அத்தியாயம் – 25
பக்தித் தொண்டின் சிறப்புகள்
பதம் 3.25.1 : ஸ்ரீ சௌனகர் கூறினார்: பரமபுருஷ பகவான், பிறப்பு அற்றவராக இருந்த போதிலும், அவருடைய அந்தரங்க சக்தியினால் கபில முனிவராகப் பிறப்பெடுத்தார். முழு மனித குலத்தின் பயனுக்காக எல்லாம் கடந்த அறிவைப் பரப்புவதற்காக அவர் இவ்வுலகிற்கு இறங்கி வந்தார்.
பதம் 3.25.2 : சௌனகர் தொடர்ந்தார்: பகவானை விட அதிகமாக அறிந்தவர் எவரும் இல்லை. அவரைக் காட்டிலும் மிகவும் வணங்கத் தகுந்தவர் அல்லது மிகவும் பக்குவமடைந்த ஒரு யோகி என்று எவரும் இல்லை. அதனால் அவரே வேதங்களின் தலைவர், அவரைப் பற்றி எப்போதும் கேட்பதே புலன்கள் அடைகின்ற உண்மையான இன்பமாகும்.
பதம் 3.25.3 : எனவே அவருடைய அந்தரங்க சக்தியினால் இந்த எல்லா செயல்களையும் மேற்கொள்ளும், சுயவிருப்பம் முழுமையாக உள்ள அந்த பரமபுருஷ பகவானின் செயல்களையும் லீலைகளையும் தயவு செய்து நுட்பமாக விவரித்துச் சொல்லுங்கள்.
பதம் 3.25.4 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: மிகுந்த சக்தி வாய்ந்த மைத்ரேய முனிவர், வியாசதேவரின் நண்பர் ஆவார். தெய்விக அறிவைப் பற்றிய விதுரரின் விசாரணையால் மகிழ்ந்து, ஊக்குவிக்கப்பட்டு, மைத்ரேயர் பின்வருமாறு கூறினார்.
பதம் 3.25.5 : மைத்ரேயர் கூறினார்: கர்தமர் காட்டிற்குச் சென்ற பொழுது, பகவான் கபிலர் தன் அன்னையான தேவஹூதியை மகிழ்விக்க பிந்து ஸரோவரின் கரையில் தங்கினார்.
பதம் 3.25.6 : பரம சத்தியத்தின் முடிவான குறிக்கோளை அவளுக்குக் காட்ட முடிந்தவரான கபிலர், அவளுக்கு முன் ஓய்வாக அமர்ந்திருந்த பொழுது, பிரம்மா தன்னிடம் பேசியதை தேவஹூதி, நினைவு கூர்ந்தாள். எனவே அவள் கபிலரிடம் பின்வருமாறு கேட்கத் தொடங்கினாள்.
பதம் 3.25.7 : தேவஹூதி கூறினாள்: என்னுடைய பௌதீகப் புலன்களால் ஏற்படும் தொல்லையால் நான் நலிவுற்றேன், ஏனென்றால் இந்தப் புலன் தொல்லையால், என் பகவானே, நான் அறியாமையாகிய படுகுழியில் விழுந்து விட்டேன்.
பதம் 3.25.8 : உங்கள் தலைமை ஒன்றே அறியாமையாகிய இருண்ட பகுதியிலிருந்து வெளியில் வரும் என் வழியாகும். ஏனென்றால் நீங்களே என் தெய்வீகக் கண் ஆவீர்கள்; அதை உங்கள் கருணையால் மட்டுமே, பற்பல பிறவிகளுக்குப் பின்னர் நான் அடைந்தேன்.
பதம் 3.25.9 : நீங்கள் பரமபுருஷ பகவான், எல்லா உயிர்களின் இறைவனும் மூலமும் ஆவீர்கள். நீங்கள் அண்டத்தின் அறியாமையாகிய இருளைப் சிதறடித்து, கதிரவனின் கதிர்களைப் பரப்புவதற்காக உதித்தீர்கள்.
பதம் 3.25.10 : என் பகவானே, இப்போது என் மிகு மயக்கத்தைச் சிதறடிக்குமாறு வேண்டுகிறேன். என் போலியான ஆளுமை அகங்காரத்தால், உணர்ச்சியால் நான் உங்கள் மாயையால் ஈடுபடுத்தப்பட்டு, என்னை உடலுடனும், உடல் சம்பந்தமான உறவுகளுடனும் ஐக்கியப்படுத்திக் கொண்டேன்.
பதம் 3.25.11 : தேவஹூதி தொடர்ந்தாள்: நான் உங்கள் தாமரைத் திருவடிகளில் சரண் புகுந்துள்ளேன். ஏனென்றால் சரணடைய தாங்கள் ஒருவர் மட்டும் தான் உள்ளீர்கள். உலகியல் வாழ்வு எனும் மரத்தை வெட்டும் கோடரி நீங்கள். அதனால் ஆன்மீகவாதிகளில் மிகச் சிறந்தவராகிய உங்களுக்கு நான் என்னுடைய வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன், நான் உங்களிடமிருந்து ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் இவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றிய தகவல் கேட்கிறேன்.
பதம் 3.25.12 : மைத்ரேயர் கூறினார்: தெய்வீக உணர்தலுக்கான அவர் அன்னையின் மாசற்ற ஆசையைக் கேட்ட பிறகு, பகவான் அவள் வினவியதற்காக, தனக்குள்ளேயே அவளுக்கு நன்றி தெரிவித்தார், இவ்வாறு, அவர் புன்னகை தவழும் முகத்துடன் தன்னை உணர்தலில் ஆர்வமுடைய ஆன்மீகவாதிகளின் பாதையை விளக்கினார்.
பதம் 3.25.13 : பரமபுருஷ பகவான் பதிலளித்தார்: உயிரினத்தின் இறுதியான நன்மைக்காக உள்ளதும், பகவானுக்கும், தனிப்பட்ட ஆன்மாவிற்கும் தொடர்பு ஏற்படுத்துவதும் ஆகிய யோக முறை சிறந்தது. இவ்வுலகில் இன்பம், துன்பம் இவற்றிலிருந்து பற்று அறுதற்கு உதவி புரியும் யோக முறையே மிகவும் உயர்ந்ததாகும்.
பதம் 3.25.14 : ஓ மிகுந்த பக்தியுள்ள அன்னையே, நான் முற்காலத்தில் சிறந்த முனிவர்களுக்கு விளக்கிய அந்தப் பழமையான யோக முறையை இப்போது உங்களுக்கு விளக்குவேன். அது எல்லா விதத்திலும் பயனுடையதும், செயல்முறை சார்ந்ததும் ஆகும்.
பதம் 3.25.15 : ஜடவுலக இயற்கையின் மூன்று குணங்களால் வாழ்வனவற்றின் உணர்வு கவரப்பட்டால் அந்நிலை கட்டுப்பாடான வாழ்வு எனப்படும். ஆனால் அதே உணர்வு நிலை பரமபுருஷ பகவானின் மீது பற்றிக் கொண்டால், ஒருவர் வீடு பேற்றுக்குரிய உணர்வில் இருப்பார்.
பதம் 3.25.16 : இந்த உடம்பினை ஒருவர் தவறாகப் புரிந்து கொள்ளுதற்கு ஏதுவாகிய, ‘நான்’ எனும் அகங்காரம், காமம், பேராசை ஆகிய மாசுகளிலிருந்து முழுதும் உடலைத் தூய்மையாக்கும் போது, ஒருவர் மனம் தூய்மையடைகிறது. அந்தத் தூய நிலையில், உலகியல் இன்பம், துன்பம் எனப்படும் நிலையின் எல்லையைக் கடந்து மேம்பாடு அடைகிறார்.
பதம் 3.25.17 : அந்த நேரத்தில் ஆத்மா தன்னை ஜடவுலக இருப்பிற்கு அப்பாற்பட்டதாக, எப்போதும் சுயமாக பிரகாசிப்பதாக மிக நுண்ணியதாக இருப்பினும், எப்போதும் உடைந்து காணப்படாமல் சிறிய அளவாக காணப்படும்.
பதம் 3.25.18 : தன்னை உணர்ந்த நிலையில், ஞானப் பயிற்சியாலும், பக்தித் தொண்டில் துறவாலும், ஒருவர் எல்லாவற்றையும் சரியான நோக்கில் பார்க்கிறார்; அவர் ஜடவுலக இருப்பின் மீது விருப்பு வெறுப்பு அற்றவர் ஆகிறார். ஜடவுலக பாதிப்பானது அவர் மீது குறைந்த ஆற்றலுடன் செயல்படுகிறது.
பதம் 3.25.19 : பரமபுருஷ பகவானிடம் பக்தித் தொண்டில் ஈடுபட்டால் அன்றி எந்த வித யோகியாலும் தன்னை உணர்தலில் முழுமை அடைய முடியாது, ஏனென்றால் அது மட்டுமே மங்கலமான வழியாகும்.
பதம் 3.25.20 : ஒவ்வொரு படித்த மனிதனும் ஜடப் பொருளின் மீது கொண்டுள்ள பற்றானது, ஆன்மாவுக்கு எதிரான மிகப்பொரிய சிக்கல் ஆகும் என்று நன்கு அறிந்திருக்கிறான். ஆனால் தேக பற்று தன்னை அறிந்த பக்தர்களிடம் இருக்கும் பொழுது, அது வீடுபேற்றுக்கான கதவைத் திறக்கிறது.
பதம் 3.25.21 : ஸாதுவின் அடையாளங்கள் என்னவென்றால், அவர் எல்லா வாழும் உயிரினங்களிடம் கொள்ளும் சகிப்புத் தன்மை, கருணை, தோழமை ஆகும். அவருக்கு எதிரிகள் இல்லை, அவர் அமைதியானவர், புனித நூல்களைப் பின்பற்றுபவர். அவரின் எல்லா தனிப் பண்புகளும் விழுமியவை.
பதம் 3.25.22 : அம்மாதிரி ஸாது விலகிச் செல்லாமல் பகவானிடம் கடும் உறுதியுடன் கூடிய பக்தித் தொண்டில் ஈடுபடுகிறார். பகவானுக்காக அவர் உலகத்தில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பு பாராட்டுபவர்கள் போன்ற பிற தொடர்புகளை ஒதுக்கி விடுகிறார்.
பதம் 3.25.23 : பரமபுருஷ பகவானாகிய என்னைப் பற்றிக் கேட்பதிலும், வழிபடுவதிலும், நிலையாக ஈடுபட்டிருக்கும் ஸாதுக்கள் உலகத் தொல்லைகளால் துன்பப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் எப்போதும் என் லீலைகள் மற்றும் செயல்களின் எண்ணங்களால் நிறைந்துள்ளனர்.
பதம் 3.25.24 : ஓ என் அன்னையே, ஓ நல்லொழுக்கமுடைய பெருமாட்டியே, இவையே எல்லாப் பற்றிலிருந்தும் விடுபட்ட சிறந்த பக்தர்களின் குணங்களாகும். நீங்கள் அம்மாதிரி புனித சாதுக்களிடம் பற்றுக் கொள்ள விரும்ப வேண்டும். ஏனென்றால் இது உலகப் பற்றின் பெருங்கேடான விளைவுகளுக்கு எதிரிடையாகச் செயல்படுகிறது.
பதம் 3.25.25 : தூய பக்தர்களின் தொடர்பில், பரமபுருஷ பகவானின் செயல்கள் மற்றும் லீலைகள் பற்றிக் கலந்துரையாடுவது காதுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாகும். அந்த அறிவு பதியவைக்கப்படுவதால் ஒருவர் படிப்படியாக முக்திக்கான வழியில் முன்னேறுகிறார். அதன் பின்னர், அவர் விடுதலையடைகிறார், அவர் கவனம் நிலைபெறுகிறது. பின்னர் உண்மை பக்தியும் பக்தித் தொண்டும் தொடங்குகின்றன.
பதம் 3.25.26 : இவ்வாறு பக்தர்களின் தொடர்பில் பக்தித் தொண்டில் உணர்வுடன் ஈடுபட்டுள்ள ஒருவர் இந்த உலகம் மறுவுலகம் இரண்டிலும் பகவானின் செயல்களை நினைப்பதன் மூலம் புலன் நுகர்வில் வெறுப்படைகிறார். கிருஷ்ண உணர்வு முறையே எளிய யோக முறையாகும். ஒருவர் உண்மையில் பக்தித் தொண்டின் அந்தப் பாதையில் அமைந்தால், அவரால் மனத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
பதம் 3.25.27 : இவ்வாறு மண்ணுலக இயற்கையினது தொண்டில் ஈடுபடாமல் இருப்பதன் மூலம் கிருஷ்ண உணர்வை வளர்ப்பதன் மூலம், துறவில் அறிவு மற்றும் பக்தித் தொண்டு செய்வதில் பரமபுருஷ பகவானிடம் எப்போதும் நிலைத்த மனம் உடைய யோகத்தைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் இந்த வாழ்விலேயே என் தொடர்பை அடைகிறார். ஏனென்றால் நானே பரமபுருஷன், பரம சத்தியம் ஆவேன்.
பதம் 3.25.28 : பகவானின் இந்தக் கூற்றைக் கேட்டவுடன் தேவஹூதி விசாரித்தாள்: நான் தங்கள் திருவடித் தாமரையின் சேவையை எளிதாகவும், உடனேயும் அடைய எந்தவிதப் பக்தித் தொண்டு வளர்த்துக் கொண்டு பயிற்சி செய்ய ஏற்றது?
பதம் 3.25.29 : நீங்கள் விளக்கியது போல யோக முறை, பரமபுருஷ பகவானை நோக்கமாகக் கொள்கிறது. மண்ணுலக இருப்பை முழுமையாக முடிப்பதற்காக உள்ளது. தயவு செய்து அந்த யோக முறையின் தன்மையை எனக்குத் தெரியப்படுத்துங்கள். அந்த மேன்மையான யோகத்தை உண்மையில் புரிந்து கொள்ள எத்தனை வழிகள் உள்ளன?
பதம் 3.25.30 : என் அன்பு மகனே, கபிலா, நான் ஒரு சாதாரணப் பெண். பரிபூரண உண்மையினைப் புரிந்து கொள்வது எனக்கு மிகக் கடினமானது ஏனென்றால் எனது அறிவுக்கூர்மை மிகச் சிறந்ததல்ல. ஆனால் நான் அத்துணை அறிவுக் கூர்மை உடையவளாக இல்லாவிட்டாலும், நீங்கள் தயவு செய்து அதை எனக்கு விளக்கினால் நான் புரிந்து கொள்ள இயலும், அதனால், மனம், சொல், சரீரம் கடந்த இன்பத்தை உணரமுடியும்.
பதம் 3.25.31 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: தனது அன்னையின் கூற்றைக் கேட்ட பின்னர், அவளின் நோக்கத்தைக் கபிலரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் அவளிடம் கருணையுள்ளவரானார். ஏனெனில் அவர் அவளுடைய உடலிலிருந்து பிறந்தவர். சீட பரம்பரையில் பெறப்பட்ட, பக்தித் தொண்டு மற்றும் அறிவார்ந்த உணர்வு இரண்டும் இணைந்த சாங்க்ய தத்துவத்தை அவர் வருணித்தார்.
பதம் 3.25.32 : பகவான் கபிலர் கூறினார்: புலன்கள் எல்லாம் தேவர்களைக் குறிக்கும் பிரதிநிதிகள். அவற்றின் இயற்கையான விருப்பம் என்னவென்றால் வேதத்தில் கூறப்பட்ட நியதிகளை அடியொற்றி வேலை செய்வதாகும். புலன்கள் தேவர்களின் பிரதிநிதிகளாய் இருப்பது போல, மனமானது பரமபுருஷ பகவானின் பிரதிநிதியாகும். மனத்தின் இயற்கையான கடமை தொண்டு செய்தலாகும். அந்தத் தொண்டு செய்யும் ஆர்வம் பரமபுருஷ பகவானிடம் பக்தித் தொண்டில் எந்த நோக்கமுமின்றி, ஈடுபட்டால் அது முக்தியை விடவும் மேலானது.
பதம் 3.25.33 : வயிற்றில் உள்ள நெருப்பு நாம் உண்ணும் அனைத்தையும் ஜீரணிப்பது போல, பக்தி, பக்தித் தொண்டு எந்த தனிப்பட்ட முயற்சியுமின்றி உயிரினத்தின் சூட்சம உடலைக் கரைத்து விடுகிறது.
பதம் 3.25.34 : பக்தித் தொண்டின் செயல்களுடன் இணைந்த, என் தாமரைத் திருவடிகளின் தொண்டில் எப்போதும் ஈடுபட்டுள்ள ஒரு தூய பக்தர், ஒரு போதும் என்னுள் இணைய விரும்புவதில்லை. சிறிதும் தயக்கமின்றி ஈடுபட்டுள்ள அம்மாதிரியான பக்தர் எப்போதும் என் திருவிளையாடல்களையும் செயல்களையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்.
பதம் 3.25.35 : ஓ என் அன்னையே, காலையில் உதிக்கும் கதிரவன் போன்ற கண்களுடன் கூடிய என் வடிவத்தின் சிரித்த முகத்தை என் பக்தர்கள் எப்போதும் பார்க்கின்றனர். இரக்க குணமுள்ள என் பல்வேறு திவ்ய வடிவங்களை அவர்கள் பார்க்க விரும்புகின்றனர், மேலும் அவர்கள் என்னுடன் நட்புடனும் பேசுகின்றனர்.
பதம் 3.25.36 : புன்சிரிப்பும், கவர்ச்சியும் மிக்க பகவானின் அழகிய வடிவங்களைப் பார்த்து, அவருடைய மிகவும் இனிமையான சொற்களைக் கேட்டு, தூயபக்தர் ஏறக்குறைய பிற எல்லா ஈடுபாடுகளிலிருந்தும் விடுதலை அடைகின்றனர். அவர் பக்தித் தொண்டில் ஆழ்ந்து விடுகிறார். அவருடைய விருப்பம் இல்லாமல் இருந்தாலும் கூட, தனிப்பட்ட பெருமுயற்சியின்றி அவர் வீடுபேறு பெறுகிறார்.
பதம் 3.25.37 : இவ்வாறு, அவர் என்னுடைய நினைவில் முழுதும் மூழ்கி இருப்பதால், அந்த பக்தர் ஸத்ய லோகத்தை உள்ளடக்கிய மேல் உலகங்களில் பெறக்கூடிய உயர்ந்த வரங்களையும் விரும்புவதில்லை. அவர் யோகத்திலிருந்து எட்டுவித ஜடவுலக முழுமையையும் பகவானின் அரசாங்கத்திற்கு உயர்த்தப்படவும் விரும்புவதில்லை. ஆனால் விரும்பவில்லை என்றாலும் அந்த பக்தர் இவ்வாழ்விலேயே வழங்கப்படும் எல்லா ஆசிகளையும் அனுபவிக்கிறார்.
பதம் 3.25.38 : பகவான் மேலும் கூறினார்: என் அன்பு அன்னையே, அம்மாதிரி தெய்வீக செல்வ வளத்தைப் பெற்ற பக்தர்கள் அவற்றை ஒருபோதும் இழப்பதில்லை; ஆயுதங்களோ, கால மாற்றமோ அத்தகைய செல்வ வளங்களை அழிக்க முடியாது. பக்தர்கள் என்னை அவர்கள் நண்பனாக, உறவினராக, மகனாக, குருவாக, கொடையாளராக, பரமனாக பகவானாக ஏற்றுக் கொள்வதால், எந்த நேரத்திலும் அவர்கள் உடைமைகளை இழக்கும்படி செய்ய இயலாது.
பதங்கள் 3.25.39 – 3.25.40 : இவ்வாறு அண்டத்தின் எல்லா இடங்களிலும் பரவியுள்ள பகவான் ஆகிய என்னை, தயக்கம் இன்றி பக்தித் தொண்டில் வழிபடும் பக்தர்கள், மேலுலகக் கோள்களுக்கு உயர்த்தப்பட அல்லது இந்த உலகில், செல்வம், குழந்தைகள், கால்நடைகள் வீடு அல்லது உடலுடன் தொடர்புடைய எதனுடனும் மகிழ்ச்சியடைதல் ஆகிய எல்லா ஆசைகளையும் விட்டு விடுகிறார்கள். நான் அவரை, பிறப்பு இறப்புகளின் மறுபக்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.
பதம் 3.25.41 : என்னைத் தவிர வேறு பாதுகாப்பை நாடும் எவருக்கும் பிறப்பு, இறப்பின் பயங்கரமான அச்சம் ஒருபோதும் விலக்கப்பட முடியாதது. ஏனென்றால் நானே எல்லாம் வல்ல இறைவன், பரமபுருஷ பகவான், எல்லாப் படைப்பின் உண்மையான மூலம், எல்லா ஆத்மாக்களின் பரமாத்மா ஆவேன்.
பதம் 3.25.42 : என் மேலாட்சியால், என் மீது கொண்டுள்ள பயத்தால் காற்று அடிக்கிறது; கதிரவன் ஒளி வீசுகிறது; என் மீதுள்ள பயத்தால் மேகங்களுக்கு அதிபதியான இந்திரன் மழை பொழிவிக்கிறான். நெருப்பு எரிகிறது என்னிடம் உள்ள பயத்தால் மரணம் நிகழ்ந்து உயிர்ப்பலி நேர்கிறது.
பதம் 3.25.43 : தெய்வீக அறிவும், துறவும் நிரம்பிய யோகிகள் அவர்களின் நிலையான நன்மைக்காக பக்தித் தொண்டில் ஈடுபட்டு என் தாமரைப் பாதங்களைச் சரண் அடைகிறார்கள். மேலும் பகவான் ஆதலால் அவர்கள் பயமின்றி, கடவுளின் அரசில் நுழைய இயலுகின்றது.
பதம் 3.25.44 : அதனால் பகவானைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்போர் பக்தித் தொண்டின் தீவிரமான பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அச்செயலானது வாழ்வின் நிரந்தரமான முழுப்பயனையும் அடைவதற்கு உரிய ஒரே வழியாகும்.