அத்தியாயம் – 26
ஜட இயற்கையின் அடிப்படைத் தத்துவங்கள்
பதம் 3.26.1 : பரமபுருஷ பகவானாகிய கபிலர் தொடர்ந்தார்: என் அன்பு அன்னையே, இப்போது நான் உங்களுக்கு நிறைவான உண்மையின் வேறுபட்ட வகைகளை வர்ணிக்கிறேன், அதை அறிந்த எவரும் மண்ணுலக இயற்கையின் இயல்புகள் மற்றும் அவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட முடியும்.
பதம் 3.26.2 : தன்னை அறியும் கலையில் ஒருவன் பெறும் ஞானமே இறுதியும் முழுமையானதும் ஆகும். அத்தகைய அறிவினால் மண்ணுலகின் மீது உள்ள பற்றின் முடிச்சுகள் அறுக்கப்படுகின்றன. அந்த ஞானத்தின் சிறப்பை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.
பதம் 3.26.3 : பரம புருஷ பகவானே பரமாத்மா, அவருக்குத் தொடக்கம் இல்லை. அவர் இயற்கையின் திடகுணங்களைக் கடந்த தெய்வீகமானவர் இந்த திடவுலகின் இருப்பிற்கு அப்பாற்பட்டவர். அவர் எங்கும் உணரக்கூடியவர் ஏனென்றால் அவர் தானாக ஒளிர்பவர். அவருடை தானே ஒளிரும் ஒளியால் அனைத்துப் படைப்பும் பாதுகாக்கப்படுகின்றன.
பதம் 3.26.4 : விஷ்ணுவுடன் தொடர்புடைய இயற்கையின் ஜடகுணங்களால் நிரம்பிய நுட்பமான, திடசக்தியை, சிறந்ததெல்லாவற்றிலும் சிறந்த பரமபுருஷ பகவான் தன்னுடைய திருவிளையாடலாக ஏற்றுக் கொண்டார்.
பதம் 3.26.5 : தன்னுடைய மூன்றுவித குணங்களால் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டு ஜடவுலக இயற்கையானது வாழும் உயிரினங்களைப் படைக்கிறது. இதைப் பார்த்த உயிரினங்கள் அறிவை மூடும் மாயா சக்தியின் தோற்றத்தால் மயக்கப்படுகின்றன.
பதம் 3.26.6 : தன்னுடைய மறதியினால், தெய்வீகமான உயிரினம் ஜடசக்தியின் பாதிப்பை தன் செயல்களின் களமாக ஏற்றுக் கொள்கிறான். இவ்வாறு தூண்டப்பட்டு அவன் செயல்களைத் தானே செய்வதாக தவறாக எண்ணுகிறான்.
பதம் 3.26.7 : உலகியலைப்பற்றிய உணர்வுநிலையே ஒருவரின் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வுக்குக் காரணமாகும். அதில் மண்ணுலக சக்தியால் வாழும் உயிரினத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆத்மா எதுவும் செய்யாவிட்டாலும் அந்தச் செயல்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், தனியொரு ஆன்மா கட்டுப்பட்ட வாழ்வால் பாதிக்கப்படுகிறான்.
பதம் 3.26.8 : கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவின் பருவுடல் மற்றும் புலன்கள், புலன்களை அடக்கி ஆளும் தெய்வங்கள் மற்றும் தேவர்கள் ஆகியவற்றின் உண்மைக்கு காரணம் இயற்கையே ஆகும். இது படித்த மனிதர்களால் புரிந்து கொள்ளப்பட்டது. ஆத்மாவின் இன்ப, துன்ப உணர்வுகள் இயற்கையால் எல்லை கடந்த தத்துவமான இருக்கும், அந்த ஆத்மாவாலேயே விளைவிக்கப்படுகின்றன.
பதம் 3.26.9 : தேவஹுதி கூறினாள்: முழுமுதற்கடவுளே தயவுசெய்து பரமபுருஷ பகவானின் மற்றும் அவருடைய சக்திகளின் குணநலன்களை விளக்குங்கள். ஏனென்றால் இவை இரண்டும் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் இருக்கும் படைப்பின் காரணங்களாகும்.
பதம் 3.26.10 : பரமபுருஷ பகவான் கூறினார்; மூன்று குணங்களின் தெளிவில்லாத நிலைத்த இணைப்பு உலக வெளிப்பாட்டின் நிலைக்கும் காரணம் ஆகும். அது ப்ரதானம் எனப்படுகிறது. ஒரு பொருள் வெளிப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது அது பிரகிருதி எனப்படுகிறது.
பதம் 3.26.11 : முழு மொத்த மூலப் பொருள்களான, ஐந்து மொத்த மூலப் பொருட்கள், ஐந்து நுட்பமான பொருட்கள், நான்கு உள்புலன்கள், அறிவைப் பெறுவதற்கான ஐந்து புலன்கள் மற்றும் செயலின் ஐந்து வெளிப்புறப் பொறிகள், இவை அனைத்தும் பிரதானம் என்று அறியப்படும்.
பதம் 3.26.12 : நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எனும் ஐந்து முழு மூலப் பொருட்கள் உள்ளன. ஐந்து நுட்பமான மூலக்கூறுகளாக மணம், சுவை, நிறம், தொடுஉணர்ச்சி மற்றும் ஒலி முதலியனவும் உள்ளன.
பதம் 3.26.13 : அறிவைப் பெறுதற்குரிய புலன்களும் செயலுக்கான பத்துப் பொறிகளும் உடலில் உள்ளன. கேட்கும் புலன், சுவைப்புலன், தொடு புலன், பார்க்கும் புலன்; முகரும் புலன், பேசுவதற்குச் செயல்படும் பொறி, வேலை செய்யச் செயல்படும் பொறிகள், பயணம் செய்ய, உற்பத்தி செய்ய மற்றும் வெளியேற்றம் செயல்படுவதும் ஆக மொத்தம் பத்துப் பொறிகள் ஆகும்.
பதம் 3.26.14 : மனம், புத்திக்கூர்மை, ஆளுமை, மாசுபடிந்த உணர்வுநிலை எனும் உள்ளார்ந்த நுட்பமான நான்கு சூட்சுமப் புலன்களும் நம்மால் உணரப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட குண நலன்களைச் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றின் செயற்பாடுகளும் ஒன்றுக் கொன்று வேறுபட்டவையாகும்.
பதம் 3.26.15 : இவை எல்லாம் தகுதி வாய்ந்த பிரம்மனாகக் கருதப்படுகின்றன. நேரம் என்று அறியப்படும் மூன்று காலங்களும் கலக்கும் மூலப் பொருள் இருபத்தைந்தாம் மூலக்கூறு என்று கணக்கிடப்படுகிறது.
பதம் 3.26.16 : பரமபுருஷ பகவானின் பாதிப்பு காலத்தின் விளைவில் உணரப்படுகிறது, அது ஜட இயற்கையைத் தொடர்பு கொண்டு ஏமாற்றப்பட்ட ஆத்மாவின் போலி ஆளுமையால் மரண பயம் கொடுக்கும் தன்மையது.
பதம் 3.26.17 : என் அன்பு அன்னையே, ஒ ஸ்வயம்புவ மனுவின் மகளே, நான் விளக்கியது போல, காலக்கூறு என்பதே பரமபுருஷ பகவான் ஆவார். அவரிடமிருந்து, நடுநிலையான, வெளிப்படுத்தாத இயற்கையின் பரபரப்பினால் படைப்பு தொடங்குகிறது.
பதம் 3.26.18 : பரமபுருஷ பகவான் அவருடைய ஆற்றல்களை வெளிப்படுத்துவதன் மூலம், வெளியில் காலமாகவும் உள்ளே தன்னைப் பரமாத்மாவாகவும் வைத்துக் கொண்டு, இந்த எல்லா வேறுபட்ட மூலக் கூறுகளையும் சரிசெய்கிறார்.
பதம் 3.26.19 : பரமபுருஷ பகவான் தன் உள்ளார்ந்த வீரியத்தால் இயற்கையைக் கருவுறச் செய்த பிறகு, இயற்கை, ஹிரண்மய என்று அறியப்படும் பர உலக அறிவுக் கூர்மையின் மொத்தத்தைப் பெற்றெடுக்கிறது. ஐட இயற்கையில் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களின் விதியினால் அவள் கலங்குவதால் இது நடைபெறுகிறது.
பதம் 3.26.20 : இவ்வாறு, பல்வேறு வகைப்பொருள்களை வெளிப்படுத்திய பிறகு, தன் உள்ளே எல்லா அண்டங்களையும் அடக்கியதும், எல்லா வித தெய்வீக வெளிப்பாடுகளின் ஆதாரமானதும், அழிக்கப்படும் நேரத்தில் அழியாமல் இருப்பதும் ஒளியை மூடியுள்ள இருளை விழுங்குகிறது.
பதம் 3.26.21 : ஸத்வ குணம் பரமபுருஷ பகவானைப் புரிந்து கொள்ளும் தெளிவான அமைதியான நிலை, பொதுவாக வாசுதேவர் அல்லது உணர்வு நிலையென்று அழைக்கப்படும் ஸத்வ குணம் மஹத் தத்வத்தில் வெளிப்படும்.
பதம் 3.26.22 : மஹத் தத்துவத்தின் வெளிபாட்டிற்குப் பின்னர், இந்தத் தோற்றங்கள் ஒரே நேரத்தில் தோன்றும். இயல்பான பூமியுடன் தொடர்பு கொள்ள வரும் முன் தன் இயல்பான தண்ணீர் தூய்மையாக, இனிமையாக, கலங்காமல் உள்ளது. அதுபோல தூய உணர்வு நிலை அல்லது மனச்சான்று என்பது அமைதி, தெளிவு, மாறுபடாத சிந்தனை ஆகிய இந்த இயல்புகளைத் தன்னகத்தே கொண்டது.
பதங்கள் 3.26.23 – 3.26.24 : லௌகீகத் தற்பெருமை பகவானின் சக்தியிலிருந்து மலர்ந்த மஹத் தத்வத்திலிருந்து ஊற்றெடுக்கிறது தற்பெருமை ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று விதங்களின் செயலாற்றலுடன் இயங்கக்கூடியது. இந்த மூன்று விதமான ஜட ஆளுமையிலிருந்து, மனம், உற்றுப்பார்க்கும் புலன்கள், செயல் பொறி மற்றும் முழு மூலப் பொருட்கள் மலர்கின்றன.
பதம் 3.26.25 : முழு மூலப்பொருட்கள் புலன்கள் மற்றும் மனம் ஆகியவற்றுக்கு ஆதாரமான மூன்றுவித அகங்காரம் மேற்கூறியவற்றோடு ஒருங்கு வைத்து எண்ணத்தகுவது. ஏனென்றால் அதுவே அவற்றின் காரணமாகும். ஆயிரம் தலைகளுடன் கூடிய ப்ரத்யக்ஷமான பகவான் அனந்தர் என்ற கூறப்படும் ஸங்க்ர்ஷணர் எனும் பெயரால் அது அறியப்படுகிறது.
பதம் 3.26.26 : இந்தப் போலித்தற்பெருமை செயலாற்றுபவராகவும், ஒரு கருவியாகவும், விளைவாகவும் வர்ணிக்கப்படுகிறது. இது எவ்வாறு ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களால் பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, இது மேலும், அமைதியாக, சுறுசுறுப்பாக அல்லது சோர்ந்து இருப்பதாகவும் வர்ணிக்கப்படுகிறது.
பதம் 3.26.27 : ஸத்வத்தின் போலியான தற்பெருமையிலிருந்து, மற்றொரு மாற்றம் ஏற்படுகிறது. ஆசைகளை உண்டுபண்ணக்கூடிய எண்ணங்கள் மற்றும் பிரதிபலிப்புகள் கொண்ட மனம் அல்லது உள்ளம் இதிலிருந்து மலர்கிறது.
பதம் 3.26.28 : உயிரினத்தின் மனம் புலன்களின் அரசர் எனப்படும் பகவான் அநிருத்தரின் பெயரால் அறியப்படுகிறது. அவர் இலையுதிர்க் காலத்தில் மலரும் தாமரையை ஒத்த கருநீல நிறமுடைய தோற்றம் கொண்டவர் அவர் யோகிகளாலேயே காலப்போக்கில் தான் அறியப்படுகிறார்.
பதம் 3.26.29 : ரஜோ குணத்தின் தற்பெருமை மாற்றப்பட்டு, ஓ நல்ல ஒழுக்கமுடைய சீமாட்டியே அறிவு பிறக்கிறது. அறிவின் வேலைகள் என்னவென்றால், பார்வைக்கு வரும் பொழுது பொருள்களின் இயல்பினை உறுதிப்படுத்த உதவி செய்வதும், புலன்களுக்கு உதவி புரிவதும் ஆகும்.
பதம் 3.26.30 : சந்தேகம், தவறாகப் புரிந்து கொள்ளுதல், சரியாகப் புரிந்து கொள்ளுதல், நினைவாற்றல், உறக்கம், ஆகியன அனைத்தும் அறிவுக் கூர்மையின் குறிப்பிட்ட பண்பு நலன்களாகக் கூறப்படுகின்றன.
பதம் 3.26.31 : தற்பெருமையானது ரஜோ குணத்தில் இரண்டு விதப் புலன்களை உருவாக்குகிறது அறிவைப் பெறுவதற்கான புலன்கள் மற்றும் அதனைச் செயற்படுத்தும் புலன்கள் ஆகியவை ஆகும். செயற்படுத்தும் புலன்கள் உயிர்நிலையான சக்தியைச் சார்ந்தவை, அறிவைப் பெறுவதற்கான புலன்கள் அறிவுக் கூர்மையைச் சார்ந்தவை.
பதம் 3.26.32 : தாமசகுணத்தில் காணப்படும் ஆளுமைத்தன்மை பரமபுருஷ பகவானின் பாலுணர்வு சக்தியால் கலங்கும் பொழுது, நுட்பமான ஒலி வெளிப்படுகிறது. அந்த ஒலியிலிருந்து விண் வெளியும் கேட்கும் புலனும் வெளிப்படுகிறது.
பதம் 3.26.33 : படித்தவர்கள், உண்மையான அறிவு உடையவர்கள் ஒலியானது ஒரு பொருள் பற்றிய எண்ணத்தைத் தருவதாக விளக்குவார்கள், பேச்சாளர் இருப்பதை நமது பார்வையிலிருந்து மறைந்தாலும் வானின் நுட்பமான வடிவத்தை ஒலி உருவாக்கும் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
பதம் 3.26.34 : காற்று புலன்கள் உள்ளம் ஆகியவற்றின் உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையான இயக்கத்தினையே விண்வெளிப் பொருள்களின் செயல்களும் இயல்புகளும் தம்முள் கட்டுப்படுத்தியுள்ளன என்று கூறலாம்.
பதம் 3.26.35 : ஒலியிலிருந்து தோன்றுகின்ற விண்வெளி இயக்கத்திலிருந்து காலத்தின் தாக்கத்தினால் அடுத்த மாற்றம் ஏற்படுகிறது பின்னர் நுட்பமான மூலப்பொருளான தொடுவுணர்ச்சி, காற்று, மற்றும் தொடு புலன் ஆகியவை வெளிப்படுகின்றன.
பதம் 3.26.36 : காற்றின் நுட்ப வடிவமாக வர்ணிக்கப்படும் தொடு உணர்ச்சியின் தனிப்பட்ட இயற்குணங்கள்; மென்மை, கடினத்தன்மை, குளிர்ச்சி மற்றும் வெப்பம் ஆகியனவாகும்.
பதம் 3.26.37 : காற்றின் செயலானது அசைவுகளிலும், கலத்தலிலும், ஒலி உள்ளிட்ட பிற புலன்கள் உற்று நோக்கும் பொருட்களை அறிந்து கொள்ளுவதிலும் புலன்களும் சரியாக வேலை செய்வதற்கான சூழ்நிலையைத் தருவதிலும் வெளிப்படுகிறது.
பதம் 3.26.38 : காற்றின் செயலெதிர்ச் செயல்களால் மற்றும் தொடு உணர்ச்சிகளால், விதியின்படி ஒருவர் வேறுபட்ட வடிவங்களைப் பெறுகிறார். அந்த வடிவங்களின் தோற்றத்தால், தீ ஏற்படுகிறது. வண்ணத்தில் வேறுபட்ட வடிவங்களைக் கண்பார்க்கிறது.
பதம் 3.26.39 : என் அன்பு அன்னையே, எந்தப்பொருளின் வடிவமும் இயல்பும், அதனுடைய பரப்பு, தரம் மற்றும் தனித்துவம் இவற்றால் புரிந்து கொள்ளப்படுகின்றன. நெருப்பின் வடிவம் அதன் ஒளியால் புரிந்து கொள்ளப்படுகிறது.
பதம் 3.26.40 : ஒளியினாலும் சமைத்தல், ஜீரணித்தல், குளிர்ச்சியை அழித்தல், ஆவியாக மாற்றுதல் ஆகிய ஆற்றலாலும், பசி, தாகம், உண்ணுதல், குடித்தல் ஆகிய இவற்றிற்கு வழி வகுப்பதாலும் நெருப்பினது ஆற்றல் உணரப்படுகிறது.
பதம் 3.26.41 : நெருப்பு மற்றும் பார்க்கும் உணர்ச்சியின் செயலெதிர்ச் செயலால், நுட்பமான மூலப்பொருளான சுவை தெய்வ அனுகூலத்தால் மலர்கிறது. சுவையிலிருந்து நீர் உருவாக்கப்படுகிறது. சுவையை அறியும் நாக்கும் வெளிப்படுகிறது.
பதம் 3.26.42 : தொடக்க நிலையில் ஒன்றாக இருந்த போதிலும், சுவையானது பிற பொருள்களின் தொடர்பினால்; துவர்ப்பு, இனிமை, கசப்பு, காரம், புளிப்பு, உப்பு என பல்வேறு வகை ஆகிறது.
பதம் 3.26.43 : பிற பொருட்களை ஈரமாக்கும் அதன் தன்மையில் பல்வேறு கலவைகளை உறையும்படி செய்தலால், திருப்தி தருவதால், வாழ்வைப் பாதுகாத்தலால், பொருட்களை மென்மையாக்குவதால், வெப்பத்தைப் போக்குவதால், நீர்த் தேக்கங்களுக்கு இடைவிடாமல் தன்னை வழங்குவதால், தணிக்க முடியாத தாகத்தைத் தீர்த்துப் புத்துணர்ச்சி தருவதால் நீரின் சிறப்பியல்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
பதம் 3.26.44 : சுவைப் புலணுர்வுடன் நீரின் கலப்பினால் ஒரு மேலான ஏற்பாட்டின் கீழ் நுட்பமான மூலப் பொருளான நறுமணம் மலர்கிறது. அங்கிருந்து இந்த மண்ணும், நாம் பல்வேறுபட்ட வழிகளில் அனுபவிக்கும் மண்ணின் நறுமணமும் மற்றும் முகரும் புலனும் வெளிப்பட்டன.
பதம் 3.26.45 : மணம், ஒன்றானாலும் தொடர்புடைய பொருட்களின் பகுதிகளின் படி, கலவையாக, குமட்டுவதாக, நறுமணமாக, மென்மையானதாக, காரமாக, அமிலத்தன்மை உடையதாக என்று பல்வேறு வகை ஆகின்றது.
பதம் 3.26.46 : பூமியின் வேலைகளின் சிறப்புக் குணங்கள், மேலான பிரம்மனின் மாதிரி வடிவங்களின் மூலமும், தங்குவதற்கு இல்லங்களைக் கட்டுவதன் மூலமும், தண்ணீரை வைப்பதற்குப் பானைகளைத் தயாரிப்பதன் மூலமும் உணரப்படுகின்றன. பிறிதோர் வகையால், பூமி எல்லா மூலப்பொருட்களுக்கான ஆதாரத்தின் இருப்பிடமாகும்.
பதம் 3.26.47 : ஒலியாக நாம் உணரும் உணர்வு செவிப் புலன் என்று அழைக்கப்படுகிறது. தொட்டு நாம் உணரும் புலன் அறிவு தொடுபுலன் என்று அழைக்கப்படுகிறது.
பதம் 3.26.48 : நாம் அறிகின்ற பொருளாக இருக்கும் நெருப்பின் குறிப்பிடத்தகுந்த சிறப்புக் குணம் பார்வைக்குரிய புலனாகும். நாம் ருசித்துப்பார்க்கும் பொருளான சுவையோ, தண்ணீரின் குறிப்பிடத் தகுந்த சிறப்புக் குணமாகிய, சுவைப் புலனாகும். இறுதியாக, பூமியின் குறிப்பிடத்தகுந்த சிறப்புக் குணமாகிய நறுமணமோ அது முகரும் புலன் என்று அழைக்கப்படுகிறது.
பதம் 3.26.49 : காரணம் அதன் விளைவிலும் இருப்பதால், முந்தையதன் சிறப்புக் குணங்கள் பிந்தையதில் உற்று நோக்கப்படுகின்றன. அதனால் எல்லா மூலப் பொருட்களின் தனித்தன்மைகள் இம்மண்ணுலகில் மட்டும் இருக்கின்றன.
பதம் 3.26.50 : இந்த எல்லா மூலப்பொருட்களும் கலக்கப்படாத பொழுது,
படைப்புக்கு மூலகாரணமாகிய பரமபுருஷ பகவான். நேரம், வேலை, மற்றும் மண்ணுலகத்தன்மைகளுடன் ஏழு பிரிவுகளைக்கொண்ட ஜட சக்தியுடன் அண்டத்தினுள் நுழைந்தார்.
பதம் 3.26.51 : செயல்புரியத் தூண்டப்பெற்று பகவானின் முன்னிலையில் இணைந்ததுமான, ஏழு தத்துவங்களிலிருந்து இனம் புரியாத ஒரு கரு உருவானது. அதிலிருந்து புகழ்வாய்ந்த பரஉலக உயிரினம் தோன்றியது.
பதம் 3.26.52 : இந்த உலகளாவிய முட்டை அல்லது ஒரு முட்டையின் வடிவில் உள்ள அண்டம் திட சக்தியின் வெளிப்பாடு என்று அழைக்கப்படுகிறது. நீர், காற்று, தீ, வான் ஆளுமை மற்றும் மஹத்தத்வம் ஆகிய இவற்றின் அடுக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக பருமனில் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு அடுக்கும் முந்தையதை விடப் பத்து மடங்கு பெரிது. இறுதியான வெளிப்புற அடுக்கு பிரதானத்தால் மூடப்பட்டிருக்கிறது. இந்த முட்டைக்குள் பகவான் ஹரியின் உலகளாவிய வடிவம் உள்ளது. அவருடைய உடலில் பதினான்கு கதிரவன் மண்டலங்களும் அங்கங்களாகும்.
பதம் 3.26.53 : பரமபுருஷ பகவான், விராட்புருஷர் நீரில் மிதந்து கொண்டிருந்த, அந்தப் பொன்மயமான முட்டையில் தன்னை இருத்திக் கொண்டு, அதைப் பல துறைகளாகப் பிரித்தார்.
பதம் 3.26.54 : முதலில் அவரிடம் வாய் தோன்றியது, பின்னர் பேசும் பொறி வந்தது, அதனுடன் அந்தப் பொறியைத் தலைமை தாங்கும் தெய்வமான தீக்கடவுள் வந்தார். பின்னர் ஒரு ஜோடி மூக்குத் துளைகள் தோன்றின. அவற்றில் முகரும் பொறியும், பிராணனாகிய உயிர் நிலைக் காற்றும் தோன்றின.
பதம் 3.26.55 : முகரும் பொறியைப் பின் தொடர்ந்து, அதைத் தலைமை தாங்கும் வாயுக் கடவுள் வந்தார். பின்னர் உலகளாவிய வடிவத்தில் ஒரு ஜோடிக் கண்கள் தோன்றின, அவற்றில் பார்வைப்புலன் வந்தது. இந்தப் புலனைத் தொடர்ந்து அதைத் தலைமை தாங்கும் சூரியக் கடவுள் தோன்றினார். அடுத்து அங்கு அவரிடம் ஒரு ஜோடிக் காதுகள் தோன்றின. அவற்றில் கேட்கும் புலனும், அதைத் தொடர்ந்து, திசைத் தேவதைகள் அல்லது திசைகளுக்குத் தலைமை தாங்கும் தெய்வங்கள் தோன்றினார்.
பதம் 3.26.56 : பின்னர் பகவானின் உலகளாவிய வடிவம், விராட்புருஷர், அவர் தோலை வெளிப்படுத்தினார், பின்னர் ரோமம், மீசை, தாடி தோன்றின. இதன் பின்னர் மூலிகைகளும் மருந்துகளும் வெளிப்பட்டன. பின்னர் அவருடைய பிறப்புறுப்புகளும் தோன்றின.
பதம் 3.26.57 : இதன் பின்னர், விந்துவும் (இனப்பெருக்கத்தின் வினைத்திறம்) நீருக்கு அதிபதியான கடவுளும் தோன்றினர். அடுத்து மலம் கழியும் வாய் தோன்றியது. பின்னர் தூய்மைப்படுத்தும் பொறிகளும், அதன் பின்னர் அண்டம் முழுதையும் அச்சப்படுத்தும் மரண தேவதையும் தோன்றினர்.
பதம் 3.26.58 : அதன் பின்னர் பகவானின், உலகளாவிய வடிவம் கொண்ட பகவானின், இரு கரங்கள் வெளிப்பட்டன, அவற்றுடன் பிடித்துக் கொள்ளும் ஆற்றலும், பொருட்களைக் கீழே போடும் சக்தியும் தோன்றின. பின்னர் பகவான் இந்திரன் தோன்றினார். அடுத்து கால்கள் வெளிப்பட்டன. அவற்றுடன் அசைவு முறையும் வெளிப்பட்டது. பின்னர் பகவான் விஷ்ணு தோன்றினார்.
பதம் 3.26.59 : உலகளாவிய வடிவத்தின் இரத்த நாளங்கள் வெளிப்பட்டன, அதன் பின்னர் சிவப்பு ரத்த அணுக்கள் அல்லது குருதி வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து நதிகளும் (இரத்த நாளங்களுக்கு அதிபதிகளான தேவதைகள்), பின்னர் ஒரு வயிறும் தோன்றின.
பதம் 3.26.60 : அடுத்து, பசி மற்றும் தாகம் ஆகிய உணர்ச்சிகள் வளர்ந்தன. அதைத் தொடர்ந்து சமுத்திரங்களின் வெளிப்பாடு ஏற்பட்டது. பின்னர் இதயம் வெளிப்பட்டது. இதயத்தைத் தொடர்ந்து மனம் தோன்றியது.
பதம் 3.26.61 : மனத்திற்குப் பின்னர், நிலவு தோன்றியது. அடுத்து அறிவுக் கூர்மை தோன்றியது. அறிவுக்குக் கூர்மைக்குப் பின்னர், பகவான் பிரம்மா தோன்றினார். பின்னர் போலி ஆளுமையும், பின்னர் சிவபெருமானும் தோன்றினர். சிவபிரானின் தோற்றத்திற்குப் பிறகு உணர்வு நிலையும், உணர்வு நிலைக்கு அதிபதியான கடவுளும் வந்தனர்.
பதம் 3.26.62 : தேவர்களும், பல்வேறு புலன்களுக்கு அதிபதிகளான தெய்வங்களும் இவ்வாறு வெளிப்பட்ட பொழுது, அவர்கள் தங்கள் தோற்றத்தின் மூலத்தை எழுப்ப விரும்பினார். ஆனால் அதைச் செய்வதில் தவறியதால், அவரை எழுப்புவதற்காக ஒருவர் பின் ஒருவராக விராட் புருஷரின் உடலில் அவர்கள் மீண்டும் நுழைந்தனர். உள்ளே தூங்குகின்ற தெய்வத்தைக் கட்டுப்படுத்துபவரை எழுப்புவதற்காக, ஒருவர் வெளியே உள்ள கவனத்திலிருந்து உள்ளே உள்ள கவனத்திற்கு, புலனின் செயல்களை மீண்டும் செலுத்த வேண்டும். பின்வரும் பதங்களில், விராட் புருஷரை எழுப்புவதற்குத் தேவையான புலன்களின் செயல்பாடுகள் அழகாக விளக்கப்படும்.
பதம் 3.26.63 : அக்னிக் கடவுள் பேச்சுப்பொறியுடன் அவர் வாயில் நுழைந்தார். ஆனால் விராட் புருஷரை எழுப்ப முடியவில்லை. பின்னர் வாயு பகவான் வாசனைப் புலனுடன் அவருடைய மூக்குத் துளைகளில் நுழைந்தார். ஆனால் இன்னும் விராட்புருஷர் தூக்கத்திலிருந்து கண் விழிக்கவில்லை.
பதம் 3.26.64 : கதிரவன் தனது பார்க்கும் புலனுடன் விராட்புருஷரின் கண்களில் நுழைந்தார். ஆனால் அப்போதும் விராட் புருஷர் எழவில்லை. அதுபோல, கேட்கும் புலனுடன் திசைகளின் அதிபதிகளான தெய்வங்கள் அவர் காதுகள் வழியாக நுழைந்தனர், ஆயினும் அவர் எழுந்திருக்கவில்லை.
பதம் 3.26.65 : தோல், மூலிகைகள், பருவகாலத் தாவரங்கள் ஆகியவற்றுக்கு உரிய தெய்வங்கள் விராட் புருஷரின் உடல் மீதிருந்த முடிவழியாகத் தோலில் நுழைந்தார்கள். ஆனால் அத்தெய்வீக உயிர் அப்போதும் கூட எழுந்திருக்க மறுத்தது. நீருக்கு அதிபதியான கடவுள் இனப் பெருக்கத்திற்கு ஆன வினைத் திறத்துடன் அவருடைய பிறப்புறுப்பில் நுழைந்தார். ஆயினும் விராட் புருஷர் அப்போதும் எழுந்திருக்கவில்லை.
பதம் 3.26.66 : மரணதேவன் தூய்மைப்படுத்தும் பொறியுடன் அவருடைய குதத்தில் நுழைந்தார், ஆனால் விராட் புருஷரை, செயல்படும்படி தூண்ட இயலவில்லை. பொருட்களைப் பற்றிக் கொள்வதும் கீழே போடும் ஆற்றலும் கொண்ட கைகளின் வழியாக இந்திர பகவான் நுழைந்தார். ஆனால் அதன் பின்னரும் விராட்புருஷர் எழுந்திருக்கவில்லை.
பதம் 3.26.67 : பகவான் விஷ்ணு அசைந்து இயங்கும் ஆற்றலுடன் அவருடைய பாதங்களில் நுழைந்தார். ஆனால் விராட் புருஷர் பின்னரும் எழுந்து நிற்கு மறுத்தார். நதிகள் அவருடைய இரத்த நாளங்களில் குருதியுடனும், சுழற்சியின் ஆற்றலுடனும் நுழைந்தன, ஆனால் அந்தத் தெய்வீக உயிரினை அசைக்க இயலவில்லை.
பதம் 3.26.68 : பசியுடனும் தாகமுடனும் அலைகடல் அவர் வயிற்றில் நுழைந்தது. ஆனால் தெய்வீக உயிரோ பின்னரும் எழ மறுத்தது. சந்திர பகவான் மனத்துடன் அவர் இதயத்தில் நுழைந்தார். ஆனால் அந்தத் தெய்விக உயிர் எழுந்திருக்கவில்லை.
பதம் 3.26.69 : பிரம்மனும் அறிவுக்கூர்மையுடன் அவர் இதயத்தில் நுழைந்தார். ஆனால் பின்னரும் அந்த விராட பகவானை எழும்பச் செய்வதில் வெல்ல முடியவில்லை. சிவபெருமானும் ஆளுமையுடன் அவர் மனத்தில் நுழைந்தார். ஆனால் பின்னரும் அந்தத் தெய்வீகம் அசையவில்லை.
பதம் 3.26.70 : ஆயினும் உள்ளத்தைக் கட்டுப்படுத்துபவரும், உணர்வுக்கு அதிபதியுமான தேவதை, விராட பகவானின் மனத்தில் நுழைந்த அதே நேரத்தில் அத்தெய்வீகஉயிர் விளைவை உண்டாக்கும் நீரிலிருந்து எழுந்தார்.
பதம் 3.26.71 : ஒரு மனிதன் உறங்கும் பொழுது, அவனுடைய இயல்பான உடைமைகளாகிய உயிர்ச்சக்தி, அறிவைப் பதிவு செய்வதற்கான புலன்கள், வேலை செய்வதற்கான புலன்கள், மனம் மற்றும் அறிவுக் கூர்மை முதலியவற்றால் அவனை எழுப்ப முடியாது. பரமாத்மா அவனுக்கு உதவி செய்தால் மட்டுமே அவனை எழுப்ப முடியும்.
பதம் 3.26.72 : அதனால், பக்தி, பற்றின்மை மற்றும் ஆன்மீக அறிவு முன்னேற்றம் இவற்றின் மூலம் பரமாத்மா இந்த உடலில் இருப்பது போலவே எண்ணினாலும் அதே சமயம் அதிலிருந்து விலகி இருப்பதாகவும் ஒருவர் நினைக்க வேண்டும்.