அத்தியாயம் –5
மைத்ரேயருடனான விதுரரின் உரையாடல்கள்
பதம் 3.5.1
ஸ்ரீ-சுக உவாச
த்வாரி த்ய-நத்யா ருஷப: குரூணாம்
மைத்ரேயம் ஆஸீனம் அகாத-போதம்
க்ஷத்தோபஸ்ருத்யாச்யுத-பாவ-ஸித்த:
பப்ரச்ச ஸௌசீல்ய-குணாபித்ருப்த:
ஸ்ரீ-சுக : உவாச-சுகதேவகோஸ்வாமி கூறினார்; த்வாரி – துவாரத்தில்; த்யு-நத்யா:-தெய்வீகமானகங்கைநதி; ருஷப: -குருக்களில்சிறந்தவர்; குரூணாம்-குருக்களின்; மைத்ரேயம் – மைத்ரேயரிடம்; ஆஸீனம்—அமர்ந்திருந்த; அகாத-போதம்— ஆழங்காணமுடியாதஅறிவுடைய; க்ஷத்தா—விதுரர்; உபஸ்ருத்ய—நெருங்கியதும்; அச்யுத-குறையற்றபகவான்; பாவ-குணம்;ஸித்த:-பூரண; ப்ரப்ரச்ச—வினவினார்; ஸௌசீல்ய-சாந்தமாக;குணஅபித்ருப்த: – உன்னதகுணங்களில்திருப்தியடைந்து.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக, குருவம்சத்தில் சிறந்தவரும், பகவத் தொண்டில் பூரணத்துவம் பெற்றவருமான விதுரர், உலகில் ஆழங்காண முடியாத அறிவைப் பெற்றிருந்த மாமுனிவரான மைத்தேயர் அமர்ந்திருந்த, தெய்வீகமான கங்கா துவாரத்தை (ஹரித்துவாரத்தை) அடைந்தார். அமைதியில் பூரணத்துவமும், உன்ன தத்தில் திருப்தியும் பெற்றிருந்த விதுரர், மைத்ரேயரிடம் பின் வருமாறு வினவினார்.
பதம் 3.5.2
விதுர உவாச
ஸுகாய கர்மாணி கரோதி லோகோ
நதை: ஸுகம் வான்யத் உபாரமம் வா
விந்தேத பூயஸ் தத ஏவ துஹ்கம்
யத் அத்ர யுக்தம் பகவான் வதேன் ந:
விதுர உவாச-விதுரர் கூறினார்; ஸுகாய-மகிழ்ச்சியைஅடைவதற்காக; கர்மாணி—பலன்கருதும்செயல்களை; கரோதி-அனைவரும்அவ்வாறுசெய்கின்றனர்; லோக:- இவ்வுலகில்; ந – ஒருபோதும்இல்லை; தை:-அச்செயல்களால்; ஸுகம்— எந்தமகிழ்ச்சியும்; வா- அல்லது: அன்யத்-வேறாக; உபாரமம்-முழுதிருப்தி: வா-அல்லது; விந்தேத—அடைகிறான்; பூய:-மாறாக; தத: இத்தகையசெயல்களால்; ஏவ-நிச்சயமாக; துஹ்கம்-துன்பங்கள்; யத்-எதுவொன்று; அத்ர-சூழ்நிலைகளின்கீழ்; யுக்தம்-சரியானவழி; பகவான்- மிகச்சிறந்தவரே; வதேன்-தயவுகூர்ந்து அறிவுபுகட்டுங்கள்; ந:-எங்களுக்கு.
விதுரர் கூறினார்: மிகச்சிறந்த முனிவரே, மகிழ்ச்சியடையும் பொருட்டு, இவ்வுலகிலுள்ள அனைவரும் பலன் நோக்குக் கருமங்களில் ஈடுபடுகின்றனர். ஆயினும், முழு திருப்தியையோ அல்லது துன்ப நிவர்த்தியையோ ஒருவரும் காண்பதில்லை. செயல்களால் மாறாக, இத்தகைய செயல்களால் நிலைமை இன்னும் மோசமடைகிறது. எனவே, உண்மையான மகிழ்ச்சியைப் பெற, எப்படி ஒருவர் வாழவேண்டும் என்பதை எங்களுக்குக் கூறியருளுங்கள்.
பதம் 3.5.3
ஜனஸ்ய க்ருஷ்ணாத் விமுகஸ்ய தைவாத்
அதர்ம-சீலஸ்யஸுதுஹ்கிதஸ்ய
அனுக்ரஹாயேஹ சரந்தி நூனம்
பூதானிபவ்யானிஜனார்தனஸ்ய
ஜனஸ்ய- சாதாரண மனிதனின்; க்ருஷ்ணாத்- பரமபுருஷரான கிருஷ்ணரிலிருந்து; விமுகஸ்ய-பகவானுக்கெதிராக தன்முகத்தைத் திருப்பிக்கொண்டவனின்; தைவாத்-புறச்சக்தியின் ஆதிக்கத்தால்; அதர்ம – சீலஸ்ய – அதர்மத்தில் ஈடுபட்டுள்ள ஒருவனின்; ஸு – துஹ்கிதஸ்ய-எப்பொழுதும் மகிழ்ச்சியற்றவனாக இருப்பவனின்; அனுக்ரஹாய—அவர்களிடம்இரக்கம்கொண்டகாரணத்தால்; இஹ – இவ்வுலகில்; சரந்தி – சஞ்சரிக்கின்றனர்; நூனம்சந்தேகமின்றி; பூதானி -நபர்கள்; பவ்யானி-சமூகத்தொண்டர்களானசிறந்தஆத்மாக்கள்; ஜனார்தனஸ்ய-பரமபுருஷரின்.
எம்பெருமானே, பகவானுக்கு அடிபணிய மறுக்கும் வீழ்ந்த ஆத்மாக்களிடம் இரக்கம் காட்டுவதற்காக சமுதாயத் தொண்டர்களான சிறந்த ஆத்மாக்கள், பரமபுருஷரின் சார்பாக பூமியில் சஞ்சரிக்கின்றனர்.
பதம் 3.5.4
தத் ஸாது-வர்யாதிச வர்த்ம சம் ந:
ஸம்ராதிதோ பகவான் யேன பும்ஸாம்
ஹ்ருதி ஸ்திதோ யச்சதி பக்தி-பூதே
ஞானம் ஸ தத்வாதிகமம் புராணம்
தத் – எனவே; ஸாது-வர்ய-முனிவர்களில்சிறந்தவரே; ஆதிச – தயவுசெய்து உபதேசியுங்கள்; வர்த்ம-வழியைசம்—மங்களகரமான; ந: -எங்களுக்கு; ஸம்ராதித:-பக்குவமாகசேவைசெய்ததால்; பகவான் -பரமபுருஷர்; யேன- எதனால்; பும்ஸாம்-ஜீவராசியின்; ஹ்ருதிஸ்தித:-இதயத்தில்வசிக்கும்; யச்சதி—அளிக்கிறார்; பக்தி- பூதே – தூயபக்தருக்கு; ஞானம்-ஞானத்தை; ஸ-அந்த; தத்வ-உண்மை; அதிகமம்-எதனால் ஒருவர் கற்றுக்கொள்கிறாரோ; புராணம் -அதிகாரப்பூர்வமானது, பழமையானது.
எனவே, மாமுனிவரே, பகவானின் உன்னதமான பக்தித்தொண்டைப் பற்றி எனக்கு உபதேசிக்க வேண்டுகிறேன். இதனால் பகவான் திருப்தியடைந்து, பக்தித்தொண்டு முறையினால் தூய்மை அடைந்துள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்ற வேதக் கொள்கைகளுக்கேற்ப, எல்லோருடைய இதயத்திலும் உள்ள பகவான், என் இதயத்தில் இருந்து கொண்டே பரம சத்தியத்தைப் பற்றிய அறிவைப் புகட்டட்டும்.
பதம் 3.5.5
கரோதி கர்மாணி க்ருதாவதாரோ
யானி ஆத்ம-தந்த்ரோ பகவாம்ஸ் த்ரியதீச:
யதா ஸஸர்ஜாக்ர இதம் நிரீஹ:
ஸம்ஸ்தாப்ய வ்ருத்திம் ஜகதோ விதத்தே
கரோதி- அவற்றைச்செய்கிறார்; கர்மாணி—உன்னதசெயல்கள்; க்ருத – ஏற்பதன்மூலம்; அவதார;-அவதாரங்களை;யானிஅவ்வெல்லா; ஆத்ம- தந்த்ர- சுயசுதந்திரமுடைய; பகவான்- பரமபுருஷர்; த்ரி – அதீச:- மூவுவகங்களின்இறைவன்; யதா-அதேஅளவில்; ஸஸர்ஜ-படைத்தார்;அக்ரே-முதலில்; இதம்-இப்பிரபஞ்தோற்றத்தை; நிரீஹ:- விருப்பற்றவர்என்றபோதிலும்; ஸம்ஸ்தாப்யநிலைநாட்டுவதன்மூலம்: வ்ருத்திம் – பராமரிப்பு: ஜகத:- பிரபசஞ்சங்களின்; விதத்தே-அவர்ஒழுங்குபடுத்துவதுபோல்.
மாமுனிவரே, சுதந்திரமானவரும், விருப்பற்றவரும், மூவுலகங்களின் இறைவனும், எல்லாச் சக்திகளையும் ஆள்பவருமான பரமபுருஷர்ப்படி அவதாரங்களை ஏற்று, பிரபஞ்ச தோற்றத்தை அதன் பராமரிப்பிற்குரிய பக்குவமான கட்டுப்பாட்டு விதிகளுடன் படைத்தார் என்பதை விளக்கியருளுங்கள்.
பதம் 3.5.6
யதா புன: ஸ்வே க இதம் நிவேஸ்ய
சேதே குஹாயாம் ஸ நிவ்ருத்த-வ்ருத்தி:
யோகேஸ்வராதீஸ்வர ஏக ஏதத்
அனுப்ரவிஷ்டோ பஹுதா யதாஸீத்
யதா—அதுபோலவே; புன:- மீண்டும்; ஸ்வே- அவருடையதில்; க-விண்வெளியிலிருந்து(விராட்-ரூபம்); இதம்-இந்த; நிவேஸ்ய-உள்ளேபுகுந்து; சேதே- சயனிக்கிறார்; குஹாயாம்- பிரபஞ்சத்தினுள்; ஸ;- அவர் (பரமபுருஷர்); நிவ்ருத்த -முயற்சியின்றி; வ்ருத்தி:- ஜீவனோபாயத்திற்குரிய; யோக -ஈஸ்வர -எல்லா யோக சக்திகளுக்கும் எஜமானர்; அதீஸ்வர:- அனைத்திற்கும்உரிமையாளர்; ஏக:-இரண்டற்றஒருவர்; ஏதத்-இந்த; அனுப்ரவிஷ்ட:- பிறகுபுகுந்து; பஹுதா—எண்ணற்றவைகளால்; யதா—அதுபோல்; ஆஸீத் – இருக்கிறார்.
ஆகாயத்தின் வடிவில் பரவியுள்ள அவரது சொந்த இதயத்தின் மேல் சயனிப்பதன் மூலமாக, முழு சிருஷ்டியையும் அந்த இடத்தில் அவர் வைக்கிறார். பிறகு வெவ்வேறு உயிரினங்களாகத் தோன்றும் பல ஜீவராசிகளாக அவர் விரிவடைகிறார். அவர் எல்லா யோக சக்திகளும் உட்பட, அனைத்திற்கும் உரிமையாளர் என்பதால், தமது சொந்த பராமரிப்பிற்காக அவர் எந்த முயற்சியையும் மேற்கொள்ள வேண்டிய தில்லை. இவ்வாறாக அவர் ஜீவராசிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறார்.
பதம் 3.5.7
க்ரீடன் விதத்தே த்விஜ கோ-ஸுராணாம்
க்ஷேமாய கர்மாணி அவதார-பேதை:
மனோ ந த்ருப்யதி அபி ஸ்ருண்வதாம் ந
ஸுஸ்லோக-மௌலேஸ் சரிதாம்ருதானி
க்ரீடன்—தோன்றும் லீலைகள்; விதத்தே—அவர்செய்கிறார்; த்விஜ-இருபிறப்பெய்தியவர்கள்; கோ-பசுக்கள்; ஸூராணாம்-தேவர்களின்; க்ஷேமாய – நன்மைக்காக; கர்மாணி- உன்னதச்செயல்கள்; அவதார— அவதாரங்கள்; பேதை:— வெவ்வேறாக; மன:-மனம்; ந-ஒருபோதும்இல்லை ; த்ருப்யதி-திருப்திப்படுத்துகிறது; அபி—என்றபோதிலும்; ஸ்ருண்வதாம் -தொடர்ந்துகேட்ட; ந:- எங்களது; ஸு-ஸ்லோக— மங்களகரமான; மௌலே:- பகவானின்; சரித-வரலாறுகளை; அம்ருதானி— அழியாத.
இருபிறப்பெய்தியவர்கள். பசுக்கள் மற்றும் தேவர்கள் ஆகியோரின் தன்மைக்காக, வெவ்வேறு அவதாரங்களாகத் தோன்றும் பகவானின் மங்களகரமான சிறப்பியல்புகளைப் பற்றியும் விவரிக்க வேண்டுகிறேன். பசுவானின் உன்னத செயல்களைப் பற்றி நாங்கள் தொடர்ந்து கேட்ட போதிலும், எங்களுடைய மனங்கள் திருப்தியடையவே இல்லை.
பதம் 3.5.8
யைஸ் தத்வ-பேதைர் அதிலோக-நாதோ
லோகான் அலோகான் ஸஹ லோகபாலான்
அசீக்ளுபத் யத்ர ஹி ஸர்வ-ஸத்வ
நிகாய-பேதோ ‘திக்ருத: ப்ரதீத:
யை:- யாரால்; தத்வ -உண்மை; பேதை:- வேறுபாட்டால்;அதிலோகநாத- அகிலலோகநாயகர்: லோகான்—கிரகங்கள்; அலோகான்- கீழ்ப்பிரதேசங்களிலுள்ளலோகங்கள்; ஸஹ -அதனுடன்; லோகபாலான்-லோகபாலகர்கள்; அசீக்ளுபத் -திட்டமிட்டிருக்கிறார்; யத்ர- எங்கு; ஹி- நிச்சயமாக; ஸர்வ-எல்லா; ஸத்வ-வாழ்வு; நிகாய-ஜீவராசிகள்; பேத:-பேதம்; அதிக்ருத: -நிரப்பியுள்ளன; ப்ரதீத:-அதுஅப்படிகாணப்படுகிறது.
அகிலலோக நாயகர், இயற்கைக் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப அமைந்துள்ள, ஜீவராசிகள் உள்ள வெவ்வேறு கிரகங்களையும், வசிப்பிடங்களையும் படைத்திருப்பதுடன். அவற்றை ஆளும் வெவ்வேறு லோக பாலகர்களையும் கூட படைத்திருக்கிறார்.
பதம் 3.5.9
யேன ப்ரஜானாம் உத ஆத்ம-கர்ம
ரூபாபிதானாம் ச பிதாம் வ்யதத்த
நாராயணோ விஸ்வஸ்ருக் ஆத்ம-யோனிர்
ஏதத் ச நோ வர்ணய விப்ர-வர்ய
யேன- எதனால்; ப்ரஜானாம் – பிறந்தவர்களின்; உத—அதுபோலவே; ஆத்ம-கர்ம-விதிக்கப்பட்டகடமை; ரூப-உருவாம்சம்; அபிதானாம் -முயற்சிசெய்கிறார்; ச – கூட; பிதாம்- வேறுபாடு; வ்யதத்த-பரவியுள்ள; நாராயண:-பரமபுருஷர்; விஸ்வ-ஸ்ருக்பிரபஞ்சசிருஷ்டிகர்த்தா; ஆத்ம-யோனி:-சுயதேவைபூர்த்தியுடைய; ஏதத் – இவையனைத்தையும்; ச-கூட; ந:-எங்களுக்கு; வர்ணய- விவரிக்கவேண்டுகிறேன்; விப்ர-வர்ய – பிராமணர்களில்தலைமையானவரே.
பிராமணர்களில் தலைமையானவரே, சுய திருப்தியுடையவரும், பிரபஞ்ச சிருஷ்டிக்கர்த்தாவுமான நாராயணர், எப்படி வெவ்வேறு ஜீவராசிகளின் இயல்புகள், செயல்கள், உருவங்கள், அம்சங்கள் மற்றும் பெயர்கள் ஆகியவற்றை வெவ்வேறாகப் படைத்துள்ளார் என்பதையும் தயவுகூர்ந்து விளக்கியருளுங்கள்.
பதம் 3.5.10
பராவரேஷாம் பகவன் வ்ரதானி
ஸ்ருதானி மே வ்யாஸ-முகாத் அபீக்ஷ்ணம்
அத்ருப்நும க்ஷுல்ல ஸுகாவஹானாம்
தேஷாம் ருதே க்ருஷ்ண-கதாம்ருதவ்காத்
பர-மேலான; அவரேஷாம் – தாழ்ந்தவைகளானஇவற்றின்; பகவன்- பிரபுவே, மாமுனிவரே; வ்ரதானி-தொழில்கள்; ஸ்ருதானி -கேட்கப்பட்டுள்ளன; மே-என்னால்; வ்யாஸ—வியாசர்; முகாத்— வாயிலிருந்து; அபீக்ஷ்ணம் -திரும்பத்திரும்ப; அத்ருப்நும-நான்திருப்தியடைகிறேன்; க்ஷுல்ல—சிறிதளவு; ஸுக—ஆவஹானாம்— இன்பத்தை விளைவிப்பது; தேஷாம்-அதிலிருந்து; ருதே-இல்லாமல்; க்ருஷ்ண-கதா-பரமபுருஷரான பகவான்ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உரையாடல்கள்; அம்ருதஒகாத்—அமுதத்திலிருந்து.
மாமுனிவரே, மனித சமூகத்தின் உயர்ந்த மற்றும் தாழ்ந்த அந்தஸ்துகளைப் பற்றி, வியாச தேவரின் வாயிலிருந்து திரும்பத் திரும்ப நான் கேட்டிருக்கிறேன். இத்தாழ்ந்த விவகாரங்களும், அவற்றினால் உண்டாகும் மகிழ்ச்சியும் எனக்குத் திகட்டி விட்டன. ஆனால் அமுதம் போன்ற ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களில் அத்திருப்தி எனக்குக் கிடைக்கவில்லை.
பதம் 3.5.11
கஸ் த்ருப்னுயாத் தீர்த்த-பதோ ‘பிதானாத்
ஸத்ரேஷு வ: ஸூரிபிர் ஈட்யமானாத்
ய கர்ண நாடீம் புருஷஸ்ய யாதோ
பவ-ப்ரதாம் கேஹ-ரதிம் சினத்தி
க: யாரந்த மனிதன்; த்ருப்னுயாத்—திருப்தியடையக்கூடிய; தீர்த்த-பத-புண்ணிய தீர்த்தங்களாக உள்ள அவரது தாமரைப் பாதங்கள்; அபிதானாத்—அப்பேச்சுகளிலிருந்து; ஸத்ரேஷு- மனிதசமூகத்தில்; வ:-யாரொருவர்: ஸூரிபி:- சிறந்தபக்தர்களால்; ஈட்யமானாத்—அவ்வாறுவணங்கப்படுபவர்; ய:-யார்; கர்ண- நாடீம்- செவித்துவாரங்களில்; புருஷஸ்ய-ஒருமனிதனின் ;யாத: புகுந்து; பவ—ப்ரதாம்-பிறப்பு, இறப்புகளைவழங்குவது; கேஹ -ரதிம் – குடும்பப்பாசம்; சினத்தி—துண்டிக்கப்படுகிறது.
மாமுனிவர்களாலும், பக்தர்களாலும் வணங்கப்படுபவரும், எல்லா புண்ணிய தீர்த்தங்களுக்கும் உறைவிடமாக உள்ள தாமரைப் பாதங்களை உடையவருமான பகவானைப் பற்றி, போதுமான அளவிற்கு கேட்காமல் திருப்தியடையக் கூடியவர் மனித சமூகத்தில் யார் இருக்கக் கூடும்? இத்தகைய விவகாரங்கள் ஒருவரது செவித்துவாரங்களில் நுழைவதாலேயே அவரது குடும்பப் பாசத்தினால் உண்டான பந்தத்தை அது துண்டித்து விடுகிறது.
பதம் 3.5.12
முனீர் விவக்ஷுர் பகவத்-குணானாம்
ஸகாபி தே பாரதம் ஆஹ க்ருஷ்ண:
யஸ்மின் ந்ருணாம் க்ராம்ய-ஸுகானுவாதைர்
மதிர் க்ருஹீதா நு ஹரே: கதாயாம்
முனி: முனிவர்; விவக்ஷு-விவரித்தார்; பகவத் – பரமபுருஷரின்; குணானாம் —உன்னதகுணங்களை; ஸகா-நண்பர்; அபி—கூட; தே – உங்களுடைய; பாரதம்-மஹாபாரதத்தை; ஆஹ-விவரித்துள்ளார்; க்ருஷ்ண:-க்ருஷ்ணது வைபாயன வியாசர்; யஸ்மின் -எதில்; ந்ருணாம் -மக்களின்; க்ராம்ய – உலகாயத; ஸுக–அனுவாதை:-பௌதிகவிஷயங்களிலிருந்து பெறப்படும் இன்பம்; மதி:- கவனம்; க்ருஹீதாநு-நோக்கிதிருப்புவதற்காகவே; ஹரே: பகவானின்; கதாயாம்—(பகவத்கீதையின்) சொற்பொழிவுகள்.
உங்களது நண்பரான கிருஷ்ண துவைபாயன வியாசர், பகவானின் உன்னத குணங்களை அவரது சிறந்த காவியமான மகாபாரதத்தில் முன்பே விளக்கியுள்ளார். ஆனால் பௌதிக விஷயங்களைக் கேட்பதில் பாமர மக்களுக்குரிய உறுதியான விருப்பத்தை, கிருஷ்ண கதையை (பகவத்கீதை) நோக்கித் திருப்புவதே அதன் முக்கிய நோக்கமாகும்.
பதம் 3.5.13
ஸா ஸ்ரத்ததானஸ்ய விவர்தமானா
விரக்திம் அன்யத்ர கரோதி பும்ஸ:
ஹரே: பதானுஸ்ம்ருதி-நிர்வ்ருதஸ்ய
ஸமஸ்த-துஹ்காப்யயம் ஆக தத்தே
ஸா-கிருஷ்ணரைப் பற்றிய அவ்விஷயங்கள்; ஸ்ரத்ததானஸ்ய- கேட்க ஆவல் கொண்ட ஒருவரின்; விவர்தமானா-படிப்படியாக அதிகரிக்கும்; விரக்திம்-அசிரத்தையை; அன்யத்ர—இத்தகையவிஷயங்களுக்குப்பதிலாக) மற்றவிஷயங்களில்; கரோதி-செய்கிறார்; பும்ஸ-அவ்வாறு ஈடுபட்டுள்ளவரின்; ஹரே:-பகவானின்; பத-அனுஸ்ம்ருதி—பகவானுடைய தாமரைப்பாதங்களின் இடையறாத சிந்தனை; நிர்வ்ருதஸ்ய-இத்தகைய உன்னத ஆனந்தத்தை அடைந்தவர்; ஸமஸ்த-துஹ்க-எல்லாத் துன்பங்களும்; அப்பயம்-அழிக்கப்படுகின்றன; ஆக – தாமதமின்றி; தத்தே-நிறைவேற்றுகிறது.
இத்தகைய விஷயங்களைக் கேட்பதில் இடையறாது ஈடுபட ஆவல் கொண்டுள்ளவருக்கு, மற்ற விஷயங்களிலுள்ள அவரது அசிரத்தையை கிருஷ்ண கதை படிப்படியாக அதிகரிக்கச் செய்கிறது. உன்னத ஆனந்தத்தை அடைந்துள்ள பக்தனால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்கள் இவ்வாறு இடையறாது சிந்திக்கப் படும்பொழுது, அவனது எல்லாத் துன்பங்களையும் அது தாமதமின்றி அழித்துவிடுகிறது.
பதம் 3.5.14
தாஞ் சோச்ய-சோச்யான் அவிதோ ‘நுசோசே
ஹரே: கதாயாம் விமுகான் அகேன
க்ஷிணோதி தேவோ ‘நிமிஷஸ் து யேஷாம்
ஆயுர் வ்ருதா – வாத – கதி – ஸ்ம்ருதீனாம்
தாஞ்—அவர்களனைவரும்; சோச்ய-வருந்தத்தக்க; வருந்தத்தக்கவர்களிலும்; அவித:- அறியாமை; அநுசோசே-நான்இரக்கப்படுகிறேன்; ஹரே:-பகவானின்; கதாயாம்-என்றவிஷயங்களுக்கு; விமுகான்-விரோதமாக; அகேன-பாவச்செயல்களின்காரணத்தால்; க்ஷிணோதிஅழியும்; தேவ:-பகவான்; அனிமி:- நித்தியகாலம்; து -ஆனால்; யேஷாம்-யாரின்; ஆயு:-வாழ்நாள்; வ்ருதா-வீணாக; வாத-தத்துவக்கற்பனைகள்; கதி-இறுதிஇலட்சியம்; ஸ்ம்ருதீனாம்-வெவ்வேறுசடங்குகளைபின்பற்றுபவர்களின்.
முனிவரே, பாவச் செயல்களின் காரணத்தால் ஹரி கதையை விரும்பாமலும், மகாபாரதத்தின் (பகவத்கீதை) நோக்கத்தைப் பற்றி அறியாமலும் இருப்பவர்கள் வருந்தத்தக்கவர்களிலும் வருந்தத் தக்கவர்களாக உள்ளனர். நானும் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். ஏனெனில், தத்துவக் கற்பனைகளிலும், செயல்முறைக்கு ஒவ்வாத நோக்கங்களிலும் வெவ்வேறு சடங்குகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அவர்களுடைய ஆயுள் எப்படி நித்திய காலத்தினால் வீணடிக்கப்படுகிறது என்பதை நான் காண்கிறேன்.
பதம் 3.5.15
தத் அஸ்ய கௌஷாரவ சர்ம-தாதுர்
ஹரே: கதாம் ஏவ கதாஸு ஸாரம்
உத்ருத்ய புஷ்பேப்ய இவார்த-பந்தோ
சிவாய ந: கீர்த்தய தீர்த்த-கீர்த்தே:
தத் – எனவே; அஸ்ய-அவரது; கௌஷாரல-மைத்ரேயரே; சர்ம- தாது: நல்லதிர்ஷ்டங்களைஅருள்பவரின்; ஹரே:-பகவானின்; கதாம் – கதைகள்: ஏவ-மட்டுமே; கதாஸு- எல்லாக்கதைகளுக்கும்; ஸாரம்-சாரம்; உத்ருத்ய-மேற்கோள்காட்டி: புஷ்பேப்ய:-மலர்களிலிருந்து; இவ-அதைப்போன்று :ஆர்த-பந்தோ—துன்புற்றோரின்நண்பரே; சிவாய-நன்மைக்காக; ந:- எங்களின்: கீர்த்தய- கூறியருளுங்கள்; தீர்த்த—தீர்த்தம்; கீர்த்தே:- பெருமைக்குரியவரின்.
மைத்ரேயரே- துன்புற்றோரின் நண்பரே- ஹரி கதை மட்டுமே உலக மக்களுக்கு நன்மை செய்யக்கூடியதாகும். எனவே, மலர்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிப்பதைப் போலவே, அனைத்திற்கும் சாரமான ஹரி கதையைக் கூறியருளுங்கள்.
பதம் 3.5.16
ஸ விஸ்வ-ஜன்ம-ஸ்திதி-ஸம்யமார்தே
க்ருதாவதார: ப்ரக்ருஹீத-சக்தி:
சகார கர்மாணி அதிபூருஷாணி
யானீஸ்வர: கீர்தய தானி மஹ்யம்.
ஸ:-பரமபுருஷர்: விஸ்வ-பிரபஞ்சம்; ஜன்ம-படைப்பு: ஸ்திதி -காத்தல்; ஸம்யம்-அர்தே – நன்குகட்டுப்படுத்தும்நோக்கத்துடன்; க்ருத-ஏற்றார்; அவதார:—அவதாரத்தை ;ப்ரக்ருஹீத—அடையப்பட்ட; சக்தி:–சக்தி: சகார- செய்தார்; கர்மாணி-உன்னதசெயல்களை; அதி – புருஷாணி – அமானுஷ்யமான; யானீ-அவ்வெல்லா: ஈஸ்வர:– பகவான்; கீர்த்தய —தயவுசெய்துகூறுங்கள்; தானி- எல்லாவற்றையும்; மஹ்யம்- எனக்கு.
பரமபுருஷர், பிரபஞ்ச படைப்பிற்காகவும், பராமரிப்புக்காகவும் சர்வ சக்திகளையும் பூரணமாகக் கொண்ட அவதாரங்களை ஏற்றார். பரம ஆளுனரான அவரது அமானுஷ்யமான உன்னத செயல்களைப்
பற்றிய அனைத்தையும் தயவுசெய்து கூரியருளுங்கள்.
பதம் 3.5.17
ஸ்ரீ – சுக உவாச
ஸ ஏவம் பகவான் ப்ருஷ்ட: க்ஷத்ரா கௌஷாரவோ முனி:
பும்ஸாம் நிஹ்ஸ்ரேயஸார்தேன தம் ஆஹ பஹு – மானயன்
ஸ்ரீ – சுக: உவாச-ஸ்ரீசுகதேவகோஸ்வாமிகூறினார்; ஸ:-அவர்; ஏவம்—இவ்வாறு; பகவான்-மாமுனிவர்; ப்ருஷ்ட:-வேண்டப்பட்ட; க்ஷத்ரா—விதுரரால்; கௌஷாரவ:-மைத்ரேயர்; முனி:- மாமுனிவரான; பும்ஸாம் -எல்லோருக்காகவும்; நிஹ்ஸ்ரேயஸ-மிகச்சிறந்தநன்மைக்காக; அர்தேன—அதற்காக; தம்- அவருக்கு; ஆஹ-கூறினார்; பஹு- மிகவும்; மானயன் -மரியாதையளித்து.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மாமுனிவரான மைத்ரேயர், விதுரரை மிகவும் கௌரவித்தபின், அவரது வேண்டுகோளின்படி, எல்லோருடைய
உயர்ந்த நன்மைக்காகவும் பேசத் துவங்கினார்.
பதம் 3.5.18
மைத்ரேயஉவாச
ஸாது ப்ருஷ்டம் த்வயா ஸாதோ லோகான் ஸாது அனுக்ருஹ்ணதா
கீர்த்திம் விதன்வதா லோகே ஆத்மனோ ‘தோக்ஷஜாத்மன:
மைத்ரேய: உவாச- ஸ்ரீமைத்ரேயர்கூறினார்; ஸாது-சர்வநன்மை: ப்ருஷ்டம்-தான்கேட்டுக்கொள்ளப்பட்டேன்; த்வயா-உம்மால்; ஸாதோ- நல்லவவரே; லோகான்- எல்லோரும்; ஸாது அனுக்கரு ஹ்ணதா – நல்ல அநுக்கிரகம் செய்து: கீர்த்திம்- பெருமைகள்; விதன்வதா-பரப்பும்; லோகே -உலகில்: ஆத்மன:-ஆத்மாவின்: அதோக்ஷஜ – உன்னதபுருஷர்; ஆத்மன:-மனம்.
ஶ்ரீ மைத்ரேயர் கூறினார்: விதுரரே, உமக்கு சர்வ மங்களம். அனைத்திலும் மிகவுயர்ந்த நன்மையைப் பற்றி நீர் என்னிடம் கேட்டதன் மூலம், உலகிற்கும், எனக்கும் கருணை காட்டியவரானீர். ஏனெனில், உமது மனம் எப்பொழுதும் உன்னதத்தைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கிறது.
பதம் 3.5.19
நைதச் சித்ரம் த்வயி க்ஷத்தர் பாதராயண-வீர்யஜே
க்ருஹீதோ ‘னன்ய-பாவேன யத் த்வயா ஹரிர் ஈஸ்வர:
ந-ஒருபோதுமில்லை; ஏதத்-இத்தகையகேள்விகள்; சித்ரம்- மிகவும்அற்புதம்; த்வயி—உமக்குள்; க்ஷத்த:-விதுரரே; பாதராயண -வியாசதேவரின்; வீர்ய-ஜே- வீரியத்திலிருந்துபிறந்தவர்; க்ருஹீத: – ஏற்றுக்கொண்டீர்; அனன்ய-பாவேன-சிந்தனையிலிருந்துமாறாமல்; யத்—ஏனெனில்; த்வ்யா – உம்மால்; ஹரி:-பரமபுருஷர்; ஈஸ்வர: – பகவான்.
விதுரரே, நீர் வியாசதேவரின் வீரியத்திலிருந்து பிறந்தவரென்பதால், மாறாத சிந்தனையுடன் பகவானை நீர் ஏற்றுக்கொண்டதில் சிறிதும் ஆச்சரியமில்லை.
பதம் 3.5.20
மாண்டவ்ய-சாபாத் பகவான் ப்ரஜா-ஸம்யமனோ யம:
ப்ராது: க்ஷேத்ரே புஜிஷ்யாயாம் ஜாத: ஸத்யவதீ-ஸுதாத்
மாண்டவ்ய – மகாரிஷியானமாண்டவ்யமுனிவர்; சாபாத்—அவரதுசாபத்தால்; பகவான்-மிகவும்சக்திவாய்ந்த; ப்ரஜா-பிறந்தவர்; ஸம்ய-மன:-மரணத்தின்அதிபதி: யம:-யமராஜன்எனப்படும்; ப்ராது-சகோதரதின்; க்ஷேத்ரே-மனைவியில்; புஜிஷ்யாயாம் – வைப்பு: ஜாத:-பிறந்த; ஸத்யவதீ – சத்தியவதி(விசித்ரவீர்யன்மற்றும்வியாசதேவர்ஆகியஇருவருக்கும்தாய்}; ஸுதாத்- மகனால் (வியாசதேவர்).
முன்பு நீர், ஜீவராசிகளின் மரணத்திற்கு அதிபதியான யமராஜன் என்பதையும், மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் இப்பொழுது விதுராகப் பிறந்திருக்கிறீர் என்பதையும், சத்தியவதியின் மகனான வியாசதேவருக்கும், அவரது சகோதரரின் வைப்பு மனைவிக்கும் பிறந்தவர் என்பதையும் நானறிவேன்.
பதம் 3.5.21
பவான் பகவதோ நித்யம் ஸம்மத: ஸானுகஸ்ய ஹ
யஸ்ய ஞானோபதேசாய மாதிசத் பகவான் வ்ரஜன்
பவான்-நீர்; பகவத:-பரமபுருஷரின்; நித்யம்—நித்திய; ஸம்மத:- அங்கீகரிக்கப்பட்ட; ஸ-அனுகஸ்ய-சகாக்களுள்ஒருவர்; ஹ- இருந்தீர்கள் ;யஸ்ய-யாருடைய ; ஞான-அறிவு; உபதேசாய-உபதேசிப்பதற்காக; மா – எனக்கு; ஆதிசத்—உத்தரவிட்டார்; பகவான்- பரமபுருஷர்; வ்ரஜன்—அவரதுஉலகிற்குத்திரும்பும்பொழுது.
பரமபுருஷ பகவான் அவரது வசிப்பிடத்திற்குச் செல்லுகையில், உமக்கு ஞானோபதேசம் செய்வதற்காகவே என்னிடம் உபதேசங்களை விட்டுச் சென்றார். அத்தகைய நல்லாத்மாவான நீர் பகவானின் நித்திய சகாக்களுள் ஒருவராவீர்.
பதம் 3.5.22
அத தே பகவல்-லீலா யோக-மாயோருப்ரும்ஹிதா:
விஸ்வ-ஸ்திதி-உத்பவாந்தார்தா வர்ணயாமி அனுபூர்வச:
அத—எனவே; தே-உமக்கு; பகவத் – பரமபுருஷர் சம்பந்தமானா லீலா:-லீலைகள்; யோக-மாயா-பகவானின் சக்தி; உரு-அதிகமாக; ப்ரும்ஹிதா :-விரிவடையச் செய்யப்படும்; விஸ்வ – பிரபஞ்சத்தின்; ஸ்திதி- காப்பு: உத்பவ-படைப்பு: அந்த-அழிவு; அர்தா-நோக்கம், வர்ணயாமி.-உமக்குவர்ணிக்கிறேன்; அனுபூர்வச:-முறையாக.
ஆகையால், ஒன்றன் பின் ஒன்றாக நிகழும் பிரபஞ்ச படைப்பு, காப்பு மற்றும் அழிவு ஆகியவற்றிற்காக, தமது உன்னத சக்தியை விரிவடையச் செய்யும் பரமபுருஷரின் லீலைகளைப் பற்றி நான் விளக்குகிறேன்.
பதம் 3.5.23
பகவான் ஏக ஆஸேதம் அக்ர ஆத்மாத்மனாம் விபு:
ஆத்மேச்சானுகதாவ் ஆத்மா நானா-மதி-உபலக்ஷண:
பகவான்- பரமபுருஷர்; ஏக :-இரண்டற்றஒருவர்; ஆஸ- இருந்தார்; இதம்—இப்படைப்பு; அக்ரே-படைக்கப்படுவதற்குமுன்; ஆத்மா—அவரதுசுயஉருவில்; ஆத்மானாம்-ஜீவராசிகளின்; விபு: இறைவன்; ஆத்மா-ஆத்மா; இச்சா—விருப்பம்; அனுகதௌ – ஐக்கியப்பட்டுவிடுவதால்; ஆத்மா-ஆத்மா; நானா-மதி-வேறுபட்டகாட்சி; உபலக்ஷண:-அறிகுறிகள்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவனான பரமபுருஷர், படைப்பிற்கு முன்பே இரண்டற்ற ஒருவராக இருந்தார். அவரது விருப்பத்தினால் தான் சிருஷ்டி சாத்தியமாக்கப்பட்டு, மீண்டும் அவருக்குள்ளேயே ஒடுங்குகிறது. இப்பரமாத்மாவான இவர் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்.
பதம் 3.5.24
ஸ வா ஏஷ ததா த்ரஷ்டா நாபஸ்யத் த்ருஸ்யம் ஏகராட்
மேனே ‘ஸந்தம் இவாத்மானம் ஸுப்த-சக்திர் அஸுப்த-த்ருக்
ஸ:-பரமபுருஷர்; வா-இரண்டிலொன்று; ஏஷ:-இவ்வெல்லா: ததா—அப்பொழுது; த்ரஷ்டா-வருவதைஉணர்ந்தவர்; ந-இல்லை: அபஸ்யத்- காண; த்ருஸ்யம்-பிரபஞ்சபடைப்பு; ஏக- ராட்- மறுக்கமுடியாத உரிமையாளர்; : மேனே – இப்படி எண்ணினார்; அஸந்தம்- இருப்பற்ற ; இவ —அதுபோல்;ஆத்மானம் – முழுமையான தோற்றங்கள்; ஸுப்த- தோன்றாத; சக்தி:- பௌதிகசக்தி; அஸுப்த – தோற்றுவிக்கப்பட்டது ; த்ருக்—அந்தரங்கசக்தி.
அனைத்திற்கும் உரிமையாளரான பகவான்தான் உண்மையான பார்வையாளராவார். அப்பொழுது பிரபஞ்ச படைப்பு நிகழவில்லை என்பதால், தமது அம்சங்களும், பிரிக்கப்பட்ட பின்னப் பகுதிகளும் இல்லாமல், தாம் குறையுடையவராக இருப்பதாக அவர் உணர்ந்தார். ஜட சக்தி செயலற்றுக் கிடந்தது. ஆனால் அந்தரங்க சக்தி மட்டும் தோற்றுவிக்கப்பட்டு இருந்தது.
பதம் 3.5.25
ஸாவா ஏதஸ்ய ஸம்த்ரஷ்டு: சக்தி: ஸத் அஸத்ஆத்மிகா
மாயா நாம மஹா-பாக யயேதம் நிர்மமே விபு:
ஸா_அந்த பகிரங்க சக்தி; வா-இரண்டிலொன்று; ஏதஸ்ய- பகவானின்; ஸம்த்ரஷ்டு-பக்குவமாக காண்பவரின்; சக்தி: சக்தி; ஸத்- அஸத்-ஆத்மிகா—காரண, விளைவுகளாக; மாயாநாம -மாயை என்றழைக்கப்படும்; மஹா-பாக-பாக்கியவானே; யயா- எதனால்; இதம்- இந்த ஜட உலகம்: நிர்மமே-நிர்மாணிக்கப்பட்டது: விபு: சர்வசக்திபடைத்தவர்.
பகவான் காண்பவர், காணப்படுவதான பகிரங்க சக்தி, பிரபஞ்ச தோற்றத்தில் செயல், விளைவுகளாக செயற்படுகின்றது. சிறந்த பாக்கியசாலியான விதுரரே, இந்த பகிரங்க சக்தியானது மாயா எனப்படுகிறது. இச்சக்தியின் மூலமாகத்தான் முழு பௌதிகத் தோற்றமும் சாத்தியமாக்கப்படுகிறது.
பதம் 3.5.26
கால-வ்ருத்யா து மாயாயாம் குண-மய்யாம் அதோக்ஷஜ:
புருஷேணாத்ம-பூதேன வீர்யம் ஆதத்த வீர்யவான்
கால- நித்தியகாலம்: வ்ருத்யா-அதன்ஆதிக்கத்தால்; து- ஆனால்; மாயாயாம்-பகிரங்க சக்தியில் :குண-மய்யாம் -இயற்கைக்குணங்களில்; அதோக்ஷஜ:-பரமபுருஷர்; புருக்ஷேண-புருஷஅவதாரத்தால் ; ஆதத்ம-பூதேன-பகவானின் விரிவங்கமான: வீர்யம்- வித்தாக உள்ள ஜீவராசிகளை : ஆதத்த -விதைத்தார்; வீர்யவான்—பரமஜீவனானபகவான்.
பரமபுருஷர்.தமது விரிவங்கமாகிய, உன்னதமான புருஷாவதார அம்சத்தில், முக்குணங்களைக் கொண்ட ஜட இயற்கையை கருவுறச் செய்கிறார். இவ்வாறாக நித்திய காலத்தின் ஆதிக்கத்தால் ஜீவராசிகள் தோன்றுகின்றன.
பதம் 3.5.27
ததோ ‘பவன் மஹத்-தத்வம் அவ்யக்தாத் கால-சோதிதாத்
விஜ்ஞானாத்மாத்ம-தேஹ-ஸ்தம் விஸ்வம் வ்யஞ்சம்ஸ் தமோ-நுத:
தத:-அதன்பின்; அபவத்-தோற்றத்திற்குவந்தது; மஹத்—பரம: தத்வம் -மொத்த பௌதிக சக்தி; அவ்யக்தாத்-தோற்றத்திற்கு வராததிலிருந்து; கால-சோதிதாத்-காலத்தின் ஆதிக்கத்தால்; விஞ்ஞான -ஆத்மா-தூயநற்குணம்; ஆத்ம -தேஹ -ஸ்தம்—உடலில்அமைந்துள்ள; விஸ்வம்- எல்லாப்பிரபஞ்சங்களும்; வ்யஞ்சன்-தோற்றுவிக்கும்; தம:-நுத:-பரமஒளியை.
அதன்பிறகு, நித்திய காலத்தினால் தூண்டப்பட்டு மஹத்-தத்வம் எனப்படும் மொத்த ஜட சக்தி தோன்றியது. பரமபுருஷர் தமது சொந்த உடலிலிருந்து, தூய நற்குணமான இந்த மஹத்-தத்வத்திற்குள், பிரபஞ் தோற்றத்திற்குரிய விதைகளைப் பதித்தார்.
பதம் 3.5.28
ஸோ ‘பி அம்ச-குண காலாத்மா பகவத் த்ருஷ்டி கோசர:
ஆத்மானம் வ்யகரோத் ஆத்மா விஸ்வஸ்யாஸ்ய ஸிஸ்ருக்ஷய
ஸ:-மஹத்—தத்வம்; அபி-கூட; அம்ச-புருஷவிரிவங்கம் (அம்சம்); குண-முக்கியமாக; தமோகுணம்; கால-ஆயுட்காலம்; ஆத்மா-முழுஉணர்வு; பகவத்-பரமபுருஷர்; த்ருஷ்டி-கோசர-: பார்வையின்தூரம்; ஆத்மானம்—பல்வேறுஉருவங்கள்; வ்யகரோத்— வேறுபடுத்தப்பட்ட; ஆத்மா —பிறப்பிடம்; விஸ்வஸ்ய—வரப்போகும்ஜீவன்கள்; அஸ்ய-இதன்; ஸிஸ்ருக்ஷயா-பொய்அகங்காரத்தைஉற்பத்திசெய்கிறது.
அதன்பிறகு மஹத்-தத்துவமானது, தோற்றுவிக்கப்படவிருக்கும் ஜீவன்களின் களஞ்சியமாக, பல்வேறு வடிவங்களில் தன்னைப் பிரித்துக் கொண்டது. பொய் அகங்காரத்தை உற்பத்தி செய்யும் இந்த மஹத்-தத்துவம் பிறகு அறியாமைக் குணம் மேலோங்கியதாக மாறுகிறது.பரம புருஷரின் முழு விரிவாகிய அது, கருவுறச் செய்வதற்குரிய அடிப்படைப் பொருட்கள் மற்றும் காலம் ஆகியவற்றின் முழு உணர்வை கொண்டதாகும்.
பதம் 3.5.29
மஹத்-தத்வாத் விகுர்வாணாத் அஹம்-தத்வம் வ்யஜாயத
கார்ய-காரண-கர்த்ராத்மா பூதேந்ரிய-மனோ-மய:
வைகாரிகஸ் தைஜஸஸ் ச தாமஸஸ் சேதி அஹம் த்ரிதா
மஹத்-மிகப்பெரிய; தத்வாத்- காரணஉண்மையிலிருந்து; விகுர்வாணாத்—மாற்றப்பட்டு; அஹம்—பொய்அகங்காரம்; தத்வம்— பௌதிகஉண்மை; வ்யஜாயத-தோன்றியது; கார்ய – விளைவுகள்; காரண-காரணம் ; கர்த்ரு-செய்பவர்; ஆத்மா-ஆத்மாஅல்லதுமூலம்; பூத-பௌதிகமூலப்பொருட்கள்; இந்ரிய—புலன்கள்; மன:-மய:-மனத்தளத்தில்சுழல்பவர்கள்; வைகாரிக:-சத்வ (நற்) குணம் ; தைஜஸ:-ரஜோ (தீவிர) குணம்; ச-மற்றும்; தாமஸ:-தமோ (அறியாமை) குணம்; ச-மேலும்; இதி- இவ்வாறாக; அஹம்:-பொய்அகங்காரம்; த்ரிதா-மூவகை.
மிகப்பெரிய காரண உண்மை எனப்படும் மஹத்-தத்வம், பொய் அகங்காரமாக உருமாறுகிறது. இந்த பொய் அகங்காரமானது, காரணம், விளைவு மற்றும் செய்பவர் என மூன்று நிலைகளில் தோற்றுவிக்கப்படுகிறது. மனத்தளத்திலுள்ள இத்தகைய செயல்கள் அனைத்தும், பஞ்ச பூதங்களையும், ஸ்தூல புலன்களையும் மற்றும் மனக் கற்பனையையும் ஆதாரமாகக் கொண்டுள்ளன. பொய் அகங்காரமானது, சத்வம், ரஜஸ், தமஸ் எனும் மூவேறு குணங்களில் பிரதிநிதிக்கிறது.
பதம் 3.5.30
அஹம்-தத்வாத் விகுர்வாணான் மனோ வைகாரிகாத் அபூத்
வைகாரிகாஸ் ச யே தேவா அர்தாபிவ்யஞ்சனம் யத
அஹம்தத்வாத்—பொய்அகங்காரத்திலிருந்து; விகுர்வாணாத் -உருமாற்றத்தால், மன:-மனம்; வைகாரிகாத்-சத்வகுணத்துடன்கலப்பதால் : அபூத்-உற்பத்திசெய்யப்படுகிறது; வைகாரிகா:-சத்வகுணத்துடன்கலப்பதால்; ச-மேலும்; யே-இவ்வெல்லா; தேவா:— தேவர்கள்; அர்த-உணரக்கூடிய; அபிவ்யஞ்சனம்-பௌதிகஅறிவு: யத – மூலம்.
பொய் அகங்காரம் சத்வ குணத்துடன் கலப்பதால் மனமாக உரு மாற்றப்படுகிறது. ஜட உலகை ஆளும் தேவர்களும் கூட, பொய் அகங்காரம் மற்றும் சத்வ குணம் ஆகியவற்றின் சேர்க்கையிலிருந்து தான் உண்டாகின்றனர்.
பதம் 3.5.31
தைஜஸானீந்ரியாணி ஏவ ஞான-கர்ம-மயானி ச
தைஜஸானி-ரஜோகுணம்; இந்ரியாணி – புலன்கள்; ஏவ – நிச்சயமாக ;ஞான-அறிவு, தத்துவார்த்தகற்பனைகள்; கர்ம-பலன்கருதும்செயல்கள் ; மயானி—மேலோங்கிய; ச-மற்றும்.
புலன்கள், பொய் அகங்காரத்தினால் ஆளப்படும் ரஜோ குணத்தி லிருந்து உற்பத்தியானவை என்பதில் சந்தேகமில்லை. எனவே, ரஜோ குணத்தில், தத்வார்த்தமான கற்பனை அறிவும், பலன் கருதும் செயல்களும் ஆட்சி செலுத்துகின்றன.
பதம் 3.5.32
தாமஸோ பூத-ஸூக்ஷ்மாதிர் யத: கம் லிங்கம் ஆத்மன:
தாமஸ:-ரஜோகுணத்திலிருந்து: பூத – ஸூக்ஷ்ம- ஆதி: சூட்சுமமானபுலன்பொருட்கள்; யத:- எதிலிருந்து; கம்- ஆகாயம்: லிங்கம்—உருவச்சின்னம்; ஆத்மன:-பரமஆத்மாவின்.
ஆகாயம் ஓசையிலிருந்து உண்டாகிறது. ஓசை, தீவிர அகங்காரத்திலிருந்து உருமாற்றம் பெறுகின்றது. அதாவது, ஆகாயம் பரம ஆத்மாவின்ஓர் உருவச் சின்னமாகும்.
பதம் 3.5.33
கால-மாயாம்ச-யோகேன பகவத் வீக்ஷிதம் நப:
நபஸோ ‘நுஸ்ருதம் ஸ்பர்சம் விகுர்பன் நிர்மமே ‘நிலம்
கால-காலம்; மாயா-புறச்சக்தி; அம்ச-யோகேன-சிறிதுகலப்படமுள்ள; பகவத்-பரமபுருஷர்; வீக்ஷிதம்- மீது பார்வையைச் செலுத்தினார்; நப:
ஆகாயத்தின்; நபஸ:-ஆகாயத்திலிருந்து; அநுஸ்ருதம்—அவ்வாறு தொடர்பு கொண்டதால்; ஸ்பர்சம் -ஸ்பரிசம்; விகுர்வத்-உருமாற்றப்பட்டதால்; நிர்மமே -படைக்கப்பட்டது; அநிலம்-காற்று.
அதன்பிறகு, நித்திய காலம் மற்றும் புறச் சக்தி ஆகியவற்றினால் ஒரு பகுதி கலப்படமாகியிருந்த ஆகாயத்தின் மீது பரமபுருஷர் பார்வையைச் செலுத்தினார். இவ்வாறாக ஸ்பரிச உணர்வு விருத்தியடைந்தது. இதிலிருந்து ஆகாயத்திலுள்ள காற்று உற்பத்தியானது.
பதம் 3.5.34
அநிலோ ‘பி விகுர்வாணோ நபஸோரு-பலான்வித:
ஸஸர்ஜ ரூப-தன்மாத்ரம் ஜ்யோதிர் லோகஸ்ய லோசனம்
அநில:- காற்று; அபி-கூட ;விகுர்வாண:-உருமாற்றப்பட்டு; நபஸா -ஆகாயம்; உரு-பல-அன்வித:-மிகவும்சக்திவாய்ந்த; ஸஸர்ஜ-உண்டாக்கியது; ரூப-வடிவம்; தத் – மாத்ரம்- புலன்உணர்வு: ஜ்யோதி:-மின்சாரம்; லோகஸ்ய-உலகின்: லோசனம் -காண்பதற்குரியஒளி.
அதன்பிறகு, மிகவும் சக்திவாய்ந்த காற்று ஆகாயத்துடன் பின்னிப் பிணைந்ததனால், வடிவத்தை அறியும் சக்தி உண்டாயிற்று. பிறகு, வடிவத்தை அறியும் சக்தியானது, உலகைக் காண உதவும் ஒளியான, மின்சாரமாக உருமாறியது.
பதம் 3.5.35
அநிலேனான்விதம் ஜ்யோதிர் விகுர்வத் பரவீக்ஷிதம்
ஆதத்தாம்போ ரஸ-மயம் கால-மாயாம்ச யோகத:
அநிலேன—காற்றால்; அவ்விதம்-பின்னிப் பிணைந்தது; ஜ்யோதி: -மின்சாரம்; விகுர்வத்-உருமாற்றப்பட்டு; பரவீக்ஷிதம்- பகவானால் பார்வையைச் செலுத்தப்பட்டு; ஆதத்த—உண்டானது; அம்ப: ரஸ – மயம் – நீருடன்சுவையும்; கால—நித்தியகாலத்தின்; மாயா-அம்ச – மற்றும்புறச்சக்தி: யோகத-கலப்படத்தினால்.
காற்று மின்சார சக்தியால் நிரப்பப்பட்டதும், பகவான் அதைப் பார்த்தார். அப்பொழுது, நித்திய காலம் மற்றும் புறச்சக்தி ஆகியவற்றின் கலப்படத்தினால் நீரும், சுவையும் உண்டாயின.
பதம் 3.5.36
ஜ்யோதிஷாம்போ ‘நுஸம்ஸ்ருஷ்டம் விகுர்வத் ப்ரஹ்ம-வீக்ஷிதம்
மஹீம் கந்த-குணாம் ஆதாத் கால-மாயாம்ச- யோகத:
ஜ்யோதிஷா-மின்சாரம்: அம்ப:—நீர்; அதுலம்ஸ்ருஷ்டம் -இவ்வாறாக உண்டாக்கப்பட்டது; விகுர்வத்-உருமாற்றத்தினால்; ப்ரஹ்ம-பகவான்: வீக்ஷிதம் -அவ்வாறு பார்த்தார்: மஹீம்-பூமி: கந்தவாசனை; குணாம்-தகுதி; ஆதாத்—படைக்கப்பட்டது; கால – நித்தியகாலம்; மாயா – புறச்சக்தி : அம்ச – ஒரு பகுதி மட்டும்: யோகத:-கலப்படத்தினால்,
அதன்பிறகு, மின்சாரத்திலிருந்து உண்டான நீர், பரமபுருஷரின் பார்வைக்கு இலக்காகி நித்திய காலத்துடனும், புறச் சக்தியுடனும் கலந்தது. இவ்வாறாக, வாசனை மேலோங்கிய தன்மையைக் கொண்ட பூமியாக அது உருமாற்றப்பட்டது.
பதம் 3.5.37
பூதானாம் நப-ஆதீனாம் யத் யத் பவ்யாவராவரம்
தேஷாம் பரானுஸம்ஸர்காத் யதா ஸங்க்யம் குணான் விது:
பூதானாம்—பௌதிகமூலப்பொருட்கள்அனைத்தின்; நப: -ஆகாயம்: ஆதீனாம் – இருந்துஆரம்பமாகும்; யத்-போன்றது; யத்-மேலும்அவ்வாறு; பவ்ய – நற்குணவானே; அவர – தாழ்ந்த; வரம்-உயர்ந்த; தேஷாம் – அவையனைத்தும்; பர-பரமபுருஷர்; அநுஸம்ஸர்காத் – கடைசிப்பூச்சு; யதா—பலவாக; ஸங்க்யம் – எண்; குணான்-குணங்கள்; விது:-நீர்அறிவீராசு.
நற்குணவானே, ஆகாயத்திலிருந்து, பூமி வரையுள்ள எல்லா பௌதிக மூலப் பொருட்களிலும், உயர்ந்ததாகவும் தாழ்ந்ததாகவும் உள்ள எல்லா குணங்களுக்கும், பரமபுருஷரின் பார்வையாக உள்ள கடைசிப் பூச்சுதான் காரணம்.
பதம் 3.5.38
ஏதே தேவா: கலா விஷ்ணோ: கால-மாயாம்ச-லிங்கின:
நானாத்வாத் ஸ்வ-க்ரியானீசா: ப்ரோசு: ப்ராஞ்ஜலயோ விபும்:
ஏதே-இவ்வெல்லாபௌதிகமூலப்பொருட்களின்; தேவா: ஆளும் தேவர்கள்; கலா:-பின்னப் பகுதிகள் (அம்சங்கள்): விஷ்ணோ: – பரமபுருஷரின்; கால – காலம்; மாயா—புறச்சக்தி; அம்ச— அம்சம்; விங்கின:- அவ்வாறு உருப்பெற்றுள்ள; நானாத்வாத்- பலவற்றின் காரணத்தால்; ஸ்வ-க்ரியா – சுய கடமைகளை; அனீசா:-செய்யமுடியாததால்; ப்ரோசு:-கூறினர்; ப்ராஞ்ஜலய:-கவர்ச்சியான; விபும்-பசுவானிடம்.
மேற்குறிப்பிட்ட பௌதிக மூலப் பொருட்களை ஆள்பவர்களான தேவர்கள், பகவான் விஷ்ணுவின் சக்தி வாய்ந்த அம்சங்களாவர். புறச்சக்திக்கு உட்பட்ட நித்திய காலத்தினால் உருவமைக்கப்பட்டுள்ள அவர்கள் பகவானின் பின்னப் பகுதிகளாவர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட, பிரபஞ்ச இயக்கத்திற்குரிய பல்வேறு கடமைகளை அவர்களால் நிறைவேற்ற முடியாததால், அவர்கள் பின்வருமாறு பகவானிடம் மனங்கவரும் பிரார்த்தனைகளைச் செய்தனர்.
பதம் 3.5.39
தேவா ஊசு:
நமாம தே தேவ பதாரவிந்தம்
ப்ரபன்ன-தாபோபசமாதபத்ரம்
யன் – மூல-கேதா யதயோ ‘ஞ்ஜஸோரு-
ஸம்ஸார-துஹ்கம் பஹிர் உத்க்ஷிபந்தி
தேவா: ஊசு:- தேவர்கள்கூறினர்; நமாம-எங்களுடையபணிவானவணக்கங்கள்; தே — தங்களுடையதேவ- எம்பெருமானே; பத- அரவிந்தம்-தாமரைப்பாதங்கள்; ப்ரபன்ன—சரணடைந்த; தாப – துன்பம்; உபசம—கீழ்ப்படுத்துகிறது; ஆதபத்ரம் – குடை ;யத்-மூல – கேதா:-தாமரைப்பாதங்களின்புகலிடம்; யதய:-மாமுனிவர்கள்; அஞ்சஸா-முழுமையாக; உரு – பெரும்; ஸம்ஸார-துஹ்கம் – பௌதிகவாழ்வின்துன்பங்கள்; பஹி :-வெளியில்; உத்க்ஷிபந்தி- – பலாத்காரமாகஎறிந்துவிடுகின்றனர்.
தேவர்கள் கூறினர்: எம்பெருமானே, குடையைப் போன்றுள்ள தங்களுடைய தாமரைப் பாதங்கள், சரணடைந்த ஆத்மாக்களை எல்லா பௌதிகத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகின்றன. அவற்றைப் புகலிடம் கொண்ட முனிவர்கள் பௌதிகத் துன்பங்களையெல்லாம் எறிந்து விடுகின்றனர். எனவே தங்களுடைய தாமரைப் பாதங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்.
பதம் 3.5.40
தாதர் யத் அஸ்மின் பவ ஈச ஜீவாஸ்
தாப-த்ரயேணாபிஹதா ந சர்ம
ஆத்மன் லபந்தே பகவம்ஸ் தவாங்ரி
ச்சாயாம் ஸ-வித்யாம் அத ஆஸ்ரயேம
தாத: -தந்தையே; யத்-ஏனெனில்; அஸ்மின்—இதில்; பவே – ஜடஉலகம் :ஈசஎம்பெருமானே; ஜீவ: ஜீவராசிகள்; தாப-துன்பங்கள்; த்ரயேன-மூன்றால்; அபிஹதா: எப்பொழுதும்கலவரமடைந்துள்ளனர்; ந—ஒருபோதுமில்லை; சர்ம-மகிழ்ச்சியில்; ஆத்மன் – ஆத்மா; லபந்தே -பெறுகின்றனர்; பகவான் – பரமபுருஷரே; தவ — தங்களுடைய; அங்ரி- சாயாம் -தாமரைப்பாதங்களின்நிழல்; ஸ – வித்யாம் – அறிவுநிரம்பிய; அத:-அடைகின்றனர்; ஆஸ்ரயேம-புகலிடத்தை.
தந்தையே, எம்பெருமானே, பரமபுருஷரே, ஜட உலகிலுள்ள ஜீவராசிகள் மூவகைத் துன்பங்களால் அலைக்கழிக்கப்படுவதால், அவர்களால் எவ்வித மகிழ்ச்சியையும் அடைய முடியாது. எனவே அறிவுமயமாக உள்ள உங்களுடைய தாமரைப் பாதங்களின் நிழலில் அவர்கள் அடைக்கலம் புகுகின்றனர். நாங்களும் அவற்றையே புகலிடமாகக் கொள்கிறோம்.
பதம் 3.5.41
மார்கந்தி யத் தே முக-பத்ம-நீடைஸ்
சந்த:-ஸுபர்ணைர் ருஷயோ விவிக்தே
யஸ்யாக-மர்ஷோத-ஸரித்-வராயா:
பதம் பதம் தீர்த்த-பத: ப்ரபன்னா:
மார்கந்தி- தேடியலையும்; யத்-போன்று: தே-தங்களுடைய; முக – பத்ம – தாமரை போன்ற முகம்; நீடை:-இத்தகைய ஒரு தாமரையின் புகலிடத்தை ஏற்றுக் கொண்டவர்களால்; சந்த:-வேதமந்திரங்கள்; ஸுபர்ணை:-சிறகுகளால்; ருஷய:-ரிஷிகள்; விவிக்தே – தெளிந்தமனதுடைய ; யஸ்ய-யாருடைய; அக—மர்ஷ – உத— எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுதலையளிப்பது; ஸரித் – நதிகள்; வராயா:-மிகச்சிறந்த; பதம்பதம் – ஒவ்வொருஅடியிலும்; தீர்த்த-பத:- தீர்த்தஸ்தலங்களுக்கு நிகரான தாமரைப் பாதங்களை உடையவர்; ப்ரபன்னா:-புகலிடம்கொண்டு.
பகவானின் தாமரைப் பாதங்கள் எல்லா தீர்த்த ஸ்தலங்களுக்கும் புகலிடமாக விளங்குகின்றன. வேதங்கள் எனும் சிறகுகளால் தூக்கிச் செல்லப்படும் தெளிந்த மனதுடைய மாமுனிவர்கள், பறவைக்கூடு போன்ற உங்களுடைய தாமரைத் திருமுகத்தையே எப்பொழுதும் தேடி அலைகின்றனர். அவர்களில் சிலர், மிகச்சிறந்த நதியும், எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் ஒருவரை விடுவிப்பதுவுமான கங்கையைப் புகலிடம் கொள்வதன் மூலமாக, ஒவ்வொரு அடிக்கும் உங்களுடைய தாமரைப் பாதங்களையே சரணடைகின்றனர்.
பதம் 3.5.42
யச் ச்ரத்தயா ஸ்ருதவத்யா ச பக்த்யா
ஸம்ருஜ்யமானே ஹ்ருதயே ‘வதாய
ஞானேன வைராக்ய-பலேன தீரா
வ்ரஜேம தத் தே ‘ங்ரி-ஸரோஜ-பீடம்
யத் – எது; ஸ்ரத்தயா-சிரத்தையினால்; ஸ்ருவத்யா-கேட்பதாலேயே; ச – கூட; பக்த்ய-பக்தியுடன்; ஸம்ருஜ்யமானே-தூய்மையடைந்து; ஹ்ருதயே-இதயத்தில்; அவதாய-தியானம்; ஞானேன – அறிவால்; வைராக்ய-துறவு; பலேன – வலிமையால்; தீரா: – சாந்தமடைந்த; வ்ரஜேம-நோக்கிச்செல்லவேண்டும்; தத் – அந்த; தே – தங்களுடைய; அங்ரி-பாதங்களை; ஸரோஜ- பீடம் – தாமரைப்புகலிடம்.
உங்களுடைய தாமரைப் பாதங்களைப் பற்றி சிரத்தையுடனும், பக்தியுடனும் கேட்பதாலும், இதயத்தில் அவற்றை தியானிப்பதாலுமே உடனடியாக ஒருவர் ஞான ஒளி பெற்று, துறவின் வலிமையால் அமைதி பெறுகிறார். எனவே நாங்கள் உங்களுடைய தாமரைப் பாதங்கள் எனும் சரணாலயத்தைப் புகலிடம் கொள்ளவேண்டும்.
பதம் 3.5.43
விஸ்வஸ்ய ஜன்ம-ஸ்திதி-ஸம்யமார்தே
க்ருதாவதாரஸ்ய பதாம்புஜம் தே
வ்ரஜேம ஸர்வே சரணம் யதி ஈச
ஸ்ம்ருதம் ப்ரயச்சதி அபயம் ஸ்வ-பும்ஸாம்
விஸ்வஸ்-பிரபஞ்ச தோற்றத்தின்; ஜன்ம-படைப்பு; ஸ்திதி— காப்பு: ஸம்யம-அர்தே-அழிவுக்கும்கூட; க்ருத – ஏற்றீர்கள்; அவதாரஸ்ய—அவதாரங்களின்; பத—அம்புஜம் – தாமரைப் பாதங்கள்; தே – தங்களுடைய; வ்ரஜேம- நாங்கள் தஞ்சமடைகிறோம்;ஸர்வே – நாங்களனைவரும்; சரணம்-புகலிடம்; யத்-எது; ஈச—எம்பெருமானே: ஸ்மிருதம்–ஞாபகம்; ப்ரயச்சதி-அளிக்கும்; அபயம் – தைரியம் : ஸ்வ—பும்ஸாம்பக்தர்களின்.
எம்பெருமானே, பிரபஞ்ச தோற்றத்தின் படைத்தல், காத்தல், மற்றும் அழித்தல் ஆகியவற்றிற்காக நீங்கள் அவதாரங்களை ஏற்கிறீர்கள். எனவே தங்களுடைய தாமரைப் பாதங்களை நாங்கள் தஞ்சமடைகிறோம். ஏனெனில் அப்பாதங்கள் உங்களுடைய பக்தர்களுக்கு எப்பொழுதும் ஞாபகத்தையும், தைரியத்தையும் அளிக்கின்றன.
பதம் 3.5.44
யத் ஸானுபந்தே ‘ஸதி தேஹ-கேஹே
மமாஹம் இதி ஊட-துராக்ரஹாணாம்
பும்ஸாம் ஸுதூரம் வஸதோ ‘பி புர்யாம்
பஜேம தத் தே பகவன் பதாப்ஜம்
யத்—ஏனெனில்; ஸ – அனுபந்தே-சிக்கிக்கொண்டதால்: அஸதி – இவ்வாறு; தேஹ—ஸ்துலஜடஉடல்; கேஹே-வீட்டில்; மம – எனது; அஹம் —நான்; இதி-இவ்வாறாக; ஊட-பெரும் ஆழமான: துராக்ரஹாணாம் – விரும்பத்தகாதஆசை; பும்ஸாம்-மனிதர்களின்; ஸு தூரம் – தூரத்தில்; வஸத – வாழும்; அபி-என்றாலும்: புர்யாம் – உடலுக்குள்; பஜேம-நாங்கள்வணங்குகிறோம்; தத்- எனவே; தே – தங்களுடைய; பகவன்-பகவானே; பத-அப்ஜம்-தாமரைப்பாதங்களை.
பகவானே, நிலையற்ற உடலிலும், உறவினர்களிடமும் விரும்பத்தகாத ஆசை கொண்டிருப்பவர்களும் “நான்’, ‘எனது” என்ற எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பவர்களும், தங்களுடைய சொந்த உடல்களுக்குள் உங்களுடைய தாமரைப் பாதங்களைப் பெற்றிருந்த போதிலும், அவற்றை அவர்களால் காணமுடியவில்லை. ஆனால் உங்களுடைய தாமரைப் பதங்களை நாங்கள் தஞ்சமடைகிறோம்.
பதம் 3.5.45
தான் வை ஹி அஸத்-வ்ருத்திபிர் அக்ஷிபிர் யே
பராஹ்ருதான்தர்-மனஸ: பரேச
அதோ ந பஸ்யந்தி உருகாய நூனம்
யே தே பதன்யாஸு-விலாஸு-லக்ஷ்யா:
தான்- பகவானின் தாமரைப் பாதங்கள்; வை-நிச்சயமாக; ஹி- அதற்காக; அஸத்-பௌதிகமான: வ்ருத்திபி-புறச்சக்தியால் வசீகரிக்கப்ட்டவர்கள்; அக்ஷிபி:-புலன்களால்; யே—அந்த; பராஹ்ருத -காணப்படாத; அந்த: – மனஸ:-உள்மனதின்; பரேச-பரமபுருஷரே : அதோ- எனவே; ந-ஒருபோதுமில்லை: பஸ்யந்தி-காணமுடியும்; உருகாய-மிகச்சிறந்தவரே; நூனம்-ஆனால்; யே-அவர்கள்; தே – தங்களுடைய; பதன்யாஸ–செயல்கள்; விலாஸ-உன்னதஇன்பம்; லக்ஷ்யா:-காண்பவர்கள்.
மிகச்சிறந்த பரமபுருஷரே, யாருடைய உள்நோக்கம் பௌதிகச் செயல்களால் அளவுக்கதிகமாக பாதிப்படைத்துள்ளதோ, அத்தகைய குற்றவாளிகளால் உங்களுடைய தாமரைப் பாதங்களைக் காண முடியாது. ஆனால் உன்னதமான உங்களுடைய செயல்களை அனுபவிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட உங்களது தூய பக்தர்களால் அவற்றைக் காண முடியும்.
பதம் 3.5.46
பானேன் தே தேவ கதா-ஸுதாயா:
ப்ரவ்ருத்த-பக்த்யா விசதாசயா யே
வைராக்ய-ஸாரம் ப்ரதிலப்ய போதம்
யதாஞ்சஸான்வீயுர் அகுண்ட-திஷ்ண்யம்
பானேன-குடிப்பதன்மூலம்; தே- உங்களைப் பற்றிய ; தேவ – பகவானே ; கதா—கதைகள்; ஸுதாயா:—அமிர்தத்தின்; ப்ரவ்ருத்த – உயர்ந்த ஞானோதயம் பெற்று; பக்த்யா- பக்தித் தொண்டால்; விசத— ஆசயா:- உறுதியான நோக்கத்துடன்; யே-அவர்கள்; வைராக்ய -ஸாரம்-துறவின் சாராம்சம்: ப்ரதிலப்ப—அடைந்து; போதம்-புத்தி; யதா—அந்த அளவிற்கு; அஞ்சஸா -விரைவாக ; அன்வீயு: – அடைகின்றனர்; அகுண்ட – திஷ்ண்யம்- ஆன்மீக வெளியிலுள்ளவை குண்டவோகத்தை.
பகவானே, உறுதியான நோக்கத்தினால், அறிவுபூர்வமான பக்தித்தொண்டு நிலையை அடைபவர்கள், அறிவு மற்றும் துறவு ஆகியவற்றின் முழு ஞானத்தைப் பெற்று, அமுதம் போன்ற உங்களுடைய கதைகளைப் பருகுவதாலேயே ஆன்மீக ஆகாயத்திலுள்ள வைகுண்ட லோகத்தை அடைகின்றனர்.
பதம் 3.5.47
ததாபரே சாத்ம-ஸமாதி-யோக-
பலேன ஜித்வா ப்ரக்ருதிம் பலிஷ்டாம்.
த்வாம் ஏவ தீரா: புருஷம் விசந்தி
தேஷாம் ஸ்ரம: ஸ்யான் ந து ஸேவயா தே
ததா—பொறுத்தவரை; அபரே-மற்றவர்களை; ச – கூட; ஆத்ம – ஸமாதி—உன்னத தன்னுணர்வு: யோக-மார்க்கம்; பலேன – பலத்தினால்; ஜித்வா-வென்று; ப்ரக்ருதிம்-அடையப்பட்ட இயற்கை அல்லது இயற்கைக் குணங்கள் : பலிஷ்டாம் -மிகவும்சக்திவாய்ந்த; த்வாம்—தாங்கள்; ஏவ-மட்டுமே: தீரா:- அமைதியடைகின்றனர்; புருஷம் – நபர்; விசந்தி-நுழைகிறார்; தேஷாம்-அவர்களுக்கு; ஸ்ரம:- அதிகசிரமம்; ஸ்யாத் – எடுத்துக்கொள்ளவேண்டும்; ந- ஒருபோதுமில்லை; து-ஆனால்: ஸேவயா-சேவைசெய்வதால்; தே-உங்களின்.
உன்னதத் தன்னுணர்வில் திருப்தியடைபவர்களும், உறுதியான சக்தியாலும், அறிவாலும் இயற்கைக் குணங்களை வெற்றி கொள்பவர்களுமான மற்றவர்களும் உங்களுக்குள் பிரவேசிக்கின்றனர் என்றாலும், அவர்கள் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர். ஆனால் பக்தரோ, பக்தித் தொண்டை நிறைவேற்றுவதால், இத்தகைய துன்பத்தை உணர்வதில்லை.
பதம் 3.5.48
தத் தே வயம் லோக-ஸிஸ்ருக்ஷயாத்ய
த்வயானுஸ்ருஷ்டாஸ் த்ரிபிர் ஆத்மபி ஸ்ம
ஸர்வே வியுக்தா ஸ்வ விஹார தந்திரம்
ந சக்னுமஸ் தத் ப்ரதிஹர்தவே தே
தத்-எனவே; தே-உங்களுடைய; வயம்-நாங்களனைவரும்; லோக-உலகம்; ஸிஸ்ருக்ஷயா—படைப்பிற்காக; ஆத்ய-ஆதிபுருஷரே;த்வயா -உங்களால்; அனுஸ்ருண்டா:-ஒருவர்பின் ஒருவராக படைக்கப்பட்டு; த்ரிபி:—இயற்கையின் முக்குணங்களால்; ஆத்மபி: – ஒருவருக்குச் சொந்தமானதால் : ஸ்ம-கடந்தகாலத்தில்; ஸர்வே-எல்லோரும்; வியுக்தா:-பிரிக்கப்பட்டோம்; ஸ்வ-விஹாரதந்த்ரம்-சுய இன்பத்திற்குரிய ஒருவனது செயல்கள்; ந—இல்லை; சக்னும்:—அதைச்செய்யமுடியும்; தத்—அந்த; ப்ரதிஹர்தவே-அளிக்க; தே-தங்களுக்கு.
எனவே ஆதி புருஷரே, நாங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமாவோம். நாங்கள் உங்களுடைய ஜீவன்கள் என்ற போதிலும், இயற்கையின் முக்குண ஆதிக்கத்தின் கீழ் ஒருவர் பின் ஒருவராகப் பிறந்திருப்பதால், செயலில் நாங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, சிருஷ்டிக்குப் பின் உங்களுடைய உன்னத ஆனந்தத்திற்காக எங்களால் ஒற்றுமையாகச் செயற்பட முடியவில்லை.
பதம் 3.5.49
யாவத் பலிம் தே ‘ஜ ஹராம காலே
யதா வயம் சான்னம் அதாம யத்ர
யதோபயேஷாம் த இமே ஹி லோகா
பலிம் ஹரந்தோ ‘ன்னம் அதந்தி அனூஹா:
யாவத்—அவ்வாறு இருக்கக்கூடிய; பலிம்- நிவேதனங்கள்; தே-உங்களுடைய; அஜ-பிறப்பற்றவரே; ஹராம-நிவேதனம்செய்வோமாக; காலே-சரியான காலத்தில்; யதா—அந்த அளவிற்கு; வயம்- நாங்கள்;ச – கூட; அன்னம்—உணவுத் தானியங்கள்; அதாம – ஏற்றுக் கொள்வோமாக; யத்ர—அதன்பிறகு; யதா—அந்த அளவிற்கு; உபயேஷாம் — உங்களுக்கும், எங்களுக்கும்; தே-எல்லா; இமே – இந்த; ஹி-நிச்சயமாக; லோகா:-ஜீவராசிகள்; பலிம்-நிவேதனங்கள்; ஹரந்த:-நிவேதனம் செய்யும் பொழுது; அன்னம்-தானியங்கள்; அதந்தி—உண்போம்; அனூஹா:-தொல்லையின்றி.
பிறப்பற்றவரே, அனுபவிக்கத் தகுந்த தானியங்களையும், பிற உபயோகமுள்ள பொருட்களையும் உங்களுக்கு நாங்கள் நிவேதனம் செய்ய வேண்டிய வழிகளையும், மார்க்கங்களையும் பற்றி தயவு கூர்ந்து எங்களுக்கு அறிவுறுத்த வேண்டுகிறோம். இதனால் இவ்வுலகிலுள்ள நாங்களும், பிற ஜீவராசிகளும் தொல்லையின்றி எங்களைப் பராமரித்துக் கொள்ள முடியும் என்பதுடன், உங்களுக்கும், எங்களுக்கும் வேண்டிய வாழ்க்கைத் தேவைகளை எங்களால் சுலபமாக சேகரிக்கவும் முடியும்.
பதம் 3.5.50
த்வம் ந: ஸுராணாம் அஸி ஸான்வயானாம்
கூட-ஸ்த ஆத்ய: புருஷ: புராண:
த்வம் தேவ சக்த்யாம் குண-கர்ம-யோனௌ
ரேதஸ்து அஜாயாம் கவிம் ஆததே ‘ஜ’
த்வம்—பகவானாகிய தாங்கள்; ந-எங்களின்; ஸுராணாம்— தேவர்களின்; அஸி-தாங்களே; ஸ-அன்வயானாம்-வேறுபட்ட தகுதிகளுடன்; கூட-ஸ்த:-மாற்றமில்லாதவர்; ஆத்ய:-உயர்ந்தவர் இல்லாதவர்; புருஷ:-மூலபுருஷர் ; புராண:-ஆதியானவர்; த்வம்— தாங்கள்; தேவ-பகவானே; சக்த்யாம் –சக்தியிடம்; குண – கர்ம – யோனௌ-பௌதிக குணங்கள் மற்றும் செயல்களின் காரணத்திற்கு; ரேத:- பிறப்பிற்குரிய விந்து : து—உண்மையில்; அஜாயாம் – பெறுவதற்கு; கவிம்—மொத்த ஜீவராசிகள்; ஆததே -ஆரம்பித்தீர்கள்; அஜ:- பிறப்பற்றவர்.
பகவானே, நீங்கள் தேவர்களையும், பலதரப்பட்ட ஜீவராசிகளையும் தோற்றுவித்த மூல புருஷர் என்றாலும், நீங்கள் ஆதி புருஷரும். மாற்றமற்றவருமாவீர், உங்களை விட உயர்ந்தவர் அல்லது உங்களுக்குக் காரணமானவர் எவருமில்லை. மொத்த ஜீவராசிகளுக்குரிய விந்தால் நீங்கள் புறச்சக்தியை கருவுறச் செய்திருப்பினும், பிறப்பற்றவராக இருக்கிறீர்கள்.
பதம் 3.5.51
ததோ வயம் மத்-ப்ரமுகா யத்-அர்தே
பபூவிமாத்மன் கரவாம கிம் தே
த்வம் ந: ஸ்வ-சக்ஷு:பரிதேஹி சக்தயா
தேவ க்ரியார்தே யத்-அனுக்ரஹாணாம்
தத:-எனவே; வயம் – தாங்களனைவரும்; மத்-ப்ரமுகா—மொத்த பிரபஞ்சமான மஹத் தத்துவத்திலிருந்து வரும்; யத் – அர்தே – எந்தநோக்கத்திற்காக: பபூவிம – படைக்கப்பட்டது; ஆத்மன் – பரமஆத்மாவே; கரவாம-செய்வது; கிம் – எதை; தே – உங்கள்தொண்டு, த்வம் – தாங்கள்; ந – எங்களுக்கு: ஸ்வ – சக்ஷு: – சொந்ததிட்டம்; பரிதேஹி-எங்களுக்குக் கொடுங்கள்; சக்த்யா-செயலாற்றும் சக்தியை; தேவ-பகவானே: க்ரியா—அர்தே-செயற்படுவதற்கு: யத் – எதிலிருந்து: அனுக்ரஹானாம் – அனுக்கிரகம் பெற்றவர்களின்.
பரமாத்மாவே, துவக்கத்தில், மொத்த பிரபஞ்ச சக்தியான மஹத் – தத்வத்திலிருந்து படைக்கப்பட்ட நாங்கள், செயற்பட வேண்டிய வழிமுறையை தயவுகூர்ந்து எங்களுக்கு அருளுங்கள். தயவுகூர்ந்து பக்குவமான அறிவையும், ஆற்றலையும் கூட அருளவேண்டும். இதனால் பின்தொடரும் சிருஷ்டியின் வெவ்வேறு இலாக்காக்களில் உங்களுக்கு எங்களால் தொண்டு செய்ய முடியும்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “மைத்ரேயருடனான விதுரரின் உரையாடல்கள்” எனும் தலைப்பைக் கொண்ட ஐந்தாம் அத்தியாயம் நிறைவு பெறுகின்றது.