அத்தியாயம் – 17
பிருது மகாராஜன் பூமியிடம் கோபம் கொள்ளல்
பதம் 4.17.1 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: இவ்வாறு அவ்விசைக் கலைஞர்கள் பிருது மன்னரின் குணங்களையும் வீரச் செயல்களையும் போற்றிப் புகழ்ந்தனர். இறுதியில் பிருது மகாராஜா அவர்களை வணங்கி, மரியாதை செலுத்தி மதிப்பு மிக்கப் பரிசுப் பொருட்களை அவர்களுக்கு வழங்கினார்.
பதம் 4.17.2 : இவ்வாறு பிருது மன்னர் அந்தணர் குலத்தலைவர்களுக்கும், பிற குலத்தார்க்கும், பணியாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும், புரோகிதர்களுக்கும், பொது மக்களுக்கும், பிறகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், மற்றவர்க்கும் அனைத்து மரியாதைகளும் செய்து திருப்திப்படுத்தின்மையால் அனைவரும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.
பதம் 4.17.3 : மாமுனிவர் மைத்ரேயரிடம் விதுரர் வினவினார்: அன்பார்ந்த அந்தணரே, அன்னை பூமி பல்வேறு வடிவங்களை உடையவளாக இருந்தும் அவள் ஏன் ஒரு பசுவின் வடிவில் தோன்றினாள்? மேலும் பிருது மன்னர் அப்பசுவினிடம் பால் கறந்த பொழுது கன்றுக் குட்டியாக இருந்தது யார்? பால் கலயம் எது ?
பதம் 4.17.4 : இயற்கையிலேயே பூமியானது சில இடங்களில் மேடாகவும் சில இடங்களில் பள்ளமாகவும் இருக்கும். பிருது மன்னர் எவ்வாறு பூமியினைச் சமதளமாக்கினார்? மேலும் வேள்விக்காக வைத்திருந்த குதிரையை தேவேந்திரன் ஏன் திருடினான்?
பதம் 4.17.5 : பிருது மன்னர் வேதங்களில் தலைச்சிறந்த அறிஞரான சனத் குமாரரிடமிருந்து ஞானத்தைப் பெற்றார். நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படுவதற்கான அந்த ஞானத்தினைப் பெற்ற பிறகு அந்த ராஜரிஷி தான் விரும்பிய குறிக்கோளை அடைந்தாரா?
பதங்கள் 4.17.6 – 4.17.7 : பிருது மன்னர் பகவான் கிருஷ்ணரின் சக்தி மிக்க மறுபிறப்பாவர். இதனைத் தொடர்ந்து அவர் செயல்கள் பற்றிய எந்தக் கதையும் கேட்பதற்கு நிச்சயம் மிகவும் இனிமையாக இருக்கும். மேலும் அது அனைத்து மங்கலங்களையும் அருள்வதாகும். என்னைப் பொருத்த மட்டில் நான் உமது பக்தனாக இருப்பதோடு அதோக்ஷஜன் எனும், இறைபணியாளரின் பக்தனும் ஆவேன். ஆகையினால் பசுவின் வடிவான பூமியிலிருந்து பால் கறந்த மன்னன் வேனனின் மைந்தனான பிருது மன்னர் தொடர்புடைய அனைத்துக் கதைகளையும் அருள் கூர்ந்து உரைப்பீராக.
பதம் 4.17.8 : சூத கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: விதுரர், பகவான் கிருஷ்ணரின் செயல்களைப் பல்வேறு அவதாரங்களின் மூலம் கேட்பதற்கு ஆர்வங்கொண்டதைக் கண்டு மைத்ரேயரும் விதுரருடன் இணைந்து ஆர்வமும் மகிழ்ச்சியும் கொண்டதோடு அவரைப் பாராட்டவும் தொடங்கினார். பின்னர் மைத்ரேயர் பின்வருவனவற்றைக் கூறினார்.
