அத்தியாயம் – 6
விஸ்வ ரூபத்தின் சிருஷ்டி
பதம் 3.6.1
ருஷிர் உவாச
இதி தாஸாம் ஸ்வ-சக்தீனாம் ஸதீனாம் அஸமேத்ய ஸ:
ப்ரஸுப்த-லோக-தந்த்ராணாம் நிசாம்ய கதிம் ஈஸ்வர:

ருஷி: உவாச-மைத்ரேய ரிஷி கூறினார்; இதி-இவ்வாறு; தாஸாம் -அவற்றின்; ஸ்வ சக்தீனாம் சுய சக்தி; ஸதீனாம்—அவ்வாறுள்ள; அஸமேத்ய —சேர்க்கை இல்லாத; ஸ:-அவர் (பகவான்); ப்ரஸுப்த— முடங்கியுள்ள; லோக – தந்த்ராணாம்—பிரபஞ்ச படைப்புக்களில்; நிசாம்ப -கேட்டு; கதிம்-முன்னேற்றம்; ஈஸ்வர:-பகவான்.

மைத்ரேய ரிஷி கூறினார்: இவ்வாறாக, மஹத்- தத்வத்தைப் போன்ற பகவானுடைய சக்திகளின் சேர்க்கையின்மையால், படைப்புச் செயல்களின் முன்னேற்றம் தடைப்பட்டிருப்பதைப் பற்றி பகவான் கேள்விப்பட்டார்.

பதம் 3.6.2
கால-ஸஞ்ஞாம் ததா தேவீம் பிப்ரச்-சக்திம் உருக்ரம:
த்ரயோவிம்சதி தத்வானாம் கணம் யுகபத் ஆவிசத்

கால ஸஞ்ஞாம் – காளி எனப்படும்; ததா-அப்பொழுது; தேவிம் – தேவதை; பிப்ரத்- அழிக்கக்கூடிய; சக்திம் – சக்தி: உருக்ரம:-பரம சக்தி படைத்தவர்; த்ரய- விம்சதி-இருபத்து மூன்று; தத்வானாம் – மூலப் பொருட்களின் ; கணம் – அவையனைத்தும்: யுகபத் – ஒரே சமயத்தில் ; ஆவிசத்-புகுந்தன.

பரமசக்தி படைத்தவரானபகவான்,பிறகு, எல்லா மூலப்பொருட்களையும் கலக்கும் தமது புறச் சக்தியான காளி தேவியுடன், இருபத்து மூன்று மூலப் பொருட்களுக்குள் புகுந்தார்.

பதம் 3.6.3
ஸோ ‘நுப்ரவிஷ்டோ பகவாம்ஸ் சேஷ்டாரூபேண தம் கணம்
பின்னம் ஸம்யோஜயாம் ஆஸ ஸுப்தம் கர்ம ப்ரபோதயன்

ஸ:—அந்த; அளப்ரவிஷ்ட :-இவ்வாறாக பிறகு நுழைந்து; பகவான்-பரமபுருஷர்; சேஷ்ட-ரூபேண—அவரது பிரதிநிதியாக உள்ள காளி; தம்—அவர்களை; கணம்—தேவர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும்; பின்னம் – தனித்தனியாக; ஸம்யோஜயாம் ஆஸ – செயலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; ஸுப்தம்—உறங்கும்; கர்ம – செயல் ப்ரபோதயன் – அறிவு புகட்டி,

இவ்வாறாக, பரமபுருஷர் தமது சக்தியின் மூலமாக மூலப்பொருட்களுக்குள் புகுந்தபொழுது, உறங்கி எழுபவன் மீண்டும் தனது செயலில் ஈடுபடுவதைப் போலவே, அனைத்து ஜீவராசிகளும் வெவ்வேறு செயல்களைச் செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்.

பதம் 3.6.4
ப்ரபுத்த-கர்மா-தைவேன த்ரயோவிம்சதிகோ கண:
ப்ரேரிதோ ‘ஜனயத் ஸ்வாபிர் மாத்ராபிர் அதிபூருஷம்

ப்ரபுத்த-விழிப்படைந்த; கர்மா—செயல்கள்; தைவேன—பகவானின் விருப்பத்தால்; த்ரய: விம்சதிக:-இருபத்து மூன்று முக்கிய மூலப்பொருட்களால்; கண:-சேர்க்கை; ப்ரேரித;—அதனால் தூண்டப்பட்டு; அஜனயத்-தோன்றியது; ஸ்வாபி:-அவரால்; மாத்ராபி:- விரிவங்கம்; அதிபூருஷம்- பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபம் (விஸ்வ- ரூபம்).

பகவானின் விருப்பத்தால், இருபத்து மூன்று முக்கிய மூலப் பொருட்களும் செயற்படத் தூண்டப்பட்ட பொழுது, பகவானின் பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபம், அல்லது விஸ்வ-ரூபம் தோற்றத்திற்கு வந்தது.

பதம் 3.6.5
பரேண விசதா ஸ்வஸ்மின் மாத்ரயா விஸ்வ-ஸ்ருக்-கண: சுக்ஷோபான்யோன்யம் ஆஸாத்ய யஸ்மின் லோகாஸ் சராசரா:

பரேண-பகவானால்; விசதா-இவ்வாறு புகுந்து; ஸ்வஸ்மின் – அவரால் சுயமாக; மாத்ரயா-ஒரு விரிவங்கத்தினால்; விஸ்வ-ஸ்ருக்_ பிரபஞ்ச சிருஷ்டியின் மூலப்பொருட்கள்; கண:-எல்லா; சுக்ஷோப – மாற்றமடைந்தன; அன்யோன்யம்—ஒன்றுக்கொன்று; ஆஸாத்ய —அடைந்து; யஸ்மின்- எதில்; லோகா:-கிரகங்கள்; சர—அசரா:— அசையும் மற்றும் அசையாத.

பகவான் தமது விரிவங்க ரூபத்தில், பிரபஞ்ச சிருஷ்டியின் மூலப் பொருட்களுக்குள் நுழைந்த பொழுது, அவை பகவானின் விஸ்வ – ரூபமாக மாற்றமடைந்தன. இந்த விஸ்வ-ரூபத்திற்குள்தான் எல்லாக் கிரக அமைப்புக்களும், அசையும், அசையாத படைப்புக்களும் ஓய்வெடுக்கின்றன.

பதம் 3.6.6
ஹிரண்மய: ஸ புருஷ: ஸஹஸ்ர- பரிவத்ஸரான்
ஆண்ட-கோச உவாஸாப்ஸு ஸர்வ- ஸத்வோபப்ரும்ஹித:

ஹிரண்மய:-விராட்-ரூபத்தையும் ஏற்பவரான கர்போதகசாயி விஷ்ணு; ஸ:—அவர்; புருஷ:-பரமபுருஷரின் அவதாரம்; ஸஹஸ்ர ஆயிரம்; பரிவத்ஸரான்—தேவ ஆண்டுகள்; ஆண்ட – கோசே – உருண்டையான பிரபஞ்சத்திற்குள்; உவாஸ-வாழ்ந்தார்; அப்ஸு – நீரின்மேல்; ஸர்வ—ஸத்வ—அவருடன் சயனத்திருந்த எல்லா ஜீவராசிகளும்; உபப்ரும்ஹித:-அவ்வாறு பரவிக் கிடந்தன.

ஹிரண்மயன் எனப்படும் பிரம்மாண்டமான விராட்-புருஷர், ஆயிரம் தேவ ஆண்டுகளுக்கு பிரபஞ்ச நீரின் மேல் வாழ்ந்தார்.அனைத்து ஜீவராசிகளும் கூட அவருடன் ஒடுங்கிக் கிடந்தன.

பதம் 3.6.7
ஸ வை விஸ்வ-ஸ்ருஜாம் கர்போ தேவ – கர்மாத்ம-சக்திமான் விபபாஜாத்மனாத்மானம் ஏகதா தசதா த்ரிதா

ஸ:- அந்த; வை-நிச்சயமாக; விஸ்வ-ஸ்ருஜாம்-பிரம்மாண்டமான விராட்-ரூபத்தின்; கர்ப:-மொத்த சக்தி; தேவ—உயிர்வாழும் சக்தி; கர்ம – வாழ்வின் செயல்; ஆத்ம-ஆத்மா; சக்திமான்-சக்திகளால் நிறைந்த; விபபாஜ-வகுக்கப்பட்டுள்ளன; ஆத்மனா -அவரால்; ஆத்மானம்—அவர்; ஏகதா-ஒன்றில்; தசதா—பத்தில்; த்ரிதா – மூன்றில்.

பிரமாண்டமான விராட்-ரூபத்தின் வடிவிலிருந்த, மஹத் -தத்வத்தின் மொத்த சக்தியான பகவான், தாமாகவே தம்மை ஜீவராசிகளின் உணர்வாகவும், செயல்களைக் கொண்ட வாழ்வாகவும், மற்றும் தேகாபிமானமாகவும் வகுத்துக் கொண்டார். இம் மூன்றும் முறையே ஒன்றாகவும், பத்தாகவும் மற்றும் மூன்றாகவும் மேலும் வகுக்கப்படுகின்றன.

பதம் 3.6.8
ஏஷ ஹி அசேஷ-ஸத்வானாம் ஆத்மாம்ஸ: பரமாத்மன:
ஆத்யோ ‘வதாரோ யத்ராஸௌ பூத-க்ராமோ விபாவ்யதே

ஏவு: இந்த: ஹி-நிச்சயமாக; அசேஷ-எண்ணற்ற; ஸத்வானாம் – ஜீவராசிகள்; ஆத்மா-ஆத்மா; அம்ச:-அம்சம்; பரம – ஆத்மன: பரமாத்மாவின்; ஆத்ய:- முதல்; அவதார:-அவதாரம்; யத்ர— அதன்பிறகு; அஸௌ – அவ்வெல்லா; பூத-க்ராம:-மொத்த சிருஷ்டிகள்; விபாவ்யதே -அபிவிருத்தியடைகின்றன.

பரமபுருஷரின் பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபம் தான் பரமாத்மாவின் முதல் அவதாரமும், அம்சமும் ஆகும். அவர் எண்ணற்ற ஜீவராசிகளைக் கொண்ட ஆத்மாவாக இருக்கிறார். இவ்வாறு விருத்தியடையும் மொத்த சிருஷ்டியும் கூட அவரில்தான் ஓய்வெடுக்கிறது.

பதம் 3.6.9
ஸாத்யாத்ம: ஸாதிதைவஸ் ச ஸாதிபூத இதி த்ரிதா
விராட் ப்ராணோ தச – வித ஏகதா ஹ்ருதயேன ச

ஸ-ஆத்யாத்ம:-எல்லாப் புலன்களுடனும் கூடிய உடலும், மனதும்; ஸ-ஆதிதைவ:- மற்றும் புலன்களை ஆளும் தேவர்கள்; ச – மேலும்; ஸ-ஆதிபூத:-தற்போதைய கருத்து; இதி-இவ்வாறாக; த்ரிதா – மூன்று; விராட் – பிரம்மாண்டமான; ப்ராண:-இயக்கும் சக்தி; தச- வித:-பத்து வகையான; ஏகதா-ஒன்று மட்டும்; ஹ்ருதயேன – உயிர் வாழும் சக்தி; ச- கூட.

பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபமானவர், மூன்று, பத்து மற்றும் ஒன்று என வர்ணிக்கப்படுகிறார். அவர் உடல், மனம் மற்றும் புலன்கள் என மூன்றாகவும், எல்லா அசைவுகளையும் இயக்கும் பத்து வகையான சக்திவாய்ந்த உயிர்ச்சக்திகளென பத்தாகவும், மேலும் உயிர்ச்சக்தி உற்பத்தி செய்யப்படும் ஓர் இதயம் என ஒன்றாகவும் இருக்கிறார்.

பதம் 3.6.10
ஸ்மரன் விஸ்வ-ஸ்ருஜம் ஈசோ விக்ஞாபிதம் அதோக்ஷஜ:
விராஜம் அதபத் ஸ்வேன தேஜஸைஷாம் விவ்ருத்தயே

ஸ்மரன்-நினைத்து; விஸ்வ-ஸ்ருஜாம்- பிரபஞ்ச நிர்மாண வேலை ஒப்படைக்கப்பட்ட தேவர்களின்; ஈச:-பரமபுருஷர்; விக்ஞாபிதம்— அவரிடம் வேண்டப்பட்டது போல்; அதோக்க்ஷஜ:-உன்னத புருஷர்; விராஜம்- பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபம்; அதபத்—இவ்வாறு எண்ணி; ஸ்வேன தேஜஸா-அவரது சுயசக்தியால்; ஏஷாம் – அவர்களுக்காக; விவ்ருத்தயே – புரிந்துணர்வுக்காக.

பரமபுருஷர், பிரபஞ்சத் தோற்றத்தை நிர்மாணிக்கும் தொழில் ஒப்படைக்கப்பட்டுள்ள எல்லா தேவர்களுக்குள்ளும் பரமாத்மாவாக இருக்கிறார். (தேவர்களால்) இவ்வாறு வேண்டப்பட்ட பகவான், தமக்குள் சிந்தித்தவாறு தேவர்களின் புரிந்துணர்வுக்காக தமது பிரம்மாண்ட ரூபத்தைத் தோற்றுவித்தார்.

பதம் 3.6.11
அத தஸ்யாபிதப்தஸ்ய கதிதாயதனானி ஹ
நிரபித்யந்த தேவானாம் தானி மே கதத: ஸ்ருணு

அத-எனவே; தஸ்ய-அவரது; அபிதப்தஸ்ய-அவரது சிந்தனைக்கேற்ப: கதிதா-எத்தனை; ஆயதனானி- உருவங்கள்; ஹ – அங்கிருந்த; நிரபித்யந்த -பிரிக்கப்பட்ட பாகங்களால்; தேவானாம்— தேவர்களின்; தானி—அவ்வெல்லா: மே-கதத:-என்னால் விவரிக்கப் படுவதை: ஸ்ருணு—கேளும்.

மைத்ரேயர் கூறினார்; பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபத்தின் தோற்றத்திற்குப் பிறகு பரமபுருஷர் எப்படி தேவர்களின் பல்வேறு ரூபங்களாகத் தம்மைப் பிரித்துக் கொண்டார் என்பதை என்னிடமிருந்து கேளும்.

பதம் 3.6.12
தஸ்யாக்னிர் ஆஸ்யம் நிர்பின்னம் லோக-பாலோ ‘விசத் பதம்
வாசா ஸ்வாம்சேன வக்தவ்யம் யயாஸௌ ப்ரதிபத்யதே

தஸ்ய-அவரது; அக்னி:- நெருப்பு: ஆஸ்யம்—வாய்; நிர்பின்னம் – இவ்வாறு பிரிக்கப்பட்ட; லோக-பால:-பிரபஞ்ச நிர்வாகிகள்; அவிசத் – புகுந்தனர்; பதம்—அவரவர் நிலைகளில்; வாசா-வார்த்தைகளால்; ஸ்வ -அம்சேன- ஒருவரது சுய அம்சத்தினால்; வக்தவ்யம் – பேச்சுகள்; யயா-எதனால்; அஸௌ—அவர்கள்; ப்ரதிபத்யதே-விவரிக்கின்றனர்.

அக்னி (உஷ்ணம்), அவரது வாயிலிருந்து பிரிந்தது. எல்லா பிரபஞ்ச நிர்வாகிகளும் அவரவர் நிலைகளில், அதற்குள் பிரவேசித்தனர். அந்த சக்தியைக் கொண்டுதான் ஜீவராசி தன்னை வார்த்தைகளால் விவரிக்கிறான்.

பதம் 3.6.13
நிர்பின்னம் தாலு வருணோ லோக-பாலோ ‘விசத் தரே:
ஜிஹ்வயாம்சேன ச ரஸம் யயாஸெள ப்ரதிபத்யதே

நிர்பின்னம்-பிரிக்கப்பட்ட; தாலு-மேல் வாய்; வருண:-காற்றுத் தேவன்: லோக-பாலக:- லோக பாலகர்கள்; அவிசத்—புகுந்தார்; ஹரே-பகவானின்; ஜிஹ்வயா-அம்சேன— நாக்குப் பகுதியுடன்; ச-மேலும்; ரஸம் – சுவைகள்: யயா-எதனால்; அஸௌ—ஜீவராசி; ப்ரதிபத்யதே – தெரிவிக்கிறான்.

பிரம்மாண்ட ரூபத்தின் மேல் வாய் தனியாக தோற்றுவிக்கப்பட்ட பொழுது, பிரபஞ்ச அமைப்புக்களின் காற்றுத் தேவனான வருணன், அதற்குள் புகுந்தார். இவ்வாறாக தன் நாவினால் அனைத்தையும் சுவைக்கக்கூடிய வசதி ஜீவராசிக்கு ஏற்பட்டது.

பதம் 3.6.14
நிர்பின்னே அஸ்வினெஸ நாஸே விஷ்ணோர் ஆவிசதாம் பதம் க்ராணேனாம்சேன கந்தஸ்ய ப்ரதிபத்திர் யதோ பவேத்

நிர்பின்னே-இவ்வாறு பிரிக்கப்பட்டு; அஸ்வினௌ-இரு அஸ்வினி குமாரர்கள்; நாஸே-இருநாசித்துவாரங்களின்; விஷ்ணோ:— பகவானின்; ஆவிசதாம்-புகுந்து: பதம் – பதவி; க்ராணேன அம்சேன – ஒரு பகுதி மட்டும் முகரும்; கந்தஸ்ய -வாசனை; ப்ரதிபத்தி: – அனுபவம்; யத:உடனே; பவேத்—ஆகிறது.

பகவானின் இரு நாசித் துவாரங்கள் தனித்தனியாக தோன்றியதும், இரு அஸ்வினி குமாரர்கள் தங்களுடைய சரியான நிலைகளில் அவற்றிற்குள் புகுந்தனர். இக்காரணத்தினால் எல்லாப் பொருட்களின் வாசனைகளையும் ஜீவராசிகளால் முகர முடிந்தது.

பதம் 3.6.15
நிர்பின்னே அக்ஷிணீ த்வஷ்டா லோக-பாலோ ‘விசத் விபோ:
சக்ஷுஷாம்சேன ரூபாணாம் ப்ரதிபத்திர் யதோ பவேத்

நிர்பின்னே-இவ்வாறு பிரிக்கப்பட்டு; அக்ஷிணீ- கண்கள்; த்வஷ்டா -சூரியன்; லோக—பால:-சூரியதேவன்; அவிசத்-புகுந்தார்; விபோ: – பிரம்மாண்டமானதின்; சக்ஷுஷா அம்சேன—பார்வையின் ஒரு பகுதியால் : ரூபாணாம்–ரூபங்களின்; ப்ரதிபத்தி:-அனுபவம்; யத: -;இதனால்: பவேத் – ஆகிறது.

அதன்பிறகு பகவானுடைய பிரம்மாண்ட ரூபத்தின் இரு கண்கள் தனித்தனியாக தோற்றுவிக்கப்பட்டன. ஒளியின் அதிபதியான சூரியன், பார்வையின் ஒரு பகுதி பிரதிநிதியாக அதற்குள் புகுந்தார். இவ்வாறாக ஜீவராசிகளால் உருவங்களைக் காணமுடிந்தது.

பதம் 3.6.16
நிர்பின்னானி அஸ்ய சர்மாணி லோக -பாலோ ‘நிலோ ‘விசத்
ப்ராணேனாம்சேன ஸம்பர்சம் யேனாஸௌ ப்ரதிபத்யதே

நிர்பின்னானி- பிரிக்கப்பட்டு; அஸ்ய- பிரும்மாண்ட ரூபத்தின்; சர்மாணி- தோல்; லோக-பால:-நிர்வாகி; அனில:-காற்று; அவிசத்-புகுந்தார்; ப்ராணேன அம்சேன-சுவாசத்தின் பகுதி: ஸம்ஸ்பர்சம் -ஸ்பரிசம்; யேன- எதனால்; அஸெள – ஜீவராசி; ப்ரதிபத்யதே – அனுபவிக்க முடியும்.

பிரும்மாண்ட ரூபத்திலிருந்து பிரிக்கப்பட்ட தோல் தோன்றிய பொழுது, காற்றுத் தேவனான அனிலன், பாதி ஸ்பரிசத்துடன் புகுந்தார். இவ்வாறாக ஜீவராசிகளால் தொட்டு உணரக்கூடிய அறிவை உணர் முடிந்தது.

பதம் 3.6.17
கர்ணாவ் அஸ்ய வினிர்பின்னெள திஷ்ண்யம் ஸ்வம் விவிஷுர் திச: ஸ்ரோத்ரேணாம்சேன சம்தஸ்ய ஸித்தம் யேன ப்ரபத்யதே

கர்ணௌ—காதுகள்; அஸ்ய-பிரும்மாண்ட ரூபத்தின்; வினிர் பின்னௌ -இவ்வாறு பிரிக்கப்பட்டு; திஷ்ண்யம்—ஆளும் தேவதை; ஸ்வம்- சொந்த; விவிஷு:-புகுந்தார்; திச:-திசைகளின்; ஸ்ரோத்ரேண அம்சேன- கேட்பதற்குரிய கொள்கைகளுடன்; சப்தஸ்ய-ஓசையின்; ஸித்திம்-பூரணத்துவம்; யேன- எதனால்; ப்ரபத்யதே அனுபவிக்கப்படுகிறது.

பிரும்மாண்ட ரூபத்தின் காதுகள் தோன்றிய பொழுது, எல்லா திக் பாலகர்களும் கேட்பதற்குரிய ஆற்றல்களுடன் அவற்றினுள் புகுந்தனர். இவற்றினால் ஜீவராசிகளால் கேட்கவும், ஓசைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடிந்தது.

பதம் 3.6.18
த்வசம் அஸ்ய வினிர்பின்னாம் விவிஷுர் திஷ்ண்யம் ஒஷதீ:
அம்சேன ரோமபி: கண்டூம் யைர் அஸௌ ப்ரதிபத்யதே

த்வசம்—தோல்; அஸ்ய-பிரும்மாண்ட ரூபத்தின்; வினிர்பின்னாம்- தனித்து தோன்றியிருப்பதால்; விவிஷு :-புகுந்தனர்; திஷ்ண்யம்- ஆளும் தேவர்: ஓஷதீ:-உணர்ச்சிகள்; அம்சேன-பகுதிகளுடன்; ரோமபி; – உடலிலுள்ள ரோமங்களின் வாயிலாக ; கண்டூம் – அரிப்புணர்ச்சி: யை:- எதனால்; அஸௌ-ஜீவராசி; ப்ரதிபத்யதே அனுபவிக்கிறது.

தோலின் தனித் தோற்றம் ஒன்று உருவான பொழுது, உணர்ச்சிகளை ஆளும் தேவர்களும், அவர்களின் பகுதிகளும் அதற்குள் புகுந்தனர். இவ்வாறாக ஸ்பரிசத்தின் காரணத்தினால் ஜீவராசிகள் அரிப்புணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்கின்றன.

பதம் 3.6.19
மேட்ரம் தஸ்ய வினிர்பின்னம் ஸ்வ-திஷ்ண்யம் க உபாவிசத்
ரேதஸாம்சேன யேனாஸாவ் ஆனந்தம் ப்ரதிபத்யதே

மேட்ரம்—புறப்பாலுறுப்புக்கள்; தஸ்ய-பிரும்மாண்ட ரூபத்தின்; வினிர்பின்னம்—பிரிக்கப்பட்டு; ஸ்வ—திஷ்ண்யம்- சுய நிலை; க:- முதல் ஜீவராசியான பிரம்மா; உபாவிசத்—புகுந்தார்; ரேதஸா அம்சேன- விந்துப் பகுதியுடன்; யேன- எதனால்; அஸௌ—ஜீவராசி; ஆனந்தம் -சிற்றின்பம்; ப்ரதிபத்யதே—அனுபவிக்கிறது.

பிரும்மாண்ட ரூபத்தின் புறப்பாலுறுப்புக்கள் தனியா தோன்றியபொழுது, முதல் ஜீவராசியான பிரஜாபதி அவரது ஒரு பகுதி விந்துடன் அவற்றிற்குள் புகுந்தார். இவ்வாறாக, ஜீவராசிகளால் சிற்றின்ப சுகத்தை அனுபவிக்க முடிகிறது.

பதம் 3.6.20
குதம் பும்ஸோ வினிர்பின்னம் மித்ரோ லோகேச ஆவிசத்
பாயுனாம்சேன யேனாஸௌ விஸர்கம் ப்ரதிபத்யதே

குதம்- மலத்துவாரம்; பும்ஸ:-பிரபஞ்ச ரூபத்தின்; வினிர்பின்னம் – தனியாகத் தோன்றியதால்; மித்ர:-சூரியதேவன்; லோக-ஈச: – மித்திரன் என்ற ஆளும் தேவர்; ஆவிசத்—புகுந்தார்; பாயுனா அம்சேன— மலம் கழிக்கும் முறையின் ஒரு பகுதியுடன்; யேன- எதனால்; அஸௌ-ஜீவராசி; விஸர்கம் -மலம் கழித்தலை; ப்ரதிபத்யதே— செய்கிறான்.

மலத்துவாரம் தனியாகத் தோன்றியது. மித்திரன் என்ற ஆளும் தேவர், மலம் கழிப்பதற்குரிய பகுதி உறுப்புக்களுடன் அதற்குள் புகுந்தார். இவ்வாறாக, ஜீவராசிகளால் மலத்தையும், சிறுநீரையும் கழிக்க முடிகிறது.

பதம் 3.6.21
ஹஸ்தாவ் அஸ்ய வினிர்பின்னால் இந்ர: ஸ்வர்-பதிர் ஆவிசத்
வார்தயாம்சேன புருஷோ யயா வ்ருத்திம் ப்ரபத்யதே

ஹஸ்தௌ—கரங்கள்; அஸ்ய-பிரும்மாண்ட ரூபத்தின்; வினிர் பின்னௌ -தனியாகத் தோன்றியதால்; இந்ர:-சுவர்க்க ராஜன்; ஸ்வ: -பதி:-சுவர்க்க லோகங்களை ஆள்பவரான; ஆவிசத்—அதற்குள் புகுந்தார்; வார்தயா —அம்சேன-ஒரு பகுதி வர்த்தக கொள்கைகளுடன்; புருஷ:-ஜீவராசி; யயா- எதனால்; வ்ருத்திம் – வாழ்க்கைத் தேவைக்குரிய வியாபாரம்; ப்ரபத்யதே-செய்கிறான்.

அதன்பிறகு, பிரும்மாண்ட ரூபத்தின் கரங்கள் தனியாகத் தோன்றிய பொழுது, சுவர்க்க லோகங்களை ஆள்பவரான இந்திரன் அவற்றிற்குள் புகுந்தார். இவ்வாறாக, வாழ்க்கைத் தேவைக்குரிய வியாபாரத்தை ஜீவராசிகளால் செய்ய முடிகிறது.

பதம் 3.6.22
பாதாவ் அஸ்ய வினிர்பின்னெள லோகேசோ விஷ்ணுர் ஆவிசத்
கத்யா ஸ்வாம்சேன புருஷோ யயா ப்ராப்யம் ப்ரபத்யதே

பாதௌ-கால்கள்; அஸ்ய-பிருமாண்ட ரூபத்தின்; வினிர்பின்னெள தனியாகத் தோன்றியதால்; லோக-ஈச: விஷ்ணு: – விஷ்ணு எனும் தேவர் (பரமபுருஷரல்ல); ஆவிசத்-புகுந்தார்; கத்யா-அசையும் சக்தியால்; ஸ்வ—அம்சேன—அவரது சொந்த பகுதிகளுடன்; புருஷ: – ஜீவராசி; யயா- எதனால்; ப்ராப்யம்-இலக்கை; ப்ரபத்யதே – அடைகிறான்.

அதன்பிறகு, பிரும்மாண்ட ரூபத்தின் கால்கள் தனியாகத் தோன்றின. விஷ்ணு எனும் தேவர் (பரமபுருஷரல்ல) பகுதி அசைவுகளுடன் அவற்றிற்குள் புகுந்தார். ஜீவராசி அவனது இலக்கை நோக்கிச் செல்ல இது உதவுகிறது.

பதம் 3.6.23
புத்திம் சாஸ்ய வினிர்பின்னாம் வாக்-ஈசோ திஷ்ண்யம் ஆவிசத்
போதேனாம்சேன போத்தவ்யம் ப்ரதிபத்திர் யதோ பவேத்

புத்தம் – புத்தி; ச – கூட: அஸ்ய – பிரும்மாண்ட ரூபத்தின்; வினிர்பின்னாம்-தனியாகத் தோன்றியதால்; வாக்-ஈச–வேதங்களின் தலைவரான பிரம்மா; திஷ்ண்யம்- ஆளும் சக்தி; ஆவிசத் – உள்ளே புகுந்தார் ; போதேன அம்சேன—அவரது பகுதி அறிவுடன்; போத்தவ்யம்—அறிந்து கொள்ளப்படும் விஷயம்; ப்ரதிபத்தி அறியப்படுகிறது; யத:-ஏதனால்; பவேத்- அப்படியாகிறது.

பிரும்மாண்ட ரூபத்தின் புத்தி தனியாகத் தோன்றியபொழுது, வேதங்களின் தலைவரான பிரம்மா, ஒரு பகுதி புரிந்து கொள்ளும் சக்தியுடன் அதற்குள் புகுந்தார். இவ்வாறாக, புரிந்துணர்வுக்குரிய பொருள் ஜீவராசிகளால் அனுபவித்து உணரப்படுகிறது.

பதம் 3.6.24
ஹ்ருதயம் சாஸ்ய நிர்பின்னம் சந்ரமா திஷ்ண்யம் ஆவிசத்
மனஸாம்சேன யேனாஸௌ விக்ரியாம் ப்ரதிபத்யதே

ஹ்ருதயம் – இதயம்; ச-மேலும்; அஸ்ய- பிரும்மாண்ட ரூபத்தின்; நிர்பின்னம்-தனியாக தோன்றியதால்; சந்ரமா—சந்திர தேவன்; திஷ்ண்யம் – ஆளும் சக்தியுடன்; ஆவிசத்—உள்ளே புகுந்தார்; மனஸா அம்சேன- ஒரு பகுதி மன இயக்கத்துடன்; யேன—எதனால்; அஸௌ – ஜீவராசி: விக்ரியாம் -தீர்மானம்; ப்ரதிபத்யதே-செய்கிறான்.

அதன்பிறகு, பிரும்மாண்ட ரூபத்தின் இதயம் தனியாகத் தோன்றியது. சந்திர தேவன் ஒரு பகுதி மன இயக்கத்துடன் அதற்குள் புகுந்தார். இவ்வாறாக, ஜீவராசியில் அவனது மனக் கற்பனைகளைச் செய்ய முடிகிறது.

பதம் 3.6.25
ஆத்மானாம் சாஸ்ய நிர்பின்னம் அபிமானோ ‘விசத் பதம்
கர்மணாம்சேன யேனாஸௌ கர்தவ்யம் ப்ரதிபத்யதே

ஆத்மானம் – பொய் அகங்காரம்; ச-மேலும்;அஸ்ய-பிரும்மாண்ட ரூபத்தின்; நிர்பின்னம் தனியாக பிரிக்கப்பட்டதால், அபிமான: பொய்யான தேகாபிமானம்; அவிசத்-புகுந்தார்; பதம் – நிலையில்; கர்மணா- செயல்கள் ; அம்சேன-பகுதியால்; யேன- எதனால்; அஸௌ-ஜீவராசி; கர்தவ்யம் -ஸ்தூலமான செயல்கள்; ப்ரபத்யதே செய்கிறான்.

அதன்பிறகு, பிரும்மாண்ட ரூபத்தின் பௌதிக அகங்காரம் தனியாகத் தோன்றியது. பொய் அகங்காரத்தை ஆள்பவரான ருத்திரன் அவரது சொந்த பகுதிச் செயல்களுடன் அதற்குள் புகுந்தார். இதன் மூலமாக ஜீவராசி அவனது ஸ்தூலமான செயல்களைச் செய்கிறான்.

பதம் 3.6.26
ஸத்வம் சாஸ்ய வினிர்பின்னம் மஹான் திஷ்ண்யம் உபாவிசத்
சித்தேனாம்சேன யேனாஸௌ விக்ஞானம் ப்ரதிபத்யதே

ஸத்வம்-உணர்வு; ச-மேலும்; அஸ்ய-பிரும்மாண்ட ரூபத்தின்; வினிர்பின்னம் தனியாகத் தோன்றியதால்; மஹான்—மொத்த சக்தியான மஹத்- தத்வம்; திஷ்ண்யம் – கட்டுப்பாட்டுடன்; உபாவிசத் – உள்ளே புகுந்தது ; சித்தேன அம்சேன—அவரது ஒரு பகுதி உணர்வுடன்; யேன – எதனால்; அஸெள – ஜீவராசி; விக்ஞானம்-குறிப்பிட்ட அறிவை; ப்ரதிபத்யதே-விருத்தி செய்கிறான்.

அதன்பிறகு, அவரது (பகவான்) உணர்வு தனியாகத் தோன்றிய பொழுது, மொத்த சக்தியான மஹத்-தத்வத்தின் வடிவிலுள்ள பகவான், அவரது உணர்வுப் பகுதியுடன் அதற்குள் புகுந்தார். இவ்வாறாக ஜீவராசியால் குறிப்பிட்ட அறிவை மனதால் புரிந்துகொள்ள முடிகிறது.

பதம் 3.6.27
சீர்ஷ்ணோ ‘ஸ்ய த்யெளர் தரா பத்ப்யாம் கம் நாபேர் உதபத்யத
குணானாம் வ்ருத்தயோ யேஷு ப்ரதியந்தே ஸுராதய:

சீர்ஷ்ண:-தலை; அஸ்ய-பிரும்மாண்ட ரூபத்தின்; த்யௌ: சுவர்க்க லோகங்கள்; தரா-மண்ணுலகங்கள்; பத்ப்யாம்— அவரது கால்களில்; கம் – ஆகாயம்: நாபே – வயிற்றுப் பகுதியிலிருந்து: உதபத்யத-தோன்றின; குணானாம் – மூன்று இயற்கைக் குணங்களின்; வ்ருத்தய:-பிரதிபலன்கள்; யேஷு – எதில்; ப்ரதீயந்தே—தோன்றின; ஸுர—ஆதிய:-தேவர்களும், மற்றவர்களும்.

அதன்பிறகு, பிரும்மாண்ட ரூபத்தின் தலையிலிருந்து, சுவர்க்க லோகங்கள் தோன்றின. அவரது கால்களிலிருந்து மண்ணுலகங்களும், அவரது வயிற்றுப் பகுதியிலிருந்து ஆகாயமும் தனித்தனியாகத் தோன்றின. அவற்றிற்குள் தேவர்களும், மற்றவர்களும் ஜட இயற்கைக் குணங்களுக்கேற்ப தோன்றினர்.

பதம் 3.6.28
ஆத்யந்திகேன ஸத்வேன திவம் தேவா: ப்ரபேதிரே
தராம் ரஜ:- ஸ்வபாவேன பணயோ யே ச தான் அனு

ஆத்யந்திகேன – மிகையான; ஸத்வேன–சத்வ குணத்தினால்; திவம்-உயர் கிரகங்களில்; தேவா:- தேவர்கள்; ப்ரபேதிரே- அமைந்துள்ளனர்; தராம் – பூமியில்; ரஜ:-ரஜோ குணம்; ஸ்வபா – வேன-சுபாவத்தால்; பணய :-மனிதன்; யே-அவர்களனைவரும்; ச – கூட; தான்—அவர்களுடைய; அனு—கீழ்ப்படிந்த.

மிகச்சிறந்த குணமான சத்வ குணத்தில் தகுதி பெற்றுள்ள தேவர்கள் சுவர்க்க லோகங்களில் உள்ளனர். ஆனால் மனிதர்களோ, அவர்களுடைய ரஜோ குண சுபாவத்தினால், அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களுடன் பூமியில் வாழ்கின்றனர்.

பதம் 3.6.29
தார்தீயேன ஸ்வபாவேன பகவன்-நாபிம் ஆஸ்ரிதா:
உபயோர் அந்தரம் வ்யோம யே ருத்ர-பார்ஷதாம் கணா:

தார்தீயேன-மூன்றாவதான தமோ (அறியாமை) குணத்தை அளவுக்கதிகமாக விருத்தி செய்து கொள்வதால்; ஸ்வபாவேன— இத்தகைய சுபாவத்தினால்; பகவத் – நாபிம்– பரமபுருஷருடைய பிரும்மாண்ட ரூபத்தின் நாபி; ஆஸ்ரிதா:-அந்நிலையில் இருப்பவர்கள்; உபயோ:- இரண்டிற்கும் நடுவில்; அந்தரம்-நடுவில்; வ்யோம்- ஆகாயம் ; யே -அவர்களனைவரும்; ருத்ர-பார்ஷதாம்-ருத்திரரின் சகாக்கள் ; கணா:-ஜனத் தொகை.

ருத்திரனின் சகாக்களாக உள்ள ஜீவராசிகள், ஜட இயற்கையின் மூன்றாவது குணத்தை, அல்லது அறியாமையை விருத்தி செய்து கொள்கின்றனர். அவர்கள் மண்ணுலகங்களுக்கும், சுவர்க்க லோகங்களுக்கும் இடையிலுள்ள ஆகாயத்தில் உள்ளனர்.

பதம் 3.6.30
முகதோ ‘வர்தத ப்ரஹ்ம புருஷஸ்ய குரூத்வஹ
யஸ் தூன்முகத்வாத் வர்ணானாம் முக்யோ ‘பூத் ப்ராஹ்மணோ குரு:

முகத:-வாயிலிருந்து; அவர்தத—உற்பத்தியாயின; ப்ரஹ்ம-வேத ஞானம்; புருஷஸ்ய-பிரும்மாண்ட ரூபமான விராட் – புருஷரின்; குரு—உத்வஹ-குரு வம்சத்தில் சிறந்தவரே; ய:-அவர்கள்; து – காரணத்தினால்; உன்முகத்வாத் – அதில் விருப்பமுள்ளவர்கள்; வர்ணானாம்-சமூகப் பிரிவுகளின்: முக்ய: முக்கியமான: அபூத்- என்றாயினர்; ப்ராஹ்மண:-பிராமணர்கள் எனப்படும்; குரு: – அங்கீகாரம் பெற்ற போதகர் அல்லது ஆன்மீக குரு.

குரு வம்சத்தில் சிறந்தவரே, பிரும்மாண்ட ரூபமான விராட் புருஷரின் வாயிலிருந்து வேத ஞானம் தோன்றியது. இந்த வேத ஞானத்தில் நாட்டம் கொண்டவர்கள், பிராமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் எல்லா சமூகப் பிரிவுகளுக்கும் இயல்பான போதகர்கனாகவும், ஆன்மீக குருமார்களாகவும் உள்ளனர்.

பதம் 3.6.31
பாஹுப்யோ ‘வர்தத க்ஷத்ரம் க்ஷத்ரியஸ் தத் அனுவரத:
யோ ஜாதஸ் த்ராயதே வர்ணான் பௌருஷ: கண்டக-க்ஷதாத்

பாஹுப்ய:-கரங்களிலிருந்து; அவர்தத- உற்பத்தியானது; – க்ஷத்ரம் – பாதுகாக்கும் சக்தி; க்ஷத்ரிய: – பாதுகாப்புச் சக்தியுடன் சம்பந்தமுள்ள; தத் – அந்த: அனுவ்ரத்த:-பின்பற்றுபவர்கள்; ய:-யாரொருவர்; ஜாத:-அப்படி ஆகின்றார்; த்ராயதே-காப்பாற்றுகிறார்; வர்ணான் – மற்ற வர்ணாஸ்ரம பிரிவுகள்; பௌருஷ:-பரமபுருஷரின் பிரதிநிதி; கண்டக-திருடர்களையும், கொள்ளைக்காரர்களையும் போல் கலகம் விளைவிப்பவர்கள்; க்ஷதாத் – தீங்கிலிருந்து.

அதன்பிறகு பிரம்மாண்டமான விராட்-ரூபத்தின் கரங்களிலிருந்து பாதுகாக்கும் சக்தி உற்பத்தியானது. இத்தகைய சக்தியின் தொடர்பாக க்ஷத்திரியர்களும் தோற்றத்திற்கு வந்தனர். இவர்கள் க்ஷத்திரியத் தொழில்களைப் பின்பற்றுவதன் மூலம் சமூகத்தை, திருடர்கள் மற்றும் துஷ்டர்கள் ஆகியோரின் தொல்லைகளிலிருந்து காப்பாற்றினர்.

பதம் 3.6.32
விசோ ‘வர்தந்த தஸ்யோர்வோர் லோக-வ்ருத்திகரீர் விபோ:
வைஸ்யஸ் தத்-உத்பவோ வார்தாம் ந்ருணாம் ய: ஸமவர்தயத்

விச:- உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றின் மூலமாக கிடைக்கும் வாழ்க்கைத் தேவைகள்; அவர்தந்த—உற்பத்தியாயின; தஸ்ய—அவரது (பிரம்மாண்ட ரூபத்தின்); ஊர்வோ:- தொடைகளின் இருந்து; லோக-வ்ருத்திகரீ:-ஜீவனோபாயம்; விபோ:- பகவானின்; வைஸ்ய:-வணிகர் சமூகம்; தத்—அவர்களுடைய; உத்பவ: – வழக்கமான; வார்தாம்-ஜீவனோபாயம்; ந்ருணாம்—அனைவரிலும் ய:-யாரொருவர்; ஸம- வர்தயத் -நிறைவேற்றப்பட்டது.

அனைவருக்கும் ஜீவனோபாயமாக உள்ள தானிய உற்பத்தியும் பிரஜைகளுக்கு அவற்றை விநியோகித்தலும், பகவானின் பிரம்மாண்ட ருபத்தின் தொடைகளிலிருந்து உற்பத்தியானது. இதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுள்ள வர்த்தகப் பிரிவினர், வைசியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பதம் 3.6.33
பத்ப்யாம் பகவதோ ஜக்ஞே சுஸ்ரூஷா தர்ம-ஸித்தயே
தஸ்யாம் ஜாத: புரா சூத்ரோ யத்-வ்ருத்யா துஷ்யதே ஹரி:

பத்ப்யாம்-கால்களிலிருந்து; பகவத:- பரமபுருஷரின்; ஜக்ஞே – தோன்றியது; சுஸ்ரூஷா-தொண்டு; தர்ம – வர்ணாஸ்ரம கடமை; ஸித்தயே-என்ற விஷயத்திற்காக; தஸ்யாம் – அதில்; ஜாத: உற்பத்தியாகி; புரா-முன்பு; சூத்ர:-சேவகர்கள்; யத்-வ்ருத்யா— தொழிலால்; துஷ்யதே-திருப்தியடைகிறார்; ஹரி:-பரமபுருஷர்.

அதன்பிறகு, வர்ணாஸ்ரம கடமைகளைப் பாதுகாப்பதற்காக, பரமபுருஷரின் கால்களிலிருந்து சேவை தோன்றியது, பகவானின் கால்களில் உள்ள சூத்திரர்கள் அவரைச் சேவையினால் திருப்திப்படுத்துகின்றனர்.

பதம் 3.6.34
ஏதே வர்ணா: ஸ்வ-தர்மேண யஜந்தி ஸ்வ-குரும் ஹரிம்
ஸ்ரத்தயாத்ம-விசுத்தி-அர்தம் யஜ்-ஜாதா: ஸஹ வ்ருத்திபி:

ஏதே- இவ்வெல்லா ; வர்ணா:-சமூகப் பிரிவுகளும்; ஸ்வ – தர்மேண -ஒருவரது சொந்த வர்ணாஸ்ரமக் கடமைகளால்; யஜந்தி – வழிபடவேண்டும் ; ஸ்வ-குரும் – ஆன்மீக குருவுடன்; ஹரிம் – பரமபுருஷர்; ஸ்ரத்தவா – சிரத்தையுடனும், பக்தியுடனும்; ஆத்ம- ஆத்மாவை; விசுத்தி—அர்தம் -தூய்மைப் படுத்துவதற்கு; யத் – எவரிலிருந்து; ஜாதா:-பிறந்துள்ளன; ஸஹ— அவற்றுடன்; வ்ருத்திபி:-வர்ணாஸ்ரமக் கடமை.

இவ்வெல்லா சமூகப் பிரிவுகளும், அவற்றின் வர்ணாஸ்ரமக் கடமைகளுடனும், உயிர்வாழ்ச்சூழ்நிலைகளுடனும் பரமபுருஷரிலிருந்து பிறக்கின்றன. இவ்வாறாக பந்தப்படாத வாழ்வையும், தன்னுணர்வையும் பெறுவதற்கு, ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ், பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும்.

பதம் 3.6.35
ஏதத் க்ஷத்தர் பகவதோ தைவ-கர்மாத்ம-ரூபிண:
க: ஸ்ரத்தத்யாத் உபாகர்தும் யோகமாயா-பலோதயம்

ஏதத்- இந்த: க்ஷத்த-விதுரரே: பகவத:-பரமபுருஷரின்; தைவ – கர்ம ஆத்ம – ரூபிண: – பிரம்மாண்ட ரூபத்தின் உள்னதமான செயல், காலம் மற்றும் இயற்கை; க: – வேறு யார்; ஸ்ரத்தத்யாத்—விரும்ப முடியும்; உபாகர்தும் – ஆக மொத்தத்தை: யோகமாயா – அந்தரங்க சக்தி; பல – உதயம் – வலிமையால் தோன்றும்.

விதுரரே. பரமபுருஷரின் அந்தரங்கச் சக்தியினால், தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ரூபத்தின் உன்னதமான காலத்தையும், செயலையும், மற்றும் ஆற்றலையும் யாரால் அளவிட முடியும்?

பதம் 3.6.36
ததாபி கீர்தயாமி அங்க யதா-மதி யதா-ஸ்ருதம்
கீர்திம் ஹரே: ஸ்வாம் ஸத்-கர்தும் கிரம் அன்யாபிதாஸதீம்

ததா – எனவே; அபி—அது அப்படி இருந்தும்; கீர்தயாமி—நான் விவரிக்கிறேன்; அங்க – விதுரரே;யதா—எட்டிய அளவு; மதி-புத்திக்கு; யதா—எந்த அளவிற்கு; ஸ்ருதம்-கேட்ட; கீர்திம்-கீர்த்திகள்; ஹரே: – பகவானின் ; ஸ்வாம்—சொந்த: ஸத்-கர்தும் தூய்மைப்படுத்தும்; கிரம்—பேச்சுக்கள்; அன்யாபிதா—இல்லையெனில்; அஸதீம் – தூய்மையற்ற

என்னுடைய இயலாமைக்கிடையிலும், (ஆன்மீக குருவிடமிருந்து) எதையெல்லாம் என்னால் கேட்க முடிந்ததோ, எதையெல்லாம் என்னால் கிரகிக்க முடிந்ததோ, அந்த பகவானின் பெருமைகளை எல்லாம் தூய வார்த்தையினால் இப்பொழுது நான் விவரிக்கிறேன். இல்லையெனில் எனது பேசும் சக்தி தூய்மையற்றதாகவே இருக்கும்.

பதம் 3.6.37
ஏகாந்த-லாபம் வசஸோ நு பும்ஸாம்
ஸுஸ்லோக -மௌலேர் குண- வாதம் ஆஹு:
ஸ்ருதேஸ் ச வித்வத்பிர் உபாக்ருதாயாம்
கதா-ஸுதாயாம் உபஸம்ப்ரயோகம்

ஏக—அந்த—ஒப்பற்றதான அது; லாபம்- இலாபம்; வசஸ: – வாதங்களால்; நு பும்ஸாம் – பரமபுருஷரைப் பற்றிய: ஸு- ஸ்லோக – புண்ணிய; மெளலே:- செயல்கள்; குண – வாதம்- போற்றிப் புகழும்; ஆஹு: – என்று கூறப்படுகிறது; ஸ்ருதே:-காதின்; ச- கூட; வித்வத்பி:-கற்றவர்களால்; உபாக்ருதாயாம்—அவ்வாறு பதிப்பிக்கப்பட்டு; கதா – ஸுதாயாம் – அத்தகைய உன்னதமான செய்தி எனும் அமிர்தத்தில்; உபஸம்ப்ரயோகம்—அருகாமையில் இருப்பதால் உண்மையான நன்மையை அளிக்கிறது.

புண்ணிய புருஷரான பகவானின் செயல்களையும், பெருமைகளையும் பற்றிய உரையாடல்களில் ஈடுபடுபவதுதான் மனித குலத்தால் அடையப்படக்கூடிய மிகவுயர்ந்த இலாபமாகும். இத்தகைய செயல்கள், கற்றறிந்த மாமுனிவர்களால் எழுத்து வடிவில் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக அவற்றிற்கு அருகில் இருப்பதாலேயே செயலின் உண்மையான நோக்கம் நிறைவேறுகிறது.

பதம் 3.6.38
ஆத்மனோ ‘வஸிதோ வத்ஸ மஹிமா கவினாதினா
ஸம்வத்ஸர-ஸஹஸ்ராந்தே தியா யோக-விபக்கயா

ஆத்மன:-பரம ஆத்மாவின்; அவஸித:-அறியப்பட்டது; வத்ஸ – அருமைப் புதல்வரே; மஹிமா-மகிமைகளை; கவினா—கவிஞரான பிரம்மாவால்; ஆதினா –ஆதி ; ஸம்வத்ஸர-தேவ ஆண்டுகள்; ஸஹஸ்ர- அந்தே-ஆயிரம் ஆண்டுகளின் முடிவில்; தியா—புத்தியால்; யோக-விபக்கயா -முதிர்ந்த தியானத்தினால்.

அருமைப் புதல்வரே, ஆயிரம் தேவ ஆண்டுகள் நீடித்த ஆதி கவியான பிரம்மாவின் முதிர்ந்த தியானத்திற்குப் பிறகுதான், பரமாத்மாவின் மகிமைகள் நினைத்தற்கரியவை என்பதை அவரால் அறிய முடிந்தது.

பதம் 3.6.39
அதோ பகவதோ மாயா மாயினாம் அபி மோஹினீ
யத் ஸ்வயம் சாத்ம-வர்த்மாத்மா ந வேத கிம் உதாபரே

அத:-எனவே; பகவத:- தெய்வீகமான; மாயா—சக்திகள்; மாயினாம் -ஜாலக்காரர்களின்; அபி – கூட: மோஹினீ-வசியப்டு த்தும்; யத் – எது; ஸ்வயம் சுயமாக; ச-மேலும்; ஆத்ம-வர்த்ம- பூரண முழுமை; ஆத்மா-ஆத்மா; ந-இல்லை; வேத-அறிய; கிம் – என்ன; உத-என்று பேசுவது ; அபரே-மற்றவர்களை.

பரமபுருஷரின் அற்புதச் சக்தியானது, ஜாலக்காரர்களுக்குக் கூட குழப்பத்தை விளைவிப்பதாக உள்ளது. மறைந்துள்ள அந்த சக்தி, சுய பூர்த்தியுடையவரான பகவானால் கூட அறிய முடியாததாக உள்ளது. எனவே மற்றவர்களால் அதை அடைய முடியாது என்பது நிச்சயம்.

பதம் 3.6.40
யதோ ‘ப்ராப்ய ன்யவர்தந்த வாசஸ் ச மனஸா ஸஹ
அஹம் சான்ய இமே தேவாஸ் தஸ்மை பகவதே நம:

யத:- எவரிலிருந்து; அப்ராப்ய-அளவிட முடியாததால்; ன்ய வர்தந்த -முயற்சியை நிறுத்திக் கொண்டன; வாச:-வார்த்தைகள்; ச – கூட; மனஸா – மனதுடன்; ஸஹ-உடன்; அஹம் ச—மற்றும் அகங்காரமும்; அன்யே-மற்ற ; இமே-இவ்வெல்லா; தேவா: தேவர்களும்; தஸ்மை—அவருக்கு; பகவதே – பரமபுருஷருக்கு;நம: – நமஸ்கரிக்கிறோம்.

வார்த்தைகளும், மனதும் மற்றும் அகங்காரமும், அவற்றை ஆளும் தேவர்களும், பரமபுருஷரை அறிவதில் வெற்றியடையத் தவறிவிட்டனர். எனவே, விவேகத்தின் காரணத்தினால், அவருக்கு நமது பணிவான வணக்கங்களை நாம் அளிக்க வேண்டியுள்ளது.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “விஸ்வ ரூபத்தின் சிருஷ்டி” எனும் தலைப்பைக் கொண்ட ஆறாம் அத்தியாயம் நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare