அத்தியாயம் – 18
பிருது மகாராஜன் மண்ணுலகைச் சாறு இறக்குதல்
பதம் 4.18.1
மைத்ரேய உவாச
இத்தம் ப்ருதும் அபிஷ்டூய ருஷாப்ரஸ்புரிதாதரம்
புனர் ஆஹாவனிர் பீதா ஸம்ஸ்தப்யாத்மானம் ஆத்மனா
மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; சித்தம்—இவ்வாறு; ப்ருதும்—மன்னர் பிருதுவுக்கு; அபிஷ்வய—பிரார்த்தனைகள் செய்த பின்னர்; ருஷா—சினத்தில்; ப்ரஸ்புரித—துடித்தல்; அதரம்—அவரது இதழ்கள்; புன:—மீண்டும்; ஆஹ—அவள் கூறினாள்; அவனி:—பூமிக்கோளம்; பீதா—அச்சத்தில்; ஸம்ஸ்தப்ய—சமப்படுத்திக் கொண்ட பின்னர்; ஆத்மானம்—மனம்; ஆத்மனா—புத்தியினால்.
மாமுனிவர் மைத்ரேயர் விதுரரிடம் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, பூமிக்கோளம் ஆகிய அவன் வழிபாடுகளை முடித்த பின்னருங் கூட பிருது மன்னர் சமாதானமடையவில்லை. அவர் உதடுகள் மிகுந்த சினத்தினால் துடித்தன. அன்னை பூமி அச்சங்கொண்டாலும் அவள் தனது மனதினை திடப்படுத்திக் கொண்டு மன்னரைச் சமாதானப்படுத்துவதற்காக பின்வருவனவற்றைக் கூறத் தொடங்கினாள்.
பதம் 4.18.2
ஸன்னியச்சாபிபோ மன்யும் நிபோத ஸ்ராவிதம் சமே
ஸர்வத: ஸாரம் ஆதத்தே யதா மது-கரோ புத:
ஸன்னியச்ச—அருள் கூர்ந்து அமைதியடைவீராக; அபிபோ—ஓ அரசரே, மன்யும்—சினம்; நிபோத—புரிந்து கொள்ள முயல்வீர்; ஸ்ராவிதம்—கூறப்பட்டவை; ச—மேலும்; மே—என்னால்; ஸர்வத:—எங்கிருந்தும்; ஸாரம்—சாரம்; ஆதத்தே—எடுத்துக் கொள்கிறது; யதா—போன்று; மது-கர:—மது கரம் (வண்டு); புத:—புத்திமான்.
வணக்கத்திற்குரிய மன்னரே, சினம் தவிர்த்து, நான் கூறுவனவற்றைப் பொறுமையுடன் அருள் கூர்ந்து கேட்பீராக, தயை கூர்ந்து உமது கவனத்தை இதன் பால் திருப்புவீராக. நான் ஒரு ஏழையாக இருக்கலாம். ஆனாலும் தும்பியானது பல்வேறு மலர்களில் இருந்து எவ்வாறு தேனை சேகரிக்கிறதோ அது போல் கற்றவன் அறிவின் சாரத்தை எல்லா இடங்களில் இருந்தும் பெற்றுக் கொள்கிறான்.
பதம் 4.18.3
அஸ்மில் லோகே ‘தவாமுஷ்மின் முனிபிஸ் தத்த்வ-தர்ஸிபி:
த்ருஷ்டா யோக: ப்ரயுக்தாஸ் ச பும்ஸாம் ஸ்ரேய:-ப்ரஸித்தயே
அஸ்மின்—இதனில்; லோகே—வாழ்நாள்; தேவா—அல்லது; அமுஷ்மின்—அடுத்த பிறவியில்; முனிபி:—மாமுனிவர்களினால்; தத்த்வ—உண்மை; தர்ஸிபி:—இதைப் பார்த்தவர்களினால்; த்ருஷ்டா:—குறிப்பிடப்பட்டிருக்கிற; யோகா:—முறைகள்; ப்ரயுக்தா:—பயன் படுத்துதல்; ச—மேலும்; பும்ஸாம்—பொதுமக்களின்; ஸ்ரேய:—பயன்; பிரஸித்தயே—பெறுவதற்கான விஷயத்தில்.
இப்பிறவிக்குமட்டுமல்லாது மறுபிறவிக்கும் சேர்த்து சிறந்த மகான்களும் முனிவர்களும் அனைத்து மனித சமுதாயத்தின் நன்மைக்காகவும், பொதுமக்களின் வளத்திற்காகவும் பயன்படும் பல்வேறு முறைகளைக் கூறிச் சென்றிருக்கின்றனர்.
பதம் 4.18.4
தான் ஆதிஷ்டதி ய: ஸம்யக் உபாயான் பூர்வ-தர்ஸிதான்
அவர: ஸ்ரத்தயோபேத உபேயான் விந்ததே ‘ ஞ்ஜஸா
தான்—அவர்கள்; ஆதிஷ்டதி—பின்பற்றுதல்; ய:—யாரோ அவர்; ஸம்யக்—முற்றிலும்; உபாயான்—விதிகள்; பூர்வ—முன்னர்; தர்ஸிதான்—கூறப்பட்டுள்ள; அவர:—அனுபவமற்ற; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; உபேத:—இருத்தல்; உபேயான்—செயல்களின் பலன்கள்; விந்ததே—மகிழ்தல்; அஞ்ஜஸா—மிக எளிதில்.
முற்காலத்தில் மாமுனிவர்களினால் அருளப்பட்ட அறிவுரைகளையும் கட்டளைகளையும் ஒருவன் தன் வாழ்வின் நடைமுறை நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்பவன் வாழ்வில் மிக எளிதில் மகிழ்ச்சி அடைகிறான்.
பதம் 4.18.5
தான் அனாத்ருத்ய யோ ‘வித்வான் அர்தான் ஆரபதே ஸ்வயம்
தஸ்ய வ்யபிசரந்தி அர்தா ஆரப்தாஸ் ச புன: புன:
தான்—அவர்கள்; அனாத்ருத்ய—புறக்கணித்து; ய:—யாரோ அவர்; அவித்வான்—துஷ்டன்; அர்தான்—திட்டங்கள்; ஆரபதே—துவங்குதல்; ஸ்வயம்—தனிப்பட்ட; தஸ்ய—அவனது; வ்யபிசரந்தி——வெற்றியடையாது; அந்தா:—நோக்கங்கள்; ஆரப்தா:—முயற்சிகள்; ச—மேலும்; புன: புன:—மீண்டும் மீண்டும்.
சிலர் மனம் போன போக்கில் தம் விருப்பப்படியே வாழ்வின் வழிமுறைகளை வகுத்துக் கொள்கின்றனர். மாசுமறுவில்லாத நெறிகளையும், நியதிகளையும் ஏற்படுத்தியுள்ள மாமுனிவர்களது ஆணைகளையும் ஏற்பது இல்லை. இத்தகைய முட்டாள்கள் மீண்டும் மீண்டும் எவ்வளவு முயன்றாலும் தத்தமது வாழ்வில் வெற்றியடைவது இல்லை.
பதம் 4.18.6
புரா ஸ்ருஷ்டா ஹி ஓஷதயோ ப்ரஹ்மணா யா விஸாம்பதே
புஜ்யமானா மயா த்ருஷ்டா அஸத்பிர் அத்ருத-வ்ரதை:
புரா—முன்பு; ஸ்ஷ்டா:—படைக்கப்பட்ட; ஹி—உறுதியாக; ஓஷதய:—மூலிகைகள் மற்றும் உணவு தானியங்கள்; ப்ரஹ்மணா—பிரம்மதேவனால்; யா:—அவையெல்லாம் எவை; விஸாம்-பதே—ஓ, மன்னனே; புஜ்யமானா:—மகிழ்கின்ற; மயா—என்னார்; த்ருஷ்டா:—காணப்பட்டு; அஸத்பி:—பக்தரல்லாதவர்களினால்; அத்ருத-வ்ரதை:—அனைத்து ஆன்மீகச் செயல்களும் இல்லாத நிலை.
அன்பிற்குரிய அரசரே, பிரம்மதேவனால் முன்பு படைத்தளிக்கப்பட்ட விதைகளும், வேர்களும், தாவரங்களும், தானியங்களும், இந்நாளில் அனைத்து ஆன்மீக அறிவும் சூன்யமாகிப் போன கடவுள் நம்பிக்கையற்றவர்களினால் பயன்படுத்தப்படுகின்றன.
பதம் 4.18.7
அபாலிதானாத்ருதா ச பவத்பிர் லோக-பாலகை:
சோரி-பூதே ‘தலோகே ‘ ஹம் யஜ்ஞார்தே ‘க்ரஸம் ஓஷதீ:
அபாலிதா—நன்றாகக் கவனித்துக் கொள்ளாமையினால்; அனாத்ருதா—புறக்கணிக்கப்பட்டு; ச—மேலும்; பவத்பி:—உம் போன்ற நல்லவர்கள்; லோக-பாலகை:—ஆளுநர்கள் அல்லது அரசர்களினால்; சோரி-பூதே—திருடர்களினால் கொள்ளையிடப்பட்டு; அத—அதனால்; லோகே—இவ்வுலகம்; அஹம்—நான்; யஜ்ஞா-அர்தே—வேள்விகளைச் செய்வதற்கான நோக்கத்திற்காக; அக்ரஸம்—மறைத்து வைத்தல்; ஓஷதீ:—அனைத்து தாவரங்கள் மற்றும் தானியங்கள்.
அன்பார்ந்த மன்னவா, தானியங்களும், தாவரங்களும் பக்தரல்லாதவர்களினால் பயன்படுத்தப்பட்டது மட்டுமன்றி, என்னைப் பொருத்தமட்டில் நானும் ஒழுங்காகப் பேணப்படவில்லை. புலனுகர்ச்சிக்காகத் தானியங்களைப் பயன்படுத்தும் இத்திருடர்கள் முதலில் தீயோராக இருந்தபொழுது மக்களால் தண்டிக்கப்படாமையினால் நானுங்கூட அம்மன்னர்களால் புறக்கணிக்கப்பட்டேன். அதனாலேயே நான் வேள்விக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய இத்தானியங்களை என் வயிற்றினுள் மறைத்து வைத்தேன்.
பதம் 4.18.8
நூனம் தா வீருத: க்ஷுணா மயி காலேன பூயஸா
தத்ர யோகேன த்ருஷ்டேன பவான் ஆதாதும் அர்ஹதி
நூனம்—ஆகையினால்; தா:—அந்த; வீருத:—தாவரங்கள் மற்றும் தானியங்கள்; க்ஷுணா:—கெட்டுவிடும்; மயி—என்னுள்; காலேன—உரிய காலத்தில்; பூயஸா—மிகவும்; தத்ர—ஆகையினால்; யோகேன—சரியான வழியில்; த்ருஷ்டேன—ஏற்றுக்கொண்டு; பவான்—மேலான மன்னரே; ஆதாதும்—எடுத்துக் கொள்ள; அர்ஹதி—வேண்டும்.
என்னுள் நீண்ட நாட்களுக்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் இத்தானிய விதைகள் நிச்சயமாகக் கெட்டுப் போய் இருக்கும். எனவே நீர், ஆச்சாரியர்களும் சாத்திரங்களும் கூறியுள்ள முறைப்படி உடனடியாக இத்தானிய விதைகளை வெளியே கொண்டு வருவதற்கான ஏற்பாட்டினைச் செய்தல் வேண்டும்.
பதங்கள் 4.18.9 – 4.18.10
வத்ஸம் கல்பய மே வீர யேனாஹம் வத்ஸலா தவ
தோக்ஷ்யே க்ஷீரமயான் காமான் அநுரூபம் ச தோஹனம்
தோக்தாரம் ச மஹா-பாஹோ பூதானாம் பூத-பாவன
அன்னம் ஈப்ஸிதம் ஊர்ஜஸ்வத் பகவான் வாஞ்சதே யதி
வத்ஸம்—ஒரு கன்றுக்குட்டி; கல்பய—ஏற்பாடு; மே—எனக்காக; வீர—ஓ, வீரனே; யேன—எதன் மூலம்; அஹம்—நான்; வத்ஸலா—பாசத்துடன்; தவ—உமது; தோஷ்யே—நிறைவேற்றுவேன்; க்ஷீர-மயான்—பாலின் வடிவில்; காமான்—விரும்பிய தேவைகள்; அநுரூபம்—பல்வேறு உயிர்களைப் பொருத்து; ச—மேலும்; தோஹனம்—பால் கலசம்; தோக்தாரம்—பால்காரன்; ச—மேலும்; மஹாபாஹோ—ஓ, வன்மைக் கரமுடையோனே; பூதானம்—அனைத்து உயிர்களும்; பூத-பாவன—ஓ, உயிர்வாழிகளைக் காப்போனே; அன்னம்—உணவு தானியங்கள்; ஈப்ஸிதம்—விரும்பிய; ஊர்ஜ:-வத்—உணவின் ஊட்டம்; பகவான்—வணங்குதற்குரியோனே; வாஞ்சதே— ஆசைகள்; யதி—இருந்தால்.
ஓ, மிகச்சிறந்த வீரரே, உயிர்களைக் காத்தருள்பவனே, நீர் போதுமான உணவு தானியங்களை அளித்து உயிர்களைக் காக்க விரும்பினாலோ, அவர்களுக்கு எனது பாலினைக் கொடுத்து ஊட்டச்சத்து அளிக்க விரும்பினாலோ அதற்குத் தேவையான, பொருத்தமானக் கன்றுக்குட்டி, பால் கறப்பதற்கான கலசம் மற்றும் பாலைக் கறக்கும் பால்காரர் என்று இவற்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை உடனே செய்வீராக. மேலும் நான் எனது கன்றினிடத்தில் அதிகப் பிரியம் உடையவனாக இருப்பேன். ஆதலால் என்னிடமிருந்து பால் கறக்கும் உமது எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.
பதம் 4.18.11
ஸமாம் ச குரு மாம் ராஜன் தேவ-வ்ருஷ்டம் யதா பய:
அபர்தாவ் அபி பத்ரம் தே உபாவர்தேத மே விபோ
ஸமாம்—சமநிலையில்; ச—மேலும்; குரு—செய்தல்; மாம்—எனது; ராஜன்—ஓ, மன்னனே; தேவ-வ்ருஷ்டம்—தேவேந்திரன் கருணையினால் பெய்யும் மழை; யதா—ஆகையினால்; பய:—நீர்; அப-ருதௌ—மழை இல்லாது போனால்; அபி—கூட; பத்ரம்—மங்கலம்; தே—உமக்கு; உபாவர்தேத—அது அப்படியே இருக்கும்; மே—என் மீது; விபோ—ஓ, பகவானே.
அன்பார்ந்த அரசரே, நீர் பூமிப் பரப்பினை சமதளமாக்க வைத்தல் வேண்டும் என்பதனை உமக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். மழை பெய்யாது போனாலுங்கூட இது எனக்கு உதவி செய்யும். தேவேந்திரன் கருணையினால் மழை பெய்கிறது. மழை நீர் பூமியில் விழுந்து அதனை எப்போதும் ஈரப்பதத்தில் வைத்திருப்பதினால் பூமியானது எல்லாவகை உற்பத்திக்கும் மங்கலமானதாக இருக்கின்றது.
பதம் 4.18.12
இதி ப்ரியம் ஹிதம் வாக்யம் புவ ஆதாய பூபதி:
வத்ஸம் க்ருத்வா பாணாவ் அதுஹத் ஸகலௌஷதீ:
இதி—இவ்வாறு; ப்ரியம்—பிரியம்; ஹிதம்—நன்மை; வாக்யம்—வார்த்தைகள்; புவ:—பூமியின்; ஆதாய—கருத்தில் எடுத்துக் கொண்டு; பூ-பதி:—மன்னர்; வத்ஸம்—கன்று; க்ருத்வா—செய்ய; மனும்—சுவாயம்புவ மனு; பாணௌ—அவர் கரங்களில்; அதுஹத்—பால் கறந்தால்; ஸகல—எல்லாம்; ஓஷதீ:—தாவரங்கள் மற்றும் தானியங்கள்.
