அத்தியாயம் – 20
மைத்ரேயருக்கும் விதுரருக்கும்
இடையே உரையாடல்
பதம் 3.20.1
ஸௌநக உவாச
மஹீம் ப்ரதிஷ்டாமத்யஸ்ய ஸெளதே ஸ்வாயம் புவோ மனு: காந்யந்திஷ்டத்த்வாராணி மார்காயா வர-ஜந்மனாம்

சவுனகச—செவுனகர்; உவாச-கூறினார்; மஹீம்-பூமி; ப்ரதிஷ்டாம் -நிலைநிறுத்திய பின்; அத்யஸ்ய—பாதுகாக்கப் பட்டதும்; ஸௌதே- ஓ ஸூத கோஸ்வாமி; ஸ்வாயம்புவ—ஸவாயம்புவ; மனு-மனு ; காநி— என்ன; அந்வதிஷ்டத்—இயற்றி; த்வாராணி-வழிகள்; மார்காய- வெளியே வர; அவர—பின்னர்; ஜந்மானாம்-பிறக்க இருப்பவர்களுக்கு.

ஸ்ரீ சவுநகர் விசாரித்தார்: ஓ சூத கோஸ்வாமி, பூமி மீண்டும் கோளப்பாதையில் பொருத்தப்பட்ட பின்னர், ஸ்வாயம்புவ மனு, பின்னால் பிறப்பு எடுக்க இருப்பவர்களுக்கு விடுதலைக்கான வழிகாட்ட என்ன செய்தார்?

பதம் 3.20.2
க்ஷத்தா மஹா-பாகவத: க்ருஷ்ணஸ்யைகாந்திக: ஸூஹ்ருத் யஸ்ததியாஜாக்ரஜம் க்ருஷ்ணே ஸாபத்யமகவானிதி

கூத்த – விதுரர்; மஹா-பாகவத :- பகவானின் சிறந்த பக்தர்: க்ருஷ்ணயஸ்ய-பகவான் க்ருஷ்ணரின்; ஏகாந்திக—கலப்பற்ற பக்தர்; ஸூஹ்குத் – தெருங்கிய நண்பர்; ய-அவர்; தத்யாஜ-கைவிட்டு; அக்ரஜம்— அவருடயை மூத்த அண்ணன் (அரசன் திருதாஷ்ட்ரன்); க்ருஷ்ணே – கிருஷ்ணரை நோக்கி; ஸ அபத்யம்—அவருடைய நூறு பிள்ளைகளுடன்; அகவான் – தவறாக நடப்பவர்; இதி-இவ்வாறு.

சவுநக ரிஷி, பகவான் கிருஷ்ணரின் சிறந்த பக்தரும், நண்பருமான விதுரரைப் பற்றி விசாரித்தார். விதுரர், தன் மூத்த அண்ணன், அவன் பிள்ளைகளுடன் சேர்ந்து பகவானின் விருப்பத்திற்கு எதிராகத் தந்திரங்கள் செய்ததால், அவருடைய உறவை விட்டு விட்டார்.

பதம் 3.20.3
த்வைபாயனாதநவரோ மஹீத்வே தஸ்ய தேஹஜ:
ஸர்வாத்மனாஸ்ரித: க்ருஷ்ணம் தத்-பராம் ஸ்சாப்யனுவ்ரத:

த்வைபாயநாத்- வியாசதேவரிடமிருந்து; அநவர – எந்த விதத்திலும் தாழ்வின்றி; மஹீத்தேவ – சிறப்பில்; தஸ்ய—அவருடைய (வியாச ருடைய); தேஹஜ—உடலிலிருந்து பிறந்தவர்; ஸர்வ-ஆத்மனா— மனப்பூர்வமாக; ஸ்ரித- பாதுகாப்பு எடுத்து; க்ருஷ்ணம்- பகவான் கிருஷ்ணர்; தத்-பரான்—அவரிடம் பக்தி கொண்டவர்கள்; ச – மற்றும்; அபி – கூட; அனுவ்ரத-பின்பற்றி.

வியாசதேவரின் உடலிலிருந்து பிறந்த விதுரர் அவரை விட எந்த விதத்திலும் தாழ்ந்தவர் அல்லர். இவ்வாறு முழு மனத்துடன் அவர் கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளை ஒப்புக் கொண்டார். அவருடைய பக்தர்களிடமும் தொடர்பு கொண்டார்.

பதம் 3.20.4
கிம் அந்வப்ருச்சன் மைத்ரேயம் விரஜாஸ்தீர்த்த-ஸேவயா உபகம்ய குசாவர்த ஆஸீனம் தத்வ-வித்தமம்

கிம் – என்ன; அந்வப்ருச்சன்—விசாரித்து; மைத்ரேயம்-மைத்ரேய முனிவரிடமிருந்து; விரஜா—விதுரர், ஜடவுலகக் கனவுகள் இல்லாதவர்; தீர்த்தஸேவயா-புனித இடங்களைச் சுற்றிப் பார்ப்பதால்; உபகம்ய— சந்தித்து; குசாவர்த-குசாவர்தத்தில் (ஹரித்வாரா அல்லது ஹர்த்வார்); ஆஸீனம்—நிலையான; தத்வ வித்தமம்-புனித வாழ்வின் அறிவியல் பற்றி முதன்முதலாக அறிந்தவர்.

விதுரர் புனித இடங்களில் அலைந்ததால், உணர்ச்சிகளில் தூய்மை யானவரானார். இறுதியில் ஹரித்துவாரத்தை அடைந்தார். அங்கு அவர் ஆன்மீக வாழ்வின் நுட்பங்களை அறிந்த சிறந்த முனிவரைச் சந்தித்தார். அவரிடமிருந்து விசாரித்தார். எனவேதான் ஸௌனக ரிஷி கேட்டார்: மைத்ரேயரிடமிருந்து விதுரர் இன்னும் என்ன விசாரித்தார்?

பதம் 3.20.5
தயோ: ஸம்வததோ: ஸூத ப்ரவ்ருத்தா ஹ்யமலா: கதா:
ஆபோ காங்கா இவாக -க்னீர்ஹரே: பாதாம்புஜாஸ்ரயா:

தயோ-இருவரும் (மைத்ரேயரும் விதுரரும்); ஸம்வததோ- உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது; ஸூத—ஓ ஸூதரே; ஆப்- தண்ணீர்; காங்கா—கங்கைநதியின்; இவ – போல; அக—க்னீர்—எல்லாப் பாவங்களும் மறைந்து; ஹரே-பகவானின்; பாத அம்புஜ-தாமரைப் பாதம்; ஆஸ்ரயா – பாதுகாப்பு எடுத்து.

விதுரருக்கும் மைத்ரேயருக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றி ஸௌனகர் விசாரித்தார். பகவானின் கறையில்லாத லீலைகளைப் பற்றிப் பல வர்ணனைகள் இருக்க வேண்டும். இத்தகைய வர்ணனைகளைக் கேட்பது, கங்கையின் நீரில் குளிப்பது போன்றதாகும். ஏனென்றால், இதனால் ஒருவரை, பாவச் செயலின் வினைவிலிருந்து விடுவிக்க இயலும்.

பதம் 3.20.6
தா ந: கீர்தய பத்ரம் தே கீர்தந்யோதார-கர்மண:
ரஸக்ஞ: கோ நு த்ருப்யேத ஹரி-லீலாம்ருதம் பிபன்

தா—அந்தப் பேச்சுக்கள்; ந—நமக்கு; கீர்தய—வர்ணிக்க; பத்ரம்தே- உனக்கு எல்லா நன்மையும் உண்டாகட்டும்; கீர்தந்ய-உச்சரிக்கப்பட வேண்டும்; உதார – தாராளமாக; கர்மண—செயல்கள்; ரஸக்ஞ- இனிய சுவையைப் புகழத் தெரிந்த பக்தன்; க-யார்; நு-உண்மையில்; திருப்யேத-திருப்தியாக உணர்வர்; ஹரி லீலா அம்ருதம்-பகவானின் திருவிளையாடல்களாகிய அம்ருதம்; பிபன்-குடித்தல்.

ஓ சூத கோஸ்வாமி, உங்களுக்கு எல்லா நன்மையும் உண்டாவதாக- தயவு செய்து, பகவானின் பெருங்குணம் உள்ள, வானளாவப் புகழத் தகுந்த செயல்களை வர்ணிக்கவும். பகவானின் அம்ருதம் போன்ற லீலைகளைக் கேட்பதனால் எந்த மாதிரியான பக்தன் மனநிறைவை அடைய முடியும்?

பதம் 3.20.7
ஏவமுக்ரஸ்ரவா: ப்ருஷ்ட ருஷிபிர்னைமிஷாயனை: பகவதியர்பிதாதியாதீமஸ்தானாஹ் ஸ்ரூயதாமிதி

ஏவம்—இவ்வாறு; உக்ரஸ்ரவா-ஸூத கோஸ்வாமி; ப்ரஸ்த- கேட்கப்பட்டு; ருஷிபி-முனிவர்களால்; நைமிஷாயனைதைமிலா – காட்டில் கூடியிருந்தவர்கள்; பகவதி-பகவானிடம்; அம்பித-அப் பணித்தல்; அதியாத்ம-அவர் மனம்; தாள்—அவர்களிடம்; ஆஹ- கூறினார்; ஸ்ரூயதாம்- சரியாகக் கேட்டு; இதி-இவ்வாறு.

தைமிஸாரண்யத்தில் உள்ள சிறந்த முனிவர்களால் பேசும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட ரோமஹர்ஷணரின் மகன், சூத கோஸ்வாமியின் மனம் பகவானின் உன்னதமான லீலைகளில் லயித்திருந்தது. அவர் கூறினார்: “நான் இப்போது பேசப் போவதை தயவு செய்து கேளுங்கள்.”

பதம் 3.20.8
ஸூத உவாச
ஹரேர் த்ருத-க்ரோடதனோ: ஸ்வ-மாயயா
நிசம்ய கோருத்தரணம் ரஸாதலாத்
லீலாம் ஹிரண்யாக்ஷ்ம் அவக்ஞயா ஹதம்
ஸ்ஞ்ஜாத ஹர்ஷோ முனிமாஹ் பாரத:

ஸூத உவாச-சூதர் கூறினார்; ஹரே-பகவானின்; த்ருத- எடுத்துக் கொண்டு; க்ரோட- காட்டுப் பன்றியின்; தனோ-உடல்; ஸ்வமாயயா- அவரின் தெய்வீக ஆற்றலால்; திசம்ய -கேட்கப்பட்டு; கோ-பூமியின்; உத்தரணம்-உயர்த்தி; ரஸாதலாத்—கடலின் அடியிலிருந்து; லீலாம்- விளையாட்டு; ஹிரண்யாக்ஷ்ம்—அசுரன் ஹிரண்யாட்சன்; அவக்ஞயா- புறக்கணிப்பு; ஹதம்—கொன்று; ஸஞ்ஞாத-ஹர்ஷோ மிக்க மகிழ்ச்சியுடன்; முனிம்-முனிவரிடம் (மைத்ரேயர்); ஆஹ-கூறினார்; பாரத – விதுரர்.

ஸ்ரீ சூத கோஸ்வாமி தொடர்ந்தார்: பரதனின் சந்ததியாகிய விதுரர், பகவான் தன்னுடைய தெய்வ ஆற்றலால் காட்டுப் பன்றியின் வடிவம் எடுத்துக்கொண்டு, கடலுக்கு அடியில் இருந்த பூமியை விளையாட்டாக எடுத்துக் கொண்டு வந்து, வித்தியாசமான முறையில் ஹிரண்யாட்சனைக் கொன்ற கதையைப் பெருமகிழ்வுடன் கேட்டார். பின் விதுரர் முனிவரிடம் கீழ்வருமாறு பேசினார்.

பதம் 3.20.9
விதுர உவாச
ப்ரஜாபதி-பதி: ஸ்ருஷ்ட்வா ப்ரஜாஸர்கே ப்ரஜாபதீன்
கிமாரபத மே ப்ரஹ்மன் ப்ரப்ரூஹ்யவ்யக்த-மார்கவித்

விதுர உவாச – விதுரர் கூறினார்; ப்ரஜாபதி- பதி:-பகவான் பிரம்மா; ஸ்ருஷ்ட்வா—படைத்தபின்னர்; ப்ரஜாஸர்கே–வாழும் உயிரினங்களைப் படைக்கும் பொருட்டு; ப்ரஜாபதீன்—ப்ரஜாபதிகள்; கிம்- என்ன; ஆரபத்-தொடங்கி; மே-என்னிடம்; ப்ரஹ்மன்—ஓ புனித முனிவரே; ப்ரப்ரூஹி-கூறு; அவ்யக்தமார்கவித்—நமக்குத் தெரியாதவைத் தெரிந்திருப்பவர்.

விதுரர் கூறினார்: ஓ புனித முனிவரே, எங்களால் நினைத்துப் பார்க்க முடியாதவற்றை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். வாழும் உயிரினங்களின் மூதாதையர்களாகிய பிரஜாபதிகளைத் தோற்றுவித்த பிறகு, உயிரினங்களைப் படைக்க பிரம்மா என்ன செய்தார் என்று எனக்குக் கூறுங்கள்.

பதம் 3.20.10
யே மரீச்யா-தயோ விப்ரா யஸ்து ஸ்வாயம்புவோ மனு:
தே வை ப்ரம்மண ஆதேஸாத்தகமேததபாவயன்

யே-அந்த; மரிச்யாதய-மரீசியால் தலைமை தாங்கப்பட்ட சிறந்த முனிவர்கள்; விப்ரா-பிராமணர்கள்; ய-யார்; நு-உண்மையில்; ஸ்வாயம்புவ மனு – மற்றும் ஸ்வாயம்புவ மனு; தே-அவர்கள்: வை-உண்மையில்; ப்ராம்மண-பகவான் பிரம்மாவின்; ஆதேஸாத்- கட்டளையால்; கதம்- எப்படி; தேதத்—இந்த அண்டம்; அபாவயன்- தோற்றுவித்தார்.

விதுரர் விசாரித்தார்: பிரம்மாவின் அறிவுரையின்படி பிரஜாபதிகள் (வாழும் பொருள்களான மரீசியும் ஸ்வாயம்புவ மனு ஆகியோரைத் தோற்றுவித்த) எவ்வாறு படைத்தார்கள், எவ்வாறு அவர்கள் இந்தத் தெளிவான அண்டத்தைத் தோற்றுவித்தார்கள்.

பதம் 3.20.11
ஸத்-விதீயா: கிமஸ்ருஜன் ஸ்வதந்த்ரா உத கர்மஸூ ஆஹோஸ்வித்ஸம்ஹதா: ஸ்ர்வ இதம் ஸ்ம ஸமகல்பயன்

ஸத்விதீயா—அவர்களின் மனைவிகளுடன்; கிம்-இரண்டில் எது ; அஸ்குஜன்- படைத்து; ஸ்தந்த்ரா—சுதந்திரமாக இருந்து; உத-அல்லது; கர்மஸூ—அவர்கள் செயல்களில்; அஹோஸ்வித்-இல்லையென்றால்; ஸம்ஹதா-சேர்ந்து; ஸ்ரவே-எல்லா ப்ரஜாபதிகளும்; இதம்- இந்த; ஸ்ம ஸமகல்பயன்—உருவாக்கினர்.

அவர்கள் படைப்பைத் தங்கள் உரிமைக்குரிய மனைவிகளுடன் இணைந்து உருவாக்கினார்களா, அவர்கள் தங்கள் செயலில் சுதந்தரமாக இருந்தார்களா அல்லது அவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கினார்களா?

பதம் 3.20.12
மைத்ரேய உவாச
தைவேன துர்விதர்க்யேண பரேணானிமிஷேண ச
ஜாத க்ஷோபாத் பகவதோ மஹான் ஆஸீத் குணத்-ரயாத்

மைத்ரேய உவாச-மைத்ரேயர் கூறினார்; தைவேன—விதியின் மேலான செயலாட்சியினால்; துர்விதர்க்யேண—செயல்முறையில் நம்பிக்கையுள்ள கற்பனைக்கு அப்பாற்பட்ட; பரேண-மஹா விஷ்ணுவால்; அனிமிஷேய-நிலையான நேரத்தின் ஆற்றலால்; ச-மற்றும்; ஜாதகேடியரத்- நடுநிலை அமைதி கலங்கியது; பகவத- பரமபுருஷ பகவானின்; மஹான்—மொத்த ஜடவுலக பொருள்கள் (மஹாதத்வ):-ஆஸீத்- உருவாக்கப்பட்டன;குணத்ரயாத்- இயற்கையின் மூன்று வித குணங்களிலிருந்து.

மைத்ரேயர் கூறினார்: வாழும் உள்பொருள்களின் பார்க்க இயலாத செயலால், இயற்கையின் மூன்று வித குணங்களின் நடுநிலை அமைதி கலங்கும்பொழுது, மஹாவிஷ்ணுவால், நேரத்தின் வலிமையால், மொத்த ஜடவுலகப் பொருட்களும் உருவாக்கப்பட்டன.

பதம் 3.20.13
ரஜ: ப்ரதானாந் மஹதஸ்த்ரிலிங்கோ தைவ-சோநிதாத்
ஜாத: ஸஸர்ஜ பூதாதிர் வியதாதீனி பஞ்ச:

ரஜ ப்ரதானாத்-ரஜஸ் அல்லது அடங்காக் கோபம் எனும் ஆக்கக் கூறு மேம்பட்டிருத்தல்; மஹதத்- மஹத்–தத்துவத்திலிருந்து; த்ரி-லிங்க:- மூன்று வகைகள்; தைவசோதிதாத்-மேலதிகாரியால் தூண்டப்பட்டு; ஜாத-பிறந்தது; ஸஸர்ஜ-வெறிப்படச் செய்தல்; பூத ஆதி-பொய்யான ஆளுமை (ஜடவுலக ஆக்கக் கூறின் மூலம்); வியத்—ஆகாயம்; ஆதீனி— தொடங்குவதுடன்; பஞ்சஷ—ஐந்து எண் கொண்ட குழுக்கள்.

