அத்தியாயம் – 21
மனுவுக்கும் கர்தமருக்கும் இடையே உரையாடல்
பதம் 3.21.1
விதுர உவாச
ஸ்வாயம்புவஸ்ய ச மனோர் வம்ச: பரம -ஸம்மத:
கத்யதாம் பகவன் யத்ர மைதுனேனைதிரே ப்ரஜா:

விதுர: உவாச—விதுரர் கூறினார்; ஸ்வாயம்புவஸ்ய-ஸ்வாயம் புவரின்; ச-மற்றும்; மனோ-மனுவின்; வம்ஸ:-பரம்பரை; பரம-மிகவும்; ஸம்மத:-மதிக்கப்பட்ட; கத்யதாம்—தயவு செய்து வர்ணிக்க; பகவன்—ஓ வணக்கத்துக்குரிய முனிவரே; யத்ர-அங்கு ; மைதுனேன—கலவியின் மூலம்; ஏதிரே-பெருக்கப்பட்டு; ப்ரஜா:-சந்ததி.

விதுரர் கூறினார்: ஸ்வாயம்புவ மனுவின் பரம்பரை மிகவும் பெருமைக்குரியது. ஓ வணக்கத்துக்குரிய முனிவரே, புணர்தலால் பெருகிய சந்ததிகளை உடைய இந்த இனத்தைப் பற்றிய குறிப்புகளைத் தரும்படி உம்மை வேண்டுகிறேன்.

பதம் 3.21.2
ப்ரியவ்ரதோத்தாநபாதௌ ஸூதெள ஸ்வாயம்புவஸ்ய வை
யதா -தர்மம் ஜூகுபது: ஸப்த த்வீபவதீம் மஹீம்

ப்ரியவ்ரத-மஹாராஜா ப்ரியவ்ரதன்; உத்தானபாதௌ-மற்றும் மஹாராஜா உத்தானபாதர்; ஸுதௌ-இரண்டு புதல்வர்கள்; ஸ்வாயம் புவஸ்ய-ஸ்வாயம்புவ மனுவின்; வை-உண்மையில்; யதா—அதற்கு ஏற்ப; தர்மம்-மதக் கொள்கைகள்; ஜூகுபது:-ஆண்டனர்; ஸப்த—த்வீப-வதீம்-ஏழு தீவுகளைக் கொண்டது; மஹீம்-உலகம்.

ஸ்வயாம்புவ மனுவின் இரு சிறந்த புதல்வர்களான ப்ரியவர்தரும் உத்தானபாதரும், மதக் கொள்கைகளின்படி, ஏழு தீவுகளைக் கொண்ட இந்த உலகை ஆட்சி செய்தனர்.

பதம் 3.21.3
தஸ்ய வை துஹிதா ப்ரஹ்மன் தேவஹூதிதி விஸ்ருதா
பத்னீ ப்ரஜாபதேர் உக்தா கர்தமஸ்ய த்வயானக

தஸ்ய-அந்த மனுவின்; வை—உண்மையில்; துஹிதா-மகள்; பிரம்மன்-ஓ புனித பிராமணரே; தேவஹூதி-தேவஹூதி-எனும் பெயருடைய; இதி-இவ்வாறு: விஸ்ருதா-அறியப்பட்ட; பத்னீ— மனைவி: ப்ரஜாபதே:-படைக்கப்பட்ட பொருள்களின் பிரபுவின்; உக்தா-பேசப்பட்டு; கர்தமஸ்ய-கர்தம முனிவரின்: த்வயா- உங்களால்; அனக—ஓ பாவமற்றவரே.

ஓ புனித பிராமணரே, ஒ பாவமற்றவரே, படைக்கப்பட்ட பொருட்களின் தலைவராகிய கர்தம முனிவருடைய மனைவியாகிய தேவஹூதி எனும் பெயருடைய, அவர் மகளைப் பற்றிப் பேசினீர்கள்.

பதம் 3.21.4
தஸ்யாம் ஸ வை மஹா-யோகீ யுக்தாயாம் யோக லக்ஷணை:
ஸஸர்ஜ கதிதா வீர்யம் தன் மே சஸ்ரூஷவே வத

தஸ்யாம் – அவளிடம்; ஸ:-கர்தம முனிவர்; வை-உண்மையில்; மஹா-யோகீ-சிறந்த அறிவு நிலை கடந்த யோகி; யுக் தாயாம்- வழங்கப்பட்ட; யோ லக்ஷக்ஷ்ணைத:-முழு நிறைவுடைய யோகத்தின் எட்டுவித அறிகுறிகளுடன்; ஸஸர்ஜ-இனம் பெருக்கி; கதிதா-எத்துணை முறை; வீர்யம்-சந்ததி; தத்-அந்த வர்ணனை; மே-எனக்கு; ஸூஸ்ருஷவே-கேட்பதற்கு ஆர்வம் கொண்டு; வத—சொல்லுங்கள்.

யோகக் கொள்கைகளில் எட்டுவித நிறைவினைப் பெற்ற இளவரசியின் மூலமாக, சிறந்த யோகி எத்துணை குழந்தைகளைப் பெற்றார்? தயவு செய்து இதைச் சொல்லுங்கள்: இதைக் கேட்க ஆவல் கொண்டுள்ளேன்.

பதம் 3.21.5
ருசிர் யோ பகவான் ப்ரஹ்மன் தக்ஷோ வா ப்ரஹ்மண: ஸூத:
யதா ஸஸர்ஜ பூதானி லப்த்வா பார்யாம் ச மானவீம்

ருசி: ருசி; ய:-யார்; பகவான்—வணங்கத்தக்க; ப்ரம்மன்-ஓ புனித முனிவரே; தக்ஷ:-தக்ஷன்; வா-மற்றும்; ப்ரஹ்மண:-பகவான் பிரம்மனின்; ஸூத:-மகன்; யதா—எந்த வழியில்; ஸஸர்ஜ—உற்பத்தி செய்தனர்; பூதானி-வழி மரபு: லப்த்வா—பெற்றதும்; பார்யாம்-அவர்களின் மனைவிகளாக; ச-மற்றும்; மானவீம்- ஸ்வாயம்புவ மனுவின் புதல்விகள்.

ஓ புனித முனிவரே, ஸ்வாயம்புவ மனுவின் மற்ற இரு பெண்களை, தங்கள் மனைவியராக அடைந்த பின்னர், வணங்கத்தக்க ருசியும், பிரம்மனின் மகன் தக்ஷனும் எவ்வாறு குழந்தைகளைப் படைத்தனர் என்று எனக்குக் கூறுங்கள்.

பதம் 3.21.6
மைத்ரேய உவாச
ப்ரஜா: ஸ்ருஜேதி பகவான் கர்தமோ ப்ரஹ்மணோதித:
ஸரஸ்வத்யாம் தபஸ் தேபே ஸஹஸ் ராணாம் ஸமா தஸ

மைத்ரேய: உவாச-சிறந்த முனிவர் மைத்ரேயர் கூறினார்; ப்ரஜா:-குழந்தைகள்; ஸ்ருஜ—பெறுதல்; இதி-இவ்வாறு; பகவான்—வழிபடத் தக்க; கர்தம:-கர்தம முனிவர்; ப்ரஹ்மணா-பிரம்ம தேவரால்; உதித:-ஆணையிட்டார்; ஸரஸ்வத்யாம்- ஸரஸ்வதி நதிக்கரையில்; தப-தவம்; தேபே-செய்தல்; ஸஹஸ்ராணாம்-ஆயிரக்கணக்கான; ஸமா:-ஆண்டுகள்; தஸ—பத்து.

சிறந்த முனிவராகிய மைத்ரேயர் கூறினார்: பகவான் பிரம்ம தேவரால் குழந்தைகள் பெற ஆணையிடப்பட்ட கர்தம முனிவர், பத்தாயிரம் ஆண்டுக் காலத்திற்கு ஸரஸ்வதி நதியின் கரையில் தவம் செய்தார்.

பதம் 3.21.7
தத: ஸமாதி -யுக்தேன க்ரியா -யோகேன கர்தம:
ஸம்ப்ரபேதே ஹரிம் பக்த்யா ப்ரபன்ன- வரதா ஸூஷம்

தத:-பின்னர், அந்தக் தவத்தில்; ஸமாதி-யுக்தேன—மெய் மறந்த நிலை; க்ரியாயோகேன—பக்தி-யோக வழிபாட்டால்; கர்தம:-கர்தம முனிவர்; ஸம்ப்ரபேதே-தொண்டாற்றி; ஹரிம்-பரமபுருஷ பகவான்; பக்த்யா—பக்தித் தொண்டில்; ப்ரபன்ன—சரணடைந்த ஆன்மாக்களுக்கு; வரதாசுஷம்-எல்லா ஆசிகளையும் அளிப்பவர்.

தவம் செய்யும் காலத்தில், மெய்ம்மறந்த நிலையில் பக்தித் தொண்டினால் வழிபட்டார் கர்தம முனிவர். அப்போது தன்னிடம் சரணடைய ஓடிவருபவர்களுக்கு எல்லா அருளையும் விரைந்து அருளும்படி பரமபுருஷ பகவானை வேண்டிக் கொண்டார்.

பதம் 3.21.8
தாவத்ப்ரஸன்னோ பகவான் புஷ்கராக்ஷ: க்ருதே யுகே
தர்சயாஆஸ தம் க்ஷத்த: சாப்தம் ப்ரம்ம ததத்வபு:

தாவத்—பின்னர்; ப்ரஸன்ன:-மகிழ்ந்து; பகவான்-பரமபுருஷ பகவான்; புஷ்கர அக்ஷ:-தாமரை போன்ற கண்களுடைய; க்ருதே யுகே-ஸத்ய யுகத்தில்; தர்சயாம் ஆஸ-காட்டி; தம்-கர்தம முனிவருக்கு; க்ஷத்த:-ஓ விதுரனே: சாப்தம்-வேதத்தின் மூலம் மட்டும் புரிந்து கொள்ளப்படுகிற; ப்ரம்ம-முழுமையான உண்மை; ததத்—வெளியிட்டு; வபு:-அவருடைய திவ்யமான உடல்.

பின்னர், சத்திய யுகத்தில், தாமரை போன்ற கண்களுடைய பரமபுருஷ பகவான், மகிழ்ந்து, கர்தம முனிவருக்குத் தன்னைக் காட்டி, வேதங்களின் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த அவருடைய உன்னதமான வடிவைக் காட்டினார்.

பதம் 3.21.9
ஸ தம் விரஜம் அர்காபம் ஸித பத்மோத்பல- ஸ்ருஜம்
ஸ்நிக்த -நீலாலக -வ்ராத -வக்த்ராப்ஜம் விரஜோ’ம்பரம்

ஸ:-கர்தம முனிவர்; தம்-அவரை; விரஜம்-கறை அற்ற; அர்க்க-ஆபம்-கதிரவன் போன்ற பேரொளி; ஸித-வெள்ளை; பத்ம-தாமரைகள்: உத்பல—நீர் அல்லிகள்; ஸ்ருஜம்-மாலை: ஸ்நிக்த- கைத்திறமிக்க: நீல-கருநீலம்; அலக-முடிக்கற்றைகள்; வ்ராத- மிகுதியாக; வக்த்ர-முகம்; அப்ஜம்-தாமரை போன்ற; விரஜ:- குறைவற்ற: அம்பரம் அணிந்து.

கர்தம முனிவர், ஜடவுலகக் கறையிலிருந்து விடுபட்ட பரமபுருஷ பகவானை, அவருடைய அழிவற்ற வடிவில், கதிரவன் போன்ற ஒளியுடன், வெள்ளைத் தாமரைகளாலும் வெள்ளை அல்லிகளாலும் ஆன மாலை அணிந்த வடிவத்தில் கர்தம முனிவர் கண்டார். அவர் குற்றமற்ற மஞ்சள் பட்டு அணிந்திருந்தார். அவருடைய தாமரை போன்ற முகத்தின் ஓரத்தில் சீரான கரிய, சுருண்ட முடிக்கற்றைகள் தொங்கின.

பதம் 3.21.10
கிரீடினம் குண்டலினம் சங்க -சக்ர – கதா -தரம்
சுவேதோத்பல-க்ரீடனகம் மன -ஸ்பர்ச ஸ்மிதேக்ஷணம்

கிரீடினம்-மகுடத்தால் அலங்கரிக்கப்பட்டு; குண்டலினம்— குண்டலங்கள் அணிந்து; சங்க-சங்கு; சக்ர-சக்கரம்; கதா—கதை; தரம்-தாங்கி; ஸ்வேத-வெள்ளை; உத்பல-அல்லி; க்ரீடனகம்- விளையாட்டுப் பொருள்; மன:-மனம்; ஸ்பர்ஸ-தொடுகை; ஸ்மித-புன்சிரிப்பு; ஈக்ஷணம்- பார்த்து.

மகுடத்தாலும் குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அவர் தன் மூன்று கரங்களில் தனக்கேயுரிய சங்கு, சக்கரம் மற்றும் கதையையும் நான்காவது கரத்தில் வெள்ளை அல்லியையும் தாங்கியிருந்தார். எல்லா பக்தர்களின் மனங்களையும் கவரக்கூடிய (பிடிக்கக்கூடிய), மகிழ்வுடன் புன்சிரிப்பும் கூடிய பார்வை பார்த்தார்.

பதம் 3.21.11
வின்யஸ்த -சரணாம் போஜம் அம்ஸ -தேஸே கருத்மத:
த்ருஷ்ட்வா கே’வஸ்திதம் வக்ஷ: ஸ்ரியம் கௌஸ்துப கந்தரம்

வின்யஸ்த-வைத்துக்கொண்டு; சரண—அம்புஜம் தாமரைத் திருவடிகள்; அம்ஸதேஸே-தோள்களில்; கருத்மத:-கருடனின்; த்ருஷ்ட்வா—பார்த்து; கே-வானில்; அவஸ்திதம்-நின்று; வக்ஷ:- மார்பில்; ஸ்ரியம்-நன்மைக்கு உகந்த குறி; கௌஸ்துப- கௌஸ்துப மணி; கந்தரம்-கழுத்து.

கழுத்திலிருந்து தொங்கும் புகழ்மிக்க கௌஸ்துப மணி மார்பில் தங்கம் போல் மின்ன, கருடனின் தோள்களில் தன் தாமரை போன்ற திருவடிகளை வைத்து வானில் நின்றார்.

பதம் 3.21.12
ஜாத -ஹர்ஷோ ‘பதந்மூர்த்னா க்ஷிதௌ லப்த மனோரத:
கீர்பிஸ்து அப்யக்ருணாத் ப்ரீதி- ஸ்வபாவாத்மா க்ருதாஞ்ஜலி:

ஜாதஹர்ஷ:-இயற்கையில் மகிழும்; அபதத்—அவர் கீழே விழுந்து; மூர்த்னா—அவர் தலையுடன்; க்ஷிதௌ:-நிலத்தில்; லப்த-நிறைவடைந்து; மன:-ரத:-அவரது ஆசை; கீர்பி:- வழிபாடுகளினால்; து-மற்றும்; அப்யக்ருணாத்—அவர் திருப்தியடைந்து; ப்ரீதி-ஸ்வ பாவ – ஆத்மா இயற்கையாகவே எப்பொழுதும் அன்பு நிறைந்த மனமுடையவர்; க்ருதா அஞ்ஜலி—கைகளைக் கூப்பி.

கர்தம முனிவர் பரமபுருஷ பகவானை நேரடியாக உணர்ந்த போது, அவருடைய உன்னதமான ஆசை நிறைவேறியதால் மிகவும் திருப்தி அடைந்தார். அவர் கீழே விழுந்து தலைவணங்கி, பகவானின் தாமரைத் திருவடிகளுக்கு, வணக்கங்களைத் தெரிவித்தார். அவர் மனம் இயற்கையிலேயே பகவானிடம் முழுமையான அன்பால் நிறைந்தது. கைகளைக் கூப்பிக் கொண்டு தன் வழிபாட்டால் அவர் பகவானைத் திருப்தி செய்தார்.

பதம் 3.21.13
ரிஷிர் உவாச
ஜூஷ்டம் பதாத்யாகில -ஸத்வ – ராஸே:
ஸாம்ஸித்யம் அணோஸ் தவ தர்சனான் ந:
யத் தர்சனம் ஜன்மபிரீட்ய ஸத்பிர்
ஆசாஸதே யோகினோ ரூட-யோகா:

ரிஷி: உவாச-சிறந்த முனிவர் கூறினார்; ஜூஷ்டம்–அடைந்து; பத-ஆ; அத்ய—இப்போது; அகில—அனைத்து; ஸத்வ—நன்மையின்; ராசே-இருப்பிடமாக உள்ளவர்; ஸாம்ஸித்யம்-முழு வெற்றி; அக்ஷணோ:-இரு கண்களில்; தவ-உங்களுடைய; தர்சனாத்—பார்வையிலிருந்து: ந:-எங்களால்; யத்-யாருடைய; தர்சனம்-பார்வை; ஜன்மபி:-பிறவிகளிலிருந்து; ஈத்ய-ஓ வணங்கத் தகுந்த பகவானே; ஸத்பி:-நிலையில் படிப்படியாக உயர்தல்; ஆசாஸதே-ஆசை; யோகின:-யோகிகள்; ரூட-யோகா:-யோகத்தில் முழு நிறைவு அடைந்து.

சிறந்த முனிவராகிய கர்தமர் கூறினார்: ஓ வணங்கத்தக்க பரமபுருஷ பகவானே, உயிர்களுக்கெல்லாம் இருப்பிடமாக விளங்கும் உங்களுடைய காட்சியினால் சிறந்த முழுமையை அடைந்து, எனது பார்க்கும் அற்றல் நிறைவு பெற்றுள்ளது. ஆழ்ந்த பல பிறவிகளில் தொடர்ந்து செய்த தியானத்தின் மூலம் முன்னேறிய யோகிகள் உங்களுடைய உன்னத வடிவைத் காண விரும்புகின்றனர்.

பதம் 3.21.14
யே மாயயா தே ஹத- மேதஸஸ் த்வத்
பாதாரவிந்தம் பவ -ஸிந்து- போதம்
உபாஸதே காம-லவாய தேஷாம்
ராஸூஸ காமான் நிரயே’பி யே ஸ்யு:

யே-அந்த மனிதர்கள்; மாயயா-மயக்கும் சக்தியால்; தே- உங்களின்; ஹத—தொலைந்த; மேதஸ:-அவருடைய அறிவுக் கூர்மை; த்வத்–உங்களுடைய; பாதாரவிந்தம் தாமரைப் பாதங்கள்; பவ-இம்மைக்குரிய இருப்பு: ஸிந்து-கடல்; போதம்-கடப்பதற்குப் படகு; உபாஸதே-வழிபாடு; காமலவாய-சாரமற்ற இன்பங்களைப் பெறுவதற்கு; தேஷாம்-அவர்களின்; ராஸி-நீங்கள் அருளி; ஈச-ஓ பகவானே; காமான்—ஆசைகள்; நிரயே-நரகத்தில்; அபி—இருந்த போதிலும்; யே-அந்த ஆசைகள்; ஸ்யு:-கிடைக்க முடியும்.

