அத்தியாயம் – 25
மன்னர் புரஞ்ஜனனின் குணநலன்கள்
பதம் 4.25.1 : மாமுனிவர் மைத்ரேயர் விதுரரிடம் தொடர்ந்து கூறலானார்: அன்பிற்குரிய விதுரனே, இவ்வாறு மன்னர் பர்ஹிஷத்தின் மைந்தர்கள் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டனர். மன்னரின் மைந்தர்களும் சிவபெருமானை மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டு வணங்கினர். இறுதியில் சிவபெருமான் இளவரசர்களின் பார்வையிலிருந்து மறைந்தார்.
பதம் 4.25.2 : பிரசேதா இளவரசர்கள் அனைவரும் பத்தாயிரம் ஆண்டுகள் நீரினுள் நின்றபடி சிவபெருமானால் அருளப்பட்ட வழிபாட்டினைப் பயின்றனர்.
பதம் 4.25.3 : இவ்வாறு இளவரசர்கள் தண்ணீரில் கடுமையான தவங்களைச் செய்து கொண்டிருந்த பொழுது அவர்களது தந்தையோ வெளியில் பல்வேறு விதமான நற்செயல்களைச் செய்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அனைத்து ஆன்மீக வாழ்விற்கும் ஆசானாகவும், குருவாகவும் திகழும் மாமுனிவர் நாரதர் மன்னர் மீது மிகுந்த கருணை கொண்டு ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி அவருக்கு உபதேசிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்.
பதம் 4.25.4 : நாரத முனிவர் பிராசீனபர்ஹிஷத் மன்னரிடம் கேட்டார்: அன்பார்ந்த மன்னனே, நற்செயல்களைச் செய்வதின் மூலம் நீ அடைய விரும்புவது என்ன? வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளே துன்பங்கள் அனைத்தையும் நீக்கி இன்பம் அனுபவிப்பதுவேயாகும். ஆனால் இவ்விரண்டும் பலன் தரும் செயல்களினால் கிடைக்கக்கூடியவை அல்ல.
பதம் 4.25.5 : அரசர் பதில் கூறினார்: ஓ, பெருமைக்குரிய நாரதரே, எனது ஞானமானது பயன்தரும் உலகியல் செயல்களில் சிக்குண்டிருக்கிறது; ஆகையினால் வாழ்க்கையின் இறுதி லட்சியம் என்னவென்று எனக்குத் தெரியாது. அன்பு கொண்டு தூய ஞானத்தை எனக்கு அருளுவீராக! அதனால் உலகியற் சிக்கலிலிருந்து நான் விடுபட இயலும்.
பதம் 4.25.6 : எழில்மிக்க வாழ்க்கை என்றழைக்கப்படும் மனைவி மற்றும் குழந்தைகளிடம் சிக்கிக்கொண்டு, செல்வத்தைத் தேடி ஓடுகின்ற இல்லற வாழ்க்கையில் பற்று வைத்திருப்பவர்கள் இதுவே வாழ்வின் இறுதி இலட்சியம் என்று கருதுகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் வாழ்க்கை முழுவதும் வாழ்க்கையின் இறுதி இலட்சியம் என்னவென்று அறியாமலேயே பல்வேறு விதமான உடல்களில் திரிந்து கொண்டிருப்பர்.
பதம் 4.25.7 : மாமுனிவர் நாரதர் கூறினார்: ஒ, பிரஜாபதியே, அன்பிற்குரிய மன்னனே, கருணையும், இரக்கமும் சிறிதுமின்றி உன்னால் வேள்வியில் பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கான விலங்குகளை வானத்தில் அருள் கூர்ந்து காண்பாயாக!
பதம் 4.25.8 : இந்த விலங்குகள் அனைத்தும் உனது மரணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன. அப்போதுதான் அவைகள் நீ அவற்றிற்கு இழைந்த காயங்களுக்காக உன்னைப் பழிவாங்க முடியும். நீ மரித்த பிறகு அவை மிகுந்த ஆத்திரங்கொண்டு தமது இரும்புக் கொம்புகளினால் உனது உடலைக் கிழித்தெறியும்.
பதம் 4.25.9 : இது தொடர்பாகப் புரஞ்ஜனன் என்றழைக்கப்பட்ட ஒரு மன்னரின் பழைய வரலாற்றினை உனக்கு நான் உரைக்க விரும்புகிறேன். அருள்கூர்ந்து மிகுந்த கவனத்துடன் இதனைக் கேட்பாயாக.
பதம் 4.25.10 : அன்பார்ந்த மன்னனே! முன்னொரு காலத்தில் புரஞ்ஜனன் என்றொரு மன்னர் இருந்தார். அவரது செயல்களுக்காக அவர் மிகவும் போற்றப்பட்டார். அவருக்கு அவிஜ்ஞாதன் (அறியாதான்) என்றொரு நண்பன் இருந்தான். அவனது செயல்களை யாராலும் புரிந்துகொள்ள முடியாது.
பதம் 4.25.11 : புரஞ்ஜன மன்னர் தான் வசிப்பதற்குத் தகுந்த இடத்தைத் தேடி இவ்வுலகமெங்கணும் அலைந்தார். இவ்வாறு அவர் பயங்கரமாகப் பயணம் செய்தும் அவர் விருப்பத்திற்குகந்த இடத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அவர் துக்கமும் ஏமாற்றமும் அடைந்தார்.
பதம் 4.25.12 : புரஞ்ஜன மன்னரிடம் புலனின்பத்திற்கான இச்சைகள் அளவின்றி இருந்தன. இதனைத் தொடர்ந்து அவரது இச்சைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய சரியான இடத்தைத் தேடி அவர் இவ்வுலகம் முழுவதும் பயணம் செய்தார். தீவினை வயத்தால், அவர் பார்த்த இடம் அத்தனையும் அவருக்கு குறைவுடையதாகவேத் தோன்றியது.
பதம் 4.25.13 : இவ்வாறு புரஞ்ஜன மன்னர் அலைந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் இமயமலையின் தென்பகுதியில் “பாரத வர்ஷம்” (இந்தியா) என்னும் பெயருடைய ஒரு இடத்தைக் கண்டார். இந்நகரமானது ஒன்பது வாயில்களையுடையதாகவும், அனைத்து மங்கலங்களும் நிரம்பியதாகவும் இருந்தது.
பதம் 4.25.14 : அந்த நகரமானது மதில்களாலும், பூங்காக்களினாலும் சூழப்பட்டு, அதனுள் கோபுரங்கள், கால்வாய்கள், சாளரங்கள் மற்றும் வடிகால்கள் உடையனவாக இருந்தது. வீடுகளின் மாடங்கள் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பினால் செய்யப்பட்டு எழில்மிக்கவையாக விளங்கின.
பதம் 4.25.15 : அந்நகரத்திலுள்ள வீடுகளின் தரைகள் நீலம், வைடூர்யம், முத்து, மரகதம், இரத்தினம் மற்றும் பளிங்கினால் கட்டப்பட்டிருந்தன. தலைநகரின் வீடுகள் ஒளிமிக்கவையாக விளங்கினமையால் அந்த நகரமானது வான மண்டலத்திலுள்ள போகவதி என்னும் தேவ நகரத்தோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது.
பதம் 4.25.16 : அந்த நகரத்தில் பல்வேறு சொற்பொழிவு அரங்கங்கள், நான் முனை சந்திப்புகள், உணவு விடுதிகள், சூதாட்ட விடுதிகள், சந்தைகள், ஓய்வு இல்லங்கள், கொடிகள், தோரணங்கள் மற்றும் எழில் வண்ணப் பூங்காக்கள் போன்றவை இருந்தன. இவை நகரமெங்கும் சூழ்ந்திருந்தன.
பதம் 4.25.17 : அந்நகரின் வெளிப்பகுதியில் ஓர் அருமையான குளம் இருந்தது. அதைச்சுற்றிலும் எழில்மிக்க மரங்களும், செடி கொடிகளும் நின்றிருந்தன. அக்குளத்தைச் சுற்றி எப்போதும் பறவைகளும் வண்டுகளும் கூட்டங்கூட்டமாக ஒதிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தன.
பதம் 4.25.18 : குளத்தின் கரைகளின் மீது நின்று கொண்டிருக்கும் மரங்கள், அருகிலுள்ள பனிமலைகளிலிருந்து தென்றல் காற்று சுமந்து வரும் அருவி நீர்த்துளிகளை வாங்கிக் கொள்ளும்.
பதம் 4.25.19 : இதுபோன்ற சூழ்நிலைகளில் வனத்திலுள்ள விலங்குகள்கூட மாமுனிவர்களைப் போல் வன்முறையும், காழ்ப்புணர்ச்சியும் இன்றி வாழ்கின்றன. இதனைத் தொடர்ந்து அவ்விலங்குகள் எவரையும் தாக்குவதில்லை. எல்லாவற்றிகும் மேலாக அங்கே ஒலிப்பது குயில்களின் இனிய குரலோசையே ஆகும். அப்பாதையில் செல்லும் எந்தவொரு பயணியும் அந்த நந்தவனத்தில் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்வதற்காக அச்சூழ்நிலைகளால் வரவேற்கப்படுகிறான்.
பதம் 4.25.20 : இவ்வாறு அந்த நந்தவனத்தில் மன்னர் புரஞ்ஜனர் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்த பொழுது எந்தவிதமான ஈடுபாடுமின்றி அவ்வழியே நடந்து சென்று கொண்டிருந்த ஓர் அழகிய இளம் பெண்ணைக் கண்டார். அவளுக்குத் துணையாகப் பத்து வேலைக்காரர்கள் வந்தனர். ஒவ்வொரு வேலைக்காரனுடனும் நூற்றுக்கணக்கான அவனது மனைவியரும் உடன் வந்தனர்.
பதம் 4.25.21 : அந்தப் பெண் ஓர் ஐந்து தலை நாகத்தினால் எல்லாப் பக்கங்களிலும் இருந்து பாதுகாக்கப்பட்டாள். அவள் இளமையும் எழிலும் மிக்கவளாக விளங்கினாள். மேலும் அவள் தனக்குத் தகுந்த பொருத்தமானக் கணவனைத் தேடுவதில் மிகுந்த ஆர்வமுடையவளாக இருப்பது போல் தோன்றினாள்.
பதம் 4.25.22 : அப்பெண்ணின் நாசியும், பற்களும், நெற்றியும் எழில் மிக்கவையாக இருந்தன. அவளது இருசெவிகளும்கூட சம அழகு வாய்ந்தவையாகவும், ஒளிவீசும் காதணிகளால் அலங்கரிக்கப்பட்டவையாகவும் இருந்தன.
பதம் 4.25.23 : அப்பெண்ணின் இடையானது எழில்மிக்கதாக இருந்தது. அவள் மஞ்சள் வண்ண ஆடை உடுத்தி இடையில் பொன்னாலான மேகலை அணிந்திருந்தாள். அவள் நடக்கும் பொழுது காலிலுள்ள சலங்கைகள் ஒலித்தன. தோற்றத்தில் அவள் ஒரு தேவகன்னியைப் போல் விளங்கினாள்.
பதம் 4.25.24 : அருகருகே உருண்டு திரண்டிருந்த மார்பகங்களை சேலையின் முந்தானையினால் மூடுவதற்கு அப்பெண் முயற்சித்துக் கொண்ருந்தாள். அவள் ஒரு பெண்யானையைப் போல் நடந்து கொண்டே நாணத்தினால் மீண்டும் மீண்டும் தனது மார்பகங்களை மூடுவதற்கு முயற்சித்தாள்.
பதம் 4.25.25 : மிகச் சிறந்த வீரரான, புரஞ்ஜனன் எழில் மிகு அப்பெண்ணின் அழகிய முகம் மற்றும் புருவங்களினால் கவரப்பட்டு, அவளது காம இச்சை என்னும் அம்பினால் உடனடியாகத் துளைக்கப்பட்டார். நாணத்துடன் அவள் புன்னகைத்த பொழுது புரஞ்ஜனனுக்கு அவள் மிகவும் அழகுடையவளாகத் தோன்றினாள். புரஞ்ஜனன் ஒரு சிறந்த வீரராக இருந்தபோதிலும் அவரால் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை.
பதம் 4.25.26 : செந்தாமரை மலர் போல் விழிகள் உடையவளே, நீ எங்கிருந்து வருகிறாய், நீ யார், யாருடைய புதல்வி என்பதை அன்புடன் எனக்கு விளக்குவாயாக. நீ கற்பிற் சிறந்தவளாகத் தோன்றுகின்றாய், நீ இங்கு வந்ததின் நோக்கம் என்ன? நீ என்ன செய்வதற்கு முயலுகின்றாய்? இவற்றையெல்லாம் எனக்கு அருள்கூர்ந்து விளக்குவாயாக.
பதம் 4.25.27 : அன்பிற்குரிய தாமரைக்கண்ணாளே, உன்னோடு இருக்கும் பதினோரு மெய்க்காப்பாளர்களும் பத்து வேலைக்காரர்களும் யாவர்? அவ்வேலைக்காரர்களைத் தொடர்ந்து வரும் பெண்கள் யாவர்? மற்றும் உன் முன்னால் சென்று கொண்டிருக்கும் பாம்பு யார்?
பதம் 4.25.28 : அன்பார்ந்த அழகிய பெண்ணே! உண்மையில் நீ ரமா என்னும் அதிர்ஷ்ட தேவதை போன்று அல்லது சிவபெருமானின் மனைவியான பவானியைப் போன்று, அல்லது கல்வித் தெய்வமும், பிரம்ம தேவனின் மனைவியுமான சரஸ்வதியைப் போன்று இருக்கின்றாய். இவர்களுடன் ஒருத்தியாக நீ இருந்தபோதிலும், இவ்வனத்தில் நீ அலைந்து, திரிந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். உண்மையில் நீ மாமுனிவர்களைப் போல் மிகவும் அமைதியாக இருக்கின்றாய். நீ என்ன, உனது கணவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றாயா? உனது கணவன் யாராக இருந்தபோதிலும் நீ அவனது நம்பிக்கைக்குரியவளாக இருப்பதைப் புரிந்து கொள்வதின் மூலம் அவன் அனைத்து வளங்களையும் பெறுவதற்காக நிச்சயம் வருவான். நீ அதிர்ஷ்டதேவதையாகவே இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆயினும் உனது கரத்தில் தாமரை மலரை நான் காணவில்லை எனவே அத்தாமரை மலரை நீ எங்கே வீசி எறிந்துவிட்டாய் என்று நான் கேட்க விழைகிறேன்.
பதம் 4.25.29 : ஓ, அதிர்ஷ்டம் மிக்கவளே! மேலே நான் குறிப்பிட்டப் பெண்களில் ஒருத்தியாக நீ இல்லை என்று தெரிகிறது ஏனென்றால் உனது பாதங்கள் நிலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் நீ இந்த உலகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் பகவான் விஷ்ணுவுடன் உறையும் அதிர்ஷ்டதேவதை இலட்சுமி எவ்வாறு வைகுண்டலோகத்தின் அழகை அதிகரிக்கச் செய்கின்றாளோ அதுபோல் நீயும் என்னுடன் தொடர்புகொள்வதின் மூலம் இந்நகரின் அழகினை அதிகரிக்கக் கூடும். மேலும் நான் மிகச் சிறந்த வீரன் என்பதையும் இவ்வுலகின் ஆற்றல் மிக்க அரசன் என்பதையும் நீ புரிந்து கொள்ள வேண்டும்.
பதம் 4.25.30 : உனது பார்வை இன்று என் மனதை மிக்கக் கிளர்ச்சியடையச் செய்கிறது. உனது புன்னகை முற்றிலும் நாணமிக்கதாக இருக்கிறது அத்தோடு அதில் ஆசையும் கலந்து என்னுள் இருக்கும் மன்மதனைக் கொந்தளிக்கச் செய்கிறது. ஆகையினால், ஓ, எழில் மிக்கவளே! நீ என்மீது கருணை காட்டவேண்டுமென்று உன்னை வேண்டுகிறேன்.
பதம் 4.25.31 : அன்பிற்குரியவளே, வில்போன்ற புருவமும், வேல்போன்ற விழிகளும் உடையது உனது எழில்முகம்; உனது கருநீலக் கூந்தல் அலைபோல் பரந்திருக்கிறது. இதற்கும் மேலாக உனது வாய்ச்சொற்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன. நாணம் உனக்குத் தடை விதித்திருப்பதினால் நீ தேருக்கு நேர் என்னைப் பார்க்க மறுக்கிறாய். ஆகையினால் அன்பிற்குரியவளே! புன்னகை பூத்த முகத்தினாய் குனிந்த தலை நிமிர்ந்து என்னை நோக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.
பதம் 4.25.32 : நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே, புரஞ்ஜனன் இவ்வாறு அப்பெண்ணால் கவரப்பட்டு அவளைத் தொடுவதற்கும் அனுபவித்து மகிழ்வதற்கும் பொறுமை இழந்து துடிக்கலானார். அப்பெண்ணும் அவரது வார்த்தைகளினால் கவரப்பட்டு அவர் வேண்டுகோளை ஏற்றுப் புன்னகைத்தாள். அந்த நேரம் அவள் மன்னரால் நிச்சயம் கவரப்பட்டவள் ஆனாள்.
பதம் 4.25.33 : அப்பெண் கூறினாள்: ஓ, மனிதரில் சிறந்தவரே, என்னை ஈன்றெடுத்தவர் யார் என்பதை நான் அறியேன். அதைப்பற்றி உம்மிடம் மிகச்சரியாக என்னால் எடுத்துரைக்க இயலாது. என்னுடன் வரும் இவர்கள் யாரென்பதையும் இவர்களது பெயர்களையும் கூட நான் அறியேன்.
பதம் 4.25.34 : ஓ, மாவீரரே, இந்த இடத்தில் நாம் தோன்றியிருக்கிறோம் என்பதை மட்டுமே நாம் அறிவோம். இதன்பிறகு என்ன நடக்கும் என்பதை நாம் அறிந்திலோம். உண்மையில், நமது குடியிருப்புக்காக இவ்வழகிய இடத்தைப் படைத்தது யார் என்பதை அறிவதற்கு சிரத்தையில்லாத மூடர்களாகவே நாம் இருக்கிறோம்.
பதம் 4.25.35 : மேன்மைமிக்கவரே, என்னுடன் இருக்கும் இந்த ஆண்களும் பெண்களும் எனது நண்பர்கள் ஆவர். இந்த நாகப்பாம்பு எப்போதும் விழிப்புடன் இருந்து நான் உறங்கும் பொழுது கூட இந்த நகரத்தைப் பாதுகாக்கிறது. இதுமட்டுமே நான் அறிவேன். இதற்குமேல் நான் ஒன்றும் அறியேன்.
பதம் 4.25.36 : ஓ, பகைவரைச் சுடுபவரே, ஏதோ ஒரு விதத்தில் நீர் இங்கே வந்திருக்கின்றீர். நிச்சயமாக இது எனது சிறந்த அதிர்ஷ்டமேயாகும். உமக்கு எல்லா மங்கலங்களும் கிடைக்க நான் வாழ்த்துகிறேன். உமது புலன்களைத் திருப்திப்படுத்துவதற்கான தீராத ஆசை உம்மிடம் இருக்கிறது. நானும் எனது நண்பர்கள் அனைவரும் உமது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்வோம்.
பதம் 4.25.37 : அன்பிற்குரிய தலைவரே, உமக்காக ஒன்பது வாயில்கள் கொண்ட இந்த நகரத்தை நான் ஏற்படுத்தியிருக்கிறேன். ஆகையினால் நீர் அனைத்து வகையான புலனுகர்ச்சிகளையும் பெறலாம். நீர் இங்கே நூறு வருடங்கள் வரை வாழலாம். மேலும் உமது புலனுகர்ச்சிக்கான அனைத்துப் போகப் பொருட்களும் இங்கு வழங்கப்படும்.
பதம் 4.25.38 : மற்றவர்களோடு நான் இணைவேன் என்று எவ்வாறு எதிர்பார்க்கக் கூடும், அவர்கள் பாலுறவில் தேர்ந்தவர்களும் அல்லர், இருக்கும் போதும், இறந்த பின்னரும் வாழ்க்கையை எவ்வாறு அனுபவிப்பது? என்று அறிகின்ற திறனுமிலர். இப்படிப்பட்ட மனிதர்கள் மூடர்களேயாவர். ஏனென்றால் புலனின்ப முறைகளை அவர்கள் இப்பிறப்பிலும் சரி, மறுபிறப்பிலும் சரி, அறிவதில்லை.
பதம் 4.25.39 : அப்பெண் தொடர்ந்து கூறினாள் பௌதீக உலகில் ஓர் இல்லறத்தானுடைய வாழ்க்கை சமயதர்மம், பொருளாதார வளர்ச்சி, புலனுகர்ச்சி, குழந்தைப்பேறு, புதல்வர்கள் மற்றும் பேரக்குழந்தைகள் போன்ற அனைத்து வகையான மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. இதன்பின்னர் பௌதீகக் கௌரவத்தினைப் போல் ஒருவன் விடுதலையையும் விரும்பலாம். இல்லறத்தான் வேள்விகளின் பலன்களைப் போற்றலாம், அதுவே அவனை மேலுகத்திற்கு உயர்வு பெறச் செய்யக் கூடியதாகும். இந்த இன்பங்கள் அனைத்தையும் உன்னதமானவர்கள் நடைமுறையில் அறியார். அவர்களால் இதுபோன்ற இன்பங்களைக் கற்பனை கூடச் செய்ய முடியாது.
பதம் 4.25.40 : அப்பெண் தொடர்ந்து கூறினாள் அதிகாரம் பெற்றோர்களின் கருத்தின்படி இல்லறவாழ்க்கையானது ஒருவனுக்கு இன்பமளிப்பதாக இருப்பதோடு அவனது முன்னோர்கள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் அனைவருக்கும் கூட இன்பமளிக்கிறது. இல்லறவாழ்க்கை என்பது இவ்வாறு நன்மையுடைய ஒன்றாகும்.
பதம் 4.25.41 : ஓ எனதன்பு வீரரே, இவ்வுலகில் உம்மைப்போல் ஒருவரைக் கணவனாக அடைய யார்தான் மறுப்பர்? நீர் மிகுந்த புகழும், தாராள குணமும், பேரெழிலும் உடையவர் என்பதோடு எளிதில் எனக்குக் கிடைத்தவரும் ஆவீர்.
பதம் 4.25.42 : ஓ, புஜபல பராக்கிரமனே. பாம்பின் உடல்களைப்போல் உறுதியுடையதாகத் திகழும் உமது கரங்களினால் இவ்வுலகிலுள்ள யார் தான் கவரப்படமாட்டார்கள்? உமது கவர்ச்சிமிகு புன்னகையினாலும், அளவற்ற கருணையினாலும் உண்மையில் என் போன்று கணவனில்லாத பெண்களின் துயர்தன்னை நீர் நீக்குகின்றீர். இப்பூமியின் மீது நீர் இத்துணை நாள் பயணம் செய்தது எங்களது நன்மைக்காகத் தான் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
பதம் 4.25.43 : மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னனே ஆணும், பெண்ணுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அன்பினால் அரவணைத்துக் கொண்டு அந்நகரினுள் நுழைந்து அங்கே நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
பதம் 4.25.44 : ஏராளமான இசைக்கலைஞர்கள் மன்னர் புரஞ்ஜனரின் பெருமைகளையும், வீரதீரச் செயல்களையும் போற்றிப்பாடினர். கோடைக் காலத்தில் வெம்மை அதிகமாக இருக்கும் பொழுது அவர் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு வழக்கமாகச் செல்வார். அங்கே பல பெண்களால் சூழப்பட்டு அவர்களுடன் அவர் உறவாடி மகிழ்வார்.
பதம் 4.25.45 : அந்த நகரத்தின் ஒன்பது வாயில்களில் ஏழுமேலே இருந்தன, இரண்டு கீழே மறைவாக இருந்தன. மொத்தம் ஒன்பது வாயில்கள் செய்யப்பட்டன; இவை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றன. இவ்வாயில்கள் அனைத்தும் அந்நகரத்தின் ஆளுநரால் பயன்படுத்தப் பட்டன.
பதம் 4.25.46 : அன்பிற்குரிய மன்னனே, அவ்வொன்பது வாயில்களில் ஐந்து கீழ்த்திசையை நோக்கியும், ஒன்று வடதிசையை நோக்கியும், ஒன்று தென்திசையை நோக்கியும், இரண்டு மேல்திசையை நோக்கியும் இருக்கின்றன. இப்பல்வேறு வகையான வாயில்களின் பெயர்களையும் கூறுவதற்கு நான் முயற்சி செய்வேன்.
பதம் 4.25.47 : கத்யோதா மற்றும் ஆவிர்முகீ என்றும் பெயருள்ள இருவாயில்கள் கீழ்த்திசையை நோக்கி இருக்கின்றன. ஆயினும் அவை ஒரே இடத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு வாயில்களின் வழியேதான் மன்னர் விப்ராஜிதம் என்னும் நகருக்குத் தன் நண்பனான துயுமான் என்பவன் உடன்வரச் செல்வார்.
பதம் 4.25.48 : இதுபோல் கீழ்த்திசையில் இரண்டு வாயில்கள் இருக்கின்றன. அவை நளினீ மற்றும் நாளினீ என்னும் பெயருடையவையாம். இவ்விரு வாயில்களின் வழியாகவே அம்மன்னர் தனது நண்பன் அவதூதன் என்பவனுடன் சேர்ந்து ஸௌரபம் என்னும் நகருக்குச் செல்வார்.
பதம் 4.25.49 : கீழ்த்திசையில் அமைந்திருக்கும் ஐந்தாவது வாயிலானது முக்யா அல்லது தலைவன் என்ற பெயருடையது ஆகும். இந்த வாயிலின் வழியாகவே அவர் தன் நண்பர்களான ரஸக்ஞன் மற்றும் விபணன் என்பவர்களோடு பஹுதனம் மற்றும் ஆபணம் என்னும் இரண்டு இடங்களுக்குச் செல்வார்.
பதம் 4.25.50 : தென்திசையிலுள்ள வாயில் பித்ருஹு என்றழைக்கப்படுகிறது. இதன் வழியாகவே மன்னர் புரஞ்ஜனன் தனது நண்பர் ஸ்ரததரன் என்பவனுடன் சேர்ந்து தக்ஷிண பஞ்சாலம் என்னும் நகரத்திற்கு செல்வார்.
பதம் 4.25.51 : வடதிசையில் தேவஹு என்னும் பெயருடைய வாயில் இருந்தது. இதன் வழியாகவே புரஞ்ஜன மன்னர் அவரது நண்பன் ஸ்ருததரன் என்பாருடன் உத்தர பஞ்சாலம் என்னும் இடத்திற்குச் செல்வார்.
பதம் 4.25.52 : மேல்பகுதியில் ஆஸுரீ என்ற பெயரில் ஒரு வாயில் இருந்தது. இவ்வாயிலின் வழியேதான் மன்னர் புரஞ்ஜனன் அவரது நண்பன் துர்மதன் என்பவனுடன் சேர்ந்து கிராமகம் என்னும் நகரத்திற்குச் செல்வார்.
பதம் 4.25.53 : மேல்திசையிலுள்ள மற்றொரு வாயிலுக்கு “நிர்ருதி” என்று பெயர். புரஞ்ஜன மன்னர் இந்தவாயிலின் வழியே தான் தன் நண்பன் லுப்தகன் என்பவன் உடன்வர வைஸஸம் என்னும் இடத்திற்குச் செல்வார்.
