அத்தியாயம் – 20
விஷ்ணு பிருது மன்னரின் வேள்விச் சாலையில் தோன்றுதல்
பதம் 4.20.1 : மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: எனது அன்பிற்குரிய விதுரரே! தொன்னூற்று ஒன்பது வேள்விகளினால் மிக்க மனநிறைவடைந்த முழுமுதற் கடவுள், பகவான் விஷ்ணு அங்கே தோன்றினார். அவரோடு இணைந்து தேவேந்திரனும் வந்திருந்தான். பகவான் விஷ்ணு கூறலானார்.
பதம் 4.20.2 : முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணு கூறினார்: எனது அன்பிற்கினிய பிருது மன்னனே! சொர்க்காதிபதி தேவேந்திரன் உனது நூறு வேள்விகளையுமே நிறைவேறவிடாது தொல்லை கொடுத்திருக்கிறான். அதற்கான வருத்தத்தை உன்னிடம் தெரிவிப்பதற்காக இங்கே வந்திருக்கிறான். ஆகையினால் அவனை நீ மன்னிப்பாயாக.
பதம் 4.20.3 : ஓ மன்னனே! புத்தியில் சிறந்தோரும், பிறர் நலன் விரும்புவோரும் மனிதர்களில் சிறந்தவர் எனக் கருதப்படுவர். ஓர் உயர்ந்தமனிதன் பிறருக்கு கேடு நினைக்க மாட்டான். அறிவிலே உயர்ந்தோர்கள் ஆத்மா வேறு, உடல் வேறு என்பதை எப்போதும் உணர்ந்தவர்களே.
பதம் 4.20.4 : உன்னைப் போன்றவர்கள் உனது முந்தைய ஆச்சார்யர்களின் கட்டளைகளின்படி நடந்ததினாலேயே இவ்வாறு சிறந்து விளங்க முடிகின்றது. அப்படியில்லாது எனது பௌதீக சக்தியின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தால் உனது முன்னேற்றம் என்பது காலவிரயம் என்றே கருதப்படும்.
பதம் 4.20.5 : உடலின் புறத்தோற்றக் கருத்துக்களை நன்கறிந்தவர்கள், இந்த உடலானது அறியாமை, ஆசை மற்றும் மாயையின் விளைவினால் வரும் செயல்கள் அடங்கியவை என்றும் ஆகையினால் இவ்வுடலுக்கு நாம் அடிமையாகிவிடக் கூடாது என்றும் உணர்ந்தவர்களே.
பதம் 4.20.6 : உடல் சார்ந்த உணர்வின் பால் தொடர்பில்லாத அறிஞர்கள் எவ்வாறு உடல் சார்ந்த வீடு, குழந்தைகள், செல்வம் போன்ற உடலியற் பொருள்களினால் பாதிக்கப்படுவர்?
பதம் 4.20.7 : தனிப்பட்ட ஆத்மாவானது தனிப்பட்ட ஒன்றாகவும், தூய்மையானதாகவும், பெளதீகமற்றதாகவும், சுய ஒளி கொண்டதாகவும் இருக்கிறது. அவரே நற்குணங்களின் உறைவிடமாகவும் எங்கும் நிறை பொருளாகவும் இருக்கிறார். அவருக்கு எந்தவித பொருள்களினாலான மேல் உறையும் கிடையாது, அவரே எல்லாவிதமானச் செயல்களுக்கும் சாட்சியாக இருக்கின்றார். பிற உயிர்களிடமிருந்து அவர் தன்னைத் தனியே வேறுபடுத்தி வைத்திருக்கின்றார். உருவெடுத்து வந்த ஆத்மாக்களுக்கு என்றும் அவர் மேலானவராக இருக்கின்றார்.
பதம் 4.20.8 : ஜட இயற்கையினுள்ளே இருந்தாலும் பரமாத்மாவைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் முழு அறிவுடையோன் ஜட இயற்கையின் குணங்களினால் பாதிக்கப்படுவதில்லை, அவன் எப்போதும் எனது உன்னத அன்புத் தொண்டிலேயே இருக்கின்றான்.
பதம் 4.20.9 : முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணு தொடர்ந்து கூறினார்: எனது அன்பிற்குரியவன் தொழில் சார்ந்து இருந்த போதிலும் அவன் எந்தவிதமான பொருள் ஆசையும் இன்றி எனது அன்புப் பணியில் ஈடுபடுவானாயின் அவன் தனக்குள்ளே திருப்தியுடையவனாகிறான்.
பதம் 4.20.10 : மனமானது எல்லாவித பௌதீக மாசுக்களில் இருந்தும் தூய்மையடைந்துவிட்டால், ஒரு பக்தனின் மனம் விரிந்து தெளிவு பெற்றதாய் விளங்குகிறது. அந்நிலையில் அவனால் எல்லாவற்றையும் சமபார்வை பார்க்க முடிகிறது. அந்நிலையில் அவன் வாழ்க்கை அமைதியாகவும், சச்சிதானந்த நிலையில் என்னோடு சமமாகவும் இருக்க முடிகிறது.
பதம் 4.20.11 : இந்த ஜட உடலானது ஐம்பெரும் பூதங்களினாலும் உணர்வுப் புலன்களினாலும், செயற் புலன்களினாலும், மனதினாலும் செய்யப்பட்டு நிலைத்த ஆத்மாவினால் கண்காணிக்கப்படுகிறது என்பதை அறிபவன், பௌதீக பந்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்குத் தகுதியுடையவனாவான்.
பதம் 4.20.12 : பகவான் விஷ்ணு பிருது மன்னனிடம் கூறினார் எனது அன்பிற்குரிய மன்னனே! ஜட இயற்கையின் முக்கணங்களின் தொடர்புகளினாலேயே இந்தப் பௌதீக உலகமானது நாளும் மாறிக்கொண்டே இருக்கின்றது. ஐம்பூதங்கள், புலன்கள், புலன்களை ஆளும் தேவர்கள், ஆத்மாவினால் கிளர்ச்சியுறும் மனம் இவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்தே ஒரு உடல் உண்டாகின்றது. இருந்தும் ஆத்மாவானது இந்த ஸ்தூல மற்றும் சூட்சுமப்பொருள்களின் கூட்டுக் கலவையினின்று வேறுபட்டதினால், என்னிடத்து ஆழ்ந்த நட்பும், அன்பும் கொண்ட, பூரண அறிவு கொண்ட எனது பக்தன் இந்தப் பௌதீக இன்ப துன்பங்களினால் பாதிப்படைவதில்லை.
பதம் 4.20.13 : எனது அன்பிற்குரிய உயர்ந்த மன்னனே, எப்போதும் எதிலும் சாராத நடுநிலையில் இருந்து மக்கள் எல்லோரையும், அவர்கள் உன்னைவிட உயர்ந்தவர்களாயிருந்தாலும், உனக்குச் சமதையாக இருந்தாலும் அல்லது உனைக்காட்டிலும் கீழானவர்களாயிருந்தாலும் அவர்களை ஒரே சீராக நேராக நடத்துவாயாக! வந்து போகும் இன்ப துன்பங்களினால் கவலையடையாதே, மனதையும், புலன்களையும் எப்போதும் உன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பாயாக! இப்படிப்பட்ட உன்னதமான நிலையில் ஒரு மன்னனாக வாழ்க்கையில் எந்த நிலையில் நீ எனது ஏற்பாட்டினால் வைக்கப்பட்ட போதிலும் அந்நிலையில் இருந்து கொண்டு எனது ஆட்சியின் எல்லைக்குட்பட்ட மக்களை பாதுகாப்பது ஒன்றையே உன் கடமையாகக் கொண்டு அதை நிறைவேற்ற முயல்வாயாக.
பதம் 4.20.14 : தனது ஆட்சியின் கீழ் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதே அரசனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தர்மம் ஆகும். அவ்வாறு செயல்படும் மன்னன் தன் குடிமக்களின் புண்ணியச் செயல்களின் ஆறில் ஒரு பங்கினை தனது அடுத்தப் பிறவியில் அடைகிறான். ஆனால் ஓர் அரசனோ அல்லது ஒரு நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவனோ தன் மக்களிடம் இருந்து வரிகளை மட்டும் வசூலிக்கவிட்டு அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் அவனது புண்ணியச் செயல்களின் பலன்களை அவனது குடிமக்கள் பெறுகின்றனர். பதிலுக்கு அவர்கள் செய்யும் பாவச் செயல்களுக்குரிய தண்டனையை அவன் ஏற்க வேண்டியவனாகிறான்.
பதம் 4.20.15 : பகவான் மகாவிஷ்ணு தொடர்ந்து கூறினார் எனது அன்பிற்குரிய பிருது மன்னனே, குருவிடமிருந்து சீடன் என்று செவி வழியாகவே கேட்டு சீட பரம்பரையில் வந்த உயர்ந்த அந்தணர்களின் கட்டளைக்கிணங்க குடிமக்களைத் தொடர்ந்து பாதுகாத்து வருவான் என்றால், அவர்களது சமய நெறிகளை, மன யூகங்களுக்கேற்ப வரும் யோசனைகளில் பற்றில்லாதுப் பின்பற்றுவாயென்றால், ஒவ்வொரு குடிமகனும், மகிழ்ச்சியடைவான், உன்னை விரும்புவான். வெகுவிரைவில் விடுதலை பெற்ற நான்கு குமாரர்கள் (சனகன், சநாதனன், சநந்தனன், மற்றும் சநத் குமாரன்) போன்ற மகாத்மாக்களை உன்னால் தரிசிக்க இயலும்.
பதம் 4.20.16 : எனது அன்பிற்குரிய மன்னனே, உனது உயர்ந்த குணங்களும், சிறந்த நடத்தைகளும் என்னைக் கவர்ந்ததினால் இன்று உனக்கு நான் மிகவும் ஆதரவுடையவனாக இருக்கின்றேன். ஆகையினால் உனக்கு வேண்டும் வரங்களை என்னிடம் கேட்பாயாக. உயர்ந்த குணங்களும், சிறந்த நடத்தைகளும் இல்லாத ஒருவன் பெரிய வேள்விகள் செய்வதினாலேயோ, கடுமையான தவங்களின் மூலமாகவோ அல்லது தெய்வீகமான யோகங்களினாலோ எனது கருணையினைப் பெற்றுவிட முடியாது. எல்லாச் சூழ்நிலைகளிலும் இருவேறு மன இயல்பில்லாது சமநிலையில் மனதினை வைத்திருப்போன் மனதில் எப்போதும் சமநிலையில் தான் வீற்றிருப்பேன்.
பதம் 4.20.17 : மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: எனது அன்பான விதுரரே, இவ்வாறு உலகினை வென்றவரான மகாராஜா பிருது முழுமுதற் கடவுளின் கட்டளைகளைத் தன் தலைமேற் கொண்டார்.
பதம் 4.20.18 : அங்கே நின்று கொண்டிருந்த இந்திரன் தனது செயல்களினால் வெட்கமுற்று பிருது மன்னரின் திருவடித் தாமரைகளைத் தொடுவதற்காக அவர் முன் வீழ்ந்தான். ஆனால் பிருது மகாராஜாவோ பெரும் மகிழ்ச்சியினால் அவனை அப்படியே தாங்கி தன் மார்புறத் தழுவிக் கொண்டு தன் வேள்விக்குரிய குதிரையை அவன் திருடியதினால் அவன் மீது ஏற்பட்ட துவேஷத்தையும் ஆத்திரத்தினையும் விட்டுவிட்டார்.
பதம் 4.20.19 : தன் மீது கருணை கொண்ட முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகளை பிருது மன்னர் முழுநிறைவுடன் வணங்கினார். பகவானின் திருவடித் தாமரைகளை இவ்வாறு வணங்கிக் கொண்டிருக்கும் பொழுதே அவர் பக்தித் தொண்டில் தன்னையிழந்த மகிழ்ச்சியினை அதிகரித்துக் கொண்டார்.
பதம் 4.20.20 : பகவான் செல்வதற்குத் தயாராக இருந்தும், பிருது மன்னரின் செயலினால் அவர்மீது கொண்டிருந்த நாட்டத்தினால் அவர் புறப்படவில்லை. மகாராஜா பிருதுவின் நடத்தையினை தனது செந்தாமரை விழிகளினால் கண்டு அவர் சற்று தாமதித்தார். காரணம் அவர் எப்பொழுதும் பக்தர்களின் நலன் விரும்புபவர் ஆவார்.
