அத்தியாயம் – 4
விதுரர் மைத்ரேயரை தேடிச் செல்லுதல்
பதம் 3.4.1
உத்தவ உவாச
அத தே தத்-அனுக்ஞாதா புக்த்வா பீத்வா ச வாருணீம்
தயா விப்ரம்சித-ஞானா துருக்தைர் மர்ம பஸ்ப்ருசு:
உத்தவ; உவாச-உத்தவர் கூறினார்; அத-அதன்பிறகு; தே- அவர்கள் (யாதவர்கள்); தத்-பிராமணர்களால்; அனுக்ஞாதா;- அனுமதிக்கப்பட்டு; புக்த்வா-பங்கெடுத்துக் கொண்ட பின்; பீத்வா- அருந்தி; ச-மேலும்; வாருணீம்-மது; தயா—அதனால்; விப்ரம்சித – க்ஞானா:- அறிவிழந்ததால்; துருக்தை:- கடும் சொற்களால்; மர்ம – இதயத்தை; பஸ்ப்ருசு:- பிளந்தனர்.
பிறகு, பிராமணர்களின் அனுமதி பெற்று போஜனம் செய்தபின், அவர்கள் அனைவரும் (விருஷ்ணி, போஜ வம்சத்தினர்), சாதத்தால் செய்யப்பட்ட மதுவை அருந்தி, அறிவிழந்து, இதயத்தைப் பிளக்கும் வசை மொழிகளைப் பேச ஆரம்பித்தனர்.
பதம் 3.4.2
தேஷாம் மைரேய-தோஷேண விஷமீக்ருத-சேதஸாம்
நிம்லோசதி ரவாவ் வேணூனாம் இவ மர்தனம்
தேஷாம்-அவர்களின்; மைரேய- போதையில்; தோஷேண-தோஷத்தினால்: விஷமீக்ருத-நிலை இழந்தனர்; சேதஸாம்-யாருடைய மனங்களின்; நிம்லோசதி- மறைகிறது; ரவௌ-சூரியன்;. ஆஸீத்-நிகழ்கிறது; வேணூனாம்-மூங்கில்களின்; இவ-போல்;மர்தனம்—அழிவு
மூங்கில்களின் உராய்வினால் அழிவு ஏற்படுவதைப் போல், சூரிய அஸ்தமனத்தின் போது உண்டான குடிபோதையின் தோஷத்தால் மதிகெட்ட அவர்களுக்கு அழிவு ஏற்பட்டது.
பதம் 3.4.3
பகவான் ஸ்வாத்ம-மாயாயா கதிம் தாம் அவலோக்ய ஸ:
ஸரஸ்வதீம் உபஸ்ப்ருஸ்ய வ்ருக்ஷ-மூலம் உபாவிசத்
பகவான் – பரமபுருஷர்; ஸ்வ-ஆத்ம-மாயாயா:- அவரது அந்தரங்க சக்தியால்; கதிம்-முடிவை; தாம்-அந்த ; அவலோக்ய – முன்னறிந்து; ஸ – அவர் (கிருஷ்ணர்); ஸரஸ்வதீம்- சரஸ்வதி நதி; உபஸ்ப்ருஸ்ய-ஆசமனம் செய்தபின்; வ்ருக்ஷ- மூலம் – ஒரு மரத் தடியில்; உபாவிசத்—அமர்ந்தார்.
இவ்வாறாக தமது அந்தரங்க சக்தியினால் (தமது குடும்பத்தின்) முடிவை முன்னறிந்த பகவான் கிருஷ்ணர், சரஸ்வதி நதிக்கரைக்குச் சென்று, ஆசமனம் செய்து, ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
பதம் 3.4.4
அஹம் சோக்தோ பகவதா ப்ரபன்னார்தி-ஹரேண ஹ
பதரீம் த்வம் ப்ரயாஹீதி ஸ்வ-குலம் ஸஞ்சிஹீர்ஷுணா
அஹம் – நான்; ச-மேலும்; உக்த:- அறிவிக்கப்பட்டேன்; பகவதா – பரம புருஷரால்; ப்ரபன்ன – சரணடைந்தவர்களின்; ஆர்தி—ஹரேண -துன்பங்களைப் போக்குபவரான அவரால்; ஹ— உண்மையில்:பதரீம்- பத்ரிகாசிரமத்திற்கு;த்வம்-நீ; ப்ரயாஹி-போகவேண்டும்;இதி— இவ்வாறாக;ஸ்வ-குலம்— அவரது சொந்த குடும்பம்; ஸஞ்சிஹீர்ஷுணா-அழிக்க விரும்பியவர்.
தம்மிடம் சரணடைந்தவர்களின் துன்பங்களை பகவான் அழித்துவிடுகிறார். எனவே தம் குடும்பத்தை அழித்துவிட விரும்பிய அவர், பத்ரிகாசிரமத்திற்குச் சென்றுவிடும்படி முன்பே என்னிடம் கூறினார்.
பதம் 3.4.5
ததாபி தத் -அபிப்ரேதம் ஜானன் அஹம் அரிந்தம
ப்ருஷ்டதோ ‘ன்வகமம் பர்து: பாத-விஸ்லேஷணாக்ஷம:
ததா அபி – இருப்பினும்; தத்—அபிப்ரேதம்—அவரது ஆசையை; ஜானன்- அறிந்தும்; அஹம்-நான்; அரிம்- தம் -எதிரிகளை அடக்குபவரே (விதுரர்) ; ப்ருஷ்டத:- பின்னால்; அன்வகமம்-பின் தொடர்த்தேன்; பர்து:- எஜமானரின்; பாத-விஸ்லேஷண—அவரது தாமரைப் பாதங்களின் பிரிவை : அக்ஷம:- முடியாததால்.
அரிந்தமரே (விதுரரே), (வம்சத்தை அழித்துவிடப் போகும்) பகவானின் விருப்பத்தை நான் அறிந்திருந்தபோதிலும், அவருடைய தாமரைப் பாதங்களின் பிரிவைத் தாங்கிக் கொள்வது எனக்குச் சாத்தியமல்ல என்பதால், அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.
பதம் 3.4.6
அத்ராக்ஷம் ஏகம் ஆஸீனம் விசின்வன் தயிதம் பதிம்
ஸ்ரீ-நிதேகம் ஸரஸ்வத்யாம் க்ருத-கேதம் அகேதனம்
அத்ராக்ஷம்- நான் கண்டேன்; ஏகம் -தனியாக; ஆஸீனம் -அமர்ந்திருப்பதை; விசில்வன்-ஆழ்ந்த சிந்தனையுடன்; தயிதம்- இரட்சகர் : பதிம்- தலைவர் ஸ்ரீ-நிகேதம் – ஸ்ரீதேவியின் அடைக்கலமான; ஸரஸ்வத்யாம்–சரஸ்வதி நதிக்கரையில்; க்ருத- கேதம் – புகலிடம் கொண்டு ; அகேதனம்-புகலிடம் இல்லாதிருந்ததால்.
இவ்வாறு பின்தொடர்ந்து சென்ற நான், எனது இரட்சகரும் தலைவரும், ஸ்ரீதேவியின் புகலிடமுமான அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்), சரஸ்வதி நதிக்கரையை புகலிடமாகக் கொண்டு, ஆழ்ந்த சிந்தனையுடன் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டேன்.
பதம் 3.4.7
ஸ்யாமாவதாதம் விரஜம் ப்ரசாந்தாருண-லோசனம்
தோர்பிஸ் சதுர்பிர் விதிதம் பீத-கௌஸாம்பரேண ச
ஸ்யாம—அவதாதம்-கருமை நிறம் கொண்டு அழகுடன் விளங்கிய; விரஜம்-தூய நற்குணத்தில் உருவான; ப்ரசாந்த—அமைதியான; அருண-சிவந்த; லோசனம்—கண்கள்; தோர்பி-. கரங்களால்: சதுர்பி:- நான்கு; விதிதம் -அறிந்து கொண்டதால்; பீத – மஞ்சள்; கௌஸ- பட்டாலான;அம்பரேண – ஆடைகளுடன்; ச-மேலும்.
பகவானின் உடல் கருமை நிறம் கொண்டது என்ற போதிலும், அது நித்தியத் தன்மையும், பூரண ஆனந்தமும், அறிவும் கொண்டு மிகவும் அழகாக விளங்கியது. அவரது சாந்தமான கண்கள் உதயசூரியனைப் போல் சிவந்து காணப்பட்டன. அவரது நான்கு கரங்களில் வெவ்வேறு சின்னங்களை ஏந்தி இருந்ததையும், மஞ்சள்நிற பட்டாடையை அவர் அணிந்திருந்ததையும் கொண்டு, அவர்தான் பரமபுருஷர் என்பதை உடனேயே என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.
பதம் 3.4.8
வாம ஊராவ் அதிஸ்ரித்ய தக்ஷிணாங்கிரி-ஸரோருஹம் அபாஸ்ரிதார்பகாஸ்வத்தம் அக்ருசம் த்யக்த-பிப்பலம்
வாம ஊராவ்-இடது தொடையின் மீது; அதிஸ்ரித்ய— வைத்து; தக்ஷிண – அங்ரி -ஸரோருஹம்—வலது தாமரைப் பாதத்தை; அபாஸ்ரித- சாய்ந்து ஒய்வெடுக்கும்; அர்பக-இளம்; அஸ்வத்தம்- அரசமரம்; அக்ருசம் -ஆனந்தமாக; தீயக்த-துறந்ததால்; பிப்பலம்- இல்லற சுகபோகங்களை.
பகவான் தமது வலது தாமரைப் பாதத்தை இடது தொடையின் மீது பொருத்தியவாறு, ஒர் இளம் அரசமரத்தின் மீது சாய்ந்தபடி, அதற்கடியில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அந்நிலையில் இருந்த அவர், இல்லற சுகபோகங்களை எல்லாம் துறந்து விட்டவராக இருந்த போதிலும், மிகவும் ஆனந்தமாகக் காணப்பட்டார்.
பதம் 3.4.9
தஸ்மின் மஹா- பாகவதோ த்வைபாயன-ஸுஹ்ருத்-ஸகா
லோகான் அனுசரன் ஸித்த ஆஸஸாத யத்ருச்சயா
தஸ்மின் – பிறகு; மஹா-பாகவத:- பகவானின் சிறந்த பக்தரும்; த்வைபாயன- கிருஷ்ண துவைபாயன வியாசரின்; ஸுஹ்ருத்—நலம் விரும்பியும்: ஸகா-நண்பரும்; லோகான் – மூவுலகங்கள்; அனுசரன் -பிரயாணம் செய்து: ஸித்தே – அந்த ஆசிரமத்தை; ஆஸஸாத – அடைந்தார்; யத்ருச்சயா-தாமாகவே.
அப்பொழுது உலகின் பல பாகங்களில் பிரயாணம் செய்தபின், மாமுனிவரான கிருஷ்ண துவைபாயன வியாசரின் நண்பரும், சிறந்த பக்தருமான மைத்ரேயர் தாமாகவே அங்கு வந்து சேர்ந்தார்.
பதம் 3.4.10
தனியானுக்தஸ்ய முனேர் முகுந்த:
ப்ரமோத-பாவானத-கந்தரஸ்ய
ஆஸ்ருண்வதோ மாம் அனுராக-ஹாஸ-
ஸமீக்ஷயா விஷ்ரமயன் உவாச
தஸ்ய-அவரது (மைத்ரேயரின்); அனுரக்தஸ்ய- பற்றுக்கொண்டிருந்த போதிலும்; முனே:- முனிவரின்; முகுந்த:-முக்தியளிப்பவரான பகவான்; ப்ரமோத-பாவ – இன்பமான மனநிலையில் ஆனத-தாழ்த்திய; கந்தரஸ்ய-தோள்களை; ஆஷ்ருண்வத:- இவ்வாறு கேட்கும்பொழுது; மாம் – என்னிடம் ; அனுராக-ஹாஸ – அன்பான புன்னகையுடன்; ஸமீக்ஷயா – குறிப்பாக என்னைப் பார்த்து; விஷ்ரமயன் – நான் ஓய்வெடுக்க அனுமதித்து; உவாச -கூறினார்.
அவரிடம் (பகவானிடம்) மிகவும் பற்றுக் கொண்டிருந்த மைத்ரேய முனிவர், தம் தோள்களை தாழ்த்தியவாறு, இன்பமான ஒரு மனநிலையில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். நான் இளைப்பாறும் வரைக் காத்திருந்த பகவான், கருணையுடனும், புன்சிரிப்புடனும் என்னை நோக்கி பின்வருமாறு பேசலானார்.
பதம் 3.4.11
ஸ்ரீ-பகவான் உவாச
வேதாஹம் அந்தர் மனஸீப்ஸிதம் தே
ததாமி யத் தத் துரவாபம் அன்யை:
ஸத்ரே புரா விஸ்வ-ஸ்ருஜாம் வஸூனாம்
மத்-ஸித்தி-காமேன வஸோ த்வயேஷ்ட:
ஸ்ரீ – பகவான் உவாச-பரமபுருஷ பகவான் கூறினார்; வேத- அறிவின் : அஹம்- நான்; அந்த:- உள்ளே; மனஸி-மனதின்; ஈப்ஸிதம் – நீ விரும்பியதை; தே-உனது; ததாமி – நான் உனக்கு அளிக்கிறேன்; யத்—எந்த; தத்-அந்த துரவாபம் — அடைவதற்கு மிகவும் கடினமான: அன்யை:-பிறரால்;ஸத்ரே-யாகத்தில்; புரா-புராதன காலத்தில்; விஷ்வ – ஸ்ருஜாம் – இந்த சிருண்டியை விரிவடையச் செய்தவர்களின்; வஸூனாம்—வசுக்களின்; மத் -ஸித்தி -காமேன – என்னுடைய சகவாசத்தை அடையும் நோக்கத்துடன்; வஸோ – ஓ வசு; த்வயா—உன்னால்; இஷ்ட— வாழ்வின் இறுதி லட்சியம்.
உன் மனதின் அந்தரங்க ஆசையை நான் அறிவேன். புராதன காலத்தில் பிரபஞ்ச விவகாரங்களை விரிவடையச் செய்யும் பொறுப்பை ஏற்றிருந்த வசுக்களும், பிற தேவர்களும் யாகங்களைச் செய்தனர். அச்சமயத்தில், என் சகவாசத்தைப் பெற நீ விரும்பினாய். மற்றவர்களால் இதை அடைவது மிகவும் கடினம் என்றாலும், உனக்கு நான் இதை அளிக்கிறேன்.
பதம் 3.4.12
ஸ ஏஷ ஸாதோ சரமோ பவானாம்
ஆஸாதிதஸ் தே மத்-அனுக்ரஹோ யத்
யன் மாம் ந்ருலோகான் ரஹ உத்ஸ்ருஜந்தம்
திஷ்ட்யா தத்ருஸ்வான் விசதானுவ்ருத்யா
ஸ:- அந்த; ஏஷ:- அவர்களின்; ஸாதோ-நேர்மையானவனே; சரம:-முடிவான; பவானாம்(வசுவாகத் தோன்றிய) உனது எல்லா அவதாரங்களின்; ஆஸாதித- இப்பொழுது அடைந்திருக்கிறாய்; தே – உனக்கு; மத்-எனது; அனுக்ரஹ:- கருணையை; யத்—உள்ளபடி; யத்—காரணத்தால்; மாம்—என்னை; ந்ரு-லோகான் – பந்தப்பட்ட ஆத்மாக்களின் கிரகங்கள்; ரஹ:- தனிமையில்; உத்ஸ்ருஜந்தம் – விடும்பொழுது; திஷ்ட்யா—கண்டதால்; தத்ருஸ்வான்-நீ கண்டிருப்பது: விசத—அனுவ்ருத்யா—உறுதியான பக்தியால்,
நேர்மையானவனே, உன் பிறவிகளின் இதுவே கடைசியும், மிகச் சிறந்ததுமாகும். ஏனெனில், இப்பிறப்பில் உனக்கு நான் பூரண அனுக்கிரகத்தை அளித்திருக்கிறேன். இப்பொழுது, பந்தப்பட்ட ஜீவராசிகளுக்குரிய இப்பிரபஞ்சத்தை விட்டு, எனது ஆன்மீக உலகான வைகுண்டத்திற்கு நீ செல்லலாம். உனது உறுதியான தூய பக்தித் தொண்டின் காரணத்தால், என்னை இத்தனிமையான இடத்தில் காண வந்திருப்பது உனக்குக் கிடைத்துள்ள பெரும் பாக்கியமாகும்.
பதம் 3.4.13
புரா மயா ப்ரோக்தம் அஜாய நாப்யே
பத்மே நிஷண்ணாய மமாதி-ஸர்கே
ஞானம் பரம் மன்-மஹிமாவபாஸம்
யத் ஸூரயோ பாகவதம் வதந்தி
புரா-புராதன காலத்தில்; மயா-என்னால்; ப்ரோக்தம்-கூறப்பட்டது; அஜாய- பிரம்மாவிற்கு; நாப்யே-நாபியில் இருந்து; பத்மே- தாமரையின் மீது; நிஷண்ணாய- அமர்ந்திருப்பவரக்கு; மம–எனது;ஆதி-ஸர்கே-படைப்பின் துவக்கத்தில்; ஞானம் – ஞானத்தை; பரம்- உன்னத: மத்-மஹிமா—எனது உன்னத பெருமைகளை; அவபாஸம் – தெளிவுபடுத்துவது; யத்—எது; ஸூரய: – கற்றறிந்த மாமுனிவர்கள்; பாகவதம்-ஸ்ரீமத் பாகவதம்; வதந்தி —கூறுகின்றனர்.
உத்தவா, பத்ம கல்பத்தின் ஆரம்பத்தில், படைப்பின் துவக்கத்தில் எனது நாபிக் கமலத்தில் வீற்றிருந்த பிரம்ம தேவருக்கு, ஸ்ரீமத் பாகவதம் என்று மாமுனிவர்களால் விவரிக்கப்படும் எனது உன்னத பெருமைகளைப் பற்றி நான் உபதேசித்தேன்.
பதம் 3.4.14
இதி ஆத்ருதோக்த: பரமஸ்ய பும்ஸ:
ப்ரதிக்ஷணானுக்ரஹ-பாஜனோ ‘ஹம்
ஸ்னேஹோத்த-ரோமா ஸ்கலிதாக்ஷரஸ் தம்
முஞ்சஞ் சுச: ப்ராஞ்ஜலிர் ஆபபாஷே
இதி-இவ்வாறாக;ஆத்ருத- அனுக்கிரகிக்கப்பட்டு; உக்த:பேசப்பட்டதும்; பரமஸ்ய- பரமனின்; பும்ஸ்:- பரமபுருஷர்; ப்ரதிக்ஷண-ஒவ்வொரு கணமும்; அனுகிரஹ-பாஜன:- அனுக்கிரகத்திற்கு உரிய பொருள் : அஹம்-நான்; ஸ்னேஹ பாசம்; உத்த-ரோமா – மெய் சிலிர்த்தது; ஸ்கலித -தளர்ந்தது; அக்ஷர:- கண்களின்; தம்- அந்த; முஞ்ஜன் -பூசி; சுச: கண்ணீரை; ப்ராஞ்ஜலி:- கூப்பிய கரங்களுடன்: ஆப்பாஷே – கூறினேன்.
உத்தவர் கூறினார் இவ்வாறாக: விதுரரே, பெரும் பாசத்துடன் பகவானால் உபதேசிக்கப்பட்டு, ஒவ்வொரு கணமும் அவரால் நான் ஆட்கொள்ளப்பட்ட பொழுது, மெய் சிலிர்த்து, கண்ணீரால் பேச்சற்று நின்றேன். என் கண்ணீரை துடைத்துக் கொண்டபிறகு, கூப்பிய கரங்களுடன் நான் இவ்வாறு பேசினேன்.
பதம் 3.4.15
கோ நு ஈச தே பாத-சரோஜ-பாஜாம்
ஸுதுர்லபோ ‘ர்தேஷு சதுர்ஷ்வ் அபீஹ
ததாபி நாஹம் ப்ரவ்ருணோமி பூமன்
பவத்-பதாம்போஜ-நிஷேவணோத்ஸுக:
கோ நு ஈச – எம்பெருமானே; தே-தங்களுடைய; பாத-ஸரோஜ – பாஜாம் – தங்களுடைய தாமரைப் பாதங்களில் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களின்; ஸூ-துர்லப:- அடைவதற்கு மிகக் கடினமான; அர்தேஷு- என்ற விஷயத்தில்; சதுர்ஷு-நான்கு விஷயங்களில் அபி – எனினும்; இஹ-இவ்வுலகில்; ததா அபி— இருப்பினும்; ந – இல்லை; அஹம் – நான்: ப்ரவ்ருணோமி – தேர்ந்தெடுக்கிறேன்; பூமன்-சிறப்புடையவரே; பவத் —தங்களுடைய; பத- அம்போஜ-தாமரைப் பாதங்கள்; நிஷேவண— உத்ஸுக:— தொண்டு செய்ய விரும்புகிறேன்.
எம்பெருமானே, தங்களுடைய தாமரைப் பாதங்களின் உன்னத அன்புத்தொண்டில் ஈடுபட்டுள்ள பக்தர்களுக்கு மதம், பொருளாதார முன்னேற்றம், புலனின்பம் மற்றும் முக்தி எனும் நான்கு கொள்கைகளுக்கு உட்பட்டுள்ள எதையும் அடைவதில் எந்தக் கஷ்டமும் இல்லை. ஆனால் பெரும் புகழுக்குரியவரே, என்னைப் பொறுத்தவரை, தங்களுடைய தாமரைப் பாதங்களில் பணிசெய்து கிடக்கவே நான் விரும்புகிறேன்.
பதம் 3.4.16
கர்மாணி அனீகஸ்ய பவோ ‘பவஸ்ய தே
துர்காஸ்ரயோ ‘தாரி-பயாத் பலாயனம்
காலாத்மனோ யத் ப்ரமதா- யுதாஸ்ரம:
ஸ்வாத்மன்-ரதே: கித்யதி தீர் விதாம் இஹ
கர்மாணி—செயல்கள்; அனீஹஸ்ய—ஆசைகளே இல்லாத ஒருவரின்; பவ: பிறப்பு: அபவஸ்ய-பிறப்பற்றவரின்; தே-தங்களுடைய; துர்க-ஆஸ்ரய:- கோட்டையில் புகலிடம் கொண்டு; அத – அதன்பிறகு; அரி—பயாத் -பகைவர்களுக்கு அஞ்சி; பலாயனம் – தப்பி ஓடினீர்கள்; கால-ஆத்மன:- நித்திய காலத்தை ஆளும் அவருடைய; யத்- அந்த: ப்ரமதா-ஆயுத-பெண்களின் சகவாசத்தில்; ஆஸ்ரம: இல்லற வாழ்வு:ஸ்வ-ஆத்மன்— தங்களுக்குள்ளேயே : ரதே:- இன்பம் அனுபவிப்பவர்; கித்யதி-குழப்பமடைகிறது: தீ:- புத்தி: விதாம் – கற்றவர்களின்; இஹ-இவ்வுலகில்.
எம்பெருமானே, விருப்பற்ற தாங்கள் பலன் கருதும் செயல்களில் ஈடுபடுவதையும், பிறப்பற்ற தாங்கள் பிறவி எடுப்பதையும், வெல்ல முடியாத காலத்தை ஆளும் தாங்கள் பகைவருக்கஞ்சி ஒரு கோட்டைக்குள் புகலிடம் கொண்டதையும், மற்றும் தங்களுக்குள்ளேயே தாங்கள் இன்பம் அனுபவிப்பவராக இருந்தும் பல பெண்களால் சூழப்பட்டவராய் இல்லறவாழ்வில் இன்பம் அனுபவிப்பதையும் கண்டு கற்றறிந்த முனிவர்களும் புத்தி தடுமாறுகின்றனர்.
பதம் 3.4.17
மந்த்ரேஷு மாம் வா உபஹூய யத் த்வம்
அகுண்டிதாகண்ட-ஸதாத்ம போத:
ப்ருச்சே: ப்ரபோ முத்த இவாப்ரமத்தஸ்
தன் நோ மனோ மோஹயதீவ தேவ
மந்த்ரேஷு – ஆலோசனைகளில்; மாம்- என்னிடம்; வை – இரண்டில் எதுவென்று; உபஹூய—அழைத்ததன் மூலமாக; யத் – போலவே; த்வம் -பெருமானாகிய தாங்கள்; அகுண்டித – தயக்கமின்றி; அகண்ட-பிரிக்கப்படாமல்; ஸதா—நித்தியமாக; ஆத்ம – ஆத்மா; போத:- நுண்ணறிவுள்ள; ப்ருச்சே:- கேட்டீர்கள்; ப்ரபோ— எம்பெருமானே; முக்த:-குழம்பியவர்; இவ—அதுபோல்; அப்ரமத்த:- குழப்பமடைவதில்லை என்றபோதிலும் ; தத்—அந்த; ந:- நம்முடைய; மன:- மனது; மோஹயதி -குழப்புகிறது; இவ—அது போலவே; தேவ-எம்பெருமானே.
எம்பெருமானே, நித்திய புருஷரான தாங்கள் காலத்தின் ஆதிக்கத்தினால் பிரிக்கப்படுவதில்லை. தங்களுடைய பூரண அறிவிற்கு ஒரு எல்லையும் இல்லை. சுயமாக முடிவெடுக்கக் கூடிய போதுமான தகுதியுடையவராக தாங்கள் இருந்தும், குழப்பம் அடையாதவரான தாங்கள், குழப்பம் அடைந்தவர் போல் என்னுடன் கலந்து ஆலோசிப்பதற்காக என்னை அழைத்தீர்கள். தங்களுடைய இச்செயல் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
பதம் 3.4.18
ஞானம் பரம் ஸ்வாத்ம-ரஹ- ப்ரகாஸம்
ப்ரோவாச கஸ்மை பகவான் ஸமக்ரம்
அபி க்ஷமம் நோ கிரஹணாய பர்தர்
வதாஞ்ஜஸா யத் வ்ருஜினம் தரேம
ஞானம்-ஞானம்; பரம் – பரம: ஸ்வ- ஆத்ம- தங்களுடைய: ரஹ:- புதிர் ; ப்ரகாசம்-ஞான உபதேசம் செய்து; ப்ரோவாச—கூறிய; கஸ்மை- பிரம்மாவிடம்; பகவான்-பரம புருஷர்: ஸமக்ரம் – மொத்தத்தில்; அபி – அப்படியானால்; க்ஷமம்-முடியும்: ந:- எனக்கு: க்ரஹணாய—ஏற்புடைய; பர்த:- எம்பெருமானே; வத-கூறுங்கள்; அஞ்ஜஸா-விவரமாக; யத்-எது; வ்ருஜினம்—துன்பங்கள்: தரேம – கடக்க முடியும்.
எம்பெருமானே, உங்களைப் பற்றிய ஆத்ம ஞானத்தை அளிக்கக் கூடியதும், முன்பு பிரம்மதேவருக்கு நீங்கள் விளக்கியதுமான அந்த உன்னத ஞானத்தை, நாங்கள் பெறத் தகுதியுடையவர்கள் என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கு விளக்கியருள வேண்டுகிறேன்.
பதம் 3.4.19
இதி ஆவேதித-ஹார்தாய மஹ்யம் ஸ பகவான் பர:
ஆதிதேசாரவிந்தாக்ஷ ஆத்மன: பரமாம் ஸ்திதிம்
இதி ஆவேதித-இவ்வாறு என்னால் வேண்டப்பட்டதால்; ஹார்தாய -எனது இதயப்பூர்வமான: மஹ்யம் – எனக்கு: ஸ -அவர்; பகவான்- பரமபுருஷர்; பர:- பரமன்; ஆதிதேச-உபதேசித்தார்;அரவிந்த – அக்ஷ:-தாமரைக் கண்களையுடைய; ஆத்மன:- அவருடைய; பரமாம் -உன்னதமான ; ஸ்திதிம்-நிலையை.
இவ்வாறு இதயப்பூர்வமான எனது ஆசைகளை பரமபுருஷரிடம் நான் வெளிப்படுத்தியதும், தாமரைக் கண்களையுடைய பகவான் தமது உன்னத நிலையைப் பற்றி எனக்கு உபதேசித்தார்.
பதம் 3.4.20
ஸ ஏவம் ஆராதித-பாத தீர்தாத்
அதீத -தத்வாத்ம-விபோத-மார்க
ப்ரணம்ய பாதெள பரிவ்ருத்ய தேவம்
இஹாகதோ ‘ஹம் விரஹா துராத்மா
ஸ;-எனவே நான்;ஏவம்—இவ்வாறாக; ஆராதித – வழிபட்டேன்;பாத – தீர்தாத்-பரமபுருஷரிடமிருந்து; அதீத-கற்றேன்; தத்வ – ஆத்ம-ஆத்ம தத்துவத்தை; விபோத—புரிந்து கொள்ளும்; மார்க: – வழி; ப்ரணம்ய -வணங்கியபின்; பாதெள—அவரது தாமரைப்பாதங்களை; பரிவ்ருத்ய – வலம் வந்தபின்;தேவம்—பகவானை;இஹ-இந்த இடத்தில்; ஆகத:- அடைந்தேன் ; அஹம் – நான்; விரஹ-பிரிவு :ஆதுர – ஆத்மா – பாதிக்கப்பட்ட.
எனது ஆன்மீக குருவான பரமபுருஷரிடமிருந்து ஆத்ம ஞானத்தை அறியும் மார்க்கத்தைக் கற்று, அவரை வலம் வந்தபின், அவரது பிரிவினால் பெரும் துயருக்குள்ளான நிலையில், இந்த இடத்திற்கு நான் வந்திருக்கிறேன்.
பதம் 3.4.21
ஸோ ‘ஹம் தத்-தர்சனாஹ்லாத- வியோகார்தி-யுத: ப்ரபோ
கமிஷ்யே தயிதம் தஸ்ய பதர்யாஸ்ரம – மண்டலம்
ஸ: அஹம் – இவ்வாறாக நான்; தத்—அவரது: தர்சன— தரிசனம்: ஆஹ்லாத-ஆனந்தம்; வியோக-அதில்லாமல்; ஆர்தி— யுத: – துன்பத்தால் பீடிக்கப்பட்டு; ப்ரபோ-பிரபுவே: கமிஷ்யே-செல்லப் போகிறேன்; தயிதம்-உபதேசித்தபடி; தஸ்ய— அவரது; பதர்யாஸ்ரம – இமாலயத்திலுள்ள பத்ரிகாஸ்மத்தின்; மண்டலம் – சகவாசம்.
அன்பிற்குரிய விதுரரே, அவரது தரிசனத்தால் கிடைக்கும் ஆனந்தத்தைப் பெற முடியாமல் இப்பொழுது நான் பித்தனைப் போல் ஆகியிருக்கிறேன். இதைத் தவிர்ப்பதற்காகவே, பகவானால் உபதேசிக்கப்பட்டபடி, இப்பொழுது நான் இமாலயத்திலுள்ள பத்ரிகாஸ்ரமத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்.
பதம் 3.4.22
யத்ர நாராயணோ தேவோ நரஸ் ச பகவான் ருஷி:
ம்ருது தீவ்ரம் தபோ தீர்கம் தேபாதே லோக-பாவனௌ
யத்ர -எங்கு; நாராயண:- பரமபுருஷர்; தேவ:- அவதாரத்தால்; நர:- மனித : ச- தவிரவும்; பகவான்-பகவான்; ருஷி:- மகாரிஷி: ம்ருது—அனைவராலும் நேசிக்கத்தக்க: தீவ்ரம் – கடும்; தப: – தவம்: தீர்கம்—நீண்ட காலம்; தேபாதே -செய்து: லோக-பாவனௌ அனைத்து ஜீவராசிகளின் நன்மை.
பத்ரிகாஸ்ரமத்தில் நர, நாராயண ரிஷிகளாக அவதரித்த பரமபுருஷர், அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக புராதன காலத்திலிருந்து கடுந் தவங்களை மேற்கொண்டு வருகிறார்.
பதம் 3.4.23
ஸ்ரீ-சுக: உவாச
இதி உத்தவாத் உபாகர்ண்ய ஸுஹ்ருதாம் துஹ்ஸஹம் வதம்
ஞானேனாசமயத் க்ஷத்தா சோகம் உத்பதிதம் புத:
ஸ்ரீ-சுக: உவாச-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி – இவ்வாறு;உத்தவாத்-உத்தவரிடமிருந்து; உ.பாகர்ண்ய-கேட்டு; ஸுஹ்ருதாம் -நண்பர்கள் மற்றும் உறவினர்களின்; துஹ்ஸஹம் – சகிக்க முடியாத; வதம்-அழிவு: ஞானேன-உன்னத அறிவினால்; அசமயத் – தம்மை சமாதானப்படுத்திக் கொண்டார்; க்ஷத்தா – விதுரர்; சோகம்- சோகத்தை; உத்பதிதம்- எழுந்த: புத:- விவேகி.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அழிவைப் பற்றி கேள்விப்பட்டதும், விவேகியான விதுரர், தமது உன்னத அறிவின் வலிமையினால் தம் சோகத்தை போக்கிக் கொண்டார்.
பதம் 3.4.24
ஸ தம் மஹா-பாகவதம் வ்ரஜந்தம் கௌரவர்ஷப:
விஸ்ரம்பாத் அப்யதத்தேதம் முக்யம் க்ருஷ்ண-பரிக்ரஹே
ஸ: – விதுரர்; தம்—உத்தவரிடம்; மஹா-பாகவதம் – பகவானின் சிறந்த பக்தர்; வ்ரஜந்தம்—செல்லும் பொழுது; கௌரவ – ருஷப: கௌரவர்களில் மிகச் சிறந்தவரான; விஸ்ரம்பாத்—நம்பிக்கையுடன்; அப்யதத்த—கேட்டார்; இதம்-இந்த; முக்யம்-முக்கியமானவருக்கு; க்ருஷ்ண-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; பரிக்ரஹே-பகவானின் பக்தித் தொண்டில்.
பகவத் பக்தர்களுக்கிடையில் முக்கியமானவரும், மிகவும் அந்தரங்கமானவருமான உத்தவர் புறப்பட்டுச் செல்லும் பொழுது, விதுரர் அன்புடனும், வினயத்துடனும் அவரிடம் கேள்விகள் கேட்டார்.
பதம் 3.4.25
விதுர உவாச
ஞானம் பரம் ஸ்வாத்ம-ரஹ:-ப்ரகாசம்
யத் ஆஹ யோகேஸ்வர ஈஸ்வரஸ் தே
வக்தும் பவான் நோ ‘ரிஹதி யத் தி விஷ்ணோர்
ப்ருத்யா: ஸ்வ-ப்ருத்யார்த-க்ருதஸ் சரந்தி
விதுர: உவாச-விதுரர் கூறினார்; ஞானம்-அறிவு; பரம்— உன்னதமான ; ஸ்வ-ஆத்ம-ஆத்மாவைப் பற்றிய: ரஹ – புதிர்; ப்ரகாசம்-போதிக்கும்; யத் – எது; ஆஹ- கூறினார்; யோக – ஈஸ்வர:- யோகிகளுக்கெல்லாம் தலைவரான; ஈஸ்வர:- பகவான்; தே – தங்களிடம்; வக்தும் – விவரிக்க; பவான் -நல்லாத்மாவான தாங்கள்; ந:- எனக்கு; அர்ஹதி-தகுதியுள்ள; யத்-என்ற ; ஹி – காரணத்திற்காக; விஷ்ணோ:- பகவான் விஷ்ணுவின்; ப்ருத்யா: – தொண்டர்கள்; ஸ்வ – ப்ருத்ய – அர்த—க்ருத:— அவர்களது தொண்டர்களின் நன்மைக்காக; சரந்தி-சஞ்சரிக்கின்றனர்.
விதுரர் கூறினார் உத்தவரே, பகவான் விஷ்ணுவின் தொண்டர்கள் பிறருக்கு நன்மை புரிவதற்காக சஞ்சரிப்பதால், பகவானாலேயே உங்களுக்கு உபதேசிக்கப்பட்ட அந்த ஆத்ம் ஞானத்தை தயவுசெய்து எனக்கு விவரிக்கும்படி வேண்டுகிறேன்.
பதம் 3.4.26
உத்தவ உவாச
நனு தே தத்வ-ஸம்ராத்ய ருஷி: கௌஷாரவோ ‘ந்திகே
ஸாக்ஷாத் பகவதாதிஷ்டோ மர்த்ய-லோகம் ஜிஹாஸதா
உத்தவ: உவாச – உத்தவர் கூறினார்; நனு-ஆயினும்: தே – உங்களின்: தத்வ-ஸம்ராத்ய:-உன்னத அறிவைப் பெற்றதால் வழிபாட்டுக்குரியவராக உள்ள ஒருவர்: ருஷி:- சுற்றறிந்த ஞானி; கௌஷாரவ:- குஷாரு புத்திரருக்கு (மைத்ரேயருக்கு): அந்திகே – அருகாமையில் தங்கி இருக்கும்; ஸாக்ஷாத் -நேரடியாக; பகவதா— பரமபுருஷரால்: ஆதிஷ்ட:- உபதேசிக்கப்பட்டு; மர்த்ய -லோகம் – நிலையற்ற உலகை; ஜீஹாஸதா – விட்டுச் செல்லும்பொழுது,
ஸ்ரீ உத்தவர் கூறினார்: உன்னத ஞானத்தைப் பெற்றதால் வழி பாட்டுக்குரியவரும், அருகாமையில் இருப்பவருமான கற்றறிந்த மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளலாம். பரம புருஷர் நிலையற்ற இவ்வுலகை விட்டுச் செல்லத் தயாராக இருந்தபொழுது, அவராலேயே நேரடியாக மைத்ரேயருக்கு உபதேசிக்கப்பட்டது.
பதம் 3.4.27
ஸ்ரீ -சுக உவாச
இதி ஸஹ விதுரேண விஸ்வ-மூர்தேர்
குண கதயா ஸுதயா ப்லாவிதோருதாப:
க்ஷணம் இவ புலினே யமஸ்வஸுஸ் தாம்
ஸமுஷித ஔபகவிர் நிசாம் ததோ ‘காத்
ஸ்ரீ – சுக: உவாச-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி – இவ்வாறாக: ஸஹ-உடன்; விதுரேண – விதுரர்; விஸ்வ – மூர்தே: விஸ்வமூர்த்தியின்; குண-கதயா-உன்னத குணங்களைக் கொண்ட உரையாடலில்; ஸுதயா – அமுதம் போன்ற; ப்லாவித உரு-தாப: பெரும் துன்பத்தில் ஆழ்ந்தவராக; க்ஷணம்:- ஒரு நொடி: இவ – அதைப்போல்; புலினே – கரையில்: யமஸ்வஸு: தாம்-யமுனை நதி; ஸமுக்ஷித – கிழித்தார்; ஔபகவி- ஒளபகவரின் புத்திரர் (உத்தவர்); நிசாம் – இரவை; தத:- பிறகு: அகாத் – அங்கிருந்து கிளம்பினார்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார் அரசே, யமுனைக் கரையில் பகவானின் உன்னத ஞானம், புகழ், குணங்கள் முதலியவற்றை விதுரருடன் விவாதித்த பின், பிரிவாற்றாமையில் ஆழ்ந்து விட்ட உத்தவர், இரவை ஒரு கணம் போல் கழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
பதம் 3.4.28
ராஜோவாச
நிதனம் உபகதேஷு வ்ருஷ்ணி-போஜேஷு
அதிரத-யூதப-யூதபேஷு முக்ய:
ஸ து கதம் அவசிஷ்ட உத்தவோ யத்
தரிர் அபி தத்யஜ ஆக்ருதிம் த்ரியதீச:
ராஜா உவாச-அரசர் வினவினார்; நிதனம்—அழிவுக்கு; உபகதேஷு உட்பட்டு; வ்ருஷ்ணி – விருஷ்ணி வம்சத்தின்; போஜேஷு—போஜ வம்சம்; அதிரத—சிறந்த சேனாதிபதி; யூத-ப-சேனைத் தலைவர்; யூத—பேஷு —அவர்களுக்கிடையில்; முக்ய:- முக்கியமான; ஸ: -அவர்; து-மட்டும்; கதம்-எப்படி; அவசிஷ்ட:- எஞ்சியிருந்தார்; உத்தவ:- உத்தவர்; யத்—அப்படியிருக்க; ஹரி:- பரமபுருஷர்; அபி-கூட; தத்யஜே-முடித்துக் கொண்டே; ஆக்ருதிம்—எல்லா லீலைகளையும்; த்ரி — அதீச:- மூவுலக இறைவன்.
அரசர் வினவினார்: மூவுலகங்களுக்கும் இறைவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் முடிவடைந்த பிறகும், சேனாதிபதிகளிலேயே சிறந்தவர்களான விருஷ்ணி மற்றும் போஜ வம்சத்தினரின் மறைவுக்குப் பிறகும் உத்தவர் மட்டும் ஏன் எஞ்சியிருந்தார்?
பதம் 3.4.29
ஸ்ரீ-சுக உவாச
ப்ரஹ்ம-சாபாபதேசேன காலேனாமோக-வாஞ்சித:
ஸம்ஹ்ருதிய ஸ்வ-குலம் ஸ்ஃபீதம் த்யஷ்யன் தேஹம் அசிந்தயத்
ஸ்ரீ – சுக: உவாச-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ப்ரஹ்ம – சாப-பிராமணர்களின் சாபம்; அபதேசேன-சாக்குப் போக்கினால், இத்தகைய ஒரு காட்சியினால்; காலேன-நித்திய காலத்தினால்; அமோக-உண்மையான; வாஞ்சித:- அவ்வாறு ஆசைப்படுபவன்; ஸம்ஹ்ருத்யா- முடித்து; ஸ்வ-குலம்—சொந்த குடும்பத்தை; ஸ்ஃபீதம் -எண்ணற்ற; த்யக்ஷ்யன்—விட்டபின்; தேஹம்-பிரபஞ்ச ரூபத்தை; அசிந்தயத் – தமக்குள் சிந்தித்தார்.
சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: அன்புள்ள அரசே, பிராமணர்களின் சாபம் ஒரு சாக்குப்போக்கு மட்டுமே. ஆனால் பகவானின் உன்னதமான விருப்பம்தான் நிஜ உண்மையாகும். பகவான், எண்ணற்ற தமது குடும்ப அங்கத்தினர்களை அனுப்பிய பிறகு, தாமும் இந்த மண்ணுலகிலிருந்து மறைந்துவிட விரும்பினார். எனவே தமக்குள் அவர் பின்வருமாறு சிந்தித்தார்.
பதம் 3.4.30
அஸ்மால் லோகாத் உபரதே மயி ஞானம் மத்-ஆஸ்ரயம்
அர்ஹதி உத்தவ ஏவாத்தா ஸம்ப்ரதி ஆத்மவதாம் வர:
அஸ்மாத்-இதிலிருந்த (பிரபஞ்சத்திலிருந்து); லோகாத் – பூமி: உபரதே – மறைந்து விட்டதால்; மயி- என்னுடைய; ஞானம்—அறிவு; மத்—ஆஸ்ரயம் — என்னைப் பற்றிய; அர்ஹதி—தகுதி பெற்றிருப்பவர்; உத்தவ:- உத்தவர்; ஏவ -நிச்சயமாக; அத்தா-நேரடியாக; ஸம்ப்ரதி – தற்பொழுது; ஆத்ம-வதாம் -பக்தர்களின்; வர- முக்கியமானவர்.
இப்பொழுது இந்த ஜட உலகிலிருந்த நான் மறைந்த பிறகு, எனது பக்தர்களிலேயே முக்கியமானவனான உத்தவனிடம் தான், என்னைப் பற்றிய அறிவை நான் நேரடியாக ஒப்படைக்க முடியும் என்பதாகத் தெரிகிறது.
பதம் 3.4.31
நோத்தவோ ‘ணு அபி மன்-ன்யூனோ யத் குணைர் நார்தித: ப்ரபு:
அதோ மத்-வயுனம் லோகம் க்ராஹயன் இஹ திஷ்டது
ந-அல்ல; உத்தவ:-உத்தவர்; அணு-கொஞ்சம்; அபி-கூட;மத்-எனக்கு ; ன்யூன:- குறைந்தவன்; யத்—ஏனெனில்; குணை: – ஜட இயற்கைக் குணங்களால்;
ந-அல்லது; அர்தித:- பந்திக்கப்படுபவனும்; ப்ரபு:- பிரபு: அத:— எனவே; மத்—வயுனம் – என்னைப்(பரமபுருஷர்) பற்றிய அறிவு: லோகம் – உலகம்; க்ராஹயன்- பரப்புவதற்காக; இஹ-இவ்வுலகில்; திஷ்டது -இருக்கட்டும்.
உத்தவன் ஜட இயற்கைக் குணங்களினால் பாதிப்படைவதே இல்லை என்பதால், அவன் எவ்விதத்திலும் எனக்குக் குறைந்தவனல்ல. என்னைப் (பரமபுருஷரை) பற்றிய அறிவைப் பரப்புவதற்காக இவ்வுலகிலேயே அவன் இருக்கட்டும்.
பதம் 3.4.32
ஏவம் த்ரி லோக -குருணா ஸந்திஷ்ட: சப்த-யோனினா
பதர்யாஸ்ரமம் ஆஸாத்ய ஹரிம் ஈஜே ஸமாதினா
ஏவம்-இவ்வாறாக; த்ரி-லோக-மூவுலகங்கள்; குருணா- ஆன்மீக குருவால்; ஸந்திஷ்ட:- பக்குவமான முறையில் கற்பிக்கப்பட்டதால்; சப்த – யோனினா—அனைத்து வேத ஞானத்திற்கும் மூலமாக இருப்பவரால்; பதர்யாஸ்ரமம் – பத்ரிகாசிரமம் எனும் புண்ணிய தீர்த்தத்தில்; ஆஸாத்ய – அடைந்து: ஹரிம் – பகவானை; ஈஜே – திருப்திப்படுத்தினார்; ஸமாதினா -சமாதியால்.
அனைத்து வேத ஞானத்திற்கும் மூலமான பரமபுருஷரால் இவ்வாறு உபதேசிக்கப்பட்ட உத்தவர், பத்ரிகாசிரமம் என்ற புண்ணிய தீர்த்தத்தை அடைந்து, பகவானை திருப்திப்படுத்தவதற்காக அங்கு சமாதியில் ஆழ்ந்தார் என்று சுகதேவ கோஸ்வாமி, அரசரிடம் அறிவித்தார்.
பதம் 3.4.33
விதுரோ ‘பி’ உத்தவாச் சிருத்வா க்ருஷ்ணஸ்ய பரமாத்மன:
க்ரீடேயோபாத்த தேஹஸ்ய கர்மாணி ஸ்லாஹிதானி ச
விதுர:-விதுரர்; அபி-கூட; உத்தவாத்-உத்தவரிடமிருந்து; ஸ்ருத்வா -கேட்டதும்; க்ருஷ்ணஸ்ய – பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி; பரம-ஆத்மன :- பரமாத்மாவைப் பற்றி; க்ரீடயா—ஜட உலக லீலைகளின் பொருட்டு; உபாத்த -அசாதாரணமான முறையில் ஏற்றுக் கொள்ளப்படும்; தேஹஸ்ய-உடலின் : கர்மாணி-உன்னத செயல்கள்; ஸ்லாகிதானி-மிகவும் கீர்த்தி வாய்ந்த; கூ-கூட.
பரமாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜட உலக தோற்றத்தையும், மறைவையும் பற்றி விதுரரும் உத்தவரிடமிருந்து கேள்விப்பட்டார். இவை மாமுனிவர்களாலும் பயபக்தியுடன் நாடிச் செல்லப்படும் விஷயங்களாகும்.
பதம் 3.4.34
தேஹ-ஞாஸம் ச தஸ்யைவம் தீராணாம் தைர்ய – வர்தனம்
அன்யேஷாம் துஷ்கரதரம் பசூனாம் விக்லவாத்மனாம்
தேஹ – ஞாஸம் – உடலுக்குள் புகுந்து ச-மேலும், தஸ்ய -அவரது; ஏவம் – தவிரவும்: தீராணாம்- மாமுனிவர்களின்; தைர்ய- ஊக்கம்; வர்தனம்-அதிகரிக்கும்; அன்யேஷாம் – மற்றவர்களுக்கு; துஷ்கர – தரம்—ஆராய்ந்தறிவதற்கு மிகக் கடினமான; பசூனாம் – மிருகங்களின்; விக்லவ -தொல்லைக்குட்பட்ட ; ஆத்மனாம் -இத்தகைய ஒரு மனிதன்.
அசாதாரணமான லீலைகளை ஜட உலகில் நிகழ்த்துவதற்காக பகவானால் ஏற்கப்படும் பல்வேறு உன்னத ரூபங்களும், புகழுக்குரிய அவரது செயல்களும், பகவத் பக்தர்களைத் தவிர பிறரால் புரிந்து கொள்ளப்படுவது மிகக் கடினம். மேலும் மிருகங்களுக்கோ, அவை மனத் தொந்தரவுகளை மட்டுமே விளைவிக்கின்றன.
பதம் 3.4.35
ஆத்மானம் ச குரு-ஸ்ரேஷ்ட கிருஷ்ணேன மனஸேக்ஷிதம்
ருயாயன் கதே பாகவதே த்ரோத ப்ரேம-விஹ்வல:
ஆத்மானம்-தன்னை; ச – கூட; குரு-ஸ்ரேஷ்ட—குருக்களில் சிறந்தவரே ; க்ருஷ்ணேன-கிருஷ்ணரால்; மனஸா-மனதால்: ஈக்ஷிதம்—நினைவு கூறப்பட்டதை; த்யாயம்—இவ்வாறு சிந்தித்துக் கொண்டு; கதே -சென்றதால்; பாகவதே-பக்தரின்; ருரோத -வாய்விட்டு அழுதார்; ப்ரேம—விஹ்வல:-பிரேமையினால் மனங்குழைந்து.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (இவ்வுலகை விட்டுச் செல்லும்பொழுது) தன்னை நினைவு கூர்ந்ததை அறிந்த விதுரர், பிரேமையினால் மனங்குழைந்து, வாய்விட்டு அழத் துவங்கினார்.
பதம் 3.4.36
காலிந்யா:கதிபி: ஸித்த அஹோபிர் பரதர்ஷப
ப்ராபத்யத ஸ்வ: ஸரிதம் யத்ர மித்ரா-ஸுதோ முனி:
காலிதியா: -யமுனைக் கரையில்: கதிபி- சில: ஸித்தே – அவ்வாறு கழிந்ததும்; அஹோபி:- நாட்கள்; பரத-ருஷ்ப-பரத வம்சத்தில் சிறந்தவரே; ப்ராபத்யத—அடைத்தார்; ஸ்வ: -ஸரிதம் கங்காதுவாரத்தை; யத்ர -எங்கு: மித்ரா -ஸுத: -மித்திரரின் புதல்வரான ; முனி:- முனிவர்.
யமுனை நதிக்கரையில் சில நாட்களைக் கழித்தபின், முக்தி பெற்ற ஆத்மாவான விதுரர், மைத்ரேய மாமுனிவர் இருந்த கங்கைக் கரையை அடைந்தார்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், ” விதுரர் மைத்ரேயரை தேடிச் செல்லுதல் ” எனும் தலைப்பைக் கொண்ட நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.