பதம் 4.25.54 : அந்நகரில் வாழும் குடிமக்கள் பலருள் நிர்வாக் என்றும் பேஸாஸ்க்ருத் என்னும் பெயருடைய இருவர் இருந்தனர். பார்வையுள்ள மக்களை ஆள்பவராக புரஞ்ஜன மன்னர் இருந்தபோதிலும் துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த இரு குருடர்களுடனும் அடிக்கடி தொடர்பு கொள்வார். இவர்கள் இருவருடனும் சேர்ந்து கொண்டு அவர் இங்கும் அங்கும் செல்வதும், பல்வேறு செயல்களைச் செய்பவராகவும் இருந்தார்.
பதம் 4.25.55 : சிலநேரங்களில் அவர் தனது தலைமைப் பணியாளர்களுள் ஒருவனான (மனம்) விஷுசீனன் என்பவனுடன் அவரது அந்தப்புரத்திற்குச் செல்வது வழக்கம். அந்தநேரம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து மோகம், திருப்தி, மகிழ்ச்சி போன்றவை வழக்கமாக உண்டாக்கப்படும்.
பதம் 4.25.56 : இவ்வாறு பல்வேறு வகையான மனயூகங்கள் மற்றும் பலன்தரும் செயல்களில் சிக்கிக் கொண்டு மன்னர் புரஞ்ஜனன் உலகியல் நோக்கின் முழுக் கட்டுப்பாட்டில் வந்து ஏமாற்றப்பட்டார். உண்மையில் அவர் தன் மனைவியான அரசியின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி வந்தார்.
பதங்கள் 4.25.57 – 4.25-61 : அரசி மதுவருந்தும் பொழுது மன்னர் புரஞ்ஜனனும் மதுவருந்தினார். அரசி உண்ணும் பொழுது சேர்த்து உண்டார்; அவள் தாம்பூலம் தரிக்கும் பொழுது மன்னர் புரஞ்ஜனனும் தாம்பூலம் தரித்தார். அரசி பாடும் பொழுது அவரும் பாடினார். அதுபோல் அரசி அழும் போது அவரும் அழுதார், அவள் சிரித்தால், அவரும் சிரித்தார். அரசி எதையாவது உளறினால், அவரும் உளறிக்கொட்டினார், அரசி நடக்கும் பொழுது, மன்னரும் நடந்தார், அரசி அசையாது நின்றால், அவரும் அசையாது நின்றார். அரசி படுக்கையில் துயிலும் பொழுது அவரும் அவளுடன் துயின்றார். அரசி அமரும் பொழுது அவரும் சேர்ந்து அமர்ந்தார். அரசி எதையாவது செவியினால் கேட்டால், மன்னரும் அதையே காதினால் கேட்டார், அரசி எதையாவது பார்க்கும் பொழுது அவரும் பார்த்தார், மேலும் அரசி நாசியினால் எதையாவது முகரும் பொழுது, அரசரும் அதையே தானும் முகர்ந்தார். அரசி எதையாவது தொட்டால் அரசரும் அதையே தொடுவார். அன்பிற்குரிய அரசி துக்கித்தால் அரசரும் அவளைப் பின்பற்றி அவ்வாறே துக்கித்தார். இவ்வாறு அரசி மகிழ்ச்சியடையும் பொழுது மன்னரும் மகிழ்ந்தார். அரசி திருப்தியடையும் பொழுது மன்னரும் கூடத் திருப்தியடைந்தார்.
பதம் 4.25.62 : இவ்வாறாக மன்னர் புரஞ்ஜனன் அவரது ஆசை மனைவியால் மயக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டார். உண்மையில் அவர் இந்த உலகில் ஏமாற்றப்பட்டுத் தனது இயற்கைத் தன்மையினை இழந்து போனதால் கையாலாகாத இந்த மூட மன்னர் தனது விருப்பத்திற்கெதிராக, அவரது மனைவியின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தார். இது கூத்தாடியின் விருப்பத்திற்கேற்றவாறு குரங்கு ஆடுதலுக்கு ஒக்கும்.