அத்தியாயம் – 15
பிருது மகாராஜனின் தோற்றமும், பட்டாபிஷேகமும்
பதம் 4.15.1
மைத்ரேய உவாச
அத தஸ்ய புனர் விப்ரைர் அபுத்ரஸ்ய மஹீபதே:
பாஹீப்யாம் மத்யமானாப்யாம் மிதுனம் ஸம்பத்யத

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; அத—இவ்வாறு; தஸ்ய—அவனது; புன:—மீண்டும்; விப்ரை:—அந்தணர்களினால்; அபுத்ரஸ்ய—குழந்தையின்றி; மஹீபதே:—மன்னனின்; பாபுப்யாம்—கரங்களிலிருந்து; மத்யமானாப்யாம்—கடைந்து; மிதுனம்—இணை; ஸம்பத்யத—பிறந்தனர்.

மைத்ரேய மாமுனிவர் கூறினார்: அன்பார்ந்த விதுரனே, அதன் பிறகு அம்மாமுனிவர்கள் மீண்டும் மறைந்த மன்னன் வேனனின் உடலிலிருந்த இருகரங்களையும் கடைந்தனர். அதன் விளைவாக அக்கரங்களிலிருந்து ஆணும் பெண்ணுமான ஓர் இணை தோன்றினர்.

பதம் 4.15.2
தத் த்ருஷ்ட்வா மிதுனம் ஜாதம் ருஷயோ ப்ரஹ்ம-வாதின:
ஊசு: பரம-ஸந்துஷ்டா விதித்வா பகவத்-கலாம்

தத்—அந்த; த்ருஷ்ட்வா—கண்டு; மிதுனம்—தம்பதியினர்; ஜாதம்—பிறந்தனர்; ருஷய:—மாமுனிவர்கள்; ப்ரஹ்ம-வாதின:—வேத ஞானம்மிக்கோர்; ஊசு:—கூறினர்; பரம—பரமம்; ஸந்துஷ்டா:—ஆனந்தமுடன்; விதித்வா—அறியப்படுகின்றனர்; பகவத்—முழுமுதற் கடவுளின்; கலாம்—அம்சத்தினர்.

அம்மாமுனிவர்கள் வேத ஞானத்தில் மிகுந்த தேர்ச்சியுடையோராவர். அவர்கள், ஆணும் பெண்ணுமான ஒரு தம்பதியினர் வேனனின் கரங்களிலிருந்து தோன்றியது கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் அத்தம்பதியினர் முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவின் அம்சத்தின் ஒரு பகுதியினர் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

பதம் 4.15.3
ருஷய ஊசு:
ஏஷ் விஷ்ணோர் பகவத கலா புவன பாலினீ
இயம் ச லக்ஷ்ம்யா: ஸம்பூதி: புருஷஸ்யானபாயினீ

ருஷய: ஊசு—முனிவர்கள் கூறினர்; ஏஷ்:—அந்த ஆண்; விஷ்ணோ—பகவான் விஷ்ணுவின்; பகவத:—முழுமுதற் கடவுளின்; கலா—விரிவு; புவன—பாலினீ—உலகைக் காப்பவர்; இயம்—அப்பெண்; ச—மேலும்; லக்ஷ்ம்யா:—மகாலக்ஷ்மியின்; ஸம்பூதி:—விரிவாவார்; புருஷஷ்ய—பகவானின்; அநபாயினி—பிரியாதவர்.

அம்மாமுனிவர்கள் கூறினர்: அந்த ஆண்மகன், இவ்வுலகைக் காக்கும் பகவான் விஷ்ணுவின் இயல்பினைப் பெற்றவர். மேலும் அப்பெண் அதிர்ஷ்ட தேவதையான மகாலக்ஷ்மியின் இயல்புகள் பொருந்தியவள். அவள் பகவானை விட்டு என்றும் பிரியாதவள் ஆவாள்.

பதம் 4.15.4
அயம் து ப்ரதமோ ராஜ்ஞாம் புமான் ப்ரதயிதா யஸ:
ப்ருதுர் நாம மஹாராஜோ பவிஷ்யதி ப்ருதி-ஸ்ரவோ:

அயம்—இந்த; து—பிறகு; ப்ரதம்:—முதல்; ராஜ்ஞாம்—மன்னர்கள்; புமான்—ஆண்; ப்ரதயிதா—பரப்புதல்; யஸ:—புகழ்; ப்ருது—மகாராஜா; பவிஷ்யதி—ஆவார்; ப்ருது-ஸ்ரவா:—பரப்பப்பட்ட புகழ்.

அவ்விருவரில் அந்த ஆண்மகன் தனது புகழினை இவ்வுலகம் முழுவதும் பரப்பப் போகிறவராவார். அவர் பெயர் பிருது என்பதாகும். உண்மையில் அவர் அரசர்களில் முதன்மையானவராக விளங்கப் போகிறார்.

பதம் 4.15.5
இயம் ச ஸீதாதீ தேவீ குண-பூஷண-பூஷணா
அர்சிர் நாம வராரோஹா ப்ருதும் ஏவாவருந்ததீ

இயம்—அப்பெண் குழந்தை; ச—மேலும்; ஸீ-ததீ—முத்துப் போல் ஒளிமிக்கப் பற்களை உடையவள்; தேவீ—லக்ஷ்மிதேவி; குண—நற்குணங்களினால்; பூஷண—ஆபரணங்கள்; பூஷணா—அவள் அழகுசெய்தாள்; அர்சி:—அர்சி; நாம—என்னும் பெயரினள்; வர-ஆரோஹா—மிக்க எழிலுடையாள்; ப்ருதும்—மன்னர் பிருதுவுக்கு; ஏவ—உறுதியாக; அவருந்ததீ—மிகுந்த பற்றுடையாள்.

முத்துப்போல் ஒளிமிக்கப் பற்களும், எழிலும், நற்குணங்களும் கொண்ட அப்பெண் உண்மையில் தான் அணிந்திருந்த அணிகலன்களுக்கு அழகு சேர்த்தாள். அவளது பெயர் அர்சி என்பதாக இருக்கும். வருங்காலத்தில் அவள் பிருது மன்னரைக் கணவனாக அடையப்போகிறாள்.

பதம் 4.15.6
ஏஷ ஸாக்ஷாத் தரேர் அம்ஸோ ஜாதோ லோக-ரிரக்ஷயா
இயம் ச தத்-பரா ஹி ஸ்ரீர் அநுஜஜ்ஞே’ நபாயினீ

ஏஷ:—அவ்வாண்மகன்; ஸாக்ஷாத்—நேரடியாக; ஹரே:—முழுமுதற் கடவுள்; அம்ஸ:—அம்சமுடையவர்; ஜாத:—பிறந்தார்; லோக—இவ்வுலக முழுவதும்; ரிரக்ஷயா—காக்கவேண்டும் என்னும் விருப்பத்தில்; இயம்—இந்த; ச—மேலும்; தத்-பரா—அவரிடத்து மிகுந்த பற்றுடையான்; ஹி—உறுதியாக; ஸ்ரீ:—அதிர்ஷ்ட தேவதை; அநுஜஜ்ஞே—பிறந்தார்; அநாபாயினீ—பிரிக்கமுடியாதவள்.

பிருது மன்னரின் வடிவில் இவ்வுலக மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே முழுமுதற் கடவுள் தமது சக்தியின் ஒரு அம்சமாக அவதரித்திருக்கின்றார். பகவானை விட்டு இணைபிரியாத அவர் துணைவி மகாலக்ஷ்மி பிருது மன்னரை மணம் செய்யப்போகும் அர்சியாகப் பிறந்துள்ளாள்.

பதம் 4.15.7
மைத்ரேய உவாச
ப்ரஸம்ஸந்தி ஸ்ம தம் விப்ரா கந்தர்வ-ப்ரவரா ஜகு:
முமுசு: ஸீமனோ தாரா: ஸித்தா ந்ருத்யந்தி ஸ்வ: ஸ்த்ரிய:

மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; ப்ரஸம் ஸந்திஸ்ம—புகழ்ந்து; பாராட்டி; தம்—அவரை (பிருது); விப்ரா:—அனைத்து அந்தணர்களும்; கந்தர்வ-ப்ரவரா:—கந்தர்வர்களில் சிறந்தவர்கள்; ஜகு:—ஓதினர்; முமுசு:—பெய்தனர்; ஸீமன:-தாரா—மலர்மாரி; ஸித்தா:—சித்தலோகத்தைச் சேர்ந்தவர்கள்; ந்ருத்யந்தி—நடனமாடினர்; ஸ்வ:—தேவலோக; ஸ்த்ரிய:—பெண்கள் (அப்சரஸ்கள்).

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, அப்போது அனைத்து அந்தணர்களும் மன்னர் பிருதுவின் சிறப்புக்களையும், பெருமைகளையும் புகழ்ந்து பாராட்டினர். கந்தர்வலோகத்தைச் சேர்ந்தவர்கள் அவர் புகழைப் பாடலாக இசைத்தனர். சித்தலோகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்மீது மலர் மாரி பெய்தனர். தேவலோகத்தைச் சேர்ந்த பேரழகு மங்கையர் தம்மை மறந்து நடனமாடினர்.

பதம் 4.15.8
ஸங்க-தூர்ய-ம்ருதங்காத்யா நேதுர் துந்துபயோ திவி
தத்ர-ஸர்வ உபாஜக்முர் தேவருஷி-பித்ருணாம் கணா:

ஸங்க—சங்குகள்; தூர்ய—கொம்புகள்; ம்ருதங்க—மிருதங்கம்; ஆத்யா:—இதுபோன்று பல; நேது:—முழங்கின; துந்தபய:—துந்துபிகள்; திவி—வானத்தில்; தத்ர—அங்கே; ஸர்வே—எல்லோரும்; எபாஜக்மு:—வந்தனர்; தேவ-ருஷி—தேவர்கள் மற்றும் முனிவர்கள்; பித்ருணாம்—மூதாதையர்; கணா:—கூட்டங்கூட்டமாக.

சங்குகளும், கொம்புகளும், துந்துபிகளும் வானில் முழங்கின. தேவலோகத்திலிருந்தும் அதுபோல் பிற உலகங்களில் இருந்தும் மாமுனிவர்களும், மூதாதைகளும், மகான்களும் மண்ணுலகிற்கு வந்தனர்.

பதங்கள் 4.15.9 – 4.15.10
ப்ரஹ்மா ஜகத்-குரு தேவை: ஸஹாஸ்ருத்ய ஸீரேஸ்வரை:
வைன்யஸ்ய தக்ஷிணே ஹஸ்தே த்ருஷ்ட்வா சிஹ்னம் கதாப்தே:

பாதயோர் அரவிந்தம் ச தம் வை மேனே ஹரே கலாம்
யஸ்யாப்ரதிஹதம் சக்ரம் அம்ஸ:ஸ பரமேஷ்டின:

ப்ரஹ்ம—பிரம்மதேவன்; ஜகத்-குரு:—ஜகத்குரு; தேவை:—தேவர்கள்; ஸஹ—உடன்; ஆஸ்ருத்ய—வந்தனர்; வர-ஈஸ்வரை:——தேவலோகங்கள் அனைத்தின் தலைவர்களும்; வைன்யஸ்ய—வேனனின் மைந்தனான மன்னர் பிருதுவின்; தக்ஷிணே—வலது; ஹஸ்தே—கரத்தில்; த்ருஷ்ட்வா—கண்டு; சிஹ்னம்—அடையாளம்; கதா-ப்ருத:—கதாதாரியான பகவான் விஷ்ணுவின்; பாதயோ:—இரு பாதங்கள்; அரவிந்தம்—தாமரை மலர்; ச—மேலும்; தம்—அவரது; வை—உறுதியாக; மேனே—அவர் புரிந்து கொண்டார்; ஹரே:—முழுமுதற் கடவுளின்; கலாம்—அம்சத்தின் ஒரு பகுதி விரிவாவர்; யஸ்ய—எவரது; அப்ரதிஹதம்—புலனாகாத; சக்ரம்—சக்கரம்; அம்ஸ:—அம்சாவதாரம் ஸ:—அவர்; பரமேஷ்டின:—முழுமுதற் கடவுளின்.

ஜகத்குருவான பிரம்மதேவன், தேவலோகங்களின் தலைவர்களும், தேவர்களும் சூழ்ந்து வர அங்கே வருகை தந்தார். பிருது மன்னரின் வலது உள்ளங்கையிலிருந்து பகவான் விஷ்ணுவின் ரேகைகளும், அவர் பாதங்களில் தெரிந்த தாமரை மலர் சின்னங்களையும் கண்டு பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் அம்சமாவார் என்பதை பிரம்மதேவன் புரிந்து கொண்டார். ஒருவரது உள்ளங்கையில் சங்கு, சக்கர இரேகைகளும் இது போன்ற பிற மங்கலச் சின்னங்களும் இருக்குமானால் அவர் பரமபுருஷ பகவானின் அம்சம் அல்லது அவதாரம் என்று கருதப்படல் வேண்டும்.

பதம் 4.15.11
தஸ்யாபிஷேக ஆரப்தோ ப்ராஹ்மணைர் ப்ரஹ்ம வாதிபி: ஆபிஷேசனிகானி அஸ்மை ஆஜஹ்ரு: ஸர்வதோ ஜனா:

தஸ்ய—அவரது; அபிஷேக:—முடி சூட்டு விழா; ஆரப்த:—ஏற்பாடு செய்யப்பட்டது; ப்ராஹ்மணை:—கற்றறிந்த அந்தணர்களினால்; ப்ரஹ்ம-வாதிபி:—வேதச் சடங்குகளோடு தொடர்புடைய; அபிஷேசனிகானி—விழாவிற்குத் தேவையான பல்வேறு பொருட்கள்; அஸ்மை—அவருக்கு; ஆஜஹ்ரு:—சேகரித்து; ஸர்வத:—எல்லாத் திசைகளிலிருந்தும்; ஜனா:—மக்கள்.

வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சடங்குகளினிடத்துப் பற்றுடைய கற்றறிந்த அந்தணர்கள் மன்னரின் முடிசூட்டு விழாவிற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். அனைத்துத் திசைகளிலிருந்தும் மக்கள் அவ்விழாவிற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் சேகரித்து வந்தனர். இவ்வாறு அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டன.

பதம் 4.15.12
ஸரித்-ஸமுத்ரா கிரயோ நாக காவ: ககா ம்ருகா:
த்யௌ: க்ஷிதி: ஸர்வ பூதானி ஸமாஜஹ்ருர் உபாயனம்

ஸரித்—ஆறுகள்; ஸமுத்ரா:—சமுத்திரங்கள்; கிரயோ:—மலைகள்: நாகா:—நாகங்கள்; காவ:—பசுக்கள்; ககா:—பறவைகள்; ம்ருகா:—மிருகங்கள்; த்யெள:—வானம்: க்ஷிதி:—பூமி; ஸர்வ-பூதானி—அனைத்து உயிர்களும்; ஸமாஜஹ்ரு—சேகரித்து; உபாயனம்—பல்வேறு வகையான பரிசுகள்.

எல்லா நதிகளும், கடல்களும், மலைகளும், சிகரங்களும், நாகங்களும், பசுக்களும், பறவைகளும், விலங்குகளும், தேவலோகங்களும், பூலோகமும் மற்றும் அனைத்து உயிர்களும் மன்னனுக்குப் பரிசாகத் தத்தமக்குரிய ஆற்றலுக்கு ஏற்ற பொருட்களைத் திரட்டி வந்தன.

பதம் 4.15.13
ஸோ ‘பிஷிக்தோ மஹாராஜ: ஸுவாஸா: ஸாத்வ-அலங்க்ருத:
பத்னியார்சிஷாலங்க்ருதயா விராஜே ‘க்னிர் இவாபர:

ஸ:—மன்னர்; அபிஷிக்த:—முடிசூட; மஹாராஜா—மகாராஜா பிருது; ஸுவாஸா:—மதிப்பு மிக்க ஆடையணிந்து; ஸாது-அலங்க்ருத:—விலையுயர்ந்த ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டு; பத்னியா—அவர் மனைவியுடன்; அர்சிஷா—அர்சி என்பவள்; அலங்க்ருதயா—நன்கு அணிசெய்யப்பெற்று; விரேஜே—தோன்றினர்; அக்னி:—அக்னி; இவா—போன்று; அபர:—மற்றொரு.

இவ்வாறு மதிப்பு மிக்க ஆடை, அணிகலன்களினால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பிருது மன்னர் முடிசூட்டப்பட்டு அரியணை ஏறினார். மன்னரைப் போன்றே நன்கு ஆடை, அணிகலன்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர் மனைவி அர்சியும், மன்னரும் பார்ப்பவர் கண்களுக்கு நெருப்பைப்போல் ஒளி மிகுந்தவர்களாக விளங்கினர்.

பதம் 4.15.14
தஸ்மை ஜஹார தனதோ ஹைமம் வீர வராஸனம்
வருண: ஸலில-ஸ்ராவம் ஆத பத்ரம் ஸஸி-ப்ரபம்

தஸ்மை—அவருக்கு; ஜஹார—பரிசளித்தல்; தனத:—தேவர்களின், தன அதிகாரியான (குபேரன்); ஹைமம்—தங்கத்தினால் செய்யப்பட்ட; வீர—ஓ, விதுரனே; வர-ஆஸனம்—அரியணை; வருண:—வருண தேவன்; ஸலில-ஸ்ராவம்—தண்ணீர்த் துளிகள் சிந்தும்; ஆதபத்ரம்—வெண்கொற்றக் குடை; ஸஸி-ப்ரபம்—சந்திரனைப் போன்று ஒளி மிக்கது.

மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, தேவர்களின் தன அதிகாரியான குபேரன் பொன்னால் செய்யப்பட்ட சிம்மாசனம் ஒன்றினை பிருது மன்னருக்குப் பரிசாக அளித்தார். அதுபோல் வருண தேவன் சந்திரனைப் போன்று ஒளிமிக்கதும், எப்போதும் நீர்த்துளிகளைக் குளிர்ச்சியாகச் சிந்திக் கொண்டிருக்கும் வெண்கொற்றக் குடையினைப் பரிசாக அளித்தார்.

பதம் 4.15.15
வாயுஸ் ச வால-வ்யஜனே தர்ம: கீர்திமயீம் ஸ்ரஜம்
இந்த்ர: கிரீடம் உத்க்ருஷ்டம் தண்டம் ஸம்யமனம் யம:

வாயு:—வாயு தேவன்; ச—மேலும்; வால-வ்யஜனே—முடிகளினால் செய்யப்பட்ட இரு சாமரங்கள்; தர்ம:—தர்ம தேவன்; கீர்தி-மயீம்—ஒருவரது பெயர் மற்றும் புகழைப் பரப்புவது; ஸ்ரஜம்—மாலை; இந்த்ர:—தேவேந்திரன்; கிரீடம்—கிரீடம்; உத்க்ருஷ்டம்—மிகுந்த மதிப்புடையது; தண்டம்—செங்கோல்; ஸம்யமனம்—உலகை ஆள்வதற்குரிய; யம:—யம தேவன்.

காற்றுத் தேவனான வாயு பகவான் பிருது மன்னருக்கு கவரிமான் முடியினாலான இரு சாமரங்களைப் பரிசளித்தார்; அறக்கடவுள் மன்னரின் புகழைப் பரப்பும் மாலையினைப் பரிசளித்தார்; தேவர்களின் தலைவனான தேவேந்திரன் மதிப்பு மிக்க மணிமுடியைப் பரிசாகக் கொடுத்தார்; கால தேவனான யமராஜன் இவ்வுலகை ஆள்வதற்குரிய செங்கோல் ஒன்றினைப் பிருது மன்னருக்குப் பரிசாக அளித்தார்.

பதம் 4.15.16
ப்ரஹ்ம பிரஹ்மமயம் வர்ம பாரதீ ஹாரம் உத்தமம்
ஹரி: ஸுதர்ஸனம் சக்ரம் தத்-பத்னி அவ்யாததாம் ஸ்ரீயம்

ப்ரஹ்மா—பிரம்ம தேவன்; ப்ரஹ்ம-மயம்—ஆன்மீக ஞானத்திலான; வர்ம—ஆயுதம்; பாரதீ—கல்வித் தேவதை; ஹாரம்—கழுத்து அட்டிகை; உத்தமம்—உன்னதமான; ஹரி:—முழுமுதற் கடவுள்; ஸுதர்ஸனம் சக்ரம்—சுதர்ஸன சக்கரம்; தத்-பத்னீ-அவர் மனைவி (லக்ஷ்மி); அவ்யஹதாம்—அழிவற்ற; ஸ்ரீயம்—அழகும் செல்வமும்.

பிரம்மதேவன் பிருது மன்னருக்கு ஆன்மீக ஞானத்தினாலான பாதுகாப்புக் கவசம் ஒன்றைப் பரிசளித்தார். பிரம்மதேவனின் மனைவியான பாரதி (சரஸ்வதி) ஓர் உன்னதமான கழுத்து அட்டி கையைப் பரிசளித்தார். பகவான் விஷ்ணு சுதர்சனச் சக்கரத்தினையும் அவர் துணைவியான இலக்குமி தேவி அழிவற்ற செல்வங்களையும் பரிசாக ஈந்தனர்.

பதம் 4.15.17
தஸ-சந்த்ரம் அஸிம் ருத்ர: ஸத-சந்த்ரம் ததாம்பிக
ஸோமோ ‘ம்ருதமயான் அஸ்வாம்ஸ் தவஷ்டா ரூபாஸ்ரயம் ரதம்

தஸ-சந்த்ரம்—பத்து சந்திரன்கள் பதிக்கப்பட்ட; அஸிம்—வாள்; ருத்ர:—சிவபெருமான்; ஸத-சந்த்ரம்:—நூறு சந்திரன்கள் பதிக்கப்பெற்ற; ததா—அவ்வகையில்; அம்பிகா—அம்பிகையென்னும் துர்கை; ஸோம:—சோம தேவன் (சந்திர தேவன்); அம்ருத-மயான்—அமிர்தத்தினாலான; அஸ்வான்—குதிரைகள்; த்வஷ்டா—தேவதச்சன் விஸ்வகர்மா; ரூப-ஆஸ்ரயம்—எழில்மிக்க; ரதம்—ஓர் இரதம்.

சிவபெருமான் பத்து சந்திரன்களினால் அலங்கரிக்கப்பட்ட உறையுடன் கூடிய வாள் ஒன்றினையும் அவர் தேவி துர்கை நூறு சந்திரன்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேடயம் ஒன்றினையும் பரிசளித்தனர். சோமன் எனப்படும் சந்திரதேவன் அமிர்தத்தினாலான குதிரைகளைப் பரிசளிக்க, தேவதச்சன் விஸ்வகர்மா அழகிய இரதம் ஒன்றினைப் பரிசளித்தார்.

பதம் 4.15.18
அக்னிர் ஆஜ-கவம் சாபம் ஸுர்யோ ரஸ்மிமயான் இஷுன்
பூ: பாதுகே யோகமய்யௌ த்யௌ: புஷ்பாவலிம் அன்வஹம்

அக்னிர்—அக்கினி தேவன்; ஆஜ-கவம்—பசு மற்றும் ஆட்டின் கொம்புகளினாலான; சாபம்—ஓர் வில்; ஸுர்ய:—சூரிய தேவன்; ரஸ்மி-மயான்—சூரியக்கதிர்களைப் போன்று ஒளிமிக்கவை; பூ—பூலோகத்தின் ஆதிபத்யத் தேவதையான பூமி; பாதுகே—இரண்டு பாதக்குறடுகள்; யோக-மய்யௌ—மாயா சக்தியுடையவை; த்யெ:—வானமண்டலத்தைச் சேர்ந்த தேவர்கள்; புஷ்ப—மலர்களின்; ஆவலிம்—பரிசாக; அனு-அஹம்—ஒவ்வொரு நாளும்.

பசுக்கள், ஆடுகளின் கொம்புகளினாலான வில் ஒன்றை அக்கினி தேவனும், சூரிய தேவன் தன் கதிர்களைப் போன்று ஒளியுடைய அம்பினையும் பரிசளித்தனர். பூலோகத்தின் ஆற்றல் மிகுந்த தேவதை மாயா சக்தியுடைய இரண்டு பாதக் குறடுகளைப் பரிசளித்தாள். வான மண்டலத்தைச் சேர்ந்த பிற தேவர்கள் மலர்களைப் பரிசுப் பொருட்களாகக் கொணர்ந்தனர்.

பதம் 4.15.19
நாட்யம் ஸுகீதம் வாதித்ரம் அந்தர்தானம் ச கேசரா:
ருஷயஸ் சாஸிஷ: ஸத்யா: ஸமுத்ர: ஸங்கம் ஆத்மஜம்

நாட்யம்—நாட்டியக் கலை; ஸு-கீதம்—பாடற்கலை; வாதித்ரம்—இசைக்கருவிகளை இசைக்கும் கலை; அந்தர்தானம்—பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைகின்ற கலை; ச—மேலும்; கே-சரா:—வான்வெளியில் பயணிக்கும் தேவர்கள்; ருஷய:—மாமுனிவர்கள்; ஆஸிஷ:—ஆசிகள்; ஸத்யா:—அழிவற்ற; ஸமுத்ர:—சமுத்திர ராஜன்; ஸங்கம்—சங்கு; ஆத்ம-ஜம்—தன்னிடமுள்ள.

வானில் எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கும் தேவர்கள், நாடகம், இசை, இசைக்கருவிகளை மீட்டல் மற்றும் பிறர் கண்களுக்குப் புலனாகாதவாறு மறைதல் போன்ற கலைகளை பிருது மன்னருக்குப் பரிசளித்தனர். மாமுனிவர்கள் அழிவற்றத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சமுத்திரத்தேவன் தன்னிடமுள்ள வலம்புரிச் சங்கினை மன்னருக்குப் பரிசாக அளித்தார்.

பதம் 4.15.20
ஸிந்தவ: பர்வதா நத்யோ ரத-வீதிர் மஹாத்மன:
ஸீதோ ‘த மாகதோ வந்தீ தம் ஸ்தோதும் உபதஸ்திரே

ஸிந்தவ:—கடல்கள்; பர்வதா:—மலைகள்; நத்ய:—ஆறுகள்; ரத- வீதீ:—இரதவீதிகள்; மஹா-ஆத்மன:—மகாத்மாவின்; ஸீத:—பிரார்த்தனைகளைத் தொழிலாகச் செய்யும் சூதன்; அத—பின்னர்; மாகத:—இசைப்பாணன்; வந்தீ—பிரார்த்தனைகளைத் தொழிலாகச் செய்பவர்; தம்—அவனை; ஸ்தோதும்—துதிக்க; உபதஸ்திரே—தங்களை முன்வைத்தார்.

நதிகளும், கடல்களும், மலைகளும் அவரது இரதம் செல்வதற்குரிய வசதியான பெரும் வீதிகளை வழங்கின. மேலும் சூதன், மாகதன், வந்தீ போன்றோர் புகழ்ந்து வழிபட்டனர். அவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளைச் செய்வதற்காக அங்கே வந்திருந்தனர்.

பதம் 4.15.21
ஸ்தாவகாம்ஸ் தான் அபிப்ரேத்ய ப்ருதுர் வைன்ய: ப்ரதாபவான்
மேக-நிர்ஹ்ரதயா வாசா ப்ரஹஸன்ன் இதம் அப்ரவீத்

ஸ்தாலகான்—வழிப்பாட்டு செயல்களில் ஈடுபட்டிருத்தல்; தான்—அவர்கள்; அபிப்ரேத்ய—கண்டு, உணர்ந்து; ப்ருது:—மன்னர் பிருது; வைன்ய:——வேனனின் மைந்தன்; ப்ரதாபவான்—மிக்க ஆற்றலுடைய; மேக-நிர்ஹ்ராதயா—மேகங்களின் இடி முழக்கத்தினைப் போன்று; வாசா—குரலுடன்; ப்ரஹஸன்—புன்னகை புரிந்து; இதம்—இவ்வாறு; அப்ரவீத்—பேசலுற்றார்.

வேனனின் மைந்தரும் ஆற்றல் மிக்கவருமான மன்னன் பிருது அக்கலைஞர்கள் தன்னைப் புகழ்வதைக் கண்டு புன்னகை புரிந்தார், மேலும் இடியோசை போன்று அதிரச் செய்யும் குரலில் அவர் கீழ்க் கண்டவாறு பேசத் தொடங்கினார்.

பதம் 4.15.22
ப்ருதுர் உவாச
போ: ஸீத ஹே மாகத ஸெம்ய வந்திங்
லோகே ‘ துனாஸ்பஷ்ட-குணஸ்ய மே ஸ்யாத்
இம் ஆஸ்ரயோ மே ஸ்தவ ஏஷ யோஜ்யதாம்
மா மய்ய அபூவன் விதநா கிரோ வ:

ப்ருது:உவாச—மன்னர் பிருது கூறினார்; போ: ஸீத—ஓ, சூதர்களே; ஹே மாகத—ஓ, மாகதர்களே; ஸெளம்ய—சீரிய; வந்தின்—ஓ, பிரார்த்திக்கும் வழிபடும் பக்தர்களே; லோகே—இவ்வுலகில்; அதுணா—இப்போது; அஸ்பஷ்ட—தனிச்சிறப்புடையவையல்ல; குணஸ்ய—அவரது குணங்கள்; மே—எனது; ஸ்யாத்—இருக்கலாம்; கிம்—ஏன்; ஆஸ்ரய:—தஞ்சம்; மே—எனது; ஸ்தவ:—புகழ்; ஏஷ:—இந்த; யோஜ்யதாம்—பொருந்தலாம்; மா—இல்லை; மயி—எனக்கு; அபூவன்—இருந்தன; விததா:—வீணானவை; கிர:—வார்த்தைகள்; வ:— உமது.

பிருது மன்னர் கூறினார்: ஓ, நேர்மையான சூதரே, மாகதரே, வழிபாடு செய்யும் தொண்டர்களே! நீங்கள் கூறிய புகழுரைகள் அனைத்தும் எனது சிறப்பிற்கானவையன்று. இவ்வாறு என்னிடம் இல்லாத குணங்களைப் பற்றி நீங்கள் ஏன் புகழ வேண்டும்? இவை எனக்கான வார்த்தைகள் என்று கருதி அவற்றை வீணாக்க நான் விரும்பவில்லை. இவ்வார்த்தைகள் உண்மையிலேயே வேறொருவருக்கு அளிக்கப்படுவது நல்லதே.

பதம் 4.15.23
தஸ்மாத் பரோக்ஷே ‘ஸ்மத்-உபஸ்ருதானி அலம்
கரிஷ்யத ஸ்தோத்ரம் அபீச்ய-வாச:
ஸதி உத்தமஸலோக-குணானுவாதே
ஜீகுப்ஸிதம் ந ஸ்தவயந்தி ஸப்யா:

தஸ்மாத்—ஆகையினால்; பரோக்ஷே—எதிர்காலத்தில்; அஸ்மத்—எனது; உபஸ்ருதானி—நீங்கள் உரைத்த குணங்கள்; அலம்—போதுமானதாக; கரிஷ்யத—நீங்கள் வழங்கக்கூடுமானால்; ஸ்தோத்ரம்—பிரார்த்தனைகள்; அபீச்ய-வாச:—ஓ, துதிபாடகனே; ஸதி—சரியான முறையில் ஈடுபடுதல்; உத்தம-ஸ்லோக—முழுமுதற் கடவுளின்; குண—குணங்களின்; அனுவாதே—விவாதித்தல்; ஜீகுப்ஸிதம்—வெறுக்கத்தக்க மனிதன் ஒருவனுக்கு; ந—இல்லை; ஸ்தவயந்தி—பிரார்த்தனைகளை அர்ப்பணிப்பது; ஸப்யா:—நேர்மையான மனிதர்கள்.

ஓ, நேர்மை மிக்க கலைஞர்களே, நீங்கள் போற்றிய குணங்கள் அனைத்தும் என்று என்னால் உண்மையில் வெளிப்படுத்தப்படுகின்றனவோ அன்று இவ்வழிபாடுகளை எனக்கு நீங்கள் அருளலாம். முழுமுதற் கடவுளுக்குத் தனது வழிபாட்டினைச் செலுத்தும் நேர்மையான இக்குணங்களையெல்லாம் தன்னிடம் கொண்டிராத ஒரு மனிதனுக்கு இருப்பதாகக் கற்பித்துக் கூறுவதில்லை.

பதம் 4.15.24
மஹத்-குணான் ஆத்மனி கர்தும் ஈஸ:
க: ஸ்தாவகை: ஸ்தமாவயதே ‘ ஸதோ ‘பி
தே’ ஸ்யாபவிஷ்யன்ன் இதி விப்ரலப்தோ
ஜனாவஹாஸம் குமதிர் ந வேத

மஹத்—மேன்மையான; குணான்—குணங்கள்; ஆத்மனி—தன்னிடம்; கர்தும்—வெளிப்படுத்துவதற்கு; ஈஸ:—தகுதியுடைய; க—யார்; ஸ்தாவகை:—பின்பற்றுபவர்களால்; ஸ்தாவயதே—புகழ்வதற்குரிய காரணங்கள்; அஸத:—வெளிப்படுத்தாது; அபி—இருந்தாலும்; தே—அவர்கள்; அஸ்ய—அவனது; அபிவிஷ்யன்—கொண்டிருந்தானென்றால்; இதி—இவ்வாறு; விப்ரலப்த:—ஏமாற்றுதல்; ஜன—மக்களின்; அவஹாஸம்—அவமதிப்பு; குமதி:—ஒரு முட்டாள்; ந—இல்லை; வேத—அறிவது.

இம்மேன்மை மிக்க குணங்களை அடைவதற்குரிய ஆன்றோர், அக்குணங்கள் உண்மையில் தன்னிடம் புகழுமாறு எவ்வாறு அனுமதிக்கக் கூடும்? ஒருவனை இவன் மட்டும் கல்வி அறிவு பெற்றிருந்தால் அவன் பெரிய அறிஞனாகவோ, அல்லது மகானாகவோ கட்டாயம் ஆகியிருப்பான் என்று புகழ்ந்துரைப்பது மோசடிதான். இப்புகழுரைகளை ஏற்றுக் கொள்ளும் மூடன் இவ்வார்த்தைகள் உண்மையில் தன்னை அவமதிப்பவையென்று அறியாதவனேயாவான்.

பதம் 4.15.25
ப்ரபவோ ஹி ஆத்மன: ஸ்தோத்ரம் ஜீகுப்ஸந்தி அபி விஸ்ருதா:
ஹ்ரீமந்த: பரமோதாரா: பௌருஷம் வா விகர்ஹிதம்

ப்ரபவ:—மிகச் சக்தி வாய்ந்தவர்கள்; ஹி—உறுதியாக; ஆத்மன:—தங்களை; ஸ்தோத்ரம்—புகழ்வது; ஜீகுப்ஸந்தி—விரும்பமாட்டார்; அபி—இருந்தாலும்; விஸ்ருதா:—மிகப் புகழ்வாய்ந்த; ஹ்ரீ-மந்த:—அடக்கம்; பரம-உதாரா:—தாராள மனமுடைய மனிதர்கள்; பௌருஷம்—சக்திமிக்க செயல்கள்; வா—மேலும்; விக்ரஹிதம்—வெறுக்கத்தக்க.

நேர்மையும், தாராள குணமும் உடையோர் தமது வெறுக்கத்தக்க செயல்களைப் பற்றிக் கேட்பதற்கு விரும்பமாட்டார். அதுபோல் மிகுந்த புகழும் ஆற்றலுமிக்கோர் பிறர் தம்மைப் புகழ்ந்து பேசுவதையும் விரும்பமாட்டார்.

பதம் 4.15.26
வயம் த்வ அவிதிதா லோகே ஸீதாத்யாபி வரீமபி:
கர்மபி: கதம் ஆத்மானம் கோபயிஷ்யாம பாலவத்

யம்—நாம்; து—பின்னர்; அவிதிதா:—புகழ் மிக்கோரில்லை; லோகே—இந்த உலகில்; ஸீத-ஆத்ய—ஓ, சூதரின் தலைமையின் கீழ் உள்ளோரே; அபி—இப்போது; வரீமபி:—சிறந்த, புகழத்தக்க; கர்மபி:—செயல்களினால்; கதம்—எவ்வாறு; ஆத்மானம்—எனக்கு; கோபயிஷ்யாம—எங்களை புகழச் செய்வதில் ஈடுபடுத்துவது; பாலவத்—குழந்தைகளைப் போன்று.

மன்னர் பிருது தொடர்ந்து கூறினார்: சூதரின் தலைமையில் கீழுள்ள எனது அன்புமிக்க பக்தர்களே, இப்போது நான் எனது செயல்களின் மூலம் புத்திமானாக இல்லாமல் உள்ளேன். ஏனென்றால் நீங்கள் புகழக்கூடிய அளவிற்கு பாராட்டத்தக்கச் செயல்கள் எதையும் நான் இன்னும் செய்யவில்லை. இவ்வாறிருக்க, ஒரு குழந்தையைப் போல் நான் உங்களை எனது செயல்களைப் புகழ்வதில் எப்படி ஈடுபடுத்த முடியும்?


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “பிருது மன்னர் தோன்றலும் முடி சூடலும்” எனும் தலைப்பை கொண்ட பதினைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare