அத்தியாயம் – 2
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நினைவு
பதம் 3.2.1
ஸ்ரீ-சுக உவாச
இதி பாகவத ப்ருஷ்ட க்ஷத்ரா வார்தாம் ப்ரியாஸ்ரயாம்
ப்ரதிவக்தும் ந சோத்ஸேஹ ஔத்கண்ட்யாத் ஸ்மாரிதேஸ்வர:
ஸ்ரீ – சுக: உவாச-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி – இவ்வாறாக; பாகவத:- சிறந்த பக்தர்; ப்ருஷ்ட: கேட்டுக் கொள்ளப்ட்ட: க்ஷத்ரா—விதுரரால்; வார்தாம் செய்தி; ப்ரிய – ஆஸ்ரயாம் – பிரியமானவரைப் பற்றி: ப்ரதிவக்தும்—பதில் கூற: ந-இல்லை; ச-மேலும்; உத்ஸேஹே-கவலை கொண்டவரானார்; ஒளக்கண்ட்யாத்- பெரும் மன விசாரத்தினால்; ஸ்மாரித—நினைவு; ஈஸ்வர:- பகவான்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: சிறந்த பக்தரான உத்தவர், பிரியமுள்ளவரைப் (ஸ்ரீ கிருஷ்ணரை) பற்றிய செய்தியைக் கூறும்படி விதுரரால் கேட்டுக்கொள்ளப்பட்ட பொழுது, பகவானை நினைத்ததனால் உண்டான பிரிவாற்றாமையால் உத்தவரால் உடனே பதில் கூற முடியவில்லை.
பதம் 3.2.2
ய: பஞ்ச-ஹாயனோ மாத்ரா ப்ராதர்-ஆசாய யாசித:
தன் நைச்சத் ரசயன் யஸ்ய ஸபர்யாம் பால-லீலயா
ய:- யாரொருவர்; பஞ்ச – ஐந்து: ஹயான:- வயது நிரம்பிய; மாத்ரா—அவரது தாயினால்; ப்ராத:- ஆசாய-காலைச் சாப்பாட்டுக்கு; யாசித:- அழைக்கப்பட்டார்; தத்-அதை; ந-இல்லை; ஐச்சத்- விரும்பினார்; ரசயன்—விளையாட; யஸ்ய-யாருடைய; ஸபர்யாம் – சேவை; பால-லீலயா—பிள்ளைப்பிராயம்.
அவர் ஐந்து வயது நிரம்பிய பாலகனாக இருந்தபோதிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொண்டில் மிகவும் ஆழ்ந்து விட்டவராக இருந்ததால், காலை உணவுக்கு அவரது தாயாரால் அழைக்கப்பட்டபொழுது அதை அவர் விரும்பவில்லை.
பதம் 3.2.3
ஸ கதம் ஸேவயா தஸ்ய காலேன ஜரஸம் கத:
ப்ருஷ்டோ வார்தாம் ப்ரதிப்ரூயாத் பர்து: பாதாவ் அனுஸ்மரன்
ஸ:– உத்தவர்; கதம்- எப்படி; ஸேவயா—அத்தகைய சேவையால்; தஸ்ய—அவரது; காலேன-நாளடைவில்; ஜரஸம்–முதுமை; கத:-அனுபவித்தார்; ப்ருஷ்ட:- கேட்கப்பட்டார்; வார்தாம்- செய்தி; ப்ரதிப்ரூயாத்- பதிவளிப்பதற்காக; பந்து பகவானின்; பாதௌ – அவரது பத்ம பாதங்களை; அனுஸ்மரன்- நினைந்து.
இவ்வாறாக உத்தவர் சிறு வயதிலிருந்தே பகவானுக்குத் தொடர்ந்து தொண்டு செய்து வந்தார். தொண்டு செய்யும் மனப்பான்மை முதுமையிலும் சிறிதும் தளரவில்லை. பகவானைப் பற்றிய செய்தி அவரிடம் கேட்கப்பட்ட உடனேயே அவரைப் பற்றிய அனைத்தையும் உடனே அவர் நினைவு கூர்ந்தார்.
பதம் 3.2.4
ஸ முஹூர்தம் அபூத் தூஷ்ணீம் க்ருஷ்ணாங்ரி-ஸூதயா ப்ருசம்
தீவ்ரேண பக்தி-யோகேன நிமக்ன ஸாது நிர்வ்ருத:
ஸ:- உத்தவர்; முஹூர்தம் – கணநேரம்; அபூத்—ஆனார்; துஷ்ணீம் – மௌனம்: க்ருஷ்ண- அங்ரி- பகவானின் தாமரைப் பாதங்கள்; ஸுதயா – அமுதத்தால்; ப்ருசம் – நன்கு பக்குவமடைந்த: தீவ்ரேன–மிகவும் உறுதியானதால்; பக்தி – யோகேன – பக்தித் தொண்டில், நிமக்ன: ஆழ்ந்து; ஸாது – நல்ல; நிவ்ருத – முழுமையான அன்பில்;
ஒரு கணம் அவர் தேக அசைவின்றி மௌனமாக இருந்தார். பக்திப்பர வசத்தினால், பகவானின் தாமரைப் பாதங்களைச் சிந்திப்பதெனும் அமுதவெள்ளத்தில் அவர் ஆழ்ந்துவிட்டவரானார். மேலும் அந்நிலையில் அவர் இன்னும் ஆழ்ந்து செல்வது போல் காணப்பட்டார்.
பதம் 3.2.5
புலகோத்பின்ன-ஸர்வாங்கோ முஞ்சன் மீலத்-த்ருசா கச:
பூர்ணார்தோ வக்ஷிதஸ் தேன ஸ்னேஹ-ப்ரஸர-ஸம்ப்லுத:
புலக-உத்பின்ன— உன்னத பரவசத்தினால் உண்டாகும் தேசு மாற்றங்கள்: ஸர்வ-அங்க:- உடலின் ஒவ்வொரு அங்கமும்; முங்சன்-பூசி; மீலத் – திறக்கும்; த்ருசா—கண்களால்; சுச: துயரக் கண்ணீர்; பூர்ண—அர்த:- பூரண வெற்றியை; லக்ஷித:-கண்டு; தேன – விதுரரால்; ஸ்னேஹ—ப்ரஸர—பேரன்பு; ஸம்ப்லுத: – முற்றிலும் ஒன்றிப் போனார்.
பூரண பரவசத்தினால் உத்தவரின் உடலில் எல்லா உன்னத மாற்றங்களும் ஏற்பட்டு இருந்ததையும், பிரிவாற்றாமையால் அவரது கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீரை அவர் துடைக்க முயன்றதையும் விதுரர் கண்டார். இவ்வாறாக பகவானின் ஆழ்ந்த அன்பில் உத்தவர் முற்றிலும் ஒன்றிப் போயிருந்ததை விதுரரால் புரிந்து கொள்ள முடிந்தது.
பதம் 3.2.6
சனகைர் பகவல்-லோகான் நருலோகம் புனர் ஆகத:
விம்ருஜ்ய நேத்ரே விதுரம் ப்ரீத்யாஹோத்தவ உத்ஸ்மயன்
சனகை:-படிப்படியாக; பகவத்- பகவானின்; லோகாத்- லோகத்திலிருந்து; நீருலோகம்-மனித உலகிற்கு; புன: ஆகத: மீண்டும் வந்து ; விம்ருஜ்ய- துடைத்துக் கொண்டு; நேத்ரே-கண்களை; விதுரம்–விதுரரிடம்; ப்ரீத்யா-பாசத்துடன்; ஆஹ-கூறினார்; உத்தவ:— உத்தவர்; உத்ஸ்மயன்—அவ்வெல்லா நினைவுகளாலும்.
விரைவில் பகவானின் உலகிலிருந்து மனித உலகிற்குத் திரும்பி வந்த மிகச்சிறந்த பக்தரான உத்தவர், கண்களை துடைத்துக் கொண்டவுடன், பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி, விதுரரிடம் மகிழ்ச்சியாகப் பேசினார்.
பதம் 3.2.7
உத்தவ உவாச
க்ருஷ்ண-த்யுமணி நிம்லோசே கீர்ணேஷு அஜகரேண ஹ
கிம் தூ ந: குசலம் ப்ரூயாம் கத-ஸ்ரீஷு க்ருஹேக்ஷு அஹம்
உத்தவ: உவாச-ஸ்ரீ உத்தவர் கூறினார்; க்ருஷ்ண-தியுமணி -கிருஷ்ண சூரியன்; நிம்யோசே -மறைந்து விட்டதால்; கீர்ணேஷு -விழுங்கப்பட்டுவிட்டது: அஜகரேண-மலைப் பாம்பால்; ஹ-கடந்த காலத்தில்; கிம் -என்ன; து-வேறு; ந:- எமது; குசலம்- நலம்; ப்ரூயம்.— நான் சொல்வது; கத-சென்று விட்டார்; ஸ்ரீஷு க்ருஹேஷு- வீட்டில்; அஹம்-நான்.
ஸ்ரீ உத்தவர் கூறினார் விதுரரே, உலக சூரியனான கிருஷ்ணர் மறைந்து விட்டார். எங்கள் வீடு காலமெனும் மலைப்பாம்பால் விழுங்கப்பட்டு விட்டது. எங்கள் குலத்தவரின் நலத்தைப் பற்றி நான் என்ன சொல்லட்டும்.
பதம் 3.2.8
துர்பகோ பத லோகோ ‘யம் யதவோ நிதராம் அபி
யே ஸம்வஸந்தோ ந விதுர் ஹரிம் மீனா இவோடுபம்
துர்பக:- துர்பாக்கியமானது; பத – நிச்சயமாக; லோக:- பிரபஞ்சம்: அயம் -இந்த: யதவ:- யது வம்சம்; நிதராம்—அதிலும் குறிப்பாக; அபி-கூட; யே அவர்கள்; ஸம்வஸந்த:- ஒன்றாக வாழ்ந்த; ந -இல்லை; விது:- புரிந்து கொள்ள; ஹரிம்- பரமபுருஷரை; மீனா:- – மீன்கள்: இவ உடுபம்-சந்திரனைப் போல்.
பல கிரகங்களை உள்ளடக்கிய இப்பிரபஞ்சம் துர்பாக்கியமானது. அதிலும் யாதவர்கள் அதிக துர்பாக்கியசாலிகள். ஏனெனில் (நீரில் பிரதிபலிக்கும்) சந்திரனை மீன்கள் உணராமல், தங்களைப் போல் ஒரு ஜந்து என்று எண்ணுவதைப் போல், பகவான் ஹரியுடன் வாழ்ந்தும், அவர் பரம புருஷரென்பதை இவர்கள் அறியவில்லை.
பதம் 3.2.9
இங்கித-க்ஞா: புரு-ப்ரௌடா ஏகாராமாஸ் ச ஸாத்வதா:
ஸாத்வதாம் ருஷபம் ஸர்வே பூதாவாஸம் அமம்ஸத
இங்கித-க்ஞா:- மருத்துவக் கல்வியில் கைதேர்ந்த: புரு -ப்ரௌடா:- மிகவும் அனுபவம் பெற்றுள்ள; ஏக- ஒரு; ஆராமா – பொழுதுபோக்கு; ச – தவிரவும்; ஸாத்வதா- பக்தர்கள்; அல்லது சொந்த ஆட்கள்; ஸாத்வதாம் ருஷபம்-குடும்பத்தலைவர்; ஸர்வே -அனைவரும்; பூத -ஆவாஸம் -எங்கும் பரவியிருப்பவர்; அமம்ஸத -நினைக்க முடிந்தது.
யது வம்சத்தினர் அனுபவமுள்ள பக்தர்களாகவும், உடற்வற்று விஞ்ஞானத்தில் நிபுணர்களாகவும் இருந்தனர். இதற்கும் மேலாக, பகவானின் எல்லா வகையான பொழுது போக்குகளிலும் அவருடனேயே எப்பொழுதும் இருந்தனர். இருப்பினும், எல்லா இடங்களிலும் வாழும் ஒரே பரம்பொருளாக மட்டுமே அவரை அவர்களால் அறிய முடிந்தது.
பதம் 3.2.10
தேவஸ்ய மாயயா ஸ்ப்ருஷ்டா யே சான்யத் அஸத்-ஆஸ்ரிதா:
ப்ராம்யதே தீர் ந தத்-வாக்யைர் ஆத்மனி உப்தாத்மனோ ஹரௌ
தேவஸ்ய-பரமபுருஷரின்; மாயயா-புறச் சக்தியின் ஆதிக்கத்தினால் ஸ்ப்ருஷ்ட- நோயுற்றவர்கள்; யே—அவர்கள் அனைவரும்; ச – மேலும்; அன்யத் – பிறர்; அஸத் – மாயையான; ஆஸ்ரிதா: உட்பட்டிருப்பதால்; ப்ராம்யதே-குழப்பம்; தீ:- புத்தி: ந-இல்லை; தத் -அவர்களின்; வாக்யை:- அவ்வார்த்தைகளால்; ஆத்மனி – பரமாத்மாவில்; உப்த- ஆதிமன:– சரணடைந்த ஆத்மாக்கள்; ஹரௌ-பகவானிடம்.
பகவானின் மாயைச் சக்தியினால் குழப்பமடைந்துள்ளவர்களின் வார்த்தைகளால், பூரண சரணாகதியடைத்துள்ள ஆத்மாக்களின் புத்தியை எந்தச் சூழ்நிலையிலும் திசை திருப்ப முடியாது.
பதம் 3.2.11
ப்ரதர்ஸ்யாதப்த-தபஸாம் அவித்ருப்த-த்ருசாம் ந்ருணாம்
ஆதாயாந்தர் அதாத் யஸ் து ஸ்வ-பிம்பம் லோக-லோசனம்
ப்ரதர்ஸ்ய- வெளிப்படுத்துவதன் மூலம்; அதப்த – மேற்கொள்ளாமல்; தபஸாம்—தவங்களை; அவித்ருப்த – த்ருசாம்— காட்சி நிறைவேறாத படி; ந்ருணாம்-நபர்களின்; ஆதயா—ஏற்று; அந்த:- மறைவு; அதாத்—செய்தார்; ய:- அவர்; து—ஆனால்; ஸ்வ— பிம்பம்—அவரது சுயரூபத்தை; லோக—லோசனம்—பொதுமக்களின் பார்வை.
பொதுமக்களின் பார்வையின் முன் தமது நித்தியமான சுயரூபத்தைக் காட்டிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தேவையான தவத்தைச் செய்யாததால் தம்மை (உள்ளபடி) காண முடியாதவர்களின் பார்வையிலிருந்து தமது உருவத்தை மறைத்துக் கொண்டார்.
பதம் 3.2.12
யன் மர்த்ய-லீலௌபயிகம் ஸ்வ-யோக –
மயா-பலம் தர்சயதா க்ருஹீதம்
விஸ்மாபனம் ஸ்வஸ்ய ச ஸௌபகர்த்தே:
பரம் பதம் பூஷண-பூஷணாங்கம்
யத்—அவரது நித்தியரூபம்; மர்த்ய-ஜட உலகம்; லீலா -உபயிகம்—லீலைகளுக்குச் சற்றே பொருத்தமான: ஸ்வ-யோக -மாயா- பலம்- அந்தரங்க சக்தியின் ஆற்றல்; தர்சயதா—தோற்றத்திற்கு;க்ருஹீதம் – கண்டுபிடிக்கப் பட்டுள்ளன; விஸ்மாபனம்—அற்புதமான: ஸ்வஸ்ய-சுயமாகவே;ச-மேலும்; ஸௌபக-ருத்தே:- ஐசுவரியத்தின்; பரம்-பரம;பதம்- பரமபதம்;பூஷண —அணிகலன்:பூஷண–அங்கம் —அணிகலன்களின்.
பகவான் தமது அந்தரங்கச் சக்தியான யோகமாயையினால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவர் தமது லீலைகளுக்குப் பொருத்தமான நித்திய ரூபத்துடன் வருகிறார். வைகுண்ட நாதராக தமது நித்திய ரூபத்திலுள்ள பகவான் உட்பட, தங்களுடைய சொந்த ஐசுவரியத்தில் செருக்குடையவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த லீலைகள் அற்புதமானவையாக இருந்தன. இவ்வாறாக, அவரது (ஸ்ரீ கிருஷ்ணரின்) உன்னதமான உடல் அணிகலன்களுக்கெல்லாம் அணிகலனாக விளங்குகிறது.
பதம் 3.2.13
யத் தர்ம-ஸூனோர் பத ராஜஸூயே
நிரீக்ஷ்ய த்ருக்-ஸ்வஸ்த்யயனம் த்ரி-லோக:
கார்த்ஸ்ன்யேன சாத்யேஹ கதம் விதாதுர்
அர்வாக்-ஸ்ருதௌ கௌசலம் இதி அமன்யத
யத்—எந்தவொரு உருவம்; தர்ம-ஸூனோ:- யுதிஷ்டிர மகாராஜனின்; பத-நிச்சயமாக; ராஜஸூயே-ராஜஸூய யாக அரங்கில்; நிரீக்ஷ்ய-கண்டதன் மூலம்; த்ருக்-காட்சி; ஸ்வஸ்த்யயனம் – இனிமையான; த்ரி—லோக:- மூவுலகங்கள்; கார்த்ஸ்னயேன-மொத்தத்தில்; ச- இவ்வாறு : அத்ய – இன்று; இஹ-பிரபஞ்சத்திற்குள்; கதம்- மிஞ்சியதாக இருந்தது; விதாது:-சிருஷ்டிக்கர்த்தாவின் (பிரம்மா); அர்வாக்-சமீப காலத்து மனித வர்க்கம்; ஸ்ருதௌ–ஜடவுலகில்; கெளசலம்- சாமர்த்தியம்: இதி-இவ்வாறாக; அமன்பதா- ஆழ்ந்து சிந்தித்தனர்.
பிரபஞ்சத்தின் மேல், கீழ் மற்றும் மத்திய லோகங்களைச் சேர்ந்த எல்லா தேவர்களும், யுதிஷ்டிர மகாராஜனால் செய்யப்பட்ட ராஜஸூய யாக அரங்கில் கூடினர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அழகிய தேக அம்சங்களைக் கண்ட அவர்கள், மனிதர்களைப் படைத்தவரான பிரம்மாவின் சிருஷ்டியிலேயே ஸ்ரீகிருஷ்ணர் தான் மிகமிக சாமர்த்தியமாக படைக்கப்பட்டவர் என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டனர்.
பதம் 3.2.14
யஸ்யானுராக-ப்லுத-ஹாஸ-ராஸ-
லீலாவலோக-ப்ரதிலப்த-மானா:
வ்ரஜ-ஸ்த்ரியோ த்ருக்பிர் அனுப்ரவ்ருத்த
தியோ ‘வதஸ்து: கில க்ருத்ய-சேஷா:
யஸ்ய-யாருடைய; அனுராக—பற்று; ப்லுத-அதிகரித்தது; ஹாஸ-சிரிப்பு; ராஸ-மனதிற்கினிய; லீலா-லீலைகள்; அவ லோக-பார்த்து; ப்ரதி -லப்த—அதனால் அடைந்தனர்; மானா: -மனவருத்தம் அடைந்த; வ்ரஜ-ஸ்த்ரிய: -விரஜ பூமியின் கன்னிப் பெண்கள்; த்ருக்பி:- கண்களால்; அனுப்ரவ்ருத்த-பின் தொடர்ந்து; திய:- புத்தியால்; அவதஸ்து:— மௌனமாக அமர்ந்திருந்தனர்; கில-உண்மையில்; க்ருத்ய-சேஷா:- இல்லறக் கடமைகளை முடிக்காமல்.
விரஜ பூமியின் கன்னிப்பெண்கள் ஸ்ரீ கிருஷ்ணருடன் சிரித்தும், நகைச் சுவையாகப் பேசியும், பார்வைகளைப் பரிமாறியும் அவருடன் லீலைகளில் ஈடுபட்டிருந்தனர். பிறகு கிருஷ்ணர் அவர்களைவிட்டுச் சென்றதால் மனவருத்தம் அடைந்தனர். கண்களாலேயே அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவர்கள், மதி மயங்கி கீழே அமர்ந்து விட்டதால், குடும்பக் கடமைகளை அவர்களால் நிறைவேற்ற இயலவில்லை.
பதம் 3.2.15
ஸ்வ-சாந்த-ரூபேஷு இதரை: ஸ்வ-ரூபைர்
அப்யர்த்யமானேஷு அனுகம்பிதாத்மா
பராவரேசோ மஹத்-அம்ச-யுக்தோ
ஹி அஜோ ‘பி ஜாதோ பகவான் யதாக்னி:
ஸ்வ- சாந்த-ருபேஷு-பகவானின் அமைதியான பக்தர்களுக்கு; இதரை:- மற்றவர்கள், பக்தரல்லாதவர்கள்; ஸ்வ-ரூபை: -அவர்களுடைய சொந்த இயற்கைக் குணங்களுக்கேற்ப: அப்யர்த்ய மானேஷு- தொல்லை கொடுக்கப்படுவதால்; அனுகம்பித-ஆத்மா பரம கருணாமூர்த்தியான பகவான்; பர-அவர்-ஆன்மீக மற்றும் பௌதிக; ஈச:- ஆள்பவர்; மஹத்-அம்ச-யுக்த மஹத் -தத்வம் எனும் விரிவங்கத்தினால் சூழப்பட்டு: ஹி-திச்சயமாக; அது- பிறப்பற்றவர்; அபி-என்ற போதிலும்; ஜாத:- பிறக்கிறார்; பகவான்— பரமபுருஷர்; யதா-என்பது போல் அக்னி:- அக்னி.
பரம கருணாமூர்த்தியும், ஜட ஆன்மீக உலகங்களை ஆள்பவருமான பரமபுருஷர், பிறப்பற்றவராவார். ஆனால் அமைதியே உருவான அவரது பக்தர்களுக்கும், பௌதிக இயற்கைக் குணங்களிலுள்ளவர்களுக்கும் இடையில் உராய்வு ஏற்படும்பொழுது, மஹத்-தத்வம் பின் தொடர, அவர் அக்னி போல் பிறவியெடுக்கிறார்.
பதம் 3.2.16
மாம் கேதயதி ஏதத் அஜஸ்ய ஜன்ம-
விடம்பனம் யத் வஸுதேவ-கேஹே
வ்ரஜே ச வாஸோ ‘ரி-பயாத் இவ ஸ்வயம்
புராத் வ்யவாத்சீத் யத்-அனந்த-வீர்ய:
மாம் – எனக்கு; கேதயதி – துயரத்தைக் கொடுக்கிறது; ஏதத் -இந்த; அஜஸ்ய -பிறப்பற்றவரின்; ஜன்ம-பிறப்பு; விடம்பனம் -குழப்பமான; யத் – அந்த; வஸுதேவ -கேஹே – வசுதேவரின் வீட்டில், வ்ரஜே-பிருந்தாவனத்தில் ; ச-தவிரவும்; வாஸ:- வாசம்; அரி -எதிரி;பயாத்-பயத்தின் காரணத்தால்; இவ – என்பது போல்; ஸ்வயம் – அவராகவே; புராத் -மதுராபுரியிலிருந்து ; வ்யவாத்சீத்—தப்பி ஓடினார்; யத்—யாரொருவர்; அனந்த-வீர்ய:- எல்லையற்ற சக்தியுடையவர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பற்றவர் என்ற போதிலும், அவர் எப்படி வசுதேவரின் சிறைக்கூடத்தில் பிறந்தார் என்பதையும், அங்கு தமது தந்தையின் பாதுகாப்பைவிட்டு எப்படி பிருந்தாவனத்திற்குச் சென்று, எதிரியின் பயத்தினால் மாறுவேடத்தில் வாழ்ந்து வந்தார் என்பதையும், எல்லையற்ற சக்தியுடையவராக இருந்தும், எப்படி அச்சத்தால் மதுராபுரியிலிருந்து தப்பி ஒடினார் என்பதையும் நினைக்கும் பொழுது, குழப்பமான இச்சம்பவங்கள் எனக்குத் துயரத்தை விளைவிக்கின்றன.
பதம் 3.2.17
துனோதி சேத: ஸ்மரதோ மமைதத்
யத் ஆஹ பாதாவ் அபிவந்ய பித்ரோ:
தாதாம்ப கம்ஸாத் உரு-சங்கிதானாம்
ப்ரஸீத்தம் நோ ‘க்ருத-நிஷ்க்ருதீனாம்
துனோதி-அது எனக்கு துன்பத்தைத் தருகிறது; சேத:- இதயம்; ஸ்மரத:- அதைப்பற்றி நினைக்கும்பொழுது; மம – எனது; ஏதத்— இந்த; யத்-இந்த அளவிற்கு; ஆஹ—கூறினார்; பாதௌ-பாதங்கள்; அபிவந்ய—வணங்கி; பித்ரோ: – பெற்றோரின்; தாத—அருமைத் தந்தையே; அம்ப-அருமைத் தாயே; கம்சாத் – கம்சனின் காரணத்தால், உரு – பெரும்; சங்கிதானாம்-அஞ்சுபவர்களின்; ப்ரஸீததாம் – அதனால் மகிழ்ந்து ; ந: – எங்களுடைய; அக்ருத—நிறைவேற்றவில்லை; நிஷ்க்குதீனாம் – உங்களுக்குச் சேவை செய்யும் கடமைகள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனுக்கஞ்சி வீட்டைவிட்டு வெளியேறி இருந்ததால், தமது பெற்றோருக்கு தங்களால் (கிருஷ்ணர், பலராமர்) பாத சேவை செய்ய முடியாததற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். “அன்புள்ள தாயே, அன்புள்ள தந்தையே இந்த இயலாமைக்காக தயவு செய்து எங்களை மன்னித்துவிடுங்கள்” என்று அவர் கூறினார். பகவானின் இத்தகைய நடத்தைகள் எல்லாம் என் இதயத்திற்கு துன்பத்தைத் தருகின்றன.
பதம் 3.2.18
கோ வா அமுஷ்யாங்ரி-ஸரோஜ-ரேணும்
விஸ்மர்தும் ஈசீத புமான் விஜிக்ரன்
யோ விஸ்ஃபுரத்-ப்ரூ-விடபேன பூமேர்
பாரம் க்ருதாந்தேன திரஸ்சகார
க:- வேறு யார்; வா-இரண்டிலெது; அமுஷ்ய -பகவானின்; அங்ரி-பாதங்கள்; ஸரோஜ-ரேணும்-தாமரையின் துசி; விஸ்மர்தும் – மறந்து விட: ஈசீத-இயலக் கூடும்; புமான்-நபர்: விஜிக்ரன்— முகர்ந்த; ய:- ஒருவர்: விஸ்ஃபுரத்- விரிவடையும்; ப்ரு – விடபேன – புருவங்களின் இலைகளால்; பூமே:- பூமியின்; பாரம்-பாரம்; க்ருத – அந்தேன – உயிரைப் போக்கவல்ல அடிகளால்; திரஸ்சகார— நிறைவேற்றினார்.
அவரது தாமரைப் பாதங்களின் தூசியை ஒரு முறையேனும் முகர்ந்த பின், யாரால் அவரை மறக்க இயலும்? கிருஷ்ணர் தமது புருவங்களை உயர்த்தியதாலேயே, உலகிற்கு பாரமாக இருந்தவர்களுக்கு உயிரை போக்கவல்ல அடியைக் கொடுத்துள்ளார்.
பதம் 3.2.19
திருஷ்டா பவத்பிர் நனு ராஜஸுயே
சைத்யஸ்ய க்ருஷ்ணம் த்விஷதோ ‘பி ஸித்தி:
யாம் யோகின: ஸம்ஸ்ப்ருஹயந்தி ஸம்யக்
யோகேன கஸ் தத்-விரஹம் ஸஹேத
த்ருஷ்டா—காணப்பட்டது; பவத்பி:- தங்களால்;நனு- சந்தேகமின்றி; ராஜஸூயே-யுதிஷ்டிர மகாராஜனால் செய்யப்பட்ட ராஜஸூயே யாகச் சபையில்; சைத்யஸ்ய-சேதி ராஜனின் (சிசு பாலனின்); க்ருஷ்ணம் -கிருஷ்ணரை: த்விஷத:- வெறுத்த; அபி -போதிலும்; ஸித்தி:- வெற்றி; யாம்- எந்த; யோகின: -யோகிகள் ; ஸம்ஸ்ப்குஹயந்தி- விரும்புகின்றனர்; ஸம்யத்-முழுமையாக; யோகேன் – யோகப் பயிற்சியினால்; க:-யார்; தத்—அவரது; விரஹம்-பிரிவை; ஸஹேத-பொறுத்துக் கொள்ள இயலும்.
சேதி ராஜன் (சிசுபாலன்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வெறுத்த போதிலும், யோகப் பயிற்சியில் அவனால் எப்படி வெற்றியடைய முடிந்தது என்பதை நீங்களே நேரில் கண்டிருக்கிறீர்கள். உண்மையான யோகிகளும் கூட தங்களுடைய அநேக பயிற்சிகளின் மூலமாக இத்தகைய வெற்றியை அடையப் பேரவா கொண்டுள்ளனர். அவரது பிரிவாற்றாமையை யாரால்தான் சகித்துக் கொள்ள இயலும்?
பதம் 3.2.20
ததைவ சான்யே நர-லோக-வீரா
ய ஆஹவே க்ருஷ்ண-முகாரவிந்தம்
நேத்ரை: பிபன்தோ நயனாபிரமம்
பார்த்தாஸ்த்ர-பூத: பதம் ஆபுர் அஸ்ய
ததா-அதைப்போலவே; ஏவ ச-சந்தேகமின்றி; அன்யே – மற்றவர்கள்; நர – லோக மனித சமுதாயம்; வீரா- வீரர்கள்; யே-அந்த: ஆஹவே-(குருஷேத்திர ) போர்க்களத்தில்; கிருஷ்ண-ஸ்ரீ கிருஷ்ணரின்; முக—அரவிந்தம்- தாமரை போன்ற முகத்தை; நேத்ரை:- கண்களால்; பிபந்த:- காணும்பொழுது; நயன -அபிராமம்–கண்களுக்கு மிகவும் இனிமையான; பார்த்த—அர்ஜுனன்; அஸ்த்ர-பூத:- அம்புகளால் தூய்மையடைந்தனர்; பதம் – உலகை; ஆபு: – அடைந்தனர்; அஸ்ய—அவருடைய.
குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் கூடியிருந்த மற்ற வீரர்கள், அர்ஜுனனுடைய அம்புகளின் தாக்குதலால் தூய்மையடைந்து, கண்ணுக்கு இனிமையான கிருஷ்ணரின் தாமரை முகத்தை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே பகவானின் உலகை அடைந்தனர்.
பதம் 3.2.21
ஸ்வயம் து அஸாம்யாதிசயஸ் த்ரியதீச;
ஸ்வாராஜ்ய-லக்ஷ்மி-ஆப்த-ஸமஸ்த-காம:
பலிம் ஹரத்பிஸ் சிர-லோக-பாலை:
கிரீட-கோடி-எடித-பாத-பீட:
ஸ்வயம் – சுயமாக; து—ஆனால்; அஸாம்ய-ஒப்பற்ற; அதிசய:- உயர்ந்த; த்ரி-அதீச:- மூன்றுகளின் இறைவன்; ஸ்வாராஜ்ய – சுதந்திரமான தவைமையதிகாரம்; லக்ஷ்மீ-அதிர்ஷ்டம்; ஆப்த – அடைத்திருந்தார்; ஸமஸ்த-காம:- எல்லா ஆசைகளையும்: பலிம்:- வழிபாட்டுப் பொருட்கள்; ஹரத்பி:- அளிக்கப்படும்; சிர-லோக-பாலை:- சிருஷ்டிக்குரிய லோக பாலகர்களால்; கிரீட-கோடி-கோடிக்கணக்கான கிரீடங்கள்; எடித-பாத- பீட;- பிரார்த்தனைகளால் போற்றப்படும் பாதங்கள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாவகையான மூன்றுகளுக்கும் பகவானும் எல்லாவகையான செல்வங்களையும் பெற்றிருந்ததால், பரம சுதந்திரமானவருமாவார். சிருஷ்டியின் லோக பாலகர்கள் தங்களுடைய கோடிக்கணக்கான கிரீடங்களுடன் அவரது பாதங்களில் பணிந்து அவரை ஆராதிக்கின்றனர்.
பதம் 3.2.22
தத் தஸ்ய கைங்கர்யம் அலம் ப்ருதான் நோ
விக்லாபயதி அங்க யத் உக்ரஸேனம்
திஷ்டன் நிஷண்ணம் பரமேஷ்டி-திஷ்ண்யே
ஞாபோதயத் தேவ நிதாரயேதி
தத்—எனவே; தஸ்ய—அவரது; கைங்கர்யம்-தொண்டு; அலம்- நிச்சயமாக; ப்ருதான்-தொண்டர்கள்; ந:- நமக்கு: விக்லாபயதி- துன்பத்தைத் தருகிறது; அங்க- விதுரரே; யத்—அவ்வாறே; உக்ரசேணம்-உக்ரசேன மகாராஜனிடம்; திஷ்டன்—அமர்ந்திருந்த; நிஷண்ணம்—அவருக்காக காத்துக்கொண்டு; பரமேஷ்டி- திஷ்ண்யே-அரியாசனத்தில்; ஞபோதயத்- வினயமாகக் கூறினார்; தேவ-அரசே என்றழைத்து; நிதாரய—இதைத் தங்களுக்கு அறிவிக்கிறேன்; இதி- இவ்வாறாக.
எனவே விதுரரே, அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) அரியாசனத்தில்அமர்ந்திருந்த உக்ரசேன மகாராஜன் முன் நின்றுகொண்டு, “அரசே, இதைத் தங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்” என்று கூறி தாழ்மையுடன் தமது விளக்கத்தை அளிப்பது வழக்கம். எனவே விதுரரே, இதை நினைவு கூறும்பொழுது, அவரது தொண்டர்களான நமக்கு, இது துன்பத்தை அல்லவா தருகிறது!
பதம் 3.2.23
அஹோ பகீ யம் ஸ்தன-கால-கூடம்
ஜிகாம்ஸயாபாயயத் அபி அஸாத்வீ
லேபே கதிம் தாத்ரி-உசிதாம் ததோ ‘ன்யம்
கம் வா தயாலும் சரணம் வ்ரஜேம
அஹோ – அந்தோ; பகீ-அரக்கி (பூதனை); யம்-யாரை; ஸ்தன – அவளது ஸ்தனத்தில்; கால-கொடிய; கூடம்-விஷம்; ஜிகாம்ஸயா – விரோதத்தால்; அபாயயத்—ஊட்டினாள்; அபி-எனினும்; அஸாத்வீ —நேர்மையற்ற; லேபே-அடைந்தாள்; கதிம்-கதியை: தாத்ரி- உசிதாம் -தாதிப் பெண்ணுக்கு உசிதமான; தத:- யாருக்கு அப்பால்; அன்யம்—மற்றவர்; கம்—வேறு யார்; வா-நிச்சயமாக; தயாளும் – கருணையுள்ள; சரணம்—அடைக்கலம்; வ்ரஜேம-நான் ஏற்பேன்.
அந்தோ- நேர்மையற்றவளான (பூதனை என்ற) அரக்கி, கொடிய விஷத்தை தயாரித்து அதைத் தன் ஸ்தனத்தில் தடவிக் கொண்டு, பகவானுக்குப் பாலுட்டமுயன்றாள். அவளுக்கும் தன் தாயின் அந்தஸ்தை அளித்த அவரைவிட அதிக கருணையுள்ளவரும், நான் புகலிடம் கொள்ளக்கூடியவருமான வேறொருவர் எப்படி இருக்கக்கூடும்?
பதம் 3.2.24
மன்யே ‘ஸுரான் பாகவதாம்ஸ் த்ரியதீசே
ஸம்ரம்ப-மார்காபினிவிஷ்ட-சித்தான்
யே ஸம்யுகே ‘சக்ஷத தார்க்ஷ்ய-புத்ரம்
அம்ஸே ஸுநாபாயுதம் ஆபதந்தம்
மன்யே – நான் நினைக்கிறேன்; அஸுரான்—அசுரர்கள்; பாகவதான்— சிறந்த பக்தர்கள்; த்ரி—அதிசே -மூன்றுகளின் பகவானுக்கு; ஸம்ரம்ப—விரோதம்; மார்க – வழியால்; அபினிவிஷ்ட-சித்தான் – சிந்தனையில் ஆழ்ந்து; யே-அவர்கள்; ஸம்யுகே—போரில்; அசக்ஷத— காணமுடிந்தது; தார்க்ஷ்ய-புத்ரம்—பகவானின் வாகனமான கருடனை; அம்ஸே-தோளில்; ஸுநாப—சக்கரம்; ஆயுதம்—ஆயுதத்தை ஏந்தி இருப்பவர்; ஆபதந்தம்- முன்னோக்கி வரும்.
பகவானிடம் விரோதம் கொண்டிருந்த அசுரர்கள், பக்தர்களை விட உயர்ந்தவர்களென நான் கருதுகிறேன். ஏனெனில், பகையுணர்ச்சியில் ஆழ்ந்து பகவானுடன் போரிடும்பொழுது, தார்ஷ்ய (கசியபர்) புத்திரரான கருடனின் தோள்களில் தூக்கிச் செல்லப்பட்டவரும், சக்கராயுதத்தை கரத்தில் ஏந்தியிருப்பவருமான பகவானை அவர்களால் காணமுடிந்தது.
பதம் 3.2.25
வஸுதேவஸ்ய தேவக்யாம் ஜாதோ போஜேந்ர-பந்தனே
சிகீர்ஷுர் பகவான் அஸ்யா: சம் அஜேனாபியாசித:
வஸு தேவஸ்ய-வசுதேவருடைய மனைவியின்; தேவக்யாம் – தேவகியின் கர்ப்பத்தில்; ஜாத: – பிறந்த; போஜ- இந்ர – போஜராஜனின்; பந்தனே – சிறைக்கூடத்தில்; சிகீர்ஷு:— செய்வதற்காக;பகவான்-பரமபுருஷர்: அஸ்யா:- பூமியின்; சம்-நலம்; அஜேன- பிரம்மாவால்; அபியாசித:- அதற்காக பிரார்த்திக்கப்பட்டு.
பூமியின் நலனைக் குறித்து, பிரம்மாவால் பிரார்த்திக்கப்பட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், போஜராஜனின் சிறைக்கூடத்தில், தன் மனைவியான தேவகியின் கர்ப்பத்தில், வசுதேவரால் பெற்றெடுக்கப்பட்டார்.
பதம் 3.2.26
ததோ நந்த-வ்ரஜம் இத பித்ரா கம்ஸாத் விபிப்யதா
ஏகாதச ஸமாஸ் தத்ர கூடார்சி ஸ-பலோ ‘வஸத்
தத:- அதன்பிறகு; தந்த-வ்ரஜம் நந்த மகாராஜனின் பசுமேய்ப்பு நிலத்தில்: இது- வளர்க்கப்பட்டு; பித்ரா—அவரது தந்தையால்; கம்ஸாத்—கம்சனிடமிருந்து; விபிப்யதா—அவனுக்கு அஞ்சி; ஏகாதச— பதினொரு; ஸமா:- ஆண்டுகள்; தத்ர—அவ்விடத்தில்; கூட—அர்சி: மறைந்திருக்கும் தீ; ஸ-பல:- பலதேவருடன்; அவஸத் – வாழ்ந்தார்.
அதன்பிறகு, கம்சனுக்கு அஞ்சிய அவரது தந்தை, அவரை நந்த மகாராஜனின் கோகுலத்திற்கு கொண்டு வந்தார். அங்கு அவர், தமது தமையனான பலதேவருடன், மறைந்திருக்கும் தீ போல் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.
பதம் 3.2.27
பரீதோ வத்ஸப்பைர் வத்ஸாம்ஸ்சாரயன் வ்யஹரத் விபு:
யமுனோபவனே கூஜத்-த்விஜ-ஸங்குலிதாங்கிரிபே
பரீத:- சூழப்பட்டவராய்; வத்ஸபை:- இடைச்சிறுவர்களால்: வத்ஸான்—கன்றுகளை; சாரயன்—மேய்ப்பதை; வ்யஹரத்-சஞ்சரித்ததை அனுபவித்தார்; விபு:- சர்வ வல்லமை உடையவர்; யமுனா – யமுனை நதி: உபவனே- கரையிலுள்ள தோட்டங்களில்: கூஜத் -குரலால் ஒலிக்கப்பட்ட; தீவிஜ-இரு பிறப்பெய்திய பறவைகளின்; ஸங்குலித- அடர்த்தியாக இருந்த; அங்ரிபே- மரங்களில்.
சர்வ வல்லமையுடைய பகவான், அவரது பிள்ளைப் பருவத்தில் இடைச்சிறுவர்களாலும், கன்றுகளாலும் சூழப்பட்டிருந்தார். இவ்வாறாக மரங்களாலும், பறவைகளின் கீச்சிடும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டிருந்த அடர்ந்த தோட்டங்களைக் கொண்ட யமுனை நதிக்கரையில் அவர் பிரயாணம் செய்தார்.
பதம் 3.2.28
கௌமாரீம் தர்சயம்ஸ் சேஷ்டாம் ப்ரேஷனியாம் வ்ரஜௌகஸாம்
ருதன் இவ ஹஸன் முக்த-பால-ஸிம்ஹாவலோகன:
கௌமாரீம் – குழந்தைப் பருவத்திற்குப் பொருத்தமான; தர்சயன் -காட்டும்பொழுது; சேஷ்டாம்—செயல்களை; ப்ரேக்ஷணீயாம்-காணத்தகுந்த: வ்ரஜ—ஓகஸாம்- பிருந்தாவன வாசிகளால்; ருதன்-அழுதும்; இவ-போலவே; ஹஸன்–சிரித்தும்; முக்த-ஆச்சரியத்தால் ஸ்தம்பித்தவர் போல்; பால- ஸிம்ஹ- சிங்கக்குட்டி; அவலோகன: அவ்வாறு தோன்றும்.
குழந்தைப் பருவத்து லீலைகளை பகவான் பிருந்தாவன வாசிகளுக்கு மட்டுமே வெளிப்படுத்தினார். ஒரு குழந்தையைப் போல், சில சமயங்களில் அழுவது போலவும், சில சமயங்களில் சிரிப்பது போலவும் காணப்பட்டார். அப்படிச் செய்யும்பொழுது அவர் ஒரு சிங்கக்குட்டியைப்போல காணப்படுவார்.
பதம் 3.2.29
ஸ ஏவ கோ-தனம் லக்ஷ்ம்யா நிகேதம் ஸித-கோ-வ்ருஷம்
சாரயன் அனுகான் கோபான் ரணத்-வேணுர் அரீரமத்
ஸ- அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) ஏவ-நிச்சயமாக; கோ- தனம்-பசு களஞ்சியம்; லக்ஷ்ம்யா: ஐசுவரியத்தால்; நிகேதம் – களஞ்சியம்; ஸித-கோ- வ்ருஷம் – அழகிய பசுக்களையும். காளைகளையும் சாரயன் – மேய்க்கும்; அனுகான்- குழுவினர்; கோபான்-இடைச்சிறுவர்கள்: ரணத்- ஊதி; வேணு – புல்லாங்குழலை: அரீர மத்- உற்சாகப்படுத்தினார்.
எல்லா சௌகரியங்களுக்கும், செல்வங்களுக்கும் உறைவிடமான பகவான், மிகவும் அழகிய காளைகளை மேய்க்கும் பொழுது, தமது புல்லாங்குழலை வாசித்து, தம்மிடம் விசுவாசம் கொண்டிருந்த இடைச் சிறுவர்களை அவர் உற்சாகப்படுத்தினார்.
