அத்தியாயம் – 23
பிருது மகாராஜா வீடு பேறு அடைதல்
பதங்கள் 4.23.1 – 4.23.3
மைத்ரேய உவாச
த்ருஹ்ட்வாத்மானம் ப்ரவயஸம் ஏகாத வைன்ய ஆத்மவான்
ஆத்மனா வர்திதாஸேஷ ஸ்வானுஸர்க: ப்ரஜாபதி:
ஜகதஸ் தஸ்துஷஸ் சாபி வ்ருத்திதோ தர்ம-ப்ருத் ஸதாம்
நிஷ்பாதிதேஸ்வராதேஸோ யத்-அர்தம் இஹ ஜஜ்ஞிவான்
ஆத்மஜேஷ்வ ஆத்மஜாம் ந்யஸ்ய விரஹாத் ருததீம் இவ
ப்ராஜாஸூ விம ன: ஸ்வ ஏக: ஸ—தாரோ ‘காத் தபோ- வனம்
மைத்ரேய உவாச—மைத்ரேய மாமுனி தொடர்ந்து கூறினார்; த்ருஷ்ட்வா—பார்த்தபிறகு; ஆத்மானம்—உடலின்; ப்ரவயஸம்—முதுமையில்; ஏகதர—முன்னொரு காலத்தில்; வைன்ய:—பிருது மன்னர்; ஆதிம-வான்—ஆன்மீகக் கல்வியில் முற்றும் சேர்ந்தவர்; ஆத்மனா—ஒருவரால்; வர்தித—அதிகரித்தல்; அஸேஷ—அளவின்றி; ஸ்வ-அனுஸர்க:—பொருள்வளங்களைப் படைப்பதில்; ப்ரஜா-பதி:—குடிமக்களின் பாதுகாவலர்; ஜகத:—அசைகின்ற; தஸ்துஷ—அசையாத; ச—மேலும்; அபி—உறுதியாக; வ்ருத்தி-த:—ஓய்வூதியம் வழங்குபவர்; தர்ம-ப்ருத—சமய அறநெறிகளில் கவனமுடையவர்; ஸதாம்—பக்தர்களின்; நிஷ்பாசித—முழுவதும் நிறைவேற்றுதல்; ஈஸ்வர்:—முழுமுதற் கடவுளின்; ஆதேஸ:—கட்டளை; யத்-அர்தம்—அவரோடு ஒருங்கிணைப்பில்; இஹ—இவ்வுலகில்; ஜஜ்நிவான்—செய்யப்பட்டது; ஆத்ம-ஜேஷி—அவரது மைந்தர்களுக்கு; ஆத்ம-ஜாம்—பூமி; ந்யஸ்ய—குறிப்பிடுகின்ற; விரஹாத்— தனிமையில் இருந்து; ருததீம்-இவ—வருந்துவதைப்போல; ப்ரஜாஸீ—குடிமக்களுக்கு; விமன:-ஸூ—துன்புற்றோர்க்கு; ஏக—ஒருவர்: ஸ-தார:—அவர் மனைவி; ஸ தார:—அவர் மனைவியுடன்; அகாத்—சென்றார்; தப-வனம்—தவம் செய்யும் வனத்திற்கு.
உலகம் முழுவதற்கும் ஒரே அரசராகத் திகழ்ந்தவரும், தான் பெற்ற செல்வம் அனைத்தும் அசைகின்ற அசையாத எல்லா உயிர்களுக்கும் பகிர்ந்தளித்தவருமான பிருது மகாராஜா தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் தான் முதுமை அடைந்ததை உணர்ந்தார். சமய அறநெறிகளுக்கு ஏற்றாற்போல் அவர் எல்லோருக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடுகள் செய்தார். முழுமுதற் கடவுளின் கட்டளைகளை அவரோடு ஒருங்கிணைந்து முற்றிலும் நிறைவேற்றிய பின்னர், தன்னுடைய மைந்தர்கள் ஐவரையும் தன் மகள் போல் கருதிய இப்பூமிக்கு அர்ப்பணித்தார். இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பிறகு பிருது மகாராஜா, தன் மனைவியுடன், தன் குடிமக்கள் எல்லோரும் அழுது புலம்ப அவர்களைப் பிரிந்து தவம் செய்வதற்காக வனத்திற்குச் சென்றார்.
பதம் 4.23.4
தத்ராபி அதாப்ய-நியமோ வைகானஸ-ஸூஸம்மதே
ஆரப்த உக்ர-தபஸி யதா ஸ்வ-விஜயே புரர்
தத்ர—அங்கு; அபி—மேலும்; அதாப்ய—கடுமையான; நியம:—தவம்; வைகானஸ—ஓய்வு பெற்ற வாழ்வின் விதிகளும், ஒழுங்குமுறைகளும்; ஸூ-ஸம்மதே—ஒழுங்காகப் பின்பற்றப்பட்டு; ஆரப்த—தொடங்கினார்; உக்ர—கடுமையாக; தபஸி—தவம்; யதா—எவ்வளவு; ஸ்வ-விஜயே—உலகை வென்றதில்; புரா—முன்னர்.
இல்லறத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிருது மகாராஜா வனத்தில் ஓய்வு வாழ்க்கைக்குரிய ஒழுங்குமுறைகளைச் சரியாகப் பின்பற்றி கடுமையான தவத்தினை மேற்கொண்டார். தான் ஆட்சியிலிருந்து எல்லோரையும் வெற்றி கொண்டபொழுது எவ்வளவு கவனமாக இருந்தாரோ அதே கவனத்துடன்தான் கானக வாழ்க்கையிலும் இருந்தார்.
பதம் 4.23.5
கந்த-மூல-பலாஹார: ஸூஷ்க-பர்ணாஸன: க்வசித்
அப்- பக்ஷ: கதிசித் பக்ஷான் வாயு பக்ஷஸ் தத: பரம்
கந்த—அடிப்பகுதி; மூல—வேர்கள்; பல—பழங்கள்; ஆஹார—உணவாகும்; ஸூஷ்க—காய்ந்த; பர்ண—இலைகள்; அஸன:—உண்டார்; க்வசித்—சில நேரங்களில்; அப்-பக்ஷ—குடிதண்ணீர்; கதிசித்—அனேக; பக்ஷான்—இருவாரங்கள்; வாயு—காற்று; பக்ஷ—சுவாசித்து; தத:-பரம்—அதன்பிறகு.
தபோ வனத்தில் மகாராஜா பிருது சில நேரங்களில் கந்த மூலங்களை உண்டார்; சில நேரங்களில் காய்ந்த சருகுகளையும், கனிகளையும் உண்டார். வாரக் கணக்கில் தண்ணீர் ஒன்றை மட்டுமே அருந்தினார். கடைசியில் காற்றை மட்டுமே உணவாக உண்டு வாழ்ந்தார்.
பதம் 4.23.6
க்ரீஷ்மே பஞ்ச-தபா வீரோ வர்ஷாஸ்வ ஆஸாரஷான் முனி:
ஆகண்ட-மக்ன: ஸிஸிரே உதகே ஸ்தண்டிலே-ஸய:
க்ரீஷ்மே—கோடை காலத்தில்; பஞ்ச-தபர்:—ஐந்து வகையான உஷ்ணங்கள்: வீர—வீரர்; வர்ஷாஸி—மழைக்காலத்தில்; ஆஸாரஷாத்—கனத்த மழைக்கிடையில் உள்ள நிலையில்; முனி—முனிவர்கள் போல்; அகண்ட—கழுத்துவரை; மக்ன:—நீரில் மூழ்கி: ஸிஸிரே—குளிர்காலத்தில்; உதகே—நீரினுள்; ஸ்தண்டிலே-ஸய:—தரையில் படுத்து.
வன வாழ்க்கைக்குரிய விதிகளையும், மகா முனிவர்களின் பாதையையும் பின்பற்றி பிருது மகாராஜா கோடைக்காலத்தில் ஐந்து வகையான உஷ்ண முறைகளையும் ஏற்றுக்கொண்டு, மழைக்காலத்தில் கனமழையின் கொடுங்கரங்களுக்குத் தன் உடலைக் கொடுத்து குளிர்காலத்தில் கழுத்து வரை நீரில் நின்றும், வெறும் தரையிலேயே படுத்தும் தன் வாழ்க்கையினை மேற்கொண்டார்.
பதம் 4.23.7
திதிக்ஷுர் யத வாக் தாந்த ஊர்த்வ-ரேதா ஜிதானில:
ஆரிராதயிஷீ: க்ருஷ்ணம் அசரத் தப உத்தமம்
திதிக்ஷு:—தாங்கிக்கொண்டு; யத—கட்டுப்படுத்துபவர்; வாக்—வாக்கு; தாந்த:—புலன்களைக் கட்டுப்படுத்துதல்; ஊர்த்வ-ரேதா:—சுக்கிலத்தை வெளிப்படுத்தாமலிருக்க; ஜித-அனில—சுவாசக் காற்றை கட்டுப்படுத்தி; ஆரிராத்யிஹு:—விருப்பங்கொண்டு; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; அசரத்—பயிற்சி; தப:—தவம்; உத்தமம்—மிகவும் நன்று.
பிருது மகாராஜா தனது வாக்கினையும், புலன்களையும் கட்டுப்படுத்தி இதுபோன்ற தவமுயற்சிகளை மேற்கொண்டது ஏனென்றால் தன் உடலில் இருந்து சுக்கிலம் வெளிப்படாமல் தவிர்க்கவும், தனது உடலினுள்ளேயே ஜீவக் காற்றினைக் கட்டுப்படுத்துவதற்குமேயாகும். இவற்றையெல்லாம் அவர் கிருஷ்ணரைத் திருப்திப்படுத்துவதற்காகவே செய்தார். வேறு எந்தவித நோக்கத்திற்காகவும் அன்று.
பதம் 4.23.8
தேன க்ரமானுஸித்தேன த்வஸ்த-கர்ம-மலாஸய:
ப்ராணாயாமை: ஸன்னிருதத ஷட்-வர்கஸ் சின்ன-பந்தன:
தேன—இதுபோன்றத் தவங்களைச் செய்ததினால்; க்ரம—படிப்படியாக; அது—தொடர்ந்து; ஸித்தேன—நிறைவினால்; த்வஸ்த—நொறுங்கியது; கர்ம—பயன்தரும் செயல்கள்; மல—அழுக்குகள்; ஆஸய—ஆசை; ப்ராண-ஆயாமை:—ப்ராணாயாம யோகப் பயிற்சியினால்; சுவாசப்பயிற்சி; ஸன்—இருக்கின்றது; நிருத்த—நிறுத்தப்படுதல்; ஷட்-வர்க:—மனமும் புலன்களும்; சின்ன-பந்தன:—எல்லாப் பந்தகளினின்றும் முற்றிலும் விடுபடுகின்றது.
இதுபோன்ற கடுமையான தவங்களைச் செய்ததின் மூலம் பிருது மகாராஜா ஆன்மீக வாழ்க்கையில் உறுதியும் பயன்தரும் செயல்களின் மீதுள்ள ஆசைகளில் இருந்து முற்றிலும் விடுதலையும் பெற்றார். அவர் சுவாசப் பயிற்சியின் மூலம் மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தினார். அவ்வாறு கட்டுப்படுத்தியதின் மூலம் அவர் பயன்தரும் செயல்களின் மீதுள்ள மோகங்களை விட்டு முற்றிலும் விடுதலை பெற்றார்.
பதம் 4.23.9
ஸனத்-குமாரோ பகவான் யத்-ஆஹாத்யாத்மிகம் பரம்
யோகம் தேனைவ புருஷம் அபஜத் புருஷர்ஷப:
ஸனத்-குமார:—சனத் குமாரர்; பகவான்—மிகச் சக்திவாய்ந்த; யத்—எது; ஆஹ—கூறினார்; ஆத்யாத்மிகம்—வாழ்க்கையின் ஆன்மீக வளர்ச்சிக்கு; பரம்—உயர்ந்த; யோகம்—யோகஸித்தி; தேன—அதனால்; ஏவ—உறுதியாக; புருஷம்—பரமபுருஷர்; அபஜத்—வணங்கப்படுதல்; புருஷ-ருஷப:—மனிதரில் சிறந்தோன்.
இவ்வாறு மனிதரில் சிறந்தவரான பிருது மகாராஜா சனத்—குமாரரால் அறிவுறுத்தப்பட்ட ஆன்மீக முன்னேற்றத்திற்கானப் பாதையினைப் பின்பற்றினார். அதாவது அவர் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை வணங்கினார் என்பதேயாகும்.
பதம் 4.23.10
பகவத்-தர்மிண ஸாதோ: ஸ்ரத்தயா யதத: ஸதா
பக்கிர் பகவதி ப்ரஹ்மணி அனன்ய-விஷயாபவத்
பகவத்-தர்மிண:—பக்தித் தொண்டில் ஒருவன் ஈடுபடும் பொழுது; ஸாதோ:—பக்தனின்; ஸ்ரத்தியாக—நம்பிக்கையுடன்; யதத—முயற்சிக்கின்ற; ஸதா—எப்போதும்; பக்தி:—பக்தி; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; ப்ராஹ்மணி—அருவப் பிரம்மத்தின் மூலமான; அனன்ய-விஷயா—எவ்வித மாற்றமுமின்றி உறுதியாக இருத்தல்; அபவத்—ஆனார்.
இவ்வாறு மகாராஜா பிருது இருபத்திநான்கு மணி நேரமும், விதிமுறைகளுக்கேற்ப ஒழுங்குமுறை விதிகளை கடுமையாகக் கடைபிடித்து பக்தித் தொண்டில் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். அதனால் அவருக்கு முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடத்து அன்பும் பக்தியும் பெருகியதோடு, இது எந்தவிதமான மாற்றமுமின்றி வளர்ந்து நிலைபெற்றது.
பதம் 4.23.11
தஸ்யானயா பகவத: பரிக்ரம ஸுத்த
ஸத்தவாத்மனஸ் தத்-அனுஸம்ஸ்மரனானுபூர்த்யா
ஜ்ஞானம் விரக்திமத் அபூன் நிஸிதே யேன
சிச்சேத ஸம்ஸய-பதம் நிஜ-ஜீவ-கோஸம்
தஸ்ய—அவருடைய; அனயா—இதனால்; பகவத—முழுமுதற் கடவுளின்; பரிக்ரம—பக்தித் தொண்டு நடவடிக்கைகள்; ஸுத்த—தூய எல்லாவற்றையும் கடந்தது; ஸத்தவ—தோன்றுதல்; ஆத்மன:—மனதின்; தத்—முழுமுதற் கடவுளின்; அனுஸம்ஸ்மரண—தொடர்ந்து நினைக்கின்ற; அனுபூர்த்யா—நிறைவாகச் செய்யப்பட்டது; க்ஞானம்—ஞானம்; விரக்தி—விரக்தி; மத்—வைத்திருக்கின்ற; அபூத்—தோன்றியது; நிஸிதேன—கூர்மையானச் செயல்களினால்; யேன—எதனால்; சிச்சேத—பிரிக்கப்பட்டது; ஸம்ஸய-பதம்—சந்தேகத்திற்கிடமான நிலை; நிஜ—சொந்தம்; ஜீவ-கோஸம்—உயிர்களின் சிறை.
பக்தித் தொண்டினை பிருது மகாராஜா இடைவிடாது தொடர்ந்து செய்தமையினால் அவரது மனம் எல்லாம் கடந்த உன்னத நிலையினில் இருந்தது; அதனால் அவர் எப்போதும் தொடர்ந்து பகவானின் திருவடித் தாமரைகளையே நினைத்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் பற்றுக்கள் ஏதுமின்றி முழுஞானம் பெற்று எல்லாச் சந்தேகங்களையும் கடந்தவராக விளங்கினார். இவ்வாறு அவர் வீண் கர்வத்தினின்றும் பௌதீகக் கருத்துடைய வாழ்க்கையிலிருந்தும் விடுதலை பெற்றார்.
பதம் 4.23.12
சின்னான்ய-தீர் அதிகதாத்ம-கதிர் நிரீஹஸ்
தத் தத்யஜே ‘ச்சினத் இதம் வயுனேன யேன
தாவன் ந யோக-கதிபிர் யதிர் அப்ரமத்தோ
யாவத் கதாக்ரஜ-கதாஸீ ரதிம் ந சூர்யாத்
சின்ன—தனித்திருக்கின்ற; அன்ய-தீ:—வாழ்க்கையின் பிற எல்லாக் கருத்துக்களும் (உடலியற் கருத்துடைய வாழ்க்கை); அதிகத—உறுதியாக ஏற்றுக் கொள்கின்ற; ஆத்ம-கதி:—ஆன்மீக வாழ்க்கையின் இறுதி இலட்சியம்; நிர்ஹ:—விருப்பமின்றி; தத்—அது; தத்யஜே—விட்டுவிடுதல்; அச்சினத்—துண்டித்தார்; இதம்—இந்த; வயுனேன—அறிவுடன்; யேன—எதனால்; தாவத்—அதுவரை; ந—இல்லை; யோக-கதிபி:—யோக ஸித்தியினைப் பயிற்சி செய்வது; யதி—பயிற்சி செய்பவர்; அப்ரமத்த:—எந்தவிதமான மாயையுமின்றி; யாவத்—எதுவரை; கதாக்ரஜ:—கிருஷ்ணரின்; கதாஸி—வார்த்தைகள்; ரதிம்—கவர்ச்சி; ந—இல்லை; குர்யாத்—செய்வது.
உடலியற் கருத்துடைய வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விடுபட்டபின்னரே மகாராஜா பிருது ஒவ்வொருவர் மனதிலும் பகவான் கிருஷ்ணரே பரமாத்மாவாக வீற்றிருக்கின்றார் என்பதை உணர்ந்தார். இவ்வாறு அவர் எல்லாக் கட்டளைகளையும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் தகுதியினைப் பெற்றப் பிறகு அவர் ஞானம் மற்றும் யோகப் பயிற்சிகள் செய்வதை முற்றிலும் நிறுத்தினார். கிருஷ்ணருக்குச் செய்யும் பக்தித் தொண்டே வாழ்க்கையின் இறுதி இலட்சியம் என்பதை முற்றிலும் உணர்ந்த பிறகு யோகம் மற்றும் ஞானப் பயிற்சிகளில் அவர் ஆர்வம் கொள்ளவில்லை. ஞானிகளும், யோகிகளும் கிருஷ்ணரின் சரிதத்தைக் கேட்பதில் ஆர்வம் மிக்கவர்களாக இல்லையென்றால் வாழ்க்கை பற்றிய அவர் தம் மயக்கங்களை அவர்களிடமிருந்து ஒருபோதும் நீக்க முடியாது.
பதம் 4.23.13
ஏவம் ஸ வீர-ப்ரவர ஸம்யோஜ்யாத்மானம் ஆத்மனி
ப்ரஹ்ம-பூதோ த்ருடம் காலே தத்யாஜ ஸ்வம் கலேவரம்
ஏவம்—இவ்வாறு; ஸ:—அவர்; வீர-ப்ரவர:—வீரர்களின் தலைவர்; ஸம்யோஜ்ய—ஈடுபடுத்தும் பொழுது; ஆத்மானம்—மனம்; ஆத்மனி—பரமாத்மாவிற்கு; ப்ரஹ்ம-பூத:—விடுதலை பெற்று; த்ருடம்—உறுதியாக; காலே—தகுந்த சமயத்தில்; தத்யாஜ—விட்டுவிடுதல்; ஸ்வம்—தனது; கலேவரம்—உடல்.
உரிய நேரத்தில் தன்னுடைய பூத உடலை விட்டுவிட வேண்டும். என்பதினால் பிருது மகாராஜா தன்னுடைய மனத்தை எப்போதும் உறுதியாகப் பகவான் கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளின் மீதே வைத்திருந்தார். இவ்வாறு முற்றிலும் பிரம்ம பூத நிலையில் இருந்த வண்ணமே அவர் தன் பூத உடலைப் பிரிந்தார்.
பதம் 4.23.14
ஸம்பீட்ய பாயும் பார்ஷ்ணிப்யாம் வாயும் உத்ஸாரயாஞ் சனை:
நாப்யாம் கோஷ்டேஷ்வ அவஸ்தாப்ய ஹ்ருத்-உர:-கண்ட ஸீர்ஷணி
ஸம்பீத்ய—தடுத்து; பாயும்—எருவாய்க் கதவினை; பார்ஷ்ணிப்யாம்—கெண்டைக்காலினால்; வாயும்— மேலேறும் சுவாசக் காற்று; உத்ஸாரயன்—மேலே தள்ளி; ஸனை:—படிப்படியாக; நாப்யாம்—உந்திச் சுழியினால்; கோஷ்டேஷீ—இதயத்திலும், தொண்டையிலும்; அவஸ்தாப்ய—நிறுத்தி; ஹ்ருத்—இதயத்தில்; உர:—மேலே; கண்ட—கண்டத்தில்; ஸீர்ஷணி—இரண்டு புருவங்களுக்கும் மத்தியில்.
மகாராஜா பிருது ஒரு குறிப்பிட்ட யோகாசன நிலையில் அமர்ந்து, தனது கணுக்காலினால் எருவாயின் கதவுகளை அடைத்து இடது மற்றும் வலது கெண்டைக் கால்களினால் அழுத்தி சுவாசக் காற்றை படிப்படியாக மேலேற்றி உந்திச் சுழியினைக் கடக்குமாறு செய்து இதயம் மற்றும் கண்டத்திற்குக் கொண்டு வந்து முடிவில் அதனை தன் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் நிலைக்குமாறு செய்வார்.
பதம் 4.23.15
உத்ஸர்பயம்ஸ் து தம் மூர்த்னி கிரமேணாவேஸ்ய நி: ஸ்ப்ருஹ:
வாயும் வாயெள க்ஷிதெள காயம் தேஜஸ் தேஜலி அயூயுஜத்
உத்ஸர்பயம்—இவ்வாறு இட்டு; து—ஆனால்; தம்—காற்று; மூர்த்னி—சிரசின்மேல்; க்ராமேண—படிப்படியாக; ஆவேஸ்ய—இட்டு; நி: ஸ்ப்ருஹ:—எல்லாப் பௌதீக ஆசைகளையும் விட்டு; வாயும்—உடலிலுள்ள காற்றின் பகுதி; வாயென—பிரபஞ்சத்திலுள்ள மொத்தக் காற்று; க்ஷிதௌ—பூமியின் ஒட்டு மொத்தப்பரப்பு; காயம்—உடல்; தேஜ:—உடலிலுள்ள நெருப்பு; தேஜஸி—பௌதீகத்தினால் மூடப்பட்ட மொத்த நெருப்பில்; அயூயுஜத்—கலந்து.
இவ்வாறு பிருது மகாராஜா தன் உடலிலுள்ள ஜீவக் காற்றினை தன் தலையின் கபால ஓட்டின் துளைக்குக் கொண்டு வந்து அங்கிருந்த நிலையிலேயே ஜடத்தோற்றத்தின் மீதுள்ள எல்லாப் பற்றுக்களையும் விட்டொழித்தார். படிப்படியாகத் தன் ஜீவக் காற்றினை வெளியில் இருக்கும் மொத்தக் காற்றுடன் கலந்தார், தன் உடலை பூமியுடனும், தன் உடலிலுள்ள நெருப்பினை மொத்த நெருப்புடனும் இணைத்தார்.
பதம் 4.23.16
கானி ஆகாஸே த்வரம் தோயே யதா-ஸ்தானம் விபாகஸ:
க்ஷிதிம் அம்பஸி தத் தேஜஸி அதோ வாயென நபஸி அமும்
கானி—உடலிலுள்ள புலனேந்திரியங்களின் துளைகள்; ஆகாஸே—வானத்தில்; த்வரம்—திவரம்; தோயே—தண்ணீரில்; யதா-ஸ்தானம்—சரியான இடத்தினைப் பொருத்து; விபாகஸ:—அவை பிரிந்துள்ளபடி; க்ஷதிம்—நிலம்; அம்பஸி—நீரில்; தத்—அந்த; தேஜஸி—நெருப்பில்; அத:—நெருப்பு; வாயௌ—காற்றில்; நபஸி—வானில்; அமும்—அந்த.
இவ்வாறு பிருது மகாராஜா தன் உடலில் உள்ள பாகங்களில் பல்வேறு விதமான நிலையினைப் பொருத்து புலனேந்திரியங்களின் துளைகளை வானத்துடன் இணைத்தார்; தன் உடலிலுள்ள உதிரம் மற்றும் நிணங்களைத் தண்ணீருடன் இணைத்தார் நிலத்தினை நீருடன் இணைத்தார், நீரினை நெருப்புடன் இணைத்தார், நெருப்பினைக் காற்றுடன் இணைத்தார், காற்றினை வானுடன் இணைத்தார் இவ்வாறு தொடர்ந்து செய்தார்.
பதம் 4.23.17
இந்த்ரியேஷீ மனஸ் தானி தன்-மாத்ரேஷீ யதோத்பவம்
பூதாதினாமூனி உத்கிருஷ்ய மஹதி ஆத்மனி ஸந்ததே
இந்த்ரியேஷ்—புலனேந்திரியங்கள்; மன:—மனம்; தானி—புலன்கள்; தத்-மாத்ரேஷீ—புலன்களுக்குரிய பொருட்கள்; யதா-உத்பவம்—எங்கிருந்து உற்பத்தியாகின்றன; பூத-ஆதினா—பஞ்ச பூதங்களினால்; அமூனி—அப்புலனுகர்ச்சிப் பொருட்களை எல்லாம்; உத்கிருஷ்ய—வெளியேற்றி; மஹதி—மஹத்தத்துவத்தில்; ஆத்மனி—கர்வத்திற்கு; ஸந்ததே—ஒருங்கிணைத்தார்.
அவ்வவற்றின் இருப்பிற்கேற்ப அவர் மனத்தைப் புலன்களுடனும், புலன்களை அவற்றின் பொருட்களுடனும் இணைத்தார், மேலும் அவர் அகங்காரத்தை பௌதீக சக்தியென்னும் மஹத்தத்துவத்துடன் இணைத்தார்.
பதம் 4.23.18
தம் ஸர்வ-குண-வின்யாஸம் ஜீவே மாயாமயே ந்யதாத்
தம் சானுஸயம் ஆத்ம-ஸ்தம் அஸாவ் அனுஸயீ புமான்
ஜ்ஞான-வைராக்ய-வீர்யேன ஸ்வரூப-ஸ்தோ ‘ஜஹாத் ப்ரபு:
தம்—அவருக்கு; ஸர்வ-குண-வின்யாஸம்—குணங்கள் அனைத்தின் உறைவிடம்; ஜீவே—பதவிகளுக்கு; மாயா-மயே—எல்லாச் சக்திகளின் உறைவிடம்; ந்யதாத்—இடப்பட்டு; தம்—அந்த; ச—மேலும்; அனுஸயம்—பதவி; ஆத்மஸ்தம்—ஆத்ம உணர்தலுக்குரிய இடம்; ஸென—அவர்; அனுஸயீ—உயிர்; புமான்—மகிழ்பவர்; ஜ்ஞான—ஞானம்; வைராக்ய—வைராக்கியம்; வீர்யேன—வீரம்; ஸ்வரூப-ஸ்த:—தனது உண்மையான நிலையில் இருத்தல்; அஜஹாத்—வீடுபேறு பெற்று; ப்ரபு:—நெறி ஆளுநர்.
அதன்பின் பிருதுமகாராஜா உயிரின் ஒட்டு மொத்த தகுதி நிலைகளையும் மாயா சக்தியின் காவலரான பரமபுருஷருக்கு அர்ப்பணித்தார். உயிர் சிக்கியிருந்த தகுதிநிலை என்னும் பொறியிலிருந்து விடுபட்டவுடன் அவர் ஞானத்தினாலும், துறவறத்தினாலும், பக்தித் தொண்டினால் கிடைத்த ஆன்மீக உந்துதலினாலும் விடுதலை பெற்றவரானார். இவ்வாறு அவர் கிருஷ்ண உணர்வின், உண்மை நிலையில் இருந்த காரணத்தினால் புலன்களின் பிரபு அல்லது கட்டுப்படுத்துபவர் என்றறியப்படும் தமது உடலைத் துறந்தார்.
பதம் 4.23.19
அர்சிர் நாம மஹா ராஜ்ஞீ தத்-பத்னி அனுகதா வனம்
ஸீகுமாரி அதத்-அர்ஹாச யத்-பத்ப்யாம் ஸ்பர்ஸனம் புவ:
அர்சி: நாம—அர்சி என்ற பெயரில்; மஹ-ராஜ்ஞீ—ராணியானவர்; தத்பத்னீ—பிருது மகாராஜாவின் மனைவி; அனுகதா—தன் கணவனைப் பின் தொடர்ந்து; வனம்—வனத்தில்; ஸீ-குமாரீ—மிகவும் மேன்மையான உடல்; அ-தத்-அர்ஹா—அவருக்குரியதல்ல; ச—மேலும்; யத்-பத்ப்யாம்—தனது பாதங்களினால் தொடுவதற்கு; ஸ்பர்ஷனம்—தொடுகின்ற; புவ:—பூமியின்மேல்.
அர்சி என்ற பெயருடைய பிருது மகாராஜாவின் மனைவி தன் கணவனைப் பின்தொடர்ந்து காட்டிற்கு வந்தார். அவர் ஓர் அரசி ஆனபடியால் மிகவும் மென்மையான உடலினைப் பெற்றிருந்தார். வனவாசத்திற்குரிய வாழ்க்கை அவருக்கு உரியதல்ல. ஆயினும் தானே முன்வந்து தன் பத்மபாதங்களினால் நிலத்தைத் தொட்டார்.
பதம் 4.23.20
அதீவ பர்துர் வ்ரத-தர்ம-நிஷ்டயா
ஸீஸ்ரூஷயா சார்ஷ-தேஹ -யாத்ரயா
நாலிந்ததார்திம் பரிகர்ஸிதாபி ஸா
ப்ரேயஸ்கர-ஸ்பர்ஸன-மான-நிர்வ்ருதி:
அதீவ—மிகவும் அதிகமாக; பர்து:—கணவனின்; வ்ரத-தர்ம—பணிசெய்வதற்குரிய சம்மதமேற்று; நிஷ்டயா—உறுதிசெய்ததினால்; ஸீஸ்ருஷயா—பணிவிடையினால்; ச—மேலும்; ஆர்ஷ—மகா முனிவர்களைப் போல; தேஹு—உடல்; யாத்ரயா—வாழும் நிலை; ந—இல்லை; அவிந்தத—கவனித்து; ஆர்திம்—எந்தக் கஷ்டமும்; பரிகர்ஸிதாஅபி—இளைத்து மெலிந்து மாறியபோதிலும்; ஸா—அவன்; ப்ரேய:கர— மிகவும் மகிழ்ச்சியுடன்; ஸ்பர்ஸன—தொட்டு; மான—ஈடுபட்டு; நிவ்ருதி:—மகிழ்ச்சி.
இத்துன்பங்களையெல்லாம் அறிந்தே இராதவராயினும் தேவி அர்சி தன் கணவனைப் பின்பற்றி மகாமுனிவர்களைப் போல் ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடித்துக் கானகத்தில் வாழ்ந்தார். அவர் தரையில் படுத்து, இலை, பூ, காய், கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தார். இச்செயல்கள் அவருக்குப் பழக்கமில்லை. ஆதலினால் உடல் இளைத்தும், மெலிந்தும்வரலானார். ஆனாலும் தன் கணவருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் இத்துன்பங்களை அவர் மறந்தே போனார்.
பதம் 4.23.21
தேஹம் விபன்னாகில-சேதனாதிகம்
பத்யு: ப்ருதிவ்யா தயிதஸ்ய சாத்மன:
ஆலக்ஷ்ய கிஞ்சிச் ச விலப்ய ஸா ஸதி
சிதாம் அதாரோபயத் அத்தி-ஸானுனி
தேஹம்—உடல்; விபன்ன—முற்றும் ஒடுங்கியதும்; அகில—எல்லா; சேதன—உணர்வு; ஆதிகம்—அடையாளம்; பத்யு:—தன் கணவனின்; ப்ருதிவ்யா:—பூமி; தயிதஸ்ய—கருணையுடன்; ச ஆத்மன:—அவளும் கூட; ஆலக்ஷ்ய—கண்டு; கிஞ்சித்—மிகக்குறைந்த; ச—மேலும்; விலப்ய—புலம்புதல்; ஸா—அவன்; ஸதீ—கற்பு; சிதாம்—நெருப்பிற்கு; அத—இப்பொழுது; ஆரோபயத்—இட்டு; அத்ரி—மலை; ஸானுனி—உச்சியில்.
அர்சி மகாராணி, தன்னிடத்தும் இப்பூமியினிடத்தும் மிகவும் கருணை கொண்டிருந்த தன் அன்புக் கணவனின் உடல் உயிர் இருப்பதற்கான அடையாளங்கள் ஏதுமின்றி இருப்பதைக் கண்டு சிறிது அழுது அற்றினார், பின்னர் தன்னைத் தேற்றிக் கொண்டு மலை உச்சியில் ஓர் சிதை அமைத்து அதில் தன் கணவனின் உடலைக் கிடத்தினாள்.
பதம் 4.23.22
விதாய க்ருத்யம் ஹ்ரதினீ-ஜலாப்லுதா
தத்த்வோதகம் பர்துர் உதார கர்மண:
நத்வா திவி-ஸ்தாம்ஸ் த்ரிதஷாம்ஸ்த்ரி: பரீத்ய
விவேஸவஹ்னிம் த்யாயதீ பர்த்ரு-பாதெள
விதாய—செய்வது; க்ருத்யம்—முறையானச் சடங்கு; ஹர்தினீ—ஆற்றுநீரில்; ஜல-ஆப்லுதா—முற்றிலும் மூழ்கி குளித்து; தத்த்வாஉதகம்—தண்ணீரினால் அர்ப்பணம் செய்து; பர்து:—தன் கணவனின்; உதாரகர்மண:—மிகவும் பெருந்தன்மையாக இருந்தவர்; திவிஸ்தான்—வனத்தில் இருக்கின்ற; த்ரி-தஸான்—முப்பத்து முக்கோடி தேவர்களும்; த்ரி:—மூன்றுமுறை; பரீத்ய—சுற்றிவந்து; விவேஸ—புகுந்தார்; வஹ்னிம்—நெருப்பு; த்யாயதி—நினைக்கும் பொழுது; பர்த்ரு—தன் கணவனின்; பாதௌ—இரு பத்ம பாதங்கள்.
மகாராணி இதன்பிறகு ஈமச்சடங்குகள் அனைத்தையும் செய்து தண்ணீரினால் அர்க்கியம் செய்தார். ஆற்றில் குளித்து எல்லா லோகங்களிலும் இருக்கும் சிறு தேவதைகள் அனைவரையும் வணங்கினார். பிறகு அவர் தன் கணவர் உடல் வைக்கப்பட்டிருக்கும் சிதையினை மும்முறை வலம் வந்து எரியும் நெருப்பினுள் புகுந்தார்.
பதம் 4.23.23
விலோக்யானுகதாம் ஸாத்வீம் ப்ருதும் வீர-வரம் பதிம்
துஷ்டுவுர் வரதா தேவைர் தேவ-பத்னிய ஸஹஸ்ரஸ:
விலோக்ய—இதனைக் கண்டு; அனுகதாம்—தன் கணவனுடன் இறந்ததை; ஸாத்வீம்—கற்புடைய மகளிர்; ப்ருதும்—மன்னர் பிருது; வீர—வரம் மிகச் செறிந்த வீரர்; பதிம்—கணவன்; துஷ்டுவு:—வந்தனங்களைச் செய்து; வர-தா:—வரம் கொடுப்பதற்குரிய; தேவை:—தேவர்களினால்; தேவ-பத்னிய:—தேவர்களின் மனைவியர்; ஸஹஸ்ரஸ:—ஆயிரக்கணக்கில்.
சிறந்த மன்னரான பிருதுவின் கற்பிற்சிறந்த மனைவியான அர்சியின் துணிச்சல் மிக்க இச்செயலினைக் கண்டு ஆயிரக்கணக்கான தேவர்களும் அவர்கள் மனைவியரும் மனம் நிறைவுற்றுத் தங்கள் வந்தனங்களை மகாராணி அர்சிக்குத் தெரிவித்தனர்.
பதம் 4.23.24
குருவத்ய: குஸீமாஸாரம் தஸ்மின் மந்தர ஸானுனி
நதத்ஸ்வ அமர தூர்யேஷீ க்ருணந்தி ஸ்ம பரஸ்பரம்
குர்வத்ய:—தூலினர்; குஸீம-ஆஸாரம்—மலர்மழை; தஸ்மின்—அதில்; மந்தர—மந்தரமலை; ஸானுனி—உச்சியில்; நதத்ஸீ—அதிர்ந்தது; அமர-துர்யேஷீ—தேவர்கள் தங்கள் வாத்தியங்களை முழங்கி; க்ரத்திஸ்ம—பேசிக்கொண்டனர்; பரஸ்பரம்—அவர்களுக்குள்ளாக கீழ்க் கண்டவாறு.
அந்நேரம் மந்தர மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்த தேவர்களும் அவர்கள் மனைவியரும் எரிகின்ற சிதையின் மீது மலர் மாரி பெய்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்குள் கீழ்க்கண்டவாறு பேசலாயினர்.
பதம் 4.23.25
தேவ்ய ஊசு:
அஹோ இயம்வதுர் தன்யா யா சைவம் பூ-புஜாம் பதிம்
ஸர்வாத்மனா பதிம் பேஜே யஜ்ஞேஸம் ஸ்ரீர்வதூர் இவ
தேவ்ய:ஊசு:—தேவர்களின் மனைவியர் கூறினர்; அஹோ—அந்தோ; இயம்—இந்த; வதூ:—மனைவி; தன்யா—மிகவும் புகழ் வாய்ந்த; யா—யார்; ச—மேலும்; ஏவம்—இவ்வாறு; பூ—பூமியின்; புஜாம்—எல்லா மன்னர்களின்; பதிம்—மன்னர்; ஸர்வ-ஆத்மனா—முற்றிலும் புரிந்துகொண்டு; பதிம்—கணவருக்கு; பேஜே—வணங்கி; யஜ்ஞ-ஈஸம்—பகவான் விஷ்ணுவிற்கு; ஸ்ரீ:—அதிர்ஷ்ட தேவதை லட்சுமி; வதூ:—மனைவி; இவ—போல.
தேவர்களின் மனைவியர் கூறினார்: எல்லாப்புகழும் மகாராணி அர்சிக்கு உரியதாகுக! நாம் மன்னர்மன்னரான மகாராஜா பிருதுவின் மனைவியானக் கற்புக்கரசி அர்சி, தன் கணவருக்கு உடல், மனம், வாக்கு போன்றவற்றினால் செய்த சேவையைக் கண்ணுறும் பொழுது அது அதிர்ஷ்ட தேவதையான இலக்குமி தேவியார் தன் கணவரும், யஜ்ஞேஸருமான முழுமுதற் கடவுளான விஷ்ணுவிற்குச் செய்தது போன்றிருந்தது.
பதம் 4.23.26
ஸைஷா நூனம் வ்ரஜதி ஊர்த்வம் அனு வைன்யம் பதிம் ஸதீ
பஸ்யதாஸ்மான் அதீத்யார்சிர் துர்விபாவ்யேன கர்மனா
ஸா—அவள்; ஏஷா—இந்த; நூனம்—நிச்சயம்; வ்ரஜதி—நடப்பது; ஊர்தவம்—உயர்த்துதல்; அனு—தொடர்ந்து; வைன்யம்—வேனனின் மைந்தனன்; பதிம்—கணவன்; ஸதீ—கற்புடைய; பஸ்யதா—சற்றுப் பார்க்க; அஸ்மான்—நாம்; அதீத்ய—கடந்து சென்றது; அர்சி:—அர்சி என்ற பெயரினள்; துர்விபாவ்யேன—கற்பனைக் கெட்டாத; கர்மணா—செயல்கள்.
தேவர்களின் மனைவியர் கூறினர்: நாம் காண கற்புக்கரசியான அர்சி கற்பனைக் கெட்டாத தன் புனிதச் செயல்களினால் தன் கணவனைத் தொடர்ந்து மேலுலகம் செல்கிறார் என்பதை சற்று எண்ணிப்பார்.
பதம் 4.23.27
தேஷாம் துராபம் கிம் த்வ அன்யன் மர்த்யானாம் பகவத்-பதம்
புவி வோகாயுஷோ யே வை நைஷ்கர்ம்யம் ஸாதயந்தி யுத
தேஷாம்—அவர்கள்; துராபம்—பெறற்கரிய; கிம்—என்ன; து—ஆனால்; அன்யத்—எதுவும்; மர்த்யானம்—மனிதர்களின்; பகவத்-பதம்—கடவுளின் ஆட்சி; புவி—பூமியில்; லோக—மின்னிமறையும்; ஆயுஷ:—ஆயுட்காலம்; யே—எவர்கள்; வை—நிச்சயமாக; நைஷ்கர்ம்யம்—விடுதலைப் பாதையில்; ஸாத்யந்தி—செயல்பட்டு; யுத—உண்மையாக.
இப்பௌதீக உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் குறைந்த நாட்களே உடையன. ஆனாலும் கூட பக்தித் தொண்டில் ஈடுபடுபவர்கள் வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடைகின்றனர். காரணம் அவர்கள் விடுதலைப் பாதையில் உண்மையாகவே பயணம் செல்கின்றனர். அப்பேர்ப்பட்ட புனிதர்களுக்குக் கிட்டாதது எதுவும் இல்லை.
பதம் 4.23.28
ஸ வாஞ்சிதோ பதாத்ம-த்ருக் க்ருச்ச்ரேண மஹதா புலி
வப்த்வாபவர்க்யம் மானுஷ்யம் விஷயேஷீ விஷஜ்ஜதே
ஸ:—அவன்; வஞ்சித:—ஏமாற்றுபவன்; பத—நிச்சயம்; ஆத்ம-த்ருக்—தனக்குத்தானே பொறாமை கொண்டோன்; க்ருச்ரேண—மிகவும் கடுமையான; மஹதா—உயர்ந்த செயல்களினால்; புவி—புவியில்; வப்த்வா—எய்துகின்றபடியால்; ஆபவர்க்யம்—விடுதலைப் பாதையில்; மானுஷ்யம்—மனித வடிவு பெற்ற வாழ்க்கை; விஷயேஷீ—புலன்நுகர்ச்சிக்குரிய விஷயங்களில்; விஷஜ்ஜதே—ஈடுபடுகிறான்.
இப்பௌதீக உலகில் புலனுகர்ச்சியின் பொருட்டு செயல்களைச் செய்யும் எவர் ஒருவரும் பெரும் துன்பத்திற்காளாவது தவிர்க்க முடியாததாகும். அப்படிப்பட்டவன் மனித வடிவத்தைப் பெற்ற பிறகு அதுதான் அவனுக்குத் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கான வாய்ப்பினைத் தருகின்றது. மீண்டும் பலன் தரும் செயல்களைக் கடுமையாக மேற்கொள்வானேயானால் அவன் தன்னையே ஏமாற்றுகின்ற ஏமாற்றுக்காரனாகவும் பொறாமைக்காரனாகவுமே கருதப்படுகிறான்.
பதம் 4.23.29
மைத்ரேய உவாச
ஸ்துவதீஷ்வ அமர-ஸ்த்ரீஷீ பதி-லோகம் கதா வதூ:
யம் வா ஆத்ம விதாம் துர்யோ வைன்ய: ப்ராபாச்யுதாஸ்ரய:
மைத்ரேய:உவாச—மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; ஸ்துவதீஷீ—புகழும்பொழுது; அமர-ஸ்த்ரீஷ—தேவர்களின் மனைவியரான தேவமகளிர்; பதி-லோகம்—கணவன் செல்லும் உலகம்; கதா—அடைந்து; வதூ:—மனைவி; யம்—எங்கே; வா—அல்லது; ஆத்ம-விதாம்—தன்னை உணர்ந்த ஆத்மாக்கள்; துர்ய:—மிகவுயர்ந்த; வைன்ய:—வேனமன்னரின் மைந்தன் (பிருது மகாராஜா); ப்ராப—அடைந்து; அச்யுத-ஆஸ்ரய:—முழுமுதற் கடவுளின் பாதுகாப்பின் கீழ்.
மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறுகின்றார். எனது அன்பிற்குரிய விதுரரே, தேவலோகத்தைச் சேர்ந்த தேவர்களின் மனைவியர் இவ்வாறு தங்களுக்கிடையில் பேசிக் கொண்டிருந்த பொழுது மகாராணி அர்சி தன் கணவரும், உயர்ந்த தன்னுணர்வு பெற்ற ஆத்மாவுமான மகாராஜா பிருது அடைந்த உலகத்தைப் போய்ச் சேர்ந்தார்.
பதம் 4.23.30
இத்தம்-பூதானுபாவோ ‘ஸென ப்ருத: ஸ பகவத்தம:
கீர்திதம் தஸ்ய சரிதம் உத்தாம-சரிதஸ்ய தே
இத்தம்-பூத—இவ்வாறு; அனுபாவ:—மிகச்சிறந்த; ஆற்றல் வாய்ந்த; அஸென—அந்த; ப்ருது—பிருது மகாராஜா; ஸ:—அவர்; பகவத்-தம:—உயர்ந்தவர்களில் சிறந்தவர்; கீர்திதம்—விளக்குகிறேன்; தஸ்ய—அவரது; சரிதம்—குணநலன்; உத்தாம—மிகவுயர்ந்த; சரிதஸ்ய—இந்நற்குணங்களைப் பெற்றவர்; தே—உனக்கு.
மைத்ரேயர் கூறினார்: பக்தர்கள் எல்லோரினும் மிகச்சிறந்த பிருது மகாராஜா உயர்ந்த ஆற்றலும், எல்லோரிடத்தும் சமமாகப் பழகுகின்றதன்மையும், பெருந்தன்மையும் தாராள மனப்பான்மையும் மிக்கவராக விளங்கினார். அதனாலேயே அவரைப்பற்றி இத்தனை விளக்கமாக எடுத்துரைத்தேன்.
பதம் 4.23.31
ய இதம் ஸீமஹத் புண்யம் ஸ்ரத்தயாவஹித: படேத்
ஸ்ராவயேச் ச்ருணுயாத் வாபி ஸ ப்ருதோ: பதவீம் இயாத்
ய:—எவன் ஒருவன்; இதம்—இவ்வாறு; ஸீ-மஹத்—மிகச்சிறந்த; புண்யம்—புண்ணியம்; ஸ்ரத்தயா—முழுநம்பிக்கை கொண்டு; அவ-ஹித:—மிகுந்த கவனத்துடன்; படேத்—படித்தால்; ஸ்ராவயேத்—விளக்கினால்; ஸ்ருணுயாத்—கேட்டால்; வா—அல்லது; அபி—உறுதியாக; ஸ:—அவன்; ப்ருதோ:—மன்னர் பிருது; பதவீம்—இடத்தினை; இயாத்—அடைகிறான்.
பிருது மகாராஜாவின் உயர்ந்த குணநலன்களின் மீது நம்பிக்கையும், உறுதியும் கொண்டு ஒருவன் அவரைப் பற்றிப் படித்தாலோ, படிக்கப் பக்கம் நின்று கேட்டாலோ, அல்லது பிறர் கேட்பதற்கு உதவினாலோ அவனும் பிருது மகாராஜா அடைந்த உலகினை அடைவான். அதாவது அவனும் வீடுபேறு பெற்று வைகுண்ட லோகம் சென்று முழுமுதற் கடவுளை அடைவான் என்பதாம்.
பதம் 4.23.32
ப்ராஹ்மணோ ப்ரஹ்ம-வர்சஸ்வீ ராஜன்யோ ஜகதீ-பதி:
வைஸ்ய: படன் விட்-பதி: ஸ்யாச் சூத்ர: ஸத்தமதாம் இயாத்
பிராஹ்மண:—அந்தணர்கள்; ப்ரஹ்ம-வர்சஸ்வீ—ஆன்மீக வெற்றியின் ஆற்றல் எய்தப்பெற்றவர்கள்; ராஜன்ய:—அரச கட்டளை; ஜகதீ-பதி:—உலகின் அரசர்; வைஸ்ய:—வைசியர்கள்; படன்—படிப்பதினால்; விட்-பதி:—விலங்குகளின் தலைவன்; ஸ்யாத்—ஆகிறான்; ஸீத்ர:—சூத்திரன்: ஸத்தம-தாம்—சிறந்த பக்தரின் இடத்தை; இயாத்—அடைகிறான்.
ஒருவன் அந்தணனாயிருந்து பிருது மகாராஜாவின் குணநலன்களைக் காதால் கேட்பானாகில் அவன் அந்தணர்க்குரிய தர்மங்களில் தகுதி வாய்ந்தவனாகிறான்; அவன் ஒரு சத்திரியனாக இருந்தான் என்றால் இவ்வுலகிற்கே மன்னன் ஆகிறான்; அவன் ஒரு வைசியனாக இருந்தால் பிற வைணவர்களுக்கும் விலங்குகளுக்கும் தலைவனாகிறான்; மேலும் அவன் ஒரு சூத்திரனாக இருக்கும் பட்சத்தில் அவன் உயர்ந்த பக்தனாகிறான்.
பதம் 4.23.33
த்ரி: க்ருத்வ இதம் ஆகர்ண்ய நரோ நாரி அதவாத்ருதா
அப்ரஜ: ஸீப்ரஜதமோ நிர்தனோ தனவத்தம:
த்ரி:—மூன்று தடவை; க்ருத்வ:—திரும்பச்செய்கின்ற; இதம்—இந்த; ஆகர்ண்ய—கேட்பது; நர:—ஆண்; நாரீ—பெண்; அதவா—அல்லது; ஆத்ருதா—உயர்ந்த மரியாதை; அபரஜ:—பிள்ளைப்பேறு இல்லாதார்; ஸீ-ப்ரஜ-தம:—அனேக குழந்தைகளைப் பெற்று; நிர்தன:—பொருளில்லாதால்; தன-வத்—செல்வந்தன்; தம:—உயர்ந்த.
ஆணோ பெண்ணோ அதைப்பற்றிக் கவலையில்லை. ஒருவன் மிகுந்த மரியாதையுடன் மகாராஜா பிருதுவின் சரிதத்தைக் கேட்பானாகில் அவள் குழந்தை பாக்கியம் இல்லாதவள் என்றால் பல குழந்தைகளை ஈன்றெடுப்பாள். அவன் வறியவனாகில் உயர்ந்த செல்வந்தனாக மாறுவான் என்பது திண்ணம்.
பதம் 4.23.34
அஸ்பஷ்ட-கீர்தி: ஸீயஸா மூர்கோ பவதி பண்டித:
இதம் ஸ்வஸ்தி-அயனம் பும்ஸாம் அமாங்கல்ய-நிவாரணம்
அஸ்பஷ்ட கீர்தி:—பெருமை வெளியே தெரியாதிருத்தல்; ஸீ-யஸா:—மிகுந்த புகழ்; மூர்க:—மூடன்; பவதி—ஆகிறான்; பண்டித:—கற்றவர்; இதம்—இந்த; ஸ்வஸ்தி-அயனம்—மங்கலகரமான; பும்ஸாம்—மனிதர்களின்; அமங்கல்ய—அமங்கலம்; நிவாரணம்—தடை செய்கின்றது.
இச்சரிதத்தை ஒருவன் மூன்று முறைக் கேட்பானாகில் அவன் சமுதாயத்தில் இழிந்தவனாக இருந்தால் புகழ் பெறுவான், அறிவிலியாயிருந்தால் அறிஞன் ஆவான். அதாவது பிருது மகாராஜாவின் சரிதத்தைக் கேட்பது அமங்கலத் தன்மைகளை நீக்கி மங்கலம் உண்டாகச் செய்யும்.
பதம் 4.23.35
தன்யம் யஸஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் கலி-மலாபஹம்
தர்மார்த-காம-மோக்ஷாணாம் ஸம்யக் ஸித்திம் அபீப்ஸீபி:
ஸ்ரத்தயைதத் அனுஸ்ராவ்யம் சதுர்ணாம் காரணம் பரம்
தன்யம்—செல்வத்திற்கு ஆதாரம்; யஸஸ்யம்—புகழுக்கு ஆதாரம்; ஆயுஷ்யம்—நீண்ட வாழ்நாளைப் பெறுவதற்கான ஆதாரம்; ஸ்வர்க்யம்—சொர்க்கத்தினை அடைவதற்கான ஆதாரம்; கலி—கலியுகம்; மல-அபஹம்—மாசுக்கள் நீங்கப்பெற்று; தர்ம—சமயம்; அர்த—பொருள்வளம்; காம—புலன் இச்சை; மோக்ஷாணாம்—விடுதலை; ஸம்யக்—முற்றும்; ஸித்திம்—நிறைவு; அபீப்ஸீபி:—அவ்வாசைகளினால்; அஸரத்தயா—மிகுந்த மரியாதையுடன்; ஏதத்—இச்சரிதம்; அனுஸ்ராச்யம்—ஒருவன் கேட்க வேண்டும்; சதுர்ணாம்—நான்கு; காரணம்—காரணம்: பரம்—இறுதியானது.
பிருது மகாராஜாவின் சரிதத்தைக் கேட்பதினால் ஒருவன் உயர்ந்தவனாகி, தன் வாழ்நாளை அதிகரித்து, சொர்க்கத்திற்குச் செல்லும் நிலையினை எய்தி கலியுக மாசுக்களை எதிர்க்கும் ஆற்றல் மிக்கவனாக விளங்குவான். அத்துடன் அவன் சமயம், பொருள்வளம், புலன்நுகர்ச்சி மற்றும் விடுதலை போன்றவற்றிலும் உயர்வு பெறுவான். ஆதலினால் ஓர் உலோகாயத மனிதன் இதுபோல் பிருது மகாராஜாவின் வாழ்க்கைச் சரிதத்தைப் படிப்பது கேட்பது போன்றவற்றில் விருப்பம் கொள்ள வேண்டும் என்று எல்லாப் பக்கங்களில் இருந்தும் அறிவுறுத்தப்படுகிறான்.
பதம் 4.23.36
விஜயாபிமுகோ ராஜா ஸ்ருத்வைதத் அபியாதியான்
பலிம் தஸ்மை ஹரந்தி அக்ரே ராஜான: ப்ருதவே யதா
விஜய-அபிமுக:—வெற்றியினைப் பெறுவதற்கு பயணம் தொடங்கும் பொழுது; ராஜா—அரசர்; ஸ்ருத்வா—கேட்பது; ஏதத்—இந்த; அபியாதி—தொடங்குதல்; யான்—ரதத்தின்மேல்; பலிம்—கப்பம்; தஸ்மை—அவருக்கு; ஹரந்தி—அளிப்பார்; அக்ரே—முன்னால்; ராஜான:—மற்ற அரசர்கள்; ப்ருதுவே—பிருது மகாராஜாவுக்கு; யதா—அளித்தது போன்று.
ஓர் அரசன் பிற நாட்டை வெல்வதற்கும் அதனை ஆள்வதற்கும் விரும்பினால் அவன் தனது ரதத்தில் ஏறுவதற்கு முன்பாக மூன்று முறை பிருது மகாராஜாவின் சரிதத்தினை ஓத வேண்டும். எல்லாச் சிற்றரசர்களும் முன்னர் பிருது மகாராஜாவிற்கு எப்படித் தங்கள் கப்பங்களைக் கட்டினார்களோ அதுபோல் தாமாகவே முன்வந்து தங்கள் கப்பங்களைச் செலுத்துவர்.
பதம் 4.23.37
முக்தான்ய-ஸங்கோ பகவதி அமலாம் பக்திம் உத்வவஹன்
வைன்யஸ்ய சரிதம் புண்யம் ஸ்ருணுயாச் ச்ராவயேத் படேத்
முக்த—அன்ய—ஸங்க:—பௌதீக மாசுக்கள் அனைத்தினின்றும் நீங்குவதற்கு; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; அமலாம்—மருவற்ற; பக்திம்—பக்தித்தொண்டு; உத்வஹன்—நிறைவேற்றினால்; வைன்யஸ்ய—மகாராஜா வேனனின் புதல்வர்; சரிதம்—குணநலன்; புண்யம்—புண்ணியம்; ஸ்ருணுயாத்—கேட்கவேண்டும்; ஸேராவயேத்—பிறரைத் கேட்கவைத்தும்; படேத்—படிக்கச்செய்வதும்.
பக்தித் தொண்டின் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டிருக்கும் ஒரு தூய உன்னதமான நிலையினை அடையலாம், முற்றிலும் கிருஷ்ண உணர்வு மிக்கவனாக ஆகலாம் அத்தோடு அவர் அப்பக்தித் தொண்டினை ஆற்றும் பொழுதே பிருது மகாராஜாவின் சரிதத்தினையும் குணநலன்களையும் கேட்கவும், படிக்கவும் செய்வதோடு பிறரையும் கேட்கச் செய்யவும் படிக்கச் செய்யவும் வேண்டும்.
பதம் 4.23.38
வைசித்ரவீர்யாபிஹிதம் மஹன்-மஹாத்ம்ய-ஸீவகம்
அஸ்மின் க்ருதம் அதிமர்த்யம் பார்தவீம் கதிம் ஆப்னுயாத்
வைசித்ரவீர்ய—ஓ, விசித்ர வீர்யனின் புதல்வனே; (விதுரர்); அபிஹிதம்—விளக்கினேன்; மஹத்—சிறப்புக்களை; ஸீசகம்—விழிப்புச்செய்ய; அஸ்மின்—இதில்; க்ருதம்—செய்யப்பட்டது; அதி-மர்த்யம்—பொதுவானதன்று; பார்வீம்—மகாராஜா; பிருது—சம்பந்தப்பட்ட; கதிம்—முன்னேற்றம்; எல்லை; ஆப்னுயாத்—ஒருவர் அடைய வேண்டும்.
மகாமனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்: எனது அன்பிற்குரிய விதுரரே, ஒருவனது பக்திச் செயல்களைச் செழுமைப்படுத்தும் பிருது மகாராஜாவின் சரிதத்தை என்னால் முடிந்த அளவில் விளக்கியிருக்கிறேன். இதனைக் கேட்டுப் பயன்பெறும் எவரும் பிருது மகாராஜாவைப் போல் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைவார்கள்.
பதம் 4.23.39
அனுதினம் இதம் ஆதரேண ஸ்ருண்வன்
ப்ருத-சரிதம் ப்ரதயன் விமுக்த-ஸங்க:
பகவதி பவ ஸிந்து-போத-பாதே
ஸ ச நிபுணாம் லபதே ரதிம் மனுஷ்ய:
அனு-தினம்—ஒவ்வொருநாளும்; இதம்—இதனை; ஆதரேன—உயர்ந்த மரியாதையுடன்; ஸ்ருண்வன்—கேட்டால்; ப்ருது-சரிதம்—பிருது மகாராஜாவின் சரிதத்தினை; ப்ரதயன்—ஓதினால்; விமுக்த—விடுதலை; ஸங்க:—சங்கம்; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; பவஸிந்து—அறியாமைக் கடலினை; போத—தோணி; பாதே—அவரது பத்மபாதம்; ஸ:—அவர்; ச—மேலும்; நிபுணாம்—முழுமை; வபதே—அடைவர்; ரதிம்—பற்று; மனுஷ்ய:—மனிதன்.
எவரேனும் பிருது மகாராஜாவின் செயல்கள் பற்றிய சரிதத்தினைப் போற்றியும் வணங்கியும் நாள்தோறும் விடாது படித்து வந்தால், அது முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகளிடத்து அவரது ஆழ்ந்த நம்பிக்கையினையும், பற்றுதலையும் நிச்சயம் அதிகரிக்கச் செய்யும். பகவானின் பத்மபாதங்கள் என்னும் படகின் துணை கொண்டே ஒருவன் அறியாமைக் கடலினைக் கடத்தல் கூடும்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “பிருது மகாராஜா வீடு பேறு அடைதல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.