அத்தியாயம் – 11
துருவ மகாராஜனுக்கு சுயம்புவ மனுவின் அறிவுரை
பதம் 4.11.1 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: மகாமுனிவர்களின் வார்த்தைகளினால் உற்சாகமடைந்து துருவ மன்னர் தண்ணீரைத் தொட்டு ஆசமனம் செய்தார். பிறகு பகவான் நாராயணரால் உருவாக்கப்பட்ட ஓர் அம்பை தன் வில்லில் பூட்டி நாணேற்றினார்.
பதம் 4.11.2 : துருவமன்னர் நாராயணாஸ்திரத்தைத் தனது வில்லில் பொருத்திய உடனேயே யக்ஷர்களால் தோற்றுவிக்கப்பட்டிருந்த மாயதந்திரங் காட்சிகள் அனைத்தும், ஆத்மாவை முற்றிலும் உணர்ந்து கொண்டவுடன் ஒருவனது உலகியல் இன்ப துன்பங்கள் எல்லாம் எவ்வாறு அவனை விட்டு நீங்குகிறதோ அதுபோன்று நீங்கின.
பதம் 4.11.3 : தங்கத்தினால் ஆனதும் அன்னத்தின் தூவிகளைப் போன்ற இறகினையுடையதும் ஆன நாராயண ரிஷியினால் அளிக்கப்பட்ட அம்புகளை துருவ மன்னர் தன் வில்லில் பூட்டி நாணேற்றி எய்தார். அவை மயில்கள் வனத்தினுள் பேரோசை எழுப்பிக் கொண்டு புகுவன போல் பகைவர் கூட்டத்தினுள் புகுந்தன.
பதம் 4.11.4 : கூரிய முனையுடைய அவ்வம்புகள் எதிரி வீரர்களைக் கலக்கமடையவும் உணர்விழக்கவும் செய்தன. இருந்தும் யுத்தகளத்தில் இருந்த சில யக்ஷர்கள் மிகுந்த ஆத்திரத்துடன் பொங்கி எழுந்து தமது ஆயுதங்களினால் துருவ மன்னரை தாக்கத் தொடங்கினர். கருடனைக் கண்டு சீறும் நாகங்கள் தங்கள் படங்களை விரித்துக்கொண்டு பாய்ந்து வருவனபோல், துருவ மன்னரை வெல்லவேண்டும் என்பதற்காக அனைத்து யக்ஷர்களும் தங்கள் ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு ஓடிவந்தனர்.
பதம் 4.11.5 : முன்னேறி வரும் எதிரிகளைப் பார்த்த துருவ மன்னர் தனது அம்புகளினால் அவர்களைத் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்தார். அவர்களது கரங்களையும், உடல்களையும், கால்களையும், வயிறுகளையும் தனித் தனியே வெட்டி எறிந்து அந்த யக்ஷர்களை, தமது சுக்கிலத்தை எப்போதும் வெளியேற்றாத பிரம்மச்சாரிகள் மட்டுமே அடையக்கூடிய சூரிய மண்டலத்திற்கும் மேலாக உள்ள உலகங்களுக்கு அனுப்பினார்.
பதம் 4.11.6 : துருவ மன்னனின் தாத்தாவான சுயாம்புவ மனு உண்மையில் குற்றமிழைக்காத யக்ஷர்களும் துருவ மகாராஜாவினால் கொல்லப்படுதல் கண்டு அவரது மிகுந்த கருணையினால் துருவருக்கு அறிவுரை வழங்குவதற்காகச் சகமுனிவர்களுடன் அவரிடம் வந்தார்.
பதம் 4.11.7 : பகவான் மனு கூறினார்: அன்பு புத்திரனே! அருள் கூர்ந்து நிறுத்துவாயாக. தேவையற்ற ஆத்திரம் நன்மை செய்யாது நரகத்திற்கு வழிகாட்டும். இப்போது நீ குற்றமற்ற பிற யக்ஷர்களைக் கொல்வதின் மூலம் வரம்பு மீறியவனாகிறாய்.
பதம் 4.11.8 : என் அன்புக் குழந்தையே, பாவமற்ற யக்ஷர்களை அழிக்கின்ற உனது செயலானது சமயச்சான்றோர்களினால் அங்கீகரிக்கப்பட்ட தன்று. மேலும் இது சமயம் மற்றும் சமயமல்லாத நெறிகளை நன்கறிந்த நம் குடும்பத்திற்குப் பொருந்தாததுவுமாகும்.
பதம் 4.11.9 : எனதன்புக் குழந்தையே, நீ உனது சகோதரனிடம் மிகுந்த பாசமுடையவன் என்பதும் யக்ஷர்களினால் அவன் கொல்லப்பட்டது உனக்கு மிகுந்த சோகத்தை தந்ததும் உண்மைதான். ஆயினும் ஒரு யக்ஷனின் குற்றத்திற்காக, அறியாத பல யக்ஷர்களை நீ கொன்றிருக்கிறாய் என்பதை எண்ணிப்பார்ப்பாயாக.
பதம் 4.11.10 : ஒருவன் உடலை ஆத்மாவாகக் கருதி விலங்குகளைப் போன்று பிற உடல்களை அழித்தல் கூடாது. இது முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டின் பாதையில் பயணிக்கும் சமயச் சான்றோர்களினால் குறிப்பாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது.
பதம் 4.11.11 : வைகுண்ட லோகத்திலுள்ள ஹரியின் பரம பதத்தினை அடைவது மிகவும் கடினமானதொன்றாகும். ஆயினும் நீ அவரை அனைத்து உயிர்களின் பரம இருப்பிடமாக எண்ணி வழிபடுகின்ற காரணத்தினால் இங்கே செல்வதற்கு ஏற்கெனவே உறுதி செய்யப் பெற்றிருக்கும் பாக்கியவானாவாய்.
பதம் 4.11.12 : நீ பகவானின் தூய பக்தன் என்ற காரணத்தினால் பகவான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்றார். மேலும் நீ அவரின் அனைத்து நம்பிக்கைக்குரிய பக்தர்களினாலும் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றாய். உனது வாழ்க்கையோ எல்லோராலும் பின்பற்றப்படுவதற்குரிய ஒன்றாகும். நான் ஆச்சரியப்படுகிறேன் நீ ஏன் இத்துணை வெறுக்கத்தக்கச் செயல்கள் செய்தாய்? என்று.
பதம் 4.11.13 : பகவான் தனது பக்தன் பிற உயிர்களிடத்து பொறுமை, கருணை, நட்பு மற்றும் சமத்துவமாக நடந்து கொள்கிறான் என்றால் மிகுந்த திருப்தியடைகிறார்.
பதம் 4.11.14 : முழுமுதற் கடவுளைத் தனது வாழ்நாளில் உண்மையாகத் திருப்திப்படுத்துபவன் பூத மற்றும் நுண்ணிய உலகியல் நிலைகளில் இருந்து விடுதலை பெறுகிறான். இவ்வாறு அவன் இயற்கையின் குணங்களில் இருந்து விடுதலையடையும் பொழுது அவன் அளவற்ற ஆன்மீக இன்பத்தினைப் பெறுகிறான்.
பதம் 4.11.15 : பஞ்ச பூதங்களினால் உலகின் படைப்பு ஆரம்பமாகிறது. இவை மூலமே ஆண், பெண் என்ற உடல்கள் உள்ளிட்ட அனைத்துமே படைக்கப்படுகின்றன. ஆண், பெண், இருவரிடையே உள்ள பாலுறவு வாழ்க்கையினால் உலகானது மேலும் விரிவடைகிறது.
பதம் 4.11.16 : மனு தொடர்ந்து கூறலுற்றார்: அன்பார்ந்த துருவ மன்னனே, முழுமுதற் கடவுளின் மாயையாகிய உலகச் சக்தியினாலும் மற்றும் ஜட இயற்கையின் முக்குணங்களின் தொடர்பினாலும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் நடைபெறுகின்றன.
பதம் 4.11.17 : முழுமுதற் கடவுள் இயற்கையின் குணங்களினால் மாசடையாதவராக விளங்குகிறார். உலகப் படைப்பைப் பொருத்தமட்டிலும் அவர் நிமித்தக்காரணராகவே இருக்கின்றார். அவர் தன் தூண்டுதலை அளிக்கும் பொழுது மேலும் பல காரணங்களும், விளைவுகளும் உற்பத்தியாகின்றன. அதனால் இவ்வுலகம் முழுவதும் காந்தத்தின் ஒட்டு மொத்த சக்தியினால் இரும்பு நகர்வதைப் போன்று நகர்கிறது.
பதம் 4.11.18 : முழுமுதற் கடவுள் தனது நினைத்தற்கரிய காலம் என்னும் பரம சக்தியால் ஜட இயற்கையின் முக்குணங்களின் தொடர்பிற்குக் காரணமாக இருக்கின்றார். அதனால் பல்வேறு சக்தியின் பல விகாரங்கள் வெளிப்படுகின்றன. அவர் செய்வது போல் தோன்றும். ஆனால் அவர் செய்பவரல்லர். அவர் கொல்வது போல் தோன்றும். ஆனால் அவர் கொல்பவரல்லர். எனவே அவரது நினைத்தற்கரிய சக்தியினாலேயே எல்லாம் நிகழ்கின்றனவென்று புரிந்து கொள்ளப்படுகிறது.
பதம் 4.11.19 : அன்புக் குழந்தை துருவனே, முழுமுதற் கடவுள் எப்போதும் இருக்கிறார், ஆனால் காலத்தின் வடிவில் அவரே அனைத்தையும் அழிக்கிறார். அனைத்திற்கும் அவரே தொடக்கமாக இருந்தும் அவருக்குத் தொடக்கமில்லை, அனைத்துக் காலத்தினால் தீர்ந்து போயினும் அவர் தீர்ந்துபோவதும் இல்லை. தந்தை என்னும் முகவரால் உயிர்கள் படைக்கப்படுகின்றன. மரணம் என்னும் முகவரால் மீண்டும் அழிக்கப்படுகின்றன. ஆயினும் அவர் பிறப்பு, இறப்புகளிலிருந்து நித்திய விடுதலை பெற்றவராகவே விளங்குகிறார்.
பதம் 4.11.20 : முழுமுதற் கடவுள் இந்த உலகில் அவரது நித்தியக்கால வடிவில் இருக்கின்றார். மேலும் அவர் எல்லோரிடத்தும் சமமானவராகவும் இருக்கின்றார். அவருக்கு நண்பர்களும் இல்லை; பகைவர்களும் இல்லை. காலத்தின் நீதிக்குட்பட்டு ஒவ்வொருவரும் தமது சொந்தக் கர்மவினை அல்லது பயன் தரும் செயல்களுக்கேற்ப இன்பங்களையோ அல்லது துன்பங்களையோ அனுபவிக்கின்றனர். காற்றடிக்கும் பொழுது தூசுகள் வானில் பறப்பதுபோல் ஒருவனது குறிப்பிட்ட கர்மவினைக்கேற்ப உலகில் அவன் இன்பமோ அல்லது துன்பமோ அடைகிறான்.
பதம் 4.11.21 : முழுமுதற் கடவுளான விஷ்ணு அனைத்துச் சக்திகளும் நிரம்பியவர். அவரே ஒருவனுக்கு அவன் பலன்தரும் செயல்களின் விளைவைப் பரிசாக அளிக்கின்றார். ஓர் உயிரின் வாழ்நாள் அதிகமாகவும், மற்றொரு உயிரின் வாழ்நாள் குறைவானதாக இருப்பினும் அவர் எப்போதும் உன்னத நிலையிலேயே இருக்கின்றார். அவரது வாழ்நாளில் கூடுதல் அல்லது குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
பதம் 4.11.22 : பல்வேறு வகையான வாழ்க்கை வேறுபாடுகள், அவர்களது இன்ப துன்பங்கள் போன்றவையெல்லாம் கர்ம வினையின் பலன்கள் என்று சிலரால் விளக்கப்படுகின்றன. சிலர் இது இயற்கையினாலென்றும், சிலர் காலத்தினாலென்றும், சிலர் விதியினாலென்றும், மேலும் சிலர் இது விருப்பத்தினால் ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
பதம் 4.11.23 : உண்மையே வடிவான இறைவன் குறையுடைய புலன் முயற்சியினாலும் நேரடியாகவும் அறியப்படக் கூடியவர் அன்று. உலகியல் ஆற்றலையொத்த பல்வேறு ஆற்றல்களின் நாயகராக அவரே விளங்குகிறார்; ஆகையினால் அவர் அனைத்துக் காரணங்களுக்கும் மூலகாரணமாக விளங்குவதினால் அவரை மனயூகங்களினால் ஒருவராலும் அறியமுடியாது என்பதே முடிந்த முடிவாகும்.
பதம் 4.11.24 : எனதன்புக் குழந்தையே! குபேரனின் சந்ததியினரான இந்த யக்ஷர்கள் உண்மையில் உனது சகோதரனைக் கொன்ற கொலையாளிகள் அல்லர்; உயிர்களின் பிறப்பு, இறப்புக்கு எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக விளங்கும் பரம்பொருளே மூல காரணமாக விளங்குகிறார்.
பதம் 4.11.25 : முழுமுதற் கடவுளே! இந்த உலகினைப் படைக்கவும், காக்கவும், உரிய காலத்தில் அழிக்கவும் செய்கிறார். ஆயினும் அவர் இச்செயல்களுக்கெல்லாம் உன்னதமானவராக விளங்குவதினால் அவர் இச்செயல்களினாலோ அல்லது இயற்கையின் குணங்களினாலோ வரும் ஆணவத்தினால் பாதிக்கப்படுவதே இல்லை.
பதம் 4.11.26 : முழுமுதற் கடவுளே அனைத்து உயிர்களிலும் பரமாத்மாவாக விளங்குகிறார். அவரே அனைவரையும் காப்பவராகவும், ஆட்டுவிப்பவராகவும் இருக்கின்றார்; அவரது புறச்சக்தியாகிய மாயை என்னும் செயல் முகவரால் அவர் எல்லோரையும் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறார்.
பதம் 4.11.27 : எனதன்புக் குழந்தை துருவனே, உலக வளர்ச்சியின் இறுதி லட்சியமாக விளங்கும் முழுமுதற் கடவுளை சரண் புகுவாயாக. முரட்டுக் காளையின் மூக்கில் மூக்கணாங் கயிறு போட்டு அதன் சொந்தக்காரன் அதனை அடக்குவது போல பிரம்மதேவன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்களும் அவரது கட்டுப்பாட்டின் கீழேயே செயல்படுகின்றனர்.
பதம் 4.11.28 : அன்புள்ள துருவனே, ஐந்து வயதிற்குள்ளாகவே உனது அன்னையின் சக கிழத்தியின் வார்த்தைகளினால் மனம் துன்புற்று உனது அன்னையின் பாதுகாப்பையும் உதறித் தள்ளிவிட்டு முழுமுதற் கடவுளை உணர்வதற்காக வனம் சென்று தவத்தில் ஈடுபட்டாய். அதன் விளைவாக மூன்று உலகங்களிலும் மிக உயர்ந்த நிலையினை நீ எய்தியிருக்கின்றாய்.
பதம் 4.11.29 : ஆகையினால் அன்புத் துருவனே! குற்றமற்ற பிரம்மமாக விளங்கும் இறைவனிடம் உனது கவனத்தைச் செலுத்துக. உனது உண்மை நிலையில் இருந்து கொண்டு முழுமுதற் கடவுளை எதிர் கொள்வாயாக. இவ்வாறு உனது தன்னுணர்வினால் இப்பரு உலகின் வேறுபாடுகள் அனைத்தும் மின்னி மறைவன என்று கண்டு கொள்வாய்.
பதம் 4.11.30 : இவ்வாறு உனது இயற்கை நிலையினை மீண்டும் எய்தி அனைத்துயிர்களிடத்தும் பரமாத்மாவாகவும், அனைத்து இன்பங்களின் சக்திமிக்க உறைவிடமாகவும் திகழும் இறைவனுக்குத் தொண்டு செய்வாயென்றால் மிகவிரைவில் நான், எனது, என்னும் மாயா உணர்வு உன்னிடமிருந்து ஒழியும்.
பதம் 4.11.31 : அன்பார்ந்த மன்னனே, நோய் தீர்க்கும் மருந்தாக விளங்கும் நான் சொன்ன கருத்துக்களைச் சிந்திப்பாயாக. சினம் ஒழி, ஆன்மீக உணர்வுப் பாதையில் முன்னேற விடாது தடுக்கும் மோசமான எதிரி இச்சினமேயாகும். உனக்கு அனைத்துச் சிறப்புகளும் உண்டாவதாக. எனது அறிவுரைகளைப் பின்பற்றுவாயாக.
பதம் 4.11.32 : உலகிலிருந்து விடுதலையடைய விரும்பும் ஒருவன் சினத்திற்கு அடிமையாதல் கூடாது. ஏனெனில் சினத்தினால் குழப்பமுற்றோன் பிறரின் அச்சத்திற்கு ஆதாரமாகிறான்.
பதம் 4.11.33 : அன்பார்ந்த துருவனே, உனது அன்புச் சகோதரனை யக்ஷர்கள் கொன்றனர் என்று கருதி நீ அவர்களில் பலரை அழித்துவிட்டாய். உனது இச்செயலின் மூலம் நீ தேவர்களின் பொருளாளரும் சிவபெருமானின் சகோதரருமான குபேரனின் கோபத்தைத் தூண்டியிருக்கிறாய். உனது செயல்களின் மூலம் நீ சிவபெருமானையும், குபேரனையும் அவமதிக்கிறாய் என்பதைப் புரிந்து கொள்வாயாக.
பதம் 4.11.34 : இக்காரணத்தினால் எனதன்புக் குழந்தையே, உடனடியாக உனது கனிவான வார்த்தைகளினாலும், வழிபாட்டினாலும் குபேரனை அமைதிப்படுத்துவாயாக. அதனால் அவரது மனக் கொதிப்பு நமது குடும்பத்தைப் பாதிக்காதிருக்கலாம்.
பதம் 4.11.35 : இவ்வாறு சுயாம்புவ மனு தனது பேரனான துருவனுக்கு அறிவுரைகள் வழங்கிய பின்னர் அவரால் மரியாதை செலுத்தப்பட்டார். அதன் பிறகு பகவான் மனுவும், அவருடன் வந்த மாமுனிவர்களும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.