ஜீவனின் விதியால் தூண்டப்பட்ட, போலியான அஹங்காரம் மூன்று வகைகளால் ஆனது, மஹா தத்துவத்திலிருந்து வெளிப்பட்டது. அதில் ரஜஸ் என்னும் குணம் மேம்பட்டிருக்கிறது. அஹங்காரத்திலிருந்து ஐந்து தத்துவங்கள் கொண்ட பல குழுக்கள் வெளிப்பட்டன.

பதம் 3.20.14
தானி சைகைகஸா ஸ்ரஷ்டும் அஸமர்தாநி பௌதிகம் ஸம்ஹத்ய தைவ-யோகேன ஹைமமண்டமவாஸ்ருஜன்

தானி—அந்த ஆக்கக் கூறுகள்; ச-மற்றும்; ஏக ஏகச-தனியாக; ஸ்ரஷ்டும்- உற்பத்தி செய்ய; அஸமர்தானி-முடியாத; பௌதிகம்- ஜடவுலக அண்டம்; ஸம்ஹத்ய—சேர்த்துக் கொண்டு; தைவ- யோகேன—பகவானின் ஆற்றலுடன்; ஹைமம் – பொன் போல் ஒளிவீசி; அண்டம்- உலகம்; அவாஸ்குழுன்—உற்பத்தி செய்தனர்.

ஜடவுலக அண்டத்தைத் தனியாக உற்பத்தி செய்ய இயலாததால், அவர்கள் பகவானது ஆற்றலின் உதவியுடன் சேர்ந்து ஒரு ஒளி மிக்க முட்டையை உற்பத்தி செய்தனர்.

பதம் 3.20.15
ஸோ ஸாயிஷ்டாப்தி-ஸலிலே ஆண்டகோஸோ நிராத்மக: ஸாக்ரம் வை வர்ஷஸா-ஹஸ்மந்வவாத்ஸீத் தமீஸ்வர:

ஸ – இது; ஆஸயிஷ்ட-மிதந்தது; அப்தி- ஸலிலே-விளைவு உண்டாக்கும் கடலின்நீரின்மேல்; ஆண்டகோஸ்-முட்டை; நிராத்மக- நினைவற்ற நிலையில்; ஸாக்ரம் – சிறிது அதிகமாக; வை— உண்மையில்; வர்ஷ- ஸாஹஸ்ரம் —ஆயிரம் ஆண்டுகள்; அந்வவாத்ஸீத் — நிலையாக இருந்தது; தம்- முட்டையினுள்; ஈஸ்வர:—பகவான்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, ஒளிவீசிய முட்டை, கடலினது நீரின் மேல் உயிரற்ற நிலையில் மிதந்தது. பின்னர் பகவான் அதனுள் சுர்போதகஸாயி விஷ்ணுவாக நுழைந்தார்.

பதம் 3.20.16
தஸ்ய நாபேரபூத்பத்மம் ஸஹஸ்த்ரார்கோரு-திதிதி
ஸர்வஜீவநிகாயௌகோ யத்ர ஸ்வயம்பூத்ஸ்வராட்

தஸ்ய-பகவானின்; நாபே-உந்தியிலிருந்து; அபூத்-மேலெழுந்து; பத்மம்-தாமரை; ஸஹஸ்ர -அர்க்க—ஆயிரம் கதிரவன்; உரு- அதிகமாக; திதிதி – கண்கள் கூசும்படியான ஒளியுடன்; ஸர்வ-எல்லா; ஜீவநிகாய-கட்டுப்பட்ட ஆன்மாக்கள் தங்குமிடம்; ஓக-இடம்; யத்ர—எங்கு; ஸ்வயம்—அவராகவே; அபூத்—வெளிப்பட்டார்; ஸ்வ- ராத்—எல்லாம் வல்ல (கடவுள் பிரம்மா).

பரமபுருஷ பகவானாகிய கர்போதகஸாயி விஷ்ணுவின் உந்தியிலிருந்து, ஒளி பொருந்திய, ஆயிரம் சூரியர்களைப் போன்ற ஒரு தாமரை மலர் முளைத்தெழுந்தது. இந்தத் தாமரை மலர், எல்லா கட்டுப் படுத்தப்பட்ட ஆன்மாக்கள் தங்கும் இடம் ஆகும். இந்தத் தாமரை மலரிலிருந்து வெளிவந்த முதல் உயிர்ப் பொருள் எல்லாம் வல்ல இறைவன் பிரம்மன் ஆவார்.

பதம் 3.20.17
ஸோநுவிஷ்டோ பகவதா ய: சேதே ஸலிலாசயே
லோகஸம்ஸ்தாம் யதாபூர்வம் நிர்மமே ஸம்ஸ்தயா ஸ்வயா

ஸ- இறைவன் பிரம்மன்; அநுவிஷ்ட-நுழைந்தார்; பகவதா- பகவானின்; ய:-யார்; சேதே-உறங்குதல்; ஸலில் அசயே – கர்போதகக் கடலில்; லோக ஸம்ஸ்தாம்—இந்த அண்டம்; யதாபூர்வம் அசயே- -முன்பிருந்ததைப் போல; நிர்மமே— படைத்து; ஸம்ஸ்தயா- புத்திசாலித்தனத்தால்; ஸ்வயா—அவருடைய.

கர்போதகக் கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமபுருஷ பகவான், பிரம்மனின் இதயத்தில் நுழைந்த பொழுது, அதைத் தாங்க அவருடைய அறிவுகூர்மையினைப் பயன்படுத்தினார். அந்த அறிவுத் திறனோடு இறைவனை வணங்கி இந்த அண்டத்தை முன்பு இருந்தது போலவே பிரமன் படைக்கத் தொடங்கினார்.

பதம் 3.20.18
ஸஸர்ஜ ச்சாயயாவித்யாம் பஞ்ச-பர்வாணமக்ரத: தாமிஸ்ரமந்ததாமிஸ்ரம் தமோ மோஹோ மஹா-தம:

ஸஸர்ஜ–படைத்து; ச்சாயயா—அவரின் நிழலுடன்; அவித்யாம்- அறியாமை; பஞ்ச- பர்வாணம்- ஐந்து வகைகள்; அக்ரத:- எல்லாவற்றிலும் முதல்; தாமிஸ்ரம்-தாமிஸ்ர; அந்ததாமிஸ்ரம்—அந்த தாமிஸ்ர; தம-தமஸ்; மோஹ-மோஹ; மஹாதம-மஹா தமஸ் அல்லது மஹா- மோஹம்.

முதலில், பிரம்மன் தன் நிழலிலிருந்து, பந்தப்பட்ட ஆன்மாக்களை மூடும் அறியாமையைப் படைத்தார். அவை ஐந்து வகைப்படும். அவை தாமிஸ்ர, அந்த தாமிஸ்ர, தமஸ், மோஹம், மஹா மோஹம் என்று அழைக்கப்படுகின்றன.

பதம் 3.20.19
விஸஸர்ஜாத்மன: காயம் நாபிநந்தம்ஸ்தமோ மயம் ஐக்குஹ்ர்யக்ஷ-ரக்ஷாம்ஸி ராத்ரிம் க்ஷூத்-த்ருட்-ஸமுத்பவாம்

விஸஸர்ஜ-தூக்கியெறியப்பட்டு; ஆத்மன-அவனுடைய; காயம்- உடல்; ந-இல்லை; அபிதந்தன்-மகிழ்ந்து; தம-மயம் அறியாமையால் உருவாக்கப்பட்டு; ஜகர்ஹீ-உடைமையை எடுத்து; ய-ரக்ஷாமஸி- யக்ஷர்களும்-ராக்ஷ்ஸர்களும்; ராத்ரிம் –இரவு; க்ஷித்- பசி; த்ருட் – தாகம்; ஸமுத்பவாம் – மூலம்.

அருவருப்பினால், பிரம்மா தன் அறியாமையாகிய உடலைத் தூக்கியெறிந்தார், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் உடலின் உடைமைக்காகப் பாய்ந்தார்கள். அது இரவின் வடிவில் தொடர்ந்து இருந்து வருகிறது. இரவு என்பது பசிக்கும் தாகத்துக்கும் மூலமாகும்.

பதம் 3.20.20
க்ஷுத்-ருட்ப்யாமுபஸ்ரு ஷ்டாஸ்தே தம் ஜக்துமபிதுத்ருவு:
மா ரக்ஷதைநம் ஜக்ஷத்வமித்யூக: க்ஷூத்-ருட்ர்திதா:

க்ஷூத்ருத்ப்யாம்-பிச, தாகத்தால்; உபஸ்ருஷ்ட-மிஞ்சி வந்து; தே- தீயோர்கள் (யக்ஷர்கள், ராக்ஷஸர்கள்); தம்-பகவான் பிரம்மா; ஐந்தும் -உண்பதற்கு; அபிதுத்ருவு:-நோக்கி ஓடி; மா—செய்யாதே; ரக்ஷத— கொல்லாமல்; ஏனம்—அவனை; ஜக்ஷத்வம்-தின்று; இதி—இவ்வாறு; உசு- கூறினார்; க்ஷுத்-ருட்ரிதிதா—பசி-தாகத்தால் துயருற்று.