உங்கள் தாமரைப் பாதங்கள் இம்மையில் அறிவின்மை எனும் கடலைக் கடக்க உதவும் உண்மையான படகாகும். மயக்கும் சக்தியால் தங்களின் அறிவுக் கூர்மை இழந்தவர் மட்டுமே புலன்களின் சாரமற்ற, கணநேர இன்பங்களை அடைய விரும்பி அந்தப் பாதங்களை வணங்குவார்கள். இதை நரகத்தில் அலையும் மனிதர்களாலும் அடைய முடியும். என் பகவானே, அப்படிப் பட்டவர்களுக்கும் கூட கருணை காட்டும் அளவுக்கு நீங்கள் கருணை படைத்தவர்.

பதம் 3.21.15
ததா ஸ சாஹம் பரிவோது -காம:
ஸமான-சீலாம் க்ருஹமேத -தேனும்
அபேயிவான்மூலம் அஸேஷ- மூலம்
துராசய: காம- துகாங்க்ரிபஸ்ய

ததா—அது போல; ஸ:-என்னை; ச-கூட; அஹம்-நான்; பதிவோதுகாம:-மணந்து கொள்ள விரும்பி; ஸமான-சீலாம் ஒழுக்கங்களை விரும்பும் பெண்; க்ருஹமேத-திருமண வாழ்வில்; தேனும் – நிறைந்த பசு (பெண்); உபேயிவான்-அணுகி; மூலம்- மூலம் (தாமரைப் பாதம்); அசேஷ-எல்லாவற்றின்; மூலம்-மூலம்; துராசய-சிற்றின்ப ஆசையுடன்; காம-துகா-எல்லா ஆசைகளின் விளைவு: அங்க்ரியஸ்ய-(உங்கள்) மரமாக இருப்பவர்.

அதனால், அதே இயல்புள் ஒரு பெண்ணை மணந்து கொள்ள விரும்பி, என் இல்லற வாழ்வில் நிறைவைத் தரும் அந்தப் பெண்ணாக விளங்கப் போகிறவளைக் கொண்டு, என்னுடைய சிற்றின்ப ஆசையைத் திருப்தி செய்துகொள்ள நானும் உங்கள் பாதகமலங்களின் பாதுகாப்பை நாடினேன். அப்பாதங்களே எல்லாவற்றுக்கும் மூல காரணமாகும் ஏனென்றால் நீங்கள் ஆசையாகிய மரம் போன்றவர்.

பதம் 3.21.16
ப்ரஜாபதேஸ் தே வசஸாதீசா தந்த்யா
லோக: கிலாயம் காம -ஹதோ’னுபத்த:
அஹம் ச லோகானுகதோ வஹாமி
பலிம் ச சுக்லானிமிஷாய துப்யம்

ப்ராபதே:-ஜீவராசிகளின் தலைவராயிருப்பவர்; தே- உங்களின்; வசஸா-வழிகாட்டுதலின் கீழ்; ஆதீசா—ஓ என் பகவானே; தந்த்யா-கயிற்றால்; லோக:-கட்டுப்பட்ட ஆத்மாக்கள்; கில-உண்மையில்; அயம்-இந்த; காம ஹத:-சிற்றின்ப ஆசைகளால் பீடிக்கப்பட்டு; அனுபத்த:-கட்டுப்பட்ட; அஹம்-நான்; ச-மற்றும்; லோக- அனுகத:-கட்டுப்பட்ட ஆன்மாக்களைப் பின்தொடர்தல்; வஹாமி-கொடுத்து; பலிம்-படையல்; ச-மற்றும்; சுக்ல—ஓ மதத்தை உருவாகக் கொண்டவனே; அனிமிஷாய—அழிவற்ற (நிலையாக) காலம் இருக்கும்; துப்யம் உங்களுக்கு.

ஓ என் பகவானே, நீங்களே எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் தலைவராகவும் வழிகாட்டியாகவும் விளங்குபவர். உங்களின் வழி காட்டுதலின் கீழ், எல்லாக் கட்டுப்பட்ட ஆன்மாக்களும், கயிற்றால் கட்டப்பட்டது போல, தொடர்ந்து, அவ்வவற்றின் ஆசைகளைத் திருப்தி செய்வதில் ஈடுபட்டுள்ளன. ஒ மதத்தின் உருவே, அவர்களைப் பின்பற்றி, நானும் என்றும் அழியாத காலங்களின் உருவமாகிய தங்களுக்கு எனது படையலை அளித்து வணங்குவேன்.

பதம் 3.21.17
லோகாம்ஸ் ச லோகானுகதான் பஸூம்ஸ் ச
ஹித்வா ஸ்ரிதாஸ் தே சரணாதபத்ரம்
பரஸ்பரம் த்வத – குண – வாத – ஸீது
பீயூஷ – னிர்யாபித -தேஹ -தர்மா:

லோகான்-உலக விஷயங்கள்; ச-மற்றும்; லோக அனுகதான்- உலக விஷயங்களைப் பின்பற்றுபவர்கள்; பஸூன்- மிருகத்தனமான; ச-மற்றும்; ஹித்வா-விட்டுவிட்டு; ஸ்ருதா:-பாதுகாப்பு பெற்று; தே-உங்கள்; சரண-தாமரைப் பாதங்களின்; ஆதபத்ரம்-குடை; பரஸ்பரம்-ஒருவருக்கொருவர்; தவத்-உங்கள்; குண-குணங்கள்; வாத—கலந்துரையாடலால்; ஸீது-வெறி ஊட்டம்; பியூஷ-தேனால்; நிர்யாபித—அழித்து; தேஹ-தர்மா:- உடலின் முதன்மையான தேவைகள்.

ஆயினும், பாரம்பரியமான உலக விஷயங்களை விட்டு விட்டவர்கள், இந்த உலக விஷயங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள், ஒருவரோடொருவர் கலந்துரையாடி மயக்கம் தரும் தேனாகிய உங்கள் குணங்கள் செயல்களைப் பருகுவதன் மூலம் உங்கள் பாத கமலங்களாகிய குடையின் பாதுகாப்பைப் பெற்றவர்கள் ஆகிய அனைவரும் உலக வாழ்வில் மனித உடம்பின் எல்லாத் தேவைகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.

பதம் 3.21.18
ந தே ஜராக்ஷ -ப்ரமிர் ஆயுர் ஏஷாம்
த்ரயோதஸாரம் த்ரி -ஸதம் ஷஷ்டி பர்வ
ஷண் நேமி அநந்த – ச்சதி யத் த்ரி -ணாபி
கரால-ஸ்ரோதோ ஜகத் ஆச்சித்ய தாவத்

ந-இல்லை; தே-உங்கள்; அஜர—அழியாத பிரம்மனின்; அக்ஷ –சக்கரத்தின் அச்சில்; ப்ரமி-சுழன்று; ஆயு:வாழ்நாள்; ஏஷாம்- பக்தர்களின்; த்ரயோதச-பதின்மூன்று; ஆரம்-ஆரங்கள்; த்ரிசுதம்- முந்நூறு; ஷஷ்டி-அறுபது; பர்வ-விழாக்கள்; ஷத்-ஆறு; நேமி-விளிம்புகள்; அநந்த-எண்ணிலடங்காத; சதி—இலைகள்; யத்-எந்த; த்ரி-மூன்று; நாபி-சக்கரத்தின் குடங்கள்; கரால ஸ்ரோத—பயம் தரத்தக்க வேகம்; ஜகத்-அண்டம்; ஆச்சித்ய-வெட்டிக் குறைத்து; தாவத்-ஓடுதல்.

மூன்று ஆரங்களைக் கொண்ட உங்கள் சக்கரம் என்றும் அழியாத பிரம்மனின் அச்சில் சுழல்கிறது. அது பதின்மூன்று ஆரங்களும், 360 இணைப்புகளும், ஆறு விளிம்புகளும், அதன் மேல் செதுக்கப்பட்ட எண்ணற்ற இலைகளும் கொண்டது. படைக்கப்பட்ட பொருள்களின் வாழ்நாளைத் துண்டித்தாலும், அச்சம் தரும் சுழற்சி வேகம் உடைய இந்தச் சக்கரம் பகவானுடைய பக்தர்களின் வாழ்நாளைத் தொட முடியாது.

பதம் 3.21.19
ஏக: ஸ்வயம் ஸஞ் ஜகத: ஸிஸ்ருக்ஷயா-
த்வி தீயயாத்மன் அதி -யோகமாயயா
ஸ்ருஜஸி அத: பாஸி புனர் க்ரஸிஷ்யஸே
யதோர்ண-நாபிர்துகவன் ஸ்வ ஸக்திபி:

ஏக:-ஒன்று; ஸ்வயம்—நீங்கள்; ஸஞ்-இருப்பு; ஜகத:-அண்டம்; ஸிஸ்ருக்ஷயா-படைக்கும் விருப்புடன்; அத்விதீயயா-இரண்டாவது இல்லாமல்; ஆத்மன்-உங்களிடம்; அதி- கட்டுப்படுத்தி; யோக மாயா-யோக மாயையால்; ஸ்ருஜஷி_ நீங்கள் படைக்கிறீர்கள்; அத:-அந்த அண்டங்கள்: பாஸி— நீங்கள் பாதுகாத்து ; புன:-மீண்டும்; கீரஸிஷ்யஸே-நீங்கள் முடிப்பீர்கள்; யதா-போல; ஊர்ண நாபி- சிலத்தி: பகவன்—ஓ பகவானே; ஸ்வ ஸக்திபி:-அதன் சொந்தத் திறனால்.

என் அன்பு பகவானே, நீங்கள் மட்டும் (தனியாக) அண்டங்களைப் படைக்கிறீர்கள். ஓ இறைவனுக்கெல்லாம் இறைவனே இந்த அண்டங்களைப் படைக்க விரும்பி, பின் அவற்றைப் படைத்து, காத்து மீண்டும் உங்கள் சொந்த ஆற்றலால் அவற்றை அழிக்கிறீர்கள். அவை யோக மாயை எனப்படும் உங்கள் இரண்டாவது ஆற்றலின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு சிலந்தி தன்னுடைய ஆற்றலால் நூலாம் படையைப் படைத்து அதை மீண்டும் அழிப்பது போல நீங்களும் செயல்படுகிறீர்கள்.

பதம் 3.21.20
நைதத் பதாதீச பதம் தவேப்ஸிதம்
யன் மாயயா நஸ்தநுஷே பூத -ஸூக்ஷ்மம்
அனுக்ரஹாயாஸ்த அபி யர்ஹி மாயயா
லஸத் -துளஸ்யா பகவான் விலக்ஷித:

ந-இல்லை; ஏதத்-இந்த; பத-உண்மையில்; அதீச—ஓ பகவான்; பதம்-ஜடவுலகம்; தவ-உங்களுடைய; ஈப்ஸிதம்—ஆசை; யத்—எந்த; மாயயா-உங்கள் வெளிச் சக்தியால்; ந:-எங்களுக்கு; தநுஷே-நீங்கள் தெளிவாகக் காட்டுகிறீர்கள்; பூதஸூக்ஷ்மம்-நுட்பமான, முழுமையான பஞ்ச பூதங்கள்; அநுக்ரஹாய-அருள் புரிவதற்கு; அஸ்து—அப்படியே ஆகுக; அபி-உடன்; யர்ஹி-எப்பொழுது; மாயயா-அகாரணமான கருணையினால்; லஸத்-ஒளி நிறைந்த; துளஸ்யா-துளசி இலை மாலையுடன்; பகவான்-பரமபுருஷ பகவான்; விலக்ஷித—உற்று நோக்கப்பட்டு.

என் அன்பான பகவானே, உங்களுடைய விருப்பம் இல்லாவிட்டாலும் எங்களுடைய புலன் திருப்திக்காக நீங்கள் இந்த முழுமையான நுட்பமான பூதங்களால் ஆகிய படைப்பை வெளிப்படுத்துகிறீர்கள். உங்களுடைய அகாரணமான கருணை எங்கள் மீது இருக்கட்டும். ஒளி பொருந்திய துளசி இலைகளால் ஆன மாலையால் அலங்கரிக்கப்பட்டு உங்களுடைய அழிவற்ற வடிவத்தில் எங்கள் முன் தோன்றியுள்ளீர்கள்.

பதம் 3.21.21
தம் த்வானுபூத்யோ பரத-க்ரியார்த்தம்
ஸ்வ-மாயயா வர்தித-லோக-தந்த்ரம்
நமாமி அபீக்ஷ்ணம் நமனீய-பாதி
ஸரோஜம் அல்பீயஸி காம-வர்ஷம்

தம்-அந்த; தத்வ-நீங்கள்; அனுபூத்யா-உணர்வதால்; உபரத- புறக்கணித்து; க்ரியா—பலன்நோக்குச் செயல்களின் இன்பம்; அர்த்தம்-அதற்காக; ஸ்வமாயயா-உங்களின் சொந்த சக்தியால்; வர்தித-கொண்டு வந்து; லோக-தந்த்ரம்-ஜட உலகங்கள்; நமாமி-நான் வணக்கங்களைத் தருகிறேன்; அபீக்ஷணம்-தொடர்ந்து; நமனீய-வணங்கத்தகுந்த; பாத-ஸரோஜம்-தாமரைப் பாதங்கள்; அல்பீயஸி-அற்பமான; காம-ஆசைகள்; வர்ஷம்- பொழிதல்.

பிறர் வந்து சரண் அடையத்தகும் உங்களுடைய தாமரைப் பாதங்களுக்கு என் மரியாதைக்குரிய வணக்கங்களை, நான் தொடர்ந்து சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் அற்பமானவனிடத்தில் கூட நீங்கள் எல்லா ஆசிகளைப் பொழிகிறீர்கள். உங்களை உணருவதன் மூலம் பலன் நோக்குச் செயல்களிலிருந்து எல்லா உயிர் பொருள்களின் பிடிப்பை அகற்ற, நீங்கள் உங்கள் தனித்த சக்தியால் இந்த ஜடவுலகங்களை விரிவுபடுத்தியுள்ளீர்.

பதம் 3.21.22
ரிஷி உவாச
இதி அவ்யலீகம் ப்ரணுதோ ப்ஜ -னாபஸ்
தம்ஆப்பாஷே வசஸாம்ருதேன
ஸூபர்ண பக்ஷோபரி ரோசமான
ப்ரேம -ஸ்மிதோத் விக்ஷண-விப்ரமத் -ப்ரூ:

ரிஷி: உவாச-சிறந்த முனிவர் மைத்ரேயர் கூறினார்; இதி-இவ்வாறு; அவ்யலீகம்-உண்மையாக; பிரணுத-புகழப்பட்டு; அப்ஐ-நாப:-பகவான் விஷ்ணு; தம்-கர்தம முனிவரிடம்; ஆப்பாஷே-பதில் கூறினார்; வசஸா-சொற்களுடன்; அம்ருதேன—தேன் போல் இனிமையான; ஸூபர்ண-கருடனின்; பக்ஷ-தோள்கள்; உபரி-மேல்; ரோசமான:-ஒளி வீசி; ப்ரேம-அன்பின்; ஸ்மித-புன்னகையுடன்; உத் வீக்ஷ்ண-பார்த்து; விப்ரமத்—அழகாக அசைத்து; ப்ரூ-புருவங்கள்.

மைத்ரேயர் தொடர்ந்தார். உண்மையாக இந்தச் சொற்களால் புகழப்பட்டு, பகவான் விஷ்ணு கருடனின் தோள்களின் மீது அமர்ந்து கொண்டு மிகவும் அழகாக ஒளி வீசிக் கொண்டு, அமிர்தம் போன்ற இனிய சொற்களுடன் பதில் கூறினார். முனிவரை அன்புடன் கூடிய புன்னகையுடன் விஷ்ணு பகவான் பார்த்த போது அவரது புருவங்கள் மிக அழகுடன் அசைந்தன.

பதம் 3.21.23
ஸ்ரீ-பகவானுவாச
விதித்வா தர சைத்யம்மே புரைவ ஸமயோஜி தத்
யத் -அர்த்தம் ஆத்ம நியமைஸ் த்வயைவாஸம் ஸமர்ச்சித:

ஸ்ரீ பகவான் உவாச-பகவான் கூறினார்; விதித்வ-புரிந்து கொள்ளுதல்; தவ—உங்களுடைய; சைத்யம்-மனநிலை; மே- என்னால்; புரா-முன் காலத்தில்; ஏவ – குறிப்பாக; ஸமயோஜி- ஏற்பாடு செய்து; தத் -அந்த; யத்-அர்த்தம் அதற்காக; ஆத்ம-மனம் புலன்களின்; நியமை-ஒழுக்கத்தால்; த்வயா-உங்களால்; ஏவ- மட்டும்; அஹம்-நான்; ஸமர்ச்சித-வணங்கப்பட்டு.

பகவான் கூறினார்: உங்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய வந்து, உங்கள் மனத்தாலும் புலன்களினாலும் என்னை எதற்காக வழிபட்டீர்களோ அதற்குரிய பலனை முன்னமேயே ஏற்பாடு செய்துவிட்டேன்.

பதம் 3.21.24
ந வை ஜாது ம்ருஷைவ ஸ்யாத் ப்ரஜாத்யக்ஷ மத் அர்ஷணம்
பவத் – விதேஷு அதிதராம் மயி ஸ்ங்க்ருபிதாத்தமனாம்

ந-இல்லை; வை—உண்மையில்; ஜாது-எப்பொழுதும்; ம்ருஷா— பயனற்ற; ஏவ -மட்டும்; ஸ்யாத் இருக்கலாம்; ப்ரஜா-ஜீவராசிகள்; அத்யக்ஷ—ஓ தலைவரே; மத்—அர்ஹணம்-என் வழிபாடு; பவத்- விதேஷு-உங்களைப் போன்றவரிடம்; அதிதராம்-முழுவதும்; மயி-என்மேல்; ஸங்க்ருபித-நிலைத்து; ஆத்மனாம்—அவருடைய மனங்கள்.

பகவான் தொடர்ந்தார். என் அன்பான ரிஷியே, ஓ உலகில் உள்ள உயிர்ப் பொருள்களின் தலைவரே, என்னை வழிபடுவதன் மூலம் பக்தித் தொண்டு புரிபவருக்கு, சிறப்பாக எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்து விட்ட உங்களைப் போன்றவருக்கு, விரக்தி என்ற கேள்விக்கே இடமில்லை.

பதம் 3.21.25
ப்ரஜாபதி- ஸூத: ஸம்ராண் மனுர் விக்யாத மங்கல:
ப்ரம்மாவர்த்தம் யோ’திவஸன் சாஸ்தி ஸப்தார்ணவாம் மஹீம்

ப்ரஜாபதி-ஸீத-பிரம்மாவின் புதல்வன்; ஸம்ராட்-மன்னர் மன்னன்; மனு:-ஸ்வாய்ம்புவ மனு; விக்யாத-தன்கு அறிந்த; மங்கல:-அவரின் நல்ல செயல்கள்; பிரம்மாவர்த்தம்-பிரம்மவர்த்தம்; ய-அவர்; அதிவஸன்-வாழ்த்து; சாஸ்தி-ஆட்சி செய்தல்; ஸப்த-ஏழு; அர்ணவாம்—கடல்கள்; மஹீம்-பூமி.

பகவான் பிரம்மனின் மகனும், தன் நல்ல செயல்களால் அறியப்பட்டவரும், ஆகிய மன்னர் மன்னன் ஸ்வாயம்புவ மனு, பிரம்மாவதத்தை இருப்பிடமாகக் கொண்டு ஏழு கடல்களுடன் பூமியை ஆட்சி செய்தார்.

பதம் 3.21.26
ஸ தேஹ விப்ர ராஜர்ஷிர் மஹிஷ்யா ஸதரூபயா
ஆயாஸ்யதி தித்ரூக்ஷுஸ் த்வாம் பரஸ்வோ தர்ம- கோவித:

ஸ:-ஸ்வாயம்புவ மனு; ச-மற்றும்; இஹ-இங்கு: விப்ர-ஓ புனித பிராம்மணரே; ராஜரிஷி:-துறவி அரசன்; மஹிஷ்யா-அவர் அரசியுடன்; ஸதரூபயர—ஸ்தரூபா எனப்படும்; ஆயாஸ்யதி- வருவார்; தித்ருஷு:-பார்க்க விரும்பி; த்வாம்-நீங்கள்; பரஸ்வ:- நாளை மறுநாள்; தர்ம-மதச் செயல்களில்; கோவித:-வல்லுநர்.

ஓ பிராம்மணனே, நாளை மறுநாள் மதச் செயல்களில் வல்லுநராகிய அந்தப் புகழ் வாய்ந்த மன்னர் தன் அரசியான சாதரூபாவுடன் உங்களைப் பார்க்க விரும்பி இங்கு வருவார்.

பதம் 3.21.27
ஆத்மஜாம் அஸிதாபாங்கீம் வய:ஸீல குணான் விதாம்
ம்ருகயந்தீம் பதிம் தாஸ்யதி அனுரூபாய தே ப்ரபோ

ஆத்ம-ஜாம்—அவருடைய சொந்த மகள்; அஸித-கறுப்பு; அபாங்கீம்-கண்கள்; வய:-பருவமடைந்த; ஸ்ரீல—நல்ல நடத்தை; குண—நல்ல குணங்களுடன்; அன்விதாம்-பரிசளிக்க; ம்ருகயந்தீம்—தேடுதல்; பதிம்-ஒரு கணவனை; தாஸ்யதி-அவர் தருவார்; அனுரூபாய-தகுந்த; தே-உங்களிடம்; ப்ரபோ—என் அன்பான ஐயா.

அவருக்கு கரிய கண்களை உடைய பருவமடைந்த ஒரு பெண் உள்ளாள். அவள் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாள். அவள் நன்னடத்தையும் எல்லா நல்ல குணங்களும் கொண்டவள். அவளும் ஒரு நல்ல கணவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். என் அன்பான ஐயா, அவளுக்குமிகப் பொருத்தமான பெற்றோர், தங்களது மகளை உங்களுக்கு மனைவியாக்க, உங்களைக் காண வருவார்கள்.

பதம் 3.21.28
ஸமாஹிதம் தே ஹ்ருதயம் யத்ரேமான் பரிவத்ஸரான்
ஸா த்வாம் ப்ரம்மன் ந்ரூப- வதூ: காமம் ஆஸு பஜிஷ்யதி

ஸமாஹிதம்-நிச்சயிக்கப்பட்டு; தே-உங்களுடைய; ஹ்ருதயம்- மனம்; யத்ர-யாரிடம்; இமான்-இவற்றுக்காக; பரிவத்ஸரான்- ஆண்டுகள்; ஸா—அவள்; த்வாம்—நீங்கள், ப்ரம்மன்-ஓ பிராம்மணரே; ந்ருப-வதூ:-இளவரசி; காமம்-நீங்கள் விரும்புவது போல; ஆஸு-அதி விரைவில்; பஜிஷ்யதி-தொண்டாற்றுவாள்.

ஓ புனித முனிவரே, நீங்கள் இத்தனை ஆண்டுகளாக உங்கள் மனதில் நினைத்த வண்ணமே அந்த இளவரசி இருப்பாள். அவள் விரைவில் உங்களுடையவள் ஆகி, உங்கள் மனத் திருப்திக்கு ஏற்றபடி தொண்டு செய்வாள்.

பதம் 3.21.29
யா த த்ம- ப்ருதம் வீர்யம் நவதா ப்ரஸவிஸ்யதி
வீர்யே த்வதீயே ருஷய ஆதாஸ்யந்தி அஞஜஸாத்மன:

யா—அவள்; தே-உங்களால்; ஆத்ம-ப்ருதம்—அவளிடம் விதைக்கப்பட்டு; வீர்யம்-விதை; நவ-தா—ஒன்பது பெண்கள்; ப்ரஸவிஷ்யதி—பெற்றெடுத்து; வீர்யே-த்வத்யே-உங்களால் பெறப்பட்ட பெண்களில்; ருஷய:-முனிவர்கள்; ஆதாஸ்யந்தி—பெற்றெடுப்பார்கள்; அஞ்ஜஸ-மொத்தத்தில்; ஆத்மன:- குழந்தைகள்.

உங்களால் அவளிடம் உண்டாக்கப்பட்ட கருவிலிருந்து அவர் ஒன்பது பெண்களைப் பெற்றெடுப்பாள், நீங்கள் பெற்ற பெண்களின் மூலமாக, முனிவர்கள் குழந்தைகளைப் பெறுவார்கள்.

பதம் 3.21.30
த்வம் ச ஸம்யக் அனுஷ்டாய நிதேசம் ம உசத்தம:
மயி தீர்த்தி-டக்ரு தாயேஷ க்ரியார்த்தோ மாம் ப்ரபத்ஸ்யஸே

த்வம்-நீங்கள்; ச-மற்றும்; ஸம்யக்-சரியாக; அனுஷ்டாய- எடுத்துக் கொண்டு; நிதேசம்-கட்டளை; மே-என்னுடைய; உசத்தம-முழுவதும் தூய்மையாக்கப்பட்டு; மயி-என்னிடம்; தீர்த்தி க்ருத- ஒப்படைத்து; அசேஷ-எல்லா; க்ரியா- செயல்களின்; அர்த்த:-பலன்கள்; மாம்-என்னிடம்; ப்ரபத்ஸ்யஸே— நீங்கள் அடைவீர்கள்.

என்னுடைய கட்டளையைச் சரியாக நிறைவேற்றுவதன் மூலம் உங்கள் மனது தூய்மையாக்கப்படுவதுடன், உங்களின் எல்லாச் செயல்களின் பயன்களையும் என்னிடம் விட்டுவிட்டு, இறுதியில் நீங்கள் என்னை வந்தடைவீர்கள்.

பதம் 3.21.31
க்ருத்வா தயாம் ச ஜீவேஷு தத்வா சாபயம் ஆத்மவான்
மய் ஆத்மானம் ஸஹ ஜகத் த்ரக்ஷ்யஸி ஆத்மனி சாபி மாம்

க்ருத்வா-காட்டி; தயாம்-அன்பு; ச-மற்றும்; ஜீவேஷு-ஜீவராசிகளிடம்; தத்வா-கொடுத்து; ச-மற்றும்; அபயம்—பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்; ஆத்மவான்— தன்னை உணர்ந்து; மயி-என்னிடம்; ஆத்மானம்-உன்னை; ஸஹ-ஜகத்- அண்டத்துடன்; த்ரஷ்யஸி—நீ உற்று நோக்குவாய்; ஆத்மனி—உன்னிடம்; ச-மற்றும்; அபி-உடன்; மாம்- என்னை.

எல்லா உயிர்ப் பொருள்களிடம் அன்பு காட்டினால், நீங்கள் தன்னை உணரும் நிலையை அடைவீர்கள். எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு பற்றிய உறுதியைக் கொடுத்து, நீங்கள் உங்களை உற்று நோக்குவது மட்டுமின்றி என்னில் எல்லா அண்டங்களையும் உங்களிடம் என்னையும் காண்பீர்கள்.

பதம் 3.21.32
ஸஹாஹம் ஸ்வாம் – ஸகலயா த்வத் -வீர்யேண மஹா-மூனே
தவ க்ஷேத்ரே தேவஹூ த்யாம் ப்ரணேஷ்யே தத்வ-ஸம்ஹிதாம்

ஸஹ—உடன்; அஹம்—நான்; ஸ்வ அம்ச கலயா—என் சொந்த முழு நிறைவான பகுதி; த்வத் வீர்யேண-உங்கள் விந்துவால்; மஹாமுனே—ஓ சிறந்த முனிவரே; தவ க்ஷேத்ரே-உங்கள் மனைவியிடம்; தேவஹூத்யாம்—தேவஹூதியிடம்; ப்ரணேஷ்யே-நான் அறிவுறுத்துவேன்; தத்வ-இறுதியான தத்துவங்களின்; ஸம்ஹிதாம்-கோட்பாடு.

ஓ சிறந்த முனிவரே, நான் உங்கள் மனைவி தேவஹூதிக்குப் பிறந்த ஒன்பது பெண்களுடன், என்னுடைய முழு பரிபூரணமான உருவத்தோடு மகனாகப் பிறப்பேன். பின்னர் இறுதியான கொள்கை மற்றும் கோட்பாடுகளுடன் தொடர்பு கொள்ளும் தத்துவத்தின் முறையை அவளுக்கு அறிவுறுத்துவேன்.

பதம் 3.21.33
மைத்ரேய உவாச
ஏவம் தம்அநுபாஷ்யாத பகவான் ப்ரத்யக்-அக்ஷஜ:
ஜகாம் பிந்துஸரஸ: ஸரஸ்வத்யா பரிஸ்ரிதாத்

மைத்ரேய உவாச:—சிறந்த முனிவர் மைத்ரேயர் கூறினார்; ஏவம்-இவ்வாறு; தம்—அவரிடம்; அநுபாஷ்ய-பேசியதும்; அத-பிறகு: பகவான்-பகவான்; ப்ரத்யக்-நேராக; அக்ஷ்-புலன்களால்; ஜ-மனத்தால் உணரப்பட்டவர்; ஜகாம-போனார்; பிந்துஸரஸ:- பிந்து ஸரோவர் ஏரியிலிருந்து; ஸர்ஸ்வத்யா-ஸரஸ்வதி நதியால்; பரிஸ்ரிதாத்-வளைத்து.

மைத்ரேயர் தொடர்ந்தார்; இவ்வாறு கர்தம முனிவரிடம் பேசியதும், கிருஷ்ண உணர்வில் புலன்கள் இருந்தால் மட்டுமே தன்னை வெளிப்படுத்தும் பகவான், ஸரஸ்வதி நதியால் சூழப்பட்ட பிந்து ஸரோவர் எனப்படும் ஏரியிலிருந்து வெளிப்பட்டார்.

பதம் 3.21.34
நிரீக்ஷ தஸ் தஸ்ய யயாவ சேஷ-
ஸித்தேஸ்வராபிஷ்டு -தஸித்த -மார்க:
ஆகர்ணயன் பத்ர -ரதேந்த்ர -பக்ஷை
ருச்சாரிதம் ஸ்தோமமுதீர்ண-ஸாம்

நிரீக்ஷத்ஸ்தஸ்ய-அவர் பார்க்கும் பொழுது; யயா—அவர் நீங்கினார்; அசேஷ-எல்லா; ஸித்த ஈஸ்வர-விடுதலை அடைந்த ஆன்மாக்களால்; அபிஷ்டூத-புகழப்பட்டார்; ஸித்தமார்க:-புனித உலகிற்குச் செல்லும் வழி; ஆகர்ணயன்—கேட்டு; பத்ர ரத இந்த்ர—கருடனின் (பறவைகளின் அரசன்); பக்ஷை:-இறகுகளால்; உச்சாரிதம்-அதிர்ந்து; ஸ்தோமம்-பாசுரங்கள்; உதீர்ண-ஸாம-ஸாம வேதம் உருவாக்கி.

முனிவர் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, எல்லா விடுதலை அடைந்த ஆன்மாக்களும் வாயாரப் புகழும், வைகுண்டத்திற்குச் செல்லும் பாதையில் பகவான் சென்றார். ஸாம வேதத்தின் அடிப்படையை உருவாக்கும் பாசுரங்களைக் கேட்டுக் கொண்டு முனிவர் நின்றார். அந்தப் பாசுரங்கள் பகவானின் வாகனமாகிய கருடனின் படபடக்கும் இறகுகளின் அதிர்வினால் வெளியாகியது.

பதம் 3.21.35
த ஸம்ப்ரஸ்திதே சுக்லே கர்தமோ பகவான் ரிஷி:
ஆஸ்தே ஸ்ம பிந்துஸரஸி தம் காலம் பிரதிபாலயன்

அத – பின்னர்; ஸம்ப்ரஸ்திதே சுக்லே – பகவான் சென்ற பொழுது; கர்தம:-கர்தம முனிவர்; பகவான்-சிறந்த சக்தியுள்ள; ரிஷி:-முனிவர்; ஆஸ்தே ஸ்ம-தங்கி, பிந்துஸரஸி-பிந்து ஸரோவர ஏரியின் கரையில்; தம்-அந்த; காலம்-நேரம்; ப்ரதிபாலயன்-காத்திருந்தார்.

பின்னர், பகவான் சென்ற பிறகு, வணங்கத்தக்க கர்தம முனிவர் பிந்து ஸரோவராவின் கரையில் தங்கி, பகவான் கூறிய நேரத்திற்காகக் காத்திருந்தார்.

பதம் 3.21.36
மனு: ஸ்யந்தனம் ஆஸ்தாய சாதகெளம்ப-பரிச்சதம்
ஆரோப்ய ஸ்வாம் துஹிதரம் ஸபார்ய: பர்யடன் மஹீம்

மனு:-ஸ்வாயம்புவ மனு; ஸ்யந்தனம்-தேர்; ஆஸ்தாய-ஏறியமர்ந்து; சாதகெளம்ப-தங்கத்தால் ஆன; பரிச்சதம்-வெளிப் புறத்தில்; ஆரோப்ய-போட்டுக் கொண்டு; ஸ்வாம்-அவருடைய; துஹிதரம்-மகள்; ஸுபார்ய:-தன் மனைவியுடன்; பர்யடன்- பயணம் செய்து; மஹீம்—உலக உருண்டை.

ஸ்வாயம்புவ மனு, தன் மனைவியுடன் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறினார். தன் மகளையும் அவர்களுடன் அதில் ஏற்றி, இவ்வுலகெங்கும் பயணம் செய்யத் தொடங்கினர்.

பதம் 3.21.37
தஸ்மின் ஸுதன்லன் அஹனி பகவான் யத் ஸமாதிசத்
உபாயாத் ஆஸ்ரம-பதம் முனே: சாந்த வ்ரதஸ்ய தத்

தஸ்மின்-அதில்; ஸு தன்வன்—ஓ சிறந்த வில்லாளி விதுரனே; அஹனி-அந்த நாளில்; பகவான்-பகவான்; யத்-எந்த; ஸ்மாதி சத்-முன்பே சொன்னார்; உபாயாத்—அவர் அடைந்தார்; ஆஸ்ரம பதம்—புனிதத் துறவி மாடம்; முனே:-முனிவரின்; சாந்த-முடிந்து; வ்ரதஸ்ய—துறவறத்தின் ஆணைகள்; தத்— அந்த.

ஓ விதுரனே, பகவானால் முன்கூட்டியே உரைக்கப்பட்ட அந்த நாளில், தன்னுடைய துறவறத்தின் சடங்குகளைப் பூர்த்தி செய்த முனிவரின் துறவி மாடத்தை அவர்கள் அடைந்தனர்.

பதங்கள் 3.21.38 – 3.21.39
யஸ்மின் பகவதோ நேத்ரான் ந்யபதன் அஸ்ரு-பிந்தவ:
க்ருபயா ஸம்பரீதஸ்ய ப்ரபன்னே தர்பிதயா ப்ரசம்

தத்வை பிந்துஸரோ நாம ஸரஸ்வத்யா பரிப்லுதம்
புண்யம் சிவாம்ருதஜலம் மஹர்ஷி- கணஸேவிதம்

யஸ்மின்-அதில்; பகவத்:-பகவானின்; நேத்ராத்- கண்ணிலிருந்து; ந்யபதன்—கீழே விழுந்தது; அஸ்ரு பிந்தவ:- கண்ணீர்த்துளிகள்; க்ருபயா-கருணையினால்; ஸம்பரீதஸ்ய- மூழ்கடிக்கப்பட்டவர்; ப்ரபன்னே-சரணடைத்த ஆத்மாவின் (கர்தமர்); அர்பிதயா-மேல் வைத்து; ப்ருலும்—உச்சநிலையில்; தத் -அந்த; வை—உண்மையில்; பிந்து ஸர:-கண்ணீர் ஏரி; நாம— அழைத்து; ஸரஸ்வத்யா—ஸரஸ்வதி நதியால்; பரிப்லுதம்- வழிந்து; புண்யம்-புனிதமான; சிவ-நன்மை தரும்; அம்ருத—அமிர்தம்; ஜலம்-தண்ணீர்; மஹர்ஷி-சிறந்த முனிவர்களின்; கண-கூட்டத்தால்; ஸேவிதம்-தொண்டு செய்து.

ஸரஸ்வதி நதியின் தண்ணீரால் வெள்ளமான புனித ஏரி பிந்து ஸரோவரா, மேம்பட்ட முனிவர் கூட்டத்திற்கு விரும்பி அணுகும் இடமாக விளங்கியது. அதன் புனித நீர் நன்மைக்கு உகந்ததாக மட்டும் இல்லாமல், அமிர்தம் போல் இனிமையாகவும் இருந்தது. அது பிந்து ஸரோவர என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால் தன்னுடைய பாதுகாப்பை விரும்பிய ஆன்மீக முனிவருக்காக ஏற்பட்ட மிகுந்த கருணையால் மூழ்கிய பகவானின் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர்த் துளிகள் அதில் விழுந்தன.

பதம் 3.21.40
புண்யத்-ரும-லதா-ஜாலை: கூஜத் -புண்யம்-ருகத் – விஜை:
ஸர்வர்-துபல-புஷ்பாத்யம் வன-ராஜி-ஸ்ரியாந்விதம்

புண்ய-பக்தியுள்ள; த்ரும-மரங்களின்; லதா-கொடிகளின்; ஜாலை:-கொத்துகளுடன்; கூஜத்-ஒலிகள் வெளியிடல்; புண்ய- பக்தியுள்ள; ம்ருக-விலங்குகள்; த்விஜை-பறவைகளுடன்; ஸர்வ- எல்லாவற்றிலும்; ரிது-பருவங்கள்; பல-பழங்களில்; புஷ்ப- மலர்களில்; ஆத்யாம்-அதிகம்; வனராஜி-மரத் தோப்புகளின்; ஸ்ரியா—அழகால்; அந்விதம்- அலங்கரிக்கப்பட்டது.

பலவித ஒலிகளை வெளியிடும் விலங்குகள் பறவைகளுக்குப் பாதுகாப்பு தருவதோடு, எல்லாப் பருவங்களிலும் மலர்களும் பழங்களும் அதிகம் உள்ள கொத்துக்களுடன் கூடிய மரங்களாலும் கொடிகளாலும் ஏரியின் கரை சூழப்பட்டிருந்தது. அது காட்டு மரத்தோப்புகளின் அழகால் மேலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பதம் 3.21.41
மத்த – த்வி-ஜகணைர் குஷ்டம் மத்த -ப்ரமரவிப்ரமம்-
மத்த-பர்ஹி-நடாடோபம் ஆஹ்வயன் -மத்த -கோகிலம்

மத்த- மிகவும் மகிழ்ந்து; த்விஜ-பறவைகளின்; கணை- கூட்டங்களால்; குஷ்டம்- எதிரொலித்து; மத்த-மயக்கும்: ப்ரமர -தேனீக்களின்; விப்ரமம்—அலையும்; மத்த-பைத்தியமான; பர்ஹி-மயில்களின்; நட-நடனம் ஆடுபவர்களின்; ஆடோபம்—பெருமை; ஆஹ்வயத்—ஒன்றையொன்று அழைத்து ; மத்த-மகிழ்ச்சி; கோகிலம்– குயில்கள்.

அளவற்ற மகிழ்ச்சியோடிருந்த பறவைகளின் ஒலி அந்த இடத்தில் எதிரொலித்தது. மயங்கிய தேனீக்கள் அங்கு அலைந்து திரிந்தன. களிப்புடைய மயில்கள் பெருமையுடன் நடனமாடின. மகிழ்ச்சியான குயில்கள் ஒன்றோடொன்று அழைத்துத் தம்முள் கூவிக் கொண்டன.

பதங்கள் 3.21.42 – 3.21.43
கதம்ப -சம்பகாசோக -கரஞ்ஜ -புகலாஸனை:
குந்த -மத்தாரகுடஜைச் -சூத-போதைரலங்க்ருதம்

காரண்டவை: ப்லவைர்ஹம்ஸை: குரரைர் ஜலகுக்குடை:
ஸாரஸைஸ்சக்ரவாகைஸ் ச சகோரைர்வல்கு கூஜிதம்

கதம்ப-கதம்ப மலர்கள்; சம்பக-சம்பக மலர்கள்; அசோக- அசோக மலர்கள்; கரஞ்ஜ-கரஞ்ஜ மலர்கள்; பகுல-பகுல மலர்கள்; ஆஸனை:-ஆஸன மரங்களால்; குந்த-குந்த; மந்தார-மந்தார; குடஜை:-குடஜ மரங்களால்; சூதபோதை-இள மாமரங்களால்; அலங்க்ருதம்—அலங்கரிக்கப்பட்டு; காரண்டவை-காரண்டவ வாத்துகளால்; ப்லவை—ப்லவவால்; ஹம்ஸை—அன்னங்களால்; குரரை:-மீன்கொத்திப் பறவைகளால்; ஜலகுக்குடை:-நீர்க் கோழிகளால்; ஸாரஸை-கொக்குகளால்; சக்ரவாகை:- சக்ரவாகப் பறவைகளால்; ச-மற்றும்; சகோரை:-சகோரப் பறவைகளால்; வல்கு-இனிமையான; கூஜிதம்-பறவைகளின் ஒலிகளின் அதிர்வு.

பிந்து ஸரோவர் ஏரி, கதம்பம், சம்பகம், அசாகம், கரஞ்ஜம், பகுலம், ஆஸனம், குந்தம், மந்தாரம், குடஜம் மற்றும் இள மாமரங்கள் போன்ற பூத்துக் குலுங்கும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காற்று, காரண்டவ வாத்துகள், பிலவங்கள், அன்னங்கள், மீன் கொத்திப் பறவைகள், நீர்க்கோழிகள், கொக்குகள், சக்ரவாகப் பறவைகள் மற்றும் சகோரப் பறவைகளின் இனிய ஒலிகளால் நிறைந்திருந்தது.

பதம் 3.21.44
ததைவ ஹரிணை: க்ரோடை: ஸ்வாவித் -கவயகுஞ்ஜரை:
கோபுச்சைர் ஹரிபிர் மர்கைர் நகுலைர்நாபிபிர்வ்ருதம்

ததா ஏவ-அது போல; ஹரிணை:-மானால்; க்ரோடை:- பன்றிகளால்; ஸ்வாவித்-முள்ளம் பன்றிகள்; கவய-பசுவை தோற்றத்தில் ஒத்திருக்கும் ஒரு காட்டு விலங்கு; குஞ்ஜரை:-யானைகளால்; கோபுச்சை-பெரிய குரங்குகளால்; ஹரிபிர்-சிங்கங்களால்; மர்னக:-குரங்குகளால்; நகுலை-கீரிப்பிள்ளைகளால்; நாபிபி:-கஸ்தூரி மான்களால்; விருதம்-சூழப்பட்டுள்ளது.

மான்கள், பன்றிகள், முள்ளம்பன்றிகள், ஆடுகள், யானைகள், பெரிய குரங்குகள், சிங்கங்கள், குரங்குகள், கீரிப்பிள்ளைகள் மற்றும் கஸ்தூரி மான்களால் ஏரியின் கரைகள் நிரம்பி இருந்தன.

பதங்கள் 3.21.45 – 3.21.47
ப்ரவிச்ய தத்தீர்த்த -வம் ஆதி-ராஜ: ஸஹாத்மஜ:
ததர்ச முனிமாஸீனம் தஸ்மிந்த ஹூதஹூதாசனம்

வித்யோதமானம் வபுஷா தபஸ்யுக்ர- யுஜா சிரம்
நாதிக்ஷாமம் பகவத: ஸ்நிக்ராபாங்காவலோகநாத்
தத்-வ்யாஹ்ருதாம்ருத -கலா-பியூஷ ஸ்ரவணேன ச

ப்ராம்சும் பத்ம-பலாசாக்ஷம் ஜடிலம் சீர-வாஸஸம்
உபஸம்ஸ்ரித்ய மலினம் யதார்ஹணம ஸம்ஸ்க்ருதம்

ப்ரவிச்ய-நுழைந்து; தத்-அந்த; தீர்த்த வரம்-புனித இடங்களில் சிறந்தது; ஆதி-ராஜ:-முதல் அரசன் (ஸ்வாயம்புவ மனு); ஸஹஆத்மஜ:-தன் மகளுடன்; ததர்ச-பார்த்தார்; முனிம்-முனிவர்; ஆஸீனம்-அமர்ந்து; தஸ்மிந்-துறவி மாடத்தில்; ஹூத—படையல்கள் தந்து; ஹூத—ஆசனம்-புனித நெருப்பு; வித்யோத மானம்-அறிவுக் கூர்மையில் ஒளி வீசி; வபுஷா-அவர் உடலால்; தபஸி-தவத்தில்; உக்ர-பயங்கரமாக; யூஜா-யோகத்தில் ஈடுபட்டு; சிரம்-நீண்ட காலத்திற்கு; ந-இல்லை; அதிக்ஷாமம்-மிகவும் மெலிந்து; பகவத:-பகவானின்; ஸ்நிக்த-அன்பான; அபாங்க-பக்கவாட்டில்; அவலோகநாத்- பார்வையிலிருந்து; தத்-அவரின்; வ்யாஹ்ருத- சொற்களிலிருந்து; அம்குத கலா—சந்திரன் போன்ற; பீயூஷ- தேன்; ஸ்ரவணேன-கேட்பதன் மூலம்; ச-மற்றும்; ப்ராம்சும்- உயரமான; பத்ம-தாமரை மலர்; பலாச-இதழ்; அக்ஷம்-கண்கள்; உபஸம்ஸ்ருத்ய—அணுகி; மலிநம்- கறைபட்ட; யதா-போல; அர்ஹணம்-மணி; அம்ஸ்க்குதம்-பட்டை தீட்டாத.

முதல் அரசாகிய ஸ்வாயம்புவ மனு, தன் மகளுடன் மிகவும் புனிதமான இடத்தில் நுழைந்து முனிவரின் அருகில் சென்று பார்த்த போது, முனிவர் தம் துறவு மாடத்தில் அமர்ந்திருந்தார். அவிர்பாகத்தைச் சொரிவதன் மூலம் புனித நெருப்பைத் தணிவித்தார். அவரது உடல் அறிவுக் கூர்மையுடன் ஒளிர்ந்தது. அவர் துறவறத் தவத்தில் நெடுங்காலம் ஈடுபட்டிருந்த போதிலும், பகவான் தன் அன்புப் பார்வையை அவர் பக்கமாகத் திருப்பியதாலும், மேலும் சந்திரன் போலும் பகவானின் குளிர்ந்த சொற்களை அமிர்தமழையாக அவர் கேட்டதாலும், அவர் உடல் சீர்குலையவில்லை. முனிவர் உயரமாக இருந்தார். அவர் கண்கள் தாமரை இதழ்களைப் போல் பெரிதாய் இருந்தன. அவர் தலையில் சடைமுடி இருந்தது. அவர் கந்தல் ஆடை அணிந்திருந்தார். ஸ்வாயம்புவ மனு அவரை அணுகிப் பார்த்தபோது, அவர் பட்டை தீட்டாத வைரம் போல் மங்கிய தோற்றத்துடன் விளங்கினார்.

பதம் 3.21.48
அதோடஜம் உபாயாதம் ந்ருதேவம் ப்ரணதம் புர:
ஸபர்யயா பர்யக்ருஹ்ணாத் ப்ரதிநந்த்யாநுரூபயா

அத-பிறகு; உடஜம்-துறவிமாடம்; உபாயாதம் – அணுகி; ந்ருதேவம்-மன்னர்; ப்ரணதம்—தலை வணங்கி; புர:-முன்னால்; ஸபர்யயா-மரியாதையுடன்; பர்யக்ருஹ்ணாத்—வரவேற்று; ப்ரதி நந்த்ய-முகமன் கூறி; அநுரூபயா—அரசனின் நிலைக்குப் பொருத்தமாய் இருத்தல்.

மன்னர் அவருடைய ஆஸ்ரமத்திற்கு வந்து, தமக்கு முன்னால் தலைவணங்குவதைப் பார்த்த கர்தம முனிவர், மன்னரை ஆசிகள் கூறி, தகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.

பதம் 3.21.49
க்ருஹீதார்ஹணம் ஆஸீனம் ஸம்யதம் ப்ரீணயந் முனீ:
ஸ்மரன் பகவதா-தேசம் இத்யாஹ ஸ்லக்ஷ்ணயா கிரா

க்ருஹீத-வரவேற்று; அர்ஹணம்-மரியாதை; ஆஸீனம்-அமர்ந்து;
ஸம்யதம்-அமைதிகாத்து; ப்ரீணயந்-பெருமகிழ்ச்சி; முனீ:- முனிவர்; ஸ்மரன்-நினைத்து; பகவத்-பகவானின்; ஆதேசம்- கட்டளை; இதி-இவ்வாறு; ஆஹ-பேசிய; ஸ்லக்ஷ்ணயா-இனிமையான; கிரா-குரலுடன்.

முனிவரின் கவனத்தை ஈர்த்த பின்னர், மன்னர் கீழே அமர்ந்து மௌனமாக இருந்தார். பகவானின் கட்டளைகளை நினைவில் கொண்டு இனிய குரலில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கர்தம முனிவர் அரசரிடம் பின்வருமாறு பேசினார்.

பதம் 3.21.50
நூனம் சங்க்ரமணம் தேவ ஸதாம் ஸம்ரக்ஷணாய தே
வதாய சாஸதாம் யஸ்த்வம் ஹரே: சக்திர்ஹி பாலினீ

நூனம் – நிச்சயமாக; சங்க்ரமணம்-பயணம்; தேவ—ஓ பகவானே; ஸதாம்-நேர்மையான; ஸம்ரக்ஷணய-பாதுகாப்பிற்காக; தே- உங்கள்; வதாய-கொல்வதற்கு; ச-மற்றும்; அஸதாம்—தீயோர்களின்; ய:-அந்த மனிதர்; த்வம்-நீங்கள்; ஹரே:- பரமபுருஷ பகவானின்; சக்திர்-ஆற்றல்; ஹி-அதனால்; பாலினீ-பாதுகாத்து.

ஓ பிரபுவே, நீங்கள் மேற்கொண்டுள்ள பயணமானது நிச்சயமாக நேர்மையானவர்களைக் காக்கவும், அசுரர்களைக் கொல்லவும் உறுதி செய்யப்பட்டதாகும். நீங்கள் ஸ்ரீ ஹரியின் காக்கும் ஆற்றலின் உரு ஆவீர்கள்.

பதம் 3.21.51
யோர் கேந்த்வ -க்னீந்த்ர-வாயூனாம் யம-தர்ம-ப்ரசேதஸாம்
ரூபாணி ஸ்தான் ஆதத்ஸே தஸ்மை சுக்லாய தே நம:

ய:-நீங்கள்; அர்க்க-சூரியனின்; இந்து-சந்திரனின்; அக்நி- நெருப்பின், நெருப்புக் கடவுள்; இந்த்ர—இந்திரனின், சொர்க்கத்தின் தலைவர்; வாயூனாம்—வாயுவின் காற்றுக் கடவுள்; யம-யமனின், தண்டனை தரும் கடவுள்; தர்ம-தர்மனின், அறக் கடவுள்; ப்ரசே தஸாம்-மற்றும் வருணனின், நீர்க் கடவுள்; ரூபாணி-வடிவங்கள்; ஸ்தானே—அவசியமான பொழுது; ஆதத்ஸே-நீங்கள் கொல்கிறீர்கள்; தஸ்மை-அவரிடம்; சுக்லாய-பகவான் விஷ்ணுவிடம்; தே-உங்களிடம் ; நம:-வணக்கங்கள்.

அவசியமான பொழுது, நீங்கள் சூரியனின் பகுதி, சந்திரனின் பகுதி, அக்னியாகிய தீக்கடவுளின் பகுதி, இந்திரன் சொர்க்கத்தின் பிரபு, வாயு பகவான், நீதிக் கடவுள், தர்மன் அறக்கடவுள், மற்றும் வருணன், நீரை ஆட்சி புரிபவர் ஆகியோராக உரு எடுக்கிறீர்கள். பகவான் விஷ்ணுவைத் தவிர வேறு யாரும் அல்லாத உங்களுக்கு எல்லா வணக்கங்களும் உரித்தாகுக.

பதங்கள் 3.21.52 – 3.21.54
ந யதா ரதமாஸ்தாய ஜைத்ரம் மணி-கணார்பிதம்
விஸ் பூர்ஜச்-சண்ட -கோதண்டோ ரதேன த்ராஸயந்ந கான்

ஸ்வஸைந்ய-சரண க்ஷுண்ணம் வேபயந்மண்டலம் புவ:
விகர்ஷன் ப்ருஹதீம் ஸேனாம் பர்யடஸ்யம் சூமானிவ

ததைவ ஸேதவ: ஸர்வே வர்ணாஸ்ரம நிவந்தனா:
பகவத்-ரசிதா ராஜன் பித்யேரன் பத தஸ்யுபி:

ந-இல்லை; யதா—எப்பொழுது; ரதம்- தேர்; ஆஸ்தாய-ஏறியதும்; ஜைத்ரம்-வெற்றி பெற்ற; மணி-நகைகளின்; கண— கூட்டங்களுடன்; அர்பிதம்-அணி செய்து; விஸ்பூர்ஜத்—மூக்கொலி; சண்ட-குற்றம் செய்பவரைத் தண்டிக்க உள்ள அச்சம் தரும் ஒலி; கோதண்ட-வில்; ரதேன- தேரின் இருப்பினால்; த்ராஸயந்-அச்சுறுத்தி; அகான்—எல்லாக் குற்றவாளிகள்; ஸ்வஸைந்ய-உங்கள் வீரர்களின்; சரண-பாதங்களால்; க்ஷூண்ணம்-மிதித்து; வேபயந்-நடுக்கத்திற்குக் காரணமாகி; மண்டலம்-உலக உருண்டை; புவ:- பூமியின்; விகர்ஷன்-தலைமை தாங்கி; ப்ருஹதீம்- பெரிய; ஸேனாம்-படை; பர்யடஸி- நீங்கள் அலைந்து; அம்ஸூமான்—ஒளி மிக்க சூரியன்; இவ-போல; ததா-பின்னர்; ஏவ-நிச்சயமாக; ஸேதவ:-சமயக் குறியீடுகள்; ஸர்வே-எல்லா; வர்ண-வர்ணங்களின்; ஆஸ்ரம-ஆஸ்ரமங்களின்; நிபந்தனா:-கடமையுணர்ச்சி; பகவத்- பகவானால்; ரசிதா-படைத்து; ராஜன்-ஓ அரசனே; பித்யேரன்- அவை உடைக்கப்படும்; பத-இறுதியில்; தஸ்யுபி:-போக்கிரிகளால்.

பார்த்ததுமே குற்றவாளிகளை அச்சுறுத்தக் கூடிய உங்களது அலங்கரிக்கப்பட்ட தேரில் நீங்கள் ஏறவில்லை என்றால், உங்கள் வில்லைச் சுண்டுவதால் எழும் பயம் தரத்தக்க ஒலியை நீங்கள் உண்டாக்கவில்லை என்றால், ஒளி பொருந்திய கதிரவன் போல இந்த உலகை நீங்கள் வலம் வரவில்லை என்றால், பூமி நடுங்குவதற்குக் காரணமானதும், கால்களால் பூமியை மிதித்துச் செல்லும் பெரிய காலாட்படையை நீங்கள் நடத்தவில்லை என்றால், பின்னர், பகவானால் படைக்கப்பட்ட எல்லா வருணங்களையும் ஆசிரமங்களையும் ஆட்சி புரியும் ஒழுக்கம், சட்டங்கள், நீதிநெறிகள் ஆகிய அனைத்தும் போக்கிரிகளாலும் கயவர்களாலும் உடைக்கப்படும்.

பதம் 3.21.55
அதர்மஸ் ச ஸமேதே த லோலூபைர்வ்யங்குசைர்ந்ருபி:
சயானே த்வயி லோகோயம் தஸ்யுக்ரஸ்தோ வினங்க்ஷ்யதி

அதர்ம-நேர்மையற்ற; ச-மற்றும்; ஸமேதேத-செழிக்கும்; லோலுபை-பணத்தில் மிகுந்த ஆவல் கொண்டு; வ்யங்குசை- கட்டுப்படுத்தப்படாத; ந்ருபி-மனிதரால்; சயானேத்வயி— இளைப்பாற நீங்கள் படுக்கும்பொழுது; லோக-உலகம்: அயம்-இந்த; தஸ்யு-போக்கிரிகளால்; க்ரஸ்த-தாக்கப்பட்டு; வினங்க்ஷ்யதி—இது அழிந்து போகும்.

நீங்கள் இந்த உலக நிலையைப் பற்றி சிந்திக்கா விட்டால், நேர்மையின்மை செழிக்கும், பணத்தின் பின்னால் அலையும் மனிதர்கள் தம் போக்கில் போய்க்கொண்டிருப்பர். அம்மாதிரி போக்கிரிகளால் தாக்கப்பட்டு இந்த உலகம் அழிந்து போகும்.

பதம் 3.21.56
அதாபி ப்ருச்சே த்வாம் வீரயதர்தம் த்வமிஹாகத:
தத்வயம் நிர்வ்யலீகேன ப்ரதிபத்யாமஹே ஹ்ருதா

அத அபி—இது எல்லாம் இருந்தும் கூட; ப்ருச்சே-நான் கேட்கிறேன்; த்வாம்-நீ; வீர-ஒ வீரம் மிகுந்த மன்னா; யத் அர்தம்—நோக்கம்; த்வம்-நீ; இஹ-இங்கு; ஆகத:-வந்திருக்கிறாய்; தத்—அந்த; வயம்—நாங்கள்; நீர்வ்யலீகேன-ஒதுக்கி வைக்காமல்; ப்ரதிபத்யாமஹே-நாங்கள் செய்வோம்; ஹ்ருதா-மனமும் ஆன்மாவும் இணைந்து.

ஓ வீரம் மிகுந்த மன்னரே, உலகில் இந்த நிலையில் இருந்தும் கூட, நீங்கள் இங்கு வந்ததன் நோக்கத்தை நான் கேட்கிறேன். எதுவாக இருந்தாலும், எதையும் ஒதுக்காமல் நாங்கள் நிறைவேற்றி வைப்போம்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “மனுவுக்கும் கர்தமருக்கும் இடையே உரையாடல்” எனும் தலைப்பைக் கொண்ட இருபத்தொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare