அத்தியாயம் – 14
வேன மகாராஜனின் கதை
பதம் 4.14.1
மைத்ரேய உவாச
ப்ருக்வ-ஆதயஸ் தே முனயோ லோகானாம் க்ஷேம-தர்ஸின:
கோம்தரி அஸதி வை ந்ருணாம் பஸ்யந்த: பஸீ-ஸாம்யதாம்

மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; ப்ருகு-ஆதய:—பிருகு முனிவரால் தலைமை தாங்கப்பட்ட; தே—அனைவரும்; முனய:—மகாமுனிவர்கள்; லோகானம்—மக்களின்; க்ஷேம-தர்ஸின:—எப்போதும் உலக நலம் விரும்புதல்; கோப்தரி—மன்னர்; அஸதி—இல்லாமையால்; வை—உறுதியாக; ந்ரூணாம்—மக்கள் அனைவரின்; பஸ்யந்த:—புரிந்துகொண்டு; பஸீஸாம்யதாம்—மிருக நிலைக்குத் தாழ்வர்.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறலுற்றார்: ஓ, வீரரிற் சிறந்த விதுரனே, பிருகு முனிவரின் தலைமையின் கீழுள்ள முனிவர்கள் அனைவரும் எப்போதும் பொதுமக்களின் நலன்களைப் சிந்திப்போராவர். மன்னர் அங்கன் இல்லாமையினால் குடி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்பதைக் கண்டு ஆள்பவன் இல்லாவிடில் மக்கள் தான்தோன்றிகளாகவும் ஒழுங்கீனர்களாகவும் மாறிவிடுவர் என்பதைப் புரிந்து கொண்டனர்.

பதம் 4.14.2
வீர-மாதரம் ஆஹீய ஸீனீதாம்-அஸம்மதம்-வாதின:
ப்ரக்ருதி-அஸம்மதம் வேனம் அப்யஷிஞ்சன் பதிம் புவ:

வீர—வேனனின்; மாதரம்—மாதாவை; ஆஹீய—சென்று; ஸீனீதாம்—சுனீதாவை; ப்ரஹ்ம-வாதின:—வேதங்களைக் கற்ற மாமுனிவர்கள்; ப்ரக்ருதி—அமைச்சர்களினால்; அஸம்மதம்—சம்மதிக்கப்படவில்லை; வேனம்—வேனன்; அப்யஷிஞ்சன்—அரியாசனத்தின்; பதிம்—பதியாக; புவ:—உலகின்.

ராஜமாதாவான அரசி சுனீதாவை மாமுனிவர்கள் அனைவரும் சந்தித்து அவள் அனுமதியின் பேரில் வேனனை இவ்வுலகின் மன்னனாக முடிசூட்டினர். ஆயினும் அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

பதம் 4.14.3
ஸ்ருத்வா ந்ருபாஸன-கதம் வேனம் அத்யுக்ர-ஸாஸனம்
நிலியுர் தஸ்யவ: ஸத்ய ஸர்ப த்ரஸ்வா இவாகவ:

ஸ்ருத்வா—இதனைக் கேள்வியுற்ற; ந்ருப—மன்னனின்; ஆஸன-கதம்—அரியாசனம் ஏறியதை; வேனம்—வேனன்; அதி—மிக; உக்ர—உக்கிரமாக; ஸாஸனம்—தண்டனை தருவோன்; நிலியு:—மறைந்து கொண்டர்; தஸ்யவ:—திருடர்கள் அனைவரும்; ஸத்ய:—உடனே; ஸர்ப—நாகங்களிடமிருந்து; த்ரஸ்தா:—அஞ்சி; இவ—போன்று; ஆகவ:—எலிகள்.

வேனன் மிகவும் கொடியவன் என்பது எல்லோரும் அறிந்ததே; அதனால் அந்நாட்டிலுள்ள அனைத்துத் திருடர்களும், தீயோரும் அவன் அரியணை ஏறியதைக் கேள்வியுற்று அஞ்சி நடுநடுங்கினர். பாம்புகளுக்கு அஞ்சி வளைகளில் ஓடி ஒளிந்து கொள்ளும் எலிகளைப் போல் அவர்கள் அனைவரும் அச்சத்தினால் தம்மை மறைத்துக் கொண்டனர்.

பதம் 4.14.4
ஸ ஆரூட-ந்ருப-ஸ்தான உன்னத்தோ ‘ஷ்ட-விபூதிபி:
அவமேனே மஹா-பாகான் ஸ்தப்த: ஸம்பாவித: ஸ்வத:

ஸ—மன்னன் வேனன்; ஆரூட—ஏறியதை; நீருப-ஸ்தான:—அரியாசனத்தில்; உன்னத்த:—மிகவும் கர்வம் கொண்டு; அஷ்ட—எட்டு; விபூதிபி:—வளங்களினால்; அவமேனே—அவமதிக்கத் தொடங்கினான்; மஹா-பாகான்—சிறந்த மகான்கள்; ஸ்தப்த:—கருதாது; ஸம் பாவித:—சிறந்தவனாகக் கருதி; ஸ்வத:—தன்னைமட்டும்.

மன்னன் அரியாசனத்தில் ஏறியவுடன், அவர் எண்வகை வளங்களைப் பெற்று வீரமுடன் திகழ்ந்தான். காலப்போக்கில் மிகுந்த கர்வம் கொண்டு தனது தவறான ஆணவத்தினால் எல்லோரையும் விட தானே பெரியவன் என்று அவன் எண்ணினான். பின்னர் உயர்ந்த மகான்களை அவமதிக்கத் தொடங்கினான்.

பதம் 4.14.5
ஏவம் மதாந்த உத்ஸிக்தோ நிரங்குஸ இவ த்விப:
பர்யடன் ரதம் ஆஸ்தாய கம்பயன்ன இவ ரோதஸீ

ஏவம்—இவ்வாறு; மத-அந்த:—அதிகாரத்தினால் குருடாகி; உத்ஸிக்த:—கர்வம்; நிரங்குஸ:—கட்டுப்படுத்த முடியாத; இவ—போன்று; த்விப:—யானையைப்போல்; பர்யடன்—பயணித்தல்; ரதம்—ரதத்தில்; ஆஸ்தாய—ஏறிக்கொண்டு; கம்பயன்—நடுநடுங்கச் செய்தான்; இவ—உண்மையில்; ரோதஸீ—விண்ணும் மண்ணும்.

தனது செல்வவளங்களினால் கர்வமுற்ற வேனன், தன் இரதத்தில் ஏறிக்கொண்டு, கட்டுப்படுத்த முடியாத மதம் பிடித்த யானையினைப் போல் விண்ணும் மண்ணும் நடுநடுங்குமாறு தன் நாடு முழுவதும் சுற்றி வந்தான்.

பதம் 4.14.6
ந யஷ்டவ்யம் ந தாதவ்யம் ந ஹோதவ்யம் த்விஜா: க்வசித்
இதி ந்யவாரயத் தர்மம் பேரீ-கோஷேண ஸர்வஸ:

ந—இல்லை; யஷ்டவ்யம்—எந்தவித வேள்வியும் செய்வதற்கு; ந—இல்லை; தாதவ்யம்—தானமளிப்பதற்கும்; ந—இல்லை; ஹோதவ்யம்—தூய்மை செய்யப்பட்ட வெண்ணெயினை அர்ப்பணம் செய்வதற்கும்; த்விஜா:—ஓ, இருபிறப்பாளனே; க்வசித்—எந்நேரமும்; இதி—இவ்வாறு; ந்யவாரயத்—நிறுத்தினான்; தர்மம்—சமய அறநெறிகள்; பேரீ—பேரிகை; கோஷண—ஒலியுடன்; ஸர்வஸ:—எல்லோரும்.

இருபிறப்பாளர்கள் (அந்தணர்கள்) அனைவரும் அன்றிலிருந்து வேள்விகள் செய்வதற்கும் தானம் செய்வதற்கும் அல்லது தூய்மை செய்யப்பட்ட வெண்ணெய் போன்றவற்றை வேள்வியில் ஆகுதி செய்வதற்கும் தடை செய்யப்பட்டனர். அனைத்து வகையான சமயச் சடங்குகளையும் நிறுத்தும்படி வேனன் தன் நாடு முழுவதும் முரசறிவித்தான்.

பதம் 4.14.7
வேனஸ்யா வேக்ஷய முனயோ துர்வ்ருத்தஸ்ய விசேஷ்டிதம்
விம்ருஸ்ய லோக-வ்யஸனம் க்ருபயோக: ஸ்ம ஸத்ரிண:

வேனஸ்ய—மன்னன் வேனனின்; ஆவேக்ஷய—கவனித்தபிறகு; முனய:—மாமுனிவர்கள் அனைவரும்; துர்விருத்-தஸ்ய—மோசமான துஷ்டன்; விசேஷ்டிதம்—செயல்கள்; விம்ருஸ்ய—கருதி; லோக-வ்யஸனம்—மக்களுக்குப் பொதுவாக அழிவு தரக்கூடியது; க்ருபயா—கருணையினால்; ஊசு:—பேசிக்கொண்டனர்; ஸ்ம—கடந்த காலம்; ஸத்ரிண:—வேள்விகளைச் செய்தார்.

மன்னன் வேனனின் கொடுங்கோன்மையினையும், கொடிய செயல்களையும் கண்டு முனிவர்கள் அனைவரும் ஒன்று கூடி உலகிலுள்ள பேராபத்தும், அபாயமும் மக்களை நெருக்கிக் கொண்டிருப்பதாக முடிவு செய்தனர். இதனால் அவர்கள் கருணை மீதூறத் தங்களுக்குள் கவலைப்பட்டுக் கொண்டனர். ஏனெனில் மக்கள் நலனை முன்னிட்டு முன்பு வேள்விகளை முன்னின்று நடத்தியது இவர்களேயாவர்.

பதம் 4.14.8
அஹோ உபயத: ப்ராப்தம் லோகஸ்ய வ்யஸனம் மஹத்
தாருணி உபயதோ தீப்தே இவ தஸ்கர-பாலயோ

அஹோ—அந்தோ; உபயத:—இரு நிலைகளிலும்; ப்ராப்தம்—அடைந்தனர்; லோகஸ்ய—குடிமக்களின்; வ்யஸனம்—அபாயம்; மஹத்—அதிகமாயிற்று; தாருணி—விறகு; உபயத:—இரு முனைகளிலும்; தீப்தே—எரிந்ததென்றால்; இவ—போன்று; தஸ்கர—திருடர்களும்; துஷ்டர்களும்; பாலயோ:—அரசரிடமிருந்து;

மாமுனிவர்கள் தங்களுக்குள் ஆலோசித்துக் கொண்டிருந்த பொழுது, மக்கள் இரண்டு நிலைகளிலும் அபாயத்திற்காளாகியிருப்பதைக் கண்டனர். இருதலைக் கொள்ளி எறும்பு போல் மிகவும் ஆபத்தான சூழலில் சிக்கிக் கொண்டிருந்தனர் அவர்கள். அதாவது பொது மக்கள் அனைவரும் ஒருபுறம் பொறுப்பற்ற மன்னனாலும், மறுபுறம் திருடர்கள் மற்றும் துஷ்டர்களினாலும் அபாயத்திற்காளாகியிருந்தனர்.

பதம் 4.14.9
அராஜக-பயாத் ஏஷ க்ருதோ ராஜாதத்-அர்ஹண:
ததோ ‘பி ஆஸீத் பயத் த்வ அத்ய கதம் ஸ்யாத்ஸவஸ்திதேஹினாம்

அராஜக—அரசனில்லாததினால்; பயாத்—அச்சத்தினால்; ஏஷ:—இந்த வேனன்; க்ருத:—ஆக்கப்பட்டான்; ராஜ—மன்னராக; அ-தத்—அர்ஹண:—அதற்குரிய தகுதி இல்லாதவனாயிருந்தும்; தத:—அவனிடமிருந்து; அபி—மேலும்; ஆஸீத்—இருந்தது; பயம்—அபாயம்; து—பிறகு; அத்ய—இப்பொழுது; கதம்—எவ்வாறு; ஸ்யாத்—இருக்க முடியும்; ஸ்வஸ்தி—மகிழ்ச்சி; தேஹினாம்—குடிமக்கள்.

நாட்டை ஒழுங்கீனத்திலிருந்து காக்கவும், அரசனில்லாத அரசியல் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே தகுதியற்றவனாயிருந்த போதிலும் அவர்கள் வேனனை முடிசூடச் செய்தனர். அந்தோ! மக்கள் இப்போது மன்னனாலேயே துன்புறுத்தப்படுகின்றனர். இச்சூழ்நிலைகளில் மக்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்தல் கூடும்?

பதம் 4.14.10
அஹேர் இவ பய:-போஷ: போஷகஸ்யாபி அனர்த-ப்ருத்
வேன: ப்ரக்ருத்யைவ கல: ஸீனிதா-கர்ப-ஸம்பவ:

அஹே:—ஒரு பாம்பின்; இவ—போன்று; பய:—பாலுடன்; போஷ:—காக்கின்றது போல்; போஷகஸ்ய—காப்பவன்; அபி—கூட; அனர்த—நலத்திற்கெதிரான; ப்ருத்—ஆகிறான்; வேன:—மன்னன் வேனன்; ப்ருக்ருத்யா—இயற்கையாக; ஏவ—உறுதியாக; கல:—கலகக்காரன்; ஸீனீதா—சுனீதாவின்; வேனனின்—அன்னை; கர்ப—கர்ப்பத்தில்; ஸம்பவ:—பிறந்தவன்.

முனிவர்கள் தங்களுக்குள் இவ்வாறு சிந்தித்தனர்: சுனீதாவின் வயிற்றிலிருந்து பிறந்ததினால் மன்னன் வேனன் இயற்கையிலேயே ஓர் கலகக்காரனாவான். இக்கொடிய வேந்தனை ஆதரிப்பது பாம்பிற்குப் பால் வார்ப்பது போன்றதாகும். தற்போது இவனே அனைத்துத் துன்பங்களுக்கும் மூல காரணனாக விளங்குகிறான்.

பதம் 4.14.11
நிரூபித: ப்ரஜா-பால: ஸ ஜீஹாம்ஸதி வை ப்ரஜா:
ததாபி ஸாந்த்வயேமாமும் நாஸ்மாம்ஸ் தத்-பாதகம் ஸ்ப்ருஸேத்

நிரூபித:—நியமித்தல்; ப்ரஜா-பால:—மன்னன்; ஸ:—அவன்; ஜிஹாம்ஸதி—துன்புறுத்த விரும்புவோன்; வை—உறுதியாக; ததா-அபி—பதிலாக; ஸாந்த்வயேம—அவனைத் திருத்தி; அமும்—அவனது; ந—இல்லை; அஸ்மன்—நமக்கு; தத்—அவனது; பாதகம்—பாவத்தின் பலன்; ஸ்ப்ருஸேத்—தொடுவது.

நாம் இவ்வேனனை இந்நாட்டின் குடிமக்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்பதற்காக அரசனாக்கினோம். ஆனால் அவனோ இப்போது குடிமக்களின் எதிரியாகிவிட்டான். இக்குறைகளை யெல்லாம் தவிர்த்து மீண்டும் ஒருமுறை நாம் அவனை திருத்துவதற்கு முயல வேண்டும். இதனைச் செய்வதின் மூலம் அவன் செய்த பாவத்தின் பலன்கள் நம்மை அடையாதவாறு நாம் தப்பிக்கலாம்.

பதம் 4.14.12
தத்-வித்வத்பிர் அஸத்-வ்ருத்தோ வேனோ ‘ஸ்மாபி: க்ருதோ ந்ருப:
ஸாந்த்விதோ பதி நோ வாசம் ந க்ரஹீஷ்யதி அதர்ம-க்ருத்
லோக-திக்கார-ஸந்தக்தம் தஹிஷ்யாம: ஸ்வ தேஜஸா

தத்—அவனது கொடிய தன்மை; வித்வத்பி:—அறிந்தும்; அஸத்-வ்ருத்த:—புண்ணியமற்ற; வேன:—வேனன்; அஸ்மாபி:—நம்மால்; க்ருத:—ஆக்கப்பட்டான்; ந்ருப:—மன்னன்; ஸாந்த்வித:—திருந்துவதற்கு; (இல்லையென்றால்); யதி—இருந்தால்; ந—நமது; வாசம்—வார்த்தைகள்; ந—இல்லை: க்ரஹீஷ்யதி—அவன் ஒத்துக் கொள்வது; அதர்ம க்ருத்—மிகக் கொடிய; லோக-நிக்-கார—பொது மக்களின் கண்டனத்திற்கு; ஸந்தக்கம்—எரிதல்; தஹிஷ்யா-ம:—நாம் எரிப்போம்; ஸ்வ-தேஜஸா—நமது தவ வலிமையினால்.

தெய்வீக முனிவர்கள் இவ்வாறு சிந்தித்தனர்: உண்மையில் நாம் அவனது கொடிய தன்மைகளை நன்கு அறிந்திருந்தோம். இருந்தும் அவனை நாம் அறியணை ஏற்றினோம். வேனன் நமது அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுமாறு செய்ய முடியாவிட்டால் மக்களின் கண்டனத்திற்கு நிச்சயம் அவன் ஆளாவான். அப்போது நாம் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம். பிறகு நமது ஆன்ம பலத்தினால் நாம் அவனை எரித்துச் சாம்பலாக்குவோம்.

பதம் 4.14.13
ஏவம் அத்யவஸாயைனம் முனயோ கூட-மன்யவ:
உபவ்ரஜ்யாப்ருவன் வேனம் ஸாந்த்வயித்வா ச ஸாமபி:

ஏவம்—இவ்வாறு; அத்யவஸாய—தீர்மானித்து; ஏனம்—அவனை; முனய:—முனிவர்கள்; கூட-மன்யவ:—தங்களது ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு; உபவ்ரஜ்ய—அணுகினர்; அப்ருவன்—கூறினர்; வேனம்—மன்னன் வேனனிடம்; ஸாந்த்வயித்வா—சமாதானப்படுத்தி; ச—மேலும்; ஸாமபி:—இனிய வார்த்தைகளுடன்.

இவ்வாறு தீர்மானித்த மாமுனிவர்கள் மன்னன் வேனனிடம் சென்றனர். அவர்கள் தங்கள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, கனிவான வார்த்தைகளினால் அவனைச் சமாதானப்படுத்தி பின்வருவனவற்றைக் கூறலாயினர்.

பதம் 4.14.14
முனய ஊசு:
ந்ருப-வர்ய-நிபோதைதத் யத் தே விஜ்ஞாபயாம போ:
ஆயு:-ஸ்ரீ: பல-கீர்தினாம் தவ தாத விவர்தனம்

முனய: ஊசு:—மாமுனிவர்கள் கூறினர்; ந்ருப-வர்ய—ஓ, அரசரிற் சிறந்தோனே; நிபோத—அன்புடன் புரிந்து கொள்ள முயற்சிப்பாயாக; ஏதத்—இந்த; யத்—எது; தே—உனக்கு; விஜ்ஞாபயாம—நாங்கள் கூறும் அறிவுரை; போ:—ஓ, மன்னனே; ஆயு:—ஆயுள்; ஸ்ரீ—செல்வம்; பல—பலம்; கீர்தினாம்—பெரும்புகழ்; தவ—உனது; தாத—அருமை மைந்தனே; விவர்தனம்—அதிகரிக்குமாக.

மாமுனிவர்கள் கூறினர்: அன்பார்ந்த மன்னனே, உனக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வந்திருக்கின்றோம். அதனை அன்புகூர்ந்து, மிகுந்த கவனத்துடன் கேட்பாயாக. அவ்வாறு நீ செய்தால், உனது, ஆயுள், செல்வம், ஆற்றல் மற்றும் புகழ் போன்றவையெல்லாம் அதிகரிக்கும்.

பதம் 4.14.15
தர்ம ஆசரித: பும்ஸாம் வான்-மன:-காய-புத்திபி:
லோகன் விஸோகான் விதரதி விதரதி அதானந்த்யம் அஸங்கினாம்

தர்ம—சமய அறநெறிகளை; ஆசரித:—நிறைவேற்றினால்; பும்ஸாம்—மனிதர்களுக்கு; வாக்—வாக்கு; மன:—மனம்; காய—காயம்; புத்திபி:—புத்தியினாலும்; லோகன்—லோகங்கள்; விஸோகான்—துன்பமின்றி; விதரதி—அருளப்படுதல்; அர்த—உறுதியாக; ஆனந்த்யம்—அளவில்லா ஆனந்தம்; விடுதலை; அஸங்கினாம்—உலகப்பாதிப்பிலிருந்தும் அவர்கள் விடுதலையடைவர்.

சமய அறநெறிகளை தங்கள் வாக்கு, மனம், புத்தி, மற்றும் காயத்தினால் பின்பற்றுபவர்கள் துன்பங்களற்ற தேவ உலகினை அடைவர். உலகப்பாதிப்பு அவர்களை விட்டு நீங்குவதால் அவர்கள் வாழ்வில் அளவற்ற ஆனந்தத்தினை அடைவர்.

பதம் 4.14.16
ஸ தே மா விநஸேத் வீர ப்ரஜானாம் க்ஷேம-லக்ஷண:
யஸ்மின் சிநஷ்டே ந்ருபதிர் ஐஸ்வர்யாத் அவரோஹதி

ஸ:—அந்த ஆன்மீக வாழ்க்கை; தே—உன்னால்; மா—கூடாது; விநஸேத்—கெடுவதற்கு; வீர—ஓ, வீரனே; ப்ரஜானாம்—மக்களின்; க்ஷேம-லக்ஷண:—வளத்திற்கான காரணம்; யஸ்மின்—ஏது; விநஷ்டே—கெடுமானால்; ந்ருபதி:—அரசன்; ஐஷ்வர்யாத்—வளத்தினின்று; அவரோஹதி—கீழே வீழ்வான்.

முனிவர்கள் தொடர்ந்து கூறினர்: ஓ, சிறந்த வீரனே, இக்காரணத்தினால் நீ பொதுமக்களின் ஆன்மீக வாழ்க்கையினை அழிப்பதற்கு காரணமாகிவிடக் கூடாது. உனது செயல்களினால் அவர்களது ஆன்மீக வாழ்வு கெடுமானால் நீ நிச்சயமாக உனது அரியணையிலிருந்தும், செல்வத்திலிருந்தும் கீழே விழ நேரிடும்.

பதம் 4.14.17
ராஜன்ன அஸாத்வ-அமாத்யேப்யஸ் சோராதிப்ய: ப்ரஜா ந்ருப:
ரக்ஷன் யதா பலிம் க்ருஹ்ணன்ன் இஹ ப்ரேத்ய சமோததே

ராஜன்—ஓ, மன்னனே; அஸாது—கொடிய; அமாத்யேப்ய:—அமைச்சர்களிடமிருந்து, சோர-ஆதிப்ய:—திருடர்கள் மற்றும் துஷ்டர்களிடமிருந்து; ப்ரஜா:—குடிமக்கள்; ந்ருப:—மன்னன்; ரக்ஷன்—பாதுகாத்து; யதா—அதற்கேற்றாற்போல்; பலிம்—வரிகள்; க்ருஹ்ணன்—ஏற்றுக்கொண்டு; திஹ—அகத்தில்; ப்ரேத்ய—பரத்தில்; ச—மேலும்; மோததே—மகிழ்கிறான்.

முனிவர்கள் மேலும் தொடர்ந்து கூறினர்: மன்னன் மக்களை அநியாயமிக்க அமைச்சர்களிடம் இருந்தும், திருடர்களிடமிருந்தும், தீயவரிடமிருந்தும் காக்கும் பொழுது அப்புண்ணியச் செயல்களின் பலனாக அவர்கள் அளிக்கும் வரிகளை ஏற்றுக் கொள்கிறான். இவ்வாறு புண்ணியம் செய்யும் அரசன் இகத்தில் மட்டுமின்றி பரத்திலும் இன்பமெய்துகிறான்.

பதம் 4.14.18
யஸ்ய ராஷ்ட்ரே புரேசைவ பகவான் யஜ்ஞ-பூருஷ:
இஜ்யதே ஸ்வேன் தர்மேண ஜனனர் வர்ணாஸ்ரமான்விதை:

யஸ்ய—எவரது; ராஷ்ட்ரே—நாடு அல்லது அரசு; புரே—நகர்களில்; ச—மேலும்; ஏவ—உறுதியாக; பகவான்—முழுமுதற் கடவுள்; யஜ்ஞ-புருஷ:—அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவர்; இஜ்யதே—வழிபடுதல்; ஸ்வேன—அவர்கள் சுயமான; தர்மேண—தொழில் தர்மங்களினால்; ஜனன:—மக்களால்; வர்ண-ஆஸ்ரம—எண்வகை சமுதாய முறைகள்; அன்விதை:—அவர்கள் பின்பற்றுவர்.

புனிதமான மன்னனின் ஆட்சியின் கீழுள்ள நாட்டிலும், நகரங்களிலும் உள்ள மக்கள் வர்ண மற்றும் ஆஷ்ரமத்தின் எண் வகையான சமுதாய நிலைகளைப் பின்பற்றுகின்றனர். மேலும் அங்குள்ள குடிமக்கள் அனைவரும் தத்தமக்குரிய சுதர்மங்களினால் முழுமுதற் கடவுளை வழிபடுகின்றனர்.

பதம் 4.14.19
தஸ்ய ராஜ்ஞோ மஹா-பாக பகவான் பூத-பாவன:
பரித்யுஷ்யதி விஸ்வாத்மா திஷ்டதோ நிஜ-ஸாஸனே

தஸ்ய—அவருடன்; ராஜ்ஞா:—மன்னன்; மஹா-பாக—ஓ, சிறந்தவனே; பகவான்—முழுமுதற் கடவுள்; பூத-பாவன:—பிரபஞ்சத் தோற்றத்தின் மூலகாரணர்; பரித்யுஷ்யதி—திருப்தியுற்றால்; விஸ்வா-ஆத்மா—பிரபஞ்சம் முழுவதிற்குமான பரமாத்மா; திஷ்டத:—இருப்பவர்; நிஜ-ஸாஸனே—அவர்க்குரிய ஆள்கின்ற நிலையில்.

ஓ, சான்றோனே, ஒரு மன்னன், இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூல காரணம் முழுமுதற் கடவுளே என்றும், அவரே அனைவரிடத்தும் மூலக்கருவாக விளங்குகிறார் என்றும் உணர்ந்து அவரை வழிபட்டான் என்றால் பகவான் திருப்தியடைவார்.

பதம் 4.14.20
தஸ்மிம்ஸ் துஷ்டே கிம் அப்ராப்யம் ஜகதாம் ஈஸ்வரேஸ்வரே
லோகா: ஸபாலா ஏதஸ்மை ஹரந்தி பலிம் ஆத்ருதா:

தஸ்மின்—அவர்; துஷ்டே—திருப்தியடையும்பொழுது; கிம்—என்ன; அப்ராப்யம்—எய்துதற்கரியது; ஜகதாம்—ஜகத்தின்; ஈஸ்வர- ஈஸ்வரே—ஒழுங்குபடுத்துபவர்களையும் ஒழுங்குபடுத்துபவர்; லோகா:—உலகங்களிலுள்ளோர்; ஸாபாலா:—அவர்களின் ஆதிபத்தியத் தேவர்களுடன்; ஹி—இக்காரணத்திற்காக; ஏதஸ்மை—அவருக்கு; ஹரந்தி—அர்ப்பணிப்பர்; பலிம்—பூஜைக்குரிய பொருள்கள்; ஆத்ருதா:—மிக்க மகிழ்ச்சியுடன்.

முழுமுதற் கடவுள் பிரபஞ்சத்தை ஒழுங்குபடுத்தும் தேவர்களால் வழிபடப்படுபவராவார். அவர் திருப்தியுற்றால் நம்மால் அடைவதற்குரியதென்று எதுவுமில்லை. எனவே ஒவ்வொரு உலகைச் சேர்ந்த ஆதிபத்தியத் தேவர்களும், அவ்வுலகங்களில் வாழ்பவர்களும் அவரை வழிபடுவதற்காக அனைத்து வகையான வழிபாட்டுப் பொருட்களையும் அர்ப்பணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர்.

பதம் 4.14.21
தம் ஸர்வ லோகாமா-யஜ்ஞ-ஸங்க்ரஹம்
த்ரயீமயம் த்ரவ்யமயம் தபோமயம்
யஜ்னஞர் விசித்ரைர் யஜதோ பவாய தே
ராஜன் ஸ்வ-தேஸான் அனுரோத்தும் அர்ஹஸி

தம்—அவர்; ஸர்வ-லோக—சர்வலோகத்திலும்; அமர—ஆதிபத்யத் தேவதைகளுடன்; யஜ்ஞ—வேள்விகள்; ஸங்க்ரஹம்—அவர் ஏற்கிறார்; த்ருயீமயம்—மூன்று வேதங்களின் மொத்தமும்; த்ரவ்ய-மயம்—அனைத்துத் திரவியங்களின் உரிமையாளர்; தப:-மயம்—அனைத்துத் தவங்களின் லட்சியம்; யஜ்ஞை:—வேள்விகளினால்; விசித்ரை:—பல்வேறு; யஜத:—வழிபடுகின்ற; பவாய—உயர்வதற்கு; தே—உனது; ராஜன்—ஓ, மன்னனே; ஸ்வ-தேஸான்—எனது நாட்டு மக்கள்; அனுரோத்தும்—இயங்குவதற்கு; அர்ஹஸி—நீ செய்ய வேண்டும்.

அன்பார்ந்த மன்னனே, அனைத்துலகங்களின் ஆதிபத்தியத் தேவர்களுடன் சேர்ந்து, முழுமுதற் கடவுளே அனைத்துலகங்களிலும் செய்யப்படும் எல்லா வேள்விகளையும் அனுபவிப்பவராக விளங்குகிறார். பரமபுருஷ பகவானே மூன்று வேதங்களாகவும், எல்லாவற்றின் உரிமையாளராகவும், அனைத்துத் தவங்களின் இறுதி லட்சியமாகவும் இருக்கிறார். ஆகவே உனது உயர்வுக்காகப் பல்வேறு வேள்விகளைச் செய்வதில் உனது குடிமக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். உண்மையில் உன் குடிமக்களை வேள்விகளைச் செய்யுமாறு நீ எப்போதும் பணித்தல் வேண்டும்.

பதம் 4.14.22
யஞ்ஞேன யுஷ்மத்-விஷயே த்விஜாதிபிர்
விதாயமானேன ஸீரா: கலா ஹரே:
ஸ்விஷ்டா: ஸீதஷ்டா:ப்ரதிஸந்தி வாஞ்சிதம்
தத்-தேவனம் நார்ஹஸி வீர சேஷ்டிதும்

யஞ்ஞேன—வேள்வியினால்; யுஷ்மத்—உனது; விஷயே—நாட்டில்; த்விஜாதிபி:—அந்தணர்களினால்; விதாயமானேன—செய்யப்பட்டால்; ஸீரா:—தேவர்கள் அனைவரும்; கலா:—விரிவுகள்; ஹரே:—முழுமுதற் கடவுளின்; ஸீ-இஷ்டா:—முறையாக வழிபடப்பட்டால்; ஸீ-துஷ்டா:—மிகுந்த திருப்தியுற்று; ப்ரதிஸந்தி—அருள்வர்; வாஞ்சிதம்—வேண்டிய பலன்களை; தத்-ஹேலனம்—அவர்களை அவமதித்தால்; ந—இல்லை; அர்ஹஸி—நீ செய்தல் வேண்டும்; வீர—ஓ, வீரனே; சேஷ்டிதம்—செய்வதற்கு.

உனது நாட்டிலுள்ள அந்தணர்கள் அனைவரும் பகவானின் பிற விரிவுகளான தேவர்கள் அனைவரையும் வேள்விகளின் மூலம் திருப்தி செய்தால் அவர்களின் செயல்களினால் திருப்தியடையும் தேவர்கள் உனக்கு வேண்டிய வரங்களை அருள்வர். ஆகையினால் வீரரிற் சிறந்தோனே! வேள்விகள் செய்வதை மட்டும் நிறுத்திவிடாதே. அவ்வாறு நீ நிறுத்தினால் அது தேவர்களை அவமதிப்பதாகும்.

பதம் 4.14.23
வேன உவாச
பாலிஸா பத யூயம் வா அதர்மே தர்ம—மானின:
யே வ்ருத்திகம் பதிம் ஹித்வா ஜாரம் பதிம் உபாஸதே

வேன:—மன்னன் வேனன்; உவாச—கூறினான்; பாலிஸா:—குழந்தைத்தனமான; பத—ஒ; யூயம்—நீங்கள் எல்லோரும்; வா—உண்மையில்; அதர்மே—சமயத்திற்குப் புறம்பான நெறிகளை; தர்ம-மானின:—சமயமென ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்; யே—யாவர் அனைவரின்; வ்ருத்திகம்—காப்பாற்றுகின்ற; பதிம்—கணவன்; ஹித்வா—துறந்து; ஜாரம்—திருட்டு; பதிம்—புருஷனை; உபாஸதே—வழிபடுகின்றீர்.

மன்னன் வேனன் பதிலுரைத்தான் நீங்களெல்லாம் அனுபவசாலிகள் அல்லர். சமயத்திற்குப் புறம்பான நெறிகளை சமயநெறிகளாக நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பது வருத்தத்திற்குறியது. உண்மையில் நீங்கள் அனைவரும் உங்களைக் காக்கும் உண்மைக் கணவனைத் துறந்து விட்டு கள்ளக்காதலனைத் தேடி வழிபடுகின்றீர் என்று நான் கருதுகிறேன்.

பதம் 4.14.24
அவஜானந்தி அமீ மூடா ந்ருப-ரூபிணம் ஈஸ்வரம்
நானுவிந்தந்திதே பத்ரம் இஹ லோகே பரத்ர ச

அவஜனந்தி—அவமரியாதை; அமீ—அவர்கள்; மூடா:—மூடர்கள்; ந்ருப-ரூபிணம்—மன்னன் வடிவில்; ஈஸ்வரம்—முழுமுதற் கடவுள்; ந—இல்லை; அனுவிந்ததி—அனுபவம்; தே—அவர்கள்; பத்ரம்—மகிழ்ச்சி; இஹ—இந்த; லோகே—உலகில்; பரத்ர—மரணத்திற்குப் பிறகு; ச—கூட.

முழுமுதற் கடவுளின் வடிவமாகத் திகழும் மன்னனை உண்மையில் ஒட்டுமொத்த அறியாமையின் காரணமாக வணங்காதவர்கள் இம்மையில் இவ்வுலகில் மட்டுமல்லாது மறுமையில் அவ்வுலகிலுங்கூட மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.

பதம் 4.14.25
கோ யஜ்ஞா-புருஷோ நாம யத்ர வோ பக்திர் ஈத்ருஸீ
பர்த்ரு-ஸ்நேஹ-விதூராணயாம் யதா ஜாரே குயோஷிதாம்

க:—யார் (இருக்கிறார்); யஜ்ஞா-புருஷ:—அனைத்து வேள்விகளின் நாயகராக; நாம—நாமத்தினால்; யத்ர—எவருக்கு; வ:—உங்கள்; பக்தி—பக்தித் தொண்டு; ஈத்ருஸீ—மிகச்சிறந்த; பர்த்ரு—கணவனுக்காக; ஸ்நேஹ—நட்பு; விதூராணாம்—இழத்தல்; யதா—போன்று; ஜாரே—கள்ளக் காதலனுக்கு; கு-யோஷிதாம்—கற்பில்லாத பெண்ணின்.

நீங்கள் தேவர்களிடம் அதிகமாகப் பக்தி செலுத்துகின்றீர்களே உண்மையில் அவர்கள் யார்? ஆதலினால் இத்தேவர்களிடம் நீங்கள் வைக்கும் நேசமானது, மணமுடித்துக் கைப்பற்றியக் கணவனைக் கைவிட்டு விட்டு தன் கள்ளக்காதலன் மீது கற்பிழந்த பெண் வைக்கும் நேசத்தைப் போன்றதாகும்.

பதங்கள் 4.14.26 – 4.14.27
விஷ்ணுர் விரிஞ்சோ கிரிஸ இந்த்ரோ வாயுர் யமோ ரவி:
பர்ஜன்யோ தனோத: ஸோம: க்ஷிதிர் அக்னிர் அபாம்பதி:

ஏதே சான்யே ச விபுதா: ப்ரபவோ வர-ஸாபயோ:
தே ஹே பவந்தி ந்ருபதே: ஸர்வ-தேவமயோ ந்ருப:

விஷ்ணு—பகவான் விஷ்ணு; விரிஞ்ச:—பிரம்மதேவன்; கிரிஸ—சிவபெருமான்; இந்த்ர:—தேவேந்திரன்; வாயு:—வாயுபகவான்; யம:—யமன்; ரவி:—சூரிய தேவன்; பர்ஜன்ய:—மழைக்கடவுள்; தன-த:—குபேரன்; ஸோம:—சந்திரன்; க்ஷிதி:—பூமியின் ஆதிபத்தியத் தேவன்; அக்னி—அக்னித்தேவன்; அபாம்-பதி:—வருணதேவன்; ஏதே—இவர்களெல்லாம்; ச—மேலும்; அன்யே—பிறரும்; விபுதா:—வரத்திலும் சாபத்திலும்; தேஹே—உடலில்; பவந்தி—கட்டுண்டு; ந்ருபதே:—மன்னனின்; ஸர்வ—தேவமய:—அனைத்து தேவர்களையும் உடையவன்; ந்ருப:—மன்னன்.

பகவான் விஷ்ணு: பிரம்மதேவன்; சிவபெருமான்; வாயுதேவன் (காற்றுக்கடவுள்); யமன் (காலதேவன்); சூரியதேவன்; மழைக்கடவுள்; குபேரன் (பொருளாளர்); சந்திரதேவன்; பூமியின் ஆதிபத்திய தேவன்; அக்னித்தேவன் (நெருப்புக்கடவுள்); வருணன் (நீர்க்கடவுள்); இவர்களெல்லாம் வரமருளவும் சபிக்கவும் கூடிய ஆற்றல் மிக்கவர்கள். ஆயினும் இவர்கள் அனைவரும் ஒரு மன்னனின் உடலில் குடியிருக்கின்றனர். இக்காரணத்தினாலேயே மன்னன் அனைத்துத் தேவர்களுக்கும் உறைவிடம் என்றறியப்படுகிறான், இத்தேவர்கள் அனைவரும் மன்னனின் பாகங்களேயாவர்.

பதம் 4.14.28
தஸ்மான் மாம் கர்மபிர் விப்ரா யஜத்வம் கத-மத்ஸரா
பலிம் ச மஹ்யம் ஹரத மத்தோ ‘ன்ய கோ ‘க்ர-புக் புமான்

தஸ்மாத்—இக்காரணத்தினால்; மாம்—என்னை; கர்மபி:—சமய சடங்குகளினால்; விப்ரா:—ஓ, தேவர்களே; யஜத்வம்—வழிபடல்; கத—இன்றி; மத்ஸரா:—காழ்ப்புணர்ச்சி கொண்டு; பலிம்—வணங்குவதற்குரிய பொருட்களுடன்; ச—மேலும்; மஹ்யம்—எனக்கு; ஹரதே—கொண்டு; மத்த:—என்னைவிட; அன்ய:—பிறர்; க—யார்; (இருக்கிறார்); அக்ர-புக்—முதல்மரியாதை பெறுபவர்; புமான்—முழுமுதல்.

மன்னன் வேனன் தொடர்ந்து கூறினான்: ஓ, அந்தணர்களே, இக்காரணத்தினால், என்மீது நீங்கள் கொண்டுள்ள தவறான கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள், மேலும் உங்கள் சமயச் சடங்குகளின் மூலம் என்னை வழிபட்டு அனைத்துப் பொருட்களையும் எனக்கு அளிப்பீராக. நீங்கள் அறிவுடையோரானால் வேள்விகளில் அர்ப்பணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள என்னைவிடச் சிறந்தவன் எவனுமில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்.

பதம் 4.14.29
மைத்ரேய உவாச
இத்தம் விபர்யய மதி: பாபீயான் உத்பதம் கத:
அநுனீயமானஸ் தத் யாச்ஞானம் ந சக்ரே ப்ரஷ்ட-மங்கல:

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; இதம்—இவ்வாறு; விபர்யய-மதி:—முரண்பாடுடைய புத்தி உடைமை; பாபீயான்—மகாபாவி; உத்பதம்—சரியான பாதையினின்று; கத:—பிரிந்து சென்று; அநுனீய-மான:—அனைத்து மரியாதைகளும் அளிக்கப்பட்டு; தத்-யாச்ஞாம்—முனிவர்களின் வேண்டுகோளை; ந—இல்லை; சக்ரே—ஏற்றுக்கொள்ள; மங்கல:—எல்லா மங்கலங்களும்.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: இவ்வாறு மன்னன் தனது பாவ வாழ்க்கையின் பலனால் மதி மூடனாகி, நேர்மையான பாதையிலிருந்து தடம் புரண்டு, உண்மையில் தனது அனைத்து சௌபாக்கியம் இழந்து போனான். அவன் முனிவர்கள் தம் முன் மிகவும் மரியாதையுடன் வைத்த வேண்டுகோளை மறுத்தான். இதன் காரணமாக அனைவராலும் தூற்றப்பட்டான்.

பதம் 4.14.30
இதி தே ‘ஸத்-க்ருதாஸ்தேன த்விஜா: பண்டித-மானினா
பக்னாயாம் பவ்ய-யாச்ஞாயாம் தஸ்மை விதுர சுகுர்து:

இதி—இவ்வாறு; தே—அனைத்து முனிவர்களும்; அஸத்-க்ருதா:—அவமதிக்கப்பட்டு; தேன—அரசனால்; த்விஜா:—அந்தணர்கள்; பண்டித-மானினா—தன்னை மிகவும் கற்றவனாகக் கருதிக் கொண்டு; பக்னாயம்—மனமுடைந்தனர்; பவ்ய—மங்கலகரமான; யாச்ஞாயாம்—அவர்கள் வேண்டுகோள்; தஸ்மை—அவனிடம்; விதுர—ஒ, விதுரனே; சக்ருது:—மிகுந்த ஆத்திரமடைந்தனர்.

அன்பார்ந்த விதுரனே, உனக்கு மங்கலம் உண்டாகட்டும். இம்மூட மன்னன் தன்னை மிகவும் கற்றவனாகக் கருதிக் கொண்டு இவ்வாறு மாமுனிவர்களை அவமதித்தான். மன்னனின் வார்த்தைகளினால் மனம் நொந்துபோன முனிவர்கள் மன்னன் மீது மிகுந்த ஆத்திரங்கொண்டனர்.

பதம் 4.14.31
ஹன்யதாம் ஹன்யதாம் ஏஷ பாப: ப்ரக்ருதி-தாருண:
ஜீவன் ஜகத் அஸாவ் ஆஸீ குருதே பஸ்மஸாத் த்ருவம்

ஹன்யதாம்—அவனைக் கொல்; ஹன்யதாம்—அவனைக் கொல்; ஏஷ:—இம்மன்னன்; பாப:—ஓர் பாவத்தின் அவதாரம்; ப்ரக்ருதி—இயற்கையினால்; தாருண:—அஞ்சச் செய்பவன்; ஜீவன்—வாழும் போது; ஜகத்—இம்முழு உலகமும்; அஸௌ—அவன்; ஆஸீ—கூடிய விரைவில்; குருதே—செய்வான்; பஸ்மஸாத்—சாம்பலாக; த்ரும—உறுதியாக.

மாமுனிவர்கள் அனைவரும் ஒரு சேரக் கூவினர். இவனைக் கொல்லுங்கள்! இவனைக் கொல்லுங்கள்! இவனே அனைவருக்கும் அச்சம் தருகின்ற பாவியாவான். இவன் உயிரோடிருந்தால் வெகு விரைவிலேயே இவன் இம்முழு உலகையும் எரித்துச் சாம்பலாக்கி விடுவான். இது உறுதி.

பதம் 4.14.32
நாயம் அர்ஹதி அஸத்-வ்ருத்தோ நரதேவ-வராஸனம்
யோ’தியஜ்ஞ-பதிம் விஷ்ணும் விநிந்ததி அநபத்ரப:

ந—இல்லை; அயம்—இம்மனிதன்; அர்ஹதி—ஏற்றவன்; அஸத்-வ்ருத்த:—பாவச் செயல்களே முற்றிலும் செய்த; நர-தேவ—உலகின் மன்னன் அல்லது உலகின் கடவுள்; வர-ஆஸனம்—மாட்சிமையுடைய அரியணையில்; ய:—யார் அவன்; அதியஜ்ஞ-பதிம்—அனைத்து வேள்விகளின் நாயகன்; விஷ்ணும்—பகவான் விஷ்ணு; விநிந்ததி—அவமதித்தல்; அவன-அபத்ரப:—வெட்கங்கெட்டவன்.

மகாமுனிவர்கள் தொடர்ந்தனர்: இப்புனிதமற்ற நாணயமற்ற மனிதன் அரியணையில் அமர்வதற்குத் தகுதியற்றவன். இவன் சிறிதும் நாணமின்றி முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவைக் கூட அவமதிக்கத் துணிந்துவிட்டான்.

பதம் 4.14.33
கோ வைனம் பரிசக்ஷீ த வேனம் ஏகம் ருதே’ ஸீபம்
ப்ராப்த ஈத்ருஸம் ஐஸ்வர்யம் யத்-அநுக்ரஹ பாஜன:

க:—யார்; வா—உண்மையில்; ஏனம்—பகவான்; பரிசக்ஷீத—நிந்தனை செய்தால்; வேனம்—மன்னன் வேனன்; ஏகம்—ஒருவனே; ருதே—ஆக; அஸீபம்—புனிதமற்ற; ப்ராப்த:—அடையப்பெற்றது; ஈத்ருஸம்—இதுபோன்ற; ஐஸ்வர்யம்—ஐஸ்வர்யம்; யத்—எவரது; அநுக்ரஹ—கருணையினால்; பாஜன:—பெற்றான்.

புனிதமற்றவனான மன்னன் வேனனைத்தவிர வேறு யார் முழுமுதற் கடவுளை நிந்தனை செய்வார்? அவரது கருணையாலன்றோ ஒருவன் அனைத்து வகையான மங்கலங்களையும், செல்வங்களையும் பெறுகிறான்.

பதம் 4.14.34
இத்தம் வ்யவஸிதா ஹந்தும் ருஷயோ ரூட-மன்யவ:
நிஜக்னுர் ஹீங்க்ருதைர் வேனம் ஹதம் அச்யுத-நிந்தயா

இத்தம்—இவ்வாறு; வ்யவஸிதா:—தீர்மானித்து; ஹந்தும்—கொல்வதற்கு; ருஷய:—முனிவர்கள்; ரூட—வெளிப்படுத்துதல்; மன்யவ:—அவர்கள் ஆத்திரத்தினை; நிஜக்னு:—அவர்கள் கொன்றனர்; கும்-க்ருதை:—ஹீங்கார ஒலியுடைய ஆத்திரமிக்க வார்த்தைகளினால்; வேனம்—மன்னன் வேனன்; ஹதம்—இறந்தான்; அச்யுத—முழுமுதற் கடவுளுக்கு எதிராக; நிந்தயா—நிந்தனையினால்.

மாமுனிவர்கள் தங்கள் கொடிய கோபத்தினால் உடனே மன்னனைக் கொன்றுவிட வேண்டுமென்று முடிவு செய்தனர். ஆனால் முழுமுதற் கடவுளை நிந்தித்தக் குற்றத்தினால் மன்னன் வேனன் முன்னமேயே இறந்தவனாகிவிட்டான். இவ்வாறு எந்த வித ஆயுதங்களையும் பயன்படுத்தாது முனிவர்கள் தங்கள் வாயினின்று வந்த ஓசையின் மூலமாகவே மன்னன் வேனனைக் கொன்றனர்.

பதம் 4.14.35
ருஷிபி: ஸ்வாஸ்ரம-பதம் கதே புத்ர-கலேவரம்
ஸீனீதா பாலயாம் ஆஸ வித்யா-யோகேன ஸோசதீ

ருஷிபி:—முனிவர்களினால்; ஸ்வ-ஆஸ்ரம-பதம்— தங்களுக்குரிய ஆஸ்ரமங்களுக்கு; கதே—திரும்பிச் சென்றனர்; புத்ர—அவன் புத்திரனின்; கலேவரம்—உடலை; ஸீனீதா—சுனீதா; மன்னன்—வேனனின் அன்னை; பாலயாம் ஆஸ—பத்திரப்படுத்தினாள்; வித்யா-யோகேன—மந்திரத்தினாலும், மூலிகைச் சாற்றினாலும்; ஸோசதீ— துன்புற்ற பொழுதும்.

முனிவர்கள் அனைவரும் தங்கள் ஆஸ்ரமங்களுக்குத் திரும்பிச் சென்ற பின்னர், மன்னன் வேனனின் அன்னையான சுனீதா தன் மைந்தனின் மரணத்தை எண்ணி மிகவும் துயருற்றாள். அவள் மந்திரங்களினாலும், சில மூலிகைத் தைலங்களினாலும் தன் மைந்தனின் உடலைப் பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானித்தாள்.

பதம் 4.14.36
ஏகதா முனயஸ் தே து ஸரஸ்வத்-ஸலிவாப்லுதா:
ஹுத்வாக்னீன் ஸத்-கதாஸ் சக்ருர் உபவிஷ்டா: ஸரித்-தடே

ஏகதா—ஒருநாள்; முனயஸ்:—அனைத்து மாமுனிவர்களும்; தே—அவர்கள்; து—பின்னர்; ஸரஸ்வத்—சரஸ்வதி நதியின்; ஸலில—நீரில்; ஆப்லுதா:—நீராடி; ஹீத்வா—வந்தனங்களை அர்ப்பணித்து; அக்னீன்—தீயினுள்; ஸத்-கதா:—உன்னதப் பொருள் பற்றி விவாதித்தனர்; சக்ரு:—செய்யத் தொடங்கினர்; உபவிஷ்டா:—அமர்ந்து; ஸரித்-தடே—நதியின் கரையில்.

ஒருநாள் அதே முனிவர்கள் சரஸ்வதி நதியில் நீராடி வேள்வித் தீயில் பொருள்களை ஆகுதி செய்வதான நித்தியக் கடமைகளைச் செய்யத் தொடங்கினர். இவ்வாறு அவர்கள் அந்நதிக்கரையில் அமர்ந்து கொண்டு இறைவனைப் பற்றியும் அவரது திருவிளையாடல்களைப் பற்றியும் தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர்.

பதம் 4.14.37
வீக்ஷ்யோத்திதாம்ஸ் ததோத்பாதன் ஆஹீர் லோக-பயங்கரான்
அபி அபத்ரம் அநாதாயா தஸ்யுப்யோ ந பவேத் புவ:

வீக்ஷ்ய—கண்டு கொண்டு; உத்திதான்—வளர்ச்சி பெற்ற; ததா—பின்னர்; உத்பாதான்—துயரங்கள்; ஆஹீ:—அவர்கள் கூறத்தொடங்கினர்; லோக—சமுதாயத்தில்; பயங்கரான்—பயங்கரமான; அபி—எதுவோ; அபத்ரம்—இடர்ப்பாடு; அநாதாயா:—ஆள்பவனின்றி; தஸ்யுப்ய—திருடர்கள் மற்றும் துஷ்டர்களிடமிருந்து; ந—இல்லை; பவேத்—ஏற்படலாம்; புவ:—உலகின்.

அந்நாட்களில் நாட்டில் பல்வேறு இடையூறுகள் தோன்றி மக்களைப்பீதியடையச் செய்தன. ஆகையினால் அனைத்து முனிவர்களும் தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்: மன்னன் மாண்டதினால் மக்களைக் காப்பதற்கு எவருமில்லை, இதனால் திருடர்களாலும், துஷ்டர்களாலும் மக்கள் தொல்லையுற துன்ப்பட நேரிடலாம்.

பதம் 4.14.38
ஏவம் ம்ருஸந்த ருஷயோ தாவதாம் ஸர்வதோ-திஸம்
பாம்சு: ஸமுத்திதோ பூரிஸ் கோராணாம் அபிலும்பதாம்

ஏவம்—இவ்வாறு; ம்ருஸந்த:—சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது; ருஷய:—அம்மாமுனிவர்கள்; தாவதாம்—ஓடிக்கொண்டு; ஸர்வத: திஸம்—அனைத்துத் திசைகளில் இருந்தும்; பாம்சு:—புழுதி; ஸமுத் தித:— எழுந்தது; பூரி:—அதிகமாக; சோராணாம்—திருடர்கள் மற்றும் துஷ்டர்களிடமிருந்து; அபிலும்பதாம்—கொள்ளையில் ஈடுபட்டிருத்தல்.

இவ்வாறு அம்மாமுனிவர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தபொழுது திடீரென்று அனைத்துத் திக்குகளிலிருந்தும் பயங்கரமான புழுதிப் புயல் எழுந்தது. இப்புயலானது பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் திருடர்கள் மற்றும் கயவர்கள் ஓடிக்கொண்டிருந்ததினால் ஏற்பட்டதாகும்.

பதங்கள் 4.14.39 – 4.14.40
தத் உபத்ரவம் ஆஜ்ஞாய லோகஸ்ய வஸீ லும்பதாம்
பர்தரி உபரதே தஸ்மின்ன அன்யோன்யம் ச ஜிகாம்ஸதாம்

சோர ப்ராயம் ஜன-பதம் ஹீன-ஸத்த்வம் அராஜகம்
லோகான் நாவாரயான் சக்தா அபி தத்-தோஷ-தர்ஷின:

தத்—அந்நேரம்; உபத்ரவம்—இடையூறு; ஆஜ்ஞாய—புரிந்து கொண்டு; லோகஸ்ய—பொதுமக்கள்; வஸீ—செல்வந்தர்; ஒம்பதாம்—கொள்ளைக்காரர்களினால்; பர்தரி—பாதுகாப்போர்; உபாதே—இறந்ததினால்; தஸ்மின்—மன்னன் வேனன்; அன்யோன்யம்—ஒருவரையொருவர்; ச—மேலும்; ஜிகாம்ஸதாம—கொல்வதற்கு விரும்புதல்; சோர-ப்ராயம்—முற்றிலும் திருடர்கள் நிறைந்த; ஜன-பதம்—நாடு; ஹீன—இழந்ததின்; ஸத்த்வம்—ஒழுங்குமுறை; அராஜகம்—அரசனின்றி; லோகன்—திருடர்கள் மற்றும் துஷ்டர்கள்; ந—இல்லை; அவாரயன்-லோகன்—திருடர்கள் மற்றும் துஷ்டர்கள்; ந—இல்லை; அவாரயன்—அவர்கள் குறைப்பர்; ஸக்தா:—செய்யக் கூடியவர்களாயிருந்தும்; அபி—இருந்தாலும்; தத்-தோஷ—அதன் தவறினை; தர்ஸின:—கருதினர்.

புழுதிப் புயலைக் கண்ட முனிவர்கள், மன்னன் வேனனின் மறைவினால் அதிக அளவில் ஒழுங்கீனங்கள் நடைபெறுகின்றன என்பதைப் புரிந்து கொண்டனர். அரசாங்கம் இல்லையென்றால் நாட்டில் சட்டம் ஒழுங்கு இராது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களில் செல்வந்தர்களைக் கொள்ளையடிக்கும் கொலைக்காரத் திருடர்கள் மற்றும் துஷ்டர்களின் செயல்கள் எழுச்சி பெறுகின்றன. மன்னனைக் கொன்றது போல் அம்மாமுனிவர்கள் தங்கள் சக்தியினால் இவ்விடையூறுகளைக் குறைக்கக் கூடியவர்களாக இருந்தும் தாங்கள் அவ்வாறு செய்வது தவறு என்று கருதினர். ஆகையினால் அவர்கள் இதனைத் தடுக்கும் முயற்சிகள் எதையும் செய்யவில்லை.

பதம் 4.14.41
ப்ராஹ்மண: ஸம-த்ருக்ஸாந்தோ தீனானாம் ஸமுபேக்ஷக:
ஸ்ரவதே ப்ரஹ்ம தஸ்யாபி பின்ன-பாண்டாத் பயோ யதா

ப்ராஹ்மண:—ஓர் அந்தணன்; ஸம-த்ருக்—சமபார்வை உடையோன்; ஸாந்த:—அமைதி; தீனானாம்—ஏழை; ஸமுபேக்ஷக:—மொத்தமாகப் புறக்கணித்தல்; ஸ்ரவதே—குறைகிறது; ப்ரஹ்ம—ஆன்மீக சக்தி; தஸ்ய—அவன்; அபி—உறுதியாக; பின்ன-பாண்டா—ஓட்டை பானையில்; பய:—தண்ணீர்; யதா—போன்று.

அம்மாமுனிவர்கள், ஓர் அந்தணண் அமைதியும், ஒரு சார்பும் இல்லாதவனாவான், ஏனெனில் அவன் எல்லோரிடத்தும் சமபார்வை உடையவன். இருந்தாலும் ஏழை மக்களைப் புறக்கணிப்பதென்பது அவன் கடமையில்லையே என்று சிந்திக்கத் தொடங்கினர். அவ்வாறு புறக்கணித்தால் அவனது ஆன்மீகச் சக்தியானது ஓட்டைப் பானையில் ஊற்றிவைக்கப்பட்ட நீர் ஒழுகுவதின் மூலம் கரைந்து விடுவதைப் போல் குறைந்துவிடுகிறது.

பதம் 4.14.42
நாங்கஸ்ய வம்ஸோ ராஜருஷேர் ஏஷ ஸமஸ்தாதும் அர்ஹதி
அமோக-வீர்யா ஹி ந்ருபா வம்ஸே ‘ஸ்மின் கேஸவாஸ்ரயா:

ந—இல்லை; அங்கஸ்ய—மன்னன் அங்கன்; வம்ஸ:—வம்சம்; ராஜருஷே:—ராஜரிஷியின்; ஏஷ:—இந்த; ஸம்ஸ்தாதும்—நிறுத்தப்படுவது; அர்ஹதி—வேண்டும்; அமோக—பாவமற்ற; ஆற்றல்மிக்க; வீர்யா:—வீர்யம் (சுக்கிலம்); ஹி—ஏனென்றால்; ந்ருபா:—மன்னர்கள்; வம்ஸே—வம்சத்தில்; அஸ்மின்—இந்த; கேஸவ—முழுமுதற் கடவுளின்; ஆஸ்ரயா:—அடைக்கலத்தின் கீழ்.

அம்முனிவர்கள், மன்னன் அங்கனின் வம்ச பரம்பரையானது முற்றுப்பெற்று விடக்கூடாது என்று தீர்மானித்தனர். ஏனெனில் அவ்வம்சத்தின் வீர்யமானது மிகவும் ஆற்றல் மிக்கது என்பதோடு அதனின்று தோன்றிய புதல்வர்கள் இறைவனின் பாதம் பணிந்த பக்தர்களுமாவர்.

பதம் 4.14.43
விநிஸ்சித்யைவம் ருஷயோ விபன்னஸ்ய மஹீபதே:
மமந்துர் ஊரும் தரஸா தத்ராஸீத் பாஹீகோ நர:

விநிஸ்சித்ய—தீர்மானித்து; ஏவம்—இவ்வாறு; ருஷய:— மகாமுனிவர்கள்; விபன்னஸ்ய—இறந்த; மஹீ-பதே:—மன்னரின்; மமந்து:—கடைந்தனர்; ஆரும்—தொடைகளை; தரஸா—ஒருக் குறிப்பிட்ட விசையில்; தத்ர—அதன் பின்னர்; ஆஸீத்—பிறந்தான்; பாஹீக:—பாஹீகள் (குள்ளன்) என்ற பெயரில்; நர:—ஓர் மனிதன்.

இவ்வாறு தீர்மானித்த பின்னர் அம்மாமுனிவர்கள் இறந்து போன மன்னன் வேனனின் தொடைகளை மிகுந்த விசையுடனும் ஒரு குறிப்பிட்ட முறையிலும் வேகமாகக் கடைந்தனர். அவ்வாறு கடைந்ததின் விளைவாக ஒரு குள்ளமான மனிதன் மன்னன் உடலிலிருந்து பிறந்தான்.

பதம் 4.14.44
காக—க்ருஷ்ணோ’ திஹ்ரஸ்வாங்கோ ஹ்ரஸ்வ-பாஹீர் மஹா-ஹனு:
ஹ்ரஸ்வ-பான் நிம்ன-நாஸாக்ரோ ரக்தாக்ஷஸ் தாம்ர-மூர்தஜ:

காக-க்ருஷ்ண:—காகம்போன்று கரியநிறம்; அதி-ஹ்ரஸ்வ—மிகவும் குள்ளம்; அங்க:—அங்கங்கள்; ஹ்ரஸ்வ—குட்டையானவை; பாஹீ:—அவர் கரங்கள்; மஹா—பெரியவை; ஹனு:—அவர் தாடைகள்; ஹ்ரஸ்வ—குட்டையான; பாத்—பாதங்கள்; நிம்ன—சப்பையான; நாஸ-அக்ர:—மூக்கின் நுனி; ரக்த—சிவந்த; அக்ஷ:—கண்கள்; தாம்ர—தாமிரம் போன்ற; மூர்த-ஜ—அவர் தலைமுடி.

மன்னன் வேனனின் தொடைகளிலிருந்து பிறந்த மனிதனின் பெயர் பாஹீகன் என்பதாகும். அவன் உடல் நிறம் காக்கையைப் போன்று கரியதாயிருந்தது. அவன் உடலிலிருந்த அனைத்துப் பாகங்களும், கைகள், கால்கள் எல்லாம் குட்டையாக இருந்தன. ஆனால் தாடைகள் அகன்று பெரியவையாயிருந்தன, அவன் மூக்கு சப்பையாகவும், கண்கள் சிவந்தும், தலைமுடி தாமிர நிறத்துடனும் இருந்தன.

பதம் 4.14.45
தம் து தே ‘ லநதம் தீனம் கிம் கரோமீதி வாதினம்
நிஷீதேதி அப்ருவம்ஸ் தாத ஸ நிஷாதஸ் ததோ ‘பவத்

தம்—அவருக்கு; து—பின்னர்; தே—முனிவர்கள்; அவநதம்—தலைகவிழ்ந்து; தீனம்—பணிவுடன்; கிம்—என்ன; கரோமி—நான் செய்ய வேண்டும்; இதி—இவ்வாறு; வாதினம்—கேட்டல்; நிஷீத—அமர்வாயாக; இதி—இவ்வாறு; அப்ருவன்—அவர்கள் பதில் கூறினர்; தாத—அன்பான விதுரனே; ஸ:—அவன்; நிஷாத:—நிஷாதன் என்ற பெயரில்; தத:—இதன் பின்னர்; அப்ரவத்—ஆனான்.

அவன் மிக்க பணிவும், அடக்கமும் வாய்ந்தவனாகயிருந்தான், அவன் உடலிலிருந்து தோன்றியவுடன், தலைதாழ்ந்து, “ஐயன்மீர்”, எனக்கு என்ன கட்டளை? என்று கேட்டான். மாமுனிவர்கள், “அங்கே அமர்வாயாக” என்ற பதில் கூறினர். இவ்வாறு நைஷாத குலத்தின் தலைவனான நிஷாதன் தோன்றினான்.

பதம் 4.14.46
தஸ்ய வம்ஸ்யாஸ் து நைஷாதா கிரி-கானை-கோசரா:
யேனாஹரஜ் ஜாயமானோ வேன-கல்மஷம் உல்பணம்

தஸ்ய—அவனது (நிஷாதனுடைய); வம்ஸ்யா:—வம்சத்தினர்; து—பின்னர்; நைஷாதா:—நைஷாதர்கள் என்றழைக்கப்பட்டனர்; கிரி-கானை—மலைகளிலும், காடுகளிலும்; கோசரா:—வசித்தனர்; யேன—ஏனெனில்; அஹரத்——அவன், தானே மேற்கொண்டான்; ஜாயமான:— பிறந்தது; வேன—மன்னன் வேனன்; கல்மஷம்—எல்லா வகையான பாவங்களும்; உல்பணம்—மிகவும் அஞ்சத்தக்க.

அவன் (நிஷாதன்) பிறந்த பிறகு மன்னன் வேனன் செய்த அனைத்துப் பாவங்களின் பலன்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான். அதனால் இந்நைஷாதர்களின் குலத்தினர் எப்போதும் பாவச் செயல்களான திருடுதல், கொள்ளையடித்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்றவற்றிலேயே ஈடுபட்டிருந்தனர். அதனால் அவர்கள் காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் மட்டுமே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “மன்னன் வேனனின் சரிதம்” எனும் தலைப்பை கொண்ட பதினான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare