அத்தியாயம் – 24
கர்தம முனிவரின் துறவு
பதம் 3.24.1 : பகவான் விஷ்ணுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, முழுவதும் துறவு பற்றிய வார்த்தைகளைப் பேசும், ஸ்வாயம்புவ மனுவின் மகளான தேவஹூதியிடம், இரக்கம் நிறைந்த கர்தம முனிவர் பின்வருமாறு பதில் கூறினார்.

பதம் 3.24.2 : முனிவர் கூறினார்: ஓ இளவரசியே உன்னையே நீ ஏமாற்றத்திற்கு உள்ளாக்காதே. நீ உண்மையில் போற்றத் தகுந்தவள் மாசற்ற இறைவனாகிய பரமபுருஷ பகவான் உன் மகனாக, உன் கருப்பையில் விரைவில் நுழைவான்.

பதம் 3.24.3 : நீ புனிதமான குளுரைகளை மேற்கொண்டிருக்கிறாய். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். அதனால் நீ உனது புலன்களைக் கட்டுப்படுத்தியும், மதத்தைக் கடைப்பிடிப்பதாலும், தவ நெறியாலும் உன் பணத்தைத் தானம் செய்வதாலும் மிகுந்த நம்பிக்கையுடன் இறைவனை வழிபடவேண்டும்.

பதம் 3.24.4 : உன்னால் வழிபடப்படும் பரமபுருஷ பகவான், என் பெயர், மற்றும் புகழைப் பரப்புவார். அவர் உன் மகனாக வருவதன் மூலம் உன் மனக்கட்டை அவிழ்த்து பிரம்ம அறிவைக் கற்பித்தார்.

பதம் 3.24.5 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: அண்டத்தின் மனித உயிர்களை உருவாக்குபவர் அல்லது பிரஜாபதிகளில் ஒருவராகிய கர்தமரைக் கணவராக அடைந்த தேவஹூதி அவர் வழியிலேயே மிகுந்த உண்மையாகவும், மரியாதையாகவும் சென்றாள். ஓ சிறந்த முனிவரே, இவ்வாறு அவள் எல்லார் மனதிலும் குடியிருக்கும் பரமபுருஷ பகவானை அண்டத்தின் தலைவரை வழிபடத்தொடங்கினாள்.

பதம் 3.24.6 : பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகு, பரமபுருஷ பகவான், மது என்னும் அரக்கனைக் கொன்று மதுசூதனன் எனும் பெயருடன் கர்தமரின் விந்துவில் நுழைந்து வேள்வியின் போது மரத்திலிருந்து தீ வருவதைப்போல, தேவஹூதியிடம் தோன்றினார்.

பதம் 3.24.7 : அவர் பூமியில் அவதரித்த பொழுது, தேவர்கள் மழை மேகங்களின் வடிவில் வானில் இசைக்கருவிகளை இசைத்தனர். மேலுலக இசைக் கலைஞர்கள், கந்தர்வர்கள் பகவானின் புகழ்களைப் பாடினர், அப்போது மேலுலக நடனப் பெண்கள் மகிழ்ச்சிக் களிவெறியில் ஆடினர்.

பதம் 3.24.8 : பகவான் பிறந்தபோது வானில் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த தேவர்கள் மலர்களைச் சொரிந்தனர். எல்லாத் திசைகளும், நீரும், எல்லாருடைய மனங்களும் மிகவும் திருப்தி அடைந்தன.

பதம் 3.24.9 : பிரம்மா, முதலில் தோன்றிய உயிர்ப் பொருள்; மரீசி முனிவருடனும் பிற முனிவர்களுடனும் சரஸ்வதி நதியால் சூழப்பட்ட கர்தமரின் துறவு மாடத்திற்கு அவர் சென்றார்.

பதம் 3.24.10 : மைத்ரேயர் தொடர் ந்தார் ஓ எதிரியைக் கொல்பவரே பிறக்காத பகவான் ஆகிய பிரம்மா அறிவை அடைவதில் பெரும்பாலும் சுதந்திரமானவர். பரமபுருஷ பகவானுடைய குணத்தில் ஒரு பகுதியே, ஸாங்க்ய யோகம் எனப்படும் அறிவின் முழு நிலையை விளக்குதற்கென்ற தேவஹூதீயின் கருப்பையில் தோன்றியுள்ளது என்பதைப் பிரமனால் புரிந்துகொள்ள இயலும்.

பதம் 3.24.11 : ஒரு அவதாரமாக, அவருடைய எண்ணரிய செயல்களுக்காக மகிழ்ச்சியடைந்த புலன்களுடனும், தூய மனத்துடனும் பிரம்மாவானவர் பகவானை வழிபட்ட பிறகு கர்தமர் தேவகிதி ஆகிய இருவருடனும் பின்வருமாறு பேசினார்.

பதம் 3.24.12 : பகவான் பிரம்மன் கூறினார்: என் அன்பு மகனான கர்தமரே நீங்கள் எந்த வஞ்சகமும் இன்றி என் அறிவுரைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டதால், அவற்றிற்குத் தகுந்த மதிப்பு தருவதால், நீங்கள் என்னைச் சரியாக வழிபட்டுள்ளீர்கள். நீங்கள் என்னிடமிருந்து பெற்ற அறிவுரைகளைச் செயலாற்றி இருக்கிறீர்கள். அதன் மூலம் எனக்கு மதிப்பு தந்தீர்கள்.

பதம் 3.24.13 : மகன்கள் தந்தைக்கு இந்த அளவில் துல்லியமாகத் தொண்டு கட்டாயம் செய்யவேண்டும். ஒருவர் தந்தை அல்லது ஆன்மீக குருவின் கட்டளைக்கு நன்மதிப்புடன், “ஆம் ஐயா” என்று கூறிப் பணிந்து நடக்கவேண்டும்.

பதம் 3.24.14 : பகவான் பிரம்மா பின்னர் கர்தம முனிவரின் ஒன்பது பெண்களைப் போற்றிக் கூறினார்: மெல்லிய இடையுடைய உங்கள் பெண்கள் நிச்சயமாக கற்புள்ளவர்கள். அவர் பல வழிகளிலும் தங்கள் சொந்த சந்ததியினரால் படைப்பை அதிகரிப்பவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பதம் 3.24.15 : அதனால், தயவு செய்து நீங்கள் உங்கள் பெண்களின் மனநிலை, ரசனைக்கு ஏற்றபடி, அவர்களை முதன்மை பெற்ற முனிவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். அதன்மூலம் இந்த அண்டம் முழுவதும் உங்கள் புகழைப் பரப்புங்கள்.

பதம் 3.24.16 : ஓ கர்தமரே, உண்மையான பரமபுருஷ பகவான் இப்போது அவருடைய அந்தரங்க சக்தியால் ஒரு அவதாரமாகத் தோன்றியுள்ளார். வாழும் உள்பொருள்களால் விரும்பப்பட்டவரை அளிப்பவர், அவர் இப்போது கபிலமுனிவரின் உடலை எடுத்துள்ளார்.

பதம் 3.24.17 : அறிவார்ந்த யோகம், புனித நூல்களிலிருந்து பெற்ற அறிவைச் செயற்படுத்துதல் இவற்றால், தங்க மயமான முடி இதழ்கள் போன்ற கண்கள், தாமரை மலர்களை அடையாளக் குறியாகப் பெற்ற தாமரை போன்ற பாதங்கள் இவை கொண்டவையாகச் சித்தரிக்கப்படும் கபில முனிவர் ஜடவுலகில் ஆழ்ந்து வேரோடியிருக்கும் ஆசையை வேரோடு அழித்திடுவார்.

பதம் 3.24.18 : பின்னர் பகவான் பிரம்மா தேவஹூதியிடம் கூறினார். என் அன்பு மனுவின் மகளே, கைடபன் எனும் அசுரனைக் கொன்ற அதே பரமபுருஷ பகவான் இப்போது உன் கருப்பையில் உள்ளார். அவர் உன்னுடைய எல்லா அறியாமை மற்றும் சந்தேகங்களின் முடிச்சுகளை அறுத்தெறிவார். பின்னர் அவர் இந்த உலகம் முழுவதும் பயணம் செய்வார்.

பதம் 3.24.19 : உன்னுடைய மகன் எல்லா முழுமை பெற்ற முனிவர்களுக்கும் தலைமை பெறுவான். அவன் மக்களிடையேயும், உண்மையான அறிவைப் பரப்புவதில் நிபுணர்களான ஆச்சாரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவான். அவன் கபிலர் எனும் பெயரால் கொண்டாடப்படுவான். தேவகீதியின் மகனாக, அவன் உன் புகழை அதிகரிப்பான்.

பதம் 3.24.20 : ஸ்ரீ மைத்ரேதயர் கூறினார்: கர்தம முனிவரிடமும் அவர் மனைவி தேவஹூதியிடமும் இவ்வாறு பேசிய பிறகு, பகவான் பிரம்மா, அண்டத்தைப் படைப்பவர், ஹம்ஸ என்றும் அறியப்படுபவர். நான்கு குமாரர்களுடனும், நாரதருடனும், தன் அன்ன வாஹனத்தின் மீது அமர்ந்து மூன்று சூரிய மண்டலங்களின் மேலான இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

பதம் 3.24.21 : ஓ விதுரரே, பிரம்மா பிரிந்து சென்ற பிறகு, பிரம்மாவால் கட்டளையிடப்பட்ட கர்தம முனிவர், அறிவுறுத்தியபடி, தன் ஒன்பது பெண்களை, உலகின் மக்கள் தொகையைப் படைத்த ஒன்பது சிறந்த முனிவர்களிடம் ஒப்படைத்தார்.

பதங்கள் 3.24.22 – 3.24.23 : கர்தம முனிவர் தன் பெண் கலாவை மரீசியிடமும், மற்றொரு பெண் அநசூயாவை அத்ரியிடமும் ஒப்படைத்தார். அவர் ஸ்ரத்தாவை அங்கிரசரியிடமும் ஹவிர்பூவை புலத்தியரிடமும் கொடுத்தார். கதியைப் புலஹரிடமும் கற்புள்ள க்ரியாவை கிரதுவுக்கும், க்யாதியைப் ப்ருகுவிடமும், அருந்ததியை வஸிஷ்டரிடமும் கொடுத்தார்.

பதம் 3.24.24 : அவர் சாந்தியை அதர்வாவுக்குக் கொடுத்தார். சாந்தியின் பொருட்டு வேள்விகள் நடைபெற்றன. இவ்வாறு அவர் முதன்மை பெற்ற பிராமணர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவர் அவர்களை, அவர்தம் மனைவியருடன் பாதுகாத்தார்.

பதம் 3.24.25 : இவ்வாறு மணம் புரிந்த முனிவர்கள் கர்தமரிடம் விடை பெற்று, மகிழ்ச்சியுடன் புறப்பட்டு, ஒவ்வொருவரும் அவரின் துறவு மாடத்திற்குச் சென்றனர், ஒ விதுரரே.

பதம் 3.24.26 : தேவர்களின் தலைவரான பரமபுருஷ பகவானாகிய விஷ்ணு பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார் என்பதைக் கர்தம முனிவர் புரிந்து கொண்ட பொழுது, அவரைத் தனியிடத்தில் அணுகி, வணக்கங்களைத் தெரிவித்து, கர்தமர் பின்வருமாறு பேசினார்.

பதம் 3.24.27 : கர்தம முனிவர் கூறினார்: ஓ தங்களுடைய தவறுகளால் பூதவுலகக் கட்டிலிருக்கும் துன்பம் அடைந்த ஆத்மாக்களுடன், நீண்ட காலத்திற்குப் பின், இந்த அண்டத்தின் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பதம் 3.24.28 : பல பிறவிகளுக்குப் பிறகு பக்குவமடைந்த யோகிகள், மெய்மறந்த யோக நிலையில், பரம புருஷ பகவானின் பாத கமலங்களைக் கண்ணாற் காண்பதற்குத் தனித்த இடங்களில் முயற்சி செய்வர்.

பதம் 3.24.29 : நம்மைப் போன்ற சாதாரண குடும்பத்தலைவர்களின் கவனக்குறைவைக் கருதாமல், அதே பரமபுருஷ பகவான், அவரின் பக்தர்களுக்கு உதவி புரிய நம் இல்லங்களில் தோன்றுகிறார்.

பதம் 3.24.30 : கர்தம முனிவர் கூறினார் உங்கள் பக்தர்களின் மதிப்பை எப்போதும் அதிகரிக்கும் என் அன்புள்ள பகவானே, நீங்கள் உங்கள் வார்த்தையை செயற்படுத்தவும், உண்மை அறிவின் நெறி முறையைப் பரப்பவும் என் வீட்டிற்கு வந்துள்ளீர்கள்.

பதம் 3.24.31 : என் அன்பு பகவானே, உங்களுக்கு உலகியல் வடிவம் இல்லாவிட்டாலும், நீங்கள் உங்கள் எண்ணற்ற வடிவங்கள் பெற்று உள்ளீர்கள். அவை உங்கள் பக்தர்களை மகிழ்விக்கும் அந்த வடிவங்கள் எல்லாம் கடந்தவையாகும்.

பதம் 3.24.32 : என் அன்பான பகவானே. சிறந்த முனிவர்கள் எல்லாம் முழு உண்மையைப் புரிந்து கொள்ள ஆர்வமுடையவர்கள் அவர்களிடமிருந்து வணக்கத்துக்கு உரிய மதிப்பை எப்போதும் பெறத்தகுதி வாய்ந்த இருப்பிடம் உங்களின் தாமரை போன்ற திருவடிகள் உள்ளன. நீங்கள் செல்வவளத்தில், துறவில், மெய்யறிவுடைய புகழில், அறிவில், ஆற்றலில் முழுமை பெற்றவர், அதனால் உங்களின் பாத கமலங்களில் என்னை அடைக்கலமாகத் தருகிறேன்.

பதம் 3.24.33 : கபிலரின் வடிவில் அவதரித்திருக்கும், சுதந்திர ஆற்றலுடைய உன்னதமான, பரமபுருஷரை, காலம் மற்றும் பொருளின் மொத்த உருவமாக விளங்கும் பகவானை, ஜட இயற்கையின் மூன்று குணங்களின் கீழ் எல்லா அண்டங்களையும் முழு அறிவுடன் பாதுகாப்பவரை உலகப்பொருள்கள் அழிந்த பின், அவற்றைத் தன்னிடம் இழுத்துக் கொள்பவரை, பரமபுருஷ பகவானை நான் சரணடைகிறேன்.

பதம் 3.24.34 : இன்று, உங்களை நான் சில கேட்க வேண்டும், நீங்கள் வாழும் பொருள்களுக்கும் அனைத்துக்கும் பகவான். என் தந்தையிடம் எனக்குள்ளே கடன்களிலிருந்து நீங்கள் இப்போது விடுவித்திருப்பதால், என்னுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேறியிருப்பதால், ஒரு அலைந்து திரியும் பிச்சைக்காரனின் ஆணையை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். இந்த குடும்ப வாழ்வைத் துறந்து விட்டு, புலம்பலிலிருந்து விடுபட்டு, எப்போதும் உங்களை என் மனத்தில் நினைத்துக்கொண்டு, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல விரும்புகின்றேன்.

பதம் 3.24.35 : பரமபுருஷ பகவானாகிய கபிலர் கூறினார். நேரடியாக அல்லது புனித நூல்களில் நான் என்ன பேசினாலும், அது எல்லா விதத்திலும் உலகின் மக்களுக்கு அதிகாரப் பூர்வமானது. ஓ முனிவரே, முன்பே நான் உங்களுக்கு மகனாக வருவேன் என்று கூறியிருந்ததால், அந்த உண்மையை நிறைவேற்ற நான் இறங்கி வந்தேன்.

பதம் 3.24.36 : அவசியமற்ற மண்ணுலக ஆசைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட விரும்புபவர்களால், தன்னை அறிதலில் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்ட சாங்கிய தத்துவத்தைச் சிறப்பாக விளக்க இந்த உலகில் யான் அவதாரம் எடுத்தேன்.

பதம் 3.24.37 : தன்னை உணர்தலாகிய இந்த வழி, புரிந்து கொள்ளக் கடினமானது, காலப்போக்கில் மறைந்து போயிற்று. மனித சமுதாயத்திற்கு இந்தத் தத்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்தவும், விளக்கவும் கபிலரின் இந்த உடலை நான் எடுத்துள்ளேன்.

பதம் 3.24.38 : இப்போது, என்னால் இசைவு தரப்பட்ட நீ, என்னிடம் உன் எல்லாச் செயல்களையும் ஒப்படைத்து விட்டு, உன் விருப்பப்படி செல். வெல்ல முடியாத மரணத்தை வென்று, நிலைத்த வாழ்வுக்காக என்னை வழிபடு.

பதம் 3.24.39 : நீ உன் மனத்தில், உன் அறிவாற்றல் மூலமாக, எல்லா உள்பொருள்களின் மனங்களிலும் குடியிருக்கும், உயர்ந்த, தானே ஒளிரும் ஆத்மாவாகிய என்னை எப்போதும் பார்ப்பாய்.

பதம் 3.24.40 : என் அன்னைக்கும் ஆன்மீக வாழ்வுக்கும் கதவாக விளங்கும் இந்த மேதகு அறிவை நானும் வர்ணிப்பேன். அதனால் அவள் பயன் தரும் செயல்களுக்கு எதிரான செயல்களை முடித்து, தன்னை அறிதல் மற்றும் முழுமையை அடைய முடியும். இவ்வாறு அவளும் மண்ணுலகின் எல்லா அச்சத்திலிருந்தும் விடுபடுவாள்.

பதம் 3.24.41 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: இவ்வாறு மனித சமுதாயத்தின் முன்னோடியான கர்தம முனிவர் அவர் மகனாகிய கபிலரால் முழுமையாகப் பேசப்பட்டதும், அவர் இறைவனைச் சுற்றிவந்து, நல்ல, அமைதியான மனத்துடன் உடனே காட்டிற்குச் சென்றார்.

பதம் 3.24.42 : கர்தம முனிவர், பரமபுருஷ பகவானைப் பற்றி நினைப்பதற்கும், தனிப்பட்ட அவரிடம் அடைக்கலம் பெறவும், மெளனத்தை ஒரு சபதமாக ஏற்றுக்கொண்டார். தொடர்பின்றி, அவர் சன்னியாசியாக இருப்பிடம், நெருப்பு இவற்றின் தொடர்பு இன்றி, இந்த உலக உருண்டையின் மேற்பகுதியில் அவர் பயணம் செய்தார்.

பதம் 3.24.43 : காரண விளைவுக்கு அப்பாற்பட்டு, மண்ணுலக இயற்கையின் மூன்று குணங்களையும் வெளிப்படுத்துபவரான, இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவரான, தவறாத பக்தித் தொண்டினால் மட்டும் மனத்தால் உணரப்பட்டவரான, பரப்பிரம்மன், பரமபுருஷ பகவானிடம் தன் மனத்தை ஈடுபடுத்தினார்.

பதம் 3.24.44 : இவ்வாறு அவர் படிப்படியாக மண்ணுலகத் தனித்தன்மையின் பொய்யான ஆளுமையால் பாதிக்கப்படாமல், உலகப் பாசத்திலிருந்து விடுபட்டார். அமைதி குலையாமல், எல்லோருக்கும் சமமாக, இரட்டைத் தன்மை இன்றி, அவரால் தன்னையே பார்க்க முடிந்தது. அவர் மனம் உட்புறமாகத் திரும்பி அமைதியான அலைகளையுடைய கடலைப் போல, முழுதும் அமைதியாக இருந்தது.

பதம் 3.24.45 : அவர் இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட வாழ்விலிருந்து விடுபட்டார். அனைவரது உள்ளத்தில் ஊடுருவி இருந்து அனைத்தும் அறிந்த பரமாத்மா எனும் வாசுதேவராகிய பரமபுருஷ பகவானுக்கு, அறிவார்ந்த பக்தித் தொண்டு செய்துகொண்டிருந்தார்.

பதம் 3.24.46 : பரமபுருஷ பகவான் எல்லாருடைய மனத்திலும் அமர்ந்து இருப்பதை அவர் பார்க்கத் தொடங்கினார்; அதுபோல் எல்லாரும் இறைவனுடன் ஒன்றி இருப்பதையும் கண்டார்; ஏனென்றால் அவரே எல்லாருக்கும் பரமாத்மாஆவார்.

பதம் 3.24.47 : எல்லா வெறுப்பு, விருப்பிலிருந்தும் விடுபட்டு எல்லார்க்கும் சமமாக இருந்த கர்தம முனிவர், மாசில்லாத பக்தித் தொண்டைச் செய்ததால், இறுதியாக பகவானிடம் திரும்பிச் செல்லும் வழியை அடைந்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare