அத்தியாயம் – 31
உயிரினங்களின் இயக்கங்கள் பற்றி
பகவான் கபிலரின் அறிவுரைகள்
பதம் 3.31.1
ஸ்ரீ பகவானுவாச
கர்மணா தைவ-நேத்ரேண ஜந்துர்தேஹோபபத்தயே
ஸ்த்ரியா: ப்ரவிஷ்ட உதரம் பும்ஸோ ரேத: கணாஸ்ரய:
ஸ்ரீ பகவானுவாச—பரம புருஷ பகவான் கூறினார்; கர்மணா—வேலையின் முடிவினால்; தைவ நேத்ரேண—பகவானின் மேற்பார்வையின் கீழ்; ஜந்து:—வாழும் உயிரினம்; தேஹ—உடல்; உபத்தயே—பெறுவதற்காக; ஸ்த்ரியா:—பெண்ணின்; ப்ரவிஷ்ட:—நுழைதல்; உதரம்—கருப்பை; பும்ஸ:—ஆணின்; ரேத:—விந்துவின்; கண:—அணுக் கூறு; ஆஸ்ரய:—தங்கியிருக்கும்.
பரம புருஷ பகவான் கூறினார்: பரமனின் மேற்பார்வையின் கீழ், அவரது பணியின் முடிவிற்கு ஏற்றபடி, உயிரினம் ஆகிய ஆத்மா, ஒரு குறிப்பிட்ட வகை உடலை மேற்கொள்ள ஆணின் விந்துவாகிய அணுக்கூறின் மூலம் ஒரு பெண்ணின் கருப்பையில் நுழையும்படி செய்யப்படுகிறது.
பதம் 3.31.2
கலலம் த்வேக-ராத்ரேண பஞ்ச-ராத்ரேண புத்புதம்
தசாஹேன து கர்கந்தூ: பேஷ்யண்டம் வாதத: பரம்
கலலம்—விந்துவும் பெண் சினையும் கலத்தல்; து—பின்னர்; ஏகராத்ரேண—முதல் இரவில்; பஞ்சராத்ரேண—ஐந்தாம் இரவுக்குள்; புத்புதம்—ஒரு நீர்க்குமிழி; தச—அஹேண—பத்து நாட்களில்; து—பின்னர்; கர்கந்தூ:—சதைப் பற்று போல; பேஷி—சதைத் தொகுதி; அண்டம்—முட்டை; வா—அல்லது; தத:—அங்கிருந்து; பரம்—பின்னர்.
முதலிரவில், விந்துவும் சினையும் கலக்கின்றன, ஐந்தாம் இரவில் அந்தக் கலவை ஒரு நீர்க்குமிழியாக நுரைத்து எழுகிறது. பத்தாம் இரவில் அது சதைப்பற்றுள்ள பழம் போன்ற வடிவில் வளர்ந்து, பின்னர் படிப்படியாக தக்கவாறு சதைத் தொகுதியாக அல்லது முட்டையாக மாறுகிறது.
பதம் 3.31.3
மாஸேன து சிரோ த்வாப்யாம் பாஹ்-வங்க்ரி-யாத்-யங்க- விக்ரஹ:
நக-லோமாஸ்தி-சர்மாணி லிங்க-ச்சித்ரோத்பவஸ்த்ரிபி:
மாஸேன—ஒரு மாதத்திற்குள்; து—பின்னர்; சிர:—தலை; த்வாப்யாம்—இரு மாதங்களில்; பாஹு—கைகள்; அங்க்ரி—பாதங்கள்; ஆதி—முதலியன; அங்க—உறுப்புகள்; விக்ரஹ:—வடிவம்; நக—நகங்கள்; லோம—உரோமங்கள்; அஸ்தி—எலும்புகள்; சர்மாணி—தோல்; லிங்க—பிறப்பு உறுப்பு; சித்ர—துளைகள்; உத்பவ:—தோற்றம்; த்ரிபி:—மூன்று மாதங்களில்.
ஒரு மாதத்தில், தலை உருவாகிறது, இரு மாதங்களின் முடிவில் கைகள், பாதங்கள் மற்றும் பிற உறுப்புகள் வடிவம் பெறுகின்றன. மூன்று மாதங்களின் முடிவில், நகங்கள், விரல்கள், கால் விரல்கள், உரோமம், எலும்புகள் மற்றும் தோல் ஆகியவை பிறப்புறுப்பு மற்றும் உடலின் பிற உறுப்புகளான கண்கள், மூக்குத்துளைகள், காதுகள், வாய் மற்றும் மலங்கழியும் வாய் ஆகியவை தோன்றுகின்றன.
பதம் 3.31.4
சதுர்பிர்தாதவ: ஸப்த பஞ்சபி: க்ஷுத்ருத்டுத்பவ:
ஷட்பிர்ஜராயுணா வீத: குக்ஷௌ ப்ராம்யதி தஷிணே
சதுர்பி:—நான்கு மாதங்களுக்குள்; தாதவ:—ஆக்கக் கூறுகள்; ஸப்த—ஏழு; பஞ்சபி:—ஐந்து மாதங்களுக்குள்; க்ஷுத் த்ருட்—பசி மற்றும் தாகத்தின்; உத்பவ:—தோற்றம்; ஷட்பி:—ஆறு மாதங்களுக்குள்; ஜராயுணா—கருவைச் சுற்றியுள்ள சவ்வு; வீத:—மூடப்பட்ட; குக்ஷௌ—அடிவயிற்றில்; ப்ராம்யதி—அசைவுகள்; தக்ஷிணே—வலப் பக்கத்தில்.
கருவுற்ற நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள், உடலின் ஏழு முக்கிய ஆக்கக் கூறுகளான வெள்ளை நிணநீர், குருதி, சதை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மச்சை மற்றும் விந்து உருவாகின்றன. ஐந்து மாத முடிவில், பசியும் தாகமும் தங்களை உணரவைக்கின்றன, ஆறு மாதங்களின் முடிவில், முதிர்கரு, அதைச் சுற்றியுள்ள சவ்வினால் மூடப்பட்டு, அடிவயிற்றின் வலப்பக்கத்தில் அசையத் தொடங்குகிறது.
பதம் 3.31.5
மாதுர்ஜக்தாந்ந-பானாத்யைர் ஏதத்தாது-ரஸம்மதே
சேதே-விண்மூத்ரயோர்கர்தே ஸ ஜந்துர்ஜந்து-ஸம்பவே
மாது:—அன்னையின்; ஜக்த—எடுத்து; அந்ந—பான—உணவு மற்றும் நீரால்; ஆத்யை:—முதலியன; ஏதத்—அதிகரித்து; தாது:—அவர் உடலின் ஆக்கக் கூறுகள்; அஸம்மதே—வெறுக்கத்தக்க; சேதே—தங்குகிறது; வித்—மூத்ரயோ:—மலம் மற்றும் சிறுநீரின்; கர்தே—உள்துளையில்; ஸ:—அந்த; ஜந்து:—முதிர் கரு; ஜந்து—புழுக்களின்; ஸம்பவே—இனப்பெருக்க இடம்.
அன்னையால் உட்கொள்ளப்படும் உணவு மற்றும் நீரிலிருந்து அதற்குத் தேவையான சத்தைப் பெற்று, முதிர்கரு வளர்கிறது, வெறுக்கத்தக்க மலம் மற்றும் சிறுநீரின் இருப்பிடத்தில் தங்குகிறது, அது எல்லாவிதப் புழுக்களின் இனப்பெருக்க இடமாகும்.
பதம் 3.31.6
க்ருமிபி: க்ஷதஸர்-வாங்க: ஸௌகுமார்யாத்ப்ரதிக்ஷணம்
மூர்ச்சாமாப்நோத்யுருக்-லேசஸ் தத்ரத்யை: க்ஷுதிதைர்முஹு:
க்ருமிபி:—புழுக்களால்; க்ஷத—கடிக்கப்பட்டு; ஸர்வ—அங்க:—உடலெங்கும்; ஸௌகுமார்யாத்—மென்மையால்; ப்ரதிக்ஷணம்—நொடிக்கு நொடி; மூர்ச்சாம்—உணர்வற்ற நிலை; ஆப்நோதி—அவர் அடைகிறார்; உருக்லேச:—அவர் துன்பம் அதிகமானது; தத்ரத்யை:—அங்கிருந்து (அடிவயிற்றில்); க்ஷுதிதை:—பசி; முஹு:—மீண்டும் மீண்டும்.
அடிவயிற்றிலேயே பசியெனும் புழுக்களால் உடலெங்கும் மீண்டும் மீண்டும் உண்ணப்பட்டு, குழந்தை தன் மென்மைத் தன்மையால் பயங்கரமான வேதனையை அனுபவிக்கிறது. இவ்வாறு அந்த பயங்கரச் சூழ்நிலையால் நொடிக்கு நொடி அது உணர்விழக்கிறது.
பதம் 3.31.7
கடு-தீக்ஷ்ணோஷ்ண-லவண- ரூக்ஷாம்லாதிபிருல்பணை:
மாத்ரு-புக்தைருபஸ்ப்ருஷ்ட: ஸர்வாங்கோத்தித-வேதன:
கடு—கசப்பு; தீக்ஷ்ண—காரமான; உஷ்ண—சூடு; லவண—உப்பான; ரூக்ஷ—வரண்ட; அம்ல—புளிப்பு; ஆதிபி:—முதலியன; உல்பணை:—அதிகமான; மாத்ருபுக்தை:—அன்னையால் உண்ணப்பட்ட உணவால்; உபஸ்ப்ருஷ்ட:—பாதிக்கப்பட்டு; ஸர்வ அங்க:—உடலெங்கும்; உத்தித:—எழும்பி; வேதன:—வலி.
அன்னை உண்ணும் கசப்பான, காரமான உணவு வகைகள் அல்லது மிக உப்பான அல்லது மிகவும் புளிப்பான உணவால், குழந்தையின் உடல் தாங்க இயலாத இடைவிடாத வலியால் துன்பப்படுகிறது.
பதம் 3.31.8
உல்பேன ஸம்வ்ருதஸ்தஸ்மிந் அந்த்ரைஸ்ச பஹிராவ்ருத:
ஆஸ்தே க்ருத்வா சிர: குக்ஷௌ புக்னப்-ருஷ்ட-சிரோதர:
உல்பேன—கருவைச் சுற்றியுள்ள சவ்வினால்; ஸம்வ்ருத:—மூடப்பட்டு; தஸ்மிந்—அந்த இடத்தில்; அந்த்ரை:—குடல்களால்; ச—மற்றும்; பஹி:—வெளியில்; ஆவ்ருத:—மூடப்பட்டு; ஆஸ்தே—அவன் படுத்திருக்கிறான்; க்ருத்வா—வைத்திருந்து; சிர:—தலை; குக்ஷௌ—வயிற்றை நோக்கி; புக்ன—வளைந்து; ப்ருஷ்ட—பின்புறம்; சிர: தர:—கழுத்து.
கருவைச் சுற்றியுள்ள சவ்விற்குள் வைக்கப்பட்டு, குடல்களால் வெளியில் மூடப்பட்டு, குழந்தை அடிவயிற்றின் ஒருபுறத்தில் படுத்திருக்கிறது. அதன் தலை அதனுடைய வயிற்றை நோக்கித் திரும்பியும், அதனுடைய பின்புறமும் கழுத்தும் வில்போல் வளைந்துமிருக்கும்.
பதம் 3.31.9
அகல்ப: ஸ்வாங்க-சேஷ்டாயாம் சகுந்த இவ பஞ்ஜரே
தத்ர லப்த-ஸ்ம்ருதிர்தைவாத் கர்ம-ஜந்மசதோத்பவம்
ஸ்மரந்தீர்க மனுச்ச்வாஸம் சர்ம கிம் நாம விந்ததே
அகல்ப:—இயலாமல்; ஸ்வ அங்க—அவன் உறுப்புகள்; சேஷ்டா யாம்—அசைய; சகுந்த:—ஒரு பறவை; இவ—போல; பஞ்ஜரே—கூண்டில்; தத்ர—அங்கு; லப்த—ஸ்ம்ருதி:—தன்நினைவைப் பெற்றதும்; தைவாத்—நல்ல வளத்தால்; கர்ம—செயல்கள்; ஜந்ம—சத—உத்பவம்—சென்ற நூறு பிறவிகளின் பொழுது நடந்த; ஸ்மரந்—நினைவு கூர்தல்; தீர்கம்—நீண்ட காலத்திற்கு; அனுச்வாஸம்—பெருமூச்சு விடுதல்; சர்ம—மன அமைதி; கிம்—என்ன; நாம—பின்னர்; விந்ததே—அவன் அடைய இயலுமா?
இவ்வாறு குழந்தை சுதந்தரமான அசைவு இன்றி, கூண்டில் உள்ள பறவை போல இருக்கிறது. அந்த நேரத்தில், குழந்தை அதிர்ஷ்டமானதாக இருந்தால், அவன் அவனுடைய சென்ற நூறு பிறவிகளில் ஏற்பட்ட எல்லாத் தொல்லைகளையும் நினைவு கூர முடியும், அவன் துயரத்தால் வருந்துகிறான். அந்த நிலையில் மன அமைதி சாத்தியமாகுமா?
பதம் 3.31.10
ஆரப்ய ஸப்தமாந்மாஸால் லப்த-போதோபி வேபித:
நைகத்ராஸ்தே சூதி-வாதைர் விஷ்டா-பூரிவ ஸோதர:
ஆரப்ய—தொடக்கம்; ஸப்தமாத்மாஸாத்—ஏழாம் மாதத்திலிருந்து; லப்த—போத:—உணர்வு நிலை அளிக்கப்பட்டு; அபி—ஆயினும்; வேபித:—கண்டப்பட்டு; ந—இல்லை; ஏகத்ர—ஓரிடத்தில்; ஆஸ்தே—அவன் இருப்பான்; சீதிவாதை:—குழந்தை பிறப்பிற்கான காற்றால்; விஷ்டாபூ:—புழு; இவ—போல; ஸ—உதர: அதே—கருப்பையில் தோன்றிய.
இவ்வாறு அவன் கருக் கொண்ட ஏழாம் மாதத்திலிருந்து உணர்வு நிலை வளர்ச்சி அளிக்கப்பட்டு, பிள்ளைப் பேற்றிற்கு முன்னால் உள்ள வாரங்களில் கருவை அழுத்தும் காற்றால் குழந்தை கீழே தள்ளப்படுகிறது. அதே போலும் அருவருப்பான அடிவயிற்றுக் குழியிலிருந்து பிறந்த புழுக்கள் போல, அவனால் ஒரே இடத்தில் தங்க இயலாது.
பதம் 3.31.11
நாதமான ருஷிர்பீத: ஸப்த-வக்னி: க்ருதாஞ்ஜலி:
ஸ்துவீத தம் விக்லவயா வாசா யேனோதரேர்பித:
நாதமான:—வேண்டுதல்; ருஷி:—உயிரினம்; பீத:—பயந்து; ஸப்த—வத்ரி:—ஏழு அடுக்குகளால் பிணைக்கப்பட்டு; க்ருத—அஞ்ஜலி:—கூப்பிய கைகளுடன்; ஸ்துவீத—வேண்டுகிறான்; தம்—பகவானிடம்; விக்வலயா—தடுமாறி; வாசா—சொற்களுடன்; யேன—யாரால்; உதரே—கருப்பையில்; அர்பித:—அவன் வைக்கப்பட்டான்.
அந்த உயிரினம் வாழ்வின் அச்சம் தரத்தக்க நிலையில், திடமான பொருட் கூறுகளின் ஏழு அடுக்குகளால் பிணைக்கப்பட்டு, தன்னை அந்த நிலையில் வைத்த பகவானிடம் கூப்பிய கைகளுடன் வணங்கி வேண்டிக்கொள்கிறது.
பதம் 3.31.12
ஜந்துருவாச
தஸ்யோபஸந்நமவிதும் ஜகதிச்சயாத்த
நாநா-தனோர்புவி சலச்-சரணாரவிந்தம்
ஸோஹம் வ்ரஜாமி சரணம் ஹ்யகு-தோபயம் மே
யேநேத்ருசீ கதிரதர்ச்ய ஸதோனுரூபா
ஜந்து: உவாச—மனித ஆத்மா கூறுகிறது; தஸ்ய—பரம புருஷ பகவானின்; உபஸந்தம்—பாதுகாப்பிற்காக அணுகப்பட்டு; அவிதும்—காக்க; ஜகத்—அண்டம்; இச்சயா—அவர் விருப்பத்தால்; ஆத்த—நாநா—தனோ:—பல்வேறு வடிவங்களை ஏற்பவர்; புவி—பூமியில்; சலத்—நடத்தல்; சரண அரவிந்தம்—தாமரைப் பாதங்கள்; ஸ: அஹம்—நான்; வ்ரஜாமி—செல்; சரணம்—பாதுகாப்பவரை; ஹி—உண்மையில்; அகுத: பயம்—எல்லா பயத்திலிருந்தும் விடுதலை தருதல்; மே—என்னிடம்; யேன—யாரால்; ஈத்ருசீ—அந்த; கதி:—வாழ்வு நிலை; அதர்ச—கருதப்பட்டு; அஸத:—பக்தியற்ற; அனுரூபா—பொருந்துகிறது.
மனித ஆத்மா கூறுகிறது: தன்னுடைய வேறுபட்ட நிலையான வடிவங்களில் தோன்றுபவரும், உலகின் மேற்பரப்பில் நடப்பவரும் ஆகிய பரம புருஷ பகவானின் பாதகமலங்களில் சரண் அடைகிறேன். நான் அவரிடம் மட்டுமே சரண் அடைகிறேன், ஏனென்றால் அவர் எல்லாப் பயங்களிலிருந்தும் எனக்கு விடுதலை தரமுடியும், எனது பக்தியற்ற செயல்களுக்குப் பொருந்துகிற வாழ்வின் இந்த நிலையை நான் அவரிடமிருந்து பெற்று இருக்கிறேன்.
பதம் 3.31.13
யஸ்த்வத்ர பத்த இவ கர்மபிராவருதாத்மா
பூதேந்த்ரயாசயமயீமவலம்ப்ய மாயாம்
ஆஸ்தே விசுத்தமவிகாரமகண்ட-போத
மாதப்யமானஹ்ருதயேவஸிதம் நமாமி
ய:—யார்; து—கூட; அத்ர—இங்கு; பத்த:—கட்டுண்டு; இவ—போல; கர்மபி:—செயல்களால்; ஆவ்ருத—மூடப்பட்டு; ஆத்மா—தூய ஆத்மா; பூத—முழு மூலப் பொருட்கள்; இந்த்ரிய—புலன்கள்; ஆசய—மனம்; மயீம்—ஆக்கப்பட்டு; அவலம்ப்ய—விழுந்து; மாயாம்—மாயாவில்; ஆஸ்தே—தொடர்ந்த இருத்தல்; விசுத்தம்—முழுதும் தூய; அவிகாரம்—மாற்றமின்றி; அகண்ட—போதம்—எல்லையற்ற அறிவை உடைமையாக்கி; ஆதப்யமான—செய்ததற்கு மனம் வருந்தும்; ஹ்ருதயே—மனத்தில்; அவஸிதம்—தங்கும்; நமாமி—நான் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை அர்ப்பணிக்கிறேன்.
எனது செயல்களால் இப்போது கட்டுண்டிருப்பதாகத் தோன்றும், தூய ஆத்மாவாகிய, நான் மாயையின் ஏற்பாட்டால் என் அன்னையின் கருப்பையில் படுத்திருக்கிறேன். ஆனால் பாதிக்கப்படாமலும் மாற்றமில்லாமலும் என்னுடன் இங்கு இருக்கும் அவருக்கு நான் என்னுடைய மதிப்புமிக்க வணக்கங்களை அர்ப்பணிக்கிறேன். அவர் எல்லையற்றவர், செய்த செயலுக்கு வருந்தும் உள்ளம் உடையோரால் அவர் அறியப்படுகிறார். அவருக்கு நான் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை அர்ப்பணிக்கிறேன்.
பதம் 3.31.14
ய:பஞ்ச- பூத-ரசிதே ரஹித: சரீரே
ச்சந்நோ யதேந்த்ரிய-குணார்த்த-சிதாத்மகோஹம்
தேனாவிகுண்ட- மஹிமானம்ருஷிம் தமேனம்
வந்தே பரம் ப்ரக்ருதி- பூருஷயோ: புமாம்ஸம்
ய:—யார்; பஞ்ச பூத—ஐந்து முழு மூலப்பொருட்கள்; ரசிதே—உருவாக்கப்பட்டு; ரஹித:—பிரிக்கப்பட்டு; சரீரே—ஜட உடலில்; சந்ந:—மூடப்பட்டு; அயதா—பொருந்தாமல்; இந்த்ரிய—புலன்கள்; குண—குணங்கள்; அர்த்த—புலன்களின் பொருட்கள்; சித்—ஆளுமை; ஆத்மக:—ஆக்கப்பட்டு; அஹம்—நான்; தேன—ஜடவுடலால்; அவிகுண்ட மஹிமானாம்—ஒளிபெற்ற பெருமைகளுடைய; ருஷிம்—எல்லாம் அறிந்த; தம்—அந்த; ஏனம்—அவரிடம்; வந்தே—நான் வணக்ம் செலுத்துகிறேன்; பரம்—எல்லை கடந்த; ப்ரக்ருதி—ஜட இயற்கையிடம்; பூருஷயோ:—வாழும் உயிரினங்களிடம்; புமாம்ஸம்—பரம புருஷ பகவானிடம்.
ஐந்து மூலப் பொருட்களால் ஆன பூதவுடலில் நான் இருப்பதால் நான் பகவானிடமிருந்து பிரிக்கப்படுகிறேன், அதனால் நான் அடிப்படையில் புனிதமாயிருந்தும், என் குணங்களும் புலன்களும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. பரம புருஷ பகவான் இயற்கை மற்றும் உயிரினங்களின் எல்லை கடந்தவராய் இருப்பதால், அவருக்கு பருவுடல் என்பது இல்லாததால், அவர் எப்போதும் அவருடைய ஆன்மீகக் குணங்களில் பெருமையுடையவராய் இருப்பதால், நான் அவருக்கு என் வணக்கங்களை அர்ப்பணிக்கிறேன்.
பதம் 3.31.15
யந்-மாயயோரு-குணகர்ம-நிபந்தனேஸ்மின்
ஸாம்ஸாரிகே பதி சரம்ஸ்தத-பிஸ்ரமேண
நஷ்ட-ஸ்ம்ருதி: புனரயம் ப்ரவ்ருணீத லோகம்
யுக்த்யா கயா மஹத-னுக்ரஹமந்தரேண
யத்—பகவானின்; மாயயா—மாயாவால்; உரு—குண—சிறந்த குணங்களிலிருந்து எழுதல்; கர்ம—செயல்கள்; நிபந்தனே—பிணைப்புகளுடன்; அஸ்மின்—இந்த; ஸாம்ஸாரிகே—மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு இறப்பின்; பதி—வழியில்; சரம்—அலைந்து; தத்—அவரின்; அபிஸ்ரமேண—மிகுந்த வலிகளுடன்; நஷ்ட—தொலைந்து; ஸ்ம்ருதி—நினைவு; புன:—மீண்டும்; அயம்—இந்த வாழும் உயிரினம்; ப்ரவ்ருணீத—உணரலாம்; லோகம்—அவரது உண்மை இயல்பு; யுக்த்யா—கயா—எந்த வழிகளால்; மஹத் அனுக்ரஹம்—பகவானின் கருணையால்; அந்தரேண—இல்லாமல்.
மனித ஆத்மா மேலும் கூறுகிறது: உயிரினம் இயற்கையின் பாதிப்பின் கீழ் தள்ளப்பட்டு, மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு இறப்பின் வழியில் வாழவேண்டும் என்பதற்கான கடினமான போராட்டத்தைத் தொடர்கிறது. இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வு அவர் பரம புருஷ பகவானுடன் கொள்ளும் தொடர்பை மறந்து விடுவதால் ஏற்படுவதாகும். அதனால் பகவானின் அருள் இல்லாமல், எப்படி அவரால் பகவானின் ஆன்மீக அன்புத் தொண்டில் மீண்டும் ஈடுபட முடியும்?
பதம் 3.31.16
க்ஞானம் யதேததாத்கதம: ஸ தேவ
ஸ்த்ரை-காலிகம் ஸ்திர-சரேஷ்வணுவர்திதாம்ச:
தம் ஜீவ-கர்ம-பதவீம் அனுவர்தமானா
ஸ்தாபத்ரயோபசமனாய வயம் பஜேம்
க்ஞானம்—அறிவு; யத்—எந்த; ஏதத்—இந்த; அததாத்—கொடுத்து; கதம:—அவரின்றி; ஸ:—அந்த; தேவ:—பரம புருஷ பகவான்; த்ரை காலிகம்—காலத்தின் மூன்று பிரிவுகளின்; ஸ்திர—சரேசு—உயிரற்ற மற்றும் உயிருள்ள பொருட்களில்; அனுவர்தித—தங்குதல்; அம்ச:—அவரது பகுதி உருவமைப்பு; தம்—அவரிடம்; ஜீவ—ஜீவாத்மாக்களின்; கர்மபதவீம்—விளைவைத் தரும் செயல்களின் வழி; அனுவர்தமானா:—பின்தொடர்ந்து செல்பவர்கள்; தாபத்ரய—மூன்றுவிதத் தொல்லைகளிலிருந்து; உபசமனாய—விடுதலை பெற; வயம்—நாங்கள்; பஜேம்—சரணடைய வேண்டும்.
வேறு யாருமின்றி பரம புருஷ பகவான், எல்லைக்குட்பட்ட பரமாத்மாவாக, பகவானின் பகுதி உருவமைப்பு ஆக, எல்லா உயிரற்ற மற்றும் உயிருள்ள பொருட்களை வழி நடத்துகிறார். அவர் காலத்தில் மூன்று பகுதிகளாகிய இறப்பு, நிகழ்வு மற்றும் எதிர்காலம் இவற்றில் இருக்கிறார். அதனால், கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா அவரது வழிகாட்டலால் வேறுபட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வின் மூன்றுவிதத் தொல்லைகளிலிருந்து விடுபட, நாம் அவரிடம் மட்டுமே சரணடைய வேண்டும்.
பதம் 3.31.17
தேஹ்யந்ய-தேஹ-விவரே ஜடராக்நினாஸ்ருக்
விண்-மூத்ரகூப-பதிதோ ப்ருசதப்ததேஹ:
இச்சந்நிதோ விவஸிதும் கணயன் ஸ்வ-மாஸான்
நிர்வாஸ்யதே க்ருபண-தீர்பகவன் கதாநு.
தேஹீ—உடம்புடன் கூடிய ஆத்மா; அந்ய தேஹ—மற்றொரு உடலின்; விவரே—அடிவயிற்றில்; ஜடர—வயிற்றின்; அக்நீனா—நெருப்பினால்; அஸ்ருக்—குருதியின்; வித்—மலம்; மூத்ர—சிறுநீர்; கூப—சிறு குளத்தில்; பதித:—விழுந்து; ப்ருச—வன்மையாக; தப்த—வாட்டப்பட்டு; தேஹ:—அவர் உடல்; இச்சந்—ஆசை கொண்டு; இத:—அந்த இடத்திலிருந்து; விவஸிதும்—வெளியில் வர; கணயன்—எண்ணி; ஸ்வமாஸான்—அவர் மாதங்கள்; நிர்வாஸ்யதே—விடுதலை பெறுவார்; க்ருபண—தீ:—கஞ்சன் போன்ற அறிவுடையவர்; பகவன்—ஓ பகவானே; கதா—எப்பொழுது; நு—உண்மையில்.
அவரது அன்னையின் அடிவயிற்றினுள் குருதி, மலம் மற்றும் சிறுநீரால் ஆகிய குளத்தில் விழுந்து, அவரது உடல் அன்னையின் அடிவயிறு சார்ந்த நெருப்பால் வாட்டப்பட்ட, உடலுடன் கூடிய ஆத்மா, வெளியில் வர விரும்பி, தன் மாதங்களை எண்ணிக் கொண்டு, “ஓ என் பகவானே, துயர் மிகுந்த ஆத்மாவாகிய நான் எப்போது இந்தச் சிறையிலிருந்து விடுதலை அடைவேன்?” என்று வேண்டுகிறது.
பதம் 3.31.18
யேனேத்ருசீம் கதிமஸௌ, தச-மாஸ்ய ஈச
ஸங்க்ராஹித: புரு-தயேன பவாத்ருசேன
ஸ்வேநைவ துஷ்யது க்ருதேன ஸ தீன-நாத:
கோ நாம தத்-ப்ரதி விநாஞ்ஜலிமஸ்ய குர்யாத்
யேன—யாரால் (பகவான்); ஈத்ருசீம்—அந்த; கதிம்—ஒரு நிலை; அஸௌ—அந்த மனிதர் (நான்); தசமாஸ்ய—பத்து மாத வயது; ஈச—ஓ பகவானே; ஸங்க்ராஹித:—ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டு; புருதயேன—மிகவும் கருணை உள்ள; பவாத்ருசேன—ஒப்புமைப்படுத்த இயலாத; ஸ்வேன—சொந்த; ஏவ—மட்டும்; துஷ்யது—அவர் மகிழட்டும்; க்ருதேன—அவர் செயலுடன்; ஸ:—அந்த; தீன—நாத:—விழுந்த ஆத்மாக்களின் புகலிடம்; க:—யார்; நாம— உண்மையில்; தத்—அந்தக் கருணை; ப்ரதி—பலனாக; வினா—தவிர; அஞ்ஜலிம்—கூப்பிய கரங்கள்; அஸ்ய—பகவானின்; குர்யாத்—திருப்பித் தர முடியும்.
என் அன்பு பகவானே, நான் பத்து மாத வயதானவனாக மட்டுமே இருந்தாலும், உங்களின் எல்லையற்ற கருணையால் நான் உணர்வு நிலைக்கு விழிப்பூட்டப்படுகிறேன். விழுந்த ஆத்மாக்களின் நண்பனாகிய, பரம புருஷ பகவானின் இந்த அகாரணமான கருணைக்காக, எனது நன்றியைத் தெரிவிக்க வழியில்லை, ஆனால் கூப்பிய கரங்களுடன் மனதார வேண்டுதலைத் தவிர வேறு வழியில்லை.
பதம் 3.31.19
பச்யத்யயம் திஷணயா நனு ஸப்த-வத்ரி:
சாரீரகே தம-சரீர்யபர: ஸ்வதேஹே
யத்-ஸ்ருஷ்டயாஸம் தமஹம் புருஷம் புராணம்
பச்யே பஹிர்ஹ்ருதி ச சைத்யமிவ ப்ரதீதம்
பச்யதி—பார்த்தல்; அயம்—இந்த வாழும் உயிரினம்; திஷணயா—அறிவுக் கூர்மையுடன்; நனு—மட்டும்; ஸப்தவத்ரி:—ஜடப் போர்வைகளாகிய ஏழு அடுக்குகளால் கட்டப்பட்ட; சாரீரகே—ஒப்புக் கொள்ளும் மற்றும் ஒப்புக்கொள்ளாத புலனுக்கான பொறிக் காட்சிகள்; தமசரீரீ—சுயக்கட்டுப்பாட்டுக்கான உடல் கொண்டு; அபர:—மற்றொன்று; ஸ்வ—தேஹே—அவர் உடலில்; யத்—பகவானால்; ஸ்ருஷ்டயா—அளிக்கப்பட்டு; ஆஸம்—இருந்து; தம்—அவரை; அஹம்—நான்; புருஷம்—மனிதர்; புராணம்—மிகப்பழைய; பச்யே—பார்; பஹி:—வெளியில்; ஹ்ருதி—மனத்தில்; ச—மற்றும்; சைத்யம்—ஆளுமையின் மூலாதாரம்; இவ—உண்மையில்; ப்ரதிதம்—நினைவூட்டப்பட்டு.
மற்றொரு வகையான உடலில் உள்ள உயிரினம் உள்ளுணர்வால் மட்டும் பார்க்கிறது, அதற்கு அந்தக் குறிப்பிட்ட உடலின் ஒப்புக் கொள்ளும் மற்றும் ஒப்புக் கொள்ளாத புலனுக்கான பொறிக் காட்சிகள் மட்டும் தெரியும். ஆனால் எனக்கு உடல் உண்டு, அதில் என் புலன்களை என்னால் கட்டுப்படுத்த முடியும், நான் சேர வேண்டிய இடத்தைப் புரிந்துகொள்ள முடியும்; அதனால் பரம புருஷ பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த உடலைப் பெற்ற நான், அவரது அருளால் உள்ளேயும் வெளியிலும் அவரைப் பார்க்க முடிந்த நான், எனது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 3.31.20
ஸோஹம் வஸந்நபி விபோஹு-பது: கவாஸம்
கர்பாந்ந நிர்ஜிகமிஷே பஹிரந்த-கூபே
யத்ரோபயாதமுபஸர்பதி தேவமாயா
மித்யா மதிர்ய-தனு ஸம்ஸருதிசக்ரமேதத்
ஸ அஹம்—நான்; வஸன்—வாழ்தல்; அபி—ஆயினும்; விபோ—ஓ பகவானே; பஹுது:க—பல துன்பங்களுடன்; வாஸம்—நிலையில்; கர்பாத்—அடிவயிற்றிலிருந்து; ந—இல்லை; நிர்ஜிகமிஷே—நான் பிரிய விரும்புகிறேன்; பஹி—வெளியில்; அந்த கூபே—இருட்டுக் கிணற்றில்; யத்ர—எங்கு; உபயாதம்—அங்கு செல்லும் ஒருவர்; உபஸர்பதி—அவள் பிடிப்பாள்; தேவமாயா—பகவானின் வெளிப்புறச் சக்தி; மித்யா—போலி; மதி—அடையாளம்; யத்—எந்தமாயா; சக்ரம்—சுழற்சி; ஏதத்—இந்த.
அதனால், என் பகவானே, நான் பயங்கரமான சூழலில் வசித்த போதிலும், உலோகாயத வாழ்வாகிய குருட்டுக் கிணற்றில் மீண்டும் விழுவதற்காக நான் என் அன்னையின் அடிவயிற்றில் பிரிய விரும்பவில்லை. தேவமாயா எனப்படும் உங்கள் வெளிப்புறச் சக்தி, உடனே புதிதாகப் பிறந்த குழந்தையைப் பிடிக்கிறது, உடனே தொடரும் பிறப்பு இறப்பாகிய சுழற்சியின் தொடக்கமாகிய போலி அடையாளம், தொடங்குகிறது.
பதம் 3.31.21
தஸ்மாதஹம் விகத்-விக்லவ உத்தரிஷ்ய
ஆத்மானமாசு தமஸ: ஸுஹ்ருதாத்மனைவ
பூயோ யதா வ்யஸனமேததனேகரந்த்ரம்
மாமே பவிஷ்யது பஸாதித-விஷ்ணு-பாத:
தஸ்மாத்—அதனால்; அஹம்—நான்; விகத—விட்டுவிட்டு; விக்லவ—கலக்கம்; உத்தரிஷ்யே—வெளியிடுவேன்; ஆத்மானம்—என்னை; ஆசு—விரைவாக; தமஸ—இருட்டிலிருந்து; ஸுஹ்ருதா—ஆத்மனா நட்புடன் கூடிய அறிவுக்கூர்மையுடன்; ஏவ—உண்மையில்; பூய—மீண்டும்; யதா—அதனால்; வ்யஸனம்—நிலைமை; ஏதத்—இந்த; அநேகரந்த்ரம்—பல கருப்பைகளில் நுழைதல்; மா—இல்லை; மே—என்னுடைய; பவிஷ்யத்—நடக்கலாம்; உபஸாதித—வைக்கப்பட்டு (என் மனத்தில்); விஷ்ணு பாத—பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகள்.
அதனால், மேலும் கலக்கம் அடையாமல், நான் தெளிவான உணர்வு நிலையாகிய என் நண்பரின் உதவியுடன் அறியாமையாகிய இருட்டிலிருந்து என்னை வெளிப்படுத்துவேன். விஷ்ணு பகவானின் தாமரைத் திருவடிகளை என் மனத்தில் கொள்வதன் மூலம் எளிதாக, நான் மீண்டும் பிறப்பு, இறப்புகளை எடுப்பதற்காக பல தாய்மார்களின் கருப்பைகளில் நுழைவதிலிருந்து காக்கப்படுவேன்.
பதம் 3.31.22
கபில உவாச
ஏவம் க்ருத-மாதிர்கர்பே தச-மாஸ்ய: ஸ்துவந்ந்ருஷி
ஸத்ய க்ஷிபத்யவாசீனம் பரஸுத்யை ஸுதி-மாருத:
கபில உவாச—பகவான் கபிலர் கூறுகிறார்; ஏவம்—இவ்வாறு; க்ருதி மதி—ஆசைப்படல்; கர்பே—கருப்பையில்; தசமாஸ்ய—பத்து மாத காலம்; ஸ்துவந்—பாராட்டப்படுதல்; ருஷி—வாழும் உயிரினம்; ஸத்ய—அந்த நேரத்தில்; க்ஷிபதி—முன்னோக்கிச் செலுத்து; அவாசீனம்—கீழ் நோக்கி; ப்ரசூத்யை—பிறப்பிற்காக; ஸுதிமாருத:—குழந்தை பிறப்பிற்கான காற்று.
பகவான் கபிலர் தொடர்ந்தார். பத்து மாதகால வாழும் உயிரினத்துக்கு கருவிலிருக்கும் பொழுதே இந்த ஆசைகள் உண்டு. ஆனால் அது பகவானை இவ்வாறு போற்றும்போது, பிள்ளைப் பேற்றிற்கு உதவும் காற்று அதனை முன்னோக்கிச் செலுத்தி, அதன் முகத்தைக் கீழ் நோக்கித் திருப்புகிறது. அதனால் அவன் குழந்தையாகப் பிறக்கலாம்.
பதம் 3.31.23
தேனாவஸ்ருஷ்ட: ஸஹஸா க்ருத்வாவாக் சிர ஆதுர:
வினிஷ்க்ராமதி க்ருச்சரேண நிருச்வாஸோ ஹத-ஸ்ம்ருச்தி:
தேன—அந்தக் காற்றால்; அவஸ்ருஷ்ட—கீழ்நோக்கித் தள்ளப்பட்டு; ஸஹஸா—திடீரென்று; க்ருத்வா—திரும்பி; அவாக்—கீழ்நோக்கி; சிர—அவன் தலை; ஆதுர—துன்பம்; வினிஷ்க்ராமதி—அவன் வெளியில் வருகிறான்; க்ருச்ச்ரேண—மிகுந்த துன்பத்துடன்; நிருச்ச்வாஸை—மூச்சின்றி; ஹத—இழந்து; ஸ்ம்ருதி—நினைவு.
காற்றால் திடீரென்று கீழ் நோக்கித் தள்ளப்பட்டு, குழந்தை தலை கீழாக, மூச்சின்றி, கடுந்துயரால் நினைவிழந்து, மிகுந்த துன்பத்துடன் கருப்பையிலிருந்து வெளிவருகிறது.
பதம் 3.31.24
பதிதோ புவ்யஸ்ருங்-மிஸ்ர: விஷ்டா-பூரிவ சேஷ்டதே
ரோரூயதி கதே க்ஞான விபரீதாம் கதிம் கத:
பதித—விழுந்து; புவி—பூமியில்; அஸ்ருக்—குருதியுடன்; மிஸ்ர—பரப்பப்பட்டு; விஷ்டாபூ—ஒரு புழு; இவ—போல; சேஷ்டதே—அவன் தன் உறுப்புகளை அசைக்கிறான்; ரோரூயதி—உரக்க அழுகிறான்; கதே—தொலைந்து; க்ஞானே—அவனது அறிவு; விபரீதாம்—எதிரான; கதிம்—நிலை; கத—இழந்து.
குழந்தை இவ்வாறு மலம் மற்றம் குருதியால் பூசப்பட்டு, பூமியில் விழுகிறது, மலத்திலிருந்து உற்பத்தியான ஒரு புழுவைப் போல அது நெளிகிறது. அது தன் மேலான அறிவை இழந்து, மாயையின் பிடியில் இங்கு சிக்கி அழுகிறது.
பதம் 3.31.25
பரச்-சந்தம் நவிதுஷா புஷ்யமாணோ ஜனேன ஸ:
அனபிப்ரேதமாபந்ந: பரத்யாக்யாது மனீஸ்வர:
பர சந்தம்—மற்றொன்றின் ஆசை; ந—இல்லை; விதுஷா—புரிந்து கொள்ளுதல்; புஷ்யமாண—காக்கப்பட்டு; ஜனேன—மனிதர்களால்; ஸ—அவன்; அநபிப்ரேதம்—விரும்பத்தகாத சூழ்நிலைகளுக்கு; ஆபந்ந—விழுந்து; ப்ரத்யாக்யாதும்—மறுப்பதற்கு; அனீஸ்வர:—இயலாமல்.
வயிற்றிலிருந்து வெளியில் வந்த பிறகு, குழந்தை அதன் தேவைகளைப் புரிந்துகொள்ள இயலாதவர்களிடம் பாதுகாப்பாகத் தரப்படுகிறது, இவ்வாறுதான் மனிதர்களால் வளர்க்கப்படுகிறது. தனக்குத் தரப்படும் எதையும் மறுக்க இயலாமல் காலப்போக்கில் அவன் விரும்பத்தகாத சூழ்நிலைகளில் விழுகிறான்.
பதம் 3.31.26
சாயிதோ சூசிபர்யங்கே ஜந்து: ஸ்வேதஜ-தூஷிதே
நேச: கண்டூயனேங்கானாம் ஆஸனோத்தான-சேஷ்டனே
சாயித—படுத்து; அசூசி பர்யங்கே—அருவருக்கத்தக்க படுக்கை; ஜந்து—குழந்தை; ஸ்வேத ஜஜ—வியர்வையிலிருந்து பிறந்த உயிரினங்களுடன்; தூஷிதே—சூழப்பட்டு, நஈச—திறமையற்ற; கண்டூயனே—சொறிந்து கொள்ளுதல்; அங்காளாம்—அவனுடைய உறுப்புகள்; ஆஸன—அமர்தல்; உத்தான—நிற்றல்; சேஷ்டனே—அல்லது அசைதல்.
வியர்வை மற்றும் உயிரினங்களால் சூழப்பட்டு அருவருப்பான படுக்கையில் படுத்துக் கொண்டு, பாவமான குழந்தை, அரிக்கும் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற தன்னுடலைச் சொறிந்து கொள்ளும் திறமையற்றது என்றால் அதனுடைய அமர்தல், நிற்றல் அல்லது அசைதல் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.
பதம் 3.31.27
துதந்த்யாமத்வசம் தம்சா மசகா மத்குணாதய
ருதந்தம் விசுதக்-ஞானம் க்ருமய க்ருமிகம் யதா
துதந்தி—அவை கடிக்கும்; ஆம த்வசம்—மென்மையான தோல் உடைய குழந்தை; தம்சா—கொசுவகை; மசகா—கொசுக்கள்; மத்குண—மூட்டுப்பூச்சிகள்; ஆதய—பிற உயிரினங்கள்; ருதந்தம்—அழுதல்; விகத—இழந்து; ஞானம்—அறிவு; க்ரமய—புழுக்கள்; க்ருமிகம்—ஒரு புழு; யதா—போல.
சிறிய புழுக்கள் ஒரு பெரிய புழுவைக் கடிப்பதுபோல, மென்மையான தோலையுடைய குழந்தையை அவனுடைய உதவியற்ற நிலையில், கொசுவகை, கொசுக்கள், மூட்டுப்பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள் கடிக்கின்றன. தன் அறிவை இழந்து, குழந்தை கடுந்துயரால் அழுகிறது.
பதம் 3.31.28
இத்யேவம் சைசவம் புக்த்வா து கம் பௌகண்டமேவச
அலப்தாபீஸிதோக்ஞானாத் இத்த-மந்யு: சுசார்பித:
இதி ஏவம்—இந்த விதத்தில்; சைசவம்—குழந்தைப் பருவம்; புக்த்வா—அனுபவிக்கப்பட்டு; து:கம்—துன்பம்; பௌகண்டம்—பிள்ளைப்பருவம்; ஏவ—ஆயினும்; ச—மற்றும்; அலப்த—அடையப்படாமல்; அபீப்ஸித—அவருடைய தொல்லை; அக்ஞானாத்—அறியாமையால்; இந்த—தூண்டப்பட்டு; மந்யு—அவர் சினம்; சீசா—துன்பத்தால்; அர்பித—வெல்லப்படும்.
இந்த விதத்தில் குழந்தை பலவிதத் தொல்லைகளை அனுபவித்து, தன் குழந்தைப் பருவத்தைக் கடக்கிறது, பிள்ளைப் பருவத்தை அடைகிறது. பிள்ளைப் பருவத்திலும் தான் ஒருபோதும் அடைய இயலாத பொருட்களைப் பெற ஆசைப்பட்டு வேதனை அனுபவிக்கிறான். இவ்வாறு, அறியாமையால், அவன் கோபப்பட்டு, வேதனை அடைகிறான்.
பதம் 3.31.29
ஸஹ தேஹேண மானேன வர்தமானேன மந்யுனா
கரோதி விக்ரஹம் காமீ காமிஷ்வந்தாய சாத்மன:
ஸஹ—உடன்; தேஹேன—உடல்; மானேன—போலியான கௌரவத்துடன்; வர்தமானேன—அதிகரித்தல்; மந்யுனா—கோபத்தால்; கரோதி—அவர் படைப்பார்; விக்ரஹம்—பகைமை; காமீ—ஊக்கமுடைய ஒருவர்; காமிஷு—பிற ஊக்கமுள்ளவர்களிடம்; அந்தாய—அழிவிற்காக; ச—மற்றும்; ஆத்மன—அவர் ஆத்மாவின்.
உடலின் வளர்ச்சியுடன், உயிரினமானது, தன் ஆத்மா அழியும் பொருட்டு, தன் போலி கௌரவத்தையும், கோபத்தையும் அதிகரித்துக் கொள்கிறது, அதனால் அதே போன்ற எழுச்சியுள்ளவர்களை நோக்கிப் பகைமை கொள்ளுகிறது.
பதம் 3.31.30
பூதை பஞ்சபிராரப்தே தேஹே தேஹ்யபுதோஸக்ருத்
அஹம்மமேத்யஸத்-க்ராஹ கரோதி குமதிர்மதிம்
பூதை—ஜடமூலப்பொருட்களால்; பஞ்சமி—ஐந்து; ஆரப்தே—உருவாக்கப்பட்ட; தேஹே—உடலில்; தேஹி—வாழும் உயிரினம்; அபித—அறியாமை; அஸக்ருத்—தொடர்ந்து; அஹம்—நான்; மம—என்னுடைய; இதி—இவ்வாறு; அஸத்—நிலையில்லாத பொருட்கள்; க்ராஹ—ஏற்றுக் கொள்ளுதல்; கரோதி—அவர் செய்கிறார்; கு மதி—முட்டாளாகி; மதிம்—நினைத்து.
அந்த அறியாமையால், உயிரினம் ஐந்து மூலப் பொருட்களால் ஆன பூதவுடலைத் தன்னுடையதாக ஏற்றுக் கொள்கிறது. இந்தத் தவறாகப் புரிந்துகொள்ளலுடன், அவர் நிலையில்லாத பொருட்களைத் தன்னுடையதாக ஏற்றுக் கொண்டு, மிகவும் இருட்டான இடத்தில் தன் அறியாமையை அதிகரித்துக் கொள்கிறார்.
பதம் 3.31.31
த-தர்த்தம் குருதே கர்ம யத்-பத்தோ யாதி ஸம்ஸ்ருதிம்
யோனுயாதி ததத்க்லேசம் அவித்யா-கர்மபந்தன:
தத் அர்த்தம்—உடலின் பொருட்டு; குருதே—அவர் நிகழ்த்துகிறார்; கர்ம—செயல்கள்; யத் பத்த—அதனால் பிணிக்கப்பட்டு; யாதி—அவர் செல்கிறார்; ஸம்ஸ்ருதிம்—மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு, இறப்பிற்கு; ய—அந்த உடல்; அனுயாதி—பின்பற்றும்; ததத்—கொடுத்தல்; க்லேசம்—துன்பம்; அவித்யா—அறியாமையால்; கர்ம—பலன்தரும் செயல்களால்; பந்தன—பிடிப்பின் காரணம்.
அவருக்குத் தொடர்ந்து தொல்லை தரும் மூலாதாரமான, அறியாமை மற்றும் தொல்லை தரும் செயல்களின் பிடிப்புகளால் அவர் பிணிக்கப்பட்டதால் அவரைத் தொடர்ந்து வரும் உடலின் பொருட்டு,
மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பிற்கு அவரை அடிமைப்படுத்துவதற்குக் காரணமான பல்வேறு செயல்களை அவர் செய்கிறார்.
பதம் 3.31.32
யத்யஸத்பி பதிபுன சிஸ்நோதர-க்ருதோத்யமை:
ஆஸ்திதோ ரமதே ஜந்துஸ் தமோ விசதி பூர்வவத்
யதி—இருந்தால், அஸத்பி—நேர்மையற்றதுடன்; பதி—வழியில்; புன—மீண்டும்; சிஸ்ந—பிறப்பிற்குரியவைகளுக்காக; உதர—வயிற்றுக்காக; க்ருத—செய்யப்பட்டு; உத்யமை—அவரது பெருமுயற்சிகள்; ஆஸ்தித—தொடர்பு கொள்ளுதல்; ரமதே—அனுபவித்து; ஐந்து—வாழும் உயிரினம்; தம—இருட்டு; விசதி—நுழைந்து; பூர்வ வத்—முன்பு போல.
அதனால், உயிரினம், புலனுணர்வு இன்பத்தின் நாட்டத்தில் மனச்சுவையின் திருப்தியில் ஈடுபட்டுள்ள சிற்றின்ப மனமுடைய மக்களால் பாதிக்கப்பட்டு மீண்டும் நேர்மையற்ற வழியில் தொடர்பு கொண்டால், அவன் மீண்டும் முன்பு போல நரகத்திற்கும் செல்வான்.
பதம் 3.31.33
ஸத்யம் சௌசம் தயா மௌனம் புத்தி ஸ்ரீர்ஹ்ரீர் யச: க்ஷமா
சமோ தமோ பகஸ்சேதி யத்-ஸங்காத்யாதி ஸங்க்ஷயம்
ஸத்யம்—உண்மை; சௌசம்—தூய்மை; தயா—கருணை; மௌனம்—நிலவுலக மைய ஈர்ப்பாற்றல்; புத்தி—அறிவுக்கூர்மை; ஸ்ரீ—செல்வவளம்; ஹ்ரீ—வெட்கம்; யச—புகழ்; க்ஷமா—மன்னித்தல்; ச—மனக்கட்டுப்பாடு; தம—புலன் கட்டுப்பாடு; பக—அதிர்ஷ்டம்; ச—மற்றும்; இதி—இவ்வாறு; யத் ஸங்காத்—அவருடன் கொள்ளும் தொடர்பிலிருந்து; யாதிஸங்க்ஷயம்—அழிக்கப்படுகின்றனர்.
அவர் உண்மை, தூய்மை, கருணை நிலவுலக மைய ஈர்ப்பாற்றல், ஆன்மீக அறிவுக்கூர்மை, வெட்கம், தவம், புகழ், மன்னித்தல், மனக்கட்டுப்பாடு, புலன் கட்டுப்பாடு, அதிர்ஷ்டம் மற்றும் அது போன்ற எல்லா வாய்ப்புகளும் சிறிதும் இல்லாதவராகிறார்.
பதம் 3.31.34
தேஷ்வசாந்தேஷு மூடேஷு கண்டிதாத்மஸ்வஸாதுஷு
ஸங்கம் ந குர்யாச் சோச்யேஷு யோஷித்- க்ரீடா-ம்ருகேஷீச
தேஷு—அவர்களுடன்; அசாந்தேஷு—நாகரிகமற்ற; மூடேஷு—முட்டாள்கள்; கண்டிதஆத்மஷு—தன்னை அறிதலை இழந்த; அஸாதுஷு—அநீதியான; ஸங்கம்—தொடர்பு; ந—இல்லை; குர்யாத்—ஒருவர் உருவாக்க வேண்டும்; சோச்யேஷு—பாவமான; யோஷித்—பெண்களின்; க்ரீடா ம்ருகே ஷு—நடமாடும் நாய்கள்; ச—மற்றும்.
ஒருவர் தன்னை உணரும் அறிவை இழந்த நாகரிகமற்ற முட்டாளுடன் தொடர்பு கொள்ளக் கூடாது, ஒரு பெண்ணின் கைகளில் நடமாடும் நாய் போன்றவருடன் தொடர்பு கொள்ளக் கூடாது.
பதம் 3.31.35
நததாஸ்ய பவேந்மோஹோ பந்தஸ்சாந்ய- ப்ரஸங்கத:
யோஷித்ஸங்காத்யதா பும்ஸோ யதா தத்-ஸங்கி-ஸங்கத:
ந—இல்லை; ததா—விதத்தில்; அஸ்ய—இந்த மனிதரின்; பவேத்—எழலாம்; மோஹ—மோஹம்; பந்த—பற்று; ச—மற்றும்; அந்ய ப்ரஸங்கத—பற்றிலிருந்து வேறு எந்தப் பொருளுக்கும்; யோஷித் ஸங்காத்—பற்றிலிருந்து பெண்களிடம்; யதா—போல; பும்ஸ—மனிதரின்; யதா—போல; தத்ஸங்கி—பெண்களிடம் அன்புள்ள ஆண்களின்; ஸங்கத—நட்பிலிருந்து.
பற்றிலிருந்து தொடங்கி வேறு எந்தப் பொருள் வரைக்கும் மனிதனிடம் சிறுகச் சிறுகச் சேரும் மோகமும் பிடிப்பும் ஓரளவுதான். பெண்ணிடம் அல்லது பெண்களிடம் வசப்படும் ஆடவரிடம் கொள்ளுகின்ற பற்றும் பாசமும் முழுமையாகி விடுகிறது.
பதம் 3.31.36
ப்ரஜாபதி ஸ்வாம் துஹிதரம் த்ருஷ்ட்வா தத்-ரூப-தர்ஷித
ரோஹித்- பூதாம் ஸோந்வதாவத் ருக்ஷ- ரூபி ஹத-த்ரப:
ப்ரஜாபதி—பகவான் ப்ரம்மா; ஸ்வாம்—அவருடைய; துஹிதரம்—மகள்; த்ருஷ்ட்வா—பார்த்து; த்த்ரூப—அவள் அழகால்; தர்ஷித்—நிலை குலைந்து; ரோஹித் பூதாம்—மானின் வடிவில் அவளிடம்; ஸ—அவர்; அந்வதாவத்—ஓடி; ருக்ஷ ரூபீ—கலைமானின் வடிவில்; ஹத—இழந்து; த்ரப—வெட்கம்.
தன் சொந்த மகளைப் பார்த்தவுடன், பிரம்மா அவளது அழகால் கலங்கி, வெட்கமின்றி ஒரு கலைமானின் வடிவில் அவளிடம் ஓடிய பொழுது அவள் ஒரு பெண்மான் வடிவை எடுத்தாள்.
பதம் 3.31.37
தத்-ஸ்ருஷ்டஸ்ருஷ்ட-ஸ்ருஷ்டேஷு கோந்வகண்டிததீ: புமான்
ருஷிம் நாராயண ம்ருதே யோஷி-ந்மய்யேஹ மாயயா
தத்—பிரம்மனால்; ஸ்ருஷ்டஸ்ருஷ்டஸ்ருஷ்டேஷு—பெற்ற எல்லா வாழும் உயிரினங்களிலும்; க—யார்; நு—உண்மையில்; அகண்டித—கவனம் திரும்பாது; தீ:—அவர் அறிவுக்கூர்மை; புமான்—ஆண்; ருஷிம்—முனிவர்; நாராயணம்—நாராயணர்; ருதே—தவிர; யோஷித் மய்யா—ஒரு பெண்ணின் வடிவில்; இஹ—இங்கு; மாயயா—மாயாவால்.
பிரம்மனால் பெற்றெடுக்கப்பட்ட மனிதர்கள், தேவர்கள் மற்றும் விலங்குகளாகிய எல்லாவித வாழும் உயிரினங்களிலும் முனிவர் நாராயணரைத் தவிர வேறு யாரும் பெண்ணின் வடிவிலுள்ள மாயையின் கவர்ச்சியிலிருந்து விடுபட்டவர் அல்லர்.
பதம் 3.31.38
பலம் மே பச்ய மாயாயா: ஸ்த்ரீ-மய்யா ஜயினோ திசாம்
யாகரோதி பதாக்ராந்தான் ப்ரூவிஜ்-ரும்பேண கேவலம்
பலம்—ஆற்றல்; மே—என்னுடைய; பச்ய—பார்; மாயாயா—மாயாவின்; ஸ்த்ரீமய்யா—ஒரு பெண்ணின் வடிவில்; ஜயின—வெல்பவர்கள்; திசாம்—எல்லாத் திசைகளின்; யா—யார்; கரோதி—உருவாக்குதல்; பத ஆக்ராந்தான்—அவளைப் பின்பற்றும்; ப்ரூவி—அவளது புருவங்களின்; ஜ்ரும்பேண—அசைவினால்; கேவலம்—வெறும்.
அவளது புருவங்களின் வெறும் அசைவினாலேயே உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களைத் தன் பிடியில் சிக்க வைக்கும் பெண்ணின் வடிவிலுள்ள என் மாயையின் சிறந்த ஆற்றலைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
பதம் 3.31.39
ஸங்கம் நகுர்யாத்ப்ரமாதாசு ஜாது
யோகஸ்ய பாரம் பரமாரு ருக்ஷு:
மத்-ஸேவயா ப்ரதிலப்தாத்ம-லாபோ
வதந்தி யா நிரயத்-வாரமஸ்ய
ஸங்கம்—தொடர்பு; ந—இல்லை; குர்யாத்—ஒருவர் உருவாக்க வேண்டும்; ப்ரமதாசு—பெண்களுடன்; ஜாது—எப்போதும்; யோகஸ்ய—யோகத்தின்; பாரம்—உச்சநிலை அடைதல்; பரம்—மிக உயர்வு; ஆருருக்ஷீ—அடைய விரும்பும் ஒருவர்; மத் ஸேவயா—எனக்குத் தொண்டு புரிவதால்; ப்ரதிலப்த—பெற்று; ஆத்மலாப—தன்னை அறிதல்; வதந்தி—அவர்கள் கூறுகின்றனர்; யா—எந்தப் பெண்கள்; நிரய—நரகத்திற்கு; த்வாரம்—வாயில்; அஸ்ய—முன்னேறும் பக்தரின்.
யோகத்தின் உச்சநிலையை அடைய விரும்பி எனக்குத் தொண்டு புரிவதன் மூலம் தன்னை அறிந்தவர் ஒரு போதும் கவர்ச்சிகரமான பெண்ணுடன் தொடர்பு கொள்ளக் கூடாது, ஏனெனில் முன்னேறும் பக்தருக்கு அம்மாதிரியான பெண் நரகத்தின் வாயில் போன்றவள் என்று புனித நூலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதம் 3.31.40
யோபயாதி சனைர்மாயா யோஷித்-தேதிவினிர்மிதா
தாமீஷேதாத்மனோ ம்ருத்யும் த்ருணைகூ:பமிவாவ்ருதம்
யா—அவன்; உபயாதி—அணுகுதல்; சனை:—மெதுவாக; மாயா—யானையின் பிரதிநிதித்துவம்; யோஷித்—பெண்; தேவ—பகவானால்; விநிர்மிதா—படைக்கப்பட்டு; தாம்—அவளை; ஈக்ஷேத—ஒருவர் மதிக்க வேண்டும்; ஆத்மன—ஆத்மாவின்; ம்ருத்யும்—மரணம்; த்ருணை—புல்லுடன்; கூபம்—கிணறு; இவ—போல; ஆவ்ருதம்—மூடப்பட்டு.
பகவானால் படைக்கப்பட்ட பெண் மாயையின் பிரதிநிதித்துவம் ஆவாள். அந்த மாயாவுடன் தொடர்பு கொள்ளும் ஒருவர் புல்லால் மூடப்பட்ட குருட்டுக் கிணறு போன்ற மரணத்திற்குரியதே இந்த வழி என்று நிச்சயம் அறிய வேண்டும்.
பதம் 3.31.41
யாம் மந்யேத பதிம் மோஹாந் மந்-மாயாம் ருஷபாயதீம்
ஸ்த்ரீத்வம் ஸ்த்ரீ-ஸங்கத ப்ராப்தோ- வித்தாபத்யக்ருஹப்தம்
யாம்—எந்த; மந்யதே—அவள் நினைக்கிறாள்; பதிம்—அவள்; கணவர்; மோஹாத்—மாயையால்; மத் மாயாம்—என் மாயா; ருஷப—ஆணின் வடிவத்தில்; ஆயுதீம்—வந்து; ஸ்த்ரீத்வம்—பெண்ணாக இருக்கும் நிலை; ஸ்த்ரீயங்கத—பெண்ணிடம் கொள்ளும் பற்றிலிருந்து; ப்ராப்த—பெற்று; வித்த—செல்வம்; அபத்ய—சந்ததி; க்ருஹ—இல்லம்; ப்ரதம்—அளித்தல்.
தன்னுடைய முந்தைய பிறவியில் பெண்ணிடம் கொண்ட பற்றின் விளைவாக, உயிரினத்திற்கு ஒரு பெண்ணின் வடிவம் அளிக்கப்பெற்றது. முட்டாள்தனமாக மாயையை ஒரு ஆணின் வடிவில், அவள் கணவராக, செல்வம், சந்ததி, வீடு, மற்றும் பிற பொருட் செல்வங்களை அளிப்பவராகப் பார்க்கிறது.
பதம் 3.31.42
தாமாத்மனோ விஜானீயாத் பத்ய-பத்ய- க்ருஹாத்மகம்
தைவோபஸாதிதம் ம்ருத்யும் ம்ருகயோர்காயனம் யதா
தாம்—பகவானின் மாயா; ஆத்மதன—அவளின்; விஜானியாத்—அவள் அறிய வேண்டும்; பதி—கணவன்; அபத்ய—குழந்தைகள்; க்ருஹ—வீடு; ஆத்மகம்—உள்ளடக்கிய; தைவ—பகவானின் ஆணையால்; உபஸாதிதம்—கொண்டு வரப்பட்டு; ம்ருத்யும்—மரணம்; ம்ருகயோ—வேட்கைக்காரனின்; காயனம்—பாடுதல்; யதா—போல.
அதனால், வேட்டைக்காரனின் பாடல் மானுக்கு மரணம் போல, கணவன் வீடு, குழந்தைகளை அவள் மரணத்திற்காக உள்ளவை என்று பகவானின் வெளிப்புறச் சக்தியின் ஏற்பாடாக இதனைக் கருத வேண்டும்.
பதம் 3.31.43
தேஹேன ஜீவ-பூதேன லோகால்லோகமனுவ்ரஜன்
புஞ்ஜான் ஏவ கர்மாணி கரோத்ய விரதம் புமான்
தேஹேன—உடலின் காரணமாக; ஜீவ பூதேன—உயிரினத்தால்; லோகாத்—ஒரு கோளிலிருந்து; லோகம்—மற்றொரு கோளிற்கு; அனுவ்ரஜன்—அலைதல்; புஞ்ஜான—அனுபவித்தல்; ஏவ—அதனால்; கர்மாணி—பலன் தரும் செயல்கள்; கரோதி—அவர் செய்கிறார்; அவிரதம்—இடைவிடாமல்; புமான்—உயிரினம்.
அவருடைய குறிப்பிட்ட ஒரு வகையான உடலால் உலோகாயத்தில் சிக்குண்ட உயிரினம் தனக்குப் பயன் தரும் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளிற்கு அலைகிறது. இந்த விதத்தில் அவர் தனக்குப் பயன் தரும் செயல்களில் மட்டும் ஈடுபட்டு அதன் பின்விளைவை இடைவிடாமல் அனுபவிக்கிறார்.
பதம் 3.31.44
ஜீவோ ஹ்யஸ்யானுகோ தேஹோ பூதேந்த்ரிய-மனோ-மய:
தந்-நிரோதோஸ்ய மரணம் ஆவிர்பாவஸ்து ஸம்பவ:
ஜீவ—வாழும் உயிரினம்; ஹி—உண்மையில்; அஸ்யா—அவரின்; அனுக—தகுந்த; தேஹ—உடல்; பூத—முழு மூலப் பொருட்கள்; இந்த்ரிய—புலன்கள்; மன—மனம்; மய—உருவாக்கப்பட்டு; தத்—உடலின்; நிரோத—அழிவு; அஸ்ய—வாழும் உயிரினத்தின்; மரணம்—இறப்பு; ஆவிர்பாவ—வெளிப்பாடு; து—ஆனால்; ஸம்பவ—பிறப்பு.
இந்த விதத்தில் அவருடைய செயல்களுக்கேற்றபடி உயிரினம் மனம் மற்றும் புலன்களுடன் கூடிய பொருத்தமான உடலைப் பெறுகிறது. அவருடைய குறிப்பிட்டசெயலின் எதிர்ச் செயல் ஒரு முடிவுக்கு வரும் போது அது மரணம் என்றும் குறிப்பிட்ட வகை எதிர்ச் செயல் தொடங்கும் பொழுது, அது பிறப்பு என்றும் கூறப்படுகிறது.
பதங்கள் 3.31.45 3.31.46
த்ரவ்யோபலப்தி-ஸ்தானஸ்ய த்ரவ்யே க்ஷாயோக்யதா யதா
தத்பஞ்சத்வமஹம்-மானாத் உத்பத்திர்த்ரவ்யதர்சனம்
யதாக்ஷ்ணோர்த்ரவ்யாவயவ- தர்சனாயோக்யதா யதா
ததைவ சக்ஷுஷோ த்ரஷ்டுர் த்ரஷ்ட்ருத்வாயோக்யதானயோ:
த்ரவ்ய—பொருட்களின்; உபலப்தி—புலனுணர்வின்; ஸ்தானஸ்ய—இடத்தின்; த்ரவ்ய—பொருட்களின்; ஈக்ஷ—புலனுணர்வின்; அயோக் யதா—திறமையின்மை; யதா—எப்பொழுது; தத்—அந்த; பஞ்சதவம்—மரணம்; அஹம் மானாத்—“நான்” எனும் தவறான கருத்திலிருந்து; உத்பத்தி—பிறப்பு; த்ரவ்ய—வெளி உடல்; தர்சனம்—பார்த்தல்; யதா—போல; அக்ஷ்ணோ—கண்களின்; த்ரவ்ய—பொருட்களின்; அவயவ—அங்கங்கள்; தர்சன—பார்த்தலின்; அயோக்யதா—திறமையின்மை; யதா—எப்பொழுது; ததா—பின்னர்; ஏவ—உண்மையில்; சக்ஷுஷ—பார்வைப் புலனின்; த்ரஷ்டு—பார்ப்பவரின்; த்ரஷ்ட்டுருத்வ—பார்க்கும் செயல் திறனின்; அயோக்யதா—திறமையின்மை; அனயோ—இந்த இரண்டின்.
நரம்பு நோயின் துன்பத்தால் நிறத்தை அல்லது வடிவத்தைப் பார்க்கும் ஆற்றலைக் கண்கள் இழக்கும் போது, பார்வைப் புலன் குன்றுகிறது. கண்களால் காட்சியினைக் காணும் உயிர்கள் பார்க்கும் ஆற்றலை இழக்கின்றன. அதே விதத்தில் பொருட்களை தொட்டு அறியும் தன்மையான வெளிஉடல் அந்தத் திறனை முற்றுமாக இழக்கும் பொழுது, அது மரணம் ஆகும். ஒருவர் வெளியுடலைத் தான் என்று பார்க்கத் தொடங்கும் பொழுது, அது பிறப்பு எனப்படுகிறது.
பதம் 3.31.47
தஸ்மாந்ந கார்ய: ஸந்த்ராஸோ ந கார்பண்யம் நஸம்ப்ரம:
புத்த்வா ஜீவகதிம் தீரோ முக்த-ஸங்கஸ்சரேதிஹ
தஸ்மாத்—மரணத்தினால்; ந—இல்லை; கார்ய—செய்யப்பட வேண்டும்; ஸந்த்ராஸ—பேரச்சம்; ந—இல்லை; கார்பண்யம்—கஞ்சத்தனம்; ந—இல்லை; ஸம்ப்ரம—ஜடப் பயனுக்காக ஆர்வம்; புத்த்வா—உணர்தல்; ஜீவகதிம்—வாழும் உயிரினத்தின் உண்மையான இயல்பு; தீர—நிலையான; முக்த ஸங்க—பற்றிலிருந்து விடுபட்டு; சரேத்—ஒருவர் செல்ல வேண்டும்; இஹ—இந்த உலகில்.
அதனால் ஒருவர் மரணத்தைப் பேரச்சத்துடன் பார்க்கக் கூடாது, உடலை ஆத்மா எனக் கருதி அதனை விளக்க முயற்சி செய்யக் கூடாது. வாழ்வின் உடல் தேவைகளை அனுபவிப்பதில் மிகைப்படச் செய்யக் கூடாது. உயிரினத்தின் உண்மையான இயல்பை உணர்ந்து ஒருவர் இந்தவுலகின் பற்றிலிருந்து விடுபட்டு, குறிக்கோளோடு செல்ல வேண்டும்.
பதம் 3.31.48
ஸம்யக்-தர்சனயா புத்த்யா யோக-வைராக்ய-யுக்தயா
மாயா-விரசிதே லோகே சரேந்ந்யஸ்ய கலேவரம்
ஸம்யக் தர்சனயா—சரியான பார்வையுடன் அளிக்கப்பட்டு; புத்த்யா—காரணம் மூலம்; யோக—பக்தித் தொண்டால்; வைராக்ய—பற்றின்மையால்; யுக்தயா—பலப்பட்டு; மாயா விரசிதே—மாயையால் ஏற்பாடு செய்யப்பட்டு; லோகே—இந்த உலகிற்கு; சரேத்—ஒருவர் செல்ல வேண்டும்; ந்யஸ்ய—கீழ் நிலைக்கு ஒதுக்கப்படுதல்; கலேவரம்—உடல்.
சரியான குறிக்கோள் பக்தித் தொண்டு பொருள்களிடம் நம்பிக்கை அற்ற நோக்கம் ஆகிய இவற்றை மனதிற்கொண்டு ஒருவர் இந்த மாயவுலகத்திடமிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இந்த மண்ணுலகம் பற்றிய கவலை இல்லாமல் இருக்க இதுவே வழியாகும்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின் “உயிரினங்களின் இயக்கங்கள் பற்றிய பகவான் கபிலரின் அறிவுரைகள்” எனும் தலைப்பைக் கொண்ட முப்பத்தொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.