பூமியின் மங்கலகரமான, இனிமையான வார்த்தைகளைக் கேட்ட பிருது மன்னர் அவற்றை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் சுயம்புவமனுவைக் கன்றாக மாற்றி பசு வடிவங்கொண்ட பூமியிலிருந்து எல்லாத் தாவரங்கள் மற்றும் தானியங்களைப் பாலாகக் கறந்து அவற்றைத் தம் குவித்த கரங்களில் பத்திரப்படுத்திக் கொண்டார்.
பதம் 4.18.13
ததாபரே ச ஸர்வத்ர ஸாரம் ஆதததே புதா:
ததோ ‘ன்யே யதா-காமம் துது ஹூ: ப்ருது-பாவிதாம்
ததா—ஆகையால்; அபரே—பிறர்; ச—மேலும்; ஸர்வத்ர—எங்கெங்கும்; ஸாரம்—சாரத்தினை; ஆதததே—எடுத்து; புதா:—புத்திமான் பிரிவைச் சேர்ந்தோர்; தத:—அதன் பின்னர்; அன்யே—அடுத்தவர்கள்; ச—மேலும்; யதா-காமம்—அவர்கள் விரும்பிய அறை; துது-ஹூ:—கறந்தனர்; ப்ருது-பாவிதாம்—பிருது மன்னரால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த பூமி.
பிருது மன்னரைப் போன்று இருந்த புத்திமான்களும் பூமியிலிருந்த சாற்றினை வெளியே எடுத்துக் கொண்டனர். உண்மையில் ஒவ்வொருவரும் பிருது மன்னரைப் பின்பற்றி இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டதோடு, அவர்கள் விரும்பியது அனைத்தையும் பூமியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
பதம் 4.18.14
ருஷயோ துதுஹூர் தேவீம் இந்த்ரியேஷ்வ அத ஸத்தம
வத்ஸம் ப்ருஹஸ்பதிம் க்ருத்வா பயஸ் சந்தோமயம் ஸூசி
ருஷய:—மாமுனிவர்கள்; துதுஹூ:—கறந்தனர்; தேவீம்—பூமி; இந்த்ரியேஹூ—புலன்கள்; அத—பின்னர்; ஸத்தம:—ஓ, விதுரனே; வத்ஸம்—கன்று; ப்ருஹஸ்பதிம்—பிருகஸ்பதி முனிவர்; க்ருத்வா—செய்து; பய:—பால்; சந்த: மயம்—வேத மந்திரங்களின் வடிவில்; ஸூசி—தூய்மை.
அனைத்து முனிவர்களும் சேர்ந்து பிரகஸ்பதியை கன்றாக மாற்றி புலன்களைக் கலசமாகச் செய்து சிந்தனை, சொல், செயல் ஆகியனவற்றைத் தூய்மை செய்வதற்காக அனைத்து வேதங்களின் ஞானத்தினையும் பாலாகக் கறந்தனர்.
பதம் 4.18.15
க்ருத்வா வத்ஸம் ஸூர-கணா இந்த்ரம் ஸோமம் அதூதுஹன்
ஹிரண்மயேன பாத்ரேன வீர்யம் ஓஜோ பலம் பய:
க்ருத்வா—செய்தனர்; வத்ஸம்—கன்று; ஸூர-கணா:—தேவர்கள்; இந்த்ரம்—தேவேந்திரன்; ஸோமம்—சோம ரசம்; அதூதுஹன்—அவர்கள் கறந்தனர்; ஹிரண்மயேன—பொன்; பாத்ரேன—பாத்திரத்தில்; வீர்யம்—மனோசக்தி; ஓஜ:—புலன்களின் சக்தி; பலம்—உடற்பலம்; பய:—பால்.
தேவர்கள் அனைவரும் சேர்ந்து தேவேந்திரனைக் கன்றாக மாற்றி பூமியிலிருந்து சோம ரசத்தினை பாலாகக் கறந்தனர். அதனால் அவர்கள் மனோசக்தியும், உடல் வலிமையும், புலன்களின் ஆற்றலும் அதிகரிக்கப் பெற்றனர்.
பதம் 4.18.16
தைதேயா தானவா வத்ஸம் ப்ரஹ்வாதம் அஸூரர்ஷபம் விதாயாதூதுஹன் க்ஷூரம் அய:-பாத்ரே ஸூராஸவம்
தைதேயா:—திதியின் மைந்தர்கள்; தானவா:—அசுரர்கள்; வத்ஸம்—கன்று; ப்ரஹ்லாதம்—பிரகலாத மன்னர்; அஸூர—அசுரர்; ருஷபம்—தலைவர்; விதாய—செய்தனர்; அதூதுஹன்—அவர்கள் கறந்தனர்; க்ஷூரம்—பால்; அய:—இரும்பு; பாத்ரே—பாத்திரத்தில்; ஸூரா—சுரா பானம்; ஆஸவம்—புளிப்பேறிய கள் வகை.
திதியின் மைந்தர்களும் அசுரர்களும் சேர்ந்து அசுரர் குலத்தில் அவதரித்த பிரகலாத மன்னரைக் கன்றுக்குட்டியாக மாற்றி பல்வேறு வகையான மதுபானங்களைக் கறந்து அவற்றை ஓர் இரும்புப் பானையில் தேக்கி வைத்தனர்.
பதம் 4.18.17
கந்தர்வாப் ஸரஸோ ‘துக்ஷன் பாத்ரே பத்மமயே பய:
வத்ஸம் விஸ்வாவஸூம் க்ருத்வா காந்தர்வம் மது ஸௌபகம்
கந்தர்வ—கந்தர்வ லோகத்தில் இருப்பவர்கள்; அப்ஸரஸ:—அப்ஸர லோகத்தைச் சேர்ந்தவர்கள்; அதுக்ஷன்—கறந்தனர்; பாத்ரே—பாத்திரத்தில்; பத்ம-மயே—தாமரை மலரினாலான; பய:—பால்; வத்ஸம்—கன்று; விஸ்வாவஸூம்—விஸ்வாவஸூ என்பவரை; க்ருத்வா—செய்து; காந்தர்வம்—பாடல்கள்; மது—இனிமையான; ஸௌபகம்—அழகு.
கந்தர்வலோகம் மற்றும் அப்ஸரலோகத்தைச் சேர்ந்தவர்கள் விஷ்வாவசுவைக் கன்றாக மாற்றி ஒரு தாமரை மலர்ப் பாத்திரத்தில் பாலைக் கறந்தனர். அந்தப் பால் இனிமையும் எழிலும் வாய்ந்த இசைக் கலையாக மாறியது.
பதம் 4.18.18
வத்ஸேன பிதரோ ‘ர்யம்ணா கவ்யம் க்ஷூரம் அதுக்ஷத
ஆம-பாத்ரே மஹா-பாகா: ஸ்ரத்தயா ஸ்ராத்த-தேவதா:
வத்ஸேன—கன்றுக்குட்டியினால்; பிதர:—பித்ருலோகத்தைச் சேர்ந்தவர்கள்; அர்யம்ணா—பித்ருலோகக் கடவுள் அர்யமணா; கவ்யம்—முன்னோர்களுக்கு அளிக்கப்படும் உணவு; க்ஷூரம்—பால்; அதுக்ஷத—எடுத்து; ஆம-பாத்ரே—வேகாத மண் பாத்திரத்தில்; மஹா-பாகா:—மிகவும் அதிர்ஷ்டம் செய்த; ஸ்ரத்தயா—மிக்க நம்பிக்கையுடன்; ஸ்ராத்த-தேவதா:—இறந்தவர்களின் சிரார்த்த விழாக்களில் தலைமை தாங்கும் தேவர்கள்.
சிரார்த்தங்களில் தலைமை ஏற்கும் பித்ரு லோகத்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலிகள் தங்கள் தலைவனான அர்யமணா கன்றுக்குட்டியாக்கினார். மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் மூதாதையர்க்கு அர்ப்பணிக்கப்படும் ‘கவ்யம்’ என்னும் பாலைக் கறந்து வேகாத மண் பானையில் எடுத்து வைத்தனர்.
பதம் 4.18.19
ப்ரகல்ப்ய வத்ஸம் கபிலம் ஸித்தா: ஸங்கல்பனாமயீம்
ஸித்திம் நபஸி வித்யாம் ச யே ச வித்யாதராதய:
ப்ரகல்ப்ய—நியமித்தனர்; வத்ஸம்—கன்று; கபிலம்—மாமுனிவர் கபிலர்; ஸித்தா:—சித்தலோகத்தைச் சேர்ந்தவர்கள்; ஸங்கல்பனா-மயீம்—சங்கல்பத்துடன் தொடங்கினார்; ஸித்திம்—யோக ஸித்திகள்; நபஸி—வானத்தில்; வித்யாம்—அறிவு; ச—மேலும்; யே—எவர்கள்; ச—மேலும்; வித்யாதர-ஆதய:—வித்தியாதர லோகத்தைச் சேர்ந்தவர்களும் பிறரும்.
இதன் பின்னர் சித்தலோகத்தைச் சேர்ந்தவர்களும், வித்தியாதர லோகத்தைச் சேர்ந்தவர்களும், மாமுனிவர் கபிலரைக் கன்றாக்கி வானத்தைக் கலசமாக்கி அதில் “அனிமா”விலிருந்து தொடங்கும் யோகஸித்திகளைப் பாலாகக் கறந்தனர். உண்மையில் வித்தியாதர லோகத்தைச் சேர்ந்தவர்கள் வானில் பறக்கும் ஆற்றலுடையவர்கள் ஆவர்.
பதம் 4.18.20
அன்யே ச மாயினோ மாயாம் அந்தர்தானாத்புதாத்மனாம்
மயம் ப்ரகல்ப்ய வத்ஸம் தே துதுஹூர் தாரணாமயீம்
அன்யே—மற்றவர்கள்; ச—மேலும்; மாயின:—மாய மந்திரவாதிகள்; மாயாம்—மாயை சக்திகள்; அந்தர்தான—மறைதல்; அத்புத—அற்புதம்; ஆத்மனாம்—உடலின்; மயம்—மயன் என்னும் அசுரன்; ப்ரகல்ப்ய—செய்து; வ்தஸம்—கன்றுக்குட்டி; தே—அவர்கள்; துதுஹூ:—கறந்தனர்; தாராணாமயீம்—சங்கல்பம் செய்து தொடங்கினர்.
கிம்புருட லோகத்தைச் சேர்ந்த பிறருங் கூட மயன் என்னும் அசுரனைக் கன்றாக்கி மாயா சக்திகளைப் பாலாகக் கறந்தனர். அச்சக்தியின் துணை கொண்டு, கண்ணுக்குத் தெரியாதவாறு மறையலாம் வேறொரு வடிவத்தில் தோன்றலாம்.
பதம் 4.18.21
யக்ஷ—ரக்ஷாம்ஸி பூதானி பிஸாசா: பிஸிதாஸனா:
பூதேஸ-வத்ஸா துதுஹூ: கபாலே க்ஷதஜாஸவம்
யக்ஷ—யக்ஷர்கள் (குபேரபுரியைச் சேர்ந்தவர்கள்); ரக்ஷாம்ஸி—ராட்சதர்கள் (நரமாமிசம் உண்போர்); பூதானி—பூதங்கள்; பிஸாசா:—பிசாசுகள்; பிஸித-அஸனா:—மாமிசம் உண்பதை வழக்கமாக உடையோர்; பூதேஸ—சிவபெருமானின் அவதாரமான ருத்திரன்; வத்ஸா:—அவரைக் கன்றாக்கி; துதுஹூ:—பால் கறந்தனர்; கபாலே—மண்டை ஓடுகளில்; க்ஷத-ஜ—இரத்தம்; ஆஸவம்—புளித்த மதுபானம்.
யட்சர்களும், ராட்சதர்களும், பேய்களும், பூதங்களும் நரமாமிசம் உண்போராவர், பின்னர் இவர்களெல்லாம் சேர்ந்து சிவபெருமானின் அவதாரமான ருத்திரனைக் (பூதநாதன்) கன்றாக்கி இரத்தத்தினால் செய்யப்படும் மதுபானத்தைக் கறந்து அதனை மண்டையோடுகளில் தேக்கினர்.
பதம் 4.18.22
ததாஹயோ தந்தஸூகா: ஸர்பா நாகாஸ் ச தக்ஷகம்
விதாய வத்ஸம் துதுஹூர் பில-பாத்ரே விஷம் பய:
ததா—இது போன்று; அஹய:—படமெடுக்காத பாம்புகள்; தந்த ஸூகா:—தேள்கள்; ஸர்பா:—சர்ப்பங்கள்; நாகா:—நாகங்கள்; ச—மேலும்; தக்ஷகம்—நாகங்களின் தலைவனான தக்ஷகன்; விதாய—செய்து; வத்ஸ—கன்று; துதுஹூ:—கறந்தனர்; பில-பாத்ரே—பாம்புப் புற்றுகளை பாத்திரமாக்கி; விஷம்—விஷம்; பய:—பாலாக.
இதன் பின்னர், படமெடுக்காத பாம்புகள், பெரிய நாகங்கள், தேள்கள் மற்றும் நச்சு உயிர்கள் அனைத்தும் பூமியிலிருந்து பாலாக விஷம் முழுவதையும் கறந்து அவ்விஷத்தைப் புற்றுக்களைப் பாத்திரமாக்கி அதில் வைத்துக் கொண்டன. அவைகள் தக்ஷகனிலிருந்து ஒரு கன்றினை உருவாக்கியிருந்தன.
பதங்கள் 4.18.23 – 4.18.24
பஸவோ யவஸம் க்ஷூரம் வத்ஸம் க்ருத்வா ச கோ-வ்ருஷம்
அரண்ய-பாத்ரே சாதுக்ஷன் ம்ருகேந்த்ரேண ச தம்ஷ்ட்ரிண:
க்ரவ்யாதா: ப்ராணின: க்ரவ்யம் துதுஹூ: ஸ்வே கலேவரே
ஸூபர்ண-வத்ஸா விதகாஸ் சரம் சாசரம் ஏவ ச
பஸவ:—மாடுகள்; யவஸம்—பசும்புற்கள்; க்ஷுரம்—பால்; வத்ஸம்—கன்று; க்ருத்வா—செய்து; ச—மேலும்; கோ-வ்ருஷம்—சிவபெருமானின் வாகனமான காளை; அரண்ய-பாத்ரே—காடு என்னும் பாத்திரத்தில்; ச—மேலும்; அதுக்ஷன்—பால் கறந்தனர்; ம்ருக-இந்த்ரேண—சிங்கத்தினால்; ச—மேலும்; தம்ஷ்த்ரிண:—கோரைப் பற்களையுடைய விலங்குகள்; க்ரவ்ய-அதா:—பச்சை மாமிசம் உண்ணும் விலங்குகள்; ப்ராணின:—உயிர்கள்; க்ரவ்யம்—தசை; துதுஹூ:—எடுத்து; ஸ்வே—சொந்தமாக; கலேவரே—அவர்கள் உடல் என்னும் பாத்திரத்தில்; ஸூபர்ண—கருடன்; வத்ஸா:—அவரது கன்று; விஹகா:—பறவைகள்; சரம்—அசையும் உயிர்கள்: ச—மேலும்; அசரம்—அசையாத உயிர்கள்; ஏவ—உறுதியாக; ச—மேலும்.
நான்கு கால் பிராணிகளான பசுக்கள் போன்றவை சிவபெருமானின் வாகனமான காளை மாட்டிலிருந்து ஒரு கன்றினையும், காட்டினைப் பாத்திரமாகவும் செய்து பால் கறந்தன. அதனால் அவை உண்பதற்கு பசும் புற்களைப் பெற்றுக் கொண்டன. கொடிய விலங்குகளான புலிகள் போன்றவை ஒரு சிங்கத்தை கன்றாக்கி அதன் மூலம் தசைகளைப் பாலாகப் பெற்றன. பறவைகள் கருடனிலிருந்து ஒரு கன்றினை உருவாக்கி பூமியிலிருந்து அசையும் சிறு பூச்சிகள் மற்றும் அசையாத செடி, கொடிகள் போன்றவற்றின் வடிவில் பாலைப் பெற்றுக் கொண்டன.
பதம் 4.18.25
வட-வத்ஸா வனஸ்பதய: ப்ருதக் ரஸமயம் பய:
கிரயோ ஹிமவத்-வத்ஸா நானா-தாதூன் ஸ்வ-ஸானுஷூ
வத-வத்ஸா:—ஆலமரத்தினைக் கன்றாக்கி; வன:-பதய:—மரங்கள்; ப்ருதக்—வேறுபாடு; ரஸமயம்—சாற்றின் வடிவத்தில்; பய:—பால்; கிரய:—மலைகளும் முகடுகளும்; ஹிமவத்-வத்ஸா:—இமயமலையினைக் கன்றாக்கி; நானா—பல்வேறு; தாதூன்—தாதுக்கள்; ஸ்வ—சொந்த; ஸானுஷூ—அவற்றின் சிகரங்களின் மேல்.
மரங்களெல்லாம் சேர்ந்து ஆலமரத்திலிருந்து ஒரு கன்றினை உருவாக்கி பல்வேறு சுவைமிக்க சாறுகளைப் பாலாக எடுத்துக் கொண்டன. மலைகளெல்லாம் இமயமலையினைக் கன்றாக்கி பல் வேறு கனிமங்களையும் தாதுப்பொருட்களையும் சிகரமென்னும் பாத்திரங்களில் கறந்து கொண்டன.
பதம் 4.18.26
ஸர்வே ஸ்வ-முக்ய-வத்ஸேன ஸ்வே ஸ்வே பாத்ரே ப்ருதக் பய:
ஸர்வ-காம-துகாம் ப்ருத்வீம் துதுஹூ: ப்ருது-பாவிதாம்
ஸர்வே—அனைத்தும்; ஸ்வ-முக்ய—அவர்களின் தலைவர்களினால்; வத்ஸேன—கன்றுகளாக்கி; ஸ்வே-ஸ்வே—தத்தமக்குரிய; பாத்ரே—பாத்திரங்களில்; ப்ருதக்— வெவ்வேறு; பய:—பால்; ஸர்வ-காம—விரும்பிய அனைத்தையும்; துகாம்—பாலைப் போல் விநியோகித்து; ப்ருத்வீம்—பூமி; துதுஹூ:—பால் கறந்தனர்; ப்ருது— பாவிதாம்—பிருது மன்னரின் கட்டுப்பாட்டின் கீழ்.
பூமி எனும் கிரகமானது ஒவ்வொருவருக்கும் அவருக்குத் தேவையான உணவினை அளித்தது. பிருது மன்னரின் காலத்தில் பூமியானது அவரது முழுக்கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது. இவ்வாறு பூமியிலுள்ள அனைவரும் பல்வேறு வகையான கன்றுகளின் வடிவத்தில் அவர்களுக்குரிய குறிப்பிட்ட உணவினைப் பாலாகக் கறந்து பல்வேறு வகையான பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டனர்.
பதம் 4.18.27
ஏவம் ப்ருது-ஆதய: ப்ருத்வீம் அன்னாதா: ஸ்வன்னம் ஆத்மன:
தோஹ-வத்ஸாதி-பேதேன க்ஷூர-பேதம் குரூத்வஹ
ஏவம்—இவ்வாறு; ப்ருது-ஆதய:—பிருது மன்னருக்குப் பிறகும்; ப்ருத்விம்—பூமி; அன்ன-அதா:—அனைத்து உயிர்களும் விரும்பும் உணவு; ஸூ-–அன்னம்—அவர்கள் விரும்பிய உணவு; ஆத்மன:—சுய தேவைக்கான; தோஹ—பால் கறந்து கொண்டு; வத்ஸ-ஆதி—கன்றுகள், பானைகள் மற்றும் பால்காரர்களினால்; பேதேன—வெவ்வேறான; க்ஷூர—பால்; பேதம்—வெவ்வேறு; குரு-உத்வஹ—ஓ, குரு வம்சத்தின் தலைவனே.
குரு வம்சத்தின் தலைவனான அன்புக்குரிய விதுரனே, இவ்வாறு பிருது மன்னரும், மற்றவர்களும் தங்கள் வாழ்விற்குரிய உணவினை, பல்வேறு வகையான கன்றுகளின் வடிவில் பல்வேறு வகையான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர்கள் தங்கள் பல்வேறு வகையான உணவுகளை பாலின் வடிவத்தில் பெற்றுக் கொண்டனர்.
பதம் 4.18.28
ததோ மஹீபதி: ப்ரீத: ஸர்வ-காம-துகாம் ப்ருது:
து ஹித்ருத்வே சகாரேமாம் ப்ரேம்ணா துஹித்ரு-வத்ஸல:
தத:—அதன் பின்னர்; மஹீ-பதி:—மன்னர்; ப்ரீத:—மகிழ்ச்சியடைந்து; ஸர்வ-காம—அனைத்து ஆசைகளும்; துகாம்—பாலாக உற்பத்தி செய்து; ப்ருது:—பிருது மன்னர்; துஹித்ருத்வே—தனது புதல்வியைப் போல் நடத்தினார்; சகார—செய்தார்; இமாம்—பூமிக்கு; ப்ரேம்ணா—பாசத்தினால்; துஹித்ரு-வத்ஸல:—அவர் புதல்வியினிடத்துள்ள பாசம்.
பூமியானது பல்வேறு வகையான உயிர்களுக்குரிய பல்வேறு வகையான உணவுப் பொருட்களை போதுமான அளவிற்கு அளித்ததைக் கண்டு பிருது மன்னர் பூமியினிடம் மிகுந்த திருப்தியுற்றார். அதனால் அவர் பூமியின் மீது தனது சொந்த புதல்வியினைப் போல் பாசமுடையவரானார்.
பதம் 4.18.29
சூர்ணயன் ஸ்வ-தனுஷ்-கோட்யா கிரி-கூடானி ராஜ-ராட்
பூ-மண்டலம் இதம் வைன்ய: ப்ராயஸ் சக்ரே ஸமம் விபு:
சூர்ணயன்—துண்டு துண்டாக உடைத்தல்; ஸ்வ—அவரது சுயத்தினால்; தனு:-கோட்யா—அவரது வில்லின் ஆற்றலினால்; கிரி—மலைகள்; கூடானி—சிகரங்கள்; ராஜ-ராட்—பேரரசர்; பூ-மண்டலம்—இப்புவி முழுவதும்; இதம்—இவ்வாறு; வைன்ய:—வேனனின் மைந்தன்; ப்ராய:—பெரும்பகுதி; சச்ரே—செய்தார்; ஸமம்—சமமாக; விபு:—சக்தி மிக்க.
இதன் பின்னர் மன்னர்களின் மன்னரான பிருது தமது வில்லின் வலிமையினால் மலைகளை உடைத்துத் துண்டு துண்டாக்கி பூமியின் மேற்பரப்பினை சமதளமாக்கினார். அவரது கருணையினால் பூமியின் மேற்பரப்பு பெரும்பாலும் சமதளமாகியது.
பதம் 4.18.30
அதாஸ்மின் பகவான் வைன்ய: ப்ரஜானாம் வ்ருத்தித: பிதா
நிவாஸான் கல்பயாம் சக்ரே தத்ர தத்ர யதார்ஹத:
அத—இவ்வாறு; அஸ்மின்—இப்பூமியின் மேல்; பகவான்—முழுமுதற் கடவுள்; வைன்ய:—வேனனின் மைந்தன்; ப்ரஜானாம்—குடிமக்களின்; வ்ருத்தித:—வேலை வாய்ப்புகள் அளித்து; பிதா—ஒரு தந்தை; நிவாஸான்—குடியிருப்புக்கள்; கல்பயாம்—தகுந்த; சக்ரே—செய்தல்; தத்ர-தத்ர—இங்குமங்கும்; யதா—போன்று; அர்ஹத:—விருப்பமான, பொருத்தமான.
தனது நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த தந்தையினைப் போல் விளங்கினார். அவர் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை ஆதாரங்கள் போன்றவற்றை வழங்குவதில் வெளிப்படையாக ஈடுபட்டிருந்தார். அவர் பூமியின் மேற்பரப்பினை சமதளமாக்கிய பின்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகையான இடங்களை குடியிருப்புக்களாக அடையாளமிட்டு பிரித்துக் கொடுத்தார்.
பதம் 4.18.31
க்ராமான் புர: பத்தனானி துர்காணி விவிதானி ச
கோஷான் வ்ரஜான் ஸ-ஸிபிரான் ஆகரான் கேட-கர்வடான்
க்ராமான்—கிராமங்கள்; புர:—பட்டினங்கள்; பட்டனானி—குடியிருப்புக்கள்; துர்கானி—கோட்டைகள்; விவிதானி—பல்வேறு வகையான; ச—மேலும்; கோஷான்—இடைச்சேரிகள்; வ்ரஜான்—மாட்டுத் தொழுவங்கள்; ஸ-ஸிபிரான்—சத்திரங்கள்; ஆகரான்—சுரங்கங்கள்; கேட—விவசாய நகரங்கள்; கர்வடான்—மலைவாச ஸ்தலங்கள்.
இவ்வழியே பிருது மன்னர் பல்வகையான கிராமங்கள், குடியிருப்புக்கள், பட்டினங்கள், கோட்டைகள், இடைச்சேரிகள், மாட்டுத் தொழுவங்கள், அரசு விருந்தினர் மாளிகைகள், சுரங்கங்கள், விவசாய நகரங்கள் மற்றும் மலைவாழ் குடியிருப்புகள் போன்றவற்றை உருவாக்கினார்.
பதம் 4.18.32
ப்ராக ப்ருதோர் இஹ நைவைஷா புத்ர-க்ராமாதி-கல்பனா
யதா-ஸூகம் வஸந்தி ஸ்ம தத்ர தத்ராகுதோபயா:
ப்ராக்—முன்னர்; ப்ருதோ:—பிருது மன்னர்; இஹ—இவ்வுலகில்; ந—இல்லை; ஏவ—நிச்சயமாக; ஏஷா—இந்த; புர—நகரங்கள்; க்ராம-ஆதி—கிராமங்கள் போன்றவை; கல்பனா—திட்டமிட்ட ஏற்பாடு; யதா—போன்று; ஸூகம்—வசதியாக; வஸந்தி-ஸ்ம—வாழ்ந்தனர்; தத்ர-தத்ர—இங்குமங்கும்; அகுத:-பயா:—எவ்விதத் தயக்கமுமின்றி.
பிருது மன்னரின் காலத்திற்கு முன்பு பல்வேறு வகையான கிராமங்கள், நகரங்கள், மேய்ச்சல் நிலங்கள் என்பவையெல்லாம் திட்டமிட்டு அமைக்கப்படவில்லை. ஒழுங்கின்றி அங்குமிங்குமாக சிதறியிருந்தன. மேலும் அக்குடியிருப்புக்களை மக்கள் தம் வசதிக்கேற்ப மனம் போன போக்கில் கட்டிக்கொண்டனர். ஆயினும் பிருது மன்னர் நகர் மற்றும் கிராமங்கள் அனைத்தையும் திட்டமிட்டு அமைத்துக் கொடுத்தார்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “பிருது மன்னர் பூமியிடம் பால் கறத்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினெட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.