அத்தியாயம் – 27
உலகின் இயல்பினைப் புரிந்து கொள்ளுதல்
பதம் 3.27.1 : பரமபுருஷ பகவானாகிய கபிலர் தொடர்ந்தார். உயிரினம் இவ்வாறு உலக இயற்கையின் குணங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் பொழுது, அவர் மாறாமலும் உரிமையைக் கோராமலும் இருப்பதால், கதிரவன் நீரில் அதனுடைய பிரதிபலிப்பிலிருந்து விலகி இருத்தல் போல, ஜடவுடலில் தங்கி வாழ்ந்தாலும், குணங்களின் மாற்றுச் செயல்களிலிருந்து பிரிந்திருக்கிறார்.
பதம் 3.27.2 : ஆத்மா ஜட இயற்கையின் மயக்கத்திலும் போலி ஆளுமையின் மயக்கத்திலும் இருக்கும் பொழுது, அவர் உடலைத் தானாக இனம் கண்டு ஜடச் செயல்களில் ஆழ்ந்து விடுகிறார். மேலும் தன்முனைப்பு எனும் அகங்காரத்தின் பாதிப்பினால் அவர் தன்னை எல்லாவற்றுக்கும் உரிமையாளர் ஆக நினைக்கிறார்.
பதம் 3.27.3 : அதனால் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா வாழ்வின் வேறுபட்ட உயிரினங்களில், உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஆகிய உயிரினங்களில் ஜட இயற்கையின் குணங்களோடு அது கொண்ட தொடர்பினால் கூடுவிட்டுக் கூடு பாய்கிறது. அது பூவுலகச் செயல்களிலிருந்து விடுபட்டால் அன்றி, அதனுடைய தவறான செயலால் அது இந்த நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பதம் 3.27.4 : உண்மையில் ஒரு வாழும் வ்யக்தி மண்ணுலக வாழ்வுக்கு இருப்பின் அப்பால் உள்ளார். ஆயினும் ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் அவருடைய மனநிலையால், அவருடைய உலகியல் சார்ந்த நிலை முடிவுறவில்லை. கனவில் இருப்பதைப் போல, அவர் இவ்வுலகின் எல்லா விதமான தீங்குகளாலும் பாதிக்கப்படுகிறார்.
பதம் 3.27.5 : மன்னுலக இன்பத்தில் பற்றுக் கொண்டு மாசடைந்து கிடக்கும் உணர்வு நிலையை இக உலகப் பற்றின்றி மிகவும் தீவிர இறை பக்தித் தொண்டில் ஈடுபடுத்தவது ஒவ்வொரு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவின் கடமையாகும். அப்போதுதான் அவருடைய மனம் மற்றும் உணர்வு நிலை முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
பதம் 3.27.6 : கட்டுப்படுத்தும் யோக முறையினைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவன் இறைபக்தி உள்ளவராக வேண்டும் என்னைப் பற்றிக் கேட்பதன் மூலமும், என் நாமத்தை உச்சரிப்பதன் மூலமும் கலப்படமற்ற பக்தி தொண்டிற்கு ஒவ்வொருவரும் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும்.
பதம் 3.27.7 : பக்திக் தொண்டை நிறைவேற்றுவதில், எல்லா உயிரினத்தையும் சமமாகவும் யாரிடமும் பகையின்றியும், ஆயினும் யாரிடமும் நெருங்கிய தொடர்பின்றியும் பார்க்க வேண்டும். ஒருவர் மனத் துறவைக் கடைப்பிடிக்க வேண்டும், அமைதியாக, பரமபுருஷ பகவானிடம் முடிவுகளை விட்டுவிட்டு, அவருடைய என்றும் அழியாத தொண்டுகளை நிறைவேற்ற வேண்டும்.
பதம் 3.27.8 : ஒரு பக்தர் அதிகத் தொல்லையின்றிச் சம்பாதிக்கும் அளவான வருவாயினைக் கொண்டு திருப்தி அடையவேண்டும். தேவையான அளவை விட அதிகமாக அவர் உண்ணக் கூடாது. தனித்த இடத்தில் அவர் வசிக்க வேண்டும் எப்போதும் தெய்வ சிந்தனையுடன், அமைதியாக, நட்பாக, அன்புடன், தன்னை உணர்ந்த அடக்கத்தோடு இருத்தல் வேண்டும்.
பதம் 3.27.9 : உணர்வு, பொருள் ஆகியவற்றை அறிவதன் வழி ஒருவரது பார்க்கும் ஆற்றல் அதிகரிக்கப்பட வேண்டும், ஒருவர் வேலை இல்லாமல் தன்னை உடலுடன் இனம் கண்டு, உடல் தொடர்புகளால் கவரப்படுதல் கூடாது.
பதம் 3.27.10 : ஒருவர் உலகியல் நிலைகளுக்கு அப்பாற்பட்டு, எல்லை கடந்த நிலையில் இருக்க வேண்டும், வாழ்வின் பிற கருத்துகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். இவ்வாறு போலி அகங்காரத்திலிருந்து விடுபட்டு உணர்ந்து, ஒருவர் வானில் சூரியனைப் பார்ப்பது போல தன்னை உணர்ந்து கொள்ளவேண்டும்.
பதம் 3.27.11 : போலி அகங்காரம் இருப்பினும் அதன் எதிரொலியாக வெளிப்படுபவரும், எல்லாம் கடந்த தத்துவமாக விளங்குபவரும் ஆகிய முழுமையான பரமபுருஷ பகவானை ஒரு வீடுபேறு அடைந்த ஆத்மா உணர்கிறது. பருப்பொருளாகிய எதனையும் தாங்குபவரும், அனைத்திலும் ஊடுருவி இருப்பவரும் அவரே ஆவார். இரண்டாவது இல்லாமல் முழுமையானவர், அவர் மாய சக்தியின் கண்களாவார்.
பதம் 3.27.12 : கதிரவன் வானில் இருந்தாலும், தண்ணீரில் பிரதிபலிக்கும் போது உணரப்படுதல் போலவும், மீண்டும் அறையின் சுவரில் பிரதிபலிக்கும் போது உணரப்படுதல் போலவும் பகவான் இருப்பதை நாம் தெளிவாக உணர முடியும்.
பதம் 3.27.13 : தன்னை உணர்ந்த ஆத்மா இவ்வாறு முதலில் மூன்றுவித அகங்காரத்திலும், பின்னர் உடலிலும், புலன்களிலும், மனத்திலும் பிரதிபலிக்கிறது.
பதம் 3.27.14 : ஒரு பக்தர் ஐம்புலப் பொருட்கள், மண்ணுலக இன்பத்திற்கு ஆன பொருட்கள், புலன்கள், மனம் மற்றும் அறிவுக் கூர்மை முதலியவற்றில் கலந்து இருப்பதாகத் தோன்றினாலும், அவர் விழித்திருப்பவராக, போலி அகங்காரத்திலிருந்து விடுபட்டவராகப் புரிந்து கொள்ளப்படுகிறார்.
பதம் 3.27.15 : பார்க்கும் நிலையில் உயிரினம் தன் இருப்பை ஒளிமயமானதாக உணரமுடியும். ஆனால் ஆழ்ந்த உறக்க நிலையில் தொலைத்து, துன்பத்தை உணர்ந்து, தன்னை இழந்தவராக நினைக்கும் ஒருவரைப் போல, தன்னையும் இழந்தவராகத் தவறாக நினைக்கிறார்.
பதம் 3.27.16 : பக்குவத்தினால் ஒருவர் தன் தனித்தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறபொழுது, போலி அகங்காரத்தின் கீழ் அவர் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை அவருக்கு வெளிப்படுகிறது.
பதம் 3.27.17 : ஸ்ரீ தேவஹூதி வினவினாள்: என் அன்பு பிராம்மணரே, பருப்பொருளாகிய இயற்கை எப்போதும் ஆத்மாவிற்கு விடுதலை தருகிறதோ? ஒன்று மற்றொன்றை நிலையாக பற்றி நிற்பதால் அவற்றின் பிரிவு எப்படி நிகழமுடியும்?
பதம் 3.27.18 : பூமியின் நறுமணமும் நீரின் சுவையும் தனித்தனியாக இல்லாதது போல, அறிவுக்கூர்மையும் உணர்வும் தனியாக இருக்கமுடியாது.
பதம் 3.27.19 : அதனால் அனைத்துச் செயல்களையும் அமைதியாகச் செய்யினும், அவர் மீது உலகஇயற்கை செயல்பட்டு, அவரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் வரை, ஆத்மாவுக்கு எவ்வாறு விடுதலை இருக்க முடியும் ?
பதம் 3.27.20 : கட்டுப்பாட்டைப் பற்றிய பயம் அடிப்படைத் தத்துவங்களில் கேள்வியாலும் மனக் கற்பனையாலும், உலகியல் தளை தவிர்க்கப்பட்டாலும், அதன் காரணம் முடிவுறாததால், அது இன்னும் மீண்டும் தோன்றித் தொல்லை கொடுக்கலாம்.
பதம் 3.27.21 : பரமபுருஷ பகவான் கூறினார்: ஒருவர் என்னைப்பற்றி அல்லது என்னிடமிருந்து நெடுங்காலத்திற்குக் கேட்பதன் மூலமும், என்னிடம் பக்தித் தொண்டைத் தீவிரமாகச் செய்வதன் மூலமும் வீடுபேறு பெறமுடியும். இவ்வாறு ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதால், எதிர்ச்செயல் இருக்காது, அவர் பருப்பொருளின் மாசிலிருந்து விடுதலை அடைவார்.
பதம் 3.27.22 : இந்த பக்தித் தொண்டு எல்லாம் கடந்த தத்துவ நோக்குடன் முழுமையான அறிவில் ஆற்றலுடன் நிகழ்த்தப்படவேண்டும். ஒருவர் தன்னை உணரும் ஆற்றலில் உறுதியாக நிலைக்கும் பொருட்டு, துறவு கொண்டு தவத்தில் ஈடுபட்டு, அறிவார்ந்த யோகத்தை நிகழ்த்த வேண்டும்.
பதம் 3.27.23 : மண்ணுலக இயற்கை உலகின் உயிரினத்தைப் பாதித்துள்ளது இவ்வாறு உயிரினம் எப்போதும் கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் இருப்பது போல் உள்ளது. ஆனால் நெருப்பை உண்டாக்கும் மரக்குச்சிகளே நெருப்புக்கு இரையாவதைப் போல, பக்தித் தொண்டைத் தீவிரமாக நிறைவேற்றும் முறையால், இந்த மண்ணுலக பாதிப்பும் நம்மை விட்டு நீங்கிவிடும்.
பதம் 3.27.24 : பூவுலக இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் தனது ஆசையின் குற்றத்தை உணர்வதாலும் பின்னர் அதை விட்டு விடுவதாலும் உயிரினம் விடுதலை அடைந்து, தன் சொந்தப் புகழில் நிற்கின்றது.
பதம் 3.27.25 : கனவு நிலையில் ஒருவரின் உணர்வுகள் ஏறக்குறைய அடங்கியுள்ளன. இப்போது ஒருவர் அதிக மங்கலமற்ற பொருட்களைக் கனவில் பார்க்கிறார், ஆனால் அவர் விழித்திருக்கும் போதும், முழுதும் உணர்வில் இருக்கும் பொழுதும் அந்த மங்கலமற்ற பொருட்கள் அவரைத் தடுமாறச் செய்ய இயலாது.
பதம் 3.27.26 : அறிவொளி பெற்ற ஆத்மாவை, இது இவ்வுலகச் செயல்களில் ஈடுபட்டிருந்த போதிலும் மண்ணுலகத்தின் பாதிப்பு துன்புறுத்த இயலாது, ஏனென்றால் அந்த ஆத்மா பரம சத்தியத்தின் உண்மையை அறிவார், அவர் மனம் பரம புருஷ பகவானிடம் என்றும் நிலைத்திருக்கும்.
பதம் 3.27.27 : இவ்வாறு ஒருவர் பலப்பல பிறவிகளில் பலப்பல ஆண்டுகளுக்கு, தன்னை அறிதலிலும் பக்தித் தொண்டிலும் ஈடுபடும் பொழுது, அவர் பிரம்மலோகம் எனப்படும் மிகவுயர்ந்த கோள்வரை எந்த உலகக் கோள்களிலும் அனுபவிக்க ஆசையற்றவர் ஆகிறார். அவர் இறை உணர்வு நிலையில் முழு வளர்ச்சியடைந்தவர் ஆகிறார்.
பதங்கள் 3.27.28 – 3.27.29 : என் பக்தர் என்னுடைய எல்லையற்ற கருணையினால் உண்மையில் தன்னை அறிந்தவர் ஆகிறார். இவ்வாறு எல்லாச் சந்தேகங்களிலிருந்தும் விடுபடும்பொழுது, அவர் அவருக்கென்று விதிக்கப்பட்ட இருப்பிடத்தை நோக்கி நிலையாக முன்னேறுகிறார், அந்த இருப்பிடம் கலப்படமற்ற இன்பத்தில் என் ஆன்மீகச் சக்தியின் நேரடிப் பாதுகாப்பில் உள்ளது. அதுவே உயிரினத்தின் இறுதியான முழுமையான குறிக்கோளாகும். தற்போதைய பூதஉடலை விட்டபிறகு, அறிவராகிய பக்தர் அந்த தெய்வீகமான இருப்பிடம் செல்கிறார், அங்கிருந்து ஒருபோதும் மீண்டு வருவதில்லை.
பதம் 3.27.30 : முழுமையடைந்த யோகியின் கவனம் உலகியல் சக்தியின் வெளிப்பாடுகளான, அறிவார்ந்த ஆற்றல்களின் சாதாரணச் செயல்களால் மேலும் கவரப்படாதபொழுது, என்னை நோக்கிய அவர் முன்னேற்றல் எல்லையற்றதாக ஆகிறது, இதனால் மரணத்தின் ஆற்றல் அவரை மிஞ்சி ஆட்கொள்ள முடியாது.