 4.26.21 : மன்னர் புரஞ்ஜனன் கூறினார்: எனதன்பிற்குரிய எழில் மனைவியே, ஒரு முதலாளி ஒரு வேலைக்காரனைத் தன்னுடைய ஆளாக ஏற்றுக் கொள்ளும் பொழுது, அவனது குற்றங்களுக்காக அவனைத் தண்டிக்கவில்லையென்றால் அவ்வேலைக்காரன் தீவினை செய்தோனாகவே கருதப்படுதல் வேண்டும்.
பதம் 4.26.22 : எனது அன்பிற்குரிய மென்மையானவளே, ஒரு முதலாளி தன் வேலைக்காரனைத் தண்டிக்கும் பொழுது அவ்வேலைக்காரன் அதனைச் சிறந்த கருணை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக ஆத்திரங்கொள்வோன் ஒரு மூடனாகவே இருத்தல் வேண்டும். அத்தண்டனை தனது நண்பனின் கடமையென்று அவன் அறிவதில்லை.
பதம் 4.26.23 : அன்பு மனையாளே, உனது பற்கள் வரிசையாக அழகுற அமைந்து, உனது கவர்ச்சிமிகு கோலங்கள், உன்னை மதிநலம் வாய்ந்த பெண்ணாத் தோன்றச் செய்கின்றன. அருள்கூர்ந்து உனது ஆத்திரத்தினைத் தவிர்த்து என்மீது கருணை காட்டுவாயாக. உனது புன்னகை பூத்த அழகிய முகத்தினைக் காணும் பொழுதும், கருநீல நிறக் கூந்தலையும், எடுப்பான நாசியினையும் நான் காணும் பொழுதும், உனது இனிய வார்த்தைகளைக் கேட்கும் பொழுதும் நீ மிகுந்த அழகுடையவளாக எனக்குத் தோற்றமளிக்கிறாய். எனக்கு உதவி செய்து என்னை மயக்கவும் செய்வாயாக, நீயே எனது மிகுந்த மரியாதைக்குரிய தலைவியாவாய்.
பதம் 4.26.24 : ஒ, வீர பத்தினியே, உன்னிடம் யாரேனும் தவறிழைத்தனர் என்றால் அதை அன்புடன் கூறுவாயாக. அவன் அந்தண குலத்தைச் சேராதவனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு நான் தகுந்த தண்டனை அளிப்பேன். முரரிபு (கிருஷ்ணர்) வின் தொண்டனைத் தவிர, நான் மூன்று லோகங்களுக்கும் உள்ளும் புறமும் ஒருவரையும் மன்னிக்கமாட்டேன். நான் தண்டிப்பதற்குத் தயாராக இருப்பதினால், உன்னிடம் தவறிழைத்த பிறகு சுதந்திரமாக நடமாட அவனால் முடியாது.
பதம் 4.26.25 : அன்பு மனைவியே, இன்றுவரை சிந்தூர திலகம் அலங்கரிக்காத உனது எழில் முகத்தை நான் கண்டதில்லை, அதுபோல் இன்று வரை நீ ஒளியிழந்தும், பாசமின்றியும் வாட்டமுற்றும் இருப்பதை நான் கண்டதில்லை. உனது மார்பகங்கள் இரண்டும் உனது கண்ணீரினால் நனைந்திருப்பதையும் இன்றுவரை நான் கண்டதில்லை. கோவை பழத்தைப் போல சிவந்து இருக்கும் உனது அழகிய உதடுகள், தம் சிவந்த நிறத்தை இழந்து இன்றிருப்பது போல் நான் இதற்கு முன்பு என்றும் கண்டதில்லை.
பதம் 4.26.26 : அன்பான அரசியே, எனது பாவம் நிறைந்த ஆசைகளினால் உன்னிடம் கேட்காமல் நான் காட்டிற்கு வேட்டையாடச் சென்று விட்டேன். ஆகையினால் உனக்குக் குற்றமிழைத்து விட்டேன் என்றே கூறலாம். ஆயினும் உனது மிகவும் நெருங்கிய துணைவனாக என்னைக் கருதினாயென்றால் இன்னும் மிகுந்த இனிமையுடன் என்னைக் கருதவேண்டும் நான் அதிகமான இழப்புக்கு ஆளாகியிருக்கிறேன். நான் காம இச்சையுடையவனாக இருக்கிறேன். மேலும் தனது ஆசைக் கணவனுடன் இணைய மறுத்து அவனை நீங்கிவிடும் அழகிய மங்கை எங்கே இருக்கிறாள்?