பசியாலும் தாகத்தாலும் ஆட்கொள்ளப்பட்டு, அவர்கள் பிரம்மனை விழுங்கும் ஆவலுடன் எல்லாப் பக்கங்களில் இருந்தும் ஓடி, “அவரைக் கொல்லுங்கள்- தின்னுங்கள்-” என்று கத்தினார்கள்.

பதம் 3.20.21
தேவஸ்தானாஹ ஸம்விக்நோ மா மாம் ஜக்ஷத ரக்ஷத
அஹோ மே யக்ஷ-ரக்ஷாம்ஸி ப்ரஜா பூயம் பபூவித

தேவ—பகவான் பிரம்மா; தான்-அவர்களிடம்; ஆஹ- கூறினார்; ஸம்விக்நோ-கவலையுடன்; மா—செய்யாதே; மாம்-என்னை: ஐக்ஷத —தின் (உண்); ரக்ஷத-காப்பாற்று; அஹோ – ஓ; மே என்னுடைய; யக்ஷ -ரக்ஷாம்ஸி—ஓ யக்ஷர்களே ராக்ஷஸர்களே; ப்ரஜா-மகன்கள்: ஐயம் நீ: பபூவித-பிறந்தனர்

எல்லா தேவர்களுக்கும் தலைவரான பிரம்மா, மிகுந்த கவலையுடன் அவர்களைக் கேட்டுக் கொண்டார், “என்னைத் தின்று விடாதீர்கள். ஆனால் காப்பாற்றுங்கள். நீங்கள் என்னிடத்திலிருந்து பிறந்தவர்கள், எனவே என்னுடைய பிள்ளைகள் ஆவீர்கள். மேலும் நீங்கள் யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் ஆனீர்கள்.”

பதம் 3.20.22
தேவதா: ப்ரபயா யா யா தீவ்யன் ப்ரமுகதோஸ்ருஜன்
தே அஹார்ஷுிர்தேவயந்தோ விஸ்ருஷ்டாம் தாம் ப்ரபாமஹ:

தேவதா-தேவர்கள்; ப்ரபயா-ஒளியின் புகழுடன்; யா ய – அவர்கள்; தீவ்யன்-பிரகாசித்து; ப்ரமுகத-தலைமையான; அஸ்ருஜத -படைத்தார்; தே-அவர்கள்; அஹார்ஷூ—உடைமை எடுத்து; தேவயந்த- சுறுசுறுப்பாக; விஸ்ருஷ்டாம்—பிரிக்கப்பட்டு; தாம்- அந்த; ப்ரபாம்- ஒளி வடிவம்; அஹ-பகலில்.

பின்னர் அவர் நன்மையின் ஒளியுடன் பிரகாசிக்கும் தலைமைத் தேவர்களைப் படைத்தார். அவர்களுக்கு முன் பகலின் ஒளி வடிவத்தைப் போட்டார். தேவர்களும் விளையாட்டாக அந்த ஒளி வடிவத்தைத் தமது உடைமை ஆக்கிக் கொண்டார்கள்.

பதம் 3.20.23
தேவோ தேவாஞ்ஜகணத: ஸ்ருஜதி ஸ்மாதிலோலுபான்
த ஏனம் லோலுபதயா மைதுனாயாபிபேதிரே

தேவ-பசுவான் பிரம்மன்; அதேவான்—தீயவர்கள்; ஜகணத- அவரின் பிட்டத்திலிருந்து; ஸ்ருஜதிஸ்ம-பிறப்பு அளித்தார்; அதிலோலுபால்-பாலுணர்வில் அளவுக்கு மீறிய விருப்பம்; தே- அவர்கள்; ஏனம்- பகவான் பிரம்மா; லோலுபதயா—இச்சையுடன்; மைதுனாயா—கலவிக்காக; அபிபேதிரே-அணுகினார்கள்.

பகவான் பிரம்மன், பின்னர் தன்னுடைய பிட்டத்திலிருந்து அசுரர் களுக்கும் பிறப்பளித்தார். அவர்கள் பாலுணர்வில் அளவுக்கு மீறிய ஆர்வம் உடையவர்களாய் இருந்தனர். ஏனென்றால் அவர்கள் மிகுந்த இச்சையுடையவர்களாய் இருந்தால், அவர்கள் கலவிக்காக அவரை அணுகினார்கள்.

பதம் 3.20.24
ததோ ஹஸன் ஸ பகவானஸூரைர் நிரபத்ரபை:
அந்வீய மானஸ்தரஸா க்ருத்தோ பீத: பராபதத்

தத—பிறகு; ஹஸன்-சிரித்து ; ஸ பகவான்—வணங்கத்தகுந்த பகவான் பிரம்மன்; அஸூரை—அசுரர்களால்; நிரபத்ரபை:-வெட்கமற்ற; அந்வீயமான- பின்பற்றப்பட்டு; தரஸா-மிகுந்த அவசரத்தில்; க்ருத்த— கோபம்; பீத-பயந்து; பராபதத்—ஓடிப் போனார்.

வணங்கத் தகுந்த பிரம்மன் முதலில் அவர்களின் முட்டாள் தனத்தைக் குறித்துச் சிரித்தார். ஆனால் வெட்கமின்றி, அசுரர்கள் அவரை நெருங்கி வருவதைக் கண்டு, போகம் கொண்டவராகி, பயத்தால் விரைந்து ஓடினார்.

பதம் 3.20.25
ஸ உபவ்ரஜ்ய வரதம் ப்ரபந்நார்திஹரம் ஹரிம்
அனுக்ரஹாய ப்கதானாமநுரூபாத்ம-தர்சனம்

ஸ-பகவான் பிரம்மன்; உபவ்ரஜ்ய-அணுகி; வரதம்- எல்லாவரங் களையும் அளிப்பவர்; பிரபந்தா—அவருடைய தாமரைப் பாதங்களில் சரண் அடைபவர்; ஆர்த்தி-கடுத்துன்பம்; ஹரம்-மறையச் செய்பவர்; ஹரிம்—பகவான் ஸ்ரீ ஹரி; அநுக்ரஹாய—கருணை காட்டுவதற்காக; பக்தானாம்—அவருடைய பக்தர்களுக்கு; அநுரூப – தகுந்த வடிவங்களில்; ஆத்ம-தர்சதம்-வெளிப்படுத்திக் கொன்பவராகிய ஒருவர்.

பக்தர்களுக்கு எல்லா வரங்களையும் அருளுபவரும், அவர்களின் துன்பங்களையும் மறையச் செய்பவரும், பக்தர்கள் யாருடைய தாமரை போன்ற பாதங்களைச் சரணடைகிறார்களோ அவரைக் காப்பாற்றும் அந்த பரமபுருஷ பகவானை பிரம்மன் அணுகினார். பக்தர்களின் திருப்திக்காக எண்ணற்ற, தெய்வீகமான உன்னத வடிவங்களில் பகவான் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர்.

பதம் 3.20.26
பாஹி மாம் பரமாத்மம்ஸ்தே ப்ரேஷணேனாஸ்ருஜம் ப்ரஜா: தா இமா யபிதும் பாபா உபாக்ராமந்தி மாம் ப்ரபோ

பாஹி—காப்பாற்று; மாம்—என்னை; பரமாத்மன்—ஓ பகவானே; தே-உங்களுடைய; ப்ரேஷணேன—ஆணையால்; அஸ்ருஜம் நான் படைத்தேன்; ப்ரஜா-உயிரினங்கள்; தா இமா—அந்த உயிரினங்கள்; யபிதும்-புணர்ச்சி கொள்ள; பாபா-பாவப்பட்டவர்கள்; உபாக்ராமந்தி -அணுகுகிறார்கள்; மாம்—என்னை; ப்ரபோ—ஓ பகவானே.

பகவானை அணுகி பிரம்மன், அவரிடம் இவ்வாறு கூறினார்: என் இறைவா, உங்கள் ஆணைப்படி, என்னால் படைக்கப்பட்ட இந்தப் பாவம் நிறைந்த அசுரர்களிடமிருந்து, தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள். அவர்கள் பாலுணர்வின் விருப்பத்தால் ஏற்பட்ட வெறியினால், என்னைத் தாக்க வந்துள்ளார்கள்.

பதம் 3.20.27
த்வமேக: கிலலோகானாம் க்லிஷ்டானாம் க்லேச-னாசன: த்வமேக க்லேசதஸ்தேஷாமனாஸந்த -பதாம் தவ

த்வம்- நீங்கள்; ஏக-மட்டும்; கில-உண்மையில்; லோகானாம் மக்களின்; க்லிஷ்டானாம்.–துன்பத்தால் அல்லற்பட்ட; க்லேச- கடுந்துன்பங்கள், நாசன:-விடுவித்தல்; தவம் ஏக:-நீங்கள் மட்டும்; க்லேசத-துன்பத்தை அனுபவிக்கச் செய்தல்; தேஷாம் அவர்களிடம்; அனாஸத்த-சரண் அடைந்து; பதாம்-பாதங்கள்; தவ-உங்களுடைய.

என் பகவானே, நீங்கள் மட்டுமே துன்பமடைந்தவர்களின் துயரத்தை நீக்கும் வல்லமையுடையவர், உங்கள் திருவடிகளைச் சரணடையாதவர் களுக்கு துன்பம் தந்து அனுபவிக்கச் செய்கிறீர்கள்.

பதம் 3.20.28
ஸோவதார்யாஸ்ய கார்பண்யம் விவிக்தாத்யாத்ம-தர்ஸந: விமுஞ்சாத்ம-ததும் கோராமித்யுக்தோ விழுமோச ஹ

ஸபகவான் ஹரி; அவதார்ய-கூர்ந்து கவனித்து; ஆஸ்ய- பகவான் பிரம்மனின்: கார்பண்யம்-துன்பம்; விவிக்த சந்தேகம் இன்றி: அத்யாத்ம-பிறரின் எண்ணங்கள்; தர்சந—பார்க்க முடித்தவர்; விமுஞ்ச-உதறி எறிதல்; ஆத்ம தநும்—உன் உடலை; கோராம்- தூய்மையற்ற; இதியுக்தஇவ்வாறு கட்டளை இட்டார்; விழுமோச ஹபகவான் பிரம்மன் உதறி எறிந்தார்.

பிறரின் எண்ணங்களை மிகவும் தெளிவாகப் பார்க்கும் பகவான், பிரம்மனின் துன்பத்தைக் கூர்ந்து நோக்கி, அவரிடம் கூறினார். “உன்னுடைய இந்தத் தூய்மையற்ற உடலை உதறி எறிந்து விடு.” இவ்வாறு பகவானால் ஆணையிடப்பட்டதும் பிரம்மன் தன் உடலை உதறி எறிந்தார்.

பதம் 3.20.29
தாம் க்வணஞ் -சரணாம் போஜம் மத-விஹ்வல-லோசனாம்
காஞ்-சீகலாபவில் ஸத்து கூலச்சந்ந-ரோதஸம்

தாம்- அந்த உடல்; க்வணத் கணுக்கால் மணிகளுடன் ஒலித்து; சரண-அம்போஜம் தாமரைப் பாதங்களுடன்; மத-மயக்க வெறி: விஹ்வல- மூழ்கி; லோசனாம் கண்களுடன்; காஞ்சிகலா தங்கத் தால் ஆன ஒட்டியாணம்; விலசத் ஒளிவிட்டு; துகூல- அழகிய ஆடையால்; சந்த-மூடப்பட்டு; ரோதஸம்-இடையுடன் கூடிய,

பிரம்மனால் விடப்பட்ட உடல், பகலும்இரவும் சந்திப்பதும் உணர்ச்சியைத் தூண்டும் நேரமும் ஆகிய மாலை நேர வடிவத்தை எடுத்துக் கொண்டது. இயற்கையில் வெறியுடைய, ரஜஸ் எனும் குணத்தால் ஆளப்படும் அகரர்கள், அதை அழகிய இளநங்கையாகக் கருதினாரக்ள். அவளுடைய தாமரைப் பாதங்களில் கணகண என்று ஒலிக்கும் சலங்கைகள் இருந்தன. அவளின் கண்கள் அகன்றும் மயக்க வெறியுடனும் இருந்தன. அவளின் இடை அழகிய ஆடையாகி மூடப்பட்டு, அதைச் சுற்றி ஒரு ஒட்டியாணம் ஒளி வீசியது.

பதம் 3.20.30
அதியோநிய- ஸலேஷயோத் துங்க-திரந்தர-பயோதராம் கநாஸாம் சுத்விஜாம் ஸ்நிக்த-ஹாஸ லீலாவலோக நாம்

அதியோத்ய—ஒன்றுடன் ஒன்று; சுலேஷயா-சேர்ந்து இருத்தலால்; உத்துங்க-உயர்ந்து; திரந்தர—உட்புக இடமின்றி; பய-தரம்- மார்புகள்; சு நாஸம் – வடிவுடைய நாசி (மூக்கு); சுத்விஜாம் – அழகிய பற்கள்; ஸ்நிக்த- அழகிய; ஹாஸ-புன்சிரிப்பு; லீலா-அவலோ கநாம் – விளையாட்டான பார்வை.

அவளின் மார்புகள், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருத்தலால் உயர்ந்து விளங்கின. அவை எதுவும் குறுக்கிடும் அளவுக்கு இடமின்றி மிகவும் நெருக்கமாக விளங்கின. அவளுக்கு (எடுப்பான) அழகிய நாசியும், அழகிய பற்களும் இருந்தன. அவள் உதடுகளில் அழகிய புன் சிரிப்பு தவழ்ந்தது. அவள் அசுரர்களை நோக்கி ஒரு விளையாட்டான பார்வையை வீசினாள்.

பதம் 3.20.31
கூஹந்தீம் வ்ரீடயாத்மானம் நீலாலக-வரூதினீம்
உபலப்யாஸுரா தர்ம ஸர்வே ஸம்முமுஹீ: ஸ்ரியம்

கூஹந்தீம்-மறைந்து; வ்ரீடயா-வெட்கத்தால்; ஆத்மானம்- அவளை; நீல- கரிய; அலக–கூந்தல்; வருதினீம்-அடர்ந்த; உபலப்ய—கற்பனையினால்; அஸூரா—தீயவர்கள்; தர்ம-ஒ விதுரனே; ஸர்வே-எல்லா; ஸம்முமுஹீ:-பிடிக்கப்பட்டு; ஸ்ரியம்-பெண்.

வெட்கத்தில் ஆழ்ந்தவள் போல, அவள் தன் கரிய கூந்தலால் தன்னை மறைத்துக் கொண்டாள். இந்தப் பெண்ணைப் பார்த்த பொழுது, அசுரர்கள் எல்லாரும் பாலுணர்வின் விருப்பத்துடன் மயங்கினார்கள்.

பதம் 3.20.32
அஹோ ரூபமஹோ தைர்யமஹோ அஸ்ய நவம் வய:
மத்யே காமயமானானாமகாமேவ விஸர்பதி

அஹோ—ஒ; ரூபம்- என்ன அழகு; அஹோ-ஓ; தைரியம் – என்ன சுயகட்டுப்பாடு; அஹோ-ஓ; அஸ்யா—அவள்; நவம்- புதுமை; வய—இளமை; மத்யே-இடையில்; காமயமானானாம்—உணர்ச்சிக்கு ஆளாகி ஏங்கும்; அகாமா-உணர்ச்சியிலிருந்து விடுபட்டு; இவ- போல; விஸர்பதி—எங்களுடன் நடந்து.

அசுரர்கள் அவளைப் புகழ்ந்தனர்: ஓ, என்ன அழகு- என்ன அறிய சுயகட்டுப்பாடு-என்ன மயக்கும் இளமை-உணர்ச்சிக்கு ஆளாகி அவளுக்காக ஏங்கும் எங்களுக்கு நடுவே, உணர்ச்சியிலிருந்து முழுவதும் விடுபட்டவள் போல அவள் இயங்குகின்றாள்.

பதம் 3.20.33
விதர்கயந்தோ பஹூதா தாம் ஸந்த்யாம் ப்ரமதாக்குதிம் அபிஸம்பாவ்ய விஸ்ரம் பாத்பர்யப்ருச்சன் குமேதஸ:

விதர்கயந்த- கற்பனைக் கோட்டையில் திருப்திப்பட்டு; பஹரிதா – பலவித; தாம்- அவள்; ஸத்தியாம்-மாலையின் மங்கிள ஒளி; ப்ரமதா— இளம் பெண்; அக்குதிம்- வடிவத்தில்; அபிஸம்பாவ்ய-மிகுந்த மரியாதையுடன் நடத்தி; விஸ்ரம்பாத் – விருப்பத்துடன்; பர்யப்ருச்சன்- வினவி; குமேதஸ—தீய எண்ணம் உடைய.

இளம் பெண்ணின் வடிவில் அவர்களுக்கு முன் தோன்றிய, அந்த மாலை நேரத்து மங்கிய ஒளி பற்றிய பல்வேறு கற்பனைகளால் திருப்திப்பட்ட தீய எண்ம் கொண்ட அசுரர்கள் அவளை மரியாதையுடன் நடத்தி, அவனிடம் விருப்பத்துடன் பின்வருமாறு பேசினார்கள்.

பதம் 3.20.34
காஸி கஸ்யாஸி ரம்போரு கோ வார்தஸ்தே த்ர பாமினி
ரூபத்-ரவிண-பண்யேன துர்பகாந்நோ விபாதஸே

கா-யார்; அஸி-நீ; கஸ்ய – யாருக்குச் சொந்தம்; அஸி-நீ; ரம்போரு-ஓ அழகியே; க-என்ன; வா—அல்லது; அர்த-நோக்கம்; தே-உன்னுடைய; அத்ர—இங்கு: பாமினி.-ஓ உணர்ச்சி மயமான பெண்ணே; ரூப-அழகு; த்ரவிண-விலைமதிப்பில்லாத; பண்யேன- பொருளுடன்; துர்பகான்- அதிர்ஷ்டம் அற்ற; ந –எங்களை; விபாதஸே- நீ ஆசை காட்டி எங்க வைக்கிறாய்.

ஓ அழகிய பெண்ணே, நீ யார்? நீ யாருடைய மனைவி அல்லது மகள்? நீ எங்கள் முன் தோன்றுவதன் நோக்கம் என்ன? உன் விலை மதிப்பில்லாத பொருளாகிய அழகால், அதிர்ஷ்டம் அற்ற எங்களுக்கு ஆசைகாட்டி என் ஏங்க வைக்கிறாய்?

பதம் 3.20.35
யா வா காசித் த்வமபலே திஷ்டயா ஸந்தர்சநம் தவ உத்ஸூனோஷீக்ஷமாணானாம் கந்துக-க்ரீடயா மன:

யா-யாராக இருந்தாலும்; வா-அல்லது; காசித்-யார் ஒருவர்; த்வம் – நீ; அபலே- ஓ அழகியே; திஷ்டயா-அதிர்ஷ்டத்தினால்; ஸந்தர்சநம்-பார்த்து; தவ-உன்னுடைய; உத்ஸுனோஷீக்ஷ- நீ கிளர்ச்சி செய்கிறாய்; இக்ஷமாணானாம்-பார்ப்பவர்களுக்கு; கந்துக பந்துடன்; க்ரீடயா—விளையாட்டினால்; மன-மனம்.

ஓ அழகிய பெண்ணே நீ யாராக இருந்தாலும் உன்னைப் பார்ப்பதற்கு நாங்கள் பாக்கியம் செய்திருக்கிறோம் நீ பந்தினை ஏந்தி விளையாடும் பொழுது, பார்ப்பவர்களின் மனத்தை எல்லாம் கிளர்ச்சி அடையச் செய்கிறாய்.

பதம் 3.20.36
நைகத்ர தே ஜயதி ஸாலிநி பாத-பத்மம்
க்நந்த்யா முஹு: கர-தலேன பதத்-பதங்கம்
மத்யம் விஷீததி ப்ருஹத்- ஸ்தன பார-பீதம்
ஸாந்தேவ த்ருஷ்டிரமலா ஸூஸிகா-ஸமுஹ:

ந-இல்லை; ஏகத்ர—ஒரு இடத்தில்; தே-உன்னுடைய; ஜயதி- தங்குவது; சாலிநி—ஓ அழகிய பெண்ணே; பாத-பத்மம்- தாமரைப் பாதங்கள்; க்நந்த்யா—அடித்து;முஹு—மீண்டும் மீண்டும்; கரதலேன்- உள்ளங்கையினால்; பதத்-குதித்து; பதங்கம்-பந்து; மத்யம்-இடை; விஷீததி-களைப்படைந்து; ப்ருஹத்-முழுவளர்ச்சியடைந்த; ஸ்தன- உன்மார்பகங்கள்; பார-பாரத்தால்; பீதம்—அழுத்தப்பட்டு; சாந்தேவ- களைப்புற்றது போல் ; த்ருஷ்டி-பார்வை; அமலா-தெளிவான; ஸூ- அழகிய; சிகா — உன் கூந்தல்; ஸமுஹு – கற்றை.

ஓ அழகிய பெண்ணே, நீ துள்ளும் பந்தைக்கொண்டு உன் கையால் பூமியை மீண்டும் மீண்டும் அடிக்கும் பொழுது உன் தாமரைப் பாதக்ஙள் ஒரு இடத்தில் தங்குவதில்லை. உன் முழுமையான மார்புகளின்பாரத்தால் அழுத்தப்பட்டு உன் இடை களைப்படைகிறது. உன் தெளிவான பார்வை மங்கியது போல் தெரிகிறது. உன் அழகிய பின்னப்பட்ட கூந்தலை நாங்கள் வணங்குகிறோம்.

பதம் 3.20.37
இதி ஸாயந்தநீம் ஸந்த்யாமஸூரா ப்ரமதாயதீம் ப்ரலோபயந்தீம் ஜ்கருஹீர்மத்வா மூட-திய ஸ்த்ரியம்

இதி-இந்த விதத்தில்; ஸாயந்தநீம்- மாலை நேரம்; ஸந்த்யாம்- மங்கிய ஒளி; அஸூரா—தீயோர்கள்; ப்ரமதாயதீம்—ஒழுக்கம் கெட்ட பெண் போல் நடந்து; ப்ரலோபயந்தீம்—மயக்கும்; ஜக்ருஹூ- பற்றினர்; மத்வா-நினைத்து; மூட-திய-புத்தி இல்லாத; ஸ்த்ரியம்—பெண்.

அசுரர்கள், அறியாமையால் மூடப்பட்டு, மங்கிய ஒளி படைத்த மாலை நேரத்தை, மயக்கம் தரும் வடிவம் படைத்த அழகிய பெண்ணாகக் கண்டதும், அவளைப் பற்றிக் கொண்டார்கள்.

பதம் 3.20.38
ப்ரஹஸ்ய பாவ-கம்பீரம் ஜிக்ரந்த்யாத்மானமாத்மனா
காந்த்யா ஸஸர்ஜ பகவான் கந்தர்வாப்ஸரஸாம் கணான்

ப்ரஹஸ்ய-புன்சிரிப்பு சிரித்து; பாவ- கம்பீரம்-ஆழ்ந்த நோக்கத் துடன்; ஜிக்ரந்யா-புரிந்து கொண்டு; ஆத்மானம்- அவரை; ஆத்மான— அவரால்; காந்த்யா-அவரின் அழகினால்; ஸஸர்ஜ-படைத்தார்; பகவான்-வணங்கத் தகுந்த கடவுள் பிரம்மா; கந்தர்வ-விண்ணுலகப் பாடகர்கள்; அப்ஸரஸாம்- தேவலோக நடனப் பெண்களின்; கணான்—படைகள்.

ஆழ்ந்த குறிப்புள்ள சிரிப்புடன், வணங்கத் தக்க பிரம்மன், பின்னர் தன்னுடைய அழகினால் மலர்ந்தார். அந்த அழகு சுந்தர்வர்கள், அப்ஸரஸ்களின் படைகளாக மலர்ந்து, தனக்குத் தானே அனுபவிப்பது போல் தோன்றியது.

பதம் 3.20.39
விஸஸர்ஜ தனும் தாம் வைஜ்யோத்ஸ்நாம் காந்திமதீம் ப்ரியாம் த ஏவ சாதது: ப்ரீத்யா விஸ்வாவஸூபுரோகமா:

விஸஸர்ஜ-விட்டு விட்டார்; தனும்- வடிவம்; தாம்- அந்த; வை- உண்மையில்; ஜ்யோத்ஸ்தாம்-சந்திர ஒளி; காந்திமதீம்-பிரகாசித்து; ப்ரியாம்-அன்பிற்குரிய; தே-கந்தர்வர்கள்; ஏவ-குறிப்பாக; ச- மற்றும்; ஆதது:-உடைமையாக எடுத்து; ப்ரீதியா-மகிழ்ச்சியுடன்; விஸ்வாவஸூ-புர-கமா:- விஸ்வாவசுவால் தலைமை தாங்கப்பட்டு.

அதன் பின்னர், பிரம்மன் பிரகாசிக்கும், அன்பிற்குரிய சந்திரஒளி வடிவத்தை விட்டுவிட்டார். அதை விஸ்வாவகவும், கந்தர்வர்களும் மகிழ்ச்சியுடன் தமது உடைமையாக்கிக் கொண்டார்கள்.

பதம் 3.20.40
ஸ்ருஷ்ட்வா பூத-பிஸாசாம்ஸ் ச பகவான் ஆத்ம- தந்த்ரிணா
திக் – வாஸஸோ முக்த -கேஸான் வீக்ஷ்ய சாமீலயத் த்ருஸௌ

ஸ்ருட்ஷ்வா—படைத்துவிட்டு; பூத-பேய்கள்; பிலாசான்-பிசாசு களையும்; ச- மற்றும்; பகவான்-பிரம்மதேவர்; ஆத்ம—தன்னுடைய; தந்த்ரிணா – சோம்பலிலிருந்து; திக்-வாஸ-நிர்வாணமான; முக்த— விரிக்கப்பட்ட; கேஸான்-முடிவுகளை; வீக்ஷ்ய—பார்த்து; ச-மற்றும்; அமீலயத்—மூடிக்கொண்டார்; த்ருஸௌ—இரு கண்களை.

பிறகு, புகழ் வாய்ந்த பிரம்மதேவர் தன் சோம்பலிலிருந்து பேய்களையும், பிசாசுகளையும் படைத்தார். ஆனால் அவை தலைவிரி கோலத்துடன் நிர்வாணமாக நிற்பதைக் கண்டதும் அவர் தன் கண்களை மூடிக்கொண்டார்.

பதம் 3.20.41
ஜக்ருஹுஸ்- தத்விஸ்ருஷ்டாம் தாம் ஜ்ரும்பணாக்யாம் தனும் ப்ரபோ:
நித்ராம் இந்த்ரிய -விக்லேதோ யயா பூதேஷூ த்ருஸ்யதே யேனோச்சிஷ்டர்ந் தர்ஷயந்தி தம்உன்மாதம் ப்ரசசுதே

ஜக்ருஹூ:- உடைமையாக்கி; தத் விஸ்ருஷ்டாம்-அவரால் தூக்கி எறியப்பட்டு; தாம்-அந்த; ஜ்ரும்பண ஆக்யாம் -கொட்டாவி எனப்படும்; தனும்-உடல்; ப்ரபோ:- பிரம்மதேவரின்; நித்ராம்- உறக்கம்; இந்த்ரிய- வில்லேத:- சொள்ளு விடுதல் (கோழை); யயா—அதனால்; பூதேஷூ- வாழும் உயிர்களில்; த்ருஸ்யதே- காணப்படுகிறது; யேன—அதனால்; உச்சிஷ்டாந் – மலம், சிறுநீர் இவற்றால் பூசப்பட்டு; தர்ஷயந்தி-குழம்பி; தாம்-அந்த; உன்மாதம்— பைத்தியம்; ப்ரசதே—பேசப்பட்டது.

உயிர்ப் பொருள்களைப் படைப்பவராகிய பிரம்மதேவரால் கொட்டாவி வடிவத்தில் தூக்கியெறியப்பட்ட அவரது உடலை, பேய்களும், குட்டிச்சாத்தான்களும் உடைமையாக்கிக் கொண்டன. இது சொள்ளு விடுதல் என்பதற்குக் காரணமான தூக்கம் என்றும் அறியப்படும். இந்தப் பேய்களும் குட்டிச்சாத்தான்களும் தூய்மை யில்லாதவரைத் தாக்கும். அந்தத் தாக்குதல் மனநோய் கொண்ட நிலை என்று பேசப்படுகிறது.

பதம் 3.20.42
ஊர்ஜஸ்வந்தம் மன்யமான ஆத்மானம் பகவான் அஜ:
ஸாத்யான் கணான் பித்ரு- கணான் பரோக்ஷேணாஸ்ருஜத் ப்ரபு:

ஊர்ஜ:- வந்தம்-முழு சக்தியுடன்; மன்யமான:—அடையாளம் காணல்; ஆதிமானம்-தன்னுடைய; பகவான்-மிகவும் வணங்கத்தக்க; அஜ:-பிரம்மதேவர்; ஸாத்யான்-ஸாத்யர்கள்; கணான் -தேவகணங்கள்; ப்த்ரு-கணான் -பிதாக்கள்; பரோக்ஷேண— அருவ வடிவிலிருந்து; அஸ்ருஜத்—படைத்தார்; ப்ரபு:-உயிர்களின் பெருந்தலைவன்.

வணக்கத்திற்குரியபிரம்மதேவர், வாழும் ஜீவராசிகளைப் படைப்பவர், தன்னை தான் முழுமையான ஆசையும், சக்தியும் உடையவராக அடையாளம் கண்டு கொண்டு, தன்னுடைய அருவ வடிவிலிருந்து, தன்னுடைய நாபியிலிருந்து, ஸாத்யர்களையும் பிதாக்களையும் மலரச் செய்தார்.

பதம் 3.20.43
தஆத்ம-ஸர்கம் தம் காயம் பிதர: ப்ரதிபேதிரே
ஸாத்யேப்யஸ் ச பித்ருப்யஸ் ச கவயோ யத் விதந்வதே

தே—அவர்கள்; ஆத்ம –ஸர்கம்- தங்கள் இருப்பின் மூல காரணம்; தம் – அந்த; காயம்-உடல்; பிதர:- பிதாக்கள்; ப்ரதிபேதிரே- ஏற்றுக் கொண்டு; ஸாத்யேப்ய-தேவர்களுக்கு; ச-மற்றும்; பித்ருப்ய- பிதாக்களுக்கு; ச-உடன்; கவய—சடங்கு முறைகளை நன்கு அறிந்தவர்கள்; யத்—அதன் மூலம்; விதந்வதே – திருப்படையல் (நைவேத்யம்) தருகிறார்கள்.

பிதாக்கள் தாங்களே அருவமான உடலை உடைமையாக்கிக் கொண்டனர். இந்த அருவமான உடலின் மூலமே, சடங்கு முறைகளில் தேர்ந்தவர்கள் சாத்யர்களுக்கும், பிதாக்களுக்கும் (காலம் சென்ற முன்னோர்களின் வடிவத்தில் உள்ளவர்க்கும்) ஸ்ராத்த நிகழ்ச்சியின் போது திருப்படையல் கொடுக்கிறார்கள்.

பதம் 3.20.44
ஸித்தான் வித்யாதராம்ஸ் சைவ திரோதானேன ஸோதஸ்ருஜத் தேப்யோ ‘ததாத் தம்அத்மானம் அந்தர்தானாக்யம் அத்புதம்

ஸித்தான்- சித்தர்கள்; வித்யாதரான்- வித்யாதரர்கள்; சரவ- இவர்களுடன்; திரோதானேன-பார்வையிலிருந்து மறைந்து இருக்கும் வினைத்திறனால்; ஸ:-பகவான் பிரம்மதேவர்; அஸ்ருஜத்- படைத்தார்; தேப்ய:– அவர்களுக்கு; அததாத்— கொடுத்தார்; தம் ஆத்மானம்- அவரின் அந்த வடிவத்தை; அந்தர்தான—ஆக்யம்- அந்தர்தான எனப்படும்; அத்புதம் —அற்புதம்.

பின்னர் பகவான் பிரம்மதேவர், அவருடைய பார்வையிலிருந்து மறையும் ஆற்றலால் சித்தர்களையும், வித்யாதரர்களையும் படைத்தார். அந்தர் தான எனப்படும் அவருடைய அற்புதமான வடிவத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

பதம் 3.20.45
ஸ கின்னரான் இம்புருஷான் ப்ரத்யாத்ம்யேனாஸ்குஜ ப்ரபு:
மானயன் ஆத்மனாத்மானஉம் ஆத்மாபாஸம் விலோகயன்

ஸ:-பிரம்ம தேவர்: கின்னரான்- கின்னரர்கள்; கிம்புருஷான்— கிம்புருஷர்கள்; ப்ரத்யாதிம்யேன- தன் பிம்பத்திலிருந்து (நீரில்); அஸ்ருஜத் – படைத்தார்; ப்ரபு:-உயிர்வாழிகளின் தலைவர் (பிரம்ம தேவர்); மானயன்- போற்றி; ஆத்மனா—ஆத்மானம்-அவரை அவரே; ஆத்ம-ஆபாஸம்—அவர் பிம்பத்தை; விலோகயன்—பார்த்து.

ஒரு நாள், வாழும் பொருள்களைப் படைப்பவராகிய பிரம்மதேவர் தண்ணீரில் தன் பிம்பத்தைத் தானே பார்த்துப் போற்றினார். அந்த பிம்பத்திலிருந்து பிம்புருஷர்களையும் கின்னரர்களையும் படைத்தார்.

பதம் 3.20.46
தேது தஜ் ஐக்கு ரூபம் தியக்தம் ஸத் ப்ரமேஷ்டினா மிதுனீ -பூய காயந்தஸ் தம் ஏவோஷn கர்மபி:

தே-அவர்கள் (கின்னரர்களும், கிம்புருஷர்களும்); து-ஆனால்; தத்—அந்த: ஜக்ருஹூ: உடைமையாக்கிக் கொண்டு; ரூபம்-நிழலான வடிவத்தை; த்யக்தம்-விட்டுவிட்டு; யத்- எந்த; பரமேஷ்டினா- பிரம்மனால்; மிதுனீ- பூய- தங்களின் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வந்து; காயந்த:-இசையால் புகழ்ந்து; தம்—அவரை; ஏவ-மட்டும்; உஷஸி-விடிகாலையில்; கர்மபி:-அவரின் அருஞ்செயலுடன்.

கிம்புருஷர்களும் கின்னரர்களும் பிரம்மதேவரால் விடப்பட்ட நிழல் வடிவத்தைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டனர். ஆகவே அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒவ்வொரு புலர் காலையிலும் அவருடைய அருஞ்செயல்களைப் புகழ்ந்து பாடுவதன் மூலம் எண்ணிப் பார்க்கின்றனர்.

பதம் 3.20.47
தேஹேன வை போகவதா ஸயானோ பஹூ -சிந்தயா
ஸர்கே’னுபசிதே க்ரோதாத் உத்னைர்ஜ் ஹ தத் வபு:

தேஹேன-அவர் உடலுடன்; வை-உண்மையில்; போகவதா- முழுநீனத்திற்கு நீட்டி; ஸயான:-முழுவதுமாக நீட்டிப்படுத்து; பஹுஉ- சிறந்த: சிந்தயா-கருத்துடன்; ஸர்கே படைப்பு: அதுபசிதே – மேலே செல்லாமல்; க்ரோதாத்-கோபத்தினால்; உத்ஸஸர்ஜ—விட்டுவிட்டு: ஹ-உண்மையில்; தத் -அந்த ; வபு:-உடல்.

ஒரு முறை பிரம்மன் தன் உடலை நன்கு நீட்டிப் படுத்துக் கொண்டார். படைப்பு வேலை விரைவாக நடை பெறாமலிருக்கின்றதாக கவனித்த அவர், அந்த சிடுசிடுத்த நிலையில் அந்த உடலையும் விட்டுவிட்டார்.

பதம் 3.20.48
யே ‘ஹயந்தாமுத: கேஸா அஹயஸ் தே’ங்க ஜக்ஞிரே
ஸர்பா: ப்ரஸர்பத: க்ரூரா நாகா போகோரு -சுந்தரா!

யே-எந்த: அஹயந்த- கீழே விழுந்த அமுத:-அதிலிருந்து; கேஸா:- முடிகள்; அஹய:-பாம்புகள்; தே— அவை; அங்க- ஓ, விதுரனே; ஜக்ஞிரே-பிறப்பெடுத்து; ஸர்பா- பாம்புகள்; ப்ரஸர்பதா— தவழும் உடலிலிருந்து; க்ரூரா:-சீறும்; நாகா:- நாகங்கள்; போசு- படங்களுடன்; உரு-பெரிய; சுந்தரா:— அவற்றின் கழுத்துகள்.

ஓ அன்பான விதுரனே, அந்த உடலிலிருந்து உதிர்ந்த முடி, பாம்புகளாக மாற்றம் பெற்றது. அந்த உடல் கைகள், கால்களுடன் சேர்ந்து ஊர்ந்து கொண்டிருக்கும் பொழுதே, அதிலிருந்து பயங்கரமான பாம்புகளும், படங்கள் விரிந்த நாகங்களும் தோன்றின.

பதம் 3.20.49
ஸ ஆத்மானம் மன்யமான: க்ருத -க்ருத்யம் இவாத்மபூ:
ததா மனூன் ஸஸர்ஜாந்தே மனஸா லோக- பாவனான்

ஸ:-பகவான் பிரம்மதேவர்; ஆத்மானம்—அவரை; மன்யமான:- கருத்தூன்றி ; க்ருத -க்ருத்யம் – வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றி; இவ – போல; ஆத்மபூ:-பரமனிடத்திலிருந்து பிறந்து; ததா – பிறகு; மனூன்- மனுக்கள்; ஸஸர்ஜ— படைத்தார்; அந்தே– முடிவில்; மனஸா- அவர் மனதிலிருந்து; லோக – உலகின்; பாவனான்- நலத்தை உயர்த்தி.

முதல் உயிரான, தானாகப் பிறந்த பிரம்மன், ஒருநாள், தன் வாழ்வின் குறிக்கோள் நிறைவேறி விட்டதைப் போல் உணர்ந்தார், அந்த நேரத்தில், அவர் தன் மனத்திலிருந்து, அண்டத்தின் நன்மையான செயல்களை உயர்த்தும் மனு எனும் பெயரிய உயிர்களைத் தோற்றுவித்தார்.

பதம் 3.20.50
தேப்ய: ஸோ ‘ஸ்ருஜத் ஸ்வீயம் புரம் புருஷம் ஆத்மவான்
தான் த்ருஷ்ட்வா யே புரா ஸ்ருஷ்டா: ப்ரஸஸம்ஸ: ப்ரஜாபதிம்

தேப்ய:- அவர்களுக்கு; ஸ:-பகவான் பிரம்மதேவர்; அஸ்ருஜத் -கொடுத்தார்; ஸ்வீயம்—அவருடைய; புரம்-உடல்; புருஷம் மனித; ஆத்ம-வான் தன்னடக்க, அமைதி உள்ள; தான்-அவர்களிடம்; திருஷ்ட்வா- பார்த்து; யே-அவர்கள்; புரா- முன்பு; ஸ்ருஷ்டா – படைக்கப்பட்டனர் (தேவர்கள், கந்தர்வர்கள் முதலியோர் முன்பு படைக்கப்பட்டனர்); ப்ரஸஸம்ஸூ:-பாராட்டி; ப்ரஜாபதிம்- பிரம்மதேவர் (படைக்கப்பட்ட உயிர்வாழிகளின் தலைவர்).

தன்னடக்கமுடைய படைப்பாளர் அவர்களுக்கு, தன் சொந்த மனித வடிவத்தைக் கொடுத்தார். மனுக்களைப் பார்த்ததும், முன்பே படைக்கப் பட்டவர்களான தேவர்கள், கந்தர்வர்கள் முதலியோர், அண்டத்தின் தலைவரான பிரம்மனைப் போற்றினர்.

பதம் 3.20.51
அஹோ ஏதஜ் ஜகத்- ஸ்ரஷ்ட: ஸுக்ருதம் பத தே க்ருதம்
ப்ரதிஷ்டிதா: க்ரியா யஸ்மின் ஸாகம் அன்னம் அதாமஹே

அஹோ- ஓ; ஏதத்- இந்த; ஜகத் ஸ்ரஷ்ட: ஓ-அண்டத்தைப் படைப்பவரே; ஸுக்ருதம்-நன்கு செய்யப்பட்ட; பத-உண்மையில்; தே-உங்களால்; கிருதம்-உருவாக்கப்பட்டது; ப்ரதிஷ்டிதா:-ஆழ்ந்து உருவாக்கப்பட்டு; க்ரியா:-எல்லா சடங்கு முறை நிகழ்ச்சிகள்; யஸ்மின் —அதில்; ஸாகம்—இதனுடன்; அன்னம்—வேள்விப் படையல்; அதாம்-நாம் பங்கிட்டுக் கொள்வோம்; ஹே-ஓ.

அவர்கள் வேண்டினர்: ஓ அண்டத்தைப் படைப்பவரே, நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். நீங்கள் எதை உற்பத்தி செய்தீர்களோ, அதனை நன்கு செய்துள்ளீர்கள். சடங்கு முறைச் செயல்கள் இப்போது மனித வடிவில் முழுமையாகப் படைக்கப்பட்டு விட்டதால், நாங்கள் அனைவரும் வேள்விப் படையல்களைப் பங்கிட்டுக் கொள்வோம்.

பதம் 3.20.52
தபஸா வித்யயா யுக்தோ யோகேன ஸூஸமாதினா
ருஷின் குஷீர் ஹ்ருஷீகேஸ: ஸஸர்ஜாபிமதா: ப்ரஜா:

தபஸா-தவத்தால்; வித்யயா-வழிபாட்டால்; யுக்த:-ஈடுபட்டு; யோகேன-பக்தியில் மனத்தின் ஒருமுகப்படுத்தலால்; ஸூ-ஸமாதினா-நல்ல தியானத்தால்; ருஷீன்-முனிவர்கள்; ருஷி:- முதல் அறிவர் (பிரம்மதேவர்); ஹ்ருஷீகேஸ:-அவரின் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்; ஸஸர்ஜா-படைத்தார்; அபிமதா:-அன்பான; ப்ரஜா:- பிள்ளைகள்.

கடுமையான தவம், வழிபாடு, மனத்தை ஒருமுகப்படுத்துதல் மற்றும் பக்தியில் முழு ஈடுபாடு இவற்றுடன் கோபம் அற்ற நிலை இவற்றால் தன்னை தகுதியாக்கிக் கொண்டு, தன் புலன்களையும் கட்டுப்படுத்திக் கொண்ட பிரம்மதேவர் (உயிர்ப் பொருள்.) சிறந்த முனிவர்களைத் தன் பிள்ளைகளாகத் தோற்றுவித்தார்.

பதம் 3.20.53
தேப்யஸ் னசைகைகஸ: ஸ்வஸ்ய தேஹஸ்யாம்ஸம் அதாத் அஜ:
யத் தத் ஸமாதி -யோகர்த்தி தபோ வித்யா விரக்திமத்

தேப்ய:- அவர்களுக்கு; ச-மற்றும்; ஏகைகஸ:-ஒவ்வொரு (அங்கம்); ஸ்வஸ்ய -அவருடைய; தேஹஸ்ய-உடல்; அம்ஸ- பகுதி; அதாத்-கொடுத்தார்; அஜ:-பிறப்பற்ற பிரம்மதேவர்; யத்-எந்த; தத்- அந்த; ஸமாதி-ஆழ்ந்த தியானம்; யோக—மனத்தை ஒருமுகப்படுத்தல்; ருத்தி- இயற்கை கடந்த ஆற்றல்; தப:-துறவறம்; வித்யா-அறிவு; விரக்தி-துறத்தல்; மத்- உடைமையாக்குதல்,

அண்டத்தின் பிறப்பற்ற படைப்பாளர், ஒவ்வொரு பிள்ளைக்கும் தன் உடலிலிருந்து ஒரு அங்கத்தைக் கொடுத்தார். அது ஆழ்ந்த தியானம், மனத்தை ஒருமுகப்படுத்தல், இயற்கை கடந்த ஆற்றல், தவம், வழிபாடு மற்றும் துறவு ஆகியவற்றால் விரித்துரைக்கப்படுகிறது.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “மைத்ரேயருக்கும் விதுரருக்கும் இடையே உரையாடல்” எனும் தலைப்பைக் கொண்ட இருபதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare