அத்தியாயம் – 30
எதிர்விளைவுச் செயல்களைப் பற்றி
பகவான் கபிலரின் வர்ணனை
பதம் 3.30.1 : பரமபுருஷ பகவான் கூறினார். மேகங்களின் கூட்டம் காற்றின் பலமான பாதிப்பை அறியாதது போல, பூதவுணர்வில் ஈடுபட்டுள்ள ஒருவர் தன்னை அழைத்துச் செல்லும் காலக் கூற்றின் பலமான ஆற்றலை அறியமாட்டார்.

பதம் 3.30.2 : இன்பம் என்று அழைக்கப்படும் ஒன்றிற்காக, மிகுந்த துன்பத்துடனும் வேலையுடனும் உலோகாயதியால் உருவாக்கப்படும் எதுவும், காலக் கூறாக விளங்கும் பரமபுருஷ பகவானால் அழிக்கப்படுவதால் கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா புலம்புகிறது.

பதம் 3.30.3 : தவறாக வழிநடத்தப்பட்ட உலோகாயதி, அவர் உடல் நிலையானதல்ல என்றும் அந்த உடலுடன் தொடர்புடைய வீடு, நிலம் செல்வம் ஆகிய கவர்ச்சிகளும் தற்காலிகமானவை என்றும் அறியாதவர். அறியாமையால் மட்டுமே, அவர் எல்லாம் நிலையானது என்று நினைக்கிறார்.

பதம் 3.30.4 : எந்த உயிரினத்தில் ஒருவர் தோன்றினாலும், அந்த உயிரினத்தில் அதற்கென்று நியமிக்கப்பட்ட திருப்தியை அடைகிறார், அவர் அந்த நிலை அடைந்ததற்காக ஒருபோதும் வெறுப்படைவதில்லை.

பதம் 3.30.5 : கட்டுப்படுத்தப்பட்ட உயிரினம் எந்த உயிரினங்களின் தோற்றத்தை எடுக்கிறதோ அந்த வாழ்வில் திருப்தியடைகிறது; மாயா சக்தியின் மூடிய பாதிப்பால், நரகத்திலும், தன் உடலை விட்டு விட விரும்புகிறது. ஏனெனில் அவர் நரக இன்பத்தில் மகிழ்கிறார்.

பதம் 3.30.6 : ஒருவரது வாழ்க்கைத் தரத்துடன் கொள்ளும் அந்தத் திருப்தி, உடல், மனைவி, வீடு, குழந்தைகள், விலங்குகள், செல்வம் மற்றும் நண்பர்களுடன் கொள்ளும் ஆழ்ந்த வேரோடிய பற்றின் காரணமாக ஏற்படுவதாகும். அந்தத் தொடர்பில், கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா தான் சரியாக இருப்பதாக நினைக்கிறார்.

பதம் 3.30.7 : அவர் எப்போதும் கவலையில் வெந்து கொண்டிருந்தாலும், அந்த முட்டாள் எப்போதும் ஒருபோதும் நிறைவேற்றப்பட முடியாத எதிர்பார்ப்புடன், தன் குடும்பம் மற்றும் சமுதாயம் எனப்படுவதைக் காக்கும் பொருட்டு எல்லாவிதமான பாவச் செயல்களையும் செய்கிறார்.

பதம் 3.30.8 : அவரை மாயையால் மயக்கும் பெண்ணுக்கு அவர் தன் மனத்தையும் புலன்களையும் தருகிறார். அவர் தனிமையான அணைப்புகளையும் அவளுடன் பேசுவதையும் அனுபவிக்கிறார், அவர் சிறிய குழந்தைகளின் இனிய சொற்களால் மயங்குகிறார்.

பதம் 3.30.9 : சூழ்ச்சித் திறமும் அரசியலும் நிறைந்த அவரது குடும்ப வாழ்வில் பற்றுள்ள குடும்பத்தலைவர் தொடர்ந்து இருக்கிறார். எப்பொழுதும் துன்பங்களைப் பரப்பிக் கொண்டு, புலன் நுகர்ச்சியின் செயல்களால் கட்டுப்படுத்தப்பட்டு, அவர் தனது எல்லாத் துன்பங்களின் எதிர்ச்செயல்களுக்கு எதிராகச் செயல்படுகிறார். அவர் வெற்றிகரமாக அந்தத் துன்பங்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்.

பதம் 3.30.10 : இங்கும் அங்கும் வன்முறை புரிவதன் மூலம் அவர் பணம் பெறுகிறார் அவர் அதை அவரது குடும்பத் தொண்டில் ஈடுபடுத்தினாலும், அவர் தான் இவ்வாறு வாங்கிய உணவில் ஒரு சிறு பகுதியை மட்டும் உண்கிறார். ஒழுங்கற்ற வழியில் அவர் யாருக்காகப் பணத்தைச் சம்பாதித்தாரோ, அவர்களுக்காக நரகத்திற்குச் செல்கிறார்.

பதம் 3.30.11 : அவர் தன் வேலையில் தோல்வி கண்டு துன்பப்படும்போது, மீண்டும் மீண்டும் தான் முன்னேறுவதற்கு முயற்சி செய்கிறார், ஆனால் எல்லா முயற்சிகளிலும் அவர் திணறி அழியும் பொழுது, அதிகம் பேராசையினால் அவர் பிறரிடம் இருந்து பணத்தை ஏற்றுக் கொள்கிறார்.

பதம் 3.30.12 : இவ்வாறு துரதிருஷ்டசாலியான மனிதன், அவரது குடும்ப அங்கத்தினர்களைக் காப்பதில் தோல்வியுற்று, எல்லா அழகையும் இழக்கிறார். அவர் எப்போதும் தன் தோல்வியை நினைத்து மிகவும் ஆழமாக வருந்துகிறார்.

பதம் 3.30.13 : அவர்களுக்கு அவர் துணை புரிய இயலாமலிருப்பதைக் கண்டு அவர் மனைவியும், பிறரும் முன்பு கொடுத்த அதே மதிப்புடன் அவரை நடத்தமாட்டார்கள், கஞ்சத்தனம் நிரம்பிய விவசாயிகளும் அவர்களுடைய வயதான, நலிவுற்ற எருதுகளை முன்பு நடத்திய முறையில் நடந்த ஒப்பமாட்டார்கள்.

பதம் 3.30.14 : முட்டாள்தனமான குடும்பஸ்தர், அவர் முன்பு காப்பாற்றியவர்களால் காப்பாற்றப்பட்ட போதிலும், குடும்ப வாழ்வில் வெறுப்பு கொள்வதில்லை, முதுமையின் பாதிப்பால் வடிவம் மாறி, அவர் இறுதி மரணத்தைச் சந்திக்கத் தன்னைத் தயார் செய்து கொள்கிறார்.

பதம் 3.30.15 : கொடுக்கப்படுவதை உண்ணும் செல்லமான நாய், பூனைகளைப் போல வீட்டில் அவர் புறக்கணிக்கப்பட்டு இருப்பார். அஜீரணம் மற்றும் உண்ணும் விருப்பம் இழத்தல் போன்ற பல நோய்களால் துன்புற்று, அவர் உணவின் சிறு கவளங்களை மட்டுமே உண்கிறார், அவர் மேலும் வேலை செய்ய இயலாத நோயாளியாகிறார்.

பதம் 3.30.16 : அந்த நோயுற்ற நிலையில்,உள்ளிருந்து எழும் காற்றின் அழுத்தத்தால் அவர் கண்கள் புடைக்கின்றன. அவரது சுரப்பிகள் இயங்க முடியாமல் சளியினால் தடைபடுகின்றன. அவர் சுவாசிக்கச் கஷ்டப்பட்டு, மூச்சை வெளிவிட்டு உள்ளிழுக்கும் தொண்டைக்குள் ஒலிக்கும் கரகர எனும் ஒலியை உருவாக்குகிறார்.

பதம் 3.30.17 : இந்த விதத்தில் அவர் மரணத்தின் பிடியில் அகப்படுகிறார். புலம்புகின்ற நண்பர்களாலும் உறவினர்களாலும் சூழப்பட்டுப் படுத்திருக்கிறார். ஆயினும் அவர் அவர்களுடன் பேச விரும்பினாலும், அவர் காலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் அவரால் இயலாது.

பதம் 3.30.18 : இவ்வாறு கட்டுப்படுத்த முடியாத புலன்களுடன் குடும்பத்தைக் காப்பதில் ஈடுபட்டுள்ள மனிதன். தன் உறவினர்கள் அழுவதைப் பார்த்துக் கொண்டே, மிகுந்த வருத்தத்தில் இறக்கிறார். அவர் மிகவும் பரிதாபமாக, மிகுந்த வலியில், உணர்வு இன்றி இறக்கிறார்.

பதம் 3.30.19 : மரணத்தின் போது, அவர் மரண தேவனின் தூதர்கள் தன் முன் வருவதைப் பார்க்கிறார். அவர்களது கோபமான கண்களைப் பார்த்து மிகுந்த பயத்தில் அவர் மலமும் சிறுநீரும் கழிக்கிறார்.

பதம் 3.30.20 : மாநிலத்தின் காவலர்களால் ஒரு குற்றவாளி தண்டனை கொடுத்து சிறைப்படுத்தப்படுவது போல குற்றமான புலன் நுகர்ச்சியில் ஈடுபட்ட எவரும் அதுபோல யமதூதர்களால் சிறைப்படுத்தப்படுகிறார். அவர்கள் தன்னை கழுத்தில் பலமான கயிற்றால் கட்டி, அவனது சூட்சும உடலைப் பிணைக்கிறார்கள். அதனால் அவன் பயங்கரமான தண்டனைக்கு ஆளாகும்.

பதம் 3.30.21 : யமராஜனின் காவலர்களால் எடுத்துச் செல்லப்படும்போது அவர் திணறி அவர்கள் கைகளில் சிக்கி நடுங்குகிறார். தெருவைக் கடந்து செல்லும் பொழுது, அவர் நாய்களால் கடிக்கப்படுகிறார். அவர் அவரது வாழ்வின் பாவமான செயல்களை நினைவுகூர இயலும், இவ்வாறு அவர் பயங்கரமாகத் தொல்லைப்படுகிறார்.

பதம் 3.30.22 : வாட்டும் சூரியனின் கீழ், குற்றவாளி இருபுறங்களிலும் காட்டுத் தீயுடன் கூடிய சூடான மண் நிரம்பிய தெருக்கள் வழியாகக் கடந்து செல்ல வேண்டும். அவரால் நடக்க இயலாத போது அவர் முதுகில் காவலர்களால் அடிக்கப்படுகிறார். அவர் பசியாலும் தாகத்தாலும் துன்புறுகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக, குடிநீர் இல்லை, இருப்பிடம் இல்லை, தெருவில் ஒதுங்கி இளைப்பாற இடம் இல்லை.

பதம் 3.30.23 : யமராஜனின் இருப்பிடம் செல்ல, தெருவைக் கடக்கும் பொழுது, அவர் களைப்பால் கீழே விழுகிறார், சிலசமயம் அவர் மயக்கமடைகிறார். ஆனால் அவர் மீண்டும் எழுந்திருக்குமாறு வற்புறுத்தப்படுகிறார். இந்தவிதத்தில் அவர் விரைவாக யமராஜனின் முன்பு கொண்டு வரப்படுகிறார்.

பதம் 3.30.24 : இவ்வாறு அவர் 99,000 யோசனைகளை இரண்டு அல்லது மூன்று நொடிக்குள் கடக்க வேண்டும். பின்னர் அவர் உடனே அவர் துன்புறுவதற்கென்று விதிக்கப்பட்ட சித்ரவதை தரும் தண்டனையில் ஈடுபடுத்தப்படுவார்.

பதம் 3.30.25 : எரியும் மரத் துண்டுகளுக்கு இடையில் அவர் வைக்கப்படுகிறார். அவரது உறுப்புகள் நெருப்பின் மேல் இடப்படுகின்றன. சிலநிகழ்ச்சிகளில் அவர் தன் சதையைத் தானே உண்ணுமாறு செய்யப்படுகிறார். அல்லது பிறர் அதை உண்ணுமாறு செய்யப்படுகிறார்.

பதம் 3.30.26 : அவரது குடல்கள் நரகத்தின் வேட்டை நாய்களாலும், வல்லூறுகளாலும் வெளியில் இழுக்கப்படுகின்றன. அவர் அதைப் பார்க்க இன்னும் உயிருடன் இருந்த போதிலும், அவர் பாம்புகள், தேள்கள், சிறிய கொசுக்கள் மற்றும் பிற உயிரினங்களால் கடிக்கப்பட்டு வதைக்கு ஆளாகிறார்.

பதம் 3.30.27 : அடுத்து அவர் உறுப்புகள் வெட்டப்பட்டு, யானைகளால் துண்டு ஆகக் கிழிக்கப்படுகின்றன. அவர் மலை உச்சிகளில் இருந்து உருட்டி கீழே தள்ளப்படுகிறார். அவரும் நீரில் அல்லது குகையில் அடைத்து வைக்கப்படுகிறார்.

பதம் 3.30.28 : கள்ளத்தனமான இன்பத்தோய்வின் மேல் கட்டப்பட்ட வாழ்வையுடைய ஆண்களும் பெண்களும் பலவிதத் துன்பங்கள் நிறைந்த சூழ்நிலைகளுடைய தாமிஸ்ர அந்த—தாமிஸ்ர மற்றும் ரௌரவ என்று அறியப்படும் நரகங்களில் தள்ளப்படுகிறார்கள்.

பதம் 3.30.29 : பகவான் கபிலர் தொடர்ந்தார்: என் அன்பு அன்னையே, நாம் நகரம் அல்லது சுவர்க்கத்தை பூமியாகிய இந்தக் கோளில் அனுபவிக்கிறோம், ஏனெனில் நரக தண்டனைகள் சில சமயம் இந்தக் கோளிலும் வெளிப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

பதம் 3.30.30 : பாவச் செயல்களால் தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாக்கும் மனிதன், இந்த உடலை விட்ட பிறகு நரக வாழ்வை அனுபவிக்கிறான் அவனது உறவினர்களும் அனுபவிக்கின்றனர்.

பதம் 3.30.31 : அவர் இந்த உடலை விட்ட பின்னர் தனியாக நரகத்தின் மிக இருளடைந்த பகுதிகளுக்குச் செல்கிறார், பிற உயிரினங்களிடம் கொண்ட பொறாமையால் அவர் பெற்ற பணம், அவர் இந்த உலகை விட்டுச் செல்லும்பொழுது அவரது இடுகாட்டுச் செலவாகிறது.

பதம் 3.30.32 : இவ்வாறு, பரமபுருஷ பகவானின் ஏற்பாட்டால், குடும்பத்தினரைப் பாதுகாப்பவர், தன் பாவச் செயல்களுக்காக, செல்வம் இழந்த ஒரு மனிதரைப் போல, துன்புறுவதற்காக நரகச் சூழலில் தள்ளப்படுகிறார்.

பதம் 3.30.33 : அதனால் தன் குடும்பத்தையும் உறவினர்களையும் தவறான வழிகளின் மூலமே காப்பாற்ற விரும்பும் ஒருவர் நிச்சயமான அந்த தாமிஸ்ர என்று அறியப்படும் நரகத்தின் மிகவும் இருட்டான இடத்திற்குச் செல்கிறார்.

பதம் 3.30.34 : எல்லாத் துன்பமான, நரகச் சூழ்நிலைகளை அனுபவித்துக் கடந்த பிறகு, மனிதப் பிறப்பிற்கு முந்தைய விலங்கு வாழ்வின் கீழான வடிவங்களை ஒழுங்கான முறையில் கடந்த பிறகு, அவரது பாவங்களைத் தூய்மை ஆக்கிய பிறகு, ஒருவர் பூமியில் மனித உயிரினமாக மீண்டும் பிறக்கிறார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare