அத்தியாயம் – 16
பிருது மகாராஜன் பாணர்களால் துதிக்கப்படுதல்
பதம் 4.16.1
மைத்ரேய உவாச
இதி ப்ருவாணம் ந்ருபதிம் காயகா முனி-சோடிதா:
துஷ்டுவுஸ் துஷ்ட-மனஸஸ் தத் வாக் அம்ருத-ஸேவயா

மைத்ரேய: உவாச—மைத்ரேய மாமுனிவர் கூறினார்; இதி—இவ்வாறு; ப்ருவாணம்—கூறியவற்றை; ந்ருபதிம்—மன்னர்; காயகா:—இசைக்கலைஞர்கள்; முனி—முனிவர்களால்; சோடிதா:—அறிவுறுத்தப்பட்ட; துஷ்டுவு:—புகழ்ந்தனர்; திருப்தியுற்றனர்; துஷ்ட—மகிழ்ச்சியடைந்தனர்; மனஸ:—அவர்கள் மனங்களில்; தத்—அவரது; வாக்—வார்த்தைகள்; அம்ருத—அமிர்தம்; ஸேவயா—கேட்பது.

மைத்ரேய மாமுனிவர் கூறினார்: இவ்வாறு மன்னர் பிருது கூறிய அமுத மொழிகளைக் கேட்டு அவ்விசைக்கலைஞர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். மாமுனிவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தியபடி பிருது மன்னரை மிக உயர்ந்த முறையில் வழிபாடு செய்து மென்மேலும் புகழ்ந்தனர்.

பதம் 4.16.2
நாலம் வயம் தே மஹிமாநுவர்ணனே
யோ தேவ-வரயோ ‘வதார மாயயா
வேனாங்க-ஜாதஸ்ய ச பெளருஷாணி தே
வாசஸ்-பதீனாம் அபி பப்ரமுர் திய:

ந அலம்—இயல்வதில்லை; வயம்—நாங்கள்; தே—உமது; மஹிம—மகிமையை; அநுவர்ணனே—கூறுவதற்கு; ய:—யார்; தேவ—முழுமுதற் கடவுள்; வர்ய:—மிகவுயர்ந்த; அவதார—வாரிசு; மாயயா:—அவரது அகச்சக்தி அல்லது அளவற்ற கருணை; வேன-அங்க:—மன்னன் வேனனின் உடலிலிருந்து; ஜாதஸ்ய—தோன்றியிருக்கிறார்; ச—மேலும்; பௌருஷாணி—புகழ்மிக்கச் செயல்கள்; தே—உமது; வாச:-பதீனாம்—சிறந்த நாவலர்களின்; அபி—இருந்தாலும்; பத்ரமு:—குழப்பமடைவர்; திய:—மனங்கள்.

அக்கலைஞர்கள் தொடர்ந்து கூறினர்: போற்றுதற்குரிய மன்னரே, நீர் முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவின் நேரடி அவதாரமாவீர், அவரது அளவற்ற கருணையினாலேயே நீர் இம் மண்ணுலகில் தோன்றியுள்ளீர். ஆகையினால் உமது மேன்மை மிகுந்த குணங்களைப் புகழ்வது அத்துணைச் சுலபமன்று. மன்னன் வேனனின் உடலிலிருந்து நீர் தோன்றிய போதிலும் பெரும் நாவலர்களான பிரம்மன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்களாலும் உமது மேலாண்மை மிக்கச் செயல்களை உண்மையில் புகழ்ந்துரைக்க இயலாது.

பதம் 4.16.3
அதாபி உதார-ஸ்ரவஸ: ப்ருதோர் ஹரே:
கலாவதாரஸ்ய கதாம்ருதாத்ருதா:
யதோபதேஸம் முனிபி: ப்ரசோதிதா:
ஸ்லாக்யானி கர்மாணி வயம் விதன்மஹி

அத அபி—பதிலாக; உதார—தாராள; ஸ்ரவஸ:—அவரது புகழ்; ப்ருதோ:—மன்னர் பிருதுவின்; ஹரே:—பகவான் விஷ்ணுவின்; கலா—அம்சத்தின் விரிவு; அவதாரஸ்ய—அவதாரம்; கதா—வார்த்தைகள்; அம்ருத—அமிர்தம்; ஆத்ருதா:—நினைப்பதற்கு; யதா—ஏற்றவாறு; உபதேஷம்—அறிவுரை; முனிபி:—மாமுனிவர்களால்; ப்ரசோதிதா:—ஊக்கமளிக்கப்பட்டு; ஸ்லாக்யானி—பாராட்டிற்குரிய; கர்மாணி—செயல்கள்; வயம்—நாங்கள்; விதன்மஹி—பரப்புவதற்குரிய முயற்சி.

உம்மைப் போதுமான அளவு போற்றுவதற்கு எங்களால் இயலவில்லை. எனினும் உமது செயல்களைப் போற்றிப் புகழ்வதில் எங்களுக்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. முனிவர்கள் அறிஞர்கள் அளித்த அறிவுரைகளின்படியே உம்மைப் புகழ்கிறோம். நாங்கள் புகழ்வதனைத்தும் எமது புகழ்ச்சி போதுமானது அல்ல என்பதோடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் இல்லை. ஆதலினால் பிருது மன்னரே, நீர் முழுமுதற் கடவுளின் நேரடி அவதாரமாக விளங்குவதினால் உமது செயல்கள் அனைத்தும் போற்றுவதற்கும் பாராட்டுதற்கும் உரியவையாகும்.

பதம் 4.16.4
ஏஷ தர்ம-ப்ருதாம் ஸ்ரேஷ்டோ லோகம்தர்மே ‘னுவர்தயன்
கோப்தா ச தர்ம-ஸேதூனாம் ஸாஸ்தா தத்-பரிபந்தினாம்

ஏஷ:—பிருதுமன்னர்; தர்ம-ப்ருதாம்—சமயச்செயல்களைச் செய்வோர்; ஸ்ரேஷ்ட:—சிறந்த; லோகம்—முழு உலகும்; தர்மே—சமய நடவடிக்கைகள்; அநுவர்தயன்—தகுந்த முறையில் ஈடுபடும் அவர்கள்; கோப்தா—பாதுகாப்பவர்; ச—மேலும்; தர்ம-ஸேதூனாம்—சமயக் கொள்கைகளின்; ஸாஸ்தா—தண்டிப்பவர்; தத்-பரிபந்தினாம்—சமய நெறிகளுக்கு எதிரானவர்கள்.

சமய அறநெறிகளைப் பின்பற்றுவோரில் மிகச் சிறந்தவராக விளங்குபவர் பிருது மன்னர். ஆகையினால் அவர் அக்கொள்கைகளைக் காத்து அவற்றை அனைவரும் பின்பற்றுமாறு செய்வார். மேலும் அவர் சமயத்திற்கு புறம்பானவர்களுக்கும், நாத்திகர்களுக்கும் கடுமையான தண்டனை விதிப்பவராகும்.

பதம் 4.16.5
ஏஷ வை லோக-பாலானாம் பிபர்தி ஏகஸ் தனௌ தனூ:
காலே காலே யதா-பாகம் லோகயோர் உபயோர் ஹிதம்

ஏஷ:—இம்மன்னன்; வை—உறுதியாக; லோக-பாலானாம்— அனைத்து தேவர்களும்; பிபர்தி—தாங்குதல்; ஏக:—தனித்து; தனௌ—தனதுடலில்; தனூ:—உடல்கள்; காலே காலே—உரியகாலத்தில்; யதா—அதற்கேற்ப; பாகம்—உரியபங்கு; லோகயோ:—கிரஹ அமைப்புக்களின்; உபயோ:—இரண்டும்; ஹிதம்—நலன்.

மன்னன் ஒருடலைப் பெற்று ஒருவனாக இருந்த போதிலும் அவன் பல்வேறு தேவர்களாகத் தன்னை வெளிப்படுத்தி அவர்களது பல்வேறு செய்லகளைச் செய்வதின் மூலம் எல்லா உயிர்களையும் காத்து அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வைப்பான். இவ்வாறு மக்களைப் பல்வேறு வேதவேள்விகளில் ஈடுபடுத்தி அதன் முலம் மேலுலகைக் கூட அவன் காத்தருள்வான். மாதம் மும்மாரி மழை பெய்ய வைத்து இப்பூமியினைத்தையும் அவன் புரந்தருள்வான்.

பதம் 4.16.6
வஸீ கால உபாதத்தே காலே சாம் விமுஞ்சதி
ஸம: ஸர்வேஷீ பூதேஷீ ப்ரதபன் ஸீர்யவத் விபு:

வஸீ—செல்வந்தர்; காலே—உரியகாலத்தில்; உபாதத்தே—வசூலித்தல்; காலே—உரிய காலத்தில்; ச—மேலும்; அயம்—இப்பிருதுமன்னர்; விமுஞ்சதி—திருப்பித் தருதல்; ஸம:—சமமாக; ஸர்வேஷீ:—அனைவருக்கும்; பூதேஷீ—உயிர்; ப்ரதபன்—ஒளிர்கின்ற; ஸீர்ய-வத்—சூரிய தேவனைப் போன்று; விபு:—சக்திவாய்ந்தவர்.

இப்பிருது மன்னர் சூரியனை ஒத்து ஆற்றல் மிக்கவராக இருப்பார். மேலும் சூரியன் எவ்வாறு தன் ஒளியினை எல்லோருக்கும் சமமாக அளிக்கிறதோ அது போல் பிருது மன்னரும் தன் கருணையினை அனைவருக்கும் சமமாக அளிப்பார். சூரிய தேவன் எவ்வாறு எட்டு மாதங்களில் நீரை ஆவியாகச் செய்து மீண்டும் மழைக்காலத்தில் நீரை அளவின்றித் தருகிறானோ அதே போன்று பிருது மன்னரும் குடிமக்களிடமிருந்து வரி வசூல் செய்து அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர்களிடமே திருப்பித் தருவார்.

பதம் 4.16.7
திதிக்ஷதி அக்ரமம் வைன்ய உபரி ஆக்ரமதாம் அபி
பூதானாம் கருண: ஸஸ்வத் ஆர்தானாம் க்ஷிதி-வ்ருத்திமான்

திதிக்ஷதி:—தாங்குதல்; அக்ரமம்——குற்றம்; வைன்ய:—மன்னன் வேனனின் மைந்தன்; உபரி—அவர் தலையின் மீது; ஆக்ரமதாம்—மிதித்துக் கொண்டிருப்போர்; அபி—கூட; பூதானாம்—உயிர்கள் எல்லாம்; கருண:—மிகுந்த அன்புடைய இதயத்தினால்; ஸஸ்வத்—எப்போதும்; ஆர்தானாம்—துன்புறுவோர்க்கு; க்ஷிதி-வ்ருத்தி-மான்— பூமியின் பொறுமைத் தன்மையினை ஏற்றுக் கொண்டிருப்பவர்.

மன்னர் பிருது தன் குடிமக்கள் அனைவரிடமும் மிகுந்த அன்பு பாராட்டுவார். ஓர் ஏழை மனிதன் ஒழுங்கு முறை விதிகளையெல்லாம் மீறி மன்னரின் தலையில் ஏறி மிதித்தாலும் கூட மன்னர் தனது அளவற்றக் கருணையினால் மன்னித்து அவனது செயலை மறப்பார். இவ்வுலகம் முழுமைக்கும் பாதுகாவலரான அவர் பொறுமையில் பூமிக்கு நிகராகவே விளங்குவார்.

பதம் 4.16.8
தேவே ‘ வர்ஷதி அஸௌ தேவோ நரதேவ-வபுர் ஹரி:
க்ருச்ச்ர-ப்ராணா: ப்ரஜா ஹிஏஷ ரக்ஷிஷ்யதி அஞ்ஜஸேந்த்ரவத்

தேவே:—தேவர்கள் (இந்திரன்); அவர்ஷதி—மழை பொழியச் செய்யவில்லை என்றால்; அஸௌ—அந்த; தேவ:—பிருது மன்னர்; நர-தேவ—மன்னர்; வபு:—உடல் கொண்டு; ஹரி:—முழுமுதற் கடவுள்; க்ருச்ச்ர-ப்ராணா:—துன்புறும் உயிர்கள்; ப்ரஜா:—குடிமக்கள்; ஹி—உறுதியாக; ஏஷ:—இந்த; ரக்ஷிஷ்யதி—காப்பாற்றுவார்; அஞ்ஜஸா—மிக எளிதில்; இந்த்ர-வத்—தேவேந்திரனைப் போன்று.

மழையின்றி மக்களெல்லாம் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் அவதியுறும் பொழுது மன்னனின் வடிவிலிருக்கும் இக்கடவுள் தேவேந்திரனைப் போல் மழை பெய்யச் செய்யும் ஆற்றல் மிக்கவராவார். இவ்வாறு அவர் மிக எளிதாகத் தன் குடிமக்களைப் பஞ்சத்திலிருந்து பாதுகாத்தருள்வர்.

பதம் 4.16.9
ஆப்யாயதி அஸௌ லோகம் வதனாம்ருத-மூர்தினா
ஸானுராகாவ லோகேன விஸத-ஸ்மித-சாருணா

ஆப்யாயதி—அதிகரித்தல்; அஸௌ—அவர்; லோகம்—இவ்வுலகம் முழுவதும்; வதன—அவர் எழில் முகத்தினால்; அம்ருத-மூர்தினா—சந்திரன் போன்ற; ஸ-அநுராக—பாசத்துடன்; அவலோகேன—பார்வையுடன்; விஸத—ஒளி; ஸ்மித—புன்னகை; சாருணா—எழில்.

பிருது மன்னரின் பரிவு கலந்த பார்வையினாலும், சந்திரன் போன்ற முகத்தினாலும், எப்போதும் மக்கள் மீது பாசங் கொண்டு புன்னகையுடன் இருப்பதினாலும் மக்களின் வாழ்வில் அமைதியானது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

பதம் 4.16.10
அவ்யக்த-வர்த்மைஷ நிகூட-கார்யோ
கம்பீரா-வேதா உபகுப்த-வித்த:
அனந்த-மாஹாத்ம்ய-குணைக-தாமா
ப்ருது: ப்ரசேதா இவ ஸம்வ்ருதாத்மா

அவ்யக்த—வெளிப்படுத்தப்படாத; வர்த்மா—அவரது கொள்கைகள்; ஏஷ:—இம்மன்னர்; நிகூட—இரகசியமான; கார்ய:—அவரது செயல்கள்; கம்பீர—மிகவும் இரகசியமானது; வேதா:—அவரது பண்புகள்; உபகுப்த—இரகசியமாகப் பாதுகாத்தல்; வித்த:—அவரது களஞ்சியம்; அனந்த—அளவற்ற; மாஹத்ம்ய—புகழின்; குண—நற்குணங்கள்; ஏக-தாமா—புகலிடம்; ப்ருது:—மன்னர் பிருது; ப்ரசேதா:—சமுத்திரங்களின் மன்னன் வருணன்; இவ—போன்று; ஸம்வ்ருத:—மூடப்பட்ட; ஆத்மா—ஆத்மா.

அக்கலைஞர்கள் தொடர்ந்து கூறினர்: இம்மன்னர் பின்பற்றும் கொள்கைகள் என்னவென்று எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அவரது செயல்கள் அனைத்தும் மிகவும் இரகசியமானவை. மேலும் அவர் எவ்வாறு தனது அனைத்துச் செயல்களையும் வெற்றி பெறச் செய்கிறார் என்று யாராலும் அறிந்து கொள்ள முடியாது. அவரது நிதிக்குவியல் எப்போதும் யாரும் அறியாது இருக்கின்ற ஒன்றாகும். அளவற்ற பெருமைகளுக்கும், நற்குணங்களுக்கும் அவரே உறைவிடமாகத் திகழ்வார். வருண பகவானை பிறர் காணவொட்டாது கடல் எவ்வாறு சூழ்ந்து மூடியிருக்கிறதோ அதுபோல் இவரது நிலையும் யாரும் அறியாவண்ணம் பாதுகாக்கப்பட்டும், மூடப்பட்டும் இருக்கும்.

பதம் 4.16.11
துராஸதோ துர்விஷஹ ஆஸன்னோ ‘யி விதூரவத்
நைவாபிபவிதும் ஸக்யோ வேனாரணி-உத்திதோ ‘னல:

துராஸ்த:—அணுக முடியாதவர்; துர்விஷஹ:—தாங்க முடியாத; ஆஸன்ன:—நெருங்குவதற்கு; அபி—இருந்தாலும்; விதூர-வத்—தொலைதூரத்தில் இருப்பது போல்; ந—இல்லை; ஏவ—உறுதியாக; அபிபவிதும்—வெல்வது; ஸக்ய:—இயல்வது; வேன—மன்னன் வேனனின்; அரணி—நெருப்பு உண்டாக்கும் அரணிக்கட்டைகள்; உத்தித:—பிறந்தது; அனல:—நெருப்பு.

அரணிக்கட்டையிலிருந்து தீ பிறப்பது போல் மன்னன் வேனனின் இறந்த உடலிலிருந்து பிருது மன்னர் பிறந்தார். அதனால் மன்னர் பிருதுவும் நெருப்பு போன்றே விளங்குவார். ஆதலினால் அவரது எதிரிகள் யாரும் அவரை நெருங்க முடியாது. உண்மையில் அவரது பகைவர்க்கு அவர் வெல்ல முடியாத சக்தியுடையவராவார். அவர் அருகே இருந்தாலும் கூட அவரை அவர் எதிரிகளினால் அணுக முடியாது என்பதோடு கூட அவர் தொலை தூரத்தில் இருப்பது போன்றே உணர்வர். பிருது மன்னரின் வலிமையினை இவ்வுலகிலுள்ள யாராலும் வெல்லமுடியாது.

பதம் 4.16.12
அந்தர் பஹிஸ் ச பூதானாம் பஸ்யன் கர்மாணி சாரணை:
உதாஸீன இவாத்யக்ஷோ வாயுர் ஆத்மேவ தேஹினாம்

அந்த:—அகத்தில்; பஹி:—புறத்தில்; ச—மேலும்; பூதானாம்—உயிர்வாழிகளின்; பஸ்யன்—கண்டு; கர்மாணி—செயல்கள்; சாரணை:—ஒற்றர்கள்; உதாஷீன:—நடுநிலை; இவ—போன்று; அத்யக்ஷ:—சாட்சி; வாயு:—உயிர்க்காற்று; ஆத்மா—ஆத்மாக்கள்; இவ—போன்று; தேஹினாம்—உடல்பெற்ற அனைவரின்.

மன்னர் பிருது தன் குடிமக்களின் அகத்திலும், புறத்திலும் நடைபெறும் செயல்கள் அனைத்தையும் அறியக்கூடிய திறன்மிக்கவராக விளங்குவார். அவரது வேவு பார்க்கும் முறையினை எவராலும் அறிந்து கொள்ள முடியாது. தன்னைப் பிறர் புகழ்ந்தாலும் அல்லது இகழ்ந்தாலும் இரண்டையும் அவர் சமமாகவே கருதுவார். அவர் உயிர்களை இயக்கும் உயிர் சக்தியான காற்றைப் போன்றவர். காற்று ஒருவனின் உடலினுள்ளும் வெளியிலும் இருக்கும். அத்தோடு அது எல்லோர்க்கும் சமமாகவே இருக்கும்.

பதம் 4.16.13
நாதண்ட்யம் தண்டயதி ஏஷ ஸீதம் ஆத்ம-த்விஷாம் அபி
தண்டயதி ஆத்மஜம் அபி தண்டயம் தர்ம-பதே ஸ்தித:

ந—இல்லை; அதண்ட்யம்—தண்டிப்பதற்குரியதல்லாத; தண்டயதி—தண்டிப்பது; ஏஷ:—இம்மன்னர்; ஸீதம்—மைந்தன்; ஆத்ம-த்விஷாம்—அவர் எதிரிகளின்; அபி—கூட; தண்டயதி—அவர் தண்டிப்பார்; ஆத்ம-ஜம்—அவர் சொந்த மைந்தன்; அபி—கூட; தண்ட்யம்—தண்டிக்கக் கூடிய; தர்ம-பதே—தர்மத்தின் வழியில்; ஸ்தித:—நிலைத்திருத்தல்.

இம்மன்னர் எப்போதும் அறத்தின் வழியிலேயே செய்பவராதலால் அவர் தனது மைந்தனிடமும், மைந்தனின் பகைவனிடமும் நடுநிலையுடனேயே இருப்பார். தன் எதிரியின் மைந்தன் தண்டனைக்கு உரியவனாக இல்லையென்றால் அவனைத் தண்டிக்க மாட்டார். அது போல் தன் மைந்தன் தண்டனைக்கு உரியவன் என்றால் சிறிதும் தாமதியாது அவனை உடனே தண்டிப்பார்.

பதம் 4.16.14
அஸ்யாப்ரதிஹதம் சக்ம் ப்ருதோர் அமாநாஸாசலாத்
வர்ததே பகவான் அர்கோ யாவத் தபதி கோ-கணை:

அஸ்ய—இம்மன்னரின்; அப்ரதிஹதம்—தடைப்படுவதில்லை; சக்ரம்—அவரது ஆட்சிச் சக்கரம்; ப்ருதோ:—மன்னர் பிருதுவின்; ஆ-மானஸ-அசலாத்—மானஸ மலைவரை; வர்ததே—இருக்கும்; பகவான்— மிகச்சக்தி வாய்ந்த; அர்க:—சூரியதேவன்; யாவத்—போன்று; தபதி—ஒளிர்தல்; கோ-கணை:—ஒளிக்கதிர்களுடன்.

சூரியதேவனின் ஒளிக்கதிர்கள் எந்தவிதத் தடையுமின்றி ஆர்க்டிக் நிலப்பகுதி எனப்படும் வடதுருவம் வரை செல்வது போல் பிருதுமன்னரின் ஆட்சிச் சக்கரமும் வடதுருவம் வரை உள்ள நிலப்பகுதி முழுவதும் பரந்து விரிந்திருப்பதோடு அவர் வாழும் வரை எந்த வித இடையூறுமின்றி விளங்கும்.

பதம் 4.16.15
ரஜ்ஜயிஷ்யதி யல் லோகம் அயம் ஆத்ம-விசேஷ்டிதை:
அதாமும் ஆஹீ ராஜானம் மனோ ரஜ்ஜனகை: ப்ரஜா:

ரஜ்ஜயிஷ்யதி—மகிழ்ச்சிப்படுத்துவார்; யத்—ஏனென்றால்; லோகம்—இவ்வுலக முழுவதும்; அயம்—இந்த மன்னர்; ஆத்ம—தன்னுடைய; விசேஷ்டிதை:—செயல்களினால்; அத—அதனால்; அமும்—அவரது; ஆஹீ:—அவர்கள் அழைப்பர்; ராஜானம்—மன்னர்; மன:-ரஜ்ஜனகை:—மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளித்தல்; ப்ரஜா:—குடிமக்கள்.

தனது செயல்களினால் இம்மன்னர் அனைவரையும் மகிழ்விப்பார். அதனால் அவர் குடிமக்கள் அனைவரும் திருப்தியுடன் இருப்பர். இவ்வாறு குடிமக்கள் மிகுந்த திருப்தியடைவதினால் அவரைத் தங்களை ஆளும் மன்னராக ஏற்றுக் கொள்வர்.

பதம் 4.16.16
த்ருட-வ்ரத: ஸத்ய-ஸந்தோ ப்ரஹ் மண்யோ வ்ருத்த-ஸேவக:
ஸரண்ய: ஸர்வ-பூதானாம் மானதோ தீன-வத்ஸல:

த்ருட-வ்ராத:—தீர்மானத்தில் உறுதிமிக்கவர்; ஸத்ய-ஸந்த:—எப்போதும் சத்தியத்தில் நிலைத்திருந்தல்; ப்ரஹ்மண்ய:—அந்தணக் கலாச்சாரத்தில் பற்றுடையவர்; வ்ருத்த-ஸேவக:—முதியவர்களின் சேவகர்; ஸரண்ய:—சரண்புகுவதற்கு; ஸர்வ-பூதானாம்—அனைத்து உயிர்வாழிகளின்; மான-த:—அனைவருக்கும் மரியாதை அளிப்பவர்; தீன—வத்ஸல:—ஏழைகள் மற்றும் உதவியற்றவர்களிடம் மிகவும்அன்பானவர்.

இம்மன்னர் தனது தீர்மானத்தில் உறுதி மிக்கவராகவும் சத்தியத்தில் நிலை பெற்றவராகவும் இருப்பார். மேலும் இவர் அந்தணக் கலாச்சாரத்தில் காதல் கொண்டவராகவும், முதியவர்களுக்குச் சேவை செய்பவராகவும், சரணடையும் ஆத்மாக்களுக்கு அடைக்கலம் தருபவராகவும் விளங்குவார். அனைவரிடத்தும் மரியாதை உடையவராதலினால் எப்போதும் ஏழைகளிடத்தும் உதவியற்றவர்களிடமும் மிகுந்த கருணை உடையவராக விளங்குவார்.

பதம் 4.16.17
மாத்ரு—பக்தி: பர—ஸ்த்ரீஷீ பத்ன்யாம் அர்த இவாத்மன:
ப்ரஜாஸீ பித்ருவத் ஸ்நிக்த: கிங்கரோ ப்ரஹ்ம—வாதினாம்

மாத்ரு-பக்தி:—தன் அன்னையைப்போல் ஒருவருக்கு மரியாதை அளிப்பவர்; பர-ஸ்த்ரீஷீ—பிற பெண்களை; பத்ன்யாம்—அவர் மனைவியை; அர்த:—பாதி; இவ—போன்று; ஆத்மன:—அவர் உடலின்; ப்ரஜாஸீ—குடிமக்களுக்கு; பித்ரு-வத்—தந்தையைப் போன்று; ஸ்நிக்த:—பாசமுடன்; கிங்கர:—ஊழியன்; ப்ரஹ்ம-வாதினாம்—பகவானின் புகழ் பரப்பும் பக்தர்களின்.

மன்னர் எல்லாப் பெண்களையும் தனது அன்னையாகக் கருதி மரியாதை செய்வார். தன் மனைவியைத் தன் உடலின் மறு பாதியாகவே கருதி நடத்துவார். தன் குடிமக்கள் அனைவருக்கும் ஒரு தந்தையைப் போல் அன்பு காட்டுவார். பகவானின் புகழ் பரப்பும் பக்தர்களிடம் ஒரு தொண்டனைப் போல் மிகவும் பணிவுடன் நடந்து கொள்வார்.

பதம் 4.16.18
தேஹினாம் ஆத்மவத்-ப்ரேஷ்ட: ஸீஹ்ருதாம் நந்தி-வர்தன:
முக்த-ஸங்க-ப்ரஸங்கோ ‘யம் தண்ட-பாணிர் அஸாதுஷீ

தேஹீனாம்—உடல்பெற்ற அனைத்து உயிர்களிடத்தும்; ஆத்ம-வத்—தன்னைப்போல்; ப்ரேஷ்ட:—அன்புடன் கருதுதல் வேண்டும்; ஸீஹ்ருதாம்—அவர் நண்பர்களின்; நந்தி-வர்தன:—மகிழ்ச்சியினை அதிகரித்தல்; முக்த-ஸங்க—அனைத்து மாசுக்களும் நீங்கியவர்களிடம்; ப்ரஸங்க:—நெருங்கிய தொடர்புகொண்டு; அயம்—இம்மன்னன்; தண்ட-பாணி:—தண்டிக்கும் கரம்; அஸாதுஷீ—குற்றவாளிகளிடத்து.

மன்னர் உடல் பெற்ற அனைத்து உயிர்களையும் தன்னுடைய உயிரைப் போல் கருதுவார். தனது நண்பர்களின் மகிழ்ச்சியினை எப்போதும் அதிகரிப்பார். விடுதலை பெற்ற மனிதர்களிடம் நெருங்கிய தொடர்பு கொள்வார். இரும்புக் கரம் கொண்டு பாவிகளைத் தண்டிப்பார்.

பதம் 4.16.19
அயம் து ஸாக்ஷாத் பகவாம்ஸ் த்ரி-அதிஸ:
கூட-ஸ்த ஆத்மா கலயா வதீர்ண:
யஸ்மின்ன அவித்யா-ரசிதம் நிரர்தகம்
பஸ்யந்தி நானாத்வம் அபி ப்ரதீதம்

அயம்—இந்த மன்னர்; து—பிறகு; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவான்—முழுமுதற் கடவுள்; த்ரி-அதிஸ:—மூன்று லோகங்களுக்கும் தலைவர்; கூட-ஸ்த:—எந்த வித மாற்றமுமின்றி; ஆத்மா—பரமாத்மா; கலயா—அம்சத்தின் ஒரு பகுதி விரிவாக; அவதீர்ண:—அவதரித்தார்; யஸ்மின்—அவரிடத்தில்; அவித்யா-ரசிதம்—அறியாமையினால் உண்டாக்கப்பட்ட; நிரர்தகம்—அர்த்தமின்றி; பஸ்யந்தி—அவர்கள் காண்கின்றனர்; நானாத்வம்—பௌதீக வேறுபாட்டுத்தன்மை; அபி—உறுதியாக; ப்ரதீதம்—உணர்ந்தோர்.

இம்மன்னர் மூன்று உலகங்களுக்கும் தலைவர் ஆவார், மேலும் இவர் முழுமுதற் கடவுளால் அதிகாரம் அளிக்கப்பட்டவர். இவர் மாற்றத்திற்காளாகாதவர், பரம்பொருள் என்றறியப்படுவதின் “சக்தியாவேச” அவதாரமுமாவர். முற்றிலும் கற்று முழு விடுதலை பெற்றவராதலினால் உலக வேறுபாடுகள் அனைத்தையும் பொருளற்றதாகவே கொள்வார். ஏனெனில் அவற்றின் அடிப்படைத் தன்மை அறியாமையாதலினால்.

பதம் 4.16.20
அயம் புவோ மண்டலம் ஒதயாத்ரேர்
கோப்தைக-வீரோ நரதேவ-நாத:
ஆஸ்தாய ஜைத்ரம் ரதம் ஆத்த-சாப:
பர்யஸ்யதே தக்ஷிணதோ யதார்க:

அயம்—இம்மன்னர்; புவ:—உலகின்; மண்டலம்—பூ மண்டலம்; ஆ-உதய-அத்ரே:—சூரியனின் உதயத்தை முதலில் காண்பதற்கரிய மலை; கோப்தா—பாதுகாப்பார்; ஏக—தனிச்சிறப்புடைய; வீர:—வீரர்; நாயகர்; நர-தேவ—அனைத்துத் தேவர்கள்; மனித சமூகத்தின் கடவுள்கள்; நாத:—நாதன்; ஆஸ்தாய—நிலைபெற்றிருப்பவர்; ஜைத்ரம்—வெற்றி; ரதம்—அவரது இரதம்; ஆத்த-சோப:—வில்லை உடையவர்; பர்யஸ்யதே—சுற்றிவருவார்; தக்ஷிணத:—தென்திசையிலிருந்து; யதா—போன்று; அர்க:—சூரியன்.

இம்மன்னர் தனிச்சிறப்பு வாய்ந்த வீரரும், நாயகரும் ஆவார். ஆதலினால் இவருக்கு பகைவர் என்று எவருமிலர். பிறரால் வெல்வதற்கரிய வில்லைத் தன் கைகளில் ஏந்தி தன் இரதத்தில் இப்பூமியினை சூரியன் தன் கோள்ப்பாதையில் தென்திசையிலிருந்து சுழல்வதுபோல் சுற்றி வருவார்.

பதம் 4.16.21
அஸ்மை ந்ரு-பாலா: கில தத்ர தத்ர
பலிம் ஹரிஷ்யந்தி ஸோலோக-பாலா:
மம்ஸ்யந்த ஏஷாம் ஸ்த்ரிய ஆதி-ராஜம்
சக்ராயுதம் தத்-யஸ உத்தரந்த்ய:

அஸ்மை—அவருக்கு; ந்ரு-பாலா:—எல்லா மன்னர்களும்; கிவ—உறுதியாக; தத்ர தத்ர—இங்குமங்கும்; பலிம்—பரிசுகள்; ஹரிஷ்யந்தி—அளிப்பார்; ஸ—உடன்; லோக-பாலா:—தேவர்கள்; மம்ஸ்யந்தே—கருதுவர்; ஏஷாம்—இம்மன்னர்கள்; ஸ்த்ரிய:—மனைவியர்; ஆதி-ராஜம்—ஆதி மன்னர்; சக்ர-ஆயுதம்—சக்கராயுதத்தினை வைத்திருப்பவர்; தத்—அவரது; யஸ:—பெருமை; உத்தரந்த்ய:—கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு உலகம் முழுவதும் இம்மன்னர் சுற்றிவரும் பொழுது அனைத்து மன்னர்களும் அதுபோல் தேவர்களும் இவருக்குப் பல்வேறு பரிசுகளை அளிப்பார்கள். அவர்கள் மனைவியரும் இவர் தம் கரங்களில் கதாயுதம் மற்றும் சக்கராயுதம் ஏந்தியிருப்பதினால் இவரை உண்மையான உலக மன்னராகக் கருதி, முழுமுதற் கடவுளைப் போன்று இவரும், சிறப்புடன் விளங்கப் போவதினால் இவரது புகழை இனிய பாடல்களாகப் பாடுவர்.

பதம் 4.16.22
அயம் மஹீம் காம் துதுஹே அதிராஜ:
ப்ரஜாபதிர் வ்ருத்தி-கர: ப்ரஜானாம்
யோ லீலயாத்ரீன் ஸ்வ-ஸராஸ-கோட்யா
பிந்தன் ஸமாம் காம் அகரேஷ் யதேந்த்ர:

அயம்—இம்மன்னர்; மஹீம்—பூமி; காம்—பசுவின் வடிவில்; துதுஹே—பால் கறந்து; அதிராஜ:—தலைசிறந்த மன்னர்; ப்ரஜா-பதி:—மனித இனத்தின் மூதாதையர்; வ்ருத்தி-கர:—வாழ்க்கை வசதிகளைச் செய்து தருதல்; ப்ரஜானாம்—குடிமக்களின்; ய:—யார்; ஒருவர்; லீலயா—லீலைகளினால்; அத்ரீன்—மலைகளும் முகடுகளும்; ஸ்வ-ஸராஸ—அவர் பசுவின்; கோட்ய—கூர்முனையினால்; பிந்தன்—உடைத்து; ஸமாம்—சமம்; காம்—பூமி; அகரோத்—செய்வார்; யதா—போன்று; இந்த்ர:—தேவர்களின் தலைவன் இந்திரன்.

இம்மன்னர் குடிமக்களைக் காப்பதில் இணையற்றவராகவும், பிரஜாபதி தேவர்களுக்கு இணையானவரும் ஆவார். உயிர்களின் தேவைகளுக்காக பசுவைப் போன்றிருக்கும் பூமியின் வளம் என்னும் பாலினைக் கறந்தளிப்பார். தேவேந்திரன் தன்கையிலிருக்கும் வஜ்ராயுதத்தினால் தலைகளை உடைத்துத் தூள்தூளாக்கியதைப் போன்று இவரும் தனது வில்லின் கூர்மையான முனைகளினால் அனைத்து மலைகளையும் உடைத்து நிலப்பரப்பினை சமப்படுத்துவார்.

பதம் 4.16.23
விஸ்பூர்ஜயன்ன ஆஜ-கவம் தனு: ஸ்வயம்
யதாசரத் க்ஷமாம் அவிஷஹ்யம் ஆஜௌ
ததா நிலியுர் திஸிதிஸிஅஸந்தோ
வாங்கூலம் உத்யம்ய யதா ம்ருகேந்த்ர:

விஸ்பூர்ஜயன்—அதிர்தல்; ஆஜ-கவம்—ஆடுகள் மற்றும் காளை மாடுகளின் கொம்புகளினாலான; தனு:—அவரது வில்; ஸ்வயம்—சுயமாக; யதா—அப்பொழுது; அசரத்—பயணித்தால்; கூமாம்—பூமியின் மேல்; அவிஷஹ்யம்—தாங்க முடியாதது; ஆஜௌ—யுத்தத்தில்; ததா—அந்நேரம்; நிலியுர்:—தம்மை மறைத்துக் கொள்வர்; திஸிதிஸி- அனைத்துத் திக்குகளிலும்; அஸந்த:—அசுரத் தன்மை கொண்டோர்; லாங்கூலம்—வால்; உத்யம்ய—உயர்த்திக் கொண்டு; யதா—போன்று; ம்ருகேந்த்ர:—சிங்கம்.

சிங்கம் தனது வாலை வான் நோக்குமாறு உயர்த்தியபடி கம்பீர நடை நடந்து வருமானால் சிறு விலங்குகள் அனைத்தும் அச்சங்கொண்டு ஓடி மறைந்து விடும். அதுபோல் பிருது மன்னர் தனது ராஜ்ஜியத்தில் பயணிக்கும் பொழுது ஆடுகள் மற்றும் காளைமாடுகளின் கொம்புகளினாலான தனது வில்லை எடுத்து நானேற்றி ஒளி ஏற்படுத்தினால் அசுரத் தன்மை கொண்ட கயவர்களும் திருடர்களும் எல்லாத் திக்குகளிலும் புகுந்து மறைந்து கொள்வர்.

பதம் 4.16.24
ஏஷோ ‘ஸ்வமேதாஞ் ஸதம் ஆஜஹார
ஸரஸ்வதீ ப்ராது ரோபாவி யத்ர
அஹார்ஷீத் யஸ்ய ஹயம் புரந்தர:
ஸத—க்ரதுஸ் சரமே வர்தமானே

ஏஷ:—இம்மன்னர்; அஸ்வமேதான்—அசுவமேதயாகம்; ஸதம்—ஒரு நூறு; ஆஜஹார—செய்வார்; ஸரஸ்வதீ—சரஸ்வதி நதியின்; ப்ராதுரபாவி—வெளிப்படும்; யத்ர—எங்கே; ஆஹார்ஷீத்—திருடப்படும்; யஸ்ய—யாருடைய; ஹயம்—குதிரை: புரந்தர:—தேவேந்திரனால்; ஸத-க்ரது:—இவர் நூறு வேள்விகள் செய்வார்; சரமே—கடைசி வேள்வியின் போது; வர்தமானே—இது நடைபெறும்.

