அத்தியாயம் – 13
துருவ மகாராஜனின் வம்சாவளி
பதம் 4.13.1 : சௌனக முனிவரின் தலைமையின் கீழுள்ள அனைத்து முனிவர்களிடமும் சூத கோஸ்வாமி தொடர்ந்து கூறலானார். மைத்ரேய முனிவர் பகவான் விஷ்ணுவின் உறைவிடத்தை துருவர் அடைந்தார் என்று கூறியவுடன் விதுரர் பக்தியின் உணர்ச்சிப் பெருக்கினால் மைத்ரேயரிடம் பின்வருவனவற்றைக் கேட்கலானார்.
பதம் 4.13.2 : விதுரர் மைத்ரேயரிடம் வினவினார்: ஓ பக்தர்களிற் சிறந்தோரே, பிரசேதர்கள் என்பவர் யாவர்? அவர்கள் எக்குலத்தைச் சேர்ந்தவர்கள்? யாருடைய மைந்தர்கள், மேலும் அவர்கள் சிறந்த வேள்விகளை எங்கு நிறைவேற்றினார்கள்.
பதம் 4.13.3 : விதுரர் தொடர்ந்து கூறினார்: முனிபுங்கவர்கள் அனைவரினும் நாரத முனிவரே மிகவும் சிறந்தவர் என்பதை நான் நன்கறிவேன். பக்தித் தொண்டிற்கான விதிகளைக் கூறும் “பாஞ்சராத்ரிகம்” என்னும் நூலை யாத்தவர் அவரே. மேலும் அவர் முழுமுதற் கடவுளை நேரில் கண்ட பாக்கியசாலியும் ஆவார்.
பதம் 4.13.4 : அனைத்துப் பிரசேதர்களும், முழுமுதற் கடவுளின் திருப்திக்காக, சமயச் சடங்குகளையும், வேள்விகளையும் செய்து அவரை வழிபட்டுக் கொண்டிருந்தபோது நாரதர் துருவ மன்னரின் உன்னதச் செயல்களை விளக்கிக் கூறினார்.
பதம் 4.13.5 : போற்றுவதற்குரிய அந்தணரே, அவ்வேள்விச் சாலையில் நாரத முனிவர் முழுமுதற் கடவுளை எங்ஙனம் போற்றினார், அவரது எத்திருவிளையாடல்களை அவர் விளக்கிக் கூறினார்? அவற்றை அறிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமுடையோனாயிருக்கிறேன். பகவானின் பெருமைகளை எனக்கு முழுவதும் விளக்கி அருள்வீராக
பதம் 4.13.6 : மாமுனிவர் மைத்ரேயர் விடையிறுத்தார்: அன்பார்ந்த விதுரனே, துருவர் வனம் சென்றபிறகு அவர் மைந்தன் உத்கலன் தன் தந்தையின் அரியாசனத்தில் அமர்வதற்கு மறுத்துவிட்டான். அதாவது பூவுலகில் அனைத்து நிலப் பகுதிகளையும் ஆள்வதற்குரிய ஆட்சிக் கட்டில் அது.
பதம் 4.13.7 : உத்கலன் பிறந்ததிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்றவராகவே விளங்கினார். அனைத்துயிர்களையும் தாங்குபவர் பரமாத்மாவே என்றும், அனைத்து உயிர்களின் இதயத்தினுள்ளும் தங்குபவரும் பரமாத்மாவே என்றும், அவர் நன்கு உணர்ந்திருந்ததினால் அவர் அனைவரையும் சமமாகவே பார்த்தார்.
பதங்கள் 4.13.8 – 4.13.9 : பரப்பிரம்மத்தைப் பற்றிய அறிவு விருத்தியினால் அவர் ஏற்கெனவே உடலின் கட்டிலிருந்து விடுதலை பெற்றிருந்தார். இவ்விடுதலையே நிர்வாணம் எனப்படுகிறது. அவர் உன்னதமான ஆனந்த நிலையிலேயே இருந்தார். மேலும் மேலும் விரிவடையும் இவ்வானந்த வாழ்விலேயே அவர் எப்போதும் தொடர்ந்து இருந்து வந்தார். தொடர்ந்து செய்து வந்த பக்தியோகப் பயிற்சினாலேயே இது அவருக்குச் சாத்தியமாயிற்று. இப்பக்தி யோகத்தை நெருப்புடன் ஒப்பிடுவர். ஏனெனில் அது அசுத்தமயமான பொருட்கள் அனைத்தையும் எரித்து சுத்தம் செய்கிறது. அவர் எப்போதும் தனது உண்மையான தன்னுணர்வு நிலையிலேயே வாழ்ந்தார். அவரால் பரமபுருஷ பகவானைத் தவிர வேறெதனையும் காணமுடியவில்லை. பக்தித் தொண்டை மட்டுமே அவர் எப்போதும் செய்து வந்தார்.
பதம் 4.13.10 : மூடர்களின் கண்களுக்கு, சக்தியற்றவராகவும், குருடராகவும், ஊமையாகவும், செவிடராகவும், மற்றும் பித்துப் பிடித்தவராகவும் உத்கலன் தோன்றலாம். ஆனால் உண்மை அதுவன்று. அவர் நீறுபூத்த நெருப்பாக வெளியே தீப்பிழம்பு தெரியாமல் உள்ளே கனன்று கொண்டிருந்தார்.
பதம் 4.13.11 : இக்காரணங்களினால் அக்குடும்பத்திலுள்ள பெரியோர்களும், அமைச்சர்களும் உத்கலனை புத்தியற்றவரென்றும், உண்மையில் உன்மத்தன் என்றும் முடிவு செய்தனர். அதனால் அவரது இளைய சகோதரனும் பிரமியின் புத்திரனுமான வத்ஸரன் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வுலகை ஆளும் மன்னரானார்.
பதம் 4.13.12 : சுவர்வீதி என்னும் அழகிய மனைவியினை அடைந்த மன்னன் வத்ஸரன் அவள் மீது மிகவும் அன்புடையவனாக இருந்தான். அவள் ஆறு ஆண்குழந்தைகளை ஈன்றெடுத்தாள். அவர்கள் பெயர்கள் வருமாறு புஷ்பாரணன், திக்மகேது, இஷன், ஊர்ஜன், வசு மற்றும் ஜயன்.
பதம் 4.13.13 : புஷ்பராணனுக்கு பிரபா மற்றும் தோஷா என்று இரு மனைவியர். பிராதர், மத்யந்தினன் மற்றும் சாயன் என்னும் மூன்று புதல்வர்களை பிரபா ஈன்றெடுத்தாள்.
பதம் 4.13.14 : தோஷாவிற்கு மூன்று புதல்வர்கள் பிரதோஷன், நிசிதன், மற்றும் வியுஷ்டன். வியுஷ்டனின் மனைவி புஷ்கரணீ என்பவளாவார். அவள் சர்வதேஜன் என்ற ஒரு சக்தி மிக்க மைந்தனை ஈன்றெடுத்தாள்.
பதங்கள் 4.13.15 – 4.13.16 : சர்வதேஜனின் மனைவி ஆகூதி என்பவள் சாட்சூசன் என்னும் புதல்வனை ஈன்றெடுத்தாள். அவர் மன்வந்தரத்தின் இறுதியில் ஆறாவது மனுவாக ஆனார். சாட்சூசன் மனுவின் மனைவியான நட்வலா என்பவள் குற்றமற்ற பின்வரும் ஆண்மக்களை ஈன்றெடுத்தாள்; புரு, ருத்ஸன், திரிதன், தியும்நன், சத்யவான், உருதன், விரதன், அக்கினிஷ்டோமன், அதீரத்திரன்,பிரத்யும்நன், சிபி மற்றும் உல்முகன்.
பதம் 4.13.17 : பன்னிரெண்டு புதல்வர்களில், உல்முகன் தன் மனைவி புஷ்கரிணியிடத்தில் அறுவரைப் பெற்றெடுத்தான். அவர்கள் அனைவரும் உத்தம புத்திரர்கள். அவர்களின் பெயர்கள், அங்கன், சுமநன், கியாதி, கிரது, அங்கிரான், மற்றும் கயன் என்பவையாகும்.
பதம் 4.13.18 : அங்கனின் மனைவி சுனீதா வேனன் என்னும் தீய மகனை ஈன்றெடுத்தாள். ராஜரிஷியான அங்கன் வேனனின் தவறான நடத்தையினால், மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி நாட்டையும், வீட்டையும் துறந்து, காட்டிற்குச் சென்றுவிட்டார்.
பதங்கள் 4.13.19 – 4.13.20 : அன்பார்ந்த விதுரனே! மாமுனிவர்களின் சாபமானது வெல்வதற்கரிய வஜ்ராயுதம் போல் வலிமைமிக்கதாகும். அவர்கள் ஆத்திரத்தினால் மன்னன் வேதனைச் சபிக்க அவன் இறந்து போனான். அவனது மறைவுக்குப் பிறகு அரசர் யாரும் இல்லாததினால் துஷ்டர்களும், திருடர்களும் பெருகினர், அரசுமுறை தவறியது, அதனால் குடிமக்கள் அனைவரும் மிகுந்த துயருற்றனர். இதனைக் கண்ட மாமுனிவர்கள் மன்னன் வேனனின் வலது கரத்தை தயிர்மத்தைப்போல் எடுத்து அதனைக் கடைந்தனர். அதன் விளைவாக பகவான் விஷ்ணு தனது இயல்புகள் பொருந்திய மன்னர் பிருதுவாக, இவ்வுலகின் ஆதிப்பேரரசராக அவதரித்தார்.
பதம் 4.13.21 : விதுரர் மைத்ரேய முனிவரிடம் வினவினார்: மரியாதைக்குரிய அந்தணரே, மன்னர் அங்கன் மிகவும் நேர்மையானவர். அவர் நன்னடத்தையும், அறச்சான்றோராகவும், அந்தணக் கலாச்சாரத்தில் அன்புடையவராகவும் விளங்கினார். அப்படிப்பட்ட மகாத்மாவிற்கு எவ்வாறு வேனனைப் போன்று ஒரு தீய புத்திரன் பிறந்தான்? அதனால் தானே அவர் வெறுப்புற்றுத் தன் நாட்டைத் துறந்து ஏகினார்?
பதம் 4.13.22 : விதுரர் மேலும் கேட்டார்: சமய அறநெறிகளை நன்கு கற்றுத் துறைபோகிய மாமுனிவர்கள் கையில் பிரம்ம தண்டத்தை வைத்திருக்கும் மன்னன் வேனனைத் தண்டிக்க விரும்பலாமா? அவனுக்கு மிகக் கொடிய தண்டனை (பிரம்ம சாபம் அளித்தது சரிதானா).
பதம் 4.13.23 : ஒரு அரசன் சில சமயம் மிகப் பெரிய பாசம் செய்தவனாகத் தோன்றிய போதிலும், அந்நாட்டுக் குடிமக்களின் கடமை, அந்த அரசனுக்கு ஒரு போதும் அவமரியாதை செய்யாதிருத்தலாகும். அவனது பேராண்மையின் காரணமாக ஓர் அரசன் குடிமக்களுக்குப் பிற அரசர்களைக் காட்டிலும் மரியாதைக்குரியவனாவான்.
பதம் 4.13.24 : மைத்ரேயரிடம் விதுரர் வேண்டிக் கொண்டார்: போற்றுதலுக்குரிய அந்தணரே! நீர் எல்லாம் அறிந்தவர். ஏன் நடந்ததையும், நடைபெறப் போவதையும் கூட நன்கறிந்தவர். ஆகையினால் மன்னன் வேனனின் செயல்கள் அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன். நான் உமது நம்பிக்கைக்குரிய பக்தன் ஆதலினால் அருள் கூர்ந்து எனக்கவற்றை விளக்குவீராக.
பதம் 4.13.25 : ஸ்ரீ மைத்ரேயர் பதிலிறுத்தார்: ஒருமுறை மாமன்னர் அங்கன் மிகப்பெரிய அசுவமேதயாகம் ஒன்றை நடத்தினார். தேவர்களை அவ்வேள்வியில் எவ்வாறு கலந்து கொள்ளச் செய்வது என்பதனை நன்கறிந்த அந்தணர்கள் அனைவரும் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் எத்தனையோ முயற்சிகள் செய்தும் தேவர்கள் அவ்வேள்வியில் பங்கு கொள்ளவோ அல்லது தோன்றவோ இல்லை.
பதம் 4.13.26 : வேள்வியை நடத்திக் கொண்டிருந்த புரோகிதர்கள் மன்னர் அங்கனிடம்: “ஓ, அரசனே, சுத்தம் செய்யப்பட்ட வெண்ணெயினை வேள்வித் தீயில் அர்ப்பணித்தும் இதுபோன்ற பல முயற்சிகள் செய்தும், தேவர்கள் ஏனோ அவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்” என்று கூறினர்.
பதம் 4.13.27 : ஓ, அரசனே வேள்விக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் உன்னால் நம்பிக்கையுடனும், கவனத்துடனும் சேகரிக்கப்பட்டிருப்பதோடு அனைத்தும் தூய்மையானவையுங்கூட, உச்சாடனம் செய்த மந்திரங்களும் சக்தியில் குறைந்தவையன்று. ஏனெனில் இங்கு குழுமியிருக்கும் அந்தணர்களும், புரோகிதர்களும் அதில் மிகவும் வன்மை பெற்றவர்களாவர். மேலும் அவர்கள் அனைத்தையும் மிகவும் ஒழுங்காகவே நிறைவேற்றுகின்றனர்.
பதம் 4.13.28 : அன்பிற்குரிய அரசனே, தேவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது அவமதிக்கப்பட்டதாகவோ கருதுவதற்கு எந்தவிதக் காரணத்தையும் நாங்கள் காணவில்லை. ஆயினும் வேள்விக்குச் சாட்சியாக விளங்க வேண்டிய தேவர்கள் ஏனோ தங்கள் பாகங்களைப் பெறுவதற்கு மறுக்கின்றனர். இது ஏன் என்று எங்களுக்கும் தெரியவில்லை.
பதம் 4.13.29 : மைத்ரேயர் கூறினார், புரோகிதர்களின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர் அங்கன் மிகுந்த மனத் துயர் கொண்டார். அவர் தன் அமைதியைக் கலைத்து புரோகிதர்களிடம் அனுமதி பெற்று வேள்விச் சாலையில் குழுமியிருந்த அனைத்து புரோகிதர்களிடமும் கேட்கலானார்.
பதம் 4.13.30 : புரோகிதர்க்குரிய மரியாதையுடன் மன்னர் அங்கன் கேட்கலானார்: “மரியாதைக்குரிய அந்தணர்களே! நான் என்ன குற்றம் செய்தேன் என்பதை அருள் கூர்ந்து உரைப்பீராக. முறையாக அழைத்தும் கூட தேவர்கள் இவ்வேள்வியில் கலந்து கொள்ளவோ அல்லது அவர்கள் அவிர்பாகத்தினைப் பெறவோ மறுத்துள்ளனர்” என்று.
பதம் 4.13.31 : தலைமைப் புரோகிதர் கூறினார்: “ஓ, அரசனே, இப்பிறப்பில் நீ மனதினால் கூட எந்தவிதப் பாவமும் செய்ததில்லை, ஆகையினால் எந்நிலையிலும் நீ குற்றவாளி இல்லை. ஆனாலும் உனது சென்ற பிறவியில் நீ பாவம் செய்திருப்பாய் என்று நாங்கள் கருதுகிறோம். அதன் காரணமாகவே உன்னிடம் இத்தனை நற்குணங்கள் இருந்தும் உனக்கு ஒரு புத்திரன் இல்லாது போயிற்று.” என்றார்.
பதம் 4.13.32 : ஓ, மன்னனே அனைத்து மங்கலங்களும் உனக்கு உண்டாவதாக. உனக்கு புதல்வன் இல்லை. ஆகவே நீ பரமபுருஷ பகவானை, ஒரு மைந்தன் அருளுமாறு துதித்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் வேள்விகளின் நாயகனாக முழுமுதற் கடவுள் உனது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார்.
பதம் 4.13.33 : அனைத்து வேள்விகளுக்கும் நாயகனாக விளங்கும் முழுமுதற் கடவுளான ஹரி, உனக்கு ஒரு புதல்வன் வேண்டும் என்பதற்காக அழைக்கப்பட்டாரென்றால், அனைத்துத் தேவர்களும் அவருடன் சேர்ந்து வந்து வேள்வியில் அவர்க்குரிய அவிர்பாகத்தினைப் பெற்றுக் கொள்வர்.
பதம் 4.13.34 : வேள்விகளைச் செய்பவர் (கர்ம காண்டச் செயல்களின் கீழ்) பகவானை எந்நோக்கத்திற்காக வழிபடுகிறாரோ அந்நோக்கம் நிறைவேறப் பெறுவார்.
பதம் 4.13.35 : மன்னர் அங்கன் ஒரு மைந்தனைப் பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் அனைத்து உயிர்களின் உள்ளங்களிலும் வீற்றிருக்கும் பகவான் விஷ்ணுவுக்கு வேள்விப் பொருள்களை நிவேதனம் செய்வது என்று தீர்மானித்தார்.
பதம் 4.13.36 : வேள்வித்தீயில் நிவேதனங்கள் போடப்பெற்றவுடன் யாக குண்டத்திலிருந்து ஒருவன் வெண்ணிற ஆடையணிந்து கழுத்தில் பொன்னாலான மாலை மின்னத் தோன்றினான். அவன் தன் கைகளில் பாயசம் நிரம்பிய பொற்கலம் ஒன்று வைத்திருந்தான்.
பதம் 4.13.37 : தாராளமான மனமுடையவராக இருந்த மன்னர், புரோகிதர்களிடம் அனுமதி பெற்று, தனது கரங்களில் ஏந்தியிருந்த பாயசக்கலசத்தை முகர்ந்து பார்த்துப் பின்னர் அதிலிருந்த பாயசத்தின் ஒரு பகுதியைத் தனது மனைவிக்கு வழங்கினார்.
பதம் 4.13.38 : அரசிக்கு குழந்தைப் பேறு இல்லாமையால் அப்பேற்றினைக் கொடுக்கும் ஆற்றல் மிக்க அப்பாயசத்தினை உண்டபிறகு அவள் தன் கணவனின் மூலம் கர்ப்பவதியானாள். மேலும் உரிய காலத்தில் ஓர் ஆண்மகவினையும் ஈன்றெடுத்தாள்.
பதம் 4.13.39 : அக்குழந்தை சமயத்திற்குப் புறம்பான அரச பரம்பரையின் இயல்பினை உடையதாயிருந்தது. அவன் தாத்தா மரணத்தின் உருவமாகத் திகழ்ந்தார். அவரையே இவனும் பின்பற்றி வளர்ந்தான் அதனால் அவன் முற்றிலும் சமயத்திற்குப் புறம்பான ஒரு மனிதனாக மாறினான்.
பதம் 4.13.40 : தனது வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு அத்துஷ்டச் சிறுவன் காட்டிற்கு ஓயாது சென்று தேவையின்றி மான் போன்ற இயலாத விலங்குகளைக் கொல்வான், அதனால் அவன் வருதலைக் காணும் மக்கள் உடனே “ஐயோ கொடிய வேனன் வருகிறான்! கொடிய வேனன் வருகிறான்!” என்று அலறுவர்.
பதம் 4.13.41 : அவன் தன்னொத்த சிறுவர்களுடன் விளையாடும் பொழுது அவர்களையெல்லாம் பலியிடுவதற்கான மிருகங்களாகவே கருதி சிறிதும் கருணையின்றி அவர்களைக் கொன்றுவிடுவான்.
பதம் 4.13.42 : தன் மைந்தன் வேனனின் கருணையில்லாக் கொடூர நடத்தையினைக் கண்ட மன்னர் அங்கன் அவனைத் திருத்துவதற்காக அவனுக்குப் பல்வேறு வகையான தண்டனைகளைக் கொடுத்தார். ஆயினும் அவனை சீரிய பாதைக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. எனவே அவர் மிகவும் துயருற்றார்.
பதம் 4.13.43 : மன்னர் தனக்குள் நினைத்தார்: குழந்தையில்லாதவர்கள் உண்மையில் பேறு பெற்றவர். அவர்கள் தமது முற்பிறப்பில் பகவானை வழிபட்டிருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் இப்பிறப்பில் ஒரு தீய மைந்தனைப் பெற்று அவனால் ஏற்படும் தாங்கவொண்ணாத் துன்பங்களை அடையாதிருக்கின்றனர் போலும்.
பதம் 4.13.44 : ஒரு பாவம் நிறைந்த மைந்தனால் அவன் தந்தையின் புகழ் மறைகிறது. அவனது தீய செயல்கள் அவன் குடும்பத்தினரையும் தீமையில் ஆழ்த்தி ஒருவருக்கொருவர் பூசலிட்டு அவர்களை முடிவற்றக் கவலைக்கு ஆளாக்கியிருக்கிறது.
பதம் 4.13.45 : கூர்ந்த மதியும், நற்குணம் உடைய யார்தான் இதுபோன்ற பயனற்ற மைந்தனை விரும்புவர்? இப்படிப்பட்ட மைந்தன் உயிர்களுக்கு மாயவலை போன்றவனாவான், அதனால் அவன் இல்லமே துன்பமயமாகிறது.
பதம் 4.13.46 : பின்னரும் மன்னர் நினைத்தார்: நற்குணமுள்ள மைந்தனைக் காட்டிலும் தீய குணமுற்றவன் நல்லவன். ஏனென்றால், நன்மைந்தன் வீட்டின் மீது பற்றினை அதிகரிக்கச் செய்வான். ஆனால் கெட்டவனோ அவ்வாறு செய்வதில்லை. மேலும் தீய மைந்தன் வீட்டை நரகமாகச் செய்வதினால் நல்லவன் இயற்கையிலேயே மிக எளிதில் தன் குடும்பத்தின் மீதுள்ள பற்றை விட்டுவிடுகிறான்.
பதம் 4.13.47 : இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த மன்னர் அங்கன் இரவில் துயில் கொள்ளாது தவித்தார். இல்லற வாழ்க்கை அவருக்கு முற்றிலும் பயனற்றதாயிற்று. நள்ளிரவில் தனது படுக்கையிலிருந்து எழுந்த அவர், தன்னருகில் ஆழ்ந்து துயில் கொண்டிருந்த வேனனின் அன்னையை அவரது மனைவி விட்டு நீங்கினார். அவரது நாட்டின் வளம் போன்றவற்றின் மீதிருந்த மோகமனைத்தையும் விட்டொழித்து யாரும் அறியாது தனது அரண்மனை, செல்வம் ஆகிய அனைத்தும் துறந்து காட்டை நோக்கிப் பயணமானார்.
பதம் 4.13.48 : மன்னர் தனது அரண்மனையை விட்டு வெளியேறியதைக் கேள்விப்பட்ட குடிமக்கள், புரோகிதர்கள், அமைச்சர்கள், நண்பர்கள் என்று அனைவரும் மிகுந்த துயருற்றனர். அவர்கள், அனுபவமற்ற யோகிகள் தன்னுள் இருக்கும் பரமாத்மாவைத் தேடியது போல் இப்பூவுலகம் முழுவதும் மன்னரைத் தேடினர்.
பதம் 4.13.49 : மன்னரை எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்த குடிமக்கள் அவரைப்பற்றிய எந்தவித அடையாளமும் கிடைக்காததினால் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாயினர். மன்னரைக் காணாது குடிமக்கள் வருத்தமுற்றுக் கூடியிருந்த முனிவர்களிடம் வந்தனர். கண்களில் நீர் வழிய அவர்கள் முனிவர்களை வணங்கி, மன்னரை எல்லா இடங்களிலும் தேடியும் அவரை எங்கேயும் காண முடியவில்லை என்ற விபரத்தைக் கூறினர்