பதம் 3.2.30
ப்ரயுக்தான் போஜ-ராஜேன மாயின காம்-ரூபிண:
லீலயா வ்யனுதத் தாம்ஸ் தான் பால: க்ரீடனகான் இவ
ப்ரயுக்தான்—ஈடுபடுத்தப்பட்டனர்; போஜ-ராஜேன—கம்ச மன்னனால்; மாயின: -பெரும் சூன்யக்காரர்கள்; காம-ரூபிண:- விரும்பிய ரூபத்தை ஏற்கவல்ல; லீலயா-லீலைகள் புரியும் பொழுது; வியனுதத்— கொன்றார்;தான்—அவர்களை;தான்—அவர்கள் அங்கு சென்ற பொழுது; பால:- குழந்தை; க்ரீடனகான்—பொம்மைகள்; இவ-அதைப்போல்.
போஜராஜனான கம்சன், கிருஷ்ணரைக் கொல்வதற்காக, விரும்பிய ரூபத்தை ஏற்கவல்ல பெரும் சூனியகாரர்களை நியமித்தான். ஆனால் ஒரு குழந்தை பொம்மைகளை உடைத்து விடுவதைப் போலவே, பகவான் சுலபமாக அவர்களைக் கொன்றார்.
பதம் 3.2.31
விபன்னான் விஷ-பானேன நிக்ருஹ்ய புஜகாதிபம்
உத்தாப்யாபாயயத் காவஸ் தத் தோயம் ப்ரக்ருதி-ஸ்திதம்
விபன்னான்-பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்; விஷ – பானே’ன – விஷத்தைக் குடித்ததால்; நிக்ருஹ்யா—அடக்கி; புஜக-அதிபம் – ஊர்வனவற்றின் தலைவன்; உத்தாப்ய—வெளியே வந்தபின்; அபாயயத் – -குடிக்கச் செய்தார்; காவ:- பசுக்களை; தத்—அந்த; தோயம்—நீரை; ப்ரக்ருதி-இயல்பான; ஸ்திதம்—நிலையிலிருந்த,
யமுனை நதியின் ஒரு பாகம், ஊர்வனவற்றின் தலைவனால் (காளியனால்) விஷப்படுத்தப்பட்டதால், பிருந்தாவன வாசிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர். பகவான் அந்த ஸர்ப்ப ராஜனை நீருக்கடியில் தண்டித்து, அவனை அங்கிருந்து விரட்டிவிட்டார். பிறகு நதிக்குள்ளிருந்து வெளியில் வந்த அவர், பசுக்களை அந்த நீரைக் குடிக்கச் செய்து, அந்த நீர் மீண்டும் அதன் இயல்பான நிலைக்கு வந்துவிட்டதென்பதை நிரூபித்தார்.
பதம் 3.2.32
அயாஜயத் கோ-ஸவேன் கோப-ராஜம் த்விஜோத்தமை:
வித்தஸ்ய சோரு-பாரஸ்ய சிகீர்ஷன் ஸத்-வ்யயம் விபு:
அயாஜயத்-செய்யச்செய்தார்; கோ- ஸவேன -பசு வழிபாட்டினால்; கோப-ராஜம்: இடையர்களின் அரசர்; த்விஜ-உத்தமை: பிராமண பண்டிதர்களால்; வித்தஸ்ய-செல்வத்தின்; ச-தவிரவும்; உரு-பாரஸ்ய-பெரும் ஐசுவரியம்; சிகீர்ஷன்- செயற்பட விரும்பி; ஸத் – வ்யயம்-பயனுள்ள வகையில்; விபு :- மிகச்சிறந்த.
பரம புருஷராகிய கிருஷ்ணர் நந்த மகாராஜனின் செல்வச் சிறப்புடைய பொருளாதார பலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு பசுக்களை வழிபட விரும்பினார். அதேசமயம் சுவர்க்க ராஜனான இந்திரனுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும் விரும்பினார். இவ்வாறாக பிராமண பண்டிதர்களின் உதவியுடன் பசுக்களையும், மேய்ப்பு நிலத்தையும் வழிபடும்படி தம் தந்தைக்கு அவர் அறிவுரை கூறினார்.
பதம் 3.2.33
வர்ஷதீந்ரே வ்ரஜ கோபாத் பக்னமானே ‘திவிஹ்வல:
கோத்ர-லீலாதபத்ரேண த்ராதோ பத்ரானுக்ருஹ்ணதா
வர்ஷதி-நீரூற்றுவதில்; இந்ரே – சுவர்க்க ராஜனான இந்திரனால்; வ்ரஜ:- பசுக்களின் பூமி (பிருந்தாவனம்); கோபாத் பக்னமானே – அவமானப்படுத்தியதால் கோபங்கொண்டு; அதி-மிகவும்:விஹ்வல: – துன்பப்பட்டனர்; கோத்ர – பசுக்களுக்குரிய மலையை; லீலா- ஆதபத்ரேண- குடையாகத் தூக்கிய லீலையால்; தீராத: – காப்பாற்றப்பட்டனர்; பத்ர—அமைதியானவரே; அனுக்குஹ்ணதா-கருணையுடைய பகவானால்.
அமைதியான விதுரரே, மரியாதைக்கு இழுக்கு நேர்ந்ததால் தேவேந்திரன், பிருந்தாவனத்தில் இடைவிடாத மழைபொழியச் செய்தார். இதனால் பசுக்களின் பூமியான பிருந்தாவன வாசிகள் பெருந்துன்பத்திற்குள்ளாயினர். ஆனால் கருணையுள்ளம் படைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்தன மலையை குடையாகத் தூக்கி ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
பதம் 3.2.34
சரச்-சசி-கரைர் ம்ருஷ்டம் மானயன் ரஜனீ-முகம்
காயன் கல-பதம் ரேமே ஸ்த்ரீணாம் மண்டல-மண்டன:
சரத்-இலையுதிர் காலம்: சசி – சந்திரனின்; கரை:- ஒளியால் ம்ருஷ்டம்-பிரகாசமடைத்த; மானயன்-என்றெண்ணி; ரஜனீ-முகம் – இரவு நேரத்தில்; காயன்-பாடி: கல-பதம்-இனிய பாடல்களை;ரேமே- இன்பம் அனுபவித்தார்; ஸ்த்ரீணாம்— பெண்களின்; மண்டல- மண்டன:- பெண்களின் மத்தியிலுள்ள கவர்ச்சிப் பொருளாக.
நிலவொளியால் பிரகாசப்படுத்தப்பட்டிருந்த, மூன்றாவது பருவமான இலையுதிர் காலத்தின் ஓரிரவில், தமது இனிய பாடல்களால் பெண்களின் மத்தியில் கவர்ச்சிப் பொருளாக இருந்து பகவான் இன்பம் அனுபவித்தார்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நினைவு” எனும் தலைப்பைக் கொண்ட இரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.