அத்தியாயம் – 1
மனுவின் புதல்வியரது குடிவழிப் பட்டியல்
பதம் 4.1.1
மைத்ரேய உவாச
மனோஸ் து ஸதரூபாயாம் திஸ்ர: கன்யாஸ் ச ஜஜ்நிரே
ஆகூதிர் தேவஹுதிஸ் சப்ரஸுதிர் இதி விஸ்ருதா:
மைத்ரேய உவாச—மகாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; மனோ: து—ஸ்வாயம்புவ மனுவின்; ஸதரூபாயாம்—அவன் மனைவி ஸதரூபாவினிடத்தில்; திஸ்ர:—மூன்று; கன்யா: ச—புதல்வியரையும்; ஜஜ்நிரே—பெற்றெடுத்தான்; ஆகூசி:—ஆகூசி என்ற பெயரில்; தேவகீதி:—தேவகீதி என்ற பெயரில்; ச—மேலும்; ப்ரசூதி:—பிரசூதி என்ற பெயரில்; இதி—இவ்வாறு; விஸ்ருதா: —என்றறியப்பட்ட.
தெய்வத்திரு மைத்ரேயர் கூறினார்: ஸ்வாயம்புவமனு தனது மனைவி ஷதரூபா என்பவள் மூலம் மூன்று புதல்வியரை ஈன்றெடுத்தார். அவர்கள் பெயர்கள், ஆகூதி, தேவகீதி மற்றும் பிரசூதி என்பவையாகும்.
பதம் 4.1.2
ஆகூதிம் ருசயே ப்ராதாத் அபி ப்ராத்ருமதீம் ந்ருப:
புத்ரிகா – தர்மம் ஆற்ரித்ய ஸதரூபானுமோதித:
ஆகூசிம்—ஆகூசிம்; ருசயே—ருசி என்னும் மகாமுனிவருக்கு; ப்ராதாத்—மணமுடிக்கப்பட்டாள்; அபி—இருந்தாலும்; ப்ராத்ரு-மதீம்—அவளுக்கு ஒரு சகோதரன்; ந்ருப—மன்னர்; புத்ரிகா—பிறக்கும் புதல்வனைப் பெற்றுக்கொள்வார்; தர்மம்—சமயநெறி; ஆஸ்ரித்ய—அடைக்கலமாக; ஸதரூபா—ஸ்வாயம்பு மனுவின் மனைவியான ஸதரூபாவினால்; அனுமோசித:—அனுமதிக்கப்பட்டு.
ஆகூதிக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தும் மன்னர் ஸ்வாயம்புவ மனு அவளை பிரஜாபதி ருசி என்பவருக்கு, அவள் ஈன்றெடுக்கும் புதல்வனைத் தன்னிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் மனைவியாக்கினார். இதனை அவர் தனது மனைவி ஸதரூபாவுடன் கலந்து பேசிய பின்னரே செய்தார்.
பதம் 4.1.3
ப்ரஜாபதி: ச பகவான் ருசிஸ் தஸ்யாம் அஜீஜனத்
மிதுனம் ப்ரஹ்ம-வர்சஸ்வீ பரமேண ஸமாதினா
ப்ரஜாபதி—மக்கட்தொகை பெருக்கத்திற்காக நியமிக்கப்படுபவர்; ஸ:—அவர்; பகவான்—மிகவுயர்ந்த; ருசி:—மாமுனிவர் ருசி; தஸ்யாம்—அவளிடம்; அஜீஜனத்—பிறப்பினைக் கொடுத்தல்; மிதுனம்—தம்பதியினர்; ப்ரஹ்ம-வர்சஸ்வீ—ஆன்மீக ஆற்றல் மிக்கவர்; பரமேண—மிகுந்த வலிமையுடன்; ஸமாதினா—சமாதி நிலையில்.
அந்தணத் தன்மைகள் அனைத்தும் தன்னிடத்தேக் கொண்ட ருசி உயிர்களின் மூதாதையராக நியமிக்கப்பட்டவர் ஆவார். அவர் தன் மனைவி ஆகூதியினிடத்தில் ஓர் மைந்தனையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தார்.
பதம் 4.1.4
யஸ் தயோ: புருஷ: ஸாக்ஷாத் விஷ்ணுர் யஜ்ஞா-ஸ்வரூப-த்ருக்
யா ஸ்த்ரீ ஸா தக்ஷிணா பூதேர் அம்ஸ-பூதானபாயின்
ய:—எவர்; தயோ:—அவர்களில்; புருஷ—ஆண்; ஸாக்ஷாத்—நேரடியாக; விஷ்ணு:—பரமபுருஷ பகவான்; யஜ்ஞா—யக்ஞா; ஸ்வரூப-த்ருக்—வடிவினில்; யா—மற்றொருவர்; ஸ்த்ரீ—பெண்; ஸா—அவள்; தக்ஷிணா—தட்சிணா; பூதே:—அதிர்ஷ்ட தேவதையின்; அம்ஸ-பூதா—சக்தி பெற்ற அம்சமாக; அனபாயினீ—பிரிக்க முடியாதவர்கள்.
ஆகூதிக்குப் பிறந்த இரு குழந்தைகளில், ஆண்மகவு முழுமுதற் கடவுளின் நேரடி அவதாரமாகும். அதன் பெயர் யக்ஞா என்பதாகும். இப்பெயர் பகவான் விஷ்ணுவின் மற்றொரு பெயராகும். பெண் சூழந்தையானது பகவான் விஷ்ணுவின் நித்தியத் துணைவியான அதிர்ஷ்ட தேவதை லட்சுமியின் முழுத்தன்மையோடு விளங்கியது.
பதம் 4.1.5
ஆனின்யே ஸ்வ-க்ருஹம் புத்ரியா: பித்ரம் விதத-ரோசிஸம் ஸ்வாயம்புவோ முதா யுக்தோ ருசிர் ஜக்ராஹ தக்ஷிணாம்
ஆனின்யே—எடுத்துக் கொண்டு; ஸ்வ-க்ருஹம்—இல்லத்திற்கு; புத்ரியா:—மகள்; புத்ரம்—மகன்; விதத-ரோசிஸம்—மிகச் சக்தி வாய்ந்த; ஸ்வாயம்புவ:—ஸ்வாயம்புவ மனு; முதா—மிக்க மகிழ்ச்சியுடன்; யுக்த—உடன்; ருசி—மாமுனிவர் ருசி; ஜக்ரகா:—வைத்துக் கொண்டார்; தக்ஷிணாம்—தட்சிணா என்னும் பெயருடைய மகள்.
ஸ்வாயம்புவ மனு மிக்க மகிழ்ச்சியுடன் எழில் நிறைந்த ஆண் மகவான யக்ஞனைத் தன் இல்லத்திற்குக் கொண்டு சென்றார். அவரது மருமகனான மாமுனிவர் ருசி தன் மகளான தட்சிணாவைத் தன்னிடமே வைத்துக் கொண்டார்.
பதம் 4.1.6
தாம் காமயானாம் பகவான் உவாஹ யஜுஷாம் பதி:
ஆஷ்டாயாம் தோஷம் ஆபன்னோ ‘ஜனயத் த்வாதஸாத்மஜாம்
தாம்—அவளுடைய; காமாயானாம்—விருப்பம்; பகவான்—பகவான்; உவாஹ—மணம் முடித்தல்; யஜுஷாம்—எல்லா வேள்விகளின்; பதி—நாயகன்; துஷ்டாயாம்—மிகவும் மகிழ்வுற்றிருந்த அவர் மனைவியினிடத்தில்; தோஷம்—அதீத இன்பம்; ஆபன்ன:—பெற்றுக் கொண்டமையினால்; அஜனயத்—பெற்றெடுத்தல்; த்வாதஸ—பன்னிரெண்டு; ஆத்மஜான்—புதல்வர்கள்.
வேள்விகளின் நாயகரான பகவான், முழுமுதற் கடவுளையே தனது கணவனாக வரிக்கவேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டிருந்த தட்சிணாவை மணம்புரிந்தார். அவள் தனக்குப் பன்னிரெண்டு குழந்தைகளைப் பெற்றுத் தந்தமை கண்டு பகவான் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.
பதம் 4.1.7
தோஷ: ப்ரதோஷ: ஸந்தோ ஷோபத்ர: ஸார:ந்திர் இடஸ்பதி:
இத்ம: கவிர் விபு: ஸ்வஹ்ன:ஸுதேவவோ ரோசனோ த்வி ஷட்
தோஷ:—தோஷன்; ப்ரதோஷ:—பிரதோஷன்; ஸந்தோஷ—சந்தோஷன்; பத்ர—பத்ரன்; ஸாந்தி:—சாந்தி; இடஸ்பதி:—இடஸ்பதி; இத்ம:—இத்மன்; கலி:—கலி; விபு:—விபு; ஸ்வஹ்ன:—ஸ்வஹ்ஞன்; ஸுதேவ:—ஸுதேவன்; ரோசன:—ரோசன; த்வி-ஷட்—பன்னிரெண்டு.
யக்ஞனுக்கும் தட்சிணாவிற்கும் பிறந்த பன்னிரெண்டு புதல்வர்களின் பெயர்கள் வருமாறு, தோஷன், பிரதோஷன், ஸந்தோஷ, பத்ரதன, சாந்தி, இடஸ்பதி, இத்மன், கலி, விபு, ஸ்வஹ்நன், சுதேவன் மற்றும் ரோசனன் என்பவைகளாகும்.
பதம் 4.1.8
துஷிதா நாம தே தேவா ஆஸன் ஸ்வாயம்புவாந்தரே
மரீசி-மிஸ்ரா நஷயோ யஜ்ஞா: ஸுர-கணேஸ்வர
துஷித:—துஷிதர்களின் வகையினர்; நாம—பெயரில்; தே—அவர்கள் அனைவரும்; தேவா:—தேவர்கள்; ஆஸன்—ஆயினர்; ஸ்வாயம்புவ—ஸ்வாயம்புவ மனு; அந்தரே—அச்சமயம்; மரீசி-மிஸ்ரே:—மரீசியின் தலைமையில்; ருஷய:—மகாமுனிவர்கள்; யஜ்ஞா:—பகவான் விஷ்ணுவின் அவதாரம்; சுர-கண-ஈஸ்வர:—தேவர்களின் அரசன்.
ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் இப்புத்திரர்கள் அனைவரும் துஷிதர்கள் என்னும் தேவர்களாக ஆனார்கள். மரீசி ஷப்த ரிஷிகளின் தலைவராகவும், யக்ஞன் தேவர்களின் தலைவரான இந்திரனாகவும் ஆயினர்.
பதம் 4.1.9
ப்ரியவ் ரதோத்தான பாதென மனு-புத்ரென மஹௌஜஸௌ
தத்-புத்ர-பௌத்ர-நப்த்ரீணாம் அனுவ்ருத்தம் தத்-அந்தரம்
ப்ரியவ்ரத—பிரியாவரதன்; உத்தானபாதென—உத்தானபாதன்; மனு-புத்திரென—மனுப் புத்திரர்கள்; மஹா-ஒஜஸௌ—மிகச் சிறந்த, ஆற்றல் மிக்க; தத்—அவர்களுடைய; புத்ர—புத்திரர்கள்; பௌத்ர—பேரர்கள்; நப்த்ரீணாம்—மகள்வயிற்றுப் பேரர்கள்; அனுவ்ருத்தம்—தொடர்ந்து; தத்-அந்தரம்—இம்மனுவின் காலத்தில்.
ஸ்வாயம்புவ மனுவிற்கு பிரியவிரதன், உத்தானபாதன் என்று இரண்டு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் ஆற்றல் மிக்க அரசர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இம்மூவுலகிலும் பரவி இருந்தனர்.
பதம் 4.1.10
தேவஹுதிம் அதாத் தாத கர்தமாயாத்மஜாம் மனு:
தத்-ஸம்பந்தி ஸ்ருத-ப்ராயம் வதர் கததோ மம
தேவஹுதிம்—தேவகீதி; அதாத்—மணமுடிக்கப்பட்டாள்; தாத—எனது அன்பு மகனே; கர்தமாய—மகாமுனிவர் கர்தமருக்கு; ஆத்மஜாம்—மகள்; மனு—மன்னர் ஸ்வாயம்புவ மனு; தத்-ஸம்பந்தி—இது தொடர்பாக; ஸ்ருத-ப்ராயம்—எல்லாவற்றையும் அறிந்திருத்தல்; பவதா—உன்னால்; கதத:—கூறப்பட்டது; மம—என்னால்.
எனது அன்பிற்குரிய மைந்தனே, ஸ்வாயம்புவ மனு தனது மிகுந்த பாசத்திற்குரிய மகளான தேவகீதியை கர்தம முனிவருக்கு மண முடித்தார். அவர்களைப் பற்றி நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். நீயும் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறாய்.
பதம் 4.1.11
தக்ஷாய ப்ரஹ்ம-புத்ராய ப்ரஸுமும் பகவான் மனு:
ப்ராயச்சத் யத் க்ருத: ஸர்கஸ் த்ரி லோக்யாம் விததோமஹான்
தக்ஷாய—பிரஜாபதி தட்சனுக்கு; ப்ரஹ்ம-புத்ராய—பிரம்ம தேவனின் மைந்தன்; ப்ரஸுதிம்—பிரசூதி; பகவான்—மிகச் சிறந்தவரான; மனு:—ஸ்வாயம்புவ மனு; ப்ராயச்சத்—மணம் செய்வித்தார்; யத்-க்ருத:—எவரால் செய்யப்பட்ட; ஸர்க:—படைப்பு; த்ரி-லோக்யாம்—மூன்று லோகங்களில்; விதத:—விரிந்தது: மஹா—அதிகமாக.
பிரம்ம தேவனின் மகனும் உயிர்ப் பொருட்களின் மூதாதையர்களில் ஒருவருமான தட்சன் என்பவருக்கு ஸ்வாயம்புவ மனு தனது மகளான பிரசூதியை மணம் செய்வித்தார். தட்சனின் வம்சாவழியினர் மூன்று உலகிலும் பரவினர்.
பதம் 4.1.12
யா: கர்தம -ஸுதா: ப்ரோக் தாநவ ப்ரஹ்மர்ஷி-பத்னய:
தாஸாம் ப்ரஸுசி-ப்ரஸவம்ப்ரோச்யமானம் நிபோதமே
யா:—எவர்கள்; கர்தம-ஸுதா:—கர்தமரின் புதல்விகள்; ப்ரோக்தா—குறிப்பிட்டனர்; நவ—ஒன்பது; ருஷி—ஆன்மீக அறிவிற்சிறந்த மகாமுனிவர்கள்; பத்னய:—மனைவியர்; தாஸாம்—அவர்களுடைய; ப்ரஸுதி-ப்ரஸவம்—குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளின் தலைமுறையினர்; ப்ரோச்யமான—விளக்குகின்ற; நிபோத—புரிந்து கொள்ள முயல்க; மே—என்னிடமிருந்து.
ஒன்பது முனிவர்களிடம் ஏற்கெனவே மணமுடித்துக் கொடுக்கப்பட்ட கர்தம முனிவரின் ஒன்பது புதல்விகளைப் பற்றி ஏற்கெனவே நீ அறிவாய். இப்போது நான் அந்த ஒன்பது புதல்விகளின் சந்ததியினரைப் பற்றிக் கூறப் போகிறேன். கவனமுடன் கேட்பாயாக.
பதம் 4.1.13
பத்னீ மரீசேஸ் து கலா ஸுஷுவே கர்தமாத்மஜா
கஸ்யபம் பூர்ணிமானம் ச யயோர் ஆபூரிதம் ஜகத்
பத்னீ—மனைவி; மரீசேஸ்:—மரீசி என்னும் முனிவரின்; து—மேலும்; கலா—கலா என்ற பெயரில்; ஸுஷுவோ—ஈன்றெடுத்தல்; கர்தம-ஆத்மஜா—கர்தம முனிவரின் புதல்வி; கஸ்யபம்—காச்யபர்; பூர்ணிமானாம் ச—மேலும் பூர்ணிமா என்ற பெயரில்; யயோகி—எவரால்; ஆபூரிதம்—எங்கும் பரந்து விரிந்தனர்; ஜகத்—உலகம்.
கர்தம முனிவரின் மகளான கலா என்பவள் மரீசி என்பவரை மணந்து காச்யபர் மற்றும் பூர்ணிமா என்னும் இரண்டு புதல்வர்களை ஈன்றெடுத்தாள். அவர்களின் சந்ததியினர் இவ்வுலகம் முழுவதும் விரிந்து, பரந்து வாழ்ந்தனர்.
பதம் 4.1.14
பூர்ணிமாஸுத விரஜம் விஸ்வகம் ச பரந்தப
தேவகுல்யாம் ஹரே: பாத-ஸௌசாத் யாபூத் ஸரித் திவ:
பூர்ணிமா—பூர்ணிமா; அஸுத—பெற்றெடுத்தார்; விரஜம்—விரஜன் என்ற பெயரில்; விஸ்வகம் ச—விஸ்வகன் என்ற பெயரில்; பரம்-தப—ஓ பகைவரை அழிப்போனே; தேவகுல்யாயம்—தேவகுல்யை என்றொரு புதல்வி; ஹரே:—முழுமுதற் கடவுளின்; பாத-ஸௌசாத்—அவரது பத்மபாதத்தினைக் கழுவும் நீரினால்; யா—அவள்; அபூத்—ஆனது; ஸரித் திவ—கங்கையின் இரு கரைகளுக்கிடையில் உள்ள புனித நீர்.
அன்பான விதுரனே, காச்யபர் மற்றும் பூர்ணிமான் என்னும் இருவரில், பூர்ணிமான் விரஜன், விஸ்வகன், மற்றும் தேவகுல்யை என்னும் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தான். இம்மூவரில் தேவகுல்யை என்பவள் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளைக் கழுவி வரும் நீராகும். அதுவே பின்னர் பெருக்கெடுத்து தேவலோகத்திலுள்ள கங்கையாக மாறுகிறது.
பதம் 4.1.15
அத்ரே: பத்னி அனஸுயா த்ரீஞ் ஜஜ்ஞே ஸுயஸஸ: ஸுதான்
தத்தம் துர்வாஸஸம் ஸோமம் ஆத்மேஸ-ப்ரஹ்ம-ஸம்பவான்
அத்ரே:—அத்ரி முனிவரின்; பத்னீ—மனைவி; அனசூயா—அனசூயை என்ற பெயரினள்; த்ரின்—மூன்று; ஜஜ்ஞே—பெற்றனள், ஸு-யஸஸ—உயர்ந்த புகழுடைய; ஸுதான்—மைந்தர்கள்; தத்தம்—தத்தாத்ரேயர்; துர்வஸஸம்— துர்வாசர்; ஸோமம்—சோமன் (திங்கட் கடவுள்); ஆத்ம—பரமாத்மா; ஈஸ—சிவபெருமான்; ப்ரஹ்ம—பிரம்மதேவன்; ஸம்பவான்—அவதாரங்களின்.
அத்திரி முனிவரின் மனைவி அனசூயை மூன்று புகழ்வாய்ந்த மைந்தர்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள் சோமன், தத்தாத்ரேயர் மற்றும் துர்வாசர் ஆவர். இவர்கள் மூவரும், பகவான் விஷ்ணு, சிவபெருமான் மற்றும் பிரம்மதேவன் ஆகிய மூவரின் அம்ச அவதாரங்கள் ஆவர். சோமன் பிரம்மதேவனின் தன்மையோடும், தத்தாத்ரேயர் பகவான் விஷ்ணுவின் இயல்போடும், துர்வாசர் சிவபெருமானின் இயல்போடும் அவதரித்தனர்.
பதம் 4.1.16
விதுர உவாச
அதிரேர்க்குஹே ஸுர ஸ்ரேஷ்டா: ஸ்திதி-உத்பத்ரி அந்த- ஹேதல:
கிஞ்சித் சிகீர்ஷவோ ஜாதா ஏதத் ஆக்யாஹி மே குரோ
விதுர: உவாச—ஸ்ரீ விதுரர் கூறினார்; அத்ரே: க்ருஷே—அத்ரியின் இல்லத்தில்; ஸுர-ஸ்ரேஷ்டா:—தேவர்களின் தலைவர்கள்; ஸ்திதி—காத்தல்; உத்பத்தி—படைத்தல்; அந்த—அழித்தல்; ஹேதவ:—காரணங்கள்; கிஞ்சித்—சில; சிகீர்ஷவோ:—செய்ய விரும்பியது; ஜாதா:—தோன்றியது; ஏதத்—இது; ஆக்யாஹி கூறவும்; மே—எனக்கு; குரோ—அன்பான குருவே.
இதனைக் கேட்ட பிறகு மைத்ரேயரிடம் விதுரர் கேட்டார்: எனது அன்பிற்குரிய குருவே, படைத்தல், காத்தல், அழித்தல் என்றும் முத்தொழிலுக்கும் உரியவர்களான நான்முகப் பிரம்மனும், விஷ்ணுவும், சிவபெருமானும் அத்திரி முனிவரின் மனைவியினிடத்தில் குழந்தைகளாக எவ்வாறு பிறந்தனர் என்பதைக் கூறியருளமாட்டீரா?
பதம் 4.1.17
மைத்ரேய உவாச
ப்ரஹ்மணா சோதித: ஸ்ருஷ்டால் அத்ரிர் ப்ரஹ்ம-விதாம் வர:
ஸஹ பத்னியா யயாவ் ருக்ஷம் குலாத்ரிம் தபஸி ஸ்தித:
மைத்ரேய: உவாச—ஸ்ரீ மைத்ரேய ரிஷி கூறினார்; ப்ரஹ்மணா—பிரம்ம தேவனால்; சோதித:—தூண்டப்பட்டு; ஸ்ருஷ்டென—படைப்பிற்காக; அத்ரி—அத்திரி; ப்ரஹ்ம-விதாம்—ஆன்மீக அறிவினைக் கற்றோரின்; வரர்—முதல்வர்; ஸஹ—உடன்; பத்னியா—மனைவி; யயென—சென்றார்; ருக்ஷம்—ருக்ஷம் என்னும் மலைக்கு; குல-அத்ரிம்—சிறந்த மலை; தபஸி—தவத்திற்காக; ஸ்தித—இருத்தல்.
மைத்ரேயர் கூறினார்: அத்திரி முனிவர் அனசூயையினை மணந்த பின்னர் மக்கட்தொகையைப் பெருக்க வேண்டும் என்னும் பிரம்ம தேவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டும், கடுமையான தவத்தினை மேற்கொள்ளவும் அவர் தன் மனைவியுடன் ருக்ஷம் என்னும் மலைக்குச் சென்றார்.
பதம் 4.1.18
தஸ்மின் ப்ரஸுன-த்பக-பலாஸஸோக-கானனே
வார்பி: ஸ்ரவத்பிர் உத்ருஷ்டே நிர்விந்த்யாயா: ஸமந்தத:
தஸ்மின்—அம்மலையில்; ப்ரஸுன-ஸ்தபக—மலர்க்கொத்துக்கள்; பலாஸ—பலாச மரங்கள்; அஸோக—அசோக மரங்கள்; கானனே—வனச் சேலையில்; வார்பி:—நீரினால்; ஸ்ரவத்பி:—ஒழுக்கு; உத்குஷ்டே—ஒலியினில்; நிர்விந்த்யாயா:—நிர்விந்தியை என்னும் நதியின்; ஸமந்தத:—எங்கும்.
அம்மலையின் அடிவாரத்தில் நிர்விந்தியை என்னும் நதி ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரைகளில் அசோக மரங்களும், பலாச மரங்களும் நிறைந்தது. அவற்றின் மலர்கள் எங்கும் மணம் பரப்பிக் கொண்டும் மிக அருகில் உள்ள அருவியிலிருந்து எப்போதும் வரும் இழுமென்னும் ஒலி இனிமை நிறைந்தும் இருந்தது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியினை அத்திரி முனிவரும் அவர் மனைவியும் அடைந்தனர்.
பதம் 4.1.19
ப்ராணாயமேன ஸம்யம்ய மனோ வர்ஷ-ஸதம் முனி:
அசிஷ்டத் ஏக-பாதேன நிர்த்வந்த்வோ ‘னில போஜன:
ப்ரணாயாமேன—பிராணயாமம் என்னும் சுவாசப் பயிற்சியினால்; ஸம்யம்ய—கட்டுப்படுத்தினார்; மன:—மனம்; வர்ஷ-ஸதம்—நூறு வருடங்கள்; முனி:—மாமுனிவர்; அதிஷ்டத்—நிலைத்து நிற்றல்; ஏக-பாதேன—ஒற்றைக் காலில்; நிர்த்வந்வ:—இருமை இன்றி; அனில—காற்று; போஜன:—உண்டு.
அங்கு அம்மாமுனிவர் யோக சுவாசப் பயிற்சியில் தன் மனதைச் செலுத்தி எல்லாப் பற்றுக்களையும் அறுத்து வெறும் காற்றை மட்டும் உண்டு ஒற்றைக் காலில் நின்று நூறு வருடங்கள் தவம் செய்தார்.
பதம் 4.1.20
ஸரணம் தம் ப்ரபத்யே ‘ஹம் ய ஏவ ஜகத்-ஈஸ்வர:
ப்ரஜாம் ஆத்ம-ஸமாம் மஹ்யம் ப்ரயச் சத்வ இதி சிந்தயன்
ஸரணம்—சரண்புகுந்து; தம்—அவருக்கு; ப்ரபத்யே—அடைக்கலம்; அஹம்—நான்; ய—அவர்; ஏவ—உறுதியாக; ஜகத்-ஈஸ்வர—உலக நாயகன்; ப்ரஜாம்—மைந்தன்; ஆத்ம-ஸமாம்—அவரைப் போன்றே; மஹ்யம்—எனக்கு; ப்ரயச்சது—அவர் அளிப்பதற்கு; இதி—இவ்வாறு; சிந்தயன்—நினைத்தார்.
அவர் நினைக்கலுற்றார்: நான் யாரைச் சரண் புகுந்திருக்கின்றேனோ அவ்வுலக நாயகனார் என் மீது கருணை கொண்டு அவரைப் போலவே எனக்கு ஒரு மைந்தனை அளித்து அருள வேண்டும்.
பதம் 4.1.21
தப்யமானாம் த்ரி-புவனம் ப்ராணாயாமைதஸாக்னினா
நிர்கதேன முனேர் மூர்த்ன: ஸமீக்ஷய ப்ரவஸ் த்ரய:
தப்யமானம்—தவத்தினைச் செய்யும்பொழுது; த்ரி-புவனம்—மூன்று உலகங்கள்; ப்ராணாயாம—பிராணாயாமப் பயிற்சியினால்; தேஸா—எரிபொருள்; அக்னினா—தீயினால்; நிர்கதேன—வெளி வந்து; முனே:—மகாமுனிவரின்; மூர்த்ன:—தலையின் மீது; ஸமீக்ஷய—பார்க்கப்பட்டது; ப்ரபவ-த்ரய:—மும்மூர்த்திகளால் (ப்ரம்மா, விஷ்ணு மற்றும் மகேஷ்வரர்).
அத்திரி முனிவர் இவ்வாறு கடுமையான தவம் இயற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவர் செய்த பிராணாயாமப் பயிற்சியினால் அவர் தலையிலிருந்து தீப்பிழம்பு ஒன்று வெளிவந்தது. இதனை மூவுலகங்களிலுள்ள மும்மூர்த்திகளும் கண்டனர்.
பதம் 4.1.22
அப்ஸரோ-முனி-கந்தர்வ-ஸித்த-வித்யாதரோ ரகை:
விதாயமான-யஸஸஸ் தத்-ஆஸ்ரம-பதம் யயு:
அப்ஸா:—அப்ஸரஸுகளும்; முனி—முனிவர்களும்; கந்தர்வ—கந்தர்வர்களும்; ஸித்த—ஸித்தவர்களும்; வித்யாதர—வித்யாதரர்களும்; உரகை:—நாகலோகத்தைச் சேர்ந்தவர்களும்; விதாயமான—பரந்து; யஸஸ:—புகழ், பெருமை; தத்—அவரது; ஆஸ்ரம-பதம்—தவச்சாலையினை; யயு:—அடைந்தன.
உடன் மும்மூர்த்திகளும், அப்ஸரஸுகள், கந்தர்வர்கள், ஸித்தர்கள், வித்யாதரர்கள், நாகர்கள், மற்றும் தேவர்கள் புடை சூழ அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்தினை அடைந்தனர். இவ்வாறு அவர்கள் தமது தவத்தினால் புகழ்பெற்ற மாமுனிவர் அத்திரியின் தவச்சாலைக்குள் சென்றனர்.
பதம் 4.1.23
தத்-ப்ராதுர்பாவ-ஸம்யோக வித்யோதித-மணா முனி:
உத்திஷ்டன்ன ஏக-பாதேன ததர்ஸ விபுர்தஷபான்
தத்—அவர்களுடைய; ப்ராதுர்பாவ—தோற்றம்; ஸம்யோக—ஒரே சமயத்தில்; வித்யோதித—ஒளிநிறைந்தது; மனா—மனதில்; முனி:—மகாமுனிவர்; உத்திஷ்டன்—விழிப்புற்று; ஏக-பாதேன—ஒற்றைக் காலில்; ததர்ஸ—கண்டனர்; விபுத—தேவர்கள்; ருஷபான்—சிறந்தவர்கள்.
ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்து கொண்டிருந்த முனிவர் மும்மூர்த்திகளும் தன்முன் ஒரே சமயத்தில் தோன்றியது கண்டு உளம் பூரித்து மிகுந்த முயற்சியுடன் அவ்வொற்றைக் காலுடனேயே நடந்து அவர்களை அடைந்தார்.
பதம் 4.1.24
ப்ரணம்ய தண்டவத் பூமென உபதஸ்தே ‘ர்ஹணாஞ்ஜலி:
வ்ருஷ ஹம்ஸ சுபர்ண ஸ்தான் ஸ்வை; ஸ்வை சினைஸ் சசிஹ்னிதான்
ப்ரணம்ய—வந்தனம் செய்தல்; தண்டவத்—நெடுமரம் போல்; பூமென—நிலத்தில்; உபதஸ்தே—கீழே வீழ்ந்து; அர்ஹன—பூஜைக்குரிய பொருட்களுடன்; அஞ்ஜலி—கூப்பிய கரங்களுடன்; வ்ருஷ—காளை; ஹம்ஸ—அன்னம்; சுபர்ண—கருடன்; ஸ்தான்—அமர்ந்து; ஸ்வை—தனக்குரிய; சினை:—அடையாளங்களினால்; ச—மேலும்; சிந்தான்—அறியப்பட்டு.
அதன் பின்னர், கையில் சிறுபறையும், தர்ப்பைப்புல்லும், சக்கரமும் ஏந்தி காளையின் மீதும், அன்னத்தின் மீதும், கருடனின் மீதும், அமர்ந்திருந்த மும்மூர்த்திகளையும் அவர் வழிபடலானார். நீண்ட நெடுமரம் போல் நிலத்தில் வீழ்ந்து அம்முனிவர் மும்மூர்த்திகளையும் வணங்கினார்.
பதம் 4.1.25
க்ருபாவலோகேன ஹஸத் வதனேனோபலம்பிதான்
தத் -ரோசிஷா ப்ரதிஹதே நிமீல்ய முனிர் ஆக்ஷிணீ
க்ருபா-அலலோகேன—கருணை நிறைந்த பார்வையுடன்; ஸஹத்—புன்னகையுடன்; வதனேன—முகத்துடன்; உபலம்பிதான்—மிகுந்த திருப்தியுடன் காணப்பட்ட; தத்—அவர்களது; ரோசிஷா—ஒளிமிகுந்த தோற்றத்தினால்; ப்ரதிஹதே—கூசியதினால்; நிமீல்ய—மூடிக் கொண்டார்; முனி—முனிவர்; ஆக்ஷிணீ—அவரது கண்கள்.
மும்மூர்த்திகளும் தன்மீது கருணை கொண்டு தனக்கு காட்சி தந்தமை கண்டு அத்திரி முனிவர் மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவர்களிடமிருந்து வீசிய ஒளி தனது கண்களை கூசச் செய்தமையினால் அவர் சிறிது நேரம் தனது கண்களை மூடினார்.
பதங்கள் 4.1.26 – 4.1.27
சேதஸ் தத்-ப்ரவணம் யுஞ்ஜன்ன அஸ்தாவீத் ஸம்ஹதாஞ்ஜலி:
ஷ்லக்ஷ்ணயா ஸுக்தயா வாசா ஸர்வ-லோக-கரீயஸ:
அத்ரிர் உவாச
விஸ்வோத்பவ-ஸ்திதி-லயேஷு விபஜ்யமானனர்
மாயா-குணைர் அனுயுகம் விக்ருஹீத-தேஹா:
தே ப்ரஹ்ம விஷ்ணு-கிரிஸா: ப்ரணதோ’ஸ்மி அஹம்வஸ்
தேப்ய: க ஏவ பவதாம் ம இஹோபஹுத:
சேதஸ்:—இதயம்; தத்-ப்ரவணம்—அவர்களிடம் நிறுத்தி; யுஞ்ஜன்—செய்தல்; அஸ்தாவீத்—பிரார்த்தனை செய்தல்; ஸம்ஹத-அஞ்ஜலி:—கூப்பிய கரங்களுடன்; ஷ்லஷ்ணயா—மெய்மறந்து; சூக்தயா—பிரார்த்தனை; வாசா—வார்த்தைகள்; ஸர்வ-லோக—எல்லா உலகங்களிலும்; கரீயஸ:—பெருமதிப்பிற்குரிய; அத்ரி: உவாச—அத்திரி முனிவர் கூறினார்; விஸ்வ—உலகம்; உத்பவ—படைத்தல்; ஸ்திதி—காத்தல்; லயேஷு—அழித்தல்; விபஜ்யமானை:—பிரிக்கப்பட்டு; மாயா-குணை:—ஜட இயற்கையின் புறக் குணங்களினால்; அனுயுகம்—பல்வேறு யுகங்களைப் பொருத்து; விக்ருஹீத—ஏற்றுக் கொள்ளப்பட்டு; தேஹா:—உடல்கள்; தே—அவை; ப்ரஹ்ம—பிரம்ம தேவன்; விஷ்ணு—பகவான் விஷ்ணு; கிரிஸா:—சிவபெருமான்; ப்ரணத:—பணிந்து; அஸ்மி—இருக்கிறேன்; அஹம்—நான்; வ:—உங்களுக்கு; தேப்ய:—அவர்களிடமிருந்து; க:—யார்; ஏவ—உறுதியாக; பவதாம்—உங்களின்; மே—என்னால்; இஹ—இங்கே; உபஹுத:—அழைக்கப்பட்டது.
மும்மூர்த்திகளினால் கவரப்பட்டு தன் இதயம் பறி கொடுத்து சிறிது நேரம் மெய்மறந்திருந்த அத்திரி முனிவர் தன்னுணர்வு பெற்று உலக நாயகர்களைக் கூப்பிய கரங்களுடனும், இனிமையான வார்த்தைகளுடனும் துதிக்க ஆரம்பித்தார். ஒ, பிரம்ம தேவனே, மகாவிஷ்ணுவே, சிவ பெருமானே! யுகங்கள் தோறும் படைத்தல், காத்தல், அழித்தல் என்பவற்றிற்காக ஜட இயற்கையின் முக்குணங்களை ஏற்றுக் கொள்வதின் மூலம் நீங்கள் தனித்தனி உடல்களைப் பெற்று உங்களுக்குள் பிரிந்திருக்கின்றீர்கள். உங்கள் மூவருக்கும் எனது தலை தாழ்த்தி வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு எனது தவத்தினால் உங்களில் யாரை அழைத்தேன் என்று அறிந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
பதம் 4.1.28
ஏகோ மயேஹ பகவான் விவித ப்ரதானைஷ்
சித்தீ-க்ருத: ப்ரஜனனாய கதம் நு யூயம்
அத்ராகதாஸ் தனு-ப்ருதாம் மனஸோ ‘ பிதூராத்
ப்ரூத ப்ரஸீதத மஹான் இஹ விஸ்மயமே
ஏக:—ஒன்று; மயா—என்னால்; இஹ—இங்கே; பகவான்—தன்னேரில்லாதவர்; விவித—பல்வேறு; ப்ரதானன:—அணிகலன்களால்; சித்ரூ-க்ருத:—மனதில் நிறுத்தி; ப்ரஜனனாய—குழந்தை வேண்டும் என்று; கதம்—அதனால்; நு—எப்படியும்; யூயம்—நீங்கள் எல்லோரும்; அத்ர—இங்கே; ஆகதா:—தோன்றியுள்ளீர்; தனு-ப்ருதாம்—உருவினராக; மனஸ:—மனங்களின்; அபி—இருந்தாலும்; தூராத்—மேலான நிலையிலிருந்து; ப்ரூத—அன்புடன் விளக்குங்கள்; ப்ரஸீதத—என்மீது கருணை கொண்டு; மஹான்—மிகவுயர்ந்த; இஹ—இந்த; விஸ்மய:—சந்தேகம்; மே—எனது.
நான் எனக்கு முழுமுதற் கடவுளைப் போன்றே ஓர் குழந்தை வேண்டும் என்று நினைத்து அவரை அழைத்தேன். ஆனால் அவரோ மனிதனின் மன யூகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருந்த போதிலும் நீங்கள் மூவரும் இங்கே எழுந்தருளியுள்ளீர்கள். நீங்கள் மூவரும் எவ்வாறு இங்கு வந்தீர்கள் என்பதை அன்பு கொண்டு மிகவும் குழப்பமுற்றிருக்கும் எனக்கு விளக்கி அருள்வீராக.
பதம் 4.1.29
மைத்ரேய உவாச
இதி தஸ்ய வச: ஷ்ருத்வா த்ரயஸ் தே விபுதர்ஷபா:
ப்ரத்யாஹு: ஸ்லக்ஷ்ணயா வாசா ப்ரஹஸ்ய தம் ருஷிம் ப்ரபோ
மைத்ரேய: உவாச—மைத்ரேய மாமுனிவர் கூறினார்; இதி—இவ்வாறு; தஸ்ய—அவரது; வச—வார்த்தைகள்; ஷ்ருத்வா—கேட்ட பிறகு; த்ரய: தே—மூவரும்; விபுத—தேவர்கள்; ருஷபா:—தலைவர்கள்; ப்ரத்யாஹு:—பதிலிறுத்தனர்; ஸ்லஷ்ணயா—நயத்தகு; வாசா—வார்த்தைகளினால்; ப்ரஸஸ்ய—புன்னகை பூத்து; தம்—அவருக்கு; ருஷிம்—மகாமுனிவர்; ப்ரபோ—பிரபுவே.
மைத்ரேய மாமுனிவர் கூறினார்: அத்திரி முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மும்மூர்த்திகளும் புன்னகை புரிந்து கீழ் வரும் பதிலை இனிய வார்த்தைகளினால் கூறினர்.
பதம் 4.1.30
தேவா ஊசு:
யதா க்ருதஸ் தே ஸங்கல்போ பாவ்யம் தேனைவ நான்யதா
ஸத் ஸங்கல்பஸ்ய தே ப்ரஹ்மன் யத் வை த்யாயதி தே வயம்
தேவ: ஊசு:—தேவர்கள் பதில் கூறினர்; யதா—உள்ளபடி; க்ருதஸ்:—நிறைவேற்றப்பட்டது; தே—உம்மால்; ஸங்கல்ப:—உறுதியான மனத்துடன்; பாவ்யம்—செய்யப்படுவதற்கு; தேன ஏவ—அதனால்; ந அன்யதா—அவ்வாறில்லையெனில்; ஸத்-ஸங்கல்பஸ்ய—ஒருவனது நன்னோக்கம் தோல்வியுறுவதில்லை; தே—உமது; ப்ரஹ்மன்—ஓ, அன்பான அந்தணரே; யத்—அந்த; வை—உறுதியாக; த்யாயதி—தியானம்; தே—அவர்கள் அனைவரும்; வயம்—நாங்கள்.
மும்மூர்த்திகளும் அத்திரி முனிவரிடம் கூறினர்: அன்பான அந்தணரே, உமது லட்சியத்தில் நீர் உறுதியாக இருந்தீர். அதனாலேயே நாங்கள் வந்தோம். இல்லையேல் நிச்சயம் வந்திருக்கமாட்டோம். நீர் யாரை நினைத்துத் தவமியற்றினீரோ அவர் நாங்கள் தான், ஆகையினால் நாங்கள் உம் முன் தோன்றினோம்.
பதம் 4.1.31
அதாஸ்மத்-அம்ஸ-பூதாஸ் தே ஆத்மஜா லோக-விஸ்ருதா:
பவிதாரோ ‘ங்க பத்ரம்தே விஸ்ரப்ஸ்யந்தி ச தே யஸ:
அத—ஆகையினால்; அஸ்மத்—எங்கள்; அம்ஸ-பூதா—முழுமையான அம்சத்துடன்; தே—உமக்கு; ஆத்மஜா—புத்திரர்கள்; லோக-விஷ்ருதா:—மிகப்புகழ் வாய்ந்தவர்களாக: பவிதாரோ:—கூடிய விரைவில் பிறப்பார்: அங்க—அன்புள்ள மாமுனிவரே; பத்ரம்—எல்லா நன்மைகளும்; தே—உமக்கு உண்டாவதாகுக; விஸ்ரப்ஸியந்தி—பரவும்; ச—மேலும்; தே—உமது; யஸ:—புகழ்.
எங்களது இயல்புடன் கூடிய புதல்வர்கள் உமக்குப் பிறப்பார்கள்; எல்லா நன்மைகளும் உமக்கு உண்டாகவேண்டுமென்று விரும்புவதால் அப்புதல்வர்கள் உமது புகழினை இவ்வுலகமெங்கணும் பரப்புவார்கள்.
பதம் 4.1.32
ஏவம் காம-வரம் தத்த்வாக்ரதி ஜக்மு: ஸுரேஸ்வரா
ஸபாஜிதாஸ் தயோ: ஸம்யக் தம்பத் யோர் மிறதோஸ் தத:
ஏவம்—இவ்வாறு; காம-வரம்—விரும்பிய வரம்; தத்த்வ—அருளி; ப்ரதிஜக்மு:—மறைந்தனர்; ஸுர—ஈஸ்வர; தேவர்களின் தலைவர்கள்; ஸபாஜிதா:—துதிக்கப்பட்டு; தயோ:—அவர்கள்; ஸம்யக்—நிறைவாக; தம்பத்யோ—தம்பதியுடன்; மிறதோ:—பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே; தத:—அங்கிருந்து.
இவ்வாறு பிரம்ம தேவனும், மகாவிஷ்ணுவும், சிவபெருமானும் அத்திரி முனிவர் வேண்டிய வரத்தினை அவருக்கு அருளிவிட்டு, அத்திரி முனிவரும் அவர் மனைவியும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அங்கிருந்து மறைந்தனர்.
பதம் 4.1.33
ஸோமோ ‘பூத் ப்ரஹ்மணோ ‘ம்ஸேன
தத்தோ விஷ்ணோஸ் து யோகவித்
துர்வாஸா: ஷங்கர்ஸ்யாம்ஸோ
நிபோதாங்கிரஸ: ப்ரஜா:
ஸோம:—சந்திரதேவன்; அபூத்—தோன்றினான்; ப்ரஹ்மன:—பிரம்ம தேவனின்; அம்ஸேன—அம்சமாக; தத்த—தத்ராத்ரேயர்; விஷ்ணோ:—விஷ்ணுவின்; து—ஆனால்; யோக-வித்—சக்திவாய்ந்த யோகி; துர்வாஸா:—துர்வாசர்; ஸங்கர்ஸ்ய அம்ஸ:—சிவ பெருமானின் அம்சமாக; நிபோத—புரிந்து கொள்ள முயல்வாயாக; அங்கிரஸ:—அங்கிரஸ்; ப்ரஜா:—தலைமுறையினர்.
அதன் பிறகு பிரம்ம தேவனின் இயல்புடன் திங்கட் கடவுளும், பகவான் விஷ்ணுவின் இயல்புடன் மிகச் சிறந்த யோகியான தத்தாத்ரேயரும், பகவான் சங்கரரின் (சிவபெருமான்) இயல்புகளுடன் மாமுனிவர் துர்வாசரும் பிறந்தனர். இப்பொழுது நீ என்னிடமிருந்து அங்கிரச முனிவரின் பரம்பரையினரைப் பற்றி அறிவாயாக.
பதம் 4.1.34
ஸ்ரத்தா தவ அங்கிரஸ: பத்னீ சதஸ்ரோ ‘ஸுத கன்யகா:
ஸினீவாலீ குஹு ராகா சதுர்தி அனுமதி ததா
ஸ்ரத்தா—சிரத்தை; து—ஆனால்; அங்கிரஸ:—அங்கிரசு முனிவர்; பத்னீ—மனைவி; சதஸ்ர—நான்கு; அஸுத—பெற்றெடுத்தாள்; கன்யகா:—புத்திரிகள்; ஸினீவாலீ— ஸினீவாலீ; குஹு—குஹ; ராகா—ராகா; சதுர்தி—நான்காமவள்; அனுமதி:—அனுமதி; ததா—மேலும்.
அங்கிரசு முனிவரின் மனைவி சிரத்தை என்பவள் சினிவாலீ, குகூ, ராகா மற்றும் அனுமதி என்னும் நான்கு புதல்விகளை ஈன்றாள்.
பதம் 4.1.35
தத்-புத்ராவ் அபராவ் ஆஸ்தாம்
க்யாதௌ ஸ்வரோசிஷே ‘ந்தரே
உதத்யோ பகவான் ஸாக்ஷாத்
ப்ரஹ்மிஷ்டஸ் ச ப்ரஹஸ்பதி:
தத்—அவரது; புத்ரௌ—புத்திரர்கள்; அபரென—மற்றவர்கள்; ஆஸ்தாம்—பிறந்தனர்; க்யாதௌ—மிகவும் புகழ் வாய்ந்த; ஸ்வாரோ சிஷே—ஸ்வாரோசிஷ யுகத்தில்; அந்தரே—மனுவின்; உதத்ய:—உதத்யன்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த; ஸாக்ஷாத்—நேரடியாக; ப்ரஹ்மிஷ்ட: ச—ஆன்மீகத்தில் முழுவளர்ச்சியுற்ற; ப்ரஹஸ்பதி—பிரகஸ்பதி.
இந்நான்கு புதல்வியர்களைத் தவிர அவள் இரண்டு புதல்வர்களையும் ஈன்றெடுத்தாள். ஒருவர் உதத்யர் என்பவர் ஆவார். மற்றொருவர் கற்றறிந்த ஞானியான பிரகஸ்பதி ஆவார்.
பதம் 4.1.36
புலஸ்த்யோ ‘ஜனயத் பத்னியாம் அகஸ்தயம் ச ஹவிர்புவி
ஸோ ‘ன்ய-ஜன்மனி தஹ்ராக்னில் விஸ்ரவஸ் ச மஹா தபா:
புலஸ்த்ய:—புலத்திய முனிவர்; அஜனயத்—பெற்றெடுத்தார்; பத்னியாம்—தன் மனைவியினிடத்தில்; அகஸ்த்யம்—சிறந்த முனிவரான அகத்தியர்; ச—மேலும்; ஹவிர்புவி—அவிர்பூ; ஸ:—அவர் (அகத்தியர்); அன்ய-ஜன்மனி—மறுபிறவியில்; தஹ்ர-அக்னி—தராக்னி; விஸ்ரவ:—விஸ்ரவான்; ச—மேலும்; மஹாதபா:—தவத்திற் சிறந்தவர்.
புலத்தியர் தன் மனைவி அவிர்பூ என்பவள் மூலம் அகத்திய முனிவரைப் பெற்றெடுத்தார். இவரே மறுபிறப்பில் தராக்னியாக விளங்கினார். இவருக்குப் பின் புலத்தியர் மிகச் சிறந்த தவப்புதல்வரான விஸ்ரவானை ஈன்றெடுத்தார்.
பதம் 4.1.37
தஸ்ய யக்ஷ:-பதிர் தேவ குபேரஸ் த்வ இடவிடா ஸுத:
ராவண: கும்பகர்ணஸ் ச ததான்யஸ்யாம் விபீஷண:
தஸ்ய—அவருடைய; யக்ஷ-பதி:—யட்சர்களின் அரசர்; தேவ—தேவர்; குபேர:—குபேரன்; து—மேலும்; இடவிடா—இடவிடாவின்; ஸுத:—மைந்தன்; ராவண:—இராவணன்; கும்பகர்ண:—கும்பகர்ணன்: ச—மேலும்; ததா—ஆகையினால்; அன்யஸ்யாம்—அடுத்து; விபீஷண:—விடணன்.
விஸ்ரவானுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி இடவிடாவிற்கு இயக்கர்களின் தலைவனான குபேரன் பிறந்தான். இரண்டாவது மனைவி கேசினீ, இராவணன், கும்பகர்ணன், வீடணன் என்னும் மூவரை ஈன்றெடுத்தாள்.
பதம் 4.1.38
புலஹஸ்ய கதிர் பார்யா த்ரின் அஸுத ஸதீ ஸுதான்
கர்மஸ்ரேஷ்டம் வரீயாம்ஸம் ஸஹிஷ்ணும் ச மஹா-மதே
புலஹஸ்ய—புலஹரின்; கதி:—கதி; பார்யா—மனைவி; த்ரின்—மூவர்; அஸுத—ஈன்றெடுத்தாள்; ஸதீ—கற்பு; சுதான்—புதல்வர்கள்; கர்ம-ஸ்ரேஷ்டம்—பயன்தரும் செயல்களில் தேர்ந்தவர்கள்; வரீயாம்ஸம்—மிகவும் மரியாதைக்குரிய; ஸஹிஷ்ணும்—மிகுந்த பொறுமையுடைய; ச—மேலும்; மஹா-மதே—ஓ, சிறந்த விதுரரே.
புலஹ முனிவரின் மனைவியான கதி என்பவள் கர்மஸ்ரேஷ்டன், வரீயான், ஸஹிஷ்ணு என்னும் மூன்று மைந்தர்களை ஈன்றெடுத்தாள். அம்மூவருமே மிகச் சிறந்த முனிவர்களாவர்.
பதம் 4.1.39
க்ரதோர் அபி க்ரியா பார்யா வாலகில்யான் அஸுயத
ருஷீன் ஷஷ்டி-ஸஹஸ்ராணி ஜ்வலதோ ப்ரஹ்ம-தேஜஸா
க்ரதோ:—மாமுனிவர் கிரது என்பவரின்; அபி—மேலும்; க்ரியா—கிரியாய; பார்யா—மனைவி; வாலகில்யான்—வாலகில்யர்; அசூயத—பெற்றெடுத்தார்; ருஷீன்—முனிவர்கள்; ஷஷ்டி—அறுபது; ஸஹஸ்ராணி—ஆயிரம்; ஜ்வலத:—மிகுந்த அறிவுடையோர்; ப்ரஸ்ம-தேஜஸா—பிரம்ம ஜோதியினால்.
மாமுனிவர் கிரதுவின் மனைவியான கிரியா என்பவள் அறுபதனாயிரம் முனிவர்களை ஈன்றெடுத்தாள். அவர்கள் வாலகில்யர்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே ஆன்மீக அறிவில் தேர்ந்தவர்களாகவும் அவ்வறிவின் ஒளி தங்கள் உடல்களில் ஒளிரப் பெற்றும் விளங்கினார்கள்.
பதம் 4.1.40
ஊர்ஜாயாம் ஜஜ்ஞிரே புத்ரா வஸிஷ்டஸ்ய பரந்தப
சித்ரகேது-ப்ரதானாஸ் தே ஸப்த ப்ரஹ்மர்ஷயோ ‘மலா:
ஊர்ஜாயாம்—ஊர்ஜா என்பவள்; ஜஜ்ஞிரே—ஈன்றெடுத்தாள்; புத்ரா—புத்திரர்கள்; வஸிஷ்டஷ்யா—மாமுனிவர் வசிஷ்டரின்; பரந்தப—ஓ, சிறந்தவனே; சித்ரகேது—சித்திரகேது; ப்ரதானா—தலைமையில்; தே—எல்லாப் புத்திரர்களும்; ஸப்த—ஏழு; ப்ரஹ்ம ருஷ்ய:—ஆன்மீக அறிவு நிரம்பப் பெற்ற மாமுனிவர்கள்; அமலா—மாசு மருவற்றவர்கள்.
மாமுனிவர் வசிஷ்டரின் மனைவியும் அருந்ததி என்றழைக்கப்படுகின்றவளுமாகிய ஊர்ஜா, மாசு மருவற்ற ஏழு முனிபுங்கவர்களை ஈன்றெடுத்தாள். அவர்களின் தலைவர் சித்ரகேது என்பவர்.
பதம் 4.1.41
சித்ரகேது: ஸுரோசிஸ் ச விரஜா மித்ர ஏவ ச
உல்பணோ வஸுப்ருத்யானோ த்யுமான் ஸக்தி-ஆதயோ ‘பரே
சித்ரகேது—சித்திரகேது; ஸுரோசி:-ச—ஸுரோசியும்; விரஜா—விரஜான்; மித்ர:—மித்திரன்; ஏவ—கூட; ச—மேலும்; உல்பண—உல்பணன்; வஸுப்ருத்யா—வஸுப்ருத்யனன்; த்யுமான்-ஸக்தி-ஆதய—சக்தி என்பவரின் தலைமையின் கீழ் உள்ள புதல்வர்கள்; அபரே—மற்றொரு மனைவியிடமிருந்து.
இவ்வேழு முனிவர்களின் பெயர்கள் பின்வருமாறு: சித்ரகேது, ஸுரோசி, விரஜான், மித்திரன், உல்பணன், வஸுப்ருத்யனன் மற்றும் துயுமான் ஆகும். வசிஷ்டரின் மற்றொரு மனைவியிடமிருந்தே மற்றுஞ் சில தேர்ந்த புதர்வர்களும் பிறந்தனர்.
பதம் 4.1.42
சித்திஸ் த்வ அதர்வண: பத்னீ லேபே புத்ரம் த்ருத-வ்ரதம்
தத்யாஞ்சம் அஸ்வஸிரஸம் ப்ருகோர் வம்ஸம் நிபோதமே
சித்தி—சித்தி; து—மேலும்; அதர்வண—அதர்வான்; பத்ன—மனைவி; லேபே—பெற்றாள்; புத்ரம்—புத்திரன்; த்ருத-வ்ரதம்—முற்றிலும் தன்னை ஓர் சபதத்திற்கு ஈடுபடுத்துதல்; தத்யஞ்சம்—தத்யஞ்சன்; அஸ்வஸிரஸம்—அஸ்வரஸிரான்; ப்ருகோ-வம்ஸம்—பிருகு வம்சத்தினர்; நிபோத—புரிந்துகொள்வதற்கு முயல்வாயாக; மே—என்னிடமிருந்து.
அதர்வான் முனிவரின் மனைவியான சித்தி என்பவள் அஸ்வஸிரான் என்னும் மைந்தனை ஈன்றெடுத்தாள். அவள் தத்யஞ்சம் என்னும் மிகப்பெரிய உறுதிமொழியினை மேற்கொண்டவள். இப்பொழுது நீ என்னிடமிருந்து பிருகு முனிவரின் பரம்பரையினைப் பற்றி அறிவாயாக.
பதம் 4.1.43
ப்ருகு: க்யாத்யாம் மஹா-பாக: பத்னியாம் புத்ரான் அஜீஜனத்
தாதாரம் ச விதாதாரம் ஸ்ரியம் ச பகவத்-பராம்
ப்ருகு:—பிருகு மாமுனிவர்; க்யாத்யாம்—அவர் மனைவி கியாதியினிடத்தில்; மஹாபாக—பெரும் அதிர்ஷ்டசாலி; பத்னியாம்—மனைவிக்கு; புத்ரான்—புத்திரர்கள்; அஜீஜனத்—பெற்றெடுத்தார்கள்; தாதாரம்—தாதா; ச—மேலும்; விதாதாரம்—விதாதா; ஸ்ரியம்—ஸ்ரீ என்னும் பெயருடைய மகள்; ச-பகவத்-பராம்—பகவானின் சிறந்த பக்தை.
பிருகு மாமுனிவர் மிகப்பெரிய பேறு பெற்றவர். அவர் தனது மனைவியான கியாதி என்பவளிடத்து தாதா, விதாதா என்னும் இரு மைந்தர்களையும் ஸ்ரீ என்னும் ஒரு மகளையும் பெற்றெடுத்தார். அம்மகள் முழுமுதற் கடவுளினிடத்துச் சிறந்த பற்றுடையவளாக விளங்கினாள்.
பதம் 4.1.44
ஆயதிம் நியதிம் சைவ ஸுதே மேருஸ் தயோர் அதாத்
தாப்யாம் தயோர் அபவதாம் ம்ருகண்ட: ப்ராண ஏவ ச
அயதிம்—அயதி; நியதிம்—நியதி; ச ஏவ—மேலும்; ஸுதே—புதல்வியர்; மேரு—மேரு முனிவர்; தயோ—இவர்கள் இருவருக்கும்; அதாத்—மணம் முடிக்கப்பட்டனர்; தாப்யாம்—அவர்களில்; தயோ:—அவர்களிருவரும்; அபவதாம்—தோன்றினார்; ம்ருகண்ட:—மிருகண்டர்; ப்ராண—பிராணர்; ஏவ—உறுதியாக; ச—மேலும்.
மேரு முனிவருக்கு இரண்டு புதல்விகள். அவர்களது பெயர்கள் ஆயதி மற்றும் நியதி என்பவையாகும். அவர்களிருவரும் தாதா மற்றும் விதாதாவை மணம் புரிந்தனர். இம்மகளிர் இருவரும் மிருகண்டரையும் பிராணரையும் ஈன்றெடுத்தனர்.
பதம் 4.1.45
மார்கண்டேயோ ம்ருகண்டஸ்ய ப்ராணாத் வேதஸிரா முனி:
கவிஸ்ச பார்கவோ யஸ்ய பகவான் உஸனா ஸுத:
மார்கண்டேய:—மார்கண்டேயர்; ம்ருகண்டஸ்ய—மிருகண்டரின்; ப்ராணாத்—பிராணரிடமிருந்து; வேதஸிரா:—வேதஸிரான்; முனி:—சிறந்த முனிவர்: கவி: ச—கவி என்னும் பெயர்; பார்கவ:—பார்கவ என்னும் பெயரில்; யஸ்ய—அவரது; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த; உஷனா—சுக்கிராச்சாரியார்; ஸுத—மைந்தன்.
மிருகண்டரிடமிருந்து மார்கண்டேய முனிவரும், பிராணரிடமிருந்து வேதஸிரானும் பிறந்தனர். வேதஸிரானின் மைந்தனே கவி என்றழைக்கப்படும் உஷனா (சுக்கிராச்சாரியார்) ஆவார். எனவே கவி என்பாரும் பிருகு பரம்பரையினைச் சார்ந்தவர் ஆகிறார்.
பதங்கள் 4.1.46 – 4.1.47
த ஏதே முனய: க்ஷத்தர்லோகான் ஸர்கைர் அபாவயன்
ஏஷ கர்தம-தெளாஹித்ர ஸந்தான: கதிதஸ் தவ
ஸ்ருண்வத: ஸ்ரத்ததானஸ்ய ஸத்ய: பாப-ஹர: பர:
ப்ரஸுதிம் மானவீம் தக்ஷ உபயேமே ஹி அஜாத்மஜ:
தே—அவர்கள்; ஏதே—எல்லோரும்; முன்ய—மகா முனிவர்கள்; க்ஷத்த—ஓ விதுரரே; லோகான்—மூவுலகங்கள்; ஸர்கை—அவர்களது சந்ததியினருடன்; அபாவயன்—நிரப்பப்பட்டது; ஏஷ:—இந்த; கர்தம—கர்தம முனிவரின்; தௌஹித்ர—பேரப்பிள்ளைகள்; ஸந்தான—சந்ததியினர்; கதிதஸ்—ஏற்கெனவே சொல்லப்பட்டது; தவ—உனக்கு; ஸ்ருண்வத—கேட்டல்; ஸ்ரத்ததானஸ்ய—நம்பிக்கையின்; ஸத்ய—உடனடியாக; பாப-ஹர—பாவங்களைத் தீர்க்கும்; பர—உயர்ந்த; ப்ரஸுதிம்—பிரசூதி; மானவீம்—மனுவின் மகள்; தக்ஷ:—மன்னன் தக்ஷன்; உபயேமே—மணந்தாள்; ஹி—உறுதியாக; அஜ-ஆத்மஜ—பிரம்மாவின் மைந்தன்.
எனது அன்பிற்குரிய விதுரனே, உலகின் மக்கட் தொகையானது முனிவர்களின் மரபினராலும், கர்தம முனிவரின் புதல்விகளினாலும் இவ்வாறு பெருகியது. இவ்வம்சாவழியினரைப் பற்றிய விவரங்களை நம்பிக்கையுடன் கேட்கும் ஒருவர் தனது எல்லாவிதப் பாவங்களில் இருந்தும் விடுதலையடைகிறார். மனுவின் மற்றொரு புதல்வியான பிரசூதி என்பவள் பிரம்மாவின் புதல்வனான தட்சனை மணந்தாள்.
பதம் 4.1.48
தஸ்யாம் ஸஸர்ஜ துஹித்ரூ: ஷோடஸாமல-லோசனா:
த்ரயோதஸாதாத் தர்மாய ததைகாம் அக்னயே விபு:
தஸ்யாம்—அவளுக்கு; ஸஸர்ஜ—பிறந்தனர்; துஹித்ரூ—புதல்வியர்; ஹோடஸா—பதினாறு; அமல-லோசனா:—செந்தாமரை போன்ற செவ்விழிகள்; த்ரயோதஸ—பதின்மூன்று; அதாத்—கொடுக்கப்பட்டனர்; தர்மாய—தர்மனுக்கு; ததா—ஆகையினால்; ஏகாம்—ஒருத்தியை; அக்னயே—அக்னிதேவனுக்கு; விபு—தட்சன்.
தட்சன் தனது மனைவி பிரசூதியினிடத்தில் செந்தாமரை போன்ற சிவந்த விழிகளையுடைய அழகிய பதினாறு புதல்விகளைப் பெற்றெடுத்தாள். இவர்களுள் பதின்மூன்று பேர்கள் தர்மராஜனுக்கும் ஒருத்தி அக்கினி தேவனுக்கும் மணமுடிக்கப்பட்டனர்.
பதங்கள் 4.1.49 – 4.1.52
பித்ருப்ய ஏகாம் யுக்தேப்யோ பாவாயைகாம் பவு-ச்சிதே
ஸ்ரத்தா மைத்ரீ தயா ஸாந்திஸ் துஷ்டி: புஷ்டி: க்ரியோன்னதி
புத்திர் மேதா திதிக்ஷா ஹ்ரீர் மூர்திர் தர்மஸ்ய பத்னய:
ஸ்ரத்தாசூத ஸுபம் மைத்ரீ ப்ரஸாதம் அபயம் தயா
ஸாந்தி சுகம் முதம் துஷ்டி: ஸ்மயம் புஷ்டிர் அசுயத
யோகம் க்ரியோன்னதிர் தர்பம் அர்தம் புத்திர் அசுயத
மேதா ஸ்ம்ருதிம் திதிக்ஷாது க்ஷேமம் ஹ்ரீ: ப்ரஸ்ரயம் சூதம்
மூர்தி: ஸர்வ-குணோத்பத்திர் நர-நாராயணாவ் ருஷீ
பித்ருப்ய:—பிதாக்களுக்கு; ஏகாம்—ஒரு புதல்வி; யுக்தேப்ய:—சேர்ந்த; பவாய—சிவபெருமானுக்கு; ஏகாம்—ஒருத்தியை; பவசிதே—ஜடக்கட்டுக்களின்று விடுவிப்பவர்; ஷ்ரத்தா, மைத்ரீ, தயா, ஷாந்தி: துஷ்டி: புஷ்டி: க்ரியா, உன்னதி: புத்தி: மேதா, திதிக்ஷா ஹ்ரி, மூர்தி—தட்சன் புதல்வியர் பதின்மூவரின் பெயர்கள்; தர்மஸ்ய—தர்மராஜனுக்கு; பத்னிய:—மனைவியர்; ஸ்ரத்தா—சிரத்தை; அஸுத—பெற்றெடுத்தல்; ஸுபம்—சுபா; அபயம்—அபயா; தயா—தயா; ஷாந்தி:—சாந்தி; ஸுகம்—சுகம்; அசூயதா—பெற்றெடுத்தல்; யோகம்—யோகம்; க்ரியா—கிரியா; உன்னதி—உன்னதி; தர்பம்—தர்பன்; அர்தம்—அர்தன்; புத்தி—புத்தி; அசூயத—பெற்றெடுத்தாள்; மேதா—மேதை; ஸ்ம்ருதிம்—ஸ்மிருதி; திதிக்ஷா—திதிக்ஷை; து—மேலும்; க்ஷேமம்—க்ஷேமன்; ஹ்ரீ:—ஹ்ரீ; ப்ரஸ்ரயம்—பிரஸ்ரயன்; சூதம்—மைந்தன்; மூர்தி—மூர்தி; ஸர்வ-குண—எல்லா மரியாதைக்குரிய குணங்களும்; உற்பத்தி:—உறைவிடம்; நர-நாராயணென—நரன் மற்றும் நாராயணர்; ரிஷீ—இரு முனிவர்கள்.
மீதமிருந்த இருவரில் ஒருத்தி தேவலோகத்திற்குத் தானமாக வழங்கப்பட்டாள். அங்கே அவள் அமைதியுடன் வாழ்ந்தாள். மற்றொருத்தி உலகப் பிடிப்புகளில் இருந்து பாவிகளை விடுவிக்கும் சிவபெருமானுக்கு மணமுடிக்கப்பட்டாள். தர்மராஜனுக்குக் கொடுக்கப்பட்ட தக்ஷனின் பதின்மூன்று புதல்வியரும் பின்வரும் மைந்தர்களை ஈன்றெடுத்தனர்: சிரத்தை சுபனையும், மைத்ரி பிரஸாதனையும், தயை அபயனையும், சாந்தி சுகனையும், துஷ்டி முதனையும், புஷ்டி சுமயனையும், கிரியா யோகனையும், உன்னதி தர்பனையும், புத்தி அர்தனையும், மேதை ஸ்மிருதியையும், திதிக்ஷை க்ஷேமனையும், ஹிரீ என்பவள் பிரஷ்ரயனையும் எல்லா நற்குணங்களையும் தன்னிடத்தே கொண்ட மூர்தி என்பவள் முழுமுதற் கடவுளான நமோ நாராயணனையும் ஈன்றெடுத்தாள்.
பதம் 4.1.53
யயோர் ஜன்மனி அதோ விஸ்வம் அப்யனந்தத் சுநிர் வ்ருதம்
மனாம்ஸி ககுபோ வாதா: ப்ரஸேது: ஸரிதோ ‘த்ரய:
யயோ:—அவர்களிருவரும் (ஓம் நாராயணர்); ஜன்மனி—தோன்றியதினால்; அத:—அந்த; விஷ்வம்—உலகம்; அப்யனந்தத்—மகிழ்ந்தது; சூ-நிர்விதம்—மிக்க மகிழ்ச்சியில்; மனாம்ஸி:—அனைவரின் மனங்களும்; ககுப:—எல்லாத்திசைகளும்; வாத—காற்று; ப்ரஸேது:—களித்தது; ஸரித:—ஆறுகள்; அத்ரய:—மலைகள்.
ஓம்-நாராயணர் தோன்றியதைக் கண்டு இவ்வுலகம் முற்றும் மகிழ்ச்சியில் மூழ்கியது. அனைவரின் உள்ளங்களும் அமைதியடைந்தன. மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்துத் திக்குகளிலுமுள்ள காற்றும், நதிகளும், மலைகளும் கூட களிப்பில் திகைத்தன.
பதங்கள் 4.1.54 – 4.1.55
திவி அவாத்யந்த தூர்யாணி பேது: குசும-வ்ருஷ்டய:
முனையஸ் துஷ்டுவுஸ் துஷ்டா ஜகுர் கந்தர்வ-கின்னரா:
நிருத்யந்தி ஸ்ம ஸ்த்ரியோ தேவ்ய ஆஸீத் பரம-மங்கலம்
தேவா ப்ரஹ்மாதய: ஸர்வே உபதஸ்துர் அபிஷ்டவை:
திவி—தேவலோகத்தில்; அவாத்யந்த—அதிர்ந்தன; தூர்யாணி—மங்கள வாத்தியங்கள்; பேது—பொழிந்தனர்; குசும—மலர்களின்; வ்ருஷ்டய—பொழிதல்; முனைய—முனிவர்கள்; துஷ்டுவுஸ்—வேதமந்திரங்களை முழங்கினர்; துஷ்டா—அமைதியடைதல்; ஜகு:—பாடத் தொடங்கினர்; கந்தர்வ—கந்தர்வர்கள்; கின்னரா:—கின்னரர்கள்; நிருத்யந்தி ஸ்ம—ஆடினர்; ஸ்த்ரிய:—அழகிய தேவ மகளிர்; தேவ்ய—தேவலோகத்தின்; ஆஸீத்—காணப்பட்டது; பரம-மங்கலம்—உயர்ந்த மங்கலமான; தேவா:—தேவர்கள்; ப்ரஹ்ம-ஆதய—பிரம்மாவும் மற்றவர்களும்; ஸர்வே—அனைவரும்; உபதஸ்து:—வணங்கினர்; அபிஸ்டவை—மரியாதைக்குரிய பிரார்த்தனைகள்.
தேவர்கள் மங்கல வாத்தியங்கள் முழங்கினர். மலர் மாரி பொழிந்தனர். நர-நாராயணர் தோன்றியமையால் சாந்தியுற்ற முனிவர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். தேவலோகத்துக் கந்தர்வர்களும் கின்னரர்களும் பாடி மகிழ, எழில் சிந்தும் தேவமகளிர் ஆடி மகிழ்ந்தனர். மும்மூர்த்திகளுள் ஒருவரான பிரம்ம தேவனும் தனது மரியாதைக்குரிய வணக்கங்களைத் தெரிவித்தார்.
பதம் 4.1.56
தேவா ஊசு:
யோ மாயயா விரசிதம் நிஜயாத்மனீதம்
கே ரூப-பேதம் தத்-பிரதிசக்ஷணாய
ஏதேன தர்ம ஸதனே ருஷி-மூர்தினாத்ய
ப்ராதுஸ்சகார புருஷாய நம: பரஸ்மை
தேவா—தேவர்கள்; ஊசு—கூறினாள்; ய—எவர்; மாயயா—புறச்சக்தியான மாயையினால்; விரசிதம்—உண்டாக்கப்பட்டது; நிஜயா—அவரது சொந்தமான; ஆத்மனி—அவரிடத்தில் இருப்பது; இதம்—இந்த; கே—வானத்தில்; ரூப-பேதம்—மேகக் கூட்டங்கள்; இவ—அதைப்போல; தத்—அவருடைய; ப்ரதிசக்ஷணாய—தோற்றத்திற்காக; ஏதேன—இதனுடன்; தர்ம-ஸதனோ—தர்மரின் இல்லத்தில்; ருஷி-மூர்த்தினா—முனிவரின் வடிவத்தில்; அத்ய—இன்று; ப்ராதுஸ்சகார—தோன்றினார்; புருஷாய—முழுமுதற் கடவுளுக்கு; நம—மரியாதைக்குரிய வந்தனங்கள்; பரஸ்மை—உயர்ந்த.
தேவர்கள் கூறினர்: தனது புறச் சக்தியினால் இவ்வியல் உலகினைப் படைத்து, காற்றும், மேகமும் எவ்வாறு வானில் உள்ளனவோ அதைப்போல் இவ்வுலகினையும் தன்னுள் வைத்திருப்பவருமான முழுமுதற் கடவுள் தர்மரின் இல்லத்தில் இப்பொழுது நர நாராயண முனிவராக அவதரித்துள்ளார். அவருக்கு நமது மரியாதைக்குரிய வந்தனங்களைத் தெரிவிப்போமாக.
பதம் 4.1.57
ஸோ ‘யம் ஸ்திதி-வ்யதிகரோபஸமாய ஸ்ருஷ்டான்
ஸத்த்வேன ந: ஸுர-கணான் அனுமேய தத்த்வ:
த்ருஸ்யாத் அதப்ர-கருணேன விலோகனேன
யச் ச்ரீ-நிகேதம் அமலம் கக்ஷிபதாரவிந்தம்
ஸ:—அந்த; அயம்—அவர்; ஸ்திதி—படைக்கப்பட்ட உலகின்; வ்யதிகர—உத்பாவங்கள்; உபஸமாய—அழிப்பதற்காக; ஸ்ருஷ்டான்—படைக்கப்பட்டது; அனுமேய-தத்த்வ:—வேதங்களினால் உணர்ந்து கொள்ளப்பட்ட; த்ருஸ்யாத்—பார்வை பட்டால்; அதப்ர-கருணேன—கருணைமயமான; விலோகனேன—பார்வை; யத்—எது; ஸ்ரீ-நிகேதம்—அதிர்ஷ்ட தேவதையின் இருப்பிடம்; அமலம்—குற்றமற்ற; க்ஷிபத—அகற்றுகிறது; அரவிந்தம்—செந்தாமரை மலர்.
உண்மையாக அங்கீகரிக்கப்பட்ட வேத இலக்கியங்களினால் அறிந்து கொள்ளப்பட்டவரும், தன்னால் படைக்கப்பட்ட இவ்வுலகில், உள்ள அனைத்துப் பேரிடர்களையும் நீக்குவதற்காக, அமைதியினையும், செல்வத்தினையும் படைத்தவருமான முழுமுதற் கடவுள் அன்பு கொண்டு தனது கருணை மிக்கப் பார்வையினை தேவர்கள் மீது வைப்பாராக. நல்லூழ் விளைக்கும் தேவதை வாழ்கின்ற குற்றமற்ற செந்தாமரையின் அழகினையும் வெல்லும் தன்மை வாய்ந்தது அவரது கருணை மிக்க பார்வையாகும்.
பதம் 4.1.58
ஏவம் ஸுர- கணைஸ் தாத பகவந்தாவ் அபிஷ்டுதெள
லப்தாவலோகைர் யயதுர் அர்சிதௌ கந்தமாதனம்
ஏவம்—இவ்வாறு; சூர-கணை:—தேவர்களினால்; தாத—ஓ, விதுரனே; பகவந்தௌ—முழுமுதற் கடவுள்; அபிஷ்டுதெள—புகழப்பட்டு; லப்த—அடையப்பெற்றனர்; அவலோகை—பார்வை (கருணைமிக்க); யயதுர்—புறப்பட்டார்; அர்சிதௌ—பிரார்த்திக்கப்பட்டு; கந்தமாதனம்—கந்தமாதன மலைக்கு.
(மைத்ரேயர் கூறினார்:) ஓ, விதுரனே, தேவர்கள் இவ்வாறு நர நாராயணராக பிறப்பெடுத்த முழுமுதற் கடவுளை வணங்கினர். பகவானும் தமது கருணை மிக்க விழிகளினால் அவர்களைப் பார்த்துவிட்டு கந்தமாதனம் என்னும் மலையினை நோக்கிப் புறப்பட்டனர்.
பதம் 4.1.59
தாவ் இமெள வை பகவதோ ஹரேர் அம்ஸாவ் இஹாகதௌ
பார வ்யயாய ச புவ: க்ருஷ்ணௌ யது-குரூத்வஹௌ
தாவ்—இருவரும்; இமௌ—இவை; வை—உறுதியாக; பகவத—முழுமுதற் கடவுளின்; ஹரே:—ஹரியின்; அம்ஸௌ—அம்சமாக; இஹ—இங்கு (இவ்வுலகில்); ஆகதௌ—தோன்றியிருக்கின்றார்; பார-வ்யயாய—சுமையினைக் குறைப்பதற்காக; ச—மேலும்; புவ:—உலகினுடைய; கிருஷ்ணெள—இரண்டு கிருஷ்ணர்கள் (கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன்); யது-குரு-உத்வஹௌ—யது மற்றும் குருகுலத்தின் மிகச் சிறந்த இருவர்.
கிருஷ்ணரின் அம்சமான நர நாராயண ரிஷியே யது மற்றும் குரு குலத்தில் கிருஷ்ணராகவும், அர்ச்சுனனாகவும், இவ்வுலகின் துன்பத்தினைக் குறைப்பதற்காகப் பிறந்துள்ளார்.
பதம் 4.1.60
ஸ்வாஹாபிமானினஸ் சாக்னேர் ஆத்மஜம்ஸ் த்ரீன் அஜீஜனத்
பாவகம் பவமானம் ச ஸுசிம் ச ஹுத-போஜனம்
ஸ்வாஹா—சுவாகா எனப்படும் அக்னியின் மனைவி; அபிமானின—அக்னியின் அதிபதித் தெய்வம்; ச—மேலும்; அக்னே:—அக்கினியிடமிருந்து; ஆத்மஜான்—மைந்தர்கள்; த்ரீன்—மூவர்; அஜீஜனத்—பிறந்தனர்; பாவகம்—பாவகன்; பவமானம் ச—பவமானன்; ஸுசிம் ச—சுசி என்பவரும்; கூத-போஜனம்—வேள்வியில் அர்ப்பணிக்கப்படுபவற்றை ஏற்பவர்கள்.
அக்கினி எனும் அதிபதித் தெய்வம் தன் மனைவி சுவாகாவினிடத்தில் பாவகன், பவமானன் மற்றும் சுசி என்னும் மூன்று புதல்வர்களை ஈன்றெடுத்தார். அவர்களே வேள்வித் தீயில் அர்ப்பணிக்கப்படுபவற்றை உண்டு உயிர் வாழ்பவர் ஆவர்.
பதம் 4.1.61
தேப்யோ ‘க்னய: ஸமபவன் சத்வாரிம்ஸச் ச பாஞ்ச ச
த ஏவைகொனபஞ்சாஸத் ஸாகம் பித்ரு-பிதாமஹை:
தேப்ய:—அவர்களிடமிருந்து; அக்னய:—அக்கினித் தேவர்கள்; ஸமபவன்—பெற்றெடுக்கப்பட்டனர்; சத்வாரிம்ஸச்—நாற்பது; ச—மேலும்; பாஞ்ச—ஐந்து; ச—மேலும்; தே—அவர்கள்; ஏவ—உறுதியாக; ஏகோன-பஞ்சாஸத்—நாற்பத்தொன்பது; ஸாகம்—அதனுடன்; பித்ரு-பிதாமஹை—தந்தையரும், தாத்தாக்களும்.
அம்மூன்று புதர்வர்களுக்கும் நாற்பத்தைந்து மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் அனைவரும் அக்கினித் தேவர்களேயாவர். ஆகவே, அக்கினித் தேவர்களின் மொத்த எண்ணிக்கை தந்தையாரையும், தாத்தாக்களையும் சேர்த்து நாற்பத்தொன்பது ஆகும்.
பதம் 4.1.62
வைதானிகே கர்மணி யன்-நாமபிர் ப்ரஹ்ம-வாதிபி:
ஆக்னேய்ய இஷ்டயோ யஜ்ஞே நிரூப்யந்தே ‘க்னயஸ் து தே
வைதானிகே—அர்ப்பணிக்கப்படும் பொருள்கள்; கர்மணி—செயல்; யத்—அக்கினித் தேவர்களின்; நாமபி:—பெயர்களினால்; ப்ரஹ்ம-வாதிபி:—அருவவாதிகளான அந்தணர்களால்; ஆக்னேய்ய:—அக்கினிக்கு; இஷ்டய:—வேள்விகள்; யஜ்ஞே—வேள்வியில்; நிரூப்யந்தே—ஏற்றுக் கொள்பவர்கள்; அக்னய—நாற்பத்தொன்பது அக்கினித் தேவர்கள்; து—ஆனால்; தே—அவர்கள்.
அருவவாதிகளான அந்தணர்களால் வேள்வித் தீயில் எரியப்படும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுக் கொள்பவர்கள் இந்த நாற்பத்தொன்பது அக்கினித் தேவர்களேயாவர்.
பதம் 4.1.63
அக்னிஸ்வாத்தா பர்ஹிஷத: ஸௌம்யா: பிதர ஆஜ்யபா:
ஸாக்னயோ ‘னக்னயஸ் தேஷாம் பத்னீ தாக்ஷாயணீ ஸ்வதா
அக்னிஷ் வாத்தா—அக்கினி வாத்தர்கள்; பர்ஹிஷத—பர்ஹிஷதர்கள்; ஸெம்யா—சௌம்யர்கள்; பிதார—முன்னோர்கள்; ஆஜ்யபா—ஆஜ்யபர்கள்; ஸ-அக்னய:—இவர்கள் அனைவரும் நெருப்பைத் துணையாகக் கொண்டவர்கள்; அனக்னய:—நெருப்பைத் துணையாகக் கொள்ளாதவர்கள்; தேஷாம்—அவர்களின்; பத்னீ—மனைவி; தாக்ஷாயணீ—தட்சனின் புதல்வி; ஸ்வதா—சுவதா.
அக்கினிஷ்வாத்தர்கள், பர்ஹிஷதர்கள், சௌம்யர்கள், மற்றும் ஆஜ்யபர்கள் அனைவரும் பிதாக்கள் ஆவர். அவர்கள் ஸாக்னிகள் அல்லது நிராக்னிகள் ஆவர். இவ்வனைத்துப் பிதாக்களின் மனைவியானவள் தட்ச சக்ரவர்த்தியின் மகளான சுவதா ஆவாள்.
பதம் 4.1.64
தேப்யோ ததார கன்யே த்வே வயுனாம் தாரிணீம் ஸ்வதா
உபே தே ப்ரஹ்ம-வாதின்யௌ ஜ்ஞான-விஜ்ஞான-பாரகே
தேப்ய:—அவர்களிடமிருந்து; ததார—பிறந்தனர்; கன்யே—புதல்விகள்; த்வே—இருவர்; வயுனாம்—வயுனா; தாரிணீம்—தாரிணீ; ஸ்வதா—சுவதா; உபே—அவர்களிருவரும்; தே—அவர்கள்; ப்ரஹ்ம-வாதின்யௌ—அருவவாதிகள்; ஜ்ஞான-விஜ்ஞான-பார-கே—இருவரும் உன்னத அறிவும், வேத அறிவும் மிக்கவர்கள்.
பிதாக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுவதா என்பாள் வயுனா, தாரிணீ என்னும் இரண்டு புதல்விகளை ஈன்றெடுத்தாள். அவர்கள் இருவருமே அருவவாதிகள், என்பதோடு உன்னத அறிவும், வேத அறிவும் மிக்கவர்களாகவும் விளங்கினர்.
பதம் 4.1.65
பவஸ்ய பத்னீ து ஸதீ பவம் தேவம் அனுவ்ரதா
ஆத்மன: ஸத்ருஷம் புத்ரம் ந லேபே குண-ஷீலத:
பவஸ்ய—பவரின் (சிவபெருமான்); பத்னீ—மனைவி; து—ஆனால்; ஸதீ—சதி என்பவள்; பலம்—பலருக்கு; தேவம்—தேவர்; அனுவ்ரதா—முழுநம்பிக்கையுடன் தொண்டு செய்து; ஆத்மன:—அவளுடைய; ஸத்ருஸம்—அதேபோன்று; புத்ரம்—புத்திரன்; ந லேபே—பெறவில்லை; குண-ஷீலத:—நற்குணத்தினாலும், நன்னடத்தையினாலும்.
தட்சனின் பதினாறாவது புதல்வி சதீ என்பவள். அவள் தான் சிவபெருமானின் மனைவியும் ஆவாள். எப்போதும் தன் கணவருக்கு நம்பிக்கையுடன் பணிவிடைகள் செய்தும் அவளுக்கு குழந்தைப் பேறு கிடைக்கவில்லை.
பதம் 4.1.66
பிதரி அப்ரதிரூபே ஸ்வ பவாயானாகஸே ருஷா அப்ரெளடைவாத்மனாத்மானம் அஜஹாத் யோக-ஸம்யுதா
பிதாரி—தந்தையாக; அப்ரதிரூபே—எதிராக; ஸ்வே—தனக்கு; பவாய—சிவபெருமானுக்கு; அனாகஸே—குற்றமிழைக்காதிருத்தல்; ருஷா—ஆத்திரத்துடன்; அபரௌதா—பக்குவம் அடைவதற்கு முன்பே; ஏவ—கூட; ஆத்மனா—அவளால்; ஆத்மானம்—உடல்; அஜஹாத்—விட்டுவிடுதல்; யோக-ஸம்யுதா—யோக ஸித்தியினால்.
இதன் காரணம் என்னவென்றால் சதீயின் தந்தையான தட்சன் குற்றமில்லாதவராயிருந்தும் சிவபெருமானை எப்போதும் நிந்தித்ததேயாகும். இதனைத் தொடர்ந்து சதீ முதிர்ச்சியடையாத பருவத்திலேயே யோக சித்தியின் மூலம் தனது உடலை விட்டுவிட நேர்ந்தது.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின், “மனுவின் புதல்வியரது குடிவழிப் பட்டியல்“ எனும் தலைப்பைக் கொண்ட ஒன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.