அத்தியாயம் – 28
பக்தித் தொண்டைச் செயற்படுத்துவதில்
கபிலரின் அறிவுரைகள்
பதம் 3.28.1 : பரமபுருஷ பகவான் கூறினார்: என் அன்பு அன்னையே, ஓ அரசனின் புதல்வியே, இப்போது நான் உங்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யோக முறையை விளக்குவேன். இந்த முறையைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சி அடைய முடியும், பூரணமான உண்மையாகிய இறைவனது வழியை நோக்கி முன்னேற முடியும்.
பதம் 3.28.2 : ஒருவர் தனக்கென்று வரையறுக்கப்பட்ட கடமைகளை, தன் திறமைக்கு தக்கபடி நிறைவேற்ற வேண்டும், தனக்கென்று தரப்படாத கடமைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பகவானின் அருளால் அவர் அடையும் நன்மையைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். ஒருவர் ஆன்மீக குருவின் பாத கமலங்களை வழிபட வேண்டும்.
பதம் 3.28.3 : ஒருவர் மரபு சார்ந்த மதச்சடங்குகளை நிறுத்த வேண்டும், முக்திக்கு அழைத்துச் செல்லுபவற்றால் கவரப்பட வேண்டும். ஒருவர் குறைந்த அளவே உண்ண வேண்டும், எப்போதும் தனியாக இருக்க வேண்டும், அதனால் அவரால் வாழ்வின் உயர்த்த நிறைவினை அடைய முடியும்.
பதம் 3.28.4 : ஒருவர் அஹிம்ஸையையும், உண்மையையும் கடைப்பிடிக்க வேண்டும், திருட்டைத் தவிர்க்க வேண்டும், அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையானதை மட்டும் உடைமையாகக் கொண்டு திருப்தியடைய வேண்டும். அவர் புலன்நுகர் வாழ்வில் இருந்து விலகியிருத்தல் வேண்டும், துறவறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், தூய்மையாக இருக்க வேண்டும், வேதங்களைப் படிக்க வேண்டும், பரமபுருஷ பகவானின் தெய்வீக வடிவத்தை வழிபட வேண்டும்.
பதம் 3.28.5 : ஒருவர் வேறுபட்ட யோக நிலைகளைப் பயிற்சி செய்வதன் மூலம் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும், நித்ய தன்மையைப் பெறுதல் வேண்டும், உயிர்நிலையான காற்றைச் சுவாசிப்பதைக் கட்டுப்படுத்தி, புலனுக்கான பொறிகளிலிருந்து புலன்களைப் பின் இழுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு இதயத்தில் மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்.
பதம் 3.28.6 : உடலுக்குள் உயிர்நிலைக் காற்று சுழற்சியின் ஆறு வட்டங்களில் ஒன்றில் மனத்தையும் உயிர்நிலைக் காற்றையும் நிறுத்துதல், இவ்வாறு பரமபுருஷ பகவானின் உன்னதமான லீலைகளில் ஒருவரின் மனத்தை ஒருமுகப்படுத்துதல் மனத்தின் ஸமாதி அல்லது ஸமாதானம் என்று அழைக்கப்படும்.
பதம் 3.28.7 : இந்த முறைகளால் அல்லது வேறு எந்த உண்மையான முறையால், ஒருவர் எப்போதும் உலக இன்பத்தால் கவரப்படும் மாசடைந்த கடிவாளம் இடப்பெறாத் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு தன்னை, பரமபுருஷ பகவானின் நினைவில் நிறுத்த வேண்டும்.”
பதம் 3.28.8 : ஒருவருடைய மனத்தைக் கட்டுப்படுத்தி அமரும் நிலைகளை பழக்கப்படுத்திய பின்னர், ஒருவர் இருக்கையை, தனியான புனிதமான இடத்தில் விரித்து, அங்கு எளிமையான நிலையில் அமர்ந்து உடலை நிமிர்த்தி வைத்துக் கொண்டு, ஸ்வாஸத்தைக் கட்டுப்படுத்தப் பயிற்சி செய்ய வேண்டும்.
பதம் 3.28.9 : யோகி பின்வரும் முறையில் சுவாசித்து உயிர்நிலைக் காற்றின் வழியைச் சுத்தமாக்க வேண்டும். முதலில் அவர் மிக ஆழ்ந்து உள்ளிழுக்க வேண்டும். பின்னர் மூச்சைத் தக்க வைக்கவேண்டும், இறுதியாக வெளிவிட வேண்டும். அல்லது அந்த முறையை நேர்மாறாக்கலாம், யோகி முதலில் வெளிவிட்டு, பின்னர் மூச்சை வெளியில் தக்க வைத்து, இறுதியாக உள்ளிழுக்க முடியும். இவ்வாறு செய்யப்படும்போது மனம் உறுதி கொண்டு, வெளிப்புறத் தொல்லைகளிலிருந்து விடுபடுகிறது.
பதம் 3.28.10 : தங்கமானது நெருப்பில் இடப்பட்டு, காற்றால் விசிறப்படும் பொழுது எல்லா மாசுகளிலிருந்தும் விடுபடுவது போல, மூச்சுவிடும் பயிற்சிகளைச் செய்யும் யோகிகள் மிக விரைவில் எல்லா மனத் தொல்லைகளிலிருந்தும் விடுபடுகின்றனர்.
பதம் 3.28.11 : ப்ராணாயம முறையைப் பயிற்சி செய்வதால், ஒருவர் தன் உடல் நிலையில் உள்ள மாசை வேருடன் அழிக்க முடியும், மனத்தை ஒருமுகப்டுத்துவதால் ஒருவர் எல்லா பாவச் செயல்களிலிருந்தும் விடுபட முடியும். புலன்களை அடக்குவதால் ஒருவர் உலகியல் தொடர்பிலிருந்து தன்னை விடுவிக்க முடியும், பரம புருஷ பகவானைத் தியானிப்பதால் ஒருவர் உலகப் பற்றின் மூன்று குணங்களிலிருந்து விடுபட முடியும்.
பதம் 3.28.12 : இந்த யோகப் பயிற்சியால் மனம் முழுமையாகத் தூய்மை அடையும்பொழுது ஒருவர் பாதி மூடிய விழிகளுடன் மூக்கின் நுனியில் ஒருமுகப்படுத்தி, பரம புருஷ பகவானின் வடிவத்தைப் பார்க்க வேண்டும்.
பதம் 3.28.13 : பரமபுருஷ பகவான் மனமகிழ்ச்சி கொண்ட, தாமரை போன்ற முகமும் தாமரையில் உட்புறம் போன்ற சிவந்த கண்களும், நீலத் தாமரையின் இதழ்கள் போன்ற கருமை நிறம் கொண்ட உடலும் கெண்டவர். அவர் தன் மூன்று கரங்களில் சங்கும், சக்கரமும் கதையும் ஏந்தி உள்ளார்.
பதம் 3.28.14 : அவருடைய இடுப்பு, தாமரையின் இழைகளைப் போன்ற மஞ்சள் நிறமுடைய ஒளிவீசும் ஆடையால் மூடப்பட்டுள்ளது. அவர் மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் மச்சத்தைக் குறிப்பிடும் ஒரு சுருள் வெள்ளை முடி உள்ளது. ஒளிவீசும் கௌஸ்துப மணி அவர் கழுத்திலிருந்து தொங்குகிறது.
பதம் 3.28.15 : அவர் கழுத்தைச் சுற்றி கவர்ச்சியான முல்லைகளால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்திருக்கிறார், அந்த மாலையின் நறுமணத்தால் மயங்கிய தேனீக்கூட்டம், மாலையைச் சுற்றி ரீங்காரம் இடுகின்றது. அவர் மேலும் மிகவும் அழகிய முத்தாரம், மகுடம், ஜோடி வங்கிகள், கைவளைகள் மற்றும் கழல்கள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார்.
பதம் 3.28.16 : அவருடைய இடையிலும் இடுப்பிலும் இடையணி அணியப்பட்டு, அவர் பக்தரின் இதயமாகிய தாமரையில் நிற்கிறார், அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக விளங்குகிறார், அவருடைய அமைதியான தன்மை கண்களுக்கும் அவரை நோக்கும் பக்தர்களின் ஆத்மாக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பதம் 3.28.17 : பகவான் நிலைத்த, அழகுடையவர், அவர் ஒவ்வொரு கோளின் குடியிருப்பு வாசிகளால் வணங்கத்தகுந்தவர், அவர் எப்போதும் இளமையானவர், எப்போதும் அவருடைய பக்தர்களுக்குத் தன் ஆசிகளை வழங்க விரும்புகிறவர்.
பதம் 3.28.18 : பகவானின் புகழ் எப்போதும் பாடுவதற்குத் தகுதியானது, ஏனெனில் அவர் புகழ் அவருடைய பக்தர்களின் புகழை உயர்த்துகிறது. அதனால் ஒருவர் பரமபுருஷ பகவானின் மீதும், அவர் பக்தர்களைக் குறித்தும் தியானிக்க வேண்டும். ஒருவர் மனம் நிலையாக ஊன்றி நிற்கும் வரை பகவானின் என்றும் அழியாத வடிவத்தைக் குறித்து தியானம் செய்ய வேண்டும்.
பதம் 3.28.19 : இவ்வாறு யோகியானவர் பக்தித்தொண்டில் எப்போதும் கலந்து, பகவானை, நிற்பது, அசைவது, படுப்பது அல்லது அவரிடத்தில் அமர்வது ஆகிய நிலைகளில் கற்பனை செய்து காண்கிறார். ஏனெனில் பகவானின் லீலைகள் எப்போதும் அழகானவை, கவருபவை.
பதம் 3.28.20 : பகவானின் நிலயைான வடிவத்தில் யோகி தன்னுடைய மனத்தை ஈடுபடுத்துவதில் இறைவனது எல்லா உறுப்புகளின் மொத்த நோக்கத்தை மனதிற்கொள்ளாது பகவானின் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பிலும் தன் சிந்தனையைப் பதிய வைக்க வேண்டும்.
பதம் 3.28.21 : முதலில், இடியேறு, அங்குசம், கொடி, தாமரை, முதலிய குறிகளால் அலங்கரிக்கப்பட்ட பகவானின் பாத கமலங்களில் ஒரு பக்தர் மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும் இறைவனது அழகிய சிவந்த நகங்களின் ஒளி, நிலவின் வட்டத்தை ஒத்திருக்கிறது. அந்த ஒளி ஒருவரின் மனத்திலுள்ள அடர்ந்த இருளைப் போக்குகிறது.
பதம் 3.28.22 : பகவானின் பாதகமலங்களைக் கழுவும் நீரில் தன் மூல இருப்பிடத்தை உடைய கங்கையின் புனித நீரைத் தன் தலையில் தாங்குவதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட சிவபிரான், மேலும் ஆசி பெற்றவராகிறார். தியானிக்கும் பக்தரின் மனத்தில் சேர்த்து வைக்கப்பட்ட பாவமாகிய மலையைத் தூளாக்கி வீசி எறியும் இடியேறுகளாக பகவானது பாதங்கள் செயல்படுகின்றன. அதனால் ஒருவர் நெடுங்காலத்திற்கு பகவானின் பாதகமலங்களைத் தியானிக்க வேண்டும்.
பதம் 3.28.23 : யோகியானவர் எல்லாக் கடவுள்களாலும் வழிபடப்படும், மேலானவராகிய பிரம்மாவுக்கு அன்னையாகிய, அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மியின் செயல்களைத் தன் மனத்தில் இருத்த வேண்டும். அவள் உன்னதமாக பகவானின் கால்களைப் பிடித்துவிட்டபடி தொண்டு புரிவதைக் காணலாம். இந்தப் பணியினை மிகவும் கவனமாக அவள் செய்து வருகிறாள்.
பதம் 3.28.24 : அடுத்து, யோகி தன் மனத்தை எல்லாச் சக்தியின் சேமிப்பு இடமான பரமபுருஷ பகவானின் தொடைகளைப் பற்றிய தியானத்தில் நிறுத்த வேண்டும். பகவானின் தொடைகள் வெண்மை கலந்த நீல நிறத்தில், ஆளிவிதைப் பூவின் ஒளி போல் உள்ளன. பகவான் கருடனின் தோள்களில் தாங்கப்படும் போது அவை மிகவும் அழகாகத் தோன்றுகின்றன. மேலும் யோகி, பகவானின் கணுக்கால்கள் வரை நீண்ட பகட்டான மஞ்சள் பட்டாடையின் மேல் சுற்றப்பட்ட ஒட்டியாணம் உடைய வட்டமான இடுப்பை ஆழ்ந்து நினைக்க வேண்டும்.
பதம் 3.28.25 : பின்னர் யோகி அவர் வயிற்றின் நடுவில் அவருடைய சந்திரன் போன்ற உந்தியில் தியானிக்க வேண்டும். முழு அண்டத்தின் அடிப்படையான அவருடைய உந்தியிலிருந்து எல்லா வேறுபட்ட சூரிய மண்டலங்களையும் உள்ளடக்கிய தாமரைத்தண்டு மலர்ந்தது. அந்தத் தாமரை முதலில் படைக்கப்பட்ட உயிரினமான பிரம்மாவின் இருப்பிடமாகும். அதே விதத்தில், யோகி, பகவானின் மார்பை அலங்கரிக்கும் பால் வெள்ளை நிற முத்தாரங்களின் கதிர்களால் வெண்மையாகத் தோன்றுவதும், மிகவும் பகட்டான ஜோடி பச்சைக் கற்களை ஒத்திருப்பதுமான பகவானின் மார்புக் காம்புகளைத் தன் மனத்தில் ஒருமுகப்படுத்த வேண்டும்.
பதம் 3.28.26 : பின்னர் யோகியானவர் மஹாலக்ஷ்மி தேவியின் உறைவிடமாகிய பரமபுருஷ பகவானின் மார்பை தியானிக்க வேண்டும். பகவானின் மார்பு மனதிற்கு ஆன உன்னதமான இன்பத்தின் மூலமாகும். கண்களுக்கான முழு திருப்தியுமாகும். பின்னர் யோகி தன் மனத்தை முழு அண்டத்தாலும் வழிபடப்பெறும் பரமபுருஷ பகவானின் கழுத்தில் பதிக்க வேண்டும். பகவானின் கழுத்து, அவர் மார்பில் தொங்கும் கௌஸ்துப மணியின் அழகை மேம்படுத்த உள்ளது.
பதம் 3.28.27 : யோகி மேலும் பகவானின் நான்கு கரங்களைத் தியானிக்க வேண்டும். அவை இயற்கையின் பல்வேறு செயல்களைக் கட்டுப்படுத்தும் தேவர்களின் எல்லாச் சக்திகளுக்கும் ஆதாரமாகும். பின்னர் மந்தரமலை சுற்றும் போது தேய்ந்தால் மெருகேற்றப்பட்ட நகைகளில் யோகி கவனம் செலுத்த வேண்டும். அவர் பகவானின் சக்கரமாகிய சுதர்சன சக்கரத்தைச் சரியாக நினைக்க வேண்டும், அது மின்னும் ஒளியுடன் கூடிய ஆயிரம் ஆரங்களைக் கொண்டது, பகவானின் தாமரை போன்ற உள்ளங்கையில் உள்ள அன்னம் போல் தோன்றும் சங்கினையும் நினைக்க வேண்டும்.
பதம் 3.28.28 : யோகி அவருக்கு மிகவும் அன்பான, கௌமோதகீ எனப் பெயருடைய அவருடைய கதாயுதத்தைத் தியானிக்க வேண்டும். இந்தக் கதை பகைமையுடைய வீரர்களான அரக்கர்களைத் தகர்த்து அவர்களின் குருதியால் பூசப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள அழகிய மாலையின் மேல் கவனம் செலுத்த வேண்டும், அந்த மாலை எப்போதும் ரீங்காரமிடும் வண்டுகளால் குழப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள முத்தாரத்தைத் தியானிக்க வேண்டும். அது எப்போதும் அவரது பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள தூய உயிரினங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
பதம் 3.28.29 : யோகி பின்னர், ஆர்வமுடைய பக்தர்களுக்காக அன்பின் பொருட்டு இந்த உலகில் அவருடைய வேறுபட்ட வடிவங்களைத் தரும் பகவானின் தாமரை போன்ற முகத்தைத் தியானிக்க வேண்டும். அவரது மூக்கு எடுப்பாக உள்ளது; அவரது பளிங்கு போன்ற தெளிவான கன்னங்கள், அவரது ஒளிவீசும் முதலை வடிவத்தோடுகள் இங்கும் அங்கும் ஊசலாடுவதால் மின்னுகின்றன.
பதம் 3.28.30 : அதன்பின் யோகி இறைவனின் அருள் முடிகளால் அழகுபடுத்தப்பட்டதும், தாமரை போன்ற விழிகளாலும் நடமாடும் புருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான திருமுகத்தைத் தியானம் செய்கிறார், ரீங்கரிக்கும் வண்டுகளால் சூழப்பட்ட தாமரையும் இணையாயுள்ள மீன்களும் இத்திருமுகத்தின் விலாசங் கண்டு வெட்கும்.
பதம் 3.28.31 : யோகிகள் முழு பக்தியுடன் பகவானின் கண்களிலிருந்து அடிக்கடி வீசும் அன்புப் பார்வைகளை ஆழ்ந்து நினைக்க வேண்டும். ஏனெனில் அவரது பக்தர்களின் அச்சம் தரத்தக்க மூன்று வித வேதனைகளுக்கு அவை ஆறுதல் அளிக்கின்றன. இனிய புன்சிரிப்பினைத் தொடர்ந்துவரும், அவரது பார்வைகள் அதிகமான அருள் நிறைந்தவை.
பதம் 3.28.32 : ஒரு யோகி அனைவரும் தலைவணங்கும் பகவான் ஸ்ரீஹரியின் மிகுந்த இரக்கமுள்ள புன்சிரிப்பைத் தியானிக்க வேண்டும், அச்சிரிப்பு அந்த துயரத்தால் விளைந்த கண்ணிர்க் கடலை வற்றச் செய்கிறது. யோகி பகவானின் வளைந்த புருவங்களைத் தியானிக்க வேண்டும் ஏனெனில் அப்புருவங்கள் மன்மதனை மயக்கும் பொருட்டு இறைவனுடைய அந்தரங்க சக்தியால் இயக்கப்படுகின்றன. மன்மதன் மயங்குவதால் முனிவர்களுக்கு நன்மை ஏற்படுகிறது.
பதம் 3.28.33 : அன்பு மற்றும் பற்றும் நிறைந்த பக்தியுடன், யோகி தன் மனத்தின் அடியில் பகவான் விஷ்ணுவின் சிரிப்பைத் தியானிக்க வேண்டும். விஷ்ணுவின் சிரிப்பு மிகவும் கவரக்கூடியதால், அதைத் தியானிப்பது மிகவும் எளிதாகும். பகவான் சிரிக்கும் பொழுது, ஒருவரால் அவரது உதடுகளின் ஒளியால் சிவந்த நிறம் தரும் மல்லிகை மொட்டுகளை ஒத்த அவருடைய சிறிய பற்களைப் பார்க்க முடியும். தன் மனத்தை இதற்கென்றே ஒரு கட்டத்தில் ஒதுக்கிய பிறகு, யோகி மேலும் வேறு எதையும் பார்ப்பதற்கு ஆசைப்படக் கூடாது.
பதம் 3.28.34 : இந்த வழியைப் பின்பற்றுவதன் மூலம் யோகி படிப்படியாக பரமபுருஷ பகவானாகிய ஹரியிடம் தூய அன்பை வளர்க்கிறார். பக்தித் தொண்டில் அவருடைய முன்னேற்றத்தின் வழியில், மிகுந்த மகிழ்ச்சியால் அவர் உடல் மயிர்க்கூச்செறிகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த அன்பினால் விளைந்த கண்ணீரின் ஓடையில் குளிக்கிறார். படிப்படியாக, பகவானைக் கவர்வதற்கு அவர் பயன்படுத்திய மனமும் கூட, மீனைக் கவர்வதற்குப் போகும் தூண்டிலைப் போல, உலகியல் தொல்லையிலிருந்து மீள்கிறது.
பதம் 3.28.35 : மனம் எல்லா மாசிலிருந்தும் இவ்வாறு முழுவதும் விடுபட்டு உலகியல் குறிக்கோள்களிலிருந்து பற்று அறும் பொழுது, அது ஒரு விளக்கின் தீச்சுடரினைப் போன்றதாகும். அந்த நேரத்தில் மனம் உண்மையில் பகவானுடன் சரியாகப் பொருந்தி அவருடன் ஒன்றாக இணைகிறது அப்பொழுது அது உலக இயல்புகளினின்றும் வேறுபட்டுவிடுகிறது.
பதம் 3.28.36 : இவ்வாறு மிகவுயர்ந்த ஆன்மீக நிலையில் அமைந்த மனம் எல்லா ப்ரதிக்ரியைகளிலிருந்தும் விடுபடுகிறது, அதன் சொந்தப் புகழில் அமைகிறது, இன்பதுன்பங்களின் எல்லா கருத்துகளுக்கும் எல்லை கடந்ததாகிறது. அந்த நேரத்தில் யோகி பரமபுருஷ பகவானுடனான தன் உறவின் உண்மையை உணர்கிறார். அவர் தனக்குத் தானே கற்பித்துக் கொண்ட இன்ப துன்பங்களும் மற்றும் அதன் ப்ரதிக்ரியைகளும் அறியாமையின் விளைவாகிய போலி ஆளுமையால் ஏற்பட்டவை ஆகும் என்று கண்டறிகிறார்.
பதம் 3.28.37 : அவர் உண்மையான தனித்தன்மையை அடைந்துள்ளதால், முழுதும் உணர்ந்த ஆத்மா, மதுமயக்கமுடைய ஒருவர் தன் உடலில் ஆடை உள்ளதா இல்லையா என்று புரிந்து கொள்ள முடியாதது போல, பூதவுடல் எவ்வாறு அசைகிறது அல்லது செயல்படுகிறது என்பதை எண்ணிப்பார்க்க முடியாது.
பதம் 3.28.38 : அந்த விடுதலை பெற்ற யோகியின் உடல், புலன்களுடன், பரமபுருஷ பகவானால் பொறுப்பேற்றுக் கொள்ளப்படுகிறது. அதற்கென விதிக்கப்பட்ட செயல்கள் முடியும் வரை அந்த உடல் தனது வேலையைச் செய்கிறது. விடுதலை பெற்ற பக்தர், அவருடைய உடல் அமைப்பு நிலையில் விழித்துக் கொண்டு, இவ்வாறு யோகத்தின் மிகவுயர்ந்த முழுமையடைந்த நிலையாகிய ஸமாதியில் அமைந்து, பூதஉடலின் பலாபலன்களைத் தன்னுடையதாக ஏற்க மாட்டார். இவ்வாறு அவர் உடலின் செயல்களைக் கனவில் நடக்கும் செயல்களைப் போலக் கருதுகிறார்.
பதம் 3.28.39 : குடும்பம் மற்றும் செல்வத்தின் மீதுள்ள பற்றால், ஒருவர் மகனையும் மற்றொருவர் பணத்தையும் தன்னுடையதாக ஏற்றுக் கொள்கிறார்; பூதவுடலுக்கான பற்றால், ஒருவர் அது தன்னுடையது என்று நினைக்கிறார். ஆனால் உண்மையில், ஒருவர் தன் குடும்பம் மற்றும் செல்வமும் அவரிடமிருந்து வேறுபட்டன என்று புரிந்து கொள்ள முடிவது போல, விடுதலை பெற்ற ஆத்மா தானும் தன் உடலும் ஒன்று அல்ல என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
பதம் 3.28.40 : ஒளிவீசும் நெருப்புக்கொழுந்து தீப்பிழம்பு, தீப் பொறிகளில் இருந்தும், புகையிலிருந்தும் வேறுபட்டது. ஆனால் அவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. ஏனென்றால் அவை அதே எரியும் மரத்திலிருந்து பிறந்தவை.
பதம் 3.28.41 : பரப்பிரம்மன் என்று அறியப்படும் பரமபுருஷ பகவான் தனித்து உணருபவர் ஆவார். புலன்கள், ஐந்து மூலப்பொருட்கள் மற்றும் உணர்வு நிலையுடன் இணைந்த தனிப்பட்ட உயிரினம் அல்லது ஜீவாத்மாவிலிருந்து அவர் வேறுபட்டவர்.
பதம் 3.28.42 : ஒரு யோகி அதே ஆத்மாவை எல்லா வெளிப்பாடுகளில் காண வேண்டும். ஏனெனில் இருப்பவை எல்லாம் பரமனின் வேறுபட்ட சக்திகளின் வெளிப்பாடு ஆகும். இம்முறையில் பக்தர் எல்லா உயிரினங்களையும் வேறுபாடு இன்றிப் பார்க்க வேண்டும். அதுவே பரமாத்மாவின் உணர்ந்ததற்குரிய அடையாளம் ஆகும்.
பதம் 3.28.43 : நெருப்பு காடுகளில் வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுவது போல, இயற்கையின் குணங்களின் வேறுபட்ட சூழ்நிலைகளின் கீழ், தூய ஆத்மா தன்னை வேறுபட்ட உடல்களில் வெளிப்படுத்துகிறது.
பதம் 3.28.44 : இந்த உலக வெளிப்பாட்டின் காரணமாகவும் அதன் விளைவாகவும் இருக்கின்ற மாயையின் வெல்ல முடியாத மயக்கத்தை வென்ற பிறகு யோகி தன்னை அறிந்த நிலையில் இருக்க முடியும்.