அத்தியாயம் – 21
பிருது மகாராஜாவிடம் கட்டளைகள்
பதம் 4.21.1
மைத்ரேய உவாச
மௌக்திகை: குஸும-ஸ்ரக்பிர் துகூலை: ஸ்வர்ண-தோரணை:
மஹா-ஸுரபிபிர் தூபைர் மண்டிதம் தத்ர தத்ர வை
மைத்ரேய: உவாச—மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; மௌத்திகை:—முத்துக்களுடன்; குஸும—மலர்களினால்; ஸ்ரக்பி:—மலைகளுடன்; துகூலை:—ஆடைகள்; ஸ்வர்ண—பொன்; தோரணை:—வாயிலில்; மஹா-ஸுரபி-பி:—உயர்ந்த நறுமணம்; தூபை:—நறுமணத் தூபம்; மந்திரம—அலங்கரிக்கப்பட்டு; தத்ர தத்ர— இங்குமங்கும்; வை—உறுதியாக.
மகாமுனிவர் மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்: மன்னர் தன் நகருக்குள் வந்த பொழுது அந்நகரம் முத்துக்களாலும், மலர்களாலும், வாயில்கள் பொன்னாலும், அழகிய துணிமணிகளாலும் அலங்கரிக்கப்பட்டு நகரமெங்கும் தூப தீபங்களினால் நறுமணம் நிரம்பி இருந்தது.
பதம் 4.21.2
சந்தனாகுரு-தோயார்த்ர ரத்யா-சத்வர-மார்கவத்
புஷ்பாக்ஷத-பலைஸ் தோக்மைர் லாஜைர் அர்ச்சிர்பிர் அர்ச்சிதம்
சந்தன—சந்தனம்; அகுரு—ஒருவகையான வாசனை மூலிகை; தோய—தண்ணீருடன்; ஆர்த்ர—தெளித்ததுடன்; ரத்யா—ரதவீதி; சத்வர—சத்திரங்கள்; மார்க்கம்—சந்துகள்; புஷ்ப—மலர்கள்; அக்ஷத—உடையாத; பலை:—பழங்களினால்; தோக்மை:—கனிப்பொருள்கள்; லாஜை:—நனைந்த தானியங்கள்; அர்ச்சிற்பி—விளக்குகளினால்; அர்ச்:-சிதம்—அலங்கரிக்கப்பட்டு.
அகுரு என்னும் மூலிகையிலிருந்து எடுத்த வாசனை திரவியமும், சந்தனமும் கலந்த பன்னீர் ரதவீதிகள், சந்துகள், சிறு நந்தவனங்கள் போன்று நகரின் எல்லா இடங்களிலும் தெளிக்கப்பட்டிருந்தன. அதோடு எங்கும், உரிக்காத பழங்களாலும், மலர்களினாலும், நனைந்த தானியங்களினாலும் பல்வேறு வகைக்கனிமப் பொருள்களினாலும் தீபங்களினாலும் இதுபோன்று மங்களப் பொருள்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பதம் 4.21.3
ஸவ்ருந்தை: கதலீ-ஸ்தம்பை: பூக-போதை: பரிஷ்க்ருதம்
தரு-பல்லவ-மாலாபி: ஸர்வத: ஸமலங்க்ருதம்
ஸ-வ்ருந்தை:—கனி மற்றும் மலர்களுடன்; கதலீ-ஸ்தம்-பை:—வாழை மரங்களினால்; பூக-போதை:—விலங்குகளின் கன்றுகளும், யானைகளின் ஊர்வலமும்; பரிஷ்க்ருதம்—மிகவும் அழகாக தூய்மை செய்யப்பட்டு; தரு—செடிகளினால்; பல்லவ—மாவிலைகளினால்; மாலாபி:—மாலைகளினால்; ஸர்வத:—எங்கெங்கும்; ஸமலங்க்ருதம்—அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தெருக்களின் நான்முனை சந்துகளில் பழக்குலைகளும், மலர்களும், வாழைமரங்களும், பாக்குமரக்கிளைகளும், நிறைந்திருந்தன. இவைகளெல்லாம் சேர்த்து செய்யப்பட்ட அலங்காரங்கள் எங்கெங்கும் நிறைந்து காண்போர் கண்களைக் கவர்ந்தன.
பதம் 4.21.4
ப்ரஜாஸ் தம் தீப-பலிபி: ஸம்ப்ருதாஸேஷ—மங்கலை:
அபீயுர் ம்ருஷ்ட-கன்யாஸ்ச ம்ருஷ்ட-குண்டல-மண்டிதா:
ப்ரஜா:—குடிமக்கள்; தம்—அவருக்கு; தீப-பலிபி:—விளக்குகளுடன்; ஸம்ப்ருத—அணிந்து கொண்டு; அஸேஷ—அளவற்ற; மங்கலை:—மங்களப்பொருட்கள்; அபீயு:—வரவேற்க முன் வந்தனர்; ம்ருஷ்ட—ஒளிவீசும் அழகிய அங்கம் கொண்ட; கன்யா: ச—இளமங்கையரும்; ம்ருஷ்ட—மோதுகின்ற; குண்டல—குண்டலங்கள்; மண்டிதா:—அணி செய்யப்பட்டிருக்கின்ற.
மன்னர் தனது நகரின் வாயிலில் நுழையும் பொழுது குடிமக்கள் எல்லோரும் மங்களப் பொருட்களை, தீபங்கள், மலர்கள் மற்றும் இனிய தயிர்ப் பண்ணியங்கள் இவற்றைத் தத்தம் கைகளில் வைத்துக்கொண்டு வரவேற்றனர். அரசர் மேலும், அங்கம் முழுதும் தங்கமும் வைரமும் கொண்டு பூட்டிய அணிகளோடு குறிப்பாக அவர்கள் காதுகளில் ஆடும் குண்டலங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள வந்த மணமாகாத இள நங்கையாளர்களாலும் வரவேற்கப்பட்டார்.
பதம் 4.21.5
ஸங்க-துந்துபி-கோஷேண ப்ரஹ்ம-கோஷேண சர்த்விஜாம்
விவேஸ பவனம் வீர: ஸ்தூயமானோ கத-ஸ்மய:
ஸங்க—சங்குகள்; துந்துபி—துந்துபிகள்; கோஷேண—ஒலியினால்; ப்ரஹ்ம—வேதம்; கோஷேண—ஓதும் ஒலி; ச—மேலும்; ருத்விஜாம்—குருக்களின்; விவேஷ—நுழைந்தார்; பவனம்—அரண்மனை; வீர:—அரசர்; ஸ்தூயமான:—வணங்கப்பட்டு; கத-ஸ்மய:—கர்வமின்றி.
அரசர் தன் அரண்மனைக்குள் நுழைந்த பொழுது சங்குகளும், துந்துபிகளும் முழங்கின. புரோகிதர்கள் வேத மந்திரங்களை முழங்கினர், புரோகிதர்கள் பல்வேறு வகைப் பிரார்த்தனைகள் செய்தனர். தன்னை வரவேற்க இத்துணை நிகழ்ச்சிகள் நடந்தும் அவைகளினால் அரசர் துளியளவு கூட பாதிக்கப்படவில்லை.
பதம் 4.21.6
பூஜித: பூஜயாம் ஆஸ தத்ர தத்ர மஹா-யஸா:
பௌராஞ் ஜானபதாம்ஸ் தாம்ஸ் தான் ப்ரீத: ப்ரிய-வர-ப்ரத:
பூஜித:—வணங்கப்படுகின்ற; பூஜயாம் ஆஸ—வந்தனத்தை தெரிவித்து; தத்ர தத்ர—இங்குமங்கும்; மஹா-யஸா:—உயர்ந்த செயலின் பின்புலமாக; பௌரான்—நகரின் உயர்ந்த மனிதர்கள்; ஜான-பதன்—பொது மக்கள்; தான்தான்—இவ்வழியில்; ப்ரீத:—திருப்தியுற்றனர்; ப்ரிய-வர-ப்ரத:—எல்லா வரங்களையும் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்.
உயர்ந்த குடிமக்களும், சாதாரண குடிமக்களும் அரசனைத் தங்கள் இதயபூர்வமாக வரவேற்றனர். அரசரும் அவர்களுக்கு அவர்கள் விரும்பிய ஆசிகளை வழங்கினார்.
பதம் 4.21.7
ஸ ஏவம் ஆதீனி அவைத்ய சேஷ்டித:
கர்மாணி பூயாம்ஸி மஹான் மஹத்தம:
குர்வன் ஸஸாஸாவனி-மண்டலம் யஸ:
ஸ்பீதம் நிதாயகுருஹே பரம்பதம்
ஸ—பிருது மன்னர்; ஏவம்—இவ்வாறு; ஆதீனி—ஆரம்பத்திலிருந்தே; அவைத்ய—பெருந்தன்மை; சேஷ்டித:—எல்லா விதமான கடமைகளையும் செய்து; கர்மாணி—கடமை; பூயாம்ஸி—திரும்பத் திரும்ப; மஹான்—உயர்ந்த; மஹத்-தம:—உயர்ந்தோரிலும் உயர்ந்தவர்; குர்வன்—செய்து கொண்டு; ஸஸாஸ—ஆண்டார்; அவனி-மண்டலம்—பூமி முழுவதையும்; யஸ:—பெருமை; ஸ்பீதம்—பரவியது; நிதாய—எய்திக்கொண்டு; ஆருருஹே—உயர்ந்தார்; பரம்பதம்—பரமாத்மாவின் திருவடித் தாமரைகளை அடைந்தார்.
பிருது மன்னர் உயர்ந்த ஆத்மாக்களுக்கெல்லாம் உயர்ந்தவர் ஆவார். ஆகையினால் எல்லோராலும் வணங்கப்பட்டார். இப்பூமண்டலத்தை அவர் ஆளும்போது செயற்கரிய செயல்கள் பலவற்றை அவர் செய்தாலும் எப்போதும் பெருந்தன்மை உடையவராகவே விளங்கினார். அவர் எய்திய வெற்றிகளும், பெருமைகளும் இப்பிரபஞ்சம் முழுவதும் பரவியது அதன்பின்னர் இறுதியில் அவர் முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகளை அடைந்தார்.
பதம் 4.21.8
ஸுத உவாச
தத் ஆதி-ராஜஸ்ய யஸோ விஜ்ரும்பிதம்
குணைர் அஸேஷைர் குணவத்-ஸபாஜிதம்
க்ஷத்தா மஹா பாகவத: ஸதஸ்பதே
கௌஷாரவிம் ப்ராஹ க்ருணந்தம் அர்ச்சயன்
ஸுத: உவாச—ஸுத கோஸ்வாமி கூறினார்; தத்—அந்த; ஆதி-ராஜஸ்ய—உண்மையான அரசன்; யஸ:—கௌரவம்; விஜ்ரும்பிதம்—மிகவும் தகுதிவாய்ந்த; குணை:—குணங்களினால்; அஸேஷை—அளவற்ற; குண-வத்—தகுந்த முறையில்; ஸ்பாஜிதம்—புகழ்கின்ற; க்ஷத்தா—விதுரர்; மஹா-பாகவத:—உயர்ந்த தெய்வீக பக்தர்; ஸத:—பதே—உயர்ந்த முனிவர்களின் தலைவர்; கௌஷாரவிம்—மைத்ரேயருக்கு; ப்ராஹ—கூறினார்; க்ருணந்தம்—பேசிக்கொண்டு; அர்ச்சயன்—மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணித்தார்.
ஸுத கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ஓ, ஸௌனகரே, உயர்ந்த முனிவர்களின் தலைவரே, மைத்ரேய முனிவர் விதுரரிடம் உண்மையான அரசரும், முழுமையான தகுதி பெற்றவரும், பெருமைமிக்கவரும் உலகம் முழுவதும் புகழப்பட்டவருமான பிருது மகாராஜாவின் பல்வேறு செயல்களைப் பற்றிக் கூறியவுடன் சிறந்த பக்தரான விதுரர் மிகவும் பணிவுடன் மைத்ரேய முனிவரைப் பிரார்த்தித்து கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்கலானார்.
பதம் 4.21.9
விதுர உவாச
ஸோ ‘பிஷிக்த: ப்ருதுர் விப்ரைர் லப்தாஸேஷ-ஸுரார் ஹன:
பிப்ரத் ஸ வைஷ்ணவம் தேஜோ பாஹ்வோர் யாப்யாம் துதோஹ காம்
விதுர: உவாச—விதுரர் கூறினார்; ஸ:—அவர் (பிருதுமன்னர்); அபிஷிக்த:—அரியணையில் அமர்ந்தபின்; ப்ருது:—பிருதுமன்னர்; விப்தை:—மகாமுனிவர்களாலும் அந்தணர்களாலும்; லப்த—அடைந்தார்; அஸேஷ—கணக்கிலடங்காத; ஸுர-அர்ஹண:—தேவர்களின் அன்பளிப்புகள்; பிப்ரத்—விரிவடைந்து; ஸ:—அவர்; வைஷ்ணவம்—பகவான் விஷ்ணுவின் மூலம் பெற்றுக் கொண்ட; தேஜ:—வலிமை; பாஹ்வோ:—கரங்கள்; யாப்யாம்—அதனால்; ததோஹ—பயன்படுத்தி; காம்—பூமி.
விதுரர் கூறினார்: எனது அன்பிற்குரிய அந்தணர் மைத்ரேயரே, மகாமுனிவர்களினாலும் அந்தணர்களாலும் பிருது மன்னர் அரியணையில் அமர்த்தப்பட்டதை நினைக்கும்பொழுது புத்தி மேன்மையடைகிறது. தேவர்கள் எல்லோரும் அவருக்கு அளித்த கணக்கிலடங்காத பரிசுகளோடு, பகவான் விஷ்ணுவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அவர் பெற்ற ஆற்றலினையும் சேர்த்து அவர்தன் செல்வாக்கினைப் பெருக்கிக் கொண்டார். இவ்வாறு அவர் இப்பூமியினை செழிக்கச் செய்தார்.
பதம் 4.21.10
கோ நுவ அஸ்ய கீர்திம் ந ஸ்ருணோதி அபிஜ்ஞோ
யத்-விக்ரமோச்சிஷ்டம் அஸேஷ-பூபா:
லோக: ஸ-பாலா உபஜீவந்தி காமம்
அத்யாபி தன் மே வத கர்ம ஸுத்தம்
க:—அவர்; நு—ஆனால்; அஸ்ய—பிருது மன்னர்; கீர்திம்—பெருமைமிக்க செயல்கள்; நஸ்ருணோதி—கேட்கவில்லை; அபிஷ்ஞா:—புத்திசாலித்தனம்; யத்—அவரது; விக்ரம—வீரப் பண்புகள்; உச்சிஷ்டம்—மிச்சம்; அஸேஷ—எண்ணிலடங்காது; பூபா:—அரசர்கள்; லோகா:—உலகங்கள்; ஸ-பாலா:—தேவர்களுடன்; உபஜீவந்தி—பிழைப்பை நடத்துவதற்கு; காமம்—விரும்பிய பொருள்கள்; அத்ய அபி—அதுவரை; தத்—அந்த; மே—எனக்கு; வத—அருள்கூர்ந்து கூறுங்கள்; கர்ம—செயல்கள்; ஸுத்தம்—மங்களமானவை.
பிருது மகாராஜா தன் செயல்களினால் உயர்ந்தவராக விளங்கியதோடு, பெருந்தன்மை மிக்க முறையில் அவர் ஆட்சி செலுத்திய விதமும் எல்லா அரசர்களாலும், வெவ்வேறு உலகத்தைச் சேர்ந்த தேவர்களாலும் இன்றும் பின்பற்றப்படுகின்றன. அப்படி அவர் பெருமைகளைப் பற்றிக் கேட்க முயலாதவன் எங்கே இருக்கக் கூடும்? நானும் பிருது மகாராஜாவைப் பற்றி மேலும் மேலும் கேட்க விழைகின்றேன். ஏனென்றால் அவையெல்லாம் புனித மிக்கவையும், மங்களகரமானவையும் ஆகும்.
பதம் 4.21.11
மைத்ரேய உவாச
கங்கா-யமுனயோர் நத்யோர் அந்தரா க்ஷேத்ரம் ஆவஸன்
ஆரப்தான் ஏவ புபுஜே போகான் புண்ய-ஜிஹாஸயா
மைத்ரேய: உவாச—மகாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; கங்கா:—கங்கா நதி; யமுனயோ:—யமுனை நதியின்; நத்யோ:—இரண்டு நதிகளின்; அந்த்ரா—நடுவில்; க்ஷேத்ரம்—இடம்; ஆவஸன்—அங்கே வாழ்கின்ற; ஆரப்தான்—சேர்கின்ற இடம்; ஏவ—போல; புபுஜே—மகிழ்ந்தார்; போகான்—அதிர்ஷ்டம்; புண்ய—புனிதச் செயல்கள்; ஜிஹாஸயா—குறைகின்ற நோக்கத்தில்.
மகாமுனிவர் மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்: எனது அன்பார்ந்த விதுரனே, மகாராஜா பிருது, கங்கை, யமுனை என்ற இரு நதிகளுக்கும் இடையே இருந்த நிலப்பகுதியில் வாழ்ந்தார். எல்லாவித செல்வ வளங்களும் பெற்ற அவர் தனது கடந்த காலத்தில் செய்த புண்ணியச் செயலின் பலன்களைக் குறைப்பதற்காகத் தமது நல்லதிர்ஷ்டத்தை அனுபவிப்பது போல் தோன்றியது.
பதம் 4.21.12
ஸர்வத்ராஸ் கலிதாதேஷ: ஸப்த-த்வீனபக-தண்ட-த்ருக்
அன்யத்ர ப்ராஹ்மண-குலாத் அன்யத்ராச்யுத-கோக்ரத:
ஸர்வத்ர—எங்கும்; அஸ்கலித—மாற்றமுடியாத; ஸப்த- த்வீப—ஏழு தீவுகள்; ஏக—ஒன்று; தண்ட-த்ருக்—செங்கோல்; அன்யத்ர—தவிர; ப்ராஹ்மண-குலாத்—அந்தணர்களும், மகான்களும்; அன்யத்ர—தவிர; அச்யுத-கோத்ரத:—முழுமுதற் கடவுளின் சந்ததியினர் (வைணவர்கள்).
மகாராஜா பிருது ஓர் ஈடு இணையற்ற மன்னர் ஆவார். பூமிப்பந்தின் ஏழு தீவுகளையும் ஆள்வதற்கான செங்கோல் அவரிடம் இருந்தது. மகான்களும், அந்தணர்களும் முழுமுதற் கடவுளின் சந்ததியினரான வைணவர்களையும் தவிர, மாற்றுதற்குரிய அவரது கட்டளைகளை யாரும் மீற முடியாது.
பதம் 4.21.13
ஏகதாஸீன் மஹா-ஸத்ர-தீக்ஷா தத்ர திவௌகஸாம்
ஸமாஜோ ப்ரஹ்மருஷீணாம் ச ராஜருஷீணாம் ச ஸத்தம
ஏகதா—முன்னொரு காலத்தில்; ஆஸீத்—சபதம் செய்தார்; மஹா-ஸத்ர—பெரிய வேள்வி; தீக்ஷா—தீட்சை; தத்ர—அந்த விழாவில்; திவ-ஓகஸாம்—தேவர்களின்; ஸமாஜ:—கூட்டத்தில்; ப்ரஹ்ம-ருஷீணாம்—உயர்ந்த அந்தண மகான்கள்; ச—மேலும்; ராஜ-ருஷீணாம்—ராஜரிஷிகள்; ச—மேலும்; ஸத்-தம—சிறந்த பக்தர்கள்.
ஒரு காலத்தில் பிருத மன்னர் மிகப் பெரிய வேள்வி ஒன்றினைச் செய்தார். அதில் வெவ்வேறு உலகத்தைச் சேர்ந்த தேவர்கள் மகாமுனிவர்கள், அந்தணர்கள் மற்றும் சிறந்த அரசர்கள் என்னும் ராஜ ரிஷிகள் எல்லோரும் குழுமி இருந்தனர்.
பதம் 4.21.14
தஸ்மின்ன் அர்ஹத்ஸு ஸர்வேஷு ஸ்வ-அர்ச்சிதேஷு யதார்ஹத:
உத்தித: ஸதஸோ மத்யே தாராணாம் உடுராட் இவ
தஸ்மின்—அப்பெரிய கூட்டத்தில்; அர்ஹத்ஸீ—வணங்கத்தக்க பெரியவர்கள்; ஸர்வேஷீ—எல்லோரும்; ஸீ-அர்ச்சிதேஷு—அவரவர்க்கு உரிய முறையில் வணங்கப்பட்டனர்; யதா-அர்ஹத:—அவர்கள் அதற்குரியவர்கள்; உத்தித:—எழுந்துநின்று; ஸதஸ:—கூடியிருந்தவர்கள் மத்தியில்; மத்யே—நடுநாயகமாக; தாராணாம்—விண்மீன்கள்; உடு-ராட்—நிலவு; இவ—போல.
அப்பெரிய கூட்டத்தில் இருந்த பெரியவர்களை பிருது மகாராஜா அவரவர்க்கு உரியமுறையில் முதற்கண் வணங்கினார். அதன்பிறகு அவர் விண்மீன் கூட்டங்களுக்கிடையே வெண்ணிலவு எழுந்தாற் போல் அக்கூட்டத்தின் நடுவே எழுந்து நின்றார்.
பதம் 4.21.15
ப்ராம்ஸீ: பீனாயத-புஜோ கௌர: காஞ்ஜாருணேக்ஷண:
ஸீனாஸ: ஸீமுக: ஸௌம்ய: பீனாம்ஸ: ஸீத்விஜ-ஸ்மித:
ப்ராம்ஸீ:—நெடிதுயர்ந்தவர்; பீனா-ஆயுத—அகன்று நிறைவாக; புஜ:—புஜங்கள்; கௌர:—அழகான தோற்றமுடையவர்; காஞ்ஜ—தாமரைபோன்ற; அருண-ஈக்ஷண:——காலை இளஞ்சூரியனைப் போன்று ஒளிமிக்கக் கண்கள்; ஸீ-நாஸ:—கூர்மையான நாசி; ஸீமுக:—களையான முகம்; ஸெளம்ய:—வலிமையான உடல் அமைப்பு; பீன-அம்ஸ:—உயர்ந்த தோள்கள்; ஸீ—எழிலான; த்விஜ—பற்கள்; ஸ்மித:—புன்னகை.
பிருது மன்னரின் உடல் உயர்ந்தும், கட்டுறுதி வாய்ந்தும், கம்பீரமாகவும் இருந்தது. அவர் கரங்கள் நீண்டு அகன்று உறுதியாகவும், கண்கள் எழுஞாயிறு போல் ஒளிமிக்கனவாகவும் இருந்தன. அவர் மூக்கு கூர்மையாகவும் முகம் எழில் நிறைந்தும் அவரது தோற்றம் பொலிவு மிக்கதாகவும் இருந்தது புன்னகைக்கும் போது தெரியும் பற்கள் சீராக அமைந்திருந்தன.
பதம் 4.21.16
வ்யூட-வக்ஷா ப்ருஹச்-ச்ரோணிர் வலி-வல்கு-தலோதர:
ஆவர்த-நாபிர் ஓஜஸ்வீ காஞ்சனோருர் உதக்ர பாத்
வ்யூட—அகன்று; வக்ஷ:—மார்பு; ப்ருஹத்-ஸ்ரோணி:—உறுதியான இடுப்பு; வலி—கோடுகள்; வல்கு—மிகவும் அழகான; தல—ஆலிலை போல்; உதர:—வயிறு; ஆவர்த—சுழி; நாபி:—தொப்புள்; ஒஜஸ்வீ—பளபளப்பான; காஞ்சன—பொன்னிற; உரு:—தொடைகள்; உதக்ர-பாத்—வளைந்த முன்பாதம்.
பிருது மகாராஜாவின் மார்பு அகன்றும், இடுப்பு உறுதியுடையதாகவும், வயிற்றின் மீதுள்ள கோடுகள் ஆலமரத்தின் இலையினைப் போன்றும் இருந்தது. அவரது தொப்புள் சுழித்தும், ஆழமாகவும், தொடைகள் பொன்நிறமாகவும், மேல்பாதங்களின் முன்பகுதி வளைந்துமிருந்தது.
பதம் 4.21.17
ஸீக்ஷ்ம-வக்ராஸித-ஸ்னிக்க-மூர்தஜ: கம்பு-கந்தர:
மஹா-தனே துகூலாக்ருயே பரிதாயோபவீய ச
ஸீக்ஷ்ம—மிகவும் மெல்லிய; வக்ர—சுருண்ட; அஸித—கருமையான; ஸ்னித்த—சீராக; மூர்தஜ:—தலைமுடி; கம்பு—சங்கு போல்; கந்தர:—கழுத்து; மஹா-தனே—மதிப்புயர்ந்த; துக்ஷல-அக்ருயே—வேட்டி அணிந்து; பரிதாய—உடலின் மேற்பகுதி; உபலீய—பூணூல் போட்டாற் போல்; ச—மேலும்.
அவரது தலைமுடி கரிய வண்ணத்தில், சுருண்டு, சீராகவும், கழுத்து வெண் சங்கினைப்போல் மங்களகரமான வரிகள் கொண்டும் இருந்தது. விலை உயர்ந்த அரைக்கச்சை உடுத்தி தனது உடலின் மேல் பகுதியினை மெல்லிய துணியினால் அவர் போர்த்தி இருந்தார்.
பதம் 4.21.18
வியன்ஜிதாஸேஷ-காத்ர-ஸ்ரீர் நியமே ந்யஸ்த-பூஷண:
க்ருஸ்ணாஜின-தர: ஸ்ரீமான் குஸ-பாணி: க்ருதோசித:
வியன்ஜித—குறிக்கின்ற; அஸேஷ—எண்ணிலடங்காத; காத்ர—உடலினால்; ஸ்ரீ:—அழகு; நியமே—நியமமாக, முறையாக; ந்யஸ்த—விட்டுவிடுதல்; பூஷண:—ஆடைகள்; க்ருஷ்ண—கருமை; அஜின—தோல்; தர:—மேலே வைக்கின்ற; ஸ்ரீமான்—அழகான; குஸ-பாணி:—தர்ப்பைப் புல்லினால் செய்த பௌத்திரம்; க்ருத—செய்தார்; உச்சித:—தேவைக்கேற்றவாறு.
வேள்வியைச் செய்வதற்கு பிருது மகாராஜா தீட்சை பெற்றவுடன் தனது உயர்ந்த ஆடை அணிகலன்களைக் கழற்றி தனியே வைத்தவுடன் அவர் உடல் வண்ணம் பார்வைக்குத் தெரிந்தது. கறுப்புமான் தோலின் இயற்கை மீது அவர் அமர்ந்து கொண்டு தனது விரல்களில் தர்ப்பைப் புல்லினால் ஆன பௌத்திரத்தை அணிந்து கொண்டது அவரது இயற்கை அழகினை மேலும் அதிகரித்தது. பார்ப்பவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. வேள்வியைத் தொடங்குவதற்கு முன்பாக என்னென்ன விதிமுறைகள் உள்ளனவோ அவை எல்லாவற்றையும் அவர் முறையாக நிறைவேற்றினார்.
பதம் 4.21.19
ஸிஸிர-ஸ்னித்த-தாராக்ஷ: ஸமைக்ஷத ஸமந்தத:
ஊசிவான் இதம் உர்வீஸ: ஸத: ஸம்ஹர்ஷ்யன்ன் இவ
ஸிஸிர—பனித்துளி; ஸ்னித்த—ஈரமான; அக்ஷ:—கண்கள்; ஸமைக்ஷத—பார்வை; ஸமந்தத:—எல்லாபக்கமும்; ஊசிவான்—பேசத் துவங்கினார்; இதம்—இந்த; உர்வீஸ:—மிகவும் உயர்ந்த நிலையில்; ஸத:—கூட்டத்திலுள்ள உறுப்பினர்களின் நடுவே; ஸம்ஹர்ஷயன்—மகிழ்ச்சியை அதிகரித்து; இவ—போல.
கூடியிருந்த அனைவரின் மகிழ்ச்சியையும் அதிகரித்து அவர்களை உற்சாகப்படுத்துவது போல் அவர்கள் எல்லோரையும் விண்மீன்களின் மேல் வெண்பனித்துளிகள் சிதறி இருக்கின்றாற்போல் ஒளிரும் தன் இரு விழிகளினால் ஒரு முறை மேலோட்டமாகப் பார்த்தார். பிறகு அவர் தனது உற்சாகமான குரலினால் அவர்களிடம் பேசத் துவங்கினார்.
பதம் 4.21.20
சாரு சித்ர-பதம் ஸ்லக்ஷ்ணம் ம்ருஷ்டம் கூடம் அவிக்லவம்
ஸர்வேஷாம் உபகாரார்த்தம் ததா அனுவதன்ன் இவ
சாரு—அழகிய; சித்ர—மென்மையான; ஸ்லக்ஷ்ணம்—மிகத் தெளிவான; ம்ருஷ்டம்—மிகச்சிறந்த; கூடம்—அர்த்தம் நிறைந்த; அவிக்லவம்—ஐயம் ஏதுமின்றி; ஸர்வேஷாம்—எல்லோருக்கும்; உபகார-அர்த்தம்—அவர்கள் நன்மை பெறுவதற்கு; ததா—அச்சமயம்; அனுவதன்—மீண்டும் கூறத் தொடங்கினார்; இவ—போன்று.
மகாராஜா பிருது ஆற்றிய உரை முழுவதும் உருவகம் போன்ற சொல்லணிகள் நிறைந்ததாகவும், தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், கேட்பதற்கு இனிமை பயப்பதாகவும் இருந்தது. அங்கிருந்த அனைவரும் நன்மை பெற வேண்டும் என்பதற்காக, முழுமெய்ப் பொருளை உணர்ந்த தமது அனுபவத்தை அவர் எடுத்துரைப்பது போல் தோன்றியது.
பதம் 4.21.21
ராஜோவாச
ஸப்யா: ஸ்ருணுத பத்ரம் வ: ஸாதவோ ய இஹாகதா:
ஸத்ஸீ ஜிஜ்ஞாஸீபிர் தர்மம் ஆவேத்யம் ஸ்வ-மனீஷிதம்
ராஜ உவாச—அரசர் பேசத் தொடங்கினார்; ஸப்யா:—சகோதர சகோதரிகளே என்று விளித்தல்; ஸ்ருணுத—அன்பு கொண்டு கேட்பீராக; பத்ரம்—நல்லதிர்ஷ்டம்; வ:—உங்கள்; ஸாதவ:—எல்லா மகாத்மாக்களும்; யே—எவர்கள்; இஹ—இங்கே; ஆகாதா:—இருக்கின்ற; ஸத்ஸீ—மேன்மை மிக்கவர்கள்; ஜிஜ்ஞாஸீபி:—அறியும் ஆர்வமிக்கவர்; தர்மம்—சமய அறநெறிகள்; ஆவேத்யம்—தெரிவிக்க வேண்டும்; ஸ்வமணீஷிதம்—சிலரால் முடித்து வைக்கப்படும்.
பிருது மன்னர் கூறினார்: கூட்டத்தில் இருக்கின்ற உயர்ந்த பெரியோர்களே! உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாவதாகுக. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்ற மகாத்மாக்களே! எனது பிரார்த்தனையை அருள் கூர்ந்து கேட்பீராக உண்மையாகவே ஒருவன் அறிந்து கொள்ளும் ஆவல் மிக்கவனாக இருந்தால் அவன் தனது எண்ணத்தினை உங்களைப் போன்ற உயர்ந்த ஆத்மாக்களின் முன்னேதான் முதலில் எடுத்துரைப்பான்.
பதம் 4.21.22
அஹம் தண்ட-தரோ ராஜா ப்ரஜானாம் இஹ யோஜித:
ரக்ஷிதா வ்ருத்தித: ஸ்வேஷீ ஸேதுஷீ ஸ்தாபிதா ப்ருதக்
அஹம்—நான்; தண்ட-தர:—செங்கோலை ஏந்தியிருப்பவர்; ராஜா—அரசர்; ப்ரஜானாம்—குடிமக்களின்; இஹ—இந்த உலகில்; யோஜித:—ஈடுபட்ட; ரக்ஷிதா—பாதுகாப்பவர்; வ்ருத்தி த:—எஜமானன்; ஸ்வேஷீ—தங்கள் சொந்தமாக; ஸேதுஷீ—குலதர்மங்களின்படி; ஸ்தாபிதா—நிறுவப்பட்டது; ப்ருதக்—வேறுவேறாக.
பிருது மன்னர் தொடர்ந்து கூறினார்: பரமபுருஷ பகவானது கருணையினால் நான் இப்பூமண்டலத்தின் மன்னனாக்கப்பட்டு அதற்குரிய செங்கோலை, மக்களின் மீது ஆட்சி செலுத்துவதற்காக ஏற்றிருக்கின்றேன். அவர்களை ஆபத்துக்களிலிருந்து காத்து வேதங்களின் விதிமுறைகளின்படி நிறுவப்பட்ட அவரவர் குலதர்மங்களுக்குரிய தொழில்களில் அவர்களை ஈடுபடவும் வைத்திருக்கின்றேன்.
பதம் 4.21.23
தஸ்ய மே தத்-அநுஷ்டானாத் யான் ஆஹீர் ப்ரஹ்ம-வாதின:
லோக: ஸ்யு: காம-ஸந்தோஹா யஸ்ய துஷ்யதி திஷ்ட-த்ருக்
தஸ்ய—அவருடைய; மே—என்னுடைய; தத்—அந்த; அநுஷ்டானாத்—செயல்படுத்துவதினால்; யான்—எவை; ஆஹீ:—பேசப்படுகிற; ப்ரஹ்ம-வாதின:—வேதஞானங்களில் சிறந்த பெரியோர்; லோகா:—உலகங்கள்; ஸ்யு:—ஆகின்றன; காம-ஸந்தோஹா:—தனக்கு விருப்பமான எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கின்ற; யஸ்ய—எவருடைய; துஷ்யதி—நிறைவடைகிறார்; திஷ்ட-த்ருக்—நடைபெறப் போகின்ற எல்லாவற்றையும் நன்கறிந்தவர்;
மகாராஜா பிருது கூறினார்: ஓர் அரசனாக இருந்து கொண்டு நான் நிறைவேற்றுகின்ற கடமைகளின் மூலம், வேதங்களில் ஞானமிக்கப் பெரியோர்கள் குறிப்பிடுகின்ற விரும்பத்தகும் லட்சியங்களை என்னால் அடையக்கூடும் என நான் நினைக்கின்றேன். எல்லா நிகழ்வுகளையும் பார்க்கின்ற முழுமுதற் கடவுளின் கருணையினால் இந்த இலக்கினை என்னால் நிச்சயம் அடையமுடியும்.
பதம் 4.21.24
ய உத்தரேத் கரம் ராஜா ப்ரஜா தர்மேஷ்வ அஸிக்ஷயன்
ப்ரஜானாம் ஸமலம் புங்க்தே பகம் ச ஸ்வம் ஜஹாதிஸ:
ய—யாரேனும் ஒருவர் (அரசர் அல்லது ஆளுநர்); உத்தரேத்—விதித்தல்; கரம்—வரிகள்; ராஜா—அரசர்; ப்ரஜா:—குடிமக்கள்; தர்மேஷீ—தங்களுக்குரிய கடமைகளைச் செயல்படுத்தும்போது; அஸிக்ஷயன்—எவ்வாறு தங்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவது என்று கற்பிக்கவில்லை என்றால்; ப்ரஜானாம்—குடிமக்களின்; ஸமலம்—தீமையான; புங்க்தே—மகிழ்வான்; பகம்—அதிர்ஷ்டத்தை; ச—மேலும்; ஸ்வம்—சொந்தம்; ஜஹாதி—இழக்கிறான்; ஸ:—அந்த மன்னன்.
எந்த ஒரு மன்னன் தன் குடிமக்களுக்கு அவர்களுக்குரிய கடமைகள் என்று வர்ணாசிரம தர்மம் குறிப்பிட்டுள்ளவைகளைப் பற்றிக் கற்றுக் கொடுக்காது சுங்கத்தீர்வைகளையும், வரிகளையும் மட்டும் அவர்களிடம் இருந்து வசூலித்துக் கொண்டிருக்கின்றானோ அவன் குடிமக்களின் பழிபாவச் செயல்களின் பலன்களையும் அனுபவிக்க வேண்டிய பொறுப்பினை ஏற்க வேண்டியதிருக்கும். இக்கீழ்நிலைக்கும் மேலாக அவன் தன் அதிர்ஷ்டத்தையும் இழந்தவனாகிறான்.
பதம் 4.21.25
தத் ப்ரஜா பர்த்ரு-பிண்டார்த்தம் ஸ்வார்த்தம் ஏவானஸீயவ:
குருதா தோக்ஷஜ-தியஸ் தர்ஹி மே ‘னுக்ரஹ: க்ருத:
தத்—ஆகையினால்; ப்ரஜா:—எனது அன்பிற்குரிய குடிமக்களே; பர்த்ரு—குருவின்; பிண்ட அர்த்தம்—இறப்பிற்குப் பின்னும் நலம்பெற; ஸ்வ-அர்த்தம்—சொந்த நன்மைக்காக; ஏவ—உறுதியாக; அனஸீயவ:—எவ்வித பொறாமையுமின்றி; குருத—சற்றுச் செய்வீர்; அதோக்ஷஜ—முழுமுதற் கடவுள்; திய:—அவரை நினைவில் கொண்டு; தர்ஹி—ஆகையினால்; மே—எனக்கு; அனுக்ரஹ:—கருணை; க்ருத:—காட்டுவீராக.
பிருத மகாராஜா தொடர்ந்து கூறினார்: ஆகையினால் எனது அன்பான குடிமக்களே, மரணத்திற்குப்பின் உங்கள் மன்னர் நலம்பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் வர்ணாஸ்ரம தர்மத்தில் உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேற்றவும் எப்போதும் உங்கள் மனதில் முழுமுதற் கடவுளையே சிந்தித்துக்கொண்டும் இருத்தல் வேண்டும். அவ்வாறு செய்வதினால் நீங்கள் நன்மை அடைவீர்கள். மரணத்திற்குப் பின்பு உங்கள் மன்னர் நன்மை அடையும் பொருட்டு அவருக்கு நீங்கள் ஆசிகள் அருள்வீராக.
பதம் 4.21.26
யூயம் தத் அதுமோதத்வம் பித்ரு-தேவர்ஷயோ ‘மலா:
கர்து: ஸாஸ்துர் அனுஜ்ஞாதுஸ் துல்யம் யத் ப்ரேத்ய தத் பலம்
யூயம்—இங்கிருக்கும் மரியாதைக்குரிய எல்லோரும்; தத்—அந்த; அநுமோதத்வம்—எனது கோரிக்கையினை அன்புடன் அங்கீரிக்க வேண்டும்; பித்ரு—பித்ருலோகத்தைச் சேர்ந்தவர்கள்; தேவ—தேவ லோகத்தைச் சேர்ந்தவர்கள்; ருஷய:—மகாமுனிவர்கள் மற்றும் தெய்வீக அருளாளர்கள்; அமலா:—பாபச் செயல்கள் நீங்கப் பெற்று பரிசுத்தம் அடைந்தவர்கள்; கர்து:—நிறைவேற்றுபவர்; ஸாஸ்து:—ஆணை இடுபவர்; அனுஜ்ஞாது:—ஆதரவு தருவோர்; துவ்யம்—சமமாக; யத்—எது; ப்ரேத்ய—மரணத்திற்குப் பின்; தத்—அந்த; பலம்—விளைவு.
மனத்தூய்மையுடைய தேவர்களையும், முன்னோர்களையும், தெய்வீக அருளாளர்களையும், மரணத்திற்குப் பின் ஒரு செயலின் பலனானது அதைச் செய்தவனாலும், செய்யத் தூண்டியவனாலும் அதற்கு ஆதரவு அளித்தோராலும் ஒரு சமமாகப் பங்கிட்டுக் கொள்ளப்படுவதினால். எனது கோரிக்கையினை நீங்கள் எல்லோரும் அருள் கூர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பதம் 4.21.27
அஸ்தி யஜ்ஞ-பதிர் நாம கேஷாஞ்சித் அர்ஹ-ஸத்தமா:
இஹாமுத்ர ச லக்ஷ்யந்தே ஜ்யோத்ஸ்னாவத்ய: க்வசித் புவ:
அஸ்தி—நிச்சயம் இருக்க வேண்டும்; யஜ்ஞா-பதி:—வேள்விகளின் நாயகர்; நாம்—நாமத்தினால்; கேஷாஞ்சித்—சிலவற்றின் கருத்தின்படி; அர்ஹ-ஸத்தமா:—உயர்ந்த மரியாதைக்குரிய; இஹ—இப்பௌதீக உலகில்; அமுத்ர—மரணத்திற்குப் பின்; ச—மேலும்; லக்ஷ்யந்தே—பார்வைக்குத் தெரிகின்ற; ஜ்யோத்ஸ்னா-வத்ய:—சக்தி வாய்ந்த அழகான; க்வசித்—ஏதோ ஓரிடத்தில்; புல:—உடல்கள்.
எனது மரியாதைக்குரிய சகோதர, சகோதரிகளே, சரித்திரங்களின் உறுதியான கூற்று என்னவென்றால், எல்லோருக்கும் மேலாக உயர்ந்த அதிகாரமுடையவர் ஒருவர் நிச்சயம் உண்டு என்றும் அவரே நம் செயல்களுக்குத் தகுந்த பலன்களை நமக்கு அருள்பவர் என்பதுமாகும். அப்படி இல்லையென்றால் குறிப்பிட்ட சிலர் மட்டும் ஏன் இம்மையிலும் மறுமையிலும் அழகும் ஆற்றலும் மிக்கவர்களாக விளங்கவேண்டும்?
பதங்கள் 4.21.28 – 4.21.29
மனோர் உத்தானபாதஸ்ய த்ருவஸ்யாபி மஹீபதே:
ப்ரியவர்த்தஸ்ய ராஜருஷேர் அங்கஸ்யாஸ்மத்-பிது: பிது:
ஈத்ருஸானாம் அதான்யேஷாம் அஜஸ்ச ச பவஸ்ய ச
ப்ரஹ்லாதஸ்ய பவேஸ்சாபி க்ருத்யம் அஸ்தி கதாப்ருதா
மனோ:—மனுவின் (ஸ்வாயம்புவ மனு); உத்தானபாதஸ்ய:—உத்தானபாதர், துருவ மகாராஜாவின் தந்தை; த்ருவஸ்ய—துருவ என்னும் மகாராஜா; அபி—நிச்சயம்; மஹீ-பதே:—சிறந்த அரசரின்; ப்ரியவ்தஸ்ய—ப்ரியவ்ரதர், துருவ மகாராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்; ராஜருஷே:—தெய்வீக ராஜரிஷிகள்; அங்கஸ்ய—அங்க என்னும் பெயருடைய; அஸ்மத்—எனது; பிது:—தந்தையின்; ஈத்ருஸானாம்—உயர்ந்த பெரியோர்களில்; அத—கூட; அன்யேஷாம்—பிறரும்; அஜஸ்ய—இறவாது உயர்த்த; ச—மேலும்; பவஸ்ய—உயிர்கள்; ச—கூட; ப்ரஹ்வாதஸ்ய—மகாராஜா பிரஹலாதர்; பலே:—பலி மகாராஜா; ச—கூட; அபி—நிச்சயம்; க்ருத்யம்—உண்மையென்று அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது; அஸ்தி—அங்கே இருக்கின்ற; கதா-ப்ருதா—கதாயுதத்தை ஏந்தியிருக்கின்ற முழுமுதற் கடவுள்.
இது வேதங்களினால் மட்டும் அல்ல, மிக உயர்ந்த பெரியவர்களான மனு, உத்தானபாதர், துருவன், பிரியவிரதன், மற்றும் எனது தாத்தா அங்கன் மேலும் சிறந்த பெரியோர்களாலும், சாதாரண உயிர்களினாலும் மகாராஜா பிரஹலாதன் மற்றும் பலி மகாராஜா போன்றவர்களாலும், இவர்கள் அனைவருமே கதாயுதத்தைக் கரங்களில் ஏந்தியிருக்கின்ற முழுமுதற் கடவுளினிடத்தில் நம்பிக்கை உடையவர்கள் எனும் செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பதம் 4.21.30
தௌஹித்ராதீன் ரூதே ம்ருத்யோ: ஸோச்யான் தர்ம-விமோ ஹிதான்
வர்க-ஸ்வர்கபவர்காணாம் ப்ராயேணாய்காத்ம்ய-ஹேதுனா:
தௌஹித்ர-ஆதீன்—எனது தந்தை வேனனைப் போன்ற பேரன்மார்கள்; ரூதே—தவிர; ம்ருத்யோ:—மரணத்தின் உருவம்; ஸோச்யான்—வெறுக்கத்தக்க; தர்ம-விமோஹிதான்—சமய நெறிகளில் குழப்பமுற்று; வர்க—சமயம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்ச்சி மற்றும் விடுதலை; ஸ்வர்க—சொர்க்கத்திற்கு உயர்த்தப்படுதல்; அபவர்காணாம்—ஜடத்தின் மாசுக்களினின்று விடுதலை பெறுதல்; ப்ராயேண—கூடியபட்சம் எப்பொழுதும்; ஏக—ஒன்று; ஆத்ம்ய—முழுமுதற் கடவுள்; ஹேதுனா—கணக்கின்படி.
மரணத்தின் பேரனும் எனது தந்தையுமான வேனன் போன்றவர்கள் சமய அறநெறிகளின்பால் குழப்பமுற்று வெறுக்கத்தக்கவர்களாக ஆன போதிலும் முன்னர் குறிப்பிடப்பட்ட உயர்ந்த பெரியவர்கள், முழுமுதற் கடவுள் ஒருவரே சமயங்களின் பலன்கள், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்ச்சி, விடுதலை அல்லது சொர்க்கத்திற்கு உயர்த்துதல் போன்ற ஆசிகளை அருள்பவராக விளங்குகிறார் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
பதம் 4.21.31
யத்-பாத-ஸேவாபிருசிஸ் தபஸ்வினாம்
அஸேஷ-ஜன்மோபசிதம் மலம் திய:
ஸத்ய: க்ஷிணோதி அன்வஹம் ஏததீ ஸதி
யதா பதாப்குஷ்ட-வினி: ஸ்ருதா ஸரித்
யத்-பாத—எவரது பத்மபாதம்; ஸேவா—தொண்டு; அபிருசி:—நாட்டங்கொண்டு; தபஸ்வினாம்—கடினமான தவங்களை மேற்கொள்வோர்; அஸேஷ—எண்ணிலடங்காத; ஜன்ம—பிறப்பு; உபசிதம்—எய்துதல்; மலம்—அழுக்கு; திய:—மனம்; ஸத்ய:—உடனடியாக; க்ஷிணோதி—அழிக்கிறது; அன்வஹம்—ஒவ்வொரு நாளும்; ஏததீ—கூடுகின்றது; ஸதீ—இருக்கின்ற; யதா—இருக்கின்றபடி; பத—இங்கு; ஷ்ட—அவர் தாமரைத்திருவடிகளின் முன்பாதங்கள்; வினி:-ஸ்ருதா— சுரக்கின்றது; ஸரீத்——நீர்.
முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளிடத்து நாட்டங்கொண்டு தொண்டு செய்வோன் மனம் எண்ணிலடங்கா பிறவிகளின் மூலம் சேர்ந்திருக்கின்ற அழுக்கினின்றும், துன்பத்தினின்றும் நீங்கி உடனே தூய்மையடைகின்றது. பகவானின் பத்மபாதங்களின் விரல்களினின்று சுரந்து வரும் கங்கை நீரினைப் போல் அச்செயலானது உடனே மனதினைச் சுத்தம் செய்து ஆன்மீக அல்லது கிருஷ்ண உணர்வினைப் படிப்படியாக அதிகரிக்கச் செய்கின்றது.
பதம் 4.21.32
வினிர்துதாஸேஷ-மனோ-மல: புமான்
அஸங்க விஜ்ஞான-விஸேஷ-வீர்யவான்
யத்-அங்க்ரி-மூலே க்ருத கேதன:புனர்
ந ஸம்ஸ்ருதிம் க்லேஸ-வஹாம் ப்ரபத்யதே
வினிர்துத—நன்கு தூய்மையடைந்திருக்கின்ற; அஸேஷ—அளவில்லாத; மன: மல:—மனதின் யூகங்கள் அல்லது மனதில் சேர்ந்திருக்கும் அழுக்கு; புமான்—மனிதன்; அஸங்க—வெறுக்கின்ற; விஜ்ஞான—அறிவியல் ரீதியாக; விஸேஷ—குறிப்பிடப்பட்ட; வீர்ய-வான்—பக்தியோகத்தினால் சக்திபெற்ற; யத்—எவரது; அங்க்ரி—பத்மபாதம்; மூலே—மூலத்தில்; க்ருத-கேதன:—சரண் அடைந்தால்; புன:—மீண்டும்; ந—இல்லை; ஸம்ஸ்ருதிம்—பெளதீக வாழ்க்கை; க்லேஸ-வஹாம்—முற்றிலும் துன்பம் நிறைந்த; ப்ரபத்யதே—அடைவதற்கு.
ஒரு பக்தன் முழுமுதற் கடவுளின் திருவடித்தாமரைகளைச் சரண் அடையும் பொழுது, தவறான கருத்துக்கள் மற்றும் மன யூகங்கள் போன்றவை நீங்கி தூய்மையடைந்து பற்றற்ற நிலைக்குரியவனாய்த் தன்னை வெளிப்படுத்துகிறான். இது பக்தியோகத்தைத் தவறாது கடைப்பிடிக்கும் பொழுதே ஒருவனுக்குச் சாத்தியமாகிறது. பகவானின் பத்மபாதங்களைச் சரணடையும் பக்தன் மும்முனைத் துன்பங்கள் கொண்ட இப்பௌதீக வாழ்க்கைக்கு மீண்டும் வரமாட்டான்.
பதம் 4.21.33
தம் ஏவ யூயம் பஜதாத்ம-வ்ருத்திபிர்
மனோ வச:-காய-குணை: ஸ்வ-கர்மபி:
அமாயின: காம்-துகாங்க்ரி-பங்கஜம்
யதாதிகாராவஸிதார்த-ஸித்தய:
தம்—அவருக்கு; ஏவ—உறுதியாக; யூயம்—குடிமக்கள் எல்லோரும்; பஜத—பிரார்த்தித்தல்; வ்ருத்திபி:—விதிக்கப்பட்ட கடமை; மன:—மனம்; வச:—வாக்கு; காய—காயம்; குணை:—குறிப்பிட்ட குணங்களினால்; ஸ்வ-கர்மபி:—தொழில் கடமைகளில்; அமாயின:—எவ்விதக் கட்டுப்பாடுமின்றி; காம-துக—விருப்பங்கள் நிறைவேறி; அங்க்ரி-பங்கஜம்—தாமரைத் திருவடிகள்; யதா—எந்த அளவு; அதிகார—வன்மை முழுவதும்; அவஸித-அர்த்த—ஒருவனது நலத்தில்; ஸித்தய:—திருப்தியடைதல்.
பிருது மகாராஜா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்துகிறார்: எப்போதும் உங்கள் மனம் வாக்கு காயம் முதலியவைகளையும் உங்களது செயலினால் வரும் பலன்களையும் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக இருந்து இறைவனது பக்திப் பணிக்கே செலவிடுதல் வேண்டும். உங்களது திறமைக்கும், கடமைக்கும் ஏற்ப எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இன்றி முழு நம்பிக்கையுடன் இறைவனது திருவடித் தாமரைகளுக்குப் பணி செய்வீர்களாக. அதனால் நீங்கள் வாழ்வின் இறுதி இலட்சியத்தினை நிச்சயம் அடைவீர்கள்.
பதம் 4.21.34
அஸாவ் இஹானேக- குணோ ‘த்வர:
ப்ருதக்-வித-த்ரவ்ய-குண-க்ரியோக்திபி:
ஸம்பத்யதே ‘ர்த்தாஸய-லிங்க-நாமபிர்
விஸீத்த-விஜ்ஞான-கன: ஸ்வரூபத:
அஸென—முழுமுதற் கடவுள்; இஹ—இவ்வுலகில்; அனேக—ஏராளமான; குண:—குணங்கள்; அகுண:—தெய்வீகமான; அத்வர:—வேள்வி; ப்ருதக்-வித—பல்வேறு வகையான; த்ரவ்ய—பெளதீகப் பொருட்கள்; குண—கலவையின் கூறு; க்ரியா—செய்யப்படுபவை; யுக்திபி:—பல்வேறு வித மந்திரங்களை ஓதுவதினால்; ஸம்யத்யதே—பிரார்த்திக்கப்படுகிறது; அர்த்த—பொருள்; ஆஸய—நோக்கம்; லிங்க—வடிவம்; நாமாபி:—நாமம்; விஸீத்த—மாசடையாது; விஞ்ஞான—விஞ்ஞானம்; கன:—கவனம்; ஸ்வரூபத:—அவரது மூலவடிவம்.
முழுமுதற் கடவுள் தெய்வீகமானவர் ஆதலினால், ஜட உலகினால் அவர் மாசடைவது கிடையாது. அவர் பௌதீக விகாரங்களற்ற பரிசுத்த ஆத்மாவாக இருந்தபோதிலும் பந்தப்பட்ட ஆத்மாக்களின் நன்மைக்காக அவர் பல்வேறு விதமான பெயர்களில் பல்வேறு விதமான தேவர்களுக்கு ஏராளமானப் பௌதீகப் பொருட்களினால் செய்யப்படும் பல்வேறு வேள்விகள், சடங்குகள் மற்றும் மந்திரங்கள் போன்றவற்றை மறுதலிக்காது ஏற்றுக் கொள்கின்றார்.
பதம் 4.21.35
ப்ரதான-காலாஸய-தர்ம-ஸங்க்ரஹே
ஸரீர-ஏஷ ப்ரதிபத்ய சேதனாம்
க்ரியா-பலத்வேன விபுர் விபாவ்யதே
யதானவோ தாருஷீ தத்-குணாத்மக:
ப்ரதான—ஜட இயற்கை; கால—காலம்; ஆஸய—விருப்பம்; தர்ம—விதிக்கப்பட்ட கடமைகள்; ஸங்க்ரஹே—ஒருங்கிணைந்த; ஸரீரே—உடல்; ஏஷ:—இந்த; ப்ரதிபத்ய—ஏற்கின்ற; சேதனாம்—விழிப்புணர்வு; க்ரியா—செயல்கள்; பலத்வேன—விளைவுகளினால்; விபு:—முழுமுதற் கடவுள்; விபாவ்யதே—தோன்றுதல்; யதா—எவ்வளவு; அனல:—நெருப்பு; தாருஷீ:—விறகில்; தத்-குண-ஆத்மக:—தன்மைக்கும் உருவிற்கும் ஏற்ப.
முழுமுதற் கடவுள் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கின்றார். எனினும் அவர் ஜட இயற்கை காலம் விருப்பம் மற்றும் சுய தர்மங்கள் கலந்த இணைப்பிலிருந்து உருவாகும் பல்வேறு உடல்களிலும் கூடத் தம்மை வெளிப்படுத்துகின்றார். நெருப்பின் தன்மை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் அது பற்றுகின்ற விறகின் வடிவிற்கும் அமைப்பிற்கும் ஏற்ப தீக்கொழுந்துகள் வேறுபடுவது போல் பல்வேறு வடிவான உணர்வுகள் வளர்கின்றன.
பதம் 4.21.36
அஹோ மமாமீ விதரந்தி அனுக்ரஹம்
ஹரிம் குரும் யஜ்ஞ-புஜாம் அதீஸ்வரம்
ஸ்வ-தர்ம-யோகேன யஜந்தி மாமகா
நிரந்தரம் கே ‘ஷாணி-தலே த்ருட-வ்ரதா:
அஹோ—நீங்கள் எல்லோரும்; மம—என்னிடத்தில்; அமீ—எல்லோரும்; விதரந்தி—விநியோகிக்கின்ற; அனுக்ரஹாம்—கருணை; ஹரிம்—முழுமுதற் கடவுள்; குரும்—உயர்ந்த ஆன்மீக குரு; யஜ்ஞா-புஜாம்—வேள்வியின் அவிர்பாகங்களைப் பெறத்தகுதி படைத்த தேவர்கள்; அதீஸ்வரம்—உயர்ந்த குரு; ஸ்வ-தர்ம—உரிய மர்மங்கள்; யோகேன—அடையாளமாக; யஜந்தி—பிரார்த்தித்தல்; மாமகா:—என்னோடு உறவு கொண்டவர்கள்; நிரந்தரம்—நித்தியமானவர்கள்; கே’ஷாணி-தலே—பூமியின் மேற்பரப்பில்; த்ருட-வ்ரதா:—உறுதியான சங்கற்பத்துடன்.
முழுமுதற் கடவுள் ஒருவரே எல்லா வேள்விகளின் நாயகராகவும் அனுபவிப்பவராகவும் விளங்குகின்றார், அவரே உயர்ந்த ஆன்மீக குருவாகவும் இருக்கின்றார். இப்பூதலத்தில் வாழ்கின்ற, என்னோடு உறவு கொண்டிருக்கும் என் குடிமக்களே, நீங்கள் அனைவருமே உங்களுக்குரிய கடமைகளின் மூலம் அவரை வணங்குகின்றீர். நீங்கள் என்மீதும் கருணையுடைவர்களாக இருக்கின்றீர்கள். ஆகவே எனது குடிமக்களே! எனது நன்றியினை ஏற்றுக்கொள்வீராக.
பதம் 4.21.37
மா ஜாது தேஜ: ப்ரபவேன் மஹார்த்திபிஸ்
திதிக்ஷயா தபஸா வித்யயா ச
தேதீப்யமானே ‘ஜிதா-தேவதானாம்
குலே ஸ்வயம் ராஜ-குலாத் த்விஜானாம்
மா—செய்வதில்லை; ஜாது—எந்நேரத்திலும்; தேஜ:—உயர்ந்த ஆற்றல்; ப்ரபவேத்—காட்சிக்கு; மஹா—உயர்ந்த; ருத்திபி:—செல்வத்தினால்; திதிக்ஷயா—பொறுமையினால்; தபஸா—தவம்; வித்யயா—கல்வியினால்; ச—கூட; தேதீப்யமானே—ஏற்கெனவே பெருமை பெற்றவர்கள் மேல்; அஜித-தேவதானாம்—வைணவர்கள் அல்லது முழுமுதற் கடவுளின் பக்தர்கள்; குலே—குலத்தில்; ஸ்வயம்—தனிப்பட்ட முறையில்; ராஜ-குலாத்—அரசகுடும்பத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்கள்; த்விஜானாம்—அந்தணர்களது.
அந்தணர்களும், வைணவர்களும் பொறுமை, தவம், ஞானம், கல்வி போன்றவற்றினால் தனிப்பட்ட பெருமை படைத்தவர்கள். இவ்வரிய ஆன்மீகச் சொத்துக்களைப் பெற்றிருப்பதினால் அவர்கள் அரச குடும்பத்தினைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். ஆகையினால் அரச குலத்தினர் இவ்விரு இனத்தாரிடமும் தனது பௌதீக வலிமையினைச் காட்டவோ அல்லது தவறிழைக்கவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
பதம் 4.21.38
ப்ரஹ்மண்ய-தேவ: புருஷ: புராதனோ
நித்யம் ஹரிர் யச்-சரணாபிவந்தனாத்
அவாப லக்ஷ்மீம் அநபாயினீம் யஸோ
ஜகத்-பவித்ரம் ச மஹத்தமாக்ரணீ:
ப்ரஹ்மண்ய-தேவ:—அந்தணக் கலாச்சாரத்தைச் சேர்ந்த பகவான்; புருஷ:—முழுமுதற் கடவுள்; புராதன:—புராதனமானது; நித்யம்—நித்தியமானது; ஹரி:—முழுமுதற் கடவுள்; யத்—எவரது; சரண—தாமரைத்திருவடி; அபிவந்தனாத்—பிரார்த்திப்பதின் மூலம்; அவாப—அடைகிறது; லக்ஷ்மிம்—செல்வம்; அநபாயினீம்—முடிவில்லாது; யஸு:—நற்பெயர்; ஜகத்—உலகம்; பவித்ரம்—தூய்மையடைதல்; ச—மேலும்; மஹம்—சிறந்த; தம—உச்சம்; அக்ரணீ:—மேன்மைமிக்கது.
முழுமுதற் கடவுள் பழமையிலும் பழமையானவர், நித்தியக் கடவுள், உயர்ந்தோரினும் மிக உயர்ந்தவர், அவரது அசைக்க முடியாத நற்பெயரினால் எல்லா வளங்களையும், இப்பிரபஞ்சத்தையே தூய்மை செய்யும் பெயரையும் அவர், அந்தணர்கள் மற்றும் வைணவர்களின் திருவடித் தாமரைகளைப் பிரார்த்தித்ததின் மூலமே அடைந்தார்.
பதம் 4.21.39
யத்-ஸேவயாஸேஷ-குஹாஸய ஸ்வ-ராட்
விப்ர-ப்ரியஸ் துஷ்யதி காமம் ஈஸ்வர:
தத் ஏவ தத்-தர்ம பரைர் வினீதை:
ஸர்வாத்மனா ப்ரஹ்ம-குலம் நிஷேவ்யதாம்
யத்—எவரது; ஸேவயா—தொண்டின் மூலம்; அஸேஷ—அளவில்லாத; குஹா-ஸய:—எல்லோர் மனதிலும் இருப்பவர்; ஸ்வ-ராட்—ஆனாலும் முழுச் சுதந்திரமானவர்; விப்ர-ப்ரிய:—அந்தணர்க்கும் வைணவர்க்கும் மிகவும் பிரியமானவர்; துஷ்யதி—திருப்தியுறுகிறார்; காமம்—ஆசைகள்; ஈஸ்வர:—முழுமுதற் கடவுள்; தத்—அந்த; ஏவ—உறுதியாக; தத்-தர்ம-பரை:—பகவானின் காலடிகளைப் பின்பற்றுவதின்மூலம்; வினீதை:—பணிவுடன்; ஸர்வ-ஆத்மனா—எல்லா நிலைகளிலும்; ப்ரஹ்ம-குலம்—அந்தணர் மற்றும் வைணவர்களின் சந்ததியினர்; நிஷேவ்யதாம்—அவர்களது தொண்டிலேயே எப்போதும் ஈடுபட்டிருத்தல்.
முழுமுதற் கடவுள், எப்போதும் சுதந்திரமானவர், எல்லோர் மனதிலும் நிறைந்திருப்பவர், தனது காலடித் தடத்தினைப் பின்பற்றுவோர்களினிடத்தும் அந்தணர் மற்றும் வைணவர்கள் சந்ததியினருக்கு எந்தவித ஒளிவு மறைவுமின்றி தொண்டு செய்வோரிடத்தும் மகிழ்ச்சியடைபவர், அந்தணர்களிடத்தும் வைணவர்களிடத்தும் மிகவும் அன்புடையவர் ஆதலினால் அவர்களும் எப்போதும் அவரிடத்து அன்புடையவர்களே.
பதம் 4.21.40
பூமாவ்ப் லபேதானதிவேலம் ஆத்மன:
ப்ரஸீததோ ‘த்யந்த-ஸமம் ஸ்வத: ஸ்வயம்
யன்-நித்ய-ஸம்பந்த-நிஸேவயா தத:
பரம் கிம் அத்ராஸ்தி முகம் ஹவிர் புஜாம்
புமான்—ஒருவன்; லபேத—அடையக்கூடும்; அனதிவேலம்—தாமதமின்றி; ஆத்மன:—அவனது ஆத்மாவின்; ப்ரமதத:—திருப்தியடைகின்றது; அத்யந்த—மிகவுயர்ந்த; ஸமம்—அமைதி; ஸ்வத:—தானாகவே; ஸ்வயம்—சுயமாக; யத்—எவரது; நித்ய—தொடர்ந்து; ஸம்பந்த—தொடர்பு; நிஸேவா—சேவையின் ஆற்றலினால்; தத:—அதன்பிறகு; பரம்—உயர்ந்த; கிம்—என்ன; அத்ர—இங்கே; அஸ்தி—இருக்கின்ற; முகம்—மகிழ்ச்சி; ஹவி:—தூய்மையான வெண்ணெய்; புஜாம்—அருந்துபவர்க்கு.
அந்தணர்க்கும் வைணவர்க்கும் தொடர்ந்து ஒருவன் தொண்டு செய்வதினால் அவனது மனத்துக்கண் உள்ள மாசு நீங்குகிறது. அதனால் அவன் இப்பௌதீக பந்தத்தினின்று விடுதலை பெற்று உயர்ந்த அமைதியும், திருப்தியும் அடைகிறான். அந்தணர்க்குத் தொண்டாற்றும் பலன் தரும் செயலைவிட இவ்வுலகில் உயர்ந்தது ஏதுமில்லை, யாருக்காக வேள்விகள் செய்யப்படுகின்றனவோ அத்தேவர்களுக்கும் இது மகிழ்ச்சியளிப்பதாகும்.
பதம் 4.21.41
அஸ்நாதி அனந்த: கலு தத்துவ கோவிதை:
ஸ்ரத்தா ஹீதம் யன் முக இஜ்ய நாமபி:
ந வை ததா சேதனயா பஹிஷ் க்ருதே
ஹீதாஸனே பாரமஹம்ஸ்ய பர்யகு:
அஸ்நாதி—உண்கிறார்; அனந்த:—முழுமுதற் கடவுள்; கலு—பதிலாக; தத்துவ-கோவிதை:—முழு மெய்ப்பொருளை பற்றிய ஞானம் உடையோர்; ஸ்ரத்தா—நம்பிக்கை; ஹீதம்-அக்னி—வேள்விகளில் அர்ப்பணிக்கின்ற; ய-முகே—எவரது வாய்; இஜ்ய-நாமபி:—பல்வேறு பெயர்களைக் கொண்ட தேவர்கள்; ந—இல்லை; வை—உறுதியாக; ததா—அதனையே; சேதனயா—அசைகின்றவைகள்; பஹி:-க்ருதே—இழக்கின்ற; ஹீத—வேள்வித்தீயில்; பாரமஹம்ஸ்ய—பக்தர்களுக்காக; பர்யகு:—வெளியேறுவதில்லை.
அனந்தன் எனப்படும் முழுமுதற் கடவுளானவர் வேள்வியில் பல்வேறு தேவர்களின் பெயர்களில் அர்ப்பணிக்கப்படுபவைகளை அக்னியின் மூலம் உண்கிறார் எனினும் இவ்வாறு அக்னியின் மூலம் உண்பதில் அவர் அடையும் மகிழ்ச்சியைவிட மகாமுனிவர்கள் மற்றும் பக்தர்கள் வாயின் மூலம் வரும் அர்ப்பணிப்புக்களை ஏற்றுக் கொள்வதில் தான் அவர் அதிக மகிழ்ச்சியடைகிறார், காரணம் அப்போது அவர் பக்தர்களின் உறவினைப் பிரியாமல் இருக்கின்றார்.
பதம் 4.21.42
யத் ப்ரஹ்ம நித்யம் விரஜம் ஸநாதனம்
ஸ்ரத்தா-தபோ-மங்கள-மௌன ஸம்யமை:
ஸமாதினா பிப்ரதி ஹார்த்த-த்ருஷ்டயே
யத்ரேதம் ஆதர்ஸ இவாவபாஸதே
யத்—எது; ப்ரஹ்ம—அந்தணக் கலாச்சாரம்; நித்யம்—நித்தியமானது; விரஜம்—மாசில்லாதது; ஸநாதனம்—ஆதியில்லாதது; ஸ்ரத்தா—நம்பிக்கை; தப:—தவம்; மங்கள—மங்களமானது; மௌன—மௌனம்; ஸம்யமை:—மனதையும், புலன்களையும் அடக்குதல்; ஸமாதினா—சமாதி நிலையில்; பிப்ரதி—ஒளிபெறுகிறது; ஹ—அவர் செய்தபடி; அர்த—வேதங்களின் உண்மையான நோக்கம்; த்ருஷ்டயே—கண்டடைய வேண்டும் எனும் நோக்கம்; யத்ர—எங்கு; இதம்—இவையெல்லாம்; ஆதர்ஸே—கண்ணாடியில்; இவ—போல; அவபாஸதே—தோன்றுதல்.
அந்தணக் கலாச்சாரத்தில் ஓர் அந்தணனின் பரம நிலை நித்தியமாகப் பேணப்படுகிறது, காரணம் வேதங்களின் நெறிகளை அவன் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்கிறான். அவனிடம் தவம், வேத முடிவு, மெய்யறிவு, மன அடக்கம், தியானம் போன்ற எல்லாம் இருக்கின்றன. அதனால், கண்ணாடியில் முகம் தெளிவாகத் தெரிவது போல அவனிடம் வாழ்வின் உண்மை லட்சியம் பிரகாசமாக இருக்கிறது.
பதம் 4.21.43
தேஷாம் அஹம் பாத-ஸரோஜ-ரேணும்
ஆர்யா வஹேயாதி-கிரீடம் ஆயு:
யம் நித்யதா பிப்பரத ஆஸீ பாபம்
நஸ்யதி அமும் ஸர்வ-குணா பஜந்தி
தேஷாம்—அவர்கள் எல்லோரின்; அஹம்—நான்; பாத—பாதங்கள்; ஸரோஜ—தாமரை; ரேணும்—தூசு; ஆர்யா:—ஓ, மரியாதைக்குரியவர்களே; வஹேய—பொறுத்துக் கொள்ளுங்கள்; அதி—அதுவரை; கிரீடம்—மணிமுடி; ஆயு:—வாழ்வின் இறுதிவரை; யம்—எது; நித்யதா—எப்போதும்; பிப்ரத:—தாங்கிக்கொண்டு; ஆஸீ—மிகவிரைவில்; பாபம்—பாவங்கள்; நஸ்யதி—தோற்கடிக்கப்படுகின்றன; அமும்—அவையெல்லாம்; ஸர்வ-குணா:—முற்றிலும் தகுதிபெற்ற; பஜந்தி—பிரார்த்தனை.
இங்கிருக்கும் மரியாதைக்குரியவர்களே, எனது வாழ்வின் இறுதிவரை அந்தணர் மற்றும் வைணவர்களின் திருவடித் தாமரையிலிருக்கும் தூசியினை எனது இந்த மணிமுடியின் மீது நான் சுமக்க வேண்டும் என்பதற்கு உங்களது மேலான ஆசிகளை யாசிக்கின்றேன். எவன் ஒருவன் தன் தலையின் மீது அவர்கள் பாத தூசியினைச் சுமந்து கொண்டிருக்கின்றானோ அவன் தன் வாழ்நாளில் செய்த பாவங்களின் விளைவுகளில் இருந்து விடுபட்டு முடிவில் நயத்தகும் நற்குணங்களைப் பெற்றவனாகிறான்.
பதம் 4.21.44
குணாயனம் ஸீவ-தனம் க்ருத-ஜ்ஞம்
வ்ருத்தாஸ்ரய்ம ஸம்வ்ருணதே ‘நு ஸம்பத:
ப்ரஸீததாம் ப்ரஹ்ம-குலம் கவாம் ச
ஜனார்தன:ஸானுசரஸ் ச மஹ்யம்
குண-அயனம்—எல்லா நற்குணங்களும் கொண்ட ஒருவன்; ஸீல-தனம்—நன்னடத்தையே ஒருவனது செல்வமாகும்; க்ருத-ஜ்ஞம்—உயர்ந்தவராயிருப்பவர்; வ்ருத்த-ஆஸ்ரயம்—அறிஞரிடம் அடைக்கலம் புகுவோர்; ஸம்வ்ருணதே—எய்துகிறான்; அநு—நிச்சயம்; ஸம்பத:—எல்லாச் செல்வங்களும்; ப்ரஸீததாம்—அதன்மீது மகிழ்ச்சியடைவது; ப்ரஹ்ம-குலம்—அந்தணர் குலம்; கவாம்—பசுக்கள்; ச—மேலும்; ஜனார்தன:—முழுமுதற் கடவுள்; ஸ—உடன்; அனுசர:—தனது பக்தர்களுடன்; ச—மேலும்; மஹ்யம்—என்மீது.
நன்னடத்தை, உயர்குணம், நல்லோரைச் சரணடையும் தன்மை போன்ற அந்தணக் குணங்களையுடையவன் எவனும் இவ்வுலகின் எல்லாச் செல்வங்களும் எய்தப் பெறுகிறான். ஆதலினால் நான் முழுமுதற் கடவுளினிடத்தும் அவர் துணைவர்களிடத்தும் வேண்டுவதெல்லாம் அந்தணரிடத்தும், பசுவினிடத்தும், என்னிடத்தும் மகிழ்ச்சி கொள்வீராக என்பதுதான்.
பதம் 4.21.45
மைத்ரேய உவாச
இதி ப்ருவாணம் ந்ருபதிம் பித்ரு தேவ த்விஜாதய:
துஷ்டுவுர் ஹ்ருஷ்ட மனஸ: ஸாது வாதேன ஸாதவ:
மைத்ரேய: உவாச—மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; இதி—இவ்வாறு; ப்ருவாணம்—பேசும் பொழுது; ந்ரு-பதிம்—அரசர்; பித்ரு—பித்ரு லோகத்தைச் சேர்ந்தவர்கள்; தேவ—தேவர்கள்; த்வி-ஜாதய:—இரு பிறப்பாளர்கள் (அந்தணர் மற்றும் வைணவம்); துஷ்டுவு:—திருப்தியடைதல்; ஹ்ருஷ்ட-மனஸ:—மனதிலே உயர்ந்த அமைதிபெற்று; ஸாது-வாதேன—பாராட்டினைத் தெரிவித்தனர்; ஸாதவ:—அங்கே இருந்த தெய்வீக அருளாளர்கள்.
மகாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: பிருது மன்னரின் மனங்கவர்ந்த பேச்சினைக் கேட்டு அங்கே இருந்த தேவர்களும், பித்ரு லோகத்தைச் சேர்ந்தவர்களும், அந்தணர்களும் மற்றும் தெய்வீக அருளாளர்களும் தங்கள் நல்லெண்ணத்தை அவரைப் பாராட்டியதின் மூலம் வெளிப்படுத்தினர்.
பதம் 4.21.46
புத்ரேண ஜயதே லோகான் இதி ஸத்யவதீ ஸ்ருதி:
ப்ரஹ்ம-தண்ட-ஹத: பாபோ யத் வோனோ ‘த்யதரத்தம:
புத்ரேன—மைந்தனால்; ஜயதே—வெற்றியை அடைகிறான்; லோகான்—தேவலோகங்கள்; இதி—இவ்வாறு; ஸத்ய-வதீ—உண்மையாகிறது; ஸ்ருதி:—வேதங்கள்; ப்ரஹ்ம-தண்ட—அந்தணர்களின் சாபத்தினால்; ஹத:—கொல்லப்பட்டால்; பாப:—கொடியபாவி; யத்—போன்று; வேன:—பிருது மகாராஜாவின் தந்தை; அதி—உயர்ந்த; அதரத்—வெளிக்கொணர்தல்; தம:—நரக வாழ்வின் இருளில் இருந்து.
வேதங்கள் கூறுகின்றன தனது மைந்தன் அல்லது புத்திரனால் ஒருவன் தேவலோகத்தை அடைகிறான் என்று. அதுபோல் கொடூரமான பாவங்களைச் செய்து அந்தணர்களின் சாபத்தினால் கொல்லப்பட்ட பிருது மகாராஜாவின் தந்தையான வேனன் தனது மகனான பிருது மகாராஜாவினால் இருண்ட நரக வாழ்க்கையிலிருந்து மீண்டு ஒளிமிக்க தேவலோகத்தை அடைந்தார் என்று அங்கே குழுமி இருந்த அனைவரும் ஒருசேரக் கூறினார்கள்.
பதம் 4.21.47
ஹிரண்யகசிபுஸ் சாபி பகவன்-நிந்தயா தம:
விவிக்ஷுர் அத்யகாத் ஸுனோ: ப்ரஹ்லாதஸ்யானு பாவத:
ஹிரண்யகசிபு:—பிரஹலாத மகாராஜாவின் தந்தையானவர்; ச—மேலும்; அபி—மீண்டும்; பகவத்—முழுமுதற் கடவுளினை; நிந்தயா—நிந்தித்தார்; தம:—நரகத்தின் இருண்ட வாழ்வில்; விவிக்ஷு:—அடைந்தார்; அத்யகாத்—வெளியேற்றப்பட்டார்; ஸுனோ:—அவரது மைந்தனால்; ப்ரஹ்லாதஸ்ய—பிரஹலாத மகாராஜாவினால்; அனு பாவத:—செல்வாக்கினால்.
அதுபோல் பாவச் செயல்களே செய்து முழுமுதற் கடவுளையும் மறுதலித்த ஹிரண்யகசிபு இருள்சூழ்ந்த நரகத்தினை அடைந்தான் ஆனால் அவனது உயர்ந்த மகனான பிரஹலாத மகாராஜாவின் அருளினால் அவன் நரகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வீடுபேறு பெற்ற முழுமுதற் கடவுளை அடைந்தான்.
பதம் 4.21.48
வீர-வர்ய பித: ப்ருத்வ்யா: ஸமா: ஸஞ்ஜீவ ஸாஸ்வதீ:
யஸ்யேத்ருஸ்ய அச்யுதே பக்தி: ஸர்வ-லோகைக-பர்த்தரி
வீர-வர்ய—வீரர்களிற் சிறந்தவரே; பித:—தந்தை; ப்ருத்வயா:—பூமியின்; ஸமா:—காலத்திற்குச் சமமாக; ஸஞ்ஜீவ—வாழ்வீர்; ஸாஸ்வதீ:—எப்போதும்; யஸ்யா—எவரது; ஈத்ருஸீ—இதுபோல; அச்யுதே—பரமபுருஷருக்கு; பக்தி:—பக்தி; ஸர்வ—எல்லாம்; லோக—உலகங்கள்; ஏக—ஒன்று; பர்தரி—காப்பவர்.
தெய்வீக அருளான அந்தணர்கள் பிருது மகாராஜாவிடம் இவ்வாறு கூறினார்கள்; வீரர்களில் சிறந்தவரே ஓ, பூமியின் தந்தையே, இப்பிரபஞ்சத்தின் நாயகரும், குற்றமற்றவருமான முழுமுதற் கடவுளிடத்து சிறந்த பக்தி வைத்திருக்கின்ற நீர் நீண்ட வாழ்நாள் பெறுவீராக.
பதம் 4.21.49
அஹோ வயம் ஹி அத்ய பவித்ர-கீர்த்தே
த்வயைவ நாதேன முகுந்த-நாதா:
ய உத்தமஸ்லோகதமஸ்ய விஷ்ணோர்
ப்ரஹ்மண்ய-தேவஸ்ய கதாம் வ்யனக்தி
அஹோ—ஓ, நன்மையே; வயம்—நாங்கள்; ஹி—உறுதியாக; அத்ய—இன்று; பவித்ர-கீர்த்தே—சிறந்த தூய்மையானவரே; நாதேன—பகவானால்; முகுந்த—முழுமுதற் கடவுள்; நாதா:—பரம புருஷரைச் சார்ந்த; யே—யார்; உத்தமஸ்லோக-தமஸ்ய—இனிமையான பக்தர்களினால் துதிக்கப்படும் முழுமுதற் கடவுள்; விஷ்ணோ:—விஷ்ணுவின்; ப்ரஹ்மண்ய-நேவஸ்ய—அந்தணர்களால் வணங்கப்படும் பகவான்; கதாம்—சொற்கள்; வ்யனக்தி—தெரிவிக்கின்றன.
கூட்டத்தினர் தொடர்ந்து கூறினர்: எமது அன்பிற்குரிய பிருது மன்னரே, நீர், அந்தணர்கள் போற்றி வணங்கும் பெருமைகள் எல்லாவற்றினும் மிகச் சிறந்த பெருமையினையுடைய முழுமுதற் கடவுளின் நற்கீர்த்தியினை நாளும் பிறருக்கு எடுத்துரைப்பதினால் உமது புகழ் எல்லாவற்றினும் மேலாகத் தூய்மை பெற்று விளங்குகிறது. எங்களது நல்லதிர்ஷ்டம் நீர் எங்களுக்குத் தலைவராக வாய்த்திருப்பது, ஆதலினால் நாங்கள் பகவானின் நேரடிப் பிரதிநிதியின் கீழ் வாழ்வதாக உணர்கின்றோம்.
பதம் 4.21.50
நாத்யத்புதம் இதம் நாத தவாஜீவ்யாநுஸாஸனம்
ப்ரஜானுராகோ மஹதாம் ப்ரக்ருதி: கருணாத்மனாம்
ந—இல்லை; அதி—மிகச்சிறந்த; அத்புதம்—அற்புதமானது; இதம்—இந்த; நாத—ஓ, நாயகரே; தவ—உமது; ஆஜீவ்ய—வருமானத்திற்கு ஆதாரம்; அனுஸாஸனம்—குடிமக்களை ஆள்வது; ப்ரஜா—குடிமக்கள்; அனுராக:—பற்று; மஹதாம்—மிகச்சிறந்த; ப்ரக்ருதி:—இயற்கை; கருணா—கருணை; ஆத்மனாம்—உயிர்களின்.
எமது அன்பிற்குரிய தலைவரே, உமது குடிமக்களின் மீது ஆட்சி செலுத்துவது உமக்கு விதிக்கப்பட்ட கடமையாகிறது. இது உம்போன்ற பெரியவருக்கு அற்புதமானது ஒன்றும் அல்ல, காரணம் நீர் கருணையும் குடிமக்களின் நலன்களின் மீது அக்கறையும் அன்பும் உடையவர் ஆதலினால். இதுதான் உமது சிறந்த தன்மையாகும்.
பதம் 4.21.51
ஆத்ய நஸ் தமஸ: பாரஸ் த்வயோபாஸாதித: ப்ரபோ
ப்ராம்யதாம் நஷ்ட-த்ருஷ்டீனாம் கர்மபிர் நைவ-ஸம்ஞிதை:
அத்ய—இன்று; ந:—நாங்கள்; தமஸ:—பௌதீக வாழ்வின் இருளின்; பார:—மறுபக்கம்; த்வய—உங்களால்; எபாஸாதித:—கூடுகிறது; ப்ரபோ—ஒ, தலைவரே; ப்ராம்யதாம்—அலைந்து கொண்டிருப்போர்; நஷ்ட-த்ருஷ்டீனாம்—தங்கள் இலட்சியத்தை இழந்தவர்கள்; கர்மபி:—முந்தைய கர்ம வினையின்; தைவஸம்ஞிதை:—தெய்வத்தின் ஏற்பாட்டினால்.
குடிமக்கள் தொடர்ந்து கூறினர்: இன்று நீர் எமது கண்களைத் திறந்ததோடு இருட்கடலின் மறுகரையை எப்படி அடைவது என்றும் விளக்கினீர். எமது முன்னை வினைகளாலும், முழுமுதற் கடவுளின் ஏற்பாட்டினாலும், நாங்கள் பலன்தரும் செயல்கள் என்னும் வலைதனில் சிக்கிக் கொண்டோம். அதனால் எங்கள் பார்வையை இழந்து இப்பிரபஞ்சத்திற்குள் ஓயாது அலையும் ஒரு நிலையில் இருக்கின்றோம்.
பதம் 4.21.52
நமோ விவ்ருத்த ஸத் வாய புருஷாய மஹீயஸே
யோப்ரஹ்ம க்ஷத்ரம் ஆவீஸ்ய பிபர்தீதம ஸ்வ-தேஜஸா
நம:—எல்லாவற்றையும் அர்ப்பணிக்கின்றோம்; விவ்ருத்த—மேன்மைமிக்க உயர்நிலை; ஸத்துவயா—வெளிப்படுவதற்கு; புருஷாய—உயர்ந்த புருஷருக்கு; மஹீயஸே—புகழ்மிக்க ஒருவருக்கு; ய:—யார்; ப்ரஹ்ம—அந்தணக் கலாச்சாரம்; க்ஷத்ரம்—நிர்வாகக் கடமை; ஆவிஸ்ய—ஏற்றுக்கொண்டு; பிபர்த்தி—காப்பாற்றுகின்ற; இதம்—இந்த; ஸ்வ-தேஜஸா—அவரது சொந்த அருளினால்.
அன்பிற்குரிய மன்னரே, நீர் உமது சுத்த சத்துவ நிலையில் இருக்கின்றீர். ஆகையினால் நீர் பகவானின் நிறைவான பிரதிநிதியாக விளங்குகின்றீர். உமது வீரத்தினாலேயே நீர் புகழப்படுகின்றீர், அதனால் நீர் இவ்வுலகம் முழுவதிலும் அந்தணக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதின் மூலமும், ஓர் சத்திரியனாக உமது ஆட்சியின் கீழ் உள்ள அனைவரையும் பாதுகாப்பதின் மூலமும் இவ்வுலகம் முழுவதையும் இரட்சிக்கின்றீர்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “பிருது மகாராஜாவின் கட்டளைகள்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.