பதம் 4.20.21 : ஆதி மன்னரான மகாராஜா பிருது கண்களில் நீர் நிரம்ப குரல் நடுநடுங்க பகவானைக் கூர்ந்து பார்க்கவோ அல்லது அவரிடம் பேசவோ முடியாதிருந்தார். அவர் பகவானை தனது உள்ளத்தில் தழுவிக் கொண்டு கூப்பியக் கரங்களுடன் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
பதம் 4.20.22 : பாம்புகளின் பகைவரான கருடனின் தோள்களின் மீது தன் கைகளைப் போட்டபடி முழுமுதற் கடவுள் தன்னுடைய திருவடித் தாமரைகள் சற்றேறத்தாழ நிலத்தில் தெரியும்படி நின்று கொண்டிருந்தார். பிருது மகாராஜா தன்னுடைய கண்களிலுள்ள கண்ணீரைத் துடைத்தபடி மீண்டும் பகவானைப் பார்ப்பதற்கு முயற்சி செய்தது பகவானை அதிக நேரம் பார்த்தும் இன்னும் அவர் திருப்தியடையாதது போல் இருந்தது. இவ்வாறு மன்னர் கீழ்க்கண்ட பிரார்த்தனைகளைச் செய்தார்.
பதம் 4.20.23 : வரம் அருளும் தேவர்களுக்குள்ளே நீயே சிறந்தவர். எனவே கற்றறிந்த அறிஞன் ஏன் இயற்கையின் குணங்களினால் குழப்பமும் உயிர்களுக்குரிய வரங்களை உம்மிடம் கேட்க வேண்டும்? நரகத்தின் கொடுமைகளைத் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் உயிர்களுக்குக் கூட அவ்வரங்கள் தாமாகவே கிடைக்கின்றன. எனது அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய பகவானே உமது தோற்றத்துடன் நான் இணைவதற்கு அருள நிச்சயம் உம்மால் முடியும். ஆனாலும் அப்படிப்பட்ட வரத்தினைப் பெறுவதற்குக் கூட நான் விரும்புவதில்லை.
பதம் 4.20.24 : எனது அன்பிற்கினிய பகவானே, உமது திருவடித் தாமரை என்னும் மலரிலிருந்து வரும் அமிர்த மது இல்லாத வரமான உமது தோற்றத்துடன் இணைகின்ற வரத்தினைப் பெறுவதற்கு ஒருபோதும் நான் விரும்பமாட்டேன். நான் வேண்டும் வரம் என்பதெல்லாம் உமது பக்தர்களின் வாயிலிருந்தும் வரும் உமது பெருமைகளைக் கேட்பதற்கும் பத்து லட்சம் காதுகள் வேண்டும் என்பதே.
பதம் 4.20.25 : மிக உயர்ந்த மனிதர்களின் சிறந்த பாடல்களினால் நீர் பெருமைப்படுத்தப்படுகின்றீர்! உமது பாத கமலத்தின் அப்பெருமைகள் எல்லாம் மகரந்தத் துகள்களைப் போன்றவையாகும். உமது கமல பாதத்தின் மகரந்தத்தூளின் நறுமணத்தை மிகச் சிறந்த பக்தர்களின் நாவிலிருந்து புறப்படும் தெய்வீக ஒலி சுமந்து வரும் பொழுது தனது உண்மை நிலையினை மறந்து போயிருக்கும் உயிர்வாழி மெல்ல மெல்ல உம்மோடு கொண்டிருந்த நித்திய உறவினை நினைவு கூர்கிறான். பக்தர்கள் இவ்விதம் வாழ்வின் உண்மை மதிப்புப் பற்றிய சரியான முடிவிற்குப் படிப்படியாக வருகின்றனர். எனது அன்பிற்கினிய இறைவனே உமது புகழினை உமது உண்மையான பக்தனது நாவிலிருந்து கேட்கின்ற பாக்கியத்தைத்தவிர வேறெந்த வரமும் நான் வேண்டேன்.
பதம் 4.20.26 : எனது வணக்கத்திற்குரிய உயர்ந்த பெருமையுடைய பகவானே, தூய பக்தர்களோடு உறவுகொண்டு ஒருவன் உமது செயல்களின் பெருமைகளைப் பற்றி ஒரு முறை கேட்பான் என்றால் அவன் ஒரு விலங்காக இல்லாதிருக்கும் பட்சத்தில், அப்பக்தர்களின் உறவினை எக்காரணம் கொண்டும் விட்டுவிட மாட்டான், புத்திமான் அவர்களது உறவினைக் கைவிட அக்கறை கொள்ளமாட்டான். உமது திருப்புகழை ஓதுவதும், கேட்பதும், அதிர்ஷ்ட தேவதையினால் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அத்தேவதை உமது அளவற்ற லீலைகளையும், உன்னதமான பெருமைகளையும் கேட்கவே விரும்புகின்றாள்.
பதம் 4.20.27 : நான் இப்பொழுது முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரையினிடத்து, கையில் தாமரை மலருடன் இருக்கின்ற அதிர்ஷ்ட தேவதை செய்யும் பணியினைப் போல் என்னையும் அப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் நமது மேன்மைக்குரிய முழுமுதற் கடவுள், எல்லாத் தெய்வீகத் தன்மைகளையும் தன்னிடத்தே கொண்ட உறைவிடமாவார். நானும் அதிர்ஷ்ட தேவதையும் ஒரே பணியில் ஈடுபட்டிருப்பதினால் எங்களுக்குள் சண்டை வருமோ என நான் அஞ்சுகிறேன்.
பதம் 4.20.28 : எனது அன்பிற்குரிய உலகின் நாயகரே, உலகின் தாயாக அதிர்ஷ்ட தேவதை லட்சுமி இருந்தும், அவரது ரசபாவத்தில் இருந்து உமக்கு நான் தொண்டு செய்வது அவரது உரிமையில் குறுக்கிடுவது என்று அவர் என்மீது கோபிக்கலாமோ என்று நான் நினைக்கின்றேன். இப்படிப்பட்ட தவறான எண்ணம் இருந்தாலும் நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன். காரணம் நீர் என் போன்ற ஏழைகளின் பால் அதிக அன்பு உடையவர், நாங்கள் சாதாரணமாகச் செய்யும் தொண்டினைக் கூட பெரிதாக மதிப்பவர். ஆகையினால் நீர் என் பக்கம் இருப்பீர் என்பதினால்தான். அப்படியே அவர் கோபித்தால் கூட உமக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. காரணம் எல்லாவற்றிலும் முழு நிறைவடைந்தவரான நீர் அவர் இல்லாமலேயே எதையும் செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதை நான் அறிவேன்.
பதம் 4.20.29 : எப்பொழுதும் வீடுபேறு பெற்ற மகாமுனிவர்கள் உமக்கு பக்தித் தொண்டு புரிகின்றனர்; காரணம் பக்தித் தொண்டின் மூலமே ஒருவனால் பௌதீக வாழ்வின் மாயையிலிருந்து விடுதலை பெறமுடியும். ஓ, பகவானே, அப்படி வீடு பேறு பெற்றவர்கள், உமது திருவடித் தாமரைகளையே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர அவர்கள் உமது திருவடித் தாமரைகளைச் சரண்புக வேறு காரணம் எதுவுமில்லை.
பதம் 4.20.30 : எனது அன்பிற்குரிய பகவானே! நீர் உமது தூய பக்தனுக்குச் சொல்லியிருக்கின்றவையெல்லாம் நிச்சயம் அதிகக் குழப்பமுடையவைகளே. வேதங்களில் நீர் தருகின்ற கவர்ச்சிமிக்க வாசகங்கள் தூய பக்தனுக்கு ஒத்து வராதவைகளாகும். வேதங்களின் இனிய வார்த்தைகளில் மயங்கிய மக்கள் மீண்டும் மீண்டும் பலன்தரும் தொழில்களையே செய்து அவற்றின் விளைவான பயன்களில் மோகமுறுகிறார்கள்.
பதம் 4.20.31 : எனது பகவானே! உமது மாயா சக்தியினால் இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் தங்களது உண்மையான நிலையினை மறந்து அறியாமையினால், சமுதாயம், நட்பு, காதல் போன்ற பௌதீக இன்பங்களை விழைகின்றன. ஆகையினால் இதுபோன்ற பௌதிக இன்பங்களைத் தரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும்படி கருணை கூர்ந்து கேட்காதீர், ஒரு தந்தை, தன்மகன் எதுவும் தன்னிடம் கேட்காமலேயே அவனுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வது போல் நீரும் எனக்கு எது நன்மை என்று கருதுகின்றீரோ அதனையே அருள்வீராக!
பதம் 4.20.32 : மகாமுனிவரான மைத்ரேயர், இப்பிரபஞ்சம் முழுவதையும் உணர்ந்த பகவான், பிருத மகாராஜாவின் பிரார்த்தனையைக் கேட்டு அவரிடம் கூறியதைத் தொடர்ந்து கூறினார்: எனது அன்பான மன்னனே! நீ எப்போதும் எனது பக்தித்தொண்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன். நீ மிகவும் புத்திசாலித்தனமாகக் கேட்ட அத்தூய்மையான நோக்கம் ஒன்றே யாரும் கடக்க முடியாத மாயா சக்தியினைக் கடக்க உதவுவதாகும்.
பதம் 4.20.33 : எனது அன்பான மன்னனே, குடிமக்களைக் காப்பவனே! இன்றிலிருந்து எவ்வாறாலும் நீ தவறான பாதைக்குச் செல்லாமல் எனது கட்டளைகளை நிறைவேற்றுவாயாக. யாரேனும் ஒருவன் இவ்வாறு வாழ்ந்து எனது கட்டளைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவான் என்றால் அவன் இவ்வுலகமெங்கணும் எப்போதும் நல்லதர்ஷ்டத்தையேக் காண்பான்.
பதம் 4.20.34 : விதுரரிடம் மகாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: முழுமுதற் கடவுள், மகாராஜா பிருதுவின் ஆழமானப் பொருள் நிறைந்த பிரார்த்தனைகளை மனம் திறந்து பாராட்டினார். இவ்வாறு மன்னரால் முறையாக வணங்கப் பெற்றபிறகு, பகவான் அவரை ஆசீர்வதித்துப் புறப்படுவதற்குத் தயாரானார்.
பதங்கள் 4.20.35 – 4.20.36 : பிருது மன்னர், தேவர்களையும், மகாமுனிவர்களையும், பித்ரு லோகத்தைச் சேர்ந்தவர்களையும், கந்தர்வலோகத்தைச் சேர்ந்தவர்களையும், சித்தலோகத்தைச் சேர்ந்தவர்களையும், சாரண லோகத்தைச் சேர்ந்தவர்களையும், நாக லோகத்தைச் சேர்ந்தவர்களையும், கின்னர லோகத்தைச் சேர்த்தவர்களையும், அப்ஸர லோகத்தைச் சேர்ந்தவர்களையும், பூலோகத்தைச் சேர்ந்தவர்களையும், பறவை லோகத்தைச் சேர்ந்தவர்களையும் வணங்கினார். கூப்பிய கரங்களுடன் இவர்கள் எல்லோரையும் வணங்கியது போல் முழுமுதற் கடவுளையும், அவரது துணைவர்களையும், எல்லாவகைச் செல்வங்களுடன், இனிமையான வார்த்தைகளையும் சேர்த்து அர்ப்பணித்துப் பிரார்த்தித்தார். இவ்விழா நிறைவு பெற்றவுடன் பகவான் விஷ்ணுவைத் தொடர்ந்து எல்லோரும் தத்தம் இருப்பிடம் சென்றார்கள்.
பதம் 4.20.37 : குற்றமற்றவரான முழுமுதற் கடவுள் அங்கே நின்று கொண்டிருந்த மன்னர் மற்றும் புரோகிதர்கள் போன்ற எல்லோரின் மனங்களையும் கவர்ந்து கொண்டு ஆன்மீக லோகத்திலுள்ள தனது இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
பதம் 4.20.38 : தேவர்களின் தெய்வமான முழுமுதற் கடவுளுக்கு பிருத மகாராஜா தன் மரியாதைக்குறிய வந்தனங்களைத் தெரிவித்தார். சாதாரண கண்களுக்குப் புலப்படாதவராயிருந்தாலும் பிருது மகாராஜாவிற்குத் தன்னைக் காணும் சக்தியினை பகவான் அருளினார். முழுமுதற் கடவுளுக்குத் தன் வந்தனங்களைத் தெரிவித்த பிறகு பிருது மகாராஜா தன் அரண்மனை திரும்பினார்.