அத்தியாயம் – 25
பக்தித் தொண்டின் சிறப்புகள்
பதம் 3.25.1
சௌனக உவாச
கபிலஸ் தத்வ -ஸங்க்யாதா பகவான் ஆத்ம- மாயயா
ஜாத: ஸ்வயம் அஜ: ஸாக்ஷாத் ஆத்ம-ப்ரக்ஞப்தயே ந்ருணாம்

சௌனக உவாச-ஸ்ரீ சௌனகர் கூறினார்; கபில:-பகவான் கபிலர்; தத்வ-உண்மையின்; ஸங்க்யாதா—விளக்குபவர்; பகவான்-பரமபுருஷ பகவான்; ஆத்ம-மாயயா—அவருடைய அந்தரங்க சக்தியினால்; ஜாத:-பிறப்பெடுத்தார்; ஸ்வயம்-தானே; அஜ:-பிறப்பில்லாதவர்; ஸாக்ஷாத்-மனித வடிவில்; ஆத்மப்ரக்ஞப்தயே-உன்னதமான அறிவைப் பரப்புவதற்கு; ந்ருணாம்-மனித குலத்திற்காக.

ஸ்ரீ சௌனகர் கூறினார்: பரமபுருஷ பகவான், பிறப்பு அற்றவராக இருந்த போதிலும், அவருடைய அந்தரங்க சக்தியினால் கபில முனிவராகப் பிறப்பெடுத்தார். முழு மனித குலத்தின் பயனுக்காக எல்லாம் கடந்த அறிவைப் பரப்புவதற்காக அவர் இவ்வுலகிற்கு இறங்கி வந்தார்.

பதம் 3.25.2
ந ஹி அஸ்ய வர்ஷ்மண: பும்ஸாம் வரிம்ண: ஸர்வ -யோகினாம்
விஸ்ருதெள ஸ்ருத-தேவஸ்ய பூரி த்ருப்யந்தி மே அஸவ:

ந-இல்லை; ஹி-உண்மையில்; அஸ்ய-அவரைப் பற்றி; வர்ஷ்மண:- மிகச்சிறந்த; பும்ஸாம்-மனிதரில்; வரிம்ண:-முதன்மையான; ஸர்வ-எல்லா; யோகினாம்-யோகியரில்; விஸ்ருதௌ—கேட்பதில்; ஸ்ருத தேவஸ்ய-வேதங்களின் தலைவர்; பூரி-மீண்டும் மீண்டும்; த்ருப்யந்தி-மனநிறைவு அடைகின்றன; மே-என்னுடைய; அஸவ:-புலன்கள்.

சௌனகர் தொடர்ந்தார்: பகவானை விட அதிகமாக அறிந்தவர் எவரும் இல்லை. அவரைக் காட்டிலும் மிகவும் வணங்கத் தகுந்தவர் அல்லது மிகவும் பக்குவமடைந்த ஒரு யோகி என்று எவரும் இல்லை. அதனால் அவரே வேதங்களின் தலைவர், அவரைப் பற்றி எப்போதும் கேட்பதே புலன்கள் அடைகின்ற உண்மையான இன்பமாகும்.

பதம் 3.25.3
யத் யத் விதத்தே பகவான் ஸ்வச்சந்தாத்மாத்ம -மாயயா
தானி மே ஸ்ரத்தானஸ்ய கீர்த்தந்யாநி அனுகீர்த்தய

யத்யத்—எதுவாயினும்; விதத்தே-அவர் நிகழ்த்துகிறார்; பகவான்-பரமபுருஷ பகவான்; ஸ்வ-சந்த-ஆத்ம-முழுமையான சுயவிருப்பத்தின்; ஆத்ம மாயயா-அவருடைய அந்தரங்க சக்தியினால்; தானி—அவை அனைத்தும்; மே-என்னிடம்; ஸ்ரத்ததானஸ்ய-உண்மையாக; கீர்த்தந்யா-புகழத் தகுதி வாய்ந்த; அனுகீர்த்தய-தயவு செய்து வர்ணியுங்கள்.

எனவே அவருடைய அந்தரங்க சக்தியினால் இந்த எல்லா செயல்களையும் மேற்கொள்ளும், சுயவிருப்பம் முழுமையாக உள்ள அந்த பரமபுருஷ பகவானின் செயல்களையும் லீலைகளையும் தயவு செய்து நுட்பமாக விவரித்துச் சொல்லுங்கள்.

பதம் 3.25.4
ஸூத உவாச
த்வைபாயன: ஸகஸ்த்து ஏவம் மைத்ரேயோ பகவாம்ஸ் ததா
ப்ராஹேதம் விதுரம் ப்ரீத ஆன்வீக்ஷிக்யாம் ப்ரசோதித:

ஸூத உவாச-சூத கோஸ்வாமி கூறினார்; த்வைபாயன: ஸக:-வியாசதேவரின் நண்பர்; து—பின்னர்; ஏவம்-இவ்வாறு; மைத்ரேய:-மைத்ரேயர்; பகவான்-வணங்கத்தக்க; ததா—அந்த வழியில்; ப்ராஹ-பேசினார்; இதம்-இந்த; விதுரம்-விதுரரிடம்; ப்ரீத-மகிழ்ச்சி கொண்டு; ஆந்வீக்ஷிக்யாம்-தெய்வீக ஞானத்தைப் பற்றி; ப்ரசோதித:-கேட்கப்பட்டு.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: மிகுந்த சக்தி வாய்ந்த மைத்ரேய முனிவர், வியாசதேவரின் நண்பர் ஆவார். தெய்விக அறிவைப் பற்றிய விதுரரின் விசாரணையால் மகிழ்ந்து, ஊக்குவிக்கப்பட்டு, மைத்ரேயர் பின்வருமாறு கூறினார்.

பதம் 3.25.5
மைத்ரேய உவாச
பிதரி ப்ரஸ்திதே அரண்யம் மாது: ப்ரிய சிகீர்ஷயா
தஸ்மிநு பிந்துஸரே அவாத்ஸீத் பகவான் கபில: கில

மைத்ரேய உவாச-மைத்ரேயர் கூறினார்; பிதரி-தந்தை; ப்ரஸ்திதே-சென்ற பொழுது; அரண்யம்-காட்டிற்கு; மாது:-அவர் அன்னை; ப்ரியசிகீர்ஷயா-மகிழ்விக்கும் ஆசையுடன்; தஸ்மிந்-அந்த; பிந்துஸரே-பிந்து ஸரோவர் ஏரி; அவாத்ஸூத்-அவர் தங்கினார்; பகவான்-பகவான்; கபில:-கபிலர்; கில-உண்மையில்.

மைத்ரேயர் கூறினார்: கர்தமர் காட்டிற்குச் சென்ற பொழுது, பகவான் கபிலர் தன் அன்னையான தேவஹூதியை மகிழ்விக்க பிந்து ஸரோவரின் கரையில் தங்கினார்.

பதம் 3.25.6
தம் ஆஸீனம் அகர்மாணம் தத்வ- மார்காக்ர- தர்சனம்
ஸ்வ ஸூதம் தேவஹூதி ஆஹ தாது: ஸம்ஸ்மரதீ வச:

தம்-அவரிடம் (கபிலர்); ஆஸீன-அமர்ந்து; அகர்மாணம்-ஓய்வாக; தத்வ-பரம சத்தியத்தின்; மார்க அக்ர-இறுதிக் குறிக்கோள்; தாசனம்—காட்ட கூடியவர்; ஸ்வஸூதம்-அவள் மகன்; தேவகீதி:-தேவகீதி; ஆஹ-கூறினார்; தாது-பிரம்மாவின்; ஸம்ஸ்மரதீ-நினைவு கூர்ந்து; வச:-சொற்கள்.

