அத்தியாயம் – 16
பிருது மகாராஜன் பாணர்களால் துதிக்கப்படுதல்
பதம் 4.16.1 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: இவ்வாறு மன்னர் பிருது கூறிய அமுத மொழிகளைக் கேட்டு அவ்விசைக்கலைஞர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். மாமுனிவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தியபடி பிருது மன்னரை மிக உயர்ந்த முறையில் வழிபாடு செய்து மென்மேலும் புகழ்ந்தனர்.
பதம் 4.16.2 : அக்கலைஞர்கள் தொடர்ந்து கூறினர்: போற்றுதற்குரிய மன்னரே, நீர் முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவின் நேரடி அவதாரமாவீர், அவரது அளவற்ற கருணையினாலேயே நீர் இம் மண்ணுலகில் தோன்றியுள்ளீர். ஆகையினால் உமது மேன்மை மிகுந்த குணங்களைப் புகழ்வது அத்துணைச் சுலபமன்று. மன்னன் வேனனின் உடலிலிருந்து நீர் தோன்றிய போதிலும் பெரும் நாவலர்களான பிரம்மன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்களாலும் உமது மேலாண்மை மிக்கச் செயல்களை உண்மையில் புகழ்ந்துரைக்க இயலாது.
பதம் 4.16.3 : உம்மைப் போதுமான அளவு போற்றுவதற்கு எங்களால் இயலவில்லை. எனினும் உமது செயல்களைப் போற்றிப் புகழ்வதில் எங்களுக்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. முனிவர்கள் அறிஞர்கள் அளித்த அறிவுரைகளின்படியே உம்மைப் புகழ்கிறோம். நாங்கள் புகழ்வதனைத்தும் எமது புகழ்ச்சி போதுமானது அல்ல என்பதோடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் இல்லை. ஆதலினால் பிருது மன்னரே, நீர் முழுமுதற் கடவுளின் நேரடி அவதாரமாக விளங்குவதினால் உமது செயல்கள் அனைத்தும் போற்றுவதற்கும் பாராட்டுதற்கும் உரியவையாகும்.
பதம் 4.16.4 : சமய அறநெறிகளைப் பின்பற்றுவோரில் மிகச் சிறந்தவராக விளங்குபவர் பிருது மன்னர். ஆகையினால் அவர் அக்கொள்கைகளைக் காத்து அவற்றை அனைவரும் பின்பற்றுமாறு செய்வார். மேலும் அவர் சமயத்திற்கு புறம்பானவர்களுக்கும், நாத்திகர்களுக்கும் கடுமையான தண்டனை விதிப்பவராகும்.
பதம் 4.16.5 : மன்னன் ஒருடலைப் பெற்று ஒருவனாக இருந்த போதிலும் அவன் பல்வேறு தேவர்களாகத் தன்னை வெளிப்படுத்தி அவர்களது பல்வேறு செய்லகளைச் செய்வதின் மூலம் எல்லா உயிர்களையும் காத்து அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வைப்பான். இவ்வாறு மக்களைப் பல்வேறு வேதவேள்விகளில் ஈடுபடுத்தி அதன் முலம் மேலுலகைக் கூட அவன் காத்தருள்வான். மாதம் மும்மாரி மழை பெய்ய வைத்து இப்பூமியினைத்தையும் அவன் புரந்தருள்வான்.
பதம் 4.16.6 : இப்பிருது மன்னர் சூரியனை ஒத்து ஆற்றல் மிக்கவராக இருப்பார். மேலும் சூரியன் எவ்வாறு தன் ஒளியினை எல்லோருக்கும் சமமாக அளிக்கிறதோ அது போல் பிருது மன்னரும் தன் கருணையினை அனைவருக்கும் சமமாக அளிப்பார். சூரிய தேவன் எவ்வாறு எட்டு மாதங்களில் நீரை ஆவியாகச் செய்து மீண்டும் மழைக்காலத்தில் நீரை அளவின்றித் தருகிறானோ அதே போன்று பிருது மன்னரும் குடிமக்களிடமிருந்து வரி வசூல் செய்து அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர்களிடமே திருப்பித் தருவார்.
பதம் 4.16.7 : மன்னர் பிருது தன் குடிமக்கள் அனைவரிடமும் மிகுந்த அன்பு பாராட்டுவார். ஓர் ஏழை மனிதன் ஒழுங்கு முறை விதிகளையெல்லாம் மீறி மன்னரின் தலையில் ஏறி மிதித்தாலும் கூட மன்னர் தனது அளவற்றக் கருணையினால் மன்னித்து அவனது செயலை மறப்பார். இவ்வுலகம் முழுமைக்கும் பாதுகாவலரான அவர் பொறுமையில் பூமிக்கு நிகராகவே விளங்குவார்.
பதம் 4.16.8 : மழையின்றி மக்களெல்லாம் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் அவதியுறும் பொழுது மன்னனின் வடிவிலிருக்கும் இக்கடவுள் தேவேந்திரனைப் போல் மழை பெய்யச் செய்யும் ஆற்றல் மிக்கவராவார். இவ்வாறு அவர் மிக எளிதாகத் தன் குடிமக்களைப் பஞ்சத்திலிருந்து பாதுகாத்தருள்வர்.
பதம் 4.16.9 : பிருது மன்னரின் பரிவு கலந்த பார்வையினாலும், சந்திரன் போன்ற முகத்தினாலும், எப்போதும் மக்கள் மீது பாசங் கொண்டு புன்னகையுடன் இருப்பதினாலும் மக்களின் வாழ்வில் அமைதியானது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
பதம் 4.16.10 : அக்கலைஞர்கள் தொடர்ந்து கூறினர்: இம்மன்னர் பின்பற்றும் கொள்கைகள் என்னவென்று எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அவரது செயல்கள் அனைத்தும் மிகவும் இரகசியமானவை. மேலும் அவர் எவ்வாறு தனது அனைத்துச் செயல்களையும் வெற்றி பெறச் செய்கிறார் என்று யாராலும் அறிந்து கொள்ள முடியாது. அவரது நிதிக்குவியல் எப்போதும் யாரும் அறியாது இருக்கின்ற ஒன்றாகும். அளவற்ற பெருமைகளுக்கும், நற்குணங்களுக்கும் அவரே உறைவிடமாகத் திகழ்வார். வருண பகவானை பிறர் காணவொட்டாது கடல் எவ்வாறு சூழ்ந்து மூடியிருக்கிறதோ அதுபோல் இவரது நிலையும் யாரும் அறியாவண்ணம் பாதுகாக்கப்பட்டும், மூடப்பட்டும் இருக்கும்.
பதம் 4.16.11 : அரணிக்கட்டையிலிருந்து தீ பிறப்பது போல் மன்னன் வேனனின் இறந்த உடலிலிருந்து பிருது மன்னர் பிறந்தார். அதனால் மன்னர் பிருதுவும் நெருப்பு போன்றே விளங்குவார். ஆதலினால் அவரது எதிரிகள் யாரும் அவரை நெருங்க முடியாது. உண்மையில் அவரது பகைவர்க்கு அவர் வெல்ல முடியாத சக்தியுடையவராவார். அவர் அருகே இருந்தாலும் கூட அவரை அவர் எதிரிகளினால் அணுக முடியாது என்பதோடு கூட அவர் தொலை தூரத்தில் இருப்பது போன்றே உணர்வர். பிருது மன்னரின் வலிமையினை இவ்வுலகிலுள்ள யாராலும் வெல்லமுடியாது.
பதம் 4.16.12 : மன்னர் பிருது தன் குடிமக்களின் அகத்திலும், புறத்திலும் நடைபெறும் செயல்கள் அனைத்தையும் அறியக்கூடிய திறன்மிக்கவராக விளங்குவார். அவரது வேவு பார்க்கும் முறையினை எவராலும் அறிந்து கொள்ள முடியாது. தன்னைப் பிறர் புகழ்ந்தாலும் அல்லது இகழ்ந்தாலும் இரண்டையும் அவர் சமமாகவே கருதுவார். அவர் உயிர்களை இயக்கும் உயிர் சக்தியான காற்றைப் போன்றவர். காற்று ஒருவனின் உடலினுள்ளும் வெளியிலும் இருக்கும். அத்தோடு அது எல்லோர்க்கும் சமமாகவே இருக்கும்.
பதம் 4.16.13 : இம்மன்னர் எப்போதும் அறத்தின் வழியிலேயே செய்பவராதலால் அவர் தனது மைந்தனிடமும், மைந்தனின் பகைவனிடமும் நடுநிலையுடனேயே இருப்பார். தன் எதிரியின் மைந்தன் தண்டனைக்கு உரியவனாக இல்லையென்றால் அவனைத் தண்டிக்க மாட்டார். அது போல் தன் மைந்தன் தண்டனைக்கு உரியவன் என்றால் சிறிதும் தாமதியாது அவனை உடனே தண்டிப்பார்.
பதம் 4.16.14 : சூரியதேவனின் ஒளிக்கதிர்கள் எந்தவிதத் தடையுமின்றி ஆர்க்டிக் நிலப்பகுதி எனப்படும் வடதுருவம் வரை செல்வது போல் பிருதுமன்னரின் ஆட்சிச் சக்கரமும் வடதுருவம் வரை உள்ள நிலப்பகுதி முழுவதும் பரந்து விரிந்திருப்பதோடு அவர் வாழும் வரை எந்த வித இடையூறுமின்றி விளங்கும்.
பதம் 4.16.15 : தனது செயல்களினால் இம்மன்னர் அனைவரையும் மகிழ்விப்பார். அதனால் அவர் குடிமக்கள் அனைவரும் திருப்தியுடன் இருப்பர். இவ்வாறு குடிமக்கள் மிகுந்த திருப்தியடைவதினால் அவரைத் தங்களை ஆளும் மன்னராக ஏற்றுக் கொள்வர்.
பதம் 4.16.16 : இம்மன்னர் தனது தீர்மானத்தில் உறுதி மிக்கவராகவும் சத்தியத்தில் நிலை பெற்றவராகவும் இருப்பார். மேலும் இவர் அந்தணக் கலாச்சாரத்தில் காதல் கொண்டவராகவும், முதியவர்களுக்குச் சேவை செய்பவராகவும், சரணடையும் ஆத்மாக்களுக்கு அடைக்கலம் தருபவராகவும் விளங்குவார். அனைவரிடத்தும் மரியாதை உடையவராதலினால் எப்போதும் ஏழைகளிடத்தும் உதவியற்றவர்களிடமும் மிகுந்த கருணை உடையவராக விளங்குவார்.
பதம் 4.16.17 : மன்னர் எல்லாப் பெண்களையும் தனது அன்னையாகக் கருதி மரியாதை செய்வார். தன் மனைவியைத் தன் உடலின் மறு பாதியாகவே கருதி நடத்துவார். தன் குடிமக்கள் அனைவருக்கும் ஒரு தந்தையைப் போல் அன்பு காட்டுவார். பகவானின் புகழ் பரப்பும் பக்தர்களிடம் ஒரு தொண்டனைப் போல் மிகவும் பணிவுடன் நடந்து கொள்வார்.
பதம் 4.16.18 : மன்னர் உடல் பெற்ற அனைத்து உயிர்களையும் தன்னுடைய உயிரைப் போல் கருதுவார். தனது நண்பர்களின் மகிழ்ச்சியினை எப்போதும் அதிகரிப்பார். விடுதலை பெற்ற மனிதர்களிடம் நெருங்கிய தொடர்பு கொள்வார். இரும்புக் கரம் கொண்டு பாவிகளைத் தண்டிப்பார்.
பதம் 4.16.19 : இம்மன்னர் மூன்று உலகங்களுக்கும் தலைவர் ஆவார், மேலும் இவர் முழுமுதற் கடவுளால் அதிகாரம் அளிக்கப்பட்டவர். இவர் மாற்றத்திற்காளாகாதவர், பரம்பொருள் என்றறியப்படுவதின் “சக்தியாவேச” அவதாரமுமாவர். முற்றிலும் கற்று முழு விடுதலை பெற்றவராதலினால் உலக வேறுபாடுகள் அனைத்தையும் பொருளற்றதாகவே கொள்வார். ஏனெனில் அவற்றின் அடிப்படைத் தன்மை அறியாமையாதலினால்.
பதம் 4.16.20 : இம்மன்னர் தனிச்சிறப்பு வாய்ந்த வீரரும், நாயகரும் ஆவார். ஆதலினால் இவருக்கு பகைவர் என்று எவருமிலர். பிறரால் வெல்வதற்கரிய வில்லைத் தன் கைகளில் ஏந்தி தன் இரதத்தில் இப்பூமியினை சூரியன் தன் கோள்ப்பாதையில் தென்திசையிலிருந்து சுழல்வதுபோல் சுற்றி வருவார்.
பதம் 4.16.21 : இவ்வாறு உலகம் முழுவதும் இம்மன்னர் சுற்றிவரும் பொழுது அனைத்து மன்னர்களும் அதுபோல் தேவர்களும் இவருக்குப் பல்வேறு பரிசுகளை அளிப்பார்கள். அவர்கள் மனைவியரும் இவர் தம் கரங்களில் கதாயுதம் மற்றும் சக்கராயுதம் ஏந்தியிருப்பதினால் இவரை உண்மையான உலக மன்னராகக் கருதி, முழுமுதற் கடவுளைப் போன்று இவரும், சிறப்புடன் விளங்கப் போவதினால் இவரது புகழை இனிய பாடல்களாகப் பாடுவர்.
பதம் 4.16.22 : இம்மன்னர் குடிமக்களைக் காப்பதில் இணையற்றவராகவும், பிரஜாபதி தேவர்களுக்கு இணையானவரும் ஆவார். உயிர்களின் தேவைகளுக்காக பசுவைப் போன்றிருக்கும் பூமியின் வளம் என்னும் பாலினைக் கறந்தளிப்பார். தேவேந்திரன் தன்கையிலிருக்கும் வஜ்ராயுதத்தினால் தலைகளை உடைத்துத் தூள்தூளாக்கியதைப் போன்று இவரும் தனது வில்லின் கூர்மையான முனைகளினால் அனைத்து மலைகளையும் உடைத்து நிலப்பரப்பினை சமப்படுத்துவார்.
பதம் 4.16.23 : சிங்கம் தனது வாலை வான் நோக்குமாறு உயர்த்தியபடி கம்பீர நடை நடந்து வருமானால் சிறு விலங்குகள் அனைத்தும் அச்சங்கொண்டு ஓடி மறைந்து விடும். அதுபோல் பிருது மன்னர் தனது ராஜ்ஜியத்தில் பயணிக்கும் பொழுது ஆடுகள் மற்றும் காளைமாடுகளின் கொம்புகளினாலான தனது வில்லை எடுத்து நானேற்றி ஒளி ஏற்படுத்தினால் அசுரத் தன்மை கொண்ட கயவர்களும் திருடர்களும் எல்லாத் திக்குகளிலும் புகுந்து மறைந்து கொள்வர்.
பதம் 4.16.24 : சரஸ்வதி நதியின் கரையில் வைத்து இம்மன்னர் அசுவமேதை யாகம் எனப்படும் நூறு வேள்விகள் செய்வார். இதன் இறுதி வேள்வியில் தேவேந்திரன் வேள்விக் குதிரையினை திருடி செல்வான்.
பதம் 4.16.25 : இம்மன்னர் நான்கு குமாரர்களுள் ஒருவரான சனத் குமாரரைத் தன் அரண்மனை நந்தவனத்தில் சந்திப்பார். இம்மன்னர் அவரை பக்தியுடன் துதித்து அவரிடமிருந்து பரமானந்தத்தினை அனுபவிப்பதற்கு உதவும் அறிவுரைகளைப் பெறும் பேறு பெறுவார்.
பதம் 4.16.26 : இவ்வழியில் பிருது மன்னரின் வீரச்செயல்கள் பொதுமக்கள் அனைவரும் அறியும் நிலை வரும், பிருது மன்னர் தன்னைப் பற்றியும் தனது சிறப்பிற்குரிய வீரச் செயல்களைப் பற்றியும் எப்போதும் கேட்ட வண்ணம் இருப்பார்.
பதம் 4.16.27 : பிருது மன்னரின் கட்டளைகளை மீறி இவ்வுலகில் நடக்க எவராலும் முடியாது. இவ்வுலகை வென்ற பிறகு அவர் குடிமக்களின் மும்முனைத் துயரினை முற்றிலும் நீக்குவார். இதன் பின்னர் அவர் இவ்வுலகம் முழுவதினாலும் அங்கீகரிக்கப்படுவார். அச்சமயம் சுரர்களும் அசுரர்களும் சந்தேகமின்றி அவரது பெருந்தன்மை மிக்கச் செயல்களைப் புகழ்வர்.