அத்தியாயம் – 23
பிருது மகாராஜா வீடு பேறு அடைதல்
பதங்கள் 4.23.1 – 4.23.3 : உலகம் முழுவதற்கும் ஒரே அரசராகத் திகழ்ந்தவரும், தான் பெற்ற செல்வம் அனைத்தும் அசைகின்ற அசையாத எல்லா உயிர்களுக்கும் பகிர்ந்தளித்தவருமான பிருது மகாராஜா தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் தான் முதுமை அடைந்ததை உணர்ந்தார். சமய அறநெறிகளுக்கு ஏற்றாற்போல் அவர் எல்லோருக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடுகள் செய்தார். முழுமுதற் கடவுளின் கட்டளைகளை அவரோடு ஒருங்கிணைந்து முற்றிலும் நிறைவேற்றிய பின்னர், தன்னுடைய மைந்தர்கள் ஐவரையும் தன் மகள் போல் கருதிய இப்பூமிக்கு அர்ப்பணித்தார். இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பிறகு பிருது மகாராஜா, தன் மனைவியுடன், தன் குடிமக்கள் எல்லோரும் அழுது புலம்ப அவர்களைப் பிரிந்து தவம் செய்வதற்காக வனத்திற்குச் சென்றார்.
பதம் 4.23.4 : இல்லறத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிருது மகாராஜா வனத்தில் ஓய்வு வாழ்க்கைக்குரிய ஒழுங்குமுறைகளைச் சரியாகப் பின்பற்றி கடுமையான தவத்தினை மேற்கொண்டார். தான் ஆட்சியிலிருந்து எல்லோரையும் வெற்றி கொண்டபொழுது எவ்வளவு கவனமாக இருந்தாரோ அதே கவனத்துடன்தான் கானக வாழ்க்கையிலும் இருந்தார்.
பதம் 4.23.5 : தபோ வனத்தில் மகாராஜா பிருது சில நேரங்களில் கந்த மூலங்களை உண்டார்; சில நேரங்களில் காய்ந்த சருகுகளையும், கனிகளையும் உண்டார். வாரக் கணக்கில் தண்ணீர் ஒன்றை மட்டுமே அருந்தினார். கடைசியில் காற்றை மட்டுமே உணவாக உண்டு வாழ்ந்தார்.
பதம் 4.23.6 : வன வாழ்க்கைக்குரிய விதிகளையும், மகா முனிவர்களின் பாதையையும் பின்பற்றி பிருது மகாராஜா கோடைக்காலத்தில் ஐந்து வகையான உஷ்ண முறைகளையும் ஏற்றுக்கொண்டு, மழைக்காலத்தில் கனமழையின் கொடுங்கரங்களுக்குத் தன் உடலைக் கொடுத்து குளிர்காலத்தில் கழுத்து வரை நீரில் நின்றும், வெறும் தரையிலேயே படுத்தும் தன் வாழ்க்கையினை மேற்கொண்டார்.
பதம் 4.23.7 : பிருது மகாராஜா தனது வாக்கினையும், புலன்களையும் கட்டுப்படுத்தி இதுபோன்ற தவமுயற்சிகளை மேற்கொண்டது ஏனென்றால் தன் உடலில் இருந்து சுக்கிலம் வெளிப்படாமல் தவிர்க்கவும், தனது உடலினுள்ளேயே ஜீவக் காற்றினைக் கட்டுப்படுத்துவதற்குமேயாகும். இவற்றையெல்லாம் அவர் கிருஷ்ணரைத் திருப்திப்படுத்துவதற்காகவே செய்தார். வேறு எந்தவித நோக்கத்திற்காகவும் அன்று.
பதம் 4.23.8 : இதுபோன்ற கடுமையான தவங்களைச் செய்ததின் மூலம் பிருது மகாராஜா ஆன்மீக வாழ்க்கையில் உறுதியும் பயன்தரும் செயல்களின் மீதுள்ள ஆசைகளில் இருந்து முற்றிலும் விடுதலையும் பெற்றார். அவர் சுவாசப் பயிற்சியின் மூலம் மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தினார். அவ்வாறு கட்டுப்படுத்தியதின் மூலம் அவர் பயன்தரும் செயல்களின் மீதுள்ள மோகங்களை விட்டு முற்றிலும் விடுதலை பெற்றார்.
பதம் 4.23.9 : இவ்வாறு மனிதரில் சிறந்தவரான பிருது மகாராஜா சனத்—குமாரரால் அறிவுறுத்தப்பட்ட ஆன்மீக முன்னேற்றத்திற்கானப் பாதையினைப் பின்பற்றினார். அதாவது அவர் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை வணங்கினார் என்பதேயாகும்.
பதம் 4.23.10 : இவ்வாறு மகாராஜா பிருது இருபத்திநான்கு மணி நேரமும், விதிமுறைகளுக்கேற்ப ஒழுங்குமுறை விதிகளை கடுமையாகக் கடைபிடித்து பக்தித் தொண்டில் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். அதனால் அவருக்கு முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடத்து அன்பும் பக்தியும் பெருகியதோடு, இது எந்தவிதமான மாற்றமுமின்றி வளர்ந்து நிலைபெற்றது.
பதம் 4.23.11 : பக்தித் தொண்டினை பிருது மகாராஜா இடைவிடாது தொடர்ந்து செய்தமையினால் அவரது மனம் எல்லாம் கடந்த உன்னத நிலையினில் இருந்தது; அதனால் அவர் எப்போதும் தொடர்ந்து பகவானின் திருவடித் தாமரைகளையே நினைத்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் பற்றுக்கள் ஏதுமின்றி முழுஞானம் பெற்று எல்லாச் சந்தேகங்களையும் கடந்தவராக விளங்கினார். இவ்வாறு அவர் வீண் கர்வத்தினின்றும் பௌதீகக் கருத்துடைய வாழ்க்கையிலிருந்தும் விடுதலை பெற்றார்.
பதம் 4.23.12 : உடலியற் கருத்துடைய வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விடுபட்டபின்னரே மகாராஜா பிருது ஒவ்வொருவர் மனதிலும் பகவான் கிருஷ்ணரே பரமாத்மாவாக வீற்றிருக்கின்றார் என்பதை உணர்ந்தார். இவ்வாறு அவர் எல்லாக் கட்டளைகளையும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் தகுதியினைப் பெற்றப் பிறகு அவர் ஞானம் மற்றும் யோகப் பயிற்சிகள் செய்வதை முற்றிலும் நிறுத்தினார். கிருஷ்ணருக்குச் செய்யும் பக்தித் தொண்டே வாழ்க்கையின் இறுதி இலட்சியம் என்பதை முற்றிலும் உணர்ந்த பிறகு யோகம் மற்றும் ஞானப் பயிற்சிகளில் அவர் ஆர்வம் கொள்ளவில்லை. ஞானிகளும், யோகிகளும் கிருஷ்ணரின் சரிதத்தைக் கேட்பதில் ஆர்வம் மிக்கவர்களாக இல்லையென்றால் வாழ்க்கை பற்றிய அவர் தம் மயக்கங்களை அவர்களிடமிருந்து ஒருபோதும் நீக்க முடியாது.
பதம் 4.23.13 : உரிய நேரத்தில் தன்னுடைய பூத உடலை விட்டுவிட வேண்டும். என்பதினால் பிருது மகாராஜா தன்னுடைய மனத்தை எப்போதும் உறுதியாகப் பகவான் கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளின் மீதே வைத்திருந்தார். இவ்வாறு முற்றிலும் பிரம்ம பூத நிலையில் இருந்த வண்ணமே அவர் தன் பூத உடலைப் பிரிந்தார்.
பதம் 4.23.14 : மகாராஜா பிருது ஒரு குறிப்பிட்ட யோகாசன நிலையில் அமர்ந்து, தனது கணுக்காலினால் எருவாயின் கதவுகளை அடைத்து இடது மற்றும் வலது கெண்டைக் கால்களினால் அழுத்தி சுவாசக் காற்றை படிப்படியாக மேலேற்றி உந்திச் சுழியினைக் கடக்குமாறு செய்து இதயம் மற்றும் கண்டத்திற்குக் கொண்டு வந்து முடிவில் அதனை தன் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் நிலைக்குமாறு செய்வார்.
பதம் 4.23.15 : இவ்வாறு பிருது மகாராஜா தன் உடலிலுள்ள ஜீவக் காற்றினை தன் தலையின் கபால ஓட்டின் துளைக்குக் கொண்டு வந்து அங்கிருந்த நிலையிலேயே ஜடத்தோற்றத்தின் மீதுள்ள எல்லாப் பற்றுக்களையும் விட்டொழித்தார். படிப்படியாகத் தன் ஜீவக் காற்றினை வெளியில் இருக்கும் மொத்தக் காற்றுடன் கலந்தார், தன் உடலை பூமியுடனும், தன் உடலிலுள்ள நெருப்பினை மொத்த நெருப்புடனும் இணைத்தார்.
பதம் 4.23.16 : இவ்வாறு பிருது மகாராஜா தன் உடலில் உள்ள பாகங்களில் பல்வேறு விதமான நிலையினைப் பொருத்து புலனேந்திரியங்களின் துளைகளை வானத்துடன் இணைத்தார்; தன் உடலிலுள்ள உதிரம் மற்றும் நிணங்களைத் தண்ணீருடன் இணைத்தார் நிலத்தினை நீருடன் இணைத்தார், நீரினை நெருப்புடன் இணைத்தார், நெருப்பினைக் காற்றுடன் இணைத்தார், காற்றினை வானுடன் இணைத்தார் இவ்வாறு தொடர்ந்து செய்தார்.
பதம் 4.23.17 : அவ்வவற்றின் இருப்பிற்கேற்ப அவர் மனத்தைப் புலன்களுடனும், புலன்களை அவற்றின் பொருட்களுடனும் இணைத்தார், மேலும் அவர் அகங்காரத்தை பௌதீக சக்தியென்னும் மஹத்தத்துவத்துடன் இணைத்தார்.
பதம் 4.23.18 : அதன்பின் பிருதுமகாராஜா உயிரின் ஒட்டு மொத்த தகுதி நிலைகளையும் மாயா சக்தியின் காவலரான பரமபுருஷருக்கு அர்ப்பணித்தார். உயிர் சிக்கியிருந்த தகுதிநிலை என்னும் பொறியிலிருந்து விடுபட்டவுடன் அவர் ஞானத்தினாலும், துறவறத்தினாலும், பக்தித் தொண்டினால் கிடைத்த ஆன்மீக உந்துதலினாலும் விடுதலை பெற்றவரானார். இவ்வாறு அவர் கிருஷ்ண உணர்வின், உண்மை நிலையில் இருந்த காரணத்தினால் புலன்களின் பிரபு அல்லது கட்டுப்படுத்துபவர் என்றறியப்படும் தமது உடலைத் துறந்தார்.
பதம் 4.23.19 : அர்சி என்ற பெயருடைய பிருது மகாராஜாவின் மனைவி தன் கணவனைப் பின்தொடர்ந்து காட்டிற்கு வந்தார். அவர் ஓர் அரசி ஆனபடியால் மிகவும் மென்மையான உடலினைப் பெற்றிருந்தார். வனவாசத்திற்குரிய வாழ்க்கை அவருக்கு உரியதல்ல. ஆயினும் தானே முன்வந்து தன் பத்மபாதங்களினால் நிலத்தைத் தொட்டார்.
பதம் 4.23.20 : இத்துன்பங்களையெல்லாம் அறிந்தே இராதவராயினும் தேவி அர்சி தன் கணவனைப் பின்பற்றி மகாமுனிவர்களைப் போல் ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடித்துக் கானகத்தில் வாழ்ந்தார். அவர் தரையில் படுத்து, இலை, பூ, காய், கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தார். இச்செயல்கள் அவருக்குப் பழக்கமில்லை. ஆதலினால் உடல் இளைத்தும், மெலிந்தும்வரலானார். ஆனாலும் தன் கணவருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் இத்துன்பங்களை அவர் மறந்தே போனார்.
பதம் 4.23.21 : அர்சி மகாராணி, தன்னிடத்தும் இப்பூமியினிடத்தும் மிகவும் கருணை கொண்டிருந்த தன் அன்புக் கணவனின் உடல் உயிர் இருப்பதற்கான அடையாளங்கள் ஏதுமின்றி இருப்பதைக் கண்டு சிறிது அழுது அற்றினார், பின்னர் தன்னைத் தேற்றிக் கொண்டு மலை உச்சியில் ஓர் சிதை அமைத்து அதில் தன் கணவனின் உடலைக் கிடத்தினாள்.
பதம் 4.23.22 : மகாராணி இதன்பிறகு ஈமச்சடங்குகள் அனைத்தையும் செய்து தண்ணீரினால் அர்க்கியம் செய்தார். ஆற்றில் குளித்து எல்லா லோகங்களிலும் இருக்கும் சிறு தேவதைகள் அனைவரையும் வணங்கினார். பிறகு அவர் தன் கணவர் உடல் வைக்கப்பட்டிருக்கும் சிதையினை மும்முறை வலம் வந்து எரியும் நெருப்பினுள் புகுந்தார்.
பதம் 4.23.23 : சிறந்த மன்னரான பிருதுவின் கற்பிற்சிறந்த மனைவியான அர்சியின் துணிச்சல் மிக்க இச்செயலினைக் கண்டு ஆயிரக்கணக்கான தேவர்களும் அவர்கள் மனைவியரும் மனம் நிறைவுற்றுத் தங்கள் வந்தனங்களை மகாராணி அர்சிக்குத் தெரிவித்தனர்.
பதம் 4.23.24 : அந்நேரம் மந்தர மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்த தேவர்களும் அவர்கள் மனைவியரும் எரிகின்ற சிதையின் மீது மலர் மாரி பெய்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்குள் கீழ்க்கண்டவாறு பேசலாயினர்.
பதம் 4.23.25 : தேவர்களின் மனைவியர் கூறினார்: எல்லாப்புகழும் மகாராணி அர்சிக்கு உரியதாகுக! நாம் மன்னர்மன்னரான மகாராஜா பிருதுவின் மனைவியானக் கற்புக்கரசி அர்சி, தன் கணவருக்கு உடல், மனம், வாக்கு போன்றவற்றினால் செய்த சேவையைக் கண்ணுறும் பொழுது அது அதிர்ஷ்ட தேவதையான இலக்குமி தேவியார் தன் கணவரும், யஜ்ஞேஸருமான முழுமுதற் கடவுளான விஷ்ணுவிற்குச் செய்தது போன்றிருந்தது.
பதம் 4.23.26 : தேவர்களின் மனைவியர் கூறினர்: நாம் காண கற்புக்கரசியான அர்சி கற்பனைக் கெட்டாத தன் புனிதச் செயல்களினால் தன் கணவனைத் தொடர்ந்து மேலுலகம் செல்கிறார் என்பதை சற்று எண்ணிப்பார்.
பதம் 4.23.27 : இப்பௌதீக உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் குறைந்த நாட்களே உடையன. ஆனாலும் கூட பக்தித் தொண்டில் ஈடுபடுபவர்கள் வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடைகின்றனர். காரணம் அவர்கள் விடுதலைப் பாதையில் உண்மையாகவே பயணம் செல்கின்றனர். அப்பேர்ப்பட்ட புனிதர்களுக்குக் கிட்டாதது எதுவும் இல்லை.
பதம் 4.23.28 : இப்பௌதீக உலகில் புலனுகர்ச்சியின் பொருட்டு செயல்களைச் செய்யும் எவர் ஒருவரும் பெரும் துன்பத்திற்காளாவது தவிர்க்க முடியாததாகும். அப்படிப்பட்டவன் மனித வடிவத்தைப் பெற்ற பிறகு அதுதான் அவனுக்குத் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கான வாய்ப்பினைத் தருகின்றது. மீண்டும் பலன் தரும் செயல்களைக் கடுமையாக மேற்கொள்வானேயானால் அவன் தன்னையே ஏமாற்றுகின்ற ஏமாற்றுக்காரனாகவும் பொறாமைக்காரனாகவுமே கருதப்படுகிறான்.
பதம் 4.23.29 : மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறுகின்றார். எனது அன்பிற்குரிய விதுரரே, தேவலோகத்தைச் சேர்ந்த தேவர்களின் மனைவியர் இவ்வாறு தங்களுக்கிடையில் பேசிக் கொண்டிருந்த பொழுது மகாராணி அர்சி தன் கணவரும், உயர்ந்த தன்னுணர்வு பெற்ற ஆத்மாவுமான மகாராஜா பிருது அடைந்த உலகத்தைப் போய்ச் சேர்ந்தார்.
பதம் 4.23.30 : மைத்ரேயர் கூறினார்: பக்தர்கள் எல்லோரினும் மிகச்சிறந்த பிருது மகாராஜா உயர்ந்த ஆற்றலும், எல்லோரிடத்தும் சமமாகப் பழகுகின்றதன்மையும், பெருந்தன்மையும் தாராள மனப்பான்மையும் மிக்கவராக விளங்கினார். அதனாலேயே அவரைப்பற்றி இத்தனை விளக்கமாக எடுத்துரைத்தேன்.
பதம் 4.23.31 : பிருது மகாராஜாவின் உயர்ந்த குணநலன்களின் மீது நம்பிக்கையும், உறுதியும் கொண்டு ஒருவன் அவரைப் பற்றிப் படித்தாலோ, படிக்கப் பக்கம் நின்று கேட்டாலோ, அல்லது பிறர் கேட்பதற்கு உதவினாலோ அவனும் பிருது மகாராஜா அடைந்த உலகினை அடைவான். அதாவது அவனும் வீடுபேறு பெற்று வைகுண்ட லோகம் சென்று முழுமுதற் கடவுளை அடைவான் என்பதாம்.
பதம் 4.23.32 : ஒருவன் அந்தணனாயிருந்து பிருது மகாராஜாவின் குணநலன்களைக் காதால் கேட்பானாகில் அவன் அந்தணர்க்குரிய தர்மங்களில் தகுதி வாய்ந்தவனாகிறான்; அவன் ஒரு சத்திரியனாக இருந்தான் என்றால் இவ்வுலகிற்கே மன்னன் ஆகிறான்; அவன் ஒரு வைசியனாக இருந்தால் பிற வைணவர்களுக்கும் விலங்குகளுக்கும் தலைவனாகிறான்; மேலும் அவன் ஒரு சூத்திரனாக இருக்கும் பட்சத்தில் அவன் உயர்ந்த பக்தனாகிறான்.
பதம் 4.23.33 : ஆணோ பெண்ணோ அதைப்பற்றிக் கவலையில்லை. ஒருவன் மிகுந்த மரியாதையுடன் மகாராஜா பிருதுவின் சரிதத்தைக் கேட்பானாகில் அவள் குழந்தை பாக்கியம் இல்லாதவள் என்றால் பல குழந்தைகளை ஈன்றெடுப்பாள். அவன் வறியவனாகில் உயர்ந்த செல்வந்தனாக மாறுவான் என்பது திண்ணம்.
பதம் 4.23.34 : இச்சரிதத்தை ஒருவன் மூன்று முறைக் கேட்பானாகில் அவன் சமுதாயத்தில் இழிந்தவனாக இருந்தால் புகழ் பெறுவான், அறிவிலியாயிருந்தால் அறிஞன் ஆவான். அதாவது பிருது மகாராஜாவின் சரிதத்தைக் கேட்பது அமங்கலத் தன்மைகளை நீக்கி மங்கலம் உண்டாகச் செய்யும்.
பதம் 4.23.35 : பிருது மகாராஜாவின் சரிதத்தைக் கேட்பதினால் ஒருவன் உயர்ந்தவனாகி, தன் வாழ்நாளை அதிகரித்து, சொர்க்கத்திற்குச் செல்லும் நிலையினை எய்தி கலியுக மாசுக்களை எதிர்க்கும் ஆற்றல் மிக்கவனாக விளங்குவான். அத்துடன் அவன் சமயம், பொருள்வளம், புலன்நுகர்ச்சி மற்றும் விடுதலை போன்றவற்றிலும் உயர்வு பெறுவான். ஆதலினால் ஓர் உலோகாயத மனிதன் இதுபோல் பிருது மகாராஜாவின் வாழ்க்கைச் சரிதத்தைப் படிப்பது கேட்பது போன்றவற்றில் விருப்பம் கொள்ள வேண்டும் என்று எல்லாப் பக்கங்களில் இருந்தும் அறிவுறுத்தப்படுகிறான்.
பதம் 4.23.36 : ஓர் அரசன் பிற நாட்டை வெல்வதற்கும் அதனை ஆள்வதற்கும் விரும்பினால் அவன் தனது ரதத்தில் ஏறுவதற்கு முன்பாக மூன்று முறை பிருது மகாராஜாவின் சரிதத்தினை ஓத வேண்டும். எல்லாச் சிற்றரசர்களும் முன்னர் பிருது மகாராஜாவிற்கு எப்படித் தங்கள் கப்பங்களைக் கட்டினார்களோ அதுபோல் தாமாகவே முன்வந்து தங்கள் கப்பங்களைச் செலுத்துவர்.
பதம் 4.23.37 : பக்தித் தொண்டின் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டிருக்கும் ஒரு தூய உன்னதமான நிலையினை அடையலாம், முற்றிலும் கிருஷ்ண உணர்வு மிக்கவனாக ஆகலாம் அத்தோடு அவர் அப்பக்தித் தொண்டினை ஆற்றும் பொழுதே பிருது மகாராஜாவின் சரிதத்தினையும் குணநலன்களையும் கேட்கவும், படிக்கவும் செய்வதோடு பிறரையும் கேட்கச் செய்யவும் படிக்கச் செய்யவும் வேண்டும்.
பதம் 4.23.38 : மகாமனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்: எனது அன்பிற்குரிய விதுரரே, ஒருவனது பக்திச் செயல்களைச் செழுமைப்படுத்தும் பிருது மகாராஜாவின் சரிதத்தை என்னால் முடிந்த அளவில் விளக்கியிருக்கிறேன். இதனைக் கேட்டுப் பயன்பெறும் எவரும் பிருது மகாராஜாவைப் போல் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைவார்கள்.
பதம் 4.23.39 : எவரேனும் பிருது மகாராஜாவின் செயல்கள் பற்றிய சரிதத்தினைப் போற்றியும் வணங்கியும் நாள்தோறும் விடாது படித்து வந்தால், அது முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகளிடத்து அவரது ஆழ்ந்த நம்பிக்கையினையும், பற்றுதலையும் நிச்சயம் அதிகரிக்கச் செய்யும். பகவானின் பத்மபாதங்கள் என்னும் படகின் துணை கொண்டே ஒருவன் அறியாமைக் கடலினைக் கடத்தல் கூடும்.