பதம் 4.17.9 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: அந்தணர்களினாலும், மாமுனிவர்களினாலும் மன்னர் பிருது அரியாசனம் ஏற்றப்பட்டு, இவர் தான் குடிமக்களின் காவலர் என்று அறிவிக்கப்பட்ட பொழுது நாட்டில் உணவு பற்றாக்குறை அதிக அளவில் இருந்தது. பஞ்சத்தின் காரணமாக மக்கள் மெலிந்த தேகத்தினராய்க் காட்சியளித்தனர். ஆகையினால் அவர்கள் மன்னரிடம் சென்று தங்களது உண்மை நிலையினை அவருக்குத் தெரிவித்தனர்.
பதங்கள் 4.17.10 – 4.17.11 : மரப்பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சு மரம் முழுவதையும் எரித்துச் சாம்பலாக்கி விடுவதைப் போல் எங்கள் வயிற்றில் எரியும் பசி என்னும் நெருப்பினால் யாமும் விரைவில் சாம்பலாவோம். நீரே சரண் புகுந்த ஆத்மாக்களின் பாதுகாவலர். எனவே நீரே எங்களுக்கு வேலைவாய்ப்புத் தருவதற்காகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றீர். ஆகையினால் பாதுகாப்பை நாடி நாங்கள் உம்மை அடைந்திருக் கிறோம். நீர் மன்னர் மட்டுமல்ல! கடவுளின் மறு பிறப்பும் ஆவீர். உண்மையில் நீர் அரசர்களுக்கெல்லாம் பேரரசராக இருப்பவர். நீரே எங்கள் வாழ்வின் தலைவராதலின், நீர் தான் எங்களுக்குப் பல்வேறு வேலை வாய்ப்புக்களையும் தருதல் வேண்டும். ஆகையினால் மன்னர் மன்னனே, சரியான முறையில் உணவு தானியங்களை விநியோகித்து எங்கள் பசிப்பிணியினைத் தீர்த்தருள்வீராக. நீர் எம்மைக் காக்கவில்லை என்றால் பசியினால் நாங்கள் விரைவில் மாண்டு போவோம்.
பதம் 4.17.12 : குடிமக்களின் துயரத்தினையும், அவர்களின் இரங்கத்தக்க நிலையினையும் கண்டு பிருது மன்னர் இவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்னவென்று அறிவதற்காக நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தார்.
பதம் 4.17.13 : ஓர் முடிவிற்கு வந்த மன்னர் தன்கையிலிருந்த வில்லில் அம்பினைப் பொருத்தி, திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளைப் போல் மிகுந்த சீற்றத்துடன் பூமியை நோக்கிக் குறி வைத்தார்.
பதம் 4.17.14 : பிருது மன்னர் தன் வில்லையும், அம்பையும் தன்னைக் கொல்வதற்காக எடுக்கக் கண்டவுடன் பூமியானது மிகுந்த அச்சங்கொண்டு நடு நடுங்கியது. ஒரு வேடனால் துரத்தப்பட்ட மான் துள்ளி ஓடுவது போல் அவளும் ஓடத் தொடங்கினாள். பிருதுவின் மீது கொண்ட அச்சத்தின் விளைவாக அவள் ஒரு பசுவின் வடிவம் பெற்று ஓடத் தொடங்கினாள்.
பதம் 4.17.15 : இதனைக் கண்டு மிகுந்த சினமுற்ற பிருது மன்னரின் கண்கள் காலை இளஞ்சூரியனைப் போன்று சிவந்தன. தனது வில்லில் ஓர் அம்பினைப் பொருத்தி நாணேற்றியவாறு அவர் பசு வடிவங்கொண்ட அன்னை பூமி எங்கெல்லாம் ஓடினாளோ அங்கெல்லாம் பின் தொடர்ந்தார்.
பதம் 4.17.16 : விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே உள்ள வெளியில் பசு வடிவம் பெற்ற பூமியானது இங்குமங்குமாக ஓடினாள், அவள் எங்கெங்கு ஓடினாலும் அவளை விடாது கையில் வில்லை ஏந்திக் கொண்டு மன்னரும் பின் தொடர்ந்து ஓடினார்.
பதம் 4.17.17 : மரணத்தின் கொடிய கரங்களில் இருந்து ஒரு மனிதன் எவ்வாறு தப்ப முடியாதோ அதுபோல் வேனனின் மைந்தன் கரங்களில் இருந்து பசு வடிவம் பெற்ற பூமியும் தப்ப முடியாது. முடிவில் ஒன்றும் செய்வதறியாது அப்பூமியானவள் மனதில் மிகுந்த துன்பமும் அச்சமும் கொண்டு திரும்பி நின்றாள்.
பதம் 4.17.18 : மிகச் சிறந்த வளமிக்க பிருது மன்னரை சமய அறநெறிகளை நன்கறிந்தவரென்றும் சரணடைந்தோரின் அடைக்கலம் என்றும் விளித்து அவன் கூறினாள்: என்னைக் காத்தருள்வீர், அனைத்து உயிர்களையும் காப்பவர் நீரே. இப்போது நீர் இப்பூமண்டலத்தின் மன்னராகவும் விளங்குகின்றீர்.
பதம் 4.17.19 : பசு வடிவம் பெற்ற பூமியானவள் மன்னரைக் கெஞ்சினாள் நானோ ஓர் ஏழை, எந்த விதமானப் பாவமும் செய்யாதவள். நீர் ஏன் என்னைக் கொல்ல விரும்புகிறீர்? சமய அறநெறிகளை நன்கறிந்தவரான நீர் ஏன் என் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டும், மேலும் ஒரு பெண்ணைக் கொல்வதற்கு ஏன் நீர் இத்துணை ஆர்வம் கொள்ள வேண்டும்?
பதம் 4.17.20 : ஒரு பெண் தவறே செய்திருந்தாலுங் கூட அவள் மீது கை வைப்பதற்கு எவரும் துணியார். இவ்வாறிருக்க கருணை மயமானவரான உம்மைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது. நீரே ஏழைகளிடத்து பாசம் வைத்து அவர்களைக் காப்பவராக இருக்கின்றீர்.
பதம் 4.17.21 : பசு வடிவம் பெற்ற பூமி தொடர்ந்து கூறினாள்: நான் ஒரு வலிமை மிக்க படகு போன்றவள், பூமியிலுள்ள அனைத்தும் என் மீதே நிற்கின்றன. நீ என்னைச் சுக்கு நூறாக உடைத்தாயென்றால் எவ்வாறு உம்மையும், உமது குடிமக்களையும் மூழ்குவதிலிருந்து காத்தல் கூடும்?
பதம் 4.17.22 : பூமிக் கிரஹத்திற்கு பிருது மன்னர் பதில் கூறினார்: எனதன்பான பூமியே! நீ எனது தீர்ப்புக்களையும் ஆணைகளையும் மீறியிருக்கிறாய். ஒரு தேவதையின் வடிவில் வேள்விகளில் நாங்கள் அளிக்கும் அவிர்பாகத்தினை நீ ஏற்றுக் கொண்டும் அதற்குப் பலனாக போதுமான உணவு தானியங்களை நீ விளைவிப்பதில்லை. எனவே, உன்னை நான் கொல்லுதல் வேண்டும்.
பதம் 4.17.23 : நீ தினமும் பசும்புல்லை வேண்டியமட்டும் தின்றும், நாங்கள் பயன்படுத்துகின்ற பாலை நீ உன் மடியில் சுரப்பதில்லை. இவ்வாறு திட்டமிட்டே நீ குற்றம் செய்திருப்பதினால் நீ எடுத்திருக்கும் பசு வடிவமானது நிச்சயம் உன்னைக் காப்பாற்றும் என்று கூற இயலாது.
பதம் 4.17.24 : பிரம்ம தேவனால் படைக்கப்பட்ட மூலிகைகள் மற்றும் பயிர்களுக்கான விதைகளை எனது ஆணைப்படி நீ வெளிக் கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக நீ அவற்றை உனக்குள் மறைத்து வைத்துக் கொண்டாய்.
பதம் 4.17.25 : உணவு தானியங்கள் இன்றி வருந்தும் எனது குடிமக்களின் பசியினை, எனது அம்புகளினால் உனது உடலைக் கிழித்துக் கிடைக்கும் சதைத்துண்டுகளின் மூலம் திருப்திப்படுத்துவேன். அழுது கொண்டிருக்கும் எமது குடிமக்களின் துயர்தனைக்களைவேன்.
பதம் 4.17.26 : ஒரு கொடியவன் அவன் ஆணாயினும், பெண்ணாயினும் அல்லது அலியாயினும் பிற உயிர்களிடத்துக் கருணையின்றி தன்னை மட்டுமே காத்துக் கொள்ளும் சுயநலமியாக இருந்தால் அவன் அரசனால் கொல்லப்படலாம். அதனைக் கொலை என்று கருதலாகாது.
பதம் 4.17.27 : நீ வீண் பெருமையினால் ஆணவமுற்று அதனால் மதி மயங்கி இருக்கின்றாய். உனது மாயா சக்தியினால் நீ இப்போது பசு வடிவம் எடுத்திருக்கிறாய். ஆயினும் உன்னை நான் கடுகளவிற்கு துண்டு துண்டாக எனது அம்புகளினால் துண்டித்து இவ்வுலக மக்கள் அனைவரையும் எனது யோக பலத்தால் தூக்கி நிறுத்துவேன்.
பதம் 4.17.28 : அந்நேரம் பிருது மன்னர் யமராஜனைப் போல் தோன்றினார். அவரது உடல் முழுவதும் ஆத்திரமே நிரம்பி அவர் சினத்தின் உருவாக மாறினார். அவள் அவரைச் சரணடைந்து கூப்பிய கரங்களுடன் பின்வருமாறு கூறத் தொடங்கினாள்.
பதம் 4.17.29 : பூமி பேச ஆரம்பித்தாள்: போற்றுதற்கரிய தேவனே, ஓ, முழுமுதற் கடவுளே, நீர் உமது நிலையில் மிகவும் உன்னதமானவராக விளங்குகின்றீர். மேலும் நீர் இயற்கையின் முக்குணங்களின் எதிரெதிர் செயலின் மூலமும் உமது ஆற்றலினால் நீர் உம்மைப் பல்வேறு வடிவங்களாக விரித்துக் கொள்வதோடு பல்வேறு உயிரினங்களாகவும் உருவெடுக்கின்றீர். மற்ற தேவர்களைப் போல் அல்லாது நீர் உமது மெய்யுணர்வு நிலையில் எப்போதும் நிலைத்து இருப்பதோடு, பல்வேறு பௌதீக எதிரெதிர் செயலுக்கு ஆட்பட்ட உலகப் படைப்பினாலும் பாதிக்கப்படுவதில்லை. அதனால் உலகச் செயல்களினால் நீர் குழப்பமடைவதில்லை.
பதம் 4.17.30 : அன்னை பூமி மேலும் கூறினாள் போற்றுதற்குரிய பகவானே! உலகின் படைப்புக்களை நெறிப்படுத்துபவர் நீரே. இப்பிரபஞ்சத் தோற்றத்தினையும் உயிர்களின் முக்குணங்களையும் நீரே படைத்தருளினீர் ஆகையினால் உயிர்கள் அனைத்தும் உறைவதற்கு உரிய இடமாக இருக்கும் பூமியாகிய என்னையும் நீரே படைத்தீர், நீர் எப்போதும் சுதந்திரமானவர். எந்தன் பகவானே! இப்போது என் முன் கையில் ஆயுதத்துடன் என்னைக் கொல்வதற்காக நிற்கின்றீர்! உம்மைவிட்டால் யார் எனக்கு அடைக்கலம் தருவார், யாரிடம் நான் சரண் புகுவது என்பதை எனக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக.
பதம் 4.17.31 : படைப்பின் ஆரம்பத்தில் உமது கற்பனைக் கெட்டாத சக்தியினால் நீர் அனைத்து அசையும், அசையாத உயிர்களைப் படைத்தீர். அதே ஆற்றலினாலேயே இப்பொழுது உயிர்களைக் காக்கவும் செய்கின்றீர். உண்மையில் சமய அறநெறிகளைக் காப்பவர் நீரே ஆவீர். அதனால் ஒரு பசு வடிவிலிருக்கும் என்னைக் கொல்வதற்கு ஏன் இத்துணை ஆர்வமுடையவராய் இருக்கின்றீர்?
பதம் 4.17.32 : போற்றுவதற்குரிய பகவானே, நீர் ஒருவராயிருந்த போதிலும் உமது கற்பனைக் கெட்டாத சக்திகளினால் பல்வேறு வடிவங்களாக உம்மை விரித்துக் கொள்கின்றீர், பிரம்ம தேவன் என்னும் முகவரின் மூலம் நீர் இப்பிரபஞ்சத்தினைப் படைத்தீர். ஆகையினால் நேரடியாக நீரே முழுமுதற் கடவுளாக விளங்குகின்றீர். போதுமான அனுபவமற்றவர்களினால் உமது மெய்யுணர்வுச் செயல்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் உமது மாய சக்தியினால் மூடப்பட்டிருக்கின்றனர்.
பதம் 4.17.33 : எனது அன்பிற்குரிய பகவானே, உமது சுயசக்திகளினால் நீரே பொருட்கள் அனைத்திற்கும் மூலகாரணர் மட்டுமல்லாது செயற்கருவிகள் (புலன்கள்) புலன்களைத் தொழிற்படுத்துபவர்கள், (நெறிப்படுத்தும் தேவர்கள்) புத்தி மற்றும் ஆணவம் போன்ற அனைத்திற்கும் கூட அவரே மூலகாரணர் ஆவார். உமது சக்தியினாலேயே நீர் பிரபஞ்சம் முழுவதையும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் போன்ற முத்தொழில்களையும் செய்கின்றீர். உமது சக்தியினால் மட்டுமே எல்லாம் தோன்றவும் சில நேரங்களில் மறையும் செய்கின்றன. ஆதலினால் முழுமுதற் கடவுளான நீரே அனைத்துக் காரணங்களுக்கும் மூல காரணமாவீர் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை உமக்குச் செலுத்துகிறேன்.
பதம் 4.17.34 : போற்றுதற்குரிய பகவானே! நீர் எப்போதும் பிறப்பற்றவர் ஆவிர். ஒருமுறை நீர் வராக அவதாரம் எடுத்து கடலின் அடியில் பாதாள லோகத்திலிருந்து என்னைக் காப்பாற்றி வெளியே கொணர்ந்தீர், உமது சுயச்சக்தியினால் நீர் பஞ்ச பூதங்களையும் புலன்களையும், மனதையும் உலகப் பாதுகாப்பிற்காகப் படைத்தீர்.
பதம் 4.17.35 : வணக்கத்திற்குரிய இறைவனே! இவ்வாறு ஒருமுறை நீர் என்னைக் கடலின் அடியிலிருந்து காத்தமையால் உமது பெயர் பூமியினைத் தாங்கியிருப்பவர் என்று பொருள்படும் தராதரன் என்று புகழப்பட்டது. இப்போது ஒரு சிறந்த வீரரின் வடிவத்தில் கையில் கூர் அம்புகளுடன் என்னைக் கொல்வதற்காக நிற்கீன்றீர். நானோ எல்லாவற்றையும் சுமந்து கொண்டு நீரில் மிதக்கும் படகு போன்று இருக்கிறேன்.
பதம் 4.17.36 : போற்றுதற்கரிய பகவானே, ஜட இயற்கையின் முக்குணங்களினாலான உமது ஆற்றல் மிக்க படைப்பில் நானும் ஒன்று. உமது செயல்களினால் நான் இப்போது மிகவும் குழப்பமுற்றிருக்கிறேன். உமது பக்தர்களின் செயல்களையே புரிந்து கொள்ள முடியாத போது உமது திருவிளையாடல்களைப் பற்றி என்ன சொல்ல முடியும். இவ்வாறு எல்லாமே எங்களுக்கு முரணாகவும் வியப்பாகவும் காட்சியளிக்கின்றன.