சரஸ்வதி நதியின் கரையில் வைத்து இம்மன்னர் அசுவமேதை யாகம் எனப்படும் நூறு வேள்விகள் செய்வார். இதன் இறுதி வேள்வியில் தேவேந்திரன் வேள்விக் குதிரையினை திருடி செல்வான்.

பதம் 4.16.25
ஏஷ ஸ்வ-ஸத்மோபவனே ஸமேத்ய
ஸநத்-குமாரம் பகவந்தம் ஏகம்
ஆராத்ய பக்த்யாலபதாமலம் தஜ்
ஜ்ஞானம் யதோ ப்ரஹ்ம பரம் விதந்தி

ஏஷ:—இம்மன்னர்; ஸ்வ-ஸத்ம—அவர் மாளிகையில்; உபவனே—தோட்டத்தில்; ஸமேத்ய—சந்திப்பார்; ஸநத்-குமாரம்—சனத் குமார; பகவந்தம்—வணங்குதற்குரிய; ஏகம்—தனித்து; ஆராத்ய—வழிபடுதல்; பக்த்யா—பக்தியுடன்; அலபத—அவர் எய்துவார்; அமலம்—மாசு படாது; தத்—அந்த; ஜ்ஞானம்—ஞானம்; யத:—அதன் மூலம்; ப்ரஹ்ம—பிரம்ம; பரம்—பரம; உன்னதமான; விதந்தி—அவர்கள் மகிழ்வர்; அவர்கள் அறிவர்.

இம்மன்னர் நான்கு குமாரர்களுள் ஒருவரான சனத் குமாரரைத் தன் அரண்மனை நந்தவனத்தில் சந்திப்பார். இம்மன்னர் அவரை பக்தியுடன் துதித்து அவரிடமிருந்து பரமானந்தத்தினை அனுபவிப்பதற்கு உதவும் அறிவுரைகளைப் பெறும் பேறு பெறுவார்.

பதம் 4.16.26
தத்ர தத்ர கிரஸ் தாஸ் தா இதி விஸ்ருத-விக்ரம:
ஸ்ரோஷ்யதி ஆத்மாஸ்ரிதா காதா: ப்ருது: ப்ருது-பராக்ரம:

தத்ர தத்ர—இங்குமங்கும்; கிர:—வார்த்தைகள்; தா: தா:—பல, பலவிதமான; இதி—இவ்வாறு; விஸ்ருத-விக்ரம:—அவரது வீரப் பண்புகள் பரந்து பாராட்டப்படும்; ஸ்ரோஷ்யதி—கேட்கப்படும்; ஆத்ம-ஆஸ்ரிதா:—அவரைப்பற்றி; காதா:—கவிதைகளும், கதைகளும்; ப்ருது:—மன்னர் பிருது; ப்ருது-பாரக்ரம:—தன்னேரில்லா ஆற்றல் பெற்றவர்.

இவ்வழியில் பிருது மன்னரின் வீரச்செயல்கள் பொதுமக்கள் அனைவரும் அறியும் நிலை வரும், பிருது மன்னர் தன்னைப் பற்றியும் தனது சிறப்பிற்குரிய வீரச் செயல்களைப் பற்றியும் எப்போதும் கேட்ட வண்ணம் இருப்பார்.

பதம் 4.16.27
திஸோ விஜித்யாப்ரதிருத்த-சக்ர:
ஸ்வ-தேஜஸோத்பாடித-லோக-ஸல்ய:
ஸீராஸீரேந்த்ரைர் உபகீயமான
மஹானுபாவோ பவிதா பதிர் புவ:

திஸ:—எல்லாத் திக்குகளிலும்; விஜித்ய—வெற்றி; அப்ரதிருத்த—தங்கு தடையின்றி; சக்ர:—அவரது செல்வாக்கு அல்லது சக்தி; ஸ்வ-தேஜஸா—அவரது பேராண்மை; உத்பாடித—வீழ்த்துதல்; லோக-ஸல்ய:—குடிமக்களின் துன்பநிலை; ஸீர—தேவர்களின்; அஸீர—அசுரர்களின்; இந்த்ரை:—தலைவர்களினால்; உபகீயமான—புகழப்படும்; மஹா-அனுபவ:—மகாத்மா; பவிதா—அவர் ஆவார்; பதி:—பதியாவார்; புவ:—உலகின்.

பிருது மன்னரின் கட்டளைகளை மீறி இவ்வுலகில் நடக்க எவராலும் முடியாது. இவ்வுலகை வென்ற பிறகு அவர் குடிமக்களின் மும்முனைத் துயரினை முற்றிலும் நீக்குவார். இதன் பின்னர் அவர் இவ்வுலகம் முழுவதினாலும் அங்கீகரிக்கப்படுவார். அச்சமயம் சுரர்களும் அசுரர்களும் சந்தேகமின்றி அவரது பெருந்தன்மை மிக்கச் செயல்களைப் புகழ்வர்.

இவ்வாறு ஸ்ரீமத் பாகவதத்தின் நான்காவது காண்டம் பதினாறாம் அத்தியாயமான “இசைக் கலைஞர்கள் போற்றிய பிருது மன்னரின் புகழ்” என்னும் பகுதி இத்துடன் நிறைவடைகிறது.

ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “இசைக் கலைஞர்கள் போற்றிய பிருது மன்னரின் புகழ்” எனும் தலைப்பை கொண்ட பதினாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare