அத்தியாயம் – 32
பயன்தரும் செயல்களில் வருகின்ற சிக்கல்
பதம் 3.32.1
கபில உவாச
அதயோ க்ருஹ-மேதீயாந் தர்மானேவாவஸன் க்ருஹே
காமமர்த்தம் ச தர்மான் ஸ்வான் தோக்தி பூய: பிபர்திதான்
கபில உவாச—பகவான் கபிலர் கூறினார்; அத—இப்போது; ய—அந்த மனிதர்; க்ருஹ மேதீயாந்—இல்லறத்தார்களின்; தர்மான்—கடமைகள்; ஏவ—நிச்சயமாக; ஆவஸன்—வாழ்தல்; க்ருஹே—வீட்டில்; காமம்—புலன் திருப்தி; அர்த்தம்—பொருளாதார வளர்ச்சி; ச—மற்றும்; தர்மான்—மதச் சடங்குகள்; ஸ்வான்—அவருடைய; தோக்தி—அனுபவிக்கிறார்; பூய—மீண்டும் மீண்டும்; பிபர்தி—நிகழ்த்துகிறார்; தான்—அவர்களை.
பரம புருஷபகவான் கூறினார்: இல்லற வாழ்வின் நடுவில் வாழும் மனிதர் மதச்சடங்குகளைச் செய்வதன் மூலம் உலகியல் பயன்களைப் பெறுகிறார், அதன் மூலம் அவர் தன் பொருளாதார வளர்ச்சி மற்றும் புலன் நுகர்ச்சிக்கான ஆசையை நிறைவேற்றுகிறார். மீண்டும் மீண்டும் அவர் அதே வழியில் செயல்படுகிறார்.
பதம் 3.32.2
ஸ சாபபி பகவத்-தர்மாத் காம-மூட: பராங்முக:
யஜதே க்ரதுபிர்தேவான் பித்ரும்ஸ்ச ஸ்ரத்தயாந்வித:
ஸ—அவர்கள்; ச—அபி—மேலும்; பகவத்-தர்மாத்—பக்தித் தொண்டிலிருந்து; காம—மூட:—இச்சையால் மோஹிக்கப்பட்டு; பராங்முக:—முகத்தைத் திருப்பிக் கொண்டு; யஜதே—வழிபடுகிறார்கள்; க்ரதுபி—யாகச் சடங்குகளுடன்; தேவான்—தேவர்கள்; பித்ருன்—முன்னோர்கள்; ச—மற்றும்; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; அந்வித:—அளிக்கப்பட்டு.
அந்த மனிதர்கள் புலன் நுகர்ச்சியில் அதிகப்பற்று கொண்டதால், பக்தித் தொண்டை எப்போதும் இழக்கின்றனர், அதனால் அவர்கள் பலவித யாகங்களைச் செய்தாலும் தேவர்களையும் முன்னோர்களையும் திருப்தி செய்யச் சிறந்த வாக்குறுதிகளை எடுத்தாலும், அவர்கள் கிருஷ்ண உணர்வில், பக்தித் தொண்டில் ஆர்வம் கொள்வதில்லை.
பதம் 3.32.3
தச்ரத்தயா க்ராந்த-மதி பித்ரு-தேவவ்ரத: புமான்
கத்வா சாந்த்ரமஸம் லோகம் ஸோமபா: புனரேஷ்யதி
தத்—தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும்; ச்ரத்தயா—மரியாதையுடன்; ஆக்ராந்த—வெற்றி கொள்ளுதல்; மதி—அவர்மனம்; பித்ரு—முன்னோர்களுக்கு; தேவ—தேவர்களுக்கு; வரத்—அவர்சபதம்; புமான்—மனிதர்; கத்வா—சென்று; சாந்த்ரமஸம்—சந்திரனுக்கு; லோகம்—கோள்; ஸோமபா—ஸோமபானம் குடித்தல்; புன—மீண்டும்; ஏஷ்யதி—திரும்பி வருவார்.
புலன் நுகர்ச்சியால் கவரப்பட்ட தேவர்கள் மற்றும் முன்னோர்களிடம் பக்தியுள்ள அந்த உலோகாயதர்கள் ஸோமரசம் குடிப்பதற்கு சந்திரனுக்கு உயர்த்தப்படுகிறார்கள். மீண்டும் அவர்கள் இந்தக் கோளுக்குத் திரும்பி வருகிறார்கள்.
பதம் 3.32.4
யதா சாஹீந்த்ர- சய்யாயாம் சேதே நந்தாஸனோ ஹரி:
ததா லோகா லயம் யாந்தி த ஏதே க்ருஹ-மேதினாம்
யதா—எப்பொழுது; ச—மற்றும்; அஹி இந்த்ர—பாம்பரசனின்; சய்யாயாம்—படுக்கையில்; சேதே—படுத்தல்; அநந்த ஆஸன—அவருடைய இருக்கை; அநந்த—சேஷ; ஹரி—பகவான் ஹரி; ததா—பின்னர்; லோகா—கோள்கள்; லயம்—மறையும் வரை; யாந்தி—செல்; த ஏதே—அந்த மிகவும்; க்ருஹமேதினாம்—உலோகாயத இல்லறத்தார்களின்.
உலோகாயத மனிதர்களின் எல்லாக் கோள்களும், சந்திரன் போன்ற மேலுலகக் கோள்களும் சேர்ந்து, பரம புருஷ பகவானாகிய ஹரி, அநந்த சேஷம் என்று அறியப்படும் பாம்புகளால் ஆன தன் படுக்கைக்குச் செல்லும் பொழுது மறைகின்றன.
பதம் 3.32.5
யே ஸ்வ-தர்மாந்ந துஹ்யந்தி தீரா: காமார்த்த-ஹேதவே
நி: ஸங்கா ந்யஸ்தகர்மாண ப்ரசாந்தா: கத்த-சேதஸ
யே—அவர்கள்; ஸ்வ தர்மான்:—அவர்களின் வேலைக்கான கடமைகள்; ந—இல்லை; துஹ்யந்தி—பயன்படுத்தி; தீரா—அறிவுள்ள; காம—புலன் திருப்தி; அர்த்த—பொருளாதார வளர்ச்சி; ஹேதவா—அதற்காக; நி: ஸங்கா—ஜடப்பற்றிலிருந்து விடுதலை; ந்யஸ்த—விட்டுவிட்டு; கர்மாண—விளைவு தரும் செயல்கள்; ப்ரசாந்தா—திருப்தி அடைந்து; சுத்த சேதஸ—தூய்மையடைந்த உணர்வு நிலை.
அறிவும் தூய்மையடைந்த உணர்வு நிலையும் உடையவர்கள் கிருஷ்ண உணர்வில் முழுத் திருப்தி அடைகின்றனர். இயற்கையின் குணங்களிலிருந்து விடுபட்டவராக அவர்கள் புலன் திருப்திக்காகச் செயல்படுவதில்லை. மாறாக அவர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபட்டு இருப்பதால் அவர்கள் ஒருவர் எதிர்பார்க்கப்படுவது போலச் செயல்படுகின்றனர்.
பதம் 3.32.6
நிவ்ருத்தி-தர்ம நிரதா நிர்மமா நிரஹங்க்ருதா:
ஸ்வ-தர்மாப்தேன ஸத்வேன பரிசுத்தேன சேதஸா
நிவ்ருத்தி தர்ம—பற்றின்மைக்கான மதச் செயல்களில்; நிரதா:—நிலையாக ஈடுபட்டு; நிர்மமா—உரிமையாளர் எனும் நோக்கு இன்றி; நிரஹங்க்ருதா—போலியான ஆளுமை இன்றி; ஸ்வ தர்ம—ஒருவரின் பணிக்கான கடமைகளால்; ஆப்தேன—நிறைவேற்றி; ஸத்வேன—ஸத்வ குணத்தால்; பரிசுத்தேன—முழுதும் தூய்மை அடைந்த; சேதஸா—உணர்வு நிலையால்.
எந்தப் பற்றுமின்றி கடமைகளை அவர் செய்வதன் மூலம் உரிமையாளர் அல்லது போலி ஆளுமை உணர்வு இல்லாதிருப்பதன் மூலம், மனச்சான்றினைத் தூய்மைப்படுத்துதலின் மூலம் ஒருவருடைய இயல்பான நிலையில் எளிதாக பகவானின் ராஜ்யத்தில் நுழைய முடியும்.
பதம் 3.32.7
சூர்யத்-வாரேண தே யாந்தி புருஷம் விஸ்வதோ-முகம்
பராவரேசம் ப்ரக்ருதிம் அஸ்யோத்பத்-யந்த- பாவனம்
சூர்ய த்வாரேண—ஒளி நிறைந்த பாதையின் மூலம்; தே—அவர்கள்; யாந்தி—அணுகி; புருஷம்—பரம புருஷபகவான்; விஸ்வத முகம்—எல்லா இடத்திலும் பார்க்கும் அவர் முகம்; பர அவர ஈசம்—அகநிலை மற்றும் ஜடவுலகங்களின் உரிமையாளர்; ப்ரக்ருதிம்—ஜட காரணம்; அஸ்ய—உலகின்; உத்பத்தி—வெளிப்பாட்டின்; அந்த—அழிவின்; பாவனம்—காரணம்.
ஒளி நிறைந்த பாதையின் வழியாக, அந்த விடுதலை பெற்ற மனதிர்கள் முழுமையான பரம புருஷ பகவானை ஆன்மீக மற்றும் ஜடவுலகங்களின் உரிமையாளரை, அவற்றின் வெளிப்பாடு மற்றும் அழிவிற்கு மேலான காரணமாக விளங்குபவரை அணுகுகின்றனர்.
பதம் 3.32.8
த்வி-பரார்தாவஸானே ப்ரளயோ ப்ரஹ்மணஸ்து தே
தாவதத்யாஸதேலோகம் பரஸ்ய பர-சிந்தகா:
த்வி பரார்த—இரண்டு பரார்தங்கள்; அவஸானே—முடிவில்; ய—எந்த; ப்ரளய—மரணம்; ப்ரஹ்மண—பகவான் பிரம்மனின்; து—உண்மையில்; தே—அவர்கள்; தாவத்—நீண்ட காலம்; அத்யாஸதே—தாங்குதல்; லோகம்—கோளில்; பரஸ்ய—பரமனின்; பர-சிந்நதகா—பரம புருஷ பகவானை நினைத்தல்.
பரம புருஷ பகவானின் ஹிரண்யகர்ப்ப விரிவை வழிபடுபவர்கள் இந்த ஜடவுலகினுடைய இரண்டு பரார்தங்கள் முடியும் வரையிலும் பகவான் ப்ரம்மா இறக்கும் வரையிலும் இந்த உலகில் இருக்கின்றனர்.
பதம் 3.32.9
க்ஷ்மாம்போ-நாலனில-வியந்மன- இந்த்ரியார்த்த-
பூதாதிபி:பரிவ்ருதம் ப்ரதிஸஜ்ஹீர்ஷு:
அவ்யாக்ருதம் விசதி யர்ஹி குணத்-ராயாத்மா
காலம் பராக்ய மனுபூய பர ஸ்வயம்பூ
க்ஷ்மா—பூமி; அம்ப—நீர்; அணல்—நெருப்பு; அநில—காற்று; வியத்—ஆகாயம்; மன—மனம்; இந்த்ரிய—புலன்கள்; அர்த்த—புலன்களுக்கான பொருட்கள்; பூத—ஆளுமை; ஆதபி—முதலியன; பரிவ்ருதம்—மூடப்பட்டு; ப்ரதிஸஞ்ஜிஹீர்ஷு:—அழிக்க ஆசைப்பட்டு; அவ்யாக்ருதம்—மாற்றம் இல்லாத அகநிலை வானம்; விசதி—அவர் நுழைகிறார்; யர்ஹி—அந்த நேரத்தில்; குணத்ரய—ஆத்மா மூன்று குணங்கள் அடங்கிய; காலம்—நேரம்; பர ஆக்யம்—இரண்டு பரார்த்தங்கள்; அனுபூய—அனுபவித்த பிறகு; பர—தலைவர்; ஸ்வயம்பூ—பகவான் பிரம்மா.
ஜட இயற்கையுள் மூன்று குணங்களின் நேரம் இரு பரார்த்தங்கள் என்று அறியப்படும் காலத்தை அனுபவித்த பின்னர், பகவான் பிரம்மா, பூமி, நீர் காற்று, நெருப்பு, வான் மனம், ஆளுமை முதலிய அடுக்குகளால் மூடப்பட்டு அண்டத்தை மூடிவிட்டு பகவானிடம் திரும்பிச் செல்கிறார்.
பதம் 3.32.10
ஏவம் பரேத்ய பகவந்தமனுப்ரவிஷ்டா
யே யோகினோ ஜீத-மருந்மனஸோ விராகா:
தேனைவ ஸாகமம்ருதம் புருஷம் புராணம்
ப்ரம்ஹ ப்ரதானமுபாயாந்த்யகதாபிமானா:
ஏவம்—இவ்வாறு; பரேத்ய—நீண்ட தூரம் சென்றதும்; பகவந்தம்—பகவான் பிரம்மா; அனுப்ரவிஷ்டா—நுழைந்து; யே—அவர்கள்; யோகின—யோகிகள்; ஜித—கட்டுப்படுத்தி; மருத்—சுவாசித்தல்; மனஸ—மனம்; விராகா—பற்றின்றி; தேன—பகவான் பிரம்மாவுடன்; ஏவ—உண்மையில்; ஸாகம்—சேர்ந்து; அம்ருதம்—இன்பத்தின்; புருஷம்—பரம புருஷ பகவானிடம்; புராணம்—பழமையானது; ப்ரம்ஹ ப்ராதானம்—மேலான ப்ரம்மன்; உபயாந்தி—அவர்கள் செல்வர்; அகத—செல்வதில்லை; அபிமானா—அவரின் போலி ஆளுமை.
மனத்தைக் கட்டுப்படுத்தி, சுவாசிக்கும் பயிற்சிகளைச் செய்வதால் உலகப் பற்றின்றி இருக்கும் யோகிகள், மிக மிகத் தொலைவில் உள்ள பிரம்மனின் கோளை அடைகின்றனர். தங்களின் உடல்களைக் கைவிட்ட பின்னர் அவர்கள் பகவான் பிரம்மனின் உடலில் நுழைகின்றனர், அதனால் பிரம்மன் விடுதலை பெற்று பரம புருஷ பகவானாகிய மேலான பிரம்மனிடம் சேரும்பொழுது, அந்த யோகிகளும் பகவானின் அரசிற்குள் செல்ல முடியும்.
பதம் 3.32.11
அத தம் ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-பத்மேஷு க்ருதாலயம்
ஸ்ருதானுபாவம் சரணம் வ்ரஜ பாவேன பாமினி
அத—அதனால்; தம்—பரம புருஷ பகவான்; ஸர்வ- பூதானம்—எல்லா வாழும் உயிரினங்களின்; ஹ்ருத் பத்மேசு—இதய கமலங்களில்; க்ருத ஆலயம்—தங்கும்; ஸ்ருத அனுபாவம்—நீங்கள் கேட்ட சிறப்புகளுக்குரியவை; சரணம்—திருவடி நிழலிடம்; வ்ரஜ—செல்; பாவேன—பக்தித் தொண்டில்; பாமினி—என் அன்பு அன்னை.
அதனால், என் அன்பு அன்னையே, எல்லாருடைய மனத்திலும் அமர்ந்திருக்கும் பரம புருஷ பகவானின் திருவடி நிழலை பக்தித் தொண்டினால் நேரடியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
பதங்கள் 3.32.12- 3.32.15
ஆத்ய: ஸ்திர-சராணாம் யோ வேத-கர்ப: ஸஹர்ஷிபி:
யோகேஸ்வரை: குமாராத்யை: ஸித்தைர்யோகப்ரவர்தகை:
பேத-த்ருஷ்ட்யாபிமானேன நி: ஸங்கேனாபி கர்மணா
கர்த்ருத்வாத்ஸகுணம் ப்ரஹம புருஷம் புருஷர்ஷபம்
ஸ ஸம்ஸ்ருத்ய புன: காலே காலேனேஸ்வரமூர்த்தினா
ஜாதே குணவ்யதிகரே யதா-பூர்வம் ப்ரஜாயதே
ஐஸ்வர்யம் பாரமேஷ்ட்யம் ச தேபி தர்மவிநிர்மிதம்
நிஷேவ்ய புனராயாந்தி குண-வ்யதிகரே ஸதி
ஆத்ய—படைப்பவர்; பகவான்—பிரம்மா; ஸ்திரசராணாம்—அசையா மற்றும் அசையும் வெளிப்பாடுகளின்; ய:—அவர்; வேத கர்ப—வேதங்களின் கருவூலம்; ஸஹ—உடன்; ர்ஷிபி—முனிவர்கள்; யோக ஈஸ்வர—சிறந்த அறிவர்களாகிய யோகிகளுடன்; குமார ஆத்யை—குமாரர்கள் மற்றும் பிறர்; ஸித்தை—முழுமையான வாழும் உயிரினங்களுடன்; யோக ப்ரவர்தகை—யோகமுறையின் ஆசிரியர்கள்; பேத—த்ஞஷ்ட்யா—சுதந்தரம் பார்வையினால்; அபிமானேன—தவறான கருத்தால்; நி ஸங்கேன—பயன் தராத; அபி—ஆயினும்; கர்மண—அவர்கள் செயல்களால்; கர்த்ருஜ்த்வாத்—செய்பவராக இருக்கும் அறிவிலிருந்து; ஸ—குணம்—புனிதமான குணங்களைக் கொண்டிருத்தல்; ப்ரம்ம—பிரம்மன்; புருஷம்—பரம புருஷ பகவான்; புருஷ ர்ஷபம்—முதல் புருஷ அவதாரம்; ஸ—அவர்; ஸம்ஸ்ருத்ய—அடைந்து; புன—மீண்டும்; காலே—காலத்தில்; காலேன— காலத்தால்; ஈச்வர மூர்த்தினா—பகவானின் வெளிப்பாடு; ஜாதேகுண வ்யதிகரே—குணங்களின் செயலெதிர்ச் செயல் எழும்போது; யதா—போல; பூர்வம்—முன்பு; ப்ரஜாயதே—பிறந்தார்; ஐஸ்வர்யம்—செல்வவளம்; பாரமேஷ்ட்யம்—சிறந்த; ச—மற்றும்; தே—முனிவர்கள்; அபி—உடன்; தர்ம—அவர்கள் பக்திச் செயல்களால்; விநிர்மிதம்—உருவாக்கப்பட்டு; நிஷேவ்ய—அனுபவித்து; புன—மீண்டும்; ஆயாந்தி—அவர்கள் திரும்புவர்; குண வ்யதிகரே ஸதி—குணங்களின் செயலெதிர்ச் செயல் நடைபெறும் பொழுது.
என் அன்பு அன்னையே, சிலர் பரம புருஷ பகவானை சிறப்பான சுய ஆர்வத்துடன் வழிபடலாம், ஆனால் பகவான் பிரம்மனைப் போன்ற தேவர்களும், ஸநத் குமாரரைப் போன்ற சிறந்த சாதுக்களும் மற்றும் மரீசீ போன்ற சிறந்த முனிவர்களும் படைப்பின் போது மீண்டும் இந்தப் பருவுலகிற்கு வரவேண்டும். இயற்கையின் மூன்று குணங்களின் செயலெதிர்ச்செயல் தொடங்கும்பொழுது, இந்த உலக வெளிப்பாட்டின் படைப்பாளரும், வேத அறிவு நிறைந்தவரும் ஆகிய பிரம்மா, ஆன்மீக வழி மற்றும் யோக முறையின் ஆசிரியர்களான சிறந்த முனிவர்கள் ஆகியோர் காலக் கூற்றின் பாதிப்பின் கீழ் வருகின்றனர். அவர்கள் தங்களது பயன்தராத செயல்களால் விடுதலை அடைகின்றனர், அவர்கள் புருஷரின் முதல் அவதாரத்தை அடைகின்றனர், ஆனால் படைப்பு நேரத்தில், அவர்கள் முன்பு இருந்தவாறு சரியாக அதே வடிவங்களுடனும் நிலைமைகளுடனும் திரும்பி வருகின்றனர்.
பதம் 3.32.16
யே த்விஹாஸக்த-மனஸ: கர்மஸுஸ்ரத்தயாந்விதா:
குர்வந்த்யப்ரதிஷித்தானி நித்யாந்யபி சக்ருத்ஸ்னஸ:
யே—அவர்கள்; து—ஆனால்; இஹ—இந்த உலகில்; ஆஸக்த—அடிமைப்பட்டு, மனஸ:—மனங்கள்; கர்மசு—பலன் தரும் செயல்களிடம்; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; அந்விதா—அளிக்கப்பட்டு; குர்வந்தி—நிகழ்த்து; அப்ரதிஷித்தானி—முடிவுக்குப் பற்றுடன்; நித்யானி—விதிக்கப்பட்ட கடமைகள்; அபி—நிச்சயமாக; நித்யானி—வித்க்கப்பட்ட கடமைகள்; அபி—நிச்சயமாக; ச—மற்றும்; க்ருத்ஸ்னஸ:—மீண்டும் மீண்டும்.
இந்தப் பருவுலகத்தோடு மிகவும் ஒன்றிப்போனவர்கள் விதிக்கப்பட்ட கடமைகளை மிகவும் நன்றாகவும், சிறந்த நம்பிக்கையுடனும் நிறைவேற்றுகிறார்கள். அவர்கள் தினமும் விதிக்கப்பட்ட அந்த கடமைகளை, பலன் கிடைக்கும் வண்ணம் பற்றுடன் செய்கிறார்கள்.
பதம் 3.32.17
ரஜஸா குண்ட-மனஸ: காமாத்மானோஜிதேந்த்ரியா:
பித்ருன் யஜந்த்யனுதினம் க்ருஹேஷ்வபிரதாசயா:
ரஜஸா—ரஜோ குணத்தால்; குண்ட—கவலைகள் நிறைந்து; மனஸ—அவர்களின் மனங்கள்; காம ஆத்மான—புலன் திருப்திக்கு ஆசைப்படுதல்; அஜித—கட்டுப்படுத்தப்படாத; இந்த்ரிய—அவர்களின் புலன்கள்; பித்ருன்—முன்னோர்கள்; யஜந்தி—அவர்கள் வழிபடுவர்; அனுதினம்—தினமும்; க்ருஹேஷு—இல்லற வாழ்வில்; அபிரத—ஈடுபட்டு; ஆசயா—அவர்களின் மனங்கள்.
அந்த மனிதர்கள், ரஜோ குணத்தால் தூண்டப்பட்டு, கவலைகளை நிறைந்தவர்களாக, கட்டுப்படுத்தப்படாத புலன்களால் எப்போதும் புலன் நுகர்ச்சிக்கு ஆசைப்படுபவர்களாக இருக்கின்றனர், அவர்கள் முன்னோர்களை வழிபடுகின்றனர், இரவும் பகலும் அவர்களின் குடும்ப சமூக மற்றும் தேசிய வாழ்வின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப் பாடுபடுகின்றனர்.
பதம் 3.32.18
த்ரை-வர்கிகாஸ்தேபுருஷா விமுகா ஹரி-மேதஸ :
கதாயாம் கதனீயோரு-விக்ரமஸ்ய மதுத்விஷ:
த்ரை—வர்கிகா—மூன்று உயர்த்தும் முறைகளில் ஆர்வம் கொண்டு; தே—அந்த; புருஷா—மனிதர்கள்; விமுகா—ஆர்வம் இன்றி; ஹரி—மேதஸ—பகவான் ஹரியின்; கதாயாம்—திருவிளையாடல்களில்; கதனீய—உச்சரிக்கத் தகுதியான; உரு விக்ரமஸ்ய—அவருடைய ஒப்புயர்வற்ற வீரம்; மது—த்விஷ:—மது என்னும் அசுரனை அழித்தவர்.
அந்த மனிதர்கள் த்ரை வர்கிக எனப்படுகின்றனர் ஏனெனில் அவர்கள் மூன்று வித உயர்த்தும் முறைகளில் ஆர்வம் கொண்டவர்கள். கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாவுக்கு வீடுபேறுதரும் பரம புருஷ பகவானிடம் வெறுப்பு கொண்டவர்கள். உன்னத வீரத்தால் கேட்கத் தகுதியான பரமபுருஷ பகவானது திருவிளையாடல்களில் அவர்கள் ஆர்வம் இல்லாதவர்கள்.
பதம் 3.32.19
நூனம் தைவனே விஹதா யே சாச்யுத-கதா-ஸுதாம்
ஹித்வா ஸ்ருண்வந்தயஸத்-காதா: புரீஷமிவ விட்-புஜ:
நூனம்—நிச்சயமாக; தைவேன—பகவானின் ஆணையால்; விஹதா—கண்டிக்கப்பட்டு; யே—அவர்கள்; ச—உடன்; அச்யுத—தவறு செய்யாத பகவானின்; கதா—கதைகள்; ஸுதாம்—தேன்; ஹித்வா—விட்டுவிட்டு; ஸ்ருண்வந்தி—அவர்கள் கேட்பார்கள்; அஸத்காதா:—உலோகாயதவாதிகள் பற்றிய கதைகள்; புரீஷாம்—மலம்; இவ—போல; விட்புஜ—மலம் உண்பவர்கள் (பன்றிகள்).
அந்த மனிதர்கள் பகவானின் ஆணையால் கண்டிக்கப் படுகிறார்கள். அவர்கள் பரமபுருஷ பகவானின் செயல்களாகிய தேனை வெறுப்பதால், அவர்கள் மலம் தின்னும் பன்றிகளுடன் ஒப்பிடப்படுகிறார்கள். அவர்கள் பகவானின் உன்னதச் செயல்களைக் கேட்பதை விட்டுவிட்டு உலோகாயத வாதிகளின் வெறுக்கத்தக்க செயல்களைக் கேட்பதில் ஈடுபடுகின்றனர்.
பதம் 3.32.20
தக்ஷிணேன பதார்யம்ண: பித்ரு-லோகம் வ்ரஜந்திதே
ப்ரஜாமனு ப்ரஜாயந்தே ச்மசானாந்த-க்ரியா-க்ருத:
தக்ஷிணேன—தெற்கு; பதா—வழியால்; அர்யம்ண—சூரியனின்; பித்ருலோகம்—பித்ருலோகத்திற்கு; வ்ரஜந்தி—செல்; தே—அவர்கள்; ப்ரஜாம்—அவர்களின் குடும்பங்கள்; அனு—உடன்; ப்ரஜாயந்தே—அவர்கள் பிறப்பு எடுப்பார்கள்; ச்மசான—சுடுகாடு; அந்த—முடிவிற்கு; க்ரியா—பயன் தரும் செயல்கள்; க்ருத—செய்தல்.
அந்த உலோகாயதவாதிகள் சூரியனின் தெற்குப்பாதை மூலம் பித்ருலோகம் எனப்படும் கோனிற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் இந்த பூமியாகிய கோளிற்கு மீண்டும் திரும்பி வந்து, அவர்களின் குடும்பங்களில் பிறப்பு எடுத்து, பிறப்பிலிருந்து வாழ்வின் முடிவுவரை அதே உலகியல் பயன்தரும் செயல்களை மீண்டும் தொடங்குகின்றனர்.
பதம் 3.32.21
ததஸ்தே க்ஷீ ண-சுக்ருதா: புனர்லோகமிமம் ஸதி
பதந்தி விவசாதேவை: ஸத்யோ விப்ரம்சிதோதயா:
தத—பின்னர்; தே—அவர்கள்; க்ஷீண—முடிந்ததும்; சுக்ருதா:—அவர்களுடைய பக்திச் செயல்களின் முடிவுகள்; புன—மீண்டும் லோகம்; இமம்—இந்தக் கோளிற்கு; ஸதி—நல்லொழுக்கம் உடைய அன்னையே; பதந்தி—விழுதல்; விவசா—உதவியின்றி; விப்ரம்சித—விழுவதற்குக் காரணமான; உதயா:—அவர்களின் செல்வ வளம்.
உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்ட எவரும் தீடிரென்று சிலசமயம் விழுவதுபோல அவர்களுடைய பக்திச் செயல்களின் விளைவுகள் முடியும் பொழுது; வன்மை வாய்ந்த சக்தியால் அவர்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்கள் மீண்டும் இந்தக் கோளிற்குத் திரும்ப வருகின்றனர்.
பதம் 3.32.22
தஸ்மாத்வம் ஸர்வபா-வேன பஜஸ்வ பரமேஷ்டினம்
தத்குணாஸ்ரயயா பக்த்யா பஜனீய-பதாம்புஜம்
தஸ்மாத்—அதனால்; த்வம்—நீங்கள் (தேவஹூதி); ஸர்வபாவேன—அன்பான பெருமகிழ்ச்சியுடன்; பஜஸ்வ—வழிபாடு; பரமேஷ்டினம்—பரம புருஷ பகவான்; தத்—குண—பகவானின் குணங்கள்; ஆஸ்ரயயா—உடன் தொடர்பு; பக்த்யா—பக்தித் தொண்டால்; பஜனீய—வழிபடத்தக்க; பத—அம்புஜம்—அவரின் தாமரைப் பாதங்கள்.
என் அன்பான அன்னையே, நீங்கள் பரம புருஷ பகவானிடம் சரணடையுங்கள் என்று அதனால் நான் அறிவுறுத்துகிறேன், ஏனெனில் அவருடைய தாமரைத் திருவடிகள் வழிபடத் தகுதியானவை. இதைப் பக்தி மற்றும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் இவ்வாறு நீங்கள் உன்னத பக்தித் தொண்டில் பணிபுரிய முடியும்.
பதம் 3.32.23
வாசுதேவே பகவதி பக்தி-யோக: ப்ரயோஜித:
ஜனயத்யாசு வைராக்யம் க்ஞானம் யத்ப்ரம்ம-தர்சனம்
வாசுதேவே—கிருஷ்ணரிடம்; பகவதி—பரம புருஷ பகவான்; பக்தி—யோக:—பக்தித் தொண்டு; ப்ரயோஜித:—நிறைவேற்றி; ஜனயதி—உருவாக்குதல்; ஆசூ—மிகவிரைவில்; வைராக்யம்—பற்றின்மை: க்ஞானம்—அறிவு; யத்—எந்த; பிரம்ம—தர்சனம்—தன்னை அறிதல்.
கிருஷ்ண உணர்வில் ஈடுபாடு, மற்றும் கிருஷ்ணரிடம் பக்தித் தொண்டை நிறைவேற்றுதல் அறிவிலும், பற்றின்மையிலும், தன்னை அறிதலிலும் முன்னேற்றமடையச் செய்யும்.
பதம் 3.32.24
யதாஸ்ய சித்தஷுமர்தேத ஸமேஷ்விந்த்ரிய- வ்ருத்திபி:
ந விக்ருஹ்ணாதி வைஷம்யம் ப்ரியமப்ரியமித்யுத
யதா—எப்பொழுது; அஸ்ய—பக்தரின்; சித்தம்—அறிவு; அர்தேஷு—புலனுக்குரிய பொறிகளில்; ஸமேஷு—அதே; இந்த்ரிய வ்ருத்திபி:—புலன்களின் செயல்களால்; ந—இல்லை; விக்ருஹ்ணாதி—உற்று அறிதல்; வைஷம்யம்—வேறுபாடு; ப்ரியம்—ஒப்புக் கொள்ளத்தக்க; அப்ரியம்—ஒப்புக்கொள்ளத்தகாத; இதி—இவ்வாறு; உத—நிச்சயமாக.
மிகவுயர்ந்த பக்தரின் மனம் புலனுக்கான செயல்களில் சமநிலை அடைகிறது, ஒப்புக்கொள்ளத்தக்க அல்லது ஒப்புக்கொள்ளத்தகாத செயல்களுக்கு அப்பாற்பட்டவர்.
பதம் 3.32.25
ஸ ததைவாத்மனாத்மானம் நி: ஸங்கம் ஸம-தர்சனம்
ஹேயோபாதேய-ரஹிதம் ஆரூடம் பதமீக்ஷதே
ஸ—தூய பக்தர்; ததா—பின்னர்; ஏவ—நிச்சயமாக; ஆத்மனா—அவருடைய எல்லை கடந்த அறிவுக் கூர்மையால்; ஆத்மானம்—அவரை; நி: ஸங்கம்—ஜடப்பற்றின்றி; ஸமதர்சனம்—நோக்கில் சமமாக; ஹேய—மறுக்கப்பட; உபாதேய—ஏற்றுக்கொள்ளத்தக்க; ரஹித—வெறுமையாக; ஆரூடம்—உயர்த்தப்பட்டு; பதம்—எல்லை கடந்த நிலைக்கு; ஈக்ஷதே—அவர் பார்க்கிறார்.
அவருடைய உன்னத அறிவுக்கூர்மையால், தூய பக்தர் தன் நோக்கில் சமமாக இருக்கிறார், தன்னைப் பொருளால் மாசுபட விடுவதில்லை. அவர் எதையும் உயர்ந்ததாகவோ தாழ்ந்ததாகவோ பார்ப்பதில்லை, அவர் தன்னை, பரமனுடன் தன்மையில் சமமாக, உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவதாக உணர்கிறார்.
பதம் 3.32.26
ஞான-மாத்ரம் பரம் ப்ரம்ம பரமாத்மேஸ்வர: புமான்
த்ருச்யா-திபி: ப்ருதக்பாவைர் பகவானேக ஈயதே
ஞான—அறிவு; மாத்ரம்—மட்டும்; பரம்—எல்லை கடந்த; ப்ரம்ம—பிரம்மன்; பரம ஆத்மா—பரமாத்மா; ஈஸ்வர—கட்டுப்படுத்துபவர்; புமான்—பரமாத்மா; த்ருச்யாதிபி—தத்துவ ஆராய்ச்சி மற்றும் பிற வழிமுறைகளாலும்; ப்ருதக் பாவை—புரிந்து கொள்ளுதலின் வேறுபட்ட முறைகளுக்கேற்றபடி; பகவான்—பரம புருஷ பகவான்; ஏக—தனியாக; ஈயதே—உற்றுப் பார்க்கப்படுகிறது.
பரம புருஷபகவான் மட்டுமே முமையான உன்னத அறிவு ஆவார். ஆயினும் அவரைப் பல்வேறு வகையாகப் புரிந்து கொள்ளும் முறைகளுக்கு ஏற்றபடி அவர் வேறுமாதிரி தோன்றுகிறார், அருவ பிரம்மனாக, பரமாத்மாவாக, பரம புருஷ பகவானாக அல்லது புருஷ அவதாரமாகத் தோன்றுகிறார்.
பதம் 3.32.27
ஏதாவானேவ யோகேன ஸமக்ரேணேஹ யோகின:
யுஜ்யதேபிமதோ ஹ்யர்தோ யதஸங்கஸ்து க்ருத்ஸ்னச:
ஏதாவான்—அந்த அளவின்; ஏவ—போல; யோகேன—யோகப் பயிற்சியால்; ஸமக்ரேண—எல்லா; இஹ—இந்த உலகில்; யோகின:—யோகியின்; யுஜ்யதே—அடையப்படுகிறது; அபிதம:—ஆசைப்பட்டு; ஹி—நிச்சயமாக; அர்த்த—நோக்கம்; யத்—எந்த; அஸங்க:—பற்றின்மை; து—உண்மையில்; க்ருத்ஸ்னச:—முழுதுமாக.
எல்லா யோகிகளுக்கான மிகச்சிறந்த பொது நெறிமுறை என்னவென்றால் பலவித யோகத்தால் அடையக் கூடிய உலகியற் பொருளில் முழுதும் பற்றின்றி இருத்தலாகும்.
பதம் 3.32.28
ஞானமேகம் பராசீனைர் இந்த்ரியை ப்ரம்ஹ நிர்குணம்
அவபாத்யர்த-ரூபேண ப்ராந்த்யா சப்தாதி-தர்மிணா
ஞானம்—அறிவு; ஏகம்—ஒன்று; பரசீனை—வெறுப்பு; இந்த்ரியை—புலன்களால்; பிரம்ஹ—மேலான பரம சத்தியம்; நிர்குணம்—ஜட குணங்களுக்கு அப்பாற்பட்டு; அவபாதி—தோன்றுகிறது; அர்த்தரூபேண—பல்வேறு பொருட்களின் வடிவில்; ப்ராந்த்யா—தவறாகக் கொள்ளப்பட்டு; சப்த—ஆதி—ஒலி முதலியன; தர்மிணா—அளிக்கப்பட்டு.
உடல் பொருள் ஆவி கடந்த நிலையை வெறுக்கிறவர்கள் உண்மையே வடிவான இறைவனை புலனறி சாட்சியாகவும், வேறுபாடாகவும் உணர்கின்றனர், அதனால், தவறாகக் கொள்ளப்பட்ட கற்பனையால், அனைத்துமே அவர்களுக்கு தொடர்புடையதாகத் தோன்றுகின்றன.
பதம் 3.32.29
யதா மஹானஹம்-ரூபஸ்த்ரி-வ்ருத்-பஞ்ச-வித: ஸ்வராட்
ஏகாதச-விதஸ்தஸ்ய வபுரண்டம் ஜகத்யத:
யதா—போல; மஹான்—மஹத் தத்துவம்; அஹம் ரூப—போலி ஆளுமை; த்ரி—வ்ருத்—ஜட இயற்கையின் மூன்று குணங்கள்; பஞ்ச வித—ஜந்து ஜட மூலப்பொருட்கள்; ஸ்வராட்—தனிப்பட்ட உணர்வுநிலை; ஏகாதவித—பதினொரு புலன்கள்; தஸ்ய—வாழும் உயிரினத்தின்; வபு—ஜடவுடல்; அண்டம்—பிரம்மாண்டம்; ஜகத்—அண்டம்; யத—எதிலிருந்து அல்லது யாரிடமிருந்து.
மஹத்-தத்வமாகிய முழு ஆற்றலில் இருந்து, போலி ஆளுமை, உலக இயற்கையின் மூன்று குணங்கள் ஐந்து மூலப்பொருட்கள், தனிப்பட்ட உணர்வு நிலை, பதினொரு புலன்கள் மற்றும் பருவுடலை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். அதுபோல, முழு அண்டமும் பரம புருஷ பகவானிடமிருந்து வந்திருக்கிறது.
பதம் 3.32.30
ஏதத்வை ஸ்ரத்தயா பக்த்யா யோகாப்பயாஸேன நித்யச:
ஸமாஹிதாத்மா நி: ஸங்கோ விரக்த்யா பரிபச்யதி
ஏதத்—இந்த; வை—நிச்சயமாக; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; பக்த்யா—பக்தித் தொண்டால்; யோக—அப்யாஸேன—யோகப் பயிற்சியால்; நித்யச:—எப்போதும்; ஸமாஹித—ஆத்மா—அவருடைய மனம் பதிந்து இருக்கும்; நி ஸங்க—ஜடத்தொடர்பிலிருந்து விலகி; விரக்த்யா—பற்றின்மையால்; பரிபச்யதி—புரிந்து கொள்கிறார்.
நம்பிக்கையுடன், தளரா உறுதியுடன், முழுப்பற்றின்மையுடன் ஏற்கனவே பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவருக்கு, பரமனைப் பற்றிய நினைவில் எப்போதும் ஆழ்ந்திருப்பவருக்கு முழுமையான அறிவினைப்பெற முடியும் அப்படிபட்டவர் உலகத் தொடர்பிலிருந்து விலகி இருக்கிறார்.
பதம் 3.32.31
இத்யேதத்கதிதம் குர்வி ஞானம் தத்ப்ரம்ம-தர்சனம்
யேனானுபுத்த்யதே தத்வம்ப்ரக்ருதே: புருஷஸ்ய ச
இதி—இவ்வாறு; ஏதத்—இந்த; கதிதம்—வர்ணிக்கப்பட்டு; குர்வி—ஓ மதிப்பிற்குரிய அன்னையே; ஞானம்—அறிவு; தத்—அந்த; ப்ரம்ம—பரம சத்தியம்; தர்சனம்—வெளிப்படுத்துதல்; யேன—எதனால்; அனுபுத்த்யதே—புரிந்துகொள்ளப்படுகின்றது; தத்வம்—உண்மை; ப்ரக்ருதே—பொருளின்; புருஷஸ்ய—ஆத்மாவின்; ச—மற்றும்.
என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அன்னையே, நான் முன்பே பரமசத்தியத்தைப் புரிந்து கொள்வதன் வழிமுறையினை வர்ணித்திருக்கிறேன், அதன் மூலம் ஒருவர் பொருள், ஆத்மா, அவற்றின் தொடர்பு ஆகிய இவற்றின் உறுதியான உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
பதம் 3.32.32
ஞான- யோகஸ்ச மந்திஷ்டோ நைர்குண்யோ பக்தி-லக்ஷண:
த்வயோரப்யேக ஏவார்த்தோ பகவச்ச்ப்-தலக்ஷண:
ஞான யோக—தத்துவ ஆராய்ச்சி; ச—மற்றும்; மந்நிஷ்ட—என்னை நோக்கி வழிகாட்டப்பட்டு; நைர்குண்ய—இயற்கையின் குணங்களிலிருந்து விடுபட்டு; பக்தி—பக்தித் தொண்டு; லக்ஷண—பெயரிடப்பட்டு; த்வயோ—இரண்டின்; அபி—மேலும்; ஏக—ஒன்று; ஏவ—நிச்சயமாக; அர்த்த—நோக்கம்; பகவத்—பரம புருஷ பகவான்; சப்த—சொல்லால்; லக்ஷண—குறித்துக் காட்டப்பட்டது.
தத்துவ ஆராய்ச்சி பரமபுருண பகவானைப் புரிந்து கொள்ளுதலில் நிறைவு பெறுகிறது. இந்தப் புரிந்து கொள்ளும் நிலை அடைந்த பிறகு, ஒருவர் இயற்கையின் குணங்களிலிருந்து விடுதலை அடையும் பொழுது, அவர் பக்தித் தொண்டின் உயர்நிலை அடைகிறார். நேரடியாக பக்தித் தொண்டின் மூலமாக அல்லது தத்துவ ஆராய்ச்சியின் மூலம், பரம புருஷ பகவானை ஒருவர் கண்டுபிடித்துச் சேர்ந்திட வேண்டும்.
பதம் 3.32.33
யதேந்த்ரியை ப்ருதக்-த்வாரைர் அர்த்தோ பஹு-குணாஸ்ரய:
ஏகோ நானேயதே தத்வத் பகவான் சாஸ்த்-ரவர்த்மபி:
யதா—போல; இந்த்ரியை—புலன்களால்; ப்ருதக்—த்வாரை—பல வேறுபட்ட வழிகளில்; அர்த்த—ஒரு பொருள்; பஹுகுண—பல குணங்கள்; ஆஸ்ரய—அளிக்கப்பட்டு; ஏக—ஒன்று; நாநா—வேறுபட்ட, ஈயதே—மனத்தால் உணரப்படுகிறது; தத்வத்—அதுபோல; பகவான்—பரம புருஷ பகவான்; சாஸ்த்ர—வர்த்மபி—வேறுபட்ட புனித நூல்களின் ஆணைகளுக்கு ஏற்றபடி.
ஒரு தனிப்பொருள் அதன் வேறுபட்ட தன்மைகளால் வெவ்வேறு புலன்களால் ஒவ்வொரு விதமாகப் போற்றப்படுகிறது. அதுபோல, பரம புருஷ பகவான் ஒருவர், ஆனால் பலவித புனித நூல்களின் நெறிகளுக்கேற்றபடி அவர் வேறுபட்டத் தோன்றுகிறார்.
பதங்கள் 3.32.34 – 3.32.36
க்ரியயா க்ரதுபிர்தானஸ் தப: ஸ்வாத்யாய- மர்சனை:
ஆத்மேந்த்ரிய- ஜயேனாபி ஸந்ந்யாஸேனச கர்மணாம்
யோகேன விவிதாங்கேன பக்தி-யோககேன சைவ ஹி
தர்மேணோபய- சிஹ்னேன ய ப்ரவ்ருத்தி-நிவ்த்திமான்
ஆத்ம-தத் வாவபோதேன வைராக்யேன த்ருடேன ச
ஈயதே பகவானேபி ஸகுணோ நிர்குண: ஸ்வ-த்ருக்
க்ரியயா—விளைவு தரும் செயல்களால்; க்ரதுபி—யாகத்துக்குரிய செயல்களால்; தானன்—தானத்தால்; தப—தவங்கள்; ஸ்வாத்யாய—வேத இலக்கியக் கல்வி; மர்சனை—தத்துவ ஆராய்ச்சியால்; ஆத்ம—இந்த்ரிய—ஜயேன—மனம், புலன்களைக் கட்டுப்படுத்துவதால்; அபி—கூட; ஸந்ந்யாஸேன—துறவால்; ச—மற்றும்; கர்மணாம்—விளைவு தரும் பயன்களின்; யோகேன—யோகப் பயிற்சியால், விவித—அங்கேன—வேறுபட்ட பிரிவுகளின்; பக்தி-யோகேன—பக்தித் தொண்டால்; ச—மற்றும்; ஏவ—நிச்சயமாக; ஹி—உண்மையில்; தர்மேண—விதிக்கப்பட்ட கடமைகளால்; உபய சிஹ்னேன—இரண்டு அடையாளங்களும் கொண்டு; ய—எந்த; ப்ரவருத்தி—பற்று; நிவ்ருத்திமான்—பற்றின்மை அடங்கிய; ஆத்மதத்வ—தன்னை அறிதலின் விஞ்ஞானம்; அவபோதேன—புரிந்து கொள்வதால்; வைராக்யேன—பற்றின்மையால்; த்ருடேன—வலிமை; ச—மற்றும்; ஈயதே—மனத்தால் உணரப்படுகிறது; பகவான்—பரம புருஷ பகவான்; ஏபி—இவற்றால்; ஸ்குண—ஜடவுலகில்; நிர்குண—ஜட குணங்களுக்கு அப்பால்; ஸ்வத்ருக்—தன் உடலியல் நிலையைப் பார்ப்பவர்.
பயன் தரும் செயல்கள் மற்றும் வேள்விகளையும் நிகழ்த்துவதால், தானம் வழங்குவதால், தவங்களைச் செய்வதால், பல்வேறு இலக்கியங்களைக் கற்பதால், தத்துவ ஆராய்ச்சி நடத்துவதால், மனத்தைக் கட்டுப்படுத்துவதால், புலன்களை அடக்குவதால், துறவு நெறியான வாழ்வை ஏற்றுக்கொள்வதால், மற்றும் ஒருவருடைய சமூக நெறியின் விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதால்; யோகப் பயிற்சியின் வேறுபட்ட பிரிவுகளைச் செய்வதால் பக்தித் தொண்டு புரிவதால், பற்று பற்றின்மை ஆகிய இரண்டின் அடையாளங்களையும் உள்ளடக்கிய பக்தித் தொண்டின் முறையை வெளிப்படுத்துவதால்; தன்னை அறிதலின் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்வதால், பற்றின்மை எனும் பலமான உணர்வை வளர்ப்பதால், தன்னை உணர்தலின் வேறுபட்ட வழிமுறைகளைப் புரிந்து கொள்வதில் நிபுணரான ஒருவர் பரம புருஷ பகவானை இந்த உலகிலும் ஆன்மீக உலகிலும் அவரை உணர்கிறார்.
பதம் 3.32.37
ப்ராவோசம் பக்தி-யோகஸ்ய ஸ்வரூபம் தே சதுர்-விதம்
காலஸ்ய சாவ்யக்த- கதேர் யோந்தர்தாவதி ஜந்து ஷு
ப்ராவோசம்—விளக்கப்பட்டு; பக்தி-யோகஸ்ய—பக்தித் தொண்டின்; ஸ்வரூபம்—அடையாளம்; தே—உங்களிடம் சது—விதம்—நான்கு பிரிவுகளில்; காலஸ்ய—காலத்தின்; ச—கூட; அவ்யக்த—கதே—புலனால் அறியமுடியாத அசைவு; ய—எந்த; அந்தர்தாவதி—துரத்துதல்; ஜந்து ஷு—வாழும் உயிரினங்கள்.
என் அன்பு அன்னையே நான் உங்களுக்கு பக்தித் தொண்டின் முறையையும் நான்கு வேறுபட்ட சமூகப்பிரிவுகளில் அதன் அடையாளத்தையும் விளக்கி இருக்கிறேன். சாஸ்வதமான காலம் எவ்வாறு வாழும் உயிரினங்களை, அவற்றின் புலனால் அறிய முடியாத போதும், துரத்துகிறது என்றும் விளக்கினேன்.
பதம் 3.32.38
ஜீவஸ்ய ஸம்ஸ்ருதீர்பஹ்வீர் அவித்யா-கர்ம- நிர்மிதா:
யாஸ்வங்க ப்ரவிசந்நாத்மா ந வேத கதிமாத்மன:
ஜீவஸ்ய—வாழும் உயிரினத்தின்; ஸம்ஸ்ருதி—ஜட இருப்பின் வழிகள்; பஹ்வீ—பல; அவித்யா—அறியாமையில்; கர்ம—வேலையால்; நிர்மிதா—உருவாக்கப்பட்டு; யா—சு—அதில்; அங்க—என் அன்பு அன்னை; ப்ரவிசன்—நுழைதல்; ஆத்மா—வாழும் உயிரினம்; ந—இல்லை; வேத—புரிந்து கொள்கிறார்; கதிம்—அசைவு; ஆத்மன—அவரை.
அறியாமையாலோ அல்லது அவருடைய உண்மை அடையாளத்தை மறந்தோ ஒருவர் நிகழ்த்தும் செயல்களுக்கு ஏற்றபடி உயிரினத்திற்கு பல்வேறு வகையான வாழ்வுகள் உள்ளன என் அன்பு அன்னையே, யாரேனும் அந்த மறதியில் அகப்பட்டுக்கொண்டால், அவரால் தன்னுடைய இயங்கும் நிலை எங்கு முடியும் என்பதைப் புரிந்துகொள்ள இயலாது.
பதம் 3.32.39
நைதத்கலாயோபதி சேந் நாவினீதாய கர்ஹிசித்
ந ஸ்தப்தாய ந பிந்நாய நைவ தர்ம-த்வஜாயச
ந—இல்லை; ஏதத்—இந்த அறிவுரை; கலாய—பொறாமைப் படுபவர்களுக்கு; உபதிசேத்—ஒருவர் கற்பிக்க வேண்டும்; ந—இல்லை; அவினீதாய—உலோகாயதவாதியிடம்; கர்ஹிசித்—எப்போதும்; ந—இல்லை; ஸ்தப்தாய—செருக்குடையவர்களுக்கு; ந—இல்லை; பிந்நாய—தவறான நடத்தை உடையவர்களிடம்; ந—இல்லை; ஏவ—நிச்சயமாக; தர்ம த்வஜாய—வஞ்சனையாளர்களுக்கு; ச—கூட.
பகவான் கபிலர் தொடர்ந்தார் இந்த அறிவுரை பொறாமைப்படுபவர்களுக்கும் உலோகாயத வாதிகளுக்கும் அல்லது தங்கள் நடத்தையில் தூய்மையற்றவர்களுக்கும் உரியதல்ல. வஞ்சனையாளர்களுக்கு அல்லது உலகத்தின் பொருள்கள் பற்றிய செருக்கு உடையவர்களுக்குரியதும் இல்லை.
பதம் 3.32.40
ந லோலுபாயோபதிசேந் ந க்ருஹாரூட-சேதஸே
நாபக்தாய ச மே ஜாது ந மத்பக்த-த்விஷாமபி
ந—இல்லை; லோலுதாய—பேராசைப்படுபவர்களுக்கு; உபதிசேத—ஒருவர் அறிவுறுத்த வேண்டும்; ந—இல்லை; க்ருஹ ஆரூட சேதஸே—குடும்ப வாழ்வில் அதிகப் பற்றுள்ள ஒருவருக்கு; ந—இல்லை; அபக்தாய—பக்தரல்லாதாருக்கு; ச—மற்றும்; மே—என்னை; ஜாது—எப்போதும்; ந—இல்லை; மத்—என்னுடைய; பக்த—பக்தர்கள்; த்விஷாம்—பொறாமைப்படுபவர்களுக்கு; அபி—கூட.
மிகவும் பேராசைப்படுபவர்கள், குடும்பவாழ்வில் அதிகப்பற்றுடையவர்கள், பக்தரல்லாதார், பக்தர்களிடம் பொறாமைப்படுபவர்கள், பரம புருஷபகவானிடம் பொறமைப்படுபவர்கள் ஆகியோருக்கு அந்த அறிவுரை அறிவுறுத்தப்படக் கூடாது.
பதம் 3.32.41
ஸ்ரத்ததானாய பக்தாய விநீதாயானசூயவே
பூதேஷு க்ருத-மைத்ராய சூஸ்ரூஷாபிரதாய ச
ஸ்ரத்ததானாய—உண்மையுள்ள; பக்தாய—பக்தரிடம்; விநீதாய—மதிப்புள்ள; அனஸுயவே—பொறாமையற்ற; பூதேஷு—எல்லா வாழும் உயிரினங்களிடமும்; க்ருத—மைத்ராய—நட்புடன்; சூஸ்ரூஷா—உண்மைத் தொண்டு; அபிரதாய—கொடுக்க ஆர்வம் கொண்டு; ச—மற்றும்.
அறிவுரையானது ஆன்மீக குருவிடம் மதிப்புள்ள பக்தருக்கும் பொறாமையற்றவருக்கும், எல்லா வித வாழும் உயிரினங்களிடம் நட்புக் கொண்டவருக்கும், மற்றும் நம்பிக்கை மற்றும் உண்மையுடன் சேவை புரிய ஆர்வமுள்ளவருக்கும் தரப்படவேண்டும்.
பதம் 3.32.42
பஹிர்-ஜாத- விராகாய சாந்த- சித்தாய தீயதாம்
நிர்மத்ஸராய சுசயே யஸ்யாஹம் ப்ரேயஸாம் ப்ரிய:
பஹி—வெளியில் இருப்பதற்காக; ஜாத விராகாய—பற்றின்மையை வளர்த்துக் கொண்டவரிடம்; சாந்த—சித்தாய—அவர் மனம் அமைதியுடன் விளங்கும்; தீயதாம்—இது அறிவுறுத்தப்படட்டும்; நிர்மத்ஸராய—பொறாமையற்ற; சுசயே—முழுதும் தூய்மையாக்கப்பட்டு; யஸ்ய—யாரிடம்; அஹம்—நான்; ப்ரேயஸாம்—மிகவும் அன்பான எல்லாவற்றிலும்; பிரிய:—மிகவும் அன்பான.
இந்த அறிவுரை ஆன்மீக குருவால் பிற எல்லாவற்றையும் விட பரம புருஷ பகவானை மிகவும் அன்பானவராக எடுத்துக்கொண்டவருக்கு, யாரிடமும் பொறாமை இல்லாதவருக்கு, முழுதும் தூய்மையாக்கப்பட்டவருக்கு, கிருஷ்ண உணர்வின் எல்லைக்கு வெளியில் இருப்பவற்றில் பற்றின்மையை வளர்த்துக் கொண்டவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
பதம் 3.32.43
ய இதம் ஸ்ருணுயாதம்ப ஸ்ரத்தயா புருஷ: ஸக்ருத்
யோ வாபிதத்தே மச்-சித்த: ஸ ஹ்யேதி பதவீம்சமே
ய—அவர்; இதம்—இந்த; ஸ்ருணுயாத்—கேட்கலாம்; அம்ப—ஓ தாயே; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; புருஷ—ஒரு மனிதர்; ஸக்ருத்—ஒருமுறை; ய—அவர்; வா—அல்லது; அபிதத்தே—திருப்புதல்; மத்சித்த—அவர் மனம் என்னிடம் பதிந்து; ஸ—அவர்; ஹி—நிச்சயமாக; ஏதி—அடைந்து; பதவீம்—இருப்பிடம்; ச—மற்றும்; மே—என்னுடைய.
நம்பிக்கையுடனும், அன்புடனும் என்னைத் தியானித்து என்னைப் பற்றிக் கேட்டு எனது பெயரை உச்சரிக்கும் ஒருவர் நிச்சயமாக பகவானிடம் வீடுபேறு பெறுவதற்குத் திரும்பிச் செல்கிறார்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “பயன்தரும் செயல்களில் வருகின்ற சிக்கல்“ எனும் தலைப்பைக் கொண்ட முப்பத்திரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.