அத்தியாயம் – 23
தேவஹூதியின் புலம்பல்
பதம் 3.23.1 : மைத்ரேயர் தொடர்ந்தார்: பெற்றோர்களை விட்டுப் பிரிந்த பிறகு, கணவரின் விருப்பங்களைப் புரிந்து கொள்ள முடிந்தவளாகிய கற்புடைய பெண் தேவஹுதி, சிவபெருமானின் மனைவியான பவானீ, அவள் கணவருக்குத் தொண்டு செய்தது போல, மிகுந்த அன்புடன் தனது கணவருக்குப் பணிவிடை செய்தாள்.

பதம் 3.23.2 : ஓ விதுரரே, தேவ கீதி மிகவும் நெருக்கமாக மிகுந்த மரியாதையுடன், புலன் கட்டுப்பாட்டுடன், அன்புடன் மற்றும் இனிய சொற்களுடன் அவள் கணவருக்குப் பணிவிடை செய்தாள்.

பதம் 3.23.3 : நல்லறிவு நிலையில் அயராது உழைத்து, இச்சை, கர்வம், பொறாமை, பேராசை, பாவச் செயல்கள், வீண் தற்பெருமை இவற்றை விட்டுவிட்டு, அவள் ஆற்றல் மிகுந்த தனது கணவரை மகிழ்வித்தாள்.

பதங்கள் 3.23.4 – 3.23.5 : மனுவின் மகள், தன் கணவரிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டவள், அவரை பகவானை விடவும் சிறந்தவராகப் பார்த்தாள். இவ்வாறு அவள் அவரிடம் இருந்து சிறந்த ஆசிகளை எதிர்பார்த்தாள். நீண்ட காலமாக அவருக்குப் பணிவிடை செய்ததால் அவள் பலவீனமடைந்து, மதச் சடங்கினையும் கடைப்பிடித்ததால் மிக மெலிந்தாள். அவள் நிலையைப் பார்த்ததும், மேலுலக முனிவர்களில் முன்னணியில் இருப்பவராகிய கர்தமர் அன்பு மேலிட்டு, தடுமாறும் குரலுடன் அவளிடம் பேசினார்.

பதம் 3.23.6 : கர்தம முனிவர் கூறினார்: ஒ மரியாதைக்குரிய ஸ்வாயம்புவ மனுவின் பெண்ணே, இன்று உன் சிறந்த பக்திக்காகவும் மிகவும் உன்னதமான அன்புப் பணிவிடைக்காகவும் நான் மிகவும் மகிழ்கிறேன். உடல் அதனுடன் தோன்றிய அங்கங்களுடன் நெருங்கியதாக இருந்தாலும் நீ என் பொருட்டு உன் உடலையே நீ கவனிக்காமல் விட்டதால் நான் அதிர்ச்சி அடைகிறேன்.

பதம் 3.23.7 : கர்தம முனிவர் தொடர்ந்தார்: தவம், தியானம், கிருஷ்ண உணர்வு நிலை இவற்றால் ஆன என் மத வாழ்வைக் கடைப்பிடிப்பதில் நான் பகவானின் ஆசிகளைப் பெற்றுள்ளேன். நீ பயம், புலம்பலிலிருந்து விடுபட்ட இத்தகைய சாதனைகளை இன்னும் அனுபவிக்கவில்லை என்றாலும் அவை எல்லாவற்றையும் நான் உனக்குத் தருகிறேன். ஏனென்றால் நீ எனக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருக்கிறாய். இப்பொழுது அந்தச் சாதனைகளைப் பார். அவை எவ்வளவு நன்றாக இருக்கின்றன என்பதைப் பார்க்கும் மெய்யறிவுப் பார்வையை நான் உனக்குத் தருகிறேன்.

பதம் 3.23.8 : கர்தம முனிவர் தொடர்ந்தார்: பகவானின் அருளை அன்றிப் பிற இன்பங்களால் என்ன பயன்? எல்லாவித உலகச் சாதனைகளும் பரமபுருஷ பகவானாகிய பகவான் விஷ்ணுவின் எளிய புருவங்களின் அசைவினால் அழிவுக்குள்ளாகும் நிச்சயமற்ற தன்மை படைத்தவை. உன் கணவனிடம் நீ கொண்டுள்ள பக்தியின் கொள்கைகளால், நீ மெய்யறிவார்ந்த பரிசுகளை அடைந்து மகிழ்ச்சியை அனுபவிக்கிறாய். மேற்குடிப்பிறப்பினாலும், கர்வத்தினாலும் வாழ்கின்றோருக்கு இத்தகைய மகிழ்ச்சி கிடைக்காது.

பதம் 3.23.9 : எல்லாவிதமான மெய்யறிவு சார்ந்த அறிவியல் கண்ணோட்டம் மேலோங்கிய அவள் கணவர் பேசியதைக் கேட்டதும், இவற்றை அறிந்திராத தேவஹூதி மிகவும் திருப்தியடைந்தாள். அவள் முகம் சிறிய வெட்கப் பார்வையுடன் மின்னியது. அவள் சிறந்த பணிவினால் அன்பினால் திணறிய குரலில் பேசினாள்.

பதம் 3.23.10 : ஸ்ரீ தேவஹூதி கூறினாள்: என் அன்புக் கணவரே, பிராம்மணர்களில் சிறந்தவரே, நீங்கள் முழுமையை அடைந்துள்ளீர்கள். தவறு செய்யாத அறிவார்ந்த ஆற்றலுக்கு நீங்கள் தலைவர்; ஏனென்றால் நீங்கள் எல்லாம் கடந்த இயற்கையாகிய யோக மாயாவின் பாதுகாப்பில் உள்ளீர்கள் என்பதையும் நான் அறிவேன். புகழ் மிகுந்த கணவனை அடைந்த கற்புள்ள பெண்ணுக்கு குழந்தைகளே சிறந்த தகுதியை அளிக்கின்றன என்று உறுதிமொழி அளித்தீர்கள். ஆதலால் நமது உடல் புணர்வு இப்பொழுது பயன் தருமாறு நிறைவேற வேண்டும்.

பதம் 3.23.11 : தேவஹூதி தொடர்ந்தாள்: என் அன்புத் தலைவரே, நான் உங்களிடம் கொண்டுள்ள உணர்ச்சித் தூண்டுதலால் தாக்கப்பட்டுள்ளேன். அதனால் புனித நூல்களின்படி செய்ய வேண்டிய ஏற்பாடுகளைத் தயவு செய்து செய்யுங்கள். அதனால் திருப்தி அடையாத உணர்ச்சியால் இளைத்துள்ள என் மெலிந்த உடல் உங்களுக்குத் தகுதியான நிலைக்கு வரவேண்டும். என் தலைவரே, இந்த நோக்கத்திற்காக ஒரு தகுந்த வீட்டையும் தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

பதம் 3.23.12 : மைத்ரேயர் தொடர்ந்தார்: ஓ விதுரரே, கர்தம முனிவர் தனது அன்பான மனைவியை மகிழ்விக்க விரும்பி, தன் யோக ஆற்றலை உபயோகித்து உடனடியாக அவர் விருப்பத்தின்படி பயணம் செய்யும் ஒரு ஆகாய மாளிகையை உருவாக்கினார்.

பதம் 3.23.13 : அது ஒரு அற்புதமான அமைப்பு, எல்லாவிதமான அணிகளால் ஒப்பனை செய்யப்பட்டு, மதிப்பு மிக்க கற்களால் ஆகிய தூண்களுடன் அலங்கரிக்கப்பட்டு, ஒருவர் விரும்பும் பொருளை எல்லாம் தரத்தக்கதாய் விளங்கியது. வீட்டிற்குத் தேவையான பொருட்களுடன் காலப்போக்கில் அதிகரிக்கும் செல்வ வளத்தாலும் அம்மாளிகை நிறைந்திருந்தது.

பதங்கள் 3.23.14 – 3.23.15 : அந்த மாளிகை தேவையான எல்லாப் பொருட்களாலும் நிறைந்திருந்தது. எல்லாப் பருவங்களிலும் இனிமையுடன் விளங்கியது. அது கொடிகள், தோரணங்கள், பல்வேறு வண்ணங்கள் நிரம்பிய கலை நயம் மிக்க வேலைப்பாடுகளால் எல்லாப் பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது மேலும் இனிமையாகப் பாடும் தேனீக்களைக் கவரும் அழகிய மலர் மாலைகளுடனும், நார், பட்டு மற்றும் பிற வகைத் துணிகளாலும் அழகு செய்யப்பட்டிருந்தது.

பதம் 3.23.16 : அந்த அரண்மனை பார்ப்பதற்கு அழகாக, கட்டில்களுடன், படுக்கைகளுடன், விசிறிகள், இருக்கைகள் கொண்டதாக எல்லாம் தனித்தனியாக ஏழு நிலைகளில் (மாடிகளில்) அமைக்கப்பட்டிருந்தது.

பதம் 3.23.17 : அதன் அழகு சுவர்களில் இங்கும் அங்கும் உள்ள கலைநயம் மிக்க செதுக்கு வேலைப்பாடுகளால் மேம்பட்டது. அதன் தரை பச்சைக் கற்களால் ஆகி பவழ மேடைகளுடன் விளங்கியது.

பதம் 3.23.18 : அரண்மனை, பவழ முகப்புகள் கொண்ட வாயில்களுடன், வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கதவுகளுடன் மிகவும் அழகாக விளங்கியது. நீலக்கற்கள் பதிக்கப்பட்ட மாடங்களில் தங்க முகடுகள் மகுடமாக விளங்கின.

பதம் 3.23.19 : வைரச் சுவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவப்புக் கற்கள் பதிக்கப்பட்டு சுவர்களுக்கே கண்கள் உள்ளனவோ எனத் தோன்றியது. அது அற்புதமான கவிகை மாடங்களுடன் சிறந்த மதிப்புள்ள தங்கத்தாலான மாடங்களையும் கொண்டு விளங்கியது.

பதம் 3.23.20 : அந்த அரண்மனையில் இங்கும் அங்கும் உயிருள்ள அன்னங்களும் புறாக்களும் கூட்டங்களாக இருந்தன. மேலும் செயற்கையான அன்னங்களும் புறாக்களும் உயிருள்ளவை போல் தோற்றமளித்த காரணத்தால், உண்மையான அன்னங்கள் மீண்டும் மீண்டும் அவற்றின் மீது பறந்து, அவற்றையும் தம்மைப் போன்றே உயிருள்ள பறவைகள் என்று நினைத்தன. இவ்வாறு அந்த அரண்மனை இந்தப் பறவைகளின் ஒலியால் அதிர்ந்தது.

பதம் 3.23.21 : அந்த மாளிகை மகிழ்ச்சி தரும் இடங்கள், தங்கும் இடங்கள் படுக்கையறைகள், உள், வெளித் தாழ்வாரங்கள், ஆகியவற்றை வசதிக்காகக் கொண்டிருந்தது. இவை எல்லாம் முனிவருக்கே ஆச்சரியத்தை விளைவித்தன.

பதம் 3.23.22 : தேவஹுதி அந்த மிகப் பெரிய பொருள்வளமுள்ள அரண்மனையை மகிழ்ச்சி இல்லாத மனத்துடன் பார்த்தபொழுது, கர்தம முனிவரால் அவள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால், அவரால் யாருடைய மனத்தையும் புரிந்து கொள்ள இயலும். எனவே அவர் தனியாக அவர் மனைவியை அழைத்துப் பின்வருமாறு கூறினார்.

பதம் 3.23.23 : என் அன்பான தேவஹூதியே, நீ மிகவும் அச்சப்படுபவளாகக் காணப்படுகிறாய். முதலில் மனித உயிருக்கு எல்லா ஆசைகளையும் கொடுக்கும் பகவான் விஷ்ணுவால் படைக்கப்பட்ட பிந்து ஸரோவர ஏரியில் குளித்து பின்னர் இந்த விமானத்தில் ஏறுவாயாக.

பதம் 3.23.24 : தாமரை போன்ற கண்களை உடைய தேவஹூதி தன் கணவரின் கட்டளையை ஏற்றுக் கொண்டாள். அவளின் அழுக்கான உடை, தலையில் சடையாகிவிட்ட முடி ஆகியவற்றினால் அவள் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கவில்லை.

பதம் 3.23.25 : தூசியின் அளவு தடிமனாகப் போய் அவள் உடல் அழுக்கினால் மூடப்பட்டிருந்தது. அவள் மார்பகங்கள் நிறம் மங்கியிருந்தன. இந்நிலையில், அவள் ஸரஸ்வதீ நதியின் புனித நீரால் நிறைந்த ஏரியில் பாய்ந்தாள்.

பதம் 3.23.26 : ஏரியின் உள்ளே அவள் தாமரைகள் போல் மணம் வீசும் இளமையின் தொடக்கத்தில் உள்ள ஆயிரம் பெண்களைப் பார்த்தாள்.

பதம் 3.23.27 : அவளைப் பார்த்ததும், அந்த அழகிய பெண்கள் திடீரென்று எழுந்து, கைகளைக் குவித்துக் கொண்டு கூறினர், “நாங்கள் உங்கள் பணிப்பெண்கள். உங்களுக்காக நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறுங்கள். “

பதம் 3.23.28 : தேவஹூதியிடம் மிகவும் மரியாதையுள்ள பெண்கள், விலையுயர்ந்த தைலங்கள் மருந்து நெய்யால் அவள் குளித்த பிறகு, அவள் உடலைப் போர்த்த நல்ல புதிய குற்றமில்லாத ஆடையை அவள் முன்பு கொண்டு வந்தனர்.

பதம் 3.23.29 : அவர்கள் பின்னர் பளிச்சென ஒளிரும் மிகவும் சிறந்த விலையுயர்ந்த நகைகளால் அவளை அலங்கரித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் எல்லா நல்ல குணங்கள், இனிமையான ஆஸவம் எனும் வெறியூட்டும் பானம் நிறைந்த உணவை அவளுக்கு அளித்தனர்.

பதம் 3.23.30 : பின்னர் ஒரு கண்ணாடியில் அவள் தன் பிம்பத்தைப் பார்த்தாள். அவள் உடல் எல்லா அசுத்தத்திலிருந்தும் நீங்கி சுத்தமாய் இருந்தது. அவள் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். களங்கம் இல்லாத ஆடைகள் அணிந்து, மங்கலக் குறியாகிய திலகம் அணிந்து, பணிப் பெண்களால் மிகவும் மரியாதையுடன் பணிவிடை செய்யப்பட்டாள்.

பதம் 3.23.31 : அவள் உடல் முழுவதும், தலையுடன் சேர்த்து குளித்து இருந்தாள். எல்லா இடங்களிலும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவள் ஒரு சிறப்பான பதக்கத்துடன் கூடிய கழுத்து மாலை அணிந்திருந்தாள். அவள் மணிக்கட்டுகளில் வளையல்களும், அவள் கணுக்கால்களில் தங்கத்தாலான, ஒளிவீசும் கொலுசுகளும் அணிந்திருந்தாள்.

பதம் 3.23.32 : அவள் இடையில் தங்கத்தால் ஆன ஒட்டியானமும் மற்றும் எண்ணற்ற நகைகளும் அணிந்திருந்தாள். அவள் மேலும் விலைமதிப்பில்லாத முத்தாபரணமும் மற்றும் மங்கலப் பொருட்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தாள்.

பதம் 3.23.33 : அவள் முகம், அழகிய பற்களுடனும், அழகிய புருவங்களுடனும் ஒளி வீசியது. அவள் கண்கள், அழகிய ஈரம் படிந்த ஓரங்களால் வேறுபட்டு, அழகிய தாமரை மொட்டுகளைத் தோற்கடித்தன. அவள் முகம் கரிய சுருண்ட கூந்தலால் சூழப்பட்டிருந்தது.

பதம் 3.23.34 : அவளின் சிறந்த கணவராகிய, முனிவர்களில் சிறந்தவரை, கர்தம முனிவரை, அவளுக்கு மிகவும் நெருங்கியவரை அவள் பணிப் பெண்களுடன் நினைத்த பொழுதே, உடனே அவர் இருக்குமிடத்தில் தோன்றினார்.

பதம் 3.23.35 : அவள் கணவரின் முன்னிலையில் ஆயிரம் பணிப் பெண்களால் அவள் சூழப்பட்டு இருந்த போது அவரின் யோக ஆற்றலை அவள் கண்டு பெரிதும் திகைத்தாள்.

பதங்கள் 3.23.36 – 3.23.37 : தேவஹூதி தன்னைச் சுத்தமாக்கிக் கொண்டு ஒளிவீசி முந்தைய மனைவி போலன்றி இருப்பதைப் பார்த்தார் முனிவர். அரசனின் பெண்ணாக, அவள் உண்மையான அழகினை மீண்டும் பெற்றாள். ஆயிரம் கந்தர்வப்பெண்கள் பணிவிடை செய்யக் காத்திருக்க, மிகச் சிறந்த ஆடை அணிந்து, கச்சையால் கட்டப்பட்ட மார்பகங்களுடன் அவள் பொலிந்தாள். ஓ பகைவரை அழிப்பவரே, அவருக்கு அவள் மீது அன்பு வளர்ந்தது. அவர் அவளை அந்த ஆகாய மாளிகையில் இருத்தினார்.

பதம் 3.23.38 : கந்தர்வப் பெண்களால் பணிவிடை செய்யப்பட்டு, தமது மனைவியுடன் அவர் இணைந்திருப்பதைப் போல் தோன்றினாலும், அவரது ஆட்சி முறையின் புகழை முனிவர் இழக்கவில்லை. அந்த வான மாளிகையில், கர்தம முனிவர் அவர் மனைவியுடன் ஒளிவீசித் திகழ்ந்தது எவ்வாறு இருந்தது என்றால், இரவில் குவளை மலர்களை மலரச் செய்யும் சந்திரன் வானில் நட்சத்திரங்களுக்கு இடையில் அழகாகப் பிரகாரிப்பதைப் போலிருந்தது.

பதம் 3.23.39 : அந்த வானூர்தி மாளிகையில் அவர் மேருமலையின் இன்பமான பள்ளத்தாக்குகளுக்குப் பயணம் செய்தார். அவை குளிர்ந்த மென்மையான, மணம் பொருந்திய காற்றால் மேலும் இனிமையைச் சொரிந்தன. அவை உணர்ச்சியைத் தூண்டின. இந்தப் பள்ளத்தாக்குகளில், செல்வங்களின் அதிபதியான குபேரன். அழகிய பெண்களால் சூழப்படும் ஸித்தர்களால் போற்றப்பட்டு, பொதுவாக இன்பம் அனுபவிப்பார். கர்தம முனிவரும் அழகிய பெண்களாலும், அவர் மனைவியாலும் சூழப்பட்டு, அங்கு சென்று பலப்பல ஆண்டுகள் அனுபவித்தார்.

பதம் 3.23.40 : மனைவியால் திருப்தியடைந்து, அவர் அந்த வானுலக மாளிகையில், மேரு மலையில் மட்டும் அல்லாமல், வேறு பல தோட்டங்களான, வைஸ்ரம்பக, சுரஸன, நந்தன, புஷ்பபத்ரக மற்றும் சைத்ரரத்யவிலும், மற்றும் மானஸ ஸரோவர ஏரியிலும் அவர் அனுபவித்தார்.

பதம் 3.23.41 : பல்வேறு கோள்களின் வழியாக, எல்லாத் திசையிலும் கட்டுக் கடங்காத காற்று வீசும்போது அவர் அந்த வழியில் பயணித்தார். சிறந்த, ஒளி வீசும் அவர் விருப்பப்படி பறக்கும் வானுலக மாளிகையில் காற்றைக் கிழித்துக் கொண்டு, அவர் தேவர்களையும் மிஞ்சிக் கொண்டு சென்றார்.

பதம் 3.23.42 : பரம புருஷ பகவானின் தாமரைத் திருவடிகளின் பாதுகாப்பைப் பெற்ற உறுதியான மனிதர்களுக்கு எந்தப் பணி கடினமானது ஆகும்? அவருடைய திருவடிகள் கங்கை போன்ற புனிதமான நதிகளுக்கு ஆதாரமாகும். இம்மைக்குரிய வாழ்வின் அபாயங்களுக்கு அவை முடிவைத் தருவன.

பதம் 3.23.43 : அவருடைய மனைவிக்கு அண்டத்தின் உலக உருண்டை, அதன் வேறுபட்ட அமைப்புகள், பல அற்புதங்கள் நிறைந்திருப்பதைக் காட்டிய பிறகு, சிறந்த யோகியாகிய கர்தம முனிவர் தன் துறவு மாடத்திற்குத் திரும்பினார்.

பதம் 3.23.44 : அவருடைய துறவு மாடத்திற்கு மீண்டும் வந்த பிறகு, உடலுறவில் விருப்பமுடைய, மனுவின் பெண்ணாகிய தேவகீதிக்கு இன்பம் தருவதற்கு, தன்னை ஒன்பது தனியாளாகப் பிரித்துக் கொண்டார். இந்த வழியில் ஒரு கணம் போல ஒடிய, பலப்பல ஆண்டுகளுக்கு அவளுடன் இன்பம் அனுபவித்தார்.

பதம் 3.23.45 : அந்த வான மாளிகையில், தேவகீதி தனது அழகான கணவரின் துணையில், கலவி ஆசைகளை அதிகரிக்கும் மிகச்சிறந்த படுக்கையில் அமர்ந்து, எவ்வளவு நேரம் போனது என்பதை உணர முடியாமல் மகிழ்ச்சியை அனுபவித்தாள்.

பதம் 3.23.46 : தம்பதிகள் இருவரும் கலவி இன்பத்திற்கு ஆவலுடன் ஏங்கி, அறிவார்ந்த ஆற்றலின் குணத்தால் அவர்கள் அனுபவித்துக் கொண்டு இருந்த பொழுது நூறு இலையுதிர் காலங்கள் ஒரு சிறிது காலம் போல் ஓடின.

பதம் 3.23.47 : ஆற்றல் மிகுந்த கர்தமர் எல்லாருடைய மனத்தையும் அறிந்தவர், ஒருவர் எதை விரும்பினாலும் அதை அளிக்கக் கூடியவர். மெய்ப்பொருளான ஆன்மாவை உணர்ந்து, அவளைத் தன் உடலின் சரிபாதியாக மதித்தவர், தன்னை ஒன்பது வடிவங்களாகப் பிரித்துக் கொண்டு, ஒன்பது முறை ஏற்பட்ட விந்துக் கசிவால் அவளைக் கருவுறச் செய்தார்.

பதம் 3.23.48 : அதன் பின்னர் உடனே, அதே நாளில் தேவகீதி ஒன்பது பெண் குழந்தைகளைப் பெற்றாள். எல்லாமே ஒவ்வொரு உறுப்பிலும் அழகாக, சிவந்த தாமரை மலரின் மணத்தோடு விளங்கின.

பதம் 3.23.49 : அவள் கணவர் வீட்டை விட்டுச் செல்வதை அவள் பார்த்து வெளிப்படையாகப் புன்னகைத்தாலும் மனம் அலைக்கழிக்கப்பட்டு துன்பத்திற்கு ஆளானாள்.

பதம் 3.23.50 : அவள் நின்று, அவளுடைய ஒளிவீசும் மணி போன்ற நகங்கள் கொண்ட பாதத்தால் தரையைக் கீறினாள். அவள் தலை குனிந்து, கண்ணீரை அடக்கிக் கொண்டு, அழகான மொழியில் மெதுவாகப் பேசினாள்.

பதம் 3.23.51 : ஸ்ரீ தேவஹூதி கூறினாள். என் பிரபுவே, நீங்கள் எனக்குக் கொடுத்த எல்லா உறுதிமொழிகளையும் நீங்கள் நிறைவேற்றினீர்கள். ஆயினும் நான் உங்களிடம் சரண் அடைந்துள்ளதால், நீங்கள் எனக்கு அச்சம் இன்மையையும் தர வேண்டும்.

பதம் 3.23.52 : என் அன்புப் பிராம்மணரே; உங்கள் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களுக்குத் தகுந்த கணவரைக் கண்டு பிடித்து, அவர்களுக்கான வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் நீங்கள் துறவியாகப் பிரிந்து சென்ற பின் யார் எனக்கு ஆறுதல் அளிப்பார்கள்?

பதம் 3.23.53 : இதுவரை நாம் புலன் நுகர்ச்சியிலேயே அதிக நேரத்தை வீணாக்கி விட்டோம் பகவான் பற்றிய அறிவை வளர்ப்பதைப் புறக்கணித்துவிட்டோம்.

பதம் 3.23.54 : உங்கள் மெய்யறிவார்ந்த தன்மையை அறியாமல், புலன்களின் பொருட்களின் மீது பற்றுக் கொண்ட நிலையில், நான் உங்களை விரும்பினேன். எப்படியாயினும், உங்கள் மீது நான் வளர்த்திருக்கும் உறவு, எல்லா பயத்திலிருந்தும் என்னை விடுவிக்கட்டும்.

பதம் 3.23.55 : புலன் நுகர்ச்சிக்காகத் தொடர்பு கொள்ளுதல் நிச்சயமாக நம்மைப் பிடித்து வைக்கும் வழியாகும். ஆனால் அதே மாதிரியான தொடர்பு, புனிதமானவருடன் நிகழ்ந்தால், அது அறிவில்லாமல் நிகழ்த்தாலும் கூட, வீடுபேற்றின் வழிக்கு அது அழைத்துச் செல்லும்.

பதம் 3.23.56 : யாருடைய பணி மதவாழ்வுக்கு அவனை உயர்த்தவில்லையோ, யாருடைய மதச் சடங்குகள் அவனைத் துறவுக்கு உயர்த்தவில்லையோ, துறவில் உள்ளவனை எது பரமபுருஷ பகவானின் பக்தித் தொண்டுக்கு அழைத்துச் செல்லவில்லையோ, அவன் சுவாசித்துக் கொண்டிருந்தாலும் இறந்தவனாகக் கருதப்பட வேண்டும்.

பதம் 3.23.57 : என் தலைவரே, கடப்பதற்கு அரிய பரமபுருஷ பகவானின் மாயைச் சக்தியால் நான் உறுதியாக ஏமாற்றப்பட்டேன். ஏனென்றால், பருவுலகப் பிடிப்பிலிருந்து விடுதலை தரும் உங்களுடன் தொடர்பு கொண்டும் கூட, நான் விடுதலையை விரும்பவில்லை.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare