அத்தியாயம் – 1
விதுரரின் கேள்விகள்
பதம் 3.1.1
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் ஏதத் புரா ப்ருஷ்டோ மைத்ரேயோ பகவான் கில
க்ஷத்ரா வனம் ப்ரவிஷ்டேன த்யக்த்வா ஸ்வ-க்ருஹம் ருத்திமத்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறாக; ஏதத்—இந்த; புரா—முன்னர்; ப்ருஷ்ட:—கேட்கப்பட்டு; மைத்ரேய:—மாமுனிவர் மைத்ரேயர்; பகவான்—தவத்திரு; கில—சந்தேகமின்றி; க்ஷத்ரா—விதுரரால்; வனம்—வனம்; ப்ரவிஷ்டேன—புகுந்து; த்யக்த்வா—துறந்து; ஸ்வ-க்ருஹம்—சொந்த வீட்டை; ருத்திமத்—செழிப்புடைய.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: சிறந்த பக்தரான விதுர மகாராஜன் தனது செழிப்புடைய வீட்டைத் துறந்து, வனம் புகுந்தபின், இக்கேள்வியை தவத்திரு மைத்ரேய ரிஷியிடம் கேட்டார்.
பதம் 3.1.2
யத் வா அயம் மந்த்ர-க்ருத் வோ பகவான் அகிலேஸ்வர:
பௌரவேந்ர-க்ருஹம் ஹித்வா ப்ரவிவேசாத்மஸாத் க்ருதம்
யத்—வீடு; வை—சொல்ல வேறென்ன இருக்கிறது; அயம்—ஸ்ரீ கிருஷ்ணர்; மந்த்ர க்ருத்—அமைச்சர்; வ:—நீங்கள்; பகவான்—பரமபுருஷர்; அகில-ஈஸ்வர:—அனைத்திற்கும் இறைவனான; பௌரவேந்ர—துரியோதனன்; க்ருஹம்—வீட்டை; ஹித்வா—துறந்து; ப்ரவிவேச—புகுந்தார்; ஆத்மஸாத்—அவருக்குச் சொந்தமானதைப் போலவே; க்ருதம்—அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பாண்டவர்களின் வசிப்பிடத்தைப் பற்றிச் சொல்ல வேறென்ன இருக்கிறது? அனைத்திற்கும் இறைவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உமது அமைச்சராக செயற்பட்டார். அந்த வீட்டைத் தமது சொந்த வீடாகவே பாவித்து, அதற்குள் செல்வார். ஆனால் துரியோதனன் வீட்டைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை.
பதம் 3.1.3
ராஜோவாச
குத்ர க்ஷத்துர் பகவதா மைத்ரேயேணாஸ ஸங்கம:
கதா-வா ஸஹ-ஸம்வாத ஏதத் வர்ணய ந ப்ரபோ
ராஜா உவாச—அரசர் கூறினார்; குத்ர—எங்கு; க்ஷத்து:—விதுரருடன்; பகவதா—மேன்மை தங்கியவருடன்; மைத்ரேயேண—மைத்ரேயருடன்; ஆஸ—நிகழ்ந்தது; ஸங்கம:—சந்திப்பு; கதா—எப்பொழுது; வா—மேலும்; ஸஹ—உடன்; ஸம்வாத:—உரையாடல்; ஏதத்—இந்த; வர்ணய—விளக்கிக் கூறுங்கள்; ந:—எனக்கு; ப்ரபோ—பிரபுவே.
சுகதேவ கோஸ்வாமியிடம் அரசர் கேட்டார்: துறவியான விதுரருக்கும், தவத்திரு மைத்ரேய முனிவருக்கும் நிகழ்ந்த சந்திப்பும், உரையாடலும், எங்கு, எப்பொழுது நிகழ்ந்தது? பிரபுவே, தயவுசெய்து இதை எங்களுக்கு விளக்கிக் கூறுங்கள்.
பதம் 3.1.4
ந ஹி அல்பார்தோதயஸ் தஸ்ய விதுரஸ்யாமலாத்மன:
தஸ்மின் வரீயஸி ப்ரஸ்ன: ஸாது-வாதோபப்ரும்ஹித:
ந—ஒருபொழுதும் இல்லை; ஹி—நிச்சயமாக; அல்ப-அர்த—சிறிய (முக்கியமற்ற) நோக்கம்; உதய:—எழுப்பினார்; தஸ்ய—அவருடைய; விதுரஸ்ய—விதுரரின்; அமல-ஆத்மன:—புண்ணிய மனிதரின்; தஸ்மின்—அதில்; வரீயஸி—உயர்ந்த நோக்கம் கொண்டதாகும்; ப்ரஸ்ன:—கேள்வி; ஸாது-வாத—முனிவர்களாலும் ஸாதுக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட விஷயங்கள்; உபப்ரும்ஹித:—நிறைந்து.
துறவியான விதுரர், பகவானின் மிகச்சிறந்த தூய பக்தராவார். எனவே, தவத்திரு மைத்ரேய ரிஷியிடம் அவர் கேட்ட கேள்விகள் மிக உயர்ந்த நோக்கம் உள்ளவையாகவும், கற்றறிந்த பண்டிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவையாகவும் இருந்திருக்க வேண்டும்.
பதம் 3.1.5
ஸூத உவாச
ஸ ஏவம் ருஷி-வர்யோ ‘யம் ப்ருஷ்டோ ராஜ்ஞா பரீக்ஷிதா
ப்ரதி ஆஹ தம் ஸுபஹு-வித் ப்ரீதாத்மா ஸ்ரூயதாம் இதி
ஸூத: உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; ஸ:—அவர்; ஏவம்—இவ்வாறாக; ருஷி-வர்ய:—மகாரிஷி: அயம்—சுகதேவ கோஸ்வாமி; ப்ருஷ்ட:—கேள்வி கேட்கப்பட்டு; ராஜ்ஞா—அரசரால்; பரீக்ஷிதா பிரதி—பரீட்சித்து மகாராஜன்; ஆஹ—பதிலளித்தார்; தம்—அரசருக்கு; ஸு-பஹு-வித்—உயர்ந்த அனுபவமுள்ள: ப்ரீத-ஆத்மா—பூரண திருப்தியடைந்து; ஸ்ரூயதாம்—என்னிடமிருந்து கேளும்; இதி—இவ்வாறாக.
ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: உயர்ந்த அனுபவமுள்ளவரும், மகாமுனிவருமான சுகதேவ கோஸ்வாமி, அரசரிடம் திருப்தியடைந்தார். இவ்வாறு கேள்வி கேட்ட அரசரிடம் அவர் கூறினார்; “இவ்விஷயங்களை கவனமாகக் கேளும்!”
பதம் 3.1.6
ஸ்ரீ-சுக உவாச
யதா து ராஜா ஸ்வ-ஸுதான் அஸாதூன்
புஷ்ணன் ந தர்மேண வினஷ்ட-த்ருஷ்டி:
ப்ராதுர் யவிஷ்டஸ்ய ஸுதான் விபந்தூன்
ப்ரவேஸ்ய லாக்ஷா-பவனே ததாஹ
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; யதா—எப்பொழுது; து—ஆனால்; ராஜா—திருதராஷ்டிர மகாராஜன்; ஸ்வ-ஸுதான்—அவரது சொந்த மகன்கள்; அஸாதூன்—நேர்மையற்ற; புஷ்ணன்—ஊக்குவித்து; ந—ஒருபோதும் இல்லை; தர்மேண—சரியான வழியில்; வினஷ்ட த்ருஷ்டி:—நுண்ணறிவை இழந்தவர்; ப்ராது:—அவரது சகோதரரின்; யவிஷ்டஸ்ய—இளைய; ஸுதான்—மகன்கள்; விபந்தூன்—காவலர் (தந்தை) இல்லாததால்; ப்ரவேஸ்ய—புகச்செய்து; லாக்ஷா—அரக்கு; பவனே—மாளிகையில்; ததாஹ—தீ மூட்டினார்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: திருதராஷ்டிர மகாராஜன், நேர்மையற்ற தன் மகன்களை ஆதரிப்பதற்காக, பாவ ஆசைகளால் கவரப்பட்டு குருடானார். இவ்வாறாக தன் தம்பி மகன்களான பாண்டவர்களைக் கொல்வதற்காக அவர் அரக்கு மாளிகைக்கு தீ மூட்டினார்.
பதம் 3.1.7
யதா ஸபாயாம் குரு-தேவ-தேவ்யா:
கேசாபிமர்ஷம் ஸுத-கர்ம கர்ஹ்யம்
ந வாரயாம் ஆஸ ந்ருப ஸ்னுஷாயா:
ஸ்வாஸ்ரைர் ஹரந்த்யா: குச-குங்குமானி
யதா—அப்பொழுது; ஸபாயாம்—சபை; குரு-தேவ-தேவ்யா:—யுதிஷ்டிரரின் தெய்வீக மனைவியான திரௌபதியின்; கேச-அபிமர்சம்—அவளது கேசத்தைப் பற்றியதால் உண்டான அவமரியாதை; ஸுத-கர்ம—அவரது மகன்களின் நடவடிக்கை; கர்ஹ்யம்—வெறுக்கத்தக்கதான; ந—இல்லை; வாரயாம்-ஆஸ—தடுத்தார்; ந்ருப:—அரசர்; ஸ்னுஷாயா:—அவரது மருமகளின்; ஸ்வாஸ்ரை:—அவளது கண்ணீரால்; ஹரந்த்யா:—கழுவிய அவளுடைய; குச-குங்குமானி—அவளது ஸ்தனங்களிலிருந்த குங்குமத்தை.
புண்ணிய புருஷராகிய யுதிஷ்டிர மகாராஜனுடைய மனைவியான திரௌபதியின் கேசத்தை துச்சாதனன் பற்றி இழுத்ததால், அவளது ஸ்தனங்களிலிருந்த குங்குமம் அவளது கண்ணீரால் கரைந்தோடியது. எனினும் துச்சாதனனின் வெறுக்கத்தக்க அச்செயலை அரசர் தடுக்கவில்லை.
பதம் 3.1.8
த்யூதே து அதர்மேண ஜிதஸ்ய ஸாதோ:
ஸத்யாவலம்பஸ்ய வனம் கதஸ்ய
ந யாசதோ ‘தாத் ஸமயேன தாயம்
தமோ-ஜுஷாணோ யத் அஜாத-சத்ரோ:
த்யூதே—சூதாட்டத்தால்; து—ஆனால்; அதர்மேண—நியாயமற்ற தந்திரங்களால்; ஜிதஸ்ய—தோற்கடிக்கப்பட்டவரின்; ஸாதோ:—ஒரு சாது; ஸத்ய-அவலம்பஸ்ய—சத்தியத்தை அடைக்கலம் கொண்ட; வனம்—வனம்; கதஸ்ய—செல்பவரின்; ந—ஒருபோதும் இல்லை; யாசத:—கேட்டபொழுது; அதாத்—கொடுத்தார்; ஸமயேன—நாளடைவில்; தாயம்—உரிய பாகத்தை; தம:—ஜுஷாண:—மாயைக்கு அடிமைப்பட்டு; யத்—அவ்வாறே; அஜாத-சத்ரோ:—பகைவர் இல்லாதவரின்.
பகைவர் இல்லாமல் பிறந்தவரான யுதிஷ்டிரர், சூதாட்டத்தில் அநியாயமாக தோற்கடிக்கப்பட்டார். ஆனால் சத்திய விரதத்தை ஏற்றிருந்ததால் அவர் வனம் சென்றார். நாளடைவில் திரும்பி வந்த அவர், இராஜ்யத்தில் தமக்குச் சேர வேண்டிய பாகத்தை திருப்பிக் கொடுக்கும்படி வேண்டினார். ஆனால் மாயைக்கு அடிமைப்பட்டிருந்த திருதராஷ்டிரர் அதற்கு மறுத்து விட்டார்.
பதம் 3.1.9
யதா ச பார்த்த-ப்ரஹித: ஸபாயாம்
ஜகத்-குருர் யானி ஜகாத க்ருஷ்ண:
ந தானி பும்ஸாம் அம்ருதாயனானி
ராஜோரு மேனே க்ஷத-புண்ய-லேச:
யதா—எப்பொழுதும்; ச—தவிரவும்; பார்த்த-ப்ரஹித:—அர்ஜுனனால் அறிவுறுத்தப்பட்டு; ஸபாயாம்—சபையில்; ஜகத்-குரு:—ஜகத் குருவின்; யானி—அவர்கள்; ஜகாத—சென்றார்; க்ருஷ்ண:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ந—ஒருபோதும் இல்லை; தானி—அத்தகைய சொற்கள்; பும்ஸாம்—அறிவுள்ள அனைவருக்கும்; அம்ருத-அயனானி—அமுதமாய் விளங்கியது; ராஜா—அரசன் (திருராஷ்டிரர் அல்லது துரியோதனன்); உரு—மிகவும் முக்கியமாக; மேனே—கருதவில்லை; க்ஷத—தேய்ந்து போகும்; புண்ய-லேச:— இலேசான புண்ணியமும்.
அர்ஜுனனால், ஜகத் குருவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ராஜசபைக்கு தூதனுப்பப்பட்டார். அவரது வார்த்தைகள் (பீஷ்மரைப் போன்ற) சிலருக்குத் தூய அமுதமாக இருந்தபோதிலும், கடந்த புண்ணிய பலன்களை முற்றிலும் இழந்துவிட்ட மற்றவர்களுக்கு அது அப்படி இருக்கவில்லை. அரசன் (திருதராஷ்டிரர் அல்லது துரியோதனன்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
பதம் 3.1.10
யதோபஹூதோ பவனம் ப்ரவிஷ்டோ
மந்த்ராய ப்ருஷ்ட: கில பூர்வஜேன
அதாஹ தன் மந்த்ர த்ருசாம் வரீயான்
யன் மந்த்ரிணோ வைதுரிகம் வதந்தி
யதா—அப்பொழுது; உபஹூதா:—அழைக்கப்பட்டார்; பவனம்—அரண்மனைக்கு; ப்ரவிஷ்ட:—புகுந்தார்; மந்த்ராய—ஆலோசனை வழங்குவதற்காக; ப்ருஷ்ட:—கேட்கப்பட்டார்; கில—நிச்சயமாக; பூர்வஜேன—அவரது மூத்த சகோதரரால்; அத—இவ்வாறாக; ஆஹ—கூறினார்; தத்—அந்த; மந்த்ர—அறிவுரை; த்ருசாம்—சற்றே பொருத்தமான; வரீயான்—மிகச்சிறந்த; யத்—எதுவொன்று; மந்த்ரிண:—நாட்டு அமைச்சர்கள் அல்லது கைதேர்ந்த அரசியல்வாதிகள்; வைதுரிகம்—விதுரரால் அளிக்கப்பட்ட உபதேசங்கள்; வதந்தி—என்று அவர்கள் கூறுகின்றனர்.
இரகசிய ஆலோசனைக்காக தன் மூத்த சகோதரரால் (திருதராஷ்டிரர்) அழைக்கப்பட்டு அரண்மனை சென்ற விதுரர், சரியான ஆலோசனைகளை வழங்கினார். விதுரரின் உபதேசங்கள் பிரபலமானவையும், கைதேர்ந்த அமைச்சர்களால் ஏற்கப்பட்டவையுமாகும்.
பதம் 3.1.11
அஜாத-சத்ரோ: ப்ரதியச்ச தாயம்
திதிக்ஷதோ துர்விஷஹம் தவாக:
ஸஹாநுஜோ யத்ர வ்ருகோதராஹி:
ஸ்வஸன் ருஷா யத் த்வம் அலம் பிபேஷி
அஜாத-சத்ரோ:—பகைவரற்ற யுதிஷ்டிரரின்; ப்ரதியச்ச:—திருப்பிக் கொடுக்க வேண்டும்; தாயம்—உரிமையுள்ள பாகத்தை; திதிக்ஷத:—மிகவும் பொறுமைசாலியின்; துர்விஷஹம்—பொறுக்க முடியாத; தவ—உங்களுடைய; ஆக:—குற்றத்தை; ஸஹ—அதனுடன்; அனுஜ:—தம்பிகளின்; யத்ர—எங்கு; வ்ருகோதர—பீமன்; அஹி:—பழி தீர்க்கும் பாம்பு; ஸ்வஸன்—சீற்றத்துடன் சுவாசிக்கும்; ருஷா—கோபத்தால்; யத்—யாரை; த்வம்—நீங்கள்; அலம்—மிகவும்; பிபேஷி—அஞ்சுகிறீர்களோ.
(விதுரர் கூறினார்:) எதிரிகள் இல்லாதவரும் உங்களுடைய குற்றங்களினால் விளைந்த அளவிட முடியாத துன்பங்களை பொறுத்துக் கொண்டவருமான யுதிஷ்டிரருக்கு உரிமையுள்ள பாகத்தை இப்பொழுது நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அவர் தன் தம்பிகளுடன் காத்திருக்கிறார். அவர்களுக்கிடையில் பாம்பைப் போல் சீறிக்கொண்டு, பழிவாங்கும் எண்ணத்துடன் பீமனும் இருக்கிறார். அவரிடம் உங்களுக்கு அச்சமுண்டு என்பதில் சந்தேகமில்லை.
பதம் 3.1.12
பார்தாம்ஸ் து தேவோ பகவான் முகுந்தோ
க்ருஹீதவான் சக்ஷிதி-தேவ-தேவ:
ஆஸ்தே ஸ்வ-புர்யாம் யது-தேவ-தேவோ
வினிர்ஜிதாசேஷ-ந்ருதேவ-தேவ:
பார்த்தான்—பிருதாவின் (குந்தி) மகன்கள்; து—ஆனால்; தேவ:—பகவான்; பகவான்—பரமபுருஷர்; முகுந்த:—முக்தியளிப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; க்ருஹீதவான்—மேற்கொண்டுள்ளார்; ஸ—உடன்; க்ஷிதி-தேவ-தேவ:—பிராமணர்களும்; தேவர்களும்; ஆஸ்தே—இருக்கிறார்; ஸ்வ-புர்யாம்—அவரது குடும்பத்துடன்; யது-தேவ-தேவ:—யது வம்ச அரசர்களால் ஆராதிக்கப்படுகிறார்; வினிர்ஜித—தோற்கடிக்கப்பட்ட; அசேஷ—எண்ணற்ற; ந்ருதேவ—அரசர்கள்; தேவ:—பகவான்.
பரமபுருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களைத் தமது உறவினர்களாக ஏற்றுக் கொண்டுள்ளார். உலக மன்னர்களெல்லாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஆராதிக்கின்றனர். அவர் தமது குடும்ப அங்கத்தினர்களான, யது வம்ச அரசர்களுடனும், இளவரசர்களுடனும் தமது அரண்மனையில் வாழ்கிறார். எண்ணற்ற அரசர்களை வென்ற அவர்களுக்கு அவர்தான் பகவான்.
பதம் 3.1.13
ஸ ஏஷ தோஷ புருஷ-த்வித் ஆஸ்தே
க்ருஹான் ப்ரவிஷ்டோ யம் அபத்ய-மத்யா
புஷ்ணாஸி க்ருஷ்ணாத் விமுகோ கத-ஸ்ரீஸ்
த்யஜாஷ்வ் அசைவம் குல-கௌசலாய
ஸ:—அவன்: ஏஷ:—இந்த; தோஷ:—குற்றமே வடிவானவன்; புருஷ-த்வித்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடன் பொறாமை கொண்ட; ஆஸ்தே—வாழ்கிறீர்; க்ருஹான்—குடும்ப வாழ்வில்; ப்ரவிஷ்ட:—புகுந்து; யம்—யாரை; அபத்ய-மத்யா—உமது மகனென்று நினைத்து; புஷ்ணாஸி—பராமரிக்கிறீர்; க்ருஷ்ணாத்—கிருஷ்ணரிடமிருந்து; விமுக:—எதிரான நிலையில்; கத-ஸ்ரீ:—எல்லா மங்களங்களையும் இழந்தவனை; த்யஜ—கைவிடுங்கள்; ஆசு—உடனே; அசைவம்—அமங்களமான; குல—குடும்பத்தை; கௌசலாய—என்பதற்காக.
குற்றமே வடிவான துரியோதனனை உங்களுடைய நல்ல மகனென்றெண்ணி அவனை நீங்கள் உங்களுடைய மகனாகப் பராமரித்து வருகிறீர்கள். ஆனால் அவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் விரோதம் கொண்டவனாக இருக்கிறான். இவ்வாறாக கிருஷ்ண பக்தனல்லாத ஒருவனை நீங்கள் பராமரிப்பதால் சர்வ மங்களங்களையும் நீர் இழந்துவிட்டவராக இருக்கிறீர். இந்த துரதிர்ஷ்டமான நிலையிலிருந்து உடனே உங்களை விடுவித்துக் கொண்டு, உமது குடும்பத்திற்கு நன்மை செய்வீராக.
பதம் 3.1.14
இதி ஊசிவாம்ஸ் தத்ர ஸுயோதனேன
ப்ரவ்ருத்த-கோப-ஸ்ஃபுரிதாதரேண
அஸத்-க்ருத ஸத்-ஸ்ப்ருஹணீய-சீல
க்ஷத்தா ஸகர்ணானுஜ-ஸௌபலேன
இதி—இவ்வாறாக; ஊசிவான்—பேசும்பொழுது; தத்ர—அங்கு; ஸுயோதனேன—துரியோதனனால்; ப்ரவ்ருத்த-கோப—கோபம் பொங்க; ஸ்ஃபுரித—துடிக்க; அதரேண—உதடுகள்; அஸத்-க்ருத:—அவமானப்படுத்தினான்; ஸத்—மரியாதைக்குரிய; ஸ்ப்ருஹணீய-சீல:—விரும்பத்தக்க குணங்கள்; க்ஷத்தா—விதுரர்; ஸ—உடன்; கர்ண—கர்ணன்; அனுஜ—தம்பிகள்; ஸெளபலேன—சகுனியுடன்.
கற்றவர்களால் கண்ணியமுடையவராகக் கருதப்படும் விதுரர், இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்பொழுது, உதடுகள் துடிதுடிக்க, கோபம் பொங்கியவனாய் காணப்பட்ட துரியோதனன், அவரை அவமானப்படுத்தினான். துரியோதனுடன் அவனுடைய தம்பிமார்களும், கர்ணனும், அவனுடைய மாமனான சகுனியும் இருந்தனர்.
பதம் 3.1.15
க ஏனம் அத்ரோபஜுஹாவ ஜிஹ்மம்
தாஸ்யா ஸுதம் யத்-பலினைவ புஷ்த
தஸ்மின் ப்ரதீப பரக்ருத்ய ஆஸ்தே
நிர்வாஸ்யதாம் ஆசு புராச் ச்வஸான
க:—யார்; ஏனம்—இந்த; அத்ர—இங்கு; உபஜுஹாவ—அழைத்தது; ஜிஹ்மம்—கபடனை; தாஸ்யா:—தாசியின்; ஸுதம்—மகனை; யத்—யாருடைய; பலினா—யாருடைய பிச்சையால்; ஏவ—சந்தேகமின்றி; புஷ்ட:—வளர்ந்தானோ; தஸ்மின்—அவனை; ப்ரதீப:—விரோதம்; பரக்ருத்ய—எதிரியின் சிந்தனை; ஆஸ்தே—கொண்டுள்ள; நிர்வாஸ்யதாம்—அவனை வெளியேற்றுங்கள்; ஆசு—உடனடியாக; புராத்—அரண்மனையிலிருந்து: ஸ்வஸான:—உயிர் மட்டும் உடையவனாக.
இந்த தாசியின் மகனை இங்கு வரச் சொன்னது யார்? கபடனான இவன் யாருடைய பிச்சையால் வளர்ந்தானோ, அவர்களுக்கு எதிராகவே செயற்படுகிறான். உயிர் மட்டும் உடையவனாக அவனை உடனே அரண்மனையிலிருந்து வெளியேற்றுங்கள்.
பதம் 3.1.16
ஸ்வயம் தனுர் த்வாரி நிதாய மாயாம்
ப்ராது புரோ மர்மஸு தாடிதோ ‘பி
ஸ இத்தம் அத்யுல்பண-கர்ண-பாணைர்
கத-வ்யதோ ‘யாத் உரு மானயான:
ஸ்வயம்—தாமாகவே; தனு: த்வாரி—வில்லை வாயிலில்; நிதாய—வைத்துவிட்டு; மாயாம்—புற இயற்கையை; ப்ராது:—தமையனின்; புர:—அரண்மனையிலிருந்து; மர்மஸு—இதய மத்தியில்; தாடித:—தாக்கப்பட்ட; அபி—போதிலும்; ஸ:—அவர் (விதுரர்); இத்தம்—இதைப் போல்; அதி-உல்பண—கடுமையாக; கர்ண—செவி; பாணை:—அம்புகளால்; கத-வ்யத:—வருத்தப்படாமல்; அயாத்—தூண்டப்பட்டு; உரு—உயர்ந்தது; மானயான:—என்றெண்ணி.
இவ்வாறு காதுகளில் பாய்ந்த கொடிய சொல் அம்புகளால், இதயத்தில் தாக்கப்பட்ட போதிலும், விதுரர் மனம் கலங்காமல் வில்லை வாயிலில் வைத்துவிட்டு, தமையனின் அரண்மனையை விட்டு வெளியேறினார். புறச் சக்தியின் செயல்கள் மேலானவை என்று கருதிய அவர், அதற்காக வருத்தப்படவில்லை.
பதம் 3.1.17
ஸ நிர்கத கௌரவ-புண்ய-லப்தோ
கஜாஹ்வயாத் தீர்த்த-பத பதானி
அன்வாக்ரமத் புண்ய-சிகீர்ஷயோர்வ்யாம்
அதிஷ்டிதோ யானி ஸஹஸ்ர-மூர்த்தி
ஸ:—அவர் (விதுரர்); நிர்கத:—விட்டு வெளியேறியதும்; கௌரவ—குரு வம்சத்தின்; புண்ய—புண்ணியத்தை; லப்த:—அவ்வாறு அடைந்து; கஜ-ஆஹ்வயாத்—அஸ்தினாபுரத்திலிருந்து; தீர்த்த-பத—பரமபுருஷரின்; பதானி—தீர்த்த யாத்திரைகள்; அன்வாக்ரமத்—புகலிடம் கொண்டார்; புண்ய—புண்ணியத்தை; சிகீர்ஷயா—அவ்வாறு விரும்பி; உர்வ்யாம்—உயர்ந்த நிலையில்; அதிஷ்டித:—நிலைபெற்றார்; யானி—அவ்வெல்லா; ஸஹஸ்ர—ஆயிரக்கணக்கான; மூர்த்தி:—விக்ரஹங்கள்.
விதுரர் தமது பக்தியினால், புண்ணியமுள்ள கௌரவர்கள் பெற்ற நற்பயன்களைத் தானும் பெற்றார். அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறியபின், பகவானின் தாமரைப் பாதங்களாக விளங்கும் பல புண்ணிய ஸ்தலங்களை அவர் தஞ்சமடைந்தார். பக்தி வாழ்வின் மிகவுயர்ந்த நிலையை அடையும் விருப்பத்துடன் பகவான் ஆயிரக்கணக்கான திவ்ய ரூபங்களில் எங்கெங்கு கோயில் கொண்டுள்ளாரோ, அப்புனித ஸ்தலங்களுக்கெல்லாம் அவர் யாத்திரை செய்தார்.
பதம் 3.1.18
புரேஷு புண்யோபவனாத்ரி-குஞ்சேஷு
அபங்க-தோயேஷு ஸரித்-ஸரஹ்ஸு
அனந்த-லிங்கை: ஸமலங்க்ருதேஷு
சசார தீர்த்தாயதனேஷ்வ் அனன்ய:
புரேஷு—அயோத்யா, துவாரகை மற்றும் மதுரா போன்ற புண்ணிய ஸ்தலங்கள்; புண்ய—புண்ணியம்; உபவன—காற்று; அத்ரி—குன்று; குஞ்சேஷு—பழத்தோட்டங்களில்; அபங்க—பாவமற்ற; தோயேஷு—நீரில்; ஸரித்—நதி; ஸரஹ்ஸு—ஏரிகள்; அனந்த-லிங்கை:—எல்லையற்றவரின் வடிவங்கள்; ஸமலங்க்ருதேஷு—அவ்வாறு அலங்கரிக்கப்பட்டு; சசார—நிறைவேற்றினார்; தீர்த்த—தீர்த்த யாத்திரை ஸ்தலங்கள்; ஆயதனேஷு—புண்ணிய ஸ்தலங்கள்; அனன்ய:—தனியாக அல்லது கிருஷ்ணரைத் தனிமையில் தரிசித்து.
அவர் சதா கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டு, அயோத்யா, துவாரகை மற்றும் மதுரா போன்ற பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு தனியாக யாத்திரை செல்லத் துவங்கினார். இவ்வாறாக காற்று, குன்று, பழத்தோட்டம், நதி மற்றும் ஏரி ஆகியவை பாவமில்லாமல் தூய்மையாக உள்ள இடங்களுக்கும், எல்லையற்றவரின் திருவிக்கிரகங்கள் ஆலயங்களை அலங்கரிக்கும் இடங்களுக்கும், அவர் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு முன்னேறிச் சென்றார்.
பதம் 3.1.19
காம் பர்யடன் மேத்ய-விவிக்த-வ்ருத்தி
ஸதாப்லுதோ ‘த சயனோ ‘வதூத
அலக்ஷித ஸ்வைர் அவதூத-வேஷோ
வ்ரதானி சேரே ஹரி-தோஷணானி
காம்—பூமி; பர்யடன்—கடந்து செல்லும்; மேத்ய—தூய; விவிக்த-வ்ருத்தி:—வாழ்வுக்குரிய சுதந்திரமான கடமை; ஸதா—எப்பொழுதும்; ஆப்லுத:—புனிதமான; அத:—பூமியில்; சயன:—படுத்து; அவதூத:—சிகையை வாருதல் போன்றவை இல்லாமல்; அலக்ஷித:—காணப்படாமல்; ஸ்வை:— தனியாக; அவதூத-வேஷ:— துறவி போல் உடையணிந்து; வ்ரதானி—விரதங்களை; சேரே—மேற்கொண்டார்; ஹரி-தோஷணானி—பகவானை திருப்திப்படுத்திய.
இவ்வாறு பூமியில் சஞ்சரித்து வரும் வேளையில், பரமபுருஷரான ஹரியை மகிழ்விக்கும் கடமைகளை மட்டுமே அவர் செய்து வந்தார். அவரது கடமைகள் தூயவையாகவும், சுதந்திரமானவையாகவும் இருந்தன. அவர் சிகையை வாராமலும், உறங்குவதற்குப் படுக்கை இல்லாமலும், ஒரு துறவியைப்போல் உடை அணிந்து காணப்பட்ட போதிலும் புண்ணிய தீர்த்த ஸ்தலங்களில் நீராடுவதன் மூலம் எப்பொழுதும் புனிதமடைந்தவராகவே காணப்பட்டார். இவ்வாறாக அவரது பற்பல உறவினர்களால் காணப்படாதவராக இடையறாது சஞ்சரித்து வந்தார்.
பதம் 3.1.20
இத்தம் வ்ரஜன் பாரதம் ஏவ வர்ஷம்
காலேன யாவத் கதவான் ப்ரபாஸம்
தாவச் சசாஸ க்ஷிதிம் ஏக-சக்ராம்
ஏகாதபத்ராம் அஜிதேன பார்த்த
இத்தம்—இவ்வாறு; வ்ரஜன்—பிரயாணம் செய்யும் பொழுதும்; பாரதம்—இந்தியா; ஏவ—மட்டுமே; வர்ஷம்—நிலப்பரப்பு; காலேன—காலப்போக்கில்; யாவத்—எப்பொழுது; கதவான்—காணச் சென்றார்; ப்ரபாஸம்—ப்ராபாஸம் என்ற தீர்த்த யாத்திரை ஸ்தலத்தை; தாவத்—அப்பொழுது; சசாஸ—ஆண்டு வந்தார்; க்ஷிதிம்—உலகை; ஏக-சக்ராம்—ஒரே படைபலத்தால்; ஏக—ஒரு; ஆதபத்ராம்—கொடி; அஜிதேன—வெல்லப்பட முடியாதவரான ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால்; பார்த்த:—யுதிஷ்டிர மகாராஜன்.
இவ்வாறாக, பாரத பூமியில் தீர்த்தயாத்திரையை மேற்கொண்டிருந்த அவர், பிரபாஸ க்ஷேத்திரத்திற்குச் சென்றார். அப்பொழுது உலகச் சக்கரவர்த்தியாக இருந்த யுதிஷ்டிர மகாராஜன், ஒரே படைபலத்தைக் கொண்டு ஒரு கொடியின் கீழ் உலகை ஆண்டு வந்தார்.
பதம் 3.1.21
தத்ராத சுஸ்ராவ ஸுஹ்ருத்-வினஷ்டிம்
வனம் யதா வேணுஜ-வஹ்னி-ஸம்ஸ்ரயம்
ஸம்ஸ்பர்தயா தக்தம் அதானுசோசன்
ஸரஸ்வதீம் ப்ரத்யக் இயாய தூஷ்ணீம்
தத்ர—அங்கு; அத—அதன்பிறகு; சுஸ்ராவ—கேள்விப்பட்டார்; ஸுஹ்ருத்—உறவினர்கள்; வினஷ்டிம்—எல்லோரும் இறந்து விட்டதாக; வனம்—காடு; யதா—போலவே; வேணுஜ-வஹ்னி—மூங்கில்களால் உண்டான தீ; ஸம்ஸ்ரயம்—ஒன்றோடொன்று உராய்ந்த; ஸம்ஸ்பர்தயா—முரட்டுத்தனத்தினால்; தக்தம்—எரிந்து; அத—இவ்வாறு; அனுசோசன்—என்றெண்ணி; ஸரஸ்வதீம்—சரஸ்வதி நதி; ப்ரத்யக்—மேற்குப் புறம்; இயாய—சென்றார்; தூஷ்ணீம்—மௌனமாக.
தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு பிரபாஸம் என்ற தலத்திற்கு அவர் வந்தார். அங்கு, மூங்கில்களின் உராய்வினால் உண்டாகும் தீ ஒரு காடு முழுவதையும் எரித்து விடுவதைப் போலவே, முரட்டுத்தனத்தினால் தன் உறவினர்கள் அனைவரும் மடிந்ததை அவர் கேள்விப்பட்டார். பிறகு அவர் சரஸ்வதி நதியோரம் மேற்குப் புறத்தை நோக்கிச் சென்றார்.
பதம் 3.1.22
தஸ்யாம் த்ரிதஸ்யோசநஸோ மனோஸ் ச
ப்ருதோர் அதாக்னேர் அஸிதஸ்ய வாயோ:
தீர்த்தம் ஸுதாஸஸ்ய கவாம் குஹஸ்ய
யச் ச்ராத்ததேவஸ்ய ஸ ஆஸிஷேவே
தஸ்யாம்—சரஸ்வதி நதிக்கரையில்; த்ரிதஸ்ய—த்ரிதம் என்ற தீர்த்த ஸ்தலம்; உசநஸ:—உசனம் என்ற யாத்திரை ஸ்தலம்; மனோ:-ச—அதைப்போலவே மனு என்ற யாத்திரை ஸ்தலமும்; ப்ருதோ:—பிருது என்ற; அத—அதன்பிறகு; அக்னே:—அக்னி என்ற; அஸிதஸ்ய—அஸிதம் என்ற; வாயோ:—வாயு என்ற; தீர்த்தம்—தீர்த்த ஸ்தலங்கள்; ஸுதாஸஸ்ய—ஸுதாஸம் என்ற; கவாம்—கோ என்ற; குஹஸ்ய—குஹம் என்ற; யத்—அதன்பின்; ச்ராத்ததேவஸ்ய—சிராத்ததேவம் என்ற; ஸ:—விதுரர்; ஆஸிஷேவே—முறையாக தரிசித்து கடமைகளை நிறைவேற்றினார்.
சரஸ்வதி நதிக் கரையில் பதினோரு தீர்த்த யாத்திரை ஸ்தலங்கள் உள்ளன. அவை, 1. திரிதம், 2. உசனா, 3. மனு, 4. பிருது, 5. அக்னி, 6. அஸிதம், 7. வாயு, 8. சுதாஸம், 9. கோ, 10. குஹம் மற்றும் 11. சிராத்ததேவம். விதுரர் அத்தீர்த்த ஸ்தலங்களை எல்லாம் தரிசித்து, முறையாக தம் கடமைகளை நிறைவேற்றினார்.
பதம் 3.1.23
அன்யானி சேஹ த்விஜ-தேவ-தேவை:
க்ருதானி நானாயதனானி விஷ்ணோ:
ப்ரத்யங்க-முக்யாங்கித-மந்திராணி
யத்-தர்சனாத் கிருஷ்ணம் அனுஸ்மரந்தி
அன்யானி—மற்றவைகள்; ச—கூட; இஹ—இங்கு; த்விஜ-தேவ—மாமுனிவர்களால்; தேவை:—தேவர்களாலும்; க்ருதானி—ஸ்தாபிக்கப்பட்ட; நானா—பலவகைப்பட்ட; ஆயதனானி—அநேக ரூபங்கள்; விஷ்ணோ:—பரமபுருஷரின்; ப்ரதி—ஒவ்வொரு; அங்க—அங்கமும்; முக்ய—முக்கிய; அங்கித—பொறிக்கப்பட்டிருந்தன; மந்திராணி—ஆலயங்கள்; யத்—எது; தர்சனாத்—தூரத்திலிருந்து காண்பதாலேயே; க்ருஷ்ணம்—மூல முழுமுதற் கடவுளை; அனுஸ்மரந்தி—இடையறாது சிந்திக்கிறார்.
மாமுனிவர்களாலும் தேவர்களாலும் நிறுவப்பட்டவையும், பரம புருஷரான விஷ்ணுவின் அநேக ரூபங்களைக் கொண்டவையுமான வேறு பல ஆலயங்களும் கூட அங்கு இருந்தன. இந்த ஆலயங்கள் பகவானின் முக்கிய சின்னங்களால் பொறிக்கப்பட்டு இருந்தன. அவை, மூல முழுமுதற்கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே எப்பொழுதும் ஒருவருக்கு நினைவூட்டின.
பதம் 3.1.24
ததஸ் த்வ் திவ்ரஜ்ய ஸுராஷ்ட்ரம் ருத்தம்
ஸௌவீர-மத்ஸ்யான் குருஜாஸங்கலாம்ஸ் ச
காலேன தாவத் யமுனாம் உபேத்ய
தத்ரோத்தவம் பாகவதம் ததர்ச
தத:—அங்கிருந்து; து—ஆனால்; அதிவ்ரஜ்ய—கடந்து சென்று; ஸுராஷ்ட்ரம்—சுரத் பிரதேசம்; ருத்தம்—செல்வம் கொழிக்கும்; ஸௌவீர—சௌவீர பிரதேசம்; மத்ஸ்யான்—மத்ஸ்ய பிரதேசம்; குருஜாங்கலான்—டில்லி மாகாணம் வரையுள்ள மேற்கிந்திய பிரதேசம்; ச—மேலும்; காலேன—காலப்போக்கில்; தாவத்—உடனே; யமுனாம்—யமுனை நதி கரையை; உபேத்ய—அடைந்து; தத்ர—அங்கு; உத்தவம்—முக்கிய யது வம்சத்தினருள் ஒருவரான உத்தமர்; பாகவதம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தர்; ததர்ச—காண நேர்ந்தது.
அதன்பிறகு செல்வம் கொழிக்கும் சுரத், சௌவீரம் மற்றும் மத்ஸ்யம் என்ற மாகாணங்களையும், குருஜாங்கலம் எனப்படும் மேற்கத்திய மாகாணத்தையும் கடந்து சென்ற அவர், இறுதியாக யமுனைக் கரையை அடைந்தார். அங்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச் சிறந்த பக்தரான உத்தவரை எதிர்பாராமல் சந்தித்தார்.
பதம் 3.1.25
ஸ வாஸுதேவானுசரம் ப்ரசாந்தம்
ப்ருஹஸ்பதே: ப்ராக் தனயம் ப்ரதீதம்
ஆலிங்ய காடம் ப்ரணயேன பத்ரம்
ஸ்வானாம் அப்ருச்சத் பகவத்-ப்ரஜானாம்
ஸ:—அவர் (விதுரர்); வாஸுதேவ—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; அனுசரம்—நித்திய தோழர்; ப்ரசாந்தம்—சாந்தமும், மரியாதையும் உள்ள; ப்ருஹஸ்பதே:—தேவ குருவான பிருகஸ்பதியின்; ப்ராக்—முன்பு; தனயம்—மகன் அல்லது சீடர்; ப்ரதீதம்—சேவையைப் போற்றினார்; ஆலிங்ய—ஆலிங்கனம் செய்து; காடம்—உணர்ச்சியுடன்; ப்ரணயேன—அன்பால்; பத்ரம்—மங்களம்; ஸ்வானாம்—அவரது சொந்த; அப்ருச்சத்—வினவினார்; பகவத்—பரமபுருஷரின்; ப்ரஜானாம்—குடும்பத்தை.
பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நித்திய தோழரும், முன்பு பிருகஸ்பதியின் சிறந்த மாணவருமான அவரை (உத்தவரை), உணர்ச்சி பொங்க, பேரன்புடன் விதுரர் தழுவிக் கொண்டார். பிறகு விதுரர் பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணரின் குடும்பத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தார்.
பதம் 3.1.26
கச்சித் புராணெள புருஷௌ ஸ்வநாப்ய
பாத்மானுவ்ருத்யேஹ கிலாவதீர்ணௌ
ஆஸாத உர்வ்யா: குசலம் விதாய
க்ருத-க்ஷணௌ குசலம் சூர-கேஹே
கச்சித்—உள்ளனரா; புராணௌ—மூல; புருஷௌ—முழுமுதற் கடவுள்கள் (கிருஷ்ணரும், பலராமரும்); ஸ்வநாப்ய—பிரம்மா; பாத்ம அனுவ்ருத்யா—தாமரையிலிருந்து பிறந்தவரின் வேண்டுகோளின்படி; இஹ—இங்கு; கில—சந்தேகமின்றி; அவதீர்ணௌ—அவதரித்துள்ள; ஆஸாதே—உள்ளனர்; உர்வ்யா:—உலகில்; குசலம்—நலனை; விதாய—அப்படிச் செய்ததற்காக; க்ருத-க்ஷணெள—அனைவரின் செழிப்பையும் வளரச் செய்பவர்கள்; குசலம்—அனைவரும் நன்றாக; சூர-கேஹே—சூரசேனரின் அரண்மனையில்.
(பகவானின் நாபிக் கமலத்திலிருந்து பிறந்தவரான) பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவதரித்தவர்களும், அனைவரையும் உயர்த்தி உலக ஐசுவரியத்தைச் செழிப்படையச் செய்தவர்களுமான மூல முழுமுதற் கடவுள்கள், சூரசேனரின் அரண்மனையில் நலமாக உள்ளனரா (என்று கூற வேண்டுகிறேன்).
பதம் 3.1.27
கச்சித் குரூணாம் பரம: ஸுஹ்ருன் நோ
பாம ஸ ஆஸ்தே ஸுகம் அங்க சௌரி:
யோ வை ஸ்வஸ்ரூணாம் பித்ருவத் ததாதி
வரான் வதான்யோ வர-தர்பணேன
கச்சித்—இருக்கிறாரா; குரூணாம்—குருக்களின்; பரம:—மிகச்சிறந்த; ஸுஹ்ருத்—நண்பர்; ந:—நமது; பாம:—மைத்துனர்; ஸ:—அவர்; ஆஸ்தே—இருக்கிறார்; ஸுகம்—மகிழ்ச்சியுடன்; அங்க—உத்தவா; ஸௌரி:—வசுதேவர்; ய:—அவர்; வை—நிச்சயமாக; ஸ்வஸ்ரூணாம்—சகோதரிகளின்; பித்ரு-வத்—ஒரு தந்தை போல்; ததாதி—அளிக்கிறார்; வரான்—விரும்பத்தக்கதை எல்லாம்; வதான்ய:—உதார குணமுள்ளவர்; வர—மனைவி; தர்பணேன—மகிழ்விப்பதன் மூலம்.
குருக்களின் மிகச் சிறந்த நண்பரும், உதார குணமுள்ளவரும், தம் சகோதரிகளுக்கு ஒரு தந்தையைப் போன்றவரும், தம் மனைவிகளை எப்பொழுதும் மகிழ்ச்சிப்படுத்துபவருமான என் மைத்துனர் நலமா?
பதம் 3.1.28
கச்சித் வரூதாதிபதிர் யதூனாம்
ப்ரத்யும்ன ஆஸ்தே ஸுகம் அங்க வீர:
யம் ருக்மிணீ பகவதோ ‘பிலேபே
ஆராத்ய விப்ரான் ஸ்மரம் ஆதி-ஸர்கே
கச்சித்—இருக்கிறாரா; வரூத—படைப் பிரிவின்; அதிபதி:—சேனாதிபதி; யதூனாம்—யதுக்களின்; ப்ரத்யும்ன:—கிருஷ்ணரின் புத்திரரான பிரதியும்னர்; ஆஸ்தே—இருக்கிறார்; ஸுகம்—மகிழ்ச்சியுடன்; அங்க—உத்தவரே; வீர:—மகாவீரரான; யம்—யாரை; ருக்மிணீ—கிருஷ்ணரின் மனைவியான ருக்மிணி; பகவத:—பரமபுருஷரிடமிருந்து; அபிலேபே—ஒரு பரிசாகப் பெற்றார்; ஆராத்ய—மகிழ்வித்து; விப்ரான்—பிராமணர்களை; ஸ்மரம்—காமதேவன்; ஆதி-ஸர்கே—அவரது முற்பிறவியில்.
உத்தவா, யதுக்களின் சேனாதிபதியும், முற்பிறப்பில் காம தேவனாக இருந்தவருமான பிரதியும்னர் நலமா? பிராமணர்களை திருப்திப்படுத்திய ருக்மிணி, அவர்களின் ஆசியால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மூலமாக அவரை புத்திரனாகப் பெற்றாள்.
பதம் 3.1.29
கச்சித் ஸுகம் ஸாத்வத-வ்ருஷ்ணி-போஜ
தாசார்ஹகாணாம் அதிப ஸ ஆஸ்தே
யம் அப்யஷிஞ்சச் சத-பத்ர-நேத்ரோ
ந்ருபாஸனாசாம் பரிஹ்ருத்ய தூராத்
கச்சித்—இருக்கிறார்களா; ஸுகம்—நலமாக; ஸாத்வத—சாத்வத இனம்; வ்ருஷ்ணி—விருஷ்ணி வம்சம்; போஜ—போஜ வம்சம்; தாசார்ஹகாணாம்—தாசார இனம்; அதிப:—உக்ரசேன மகாராஜன்; ஸ:—அவர்; ஆஸ்தே—இருக்கிறார்; யம்—யாரை; அப்யஷிஞ்சத்—அரியாசனத்தில் அமர்த்தினார்; சத-பத்ர-நேத்ர:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ந்ருப-ஆஸன-ஆசாம்—அரியாசனத்தில் அமரும் நம்பிக்கையை; பரிஹ்ருத்ய—கைவிட்டு; தூராத்—தூரமான ஒரிடத்தில்.
நண்பனே, சாத்வத, விருஷ்ணி, போஜ மற்றும் தாசார வம்சத்தினரின் அரசரான உக்ரசேனர் நலமா? அவர் அரியாசனத்தில் அமரும் நம்பிக்கையையே இழந்து, தமது இராஜ்யத்திலிருந்து வெகு தூரம் சென்ற போதிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் அரியாசனத்தில் அமர்த்தினார்.
பதம் 3.1.30
கச்சித் ஹரே: சௌம்ய ஸுத: ஸத்ருக்ஷ
ஆஸ்தே ‘க்ரணீ ரதினாம் ஸாது ஸாம்ப:
அஸூத யம் ஜாம்பவதீ வ்ரதாட்யா
தேவம் குஹம் யோ ‘ம்பிகயா த்ருதோ ‘க்ரே
கச்சித்—இருக்கிறாரா; ஹரே:—பரமபுருஷரின்; ஸௌம்ய—பொறுப்பு மிக்கவரே; ஸுத:—புத்திரர்; ஸத்ருக்ஷ:—ஒத்த; ஆஸ்தே—நலமா; அக்ரணீ:—முதன்மையான; ரதினாம்—போர் வீரர்களில்; ஸாது—நற்குணமுள்ள; ஸாம்ப:—சாம்பன்; அஸூத—ஈன்ற; யம்—யாரை; ஜாம்பவதீ—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு ராணியான ஜாம்பவதி; வ்ரதாட்யா—நோன்பு வளமுடைய; தேவம்—தேவர்; குஹம்—கார்த்திகேயன் என்ற; ய:—யாரை; அம்பிகயா—சிவனுடைய மனைவிக்கு ; த்ருத:—பிறந்த; அக்ரே—முற்பிறப்பில்.
நற்குணவானே, சாம்பன் நலமா? அவர் பரமபுருஷரின் புத்திரரை ஒத்திருக்கிறார். முற்பிறப்பில் சிவபெருமானுடைய மனைவியின் கர்ப்பத்தில் கார்த்திகேயனாகப் பிறந்த அவர், இப்பொழுது, கிருஷ்ணரின் நோன்பு வளமுடைய மனைவியான ஜாம்பவதியின் கர்ப்பத்தில் பிறந்திருக்கிறார்.
பதம் 3.1.31
க்ஷேமம் ஸ கச்சித் யுயுதான ஆஸ்தே
ய: பால்குனால் லப்த-தனூ-ரஹஸ்ய:
லேபே ‘ஞ்ஜஸாதோக்ஷஜ-ஸேவயைவ
கதிம் ததீயாம் யதிபிர் துராபாம்
க்ஷேமம்—சர்வ நன்மை; ஸ:—அவர்; கச்சித்—இருக்கிறாரா; யுயுதான:—சாத்யகி; ஆஸ்தே—இருக்கிறார்; ய:—அவர்; ஃபால்குனாத்—அர்ஜுனனிடமிருந்து; லப்த—அடைந்துள்ளார்; தனு:-ரஹஸ்ய:—யுத்த இரகசியங்களை அறிபவர்; லேபே:—அதையும் அடைந்துள்ளார்; அஞ்சஸா—சுருக்கமாக; அதோக்ஷஜ—பகவானின்; ஸேவயா—சேவையால்; ஏவ—நிச்சயமாக; கதிம்—கதியை; ததீயாம்—உன்னத; யதிபி:—சிறந்த துறவிகளால்; துராபாம்—அடைவதற்கு மிகக் கஷ்டமான.
உத்தவா, அர்ஜுனனிடமிருந்து போர் நுணுக்கங்களைக் கற்றவரும், பெருந் துறவிகளாலும் அடையப்படுவதற்கு மிகக் கடினமான உன்னத கதியை அடைந்தவருமான யுயுதானன் நலமா?
பதம் 3.1.32
கச்சித் புத ஸ்வஸ்தி அனமீவ ஆஸ்தே
ஸ்வஃபல்க-புத்ரோ பகவத்-ப்ரபன்ன:
ய: க்ருஷ்ண-பாதாங்கித-மார்க-பாம்ஸுஷ்வ்
அசேஷ்டத ப்ரேம-விபின்ன-தைர்ய:
கச்சித்—இருக்கிறாரா; புத:—புத்திமான்; ஸ்வஸ்தி—நலம்; அனமீவ:—குற்றமற்ற; ஆஸ்தே:—இருக்கிறார்; ஸ்வஃபல்க-புத்ர:—சுபல்கரின் புத்திரரான அக்ரூரர்; பகவத்—பரம புருஷரின் தொடர்பான; ப்ரபன்ன:—சரணடைந்துள்ள; ய:—அவர்; க்ருஷ்ண—கிருஷ்ண பகவான்; பாத-அங்கித—பாதச்சுவடுகளால் பொறிக்கப்பட்ட; மார்க—வழி; பாம்ஸுஷூ—துசியில்; அசேஷ்டத—வெளிப்படுத்தினார்; ப்ரேம-விபின்ன—உன்னத பிரேமையில் ஆழ்ந்து; தைர்ய:—சமத்துவமான மனநிலை.
பரமபுருஷரிடம் சரணாகதி அடைந்த ஆத்மாவும், சுபல்கரின் புத்திருமான அக்ரூரர் நலமா? ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அடிச்சுவடுகள் தெருப் புழுதியில் பதிந்து கிடப்பதைக் கண்ட அவர் ஆனந்தப் பரவசத்தினால் மூர்ச்சித்து தரையில் விழுந்தார்.
பதம் 3.1.33
கச்சித் சிவம் தேவக-போஜ-புத்ரயா
விஷ்ணு-ப்ரஜாயா இவ தேவ-மாது:
யா வை ஸ்வ-கர்பேண ததார தேவம்
த்ரயீ யதா யக்ஞ-விதானம் அர்த்தம்
கச்சித்—இருக்கிறாளா? சிவம்—எல்லாம் நலம்; தேவக-போஜ-புத்ரயா:—தேவக-போஜ மகாராஜனுடைய மகளின்; விஷ்ணு-ப்ரஜாயா:—பரமபுருஷரைப் பெற்றெடுத்த அவளின்; இவ—அதைப்போன்ற; தேவ-மாது:—தேவர்களுடைய தாயின் (அதிதி); யா—அவள்; வை—உண்மையில்; ஸ்வ-கர்பேண—அவளது சொந்த கர்ப்பத்தில்; ததார—கருவுற்றாள்; தேவம்—பரமபுருஷரை; த்ரயீ—வேதங்கள்; யதா—அவ்வாறே; யக்ஞ-விதானம்—யாகத்தைப் பரப்புவதன்; அர்த்தம்—நோக்கம்.
வேதங்கள் யாக நோக்கங்களுக்குரிய களஞ்சியமாக விளங்குகின்றன. அதைப்போலவே, தேவர்களின் தாயைப் போல் தேவக-போஜ மகாராஜனின் மகளும் பரமபுருஷரை தன் கர்ப்பத்தால் கருவுறச் செய்தாள். அவள் (தேவகி) நலமா?
பதம் 3.1.34
அபிஸ்வித் ஆஸ்தே பகவான் ஸுகம் வோ
ய: ஸாத்வதாம் காம-துகோ ‘நிருத்த:
யம் ஆமனந்தி ஸ்ம ஹி சப்த-யோனிம்
மனோ-மயம் ஸத்வ-துரீய-தத்வம்
அபி—அவ்வாறே; ஸ்வித்—இருக்கிறாரா; ஆஸ்தே—அவர் உள்ளார்; பகவான்—பரமபுருஷர்; ஸுகம்—சர்வ ஆனந்தம்; வ:—உன்னிடமிருந்து; ய:—யாரொருவர்; ஸாத்வதாம்—பக்தர்களின்; காம-துக:—எல்லா ஆசைகளுக்கும் மூலம்; அனிருத்த:—பூரண விரிவங்கமான அனிருத்தர்; யம்—யாரை; ஆமனந்தி—அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்; ஸ்ம—பண்டைக் காலத்திலிருந்து; ஹி—நிச்சயமாக; சப்த-யோனிம்—ரிக் வேதத்தின் பிறப்பிடம்; மன:-மயம்—மனதைப் படைத்தவர்; ஸத்வ—உன்னத ; துரீய—நான்காவது விரிவங்கம்; தத்வம்—தத்துவம்.
தூய பக்தர்களின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுபவரும், பழங்காலத்திலிருந்து ரிக் வேதத்திற்குக் காரணமானவர் என கருதப்படுபவரும், மனதை சிருஷ்டித்தவரும், விஷ்ணுவின் நான்காவது விரிவங்கமுமான அனிருத்தர் நலமா?
பதம் 3.1.35
அபிஸ்வித் அன்யே ச நிஜாத்ம-தைவம்
அனன்ய-வ்ருத்யா ஸமனுவ்ரதா யே
ஹ்ருதீக-ஸத்யாத்மஜ-சாரூதேஷ்ண
கதாதய: ஸ்வஸ்தி சரந்தி செளம்ய
அபி—அதைப்போலவே: ஸ்வித்—இருக்கிறார்களா; அன்யே—மற்றவர்கள்; ச—மேலும்; நிஜ-ஆத்ம—ஒருவரது சொந்த ஆத்மாவின்; தைவம்—ஸ்ரீ கிருஷ்ணர்; அனன்ய—பரிபூரணமாக; வ்ருத்யா—நம்பிக்கை; ஸமனுவ்ரதா:—பின்பற்றுபவர்கள்; யே—ஆகிய அனைவரும்; ஹ்ருதீகா—இருதீகன்; ஸத்ய-ஆத்மஜ—சத்யபாமாவின் புதல்வர்; சாருதேஷ்ண—சாருதேஷ்ணர்; கத—கதன்; ஆதய:—முதலானவர்கள்; ஸ்வஸ்தி—அனைவரும் நலமாக; சரந்தி—நாட்களைக் கழிக்கிறார்கள்; சௌம்ய—சாந்தமானவரே.
சாந்தமானவரே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே தங்களுடைய ஆத்மாவாக ஏற்றுக் கொண்டவர்களும், தவறாமல் அவரது வழியைப் பின்பற்றுபவர்களுமான இருதீகன், சாருதேஷ்ணர், கதன், மற்றும் சத்யபாமாவின் புதல்வர் முதலான மற்றவர்கள் நலமா?
பதம் 3.1.36
அபிஸ்வ-தோர்ப்யாம் விஜயாச்யுதாப்யாம்
தர்மேண தர்ம: பரிபாதி ஸேதும்
துர்யோதனோ ‘தப்யத யத்-ஸபாயாம்
ஸாம்ராஜ்ய-லக்ஷ்ம்யா விஜயானுவ்ருத்யா
அபி—அவ்வாறே; ஸ்வ-தோர்ப்யாம்—சொந்த கரங்கள்; விஜய—அர்ஜுனன்; அச்யுதாப்யாம்—ஸ்ரீ கிருஷ்ணருடன்; தர்மேண—சமயக் கோட்பாடுகளின்படி; தர்ம:—யுதிஷ்டிர மகாராஜன்; பரிபாதி—பரிபாலிக்கிறார்; ஸேதும்—சமய மரியாதை; துர்யோதன:—துரியோதனன்; அதப்யத—பொறாமை கொண்ட; யத்—யாருடைய; ஸபாயாம்—ராஜ சபை; ஸாம்ராஜ்ய—சாம்ராஜ்யம்; லக்ஷ்ம்யா—ஐசுவரியம்; விஜய-அனுவ்ருத்யா—அர்ஜுனனின் சேவையால்.
மேலும், சமயக் கோட்பாடுகளுக்கேற்ப யுதிஷ்டிர மகாராஜன் இப்பொழுது இராஜ்யத்தைப் பரிபாலிக்கிறாரா என்பதைப் பற்றியும் நான் கேள்வியெழுப்ப விரும்புகிறேன். கிருஷ்ணரும், அர்ஜுனனும் யுதிஷ்டிரரின் இரு கரங்களைப் போலிருந்து அவரைப் பாதுகாத்து வந்ததால், துரியோதனன் முன்பு பொறாமைத் தீயில் கருகிக்கொண்டிருந்தான்.
பதம் 3.1.37
கிம் வா க்ருதாகேஷ்வ் அகம் அத்யமர்ஷீ
பீமோ ‘ஹிவத் தீர்கதமம் வ்யமுஞ்சத்
யஸ்யாங்ரி-பாதம் ரண-பூர் ந ஸேஹே
மார்கம் கதாயாஸ் சரதோ விசித்ரம்
கிம்—இருக்கிறானா; வா—அல்லது; க்ருத—செய்தான்; அகேஷு—பாவிகளிடம்: அகம்—கோபம் கொண்ட; அதி-அமர்ஷீ—வெல்ல முடியாத; பீமா:— பீமன்; அஹி-வத்—ஒரு நாகத்தைப் போல்; தீர்க-தமம்—நீண்ட காலமாக வைத்துக் காப்பாற்றி வந்த; வ்யமுஞ்சத்—விட்டுவிட்டான்; யஸ்ய—யாருடைய; அங்ரி-பாதம்—அடி வைத்த; ரண–பூ:—போர்க்களம்; ந—முடியவில்லை; ஸேஹே—பொறுக்க; மார்கம்—வழி; கதாயா:—கதாயுதங்களால்; சரத—ஆடும்; விசித்ரம்—விசித்திரமாக.
வெல்ல முடியாதவனான, நாகம் போன்ற பீமன், பாவிகளின் நீண்ட நாள் விரோதத்தை பழிதீர்த்துக் கொண்டானா? போர்க்களத்தில் பீமன் அடியெடுத்து வைத்தபொழுது அவனுடைய கதாயுதத்தின் அற்புதமான சுழற்சியைக்கூட எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பதம் 3.1.38
கச்சித் யசோதா ரத-யூதபானாம்
காண்டீவ-தனுவோபரதாரீர் ஆஸ்தே
அலக்ஷிதோ யச்-சர-கூட-கூடோ
மாயா-கிராதோ கிரசஸ் துதோஷ
கச்சித்—இருக்கிறானா; யச:-தா—பிரபலமான; ரத-யூதபானாம்—சிறந்த ரத வீரர்களுக்கு இடையில்; காண்டீவ—காண்டீவம்; தன்வா—வில்; உபரத-அரி:—எதிரிகளை அழித்தவன்; ஆஸ்தே—நலமாக இருக்கிறான்; அலக்ஷித:—அடையாளம் தெரியாதபடி; யத்—யாருடைய; சர-கூட-கூட:—அம்புகளால் மூடப்பட்டு; மாயா-கிராத:—பொய்யான வேடன்; கிரிச:—சிவபெருமான்; துதோஷ—திருப்தியடைந்தார்.
காண்டீவம் என்ற பெயரைக்கொண்ட வில்லை உடையவனும், எதிரிகளை அழிப்பதில், இரத வீரர்களுக்கிடையில் எப்பொழுதும் பிரபலமானவனுமான அர்ஜுனன் நலமா? ஒரு சமயம் வேடனைப் போல் பொய் வேடத்தில் வந்த சிவபெருமானை அர்ஜுனன் அம்புகளால் மூடி அவரைத் திருப்திப்படுத்தினான்.
பதம் 3.1.39
யமாவ் உதஸ்வித் தனயௌ ப்ருதாயா
பார்தைர் வ்ருதெள பக்ஷ்மபிர் அக்ஷிணீவ
ரேமாத உத்தாய ம்ருதே ஸ்வ-ரிக்தம்
பராத் ஸுபர்ணாவ் இவ வஜ்ரி-வக்த்ராத்
யமெள—இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்); உதஸ்வித்—இருக்கிறார்களா; தனயௌ—மகன்கள்; ப்ருதாயா:—பிருதாவின்; பார்தை:—பிருதாவின் புதல்வர்களால்; வ்ருதௌ—காப்பாற்றினர்; பக்ஷ்மபி:—கேடயங்களால்; அக்ஷிணீ—கண்களின்; இவ—போல்; ரேமாதே—கவனமின்றி விளையாடும்; உத்தாய—பிடுங்கி; ம்ருதே—போரில்; ஸ்வ-ரிக்தம்—சொந்த உடமையின்; பராத்—எதிரியான துரியோதனனிடமிருந்து; ஸுபர்ணௌ—பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடன்; இவ—போல்; வஜ்ரி-வக்த்ராத்—இந்திரனின் வாயிலிருந்து.
தங்கள் சகோதரர்களால் காக்கப்பட்டு வரும் இரட்டைச் சகோதரர்கள் நலமா? வஜ்ராயுதத்தை உடையவரான இந்திரனின் வாயிலிருந்து கருடன் அமுதைப் பறித்ததைப் போலவே, எதிரியான துரியோதனனின் பிடியிலிருந்து தங்களுக்குச் சேரவேண்டிய இராஜ்யத்தைப் பறித்துக்கொண்ட பிருதாவின் புத்திரர்களால் அவர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
பதம் 3.1.40
அஹோ ப்ருதாபி த்ரியதே ‘ர்பகார்தே
ராஜர்ஷி-வர்யேண வினாபி தேன
யஸ் து ஏக-வீரோ ‘திரதோ விஜிக்யே
தனுர் த்விதீய: ககுபஸ் சதஸ்ர:
அஹோ—பிரபுவே; ப்ருதா—குந்தி; அபி—தவிரவும்; த்ரியதே—தன் வாழ்வை ஏற்றுக் கொண்டாள்; அர்பக-அர்தே—தந்தையை இழந்த குழந்தைகளின் பொருட்டு; ராஜர்ஷி—பாண்டு மகாராஜன்; வர்யேண—மிகச்சிறந்த; வினா அபி—அவரில்லாமல்; தேன—அவரை; ய:—யாரொருவர்; து—ஆனால்; ஏக—தனியாக; வீர:—வீரர்; அதிரத:—சேனாதிபதி; விஜிக்யே—வெல்ல முடிந்தது; தனு:—வில்; த்விதீய:—இரண்டாவது; ககுப:—திசைகளை; சதஸ்ர:—நான்கு.
பிரபுவே, பிருதா இன்னும் உயிருடனிருக்கிறாளா? தந்தையை இழந்த தன் குழந்தைகளுக்காக மட்டுமே அவள் வாழ்ந்து வந்தாள் இல்லையெனில், வில்லம்புகளின் உதவியாலேயே தனியாக நான்கு திக்குகளையும் வென்ற மிகச்சிறந்த சேனாதிபதியான பாண்டு மகாராஜன் இல்லாமல், அவள் உயிர் வாழ்வது சாத்தியமல்ல.
பதம் 3.1.41
ஸௌம்பானுசோசே தம் அத பதந்தம்
ப்ராத்ரே பரேதாய விதுத்ருஹே ய
நிர்யாபிதோ யேன ஸுஹ்ருத் ஸ்வ-புர்யா
அஹம் ஸ்வ-புத்ரான் ஸமனுவ்ரதேன
ஸௌம்ய—நற்குணவானே; அனுசோசே—வருத்தப்படுகிறேன்; தம்—அவரை; அத:-பதந்தம்—சறுக்கி விழுந்த; ப்ராத்ரே—அவரது சகோதரரின்; பரேதாய—மரணம்; விதுத்ருஹே—எதிராகப் புரட்சி செய்தார்; ய:—யாரொருவர்: நிர்யாபிது—விரட்டப்பட்டேன்; யேன—யாரால்; ஸுஹ்ரூத்—நண்பன்; ஸ்வ-புர்யா:—என் சொந்த அரண்மனையிலிருந்து; அஹம்—நான்; ஸ்வ-புத்ரான்—அவரது சொந்த மகன்களுடன்; ஸமனு-வ்ரதேன—அதே செயல் முறையை ஏற்று.
நற்குணவானே, தன் சகோதார் மரணமடைந்ததும் அவருக்கெதிராகப் புரட்சி செய்த அவருக்காக (திருதராஷ்டிரருக்காக) நான் மிகவும் வருந்துகிறேன். அவர் தன் சொந்த மகன்களின் செயல் முறையைப் பின்பற்றியதால், அவரது உண்மை நண்பனாக இருந்த நானும் என் சொந்த வீட்டை விட்டு அவரால் விரட்டப்பட்டேன்.
பதம் 3.1.42
ஸோ ‘ஹம் ஹரேர் மர்த்ய-விடம்பனேன
த்ருசோ ந்ருணாம் சாலயதோ விதாது:
நான்யோபலக்ஷ்ய: பதவீம் ப்ரஸாதாச்
சராமி பஸ்யன் கத-விஸ்மயோ ‘த்ர
ஸ:-அஹம்—எனவே நான்; ஹரே:—பரமபுருஷரின்; மர்த்ய—இந்த ஜட உலகில்; விடம்பனேன—கண்டு கொள்ளப்படாமல்; த்ருச:—கண்களுக்கு; ந்ருணாம்—பொது மக்களின்; சாலயத:—குழப்பமான; விதாது:—அதைச் செய்ய; ந—இல்லை; அன்ய—மற்றவர்; உபலக்ஷ்ய—மற்றவர்களால் காணப்பட்ட; பதவீம்—பெருமைகள்; ப்ரஸாதாத்—கருணையால்; சராமி—பிரயாணம் செய்து; பஸ்யன்—கண்டு; கத-விஸ்மய:—சந்தேகமின்றி; அத்ர—இவ்விஷயத்தில்.
பிறர் அறியாமல் உலகம் முழுவதிலும் பிரயாணம் செய்த நான் இதைக்கண்டு ஆச்சரியப்படுகிறேன். இந்த ஜட உலக மனிதனின் செயல்களைப் போலவே காணப்படும் பரமபுருஷரின் செயல்கள் மற்றவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் அவரது கருணையால் அவரது பெருமையை நான் அறிந்திருப்பதால், எல்லா வகையிலும் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.
பதம் 3.1.43
நூனம் ந்ருபாணாம் த்ரி-மதோத்பதானாம்
மஹீம் முஹீஸ் சாலயதாம் சமூபி:
வதாத் ப்ரபன்னார்தி-ஜிஹீர்ஷயேசோ
‘பி உபைக்ஷதாகம் பகவான் குரூணாம்
நூனம்—சந்தேகமின்றி; ந்ருபாணாம்—அரசர்களின்; த்ரி—மூன்று; மத-உத்பதானாம்—பொய் அகங்காரத்தினால் வழிதவறிச் செல்லும்; மஹீம்—பூமி; முஹு:—இடையறாது; சாலயதாம்—கலவரம் செய்யும்; சமூபி:— வீரர்களின் அசைவுகளினால்; வதாத்—கொல்லும் செயலிலிருந்து; ப்ரபன்ன—சரணடைந்தவர்களை; ஆர்தி-ஜிஹீர்ஷய—துன்புறுவர்களின் துன்பத்தை அகற்ற விரும்பி; ஈச:—பகவான்; அபி—இருப்பினும்; உபைக்ஷத—காத்திருந்தார்; அகம்—குற்றங்களை; பகவான்—பரமபுருஷர்; குரூணாம்—குருக்களின்.
குருக்கள் எல்லாவகையான பாவங்களையும் செய்திருந்த போதிலும், மற்ற அரசர்கள் தங்களது படை பலத்தினால், மூவகைப் பொய் அகங்காரங்களின் தூண்டுதலின் கீழ், பூமியில் இடையறாது கலகம் விளைவித்து வந்த போதிலும், பகவானாக இருந்தும், துன்புறுபவர்களின் துன்பத்தைப் போக்குவதில் எப்பொழுதும் விருப்பமுள்ளவராக இருந்தும், அவர் (ஸ்ரீ கிருஷ்ணர்) குருக்களைக் கொல்வதிலிருந்து விலகியே இருந்தார்.
பதம் 3.1.44
அஜஸ்ய ஜன்மோத்பத-நாசனாய
கர்மாணி அகர்துர் க்ரஹணாய பும்ஸாம்
நனு அன்யதா கோ ‘ர்ஹதி தேஹ-யோகம்
பரோ குணானாம் உத கர்ம-தந்த்ரம்
அஜஸ்ய—பிறப்பற்றவரின்; ஜன்ம—தோற்றம்; உத்பத-நாசனாய—தீயோரை அழிப்பதற்காக; கர்மாணி—செயற்படுகிறார்; அகர்து:—செயற்படும் அவசியம் இல்லாதவரின்; க்ரஹணாய—மேற்கொள்ள; பும்ஸாம்—அனைவரின்; நனு-அன்யதா—இல்லையெனில்; க:—யார்; அர்ஹதி—தகுதியைப் பெறக்கூடும்; தேஹ-யோகம்—உடல் தொடர்பு; பர:—உன்னதமான; குணானாம்—மூன்று இயற்கைக் குணங்களின்; உத—என்னென்று சொல்வது; கர்ம-தந்த்ரம்—செயல் விளைவுச் சட்டம்.
பகவான் தோன்றியது கயவர்களை அழிப்பதற்காகவேயாகும். அனைவரும் புரிந்து கொள்வதற்காகவே உன்னதமான அவரது செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இல்லையெனில், இயற்கைக் குணங்களுக்கெல்லாம் மேற்பட்டவரான பகவான், பூமிக்கு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
பதம் 3.1.45
தஸ்ய ப்ரபன்னாகில-லோகபானாம்
அவஸ்திதானாம் அனுசாஸனே ஸ்வே
அர்தாய ஜாதஸ்ய யதுஷு அஜஸ்ய
வார்தாம் ஸகே கீர்த்தய தீர்த்த-கீர்த்தே:
தஸ்ய—அவரது; ப்ரபன்ன—சரணாகதியடைந்த; அகில-லோக-பானாம்—பிரபஞ்சத்தின் எல்லா ஆளுனர்களும்; அவஸ்திதானாம்—அமைந்துள்ள; அனுசாஸனே—கட்டுப்பாட்டின் கீழ்; ஸ்வே—சுயமாக; அர்தாய—நன்மைக்காக; ஜாதஸ்ய—பிறப்பவரின்; யதுஷு—யது வம்சத்தில்; அஜஸ்ய—பிறப்பற்றவரின்; வார்தாம்—விஷயங்கள்; ஸகே—நண்பனே; கீர்த்தய—கூற வேண்டுகிறேன்; தீர்த்த-கீர்த்தே:—தீர்த்த யாத்திரை ஸ்தலங்களில் போற்றிப் புகழப்படும் பகவான்.
எனவே, நண்பனே, தீர்த்த யாத்திரை ஸ்தலங்களில் புகழப்பட வேண்டியவரான, பகவானின் பெருமைகளைக் கூற வேண்டுகிறேன். அவர் பிறப்பற்றவர் என்ற போதிலும், பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள சரணடைந்த அரசர்களின்மீது கொண்ட தனிப்பெரும் கருணையினால் தோன்றுகிறார். அவர்களுடைய நன்மைக்காகத்தான் தூய பக்தர்களான யதுக்களின் வம்சத்தில் அவர் தோன்றினார்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின் “விதுரரின் கேள்விகள்“ எனும் தலைப்பைக் கொண்ட முதல் அத்தியாயம் இவ்வாறாக நிறைவு பெறுகின்றது.