பரம சத்தியத்தின் முடிவான குறிக்கோளை அவளுக்குக் காட்ட முடிந்தவரான கபிலர், அவளுக்கு முன் ஓய்வாக அமர்ந்திருந்த பொழுது, பிரம்மா தன்னிடம் பேசியதை தேவஹூதி, நினைவு கூர்ந்தாள். எனவே அவள் கபிலரிடம் பின்வருமாறு கேட்கத் தொடங்கினாள்.

பதம் 3.25.7
தேவஹூதிருவாச
நிர்விண்ணா நிதராம் பூமந் அஸந் -இந்த்ரிய -தர்ஷணாத்
யேன ஸம்பாவ்யமானேன ப்ரபந்நாந் தம் தம: ப்ரபோ

தேவஹூதி உவாச—தேவஹூதி கூறினாள்; நிர்விண்ணா-வெறுப்படைந்து; நிதராம்-மிகவும்; பூமன்-ஓ என் பகவானே; அஸத்-நிலையற்ற; இந்த்ரிய-புலன்களின்; தர்ஷணாத்-கலக்கத்திலிருந்து; யேன-அதனால்; ஸம்பாவ்யமானேன—பரவியுள்ள; ப்ரபந்நா-நான் விழுந்திருக்கிறேன்; அந்தம் தம:-அறியாமையாகிய படுகுழியில்; ப்ரபோ—ஓ என் பகவானே.

தேவஹூதி கூறினாள்: என்னுடைய பௌதீகப் புலன்களால் ஏற்படும் தொல்லையால் நான் நலிவுற்றேன், ஏனென்றால் இந்தப் புலன் தொல்லையால், என் பகவானே, நான் அறியாமையாகிய படுகுழியில் விழுந்து விட்டேன்.

பதம் 3.25.8
தஸ்ய த்வம் தமஸோ அந்தஸ்ய துஷ்பாரஸ்யாத்ய பாரகம்
ஸச் சக்ஷூர் ஜன்மநாம் அந்தே லப்தம் மே த்வத்- அனுக்ரஹாத்


தஸ்ய-அந்த; த்வம்-நீங்கள்; தமஸ:-அறியாமை; அந்தஸ்ய-இருள்; துஷ்பாரஸ்ய-கடக்கக் கடினமான; அத்ய—இப்பொழுது; பாரகம்-கடந்து சென்று; ஸத்-தெய்வீக; சக்ஷூ:-கண்; ஜந்மனாம்—பிறப்புகளின்; அந்தே-முடிவில்; லப்தம்—அடைந்து; மே-என்னுடைய; த்வத் அனுக்ரஹாத்— உங்கள் கருணையால்.

உங்கள் தலைமை ஒன்றே அறியாமையாகிய இருண்ட பகுதியிலிருந்து வெளியில் வரும் என் வழியாகும். ஏனென்றால் நீங்களே என் தெய்வீகக் கண் ஆவீர்கள்; அதை உங்கள் கருணையால் மட்டுமே, பற்பல பிறவிகளுக்குப் பின்னர் நான் அடைந்தேன்.

பதம் 3.25.9
ய ஆத்யோ பகவான் பும்ஸாம் ஈஸ்வரோ வை பவான் கில
லோகஸ்ய தமஸாந்தஸ்ய சக்ஷூ: ஸூர்ய இவோதித:

ய:-எவர்; ஆத்ய-மூலம்; பகவான்-பரமபுருஷ பகவான்; பும்ஸாம்-எல்லா வாழும் உயிரினங்களின்; ஈஸ்வர:-இறைவன்; வை-உண்மையில்; பவான்—நீங்கள்; கில-உண்மையில்; லோகஸ்ய—அண்டத்தின்; தமஸா-அறியாமை ஆகிய இருளால்; அந்தஸ்ய-குருடாக்கப்பட்டு; சக்ஷூ:-கண்; சூர்ய:-கதிரவன்; இவ-போல; உதித:-உதித்து.

நீங்கள் பரமபுருஷ பகவான், எல்லா உயிர்களின் இறைவனும் மூலமும் ஆவீர்கள். நீங்கள் அண்டத்தின் அறியாமையாகிய இருளைப் சிதறடித்து, கதிரவனின் கதிர்களைப் பரப்புவதற்காக உதித்தீர்கள்.

பதம் 3.25.10
அத மே தேவ ஸம்மோஹம் அபாக்ரஷ்டும் த்வம் அர்ஹஸி
யோ அவக்ரஹோ அஹம் மமேதீதி ஏதஸ்மின் யோஜிதஸ் த்வயா

அத-இப்போது; மே-என்னுடைய; தேவ-ஓ பகவானே; ஸம்மோஹம்-மயக்கம்; அபாக்ரஷ்டும்-சிதறடிக்க; த்வம்-நீங்கள்; அர்ஹஸி-மகிழ்ந்து; ய:-எந்த; அவக்ரஹ:-தவறான கருத்து; அஹம்-நான்; மம-என்னுடைய; இதி-இவ்வாறு; ஏதஸ்மின்-இதில்; யோஜித:-ஈடுபட்டு; த்வயா-உங்களால்.

என் பகவானே, இப்போது என் மிகு மயக்கத்தைச் சிதறடிக்குமாறு வேண்டுகிறேன். என் போலியான ஆளுமை அகங்காரத்தால், உணர்ச்சியால் நான் உங்கள் மாயையால் ஈடுபடுத்தப்பட்டு, என்னை உடலுடனும், உடல் சம்பந்தமான உறவுகளுடனும் ஐக்கியப்படுத்திக் கொண்டேன்.

பதம் 3.25.11
தம் த்வா கதாஹம் சரணம் சரண்யம்
ஸ்வ -ப்ருத்ய – ஸம்ஸார தரோ: குடாரம்
ஜிஞாஸயாஹம் ப்ரக்ருதே: பூருஷஸ்ய
நமாமி ஸத் தர்ம-விதாம் வரிஷ்டம்

தம்-அந்த நபர்; த்வா-உங்களிடம்; கதா-சென்று; அஹம்-நான்; சரணம்-பாதுகாப்பு; சரண்யம்-பாதுகாப்பு பெறத் தகுதியான; ஸ்வப்ருத்ய-உங்களைச் சார்ந்தவர்களுக்கு; ஸம்ஸார-ஜட இருப்பின்; தரோ-மரத்தின்; குடாரம்-கோடரி; ஜிஞாஸ-அறிந்து கொள்ளும் விருப்பத்துடன்; அஹம்-நான்; ப்ரக்ருதே:-ஜடத்தின் (பெண்); பூருஷஸ்ய-சேதனத்தின் (ஆண்); நமாமி-நான் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்; ஸத்தர்ம—நித்தியமான பணியின்; விதாம்-அறிந்தவர்களின்; வரிஷ்டம்-மிகச் சிறந்தவரிடம்.

தேவஹூதி தொடர்ந்தாள்: நான் உங்கள் தாமரைத் திருவடிகளில் சரண் புகுந்துள்ளேன். ஏனென்றால் சரணடைய தாங்கள் ஒருவர் மட்டும் தான் உள்ளீர்கள். உலகியல் வாழ்வு எனும் மரத்தை வெட்டும் கோடரி நீங்கள். அதனால் ஆன்மீகவாதிகளில் மிகச் சிறந்தவராகிய உங்களுக்கு நான் என்னுடைய வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன், நான் உங்களிடமிருந்து ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் இவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றிய தகவல் கேட்கிறேன்.

பதம் 3.25.12
மைத்ரேய உவாச
இதிஸ்வ-மாதுர் நிரவத்யம் ஈப்ஸிதம்
நிசம்ய பும்ஸாம் அபவர்க -வர்த்தனம்
தியாபினந்த்யாத்மவதாம் ஸதாம் கதிர்
பபாஷ ஈஷத் – ஸ்மித-சோபிதானன:

மைத்ரேய உவாச-மைத்ரேயர் கூறினார்; இதி-இவ்வாறு; ஸ்வமாது-அவர் அன்னையின்; நிரவத்யம்-மாசு அற்ற; ஈப்ஸிதம்-ஆசை; நிசம்ய-கேட்டபிறகு; பும்ஸாம்-மக்களின்; அபவர்க-உடலிருப்பின் முடிவு; வர்த்தனம்-அதிகரித்து; தியா—மனதுள்ளே; அபிநந்த்ய-நன்றி தெரிவித்துக் கொண்டு; ஆத்ம—வதாம்—தன்னை உணர்தலில் ஆர்வம்; ஸதாம்-ஆன்மீகவாதிகளின்; கதி:-வழி; பபாஷ-அவர் விளக்கினார்; ஈஷத்-சிறிதாக; ஸ்மித-புன்னகைத்து; சோபித—அழகிய; ஆனன:-அவர் முகம்.

மைத்ரேயர் கூறினார்: தெய்வீக உணர்தலுக்கான அவர் அன்னையின் மாசற்ற ஆசையைக் கேட்ட பிறகு, பகவான் அவள் வினவியதற்காக, தனக்குள்ளேயே அவளுக்கு நன்றி தெரிவித்தார், இவ்வாறு, அவர் புன்னகை தவழும் முகத்துடன் தன்னை உணர்தலில் ஆர்வமுடைய ஆன்மீகவாதிகளின் பாதையை விளக்கினார்.

பதம் 3.25.13
ஸ்ரீபகவான் உவாச
யோக ஆத்யாத்மிக: பும்ஸாம் மதோ நி: ஸ்ரேயஸாய மே அத்யந்தோபரதிர்யத்ர து: கஸ்ய ச ஸுகஸ்ய ச

ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; யோக:-யோக முறை; ஆத்யாத்மிக:-ஆத்மாவுடன் உறவுடைய; பும்ஸாம்-வாழும் உயிரினங்களின்; மத:-ஏற்றுக் கொள்ளப்பட்டது; நி: ஸ்ரேயஸாய-இறுதியான நன்மைக்காக; மே-என்னால்; அத்யந்த-முழுமையாக; உபரதி:-பற்றின்மை; யத்ர-எங்கு; து:கஸ்ய-துன்பத்திலிருந்து; ச-மற்றும்; சுகஸ்ய-இன்பத்திலிருந்து; ச-மற்றும்.

பரமபுருஷ பகவான் பதிலளித்தார்: உயிரினத்தின் இறுதியான நன்மைக்காக உள்ளதும், பகவானுக்கும், தனிப்பட்ட ஆன்மாவிற்கும் தொடர்பு ஏற்படுத்துவதும் ஆகிய யோக முறை சிறந்தது. இவ்வுலகில் இன்பம், துன்பம் இவற்றிலிருந்து பற்று அறுதற்கு உதவி புரியும் யோக முறையே மிகவும் உயர்ந்ததாகும்.

பதம் 3.25.14
தம் இமம் தே ப்ரவக்ஷ்யாமி யம் அவோசம் புரானகே
ரிஷீணாம் ஸ்ரோது -காமானாம் யோகம் ஸர்வாங்க- நைபுணம்

தம் இமம் – அந்த; தே-உங்களிடம்; ப்ரவஷ்யாமி-நான் விளக்குவேன்; யம்-எந்த; அவோசம்-நான் விளக்கினேன்; புரா-முன்பு; அனகே-ஓ பக்தியுள்ள அன்னையே; ரிஷீணாம்—முனிவர்களுக்கு; ஸ்ரோது காமானாம்-கேட்க விரும்பி; யோகம்-யோக முறை; ஸர்வ-அங்க-எல்லா விதத்திலும்; நைபுணம்- பயனுடையதும், செயல் முறை சார்ந்ததும்.

ஓ மிகுந்த பக்தியுள்ள அன்னையே, நான் முற்காலத்தில் சிறந்த முனிவர்களுக்கு விளக்கிய அந்தப் பழமையான யோக முறையை இப்போது உங்களுக்கு விளக்குவேன். அது எல்லா விதத்திலும் பயனுடையதும், செயல்முறை சார்ந்ததும் ஆகும்.

பதம் 3.25.15
சேத: கல்வ் அஸ்ய பந்தாய முக்தயே சாத்மனோ மதம்
குணேஷூ ஸக்தம் பந்தாய ரதம் வா பும்ஸி முக்தயே

சேத:-உணர்வு; கலு—உண்மையில்; அஸ்ய—அவரின்; பந்தாய-பிடிப்பிற்காக; முக்தயே-விடுதலைக்காக; ச-மற்றும்; ஆத்மன:-வாழும் உயிரினத்தின்; மதம்-கருதப்படுகிறது; குணேஷூ-இயற்கையின் மூன்று குணங்களில்; ஸக்தம்—கவரப்பட்டு; பந்தாய-கட்டுப்படுத்தப்பட்ட வாழ்விற்காக; ரதம்-பிடிப்பு; வா-அல்லது ; பும்ஸி-பரமபுருஷ பகவானில்; முக்தயே-முக்திக்காக.

ஜடவுலக இயற்கையின் மூன்று குணங்களால் வாழ்வனவற்றின் உணர்வு கவரப்பட்டால் அந்நிலை கட்டுப்பாடான வாழ்வு எனப்படும். ஆனால் அதே உணர்வு நிலை பரமபுருஷ பகவானின் மீது பற்றிக் கொண்டால், ஒருவர் வீடு பேற்றுக்குரிய உணர்வில் இருப்பார்.

பதம் 3.25.16
அஹம் மமாபிமானோத்தை: காம -லோபாதிபிர் மலை:
வீதம் யதா மன: சுத்தம் அது: கம் அஸுகம் ஸமம்

அஹம்-நான்; மம-என்னுடைய; அபிமான—தவறான கருத்தில் இருந்து; உத்தை:-உருவாக்கப்பட்ட; காம-காமம்; லோப-பேராசை; ஆதிபி:-முதலியன; மலை:-மாசிலிருந்து; வீதம்-விடுதலை; யதா-எப்பொழுது; மன:-மனம்; சுத்தம்-தூய; அது: கம்-தொல்லையின்றி; அஸுகம்—இன்பமின்றி; ஸமம்-சமமாக.

இந்த உடம்பினை ஒருவர் தவறாகப் புரிந்து கொள்ளுதற்கு ஏதுவாகிய, ‘நான்’ எனும் அகங்காரம், காமம், பேராசை ஆகிய மாசுகளிலிருந்து முழுதும் உடலைத் தூய்மையாக்கும் போது, ஒருவர் மனம் தூய்மையடைகிறது. அந்தத் தூய நிலையில், உலகியல் இன்பம், துன்பம் எனப்படும் நிலையின் எல்லையைக் கடந்து மேம்பாடு அடைகிறார்.

பதம் 3.25.17
ததா புருஷ ஆத்மானம் கேவலம் ப்ரக்ருதே: பரம்
நிரந்தரம் ஸ்வயம்- ஜ்யோதிர் அணிமானம் அகண்டிதம்

ததா—பின்னர்; புருஷ-தனிப்பட்ட ஆன்மா; ஆத்மானம்-அவரை; கேவலம்-தூய்மை; ப்ரக்ருதே பரம்-ஜடவுலக இருப்பிற்கு அப்பாற்பட்ட தெய்வீகமான; நிரந்தரம்-வேறுபாடில்லாத; ஸ்வயம் ஜ்யோதி-தானாக ஒளிரும்; அணிமானம்-மிக நுண்ணிய; அகண்டித-துண்டாகாமல்.

அந்த நேரத்தில் ஆத்மா தன்னை ஜடவுலக இருப்பிற்கு அப்பாற்பட்டதாக, எப்போதும் சுயமாக பிரகாசிப்பதாக மிக நுண்ணியதாக இருப்பினும், எப்போதும் உடைந்து காணப்படாமல் சிறிய அளவாக காணப்படும்.

பதம் 3.25.18
ஞான – வைராக்ய -யுக்தேன பக்தி -யுக்தேன சாத்மனா
பரிபச்யதி உதாஸீனம் ப்ரக்ருதிம் ச ஹதௌஜஸம்

ஞான-அறிவு; வைராக்ய-துறவு; யுக்தேன—அமையப் பெற்று; பக்தி-பக்தித் தொண்டு; யுக்தேன—அமையப் பெற்று; ச-மற்றும்; ஆத்மனா—மனத்தால்; பரிபச்யதி-ஒருவர் பார்க்கிறார்; உதாஸீனம்-விருப்பு வெறுப்பற்று; ப்ரக்ருதிம்—பௌதீக இருப்பு; ச-மற்றும்; ஹத ஓஜஸம்-பலத்தில் குறைந்து.

தன்னை உணர்ந்த நிலையில், ஞானப் பயிற்சியாலும், பக்தித் தொண்டில் துறவாலும், ஒருவர் எல்லாவற்றையும் சரியான நோக்கில் பார்க்கிறார்; அவர் ஜடவுலக இருப்பின் மீது விருப்பு வெறுப்பு அற்றவர் ஆகிறார். ஜடவுலக பாதிப்பானது அவர் மீது குறைந்த ஆற்றலுடன் செயல்படுகிறது.

பதம் 3.25.19
ந யுஜ்யமானயா பக்த்யா பகவதி அகிலாத்மனி
ஸத்ருசோ அஸ்தி சிவ: பந்தா யோகினாம் ப்ரம்ம -ஸித்தயே

ந-இல்லை; யுஜ்யமானயா-நிகழ்த்தப்பட்டு; பக்தியா-பக்தித் தொண்டு; பகவதி—பரமபுருஷ பகவானுக்கு; அகிலாத்மனி-பரமாத்மா; ஸத்ருச-போல; அஸ்தி-இருக்கிறது; சிவ:-மங்கலமான; பந்தா:-வழி; யோகினாம்-யோகிகளின்; ப்ரம்மஸித்தயே-தன்னை அறிதலில் முழுமைக்காக.

பரமபுருஷ பகவானிடம் பக்தித் தொண்டில் ஈடுபட்டால் அன்றி எந்த வித யோகியாலும் தன்னை உணர்தலில் முழுமை அடைய முடியாது, ஏனென்றால் அது மட்டுமே மங்கலமான வழியாகும்.

பதம் 3.25.20
ப்ரஸங்கம் அஜரம் பாசம் ஆத்மன: கவயோ விது:
ஸ ஏவ ஸாதுஷூ க்ருதோ மோக்ஷ – த்வாரம் அபாவ்ருதம்

ப்ரஸங்கம்-பற்று; அஜரம்-உறுதியான; பாசம்-சிக்கல்; ஆத்மன:-ஆத்மாவின்; கவய:-படித்த மனிதர்கள்; விது:-தெரிதல்; ஸ: ஏவ- அதே; ஸாதுஷூ-பக்தர்களிடம்; க்ருத:-பயன்படுத்தினால்; மோக்ஷ த்வாரம்-விடுதலையின் கதவு; அபாவ்ருதம்-திறந்தது.

ஒவ்வொரு படித்த மனிதனும் ஜடப் பொருளின் மீது கொண்டுள்ள பற்றானது, ஆன்மாவுக்கு எதிரான மிகப்பொரிய சிக்கல் ஆகும் என்று நன்கு அறிந்திருக்கிறான். ஆனால் தேக பற்று தன்னை அறிந்த பக்தர்களிடம் இருக்கும் பொழுது, அது வீடுபேற்றுக்கான கதவைத் திறக்கிறது.

பதம் 3.25.21
திதிக்ஷவ: காருணிகா: ஸுஹ்ருத: ஸர்வ- தேஹினாம்
அஜாத-சத்ரவ: சாந்தா: ஸாதவ: ஸாது- பூஷணா:

திதிக்ஷவ:-சகிப்புத் தன்மையுடன்; காருணிகா:-கருணை நிறைந்த; ஸுஹ்ருத—தோழமையுடன்; ஸர்வ தேஹினாம்—எல்லா வாழும் உயிரினங்களுக்கும்; அஜாத சத்ரவ:-எவரோடும் பகைமை கொள்ளாத; சாந்தா:-அமைதியான; ஸாதவ:-புனித நூல்களின் வழி நடப்பவர்; ஸாது பூஷணா:— விழுமிய தனிப்பண்புகளுடன் அலங்கரிக்கப்பட்டு.

ஸாதுவின் அடையாளங்கள் என்னவென்றால், அவர் எல்லா வாழும் உயிரினங்களிடம் கொள்ளும் சகிப்புத் தன்மை, கருணை, தோழமை ஆகும். அவருக்கு எதிரிகள் இல்லை, அவர் அமைதியானவர், புனித நூல்களைப் பின்பற்றுபவர். அவரின் எல்லா தனிப் பண்புகளும் விழுமியவை.

பதம் 3.25.22
மயிஅனந்யேன பாவேன பக்திம் குர்வந்தி யே த்ருடாம்
மதி -க்ருதே த்யக்தகர்மாணஸ் த்யக்த- ஸ்வஜன -பாந்தவா:

மயி-என்னிடம்; அனந்யேன பாவேன-விலகிச் செல்லாத மனத்துடன்; பக்திம்-பக்தித் தொண்டு; குர்வந்தி-புரிதல்; யே-அவர்கள்; த்ருடாம்-உறுதியாக; மத் க்ருதே-எனக்காக; த்யக்த-துறந்து; கர்மாண:-செயல்கள்; த்யக்த-துறந்து; ஸ்வஜன-குடும்ப உறவுகள்; பாந்தவா:—நட்பு பாராட்டுபவர்கள்.

அம்மாதிரி ஸாது விலகிச் செல்லாமல் பகவானிடம் கடும் உறுதியுடன் கூடிய பக்தித் தொண்டில் ஈடுபடுகிறார். பகவானுக்காக அவர் உலகத்தில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பு பாராட்டுபவர்கள் போன்ற பிற தொடர்புகளை ஒதுக்கி விடுகிறார்.

பதம் 3.25.23
மத் -ஆச்ரயா: கதா ம்ருஷ்டா: ச்ருண்வந்தி கதயந்தி ச
தபந்தி விவிதாஸ் தாபா நைதாந் மத் -கத -சேதஸ:

மத் ஆச்ரயா:-என்னைப் பற்றி; கதா:-கதைகள்; ம்ருஷ்டா:-மகிழ்ச்சி நிரம்பிய; ச்ருண்வந்தி-அவர்கள் கேட்பர்; கதயந்தி-அவர்கள் உச்சரிப்பர்; ச-மற்றும்; தபந்தி-துன்பத்தைச் சுமத்தி; விவிதா:-பலவித; தாபர்:-ஜடத் தொல்லைகள்; ந-இல்லை; ஏதான்—அவர்களிடம்; மத்கத—என் மேல் நிறுத்தி; சேதஸ—அவர்கள் எண்ணங்கள்.

பரமபுருஷ பகவானாகிய என்னைப் பற்றிக் கேட்பதிலும், வழிபடுவதிலும், நிலையாக ஈடுபட்டிருக்கும் ஸாதுக்கள் உலகத் தொல்லைகளால் துன்பப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் எப்போதும் என் லீலைகள் மற்றும் செயல்களின் எண்ணங்களால் நிறைந்துள்ளனர்.

பதம் 3.25.24
த ஏதே ஸாதவ: ஸாத்வி ஸர்வ -ஸங்க- விவர்ஜிதா:
ஸங்கஸ் -தேஷூ -அத தே ப்ரார்த்ய: ஸங்க தோஷ ஹரா ஹி தே

தே ஏதே-அந்த; ஸாதவ:-பக்தர்கள்; ஸாத்வி-நல்லொழுக்கம் உடைய பெருமாட்டி; ஸர்வ-எல்லா; ஸங்க-பற்றுகள்; விவர்ஜிதா:-இருந்து விடுதலை; ஸங்க:-பற்று; தேஷூ—அவர்களிடம்; அத-இதனால்; தே-உங்களால்; ப்ரார்த்ய:-விரும்பப்பட வேண்டும்; ஸங்கதோஷ-ஜடவுலகப் பற்றின் பெருங்கேடான விளைவுகள்; ஹரா:-எதிரிடையாகச் செய்பவர்கள்; ஹி-உண்மையில்; தே-அவர்கள்.

ஓ என் அன்னையே, ஓ நல்லொழுக்கமுடைய பெருமாட்டியே, இவையே எல்லாப் பற்றிலிருந்தும் விடுபட்ட சிறந்த பக்தர்களின் குணங்களாகும். நீங்கள் அம்மாதிரி புனித சாதுக்களிடம் பற்றுக் கொள்ள விரும்ப வேண்டும். ஏனென்றால் இது உலகப் பற்றின் பெருங்கேடான விளைவுகளுக்கு எதிரிடையாகச் செயல்படுகிறது.

பதம் 3.25.25
ஸதாம் ப்ரஸங்கான் மம வீர்ய -ஸம்விதோ
பவந்தி ஹ்ருத் -கர்ணரஸாயனா: கதா:
தஜ் ஜோஷணாத் ஆசு அபவர்க- வர்த்மனி
ச்ரத்தாரதிர்பக்திர் அனுக்ரமிஷ்யதி

ஸதாம்-தூய பக்தர்களின்; ப்ரஸங்காத்-தொடர்பின் மூலம்; மம-என்னுடைய; வீர்ய-அற்புதமான செயல்கள்; ஸம்வித:-உரையாடலால்; பவந்தி-உருவாகி; ஹ்ருத்-இதயத்திற்கு; கர்ண-காதிற்கு; ரஸாயனா:-மகிழ்ச்சியாக; கதா:-கதைகள்; தத்—அதன்; ஜோஷணாத்-பதிய வைக்கப்படுவதால்; ஆஸூ-விரைவாக; அபவர்க-முக்தியின்; வர்த்மனி-வழியில்; ச்ரத்தா—உறுதியான நம்பிக்கை; ரதி-கவர்ச்சி; பக்தி:-பக்தி; அனுக்ரமிஷ்யதி-முறையில் பின் தொடரும்.

தூய பக்தர்களின் தொடர்பில், பரமபுருஷ பகவானின் செயல்கள் மற்றும் லீலைகள் பற்றிக் கலந்துரையாடுவது காதுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாகும். அந்த அறிவு பதியவைக்கப்படுவதால் ஒருவர் படிப்படியாக முக்திக்கான வழியில் முன்னேறுகிறார். அதன் பின்னர், அவர் விடுதலையடைகிறார், அவர் கவனம் நிலைபெறுகிறது. பின்னர் உண்மை பக்தியும் பக்தித் தொண்டும் தொடங்குகின்றன.

பதம் 3.25.26
பக்த்யா புமான் ஜாத -விராக ஐந்த்ரியாத்
த்ருஷ்ட- ச்ருதாந் மத் -ரசனானுசிந்தயா
சித்தஸ்ய யத்தோ க்ரஹணே யோக -யுக்தோ
யதிஷ்யதே குஜபிர் யோக-மார்கை;

பக்த்யா—பக்தித் தொண்டினால்; புமான்-ஒருவர்; ஜாத-விராக:-வெறுப்பை வளர்த்துக் கொண்டு; ஐந்த்ரியாத்-புலன்திருப்திக்கு; த்ருஷ்ட-பார்த்து (இந்த உலகில்); ஸ்ருதாத்—கேட்டு (மறுவுலகில்); மத்ரசன—என்னுடைய செயல்களான படைப்பு முதலியன; அனுசிந்தயா-தொடர்ந்து அதைப் பற்றி நினைப்பதால்; சித்தஸ்ய-மனத்தின்; யத்த:-ஈடுபட்டு; க்ரஹணே-கட்டுப்பாட்டில்; யோகயுக்த:-பக்தித் தொண்டில்—அமைந்து; யதிஷ்யதே-முயற்சி மேற்கொள்ளுவார்; ருஜூபி:-எளிது; யோக-மார்கை:-யோக சக்தி முறைகளினால்.

இவ்வாறு பக்தர்களின் தொடர்பில் பக்தித் தொண்டில் உணர்வுடன் ஈடுபட்டுள்ள ஒருவர் இந்த உலகம் மறுவுலகம் இரண்டிலும் பகவானின் செயல்களை நினைப்பதன் மூலம் புலன் நுகர்வில் வெறுப்படைகிறார். கிருஷ்ண உணர்வு முறையே எளிய யோக முறையாகும். ஒருவர் உண்மையில் பக்தித் தொண்டின் அந்தப் பாதையில் அமைந்தால், அவரால் மனத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

பதம் 3.25.27
அஸேவயாயம் ப்ரக்ருதேர் குணானாம்
ஞானேன வைராக்ய- விஜ்ரும்பிதேன
யோகேன மயிஅர்பிதயாச பக்த்யா
மாம் ப்ரத்யக் -ஆத்மானம் இஹாவருந்தே

அஸேவயா-தொண்டில் ஈடுபடாமல் இருப்பதால்; அயம்—இந்த மனிதர்; ப்ரக்ருதே குணானாம்-ஜடவுலக இயற்கை குணங்களின்; ஞானேன-ஞானத்தால் வைராக்ய துறவுடன்; விஜ்ரும்பிதேன-வளர்ச்சி பெற்று; யோகேன-யோகம் பயிற்சி செய்வதால்; மயி-என்னிடம்: அர்பிதயா-நிலைத்து; ச-மற்றும்; பக்த்யா—பக்தியுடன்; மாம்-என்னிடம்; ப்ரத்யக் ஆத்மானம்—பரம சத்தியம்; இஹ—இந்த வாழ்விலேயே; அவருந்தே-ஒருவர் அடைகிறார்.

இவ்வாறு மண்ணுலக இயற்கையினது தொண்டில் ஈடுபடாமல் இருப்பதன் மூலம் கிருஷ்ண உணர்வை வளர்ப்பதன் மூலம், துறவில் அறிவு மற்றும் பக்தித் தொண்டு செய்வதில் பரமபுருஷ பகவானிடம் எப்போதும் நிலைத்த மனம் உடைய யோகத்தைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் இந்த வாழ்விலேயே என் தொடர்பை அடைகிறார். ஏனென்றால் நானே பரமபுருஷன், பரம சத்தியம் ஆவேன்.

பதம் 3.25.28
தேவஹூதிர் உவாச
காசித் வயிஉசிதா பக்தி:கீத்ருசீ மம கோசரா
யயா பதம் தே நிர்வாணம் அஞ்ஜஸாந்வாச்னவா அஹம்

தேவஹூதி உவாச—தேவஹூதி கூறினாள்; காசித்-என்ன; தீவயி-உங்களிடம்; உசிதா-சரியாக; பக்தி-பக்தித் தொண்டு; கீத்ருசீ-எந்தவித; மம-என்னால்; கோசரா-பயிற்சி செய்யப் பொருத்தமான; யயா-அதனால்; பதம்-திருவடிகள்; தே-உங்களுடைய; நிர்வாணம்-விடுதலை; அஞ்ஜஸா-உடனே; அந்வாச்னவா-அடைவேன்; அஹம்-நான்.

பகவானின் இந்தக் கூற்றைக் கேட்டவுடன் தேவஹூதி விசாரித்தாள்: நான் தங்கள் திருவடித் தாமரையின் சேவையை எளிதாகவும், உடனேயும் அடைய எந்தவிதப் பக்தித் தொண்டு வளர்த்துக் கொண்டு பயிற்சி செய்ய ஏற்றது?

பதம் 3.25.29
யோயோகோ பகவத் -பாணோ நிர்வாணாத்மம்ஸ் த்வயோதித:
கீத்ருச: கதி சாங்கானி யதஸ் தத்வாவபோதனம்

ய:-எந்த; யோக:-யோக முறை; பகவத் பாண:-பரமபுருஷ பகவானைக் குறிவைத்து; நிர்வாண ஆத்மன்—ஒ நிர்வாணத்தின் உருவே; த்வயா-உங்களால்; உதித:-விளக்கப்பட்ட; கீத்ருச-எத்தன்மையது; கதி:-எவ்வளவு; ச-மற்றும்; அங்கானி-கிளைகள்; யத்—அதனால்; தத்வ-உண்மையின்; அவபோதனம்—புரிந்து கொள்ளுதல்.

நீங்கள் விளக்கியது போல யோக முறை, பரமபுருஷ பகவானை நோக்கமாகக் கொள்கிறது. மண்ணுலக இருப்பை முழுமையாக முடிப்பதற்காக உள்ளது. தயவு செய்து அந்த யோக முறையின் தன்மையை எனக்குத் தெரியப்படுத்துங்கள். அந்த மேன்மையான யோகத்தை உண்மையில் புரிந்து கொள்ள எத்தனை வழிகள் உள்ளன?

பதம் 3.25.30
ததேதன்மே விஜானீஹி யதாஹம் மந்த-தீர் ஹரே
ஸுகம் புத்த்யேய துர்போதம் யோஷா பவத-னுக்ரஹாத்

தத் ஏதத்—அதே; மே-என்னிடம்; விஜானீஹி-தயவுசெய்து விளக்குங்கள்; யதா—அதனால்; அஹம்—நான்; மந்த-மெதுவாக; தீ-எவருடைய புத்திக் கூர்மை; ஹரே-ஓ என் பகவானே; சுகம்-எளிதாக; புத்த்யேய-புரித்து கொள்ளலாம்; துர்போதம்-புரிந்து கொள்ள மிகக் கடினமான; யோஷா—பெண்; பவத் அனுக்ரஹாத்—உங்கள் அருளால்.

என் அன்பு மகனே, கபிலா, நான் ஒரு சாதாரணப் பெண். பரிபூரண உண்மையினைப் புரிந்து கொள்வது எனக்கு மிகக் கடினமானது ஏனென்றால் எனது அறிவுக்கூர்மை மிகச் சிறந்ததல்ல. ஆனால் நான் அத்துணை அறிவுக் கூர்மை உடையவளாக இல்லாவிட்டாலும், நீங்கள் தயவு செய்து அதை எனக்கு விளக்கினால் நான் புரிந்து கொள்ள இயலும், அதனால், மனம், சொல், சரீரம் கடந்த இன்பத்தை உணரமுடியும்.

பதம் 3.25.31
மைத்ரேய உவாச
விதித்வார்த்தம் கபிலோ மாதுர் இத்தம்
ஜாத-ஸ் நேஹோ பதிர தந்வாபிஜாத:
தத்வாம்னாயம் யத் ப்ரவதந்தி ஸாங்க்யம்
ப்ரோவாச வை பக்திவிதான யோகம்

மைத்ரேய உவாச—மைத்ரேயர் கூறினார்; விதித்தவா-தெரிந்து கொண்டு; அர்த்தம்—நோக்கம், கபில-கபில பகவான்; மாது—அவர் அன்னையின்; இத்தம்—இவ்வாறு; ஜாத-ஸ்நேஹ:-இரக்கம் கொண்டு; யத்ர-அவளிடம்; தந்வா-அவள் உடலிலிருந்து; அபி ஜாத-பிறந்து; தத்வ ஆம்னாயம்-சீட மரபினால் பெறப்பட்ட உண்மைகள்; யத்-எந்த; ப்ரவதந்தி—அவர்கள் அழைக்கிறார்கள்; ஸாங்க்யம்—ஸாங்க்ய தத்துவம்; ப்ரோவாச—அவர் வர்ணித்தார்; வை-உண்மையில்; பக்தி-பக்தித் தொண்டு; விதான-பரப்புதல்; யோகம்—அறிவார்ந்த யோகம்

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: தனது அன்னையின் கூற்றைக் கேட்ட பின்னர், அவளின் நோக்கத்தைக் கபிலரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் அவளிடம் கருணையுள்ளவரானார். ஏனெனில் அவர் அவளுடைய உடலிலிருந்து பிறந்தவர். சீட பரம்பரையில் பெறப்பட்ட, பக்தித் தொண்டு மற்றும் அறிவார்ந்த உணர்வு இரண்டும் இணைந்த சாங்க்ய தத்துவத்தை அவர் வருணித்தார்.

பதம் 3.25.32
ஸ்ரீ-பகவான் உவாச
தேவானாம் குண-லிங்கானாம் ஆனுச்ர -விக கர்மணாம்
ஸத்வ – ஏவைகமனஸோ வ்ருத்தி ஸ்வாபாவிகீது யா
அனிமித்தா பாகவதீ பக்தி: ஸித்தே கரீயஸீ

ஸ்ரீ-பகவான் உவாச—பரம புருஷ பகவான் கூறினார்; தேவானாம்-புலன்களின் அல்லது புலன்களை வழிநடத்தும் தெய்வங்களின்; குண-லிங்கானாம்-புலனுக்குரிய பொருட்களைக் கூர்ந்து நோக்கும்; அனுஸ்ரவிக-சாஸ்திர நூல்களின் படி; கர்மணாம்-வேலை செய்யும்; ஸத்வே-மனத்திடம் அல்லது பகவானிடம்; ஏவ-மட்டும்; ஏக- மனஸ–பிரிக்கப்படாத மனமுடைய மனிதனின்; வ்ருத்தி-விருப்பம்; ஸ்வாபாவிகீ-இயற்கையான; து—உண்மையில்; யா-எந்த; அனிமித்தா-நோக்கமின்றி; பாதவதீ-பரம புருஷ பகவானிடம்; பக்தி-பக்தித் தொண்டு; ஸித்தே-முக்தியைவிட; கரீயஸீ- மேலானது.

பகவான் கபிலர் கூறினார்: புலன்கள் எல்லாம் தேவர்களைக் குறிக்கும் பிரதிநிதிகள். அவற்றின் இயற்கையான விருப்பம் என்னவென்றால் வேதத்தில் கூறப்பட்ட நியதிகளை அடியொற்றி வேலை செய்வதாகும். புலன்கள் தேவர்களின் பிரதிநிதிகளாய் இருப்பது போல, மனமானது பரமபுருஷ பகவானின் பிரதிநிதியாகும். மனத்தின் இயற்கையான கடமை தொண்டு செய்தலாகும். அந்தத் தொண்டு செய்யும் ஆர்வம் பரமபுருஷ பகவானிடம் பக்தித் தொண்டில் எந்த நோக்கமுமின்றி, ஈடுபட்டால் அது முக்தியை விடவும் மேலானது.

பதம் 3.25.33
ஜரயத்யாக யா கோசம் நிகீர்ணமனலோ யதா

ஜரயதி—கரைகிறது; ஆசு-விரைவாக; யா—எந்த; கோசம்—சூக்ஷ்ம சரீரம்; நிகீர்ணம்—உண்டபொருட்கள்; அனல-நெருப்பு; யதா—போல.

வயிற்றில் உள்ள நெருப்பு நாம் உண்ணும் அனைத்தையும் ஜீரணிப்பது போல, பக்தி, பக்தித் தொண்டு எந்த தனிப்பட்ட முயற்சியுமின்றி உயிரினத்தின் சூட்சம உடலைக் கரைத்து விடுகிறது.

பதம் 3.25.34
நைகாத்மதாம் மே ஸ்ப்ருஹயந்தி கேசின்
மத்-பாதஸேவாபிரதா மதீஹா:
யேஅன்யோந்யதோ பாகவதா: ப்ரஸஜ்ய
ஸபாஜயந்தே மம பௌருஷாணி

ந-ஒரு போதும் இல்லை; ஏக ஆத்மதாம்—ஒன்றாக இணைதல்; மே-என்னுடைய;ஸ்ப்ருஹயந்தி-அவர்கள் ஆசைப்படுகின்றனர்; கேசித்-எந்த; மத்பாத-ஸேவா-என் பாத கமலங்களின் தொண்டு; அபிரதா-ஈடுபட்டு; மத்இஹா—என்னை அடையப் பெரு முயற்சி செய்து; யே-அவர்கள்; அந்யோந்யத-பரஸ்பரம்; பாகவதா:-தூய பக்தர்கள்; ப்ரஸஜ்ய-கூடி; ஸபாஜயந்தே-புகழ்ந்து; மம-என்னுடைய; பௌருஷாணி- புகழ்வாய்ந்த செயல்கள்.

பக்தித் தொண்டின் செயல்களுடன் இணைந்த, என் தாமரைத் திருவடிகளின் தொண்டில் எப்போதும் ஈடுபட்டுள்ள ஒரு தூய பக்தர், ஒரு போதும் என்னுள் இணைய விரும்புவதில்லை. சிறிதும் தயக்கமின்றி ஈடுபட்டுள்ள அம்மாதிரியான பக்தர் எப்போதும் என் திருவிளையாடல்களையும் செயல்களையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்.

பதம் 3.25.35
பச்யந்திதே மே ருசிராணி அம்ப ஸந்த
ப்ரஸன்ன- வக்த்ராருன -லோசனானி,
ரூபாணி திவ்யானி வர-ப்தானி
ஸாகம் வாசம் ஸ்ப்ருஹணீயாம் வதந்தி

பச்யந்தி-பார்க்கின்றனர்; தே—அவர்கள்; மே-என்னுடைய; ருசிராணி-அழகிய; அம்ப-ஒ அன்னையே; ஸந்த-பக்தர்கள்; ப்ரஸன்ன-புன்சிரிப்புடன்; வக்த்ர-முகம்; அருண—உதய சூரியன் போல; லோசனானி-கண்கள்; ரூபாணி-தோற்றங்கள்; திவ்யானி-திவ்யமான; வரப்ரதானி-இரக்க குணமுள்ள; ஸாகம்-என்னுடன்; வாசம்-சொற்கள்; ஸ்ப்ருஹணீயாம்-நட்பான; வதந்தி-அவர்கள் பேசுகின்றன.

ஓ என் அன்னையே, காலையில் உதிக்கும் கதிரவன் போன்ற கண்களுடன் கூடிய என் வடிவத்தின் சிரித்த முகத்தை என் பக்தர்கள் எப்போதும் பார்க்கின்றனர். இரக்க குணமுள்ள என் பல்வேறு திவ்ய வடிவங்களை அவர்கள் பார்க்க விரும்புகின்றனர், மேலும் அவர்கள் என்னுடன் நட்புடனும் பேசுகின்றனர்.

பதம் 3.25.36
தைர் தர்சனீயாவயவை உதார-
விலாஸ -ஹாஸே -க்ஷித வாம-ஸூக்தை:
ஹ்ருதாத்மனோ ஹ்ருத ப்ராணாம்ஸ்ச பக்திர்
அனிச்சதோ மே கதிமண்வீம் ப்ரயுங்க்தே

தை:-அந்த வடிவங்களால்; தர்சனீய-கவர்ச்சிமிக்க; அவயவை-அவருடைய அங்கங்கள்; உதார—உன்னதமான; விலாஸ-லீலைகள்; ஹாஸ-புன்சிரிப்பு; ஈக்ஷித—பார்வைகள்; வாம-இனிமையாக; ஸூக்தை-மகிழ்ச்சி நிரம்பிய சொற்கள்; ஹ்ருத—கவரப்பட்டு; ஆத்மன:-அவர்கள் மனங்கள்; ஹ்ருத-கவரப்பட்டு; ப்ராணான்-அவர்களின் புலன்கள்; ச-மற்றும்; பக்தி-பக்தித் தொண்டு; அனிச்சத்—விருப்பமின்றி; மே-என்னுடைய; கதிம்-இருப்பிடம்; அண்வீம்-நுட்பமான; ப்ரயுங்கத்தே—பெறுதல்.

புன்சிரிப்பும், கவர்ச்சியும் மிக்க பகவானின் அழகிய வடிவங்களைப் பார்த்து, அவருடைய மிகவும் இனிமையான சொற்களைக் கேட்டு, தூயபக்தர் ஏறக்குறைய பிற எல்லா ஈடுபாடுகளிலிருந்தும் விடுதலை அடைகின்றனர். அவர் பக்தித் தொண்டில் ஆழ்ந்து விடுகிறார். அவருடைய விருப்பம் இல்லாமல் இருந்தாலும் கூட, தனிப்பட்ட பெருமுயற்சியின்றி அவர் வீடுபேறு பெறுகிறார்.

பதம் 3.25.37
அதோ விபூதிம் மம மாயாவினஸ்தாம்
ஐஸ்வர்யம் அஷ்டாங்கம் அனுப்ரவ்ருத்தம்
ச்ரியம் பாகவதீம் வாஸ்ப்ருஹயந்தி பத்ராம்
பரஸ்ய மே தே அச்னுவதேது லோகே

அதோ-பின்னர்; விபூதிம்-செல்வவளம்; மம-என்னுடைய; மாயாவின-மாயையின் இறைவன்; தாம்—அந்த; ஐஸ்வர்யம்-யோக முழுமை; அஷ்டாங்கம்—எட்டு பகுதிகளால் ஆன; அனுப்ரவ்ருத்தம்—பின்பற்றும்; ஸ்ரியம்-புகழொளி; பாகவதீம்—பகவானின் அரசு; வா—அல்லது; அஸ்ப்ருஹயந்தி—அவர்கள் விரும்பவில்லை; பத்ராம்—ஆனந்த மயமான; பரஸ்ய-பகவானின்; மே-என்னுடைய; தே—அந்த பக்தர்கள்; அஸ்னுவதே-அனுபவிக்கின்றனர்; து—ஆனால்; லோகே-இந்த வாழ்வில்.

இவ்வாறு, அவர் என்னுடைய நினைவில் முழுதும் மூழ்கி இருப்பதால், அந்த பக்தர் ஸத்ய லோகத்தை உள்ளடக்கிய மேல் உலகங்களில் பெறக்கூடிய உயர்ந்த வரங்களையும் விரும்புவதில்லை. அவர் யோகத்திலிருந்து எட்டுவித ஜடவுலக முழுமையையும் பகவானின் அரசாங்கத்திற்கு உயர்த்தப்படவும் விரும்புவதில்லை. ஆனால் விரும்பவில்லை என்றாலும் அந்த பக்தர் இவ்வாழ்விலேயே வழங்கப்படும் எல்லா ஆசிகளையும் அனுபவிக்கிறார்.

பதம் 3.25.38
ந கர்ஹிசின் மத்-பரா: சாந்-ரூபே
நங்க்ஷ்யந்தி நோமே அநிமிஷோலேடி ஹேதி:
யேஷாம் அஹம் ப்ரிய ஆத்ம ஸுதஸ்ச
ஸகா குரு: ஸுஹ்ருதோ தைவம் இஷ்டம்

ந-இல்லை; கர்ஹிசித்-எப்போதும்; மத்பரா-என் பக்தர்கள்; சாந்தரூபே- ஓ அன்னையே; நங்க்ஷ்யந்தி-இழக்கும்; நா-இல்லை; மே-என்னுடைய; அனிமிஷ-காலம்; லேடி-அழிக்கும்; ஹேதி- ஆயுதம்; யேஷாம்—அவருடைய; அஹம்-நான்; ப்ரிய-அன்பான; ஆத்மா-தான்; சுத-மகன்; ச-மற்றும்; ஸகா-நண்பன்; குரு-ஆசான்; சுஹ்ருத:-கொடையாளர்; தைவம்-தெய்வம்; இஷ்டம்- தேர்ந்தெடுக்கப்பட்ட.

பகவான் மேலும் கூறினார்: என் அன்பு அன்னையே, அம்மாதிரி தெய்வீக செல்வ வளத்தைப் பெற்ற பக்தர்கள் அவற்றை ஒருபோதும் இழப்பதில்லை; ஆயுதங்களோ, கால மாற்றமோ அத்தகைய செல்வ வளங்களை அழிக்க முடியாது. பக்தர்கள் என்னை அவர்கள் நண்பனாக, உறவினராக, மகனாக, குருவாக, கொடையாளராக, பரமனாக பகவானாக ஏற்றுக் கொள்வதால், எந்த நேரத்திலும் அவர்கள் உடைமைகளை இழக்கும்படி செய்ய இயலாது.

பதங்கள் 3.25.39 – 3.25.40
இமம் லோகம் தனதவாமும் ஆத்மான முபயாயினம்
ஆத்மானம் அனு யே சேஹயே ராய: பசவோ க்ருஹா:

விஸ்ருஜ்ய ஸர்வான் அநயாம்ஸ்ச மாமேவம் விச்வதோமுகம்
பஜந்தி அனந்யயா பக்த்யா தான் ம்ருத்யோர் அதிபாரயே

இமம்-இந்த; லேகாம்-உலகம்; ததா—அதற்கு ஏற்ப; ஏவ-நிச்சயமாக; அமும்—அந்த உலகம்; ஆத்மானம்—ஸ்தூல உடல்; உபய-இரண்டிலும்; அயினம்-பயணம் செய்து; ஆத்மானம்-உடல்; அனு-உடன் கொண்ட தொடர்பில்; யே-அவர்கள்; ச-உடன்; இக-இந்த உலகில்; யே-அந்த; ராய-செல்வம்; பசவ-கால்நடை; க்ருஹா-வீடுகள்; விஸ்ருஜ்ய-விட்டுவிடு; ஸர்வான்—எல்லா; அந்யான்-பிற; ச-மற்றும்; மாம்-என்னை; ஏவம்-இவ்வாறு; விச்வதோமுகம்-அண்டத்தின் எல்லா இடத்திலும் பரவியுள்ள பசுவான்; பஜந்தி-அவர்கள் வழிபடுவர்; அனந்யயா-பின்வாங்காத; பக்தியா-பக்தித் தொண்டினால்; தான்-அவர்களுக்கு; ம்ருத்யோ-மரணத்தின்; அதிபாரயே-நான் மறுபக்கத்திற்கு எடுத்துச் செல்கிறேன்.

இவ்வாறு அண்டத்தின் எல்லா இடங்களிலும் பரவியுள்ள பகவான் ஆகிய என்னை, தயக்கம் இன்றி பக்தித் தொண்டில் வழிபடும் பக்தர்கள், மேலுலகக் கோள்களுக்கு உயர்த்தப்பட அல்லது இந்த உலகில், செல்வம், குழந்தைகள், கால்நடைகள் வீடு அல்லது உடலுடன் தொடர்புடைய எதனுடனும் மகிழ்ச்சியடைதல் ஆகிய எல்லா ஆசைகளையும் விட்டு விடுகிறார்கள். நான் அவரை, பிறப்பு இறப்புகளின் மறுபக்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.

பதம் 3.25.41
நாந்யத்ர மத் பகவத: ப்ரதான -புருஷேஸ் வராத்
ஆத்மன: ஸர்வ-பூதானம் பயம் தீவ்ரம் நிவர்த்ததே

ந-இல்லை; அந்யத்ர-மற்றபடி; மத்-என்னை விட; பகவதி-பரமபுருஷ பகவான்; ப்ரதான-புருஷ: ஈச்வராத்-ப்ரக்ருதி மற்றும் புருஷர் இரண்டின் பகவான்; ஆத்மன: ஸர்வ-பூதானம்-எல்லா வாழும் உயிரினங்களில்; பயம்-அச்சம்; தீவிரம்-பயங்கரமான; நிவர்த்ததே- விலக்கப்பட்டது.

என்னைத் தவிர வேறு பாதுகாப்பை நாடும் எவருக்கும் பிறப்பு, இறப்பின் பயங்கரமான அச்சம் ஒருபோதும் விலக்கப்பட முடியாதது. ஏனென்றால் நானே எல்லாம் வல்ல இறைவன், பரமபுருஷ பகவான், எல்லாப் படைப்பின் உண்மையான மூலம், எல்லா ஆத்மாக்களின் பரமாத்மா ஆவேன்.

பதம் 3.25.42
மத்பயாத் வாதி வாதோஅயம் ஸுர்யஸ் தபதி மத்-பயாத் வர்ஷதீந்த்ரோ தஹதி அக்னிர் ம்ருத்யுஷ்சரதி மத்-பயாத்

மத்பயாத்-என்னிடம் உள்ள பயத்தால்; வாதி-அடிக்கிறது; வாத:-காற்று; அயம்-இந்த; சூரிய-கதிரவன்; தபதி-ஒளிர்கிறது; மத்பயாத்-என்னிடம் உள்ள பயத்தால்; வர்ஷதீ-மழை பொழிகிறது; இந்திர-இந்திரன்; தஹதி-எரிகிறது; அக்னி-நெருப்பு; ம்ருத்யு-மரணம்; சரதி-செல்கிறது; மத்பயாத்-என்னிடம் உள்ள பயத்தால்.

என் மேலாட்சியால், என் மீது கொண்டுள்ள பயத்தால் காற்று அடிக்கிறது; கதிரவன் ஒளி வீசுகிறது; என் மீதுள்ள பயத்தால் மேகங்களுக்கு அதிபதியான இந்திரன் மழை பொழிவிக்கிறான். நெருப்பு எரிகிறது என்னிடம் உள்ள பயத்தால் மரணம் நிகழ்ந்து உயிர்ப்பலி நேர்கிறது.

பதம் 3.25.43
ஞான -வைராக்ய யுக்தேன பக்தி-யோகேன யோகின:
க்ஷேமாய – பாத-மூலம் மே ப்ரவிசந்தி அகுதோபயம்

ஞான-அறிவுடன்; வைராக்கிய-துறவு; யுக்தேன-நிரம்பி; பக்தி யோகேன-பக்தித் தொண்டினால்; யோகின:-யோகிகள்; க்ஷே மாய— நித்தியமான நன்மைக்காக; பாதமூலம்-பாதங்கள்; மே—என்னுடைய; ப்ரவிசந்தி—பாதுகாப்பு எடுத்து; அகுத-பயம்-பயம் இன்றி.

தெய்வீக அறிவும், துறவும் நிரம்பிய யோகிகள் அவர்களின் நிலையான நன்மைக்காக பக்தித் தொண்டில் ஈடுபட்டு என் தாமரைப் பாதங்களைச் சரண் அடைகிறார்கள். மேலும் பகவான் ஆதலால் அவர்கள் பயமின்றி, கடவுளின் அரசில் நுழைய இயலுகின்றது.

பதம் 3.25.44
ஏதாவான் ஏவ லோகே அஸ்மிந் பும்ஸாம் நி:ச்ரேயஸோதய: தீவ்ரேண பக்தி-யோகேன மனோ மயிஅர்பிதம் ஸ்திரம்

ஏதாவான் ஏவ—அதுவரைமட்டும்; லோகே அஸ்மிந்-இந்த உலகில்; பும்ஸாம்-மனிதர்களின்; நிச்ரேயஸ—வாழ்வின் இறுதி நிறைவு; உதய—அடைதலின்; தீவ்ரேண-தீவிரமான; பக்தி- யோகேன-பக்தித் தொண்டின் பயிற்சிமூலம்; மன-மனம்; மயி-என்னிடம்; அர்பிதம்-நிலைத்தது; ஸ்திரம்-நிலையாக.

அதனால் பகவானைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்போர் பக்தித் தொண்டின் தீவிரமான பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அச்செயலானது வாழ்வின் நிரந்தரமான முழுப்பயனையும் அடைவதற்கு உரிய ஒரே வழியாகும்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “பக்தித் தொண்டின் சிறப்புகள்” எனும் தலைப்பைக் கொண்ட இருபத்தைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare